சனி, 30 ஜூலை, 2022

என்ட பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே! மத்திய அரசை மலையாளத்தில் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்

Nantha Kumar R  -   Oneindia Tamil :  சென்னை: ‛என்ட பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புக்கும் வணக்கம்' எனக்கூறி ஜிஎஸ்டி முதல் நீட் வரை மலையாளத்தில் மத்திய அரசை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள மனோரமா சார்பில் நடைபெற்ற 'இந்தியா - 75' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
கேரளாவில் மலையாள மொழி பேசும் நிலையில் அங்குள்ளவர்களுக்கு புரியும் வகையில் முதல்வர் ஸ்டாலின் மலையாள மொழியில் உரையாற்றி அசத்தினார். இந்த உரையில் ஒரே நாடு ஒரே மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஒட்டுமொத்த மாநிலங்கள் இணைந்தது தான் இந்தியாவாக உள்ளது. இதனால் ஒரு மொழி, ஒரு மதம் என்பதை கட்டாயமாக்க முடியாது என ஸ்டாலின் பேசினார். இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள் வருமாறு:

அண்ணி கொடுமை; கண்டு கொள்ளாத அண்ணன்: 3 சகோதரிகள் தற்கொலை ... மத்திய பிரதேசத்தில்

மத்திய பிரதேசத்தில் அண்ணி கொடுமை; கண்டு கொள்ளாத அண்ணன்:  3 சகோதரிகள் தற்கொலை

தினத்தந்தி :  மத்திய பிரதேசத்தில் அண்ணி கொடுமை, கண்டு கொள்ளாத அண்ணனால் ஒரே கயிற்றில் 3 சகோதரிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
போபால், மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் ஜவார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பழங்குடியின சகோதரிகள் சில நாட்களுக்கு முன் மரத்தில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

தினகரன் : சென்னை: அண்ணா பல்கலைக் கழக 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்த விழாவில் 1813 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர். இடப்பிரச்னை காரணமாக பதக்கத்துடன் கூடிய பட்டம் பெறும் 69 பேர் மட்டுமே அரங்கில் உட்கார வைக்கப்பட்டனர்.
மற்ற மாணவர்கள் அனைவரும் அரங்கின் அருகில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டனர்.
அவர்கள் விழாவை காண பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 69 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

வெள்ளி, 29 ஜூலை, 2022

காலை உணவுத் திட்டம்; திங்கள் முதல் வெள்ளி வரை வித விதமான உணவு வகைகள்

 Thangaraj Gandhi  :  நான் துப்புரவு பணியாளரின் மகன்.
என் பள்ளி பருவத்தில் தந்தை இல்லாத சூழலில் என் தாய் துப்புரவு பணிக்கு சென்று தான் எங்களை படிக்க வைத்தார்.
படிக்க வைத்தார் என்றால், பள்ளிக்கு செல்கிறோமா இல்லையா என்பதை கராராக கண்காணிப்பார் என் தாயார்.
கொடுமை என்னவென்றால்,
மூன்று நாள் முன்னாடி ஆக்கிய வெஞ்சனை தான் எங்களின் பெரும்பான்மையான காலை உணவு.. அதை உண்டுவிட்டுதான் பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை. காரணம், என் தாய் தூய்மைப் பணியாளர் ன்பதால், அவர் அதிகாலை 5:30க்கே பணிக்கு சென்றுவிடுவார்.
விவரம் தெரியவரும் வயதில்.. காலை உணவை உண்பதை தவிர்த்தேன். ஏனெனில் சூடான சத்தான உணவாக இருக்காது.
மதியமும் பள்ளி உணவுதான்.

பாகிஸ்தான் அணி சென்னை செஸ் போட்டிகளில் இருந்து விலகியது! அவசரமாக திருப்பி அழைத்த பாகிஸ்தான்! ஏன்?

Pakistan chess players

மின்னம்பலம் : “செஸ் விளையாட வேண்டாம்! உடனே புறப்பட்டு வாருங்கள்” -வீரர்களுக்கு உத்தரவிட்ட அண்டை நாடு
“செஸ் விளையாட வேண்டாம்! உடனே புறப்பட்டு வாருங்கள்” என பாகிஸ்தான் நாடு உத்தரவிட்டதையடுத்து அந்த நாட்டு வீரர்கள் திடீரென சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

சோனியா காந்தி அதிரடி : என்னிடம் இனி பேசாதீர்கள் .. ஸ்மிரிதி இரானி மீது பாய்ச்சல்

புதியதலைமுறை - karthick  : மக்களவையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஒரு போராட்டமா? India's First Chess Olympiad In Chennai

 சுமதி விஜயகுமார்  : உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை தங்கள் நாடுகளில் நடத்த அனைத்து நாடுகளும் போட்டி போடும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை , முதலாவது காரணம் கௌரவம்.
எவ்வளவு சிறப்பாக செய்கிறோம் என்று பாருங்கள் என்று போட்டி போட்டு கொண்டு நடத்துவார்கள்.
 2020 ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பானில் நடைபெற்ற போது ,
அதற்கென விளையாட்டு மைதானங்கள், விருந்தினர்கள் தங்க விடுதிகள் என சிறப்பாக செய்யப்பட்டது. அதன் பிரமாண்டத்தை ஒரு புறம் உலகம் வியந்து பார்க்க ,
மறுபுறம் அங்கு குடியிருந்த மக்கள் தங்கள் வீடு , கடைகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து நின்றார்கள். ஒரு சில மாதங்கள் நடக்கும் ஒரு போட்டிக்கு தங்கள் வாழ்வை ஏன் அழிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினார்கள்.

வியாழன், 28 ஜூலை, 2022

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா.. 186 நாடுகள் கொடி அணிவகுப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம்

Javid Ahamed -  tamil.mykhel.co  : சென்னை: 2022 சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியது.
இதில் பிரதமர் மோடி விழா மேடை வருவதற்கு முன்பே ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பட்டு வேட்டி சட்டையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, வைரமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் பார்வையாளராக பங்கேற்றனர்.
சர்வதேச தொடரில் அரசியல்.. காரணம் என்ன?
செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து  பாகிஸ்தான் விலகல்..
சர்வதேச தொடரில் அரசியல்.. காரணம் என்ன?
கொடி அணிவகுப்பு கொடி அணிவகுப்பு தமிழ்த் தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில்,

மோடி படத்தை ஒட்டியவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? கே.எஸ்.அழகிரி கேள்வி!

மின்னம்பலம் : “செஸ் ஒலிம்பியாட் விளம்பர படத்தில், மோடி படத்தை ஒட்டியவர்களை காவல் துறை ஏன் கைது செய்யவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு கவனித்துவரும் வேளையில்,
இதன் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என விமர்சனங்களும் எழுந்தன.
 என்றாலும் பிஜேபியினர் அந்த விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் மோடி படத்தையும் இணைத்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த வீடியோ வைரலானதால் பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்... Chess Olympiad Live:

 இந்தியன் எக்ஸ்பிரஸ் : Chess Olympiad Live: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் வேட்டி சட்டை அணிந்து வந்த பிரதமர்
Chennai: சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கவுரவமிக்க போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

கள்ளக்குறிச்சி மாணவி: திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் சரமாரி கேள்விகள்!

 மின்னம்பலம் : “கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தின் விசாரணையில் தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது” என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து, கலவரம் வெடித்தது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 27 ஜூலை, 2022

எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்.. ஆர்ப்பாட்டத்தில் ஒரு மணி நேரமாக வெயிலில் நின்றதால்..

மாலை மலர் :   எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு. போராட்டத்தின்போது வெயிலால் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது வெயிலால் ஒரு மணி நேரம் நின்றபடி தொடர்ந்து பேசிய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அதிமுகவினர் அமர வைத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்.

பள்ளி மாணவர்களுக்கு ‘காலை சிற்றுண்டி’ பட்டியல் வெளியீடு.. அறுசுவை உணவு ‘மெனு !

பள்ளி மாணவர்களுக்கு ‘காலை சிற்றுண்டி’ பட்டியல் வெளியீடு.. அறுசுவை உணவு ‘மெனு’ இதோ !

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டதை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. "பசிப்பிணி மருத்துவர்"- என்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள காலை சிற்றுண்டித் திட்ட அரசாணையில், சர்.பிட்டி. தியாகராயர், காமராஜர், எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகியோர் இத்திட்டத்தை வளர்த்தெடுத்தது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

மாலைமலர் : :  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.

சிவகாசியில் 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை... போலீசார் விசாரணை!

நக்கீரன்  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சிவகாசியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிவகாசியில் அய்யம்பட்டி எனும் கிராமத்தில் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய நிலையில் பள்ளிச் சீருடையுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை போராட்டக்காரர் டேனிஸ் அலி துபாய்க்கு செல்லும் விமானத்தில் கைது

தினக்குரல்  : ஸ்ரீ லங்கன் விமானம் ஊடாக துபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டனிஸ் அலி என்கிற சிவில் செயற்பாட்டாளரே இவ்வாறு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தின் உள்ளே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
“எனக்கு எதிராகப் பயணத்தடை இருக்குமாக இருந்தால் விமானத்துக்குள் வருவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் வைத்து தன்னை கைது செய்திருக்கலாமே… கைது செய்வதற்கான ஆவணங்கள் இருந்தால் அதிகாரிகள் அதனைக் காண்பிக்க வேண்டும்.” எனவும் தான் கைது செய்யப்படும்போது அதிகாரிகளிடம் டனிஸ் அலி கோருவதையும் காணமுடிகிறது.

செவ்வாய், 26 ஜூலை, 2022

மாணவிகளுக்குத் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை"-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "குருநானக் கல்லூரியின் அறக்கட்டளை கடந்த 1971- ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.
குருநானக் கல்லூரி 50-வது ஆண்டு பொன்விழாவும் தி.மு..க. ஆட்சியில் தான் கொண்டாடப்படுகிறது. குருநானக் கல்வி நிறுவனம் தமிழக அரசுக்குப் பல நிலைகளில் பெரிதும் உதவியுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும், தொண்டு பாதிக்கப்படவில்லை.
கல்வி நிறுவனம் நடத்துவோர், தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும். மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது;

திமுக உட்பட 19 ராஜ்யசபா எம்பிக்கள் இடைநீக்கம்

zeenews.india.com - Shiva Murugesan  :     19 எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
 எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்க சஸ்பெண்ட் நடவடிக்கை -எதிர்க்கட்சிகள் போர்கொடி.
  4 எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அமர்வு முழுவதும் இடைநீக்கம்.
Parliament Monsoon Session: இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சுஷ்மிதா தேவ், மௌசம் நூர், டாக்டர் சாந்தனு சென், டோலா சென், சாந்தனு சென், நதிமல் ஹக், அபி ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் சாந்தா சேத்ரி ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ-எம்-ஐச் சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், இடதுசாரிகளைச் சேர்ந்த முகமது அப்துல்லா மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு .. மேலும் பலர் கவலைக்கிடம்

மாலை மலர் :  குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவு விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது.
இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
சுமார் 30 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்க முடிவு . மகிந்த உட்பட அனைவர்க்கும் அழைப்பு

ஐ பி சி : புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட திரு ரணில் விக்ரமசிங்க, பதவி ஏற்றபின் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விட்டுத்தார். .
நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

திங்கள், 25 ஜூலை, 2022

மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமி.. கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா உமர் தீன் - உத்தர பிரதேசம்

மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமி.. கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா.. உ.பி-யில் கொடூரம் !

கலைஞர் செய்திகள் -கே எல் ரேஷிமா : மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து சித்தப்பாவே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாமிலி என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர் தீன். இவர் கூலி தொழில் செய்யும் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அண்ணனுக்கு கைரு நிஷா என்ற 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
உமர் இருக்கும் தைரியத்தில், சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு அண்ணனும், அண்ணியும் வேலைக்கு செல்வர்.

திருவள்ளூர் மாணவி மரணம்!.. கள்ளக்குறிச்சியை தொடர்ந்து....

மின்னம்பலம் : திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
திருத்தணி தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி சரளா திருவள்ளூர் மாவட்டம் கிழச்சேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.  
பள்ளிக்கு சொந்தமான செயின்ட்-ஆன்ஸ் ஹோம் ஃபார் சில்ட்ரன் என்ற விடுதியில்தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென்று விடுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் மாணவியின் பெற்றோருக்கு, “காலை தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது பூச்சி கடித்து இறந்துவிட்டார்” என்று தொலைபேசி மூலம் பள்ளியில் இருந்து தகவல் வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்

மாலைமலர் : புதுடெல்லி: விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை.

சீனா-வின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி..!

GoodReturns Tamil :  சீனாவில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இப்போ 10%, பின்னாடி 90%. பெருங்களத்தூர் அருகே 2 & 3 BHK வீடுகள் @ 67 லட்சம்* முதல்
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது சீனாவில் வீடு விற்பனை வரலாறு காணாத விதமாக 60 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்துள்ளது.
சீனாவில் உள்ள 80 நகரங்களில் நடைபெற்று வந்த 200-க்கும் மேற்பட்ட முக்கிய கட்டுமானப் பணிகள் நின்றுள்ளன. வீடு வாங்க முன்வந்த வாடிக்கையாளர்கள் பலர் கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளுக்கு இனி தங்களால் தவணையைச் செலுத்த முடியாது என தெரிவித்தது ரியல் ஏஸ்டேட் நிறுவனங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கைக்கு 3-வது கட்ட நிவாரணப் பொருட்கள்! கனிமொழி எம்பி கையசைத்து அனுப்பி வைத்தார்

கனிமொழி கருணாநிதி எம்.பி., “பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மனிதாபிமான நோக்கத்துடன் உதவும் வகையில் ரூ.123 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப ஒன்றிய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி சென்னையை தொடர்ந்து 2-ஆம் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து ஏற்கனவே நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3-வது முறையாக நேற்று தூத்துக்குடியில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.123 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரைரூ.174 கோடிக்கு அதி கமானநிவாரணப்பொருட் கன் அனுப்பப்பட்டுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அடிப்படையில் தமிழர்கள் / மனிதர்கள் உலகில் எந்த மூலையில் அவதிப்பட்டாலும் தமிழினம் வேடிக்கை பார்க்காது.
இந்த இலட்சியத்தை கடைப்பிடிக்கும்,   தந்தை பெரியார் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.

குரங்கு அம்மை நோய் வேகமாக பரவுகிறது! உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

zeenews.india.com  : கொரோனாவை தொடர்ந்து,  குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. முதலில் கேரளாவில் நுழைந்த குரங்கு அம்மை, இப்போது தலைநகர் தில்லியையும் எட்டி விட்டது.  உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  குரங்கு அம்மை நோய்ப் பரவலை "உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தார். இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

அதிபர் ரணில் : மக்களின் போராட்டம் ஜூலை 14இல் வெற்றி .. தற்போது கிளர்ச்சியாளர்களே விரட்டியடிப்பு

samugammedia.com  : “கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக மக்கள் முன்னெடுத்த அமைதிவழிப் போராட்டம் கடந்த 14 ஆம் திகதி பெரு வெற்றியுடன் முடிவுக்கு வந்து விட்டது. அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே முன்னெடுக்கப்பட்டு வந்தன. அங்கு நின்றவர்கள் வன்முறையை விரும்பினார்கள். அதனால்தான் அவர்களை ஜனாதிபதி வளாகப் பகுதியிலிருந்து படையினரும் பொலிஸாரும் அகற்றியுள்ளனர்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமாக முன்னர் அமைச்சர்கள் சிலருடன், காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“காலிமுகத்திடல் போராட்டத்தை நான் ஆதரித்தேன். பிரதமராகப் பதவியேற்க முன்னரும், பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் அவர்களை ஆதரித்தேன். போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் என்னைச் சந்தித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்தேன்.

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் : "15 நாட்கள் தான் டைம்! விளக்கம் கொடுங்க.." அறநிலையத்துறை ..

Vigneshkumar  -  Oneindia Tamil  :  சிதம்பரம்: சிதம்பரம் கோயில் மீது பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக அறநிலையத் துறை முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இப்போ 10%, பின்னாடி 90%. பெருங்களத்தூர் அருகே 2 & 3 BHK வீடுகள் @ 67 லட்சம்* முதல்
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த சிறப்புக் குழு கடந்த மாதம் சிதம்பரம் கோயிலில் ஆய்வு நடத்த நேரடியாகச் சென்றது. இருப்பினும், சிறப்புக் குழு ஆய்வு நடத்தச் சிதம்பரம் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த ஜூலை 19ஆம் தேதி கடிதம் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தனர்.

வளர்ப்பு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்த எஸ்.பி நவநீத சர்மா

   maalaimalar : வளர்ப்பு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்த எஸ்.பி நவநீத சர்மா .- உத்தரவை ரத்து செய்து ஐ.ஜி. அதிரடி
• போலீஸ்காரர் ஆகாஷ், எஸ்.பி.யின் வீட்டில் இருந்த மின் சாதனங்களை சேதப்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
• போலீஸ்காரர் திருவனந்தபுரம் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் சர்மா.
இவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்கு ஆகாஷ் நியமிக்கப்பட்டார். சம்பவத்தன்று இவர் பணிக்கு சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யின் வளர்ப்பு நாயை குளிப்பாட்டுமாறு கூறினர். இதற்கு போலீஸ்காரர் மறுப்பு தெரிவித்தார்.
இது பற்றி வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்தனர். இதை அறிந்ததும் போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்யும்படி எஸ்.பி.உத்தரவிட்டார்.