சனி, 24 ஜூன், 2023

புதினுக்கு எதிராக புரட்சியா?யுக்ரேன் போரில் திடீர் திருப்பம் - ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

bbc.com  : ரஷ்யாவில் புதினுக்கு எதிராக புரட்சி? யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது.
யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்குத் உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
 நேற்றிரவு அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இயக்குனர் சீனு ராமசாமி : ஜாதிப்பெயர்கள் படங்களிலும் பாடல்களிலும் இடம்பெறுவதை தடை செய்யவேண்டும் .. முதல்வருக்கு கோரிக்கை

 மாலை மலர் : கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி.
இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.
 யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது.
இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதிகளை கைமாற்ற தி.மு.க., திட்டம்

 தினமலர் : ஒரே தொகுதியை ஒரே கட்சிக்கு, பல ஆண்டுகளாக ஒதுக்கி தருவதால், அந்த பகுதிகளில் கட்சி வளர்ச்சியும், கட்சியினர் முன்னேற்றமும் பாதிக்கப்படுதாக தி.மு.க., தலைமை கருதுகிறது.
அதனால், வரும் லோக்சபா தேர்தலின்போது, கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை, மீண்டும் அக்கட்சிகளுக்கே ஒதுக்கக் கூடாது என்பதில், ஆளும் கட்சி உறுதியாக உள்ளது.
மோதல்
குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு எட்டு எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் பலர், தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர், அ.தி.மு.க., அனுதாபிகளாகவும் உள்ளனர். அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவதை, தி.மு.க., விரும்பவில்லை.
அதனால், அக்கட்சிக்கான தொகுதிகளை இம்முறை மாற்றித் தர திட்டமிட்டுள்ளது. அதாவது, தி.மு.க.,வுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் விசுவாசமாக இருப்போருக்கே, தொகுதிகளை ஒதுக்குவதில் இம்முறை முன்னுரிமை தரப்பட உள்ளது.

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

மின்னம்பலம்  - Jegadeesh :; பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று(ஜூன் 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பு. 90 களில் உச்ச நடிகையாக வலம் வந்த குஷ்பு ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார்.
சினிமாவிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், சின்னத்திரையிலும் பிரபலமாக உள்ளார்.
ஒரு பக்கம் அரசியலில் பிஸியாக இருக்கிறார். பாஜகவில் இணைந்த பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கட்சி பணிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 7 அம்ச திட்டம்

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை: பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வலியுறுத்திய 7 முக்கியமான விஷயங்கள் இவைதான்!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

வெள்ளி, 23 ஜூன், 2023

மம்தா பானர்ஜி : பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி தேர்தல்!

மின்னம்பலம் - Selvam  : நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அது தான் இந்தியாவின் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 23) பிகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாட்னாவில் நடந்த இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டம் பொது இயக்கமாக மாறும். கடந்த முறை டெல்லியில் நடந்த கூட்டம் திருப்திகரமாக அமையவில்லை.

யாழ்ப்பாண மாணவிகளை வட்ஸ்அப் மூலம் பெற்றோர் கண்காணிக்க ஏற்பாடு - காவல்துறை உத்தரவு!

hirunews.lk : யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மகளிர் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மஞ்சுள செனரத் நேற்று இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் வரவு உட்பட அவர்கள் தொடர்பான ஆசிரியர்களின் அவதானிப்புக்களை மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் பார்க்கும் வகையில் வட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்தக் குழுக்கள் வகுப்பு ஆசிரியைகளாலேயே கையாளப்பட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த 206 குடும்பங்கள் மறைமலைநகரில் அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு சென்றனர்

மாலைமலர் :சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரே நாளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் கட்டுக்கடங்காமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
சென்னை நகரின் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய உத்தரவிட்டார்.

லாலு பிரசாத்தின் காலை தொட்டு வணங்கிய முதல்வர் ஸ்டாலின்! பாட்னாவில் நெகிழ்ச்சி.. அது என்ன புத்தகம்?

 tamil.oneindia.com - Nantha Kumar R ; பாட்னா: பீகாரில் நாளை எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் பாட்னா சென்ற நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
அப்போது ஸ்டாலின் அவரது காலை தொட்டு வணங்கினார். மேலும் லாலு பிரசாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அமேரிக்காவில் மோடி : ‛‛இந்தியாவில் சாதி, மதம் என அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருக்கும் ஒத்துழைப்பு, வளர்ச்சி....

tamil.oneindia.com : Nantha Kumar R  : சாதி, மதம் பெயரில் பிரிவினையா? அமெரிக்காவில் நிருபரின் கேள்விக்கு பிரதமர் மோடி சொன்ன அசத்தல் பதில்
வாஷிங்டன்: இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரில் பிரிவினை உள்ளதா? என்பது தொடர்பாகவும், இந்திய ஜனநாயகம் குறித்தும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அசத்தலாக பதிலளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார். நேற்று முன்தினம் நியூயார்க்கில் ஐநா தலைமையகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பிறகு நேற்று வாஷிங்டனில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

டைட்டானிக்: டைட்டான் நீர்மூழ்கியில் சென்ற 5 பேரும் இறந்துவிட்டனர் - என்ன நடந்தது?

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

BBC News தமிழ்  :  பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத்
டைட்டானிக் கப்பலைப் பார்க்கப்போன டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று பயண நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடலோரப் படையும் இதை உறுதி செய்துள்ளது.
"எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பீகாரில் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 மாலைமலர் : பாட்னா  பாரதீய ஜனதா ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

வியாழன், 22 ஜூன், 2023

எதிர்க்கட்சி கூட்டத்தை ஆம் ஆத்மீ புறக்கணிக்க போவதாக அர்விந்த் கேஜரிவால் எச்சரிக்கை . காங்கிரசுக்கு நிபந்தனை

 tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : :டெல்லி: காங்கிரஸ் கட்சி மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் அவசர சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளாவிட்டால் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் தொடரும் மோடி அரசின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் ஓராண்டே மீதம் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் இப்போதே இறங்கி உள்ளன.

20 கட்சித் தலைவர்கள் பீகாரில் ஆலோசனை! நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வியூகம்

 மாலைமலர் : புதுடெல்லி பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் மாணவரின்மையால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில்

hirunews.lk  : வட மாகாணத்தில் மாணவர்கள் இன்மையினால் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா - கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள், மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது.
இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.
இதேநிலை மட்டக்களப்பிலும் ஏற்பட்டுள்ளமையை கடந்த 7 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போது அவதானிக்க முடிந்தது.

கமல் ஹாசனுக்கு மாரிசெல்வராஜ் கடிதம்

Black Voice  : நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு
ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:
வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .
வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .
தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது
உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ என் தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை மூன்றாம் தலைமுறை நான்…
சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் சண்டியர்க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன்
சரி அதற்கு அப்புறம் வருவோம். முதலில் முற்போக்குவாதி ,பூனூல் துறந்த பிராமணன் , பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பவர் என்றெல்லாம் சொல்லிகொள்ளும் நீங்கள்

புதன், 21 ஜூன், 2023

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி: நிறைவு! காவேரி மருத்துவமனை அறிக்கை!

மின்னம்பலம் - Kavi :சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை 10 மணியளவில் நிறைவுபெற்றது. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்தது குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “ அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை மருத்துவ ஆலோசகரும் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் பைபாஸ் (Beating Heart Coronary Artery Bypass Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது
senthil balaji byepass surgery kauveri statement

திரு . தொல் திருமாவளவன் : நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறத!

 மாலை மலர் :  அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், மாணவ-மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நீர்மூழ்கி கப்பல் மாயம்: 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் தேடுதல் வேட்டை தீவிரம்

 தினத்தந்தி  :  நீர்மூழ்கி கப்பல் மாயம்: 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் தேடுதல் வேட்டை தீவிரம்
நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி 1912-ம் ஆண்டு ஆர்.எம்.எஸ். டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது

மாலை மலர் : போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ அறையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது.

செவ்வாய், 20 ஜூன், 2023

‘மாமன்னன்’ படத்துக்கு தடை கோரி மனு- உதயநிதி 25 கோடி தரவேண்டும் ஏஞ்சல் படத்தை முடிக்கவில்லையாம்

 தினமணி : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் ராமசரவணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், இயக்குநா் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலா் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. 

செந்தில் பாலாஜி கைது - அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 மின்னம்பலம் - Jegadeesh  : அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அமலாக்கத்துறைக்கு இன்று(ஜூன் 20) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணபறிமாற்றம் புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 13 ஆம் தேதி சோதனை நடத்தி கைது செய்தனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்தார்.

செந்தில் பாலாஜி: “நாளை அறுவை சிகிச்சைக்குப்பின் அமலாக்கத்துறை என்ன செய்யுமோ...” - மா.சுப்பிரமணியன்

 puthiyathalaimurai.com : கடந்த ஆண்டு மட்டும் 200 கிலோமீட்டர் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய மழை வந்த போதிலும் சென்னையில் உள்ள சுரங்கங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது. 26 இடங்களில் மட்டுமே மரங்கள் சாய்ந்துள்ளன. அதுவும், சில மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 90 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கலைஞர் கூடம், திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஆகியவை இன்று நடைபெற உள்ளன. ஆனால், நீங்கள் சென்னைக்குச் சென்று மழை பாதிப்பை பார்வையிட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று ஆய்வு செய்து வருகிறேன். ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை வந்தாலும் அதை தாங்கக் கூடிய அளவில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். 200 கோடி ரூபாயில் 700 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

அமைச்சர் பொன்முடி குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

minnambalam.com -christopher : அமைச்சரின் குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 19) தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2006-11ஆம் ஆண்டில் திமுக அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி

Hindu Tamil  : எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி
புதுடெல்லி: மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்கிறது. இன்னும் சரியாக ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் சூழல் நிலவுகிறது.
இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் ஜுன் 23-ல் பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர்.

திருவாரூரில் கலைஞர் கோட்டம் இன்று திறப்பு - பீகார் முதல் மந்திரி திறந்து வைக்கிறார்

மாலைமலர்   திருவாரூர்: மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
அதில்  கலைஞர்  சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில்   கலைஞர் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 7,000 சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .

திங்கள், 19 ஜூன், 2023

ரூ.8½ கோடி கொள்ளை அடித்துவிட்டு நன்றி சொல்ல குருத்துவாராவுக்கு சென்ற தம்பதிகள் சிக்கினார்கள்

மாலைமலர் : பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 10-ந் தேதி ஒரு நிறுவனத்தில் ரூ.8 கோடியே 49 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து லூதியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இக்கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது மந்தீப் கவுர் என தெரியவந்தது.
இவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இதனால் அவரை போலீசார் டகு ஹசீனா என அழைத்தனர்.
டகு ஹசீனா ஒவ்வொரு முறை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதற்கு நன்றி சொல்ல சீக்கிய குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம்.
இதனை அறிந்து கொண்ட போலீசார், டகு ஹசீனா எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை கண்காணித்தனர்.

கனடாவில் இந்தியா தேடிய காலிஸ்தான் பயங்கரவாதி Hardeep Nijjar சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

tamil.oneindia.com  - Mathivanan Maran  : டெல்லி: இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் ரா அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான நாளிலேயே காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1980களில் பஞ்சாப் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
பஞ்சா அன்று பற்றிய எரிய காரணம் சீக்கிய தீவிரவாதிகள்தான்.
 இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் தனி சீக்கியர் நாடு உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த தீவிரவாத்களின் கொள்கை.
இதற்காக பிந்தரன்வாலே தலைமையில் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர் சீக்கியர் தீவிரவாதிகள்.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு குறையுமா?

 மாலை மலர்  :  நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.
சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.
மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.
பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே இருப்பதாலும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதாலும், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் இருப்பதாலும், சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

யாழ்- நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலை தீவுகளில் அதானி மின் திட்டம் ஆகஸ்டில் ஆரம்பம்

வடக்கு தீவுகளில் இந்திய மின் திட்டம் ஆகஸ்டில் ஆரம்பம் | Virakesari.lkவீரகேசரி:  இந்தியாவுடன் கூட்டுமுயற்சித் திட்டத்தின் கீழ் வடக்கு தீவுகளில் ஸ்தாபிக்கப்படவுள்ள சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவுக்கும் இந்தியாவின் அதாணி நிறுவனத்தின் மின்சக்தி பிரிவின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
500 மெகாவோட் இந்த திட்டமானது சூரிய ஒளி மற்றும் காற்றாலை ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில ஸ்தாபிக்கப்படவுள்ளது.
குறுகிய காலத்துக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்து, மின் உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக  அதாணி நிறுவனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மின் நி‍லையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இந்த கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.

1953 இல் பராசக்தி படத்தை கடுமையாக விமர்சித்த யாழ் சனாதனிகளின் இந்து சாதனம்


ராதா மனோகர்
  : திராவிட சினிமாக்கள் அரங்கேற்றிய சமூக புரட்சி பற்றி இன்று பெரிதாக பேசப்படுவதில்லை.
மாறாக ஆரிய பார்ப்பனீய சினிமாக்கள் ஏதோ மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை விதைப்பதாக பொதுவெளியில் பரப்புரை நடக்கிறது

அன்றைய திராவிட சினிமாக்கள் வெறும் சமூக சீர்திருத்தங்களை தாண்டி ஒரு சிந்தனை புரட்சியை நடத்தி காட்டியிருக்கிறது
இன்று கூட நினைத்து பார்க்க தயங்கும் பல விடயங்களை திராவிட சினிமாக்கள் அன்றே மக்களின் மனங்களில் பதித்து விட்டிருக்கிறது
வட  இந்தியாவில் மதவாதம் கொழுந்து விட்டு எரிகிறது  . ஜாதியும் மதமும் கொலைகள்  மூலம் விவாதிக்கப்படும் அளவுக்கு அவை தவறான பாதையில் வெகு தூரம்  சென்றுவிட்டன
மறுபுறம் தென்னிந்தியாவை நோக்கினால் .. குறிப்பாக தமிழ்நாட்டை நோக்கினால் இந்த சிந்தனை வளர்ச்சி வெகு தெளிவாகவே தெரிகிறது   

ஐந்து நடிகர்களுக்கு தடை: அதிரடியில் இறங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்!

மின்னம்பலம் - christopher : ஐந்து  நடிகர்களுக்கு தடை: அதிரடியில் இறங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்!
தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத சில நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 18) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜூன், 2023

நடிகை விஜயலட்சுமிக்கு ஒரு நீதி நடிகை குஷ்புவுக்கு ஒரு நீதியா? கொந்தளிக்கும் உடன் பிறப்புக்கள்

 Mahesh S D. Dmk  :  நடிகைகுஷ்பு கண்ணீருடன் பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில்  அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்து அவரை திமுகவில் இருந்து நீக்கி  கைது செய்யபடுகிறார் .
அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசியதில் உண்மை இருந்தால் கூட அதில் நமக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் இவ்வளவு வேகமும் வீரியமும் திமுகவை விமர்சனம் செய்பவர்களை வச்சி செய்றதுல காட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்..
யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை?
தலைவர் ஸ்டாலினை ஒரு பெண்ணுடன் இணைத்து பேசிய போது வராத களங்கம்,
அந்த நடிகையை கலைஞருடன் இணைத்து பேசிய போது வராத கோபம்..
கனிமொழியை ஆ ராசாவுடன் இணைத்து பேசிய போது தெரியாத குற்றம்,
குமரன்களும் சிவாஜிகளும் பேசும் போது மட்டும் வருகிறது.
ஆருத்ரா முதல் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்யுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது

மாலை மலர் : திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக நீக்கப்பட்டு சமீபத்தில்தான் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நவாஸ் கனி எம்பிக்கும் ராமநாத புரத்தில் வாய்த்தகராறு

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது,
அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார்.

தனிச்சிங்கள சட்டத்தால் நாடு பெரும் பின்னடைவை சந்தித்தது .. பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வி சுனித்திரா பண்டாரநாயக்க பேட்டி

 தேசம் நெட்  : தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர்  எஸ்.டபியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் கருத்துப்பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
 என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

12 மணி நேரத்திற்கு மேல் விருது வழங்கிய நடிகர் விஜய் - வாரிசு ஸ்டைலில் முத்தம் கொடுத்து விடைபெற்றார்

 சென்னை: அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இறுதியில், வாரிசு ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.