சனி, 23 டிசம்பர், 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை திட்டமிட்டு ...... பல கேள்விகள்!


நக்கீரன் :ஜெயலலிதா மரணம் தொடர்பாக டாக்டர் பாலாஜி ஒருபக்கம்-… அப்பல்லோ ரெட்டி மறுபக்கம் என ஆணையத்தின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைச்சொல்லி "ட்விஸ்ட்' அடித்துக்கொண்டிருக்க… ஜெ. குணமாவதை தடுத்தவர்கள் யார்’ என்று நக்கீரனிடம் பகீர் வாக்குமூலம் கொடுத்து அதிரவைக்கிறார் கார்டனிலிருந்து விரட்டப்பட்ட டாக்டர் எம்.என். சங்கர்.இதுகுறித்து, நாம் அவரிடம் பேசியபோது, ""எட்டு வருடத்துக்கு முன்னால  சசிகலா, இளவரசி ரெண்டு பேருக்குமே  அக்குப்பஞ்சர் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கேன். அந்தப் பரிட்சயத்துலதான் மேடத்துக்கும் ட்ரீட்மெண்ட் கொடுக்க 2016 மார்ச், ஏப்ரல் மாதங்களில் போயஸ்கார்டனுக்கு போனேன். பெங்களூர் சிறையிலிருந்து வந்தபிறகு நடக்கக்கூட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க.  குறிப்பா கை-கால் வீக்கம், கழுத்துவலி, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், கையில் நீர்க்கோ(ர்)த்துக்கொள்ளுதல், தூக்கமின்மை, இரத்த அழுத்தம்னு பல்வேறு பிரச்சனைகளில் அவதிப்பட்டார். அவரால், நிற்கக்கூட முடியல. நான், போயி ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஆனாங்க.

கலைஞருக்கு தகத்தகாய சூரியன் கடிதம் ... கோபாலபுரத்தில் ராசா கனிமொழி ..


தினமலர் :சென்னை, '2ஜி' வழக்கிலிருந்து, விடுதலை செய்யப்பட்ட பின், முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர், கருணாநிதிக்கு, நேற்று உருக்கமான கடிதம்
எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தின் விபரம்: நித்திரை நிலைகொள்ளாத, இந்த நடுநிசியில், டில்லி கடுங்குளிரில், உங்கள் வார்த்தைகளின் ஒலிக்காக, என் செவிகள் உண்ணா நோன்பிருக்கின்றன.
அலைவரிசை வணிகத்தில், சிலரின் மூலதன முதலீடுகள் முற்றிலுமாய், இன்று நஷ்டத்தில் முடிந்து விட்டன.
'2ஜி வழக்கு தீர்ப்புக்காக, நான் டில்லி செல்கிறேன்; வெற்றி பெற வாழ்த்துங்கள்' என, உங்கள் காதருகில் சொல்லி வணங்கினேன். உங்கள் உதடுகள், 'சரி' என,
உச்சரித்தபோது சப்தம் வரவில்லை. என்றாலும், உங்கள் வலது கரம் உயர்த்தி, புன்னகையோடு வாழ்த்தினீர்கள். உங்களின் வாழ்த்துக்கும், புன்னகைக்கும் முன், இந்த பிரபஞ்சம் சுருங்கி விட்டதாகவே எனக்கு பட்டது.

கவிஞர் இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பு!

thetimestamial :கவிஞர் இன்குலாபுக்கு வழங்கப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பதாக அவருடைய குடும்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும். அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம்.
இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது
’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’

குஷ்பூ :ஸ்டாலின் முதல்வர், ராகுல் பிரதமர்


நக்கீரன்  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும், பிரதமராக ராகுல் காந்தியும் விரைவில் பொறுப்பேற்பார்கள் என்று குஷ்பு பேசினார். காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. ஸ் இளங்கோவின் பிறந்தநாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ மேடையில் பேசுகையில், டிஜிட்டல் இந்தியாவுக்கு வித்திட்டதே 2ஜிதான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது சுமத்தப்பட்ட வீண்பழி தற்போது நீங்கியுள்ளது.

ஆர் கே நகர் -தினகரன் வெற்றி முகம் ? 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டி தடை வரும்? தேர்தல் ஆணைய கூட்டணி திட்டம் ?

வெப்துனியா :ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தரப்பு பணத்தை வாறி இறைத்து செலவு செய்ததால், அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாதபடி  தடை விதிக்கப்பட வாய்ப்பிருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. ;ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக மற்றும் தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது. ஆனால், தினகரன் அந்த புகாரை மறுத்தார்.
;அதேபோல், ஆர்.கே.நகர் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களும் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கவனிக்க 3 பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் செய்யும் போது அதற்கான செலவுகளை கணக்கிட்டு வந்தனர். இதில், தினகரன் பிரச்சாரத்திற்கு அதிக அளவில் ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

tamilthehindu :சமஸ் 1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை. அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

லாலு பிரசாத் யாதவ் மாட்டுதீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைப்பு


மாலைமலர் :கால்நடை தீவன வழக்கில் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.
ராஞ்சி: பீகார் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் மாட்டு தீவனம் வாங்கியதில் ரூ. 960 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் வழக்கில் அரசு கருவூலங்களில் இருந்து முறைகேடாக ரூ.33.7 கோடி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 43-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்து பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
 இதுதவிர, மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசுகருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

ஜெயலலிதா அம்ருதாவுடன் பலதடவை தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள் உள்ளன ... நீதிமன்றத்தில் வழக்கறிஞர்

தினகரன் :சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் தொடர்கிறது என்று கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், அம்ருதா தனது தந்தை சோபன்பாபு என்று அறிவிக்கக் கோருவதில் என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதில் தருமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி நீர்சத்து இல்லாத காரணத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் ேததி அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவரை மருத்துவமனையில் பார்த்ததாக கூறிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அவரை பார்க்கவில்லை என்று பின்னர் தெரிவித்தனர். தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் என்று பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (36), உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு உத்தரவிட்டது.

அந்த இருவர் திராவிடத்தை காத்தார்கள் ... இன்று இருவர் ஆரியத்துக்கு பண்டமாற்று செய்கிறார்கள் !

Shalin Maria Lawrence :  இருவர்! எம்ஜியாரும் கலைஞரும் அரசியல் ரீதியாக பிரிந்தாலும் சிலவற்றை பிரியாமல் பார்த்து கொண்டதுதான் அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் ,சாமர்த்தியம்.
ஒரு பக்கம் கலைஞர் தலைமையிலான திமுக இன்னொரு பக்கம் எம்ஜியார் தலைமையிலான அதிமுக .கட்சிகள் இரண்டானாலும் அவைகள் கொண்ட திராவிட சிந்தாந்தம் அவர்களது ஒரே புள்ளியில் இணைத்தது.
ஒருவர் இல்லை என்றாலும் மற்றொருவர் ஆட்சியில் இருந்தார். கிட்டதட்ட 50 வருட காலமாக இந்த மாநிலத்தை திராவிடத்தின் வசமாக்கியதுதான் நான் இங்கே குறிப்பிட்ட சாமர்த்தியம்.
இவர்களுக்குள் போட்டி போன்று வெளியே தோன்றினாலும் இவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு வடிவங்களில் திராவிட ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைத்திருக்க செய்தவர்கள்.
கலைஞர் மேல் கோவமா ,எம்ஜியாருக்கு வாக்கு.
எம்ஜியார் மேல் வருத்தமா ,கலைஞருக்கு வாக்கு என்று இருந்த நிலையில் ஜெயித்தது எது என்றால் அது திராவிடம் தான்.
இவ்விருவரும் பிரிந்து திராவிட ஆட்சியை இந்த மாநிலத்தில் நீட்டிக்க செய்தனர்.மேலும் திராவிடம் இல்லாத வேறு சிந்தாந்தம் பேசும் எந்த ஓரு கட்சியையும் இந்த மாநிலத்தில் காலூன்ற முடியாதபடி ஒரு செம்மையான அதிகார பகிர்வினை உருவாக்கி கொண்டனர்.
கலைஞர் அறிவை கிளர்ந்தெழ செய்தார் ,எம்ஜியார் உணர்வுகளை தட்டி எழுப்பினார் .பாதி தமிழ்நாடு தெரிந்து திராவிட வசமானது மீதி தமிழ்நாடு திராவிடம் என்று தெரியாமலேயே அதன் பால் மயங்கியது.

BBC :ஜெருசலேம்- இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை?

வரைபடம்ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை? ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா வாக்களித்ததற்கு காரணம் என்ன? ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.
மோதி
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மோதி தலைமையிலான அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.

சபரிமலையில் 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் பறிமுதல்

tamilthehindu :சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் களைகட்டிவருகிறது.  விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சபரிமலை, பாண்டித்தாவளம் பகுதியில் மண்ணுக்கு அடியில் கேன்களில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் சபேஸ் பினாய்க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்மாறு அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சன்னிதான எஸ்.ஐக்கள் பிரதீஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது பாண்டித்தாவளம் பகுதியில் 15 கேன்களில் தலா 35 கிலோ வீதம் வெடி மருந்துகள் இருப்பது தெரிய வந்தது.

மோசடி ! குஜராத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகள் அதிகம்.. உண்மையில் காங்கிரஸ்தான் வென்றது நிருபணம் !

Manjai Vasanthan : குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அரசு செய்த மோசடி பாரீர்!

16 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகம்.
#ஆதாரம் இதோ:
எடுத்துக்காட்டாக பராசா தொகுதியில் வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,25,191 பதிவானது 1,37,262 ஆக 12,071 கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வழக்கமாக 80% வாக்குகள்தான் பதிவாகும். ஆனால், இங்கு 110% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, 30% வாக்குகள் மோசடியானவை போடப்பட்டுள்ளன என்பது வெளிப்படுகிறது.
எனவே, இந்த 16 தொகுதிகளிலும் தேர்தலை உடன் இரத்து செய்து உடன் மறுதேர்தல் நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு நாடெங்கும் குரல் கொடுக்க வேண்டும்; நீதி கிடைக்கும் வரைப் போராட வேண்டும்.
குஜராத்தில் வெற்றி என்று கொக்கரித்த பி.ஜே.பி. பேர்வழிகள் இந்த மோசடிக்கு முகத்தை எங்கே வைப்பார்கள்!
நாடே காரித் துப்புகிறது!
- மஞ்சை வசந்தன்

2 ஜி - SC, ST, OBC, MINORITIES அடங்கிய தலித் சமூகம் அடங்கிய முழு தமிழகமும் கொண்டாட வேண்டிய புதிய புறநானூற்று வெற்றி!

Sankar Ganesh : 2G கட்டுக்கதை உச்சத்தில் இருந்தபோது,'வேட்டி கட்டிக்கொண்டு டெல்லி செல்வோரை கண்டு டெல்லி பயப்படுகிறது!' என தமிழர்களனைவரையும்
திருடர்கள் என விளித்தான் சுசாமி. தென்னிந்தியாவை சேர்ந்தவன், அதிலும் தமிழகத்தை சேர்ந்தவன், அதிலும் கருமைநிறம் கொண்டவன்,
அதிலும் பட்டியல் சமூகத்தை சார்ந்த ஒருவன்,
அதிலும் சுயமரியாதைக்காரன்,
அதிலும் திமுக காரன், எப்படி கேபினட் அமைச்சராக இருக்கலாம் என பார்ப்பனீயம் கொதிக்கிறது.
காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டுகிறது ஆர்எஸ்எஸ். பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி பார்க்கிறது. 
வழக்கமாக கலவரங்களை நடத்தி ஓட்டு வாங்கும் திட்டத்தை செயல்படுத்த தயக்கம் அடைகிறார்கள். ஏனென்றால் நரசிம்மராவ் மற்றும் ராஜீவ் காலத்து காங்கிரஸ் போல், சோனியா காந்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் இருக்கவில்லை. 
கலவரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்பதை உணர்ந்து, வேறு வழியை தேடுகிறார்கள். பல்வேறு அந்நிய சக்திகள் வாயிலாக ஆர்எஸ்எஸ் நடத்திய குண்டுவெடிப்புகள் உள்ளூர் ரீதியான பாதிப்பை தான் ஏற்படுத்தியதே தவிர, நாடு முழுமைக்கும் காங்கிரஸ் மீதான எதிர்ப்பலையை கொண்டுவர முடியவில்லை. 
கடைசி ஆயுதமாக ஊழலை கையில் எடுக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்த பார்ப்பனீயத்தின் ராஜ நாகம் முரளி மனோகர் ஜோஷி, வினோத் ராய் போன்றோர் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள்.
ஆனால், இம்முறை ஊழல் நடக்காமலே ஊழல் குற்றசாட்டு சுமத்துகிறார்கள்.
"கற்பனையில் கடவுளையே கண்டுபிடித்தவர்கள்
கற்பனையான ஊழலை கண்டுபிடிக்க மாட்டர்களா என்ன?"
யாரை பலியிட்டு காங்கிரசை துடைக்கலாம் என சிந்திக்கிறார்கள்.
பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லாமல் சட்டப்படி செயல்பட்டு கொண்டிருருந்த
"தகத்தகாய சூரியன்" ஆ.ராசா அவர்களை குறிபார்க்கின்றனர்.
ஆனால், அவாளின் தொழில் நேர்த்தியை பாருங்கள்!
பலியாட்டை கூட பட்டியல் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த இந்துத்துவ பயங்கரவாதிகளின் மனிதத்தன்மையற்ற வன்மம் இதிலிருந்தே தெளிவாகவே நமக்கு விளங்கும்.

2ஜி வழக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் ... Adv Manoj Liyonzon

1. தொலைத்தொடர்பு துறையில் சட்டத்தை நிலைநாட்டி சீர்திருத்தம் செய்த
நிரபராதி ஆ.ராசா இந்துத்வ முதலாளித்துவத்தால் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்
2. நிரபராதி ஆ.ராசா மத்திய அமைச்சர் பதிவி விலக நேரிட்டது
3. நிரபராதி ஆ.ராசா ஓராண்டு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்
4. கனிமொழி மற்றும் இதர குற்றம் சாட்டப்பட்டவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்
5. புதிய நிறுவனங்கள் சட்டப்படி பெற்ற உரிமங்களை இழந்தன
6. உரிமம் இழந்த நிறுவனங்கள் செய்த முதலீடுகள் நஷ்டமடைந்தன
7. உச்ச நீதிமன்றத்தின் கண்கானிப்பில் நடத்தப்பட்ட ஏலமுறை எதிர்பார்த்த வருவாயை ஈட்டவில்லை. தோல்வியடைந்தது
8. புதிய நிறுவங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், சந்தையில் போட்டி இல்லாமை உருவாகி, பழைய நிறுவங்கள் தொலைத்தொடர்பு கட்டணங்களை உயர்த்தின
9. 30 நாட்களாக இருந்த தொலைத்தொடர்பு சேவை 28 நாட்களாக குறைக்கப்பட்டது
10. ஆ.ராசா கணிமொழிக்கு இடையே தகாத உறவு இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து இவர்களினொஶ்ரீ் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக்கியது
11. ₹.1,76000 கோடி இழப்பு என்ற பொய் குற்றச்சாட்டையும் ₹.1,76000 கோடி பணமாக ஆ.ராசா கொள்ளையடித்தார் என்று பாஜக பொய் பிரச்சாரம் செய்தது
12. பொய் குற்றச்சாட்டால் மன அழுத்தம் ஏற்பட்டு சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டது
13. தமிழகத்தில் மதச்சார்பற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழக்க 2ஜி வழக்கும் ஒரு காரணமாக அமைந்தது
14. மத்தியில் மதச்சார்பற்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை இழக்க 2ஜி வழக்கும் ஒரு காரணமாக அமைந்தது

சைதாப்பேட்டை நீதிமன்றம் :50 பாலியல் வன்புணர்வு .. 3 சிறையும் ரூ.2800 அபராதம் மட்டுமே ....

Vr Jayanthi : 22 டிசம்பர் 2017 (06:03 IST) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அறிவழகன் என்ற குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2800 மட்டுமே அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் வீடுகளில் கொள்ளை அடித்தல் உள்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக அறிவழகன் என்பவரை பிடித்து வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனம் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. கீழ்வெண்மணியில்.... ஒரு முகநூல் விவாதம்

1-Devi Somasundaram : இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனம் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. மக்களால் தொடர்ந்து நிராகரிக்க பட்டும் புத்தி வர்ல... வேதிக் ரேஷனலிஸ்ட்களிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்..
2-Nilabharathi அடிமைகூட்டத்தைவிட, மோசமா இருக்கிறது அவர்களின் இறங்கிவிடக்கூடாது, உண்மைய பேசி ஏத்துக்கிடக்கூடாது என்கிற வரட்டு வன்மம் அவர்களிடம், தலைமைக்கு முட்டுகொடுக்கிற உண்மைத்தொண்டர்கள் இருக்கிற வரை அப்படிதான் இருக்கும் அந்த இசம் வளரவே இயலாது.
 3-Radha Manohar ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான புரட்சியை மடை மாற்றம் செய்யும் வேலையைத்தான் கம்யுனிஸ்டுகள் செய்கிறார்கள் ... ஒரு வகையில் இதுவும் ஒரு வகை RSS தான்.
 4-Devi Somasundaram ஆம்...கீழ் வெண்மணியில் ஆரம்பித்த அயோக்கியதனம்...
  5-Athi Narayanan கீழ வெண்மணியில் செய்த அயோக்கியதனம் என்ன தோழர்... தகவலுக்காக...
  6-Devi Somasundaram ஒடுக்க பட்ட மக்களை வன்முறை நோக்கி தூண்டி விட்டது கம்யூனிஸ்ட்கள் தான்...நான் நேரடியாவே குற்றம் சாட்டுகிறேன் ..ஒருத்தர கட்டி வச்சு அடிச்சது கோபால கிருஷ்ண நாயுடு கும்பல் ..அவர மீட்க போகாம கோபால கிருஷ்ணன் வீட்டுகுல்ல பூந்து பெண்களை புடவை புடிச்சு இழுத்து அசிங்க படுத்துச்சு கம்யூனிஸ்ட்கள். .கோபால கிருஷ்ணன்.குழந்தைகளை ,பெண்களை ஊரையே தீ வச்சு கொளுத்தினார்..கோபால கிருஷ்ணன வெட்டியது பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்த திராவிட கழகத்தினர்....தப்பை எல்லாம் செய்துட்டு. பெரியாரை குற்றம் சொன்னது கம்யூனிஸ்ட்...இல்லன்னு மறுக்க போறிங்க்ளா.

 7-Athi Narayanan கண்டிப்பாக மறுக்கத்தான் போகிறேன்... தவறான விடயங்களை மறுக்கத்தானே வேண்டும்... ஆக கட்டி வைத்து அடிப்பவனிடம் அறம் போற்ற சொல்கிறேர்கள்... அதற்காக பொண்கள் மீதான வன்முறையை சரி என்று சொல்லவில்லை அதே சமயம் அது உண்மையா என்றே கேட்கிறேன்... அப்புறம் அப்போது ஆட்சியில் இருந்தது திமுக தானே...? திமுக எப்படி நடந்துகொண்டது... ஏன்... நான் மதிக்கும் பெரியாரிடமே வருகிறேன்...

சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா !

ஏன் அடிக்கடி கழிவறைக்கு போற…உள்ளே சென்று என்ன செய்கிறாய்… ஒரு ஆள் போட்டா பார்க்க முடியும்” என்று பெண் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். இதற்கு பயந்தே பெண்கள் கழிவறைக்கு செல்ல தயங்குவதாக கூறுகிறார்கள்
சான்மினா நிறுவனத்தின் கொடுங்கோன்மைக்கெதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
வினவு :சென்னை ஒரகடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனம் சான்மினா. இது மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா மின்னணு பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் அமெரிக்காவின் “பார்ச்சூன் 500” நிறுவனங்களில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பத்தொன்பது நாடுகளில் 80 தொழிற்சாலைகள், 50,000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. 2006-ம் ஆண்டின் வருமானமாக 11 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளது இந்நிறுவனம். இந்திய மதிப்பின்படி 44,000 கோடி ரூபாய்.
தமிழகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் பல்வேறு சலுகைகளுடன் கடந்த 2007ம் ஆண்டு சென்னை ஒரகடத்தில் நிறுவப்பட்டது சான்மினா. இதற்காக நூறு ஏக்கர் நிலம் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தண்ணீர், மின்சாரம், பத்திரப்பதிவு உள்ளிட்டவை அனைத்தும் இலவசம். முதல் மூன்று ஆண்டிற்கு 225 கோடியிலிருந்து 315 கோடி ரூபாய் வரை முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு இதுவரை ஐநூறு கோடிக்கும் அதிகமான வரிச்சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

ரஜினி தமிழருவி மணியன் சந்திப்பு .... குளோபல் வார்மிங் ..மற்றும் வடகொரியா பற்றி ஆலோசனை????

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் ஆலோசகராக தமிழருவி மணியன் ரகசிய உஉடன்படுக்கை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.   (ரஜினியிடம் இருந்து புண்ணாக்கை தமிழருவி மணியன் மொத்தமாக வாங்கி ரசிகர் மன்றங்களுக்கு சப்பிளை செய்யும் ஏஜென்சியை கேட்டதாக தெரிகிறது).
Gajalakshmi - Oneindia Tamil சென்னை : டிசம்பர் 31ம் தேதி அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை மீண்டும் சென்னையில் வைத்து தனது ரசிகர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பை ஒட்டி தமது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை குறித்து பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள தகவலில் நடிகர் ரஜினி டிசம்பர் 31ல் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
 இதனிடையே செய்தியாளர்கள் சிலருக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள தகவலில், நடிகர் ரஜினிகாந்துடனான இன்றைய சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான். டிசம்பர் 26 முதல் 31 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ரஜினியே அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.

ஆர் கே நகரில் மையில்லாத வாக்காளரிடம் பணத்தை திருப்பி கேட்கும் தலைவர்கள் ... ஓடி ஒழியும் வாக்காளர்கள்

 Veera Kumar - Oneindia Tamil ஆர்கே நகரில் பணத்தை திருப்பி கேட்கும் அரசியல் புள்ளிகள்... பயந்து ஓடும் வாக்காளர்கள்- வீடியோ சென்னை: ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினரும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து வாக்கு சேகரித்ததாக புகார்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தால் ஒரு அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்தலை ரத்து செய்தால் அது வெளிப்படையாக தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும் என நினைத்த அதிகாரிகள் 'எப்படியோ போங்க' என்பதை போல தேர்தலை நடத்தி முடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பணம் கொடுத்தபோது, எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுவல்லவா சத்திய சோதனை இதுவல்லவா சத்திய சோதனை சத்தியத்தை மீறக்கூடாதே என்ற தமிழக மக்களின் மாண்பு (!) வாக்குச்சாவடிகளை நோக்கி கூட்டம் கூட்டமாக அவர்களை உந்தி தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

தமிழக அரசு கைவிரிப்பு ! 271 மீனவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று நீதிமன்றத்தில்


271 மீனவர்களின் நிலை? தமிழக அரசு!மின்னம்பலம் :ஓகி புயலால் பாதிக்கப்பட்ட 271 மீனவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓகி புயலின்போது மாயமான 551 மீனவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிப்பது குறித்து 22ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று (டிசம்பர் 22) தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்த வாய்மொழி அறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் 20 வரை 318 மீனவர்கள் மாயமான நிலையில் நேற்று 47 பேர் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 271 மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை எரித்து கொன்ற காமகொடூரன் ... ஹைதராபாத்

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண் எரிப்பு!
மின்னம்பலம் : ஹைதராபாத்தில் காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். தீ வைக்கப்பட்ட பெண் இன்று (டிசம்பர் 22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் சந்தியா ராணி என்ற பெண் லாலாகுடா நகரில் உள்ள கடை ஒன்றில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துவந்தார். சந்தியா நேற்று (டிசம்பர் 21) மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கார்த்திக் என்பவர் பைக்கில் சந்தியாவைப் பின்தொடர்ந்து வந்தார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றவே கார்த்திக் ஒளித்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சந்தியா மீது ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார்.
கார்த்தியும் சந்தியாவும் ஒரே கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு கார்த்திக் அந்தக் கடையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கார்த்திக் சந்தியாவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணியை விடும்படி கூறியிருக்கிறார். இதற்கடுத்து, அவரைக் கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

ராசா மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ,,, மரபு சார் உறுதிப்பத்திரம் தாக்கல் .. பாஸ்போர்ட் ....

மீண்டும் பாட்டியாலாவுக்கு வந்த ராசாமின்னம்பலம் :டிசம்பர் 21ஆம் தேதி காலையில் 2ஜி வழக்குத் தீர்ப்பை ஒட்டி ஏராளமான திமுகவினரும், போலீஸாரும், வட மாநில வழக்கறிஞர்களும், குறிப்பாக மீடியாக்காரர்களும் திரண்டு... பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தையே பரபரக்கச் செய்தனர்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட நெரிசல் அவற்றை சமாளிக்க போலீஸ் நடத்திய மல்லுக்கட்டு என்று தீர்ப்புக்கு முன் பதற்றமாக இருந்த பாட்டியாலா கோர்ட் ஆ.ராசா, கனிமொழி விடுதலை என்று தீர்ப்பளித்த பின் உற்சாகக் காடாக மாறியது.
ஆனால் இன்று டிசம்பர் 22 காலை அந்த பாட்டியாலா நீதிமன்ற வளாகம், ‘2ஜி வழக்கில் தீர்ப்பு சொன்ன இடமா இது?’ என்பது போல ஒரு காக்காய் குருவி கூட இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு வருகை தந்தார்.

20 வயது பெண்ணை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் ,,,, டெல்லியில் 20-year-old gang-raped Delhi.. 5 accused arrested

20-year-old woman gang-raped in Delhi’s Jahangirpuri, 5 accused arrested
வெப்துனியா :இளம்பெண்னை 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்பயா விவாகரத்திற்கு பின்பும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக டெல்லி மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களில் சிறுமி முதல் பெண்கள் வரை பலர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் தேதி இரவு டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியில் குப்பை கிடங்குகள் கொட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாக 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 சிறுவர்கள் அப்பெண்ணை பலவந்தமாக ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதால் பயந்த அந்த பெண் சத்தம் போடவில்லை எனத் தெரிகிறது.

அம்ருதா வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

ஜெயலலிதா,அம்ருதாதினமலர் : சென்னை : ஜெயலலிதாவின் மகள் என்று தம்மை உரிமை கொண்டாடி வரும் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதை உறுதி செய்வதற்காக தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். ஆனால், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அத்துடன் ஐகோர்ட்டில் முறையிடவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஜெ., உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி அம்ருதா சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது

உபியில் பிச்சை எடுத்த நெல்லை கோடீஸ்வரர் ... உறவினர்களிடம்

உ.பி.யில் பிச்சை எடுத்த நெல்லை கோடீஸ்வரரை கண்டுபிடிக்க உதவிய ஆதார்தினத்தந்தி :"உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த நெல்லை கோடீஸ்வரர் ஆதார் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். லக்னோ:< உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டு திரிந்துள்ளார். அவருக்கு சிலர் பரிதாபப்பட்டு உணவு அளித்தனர். கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் தங்கி பொழுதை கழித்தார். அவருக்கு அடிக்கடி நினைவு தப்பும் வியாதியும் இருந்ததால் அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது< இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமி பாஸ்கர் ஸ்வருப் மகராஜ் அவருக்கு ஆதரவளித்து, தன் ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளார். அவரது உடைமைகளை ஆராய்ந்தபோது அவருடைய ஆதார் அட்டை இருந்துள்ளது. மேலும் வங்கியில் அவரது கணக்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தொகை இருந்ததற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமியார், அந்த முதியவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கோடீஸ்வரர் என்பதை உறுதி செய்தார்.

நீதிபதி சைனி: 7 ஆண்டுகளாக ஆதாரம் கொண்டு வருவார்கள் என்று காத்திருந்தேன் .. வரவில்லை ! வதந்திகளை கொண்டு வழக்கு ,,,,,

கடந்த ஏழு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் சட்டப்படி செல்லும் ஆதாரங்களுடன் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். வேலை நாள்கள், கோடை விடுமுறை நாள்கள் என ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஒருவராவது உரிய ஆவணங்களுடன் குற்றத்தை நிரூபிக்க வருவார்கள் என்று காத்திருந்தேன். ஒருவர்கூட வரவில்லை. ஏழு ஆண்டுகளில் சட்டப்படி செல்லும் ஒரு சாட்சிகூட வரவில்லை. அனுமானத்தின் அடிப்படையிலோ வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச்செல்ல முடியாது.
வெப்துனியா :உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன்' திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்த ராதாரவி, இந்த வழக்கு ஆரம்பமான நாளில் இருந்தே குற்றவாளி யார் என்று தெரிந்துவிட்டது. ஆனால் சாட்சி? எத்தனை நாள் காத்திருந்தேன் ஒரு சாட்சி கூட வரவில்லை' என்று ஒரு வசனம் பேசியிருப்பார். அதே வசனத்தை இன்று 2ஜி வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உதயநிதியின் கண்றாவி டுவீட் ... நல்ல கொள்கை பிடிப்பு ... வெளங்கிடும் ....

Udhayanidhi Stalin.2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் அநாகரீக முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.  இவரது கருத்துக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த் டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு யாருக்கெல்லாம் எரிகிறதோ அவர்களுக்கு பர்னால் என்ற வசனத்துடன் அபாச புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அப்போலோ ஜெயா விடியோ ரிலீசுக்கு எடப்பாடி அணி வெளியிட்ட இரகசிய நோட்டிஸ்தான் காரணமாம் ...

வெப்துனியா :தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்ட போது இது சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ தெரியாது என வெற்றிவேல் கூறினார். ஆனால் நடந்தது வேறு என தகவல்கள் கசிகின்றன.ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலாவும், தினகரனும் தான் என சித்தரிக்கப்பட்ட நோட்டீஸ் ஒன்றை நேற்று எடப்பாடி ஆதரவாளர்கள் வீடு வீடாக கொடுத்திருக்கிறார்கள். இதனால் தினகரன் மிகவும் அப்செட்டில் இருந்துள்ளார். நேற்று அனைவரையும் சந்தித்துவிட்டு தனியாக இருந்த தினகரனை வெற்றிவேல் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார்.

2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு... அமலாக்கத்துறை அறிவிப்பு

Shyamsundar - Oneindia Tamil டெல்லி: 2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 2ஜி வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.  உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த போது , ''அமலாக்கத்துறை ஆதாரங்களை மிகவும் சிறப்பாக சேகரித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆதாரங்கள் பலவும் மிகவும் சரியான முறையில் திரட்டப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டது. தற்போது இதைவைத்து அமலாக்கத்துறை சிபிஐ அளித்த 2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறது. ஆதாரங்கள் குறித்து கோர்ட் கூறியதை தங்கள் மேல்முறையிட்டில் சுட்டிக்காட்ட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது

திண்டுக்கல் லியோனி : 2ஜி ..பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து சதி செய்த வழக்கே

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி விடுதலையை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் மாநில துணைத் தலைவரும், பட்டிமன்ற நகைச்சுவை நடுவருமான திண்டுக்கல் லியோனியிடம் இந்த தீர்ப்பை பற்றி கேட்டபோது... 2009ம் ஆண்டு மத்திய தொலை தொடர்பு அமைச்சராக ராஜா இருந்தபோது தொடரப்பட்ட வழக்கு. அதோடு இந்த வழக்கும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு கதை என்பது இந்த தீர்ப்பு மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
2009ல் ராஜா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி வருமானம் பார்த்தனர் என்று மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.
ஆனால் பாமர மக்களோ அது புரியாமல் ராஜாவும், கனிமொழியும் ஏதோ டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துவிட்டனர் என்று நினைத்தனர்.
அது முற்றிலும் பொய் என இந்த தீர்ப்பு மூலம் நாட்டுமக்கள் தெரிந்து கொண்டனர். ராஜா ஒரு பெரியார் தொண்டர் அதோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அப்படிப்பட்டவர் மத்திய அமைச்சராக இருக்கக் கூடாது என்பதற்காக பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து சதி செய்த வழக்கே இப்பொழுது அவர்களுக்கு சவுக்கடியாக மாறி மூஞ்சியில் கறியை பூசிவிட்டது.

அழுக்குகளை அடித்துச் செல்லும் ‘அருவி’!.,... நிழலழகி 20

thetimestamil :கே. ஏ. பத்மஜா - Aruvi | Arun Prabu Purushothaman : ஓர் அருவியில் குளித்துவிட்டு வரும்போது ஏற்படும் புத்துணர்வு ‘அருவி’ படம் எனக்குத் தந்தது. மேலிருந்து கீழ் நோக்கி எங்கும் பாய்ந்துச் செல்லும் அருவி போல மனிதர்களுக்கு உள்ளும் வெளியும் இருக்கும் பல அழுக்குகளை அடித்துச் சென்றாள் இந்த அருவி.
‘அருவி’… அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு இறுதியில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம். 2016 ஆம் ஆண்டே பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்ற அருவி இப்போதுதான் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுகத் திரைக்கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டிருப்பது கூடுதல் கவனிப்பு.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் அப்பாவின் பாசத்தில் வளரும் பெண் அருவி. அவள் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளால், அவளை சமூகம் கையாண்ட விதமும், அவள் சமூகத்தை எதிர்கொண்ட விதமும்தான் அருவியின் கதை. இப்படிச் சொன்னால் அது நான் உங்களை ஒரு நிஜ அருவிக்கு அழைத்துச் சென்று, அந்த அருவியின் சிறப்புகள் என அதன் உயரம், அகலத்தை மட்டும் சொல்லும் ஒரு சாதாரண விஷயமாய் மாறிவிடும். ஆம், இந்த அருவியில் அவரவர் ரசிக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன.
அருவியாய் நடித்த அதிதி பாலன் பள்ளிப் பருவ பெண்ணாய் நமக்கு அறிமுகம் ஆகும்போதே அவள் நாம் பள்ளியில் செய்த எல்லா சேட்டைகளையும் செய்து நமக்கு நெருக்கமான தோழியாய் மாறிவிடுகிறாள். பெரிய லட்சியம் எல்லாம் ஏதும் இல்லாமல் மிகச் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழும் பெண் அருவி.

2ஜி தீர்ப்பு :பொதுக் கருத்துக்கு நீதித்துறை நடைமுறையில் இடமில்லை

Special Correspondent FB Win : 2ஜி தீர்ப்பு: முக்கிய அம்சங்கள : அமலாக்கத்துறை
பறிமுதல் செய்த ரூ.223.55 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும்.
சிபிஐ இரண்டு வழக்குகளையும், மத்திய அமலாக்கத்துறை ஒரு வழக்கையும், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்தன.
முதலாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்ட 14 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதா என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட ஓ.பி. சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு தவறிவிட்டது என்று தெரிவித்தார்.
பிரதான வழக்கான 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆன நிலையில், மற்றொரு வழக்கான தனியார் டி.வி.க்கு ரூ.200 கோடி பெறப்பட்டதா என்ற கேள்வி எழவில்லை என்றும் நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் தொடக்கம் மற்றும் தோற்றம் ஆ. ராசாவின் செயல்பாடுகளில் இல்லை, ஆனால், மற்றவர்களின் செயல்பாடு அல்லது செயலின்மையால்தான் நடந்தது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த உடனடி வழக்கில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டத்தின் மொத்த உருவமாக ராசா திகழ்ந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.

வியாழன், 21 டிசம்பர், 2017

2ஜி வழக்கில் ஆதாரத்திற்காக 7 வருடமாக காத்திருந்தேன்: நீதிபதி சைனி

கலைஞர் தன் கைப்பட எழுதி கையெழுத்திட்ட கருத்து 
தினமலர் :புதுடில்லி: 2ஜி வழக்கில் யாராவது ஏற்று கொள்ளப்படக்கூடிய சாட்சியோடு வருவார்கள் என காத்திருந்ததாக டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் 1,500 பக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி சைனி கூறியதாவது: கடந்த 7 வருடங்களாக, அனைத்து பணி நாட்கள், கோடை விடுமுறை நாட்களில் கோர்ட் அறையில் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரையில் பொறுமையாக காத்திருந்தேன். வழக்கில் யாராவது ஒருவராவது கோர்ட்டால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒரு சாட்சியோடு வருவார்கள் என்று... ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் முதலில் ஆர்வமாக துவங்கிய அரசு தரப்பு வாதமானது நாளடைவில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டதாகவும், எதை செய்ய வேண்டும் என்ற நிலையிலும் மாற்றம் உண்டானது. கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்த வாதத்தின் தரமானது ஒரு காலகட்டத்தில் இலக்கற்ற ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

டிவி தொகுப்பாளினி டி டி திவ்வியதர்ஷினி விவாகரத்து மனு தாக்கல் செய்தார்

 சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியும், அவரது கணவரும் பிரிய என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது. பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி தனது பேச்சால் மிகவும் பிரபலமானார். டிவி நிகழ்ச்சிகள் தவிர்த்து சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
நீதிமன்றம் நீதிமன்றம் டிடியும், அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் முடிவில் தீர்க்கமாக இருந்தால் 6 மாதத்தில் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும். பிரச்சனை பிரச்சனை திருமணத்திற்கு பிறகு டிடி டிவி நிகழ்ச்சிகள், படங்களில் நடிப்பது ஸ்ரீகாந்த் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் டிடிக்கும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனையாக இருந்தது. 

சென்னை டு சிங்கப்பூருக்கு கருணை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்

    Director Abbas Akbar Request To Tamil Rockers
  • NDTV :இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • தமிழ்ராக்கர்ஸிடம் படத்தின் இயக்குநர் ரெக்வஸ்ட் வைத்தார்
  • இன்று ‘C2S’ லிங்கை இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டனர்
  • அறிமுக இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இதில் ஹீரோவாக கோகுல் ஆனந்த் என்பவர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியன் டூயட் பாடி ஆடியிருந்தார். முக்கிய வேடத்தில் ராஜேஷ் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

தாய் குழந்தையை கருவறையில் வைத்துக் காப்பது போல என்னைக் காத்தவர் கலைஞர் : ஆ.ராசா பேட்டி

ஒரு தாய் தன் குழந்தையை பனிக்குடத்தில் வைத்துக் காப்பதுபோல என்னைக் காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்துத் தீர்ப்பு வழங்கியது.< இந்நிலையில் தீர்ப்பு குறித்துத் தனியார் தொலைக்காட்சிக்கு ஆ.ராசா அளித்த பேட்டியில், ‘’இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடனே சொன்னேன், இது நிற்காது என்று. ஏனெனில் போதுமான புரிதல், தெளிவு இல்லாமல் அவசர கோலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசியல் காரணமாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் எதுவுமே இல்லை என்பது சிபிஐக்கே நன்றாகத் தெரியும். 14 நாட்கள் எந்தவித பயமும் இல்லாமல் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொன்னேன். அதிலேயே தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.
எனக்கிருக்கும் ஒரே வருத்தம்...

கனிமொழிக்கு காங்கிரஸ் வாழ்த்து!

கனிமொழிக்கு காங்கிரஸ் வாழ்த்து!
மின்னம்பலம் :2ஜி வழக்கில் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட அனைவரையும் விடுதலை செய்வதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி இன்று (டிசம்பர் 21) உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கனிமொழியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தொலைப்பேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராசா கனிமொழி விடுதலை... திமுகவில் ஏற்படுத்த போகும் பாரிய மாற்றங்கள்?

டிஜிட்டல் திண்ணை!
மின்னம்பலம் :“கடவுள் மறுப்பு உள்ளிட்ட திராவிட கொள்கைகளை தமிழகத்தில் தொடங்கி வைத்தது பெரியார். அவருக்கு பிறகு வந்த அண்ணா அதைப்பற்றி பெரிய அளவில் பேசவில்லை. ஆனால், அண்ணாவுக்குப் பிறகு தி.மு.கவின் தலைவரான கருணாநிதி திராவிட கொள்கைகளை மக்களிடம் அதிகமாக எடுத்துச்சென்றார் என்றும் தமிழகத்தில் திராவிடம் பற்றி பேசி வருபவர்களில் முக்கியமானவர் கருணாநிதிதான்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை கருணாநிதிக்கு பெரிய அளவில் ஈடுபாடு இல்லையென்றாலும் அதை எதிர்க்கவும் இல்லை. திராவிட கொள்கைகளில் மீது ஈடுபாடு உள்ளவர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். கட்சிசாராமல் இருக்கும் நடுநிலையாளர்களும் தி.மு.கவுக்குதான் வாக்களிக்கிறார்கள். இதற்கும் காரணம் கருணாநிதி ஏற்படுத்திய இமேஜ்தான்.
இப்போது, அவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. 2ஜி வழக்கில் வரப்போகும் தீர்ப்புதான் தி.மு.கவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். 2ஜி வழக்கில் எந்தவிதத்திலும் நாம் தி.மு.கவுக்கு உதவுக்கூடாது. 2ஜி தீர்ப்பு தி.மு.கவுக்கு எதிராக வரும்பட்சத்தில், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீண்டும் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இது தி.மு.கவுக்கு மிகப்பெரிய சரிவை உண்டாக்கும். அப்போது, நடுநிலையாக இருந்து தி.மு.க பக்கம் சாயும் வாக்குகள் அவங்களுக்கு போகாது. அவர்களை எப்படி பி.ஜே.பி பக்கம் கொண்டுவரலாம் என்று நாம் சரியாக யோசித்து அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்கவேண்டும். இப்படி இரண்டு கட்சிகளுக்கும் சரிவை உண்டாக்கும் நேரத்தில்தான் நமது வளர்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். இந்த தகவல்களை மனதில் வைத்து நமது அரசு செயல்பட வேண்டும் என்று மோடியிடம் சொல்லி இருக்கிறார்கள். இனி, மோடி என்னசெய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ - என்ன புரியவில்லையா? கடந்த 03.09.2016 டிஜிட்டல் திண்ணையில் நாம் குறிப்பிட்டு இருந்த தகவல்தான் இது.

ஆர் கே நகர் ..75 வீதம் வாக்குகள் பதிவு .. யாருக்கு சாதகம்... சீமானுக்கா????? பஜகவுக்கா??????

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (டிசம்பர்21) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
75% வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காக 50 வாக்குப்பதிவு மையங்களில் 258 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3,300 போலீசாரும், 1,500 துணை ராணுவத்தினரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அடையாள அட்டைச் சரிபார்ப்புக்கு பின்னரே வாக்காளர்கள் சாவடிக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலாகவே, மக்கள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் குவியத்தொடங்கினர். வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 7.32 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் சாட்டையடி


Our stand has been vindicated, it was a scam by Vinod Rai: Kapil Sibal post 2G verdict 2ஜி விவகாரத்தில் தொடர்ந்து ஊழல் ஊழல் என்று பேசி வந்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியுள்ளார். 2ஜி வழக்கு தீர்ப்புகுறித்து கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது நிலைப்பாடு வென்றுள்ளது. வினோத் ராய் கற்பனையாக கூறிய கணக்கு பொய் என்று உறுதியாகியுள்ளது. நான் இது ஊழலே அல்ல என்று தொடர்ந்து கூறி வந்தேன்.
இது உண்மையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் செய்த ஊழல். அதைத்தான் தற்போதைய தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. வினோத் ராயின் செயல்பாட்டால் தொலைத் தொடர்புத் துறையே சீரழிந்து போய் விட்டது.
வினோத் ராய் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அரசு கொடுத்த பதவி பறிக்கப்பட வேண்டும். பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சிபல். tamiloneindia. sutha