சனி, 19 மார்ச், 2022

வேளாண் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி : வேளாண் பட்ஜெட்டின் 5 முக்கிய அம்சங்கள்!

 கலைஞர் செய்திகள்  : வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி : வேளாண் பட்ஜெட்டின் 5 முக்கிய அம்சங்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022 -2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு

 Hemavandhana -  Oneindia Tamil : மதுரை: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு தந்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பற்றி அவதூறாக பேசியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்ற அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது..
அதாவது, ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய கடமையல்ல, எனவே, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தனர்.

சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 214 பில்லியன் டாலர் கருப்புப் பணம்.. ரஷ்ய பணக்காரர்களுக்கு செக்..

 Prasanna Venkatesh - tamil.goodreturns.in  :  ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தாலும் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்துள்ள தடைகள் ஒருபோதும் நீங்காது.
இதனால் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச சந்தையில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்ய அரசு சொத்துக்களையும், ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை வேக வேகமாகக் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது சுவிஸ் வங்கியில் ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள பணம் குறித்துச் சுவிஸ் வங்கி தகவல்களை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் வங்கி
சுவிஸ் வங்கிகள் எப்போதும் வாடிக்கையாளர்களின் விபரம் மற்றும் பணத்தின் அளவை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கும்.
ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் சுவிஸ் நியூட்டரல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் மூலம் சுவிஸ் வங்கி அமைப்பு ரஷ்யர்களின் பணத்தின் இருப்பு அளவை வெளியிட்டுள்ளது.

தமிழக தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்க: நாராயணன் திருப்பதி

 மின்னம்பலம் : கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் கட்சியான பிஜேபி ஆதரவு அளித்தாலும், பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து நேற்று கர்நாடகாவில் முழு கடை அடைப்பு போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டன.
அதற்கு முன்னதாகவே, இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

புகார் நகரம் காவிரிப்பூம்பட்டினக் கடலடி ஆய்வு

No photo description available.
No photo description available.

PoornaChandra Jeeva  :  சிந்துவெளி நாகரிகப் புகார் நகரம்
காவிரிப்பூம்பட்டினக்  கடலடி ஆய்வு.
பூம்புகார் கடலில் மூழ்கியது வரலாறு. கடந்த 1985-95 இல் திரு. S. R. இராவ் தலைமையில் கடலடித் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட. புகார் நகரம் கடலில் 5கி.மீ தொலைவில், 25 மீட்டர் ஆழம் வரை இருப்பது தெரிய வந்தது. 5-7 மீ ஆழத்தில் செதுக்கப்பட்ட கருங்கல் கட்டுமானங்களும்,  14 மீ ஆழத்தில் கடலடிக் காடுகளும், திறந்த வெளிகளும் உள்ளன. அதற்கப்பால் 20--25மீ ஆழத்தில் பெரிய அளவில் கட்டட இடிபாடுகளும் உள்ளன.
       இவற்றுள் 23 மீ  ஆழத்தில், 5 கி. மீ தொலைவில் செம்புராங்கற்களால் கட்டப்பட்ட பெரிய கட்டடங்கள் உள்ளன. மிகப்பெரிய கட்டடம்  ஒன்று  U வடிவில், வடக்கும் தெற்காக அமைந்துள்ளது. மொத்த நீளம் 140 மீ அளவும், ஒருபக்கம் மட்டும் 85மீ நீளம் உள்ளது. உயரம் 3 மீ ஆகும். இடிந்து வண்டலும், மணலாலும் மூடப்பட்டுள்ளது. இதன் வடக்கு திறந்த வெளியும், இரு புறமும் சிறு இடிபாடுகளும் உள்ளன. இது அக்கட்டடத்தின் வாயிற்புறமும், நுழைவாயில் சுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கோயில், அல்லது விகாரை என்று கூறியுள்ளார் இராவ்.

நண்பனுக்கு பணம் கொடுத்து தந்தையை கொலை செய்த மகன்.. மட்டக்களப்பு

நண்பனுக்கு பணம் கொடுத்து தந்தையை கொலை செய்த மகன்!

tamil.adaderana.lk :  மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

வெள்ளி, 18 மார்ச், 2022

கேரளா நம்பூதிரி நாயர்களின் கொடூர ஆட்சி.. மார்பகங்களை அறுப்பது வாடிக்கை


 Shahul Hameed 
:  அப்போதைய மலபார்/கொச்சி/திருவாங்கூர் பகுதிகளில் நீதியும், தண்டனைகளும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை...
பிராமணர்களின் அறிவுரைகள் படி மட்டுமே நீதி/தண்டனை வழங்கப்பட்டது. பிராமணர்கள் எவ்வளவு கொடிய குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களுக்கு சாதி/சமூக விலக்கு மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது. இந்த தண்டனை கூட சாதாரண பிராமணர்கள் வழங்க முடியாது; அதற்காகவே உயர்ந்த பிராமண நம்பூதிரிகள் இருந்தார்கள். இந்த உயர்ந்த ரக நம்பூதிரி பிராமணர்கள் யார் என்பதைப் பின்னர் பார்ப்போம்.
மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர், தன்னை விட தாழ்த்தப்பட்ட சாதி என்று கருதப்படும் ஒரு மனிதனைக் கொன்று விட்டால் கூட அதற்கு அபராதம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது.
இது போன்ற நீதி நூல்கள் என்னென்ன? அவை, யாரால், எப்போது எழுதப்பட்டது?
அந்த நீதி நூலின் பெயர், 'வியவகார மாலா'.

பட்ஜெட் 2022 ...சென்னை பகுதிகள் மட்டுமா ஓட்டு போட்டார்கள். நாங்களும் தானே ஒட்டு போட்டோம்? ஏன் ஓரவஞ்சனை?

May be an image of 2 people and text that says 'தமிழக பட்ஜெட் 2022-23 ਹ Polimer NEWS ₹ 36,000 கோடி 19,000 கோடி 17,901 கோடி 8,700 கோடி ரூ.7,500 கோடி 4,816 கோடி 3,700 கோடி 3,384 கோடி பள்ளிக்கல்வித்துறை அகவிலைப்படி, ஒய்வூதியம் மக்கள் நல்வாழ்வுத்துறை வீட்டுவசதித்துறை பொது விநியோக திட்டம் ஓய்வூதிய திட்டம் பிரதமர் வீடு திட்டம் நீர்ப்பாசன திட்டம் குடிநீர் ணைப்பு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மகளிர் இலவச பேருந்து திட்டம் நீதி நிர்வாகத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிங்கார சென்னை 2.0 திட்டம் தீயணைப்புத்துறை சுற்றுலாத்துறை இ.சி.ஆரில் வழிச்சாலை திட்டம் ரூ 3,000 கோடி 2,800 கோடி 1,547 கோடி ரூ. 1,520 கோடி 1,461 கோடி 808 கோடி 500 கோடி 496 கோடி 246 கோடி ரூ 135 கோடி 18 MARCH 2022 /linews'

Karthikeyan Fastura :  தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன.
குறையென்று பார்த்தால் இடம் சார்ந்த நலத்திட்டங்கள் சென்னை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளது மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பிற மாநகரங்களுக்கு நலத்திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை.
கிண்டி குழந்தைகள் பூங்காவை 20கோடி செலவில் குழந்தைகள் இயற்கை பூங்காவாக மறுசீரமைக்க ஒதுக்கப்பட்டிருக்கிறது. ( மதுரையில் ஒரு நல்ல பூங்கா கிடையாது )  
300 கோடி ரூபாய் செலவில் கியூ கார்டன்ஸ் லண்டன் உதவியுடன் சென்னைக்கு அருகில் உயிரியல் பூங்கா அறிவித்திருக்கிறார்கள். சென்னைக்கு அருகில் மலையோ காடோ இல்லை ஆனால் செயற்கையாக உயிரியல் பூங்கா அமைக்க திட்டமிடுகிறீர்கள். மதுரையில் சிறுமலை, அழகர்மலை என்று காடுகளுடன் கூடிய இயற்கையான உயிரியல் காடு இருக்கிறது. அதை பூங்காவாக மேம்படுத்தும் ஐடியா இந்த அரசுக்கு இருக்கிறதா என்றால் இல்லை.
10 கோடி ரூபாய்  செலவில் சென்னையில் புயல் முன்னறிவிப்பு நிலையத்தை மறுசீரமைக்க ஒதுக்கியிருக்கிறார்கள்.

180 ஊடகங்களை இழுத்து மூடிய தாலிபான்கள்! – அதிர்ச்சி தகவல்!

 வெப்துனியா  : ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததிலிருந்து இதுவரை 130 ஊடகங்களை இழுத்து மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதுமுதலாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த 7 மாத காலக்கட்டத்திற்குள் ஆப்கானிஸ்தானில் இருந்த 475 ஊடகங்களில் 180 ஊடகங்களை தாலிபான் இழுத்து மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தார் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு இதனால் 43 சதவீத பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது

21 உலக மொழிகளில் தந்தை பெரியார் நூல்களை அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட்: கி.வீரமணி பாராட்டு

dhinakaran : சென்னை: தந்தை பெரியார் நூல்களை 21 உலக மொழிகளில் அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு அளித்தார். மிகச் சிக்கலான இந்த நேரத்தில் அருமையான வரவு- செலவு திட்டத்தை அறிவித்துள்ளதாக கி. வீரமணி பாராட்டு தெரிவித்தார். உலகம் பெரியார் மயமாகும் என்று கூறத்தக்க வகையில் அவரது நூல்களை 21 மொழிகளில் அச்சிட உள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

உயர்க்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000!

 மின்னம்பலம் :  6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இல்லம் தேடி கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் வரும் நிதியாண்டில் ரூ 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில், அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் கல்வி பெற உதவும் நோக்கோடு கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் முழுவிபரம் ! ‘திராவிட மாடல் வளர்ச்சி’: அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள்..

  கலைஞர் செய்திகள்  :  தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை அடங்கிய முழு விவரம் இங்கே...
தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை (பகுதி - II)
“தமிழ் வளர்ச்சி & பண்பாடு முதல்.. பள்ளிக்கல்வித்துறை வரை”: பட்ஜெட்டில் இடம்பெற்ற 64 முக்கிய அறிவிப்புகள்!
    தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும்.

தேசிய பங்குச்சந்தை ஊழல் என்பது என்ன? NSE -எனப்படும் National stock exchange

May be an image of 3 people

பொருளாதார அறிஞர்-ஆனந்த சீனுவாசன்  : தேசிய பங்குச்சந்தை ஊழல் என்பது என்ன?
என்னால் முடிந்த அளவு எளிமையாக இது பற்றி விளக்குகிறேன்::---
NSE -எனப்படும் National stock exchange,,
பேப்பரில் அனைத்து Stock exchange முறைகளும் பாண்டு பேப்பரின் வழியே நடந்து கொண்டிருந்த போது அதை
ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் முறையை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர்
ரவிநாராயணண்
சித்ராராமகிருஷ்ணன்
இதில் ரவிநாராயணண் என்பவர் தான் 2011-வரை NSE ன் CEO வாக இருந்திருக்கார்
மும்பையில் உள்ள இதன் தலைமை அலுவவகத்தில் இருக்கும் Mainframe_computer மூலமாகத்தான் ஒரு நாளைக்கு பல லட்சம் கோடி பரிவர்த்தனை இந்த NSE ல் நடக்கிறது...

இன்று தமிழ்நாடு பட்ஜெட் .. மக்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வரும்?

 Shyamsundar  - e Oneindia Tamil :  சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதை முன்னிட்டு இன்று காலை நிதி அமைச்சர் பிடிஆர் மூலம் நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மையான நிதி நிலை என்ன, என்னென்ன திட்டங்களை இதன் மூலம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்துவிடும்.
தமிழ்நாடு பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வெளியாகிறதா? யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்நாடு பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வெளியாகிறதா? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் குழு துபாய் பயணம்: தயாராகும் தனி விமானம்!

 மின்னம்பலம் : தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், வரும் மார்ச் 25, 26 தேதிகளில் துபாய்க்குப் பயணம் மேற்கொள்கிறார்.
துபாயில் 192 நாடுகள் பங்கேற்பில் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சி (துபாய் எக்ஸ்போ)யில் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போ எனப்படும் இந்த தொழில் காட்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு தனி அரங்கை நிறுவியுள்ளது. இந்த வகையில் இந்தியா அமைத்த அரங்கத்தை அண்மையில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.

ரஷ்யா ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படும் தேசிய இன மக்கள்

 Umayan Natarajan  :  ரஷ்யாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மொத்த மக்கள் தொகையில் 57 சதவீதம் ,அல்லது 10 கோடிக்கு மேல்; நாட்டின் எல்லைப்  பிராந்தியங்களில் அத்தேசிய இனங்கள் வசிக்கின்றன; அத்தேசிய இனங்களில் சில ருஷ்யர்களை காட்டிலும் கூட கலாச்சாரத்தில் உயர்ந்தவை;
உருசியாவின் அரசியல் முறையில் அதன் அனாகரிக மத்திய கால குணாம்சங்கள் விசேஷமாக காணப்படுகின்றன;
அந்நாட்டின் பூர்சுவா ஜனநாயக புரட்சி இன்னும் நிறைவு பெறவில்லை -

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவு போராட்டமும் .. தட்டி கழித்த தந்தை எஸ் ஜே வி செல்வநாயகமும்

 .bazeerlanka.com : தீண்டாமைக்கெதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக: முன்னுதாரணமான ஒரு போராட்டத்தின் படிப்பினைகள்! – முதலி சின்னையன்
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் 1966 ஒக்ரோபர் 21 இல் ஆரம்பமான தீண்டாமைக்கு எதிரான போராட்ட எழுச்சி ஏற்பட்டு 2016 ஒக்ரோபர் 21 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தப் போராட்டம் தமிழர்களின் போராட்ட வாழ்வில் ஒரு மைல் கல்லாகவும், பெறுமதியான படிப்பினைகளை வழங்கும் பொக்கிசமாகவும் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்கள் தமது இன உரிமைகளுக்காக முதலில் சாத்வீக வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியிருக்கிறார்கள் எனப் பலரும் கூறுவதுண்டு. 

முஸ்லீம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பரூக் நினைவேந்தலுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்க அரங்கம் மறுப்பு..

May be an image of 3 people and text

Prabaharan Alagarsamy :  ஒரு சில (மிக மிகச் சில) முஸ்லிம் நபர்கள் கொடுத்த நெருக்கடியால்,
பத்திரிக்கையாளர் சங்க அரங்கத்தில் நடக்கவிருந்த  இந்த நிகழ்வானது  திவிக  அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
தோழர் பரூக் ஒரு மத அடிப்படைவாதியால் (தனிநபர்)  அவருடைய நாத்திக கொள்கைக்காக கொல்லப்பட்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிகூட நடத்தக்கூடாது என்று சிலர் நினைப்பது அவமானகரமானது.
உண்மையில் அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவில்லை.  பரூக் கொல்லப்பட்ட பிறகுதான் பல முஸ்லிம் நாத்திகர்கள் (முன்னாள் முஸ்லிம்கள்) துணிச்சலாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். தோழர் பரூக் நினைவேந்தல்கூட நடத்தக்கூடாது என்று பிரச்சாரம் செய்ய செய்யதான் , யார் அந்த பரூக், யாரால் எதற்காக கொல்லப்பட்டார் என்கிற ஆவல் முஸ்லிம் இளைஞர்களிடம் வளரும் என்கிற சிற்றறிவுகூட பாவம் அவர்களிடம் இல்லை.

வியாழன், 17 மார்ச், 2022

தனுஷ்-ஐ வாசலோடு விரட்டிய லதா

dhanush aiswaryatamil.samayam.co : Dhanush:போயஸ் கார்டனுக்கு போன தனுஷை வாசலோடு விரட்டிய லதா?
போயஸ் கார்டனுக்கு தனுஷ் சென்றதாகவும், அவரை வீட்டிற்குள் விடாமல் லதா விரட்டியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
 தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயற்சி செய்தார்கள். ஆனால் தனுஷ் மனம் மாற மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து ரஜினி தரப்பில் சமரச பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்களாம்.
 மேலும் தனுஷின் கெரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையில் லதா ரஜினிகாந்த் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷை வைத்து யாரும் படம் பண்ண வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் லதா. இதனால் தனுஷுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது.

சென்னையில் ரவுடி நீராவி முருகன் கொலை ..என்கவுண்டர் ..பெண் பித்தனாக 20 ஆண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான்

மாலைமலர் : 46 வயதான நீராவி முருகன் மீது தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் போலீசார் அவனை சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை மாநகரை 7 ஆண்டுகளுக்கு முன்பு கலங்கடித்த கொள்ளையன் இவன். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஒயின் சங்கர்’ என்கிற தூத்துக்குடி ரவுடியிடம் கையாளாக இருந்தவன்.
பின்னர் ஒயின் சங்கரையே குருவாக ஏற்றுக்கொண்டு ரவுடித் தொழிலில் கால் பதித்த நீராவி முருகன், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈவு இரக்கம் பார்க்காமல் ஈடுபட்டு வந்தான்.

5 டோல்கேட்களை அகற்றுங்கள்: கட்கரியிடம் வலியுறுத்திய அமைச்சர் எ.வ.வேலு

5 டோல்கேட்களை அகற்றுங்கள்: கட்கரியிடம் வலியுறுத்திய எ.வ.வேலு

மின்னம்பலம் : ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரியைத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு சந்தித்துப் பேசினார்.
அப்போது பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவையும் கொடுத்தார். அவருடன் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும் உடன் இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.

புகாரி ராஜாவும் தெருப்பாடகர்கள் மயில்சாமி சத்தியா காதல் கதையும்

 Buhari Raja  : மிகவும் வருத்தத்தோடே இதனை பதிவு செய்கிறேன்..
ஜர்னலிசம் பொறுத்தவரை காண்டாக்ட்களை சேகரிப்பதும், மெயிண்டெயின் செய்வதும் ஒரு கலை என்பதை எனக்கு முந்தைய அண்ணன்களும், ஆசிரியர்களும் , விகடன் மாணவப்பத்திரிகையாளராக இருந்த போது கற்றுக்கொடுத்தது.எல்லா தகவல்களும் அவர்களிடம் இருக்கும் ,ஆனால் அசைமெண்ட் குடுத்து ,அதற்கு நாம் எவ்வாறு தயார்படுத்திக்கொள்கிறோம் என பரிட்சை வைப்பார்கள், எந்த அளவுக்கு தேடுகிறோம் என்பதனை பொறுத்து,முடியாதபட்சத்தில் அவர்களே யாரை அணுக வேண்டுமென வழிவகுத்துக்கொடுப்பார்கள்.

ஒரே நாளில் தென்கொரியாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா.. என்ன காரணம்?

 Shyamsundar   -  Oneindia Tamil  :  உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக தென் கொரியாவிலும், சீனாவிலும் தினசரி கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.
உலகம் முழுக்க இதுவரை 463,206,379 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,079,978 பேர் இதுவரை கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.
396,173,081 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 1,641,176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போதைக்கு முடியாது போல.. இஸ்ரேலில் பரவும் புதிய வகை கொரோனா.. விமான நிலையத்தில் 2 பேருக்கு உறுதி.! இப்போதைக்கு முடியாது போல.. இஸ்ரேலில் பரவும் புதிய வகை கொரோனா.. விமான நிலையத்தில் 2 பேருக்கு உறுதி.!

காங்கிரசை வலுப்படுத்த கூட்டுத் தலைமை தேவை - காங். அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தல்

மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கக் கூடிய தலைமையை உருவாக்க வேண்டும் என்று ஜி-23 தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில், அந்த 5 மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைவர் தேவை என்று ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஜி-23 தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா, கபில்சிபல், பூபிந்தர் சிங், பிரித்திவிராஜ் சவான், மனிஷ் திவாரி, சசிதரூர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

50% இட ஒதுக்கீடு: தலைவர்கள் வரவேற்பு!

 மின்னம்பலம் : அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு அரசின் 50 விழுக்காடு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு சமூக நீதியைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள மகத்தான தீர்ப்பு. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப் பெரிய வெற்றி என்றும் இதேபோல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூக நீதி நிச்சயம் வெல்லும். அதற்காக, திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

தோழர் பாரூக் ஜிஹாதிய பயங்கரவாதிகளால் கோயம்புத்தூரில் படுகொலை செய்யப்பட்ட நாள் .

farook    Rishvin Ismath   : இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காக தோழர் பாரூக் இன்றைக்கு சரியாக 5 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2017 மார்ச் 16 ஆம் திகதி அன்று ஜிஹாதிய பயங்கரவாதிகளால் கோயம்புத்தூரில் படுகொலை செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஜிஹாதி முன்னாள் முஸ்லிமாக அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) பண்ணி பாரூக்கை நெருங்கி, நண்பனாக நடித்து அல்லாஹ்வை குஷிப் படுத்துவதற்காக பாரூக்கை assassination பண்ணும் திட்டத்தை நிறைவேற்றுகின்றான். முற்போக்குப் பேசி பாருக்கின் தோழனாக, முன்னாள் முஸ்லிமாக அல் தக்கியா பண்ணிய கோயம்புத்தூரைச் சேர்ந்த இன்னொரு ஜிஹாதி இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் குஷிப் படுத்துவதற்காக பாரூக் கொல்லப்பட்டு 5 வருடங்களின் பின்னர் தோழர் பாரூக்கை character assassination பண்ணிகின்றான்.
ஜிஹாதிகள் குறித்து மட்டுமல்ல, புனிதப் பாசாங்கு (அல் தக்கியா) பண்ணுகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்போம்.

புதன், 16 மார்ச், 2022

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசிய அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி எம்.பி

 puthiyathalaimurai.com :    தி.மு.க எம்.பி. கனிமொழி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரேஷன் குறித்து ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார். குறுக்கிட்ட கனிமொழி அமைச்சரை ஆங்கிலத்தில் பேசச் சொல்ல, அதை ஏற்று அவரும் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உணவு மற்றும் பொது விநியோக துறை பற்றிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். அப்போது பேசிய, தி.மு.க எம்.பி.கனிமொழி, ``தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசியை இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் ரேஷன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் பொருள்களுக்கு யார் நிதி ஒதுக்குவது?'' என்று கேள்வி எழுப்பினார்.

மருத்துவ ஒதுக்கீடு வெற்றி! தி.மு.க. பொறுப்பேற்ற பின் சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப்பெரிய வெற்றி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 நக்கீரன் : தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (16/03/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும், சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப்பெரிய வெற்றி!

இந்தியாவிற்கு 20-25% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா..!!

  Vidya Gopalakrishnan  -zeenews tamil  : IOC நிறுவனம் 20-25% தள்ளுபடி விலையில் 30 லட்சம் பீப்பாய்கள்  கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய பிறகு, தற்போது வரை கச்சா எண்ணெய் விலை 40% வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கூட எரிபொருள் விலை உயர்வின் காரணமாக, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் விதமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள்  கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து  20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதகா தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கியது கிரிப்டோகரன்சி முதலீட்டு ஆவணங்கள்... IT ரெய்டில் வலுவாக மாட்டிக்கொண்ட வேலுமணி!

சிக்கியது கிரிப்டோகரன்சி முதலீட்டு ஆவணங்கள்... IT ரெய்டில் வலுவாக மாட்டிக்கொண்ட வேலுமணி!

கலைஞர் செய்திகள் : எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிரிப்டோகரன்சியில் 34 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிரிப்டோகரன்சியில் 34 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

செவ்வாய், 15 மார்ச், 2022

சோனியா காந்தி அதிரடி! உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா

 நக்கீரன் செய்திப்பிரிவு :  அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றிபெற்றது.
போட்டியிட்ட மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வி முகம் கண்ட நிலையில் எம்.பி.ராகுல்காந்தி தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த 10 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ''மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் முடிவுகளில் இருந்து பாடம் கற்பதுடன் இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும், அர்பணிப்புக்கும் நன்றி'' என தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவிற்கு இந்தியா அதிரடி ஆதரவு .. என்ன காரணம் ?

  Shyamsundar - e Oneindia Tamil  : டெல்லி: மேற்கு உலக நாடுகள், அமெரிக்கா என்று பல்வேறு நாடுகள் ரஷ்யாவை எதிர்த்ததாலும், ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தாலும் இந்தியா மட்டும் ரஷ்யாவை இதுவரை எதிர்க்கவில்லை. இதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன.
உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு மேடைகளில் 6 தீர்மானங்கள் இதுவரை கொண்டு வரப்பட்டன. ஆனால் இதுவரை எந்த தீர்மானத்திலும் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்க மறுத்துவிட்டது.
ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்ததோடு தற்போது ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய்களை வாங்க இந்தியா ஆலோசனை செய்து வருகிறது. ரஷ்ய எண்ணையை அமெரிக்கா தடை செய்துள்ள நிலையில் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா எண்ணெய் வாங்க உள்ளது.

“நீட் விலக்கு மசோதா” : ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி - முதல்வர் சந்திப்பின்போது நடந்தது என்ன?

 கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் தமிழக கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஹிஜாப் தடை செல்லும்!கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக இஸ்லாமிய மாணவிகள் அறிவிப்பு

 தினகரன்  : பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக இஸ்லாமிய மாணவிகள் அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாக குழு, கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே கல்லூரியை சேர்ந்த 6 மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த ஜனவரி 1ம் தேதி மாநிலம் முழுவதும் இந்துத்துவா ஆதரவு மாணவர்கள்,
காவி துண்டு அணிந்து, ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். அதே சமயம் ஹிஜாபுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது.

பா.ஜ.கவின் சட்டவிரோத நன்கொடை (கப்பம்) வசூல்... RTI மூலம் அம்பலம் ‘நமோ' ஆப் மூலம்

 கலைஞர் செய்திகள்   : பா.ஜ.க நடத்திவரும் சட்டவிரோத நன்கொடை வசூல்... RTI மூலம் அம்பலமான மாபெரும் முறைகேடு!
சட்டத்திற்குப் புறம்பாக அரசு திட்டங்களின் பெயரில் பா.ஜ.க, மக்களிடம் நன்கொடை வசூலித்து வருவது அம்பலமாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை ஒட்டி, பா.ஜ.க, பிரதமர் மோடியின் 'நமோ' செயலி மூலம் நன்கொடை வசூல் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தில் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கட்சிக்கு ரூ.5 முதல் ரூ.1,000 வரை நன்கொடை கோரப்பட்டது.
பிரதமர் மோடி ரூ.1,000 நன்கொடை அளித்ததோடு, நன்கொடை ரசீது நகலை ட்வீட் செய்து, பா.ஜ.கவை பலப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க தலைவர்கள், அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் நன்கொடைகளை அளித்து, பொதுமக்களிடமும் நன்கொடை கோரி வருகின்றனர்.

சித்திரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாள் சிறை.. வீட்டு உணவு அளிக்க அவாள் விஐபி இல்லை.. நீதிபதி அதிரடி..!

14 நாள்

tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh   :   இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ மோசடி வழக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இமயமலை சாமியார் முன்னாள் என்எஸ்ஈ தலைமை செயல் அதிகாரியான ஆனந்த சுப்பிரமணியன் தான் எனச் சிபிஐ தெரிவித்த நிலையில், இன்று இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ விசாரணைக்காகச் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது.
கடந்த வாரம் இவ்வழக்கை விசாரணை செய்த சிபிஐ கடுமையான கேள்விகளைக் கேட்ட நிலையில் சிபிஐ அமைப்பு மிகவும் மேகமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பங்காரு- நேரு சந்திப்பு: நடந்தது என்ன?

 மின்னம்பலம் : திமுகவின் முதன்மை செயலாளரும் தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரை சந்தித்த புகைப்படங்கள் தான் அவை. பங்காரு அடிகளார் எதிரில் நேரு தரையில் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
"கடந்த மார்ச் 3ஆம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு 81வது பிறந்த நாள். பங்காரு அடிகளாருடன் கே.என். நேருவுக்கு நல்ல பழக்க வழக்கம் உண்டு.
அடிகளாரின் பையன் அன்பழகன் சென்னை வரும்போதெல்லாம் நேருவை சந்திக்கும் வழக்கமுடையவர். இந்த வகையில் பிறந்தநாளுக்கு பங்காரு அடிகளார் இடம் ஆசி வாங்க திட்டமிட்ட நேருவால் அப்போது செல்ல முடியவில்லை.

இயக்குநர் கவுதமன் திடீர் கைது!

 நக்கீரன் - பி சிவன் - ப.ராம்குமார்  : தென் காசி மாவட்டத்தின் சங்கரன்கோவிலின் உட்கோட்டத்திலிருக்கிறது குறிஞ்சாங்குளம் கிராமம். கடந்த 1992 மார்ச் 14 அன்று இங்கு இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகொலையானார்கள்.
ஊர் பொது மைதானத்தில் காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக மூண்ட விவகாரத்தில் பிரச்சனை கிளம்பியதால் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
அன்றிலிருந்தே விவகாரம் அவ்வப்போது தொடர்ந்திருக்கிறது. 2016ன் போது மண்சிலையான காந்தாரி அம்மனை எடுத்துவிட்டு கற்சிலை அமைக்க முற்பட்டபோது அரசின் வருவாய்த்துறையினர் தலையிட்டு சிலையைக் கையகப்படுத்தி அரசு பாதுகாப்பில் வைத்தனர்.

திங்கள், 14 மார்ச், 2022

மத அடிப்படைவாதிகள் தமிழகத்தின் சமூக நீதிக்கு எப்போதும் சவாலாகவே

May be an image of 2 people, beard and text

Saadiq Samad Saadiq Samad  :;    அரேபிய மத அடிப்படைவாதிகளால்  திவிக தோழர் கோவை Exமுஸ்லிம்  Fஃபாருக் கொல்லப்பட்டு  வரும் 16-3-2022  அன்று i ந்தாண்டு நிறைவடைகிறது  அதன் வலி இன்றும் நமக்கெல்லாம்  உண்டு  ஃபாரூக் மட்டுமல்ல  கோவையில் அRரேபிய ஸலாமிய பயங்கரவாதிகள் நடத்திய பல படுகொOலை பட்டியல்கள் உண்டு  அமைதி மாநிலமான தமிZழகத்தை வெடிப்புகள் மூலம் சட்ட ஒழுங்கையும்,அமைதியையும், ஜனநாயக மாண்Bபையும் அழித்த பெருமை இந்த  அAரேபிய ஸலாமிய பBயங்கரவாதிகளுக்கே சேரும் .
மக்களுக்கு காவல் போலிஸ் அந்த போலிஸையே குத்திக்கொன்ற கொடூரர்கள் இந்த அரபிய மத அடிப்படைவாதிகள் .
இப்படிப்பட்ட சில பயங்கரவாதிகளின் வெகுஜன விரோதசெயல்களால்  பாமர முஸ்லிம்களும்  பொது சமூகத்தில்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்  என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்காக கவலை கொண்டு இன்னல்கள் தீர உதவவேண்டும்   அரேபிய மதம் மாறிய ஒரே ஒரு காரணத்தால் சிறுபான்மையாகிப்போன பெரும்பான்மை மக்கள் இந்த பாமர முஸ்லிம்கள் .

கார்த்தி சிதம்பரம் : காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை!

 மாலைமலர் : சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரையில் நடைபெற்ற கட்சி  நிர்வாகி இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லாததால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

'மாணவரின் சாதி அரசுக்குத் தேவையில்லை'.. பொய் செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு பள்ளி கல்வித்துறை பதில்!

 கலைஞர் செய்தி : சாதிக்கும் வகுப்புக்கு வேறுபாடு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கிறது அச்செய்தி.
சாதி குறித்த தகவல் எதையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கவில்லை என பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறித்து விபரப் பதிவேட்டில் அவர்களின் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை வகுத்தபின் அது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்புடைய பள்ளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்

ராதா மனோகர் : இலங்கை மண்ணில் 1932 ஆம் ஆண்டு தந்தை
பெரியார் ஊன்றிய திராவிட விதை!இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது தந்தை பெரியார் மாஸ்க்கோ பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு திரும்பும் வழியில் 17 ஆக்டொபர் 1932 இல் இலங்கை வந்து பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்
தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் பெருமளவில் இலங்கை சுயமரியாதை இயக்க செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாயினர்
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் குடியரசு விடுதலை நாத்தீகம் போன்ற பல திராவிட இதழ்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை கொண்டிருந்தன.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் -செயற்குழு கூட்டத்தில் முடிவு

உத்தர பிரதேசத்தில் ஆஸாருதீன் ஒவைசி பிரித்த வாக்குகள்தான் பாஜகவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது

 உத்தர பிரதேசத்தில் ஆஸாருதீன் ஒவைசி ஆர் எஸ் எஸ் அடியாளாக செயல்பட்டு பாஜகவுக்கு வெற்றி வாங்கித்தந்த வரலாறு
Pon Thangaraj  :   ·

Bijnor:
BJP - 97165
SP+RLD  - 95720
AIMIM - 2290
Nakur:
BJP - 1,03,771
SP - 1,03,616
AIMIM - 3591
Kursi:
BJP - 1,18,614
SP - 1,18,094
AIMIM - 8533
SULTANPUR:
BJP - 92245
SP - 90857
AIMIM - 5240
Aurai:
BJP - 93438
SP - 91427
AIMIM - 2188

ஞாயிறு, 13 மார்ச், 2022

காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக சோனியா காந்தி!

 puthiyathalaimurai.com -  Sinekadhara  : தானே காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சோனியா காந்தி, “நான் கட்சியின் முழு நேர தலைவர் பொறுப்பில் இருக்கிறேன்.
நிர்வாகிகள் கேட்டுக்கொண்டால் அதில் நீடிக்கப் போகிறேன்.
காங்கிரஸில் உள்ள அனைவருமே கட்சிக்கு புத்துணர்வு தரவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்குமுன் அனைவரும் ஒற்றுமையாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் இருப்பது அவசியம்.
கட்சி தலைமை குறித்த கருத்துகளை ஊடகங்கள் மூலம் எனக்கு தெரிவிக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் நேர்மையான வெளிப்படையான விவாதத்திற்கு கட்சி தயாராக இருக்கிறது.
கொரோனா காரணமாகத்தான் உட்கட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது. அத்தேர்தலை நடத்துவது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.

மீண்டும் ராகுல்: காங்கிரசுக்குள் குரல்கள்!

 மின்னம்பலம்   :   5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இன்று மார்ச் 13ஆம் தேதி அக்கட்சியின் உயரிய அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை கூடியது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெலாட், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வரமுடியாது. பிரதமர் மோடி என்றைக்கு ராகுல்காந்தியை குறிவைத்து தாக்க தொடங்கினாரோ அன்றைக்கே காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி தான் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு: முதல்வர் ஸ்டாலின் டெல்லி திட்டம்!

 மின்னம்பலம் : நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உடனடியாக எந்த கருத்தும் வெளியிடாதது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்ற படுதோல்வி, பஞ்சாபில் ஆட்சியைப் பறிகொடுத்தது என இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்... தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியை முன்னிலைப்படுத்தி வந்த ஸ்டாலின் இனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

போர்க்கொடி தூக்கிய 21 தலைகள்.. சோனியா, ராகுலுக்கு நெருக்கடி.. இன்று அவசர கூட்டம்.

 Shyamsundar -  Oneindia Tamil :  டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியில் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி நிலவிய போதும் அதை பயன்படுத்த முடியாமல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன்.. இதோ உங்களுக்கு ஒரு கோரிக்கை..” : முதல்வரின் அசத்தல் பேச்சு!

“உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன்.. இதோ உங்களுக்கு ஒரு கோரிக்கை..” : முதல்வரின் அசத்தல் பேச்சு!

கலைஞர் செய்திகள்  : “கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.” என கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
30-வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆற்றிய உரை வருமாறு:
“இங்கு வரவேற்புரை ஆற்றிருக்கக்கூடிய இராதாகிருஷ்ணன் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றிய காட்சியை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் பார்த்தீர்கள்.