சனி, 15 டிசம்பர், 2012

சட்டீஸ்கர் அரசு விழாவில் நடிகை கரினா கபூர் நடனம் 1.4 கோடி

சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விழாவில் பாலிவுட் நடிகை கரினா கபூர் நடனமாட ரூ. 1.4 கோடி செலவிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதன் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கரினா கபூரின் நடனம் இடம்பெற்றிருந்தது. இந்த விழாவில் அவர் ஆடுவதற்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ. 1.4 கோடி. வெறும் 8 நிமிடங்களே நடந்த இந்த நடனத்திற்கு ரூ. 1.4 கோடி செலவிடப்பட்டது

வீதிக்கு வந்தது ஜெனரேட்டர் power cut sale

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜெனரேட்டர் வாங்குவது பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் திருச்சியில் சாலையோரங்களில் வைத்து ஜெனரேட்டரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் சுமார் 14 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் முடங்கி விட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து, செய்வதறியாது திகைத்து வருகின்றனர். காவிரியில் நீர் திறந்து விடப்படாத நிலையில், போர்வெல் மற்றும் கிணறுகளில் உள்ள மின்மோட்டரை கூட இயக்க முடியாததால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

Mumbai பாலியல் பெண்களிடம் செல்லும் ஆண்களை கைது செய்யலாம்

 Adhyaan Suman celebrates raksha bandhan at Mumbai red light area
மும்பை, கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள சிம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் போலீசார் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதிரடி சோதனை நடத்தி 400 பெண்களை மீட்டனர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 124 பேரையும் அவர்கள் கைது செய்து விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இவர்களை கைது செய் தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க கோரி பிரபான்ஜன் தவே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் கன்வில்கர், தானுகா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறுகையில், “வாடிக்கையாளர்களை கைது செய்தது சரியா, தவறா என்பது, ஒவ்வொரு வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். பாலியல் தொழில் பெண்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை கைது செய்யலாம்Ó என்றனர். மேலும், வழக்கறிஞர் தவேக்கு 25,000 அபராதம் விதிக்கவும், அதை ஒரு வாரத்தில் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட் டனர். dinakaran.com

தனுஷ்கோடி யில் காற்றாலைகள்?

மின்வெட்டு பிரச்சி னைக்கு தீர்வு காணும் வகையில், கடல்பகுதி யில் காற்றாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசு திட்ட மிட்டுள்ளன. இந்நிலை யில் காற்றின் வேகத்தை கணக்கிட தனுஷ்கோடி யில் 100 மீட்டர் உயரத் தில் அதிநவீன கருவி 6 மாதத்தில் அமைக்கப் பட உள்ளது.
இந்தியாவில் 7,000 கி.மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பரப்பளவு உள்ளது. இதில் பெரும் பாலான இடங்களில் காற்றாலைகளை அமைக்கமுடியும். ஆனால், எங்கெல்லாம் காற்றாலை அமைக்க முடியும் என்பதை முத லில் கண்டறிய வேண் டும். காற்றின் வேக அளவு, எந்த திசையில் இறக்கைகள் அமைக்க லாம் போன்ற பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ளது. தமிழ் நாட்டில் தனுஷ்கோடி யில் 100 மீட்டர் உயரத் தில் அதிநவீன கருவி அமைக்கப்பட உள்ளது.

Jeyamohan: அஞ்சியும் அஞ்சவைத்தும் வாழ்க்கையை இழந்த

இயக்குநர் பரதனுடன் சேர்ந்து சினிமாக்களில் பணியாற்றிய நாட்களைப்பற்றி பேசும்போது பாராட்டுகளைக்கூட பரதன் தனக்கே உரிய முறையில்தான் வெளிப்படுத்துவார் என்று சொன்னார் இசையமைப்பாளர் ஜான்சன். ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றினால் ‘நல்லது…நீ செய்தது என்று சொல்ல முடியாது’ என்று சொல்வாராம் அவர். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கலந்த ஒரு வரி அது என்றார் ஜான்சன்
ஆனால் ஒருவன் தன்னால் செய்ய முடியக்கூடியதன் எல்லையைத் தாண்டிச் செல்வதை தான் அவர் சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். ஒழிமுறி என்ற படம் என்னை அத்தகைய ஒரு பரதவாக்கியத்தை நினைவுறுத்தியது. சினிமா என்னும் கலையின் இலக்கணத்தையும் அளவுகோல்களையும் கொண்டு வைத்து பார்த்தால் ஒழிமுறிக்கு பல குற்றங்களும் குறைவுகளும் இருக்கக்கூடும். ஆனால் ஒழிமுறியை பார்க்கும்போது நம் முன் நிறைவது சினிமாவுக்கு அப்பால் விரியும் ஒரு சமூகத்தின், அதன் மூன்று தலைமுறைகளின் சித்திரம்
பெண்களுக்கு முழு சொத்துரிமையும் தன் வீட்டிலேயே வாழ உரிமையும் இருந்த முதல் தலைமுறை. பெண் இன்னொரு வீட்டுக்குச் சென்று அங்கே அடிமையாக சுருங்கிவாழும் இரண்டாம் தலைமுறை. அவர்களின் வரலாறுகளை முன்வைக்க இயக்குநர் தேர்ந்தெடுத்து முன்வைக்கும் இன்றைய மூன்றாம்தலைமுறை. திறமையாக எழுதி இயக்கப்பட்ட இந்த படத்தில் அவை மூன்றும் நிரம்பியிருக்கின்றன www.jeyamohan.in/?p=33047

Punjab மனைவிகளை தவிக்க விட்டு ஓடும் கணவன்கள்

சண்டிகார்:பஞ்சாபில், மனைவிகளை தவிக்க விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்கு கிடுக்கிப்பிடி போடும் நடவடிக்கைகளை, மாநில அரசு தீவிரப் படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், சண்டிகாரை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள், சரப்ஜித் கவுர். 10 ஆண்டுகளுக்கு முன், சரப்ஜித்துக்கும், பஞ்சாபை சேர்ந்த, குர்பிரீத் என்பவருக்கும், மிக தடபுடலாக திருமணம் நடந்தது.இந்த திருமணத்துக்காக, சரப்ஜித்தின் தந்தை, தன் தகுதிக்கு அதிகமான பணத்தை, கடன் வாங்கி செலவழித்தார்.குர்பிரித், ஜலந்தரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே, இவர்களுக்கு, பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, பணியாற்றுவதற்காக, பிரிட்டனுக்கு செல்லப் போவதாக, குர்பிரித் தெரிவித்தார்.இதற்கு, சரப்ஜித் சம்மதம் தெரிவிக்கவே, குர்பிரித், பிரிட்டனுக்கு பறந்தார். இதற்கு பின், அவர், மீண்டும், பஞ்சாப்புக்கு திரும்பவே இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, "எனக்கும், சரப்ஜித்துக்கும் நடந்த திருமணம், சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. இதனால், என்னை எதுவும் செய்ய முடியாது'என, கூறி விட்டார்.இதையடுத்து, தன் கணவருக்கு எதிராக, பஞ்சாப் குடும்ப நல கோர்ட்டில், சரப்ஜித் வழக்கு தொடர்ந்து உள்ளார்.dinamalar.com/

2G 2ம் கட்ட ஏலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி எதிர்பார்ப்பு

புதுடில்லி :"இரண்டாம் கட்டமாக நடைபெறும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் , 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்' என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சமீபத்தில் நடந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு, 9,400 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. டில்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான், ஆகிய மண்டலங்களுக்கான, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான அடிப்படை விலை, அதிகமாக இருந்தது. இதை காரணம் காட்டி, ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.ஏலம் கோரப்படாத, அனைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும், புதிதாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, நிதியாண்டின் இறுதிக்குக்குள், மறு ஏலம் விடப்படும் என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏலம் கோரப்படாத டில்லி, ராஜஸ்தான், மும்பை, கர்நாடக ஆகிய மண்டலங்களுக்கான, அடிப்படை விலையை, 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.dinamalar.com/

நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவு

புதுடில்லி : நேரடி மானிய திட்டத்தை, ஜனவரி, 1ம் தேதி முதல் அமல்படுத்துவதற்குரிய ஆயத்த பணிகளை, போர்க் கால அடிப்படையில் துவக்கும்படி, அனைத்து அமைச்சகங்களையும்,பிரதமர் அலுவலகம் கேட்டு கொண்டு உள்ளது.
சுரண்டல்
பொது வினியோக திட்டம், முதியோர் ஓய்வூதிய பலன், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்ற பல திட்டங்களுக்காக, மத்திய அரசு, நிதியுதவி மற்றும் மானியம் வழங்குகிறது.ந்த பலன்கள், நேரடியாக பயனாளி களைச் சென்றடையாமல், மூன்றாம் நபர் வழியாக செல்வதால், சுரண்டல், ஏமாற்றுதல், ஊழல் போன்றவை ஏற்படுகின்றன.இந்த குறைபாடுகளைப் போக்க, "ஆதார்' தேசிய அடையாள அட்டை மூலம், பயனாளிகளின் வங்கி கணக்குக்கு, பணப் பலன்கள் நேரடியாக சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த, நேரடி மானிய திட்டம், அடுத்தாண்டு ஜனவரி, 1ம் தேதி முதல், 43 மாவட்டங்களில் அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. 
Nava Mayam - newdelhi,இந்தியா

முன்பு உள்ளாட்சி பதவிக்கு போட்டிபோட ஆட்கள் கிடைக்காது ... இப்போ உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க பல கோடி ரூபாய் செலவிடுகின்றனர்.... இது எல்லாமே மத்திய அரசின் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ரேசன் பொருட்கள் இவைகளால் வரும் கொள்ளை பணம்தான்... மக்களுக்கு போகாமல் நடுவில் இவர்கள் அடிக்கும் கொள்ளை அதிகம்... இப்படி நேரடியாக் பயனாளிகளின் பேங்க் அக்கவுண்ட் கு போவதால் இந்த இடைத்தரகர்கள் ஒழிவார்கள்...மக்கள் பணம் கொள்ளை போகாமல் இருக்கும்....http://www.dinamalar.com

வெள்ளி, 14 டிசம்பர், 2012

எம்மை சிந்திக்க விடாமல் எமக்காக சிந்திக்கும் Gurus

சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள் அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும் . உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன்  சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம்  சிக்குப்பட்டு விடுகிறார்கள்.
சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக  நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன.
சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே? குருமார்கள்  நிலைத்து நிற்பதே மக்களின்   அறியாமையினால்தான்.

ஆதிவாசிகள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல

கண்டதாரா அருவி
ரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய்  நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம்.  அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை.  அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.  அதன் பால் வெண்ணிற அருவி எண்ணூறு அடிகள் செங்குத்தாய் மின்னிப் பிரகாசிக்கும் வண்ண ஜாலங்களுடன் அமுதக் கலசமாம் பாறைக் கலயத்தில் பொழிகிறது.  சமவெளி நோக்கிய அதன் பயணத்தில் அது முதல் தங்கல். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கட்புலனாக்கவென்று தன் அகன்ற மார்பினை விரித்து நிற்கும் கருப்பும் சிவப்புமான பாறைப் பிணைப்புகள்.  காண்போர் நெஞ்சம் இனம்புரியாப் பேரின்பமும், பெரு மருட்சியும் எதிர்மோத விம்மி வெடிக்கும்.  கிட்டவொண்ணாப் பெரும்பேரு பெற்ற உவகையில் உணர்ச்சிக் குவியலால் மண்டை கனக்கும், புத்திளமை மீண்டது போல் மெய் சிலிர்க்கும், உடல் முறுக்கும்.  நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடிக்கும்.

சென்னை வடமாநிலத்தவர் அடித்து கொலை வாக்கிங் சென்றவர்கள் அதிர்ச்சி

சென்னை: மெரினா கடற்கரையில் வட மாநிலத்தவர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இன்று காலை வாக்கிங் சென்றவர்கள், உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினாவில் கொலை நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் தினமும் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும். காலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் திரண்டிருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த ஆங்காங்கே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். குதிரைப்படை போலீசாரும் ரோந்து சுற்றி வருவார்கள்.

இன்று காலை ஏராளமானோர் மெரினாவுக்கு வந்திருந்தனர். வழக்கம்போல சிலர் நடை பயிற்சியும் சிலர் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர். துப்பணித்துறைக்கு சொந்தமான குடிநீர் வடிகால் வாரியம் எதிரே 400 மீட்டர் தூரத்தில் கடற்கரை மணல் பரப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா innova கார் பரிசு 250 மதிமுகவினரை அதிமுகவுக்கு

மதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்து கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ள நாஞ்சில் சம்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவரை அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆக்கினார். இந்நிலையில் சம்பத் மதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்கள் 250 பேரை அதிமுகவில் சேர்க்க இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக்கத்திற்கு அழைத்து வந்தார். இன்று பகல் 12.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அந்த 250 பேரும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது முதல்வர் நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். சம்பத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவியாக இந்த கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

stephen hawking காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’

எனக்குப் பலவீனம் இருக்கிறது என புலம்புவதால் உண்மையில் எதையும் சாதிக்க முடியாது. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். இயற்பியலுக்காக ஏகப்பட்ட பங்களிப்பைச் செய்தவர் அவர். அவருடைய ‘த பிரீஃப் ஹிஸ் டரி ஆஃப் டைம்’ நூல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ‘அதிகம் விற்பனையாகும்’ புத்தகமாக இருந்தது.
தமிழில் ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என வெளியான இந்த நூல் இன்றும் உலகின் சிறந்த நூல் என பாராட்டப்படுகிறது.இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருப்பவர். சக்கர நாற்காலியில் தான் வாழ்க்கை. உடல் பாகங்கள் ஏதும் அசையாது பேசுவதற்குக் கூட ஒரு கணனி வேண்டும் எனும் நிலை.
ஆனாலும் இவருடைய சாதனைகளின் தாகம் மட்டும் குறையவே இல்லை. இந்த நோய் இருப்பதனால் முழு நேரத்தையும் சிந்தனையிலும், வாசிப்பிலும் செலவிடுகிறேன் என்கிறார் இவர். தன்னம்பிக்கையாக பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸிடம் அந்த மனம் இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.

வித்யாபாலன் தமிழ் முறைப்படி மும்பையில் திருமணம்

சில்க் ஸ்மிதா வேடத்தில் 'தி டர்ட்டி பிக்சர்' இந்தி படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யாபாலன். இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. பிரனீதா', 'பா', 'கஹானி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் வந்த 'உருமி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். வித்யாபாலனுக்கும் 'யு' டி.வி. தலைமை நிர்வாகி சித்தார்த்ராய் கபூருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதற்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதையடுத்து வித்யாபாலன் - சித்தார்த்ராய் கபூர் திருமணம் இன்று காலை மும்பையில் உள்ள சுப்பிரமன்யசாமி கோவிலில் நடந்தது. வித்யாபாலன் காஞ்சீபுரத்தில் இருந்து வாங்கிய பட்டுச்சேலை அணிந்து இருந்தார். மணமகன் பட்டு குர்தா அணிந்து இருந்தார்.  தமிழ் முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. வித்யாபாலனுக்கு சித்தார்த் ராய்கபூர், தாலி கட்டினார்.http://www.nakkheeran.in/

London வெள்ளை இனத்தவர் சிறுபான்மை

லண்டனில் பிரிட்டிஷ் வெள்ளை இனத்தவர் சிறுபான்மை பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெள்ளை இனத்தவர் வரலாற்றில் முதல் முறையாக சிறுபான்மையினராக பதிவாகியுள்ளனர். 
2011 சனத்தொகை கணக்கெடுப்பின்படி லண்டனில் இருக்கும் 45 வீதமானோரே தம்மை ‘பிரிட்டன் வெள்ளையினர்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். 2011 சனத்தொகை கணக்கெடுப்பில் லண்டனில் வெள்ளையினத்தவர் 58 வீதமாக இருந்தமை குறப்பிடத்தகக்கது. லண்டனில் வாழ்பவர்களில் 37 வீதமானோர் பிரிட்டனுக்கு வெளியில் பிறந்தவர்கள் என்பதோடு அதிலும் 24 வீதமானோர் பிரிட்டனைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனில் குடியேற்றவாசிகளின் அதிகரிப்பை வெளிக்காட்டுகிறது என குடியேற்ற உரிமைகளுக்கான இணைப்பகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார். எனினும் 2011 சனத் தொகை கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மொத்த சனத்தொகையில் 86 வீதமானோர் (48.2 மில்லியன்) வெள்ளையினத்தவராவர். அதிலும் 80 வீதமானவர்கள் (45.1 மில்லியன்) பிரிட்டன் வெள்ளையினத்தவராவர். இதில் லண்டனில் வசிக்கும் 8.2 மில்லியன் பேரில் 3.7 மில்லியன் பேரே பிரிட்டன் வெள்ளையினத்தவராவர்.

விக்கி லீக்ஸ்' பெயரில் அரசியல் கட்சி தேர்தலுக்கு தயாராகிறார் அசாஞ்சே

சிட்னி, டிச. 13-பல் வேறு நாட்டு அரசுகளின் இணையதளத்தில் உள்ள ரகசிய செய்தி களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி பர பரப்பை ஏற்படுத்தியவர் 'விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. ஆஸ் திரேலியாவை சேர்ந்த இவர் மீது ஸ்வீடன் நாட் டில் பாலியல் குற்றம் தொடர்புடைய வழக்கு நடந்து வருவதால், ஈக் வாடர் நாட்டில் தஞ்ச மடைந்து வசித்து வரு கின்றார்.
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரே லியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப் பினர் பதவிக்கு போட்டி யிட உள்ளதாக ஜுலி யன் அசாஞ்சே அறிவித் துள்ளார். விக்கிலீக்ஸ் என்ற பெயரில் ஆஸ்தி ரேலியாவில் அரசியல் கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

Bus மாணவர்கள் நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, வேர்வை நாற்றத்தில்


bus
டந்த திங்கள்கிழமை சென்னை பெருங்குடி அருகே நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் துயரமான சம்பவத்தின் அதிர்ச்சிக் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.
இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று (12-12-12) தமிழக அரசின் விளக்கத்திற்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது.http://mathimaran.wordpress.com/

இனி காவிரி படுகை அம்பானி, வீரப்ப மொய்லி கையில்

வினவு.com   $1 பில்லியன் (சுமார் ரூ 5,500 கோடி) அபராதம் விதித்த அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை மாற்றி விட்டு  வீரப்ப மொய்லியை அமைச்சராக்கினார் மன்மோகன் சிங். 2012-13 நிதியாண்டில் $1.72  பில்லியனும், 2013-14ல் $2.1 பில்லியனும் அபராதம் விதிக்க வேண்டும் என்று ஜெய்பால் ரெட்டி பரிந்துரைத்திருந்தார்.
Activist-turned-politician Arvind Kejriwal on Monday sought an explanation from the central government as to why S Jaipal Reddy was shifted from the Ministry of Petroleum and Natural Gas.
"Jaipal Reddy is considered to be an honest minister and was removed.தலைக்காவிரி கர்நாடாக கையில் சிக்கிவிட்டதைப் போல காவிரியின் படுகை அம்பானி கையில் போய்விட்டது. காவிரி-பாலாறு படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்-எரிவாயு இருப்பை மதிப்பிடும் பணியை பெட்ரோலிய அமைச்சகம் ரிலையன்சிடம் கொடுத்திருக்கிறது.
இது தொடர்பான ஒப்புதல் கடிதத்தை பெட்ரோலிய அமைச்சகம் சென்ற வெள்ளிக் கிழமை (டிசம்பர் 7, 2012) ரிலையன்ஸூக்கு அனுப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் காவிரி பாலாறு படுகையில் எண்ணெய் கண்டுபிடிப்பை மதிப்பிட்டு, உற்பத்திக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்கும்.

நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!

துரை மாவட்டம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம், வயது 80. கடந்த செவ்வாய் முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நாவிதர் சமூகத்தை சேர்ந்த இவர் ஊரில் ஒரு சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார். சிறு கிராமம் என்பதால் ஆண்டுக் கூலி முறையிலும் கடை தொடர்ந்திருக்கிறது.  வேறு வேலைக்கு சென்று விட்ட காரணத்தால் மகனை இத்தொழிலில் அவர் ஈடுபடுத்தவில்லை.
த‌னக்கு வயதாகி விட்ட காரணத்தால் இனி சலூன் நடத்த இயலாது என ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் தெரிவித்தார் சிதம்பரம். அவரது மகனை அத்தொழிலில் ஈடுபடுத்துமாறு ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகன் மறுத்து விடவே முதியவரையே மீண்டும் வேலையை துவங்குமாறு வலியுறுத்தி உள்ளனர். தன்னால் இயலவில்லை, வயதாகி விட்டது என அவர் கூறியவுடன் ஊரைக் காலி செய்யுமாறும், ஊரில் சவரத் தொழிலாளி ஒருவர் இருப்பதால் தாங்கள் வர முடியாது என பிற சவரத் தொழிலாளிகள் தயங்குவதாகவும் தெரிவித்தனர். இதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஊர் விலக்கம் செய்யப்பட்டார் சிதம்பரம்.

அம்மா புகழ்...ரஜினி புகழ் போதிய கழிப்பறை வசதி கூட இல்லை

சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது , அதை வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது.முதல்வரின் புகழ் பாடும் நிகழ்ச்சியாகவே இது நடாத்தப்பட்டது. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ் கேட்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் போதிய கழிப்பறை வசதிகூட இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல நடாத்தப்பட்டனர், முன்பெல்லாம்  இதை விட அதிகமான அரச நியமனங்கள் எல்லாம் சத்தம் போடாமல் வீடு தேடி சென்றனவே , ஒரு பக்கம் அம்மா புகழ் மறுபக்கம் ரஜினி புகழ் சென்னை வாசிகளுக்கு ஜல/ புகழ் தோஷம் பிடித்துள்ளது ,
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது.< தொடர்ந்து, இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். 50 பேருக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு @பாதுமான கழிப்பிட வசதிகள் இல்லை.
ஆங்காங்@க இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர்.

ADMK பொதுக்கூட்டம் விளக்கு அலங்காரத்துக்கு "கொக்கி' போட்டு மின் திருட்டு

மின்வாரிய இணைப்பிலிருந்து மின்சாரத்தை திருடி, நாஞ்சில் சம்பத் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை, அ.தி.மு.க.,வினர் நடத்தியது, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில், பொதுக்கூட்டம் நடந்தது. ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் முதல் கூட்டம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
அரசின் சாதனைகளைப் போற்றும் பதாகைகள், அலங்கார விளக்குகள், பொதுக்கூட்ட வரவேற்பு பேனர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முதல்வரின் உருவ படம், இரட்டை இலை சின்னம் மற்றும் வண்ண, வண்ண விளக்குகள் கொண்ட தோரணங்கள் என, மயிலை மாங்கொல்லை திடலை, அ.தி.மு.க.,வினர் அமர்க்களப்படுத்தி இருந்தனர்.
கச்சேரி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில், ஏராளமான அலங்கார விளக்குகளை அமைத்திருந்தனர். மயிலை மாங்கொல்லை திடலுக்கு வரும் வழிகளில், "டியூப்' லைட்டுகளுடன், கட்சிக் கொடியையும் பறக்கவிட்டிருந்தனர்.
கூட்டத்திற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே, அனைத்து அலங்கார விளக்குகளும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.    
  s.maria alphonse pandian - mettur,இந்தியா
கொக்கி போட்டு வளைக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத் என்பதாலேயே கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....

வியாழன், 13 டிசம்பர், 2012

Lisa Ray திருமண புடவையை ஏலம் விடுகிறார்

மும்பை: மாடலும், இந்தி நடிகையுமான லிசா ரே தான் திருமணத்தன்று அணிந்திருந்த புடவையை ஏலம் விட்டு அந்த பணத்தை தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த உள்ளார். மாடலும், பாலிவுட் நடிகையுமான லிசா ரே(40) கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி வங்கி அதிகாரியான ஜேசன் டெனி என்பவரை மணந்தார். திருமணத்தன்று சத்ய பால் டிசைனர் சேலையை அணிந்திருந்தார். இந்நிலையில் தான் திருமணத்தன்று அணிந்திருந்த புடவையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தர்மகாரியங்களுக்கு பயன்படுத்தப் போவதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சேலை ஆன்லைனில் சத்ய பாலின் பேஸ்புக் பக்கத்தில் ஏலம் விடப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி லிசாவுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு அவர் உரிய சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லிசா இந்திய அப்பாவுக்கும், போலந்தைச் சேர்ந்த அம்மாவுக்கும் கனடாவில் பிறந்தவர்.

Gujarat 12.12.12ல் ஒரே மருத்தவமனையில் பிறந்த 12 குழந்தைகள்!

12.12.2012ந் தேதியான புதன்கிழமை குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 12 தம்பதிகளுக்கு 12 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பெற்றோர் இந்த நாளை அபூர்வ நாளாக கருதி மகிழ்ச்சி அடைந்த அவர்கள், மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பார்வவையாளர்களும் அந்த குழந்தைகளை காண ஆர்வம் காட்டினர். பெற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சரிதா மீண்டும் திரையில் தங்கையை போல் வர ஆசை


நடிகை சரிதா ரொம்பவும்  வெயிட்போட்டு ஃபீல்ட விட்டு ஒதுங்கிப்போனாரா?. இதுக்கிடைல அவர நடிக்கறதுக்கு யாரும் கூப்பிடல.. இந்த கேப்ல அவரோட சிஸ்டர் விஜி  நடிச்ச படம்  ஆரோகணம் வெளியாகி அவர் நல்ல பேர் எடுத்திட்டார் . பட்ஜெட்ல எடுத்த படம்னாலும் பேர சம்பாதிச்சி கொடுத்துருக்காம். இத பாத்ததும் இன்ஸ்பைர் ஆகி  மறுபடியும் நடிக்க மீண்டும் ஆசை வந்து . கொஞ்சமா வெயிட்ட குறைச்சவர் மல்லுவுட்லயும், கோலிவுட்லயும் தலா ஒரு படம் நடிக்க ஒப்புக்கிட்டிருக்காராம்... சரிதா மீண்டும் திரையில் தங்கையை போல் வர ஆசை 

அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !

vinavu.com அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயலுகிறது. அரியானா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள 19 பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மீது நடத்தப்பட்டவை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த 15 வழக்குகளில் பெரும்பாலானவை ஆதிக்க சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட கும்பல் பாலியல் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்குகளில் ஒன்றிரண்டில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்டு, குற்றமிழைத்த ஆதிக்க சாதிவெறியர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.  இதுவும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் போராடிய பிறகுதான் நடந்திருக்கிறது.

ரஜினி வியாதி தமிழகத்தின் சுயமரியாதைக்கு சவால்

ரஜினி-பால்ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். அதற்கு ஆதாரமாக பாபா படம் வெளியான போது திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த  கதையை இங்கு காலப்பொருத்தம் கருதி பதிவு செய்கிறோம்.

செயற்குழுவில் அழகிரியின் ஆவேசம் தொடருமா ?

சென்னையில் இன்று கூடும், தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்க முடிவு செ#துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், மதுரையில் ஆவேசம் வெளிப்படுத்திய அழகிரி, செயற்குழுவிலும் அதை தொடருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழுக் கூட்டம் கருணாநிதி தலைமையில், இன்று காலை, 10:00 மணிக்கு, கூடுகிறது.தமிழகத்தில் நிலவும், 16 மணி நேரம் மின்வெட்டு பிரச்னையை, தீர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறிய, மாநில அரசைக் கண்டித்து, மாவட்ட வாரியாக, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டம் அல்லது மனித சங்கிலி பேரணியை நடத்துவது தொடர்பாக, முடிவெடுக்கப்படவுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.http://www.dinamalar.com/

கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன் ! நாஞ்சில் சம்பத் வசனம்

சென்னை: ""கல்லறைக்குச் செல்லும் வரை, அ.தி.மு.க.,வில் நீடிப்பேன்,'' என, நாஞ்சில் சம்பத் பேசினார். அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில்,  மாங்கொல்லை திடலில், நேற்று நடைபெற்றது.
இதில், சம்பத் பேசியதாவது: ஒரு காலை இழந்தவன், இன்னொரு காலை நேசிப்பதைப் போல, நான் அ.தி.மு.க.,வை நேசிக்கிறேன். ஏற்கனவே இருந்த இயக்கத்தில் கிடைத்த கசப்புகளை, கசக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறேன். இனி, அந்த இயக்கத்தைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ, விமர்சிக்க மாட்டேன். அ.தி.மு.க., சிறப்புகளைப் பற்றியும், இந்த ஆட்சிக்கு கருணாநிதி கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். கருணாநிதி, இந்த ஆட்சிக்கு தோள் கொடுக்க முடியாவிட்டாலும், தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும். காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்றவற்றில், தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், துரோகத்தை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் இன்று நிலவும், மின் வெட்டுக்கு காரணம், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சி தான். மத்திய அரசிடம் உபரியாக இருக்கும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல், தடை செய்கிறார்.    http://www.dinamalar.com/
வாசகன் - Bangalore,இந்தியா

வாசகன் மதிமுக வில் வைகோவால் கொடுக்க முடியாத ஒன்றை இங்கே இவர் பெறலாம். பணம். மற்றபடி அங்கீகாரமாவது அதிமுக விலாவது. வைகோ கொடுத்த மரியாதையில் பாதி கூட அம்மா தர மாட்டார்.
ranjani - san diego,யூ.எஸ்.ஏ

ranjani எப்பொழுது கல்லறை செல்லலாம் என முடிவு செய்துள்ளீர்கள் என்றும் தெரிவித்தால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

6.75 கோடி மோசடி :கலாநிதி மீது போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை,: சினிமா இயக்குனர், தியேட்டர் உரிமையாளர்களிடம், 6.75 கோடி ரூபாய்க்கு மேல், பண மோசடி செய்தது தொடர்பாக, "சன்' குழும தலைவர் கலாநிதி, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கடந்த சில தினங்களுக்கு முன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் ஒன்றை அளித்தார். அதன் விவரம்:
"எந்திரன்' படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வினியோகிக்கும் உரிமை வழங்குவதற்காக, 6.75 கோடி ரூபாயை, சன் குழுமத்தினர் வாங்கினர். ஆனால், எங்களுக்கு வினி@யாக உரிமை வழங்கப்படவில்லை.எங்களிடம் வாங்கிய பணத்தில், 2.75 கோடி ரூபாயை, திருப்பி தந்துவிட்டனர். மீதமுள்ள, 4 கோடி ரூபாயை தராமல், ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு, "சன் டிவி' நிறுவனத்திற்கு சென்ற போது, கலாநிதி தூண்டுதலின் பேரில், மேலாளர்கள் ரமேஷ், கண்ணன், செம்பியன் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.அதுபோல், "காவலன்' படத்திற்காக, "சேட்டிலைட்' உரிமம் வழங்கியது தொடர்பாக, 2.75 கோடி ரூபாயை பெற்றனர். அந்த, பணத்தை கோர்ட்டில் கட்டி விட்டதாகவும் தெரிவித்து, பணத்தை தர மறுக்கின்றனர்.இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.

புதன், 12 டிசம்பர், 2012

ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன

அண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்?? நான் பலவற்றையும் வெளியே பேச முடியாது

அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை சென்ற ஆண்டு தொடர்ந்து நடத்தினார். அதன் பின்னணியில் இருந்து, கூட்டங்களை நிர்வகித்து, பணப் பரிமாற்றத்தைக் கவனித்துக்கொண்டதில் பெரும் பங்கு ஆற்றியவர் அர்விந்த் கெஜ்ரிவால்/மனீஷ் சிசோதியா ஆகியோர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஜன் லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் கெஜ்ரிவாலும் போராடினர். பின்னர் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைக் கலைத்துவிட்டு நான் என் வழி, நீ உன் வழி என்று இருவரும் பிரிந்துவிட்டனர். அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அண்ணா ஹசாரே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்.   இவிங்க ரெண்டு பேர்வழிகளும்  ஓவரா பேசும்போதே ஸ்பெலிங் மிஸ்டேக் ஆவறது  உத்துப்பார்த்தால் RSS ஓட்டை நன்னாவே தெரியறது ,,,, http://www.badriseshadri.in/

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியாவிட்டால் என்ன ஆகும்?
2013 செப்டெம்பர் 11 இல் உலகத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்கும்.
* * *
2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால்,  சற்று காமெடியாகவே ஆராய்வோம்.
ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு அறிக்கை விட்டுள்ளது. உலக அழிவு முன்னோடிகளை கலாய்க்க முன்னர் அதையும் பார்த்து விடுவோம்.http://www.venkkayam.com/

படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து 'டிஸ்மிஸ்': தமிழக அரசு அதிரடி

சென்னை: பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.http://tamil.oneindia.in/

விஸ்வரூபத்தை கேபிள் டிவியில் இலவசமாக ஒளிபரப்புவோம்!' - கமலுக்கு ஒரு எச்சரிக்கை

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. கேபிள் டி.வி. தொழிலை ஒழிக்க முற்படுவோருக்கு மத்திய அரசு துணை போனாலும் டி.டி.எச். 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பதை தனது கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கும் உலக நாயகனுக்கு உளமார்ந்த நன்றியை தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணம் குறைந்த விலை நிறைந்த சேவை என்ற தாரக மந்திரத்தை தந்து கேபிள் டி.வி. தொழிலை தமிழகத்தில் தழைந்தோங்க வழிகாட்டி நிற்கும் முதல்-அமைச்சரின் சீரிய சிந்தனையே ஆகும்.http://tamil.oneindia.in/

True HERO Traffic Ramasamiy குறைந்தபட்சம் தவறுக்கு எதிரா ஒரு குரல்

வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட்; அகலக் கறுப்புக் கண்ணாடி; சட்டைப் பாக்கெட்டுகளில் கத்தைகத்தையாகப் பேப்பர்கள்; ஆறேழு பேனாக்கள்; கையில் ஒரு விசில்; பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கேமரா; எந் நேரமும் பாதுகாப்புக்கு ஏ.கே-47 இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு காவலர் என வீதிகளில் கூட்டத்தில் ஒருவராக உலவுகிற இவர்... ‘டிராஃபிக்’ ராமசாமி!‘‘அதிகாலையில் ஏழு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். பஸ்லதான் போகணும். கூட்டம் நெருக்கியடிக்கும். எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லே, ஆனா, எனக்குப் பாதுகாப்புக்குன்னு இந்தத் துப்பாக்கியை வெச்சுக்கிட்டு என்னோடவே பஸ்ல வர்ற போலீஸ் தம்பிங்க தான் பாவம். கோடம்பாக் கத்தில் இருந்து கிளம்பினா, பஸ் லிபர்டியைத் தாண்டு றதுக்குள்ளவே நெருக்கியடிச்சு டிராஃபிக் முட்டிக்கும். உடனே பஸ்ல இருந்து இறங்கி, ரோட்ல டிராஃபிக்கை ஒழுங்குபண்ண ஆரம்பிச்சுடுவேன். தம்பிக்குத் தான் சிரமம், ஏ.கே. 47 துப் பாக்கியை வெச்சுக்கிட்டு என் பின்னாலயே ஓடி வரும்’’ என்று தன் பாதுகாவலரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் ராமசாமி.‘‘பி.அண்ட்.சி. மில்லில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வெளியில் வந்த பிறகு, தினமும் ரோட்டில்தான் எனக்கு வேலை.http://trafficramaswamy.blogspot.com/

ரஜினியின் அலப்பறை தாங்க முடியல்ல .கந்த சஷ்டி கவசம் போல் ரஜினி படப்பாடல்கள்

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லா இடங்களிலும் அவரின் படப்பாடல்கள் கந்த சஷ்டி கவசம்போல் அலறிக்கொண்டு இருக்கின்றது. தமிழனுக்கு ஹீரோ வொர்ஷிப் மிக மிக அதிகம். இது ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடுதான். சினிமாவிலோ அரசியலிலோ யாராவது அவர்களின் மனங்கவர்ந்து விட்டால் பின் என்ன ஒரே காவடி ஆட்டம்தான். சுயமாக சிந்திக்க தெரியாத கூட்டம் வேறு என்னதான் செய்யும்.
எல்லோரும் சாதாரண மனிதர்களே. இவர்கள் கொண்டாடும் இந்த பெரிய மனிதர்கள அனேகமாக சொந்த வாழ்வில் மிகவும் கேவலமான சுய நலமிகளாக இருக்கிறார்கள். தங்கள் திரைப்படங்களுக்கு இலவச விளம்பரம் செய்யும் ரசிகர் பட்டாளத்தை அப்படியே முட்டாள்களாக வைத்திருப்பார்கள் ஆனால் அந்த களவு தெரிந்து விடக்கூடாது என்று சதா இரவல் வாங்கிய தத்துவ கருத்துக்களை பொழிந்து தள்ளுவார்கள். இந்த மாதிரி ஹீரோ பக்தியை திறமையாக தக்க வைத்துகொள்ளும் ஒரு நடிகனை விட அவனை கடவுளாக என்னும் முட்டாள் ரசிகனைக் நினைத்தால் என்ன செய்வது சிலர் சில நல்ல காரியங்களை சத்தம் போடாமல் செய்கிறார்கள் அவர்களை இந்த தமிழ் சமுகம் கண்டு கொள்வதே இல்லை.  உதாரணமாக Traffic Ramasamy என்கின்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் தனி நபராக நின்று எத்தனையோ பொது நல வழக்குகள் மூலம் சமுகத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார் இந்த பொது காரியங்களுக்காக அவர் இழந்தது சொல்லி மாளாது சென்னையில் அவரை தெரியாத வக்கீல்களோ அரசியல் வாதிகளோ இருக்க முடியாது சென்னையில் பொது மக்களை பாதிக்கும் எத்தனையோ விடயங்களில் மக்களுக்காக சொந்த செலவில் நீதிமன்ற படி ஏறியவர் இந்த சினிமா நடிகன் எவனாவது இதுபோன்ற நல்ல செயல்களுக்கு உதவியாவது செய்திருக்கின்றான?

விஜயகாந்த்தை திமுக தேடுவதால், ஜெயலலிதாவை சந்திக்கிறார் வடிவேலு?

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் நேரில் சந்திக்கவுள்ளார் வைகைப் புயல் வடிவேலு என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு வடிவேலு கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தடாலடியாக திமுகவுக்கு ஆதரவாக மாறினார் வடிவேலு. தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராக போய் விஜயகாந்த்தை கடுமயாக தாக்கிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கு ஊரெங்கும் மகத்தான கூட்டமும் கூடியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் திமுக படு தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.http://tamil.oneindia.in/

திருமணத்திற்கு மதம் மாறிக் கொள்வது சட்டப்படி செல்லாது கேரள உயர்நீதிமன்றம்

கொல்லம்: திருமணத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்காக, திருமணத்திற்கு சற்று முன் மதம் மாறிக் கொள்வது சட்டப்படி செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைஜு. 24 வயதான இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், எனது மனைவி அஸ்வதி ரவீந்திரனை, அவரது தந்தையும், தாய்மாமனும் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

சினிமா நடிகனின் Birthday கொண்டாடும் தமிழன்

ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்திருப்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நகரில் திரும்பிய பக்கமெங்கும் ப்ளக்ஸ் பேனர்கள் களை கட்டியுள்ளன. ரஜினி ரசிகர்கள் கோவில்களில் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் சிறப்பு அர்ச்சனைகளை செய்து வருகின்றனர்."என் வழி தனி வழி".... , "நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"..... இவை நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள். இவைதான் ரஜினி ரசிகர்களின் தாரக மந்திரங்கள்t குடும்பத்தினரின் பிறந்தநாளை, திருமணநாளை நினைவு வைத்திருப்பார்களோ இல்லையோ தங்கள் தலைவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் நாளை நினைவு வைத்துக்கொண்டு கோவில்களில் சிறப்பு அர்ச்சனையும், பால்குடமும் எடுத்து கொண்டாடி விடுவார்கள் ரசிகர்கள்.

Ravi Shankar சிதார் மேதை ரவி சங்கர் மரணம்

டெல்லி: சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் காலமானார். அவருக்கு வயது 92.
 Sitar Maestro Pandit Ravi Shankar Passes Away சிதார் மேதை பண்டிட் ரவி சங்கருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து அமெரிக்காவின் லா ஜோல்லாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. அவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நோரா ஜோன்ஸ், அனோஷ்கா சங்கர் ஆகிய மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருமே இசைத்துறையில் பிரபலமாக உள்ளனர்.
இந்திய இசையை மேற்கத்திய உலகிற்கு கொண்டு சென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இறுதி காலம் வரை அவர் இசையுலகில் ஆர்வமாக இருந்தார். ஏற்கனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அவருடைய மகள் அனோஷ்கா சங்கரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.http://tamil.oneindia.in/   Rare photo of Ravi Shankar and George Harrison

தமிழகத்தில் கால் பதிக்கும் வால்மார்ட்..

சென்னை: தமிழகத்தில் கால்பதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை எதிர்த்து டிசம்பர் 26ம் தேதி சென்னை அண்ணாநகர் வால்மார்ட் அலுவலம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது கடைகளைத் திறப்பதற்கு முயற்சிகள் செய்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் திருவேற்காடு நகராட்சி பள்ளிக்குப்பத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடி அளவில் வால்மார்ட் நிறுவனத்திற்காக சேமிப்புக்கிடங்கு கட்டப்படுவதாகவும் அண்ணா நகரில் மார்க்கெட்டிங் அலுவலகம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. oneindia.in

மலலா உலக குழந்தைகளின் கல்வி முன் மாதிரி

பாக்: மலலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம்

இஸ்லாமாபாத்.டிச.11 -தலிபான்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலலா. தற்போது இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, இங்கிலாந்து சென்று அந்த சிறுமியை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தார். மலலாதான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தீர்மானம் ஒருமனதாக பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது

ஆனந்த விகடன் ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதாம்

பத்திரிகையாளர் ஞாநி அவர்களுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கார். 
முக்கியமான அறிவிப்பு இது:தங்கள் நிறுவன ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதென்று ஆனந்த விகடன் குழும நிர்வாகம் அவர்களுக்கு அண்மையில் ஒரு விதியைப் பிறப்பித்திருப்பதாக் அறிகிறேன். அதன் பின்னர் வழக்கமாக இங்கே அதிகம் உலவும் சில விகடன் ஆசிரியர் குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். இந்த விதி தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அத்து மீறல் என்பதும் இதைப் பிறப்பிக்க விகடன் குழுமத்துக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என்பதே என் கருத்து. தங்கள் இதழில் வெளியாகும் விஷயங்களையே இது பத்திரிகையின் கருத்தல்ல என்று நீதிமனறத்தில் சொல்லி நழுவக்கூடிய பத்திரிகைகள் , தங்கள் ஊழியர்கள் வலை தளங்களில் சொல்லும் கருத்துகள் பத்திரிகையின் கருத்துகள் என்று கருதப்பட்டுவிடும் என்று சாக்கு சொல்வது அபத்தமானது; அநீதியானது. பதுங்கியிருக்கும் அனைத்து விகடன் ஆசிரியர் குழுவினரையும் திரும்ப வந்து வழக்கம் போல இங்கே இயங்கும்படி வேண்டுகிறேன். விகடன் நிர்வாகம் போட்டிருக்கும் விதி நீதிமன்றத்துக்குச் சென்றால் அடிபட்டுவிடும். அதற்கு அஞ்சவேண்டாம்.

ஊழல் ராணியும் - மலை முழுங்கி மகாதேவனும்

பேரம் படிந்தது நாடகம் முடிந்தது
 காங்கிரஸ். தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க. வி.சி. தா.பாண்டியன், நெடுமாறன், சீமான்……..உள்ளிட்டோர் கிரானைட் ஊழலில் மவுனிப்பதன் மர்மம் — செஞ்சோற்றுக் கடனா? 
 கிரானைட் மெகா கொள்ளை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற பிரசுரம்!
கடந்த 7 மாதங்களாக கிரானைட் மாபியா பி.ஆர்.பி –  கும்பலுக்கு எதிராக ஊழல் ராணி ஜெயா நடத்தி வந்த மெகா சீரியலின் இறுதிக்காட்சி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஜெயா – சசி கும்பல் – பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்கள் – அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் இணைந்து ஊழல் எதிர்ப்பு மெகா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஒலிம்பஸ்,மதுரா.சிந்து கிரானைட் முதலாளிகள் செல்வராஜ்-ரபீக் ஆகியோருக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழகமக்கள் அனைவரும் கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்களை தண்டிக்கும் நோக்கத்துடன் ஜெ அரசு – மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படவில்லை – சில பேரங்களை முன்வைத்துத்தான் இக்கண்துடைப்பு நடவடிக்கை என்பது தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.http://www.vinavu.com/

லண்டனில் கர்நாடக நர்ஸ் மர்ம மரணம் ! கொலையா? தற்கொலையா ?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தவர் ஜெசிந்தா சல்தானா (46). இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை ஜெசிந்தா கிங் எட்வர்ட் மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது, ஆஸ்திரேலிய ரேடியோ ஜாக்கிகள் 2 பேர், பரபரப்பு செய்திக்காக ராணி எலிசபத் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் மிமிக்ரி செய்து பேசி, கேத் மிடில்டனுக்கு அளித்த மருத்துவ விவரங்களை பெற்று ஒலிபரப்பினர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அருகில் நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். கொலையா ?தற்கொலையா? http://www.tamilmurasu.org/index.asp

செவ்வாய், 11 டிசம்பர், 2012

DTH கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை மினிமம் கேரண்டி

 இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.
விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,
இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.
“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.

Maruthy..Hyundaii.. லாரி ஓட்டுநர்களின் கதை இது.

இந்தியாவின் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தாலும் நம்மோடு பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் முந்திச் செல்வதற்காக அவ்வப்போது காற்றைக் கிழித்துக் கொண்டு சர் சர் என்று பாயும் பல கார்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சென்னையில் மட்டும் ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யு, லான்சர், ஸ்கோடா, ரெனால்ட் நிசான், மகிந்த்ரா எனப் பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில், பணி புரியும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து முன்னூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மாருதியின் மானேசர் ஆலையிலோ அதைவிட அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் உள்ளன.
பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.  அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது. வினவு.com

பிடிவாரண்ட் எச்சரிக்கை கோர்ட்டில் சசி ஆஜர்

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று நேரில் ஆஜராகாவிட்டால் கைது செய்ய பிடிவாரண்ட் பிரப்பிக்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக எச்சரித்ததையடுத்து உடனடியாக இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜரானார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீண்டநாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பலமுறை வாய்தாக்கள், ஒத்திவைப்புகள் நடந்துள்ளன.
நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த புதிய நீதிபதி பாலகிருஷ்ணா சசிகலா, இன்றைய வழக்கு விசாரணைக்கு சசிகலா ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இப்போது ஜெயலலிதாவுக்கு களங்கம்! நக்கீரன் கோபால் மீது அவதூறு வழக்கு

சென்னை: நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான செய்தியைத் தொடர்ந்து ஆசிரியர் கோபால் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 5-ம் தேதி வெளியான நக்கீரன் பத்திரிக்கையில் அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது. வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குஷ்புக்கு எதிராக போராட்டம் இந்து மக்கள் கட்சி

 Kushboo Yet Another Controversy
சென்னை: இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் போட்ட சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

 Supreme Court Declines Stay Jallikattu டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பிராணிகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உச்சநீதிமன்ற நிபந்தனைப்படிதான் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டு">ஜல்லிக்கட்டு
ப் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 9- ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று தெரிவித்துவிட்டது.http://tamil.oneindia.in/

தமிழச்சி தங்கப்பாண்டியன்.மனசில் என்ன இருக்கு...?

சென்னை: தமிழ்த் திரையுலகில் நுழையப் போகிறது ஒரு அழகு முகம், தமிழ் முகம் என்பதுதான் லேட்டஸ்ட் கிசுகிசுவாக உள்ளது. அந்த அழகு முகத்துக்குரியவர், தமிழச்சி தங்கப்பாண்டியன்.
திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் தமிழச்சி. கல்லூரிப் பேராசிரியை, கவிதாயினி, பேச்சாளினி என்பது தவிர அரசியல் ஆர்வம், இலக்கிய ஆர்வம் மிகுந்தவர் என்பதும் இவரது கூடுதல் அடையாளங்கள்.
அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அருமையாக பேசக் கூடிய ஒரு தமிழ்ப் பெண். மறத் தமிழச்சியான இவர் இப்போது சினிமா விழாக்களில் அடிக்கடி வலம் வர ஆரம்பித்துள்ளார்.