ராதா மனோகர் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தமும் இந்திய ஒன்றிய அரசும்!
FLOATING PEOPLE - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக மக்கள் அங்கும் இங்குமாக போய்வந்தனர் என்பது வரலாறு!
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இப்படியாக போக்கு வரவு செய்துகொண்டிருந்த மக்களின் தொகையானது இலங்கையில் . குறிப்பாக சிங்கள மக்களிடையே ஒரு குடிப்பரம்பல் அச்ச உணர்வை உண்டாக்கியது.
இதன் காரணமாகவே ஒரு இந்திய எதிர்ப்பு மனநிலை அங்கு உருவானது.
பல்வேறு தொழில்கள் காரணமாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் ஏறக்குறைய ஐம்பதுகள் வரை இந்த போக்கு வரத்து வாழ்வியல் தொடர்ந்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் இது தொடர்பாக இந்திய அரசோடு பல தடைவைகள் பேச்சுக்களை நடத்தி இருந்தன..
ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் இது விடயத்தில் ஒரு தீர்வை நோக்கி இருந்தது