சனி, 31 டிசம்பர், 2016

ராமதாஸ் :உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 60..ஒரே நாளில் 6 பேர் சாவு!

விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: வறட்சியின் கொடுமையால் பயிர்கள் கருகியதை தாங்கிக்கொள்ள முடியாமல் நேற்று ஒரே நாளில் 6 உழவர்கள்
தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும்
உயிரிழந்திருக்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களின் உயிரிழப்பு தொடர்வது அதிர்ச்சியும், சோகமும் அளிக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் இராமர் மடத்தில் பக்கிரிசாமி என்ற விவசாயியும், திருப்புகழூரில் கண்ணன் என்ற விவசாயியும், திருவாரூர் மாவட்டம் வடுகப்பட்டியில் வெங்கடாச்சலம் என்ற உழவரும் பயிர்கள் கருகுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்தப் புதூரில் பவுன்ராஜ் என்ற உழவரும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் பெரியக்கருப்பத்தேவர் என்ற உழவரும் பயிர் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர். அதேபோல், அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராமத்தில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். இவர்களையும் சேர்த்து காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருக்கிறது.

திருமாவளவன் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்தார் ! வைகோவின் புரோக்கர் தொழிலுக்கு போட்டி?

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவைப் போய் அண்ணண் திருமாவளவன் சந்தித்தது பல்வேறு உள்நோக்கங்கள் கொண்டதாக இருக்கலாம், பெண்ணுரிமை அது இது என்று சொல்வதெல்லாம் ஒரு முட்டுக்கொடுப்பு என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க.வின் மீது இருக்கிற காழ்ப்புணர்வால் அதைச் செய்திருக்கலாம், அதிகார பகிர்வு என்கிற திருமாவளவனின் கோட்பாட்டுக்கு திமுக ஒப்புக் கொள்ளவில்லை என்கிற வருத்தமும், தேர்தல் காலங்களில் திமுக அவர்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்கிற கோபமும் அவருக்கு உண்டு.
ஆகவே, இப்படியான சில "செக் மேட்" களின் மூலமாக திமுகவை வெறுப்பேற்றவோ, தொடர்ந்து தங்கள் கட்சியின் மீது ஒரு "டிமாண்ட்" உருவாக்கவோ அவர் அப்படிச் செய்திருக்கக் கூடும், கூடவே மகா அடிமைச் சமூகமும், இந்துத்துவர்களின் பகடைக்காயுமான திரு.ரவிக்குமார் பவ்யமாக அமர்ந்து இருக்கும் காட்சி வேறு கிலியை உண்டாக்குகிறது.

நடிகர் பிரபு அண்ணன் ராம்குமார் சசிகலாவை சந்தித்து வாழ்த்தினர்

சென்னை: நடிகர் பிரபு அவரது அண்ணன் ராம்குமார் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை சந்தித்து வாழத்து தெரிவித்தனர். அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கினார். பொதுக்குழு கோரிக்கையை ஏற்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இன்று மதியம் 12 மணிஅளவில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த சசிகலா முறைப்படி பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் பிரவு அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் இன்று போயஸ் கார்டன் இல்லம் வந்தனர். அங்கு அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மறைந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்ட சுதாகரன் சிவாஜி குடும்பத்தில் இருந்து தான் பெண் எடுத்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை: மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு!

www.thesundayleader.lk/2013/09/08/lanka-should-ignore-tamil-nadu-dr-subramanian-swamy/
Q. You have singlehandedly done more for Sri Lanka than our whole foreign ministry put together, in relation to South India. So what advice would you give our foreign ministry in dealing with South India?
A. Well, just ignore Tamil Nadu; it’s only a matter of time. I go to Tamil Nadu and speak against the LTTE. Today I am in Sri Lanka, and it will be published in Tamil Nadu that I am with the Sri Lankan Army, but it is just a handful that are creating all this fuss. The vast majority of Tamils want good relations with Sri Lanka. It’s only the present government which relies on the clandestine support of the DMK and Sonia Gandhi. In May 2014 there will be a new government and when that happens everything will be fine.
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை ஆக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பது மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட‌ அறிக்கை வருமாறு:
தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து; அவர்களிடமிருந்து படகுகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர். தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 இழுவைப் படகுகளையும், இதர சாதனங்களையும் நாட்டுடமையாக்கி விட்டதாக இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீரா அறிவித்துள்ளார். இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  சுப்பிரமணியம் சாமி மகிந்த ராஜபக்ஷாவிடம் படகுகளை இலங்கை அரசு திருப்பி கொடுக்க கூடாது என்று ஆலோசனை வழங்கினார் .இத அவரே ரொம்ப பெருமையா வேற சொல்லியுள்ளார் .. சு.சாமியை ஏன் தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யகூடாது?

சின்னம்மா சசிகலா : ஒன்றரை கோடி தொண்டரகளை என்னிடம் ஒப்படைத்த அம்மா ! Cm ஒ.பன்னீர்செல்வம் சின்னம்மா காலில் விழுந்து வணங்கினார்

சசிகலா தன்னுடைய உரையை முடித்துவிட்டு திரும்பும் போது அவரது காலில் தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் விழுந்தார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, அவரின் பதவியை ஏற்றுக்கொள்ள இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஏராளமான அதிமுகவினர் கூடியிருந்தனர்.;தொண்டர்களை பார்த்து வணங்கிய சசிகலா, அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மறைந்த  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்.
;அதன் பின், அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அவர் அமர்ந்தார். அவரது அறையில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

எங்கள் வங்கி கணக்கை முடித்து கொள்கிறோம் ! எங்கள் முழுப்பணத்தையும் உடனே தரவும்! கீழக்கரையில் வங்கி முன் திரண்ட மக்கள் கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம், கீழ்கரையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பாக திரண்ட மக்கள்,
"இந்த வங்கியில் உள்ள எங்கள் கணக்குகளை முடித்து கொள்கிறோம், அகவுண்டில் உள்ள எங்கள் பணம் மொத்தத்தையும் உடனே கொடுக்கவும்" என்று, வங்கி மேனேஜரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.
இதே போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள அனைத்து மக்களும் எல்லா வங்கி கிளைகளின் முன்பாக திரண்டு இதே போன்று தங்கள் வங்கி கணக்கை குளோஸ் செய்து, பணத்தை திருப்பி கேட்கவேண்டும். இது இந்தியா எங்கும் பரவ வேண்டும்.
நமது பணம், நாம் கேட்க உரிமை உள்ளது. கணக்கு முடிக்கப்பட்ட கணக்கில் உள்ள பணத்தை தரமறுக்கிறார்கள் என்று வங்கிகளின் மீது வழக்கும் தொடுக்க வேண்டும், இப்படி இந்தியா எங்கும் வழக்குகள் போடப்பட வேண்டும்.

பீம்' மொபைல் ஆப் அறிமுகம்: நரேந்திர மோடி.. அடுத்தது மொபைல் டிஜிடல் கக்கூஸ் ஆப் அறிமுகம்?

மின்னணுப் பண பரிவர்த்தனையை எளிதாக்க மொபைல் ஆப் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறார்.ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்குப் பின் மின்னணுப் பண பரிவர்த்தனைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. சாலையோரக் கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை மின்னணுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மின்னணுப் பண பரிவர்த்தனையை எளிதாக்க மொபைல் ஆப் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

விபரம் புரியாமல் ,சிந்திக்காமல் அவசரத்தில் எடுத்த முடிவு.. அமர்தியா சென் பணமதிப்பிழப்பு பற்றி கூறியது


மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பவர்களுள் ஒருவர் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றஅவருடைய விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியின் கருத்துகள் என்று பாஜக நிராகரித்து வந்தாலும் கூட அமர்த்தியா சென் தன் விமர்சனங்களைத் தொடர்ந்து வருகிறார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும் போது, “ அனைத்து தரப்பிலும் உரிய ஆலோசனை நடத்தி விட்டு இந்த முடிவு( பண மதிப்பு நீக்க நடவடிக்கை) எடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை. விளைவுகள் பற்றி சிந்திக்காமல் அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணத்தை என்னால் கண்டறியமுடியல்லை பண மதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மின்னம்பலம்

உபியில் மாயாவதி மீண்டும் ஆட்சி? முலாயம் அகிலேஷ் பிளவு.. சாயம் போன பாஜக..


கோப்புப் படம். | அருணாங்சு ராய் சவுத்ரி.முலாயம் சிங்: அமர்சிங் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அமர் எனது சகோதரர். ஷிவ்பால் யாதவ் செய்த உதவிகளையும் பணிகளையும் நான் மறக்க முடியாது. எனவே அமர் மற்றும் ஷிவ்பாலுக்கு எதிரான எந்த ஒன்றையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் சிறையில் தள்ளப்படுவதிலிருந்து என்னை காப்பாற்றியவர் அமர். வெறும் சிகப்பு தொப்பி அணிவதால் சமாஜ்வாதி கட்சியினராகி விட முடியாது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் அகிலேஷ் தந்தையுமான முலாயம் சிங் யாதவ். கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ்வையும் 6 ஆண்டுகள் நீக்கி உத்தரவிட்டார் முலாயம் சிங் யாதவ். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ் தனக்கு வேண்டப்பட்ட 200 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக முலாயம் சிங் யாதவ் 325 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அகிலேஷ் யாதவுக்கு வேண்டப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டனர்,

தமிழக தலைமை செயலகத்தில் துணை ராணுவம்... கண்டிக்க திராணியில்லை!

வருமான வரி சோதனை என்ற பெயரில் ராணுவம் தமிழ்நாட்டுக்குள் எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி வந்து தனது இஷ்டம் போல் ஏதோதோ செய்கிறது .மாநில உரிமைகள் மீறல் இதுவென்று எங்கோ இருக்கின்ற மம்தா பானர்ஜிக்கு உள்ள ரோஷம் ஆளுகின்ற அதிமுகவுக்கோ அதன் அல்லக்கைகளுக்கோ இல்லையே? அது ஏன்?
ஊழல் சம்பாத்தியம் வாயை மூடி விட்டது! இந்த கேவல நிலைதான்  அதிமுக தமிழகத்துக்கு வாங்கி கொடுத்த சொத்து!
மத்திய அரசின் எந்த அயோக்கிய திட்டத்துக்கும் ஒப்புதல் கொடுக்கும் ஒரு டாபர் மாமா ஆட்சி நடக்கிறது ! இதுவே திமுக ஆட்சியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கொஞ்சம் எண்ணிப்பார்ப்பது அவசியமாகிறது .
இப்ப முகநூலில் இயங்கும் சின்ன தம்பிகளுக்கு தெரியாது மாநில உரிமைமைபற்றியும் அது எப்படி என்றும் காமராசர் போன்ற பெரியவர்களுக்குதான் தெரியும் கலைஞரையும் அவரின் போராட்ட குணத்தையும் .
இன்று தமிழ்நாட்டில் அரசு விரல் சூப்பிகிட்டு இருக்கிறது .
மிசா காலம். ஐந்தடி உயரம் உள்ள ஒரு ஆளு முதல்வரா இருந்தாரு. கூட இருந்த மந்திரில இருந்து பெத்த புள்ள வரைக்கும் தூக்கி உள்ள வச்சி அடி வெளுத்தாய்ங்க. மெரீனா பீச்ல மிசாவுக்கு எதிரா தனி ஆளா நின்னு கையெழுத்து நோட்டீஸ் கொடுத்தாரு. இந்தாளு இருக்குற வரைக்கும்தான் நமக்கு பாதுகாப்புனு காமராசரே சொன்ன காலம் அது.

சின்னம்மாவே தியாகத்தாயே வருக”. அதிமுக தலைமை செயலகத்தில் ஏற்பாடுகள் மும்முரம்!


தாலாட்டு பாடி தாயாகவேண்டும் என்று அமைச்சர் பெருமக்கள் சின்னம்மாவை வேண்டி உருக்கமாக பாடும் சிச்சுவேசன் பாட்டு
சென்னை: ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை சசிகலா வர உள்ளதால் வரவேற்பு ஏற்பாடு மும்முரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு பிறகு அக்கட்சியின் சக்தி வாய்ந்த பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சம்மதத்தை சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் நேற்று தெரிவித்தார். இதனையடுத்து, நாளை அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து 11.30 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

அதிமுக பொதுசெயலாளர் வி.கே.சசிகலா வாகன அணிவகுப்பு பின்தொடர ஜெயலலிதா நினைவிடத்துக்கு ..

பொது செயலாளராக தெரிவு செயப்பட்ட  சசிகலாவும் அமைச்சர்களும் இதர  கழக பிரமுகர்களும் சுமார்  300 கார்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி !  அப்போது, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.; ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, நேற்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெ., நினைவிடத்திற்கு புறப்பட்டார். ஜெயலலிதா எப்படி செல்வாரோ, அதேபோல பல கார்கள் புடைசூழ சென்றார்.ஜெயலலிதாவுக்கு அளித்தது போலவே, சசிகலாவுக்கும் அவர் வரும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ; மாலை, 5:15 மணிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், ஜெ., நினைவிடத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த லோக் சபா துணை சபாநாயகர், தம்பிதுரை மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து, சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்தார். மாலை, 5:25 மணிக்கு, சசிகலா காரில் வந்து இறங்கினார். அவரை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைகுனிந்து வணங்கினர்.

தம்பிதுரை : நீங்கதான் எங்களை வழி நடத்தணும் சின்னம்மா.. கண்ணீர் கடலில் அதிமுக பிரமுகர்கள்ஜெயலலிதாவின் ஆவி பேசுகிறது ? youtube ஆத்மாக்களுடன் பேசும் ஆவி ராஜா ?


அம்மா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் இங்கே வந்திருப்பதற்கு மிகவும் நன்றி. இப்பொழுது உங்களிடம் சில கேள்விகள் கேட்க தாங்கள் எங்களை அனுமதிக்க வேண்டும்.
 நீங்க யாரு?
நான் ராஜா என்ற நபர். ஆவிகளிடம் தொடர்பு கொள்பவர்.
என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?
நாட்டில் மக்கள் பல குழப்பங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தாங்கள் விளக்கம் அளிக்க உங்களை அழைத்துள்ளேன்
 என்ன விளக்கம்?
மருத்துவமனையில் சேர்ந்த அன்று உங்களுக்கும் உங்களது உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கும் சண்டை நடந்ததாக சொல்லப்படுகிறது. அதை பற்றி தாங்கள் தெளிவாக சொல்ல வேண்டும். எங்களுக்குள் சண்டை இல்லை. உடல் நலம் கெட்டுருச்சு. மயக்கம் போட்டு விழுந்துட்டேன். தொண்டையில வலி. ஆஸ்பத்திரியில இருந்தேன். சசி என் கூட தான் இருந்தா. நீண்ட நாட்கள் மருத்தவமனையில் சிகிச்சையில் இருந்தீர்கள். சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்படுகின்றன. அங்கு என்ன நடந்தது என்பதை சொல்லுங்கள்?
 அங்க டிரீட்மென்ட் நடந்தது. அவ்வளவு தான். வேற எதுவும் இல்லை. டிரீட்மென்டில் இருந்தேன். மயக்கத்தில் இருந்தேன். நினைவு இல்லை
 உங்கள் அய்யங்கார் ஜாதி சடங்குகளின் படி இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடைந்ததா. தங்கள் ஜாதி சடங்குகள் செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள். செயல்படுத்துகிறோம்.

RMR மணல் குவாரிகள், லேப்டாப் டெண்டர்கள் ... பரந்து விரிந்த ராம் மோகன ராவ் பணக்காடு


லைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்ததையடுத்து குமரி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள கேரளப் பகுதி மணல், கல்குவாரி மாஃபியாக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.;கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் தூர்வாரி வண்டல்மண் மற்றும் மணல் அள்ளும் உரிமையைப் பெற்று இருப்பவர், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான கே.ஆர்.வீ.செல்வம். ஆறு மாதத்துக்கு முன்னர் செண்பகராமன் புதூர் பெரியகுளத்தில் மண் அள்ளும்போது பொதுமக்கள் பிரச்சினை செய்ததால், அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. மா.செ.வும் எம்.பி.யுமான விஜயகுமார் மண் அள்ளியதைத் தடுக்கமுயன்றார். உடனே ராமமோகனராவின் கவனத்துக்கு இது கொண்டுபோகப்பட்டதால் எம்.பி.யும் ஒத்திசைந்தார். அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மண் அள்ளினார்கள்.


;மாவட்டத்தில் உள்ள மலைகளைப் பாதுகாப்பதற்காக, முந்தைய கலெக்டர் நாகராஜன் மூடி சீல்வைத்த குவாரிகளின் உரிமையாளர்கள், ரா.மோ.விடம் தங்கள் பிரச்சினையைக் கொட்டினர். அதையடுத்து நாகராஜனைத் தூக்கியடித்துவிட்டு, புதிய ஆட்சியராக சஜ்ஜன்சிங்சவான் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற முதல் நாளே, சீல் வைக்கப்பட்ட அத்தனை கல்குவாரிகளையும் திறக்க உத்தரவிட்டார். அந்த அளவுக்கு ராமமோகனராவ் குவாரிகள் மீது ஆர்வமாக இருந்தார்.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மோசமான ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி மன்னார்குடி கும்பலிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார்!

தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை எடுத்த நட வடிக்கை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரவைத்திருக்கிறது. அரசியல் வாதிகளின் கமிஷன் ராஜ்ஜியம் அதிகாரிகளிடம் மாற்றிக் கொடுக் கப்பட்டதன் விளைவு ராமமோகன ராவ் சிக்கிக்கொண்டார் என்கின்ற ஐ.ஏ.எஸ்.வட்டாரம், ""தமிழக அரசை ஊழல்மயமாக்கியதில் அவருடன் இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது'' என்கின்றது கைமாற்றப்பட்ட கமிஷன் ராஜ்ஜியம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்த அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நம்மிடம், ""2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பொதுப் பணி, நெடுஞ்சாலை, தொழில், சுகாதாரம், உயர்கல்வி, போக்குவரத்து, பத்திரப் பதிவு, எரிசக்தி (மின்சாரம்), மதுவிலக்கு ஆயத்தீர்வை, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, கூட்டுறவு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உள்பட 20-க்கும் மேற் பட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்களிடம், தினமும் 20 எல் கார்டனுக்கு வந்து விடவேண்டும் என எழுதப் படாத ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். மற்ற துறைகளின் தன் மைக்கேற்ப தொகை தீர் மானிக்கப்பட்டிருந்தது.

அனைத்துக்கும் பின்னால் நடராஜன் : பொதுக்குழுவுக்கு முன்பும்... பின்பும்...!

முடியாது... நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள் கழகக் கண்மணிகள். கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால், ஆதரவாக இருக்கலாம்; ஆனால், தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில்... வீட்டில் இருந்த சசிகலாவைத் தேடி பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட... அவருக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விதான் டெல்லி முதல் தி.மு.க வரை தொங்கித்தொங்கி நிற்கிறது.
டெல்லியின் அச்சுறுத்தல்கள்!  

தமிழகம் கடத்தப்பட்டு உள்ளது.. நடந்து கொண்டிருப்பது High Jack.. ஒரு மோசடிகும்பல் அரங்கேற்றும் கூட்டுகொள்ளை !

ஜெயலலிதா ஏன் சசிகலாவை அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை?
அறிவழகன் கைவல்யம்அறிவழகன் கைவல்யம்  |; ; அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக திருமதி.சசிகலா, அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த நியமனம் அ.தி.மு.க வின் விதிகளுக்கு உட்பட்ட தனித்த முடிவு.
இந்த முடிவின் மீது விமர்சனம் வைக்கப்படுவதும், மறுபுறம் அது அவர்களது உட்கட்சி ஜனநாயகம், மற்றவர்கள் பேசுவதற்கு ஏதுமில்லை என்று சொல்வதுமாகத் தமிழக அரசியல் களம் சூடாகி இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையிலும், தாய்க்கழக வரிசையிலும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
கடந்த முப்பதாண்டு கால வரலாற்றில் ஜெயலலிதாவுடன் தொடர்ந்து வாழ்ந்தவர், அவரது தனிப்பட்ட தேவைகளைக் கவனித்துக் கொண்டவர், அவரது பயணங்களில், வழக்குகளில், ஊழல்களில் என்று வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்து வந்தவர் என்பது ஒன்றுதான் திருமதி.சசிகலாவின் தகுதி. ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்திருக்கிற பெண்ணை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

பணமதிப்பிழப்பு எதிர்ப்பு மாநாடு! விடுதலைச் சிறுத்தைகள் .. இந்தியாவிலேயே முதல்முதலாக நடத்திய திருமாவளவன்

புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து 50 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மக்களின் துயரங்கள் முடிவில்லாமல் தொடர்கின்றன. மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசோ இதுவரை 68 நிபந்தனைகளை மக்கள் மீது திணித்து வருகிறது. இதற்கு எதிராக தேசியக் கட்சிகளே ஒன்று சேர முடியாமல் திணறி வரும் நிலையில், இந்தியாவிலேயே முதன் முதலாக மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநாடு நடத்தியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அந்த மாநாட்டு கவரேஜ்.
தமிழக அரசியலில் பெரும் கட்சிகளை அதிரவைத்த மக்கள் நலக் கூட்டணி, மெகா கூட்டணியாக காணப்பட்டது. விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஐஎம், தமாகா, தேமுதிக, என சேர்ந்து, “மக்கள் நலக் கூட்டணியில் கடைசியாக சேர்ந்த தமாகா, முதலில் வெளியேறியது, அடுத்தபடியாக தேமுதிக, வெளியேறியது, கடைசியாக மதிமுக வெளியேறிய நிலையில், எஞ்சிய விசிக, சிபிஐஎம், சிபிஐ, மட்டுமே உறுதியுடன், கொள்கையில் தளராமல், ரூ 500, 1000, நோட்டுகள் செல்லாது’ என்ற பெயரில் பாஜக அரசு இந்திய நாட்டு மக்கள் மீது திணித்திருக்கும்’ பொருளாதார அவசரநிலை’யைக் கண்டித்து, புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு, 2016 டிசம்பர் 28-ஆம் தேதி அன்று நடைபெற்றது.

அதிமுக மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் சசிகலாவை தலைவியாக ஏற்றுகொள்ள x 00000000000 பெற்றுகொண்டார்கள்?

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானார். இதனை தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமனம் செய்ய வேண்டும் என்று அதிமுகவில் சில தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து சசிகலா கட்சியின் தலைமை பதவிற்கு வர கூடாது என்று சில மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை சமாளிப்பதற்காக, ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டி.டி.வி.தினகரனை களத்தில் இறக்கி மூத்த தலைவர்ளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட
வைத்துள்ளார் சசிகலா. இதனால்தான் அவர் எந்தவித சலசலப்பு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியை வாங்கியுள்ளார் என்று தெரிய வருகிறது லைவ்டே

வெள்ளி, 30 டிசம்பர், 2016

இயக்குனர் பா.ரஞ்சித் : இந்தியா ஒரு வெட்கம் கெட்டநாடு.. மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நாடு

இந்தியா வெட்கங்கெட்ட நாடு என இயக்குனர் பா_ரஞ்சித் பேச்சு இந்தியாவில் கலாச்சார பெருமையை வாய் கிழிய பேசுவார்கள் ஆனால் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை பற்றி யாரும் பேச மாட்டார்கள் ஏன் இந்த ஊடகங்கள் கூட பேசுவதில்லை நாம் தான் பேசுகிறோம் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒன்று கூடும் நீங்கள் ஏன் நாங்கள் இனி இந்த தொழிலை செய்ய மாட்டோம் என கூறி ஒன்று சேர மறுக்குறீர்கள் நாம் வயிற்றுக்காக தான் இந்த தொழிலை செய்கிறோம் இதை செய்வதை விட செத்து போவதே மேல் எனவும் இந்தியாவில் மாட்டுக்கு பூ வைத்து பூஜை செய்வார்கள் ஆனால் சக மனிதனை மாட்டை விட கேவலமாக நடத்துவார்கள் இந்தியாவில் நீதி எதிர் பார்க்க முடியாது என ஆவேசமாக பேசினார் முகநூல் பதிவு

ஆசைப்பட்டிருந்தால் அக்கா இருந்த போதே பதவிக்கு வந்திருக்க மாட்டேனா?” சசிகலா பேட்டி

சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'பிரவோக்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக உள்ளார் அப்சரா ரெட்டி. திருநங்கையான இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் பேட்டி எடுக்க 4 மாதங்களுக்கு முன்பு அனுமதி கேட்டுள்ளார். ஜெயலலிதா காலமாகி 10 நாளுக்கு பிறகு பேட்டி எடுக்க சசிகலா அனுமதி கொடுத்துள்ளார். இதனையடுத்து சசிகலாவிடம் அப்சரா 45 நிமிடங்கள் பேட்டி எடுத்துள்ளார். பேட்டியின் போது சசிகலா மனம் திறந்து பேசியதாக அப்சரா கூறியுள்ளார். 5 நிமிடங்கள் மட்டுமே தனக்கு பேட்டி கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்த சசிகலா, பேட்டி தொடங்கிய உடன் 45 நிமிடங்கள் பேசியதாக சொல்லும் அப்சரா, எந்தக் கேள்விக்கும் தயக்கம் இல்லாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் பதில் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அக்காவிடம் கேட்டு சண்டை பிடித்து அக்கா பிடிவாதமாக மறுத்து உறுப்பினர் அட்டை கூட தரமாட்டேன் என்பதுதான் உண்மை .அவர்போனபின்பு  இனி என்ன உடான்ஸ்  வேணுமென்றாலும்  விடலாம்தானே? 

அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கம் ! முலாயம் சிங் அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் அகிலேஷ் தந்தையுமான முலாயம் சிங் யாதவ். கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ்வையும் 6 ஆண்டுகள் நீக்கி உத்தரவிட்டார் முலாயம் சிங் யாதவ். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ் தனக்கு வேண்டப்பட்ட 200 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக முலாயம் சிங் யாதவ் 325 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அகிலேஷ் யாதவுக்கு வேண்டப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டனர், இதனையடுத்து போட்டிப் பட்டியலை வெளியிட்டார் அகிலேஷ் யாதவ். கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் ஜனவரி 1-ம் தேதி அவசரக் கட்சிக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து ‘ஒழுங்கீன நடவடிக்கைக்காக’ அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சிப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் முலாயம் சிங் யாதவ்.

ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள் : சசிகலா பேசும் வரை எந்த விமர்சனமும் செய்யவேண்டாம்!

அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி திமுகவினர் எந்தவித விமர்சனமும் செய்ய வேண்டாம் என்றும் திமுக தலைமையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.> அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்திருப்பது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். இதில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஸ்டாலினுக்கு நேரடியான அரசியல் போட்டியாளர்கள் யாரும் இல்லை.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!!… சசிகலா முதல்வர் வேட்பாளர்!!…

சென்னையில், அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுசெயலாளராக நாளை சசிகலா பொறுப்பேற்காவுள்ளார். இந்நிலையில், சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், சசிகலா கட்சியின் பொதுசெயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைவ்டே

நிர்மலா பெரியசாமி : லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியால் எத்தனை தற்கொலை? தெரியுமா?

லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் நிகழ்ச்சி நடத்த வந்த பிறகு, அதில் கலந்துக்கொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.   ஒரு கட்டத்தில் குஷ்பு தலைமையில் இதுபேன்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இதனால் ராதிகா, ஸ்ரீபிரியா, ரஞ்சினி போன்ற நடிகைகள் கடுமையாக இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு ;தெரிவித்தனர்.இந்நிலையில் இதுகுறித்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஆரம்ப தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியதாவது:-ஜீ தமிழ் சேனலில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி உருவாக்கத்தின்போது, தொகுப்பாளராக என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். அப்படித்தான் அந்த வாய்ப்பு வந்தது. முதல் நிகழ்ச்சியே, டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடம் பெற்றது. தொடர்ந்து மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. எதையும் சிறப்பாக செய்வது என்னுடைய வழக்கம்.

சசிகலாஅதிமுக பொதுச்செயலாளராக (31) நாளை பொறுப்பேற்கிறார்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நாளை (டிச. 31) கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த அதிமுக பொதுக் குழுக்கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வரும் ஜன. 2-ல் பொதுச் செயலாளராக அதிமுக அலுவலகத்தி்ல் பொறுப்பேற்பார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக சசிகலா நாளையே (டிச. 31) பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை அலுவலகம் மும்முரமாக செய்து வருகிறது.

சசிகலா கடக்க வேண்டியது பெருந்தூரம்!

அதிமுகவின் இன்றைய பிரமுகர்களுக்கும், தலைவர்களுக்கும் சின்னம்மா என்ற பெயர் புதிதல்ல. போயஸ் கார்டனுக்கு சென்று வரும் எவர் ஒருவருக்குமே ஜெயலலிதாவின் நிழலாகத் தொடர்ந்து அவருக்கு அடுத்த நிலையில் செல்வாக்கோடு இருந்த சசிகலாவைத்தான் சின்னமா என்று தெரியும்.
ஜெயலலிதா இறந்து அவர் எம்.ஜி.ஆர் சமாதியில் புதைக்கப்படும் வரை அவரோடு 33 ஆண்டுகள் உடன் இருந்தவர். அந்த ஒரு அந்தஸ்துதான் வி.கே. சசிகலாவை இந்தப் பதவிக்கு கொண்டு வந்திருக்கிறது.

போயஸ் கார்டனில் அம்மாவின் ஆவியாம் ..மயங்கி விழுந்த சின்னம்மா .. உண்மையோ பொய்யோ ஆனால் சசிகலா நடுக்கம்?

ஜெயலலிதாவின் ஆவி நேற்று போயஸ் தோட்டத்தில் ஆட்டத்தை ஆரம்பித்தது. ஒரே அலறல் சத்தம், பயந்து போன சசிகலா மயங்கி விழுந்தார். உடன் இருப்பவா்களுகம் அச்சத்தில் உள்ளனா். ஜெயலலிதா சசிகலாவை தனக்கு உதவியாகத் தான் வைத்திருந்தார். அதனால்தான் அவருக்கு ஒருமுறைக்கூட எந்த அரசு பதவியையும் கொடுக்க வில்லை. வேலைக்கு வந்தவா். என் உடன் உதவியாக இருப்பவா் என்பதில் மற்றும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்து வந்தார் ஜெயலலிதா. கடந்த 1991ம் ஆண்டு சசிகலாவின் பேச்சை கேட்டதால் அவா் அடைந்த துன்பங்கள் அப்படி. இன்றும் ஜெயலலிதா ஊழல்வாதி என்று கூற,ஒருவா்தான் காரணம். அது சசிகலாதான். இதுபோல மக்களுக்காக வாழ்ந்த ஜெயலலிதா தன் வாழ் நாளில் விரும்பிய எதையும் பெறாதவா். எப்படி இறந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. கால்கள் இல்லை, பல் இல்லை என்று பல அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னா் ஜோதிடா்கள் கூறியது போல ஜெயலலிதா ஆவியாக வருவார். தனது விருப்பத்திற்கு மாறாக நடந்தவா்கள் மீது தன் கோபத்தை காட்டுவார் என்று கூறியிருந்தனா். அதுபோலவே நேற்று நள்ளிரவு போயஸ் கார்டனில் ஒரே அலறல் சத்தம். பொருட்கள் ஆங்காங்கே விழும் சத்தம்.

ராவ் அறையில் சோதனை ஏன்? கோட்டையில் ஒரு அறையில் இரண்டு மொபைல் விவகாரம்

சென்னை, கோட்டையில் உள்ள, ராமமோகன ராவ் அறையில், சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீட்டில், நாங்கள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும், அவரது நண்பர்களையும், சி.பி.ஐ., கைது செய்தது. ரெட்டியின் வடநாட்டு நண்பர்களும், அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். அதனால், தன் வீட்டுக்கு, சி.பி.ஐ., அல்லது அமலாக்கப் பிரிவு போன்ற, கைது செய்யும் அதிகாரம் படைத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள் வரலாம் என, ராவ் எதிர்பார்த்து இருக்கிறார்.

புதிய 1,000 ரூபாய் நாளை அறிவிப்பா? தினமலர் பேதி

புதுடில்லி : 'ஆங்கில புத்தாண்டு முதல், புதிய, 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படலாம்' என, தகவல் பரவி வருகிறது. எதிர்பார்ப்பு: நாட்டில் புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதுபற்றிய அறிவிப்பை, பிரதமர் மோடி, நவ., 8ல், 'டிவி' வாயிலாக அறிவித்தார். இந்நிலையில், நாளை இரவு, அவர், 'டிவி'யில் பேசப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, புதிய, 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  1,000 ரூபாய் நோட்டுகள் வேண்டாம் 1001 ரூபாய் நோட்டு வெளியிடுங்கள் மொய்வைக்க மட்டும் உதவட்டும்

எங்கே ஜெயலலிதாவின் கருப்பு பூனைகள் ? 11 கேள்விகள் ... ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு ..

ஜெயலலிதா ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அதுபற்றி என்.எஸ்.ஜி படையினருக்குத் தகவல் சொல்லப்பட்டதா?
2. அவ்வாறு சொல்லியிருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக என்.எஸ்.ஜி படையினர் சென்றார்களா?
3. மருத்துவமனைக்கு என்.எஸ்.ஜி போயிருந்தால் அந்தப் படையின் உயர் அதிகாரி, ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்பட்டாரா?
4. அதுபோன்று என்.எஸ்.ஜி படை உயர் அதிகாரி, உள்துறை அமைச்சகத்திற்கு என்ன அறிக்கை அனுப்பினார்?
5. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தவிர, 75 நாட்கள் என்எஸ்ஜி அனுப்பிய தினசரி அறிக்கை என்ன? 75 நாட்களுமே காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் என்.எஸ்.ஜி அதிகாரிகள் ஜெ-வை பார்க்க அனுமதிக்கப்பட்டார்களா?
6. அப்படிப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றால், ஜெ-வின் உடல்நிலை அறிக்கை பற்றி, என்.எஸ்.ஜி-க்கு இதுபோலதான் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று தகவல் கொடுத்தது யார் ?
7. ஜெயலலிதாவை நேரில் சந்திக்காமல் அறிக்கை அனுப்பப்பட்டதா?
8. என்.எஸ்.ஜி அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது?
9. இவை அனைத்தும் முறைப்படி நடக்காமல் இருந்திருந்தால் என்.எஸ்.ஜி ஏமாற்றப்பட்டதா?

தேங்காய் மிகச்சிறந்த நிறை உணவாகும் .. மேற்கு நாடுகளின் பொய் சதி அம்பலம்

பெண்களுக்கு சமையலில் பயன்படுத்த அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுகிறது. மேலும் தலைக்கு தேய்க்க எண்ணெய் வடிவமாகவும் பயன்படுகிறது. இத்தனை விடயத்தில் இதனுடைய சேர்க்கை இருப்பதற்கு காரணம் இதன் மருத்துவ குணங்களே ஆகும். தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இப்போது அவைகளில் சிலவற்றை பார்க்கலாம். * உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது. * தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

சுமந்திரன்:லக்ஷ்மி மித்தலின் இந்திய வீட்டு திட்ட வில்லங்கங்கள் .. 65000 வீடுகள் .. அமைச்சர் சுவாமிநாதனும் லக்ஷ்மி மித்தலும் ....

Wigneswaran also added that the cost per house seemed extremely high, whereas he believes that for the cost of Rs. 21 million, they could build two to three houses. “Instead of 65,000, we can make 130,000 houses,” he added.
https://www.colombotelegraph.com/index.php/tna-accuses-swaminathan-of-influencing-mps-in-arcelormittal-deal-to-build-tin-houses/ இறுதி எச்­ச­ரிக்­கை­யாக அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு இன்று நான் சொல்­­கின்ற செய்தி. நொந்துபோய்
இருக்­கின்ற எம் மக்­க­ளு­டைய வாழ்க்­கை­யுடன் விளை­யாடவேண்டாம் எங்­கள் மக்­க­ளு­டைய தன்மானத்­துக்கு நீங்கள் இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பார­ளு­மன்ற உறுப்­பினருமான எம் ஏ.சுமந்­திரன் தெரிவித்தார். கர­வெட்டி பிர­தே­ச­செ­ய­ல­கத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட கலா­சார பெரு விழாவில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்­றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கர­வெட்டி பிர­தே­ச­செ­யலர் ச.சிவஸ்ரீ தலை­மையில் பெரு விழா நடை­பெற்­றது.
இந்­நி­கழ்வில் அவர் மேலும் கூறி­ய­தா­வது  எங்­க­ளு­டைய  பண்­பாட்­டுக்கும் வாழ்க்கை முறைக்கும் எதி­ரான விட­யங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்த உலோ­கத்­த­கட்­டி­லான வீட்டினை எமது தலைவரான எதிர்­கட்­சித்­த­லைவர் வீடு என்று கூட கூறு­வ­தில்லை. கூடு என்­றுதான் அழைக்­கின்றார்.

கேரளாவில் வெடித்தது மனித சங்கிலி போராட்டம் 700 கிலோ மீட்டர் .. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை


திருவனந்தபுரம்: ஒரே இரவில் நாட்டு மக்களைத் துயரக்கடலில் தள்ளிவிட்ட மோடி அரசுக்கு எதிராக வியாழனன்று கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு மோடி அரசின் மக்கள்
விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.கேரளத்தின் தெற்கே திருவனந்தபுரம் ராஜ்பவனில் துவங்கி வடக்கே காசர்கோடு வரையிலும் நீண்டு சென்ற இந்த மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததன் மூலம் பல்வேறு துயரங்களுக்கு ஆளான மக்களின் எதிர்ப்பு ஒரே குரலில் ஒலித்ததன் வரலாற்று நிகழ்வாக இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் அமைந்தது.
வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திருவனந்தபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் துவங்கியது.

வியாழன், 29 டிசம்பர், 2016

பார்ப்பனியத்தை பதற வைக்கும்... பெரியார் இன்றும் என்றும் .... இந்து இந்திய அச்சும் மதமும்

தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுத்தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.”
பெரியார் அன்றும் இன்றும்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் விடியல் பதிப்பகம் இரண்டு நூல்களை வெளியீட்டிருக்கிறது. கவனத்துக்குள்ளாக்கும் இந்த நூல்களின் கருத்து மற்றும் கண்ணோட்டங்களால் இந்துத்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுபவர்களின் சிந்தனைக்கு மலர்ச்சியும், இந்துத்துவ வெறியர்களுக்கு எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.1. பெரியார் : இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) சமுதாயம், மதம், சாதி, பண்பாடு, தேசியம்… என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுதும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக தேர்ந்தேடுக்கபட்ட இத்தலைப்புகள் காலம், இடம், விவரங்களுடன், அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.

உயிர் வாழ்வது அடிப்படை உரிமை.. உறவினர்களை கூட பார்க்கவிடவில்லையே ஏன்? ஜெ. மரணம் பற்றி நீதிபதி

Madras High Court raises doubts over Jayalalithaa’s death சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரித்து உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதிமுகவை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வின் முன்னர் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது மத்திய, மாநில தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பார்த்து, நீதிபதி வைத்தியநாதன் சில பரபரப்பு கேள்விகளை முன்வைத்தார்.

நீதிபதி வைத்தியநாதன் வீசிய சாட்டையடி கேள்விகள் இவைதான்:
  • ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அனைவருக்குமே, அது தொடர்பாக கேள்வி கேட்க உரிமை உள்ளது.

ஆட்கொணர்வு மனு:புஷ்பா கணவர் ஜாமினில் விடுதலை! விதிமுறை மீறிய பொதுக்குழு செல்லாது?

லிங்கேஸ்வரன் திலகத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை வெளியில் விட்டால், ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர் என்று தமிழக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.. ... எனவே அதிமுகவின் பொதுக்குழு கூட்டியமை செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க முடியும்
இன்று(29/12/2016) காலை சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழுவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் இன்று ஜாமீனில் போலீசாரால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக தலைமைக்கழகத்தில் நேற்று(28/12/2016) இருதரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, லிங்கேஸ்வரன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்களது பிடியில் வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.

வைகோவை கண்டால் விரட்டி அடியுங்கள்!” தொண்டர்களுக்கு விஜயகாந்த் உத்தரவு?

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம் விஜயகாந்த்.
வைகோவை இனி ஒருபோதும் மக்கள் நல கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடம் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். மீண்டும் மக்கள் நலக் கூட்டணியில் இணைய விரும்பதாகவும் கூறியுள்ளாராம். அதே போல் வைகோ தன்னைப் பற்றியோ தேமுதிக பற்றியோ பொது இடங்களில் விமர்சித்தால் அதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் கடுமையாக அடி கொடுக்கப்படும் என்றும் தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது தவறு என வைகோ பேட்டியளித்தது தான் விஜயகாந்தின் இந்த கோபத்திற்கு காரணமாம். லைவ்டே

மோடி தூக்கு போட்டு சாவு’’ மானஸ்தானா..? என்ற கேள்வியால் பாஜகவினர் கொதிப்பு..!!

நாடுமுழுவதும் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி மோடி அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையத்தில் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால், புதிய நோட்டுக்கள் அச்சிட்டு புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி தொய்வு காட்டியது. இதனால் நாட்டில் ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே நாடுமுழுவதும் புழங்கிய நிலையில், சில்லரை மற்றும் பணத்தட்டுப்பாடு கடுமையான பாதிப்பை மக்களிடையே நிலவிவருகிறது.

ஜெயலலிதா மரணம் .. பிரதமர் ,உள்துறை,மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை ..

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, ஹைகோர்ட் விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது படம், வீடியோ என எதுவுமே வெளியாகாததை சுட்டிக் காட்டி தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்?. ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். மத்திய அரசுக்கு தெரிந்தும் வாயை திறக்காதது ஏன்? என்ற கேள்வியை, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் எழுப்பினார் நீதிபதி.

கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு

Sasikala filed habeas corpus in High court சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் புதன்கிழமையன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர், அதிமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டனர். இதில் அவரக்ளுக்கு மண்டை உடைந்து ரத்தம் கசிந்தது. போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். அத்துமீறி ஆட்களுடன் வந்து தாக்க முயன்றதாக சிந்து ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.
இதையடுத்து ராயபேட்டை போலீசார் லிங்கேஸ்வர திலகர் உட்பட 10 பேர் மீது பிரிவு , ஐபிசி 144 , 448 ,323, 327 , 506(2) வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற என கணவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.<

உயர்நீதிமன்றம் :ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது!


ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். 75 நாள் சிகிச்சைக்குப் பின் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அதிமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொள்கைகள் வகுப்பது சசிகலாவாம்... பொதுக்குழு தீர்மானம் : இதயதெய்வம் புரட்சி சின்ன தலைவி அம்மா அவரகள் .. அங்கங்கே கண்மணி பொன்மணி போட்டுகோங்க


சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐந்தாவதாக, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவின், ஐந்தாவது தீர்மானம் வருமாறு: கட்சியின் பொதுச் செயலாளராகவும், தொண்டர்களின் தாயாகவும், தவ வாழ்வு வாழ்ந்த தலைவியை இழந்து கட்சி இன்று கலங்கி நிற்கிறது.கட்சியை இனி யார் வழி நடத்தி செல்வது என்ற நிலை ஏற்பட்ட போது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் சசிகலாவின் பெயர் தான் எழுந்தது. கட்சியை வழி நடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பது; கொள்கைகளை வகுப்பது; கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கி கணக்குகளை இயக்க, பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் சட்ட திட்ட விதி -19, பிரிவு -8 ல் பொதுக்குழுவிற்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2ன் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுவரை, சசிகலாவையே கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றுகிறது.< இவ்வாறு, ஐந்தாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.தினமலர்
 சசிகலா கொளுகை எப்படி இருக்கும்? எல்லா கல்வி நிறுவனங்களும் , மால்களும், பெரிய வியாபார நிறுவனங்களும் .. நாட்டுடமை........ மன்னிக்கவும் எல்லாமே சசியுடைமை ஆக்கப் படும். ... எல்லாப் போஸ்டிங்குகளுக்கும் மினிமம் 25 லட்சம் கமிஷன் கொடுக்கணும்.. பிறகு அந்த போஸ்டிங்கிற்கு இட மாறுதலுக்கு தனியாக ஐந்து லட்சங்களாம். சேகர் ரெட்டி மறுபடியும் திருப்பதி தேவஸ்தானத்தில் ... உண்டியல் பொறுப்பாளராம் ... திருப்பதி உண்டியல் பணம் முழுவதும் கன்டைனரில் வைத்து போயஸ் தோட்டம் கொண்டு வர பட்டு எண்ணப் படுமாம். மன்னார் குடி கும்பல் பிரித்துக் கொண்டது போக , மிச்சம் உள்ளது போனால் போகிறது என்று , வெங்கடேசப் பெருமாளுக்கு திருப்பி அனுப்பப் படுமாம். உண்டியல் என்னும் பணி போயஸ் கார்டனிலேயே நடப் பதால் ,... வாபஸ் வாங்கப் பட்ட முன்னுற்றம்பது போலீசாரும் மீண்டும் போயஸிலேயே பணியமர்த்தப் படுவார்களாம். இந்த மாதிரி உயரிய கொளுகைகளை ஜெயா டி.வி.யில் அடிக்கடி பார்த்து மனம் சந்தோஷப பட்டுக்கலாமாம் பொது மக்கள். தயாராக இருங்கள் மஹா ஜனங்களே