சனி, 8 ஆகஸ்ட், 2020

இலங்கை தேர்தலில் மலையக தமிழ் தலைவர்கள் பெருவெற்றி .. முழு வாக்கு விபரம்

மலையக தமிழ் தலைவர்கள் இந்த தேர்தலில் சற்று அகலமாகவும்ஆழமாகவும் தடம் பதித்து உள்ளார்கள் புத்திமான் பலவான் என்பதை மலையகம் மீண்டும் நிருபித்து உள்ளது ... மொத்த மலையாக வேட்பாளர்களும் பெற்ற வாக்கு விபரம் :
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் :


ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
பழனி திகாம்பரம் -83392
வேலு ராதாகிருஷ்ணன் - 72167
மயில்வாகனம் உதயகுமார் - 68119
மனோ கணேசன் -62091
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902
வேலு குமார் -57445
அரவிந்தகுமார் -45494
 

வடிவேல் சுரேஷ் .. 49792

வெற்றி பெறாத வேட்பாளர்கள்
மூக்கன் சந்திரகுமார் (இரத்தினபுரி)-36432
ஜனகன் விநாயகமூர்த்தி(கொழும்பு) -36191
பரணிதரன் (கேகாலை)- 22758
சசிகுமார்(கம்பஹா) - 22429 

 நுவரெலியா மாவட்டம்
கணபதி கனகராஜ்- 46268
பழனி சக்திவேல் - 36944

திருச்சி ரயில்வே பணிமனையில் 450 வடமாநிலத்தவர்க்கு பணி ஆணை! தமிழர்கள் மீண்டும் கூலிப்பணிக்கு என்ற ஆர் எஸ் எஸ் ... உபயம் அதிமுக

Kalai Selvi : திருச்சி ரயில்வே பணிமனையில் 450 வடமாநிலத்தவர்க்கு

பணிஆணை 300-க்கும் மேற்பட்ட வட நாட்டவர்களுக்கு இ-பாஸ் கொடுத்தது யார்..?     திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலத்தவர்கள் 300-க்கும் அதிகமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு இன்று வந்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் திருச்சி பொன்மலைக்குள் இத்தனை வடமாநிலத்தவர்கள் எப்படி வந்தார்கள்,..? ரயில்கள் ஓடவில்லை, பேருந்துகள் இயங்கவில்லை, இவர்களுக்கு எதனடிப்படையில் இ-பாஸ் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளோடு பொன்மலை ரயில்வே முன்னாள் ஊழியர்களின் வாரிசுகளும், கடந்த பல ஆண்டுகளாக பணிமனையில் அப்ரண்டிஸ் முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்போரும் ஆர்மரிகேட் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் திருமண கூடத்திற்கு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.          இது போன்ற ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே தர்ணாவிலும் ஈடுபட்டனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தமிழர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

ஜோதிகா அரசு மருத்துவனைக்கு 25 லட்சம் அளித்தார் .. ரஜினி கமல் அஜித் விஜய் வியாபாரத்தில முதலீடு...

Kalai Selvi : JyothiKa GaVe Twenty Five Lakhs to thre Thanjavur Govt Hospital Did How many Hindutwa Sangee Actors are ready to donate for Education and Health ? 


 மின்னம்பலம் :நடிகை ஜோதிகா அகரம் அறக்கட்டளை மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ .25 லட்சம் மதிப்பிலான நன்கொடை அளித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கைகளுக்கு மட்டுமல்லாமல், மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் வார்டுக்கு வண்ண ஓவியங்கள் வரையவும், குழந்தைகள் பூங்காவை புனரமைப்பு செய்து அழகுபடுத்தவும் இந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார் ஜோதிகா.ஜோதிகா சார்பில் இந்த உதவியை தஞ்சையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் பத்திரிகையாளருமான இரா.சரவணன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று (ஆகஸ்டு 8) வழங்கினார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துளார்.

தமிழ்நாட்டில் புதிதாக 5,883 பேருக்குத் தொற்று : 118 பேர் உயிரிழப்பு !

மின்னம்பலம் : தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து வந்த 17 பேர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று 5,883 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 2,90,907ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,043 பேர் உட்பட இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 618 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வரும் நிலையில் இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக இன்று பாதிப்பு 1000க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. இன்று 986 பேர் உட்பட இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று, செங்கல்பட்டில் 475 பேருக்கும், தேனியில் 452 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. -கவிபிரியா

கோழிக்கோடு விமான விபத்து: டேபிள் டாப் ஓடுபாதை என்றால் என்ன?

BBC: கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம்,
விமான விபத்து
ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விமான விபத்து நடந்த நேரத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது மற்றும் புலப்பாடு குறைவாக இருந்தது. தரையிறங்கும் போது விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது.விமானத்தின் விபத்துக்கு ஒரு காரணம் கனமழைகாரணமாக புலப்பாடு இல்லாமல் இருந்தது என்று கூறப்பட்டாலும், கோழிக்கோட்டில் உள்ள டேபிள் டாப் ஓடுபாதை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். "விமானம் 30 முதல் 35 அடி வரை கீழே விழுந்துவிட்டது. இதனால் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கலாம். இது ஒரு டேபிள்-டாப் ஓடுபாதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தேசிய பேரிடர் மீட்புப்படையின் டிஜி, எஸ்.என்.பிரதான், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

ஜெகத்ரட்சகன் -அனிதா: பாஜக இழுக்கிறதா?

ஜெகத்ரட்சகன் -அனிதா: பாஜக இழுக்கிறதா?

மின்னம்பலம்:  ;திமுக சட்டமன்ற உறுப்பினரான கு.க. செல்வம் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். அவர் இணையவில்லை என்று சொன்னாலும் மறுநாள் ஆகஸ்டு 5 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சிறப்பு நிகழ்வில் கு.க.செல்வம் கலந்துகொண்டார். இந்நிலையில், திமுகவில் இருக்கும் மேலும் சில அதிருப்தியாளர்களும் அக்கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று தகவல்கள் பரவுகின்றன.

கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது; 9 வருடங்களுக்கு முன்பே விடப்பட்ட எச்சரிக்கை

தினந்தந்தி : ென்னை,கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இதுபோன்று துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.       துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர்.     அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.      

சங்கிகளை தனிமைப்படுத்துங்கள்.... நட்பு வட்டத்தில் இருந்து விலக்குங்கள்.. அவர்கள் ஆபத்தானவர்கள்

வுக்கு_ங்கர் : சங்கிகளை தனிமைப்படுத்துங்கள்.! சங்கிகளை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலக்குங்கள்.

நேற்று கேரளாவில் விமான விபத்து நடந்த செய்தி கிடைத்தவுடன், நள்ளிரவில், மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்ய பலர் வரிசையில் நின்றார்கள்.

 சமூகவலைத்தளங்களில், இறப்பு எத்தனை ? காயம் எத்தனை பேருக்கு ? என பிரார்த்தனைகளையும், அனுதாபங்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் இதன் நடுவே, கேரளாதானே... அவனுங்களுக்கு வேணும். அய்யப்பனை

இழிவுபடுத்தியதற்கு கடவுள் கொடுத்த தண்டனை, அவனுங்க தங்கம் கடத்துறவனுங்க என்றும் பல்வேறு கருத்துக்களை பார்க்க முடிந்தது. இத்தகைய கருத்துக்களை பதிவிடுபவர்கள் சங்கிகள் மட்டுமே என்பதை சொல்ல வேண்டியதில்லை. இதனால்தான் சங்கிகள் மனிதகுலத்துக்கே விரோதிகள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். அனைத்து சங்கிகளையும் இணைப்பது ஒற்றைப் புள்ளி. அந்த புள்ளி - நரேந்திர மோடி. நான் இந்து வெறியன் அல்ல. மதவாதி அல்ல. ஆனா மோடியை புடிக்கும் என்று சொல்பவன் தான் ஆபத்தானவன்.

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் .... சாவித்திரி கண்ணன்

சாவித்திரி ண்ணன் : இலங்கை தேர்தல் சில அதிர்ச்சியான,வித்தியாசமான கள நிலவரங்களை நமக்கு உணர்த்தியுள்ளது!கடும் தமிழ் தேசியவாதம்,போலி இனவாதம் பேசியவர்களை இலங்கை தமிழ் மக்கள் பெருமளவு புறக்கணித்துள்ளனர்! ஓரிருவர் விதிவிலக்காக வென்றுள்ளனர்.அதுவும் மிக சொற்ப வாக்குகளில்!  

வட கிழக்கு மாகாணங்களில் உள்ள 25 தொகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறும் 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது! (தமிழர் தரப்பில் ஒரு பெண் வேட்பாளருக்கு கூட வெற்றிக்கான வாய்ப்பு தமிழர் கட்சிகளால் வழங்கமுடியவில்லை. ரவிராஜாவின் மனைவி சசிகலா திட்டமிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வருகின்றன) முக்கிய தலைவர்களுமே பழைய முறையிலான உணர்ச்சியை கிளரும் பேச்சுகளை தவிர்த்து எந்தளவுக்கு தமிழர்களுக்கான உரிமையை,அதிகார பரவலை சாத்தியமாக்குவது என்பது குறித்தே பிரச்சாரம் செய்தனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதான தலைவர்களில் ஒருவரான சுமந்திரன்,தேர்தலுக்கு முந்திய தனது ஊடக நேர்காணல் ஒன்றில், ‘’தமிழீழ தனிநாட்டையோ, அதற்கான ஆயுத போராட்டத்தையோ இனியும் ஆதரிப்பதற்கில்லை…’’ என்றதோடு விடுதலைப் புலிகள் மீதான கடும் விமர்சனங்களையும் வைத்தார்.

லண்டனில் குஜராத் போதை மருந்து கடத்தல் மாபியா ... 206 கோடி கரன்சி .. ஜெ பட்டேலின் அரசியல் பின்னணி

Devi Somasundaram : UK ல சமீபத்தில் வெளியான போதைப் பொருள் கடத்தல் கும்பலின் கதைகள் இந்தியாவின் குஜராத்தை மையமாக கொண்டுள்ளது ...ஐரோப்பிய நாடுகளுக்கு போதை மருத்து கடத்துவதில் இந்தியா முக்கிய மையமா இருப்பதாக கடந்த பல வருடமா லண்டன் போலிஸ் தன் இன்வெஸ்டிகேஷனில் கூறி வருகிறது .. கடந்த ஆண்டு இந்த கும்பலின் தலைவன் சுஷான் தர் ஷான் பற்றிய தகவல் வெளியான நிலையில் ஒரு வாரம் முன்பு குஜராத்தை சேர்ந்த ஜெய் படேல் என்பவரின் லண்டன் வீட்டில் இந்திய மதிப்ப்பில் 206 கோடி ரூபாய் திப்புள்ள 53 மில்லியன் பவுண்ட்ஸ் பணம் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி உள்ளது .மலையாளப் படமான லூசிபையரில் கடத்தல் கும்பல் த`ரும் கட்சி நிதி பற்றிய காட்சிகள் அறிவோம் ..அது இது மாதிரி நிஜ தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமா இருக்கலாம் . ஜெய் படேல் மாதிரி ஆட்கள் குஜராத்தில் யாருக்கு நிதி உதவி செய்கின்றனர் ....யாரிடம் அத்தனை அதிக பணப் புழக்கம் இருக்கு....எம் எல் ஏ களை நாடு முழுதும் இந்த பணத்தை வைத்து தான் விலைக்கு வாங்குகிறார்கள் என்றால் நாளை விசாரணை வளையத்தில் அந்த எம் எல் ஏ களும் சிக்குவார்கள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

கேரளா கோழிக்கோடு விமான விபத்து . வீடியோ

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்கள் .. தொடர்கிறது மீட்பு பணி .. வீடியோ

BBC :கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மூணாறில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்றில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 60 பேர் அதில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தது 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். கேரள அரசாங்கம் மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படையின் உதவியை கோரியுள்ளது.

கோழிக்கோடு 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் . கனமழை பாதையில் வழுக்கி இரண்டாக உடைந்தது.. விமானி பலி பயணிகள் நிலவரம் ..

tamil.oneindia.com/: கோழிக்கோடு.. கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள், தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த விமானம் கோழிக்கோட்டில் இருக்கும் கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளது. இந்த விமான விபத்து மாலை 7.40 மணிக்கு நடந்துள்ளது.

நிலை என்ன

இந்த விமானத்தில் 184 பேர் இருந்துள்ளனர். இதில் 10 குழந்தைகள் இருந்தனர். மொத்தமாக 6 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். 2 பைலட்கள் இருந்துள்ளனர். இதில் விமானத்தின் முன் பாகம் அப்படியே

 உடைந்து போனதால், விமானிகள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. மற்ற பயணிகளின் நிலை தெரியவில்லை.
எப்படி வந்தது

எப்படி வந்தது

இந்த விமானம், ஓடு பாதையில் சறுக்கில் கீழே விழுந்து, மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழைதான் இதற்கு காரணம் ஆகும். ஓடு பாதை மிக அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் கீழே இறங்கியது விமானம் சறுக்கி உள்ளது. அதேபோல் இந்த விமான நிலையம் மலை மீது இருக்கும் சிறிய ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும் .

கேரளா விமான விபத்து .. ஓடுபாதையில் இருந்து விலகிய ஏர் இந்தியா விமானம் .. மீட்புப்பணிகள் தீவிரம் வீடியோ

BBC : கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த சுமார் 200 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசரஊர்தி வாகனங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் இன்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 சம்பவ இடத்தில் மழை பெய்து வருகிறது. இதுவரை 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தேர்தல்: அதிக வாக்குகளுடன் தொகுதிகளை கைப்பற்றிய தமிழ் வேட்பாளர்கள்


BBC : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவில், சிறுபான்மை கட்சிகள் அதிக வாக்குகள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.தமிழர்கள் அதிகம் . >வாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் தேர்வாகியுள்ளனர். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள், குறிப்பிடத்தக்களவில் வாக்குகளை தனதாக்கிக் கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்த முறை லேசான சரிவு ஏற்பட்டதை கவனிக்க முடிகிறது.கடந்த
நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை கைப்பற்றியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த முறை 10 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன. இலங்கை தமிழரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தேர்வாகியுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த முறை தேர்வாகியுள்ளனர்.

அத்துடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவாகியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட நிலையில், அங்கு அங்கஜன் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிளவுப்பட்டு, தமிழ் மக்கள் தேசிய கட்சியை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்திருந்த நிலையில், அவருக்கும் இந்த முறை, தேர்தலின் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடந்தது என்ன? சுமந்திரன் பேட்டி வீடியோ

சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பிய சவுதி அரேபியா இளவரசர்?

சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல  கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு
மாலைமலர் : சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு ஒன்றில் சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட உடனேயே ஜாப்ரியைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகவும், எனினும் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.சவுதி அரேபியா அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான ஜாப்ரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். அவர் அன்று முதல் கனடாவின் டொரான்டோவில் தனியார் பாதுகாப்பில் இருக்கிறார்.டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கனாடா எல்லைப்படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

சங்க கால கல்வெட்டுகளுக்கு ஆபத்து!

மின்னம்பலம் : -நிலவளம் கு.கதிரவன்

ஓர் இனத்தின் நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை வரலாற்றோடு கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் வழியாகவே நிறுவப்பட்டு நம்மால் அறியமுடிகிறது. அந்த வகையில் சங்ககால வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் அதைச் சார்ந்த ஊரகப் பகுதிகளாகும்.சங்க கால கல்வெட்டுகளுக்கு ஆபத்து!

கி.மு.5ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சங்க காலம் என பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அக் கால வரையறையின் வாயிலான பற்பல ஆய்வுகள் மேற்கொண்டு மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர். இதுவரை 32 இடங்களில் ஆய்வு செய்து கிடைத்த 95 கல்வெட்டுகளில் 5 விழுப்புரம் மாவட்டத்திலும், குறிப்பாக செஞ்சி மற்றும் செஞ்சி வட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் 4 கல்வெட்டுகள் இருப்பது செஞ்சி பகுதியின் சிறப்பாகும். திருக்கோவலூர் ஜம்பையில் 1 கல்வெட்டு உள்ளது. இதன் வாயிலாக செஞ்சி சங்க காலத்தில் சிறப்பு பெற்ற பகுதியாக இருந்தது இவ்வாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் தேர்தல் ,.. சுமந்திரன் எம்பியின் வாக்கு எண்ணிக்கையின் போது அராஜகத்தை கட்டவிழ்த்த குண்டர்கள்

ப. தெய்வீகன் . எழுதுகிறார். : ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும். தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் > மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில்
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

சன் நியுஸ் தலைமை செய்தி ஆசிரியராகிறார் குணசேகரன் ... நியுஸ் 18 இல் நெருக்கடிக்கு உள்ளானவர்

  M Gunasekaran: அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,   வணக்கம்.
சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief)

பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின் கரங்களையும் நெகிழ்ச்சியோடு பற்றிக் கொள்கிறேன்.அறமும்,

உண்மையும் மக்கள் நலனுமே ஊடகப் பணியின் முதன்மையான நெறிகள் என்பதில் எனக்குள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்த விழைகிறேன்.நேயர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், பல்துறை வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் இலக்கிய ஆளுமைகள், உயர் அதிகாரிகள், நீதித்துறையினர், சக பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு தளங்களிலிருந்து நீண்ட ஆதரவுக்கரங்கள் சற்றும் எதிர்பாராதவை. தொலைபேசியிலும் சமூகவலைதளங்களிலும் வாஞ்சையும் அன்பும் பொழிந்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தமிழ்நாடு ஒரு தனித்துவமான மாநிலம் என்பதை அறிவுப்பூர்வமாகவும் அனுபவ ரீதியாகவும் நன்கறிவேன். ஆனால் இந்த உண்மையை, உணர்வுப்பூர்வமாக கண்டது இந்தத் தருணத்தில்தான்!

இலங்கை 2020 தேர்தலில் தமிழ் மாவட்டங்களில் சில தேர்தல் முடிவுகள் .

Ceylonmirror.net :  2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்

இலங்கை தேர்தலில் மகிந்த ராஜபக்ஷா கட்சி பெருவெற்றி ..சஜித் பிரேமதாச கட்சி முக்கிய எதிர்க்கட்சியாகிறது .. ரணில் கட்சிக்கு படு தோல்வி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஇலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையான இடங்களை பெறும் கட்டத்தில் உள்ளது.இந்த தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படவுள்ளன.வியாழக்கிழமை காலையில் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணணிக்கை தொடங்கியது முதலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகலிலும் இபட மூலாதாரம், தே நிலை நிலவியது.
வியாழக்கிழமை இரவு 10 மணி வரையிலான தேர்தல் முடிவுகளின் நிலவரப்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 41 லட்சத்து 5 ஆயிரத்து 602 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.ஐக்கிய மக்கள் சக்தி 16 லட்சத்து 68 ஆயிரத்து 467 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும், தேசிய மக்கள் சக்தி 2 லட்சத்து 76 ஆயிரத்து 328 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அத்துடன், இலங்கை தமிழரசு கட்சி 2 லட்சத்து 43 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 489 வாக்குகளை இதுவரை பெற்று மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6.30 வரை வெளியான முடிவுகளின்படி 50 ஆயிரத்தை அண்மித்த வாக்குகளை மாத்திரமே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெற்று, பின்னடைவை சந்தித்துள்ளது,

ஸ்டாலினைச் சுற்றி... பாஜக பின்னும் வலை!

மின்னம்பலம் : இந்நிலையில் செல்வத்தை பாஜக பக்கம் திசை திருப்பியது அவரது கட்சி அதிருப்தி என்றாலும்.... அதற்கு பாதை அமைந்தது எப்படி என்று திமுக, பாஜக என இரு தரப்பிலும் விசாரித்தோம்.திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திடீரென பாஜகவில் சேர்ந்துள்ளார். பாஜகவில் சேரவில்லை என்று அவர் மறுத்தாலும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை ஒட்டி கமலாலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில் கு.க. செல்வம் கலந்து கொண்டார்.மனம் விட்டு பேச வைத்த அறிவாலயம் “மே 22ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவர் சேர்ந்ததுமே அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை, திமுகவில் இருக்கும் முக்கியமான அதிருப்தியாளர்களை உங்களது இத்தனை வருட அனுபவத்தை கொண்டு அடையாளம் கண்டு சொல்லுங்கள். அவர்களோடு பேசிப் பார்ப்போம். அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் நாம் செய்து தந்து பாஜகவுக்கு வர வைப்போம் என்பதுதான் விபி துரைசாமிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

புதிய கல்வி கொள்கைகளால் என் தம்பி தங்கைகளின் கனவுகளை சிதைத்து விடாதீர்கள்.

Akilan Desingu : டிப்ளமோ முடித்து விட்டு ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன்.காரின் மேற்புற பாகங்களுக்கு ஸ்பாட் வெல்டிங் அடிப்பது தான் வேலை.எட்டு மாதங்களுக்கு பிறகு அதே நிறுவனத்தில் மற்றோர் இடத்திற்கு மாற்றினார்கள்.இதில் வெல்டிங் முடித்து வருகிற கார்களில் உள்ள சீலன்டை ஆயில் ஊற்றி துடைக்க வேண்டும். ஒன்றரை நிமிடங்களுக்கு ஒரு கார் என வரிசையாக வந்து கொண்டிருக்கும். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருப்போம். 7.30 மணிக்கு சாப்பாடு இடைவேளை.ஏழு மணியில் இருந்தே பசிக்க துவங்கி விடும்.எனக்கு சாப்பாட்டை தவிர வேறு சிந்தனையே வராது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை மேலே உள்ள கடிகாரத்தை பார்ப்பேன்.ஒரு வழியாய் பெல் அடித்ததும் ஓடி போய் கை கழுவ கிளவுசை கழற்றினால் அதில் ஆயில் வாசம் அடிக்கும்.அந்த ஆயில் வாசனை மூக்கிற்கு ஏறி ஏறி ஒரு கட்டத்தில் சுரம் வந்து ஊருக்கு வந்து விட்டேன்.
வேலைக்கு போக பிடிக்கவில்லை.மேலே படிக்க ஆசை இருந்தது ஆனால் வசதி இல்லை.என்ன செய்வதென தெரியாமலே மறுபடியும் வேலைக்கு சேர்ந்தேன்.அப்போது சம்பளம் 7500 வந்து கொண்டிருந்தது.ஒரு யோசனையாக பணம் சேர்த்து படிக்கலாம் என தோன்றியது.வீட்டில் ஒப்பு கொள்ளவில்லை. விடாப்பிடியாக பேசி வீட்டிற்கே வராமல் இருந்து கெஞ்சி சம்மதிக்க வைத்தேன். சேமிப்பதற்கென்றே வேறொரு வங்கி கிளையில் கணக்கு துவங்கினேன்.ஒவ்வொரு மாதமும் பணம் போட்டு விட்டு மறைமலை நகர் வீதிகளில் தன்னம் தனியே நடந்து வந்து கொண்டிருப்பேன். அந்நாளில் என்னை இயக்கிய நம்பிக்கை எதுவென தெரியவில்லை.ஏதோ ஓர் வைராக்கியமாக தொடர்ந்து பணம் சேர்த்து வந்தேன்.

பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்...

பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம்
   தினத்தந்தி : பெய்ரூட் வெடிவிபத்தை தொடர்ந்து ஆபத்து சென்னையிலும் 740 அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம் அளித்து உள்ளது. சென்னை
லெபனான் தலைநகர் பெய்ரூட் சேமித்து வைக்கப்பட்டு இருந்த   2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்துள்ளனர், மேலும் 5,000 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக உலக நாடுகள் தங்களது நாட்டில் உள்ள துறைமுகங்களில் சேமித்து வைத்திருக்கும் வெடிக்கக் கூடிய வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனஇந்த நிலையில் சென்னை துறை முகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சுமார் 35-க்கும் அதிகமான கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செய்தியானது சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ்: நிஜ போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

ஜெயராஜ், பென்னிக்ஸ்:  நிஜ போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்! மின்னம்பலம் : சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களால், தந்தை மகன் இருவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் ஏற்பட்ட மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார்கள்.செல்போன் கடையை ஊரடங்கு அனுமதித்திருந்த நேரத்துக்கும் அதிகமாகத் திறந்திருந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து போலீசாரால் சாத்தான்குளம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார் செல்போன்கடை வைத்திருந்த ஜெயராஜ். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்ஸும் காவல்நிலையம் சென்றார். ஜூன் 19 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு கோவில்பட்டி மருத்துவமனையில் பென்னிக்ஸும், சிறையில் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். சாத்தான்குளம் முதல் ஐ.நா. சபை வரை உலுக்கிய இந்த மரண விவகாரத்தை மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, போலீசார் மரியாதைக் குறைவாக நடத்தியதாக உயர் நீதிமன்றமே கண்டித்தது.

பணம் சம்பாதிக்க திமுகவிலிருந்து விலகினேன்: கு.க.செல்வம்

பணம் சம்பாதிக்க திமுகவிலிருந்து விலகினேன்: கு.க.செல்வம்மின்னம்பலம் : திமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், திடீரென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஆனால், தான் பாஜகவில் இணையவில்லை என்று செல்வம் கூறிவிட்டார். இதன் எதிரொலியாக செல்வத்தின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, அவர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.நிரந்தர நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு நீக்கினாலும் கவலையில்லை என்று தெரிவித்தார்.இந்த நிலையில் சென்னையிலுள்ள தனது சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கு.க.செல்வம் இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுகவில் வளர்ச்சி இல்லை என்பதால் விலக முடிவு செய்தேன். கட்சியில் இருக்கப் பிடிக்காததால் பொறுப்பிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள் என 10 நாட்களுக்கு முன்பே கூறிவிட்டேன். எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்காததற்காக திமுகவிலிருந்து விலகவில்லை. குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன்” என்று தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆளும் மகிந்த ராஜபக்ஷா கட்சி அதிரடி வெற்றி முகம் தேர்தல் முடிவுகள் நேரலையாக...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது ... இன்று மதியத்திற்குள் பெரும்பாலான முடிவுகள் வெளியாகும்

தினத்தந்தி : கொழும்பு, இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். அதன்படி இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலை ஆகஸ்டு 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் நேற்று பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடந்தது.

2 ஆயிரத்துக்காக தாயை கொன்று மயானத்தில் உடலை புதைத்த மகன்கள்.. தமிழகம்

ரூ.2 ஆயிரத்துக்காக தாயை கொன்று மயானத்தில் உடலை புதைத்த மகன்கள்
உடல் தோண்டி எடுக்கப்பட்டதை காணலாம் - கொலை செய்யப்பட்ட சரோஜா (உள்படம்)     ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரோஜாவும், அவரது 2 மகன்களும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை அவர்கள் தேடி பார்த்து உள்ளனர். அப்போது பணம் இல்லாததால், சரோஜாவிடம் அது குறித்து அவர்கள் கேட்டனர். அதற்கு அவர் அந்த பணத்தை எடுத்து செலவு செய்ததாக கூறியுள்ளார். இதனால் தாய்-மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

ஸ்டாலினிடம் நினைத்ததை முடிக்கும் நிர்வாகி!

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமியைத் தொடர்ந்து இப்போது தலைமை நிலைய செயலாளர் கு.க. செல்வம் எம்.எல்.ஏ.வும் பாஜகவுக்குப் போயிருக்கிறார். இதுபோல இன்னும் சிலர் கூட செல்லும் வரிசையில் நிற்கிறார்கள் என்று திமுகவுக்குள் ஒரு தகவல் "டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் நினைத்ததை முடிக்கும் நிர்வாகி!"பரவிவருகிறது. கட்சிப் பிரச்சினை, தனக்கு வரவேண்டிய பதவிகளை தட்டிப் பறிக்கிறார்கள் என்பன போன்ற காரணங்களே திமுகவுக்குள் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருப்பதன் காரணங்களாக சொல்லப்படுகிறது. தலைமையிடத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் தலையிட்டு அதன் மூலம் தனது ஆதரவாளர்களே நிர்வாக மட்டத்தில் இருக்குமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். அதனாலேயே கட்சிக்குள் என்ன நடக்கிறது என்ற ஆக்சுவல் உண்மையை தலைவரிடம் மறைத்துவிட்டு இன்னொரு நிலவரத்தை சொல்லி, தனக்கு ஆதரவான மாசெக்களை காப்பாற்றுகிறார். அவர்களுக்கு வேண்டாதவர்களை கட்சியை விட்டே தூக்குகிறார் என்ற விமர்சனங்கள் அந்த நிர்வாகியின் மீது நீண்டுகொண்டே இருக்கின்றன. திமுகவில் ஸ்டாலின் தான் தலைவரா இல்லை அவருக்கும் மேலே சூப்பர் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்பதுதான் கட்சி நிர்வாகிகள் இப்போது கேட்கும் கேள்வியாக இருக்கிறது. யார் அவர் என்று பார்க்கும் முன்னர்....

புதன், 5 ஆகஸ்ட், 2020

விடாமுயற்சி: முன்னோடிகளாக பார்வையற்ற இளைஞர்கள்!

விடாமுயற்சி: முன்னோடிகளாக  பார்வையற்ற இளைஞர்கள்!

 மின்னம்பலம் : 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 829 பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில், முதல்நிலைத் தேர்வில் 11,745 பேரும், முதன்மைத் தேர்வில் 2,304 பேரும் தேர்ச்சி பெற்றனர்.முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட முடிவில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.2019ஐ காட்டிலும் கூடுதல் தேர்ச்சி. இந்திய அளவில் பிரதீப் சிங் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் என்ற மாணவர் தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளார்.இதில் தமிழக மாணவர்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளதாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி தலைவர் சந்துரு கூறியுள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 45 மாணவர்கள் மட்டுமே தேர்வான நிலையில் இந்த ஆண்டு 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்... வாக்குப் பதிவு நிறைவு.. நாளை காலை வாக்கு எண்ணிக்கை .. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்

srilankan parliament election 2020நக்கீரன :இலங்கை நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அவையைக் கலைத்துத் தேர்தல் நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவலால் இந்த தேர்தல் குறித்த திட்டங்கள் மாற்றப்பட்டு, தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஐந்து  மாதங்களுக்குப் பின்னர் அங்கு இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த விதிகளைப் பின்பற்றி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி, மாலை 4 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்புமாலைமலர் : சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். இவர் தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என கு.க.செல்வம் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிற்றரசு என்பவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கு.க.செல்வம் அதிருப்தியில்

அடிப்படை கல்வி வாய்ப்பை இழக்க போகும் குழந்தைகளின் கண்ணீர் நம்மை தூங்க விடப்போவதில்லை.

சுமதி விஜயகுமார் :ஒரு விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம். நாடு முழுக்க உள்ள ஆசிரியர்கள் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல்
நிகழ்த்தி, வரைவு திட்டம் கொண்டு வந்து, அதை விவாதித்து, திருத்தங்களை மேற்கொண்டு அதை சட்டம் ஆக்குவது. NEP போல. இன்னொன்று விதம், வெளியில் பயணிக்கும் பொழுது வழியில் வேலைக்கு செல்லும் சிறுவர்களை பார்த்து, படிக்க போகாம வேலைக்கு எதுக்கு போற என்று கேள்வி கேட்டு, அந்த குழந்தையை பள்ளிக்கு எப்படி கொண்டு வருவது என்று சிந்திப்பது. முதலமானது ஏற்கனவே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கானது. இரண்டாவது பள்ளி செல்ல வாய்ப்பற்ற குழந்தைகளுக்கானது. இன்று தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் பல துறைகளிலும் சிறந்து விளங்க முக்கியமான காரணங்களில் ஒன்று வாய்ப்பற்ற குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தது.

இப்போது புதிதாக ஒரு போக்கு உருவாகி இருக்கிறது. சுற்றுசூழல் பாதுகாப்பு திருத்த சட்டத்தை விமர்சிப்பவர்கள் ஒரு சூழலியளராகும் , புதிய கல்வி கொள்கையை விமர்சிப்பவர்கள் ஒரு கல்வியாளராகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் , நீ என்ன கல்வியாளரா ? வரைவு திட்டத்தை முழுசா படிச்சுட்டியா என்ற கேள்விகள் எழுகிறது. ஆனால் அந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் ஒரு சூழலியளராகவோ அல்லது கல்வியாளராகவோ இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை . குறைந்தபட்சமாக அந்த வரைவு திட்டங்களை படித்திருக்க கூட தேவையில்லை.

அயோத்தி ராமனின் மறுபக்கம் .. இதுவரை சொல்லாமல் மறைத்த பல பக்கங்கள்

அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அந்த ஜெகம் புகழும் உண்மை கதையை இங்கே காட்சிக்கு வைக்கிறோம் :
ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான் .மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள் என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை பெரும் பிரயத்தனம் செய்து . தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜாவின் புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன் வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர். சீதையின் சுயம் வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில் வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ திறமைசாலியோ இல்லை.

தசரதன் சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக சொல்லிவைக்க சிலரை ஏற்பாடு செய்தான். இந்த தந்திரம் நன்றாக வேலை செய்தது. அடிமை சமுகத்தில் இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பணம் வருமென்றால் எதுவும் செய்ய தயாரான கூட்டம் தாராளமாகவே இருந்தது. அப்படி தப்பு தகவல் கொடுக்கப்போன வதந்தி கூட்டம் அந்த சீதைக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாக அரசல் புரசலாக அறிந்தது. இது தசரதனுக்கு நல்ல செய்தி இல்லையே . எனவே அவர்கள் எல்லோரும் கப் சிப் என்று வாயை முடிக்கொண்டு விட்டனர். போதாக்குறைக்கு சீதை பற்றி இல்லாதது பொல்லாததாக தங்கள் பங்குக்கு போலி புகழுரைகளை வேறு அள்ளி வீசி விட்டனர் .

அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும்?

அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் - ஆய்வில் அம்பலம் மாலைமலர் : கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் உருவாகி 8 மாதங்கள் கடந்து விட்டன; ஆனால் மனித குலத்தின் சோகம்தான் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நேற்று மாலை, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரப்படி, உலகமெங்கும் 1.85 கோடிப்பேரின் உடல்களுக்குள் புகுந்திருக்கிறது. அது மட்டுமல்ல, 6.98 லட்சம் பேரின் உயிர்களை பறித்திருக்கிறதுஆனாலும் அதன் யானைப்பசி தீரவில்லை. இதனால்தான் அதை தடுத்து நிறுத்துவதற்காக உலகமெங்கும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை எந்தவொரு தொற்று நோய்க்கும் இத்தனை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட சரித்திரம் இல்லை.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மொத்தமாக 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது.

ram mandir donations detail

 நக்கீரன் :  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பது குறித்து தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கும் சூழலில், இதற்காக பொதுமக்களிடமிருந்து இதுவரை எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது குறித்த தகவலை தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மொத்தமாக 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. பூமி பூஜை நடைபெறும் நாளில் 11 கோடி ரூபாய் வரை நிதி வசூலாகும் என எதிர்பார்க்கிறோம். இது தவிர வெளிநாடுகளிலிருந்து 7 கோடி ரூபாய் பணம் வரவுள்ளது. ஆனால் எங்கள் அறக்கட்டளைக்கு, வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதற்கான அனுமதி இன்னும் அதிகாரபூர்வமாக வழங்கப்படாததால் அதனை நிறுத்தி வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்

லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலி: பிரதமர் ஹசன் டியப் அறிவிப்பு

 தினத்தந்தி :  பெய்ரூட்,   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக  வெளியேறியது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது...
பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.  இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து லெபானான் பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்  6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சினையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம்’’ என்றார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. shock வீடியோக்கள்

tamil.oneindia.com/authors/VelmuruganP.: பெய்ரூட்: லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது, >ஜன்னல்களை அதிர்ந்தன. கட்டிடங்கள் பயங்கரமாக சேதமாகின. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 100க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும்மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளில் நெருப்புடன் புகை வந்து கொண்டே இருந்தது.இந்நிலையில் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. சில மைல் தூரத்திற்கு பூமியே குழுங்கியது. இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. குண்டு வெடித்தபின் ஏற்பட்ட அதிர்வால் சுற்றியிருந்த கட்டிடங்கள் மிகப்பெரிய சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான ...
விபத்தா சதியா?    ;குண்டு வெடித்தபின் ஏற்பட்ட அதிர்வால் சுற்றியிருந்த கட்டிடங்கள் மிகப்பெரிய சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரவில்லை.
விபத்தா அல்லது சதி செயலா என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை."அதிர்ச்சியில் உறைந்தனர்" அதிர்ச்சியில் உறைந்தனர் மிக மோசமான குண்டு வெடிப்பு என்று பெய்ரூட்டில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

தமிழகத்தில் 2வது நாளாக 100ஐ தாண்டிய கொரோனா மரணம்: அதிர்ச்சி தகவல்

வெப்துனியா :தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5063 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 268,285 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.>மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5063 பேர்களில் 1023 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,027. ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.>மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4349ஆக உயர்ந்துள்ளது
என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றும் இன்றும் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழகத்தில் இன்று 6501 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.

பாஜகவில் கு.க. செல்வம்: வெளிச்சத்துக்கு வரும் 'ஆயிரம் விளக்கு' பின்னணி!

மின்னம்பலம் :சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு நியமனத்துக்குப் பிறகு பல சீனியர்கள், பகுதிச் செயலாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதற்காகவே சிற்றரசு கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் சென்னை மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்துக்கு ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வான கு.க. செல்வம் வரவில்லை.அந்தக் கூட்டத்திலேயே, ‘என்ன கு.க. செல்வத்தைக் காணோம்?’ என்று திமுக நிர்வாகிகள் பேசிக் கொண்டனர். ஆனால், ‘ஜெ. அன்பழகன் இருந்தபோது நடத்துற பல கூட்டங்களுக்கே அவர் வர மாட்டாரு. இந்த நேரத்துல ஏன் வெளியே வரணும்னு கூட நினைச்சிருக்கலாம். கூடவே அவருக்கு இன்னும் கோபம் தீர்ந்திருக்காது’ என்று அன்பகத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன.அந்தக் கூட்டத்தில் பேசிய பகுதிச் செயலாளர் அண்ணாநகர் ராமலிங்கம், “நாங்கல்லாம் 1960 கள்லேர்ந்து கட்சியில இருக்கோம். மாநாடுகளுக்கு நான் உழைச்சத பாராட்டி கலைஞர் கொடுத்த சான்றிதழ்களை எல்லாம் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். நான் பகுதிச் செயலாளரா இருக்கேன். சீனியர் பகுதிச் செயலாளரா இருக்கேன். அந்தப் பதவி வேணும், இந்தப் பதவி வேணும்னு நினைச்சது கிடையாது.

கெட் அப் மாற்றம்; விஷம் கொடுத்து கொலை?’ – இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு மர்மம்

அங்கொட லொக்காஅமானி தான்ஜிvikatan.com - குருபிரசாத் : இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என்று மோஸ்ட் வான்டட் குற்றவாளியாக வலம் வந்தவர். கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக் கொண்டவர். இலங்கையில் கேங்ஸ்டர் வாரில், போலீஸ் வாகனத்தில் சென்ற எதிரணியினர் 7 பேரைக் கொன்றுவிட்டு இந்தியா தப்பிவிட்டார். சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். பெங்களூரு, சென்னை, கோவை என்று சுற்றியுள்ளார்.>கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண், அவரை அடிக்கடி வந்து பார்த்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் கோவை வந்த அவர், ஊரடங்கு காரணமாகத் திரும்பி இலங்கை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதனிடையே, அங்கொட லொக்காவுக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.,வில் இணையவில்லை: தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வம் பல்டி ( பேரம் படியல்லை?)

latest tamil newsதினமலர் : புதுடில்லி: பா.ஜ.,வில் இணைவதற்காக டில்லி வரவில்லை என ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கு.க. செல்வம். ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியை செல்வம் எதிர்பார்த்திருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அந்த பதவி, இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவுக்கு வழங்கப்பட்டது. இதனால், செல்வம் ஏமாற்றத்தில் இருந்தார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் எல். முருகனுடன், செல்வம் டில்லி சென்றார். அங்கு இருவரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.ஆனால், பின்னர் நிருபர்களிடம் பேசிய கு.க.செல்வம் கூறியதாவது: பா.ஜ.,வில் இணையவதற்காக நான் டில்லிக்கு வரவில்லை. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவே டில்லி வந்தேன். 

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு

 தினத்தந்தி :  அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி, 
ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். 
இந்நிலையில்  ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி புகைப்படத்தில், கோவிலின் உச்சியில் காவிக்கொடி பறக்க, அழகான கட்டமைப்புகளுடன் ராமர் கோயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மனுதர்ம ஆட்சியில் தலித் மக்களுக்கு உள்ள தடைகள் ......பட்டியல்

Raja Sudha  :  மனுதர்மநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர்.வில்லியம் ஜோன்ஸ்(1794)...
“தனது கால் தடத்தை தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும்.
எச்சில் துப்ப கழுத்தில் கலையம்.
மனுதர்ம  ஆட்சியின் போது தலித் மக்களுக்கு எங்கெல்லாம் தடைகள் இருந்தது??
1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை
2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை
3. குளங்களில் குளிக்க தடை
4. தெருக்களை பயன்படுத்த தடை
5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை
6. மீசைவிடத்தடை
7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை
8. செருப்பு அணிய தடை
9. குடுமி, கடுக்கண் போட தடை
10. ரயில் பயணிக்க தடை

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் குற்றங்களை மறைத்த ...

Krish Marudhu -Kathiravan Mayava : கண்டிப்பாரா திருமாவளவன் ? தாழ்<>த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுவதா ? கொடுமை !
கேடயத்தை கத்தியாக உபயோகிக்கும் அயோக்கியர்கள் ....
தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினரிடம் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்டது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ...
ஆனால் அந்த சட்டம் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி தாங்கள் தாக்கப்படாமல் காத்துக் கொள்வதற்கு  உள்ள சட்டம் என்பதை மறந்து அதே சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி உயர்சாதியினர் என்று அழைக்கப்படும்
மக்கள் மீது ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத பொய்யான புகாரை அளித்து தாங்கள் செய்யும் குற்றங்களை மறைப்பதற்காக அந்த சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தும் போக்கு நாட்டில் நிலவி வருகிறது ..
இது மிகவும் ஆபத்தான போக்காகும் இந்த சட்டத்தை பயன்படுத்தும்போது பிரிலிமினரி என்கொயரி என்ற முறையில் முதல்கட்ட விசாரணை நடத்தி முடிவெடுத்து அதன்பிறகே தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கு பதியப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது
ஆனால் அது மாற்றப்பட்டு புதிய சட்டத்தின் வழியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சம்பந்தமாக புகார் அளித்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அதை குறித்து உண்மைத்தன்மையை உண்டா என்று விசாரிக்கக்கூடாது வழக்கை பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை புதிய திருத்த சட்டம் அளித்திருக்கிறது .

சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.

ஞ்சை கோ.கண்ணன் :இது தான் தமிழ் ! அனைத்தையும் ப
டிக்க ஒரு பிறவி போதாது...
1. தேவாரம்

2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

ஊர் பேசிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ... இன்று நடப்பது .. மௌனமாக கடந்து செல்லும் ஊடகங்கள் ..

வுமியன் வைத்தியநாதன்; : இது 2ஜி பற்றிய பதிவு அல்ல.... பாஜக பற்றிய பதிவு... தொடர்ந்து முழுமையாக படிக்கவும்..!
2ஜி போன்ற பெரிய ஊழல்கள் இதுவரை பாஜக ஆட்சியில் சொல்ல முடியவில்லையே...
அதனால் தான் தேங்காய் உடைத்தது போல பாஜக ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை. ஆனா இவிங்க தப்பானவங்க... இவிங்க வேணாம்ங்கறது மட்டும் புரியுதுன்னு சொல்ற அப்பாவி பொதுஜனத்திற்கான பதில் இது தான்.. மிஷ்டர் பொது ஜனம், 2ஜி ஊழல்ன்னு சொன்னீங்களே... உண்மையிலேயே அது ஊழல் தானா சார்?!
அஃப்கோர்ஸ்... பின்ன இல்லியா பின்ன?! ஒரு லட்சத்தி எழுவத்தஞ்சாயிரம் கோடி ஊழல் இல்லியா?! ஓக்கே... நீங்க சொல்றபடியே வச்சிக்குவோம்...
வெறும் 68 கோடி ரூபாய் ஊழல் செஞ்சதா ஜெயலலிதா மேல கலைஞர் கேஸ் போட்டாரு.... போட்டுட்டு... அந்த 68 கோடி ரூவா சொத்தையும் கண்டுபிடிச்சி... இது இதுதான்னு பட்டியல் போட்டு கோர்ட்டுல கொடுத்துட்டாரு.
அவ்ளோ செஞ்சும் அந்தம்மா கோர்ட்டுல பல டகால்ட்டி வேலையை காமிச்சி... வாய்தா மேல வாய்தா வாங்கி... கடேசில குற்றவாளியாத்தான் உச்சநீதிமன்றமே உறுதி செஞ்சு செத்தும் போச்சி...!
ஆனா நீங்க சொல்ற அந்த ஒரு லட்சத்தி எழுவத்தஞ்சாயிரம் ஓவா ஊழல்ல இது வரைக்கும் ஒரே ஒரு நயா பைசா கூட ஊழல் செஞ்சதா சொல்லப்படுற ஆ ராசாக்கிட்டேயிருந்து பழைய காங்கிரஸ் அரசும் சரி, இப்ப ஆறு வருஷமா இருக்குற மோடி அரசும் சரி... கண்டுபிடிச்சி கோர்ட்டுல கொடுக்கவே இல்லியே ஏன் சார்?! கோர்ட்டும் கூட அவரை நிரபராதின்னு விடுதலை செஞ்சிடிச்சே ஏன் சார் இவிங்க மேல் கோர்ட்டுக்கு போகல..?!

அயோத்தி ராமர் கோயில் அடுக்கல் நாட்டு விழா 170 பேர்கள் மட்டுமே அனுமதி

   வெப்துனியா :அயோத்தியில் ராமர் கோவில் அடுக்கல் நாட்டு விழாவில் அத்வானி நேரில் கலந்து கொள்ளவில்லை என்றும், பாபா ராம்தேவ் சிறப்பு
விருந்தினராக கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் நாளை மறுநாள் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மதன் மீது வழக்கு தொடர்ந்த உதயநிதி .. மதனின் மான்கறி கதை...

m.dailyhunt.in : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேனல் விஷன் யூடுப் சேனலில் மதன் ரவிச்சந்திரன் தனது தொடர் விவாதங்கள் மூலம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தார், அத்துடன் தான் பணியாற்றிய ஊடகங்களில் திமுக என்னென்ன சித்துவிளையாட்டுகளை செய்துவருகிறது என்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்தும் மதன் டைரி என்ற நிகழ்ச்சியில் தெரிவித்து வந்தார்.
இது மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, மேலும் கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதான திருப்போரூர் எம் எல் ஏ. அந்த பகுதியில் மான் வேட்டை நடத்தி வந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அந்த ஊர் நபர் தெரிவித்த கருத்துக்களை பேட்டியாக ஒளிபரப்பினார்

சவுக்கு சங்கர் : உனது வீழ்ச்சி எனக்கு வருத்தமளிக்கவில்லை .. நீ விழவேண்டியவன்

Shankar A : அன்புள்ள மதன்,    உனது வீழ்ச்சி எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. நீ வீழ வேண்டியவன். சுயநலத்துக்காக எதையும், எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிபவன். வருடக்கணக்காக உழைத்து, பல்வேறு தடைகளை கடந்து, இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவாக பேசுகிறாய். ஏளனம் செய்கிறாய். கட்சி சார்பானவர்கள் என்று அபாண்டம் பேசுகிறாய்.
இவர்கள் கடுமையாக உழைத்து, பார்ப்பன அழுத்தங்களை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் முன்னேறியவர்கள். ஊடகத்துறைக்கு பெரும்
பங்களிப்பை அளிததவர்கள். உன்னைப்போல ஒவ்வொரு சேனலுக்கு ஒரு டீசர்ட் போட்டு வேலை வாங்கியவர்கள் இல்லை. ஒரே ஒரு கேள்வியால் கூட்டணியை உடைத்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உண்டு. இரண்டு காலம் செய்தியால், பல அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கே உண்டு. தலித்துகள் மீதான தாக்குதலை பதிவு செய்யச் சென்று, சாதி வெறியர்களால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட செய்தியாளர்கள் உண்டு. ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொல்லியதை பொய்யென்று நிரூபிக்க அரசு கொடொவுனுக்குள் சென்று படம் பிடித்து, சிறை சென்ற செய்தியாளர்கள் உண்டு.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்.. வீடியோ

tamil.news18.com  : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோன தடுப்பு பணிகளை முன்னின்று வழிநடத்தியவர் பீலா ராஜேஷ். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தததாவல் அதிரடியாக பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந் மாற்ற்ப்பட்டார்.
பீலா ராஜேஷ்க்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
அதன்பின் சில நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில் புகார் அளித்துள்ளார். பீலா ராஜேஷ் வாங்கிய சொத்துக்களை குறிப்பிட்டு அவர் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் அளித்த புகாரின் அடிப்படை

வடக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தும் இந்தியா

வடக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தும் இந்தியா மாலைமலர் : சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில இந்தியா வடக்கு லடாக் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.அதன்பின் இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியுறவுத்துறை மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருநாட்டு படைகளும் தங்களது பழைய இடத்திற்கு திரும்ப ஒத்துக்கொண்டன.லடாக் பகுதியில் சீனா 2 கி.மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கினாலும் மற்ற பகுதியில் இருந்து பின் வாங்க தயங்குகின்றன. நேற்று ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மறுமுனையில் இந்தியா பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது, மேலும் லடாக்கின் பல பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.

மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது... முதல்வர் திட்டவட்டம்!

மின்னம்பலம் : மும்மொழிக் கொள்கை முடிவு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியா? முதல்வர் திட்டவட்டம்!அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்கள் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. இது சனாதன கல்வி முறையை புகுத்த முயல்வதாகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்றும் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை-2020 ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும் செயல்படுத்திட மறுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதினர்.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 3) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவி கீர்த்தனா தற்கொலை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால்.... பெரம்பலூர் மாணவி ...

n
நக்கீரன் மருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி வரை ;காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் பெரம்பலூரில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்  தீரன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடந்துனர் (TNSTC) செல்வராஜ், இவரது மகள் கீர்த்தனா (19). இவர் கடந்த 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் +2 பொதுத் தேர்வில் 1054 மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார்.   மருத்துவராவதே தனது லட்சியமாக கொண்ட மாணவி கீர்த்தனா,  அதற்காக சென்னையில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் தொடர் பயிற்சி பெற்று இந்தாண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கர்நாடாக முதல்வர் எடியுரப்பாவுக்கும் கொரோனா தொற்று உறுதி ...

Karnataka Chief Minister BS Yediyurappa tested positive for for the novel coronavirus
Karnataka Chief Minister BS Yediyurappa tested positive for for the novel coronavirus
tamil.oneindia.com - VelmuruganP : பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் இன்று பிற்பகல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை ட்விட்டரில் உறுதி செய்தார். அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.