மின்னம்பலம் - Mathi : 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சி 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
இந்த குழுவில்
1) கிரிஷ் ஜோடங்கர் (தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்)
2) செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்)
3) சூரஜ் ஹெக்டே (காங்கிரஸ் செயலாளர்)
4) நிவேதித் ஆல்வா (காங்கிரஸ் செயலாளர்)
5) ராஜேஷ்குமார் (தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்)
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சனி, 22 நவம்பர், 2025
திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தீர்ப்பு! பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள்
மின்னம்பலம் - Kavi : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே. சுதர்சனம் கொலை வழக்கில், இன்று (நவம்பர் 21) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
18 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் நடந்த கொலை
“விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்” - அப்பாவு கருத்து
hindutamil.in - அ.அருள்தாசன் : திருநெல்வேலி: “விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை அளித்துள்ள நிலையில், அவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது:
“இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்தளவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டு காலமாக மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார்.
கரிகாலன் : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது,
Karikalan Kiru : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது, அவரை நோக்கி வரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் "மத ரீதியான தாக்குதல்" என்று 'victim' வேடம் போட்டு தப்பிக்கப் பார்க்கிறார். வேறு வழி? துரோகம் செய்யும் அனைத்து கோடாரிக் காம்புகளும், தங்கள் குட்டு வெளிப்பட்டவுடன் கைகொள்ளும் அதே அரதப் பழசான வழியைத் தான் திரு.ஷபீரும் தேர்ந்தெடுத்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக 2 சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு,கோதாவில் குதித்துள்ளன.
1. தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன்
2. சென்னை பத்திரிகையாளர் சங்கம்
இதில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் மற்றும் அதன் நிர்வாகிகளின் பின்னணியை பார்த்தாலே திரு.ஷபீரின் victim card தானாகவே டார் டாராக கிழிந்துவிடும்.
கைதிகளின் பற்களை உடைத்த ஐபிஎஸ் அதிகாரி பல்பீந்தார் சிங் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
![]() |
hindutamil.in - கி.மகாராஜன் : மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்களை உடைத்தது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “அம்பை டிஎஸ்பியாக பணிபுரிந்த போது அருண்குமார் என்பவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து பல்லை உடைத்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிட்டு என் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வெள்ளி, 21 நவம்பர், 2025
அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
தினமலர் : புதுடில்லி: வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான 1,452 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66, வங்கி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம்சாட்டப்பட்டது.
வியாழன், 20 நவம்பர், 2025
மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் உச்ச நீதிமன்றம்?
Vasu Sumathi : "சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை என்றாலும், ஆளுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் ஒப்புதல் வழங்க காலக்கெடுவை நிர்ணயித்த இருவர் அடங்கிய அமர்வின் ஏப்ரல் 8 தீர்ப்பில் உள்ள உத்தரவுகள் செல்லாது. அவை அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது." - ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
இதற்கு முன் கொஞ்சம் நியாயமாக தீர்ப்பு வழங்கிய உநீம.. இப்போது பல்டியடித்து, மீண்டும் அரசுக்கு சாதகமாகவே உப்பு சப்பில்லாத ஒரு முடிவை சொல்லியிருக்கிறது. முழு ஆணையும் வந்த பிறகு விரிவாக அலசலாம். ஆனால் இது ஆரோக்கியமான தீர்ப்பாக இல்லை.
"ஆளுநரிடம் 3 அரசியலமைப்பு சார்ந்த வாய்ப்புகள் உள்ளன - ஒப்புதல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைத்தல், சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல்.
ஆளுநர் இந்த மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தன் விருப்புரிமையைப் பயன்படுத்துகிறார்.
ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை
பிபிசி தமிழ் : 'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'-
ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை
ராய்ப்பூரின் அவதியா பாராவின் வளைந்த குறுகிய தெருக்களில், ஒரு பழைய வீடு இருக்கிறது. சுமார் 84 வயதான ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா அந்த வீட்டில்தான் வசிக்கிறார்.
இந்த வீட்டின் பாழடைந்த சுவர்களில் பெயர்ப் பலகைகள் ஏதுமில்லை, வெற்றியின் அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் இந்த சுவர்களால் பேச முடிந்தால், ஒரு மனிதர் 39 ஆண்டுகள் நீதியின் கதவைத் தட்டிய கதையை அவை சொல்லும். அந்தக் கதவு இறுதியில் திறந்தபோது, அவரது வாழ்க்கையின் பெரும்பாலான ஜன்னல்கள் ஏற்கனவே மூடியிருந்தன.
புதன், 19 நவம்பர், 2025
திருகோணமலையில் ஒரு உணவகத்தை வைத்து பௌத்த சைவ சண்டைக்கு தூபம் போடும் இனவாதிகள்
ராதா மனோகர் : இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை.
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.
அதனால்தான் தமிழர்களின் திருக்குறளையே எந்த காலத்திலும் சைவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
பொன்ராஜ் : பாஜகவை வீழ்ந்த தெருவில் இறங்கி போராடவேண்டும்!
Rebel Ravi : பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணியை வீழ்த்த பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இதுதான்…!
ராகுல்காந்தி அவர்கள் வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
ராகுல் காந்தியும் பல மாநில கட்சிகளின் தலைவர்கள் தனிதனியாக போராடுவதாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் அது கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
தேர்தல் ஆணையர் பாஜக நிர்வாகியாக செயல்படுவதால் பாஜகவை வீழ்த்த முடியாது…!
செவ்வாய், 18 நவம்பர், 2025
இலங்கை சிறைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்
jaffnamuslim.காம் : "வெடிக்கத் தயாராக" மெகசின் சிறைச்சாலை
இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாக கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.
நாட்டின் சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், தற்போது சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா- கைவிடப்பட்ட சூட்கேசில்
file video :
ஹிரூ நியூஸ் : கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார், சூட்கேஸில் 11.367 கிலோ கஞ்சா இருந்ததாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.113,670,000 எனப் பதிவாகியுள்ளதாகவும்.
இந்த சூட்கேஸ் மார்ச் 17ஆம் திகதி விமான நிலையத்தில் கைவிடப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நேற்று (17) போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிகார் - காங்கிரஸ் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் மிரட்டி வாங்கி எதிர்கட்சிகளை வெற்றி பெற வைக்கிறது
![]() |
Rebel Ravi : பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?
பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான்.
தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர் இடத்தில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.
இதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தந்தது திமுக. அதில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
SIR மூலமாக தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரிகள்? தேர்தல் ஆணையத்துக்கு திமுக கேள்வி Biharis in Tamil Nadu
மின்னம்பலம் - Mathi : இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக பீகார் வாக்காளர்களையும் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடைபெறுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடப்பது எல்லாம் குளறுபடிகளின் உச்சமாக இருக்கிறது.
இதற்கு முன்பு தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள்.
வட இந்தியா தோற்றது ஏன்? அரசியல் கோட்பாடு வறுமையே முதன்மை காரணம்
ராதா மனோகர் : வட இந்தியாவில் இன்று நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் மூல காரணம் அங்குள்ள அரசியல் கோட்பாட்டு வறுமைதான்.
மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா விதத்திலும் முன்னேறி செல்வதற்கும் எத்தனையோ காரணங்களை கூறினாலும்,
நீதிக்கட்சியில் இருந்து இன்றைய திமுக வரை வளர்ச்சி பெற்ற அரசியல் கோட்பாடுதான் காரணம் என்று நான் கருதுகிறேன்.
தமிழக அரசியல் கட்சிகளும் ஏராளமான இயக்கங்களுக்கும் கடும் அரசியல் சமூக விவாதங்களை தொலைக்காட்சிகளில் நடத்துவதை அன்றாடம் நாம் காண்கிறோம்.
இப்படிப்பட்ட காட்சிகளை இந்த அளவுக்கு இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாது.
தென்னக மாநிலங்களில் கொஞ்சம் காணலாம்..
வடமாநில தொலைக்காட்சிகள் இன்னும் ஒரு வளர்ச்சி அடையாத மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு மலிவு தீனி போடுவதையே 24 மணிக்கூறும் செய்கின்றன.
திங்கள், 17 நவம்பர், 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - வங்கதேச முன்னாள் பிரதமர் - நீதிமன்றம் கூறியது என்ன?
BBC News தமிழ் : வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
தாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
தோழர் திருமாவை மிக தரம் தாழ்ந்த சொற்களால் இலங்கை எம்பி திரு அர்ஜுனா ராமநாதன்
| Arjuna Ramanathan MP |
தோழர் திருமாவை மிக தரம் தாழ்ந்த சொற்களால் திரு அர்ஜுனா ராமநாதன் எம்பி தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார். அவர் குறிப்பிட்டது
யார்ரா இந்த டிங்கி
எனக்கு அரசியல் சரியாக தெரியாது
ஆனா நிக்கிற இடத்தை பார்த்தா ஏதோ குனா சூனா மாதிரி தெரியுது?
தோழர் திருமாவளவன் பற்றி இவ்வளவு மோசமான சொற்களால் குறிப்பிட்டமை,
ஒரு ஜாதி வெறி வாந்தியாகத்தான் எனக்கு தோன்றுகிறது.
அதென்ன டிங்கி?
அதென்ன குனா சூனா?
ஒரு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பதிவில் மூலம் என்ன கருத்தை இவர் சொல்ல வருகிறார்?
மூச்சுக்கு மூச்சு தேசிய தலைவர் மாவீரர் தமிழீழ மண் என்று சதா ஓங்கி ஒலிப்பவரின் உள்ளத்தின் அடியில் என்ன உள்ளது என்பதை இதைவிட தெளிவாக யாராலும் சொல்லி விட முடியாது
செல்வநாயகமும் பிரபாகரனும் விஷம் ஊற்றி வளர்த்த தமிழ் பேரினவாதம் என்பது இதுதான்
ஞாயிறு, 16 நவம்பர், 2025
டெக்னாலஜி.. SIR ஐ எதிர்கொள்ள திமுக எடுத்த அஸ்திரம்.. பாஜக திகைப்பு!
Maha Laxmi : தமிழ்நாட்டின் பல்வேறு வார்டுகளிலும் நடைபெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் நிலையில் திமுக இதில் டெக்னாலஜியை பயன்படுத்தி வாக்காளர்களை ஆய்வு செய்து வருகிறது.
இதற்காக திமுக சிறப்பு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு முறையான அமைப்பை அமல்படுத்தியுள்ளது.
இதற்காக, வாக்காளர் தகவல்களைத் தொகுத்து பூத் வாரியாகப் பிரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியை கட்சி பயன்படுத்துகிறது.
இந்த செயலி, பெயர் மற்றும் குரல் உள்ளீடு மூலம் வாக்காளர் பதிவுகளை விரைவாகத் தேடும் வசதியைக் கொண்டுள்ளது.
இதன் மூலம், கட்சித் தொண்டர்கள் வாக்காளர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யத் தேவையான வழிமுறைகளை எளிதாக வழங்க முடிகிறது.
அதாவது ஒரு ஏரியாவில் BLO அதிகாரி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்..
10 நிமிடம் தாமதம்’ – ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்’ தண்டனையால் உயிரிழந்த மாணவி
![]() |
vikatan : மும்பை மாணவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால், வகுப்பு ஆசிரியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்துள்ளார். மாணவியிடம் பேக்கை கூட கீழே வைக்க விடாமல் பேக்கோடு சிட் அப் செய்யும் படி செய்ய வைத்துள்ளார்.
இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பீகாரில் காங்கிரஸ் தற்றது ஏன்? 10 முக்கிய விடயங்கள் Why the Congress Became Irrelevant in Bihar:
மின்னம்பலம் -Mathi : பீகாரில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி (Congress) தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வெறும் 6 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களவை எதிர்கக்ட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம் முழுவதும் யாத்திரை, பிரசாரம் என ‘வம்பாடு’ பட்டும் விழலுக்கு பாய்ந்த நீரைப் போல பயனற்றுப் போய்விட்டது.
பீகாரில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு பூத் முகவர்களைக் கூட போட இயலாத அளவுக்கு ‘தொண்டர்கள்’ கூட இல்லாத பரிதாப நிலை மிக அடிப்படை காரணம் என்கின்றனர் அந்த கட்சியின் தலைவர்கள்.
காங்கிரஸ் கட்சியின் பீகார் முகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தலைவர்கள் யாருமே இல்லை. 1990களின் தொடக்கம் முதலே பீகார் மாநிலத்துக்கான காங்கிரஸ் முகமே இல்லை.





