சனி, 17 பிப்ரவரி, 2018

கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ குடும்பத்துடன் இந்தியா வந்தார்

maalaimalar :கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ தனது குடும்பத்துடன் ஒருவார அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். புதுடெல்லி: இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்தும் விதமாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ ஒருவார அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று மாலை டெல்லி வந்தடைந்தார்.

சித்தராமையா : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்க்கும்

Karnataka to oppose to set up Cauvery management board: CM Siddaramaiah tamil.oneindia.com - veerakumaran : பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இன்னும் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், நேற்று, காவிரி வழக்கில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று நிருபர்களிடம் கூறுகையில், "பொதுவாக எந்த ஒரு நதிநீர் விவகாரமாக இருந்தாலும், மேலாண்மை வாரியம் அல்லது, கண்காணிப்பு குழு அமைப்பது வழக்கம்தான்.
காவிரி விவகாரத்தில் கண்காணிப்பு குழு ஏற்கனவே செயல்பட்டு வருவதால், மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை.
மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும். காவிரி பாசன மாநிலங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

நீரவ் மோடி இந்தியா கொண்டுவரப்படுவாரா? அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி .

மின்னம்பலம் :நீரவ் மோடியையும் விஜய் மல்லையாவையும் எத்தனை நாள்களுக்குள் மத்திய பாஜக அரசு இந்தியாவுக்குக் கொண்டுவரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
பிரபல நகைக்கடை அதிபரான நீரவ் மோடி, மும்பையிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,292 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, சிபிஐயும் மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை செய்து வருகின்றன. நீரவ் வீட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும் நகையும் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆனால், நீரவ் மோடியும் அவரது நிறுவன பங்குதாரரான மெகுல் சின்னுபாய் சோக்சியும், கடந்த ஜனவரி மாதமே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருவரது பாஸ்போர்ட்டையும் நான்கு வார காலத்துக்கு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது இந்திய வெளியுறவுத் துறை. சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போல், நீரவ் மோடி, அவரது மனைவி மற்றும் உறவினர்களைத் தேடி வருகிறது. இவர்கள் அனைவரும், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவை திட்டமிட்டுக் கொன்றனர் .. அமைச்சர் வீரமணி திடீர் குற்றச்சாட்டு



திட்டமிட்டுக் கொன்றனர்!மின்னம்பலம்:  சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டே ஜெயலலிதாவைக் கொன்றனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிவந்த நிலையில் எடப்பாடி அரசு கடந்த ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்தின முன்பு அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா உதவியாளர்கள், தினகரன் தரப்பினர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக சாட்சியம் அளித்து வந்தனர். மேலும், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக கோரி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் விசாரணை ஆணையத்தின் சார்பாக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் கே.சி. வீரமணி சசிகலா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பன்னீர்செல்வம் : பிரதமர் கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன்!

மின்னம்பலம்: பிரதமர் மோடி கூறியதன் பேரில்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன் என பன்னீர்செல்வம் கூறியுள்ள நிலையில், கட்சியிலோ ஆட்சியிலோ மத்திய அரசு தலையிடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று பிப்ரவரி (17 ) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவிரி பங்கீட்டில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது மன வேதனையைத் தருகிறது. சட்ட வல்லுநர்களோடு தமிழக அரசு கலந்தாலோசித்து, நமக்கு வேண்டிய உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அளவு தண்ணீரை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும்.
பிரதமரின் அறிவுரையின் பேரிலேயே அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் பதவியை ஏற்றதாகவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “இதை பாஜக தலையீடு என்று சொல்ல முடியாது.

ஸ்டாலின் :தமிழை ஆட்சி மொழியாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்குக ..

தமிழை ஆட்சிமொழி ஆக்குக: ஸ்டாலின்மின்னம்பலம்: சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், அவரது கருத்தில் உண்மையிருந்தால் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 17) தனது ட்விட்டர் பக்கத்தில், “சமஸ்கிருதத்தைவிடத் தமிழ் பழமையானது என்ற பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ் மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

BBC :மெக்ஸிகோவில் 7.2 அவிலான கடும் நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்


மெக்ஸிகோவில் 7.2 அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு மெக்ஸிகோவில் வஹாக்கா மாநிலத்தில் ஒயாசகா நகரத்திற்கு அருகில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மெக்ஸிகோவில் ஆட்டம் கண்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் வஹாக்கா மாநிலத்தின் பினோடெபா டி டென் லுஸ் நகருக்கு அருகில் 24.6 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
வஹாக்கா மாநிலத்தில் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், மெக்ஸிகோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களைவிட்டு வெளியேறுவதை காணக்கூடியதாக இருந்தது.
மெக்ஸிகோ நகரம் உள்பட 5 மாநிலங்களில் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள், குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் இருக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி

செய்தி 1 :
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின் போது யாரெல்லாம் அவரோடு பயணிக்கிறார்கள் என்கிற விவரத்தைக் கோரி கடந்த மாதங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு தனிநபர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த கோரிக்கைகளை மறுத்த பிரதமர் அலுவலகம், மேற்படி தகவல்கள் இரகசியமானவை என்றும் அவற்றை வெளியிட முடியாதென்றும் பதிலளித்திருந்தது. இத்தகவல்களை வெளியிடுவது “தேசப்பாதுகாப்புக்கே” ஆபத்தானது என்கிற வியாக்கியானத்தை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
செய்தி 2 :
குஜராத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்பவர் முகேஷ் அம்பானியின் உறவினர். இவரது தம்பி நீஷல் மோடி, முகேஷ் அம்பானியின் உறவுக்காரப் பெண்ணை கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நீரவ் மோடி ஒரு வைர வியாபாரி. இந்தியா தவிற வேறு சில நாடுகளில் அவர் வைர வியாபாரம் செய்து வந்தார். வைரம் மற்றும் அறிய கற்களை இறக்குமதி செய்வதன் பேரில் பஞ்சாப் தேசிய வங்கியிடம் இருந்து வங்கி உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அதனை வெளிநாட்டு வங்கிகளில் பணமாக மாற்றி வந்துள்ளார்.

காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !


வினவு :தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக ‘போராடுகிறார்கள்’. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.
பிப்ரவரி 14 வந்தாலே காவி வானரங்களின் கத்தல் அதிகமாகி விடுகிறது! தொலைக்காட்சிகளும் ஒருபக்கம் காதலர் தின சிறப்பு நிகழ்வுகளை காட்டிக் கொண்டே மறு பக்கம், அர்ஜுன் சம்பதையும், ‘பல அவதாரம்’ ராம சுப்புரமணியன் ஆகியவர்களைக் கொண்டு காது அலறும் வண்ணம் விவாதங்களை நடத்துகிறது.
நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்தல், பல இடங்களில் கையில் தாலியுடன் வில்லன்களாக வலம்வருதல், பொது இடங்களில் இருக்கும் காதலர்களை மிரட்டுதல், அடித்தல், விரட்டுதல், படம் எடுத்தல் என எல்லா அநாகரீகங்களையும், அத்துமீறல்களையும் செயகின்றனர், இந்துமதவெறி கூட்டத்தினர்.

காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !

வினவு :ஜல்லிக்கட்டில் உச்சிகுடுமி மன்றத்தை பணியவைத்தது மேல் முறையீடு அல்ல என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். காவிரியில் நியாயம் பெற செய்யவேண்டியது மேல்முறையீடு அல்ல, டில்லிக்கட்டைத் மீண்டும் தொடங்குவது தான் !
ஈருடல் ஓருயிராய் – தமிழகத்தின் எதிரிகள்காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் முதுகில் மீண்டும் குத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் இன்று (பிப்ரவரி 16, 2018) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழகத்துக்கு வழங்குமாறு ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் உத்தரவிட்ட 192 டி.எம்.சி அளவு நீரை 177.25 டி.எம்.சி-யாக குறைத்து தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளது உச்சநீதிமன்றம் .
கடந்த 2007-ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீரை, 10 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களும் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.

கேடி ஜாக்கி வாசுதேவ் தமன்னா ... ஏழைப்பெண்களின் வாழ்வை சூறையாடி ஆடும் கூத்து


ஒரு flashback :
மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன்  ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.
-வினவு

ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

அமெரிக்கா அழிய‌ப் போகிற‌தா? நியூசிலாந்தில் குடியேறும் ப‌ணக்கார‌ர்க‌ள்!


Kalai Marx · :  அமெரிக்காவின் எதிர்கால‌ம் ப‌ற்றி அங்கு வாழும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் என்ன‌ நினைக்கிறார்க‌ள்? அவ‌ர்க‌ள் ஒரு ஊழிக்கால‌த்திற்கு த‌யாராகிக் கொண்டிருக்கிறார்க‌ள். ஏழை, ப‌ண‌க்கார‌ இடைவெளி அதிக‌ரித்து வ‌ருவ‌தால், இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ம‌க்க‌ள் ஒரு வ‌ர்க்க‌ப் போருக்கு த‌யாராக‌லாம். அப்போது எந்த‌வொரு ப‌ண‌க்கார‌ரும் த‌ம‌து சொத்துக்க‌ளை காப்பாற்றிக் கொண்டு பாதுகாப்பாக‌ வாழ‌ முடியாத‌ நிலை வ‌ர‌லாம். அத்த‌கைய‌தொரு நிலைமை, ப‌ண‌க்கார‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் ஒரு "ஊழிக்கால‌ம்"!
பின்வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ள் நெத‌ர்லாந்து ப‌த்திரிகையான‌ Trouw (6-1-2018) இல் வெளியாகியுள்ள‌ன‌. அவ‌ற்றை சுருக்க‌மாக‌ மொழிபெய‌ர்த்து த‌ருகிறேன்.
அமெரிக்க‌ப் பொருளாதார‌ம் பின்னோக்கிச் செல்வ‌துட‌ன், அர‌சிய‌ல் குழ‌ப்ப‌ங்க‌ளுக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ள‌து. க‌டும்போக்கு ஜ‌னாதிப‌தி டிர‌ம்பின் கொள்கைக‌ளால் உல‌கில் புதிய‌ யுத்த‌ங்க‌ள் தோன்ற‌லாம். அதே நேர‌ம் அமெரிக்காவிலும் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்க‌லாம். அப்ப‌டி எதுவும் ந‌ட‌க்காவிட்டாலும் மிக‌ப் பெரிய‌ ச‌மூக‌- பொருளாதார‌ மாற்ற‌ங்க‌ளை எதிர்கொள்ள‌ வேண்டி இருக்கும். ப‌ல‌ ப‌ண‌க்கார‌ அமெரிக்க‌ர்க‌ள் நியூசிலாந்தில் வீடு வாங்கிக் குடியேறுவ‌த‌ற்கு இது தான் கார‌ண‌ம்.

சத்தியவாணி_முத்து அம்மையாரின் 95-வது பிறந்தநாள் இன்று (15-02-1922)

ஸ்டாலின் தி :: தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்" நிறுவனர் போற்றளுக்குரிய தலைவர் #சத்தியவாணி_முத்து அம்மையார்  ---------------------------------------
ஊழல் குற்றவாளிகளென அறியப்படுவோர்களே, திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களாக இன்றையச் சூழலில் அறியப்படுகிறார்கள். பெருமைக்குரிய, மக்களின் நலனுக்கான அறிவையும் உழைப்பையும் அளித்துள்ள பலரையும் இன்றைய தலைமுறைக்கு, திராவிட அரசியல் கட்சிகளே அறியப்படுத்தவில்லை. அப்படி அவர்கள் மறைக்கப்படுவதற்கு சாதியும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதியின் காரணமாக மறக்கடிக்கப்படுபவர்களில் அம்மா சத்தியவாணி முத்து அவர்களும் ஒருவர்.
சத்தியவாணி முத்து அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 1949 துவங்கப்பட்டபோதே அதன் பிரமுகராக இருந்தவர். அவர் பறையர் சமூகத்தில் பிறந்தவர் என்பதாலும் பட்டியலின சமூகத்தின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை விதைத்தவர் என்பதாலும் திமுகவின் தலித் சமூக பிரதிநிதியாகவே கருதப்பட்டவர். மேலும், அவரும் கருணாநிதி அவர்களும் திமுகவின் ஐம்பெருந்தலைவர்களுக்கும் அடுத்தக் கட்டத் தலைவர்களாக இருந்தவர்களாவார்கள்.

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்? தூத்துக்குடியை துவம்சம் செய்யும் அனில் அகர்வால்


ஜீவானந்தம் ராஜவேல் :  அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஹைதரபாத் .குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி கைது!

குழந்தையை  நரபலி கொடுத்த தம்பதி கைது!தன்னுடைய மனைவியின் நோயைக் குணப்படுத்த மூன்று மாத குழந்தையைச் சந்திரகிரணத்தன்று நரபலி கொடுத்த தம்பதியைப் போலீசார் கைது செய்தனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஹைதராபாத்தில் உப்பல் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் டாக்ஸி ஓட்டுநர் ராஜசேகர், அவர் மனைவி ஸ்ரீலதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் கூறுகையில், தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோயைக் குணப்படுத்த ஒரு பெண் குழந்தையைச் சந்திரகிரணத்தன்று நரபலி கொடுக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுநரான ராஜசேகருக்கு மந்திரவாதி ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.

அதிமுக-பாஜகவின் துரோகம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்: காவிரி ..ஸ்டாலின் பேட்டி

tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு அமைக்கவில்லை. காவிரி பிரச்சினையில் அதிமுக, பாஜகவின் துரோகத்தை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:
"இன்று உச்ச நீதிமன்றம் அளித்து இருக்கின்ற தீர்ப்பு மிகப் பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கும், குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்சியானது உச்ச நீதிமன்றத்தை முறையாக அணுகாமல், அலட்சியத்துடன் கோட்டைவிட்டு இருக்கிறார்கள்.

சித்தராமையா "மகிழ்ச்சி" .. பெங்களூரு குடிநீருக்காக உச்ச நீதிமன்றத்தை வளைத்த தீர்ப்பு?

தினகரன் :பெங்களூரு: உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரு நகர குடிநீர் பிரச்சனை தீரும் என்றும் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காவிரி விகவாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு 

tamilthehindu :பெங்களூர் குடிநீர் தேவைக்காக உச்சநீதிமன்றத்தை வளைத்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளார்கள்:சர்வதேச தரத்தையும், முக்கியத்துவத்தையும் பெங்களூரு பெற்று வருவதாலும், மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டும், சமகாலத்தில் மையமான பகுதியில் பெங்களூரு நகரம் இருப்பதாலும் கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் ஒதுக்குகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

சமஸ்கிருதத்தைவிடப் பழமையானது தமிழ்தான்: பிரதமர்!

சமஸ்கிருதத்தைவிடப் பழமையானது தமிழ்தான்: பிரதமர்!
மின்னம்பலம்: சமஸ்கிருதத்தைவிடப் பழமையான
மொழி தமிழ்தான் என்றும், தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
அடுத்த மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், டெல்லியிலுள்ள தல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் இன்று (பிப்ரவரி 15) தேர்வு தொடர்பாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் பரீக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நீங்கள் இந்தியாவின் பிரதமரிடம் பேசவில்லை, ஒரு நண்பரிடம் பேசுகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ளத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்வி கேட்ட மாணவர்களுக்கும் பதிலளித்தார்.

காவிரி தீர்ப்பா? தீர்வா? வைரமுத்து .. ஏமாற்றம் அளிக்கிறது ரஜினிகாந்த் ..

தினமணி :காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.
அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர்.
காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

எனது பதவிக்கு ஆபத்து இல்லை: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி

எனது பதவிக்கு ஆபத்து இல்லை: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டிதினத்தந்தி :எனது ஆட்சிக்கு ஆபத்து இல்லை. பிரதமராக தொடர்ந்து நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 341 இடங்களில் 240-க்கும் அதிகமான இடங்களில் ராஜபக்சே கட்சிக்கூட்டணி வென்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தனது வலுவான களங்களான கொழும்பு பிரதேசத்தில் பல இடங்களை பெரமுனா கூட்டணியிடம் இழந்தது. இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே, “சிறிசேனா தலைமையை மக்கள் ஏற்கவில்லை. இனியும் இந்த அரசு தொடரக்கூடாது என மக்கள் தீர்ப்பளித்து விட்டனர்” என பேட்டியளித்தார்.

BBC : காவிரி தீர்ப்பு ஏன் தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது?

காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியை குறைத்து வழங்க இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பிற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஏமாற்றத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், இதனால் தமிழக விவசயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் பிபிசி தமிழிடம் உரையாடினர்.
''தமிழகத்தை பொருத்தவரை இந்த தீர்ப்பு ஒரு பாதகமான தீர்ப்பு. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்ட தீர்ப்பே தமிழகத்துக்கு பாதிப்பு உண்டாக்கிய நிலையில், தற்போதைய தீர்ப்பில் மேலும் 14.75 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது'' என்று காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார்.
''பெங்களூரு நகர குடிநீருக்காக நீர் ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாநிலத்தில் அதிக அளவு நீர் ஆதாரம் உள்ளது. அலமாட்டி அணையில் ஆண்டுக்கு இருமுறை நீர் நிரம்புகிறது'' என்று அவர் மேலும் கூறினார்.
'கர்நாடகத்தில் கடலில் கலந்து வீணாகிறது காவிரி நீர்'
மேலும், அவர் கூறுகையில், ''கர்நாடகத்தில் மேற்கு நோக்கி ஓடும் நதிகளில் ஏறக்குறைய 2000 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அதில் இருந்து நீர் எடுத்து அம்மாநில குடிநீருக்காக பயன்படுத்தலாம். ஆனால், தமிழகத்துக்கு காவிரி நதிநீரை தவிர வேறு நீர் ஆதாரம் ஏது?'' என்று வினவினார். தற்போது உத்தரவிடப்பட்ட 177.25 டிஎம்சி நீராவது நிச்சயம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு , ''தீர்ப்பின் முழு விவரம் குறித்து தெரியவில்லை. முந்தைய இடைக்கால தீர்ப்பு போல் நீர் பங்கீடு அமைந்தால் விவசயிகளுக்கு சற்று ஆறுதலாக அமையும்'' என்று தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமையும்?

அத்தனை தொலைக்காட்சிகளிலும் ஜாக்கி வாசுதேவ் தமன்னா விளம்பர சிவ .... ராத்திரி!

சிவசங்கர் எஸ்.எஸ் : முக்கிய எதிர்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க, மு.லீக், ம.ம.கட்சி ஆகியவற்றின் பேச்சாளர்கள் கொண்ட கூட்டம். அ.தி.மு.க அரசின் அராஜகப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பொதுக் கூட்டம், 13.02.2018 அன்று.
அரியலூரில், தி.மு.க சார்பில் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்களும், காங்கிரஸ் சார்பில் திருச்சி வேலுசாமி அவர்களும் உரையாற்றினர். கூட்டம் 10 மணியை கடந்து முடிந்தது.
அலுவலகம் திரும்பி, சென்னை பயணத்திற்கு தயாரானேன். மறுநாள் கழக செயல் தலைவர் தளபதி அவர்களின் கள ஆய்வு. ஊராட்சி செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுடன் மேற் கொள்ளும் ஆய்வு நிகழ்ச்சி.
இரவு உணவுக்கு அமர்ந்தேன். தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. கலைஞர் செய்திகளில், திருவள்ளூர் பொதுக் கூட்டத்தில் தளபதி அவர்கள் ஆற்றிய கண்டன உரையின் முக்கியப் பகுதிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
தளபதி உரை முடிந்ததும், மற்ற சேனல்களுக்கு தாவினேன். தலைப்பு செய்திகள், விரைவுச் செய்திகள் என்று பல்வேறு தலைப்புகளில் செய்தி மழை. சில சேனல்கள் காட்சி மாற ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் பாஜக தோற்றத்தில் இருந்து அதிமுக பாஜகவை சீண்ட தொடங்கி விட்டது?

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வேதனையுடன் கூறிய விவரம்
வளர்ந்த மாநிலம் என்று சொல்லி மத்திய அரசு நமக்கான நிதியை குறைப்பு செய்கிறது. இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் கேட்டு பெறுவோம். 15-வது நிதிக்குழு தமிழகத்தின் பங்கை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருப்பது குறித்து கேட்கிறீர்கள். அவரின் இந்த கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறான பொய் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் கூறினார்
ஓ.பன்னீர்செல்வம் பேட்டியை கண்ட முக்கிய பாஜக பிரமுகர் "ராஜஸ்தானில் இடை தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்கு வித்யசாத்தில் பாஜக படுதோல்வி அடைந்து இருந்தது முதல் அதிமுகவினர் போக்கு மாறி விட்டது" என்று நம்மிடம் கருத்து தெரிவித்தார்
பாஜக மோடி அரசை எதிர்க்கும் அதிமுக மேலும் காரணம் அ என்னh

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்!’ - உசச்நீதிமன்றம் உத்தரவு

காவிரி
சித்தராமைய்யாகாவிரி பிரச்னைvikatan அஷ்வினி சிவலிங்கம்: காவிரி *தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கர்நாடகாவில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. சித்தராமைய்யா *இதுவே இறுதி தீர்ப்பு. மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 *’காவிரி நதி நீரை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். *காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. *தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கி வருகிறது. தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசித்து வருகிறது. காவிரி காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது.
 *காவிரி பிரச்னையில் தஞ்சை விவசாயிகள் 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.

காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பு.. 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும்

cauvery-water315-27-1474943556உச்ச நீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு: ஹைலைட்ஸ் டெல்லி: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. காவிரி வழக்கின் பின்னணி: 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த 4 மாநிலங்களின் வழக்குகள் ஒன்றாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.  https://tamil.samayam.com/l

கர்நாடக தமிழக பேருந்து போக்குவரத்துக்கள் நிறுத்தம்

busesநக்கீரன் இசக்கி :  ;காவிரி நதி நீர் பங்கீடு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு! காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க இருக்கிறார். காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
 அதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒசூர், சத்தியமங்கலம் பகுதயில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழகதத்தை சேர்ந்த 11 அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சந்தர்பத்தை பயண்படுத்தி கர்நாடகா மாநிலத்திற்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.<

சந்தையூர் தடுப்புசுவர் தீண்டாமை சுவரா ? கள ஆய்வு .. ஆவணப்படம்



Karuppar Koottam Published on Feb 15, 2018 தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இடையே ஏற்றத்தாழ்வு, பாகுபாடு பார்க்கப்படுவதாக சொல்லப்பட்ட சந்தையூர் கிராம சுவர் பற்றிய முழுமையான கள ஆய்வு...இரு தரப்பு மக்களின் நிலை பற்றிய நேரடி ஆய்வு பதிவு. ஆவணப்படுத்துவோம்.

கலைஞர் பேச்சு பயிற்சி அளிக்கப்படும் .. ,பேரன் மகிழ்நன் தாத்தாவுடன்..

tamilthehindu :திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தொண்டையில் பொறுத்தப்பட்டிருந்த ட்ரக்யோஸ்டமி குழாய் அகற்றப்பட்டு சிறுகுழாய் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் தமிழக அரசியலில் முக்கிய மாறுதல் ஏற்பட்டது. இரண்டு முக்கிய சக்திகளான ஜெயலலிதா மறைவு, கருணாநிதி ஓய்வு காரணமாக அரசியலில் பெரிய அளவில் வெற்றிடம் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கையாக சுவாசிக்க ட்ரக்யோஸ்டமி குழாய் பொறுத்தப்பட்டது.

ஓடிஷா தலைமை செயலர் பாண்டியன் ஐ ஏ எஸ் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்


தினமணி :கடந்த சனிக்கிழமை ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த
சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகத் திறம்பட செயல்படுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்திய அரசுப் பணி அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருக்கிறது. மதிற்சுவரைத் தாண்டிச் சென்று பூந்தொட்டிகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள். சாணத்தைக் கரைத்து வீட்டின் சுவரில் ஊற்றி இருக்கிறார்கள்.
இது ஏதோ அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறிவிடலாம். ஆனால் திட்டமிட்டு ஓர் அரசியல் கட்சியால், அதுவும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களமிறங்கி இருக்கும், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் இந்த வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

புஷ்பவனம் குப்புசாமியின் பதவியை தட்டி பறித்த சுதா ரகுநாதன் பிரமிளா குருமுர்த்தி பார்ப்பன கூட்டு ...



புஷ்பவனம் குப்புசாமியின் பாடலை தரிசிக்காத தமிழர்களே இருக்க முடியாது. இசையை முறையாகக் கற்று தமிழ் உணர்வை மேடைகளில் ஊட்டியதோடு, கிராமப்புற பாடல்களை வெகு மக்கள் ரசிக்கும் படியாக தன் கணீர் குரலில் அருமையாக பாடி புகழ் பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி. குறிப்பாக தன் சாதியால் முன்னுக்கு வராமல் தன் பாட்டுத் திறமையால் முன்னுக்கு வந்த மூத்த பாடகர்.
இசைக்காக இரு முறை முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் வென்றவர். ஆல் இந்தியா ரேடியோவின் ஏ – கிரேட் ஆர்டிஸ்ட் என சகல தகுதிகளோடும் இசை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராகும் தகுதியோடு இருந்த புஷ்பவனம் குப்புசாமி அந்த பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விட தகுதி குறைவான ஆனால் பிராமாணர் சாதியில் பிறந்த பிரமிளா குருமூர்த்தி என்பவருக்கு கடைசி நேரம் இசை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

காவேரி உச்ச நீதிமன்ற தீர்ப்பு காலை 10.30 மணிக்கு வெளியாகும் ,,,

Lakshmi Priya - Oneindia Tamil காவேரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பு ... பிப்.16 வெளியாக வாய்ப்பு ?
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. எனினும் 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் என்று இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதுபோல் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டிஎம்சி நீரில் 132 டிஎம்சியாக குறைத்து விட்டு மீதமுள்ள 60 டிஎம்சி தண்ணீரை தங்கள் மாநிலத்துக்கே தர வேண்டும் என்று கர்நாடகமும் மேல்முறையீடு செய்தது.
தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. இந்நிலையில் 3 நீதிபதிகளில் அமிதவராய் வரும் 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.. கன்னட வளர்ச்சி ஆணையர் அழைப்பு

Veera Kumar- tamil.oneindia.com ஹிந்தி திணிப்புக்குகன்னட வளர்ச்சி ஆணையம் என்ற ஒன்று கன்னட மொழி வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. பொதுவாக ஆளும் கட்சியை சேர்ந்த, கன்னட அறிஞர் ஒருவர் இதன் தலைவராக நியமிக்கப்படுவார்கள்.
எதிராக ஒன்றிணைய வேண்டும், கன்னட ஆணையர் அழைப்பு | பெங்களூர்: ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் கூட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறியுள்ளார்.
கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக உள்ளவர் எம்.ஜி.சித்தராமையா, தமிழ் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்தி திணிப்பு மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு, ரயில்வே, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள், அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஹிந்தி திணிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி திணிப்பு மொழி பிரச்சினை மட்டும் கிடையாது, மக்களின் வாழ்வாதார பிரச்சினையாகும்.

Demons in paradise ,,,, 800 க்கு மேற்பட்ட டெலோ போராளிகளை நாம் கொன்றோம் .... ஒப்புதல் வாக்குமூலம்

soodram.com :  நினைவில் தடதடக்கும் நிழல் – கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழரின் படம்!” – ஷோபா சக்தி.

2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம்
இயக்கிய ‘Demons in Paradise’ ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது.
‘எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால், அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக்கூடப் பார்த்ததில்லை’ என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள்.
இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து சேர்ப்பதே இலங்கையில் பிரிட்டிஷாரின் ரயில் ஆர்வத்திற்கான காரணம்.
அடுத்த 50 வருடங்களிலேயே நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாமே ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டன.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

சென்னை ஐ ஐ டி யின் ஜாதி வெறிக்கு உயர் நீதிமன்றம் மரண அடி முனைவர் வசந்தா கந்தசாமி ...

 தகுதி
 ஹைகோர்ட் அதிரடி விளாசல் Veera Kumar - Oneindia Tamil ஐஐடி மெட்ராஸ் பேராசியர் தேர்வில் பாரபட்சம் காண்பிப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி | Oneindia Tamil சென்னை: ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் பாரபட்சமாக நிரப்பப்பட்டுள்ளதாக கணிதமேதை முனைவர் வசந்தா கந்தசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெளுத்து வாங்கியுள்ளது. முற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதற்காக பாதிக்கப்பட்ட முனைவர் வசந்தா கந்தசாமிக்கு உதவி பேராசிரியர் அல்லது பேராசிரியர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றும் ஐஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 1995ம் ஆண்டு ஜனவரியில், ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம், கணித உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வை நடத்தியது. அதேபோல 1996 ஜூன் மாதம், கணித பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால் தகுதி இருந்தும் இவ்விரு தேர்வுகளின்போதும் முனைவர் வசந்தா கந்தசாமிக்கு பணி கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் தகுதி குறைவான முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எஸ்.ஜி.காமத் மற்றும் ஏ.ரங்கன் ஆகியோருக்கு உதவி பேராசிரியர் பணி வழங்கப்பட்டது.

பிரதமர் தமிழக பள்ளிகளில் உரை ..சிறப்பு ஏற்பாடு

தினமலர் :பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் அச்சம் தீரும்
வகையில், பிரதமர் மோடி, நாளை,தேர்வு உரை நிகழ்த்துகிறார். இதை, இணையதளத்தில் பார்க்கவும், கேட்கவும், அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.< தீவிர பயிற்சி</ நாடு முழுவதும், 10 - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச் முதல், பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு வகை நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக, மாணவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.< இந்நிலையில், பொதுத் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத, 'தேர்வு வீரர்கள்' என்ற பொருள்படும் வகையில், 'எக்சாம் வாரியர்ஸ்' என்ற பெயரில், புத்தகம் எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தை வாங்கி, மாணவர்களுக்கு வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அச்சம் தீரவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நாளை, டில்லியில், மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

தினகரனின் புதிய கட்சிக்கு மூன்று பெயர்கள்... அ இ அம்மா தி மு க , எ,அ.மு க , அம்மா எ தி முக .....

அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், 
எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் 
அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம்
உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முடிவு செய்துள்ள டி.டி.வி தினகரன், அம்மா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 3 பெயர்களை டெல்லி ஐகோர்ட்டில் பரிந்துரை செய்துள்ளார். #TTVDhinakaran புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் - கோர்ட்டில் டி.டி.வி தரப்பு பரிந்துரை புதுடெல்லி: ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தனது அணிக்கு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், தனி நபருக்கு அந்த சின்னம் அளிக்கலாம் என்றும் ஒரே அணியாக உள்ளவர்களுக்கு அளிக்க முடியாது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்குவது மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவே என தெரிவிக்கப்பட்டது. இதனால், புது கட்சி தொடங்கி அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

லைகா நிறுவன ராஜு மகாலிங்கம் ரஜினி மன்ற மாநிலச் செயலாளராக நியமனம்! ஒரே கல்லில் இரண்டு வியாபாரம்!

விகடன் :நடிகர் ரஜினிகாந்த் மாநிலம் முழுவதும் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக ஏற்கனவே லைகா நிறுவன முன்னாள் ஊழியரான ராஜு மகாலிங்கத்தை அனுப்பி வைத்த நிலையில் தற்போது மன்றத்தில் முக்கியப் பதவியை அவருக்கு ரஜினி அளித்துள்ளார். முன்னதாக இன்று ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். அப்போது இது வழக்கமான சந்திப்புதான் எனத் தமிழருவி மணியன் தெரிவித்தார்

தினத்தந்தி :கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் சூறாவளி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், திருச்சியில் மாநாடு நடத்தவும் ஆலோசனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

தெருவோரம் சிறுநீர் கழித்த பாஜக சுகாதார அமைச்சர் ... ராஜஸ்தான் ஜெய்பூர் மாநகராட்சி 200 ரூபாய்

திறந்தவெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை மந்திரி வெட்கப்பட வேண்டும்  காங்கிரஸ் கண்டனம்தினத்தந்தி: திறந்த வெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை மந்திரி வெட்கப்பட வேண்டும் காங்கிரஸ் கண்டனம் ராஜஸ்தானில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை மந்திரியின் செயலுக்கு அரசு வெட்கபட வேண்டும் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ராஜஸ்தானில் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் பிங் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்பூர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி காளிச்சரண் சாரப் டோல்பூர் இடைத்தேர்தல் பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள கட்டடம் ஒன்றின் சுவரில் மீது சிறுநீர் கழித்தார்.