சனி, 8 மார்ச், 2014

ஆஷிகி 2 ஹீரோ மீது தமன்னா புகார்

சென்னை:புதுமுகம் நடித்த வேடத்தில் தமன்னாவை நடிக்கவைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஹீரோ. இதனால்  ஹீரோ மீது புகார் கூறி உள்ளார் தமன்னா.பாலிவுட்டில் ‘ஆஷிகி 2 படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இதில் ஆதித்ய ராய் கபூர், ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான சச்சின் ஜோஷி பெற்றிருக்கிறார். இந்தியில் ஆதித்யா ஏற்ற வேடத்தை சச்சின் ஏற்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவை தேர்வு செய்ய பட குழுவினர் ஆலோசனை கூறினார்கள். அதை சச்சின் ஏற்க மறுக்கிறார். ஷ்ரத்தா கதாபாத்திரத்துக்கு தமன்னா பொருத்தமாக இருக்க மாட்டார் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘ஷ்ரத்தாபோல் இப்படத்திலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு புதுமுகம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். தமன்னா ஏற்கனவே ஸ்டார் அந்தஸ்தில் உள்ளவர். அது இந்த கதாபாத்திரத்துக்கு மைனஸாக இருக்கும். ஆனாலும்
இறுதிமுடிவை இயக்குனரிடம் விட்டுவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

239 பயணிகளுடன் வியட்நாம் கடலில் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்!


கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை பெய்ஜிங் நோக்கி புறப்பட்டு காணாமல் போன விமானம் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போனது. இந்த நிலையில் விமானம் வியாட்நாம் அருகே விபத்தில் சிக்கியுள்ளதாவ மலேசிய நாட்டு விமானத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது:  மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் வியட்நாமின் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மவுனிகா : டைரக்டர் பாலா என்னை அடிக்க ஆள் வைத்தார்

டைரக்டர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார். மவுனிகா கூறியதாவது:– டைரக்டர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான் வற்புறுத்தினேன். பிறகு அவர் என்னை விட்டு விலகி போகவில்லை. அவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தேன். நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர் தான் ஒரு நாள் திடீரென சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.
பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட பந்தம் இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட என்னை பாலுமகேந்திரா மரணம் அடைந்த போது பார்க்க வரக்கூடாது என்று டைரக்டர் பாலா தடுத்தார். நான் வரக்கூடாது என்று சொல்ல பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் கடவுள் என்று படம் எடுத்தவர் தான்  மிருகம் என்று காட்டிவிட்டார் 

மலேசிய விமானம் விபத்து: வியட்நாம் கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிப்பு

239 பேருடன் காணாமல் போன மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் அரசு செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வியட்நாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகளை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 777- 200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் இன்று காலை காணாமல் போனது. விமானத்தில் 12 சிப்பந்திகள், 2 குழந்தைகள் உள்பட 239 பேர் இருந்தனர்.
விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் காலை 6.30 மணிக்கு பீஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது. விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

31 தொகுதிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் உத்தேச பட்டியல்


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் திங்கட்கிழமை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:–
அந்த உத்தேச பட்டியல் வருமாறு:–
1. மத்திய சென்னை– தயாநிதி மாறன்
2. தென்சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன்
3. வடசென்னை – தொ.மு.ச. சிங்கார ரத்தின சபாபதி அல்லது டாக்டர் கனிமொழி, கிரிராஜன்
4. ஸ்ரீபெரும்புதூர்– முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அல்லது ஆப்பூர் மதுசூதனன்
5. காஞ்சீபுரம் – திருவேடல் செல்வம் அல்லது எட்டியப்பன் மகன் மதியழகன்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி, சிதம்பரம் - திருவள்ளூரில் போட்டி!!

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,  தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  முதலில் ஐந்து தொகுதிகள் கேட்டு கடைசியில் மூன்று தொகுதிகளில் பிடிவாதமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பேச்சுவார்த்தையின் போது திருமாவளவன் திடீரென்று எழுந்து போனதாக செய்திகள் வந்தனர்.  பின்னர் சமாதானமாகி, ஒரு தொகுதிக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் திருமாவளவன்.ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கிய திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து,  தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தபோதே,  அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சித்தார்.  அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றார் திருமாவளவன்.இதையடுத்து நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலும்  கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து உருவபொம்மை எரித்தனர் வி.சி.கவினர். திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வி.சி.க. அமைப்பாளர் பாவாணன் உள்பட வி.சி.கவினர் வலியுறுத்தி வந்தனர்.   இன்று இது குறித்து முடிவெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.இந்நிலையில்,  ’’திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  தொகுதி ஒதுக்கீட்டை மு.க.ஸ்டாலின் உறுதி செய்தார்’’ என்று வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.nakkheeran.in

ஜெ.யின் கூட்டணியில் மமதா, நவீன், நிதிஷ்,ஜெகன்: இடதுசாரிகள் வெளியேறிய பின்னணி காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக பெடரல் முன்னணி


  சென்னை: லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதியதாக பெடரல் கூட்டணி ஒன்றிர்க்கு அச்சாரம் போடுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே இடதுசாரிகள் கழற்றி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ‘பெடரல் முன்னணி' என்ற பெயரில் தேசிய அளவில் 3வது அணி அமைக்க முயற்சி செய்தார்.  காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக பெடரல் முன்னணி அமைப்பது தொடர்பாக மமதா பேஸ்புக் மூலம் தகவலும் வெளியிட்டார். இந்த கூட்டணியில் இணைவது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடமும் அவர் கடந்த ஆண்டே பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு அத்துடன் நின்றுவிட்டது. தற்போது அதே பெடரல் கூட்டணி கோஷத்தை முன்வைத்து நிதிஷ் குமார், நவீன்பட்நாயக், ஜெகன், மமதா ஆகியோரை ஜெயலலிதா இணைக்கப் போவதாக தகவல்கள்

239 பயணிகளுடன் மலேசிய விமானம் திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது ! Malaysia Loses Contact With Plane Carrying 239

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு சென்று கொண்டிருந்த விமானம் மாயமானது.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டு்ம். விமானம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது. மேலு ம் பொதுமக்கள் 60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். dinamalar.com

தமிழக கம்யுனிஸ்டுகள் நடிக்கும் "வருத்தப்படாத வயோதிபர் சங்கம்" திரைப்பட ஆரம்ப விழா !

சிபிஐ-சிபிஎம் வாங்கிய உதை
இப்பதான் அம்மா கூரூப் மூத்திர சந்துல போட்டு சாத்துனாங்க. அந்த வலி போறதுக்குள்ள அய்யா கூரூப்பு ஆய் போற சந்துல அடிக்கிற கதை வேணும்னு கேட்டா எப்படி, விடுங்க சார்.
ஓவியம் : முகிலன் ரு வழியாக போயஸ் தோட்டத்திலிருந்து மானமிகு போலிக் கம்யூனிஸ்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்கள். வழக்கமாக இத்தகைய அவமானத்திற்கு ‘கொள்கை’ விளக்கம் அளித்து தங்களது தத்துவப் புலமையை காட்டும் ‘தோழர்கள்’ இந்த முறை அதையும் செய்ய முடியாத துக்கத்திலும் கோட்பாட்டு வறட்சியிலும் உறைந்து கிடக்கின்றனர். தினமணி செய்தியாளருக்கு ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், மற்றும் வலதின் தாபா அளித்த பதில்களில் இருக்கும் துக்கம், படிக்கும் எவருக்கும் சிரிப்பை கிளப்பும் வகையில் ஆர்ப்பரிக்கிறது.
இந்த விசயத்தில் தாபாவா, ராமகிருஷ்ணனா என்ற வேறுபாடு இல்லை என்பதால் எதற்கு இவர்கள் இரு பிரிவாய் கட்சி நடத்தி நமது நேரத்தையும் கொல்லுகிறார்கள்? ஒன்றாய் இருந்தால் ஒரு விமரிசனம் எழுதிவிட்டு மற்ற வேலைகளை பார்க்கலாம். தற்போது வேறு வழியில்லை என்பதால் நேற்று தாபாவிற்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை இன்றைய ஒருவரிச் செய்திகளில் ஜி.ராமகிருஷ்ணனுக்க்கும் (கொசுறாய் தாபாவிற்கும்) கொடுக்கிறோம். செய்தி தினமணியிலிருந்து எடுக்கப்பட்டது – நன்றி.

பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக ஊக்கம் அளித்தது திமுகவே !


 திமுக ஆட்சி காலத்தில் மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியதால்தான் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் கண்டதாக, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி அவர் இன்று வெளியிட்ட செய்தி:
"மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா" 8-3-2014 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்" என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் மோதல்: நாட்டுப்படகை கவிழ்க்க முயற்சி 6 மீனவர்கள் உயிர் தப்பினர்ராமேசுவரம்
நடுக்கடலில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டுப்படகினை கவிழ்க்க நடந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர்.
கவிழ்க்க முயற்சி
பாம்பன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மெரில்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பால முருகன், குமார், பாலா, பிரான்சிஸ், நாகராஜ் உள்பட 6 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர் கள் தென் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த னர். பின்னர் நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெ டுக்கும் பணியில் ஈடுபட்ட னர்.

ஜெயலலிதா - மதுரை ஆதீனம் சந்திப்பு (


மதுரை ஆதீனம், இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரொம்ப விசேஷங்க அப்படியே நித்தியையும் கூட்டியந்துருங்க !அல்லாரும் அம்மாதான் பிரதமர்ன்னு ஆயிரத்து எட்டு தடவை உச்சாடனம் பன்னுகோ.அம்மா பேர்ல ஒரு கோவில் கட்டப்போறேன்னு சும்மாவேனும் உல்ட்டா விட்டீங்கன்ன அடுத்த பன்னீரு நீங்கதானுங்கோ  

வீரப்ப மொய்லி.: காங்கிரஸ் - தி.மு.க., இடையே நல்ல புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது

காங்கிரஸ் மூத்த தலைவர்களில், முக்கியமானவர், வீரப்ப மொய்லி. மத்திய அமைச்சரவையில், முக்கியத்துவம் வாய்ந்த, பெட்ரோலிய துறையை கவனித்து வரும் இவர், காங்கிரஸ் மேலிடத்திற்கு மிகவும் நம்பகமானவர். தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக பல ஆண்டுகள் பதவி வகித்த இவர், டில்லியில், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

வரும் லோக்சபா தேர்தலில்,தமிழகத்தில் எந்த கட்சியுடன், காங்., கூட்டணி அமைக்கும்?

தமிழகத்தில், கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க., எங்களின் நட்பு கட்சி. கூட்டணி குறித்த விஷயங்கள், விரைவில் இறுதி செய்யப்படும். கலைஞரையும் அவரது குடும்பத்தினரையும் ராகுல்ஜி எப்படி நடத்தினார் என்பதை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியமா என்ன ?

திருமாவளவன் : பொதுவாக எல்லா கட்சிகளும், தலித்துகள் தலித்துக்களாவே இருக்க வேண்டும் என விரும்புகின்றன.

தி.மு.க.,வின் நீண்ட கால தோழமை கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இன்றைய அரசியல் களத்தில் நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறது. ஐந்து கேட்ட இடத்தில், ஒரு தொகுதி மட்டும் கொடுத்து, உடன்பாடு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரெங்கும் வி.சி., தொண்டர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற, கவலை படர்ந்த முகத்தோடு காணப்பட்ட, அக்கட்சி தலைவர் திருமாவளவன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பரபரப்பு பேட்டி:

ஒரு தொகுதி தான் என்றாகி விட்டது. போட்டியிடப் போவது யார்?
சிதம்பரம் தொகுதி என்பதால், நானே மீண்டும் போட்டியிடுவேன்.

தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்:

ஆளுக்கு ஒரு தொகுதி தான் என, அ.தி.மு.க., கூறியதால், அதிருப்தி அடைந்துள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளன. ஆனாலும், அடுத்தது என்ன, தனித்துப் போட்டியா என்பதை வெளியிடாமல், மவுனம் காக்கின்றன.அதற்கு காரணம், அ.தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நீடிப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள், அ.தி.மு.க., தலைமையுடன் பேசி வருவதால், அதுவரை அமைதியாக இருக்கும்படி, ஆலோசனை கூறியுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பேசப்படுகிறது,

வெள்ளி, 7 மார்ச், 2014

திமுகவை விட்டு வெளியேறும் திருமா? ஸ்டாலின், கருணாநிதி உருவபொம்மை எரித்து போராட்டம்!!


சென்னை: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க அவசர கூட்டத்தை நாளை திருமாவளவன் சென்னையில் கூட்டியுள்ளார். லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி தோல்வி அடைந்தது. இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில், விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஸ்டாலினின் அளவுக்கு மீறிய ஆட்டம் ? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை ...

மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு மனு மீது வரும் மார்ச் 11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  dinakaran.com

குறும்படங்கள் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு நல்ல அறிமுகம் !

குறும்பட மோகம் கொடிகட்டிப் பறக்கிறது தமிழ்நாட்டில்! டிஜிட்டல் கேமராக்கள் குறைந்த விலையில் / வாடகையில் கிடைக்க ஆரம்பித்த பின் ஒரு குறும்படம் எடுப்பது இப்போது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் குறும்படம் எடுப்பதை காதலிப்பதுபோல ஒரு தவமாய் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் குறும்படங்கள் வெளியிடும் முயற்சிகள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன. இலவசக் காணொளி வலைதளமான யூட்யூப் 2009-10இல் வந்த பின், எண்ணற்ற திறமைகள் வெளி உலகிற்கு அறிமுகம் ஆகும் வாய்ப்பைத் தந்துள்ளது. ஒரு குறும்படம் எடுப்பது, செலவுபிடிக்கும் சமாச்சாரம் என்ற நிலை மாறி, டிஜிட்டல் கேமராக்கள் மூலம், இன்று ரூபாய் 5,000 முதல் 10,000 மூலமே ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.
இயக்குநர் மீரா கதிரவன் 2009இல் அவள் பெயர் தமிழரசி என்ற குறும்படத்தை என்னிடம் காட்டினார். அது பெரிய திரைப்படமாக 2010இல் வெளிவந்தது. அன்றைக்கு யூடுயூப் இல்லாத காரணத்தால் மீரா கதிரவன், அந்தக் குறும்படத்தைக் குறுந்தகடாக எடுத்துவந்து தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டார். இன்று நிலைமை வேறு.

அழகிரி: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன்: இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் !

திருவள்ளூரை அடுத்த பூண்டியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தாயார் மங்கம்மாள் திருவுருவ பட திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவில் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட மு.க.அழகிரி கலந்து கொண்டார். உருவப் படத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:–
அன்னை இந்திரா காந்தி காலத்தில் தனித்து நின்று எதிர்த்து போராடிய தி.மு.க. தற்போது உதிரி கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சு நடத்தும் நிலைக்கு வந்துள்ளது. தி.மு.க. தலைவருக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டு விட்டு மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளிக்கிறது.
நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனது ஆதரவாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் அதன் பிறகு எனது வழியில் வாருங்கள்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
பின்னர் அவர் திருவாலங்காடு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக மு.க. அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூண்டி சந்திப்பில் இருந்து பாஸ்கரன் வீடு வரை அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.maalaimalar.com அண்ணன் பொடி வச்சு பேசுறாக அப்பாவுக்கு தப்பாத அஞ்சா நெஞ்சன்தான்  

லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்


உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு உயிரிழந்தார். காலமான பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். பிரபல காமெடி நடிகர் சந்தானத்தை டி.வி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

The Real face of Mata Amritanandamayi sting operation ! allegation of murder, rape !

Dr.முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் உதித்த ஒரிஜினல் புரட்சி தலைவி !

இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர்.
புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
பிறப்பு: “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”,-என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண சுவாமி அய்யருக்கும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மா தம்பதியருக்கு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மூத்தமகளாகப் பிறந்தார்.
இவரது காலத்திலேயே வாழ்ந்த மகாகவி பாரதியார் யார் யாரை பற்றிஎல்லாம் பாடியிருக்கிறார் எழுதியிருக்கிறார்,அந்தகாலத்தில் வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி யை பற்றி தப்பி தவறி கூட எங்கேயும் தனது கருத்தை பதிவு செய்யவில்லை,பாரதியாருக்கு இருந்த ஜாதி வெறி யாருக்கும் தெரியாது, மிகவும் புத்திசாலிதனமாக அதை மறைத்தார். டாக்டர் முத்துலக்ஷ்மி அம்மையாரின் தாயார் இசைவேளாளர் குடும்பத்தை சேர்ந்தவர்,என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கலப்பு திருமணத்தை ஆதரிக்க கூடாது என்பதில் பாரதியார் உறுதியாக இருந்தார்.ஒரு பாரதியின் அங்கீகாரம் ஒன்றும் உன்னதமான விடயம் அல்ல . கஞ்சாவில் மிதந்த காரியகிருக்கன்தான் பாரதி என்றால் நம்புவதற்கு  கடினமாகதான் இருக்கும் தமிழ்நாட்டில் உதித்த ஒரிஜினல் புரட்சி தலைவி இவர்தான் 

கப்டன் விஜயகாந்த் பிரேமலதா மற்றும் சுதீஷ் நடித்த "கூட்டணி" வசூலில் சாதனை ! ஏரியா விற்பனையிலும் சாதனை

ஓவர்டேக் செய்த காங்கிரஸ்! பாலக்கரையில் மெகா எழுச்சி!! பிச்சையெடுப்பவர்களை பிடித்து !


தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளுக்கு குவார்ட்டர், பிரியாணி, கைச்செலவுக்கு பணம் இதுதவிர சம்பளம் எனக் கொடுத்து ஆள் பிடிப்பது வழக்கம் (ம.தி.மு.க. போன்ற சில கட்சிகள் விதிவிலக்கு).
ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கே ஆள் பிடிக்கும் நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது பாருங்கள்… தேசிய, பாரம்பரியம் மிக்க, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு நிலைமை.
சரி போகட்டும், பிடித்ததுதான் பிடித்தார்கள் ஊரில் எத்தனையோ பேர் சும்மா இருக்கிறார்கள். அல்லது, வெட்டிக்கதை பேசித்திரிவோரைக் கூட அழைத்து வந்திருக்கலாம். ஆனால், போயும் போயும் பிச்சையெடுப்பவர்களை பிடித்து வந்ததுதான் தமிழக காங்கிரஸின் பெரிய காமெடி.

தொல்.திருமாவளவன் : வருத்தம் இருந்தாலும் மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது!

தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி’யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தொல்.திருமாவளவன் பேட்டி
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது?
பதில்: நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம். அதில் 3 தொகுதிகளை எதிர்பார்த்தோம். கடைசியாகவும், இறுதியாகவும் 2 தொகுதிகளை கேட்டு வற்புறுத்தினோம். எனினும் சிதம்பரம் என்ற ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதில் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்கிறோம். மேலும் பலமுனைபோட்டி இருப்பதால் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும், இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர இடதுசாரி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கிறேன். விழுப்புரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று பொன்முடி நச்சரிதாராமே ?அதனாலேதான் இரண்டு ஒண்ணாச்சு என்று ஒரு கிசு கிசு! அரசியலில் கிசு கிசு இருக்க கூடாதா என்ன ?

கெஜ்ரிவால் : அம்பானிகளுக்குத்தான் மோடி வளர்ச்சி நாயகன்

குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்ச் பகுதி முந்ரா தாலுகாவில் அமைந்துள்ள அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஆய்வு செய்து அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அவர்கள் தங்கள் விவசாய நிலங்களை குஜராத் அரசு கையகப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘‘அதானி மற்றும் அம்பானிகளுக்குத்தான் மோடி வளர்ச்சி நாயகன். மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அரசுடன் கூட்டு சேர்ந்து நிலங்களை கையகப்படுத்துகின்றன. குஜராத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் விற்கப்படுவதுபோல் உள்ளது.

பரிதவிக்கவிட்ட ஜெ.,: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்!

அ.தி.மு.க.,வால் கழற்றி விடப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டன. சென்னையில், நேற்று நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, அ.தி.மு.க., 'கல்தா' கொடுத்ததை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், பரஸ்பரம் ஆலோசித்தனர். தங்கள் முடிவை, கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின், தெரிவிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட், நேற்று நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டியது.
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
07கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக்கு வங்கி பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்.. சிறிது வெற்றிக்கு உதவுவார்கள் அவ்வளவே.. மற்றபடி பெரியஅளவில் ஒன்றும் கிடையாது. ஏற்கனவே ராஜ்யசபா சீட் 2 கட்சிக்கும் தலா ஓன்று கொடுத்தாகி விட்டது, மற்றும் இருவருக்கும் சேர்த்து 4 தொகுதிகள் என்று அதிமுக தலைமை தரலாம் என்று நினைத்தது. ஆனால் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அடம் பிடித்தால் எப்படி ? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ??? பிறகு அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அவர்களே தான் முடிவு செய்து விலகி உள்ளனர். அதற்காக ஜெயலலிதாவை இங்கு பலர் விமர்சிப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.. ஜெயலலிதாவை வாயாரா புகழ்ந்தால் , சீட்டுகளை வாரி வழங்குவார் என்று நினைத்தால் என்ன செய்ய முடியும்.? ஜெயா அதற்கு எல்லாம் மசிபவர் கிடையாது. தில்லுக்கு பெயர் போன அதிரடியான ஆள்.. தன்னுடைய எடை என்ன என்று அவருக்கு தெரியும். என்ன தான் சொம்பு அடித்தாலும், அப்போதைக்கு சிரிப்பார், ரசிப்பார்.. ஆனால் காரியத்தில் கண்ணாகவே இருப்பார். இப்போது கருணா வலை விரிக்கிறார். ஏற்கனவே அங்கு துக்கட கட்சிகள் அதிகம். அவர் மட்டும் என்ன 4+4 என்று கொடுத்து விடவா போகிறார்.. ??? இங்கே நடந்தது தான் அங்கேயும் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒட்டுண்ணி என்று முடிவாகி விட்டது பிறகு யாருடன் ஓட்டினால் என்ன ??? ஒழியட்டும் விடுங்கள்.

கூட்டணி வியாபாரத்தில் சாதனை படைக்கும் தேமுதிக ? Latest ஆக பாஜகவுடன் கூட்டணி ! ???

கூட்டணி தொடர்பான மெகா சீரியலில், முக்கிய திருப்பமாக, 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கியுள்ளது' என, தே.மு.தி.க., சார்பில், நேற்று தான் முதன்முதலாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் இரண்டு நாளில், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விடும் என்றும், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் சென்னையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்த, பா.ம.க., தலைவர், ராமதாஸ், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை வெளியிட்டுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை, தே.மு.தி.க., வருகைக்கு பின் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.இதனால், தி.மு.க.,வுடன் நேற்று காலையில், தே.மு.தி.க.,வினர் நடத்திய பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
Sridhar - Nagercoil,இந்தியா பொட்டி கிடைச்சா, பி.ஜே.பி என்ன, கூவம் அதிமுகவுடன் கூட கூட்டணி வைக்க துடிக்கும் இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி.. தூ.. அரசியல் வியாதி. ஜெயாவின் பிளான் படி, எதிர்கட்சிகள் ஒன்று சேரவிடாமல் செய்து, அதன் மூலம் ஜெயித்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். எப்படி, வைகோவை, அடிமை தா.பாண்டியனை, சிபிஎம்மை, கேவல படுத்தி வெளியேற்றியது போல, தண்ணீரில் மிதக்கும் கப்பல் கேப்டனின் தேமுதிகவையும் ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரிக்கு பாடம் புகட்டவும், மக்கள் விரோத செயல்களின் மொத்த உருவமான ஜெயாவுக்கு ஆப்பு அடிக்க வாய்த்த சந்தர்பத்தை பயன்படுத்த தெரியாதவன் அரசியலுக்கு கொஞ்சமும் லாயக்கற்றவன். வெறும் வாய்பேச்சில் உதார் விடும் நீயெல்லாம் ஒரு சராசரி மனிதன் கூட இல்லை...தரம் தாழ்ந்தவன். கூலிக்கு மாரடிக்கும் குடிகாரன். உன்னை நம்பியும் உன் பின்னால் ஒரு கூட்டம் எனபது, கூவத்தில் கலக்கும் சாக்கடைகள் தான். உனக்கு இனி அழிவு தான் முடிவு.

வியாழன், 6 மார்ச், 2014

தமிழகத்தில் பாஜ கூட்டணியில் அதிரடி மாற்றம் ? மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கதி என்ன? -

சென்னை: பாஜ அணியில் அதிரடி மாற்றம் ஏற்பட போகிறது. இதனால், பாஜ அணியில் இடம் பெற்றுள்ள மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கதி என்னவாக போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜ கூட்டணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தேமுதிக 20, பாமக 14 தொகுதிகளை கேட்டது. இதற்கு பாஜ ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கூட்டணியில் 2 கட்சிகளும் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. கூட்டணியில் சேர பாஜ விதித்த கெடுவை 2 கட்சிகளும் மதிக்கவில்லை. இதனால், இரண்டு கட்சிகளும் பாஜ அணியில் சேருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தாபா.: எம்ஜிஆருக்கு அரசியல் கற்றுக் கொடுத்து, அம்மாவுக்கு அடியாள் வேலை பார்த்தும், கேவலம் ஒரு லெக் பீஸ் கூட கிடையாதா?

பூசாரி தா பாண்டியன்
இன்னைக்கு பழையது முடிஞ்சு போச்சு, நாளைக்கு பார்க்கலாமென்று போயஸ் கதவுகள் மூடிய பிறகு, கையேந்தியவன் திரும்பிச் செல்வதிலும் ஒரு தீர்க்கம் உண்டு என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் தாபா.
போலிக் கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி என்று அறிவித்து விட்டு 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நியமித்து அந்தக் கூட்டணிக்கு மரியாதை செய்த கையோடு பிரச்சாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. கூட்டங்களில் மறந்தும் பாஜகவை அவர் விமரிசிப்பதில்லை. சொல்லப்போனால் மோடி பேசுவதைப் போலவே பேசுகிறார். என்ன, அதில் குஜராத் வளர்ச்சி மட்டும் இடம் பெறுவதில்லை.
மேலும் மத்தியில் அதிமுக இடம்பெறும் ஆட்சியை உருவாக்க ஆதரியுங்கள் என்று அவர் பேசுவதை வைத்து மத்தியில் அதிமுக ஆட்சி சாத்தியமில்லை எனும் யதார்த்தத்தை அவர் அங்கீகரிக்கிறார் எனலாம். கூடவே இடம்பெறும் ஆட்சி பாஜகவினதாக இருக்கலாம் என்பது ஊரறிந்த ஒன்று. இந்நிலையில் கூட்டணி தொகுதி உடன்பாட்டிற்காக பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள் மனமொடிந்த நிலையில் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த நிலையிலும் தாபா அவர்கள் சோர்வோ, விரக்தியோ அடையவில்லை. அதனால்தான் அவர் தாபா.
அப்பேற்பட்ட தாபாவை மரியாதை செய்யும் பொருட்டு இன்றைய ஒருவரிச் செய்திகளில் அவர் மட்டுமே நாயகன். அவர் பேசியது மட்டுமே செய்தி.
_______________________
செய்தி: எக்காரணம் கொண்டும் மரியாதையை இழக்க மாட்டோம்.
நீதி: உண்மை. இல்லாத ஒன்றை இழக்க முடியாதல்லவா?

குஜராத் கலவரத்தின் முகங்கள்...தலையில் காவியும் கையில் வாளும் ! சந்தித்த போது ?

கண்ணணூர்: குஜராத்தில் 2002ம்
ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது உயிர்பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடதுகையில் வாளும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் கலவரக்காரரும் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் பங்கேற்றனர். பல்வேறு இடதுசாரி
அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் 'இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்' என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இந்த கருத்தரங்கில் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றினார்கள்.

.தங்கம் விலை குறையும் ! கட்டுப்பாடுகளை தளர்த்த பரிசீலனை: ப. சிதம்பரம்


தங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி) குறித்த இறுதி அறிக்கை வெளியான பிறகு இது குறித்து பரிசீலிப்பதாக வங்கித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆண்டு இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு குறித்து இறுதி அறிக்கை கிடைக்கும். அதன் பிறகு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எந்த அளவில் உள்ளது என்பதை ஆராய்ந்து அதன்பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக தங்கத்தின் மீது அதிக வரியை மத்திய அரசு விதித்தது. 2012-13-ம் நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8,820 கோடி டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில் இதை 4,500 கோடி டாலர் அளவுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தங்கம் விலை குறையும் 

மீண்டும் தேமுதிக - காங்கிரஸ் தரப்பில் இருந்தும் திமுகவுக்கு தூது ! காட்சிகளும் கட்சிகளும் இடம் மாறுகிறதா


திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பதற்கான முயற்சிகளில், திமுக முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். திடீர் திருப்பமாக தேமுதிக-வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் மேலிடத்திலிருந்தும் திமுக-வுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் மமக, புதிய தமிழகம் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் பொறுப்பு திமுக-வின் உயர் மட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்ததும் செவ்வாய்க்கிழமை காலையில் திமுக நிர்வாகிகளும், தேமுதிக நிர்வாகிகளும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

கூட்டணியில் இல்லை என்பதை அம்மா தன் வாயால் சொல்லவேண்டும்


சில நாட்கள் முன்பு, 40 தொகுதிகளிலும் அதிமுக நின்றால் கூட அவர்தான் எங்கள் பிரதமர் என்று தா பாண்டியன் சொன்னாரே....கூட்டணியில் இல்லை என்பதை அம்மா தன் வாயால் சொல்லவேண்டும் என்று தாபாண்டியன்அழுதிருக்கிறார்.

ஜெயலலிதாவின் பின்னால் போன பலபேரின் வரலாறு இதுதான். வைகோவிடம் கேட்டால் இன்னும் உணர்சிகரமாக சிவாஜி பாணியில் அழுது காட்டுவார். என்ன செய்வது இனம் இனத்தை நாடும். நன்றியோடு நாய் போல சேவகம் செய்தீர்கள் ஆனாலும் நீங்கள் ஒன்றும் நல்லவர்கள் இல்லையே ? அதானால் உங்களுக்காக அனுதாபம் கொள்ள முடியவில்லை . சந்தர்ப்பவாத அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா 

பார்வதி மேனன் உத்தம வில்லன் திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டரில்

ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் தான் தமிழ்த்திரையுலகத்தின் தற்போதைய ஹாட் நியூஸ். உத்தம வில்லன் திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டரில் வரும் உருவம், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஃபோட்டோகிராஃபர் எடுத்த ஃபோட்டோவை மாதிரியாகக் கொண்டு உருவாக்கபபட்டது என்ற தகவல் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 
ஏற்கனவே பூஜா குமார், ஆண்ட்ரியா என இரு ஹீரோயின்கள் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்ட நிலையில், தற்போது மரியான் திரைப்படத்தில் பனிமலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பார்வதி மேனனும் உத்தம வில்லனில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இது பற்றி பார்வதி மேனன் “நான் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் என் கதாபாத்திரத்தைப் பற்றி தற்போது சொல்வதற்கு எதுவுமில்லை. கமல் போன்ற பெரிய ஹீரோவுடன் நடிப்பது பெருமையாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். 

நடிகையுடன் குடும்பம் நடத்தி மாயமான பி.இ. மாணவர்: பலாத்காரம் செய்த உறவி


நெல்லை: குரூப் டானஸ்ர் ஒருவரை பி.இ. மாணவர் ஒருவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரை தேடி வந்த டான்ஸரை மாணவரின் உறவினர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். சென்னை மாதவரம் வி.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் அபிராமி(23). பல்வேறு படங்களில் குரூப் டான்ஸராக பணியாற்றியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அவர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நடனம் ஆட இளம்பெண்களுடன் சேர்ந்து வந்தார். அந்த திருவிழாவில் உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்த பல் டாக்டர் முத்துலிங்கம் என்பவரின் மகன் முத்துகுமரன் அபிராமியுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். முத்துகுமரன் பி.இ. நான்காம் ஆண்டு படித்து வருகிறார். திருவிழா முடிந்த பிறகு அவரும், அபராமியும் செல்போன் மூலம் காதலை வளர்த்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்த முத்துகுமரனை அபிராமியை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று முத்துகுமரன் தெரிவித்தார். பின்னர் அவர் அபிராமியை சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.

சிபிஐ மூலம் திமுகவை மிரட்டி பார்க்கும் காங்கிரஸ் ? கூட்டணி வை அல்லது கூட்டுக்குள்ள போ?

சென்னை: லோக்சபா தேர்தல் அறிவித்தாகிவிட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு யாருடன் கூட்டணி என்பதே முடிவாகவில்லை. திமுக விடம் தூது மேல் தூது போயும் எதுவும் செட்டாகவில்லை. இனி கூட்டணியில் யாருக்கும் இடமில்லை என்று திமுக பலமுறை சொல்லியும், வேறு வழியின்றி மீண்டும் ப.சிதம்பரம் மூலம் தூது அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் சிபிஐ மூலமும் அமலாக்கப் பிரிவு மூலமும் மிரட்டி கூட்டணிக்கு பணியவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரியவந்ததால் கூட்டணிக்கான கதவை இழுத்து சாத்தியதாம் திமுக. பொய்யான குற்றச்சாட்டில் கனிமொழியையும் ராசாவையும் சிறையில் அடைத்தபோது ஸ்டாலினிக்கு காங்கிரஸ் மீது வராத கோபம் உதயநிதியின் ஹம்பர் காருக்கு வெட்டு வைத்ததும் வந்து விட்டதே ? ம்ம்ம் திமுகவின் நிஜ எதிரி யார் ?

கெஜ்ரிவாலை விட அதிக தியாகங்களை செய்தவர் மம்தா:அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மூத்த சமூகசேவகர் அன்னா ஹசாரே பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசுகையில் "எளிமையான ஆடைமற்றும் ரப்பர் செருப்புகள் அணியும் ஒரு முதல்வரை காண்பது மிகவும் அரிது.அந்த வகையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று வரை தனக்கு வழங்கப்பட்ட அரசாங்க இல்லத்தையோ அரசு வாகனத்தையோ பயன்படுத்தாமல் எளிமையாக இருந்து வருகிறார்.எனவே ஆம்ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட தன் அரசியல் வாழ்க்கையில் அதிக தியாகங்கள் செய்தவர் மம்தா பானர்ஜியே ஆவார்.மேலும் அவர் தனது மாநிலத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.எனவே மம்தா பிரதமரானால் நம் நாட்டிற்கு வளமான எதிர்காலம் உண்டு.அதே சமயத்தில் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போன்றவர்கள் பிரதமரானால் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக அமையாது” என்றும் தெரிவித்தார்.  maalaimalar.com

குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை: கெஜ்ரிவால் சான்றிதழ்

குஜராத்தில் மோடி அரசு ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை ஆராய்வதற்காக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ‘குஜராத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக ஊடகங்களும், மாநில அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. கல்வித் துறை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படும் குஜராத்தின் வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்’ என்று கூறினார். பின்னர், நேற்றிரவு பேட்டியளித்த கெஜ்ரிவால், ‘என்னை தடுத்து நிறுத்தும் விதமாக நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு செயல்பட்டனர். எனது கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஏனுங்க மோடி குஜராத் வளர்ச்சி பத்தி  எவ்வளவு விளம்பரம் பண்ணி வச்சிருக்காக அதையெல்லாம் போயி ஒத்தை விசிட்டில காலி பண்ணினா கோபம் வராதுங்களா ? வெபரம் புரியாம நீங்க ? எதுக்கும் சாக்கிரதையா இருங்க சாமி 

ஆம் ஆத்மி - பாஜகவினர் மோதல் ! துடைப்பங்களுடனும் லத்திகளுடனும் மோதலில் !

ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களுடனும், பாஜகவினர் லத்திகளுடனும் மோதலில் ஈடுபட்டனர்.ஆம் ஆத்மி கட்சியினர்
துடைப்பங்களுடனும், பாஜகவினர் லத்திகளுடனும் மோதலில் ஈடுபட்டனர்."குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் மீதான போலீஸாரின் தடுப்புக் காவல் நடவடிக்கையின் எதிரொலியால், டெல்லியில் பாஜகவினருடன் ஆம் ஆத்மி கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களுடனும், பாஜகவினர் லத்திகளுடனும் மோதலில் ஈடுபட்டதுடன், கற்களால் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் குஜராத் பயணம்
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) குஜராத் வந்தடைந்தார்.

Chennai மாணவர்கள் கொலை வெறி தாண்டவம்: பெண் பயணிக்கு அரிவாளால் வெட்டு !


3 இடங்களில் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்மெரினாவில் பஸ் நொறுக்கப்பட்டது வியாசர்பாடியில் அரிவாள் வெட்டு


சென்னை: சென்னையில் நேற்று நான்கு இடங்களில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் நடத்திய அராஜகத்தில், ஒரு பெண் பயணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பள்ளி மாணவன் காயம் அடைந்தான். மாநகர பேருந்து அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில், பட்டினப்பாக்கம் சுங்கச்சாவடி வழித்தடம் எண் '6 டி' மாநகர பேருந்து கண்ணகி சிலை அருகே சென்று கொண்டிருந்தது. அதில், மாநில கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அதையறிந்த, நியூ கல்லூரி மாணவர்கள், திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இருந்து, அரிவாள் மற்றும் மூட்டையில் கற்களை எடுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய கல்வீச்சில், பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின. பயணிகள் அலறி ஓடினர். பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. மாணவர்கள், பேருந்தின் உள்ளே புகுந்து, மாநிலக் கல்லூரி மாணவர்களை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். மாநிலக் கல்லூரி மாணவர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் காமராஜர் சாலையே பெரும் போர்க்களம் போல் காணப்பட்டது. மாணவர்களின் கொலைவெறி தாக்குதலில், கணவர் கண் முன்னே, மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதற்கு முழு காரணமும் நாம் தமிழர் மற்றும் சைக்கோ கட்சிகளையே சாரும். வன்முறை தான் சிறந்த மார்க்கம் என்று சொல்லி, காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டம், காங்கிரஸ் கருவறுக்கும் போராட்டம், என்று மாணவனை ஒரு போராளியாக மாற்றியது இவர்கள் தான். அந்த பழக்கம் மறந்து விடக்கூடாது என்று தான், மாணவன் சக மாணவனை அடித்துக்கொல்கிறான். இத்தகைய தலைவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் சொல் கேட்டு அகிம்சைவாதிகளை வதைத்தால், ஒரு நாள் ஊராரிடம் இதேப்போல் அடிவாங்க நேரிடும். மாணவ சமூகமே திருந்து.... 

புதன், 5 மார்ச், 2014

திமுக பக்கம் சாய்கிறது மார்க்சிஸ்ட்? ADMK கூட்டணியில் முன்னேற்றம் இல்லை ! ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப் படும் முன்னரே மிகுந்த எதிர்பார்ப்பில் முதல் கூட்டணி அதிமுகவில்தான் அமைந்தது. அதிமுக தலைமையுடன் உயர் மட்டத் தலைவர்கள் சந்தித்து முதல் முதலில் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் கூட்டணியை உறுதி செய்தன.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் இருந்து தங்கள் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர் என்று அவர் தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு நிம்மதியை அளித்தார். தோழர்களே வினாஸ காலே விபரீத புத்தி என்றால் என்னவென்று விளங்கிடுச்சா? அப்ப தாபா ? 

Ex ADMK MLA அம்மாவின் பள்ளி தோழி பதர் சையத் ஆம் ஆத்மியில் இணைந்தார்.


பதர் சயீத் | கோப்புப் படம்
பதர் சயீத் | கோப்புப் படம்
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
இந்தத் தகவலை, ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் எம்.லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் பதர் சயீத் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் லெனின் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரான பதர் சயீத், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சென்னை - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com

காலையில் பாஜக.. மாலையில் திமுக. ! மீண்டும் விஜயகாந்த் வேதாளம் திமுகவில ? தாங்க முடியல்ல சாமியோவ்


சென்னை: பாஜக அணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம்பிடித்துவிட்டது.. 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் காலையில்தான் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால் மாலையில் திமுக அணிக்கு போவது என தேமுதிக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை புரியாத புதிர்தான். காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன.அழைப்புவிடுத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். பின்னர் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது பாஜக. பாமகவோ 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டி வருகிறது. பாஜகவோ 8 தொகுதிதான் தருவோம் என்றது. இந்நிலையில் தேமுதிக 16 தொகுதிகள் கேட்டதாகவும் பாஜக 14 தொகுதிகளைக் கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன் கூட்டணிக்கான பேரம் முடிந்துவிட்டது என்றும் காலையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால் மாலையில் தேமுதிக, திமுக அணிப் பக்கம் போக முடிவெடுத்துவிட்டதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே திமுக அணியில் நேற்று தொடங்கிய தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். பாரதிய ஜனதா கட்சி எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் வெல்வது கடினம்.. ஆனால் திமுக அணியில் கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என்ற இறுதி முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்ததாகவும் இது குறித்து திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அதனாலேயே தொகுதிப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. தேமுதிக, திமுக அணிக்கு வரும் போது அதிமுக அணியைவிட்டு வெளியேறும் இடதுசாரிகளில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடம்பெறக் கூடும் என்றும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உஷ்.. கண்ண கட்டு tamil.oneindia.in 

Gujarat கெஜ்ரிவால் கைது : மோடி கூற்றின் உண்மையை கண்டறிய குஜராத் சென்ற கெஜ்ரிவால்

அகமதாபாத்: குஜராத்தை முன்னோடி மாநிலமாக ஆக்கிவிட்டதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி கூறி வருவது உண்மையா என்பதை பார்க்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றார். சென்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார். அகமதாபாத்தை அடைந்த கெஜ்ரிவால் தனது சுற்றுப்பயணத்தின் இறுதிநாள் அன்று பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். ஆம் ஆத்மி கட்சி துவங்கிய பிறகு முதன் முறையாக குஜராத் வந்துள்ள கெஜ்ரிவால் மாநிலம் முழுக்க சுற்றிப் பார்க்க உள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவால் மெஹ்சனா மாவட்டம் பெசராஜியில் இருந்து ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை மீறிச் சென்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கெஜ்ரிவாலின் பயணம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் மனிஷ் சிசோடியா கூறுகையில், குஜராத் முன்னேற்றம் பற்றி கேள்விப்பட்டோம். அது உண்மையா என்பதை கண்டறிய இங்கு வந்துள்ளோம். அது பொய்யாக இருந்தால் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.
tamil.oneindia.in/

பாஜக அணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ! பேரம் படிந்தது!

சென்னை: பாஜக அணியில் இடம்பிடித்துவிட்டது விஜயகாந்தின் தேமுதிக. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன. அழைத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடைசிவரை காத்திருந்தன. இவற்றில் திமுக விஜயகாந்துக்கான கதவை மூடிவிட்டது. காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கும் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆசிட்' வீச்சு லக்ஷ்மிக்கு சர்வதேச வீரப் பெண்மணி விருது !அதற்கு எதிராக போராடியவர்


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதற்கு எதிராக போராடி, இந்தியாவில் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுபாடுகளை விதிக்க காரணமாக இருந்த தில்லியைச் சேர்ந்த இளம் பெண் லக்ஷ்மி, அமெரிக்காவின் சர்வதேச வீரப் பெண்மணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, இந்த விருதை லக்ஷ்மிக்கு வழங்க உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில்லை.
ஆசிட்டால் பாதிக்கப்பட்ட தங்களது உருவத்தை மறைக்கவே முயற்சி மேற்கொள்வர். அவர்கள் உயர் கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது ஆகியவற்றைத் தவிர்ப்பதும் வழக்கம்.
ஆனால், லக்ஷ்மி அதுபோன்ற பாதைகளை தேர்ந்தெடுக்காமல் தொலைக்காட்சிகளில் தோன்றி ஆசிட்டுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி, 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்துகளை பெற்றார்.

ஜாதகம் நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை பெற்றெடுக்கும் பெரியவா ! சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !


ஐ.பி.எம்
தோச பரிகாரம்சில நாட்களுக்கு முன் பெங்களூரு ஐபிஎம் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட செய்தியை பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் நினைவுக்கு வந்தது என் கல்லூரி கால நண்பன் மகேஷ் தான்.
மகேஷும் நானும் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒன்றாகவே சுமார் 2 வருடம் வேலை தேடினோம். அவன் முதலில் டிசிஎஸ் நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேர்ந்தான். சில வருடங்களில் தொடர்பில்லாமல் போனது. பின்பு அவனது திருமணத்திற்கு அழைப்பதற்காக என்னைத் தொடர்புக் கொண்ட போது தான், அவன் ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிந்தது.
மகேஷை அறிவாளி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராக படிப்பான், ஆனால் அபார கடவுள் நம்பிக்கை உள்ளவன். எப்பொழுதும் ஏதாவது மந்திரம் சொல்லியபடியே தான் இருப்பான். பரீட்சைக்கு முன் கலர் கலராக பல கயிறுகளை கையில் கட்டியிருப்பான். செமஸ்டர் கடைசி பரீட்சை முடிந்தவுடன் ஒரு கயிறையும் பார்க்க முடியாது. அவனுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தால் தான் நடக்கிறது என்று நம்பிக்கை.
ஆனால் நான் கவனித்த வரை அவனிடம் சில ஆளுமைகள் இருந்தன. முதலில் அருமையான ஆங்கிலப் புலமை. இரண்டாவது எதையும் சுலபமாகவும், மற்றவருக்கு எளிமையாகவும் புரியும்படி விளக்குவான். தான் செய்யாத ப்ரொஜக்ட்டை பற்றி கூட இரண்டொரு வரிகள் படித்துவிட்டு, அவன் ஈடுபாட்டுடன் செய்ததை போல் அருமையாக விளக்கி விடுவான். இது போதாதா, ஐடி துறையில் பிழைக்க. ஆனால் அவனை கேட்டால் தாயத்து, வேண்டுதல்களால் தான் தனக்கு நன்மைகள் நடக்கிறது என்று கூறுவான்.

டுபாக்கூர் மோடி ஒரு ஞானசூனியம் அதுவே முதலாளிகளின் தேவை ! மோடி : 24 X 7 தேசிய இம்சை !


நரேந்திர மோடி
பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்றார் மோடி. பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது பீகார் வந்தார்?
யிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியான ஒரு கொலைகாரனை, ஒரு முட்டாளாகவோ கோமாளியாகவோ கருத முடியுமா என்று வாசகர்கள் எண்ணலாம். “கிரேட் டிக்டேடர்” என்ற திரைப்படத்தில் இட்லரையும் முசோலினியையும் பற்றிய சார்லி சாப்ளினின் சித்தரிப்பு, ஒரு பாசிஸ்டின் ஆளுமைக்குள் முட்டாள்தனமும் கோமாளித்தனமும் பிரிக்க முடியாமல் பிணைந்திருப்பதை நமக்குக் காட்டியது.
பின்னர் நாம் ஜார்ஜ் புஷ்ஷைப் பார்த்தோம். ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் போர் தொடுத்துப் பல இலட்சம் மக்களின் பேரழிவுக்குக் காரணமாக இருந்த புஷ் ஒரு அடி முட்டாள் என்பது, அவருடைய மனைவி லாரா புஷ் ஒருவரைத் தவிர, அநேகமாக மற்றெல்லோரும் அறிந்த உண்மையாகத்தான் இருந்தது. அதன்பின் ஒரு பாசிஸ்டு முட்டாளாக இருக்க முடியுமா என்ற கேள்வி மறைந்து, பாசிஸ்டுகளுக்கு முட்டாள்தனம் ஒரு முன்நிபந்தனையோவென்று தோன்றத் தொடங்கியது. புஷ் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராவதற்கு அவரது முட்டாள்தனமே ஒரு தகுதியாக மாறிவிட்டது.

யஷ்வந்த் சின்ஹாவிடம் ஜெயலலிதா கொடுத்த 'கவர்': போட்டு உடைக்கும் ஸ்டாலின்

சென்னை: அதிமுக மத்திய அரசில் பங்கேற்றபோது ஜெயலலிதா 'சிபாரிசுகளின் தலைவி'யாக இருந்தார்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது: "தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மத்தியில் அதிமுக இடம்பெறும் ஆட்சி வேண்டும்" என்று காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முழங்கியிருக்கிறார்
இவர் கடந்த காலங்களில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றபோது என்ன மாதிரி கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்? என்னென்ன திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என அவரால் பட்டியலிட முடியுமா? ஆனால், மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த போது என்ன கோரிக்கைகள் வைத்தார் என்பதை திமுகவால் பட்டியலிட முடியும்.

Coimbatore Rape இரட்டை சகோதரர்களுக்கு ஆண்மை பரிசோதனைகோவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.
கல்லூரி மாணவி கற்பழிப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் அகில் (20), அதுல் (20). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இதற்கிடையே அதேக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவியை கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தனது வீட்டுக்கு அகில் அழைத்துச்சென்றார்.
பின்னர் அந்த மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே வீட்டுக்கு வந்த அதுலும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த மாணவி அதுலை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வெளியேறினார்.

சர்க்கரை நோய்க்கு இன்சுலின் தவிர மருந்து உண்டா?


 பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான கு.சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
எனக்கு வயது 67. 30 ஆண்டுகளாகச் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்து வருகிறேன். நான் சர்க்கரை நோய்க்கான மருந்துகளுடன் பாகற்காய் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்வது சரியா? சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேறு தெளிவான வழி இருக்கிறதா?
- எஸ். ராம்ராஜ், மதுரை
ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என்பதற்கான நிறைய மருத்துவச் சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தனித்து போட்டி? கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் அதிருப்தி ! தி.மு.க., கூட்டணியில் இணைவது குறித்து குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் ?

காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி களை, அ.தி.மு.க., கழற்றிவிட முடிவு செய்திருப்பது உறுதியானது.
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். நேற்று, இரண்டாவது நாளாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து, சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். காஞ்சிபுரத்தில், அவர் பேசும்போது, ''மத்தியில், நடைபெறும், ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். அந்த ஆட்சி, தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியாக, அமைய வேண்டும். அப்போது தான், தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்படும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில், நீங்கள் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.  தாயே பிச்சை போடுங்கள் என்று கேட்டு விட்டீர்கள். சாதம் ஆகும் வரை, அதாவது தேர்தல் முடியும் வரை பொறுமையாக இருக்க முடியாதா? 80 வயதுக்கு மேல் ஆன தா. பா. எம்பி ஆகி தமிழக மக்களுக்கு என்ன சேவை செய்து கிழிக்க போகின்றார்? சேராத இடம் தன்னில் சேர்த்தல் இதுதான் கதி. போன சட்டமன்ற தேர்தலில் அவமான பட்டபின்பும் புத்தியில் ஏறவில்லை என்றால், இந்த மாதிரி செருப்படிதான் போயஸ் தோட்டத்தில் கிடைக்கும்.

தி.மு.க., தொகுதி பங்கீட்டில் கும்மாங்குத்து ! தினமலரின் ஊகம் ?

தி.மு.க., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்படாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. ஒரு தொகுதிக்கு, மூன்று கட்சிகள் போட்டி போடுவதால், தி.மு.க., கூட்டணிக்குள், 'கும்மாங்குத்து' துவங்கியுள்ளது. சிதம்பரத்தில் வெற்றி: தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் என, நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம், விழுப்புரம் என, தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் வெற்றி பெற்றார். விழுப்புரத்தில், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்த, தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினரும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமை யிலான குழுவினரும் பங்கேற்றனர். பேச்சின் போது, சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் என, ஐந்து தொகுதிகளில் போட்டியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.

செவ்வாய், 4 மார்ச், 2014

கம்யுனிஸ்டுகளுக்கு அதிமுக கைவிரிப்பு ? பொறுமையில் எருமையை வென்ற தோழர்கள் வைகோ படித்த பாடத்தை படிக்கிறார்கள்முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கிய அதே நேரத்தில் தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கினர். அதோடு, அக்கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு பதவிகளை வகிப்போர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதன் மூலம், “கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சீட் கிடையாது” என சமிக்கையை ஜெயலலிதா தெரிவித்துவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. கம்யுனிஸ்ட் கட்சிக்களுக்கு இன்னும் செய்யறதுக்கு நெறைய தொழில் இருக்கு!ஜால்ரா வாசிப்பதற்கு உரிய முன் அனுபவம்தான் இருக்கே ஏதாவது பஜனை கோஷ்டியில் சேருங்க அல்லது பேசாம அதிமுகவில் சேர்ந்து விடலாமே ? அட ஏறக்குறைய இவ்வளவுநாளும் தாபா அதைதானே செய்தார்