![]() |
பா. உதயகுமார் : வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது...
மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என எச்சரித்து நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர்.
அங்கே இவர்கள் பொட்டலாமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபி யும் எடுத்துள்ளனர்.அதன்பிறகு மலத்தை தொட்டிக்குள் கலந்துள்ளனர்.
அதன் பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் ஆனதும் வீடியோவை டெலீட் செய்து விட்டனர்.
முதலில் மாற்று சமூகத்தினர் தான் இந்த செயலை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது, ஆனால் மாற்று சமூகத்தினர் இந்த பகுதிக்கு யாரும் வந்ததில்லை, வந்து போனதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.