சுமதி விஜயகுமார் :
'கொஞ்சமா
மூச்சு இழுத்து விடுங்க. பெருமூச்செல்லாம் விட்டு காத்த waste பண்ணாதீங்க'
என்று யாரவது சொன்னால் பலமாக
சிரித்துவிட்டு 'காத்து என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' என்று கேட்போம். இதே போல் ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் தாத்தாக்களிடம் 'தண்ணிய ரொம்ப செலவு செய்யாதீங்க, சிக்கனமா இருங்க' என்று சொல்லி இருந்தால் நம்மை மேலும் கீழும் பார்த்திருப்பார்கள். அன்று மட்டுமில்லை இன்றும் தண்ணீர் யாருக்கும் சொந்தமில்லை.
15 வருடங்களுக்கு முன்பு bisleri தண்ணீரை உபயோகப்படுத்துவது மேட்டுக்குடி மக்கள் தான். பின்பு அது அந்தஸ்து விஷயமாகி அதுவே அத்தியாவசியமாக மாறியதில் இருக்கிறது முதலாளித்துவம். இன்று நம்மிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் என்று சொல்லும் எந்த அரசாங்கமும் பேர்நிறுவனங்களை நோக்கி, தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் உற்பத்தியை குறைத்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் சொல்லாது. நாமும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்துவோமே தவிர, அடிப்படை தேவையான தண்ணீரை நான் ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று அரசை நோக்கி கேட்கவே மாட்டோம். நாம் சிக்கனமாக செலவழித்து சேமிக்கும் தண்ணீர் யாருக்காக பயன்பட போகிறது? நிச்சயம் நமக்காக இல்லை.