சனி, 25 ஜூன், 2022

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து - உலக தலைவர்கள் கண்டனம்!

தினத்தந்தி  : வாஷிங்டன், அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.
இந்நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  கடந்த டிசம்பர் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமை என்ற முந்தைய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அதிரடியாக ரத்து செய்துள்ளது.

“தமிழர்களின் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர் வி.பி.சிங்”

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார்  :“தமிழர்களின் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர் வி.பி.சிங்” : பிறந்த தின சிறப்புப் பகிர்வு!
11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தவர் வி.பி.சிங்.
மாண்டாவின் ராஜாவாக இருந்தாலும் மண்ணின் மைந்தர்களான அடித்தட்டு மக்களின் உணர்வுகளைத் தன் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்த அற்புத மனிதர் வி.பி.சிங் என்பதில் இரு வேறு கருத்தில்லை.
எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை (காந்தி, நேரு, மோதிலால், பட்டேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா, ராஜீவ் ) தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு தகுதி நீக்க அறிவிப்பு

மாலை மலர் :    இந்த நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
திலீப் லாண்டே என்ற எம்.எல்.ஏ. கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-தேசிய வாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.
அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான தனி அணியை உருவாக்கி உள்ளார்.

இளையராஜா, கௌண்டமணி, ரோகிணி. ரஜினி, பிரசன்னா. வைரமுத்து , சீனு ராமசாமி....

 சுமதி விஜயகுமார் :  இளையராஜா, கௌண்டமணி இருவருமே அவரவர் துறையில் ஜாம்பவான்கள். இன்றும் நாம் விரும்பி கேட்கும் அநேக பாடல்கள் இளையராஜாவின் இசையில் வந்ததாகத்தான் இருக்கும். இளையராஜா மோடியை ஆதரித்து ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியதெல்லாம் யாருக்கும் பெரிய அதிர்ச்சி எல்லாம் இருந்து விட போவதில்லை.
ஏனென்றால் , அவர் மோடியை ஆதரிக்க கூடியவர் தான் என பலமுறை அல்ல , ஒவ்வொரு முறையும் நிரூபித்து கொண்டே இருப்பவர் தான்.
மேடையில் ஒருவரின் தாகத்தை தணிக்க தண்ணீர் கொடுக்க சென்றவரை , லட்சம் மக்கள் முன் எதோ மிக பெரிய தவறு செய்து விட்டவர் போல மன்னிப்பு கேட்க வைத்தார்.
 அடடா ரசிகர்கள் மேல் அவ்வளவு மரியாதையா என்று பார்த்தால், இன்னொரு மேடையில் பாடலுக்கு நடுவே கைதட்டி , விசிலடிக்கும் ரசிகர்களை பார்த்து 'இப்படி சத்தம் போடீங்கன்னா நான் இசையில் சேர்த்த நுணுக்கங்களை எப்படி உங்களால் ரசிக்க முடியும்?' என்று கேட்கிறார்.

இலங்கை தமிழக அரசின் 2-வது நிவாரண உதவி கப்பல் கொழும்பு சென்றடைந்தது!

 Mathivanan Maran  -   Oneindia Tamil  : கொழும்பு: தமிழக மக்கள் சார்பில் இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களுடன் தூத்துக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் கொழும்பு சென்றடைந்தது.
சென்னையின்முதல் ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லாக்களை..முன்பதிவு விலையில்புக்செய் கடைசி வாய்ப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ல பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தமிழக மக்கள் சார்பில் அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டம்-இன்று சிறப்பு முகாம்கள்!

நக்கீரன் : கடந்த நிதிநிலை அறிக்கையில் மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் திருத்தப்பட்டு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த திட்டத்துக்காக கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.  
அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று மாணவிகள் இந்த உயர் கல்வித் திட்டத்தில் பயன் பெறுவர். ஜூன் 30-ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் தகுதியான மாணவியின் பெயரை கல்லூரிகள் பதிவு செய்கின்றன.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23 ஆம் தேதி களேபரங்களுடன் முடிந்த நிலையில், அன்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
கட்சியில் இருந்து பன்னீரை ஒதுக்கும் நடவடிக்கைகளை பொதுக்குழுவிலேயே தொடங்கிவிட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் அதை கட்சி நடவடிக்கைகளிலும் நேற்று தொடர்ந்தனர். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து பன்னீரின் படங்கள், பெயர்களை அகற்றினர். மேலும் எடப்பாடி வீட்டு வாசலில் நேற்று நிருபர்களை சந்தித்த முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், “பொதுக்குழு உட்கட்சித் தேர்தல் தீர்மானங்களை ஏற்காததால் இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன” என்றார்.

மாலைதீவில் உலக யோகா தினத்தில் தலிபான் கொடிகளோடு வந்து தாக்குதல்

 Rishvin Ismath  :  மாலைதீவில் தலிபான் கொடிகளோடு வந்த  இஸ்லாமியவாதிகளால் சர்வதேச யோகா தின நிகழ்வில் தாக்குதல்!
8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நேற்றைய தினம் உலகின் பல பாகங்களில் நடைபெற்றன, அந்த வகையில் மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள சர்வதேச விளையாட்டரங்களில் நடைபெற்ற நிகழ்வில் தலிபான் கொடிகளைத் தாங்கி வந்த பெரும் எண்ணிக்கையான இஸ்லாமியவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த நிகழ்வில் மாலைதீவிற்கான இந்திய, பிரித்தானிய தூதுவர்களும் கலந்து கொண்டு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தாலிபான் கொடிகளைத் தாங்கி வந்தவர்கள் இஸ்லாத்தின் வழமையான வன்முறைக் கோஷமான "அல்லாஹு அக்பரை" முழங்கிக் கொண்டே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

வெள்ளி, 24 ஜூன், 2022

ராகுல் காந்தியின் அலுவலகத்தைச் சூறையாடிய மர்ம கும்பல்!

நக்கீரன் : கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த ஒரு கும்பல், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியதாக வயநாடு இளைஞர் காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த கும்பலின் கைகளில் இந்திய மாணவர் அமைப்பின் கொடிகள் ஏந்தியபடி இருந்ததாகவும், அவர்கள் கூறியுள்ளனர். ராகுல் காந்தி எம்.பி.யின் அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழக பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த இலங்கை தமிழ் பெண் ... நீதிமன்றம் தடை

தமிழ் மிரர் : இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர் அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்கும்படி கூறியதையடுத்து, இரு பெண்களையும் உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்கரைப்பற்று பெண்ணின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தனது நண்பியைதேடி பெண் ஒருவர் வந்துள்ளார். தாங்கள் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்ததாகவும், தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் பெண்கள் கூறியுள்ளனர்.

ஜெர்மன் உதவியுடன் 100 மின்சார பேருந்துகள் வாங்க தமிழக அரசு தீர்மானம்

மாலைமலர் : : சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்குவதற்காக இந்த 100 மின்சார பஸ்களை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் இந்த பேருந்துகள்  வாங்கப்படுகின்றன.
 இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும்.
இதில் 36 பேர் அமரும் வசதி கொண்டது. சக்கர நாற்காலியில் சென்று அமரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இருக்கையும் இதில் அடங்கும்.

நடிகர் மாதவனின் ராக்கெட் விஞ்ஞானமும் வேத மந்திர அம்புலி மாமா கதைகளும்

 ராதா மனோகர் : பார்ப்பனீயத்தை நாம் ஏன் மீண்டும் மீண்டும் விமர்சிக்கிறோம்?
காரணம் மிகவும் தெளிவானது
குழந்தைகளுக்கு அம்புலி மாமா கதை சொல்வதில் அவர்கள் வல்லவர்கள்
துணைக்கண்டத்தில் அவர்கள் நுழையும் போது இந்த் கதை சொல்லும் கலையை மட்டுமே கொண்டுவந்தார்கள்
இங்கே உள்ள எல்லா கலைகளையும் வளங்களையும் அறிவியலையம் தமதாக்கி கொண்டார்கள்
ஒருவர் நல்லதை கற்று தேர்வது தவறல்ல  
அது சிறப்பான பண்புதான்
ஆனால் பார்ப்பனர்கள்  வெறும் கற்பனை கதைகளை வேதம் ஞானம் என்றெல்லாம் கதையளந்து மன்னர்களை நம்ப வைத்து அவர்களின் வளங்களை , அரசுகளை பறித்து விட்டார்கள் ..
நாடுகளை பறித்து விட்டார்கள்

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்! .. செல்வது ஏன்?

  தினத்தந்தி :   எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் பட்டவர்த்தமான வெளிப்பட்டது.
சென்னை, பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் பட்டவர்த்தமான வெளிப்பட்டது.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது, ஓ.பன்னீர்செல்வம் கடுமையான ஆத்திரத்தில் உள்ளார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் உடன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

வியாழன், 23 ஜூன், 2022

எடப்பாடி தான் பொதுச் செயலாளர்.. ஜூலை 11ல் பொதுக்குழு கண்டிப்பா நடக்கும்.. தமிழ்மகன் உசேன் ஒரே போடு!

Vignesh Selvaraj  -    Oneindia Tamil : சென்னை : ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
சென்னையின்முதல் ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லாக்களை..முன்பதிவு விலையில்புக்செய் கடைசி வாய்ப்பு!
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்துள்ளதற்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் பேசும்போது தேசத்தின் இன்னுமொரு குடிமகன் இறந்திருப்பான்

  jaffnamuslim.com : எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் இன்னுமொரு குடிமகன் இறந்திருப்பான்
"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன்.
நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.
(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எடப்பாடியின் பொதுச்செயலாளர் கனவு தகர்ந்தது .. உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Noorul Ahamed Jahaber Ali  -   Oneindia Tamil News  : சென்னை: அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் ஓ.பன்னீர்செல்வம் வீடு முன் அவரது ஆதரவாளர்கள் இடிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வானகரத்தில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

 மாலை மலர்  :  பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

புதன், 22 ஜூன், 2022

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிச்டர் பயங்கர நிலநடுக்கம்- 920 பேர்கள் உயிரிழப்பு

மாலை மலர் :    நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது- மனு தள்ளுபடி சென்னை நீதிமன்றம்!

 மாலை மலர்  : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார்.
எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

கலைஞர் செய்திகள் : தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்பதும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர்.

பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு .. ஜார்ஜ்கண்ட் பழங்குடி பெண்

BBC :  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பாஜகவின் அறிவிப்பு வந்துள்ளது.

இலங்கையின் நெருக்கடியான நேரத்தில் உதவிக்கு முன்வராத சீனா

 தமிழ் மிரர் : இலங்கையின் பொருளாதாரத்தை ஆடங்காணச் செய்ததில், சீனாவின் வகிபாகத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவே முடியாது.
அந்தளவுக்கு கடனுக்கு மேல் ​கடனைக்கொடுத்து, கடனை செலுத்துவதற்கு அதிக வட்டியுடன் கடனைக் கொடுத்து உபதிரவம் செய்துவிட்டது.
சீனாவைச் சேர்ந்த கம்பனிகள் பல, மிக இலாவகமாக இலங்கையின் ஆட்சியாளர்களை வலைக்குள் சிக்கவைத்து, தங்களுக்கு சாதகமான, இலங்கைக்கு உடனடியாக எவ்விதமான பெறுபேறுகளையும் இலாபங்களையும் ஈட்டிக்கொள்ள முடியாத திட்டங்களையும் திணித்துவிட்டது.

செவ்வாய், 21 ஜூன், 2022

வீடுகளில் ஆர்டலிகளை பயன்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் அதிரடி

BBC :  'காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்ட ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர், தனக்கு ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பு இல்லத்தைக் காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கைக் கடந்த 14 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், மனுதாரர் இடத்தைக் காலி செய்யவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அந்த இடத்தை இந்த ஆண்டுதான் மனுதாரர் காலி செய்துள்ளார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இங்கே சொல்லப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்குக்கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் காவல்துறை நன்மதிப்பை இழக்க நேரிடும். அதிலும், காவல்துறை மீது மக்கள் மத்தியில் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன' எனக் குறிப்பிட்டார்.

அதிபர் கோத்தபாயவின் அதிகாரங்கள் குறைப்பு நாடாளுமன்றத்திற்கே அதிக அதிகாரம்! 21 வது சட்டத்திருத்தம் நிறைவேறியது

tamil.samayam.com  : இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்க வகை செய்யும் அரசியலைப்பின் 21 ஆவது சட்டத்திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
இந்த நிலையில், இலங்கை தற்போது சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக மகிந்த ராஜபக்சே தமது பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதனையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாட்டின் புதிய பிரதமராக கடந்த மாதம் பதவியேற்றார்.   
அப்போது, இலங்கை அதிபருக்கு உள்ள மட்டற்ற அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும்படி அரசியல் சாசனத்தின் 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் . குடியரசு தலைவர் தேர்தல்

 மாலைமலர் : யஷ்வந்த் சின்ஹா யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லி குடியரசுத் தலைவர் தேர்தல்- எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா By
பாராளுமன்ற வளாகத்தில் சரத்பவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார். ​​குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் திரினாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வந்தார்.
இதற்காக அண்மையில் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா

tamilmurasu.com.sg : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. படம்: இந்திய ஊடகம்
தூத்­துக்­குடி: தூத்­துக்­கு­டி­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக மூடப்­பட்­டி­ருக்­கும் ஸ்டெர்­லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறு­வ­னம் முடிவு செய்து உள்­ளது.
தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக கடந்த 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. அதே ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் முன்பு முற்­றுகை போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டது.
இந்­தப் போராட்­டத்­தில் ஏரா­ள­மா­னோர் பங்­கேற்­ற­னர். அப்­போது ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மாக காவல்­து­றை­யி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம்? தீட்சர் குடும்பம் - போலீசார் விசாரணை!

Natarajar temple Dikshitars child marriage in Chidambaram? -Police investigation!

நக்கீரன் - காளிதாஸ்  : சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவராமன் மகன் கபிலன் இவருக்கும் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 3-ஆம் தேதி கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றது என்றும்,
அதனையொட்டி கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் விருந்தோம்பல் நடைபெற்றதாகவும்  சமூக நலத்துறை அலுவலர் சித்ரா புகார் அளித்தார்.

“600க்கு 597 மதிப்பெண்.. மாநிலத்தில் 2ம் இடம்” : ஹிஜாப் பிரச்சனையில் சிக்கிய மாணவி

“600க்கு 597 மதிப்பெண்.. மாநிலத்தில் 2ம் இடம்” : ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியிலும் சாதித்த இஸ்லாமிய மாணவி!

கலைஞர் செய்திகள் : ஹிஜாப் பிரச்சனையிலும் கல்வியில் கவனம் எழுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாணவி இல்ஹாம் 600க்கும் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ல் துவங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார் 1,076 மையங்களில் நடந்த இந்த தேர்வில் மொத்தம், 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ - மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
ஹிஜாப் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, மதிப்பெண் சரிபார்ப்பு பணியும் முடிந்து விட்டது.

பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அதிமுக

மின்னம்பலம் " வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில்... சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும்,  அதிமுகவின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அதில், “வரும் 23ஆம் தேதி வானகரத்தில்  நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் என 2500 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

திங்கள், 20 ஜூன், 2022

சிறுவாணி நீர்! கேரள முதல்வருக்கு நன்றி! கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய முதல்வர் பினராயி விஜயன்

கலைஞர் செய்திகள் : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நேற்று (19-6-2022) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குகள்: நீதிமன்றத்தில் பன்னீரின் கடிதம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குகள்: நீதிமன்றத்தில் பன்னீரின் கடிதம்!

மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டிருக்கிறது.  இந்த மனு மீது பதிலளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
 கடந்த ஒரு வாரமாக பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடக்கும் மோதலால்,  பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம், எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆனால் எடப்பாடியோ பொதுக்குழுவை நடத்தி அதில் தன்னை ஒற்றைத் தலைமையாய் நிலை நிறுத்த தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு- எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை

மாலைமலர் : ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் பொது வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை கூடி ஒருமித்த வேட்பாளரை முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு,
அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர்.

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பா?-போலீசார் விசாரணை!

நக்கீரன் செய்திப்பிரிவு   :  திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த சாய்தருண் என்ற 2 வயது குழந்தைக்கு சிலநாட்களுக்கு முன்பு உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையளித்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்தருணுக்கு அவரது தாய் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் அடுத்தநாள் காலையிலும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த நூடுல்சை தாய் குழந்தைக்கு சாப்பிட கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில்,

இலங்கையில் நாளை முதல் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் தற்காலிக மூடல்.. - அரசு அதிரடி உத்தரவு...!

  tamil.abplive.com  - சுதர்சன்   : எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த வாரம் முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.
எரிவாயு பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து தவித்து வரும் இலங்கையில், பொது போக்குவரத்தில் மக்கள் கூட்டத்தை குறைக்க வீட்டிலிருந்து பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

நடுவான் விபத்தில் இருந்து தப்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும். இலங்கை பைலட்டின் சாதனை 2 Planes 15 Miles Apart At 35000 Feet Collision Avoided

Madhavan P - tamil.behindwoods.com : இரு விமானங்கள் நேருக்கு நேராக மோத இருந்த நிலையில், கடைசி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த விமானிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.
2 Planes 15 Miles Apart At 35000 Feet Collision Avoided
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கிளம்பி இலங்கை தலைநகர் கொழும்புக்கு பறந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், இங்கிலாந்து விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்தது. அப்போது, அங்காரா விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. இதனால் விமானி சற்றே குழப்பமடைந்திருக்கிறார்.

30 ஆயிரம் அடி உயரத்துல பறந்தபோது விமானத்துக்குள்ள பெய்த மழை.. உறைந்துபோன பயணிகள்..!

BBC : இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட விமானம் ஒன்றில், திடீரென கேபினில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இங்கிலாந்தின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.40 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று கிளம்பியிருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்ற விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆனால், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமானம் பத்திரமாக வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மழை போல பெருக்கெடுத்த தண்ணீர்

ஞாயிறு, 19 ஜூன், 2022

விருப்பத்தின்படி பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நடவடிக்கையை தவிருங்கள் - போலீசுக்கு நீதிமன்றம் கோரிக்கை

MADHAN News18 Tamil Nadu : விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர், பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபடும் வயது வந்த தனிப்பட்ட நபர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவை கைகழுவும் பாஜக ... கோபத்தில் வெங்கையா நாயுடு

தினமலர் : சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, தி.மு.க.,வின் பத்திரிகையான முரசொலி புகழ்ந்து தள்ளியது.
இது பலவித ஊகங்களைக் கிளப்பி விட்டது.ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிட்டால் தி.மு.க., ஆதரவளிக்கும் போலிருக்கிறது என செய்திகள் அடிபட்டன.
இந்நிலையில் ஒரு விஷயம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுவதோடு, சில தலைவர்களின் 'வாட்ஸ் ஆப்' பிலும் வலம் வருகிறது.
வெங்கையாவுக்கு இனி எந்த பதவியும் தரப் போவதில்லை என பா.ஜ., தலைமை முடிவு செய்துவிட்டதாக கூறப்படும் செய்தி தான் அது.
பதவி ஓய்வு பெறும் இவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்படும்.டில்லியின் எந்த பகுதியில் பங்களா வேண்டும் என விசாரிக்க, சமீபத்தில் வெங்கையா நாயுடுவை சந்தித்தாராம் ஒரு சீனியர் அமைச்சர். 'பிரதமர் என்னை அனுப்பி உங்களின் விருப்பத்தைக் கேட்டு வரச் சொன்னார்' என, அந்த அமைச்சர் சொன்னதும், வெங்கையா நாயுடு பொரிந்து தள்ளிவிட்டாராம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை! மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு

Arsath Kan  -   Oneindia Tamil :  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
''மகுடம் மறுத்த மாமன்னன்'' என்ற புத்தகத்தின் தமிழ் பிரதி வெளியிட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தனக்கு பதிலாக தனது பிரதிநிதியாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனை அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

ஒற்றை தலைமை விவகாரம்- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்தது என்ன

மாலைமலர் :  பொதுக்குழு கூட்டத்துக்கான தீர்மானம் தயாரிப்பதற்காக ஒரு குழு போடப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மான தயாரிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தலைமை கழகத்தில் நடந்தது என்ன என்பது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
பொதுக்குழு கூட்டத்துக்கான தீர்மானம் தயாரிப்பதற்காக ஒரு குழு போடப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மான தயாரிப்பில் ஈடுபட்டனர்.

நடிகை சாய் பல்லவி : கும்பல் படுகொலைய நியாயப்படுத்துறாங்க! மத வன்முறை தவறு.. எனக்கு எல்லா உயிரும் சமம்

Noorul Ahamed Jahaber    -    Oneindia Tamil  :;  சென்னை: கும்பல் படுகொலைகளை சிலர் நியாயப்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாகவும், மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறு என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்து உள்ளார்.
தெலுங்கில் ரானா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்து இருக்கும் விரட்டா பர்வம் திரைப்படம் நேற்று வெளியானது.
இந்த நேர்காணலில் பேசிய சாய் பல்லவி, "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள்.