சனி, 16 பிப்ரவரி, 2013

அந்த பத்திரிகையை இனி தி.மு.க.-வினர் வாங்காதீர்கள்

கருணாநிதி – குஷ்பு விவகாரம்: கருணாநிதியுடன் நடிகை குஷ்பு நிற்கும் படத்தை தமிழ் சஞ்சிகை ஒன்று அட்டையில் போட்டு, அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டில் இருந்து தி.மு.க.வில் ஒரே கொந்தளிப்பாக உள்ளது. குஷ்பு இது தொடர்பாக ட்விட்டரில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், “சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா, அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முன்னாலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்று யோசிக்கிறேன். அத்தகைய இதழ்களை வாங்குவதில்லை, அவற்றைக் கையாலும் தொடுவதில்லை என்று அந்தந்த கிளைக் கழகத்தின் சார்பில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tamilnadu BJP Congress cartoon


Credit Card Fraud இரு பிரித்தானிய தமிழர்களை தாய்லாந்து பொலிஸார் மடக்கியுள்ளனர்

கடந்தவாரம் தாய்லாந்து பட்டய பிரதேசத்தில் கள்ள கடனட்டைகளை கொண்டு மோசடிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு பிரித்தானிய தமிழர்களை தாய்லாந்து பொலிஸார் மடக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து 134 வெற்று கடன் அட்டைகள், கடனட்டை பாவனையாளர்களின் தகவல்கள், அத்தகவல்களை அட்டையினுள் தரவேற்றும் சாதனம், மடிக்கணனி, ஒருதொகை தாய்லாந்து மற்றும் பிறநாட்டு நாணயங்கள் உட்பட வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் பிரித்தானிய பிரஜா உரிமையைக் கொண்டுள்ள இலங்கையர்கள். இவர்களில் ஒருவர் பொலிகண்டியை சேர்ந்த 36 வயதுடைய தவராஜா ஞானராஜா, இரண்டாமவர் கிளிநொச்சியை சேர்ந்த 39 வயதுடைய நாராயணசாமி மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் பட்டய எனப்படுகின்ற இடத்திலுள்ள பீச் வீதியிலுள்ள ஏரிஎம் இல் பணத்தினை எடுத்துக்சென்றபோது அங்குள்ள பாதுகாப்பு கமராவில் காட்சி பதிவாகியதை தொடர்ந்து ஊசார் நிலையிலிருந்த பாங்கொக் வங்கி மோசடிக் கட்டுப்பாட்ட பிரிவினர் குறித்த இருவரும் பிறிதொரு ஏரிஎம் ல் பணம் எடுத்துக்கொண்டிருந்ததை பாதுகாப்புக் கமராக்களில் அவதானித்ததுடன் பொலிஸாருக்கு அறிவித்தனர். அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை கையும் மெய்யுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் தங்கியருந்த மைக் பீச் றிசோட்டின் 514ம் இலக்க அறைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு 134 வெற்று கடன் அட்டைகள், கடனட்டை பாவனையாளர்களின் தகவல்கள், அத்தகவல்களை அட்டையினுள் தரவேற்றும் சாதனம், மடிக்கணனி, 22200 (தாய் பாத்) உட்பட வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராதா நட்சத்திர ஹோட்டாலில் பார்ட்டிக்கு அரேஞ்ச்

கடல் வெளிவருவதற்கு முன்பே யான் படத்தில் கமிட்டானார் துளசி. இல்லாவிட்டால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்குமா? ஆந்திராவில் நடக்கும் கூத்தைப் பார்த்தால் ப‌ரிதாபமாக இருக்கிறது.கடல் அட்டர்பிளாப் ஆனதால் துளசி என்றாலே அலர்‌ஜியாகி ஓடுகிறார்கள். தமிழில் இப்போதைக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்காது என்பதால் மகளுடன் ஹைதராபாத் சென்றார் ராதா. கெட்டுகதருக்காக நட்சத்திர ஹோட்டாலில் பார்ட்டிக்கு அரேஞ்ச் செய்யப்பட்டது. முன்னணி பின்னணி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா அணிகளையும் அழைத்திருக்கிறார்கள் தாயும், மகளும். ஆனால் பார்ட்டிக்கு வந்தது ஒன்றிரண்டு முன்னணிகள் மட்டும்தான்.நொந்துபோன ராதா பெரிய இயக்குனர் படமென்றால் சம்பளத்தை பாதியாக குறைப்பதாகவும் செய்தி கசியவிட்டிருக்கிறாராம்.சம்பளமே வேண்டாம்னு சொன்னாலும் துளசிக்கு வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம்தான், சம்பளத்துக்குப் பதில் நாலைந்து கிலோ எடையை குறைத்தாலாவது பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆந்திராவில். முயன்று பார்க்கலாமே...

விமான பணிப் பெண்ணின் கீதா சர்மாவின் தாயும் தற்கொலை Ex அமைச்சர் கோபால் கண்டாபிளாக் மெயில்

புதுடெல்லி: அரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா நிறுவனத்தில் பணியாற்றி  தற்கொலை செய்து கொண்ட முன்னாள் விமான பணிப் பெண் கீதா சர்மாவின் தாயும் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.அரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் விமானப் பணிப் பெண் கீதிகா சர்மா(22) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கீதிகா சர்மா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கீதிகா சர்மாவை, கோபால் கண்டா பிளாக் மெயில் செய்ததாக, கீதிகாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.இந்த வழக்கில் கோபால் கண்டா சிறையில் உள்ளார். இந்நிலையில் கீதிகா சர்மாவின் தாய் அனுராதா மேற்கு டெல்லியில் உள்ள வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கீதிகா இறந்து 7 மாதம் கழித்து அதே வீட்டில் அவரது தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருஞானசம்பந் தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்பவை யெல்லாம் கற்பனையே

திருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய புராணமும்

வரலாறும், உண்மையும் இடறுகிறது 2
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
இவ்வாறு அனல்வாதம், புனல்வாதம் முடிந்து சமணர்கள் தோற்றதாகக் கூறிக் கழுவேற்றுதல் நடைபெறும். கழுவேற்று தல் என்பது சவுக்குக் கட்டைகளை கட்டப்பட்டிருக்கும். சமணர்கள் அதில் ஏறி உட்கார்ந்து கையில் துணியால் தைத்த சிறு நாக்கு போன்ற ஒன்றை வாயில் திணிப்பார்கள். இந்த வேடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்றாலும், இளம் வயதில் ஆரிய சூழ்ச்சியையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம்  எனக்குக் கிடையாது. வேடிக்கை பார்ப்பதோடு சரி.திருமயிலைக் கபாலீச்சரம் திருக் கோயிலில் கபாலீச்சுரர் சன்னிதி நுழை யும் வாயிலருகில் காசி மடம் குமர குருபர சுவாமிகள் கல்லில் திருஞான சம்பந்தர் பாடிய அங்கம் பூம்பாவாய் பாடல் செதுக்கி வைத்துள்ளதைக் காண்பது உண்டு. அதுபோல் மேற்கு வாயில் அரு கில் திருஞானசம்பந்தர் சாம்பலிலிருந்து எழுப்பிய பூம்பாவைக்கு ஒரு சிறிய சன்னிதி சில ஆண்டுகளுக்குள் எழுப்பி யது கொடி மரத்தின் எதிரே காணப் படுகிறது.இவற்றைக் காணும்போதும், தேவாரப் பாடல்களை ஆராயும்போதும் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்துத் தேவாரப் பாடல்களில் குறிப் புகள் ஏதும், அங்கம் பூம்பாவையை எழுப் பியது உட்படச் சான்றுகள் இல்லாமை யைக் கண்ணுற நேர்ந்தது.அப்படியானால் திருஞானம்சம்பந்தர் இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த் தினார் எனும் கற்பனைக் கதை பரவியது எப்படி?

ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்

டெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் வியாழக்கிழமை புதுடெல்லியில் வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.பாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் தண்ணீராக பாய்ந்ததாக திருமணத்தில் பங்கேற்றவர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.திருமண அரங்கில் சூதாட்டம், குத்தாட்டம் என அத்தனை பொழுதுப்போக்கு அம்சங்களும் படு அமர்க்களமாக களை கட்டியிருந்தன. சூதாட்டத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆடம்பர கார்களும், லண்டன் சென்றுவர விமான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.இந்த திருமணத்தில் ஓரிரவு பங்கேற்று நடனமாடுவதற்கு இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 3 1/2 கோடி வழங்கப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது<

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

Ram Jethmalanai: ராகுல் காந்தி கிளார்க் வேலைக்கே லாயக்கில்லை.


பெங்களூர்: "தமது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கு இருக்கிற தகுதிகூட இல்லாத ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளரா" என்று மூத்த பாஜக தலைவரும் பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்கின்றனர்.. அந்தப் பதவியில் உட்காருவதற்கு அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா என்ன? என் அலுவலகத்தில் கடைநிலை பதவியான கிளார்க் பொறுப்பில் இருக்கக் கூடியவருக்கு உள்ள தகுதி கூட ராகுலுக்கு இல்லையே என்றும் கடுமையாக சாடியுள்ளார்.மேலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி, சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியலை குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த போதும் மத்திய அரசு ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் வெடித்து சிதறியது! ஜனாதிபதிக்கு பாதாள அறை பாதுகாப்பு!!

மத்திய ரஷ்ய வான்வெளியில் இன்று காலை எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று, குண்டு வெடிப்பது போன்ற ஒலி, மற்றும் கண்களை குருடாக்கும் ஒளியுடன் விழுந்தது. இதன் அதிர்வு காரணமாக வீட்டு கண்ணாடிகள் உடைந்தன. கார்களில் பொருத்தப்பட்ட அலாரங்கள் ஒலிக்கத் தொடங்கின. மேற்கூரைகள் விழுந்தன.
இன்று காலை 9.20க்கு (0520 GMT) எரி நட்சத்திரம் வெடித்தது.
சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். அதிகமான காயங்கள் சிதறிய கண்ணாடிகள் வெட்டியதால் ஏற்பட்டுள்ளது.

மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில், இந்த எரி நட்சத்திரம் விழுந்திருப்பது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. விண்கல்தான் விழுந்து விட்டதோ என்ற பீதியும் ஏற்பட்டது.
மத்திய ரஷ்யாவில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற தொழில் நகரத்திலேயே இன்று எரி நட்சத்திரம் வானில் வெடித்துச் சிதறியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம்.
 தொழிற்சாலைகள் அதிகமுள்ள இந்த நகரில் காலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள், எதிரே வானில் இருந்து வரும் ஒளியை பார்த்தார்கள். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அந்த ஒளி வெடித்து சிதறியதையும் கண்டார்கள். அப்போது பெரிய ஓசை எழுந்தது.

வெட்கம் கெட்ட குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா

செட்டியார் – ஐயங்கார் கூட்டணியில் இருந்த குமுதம் நிறுவனம் தற்போது ஐயங்கார் கும்பலிடம் மட்டும் உள்ளது. செட்டியார் கும்பல் நீக்கம் நிறைவேற்றப்பட்டதற்கு அம்மாவின் அருளும் ஒரு காரணமென்பதால் சொத்தைக் கைப்பற்றிய ஐயங்கார் கும்பல் அதிமுகவின் அடிவருடி பத்திரிகையாக செயல்படுவதை அனைவரும் அறிந்திருக்கலாம். குமுதம் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்தியும், மூளையில் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கும் முத்திரையை பதித்தும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள், எழுதுகிறார்கள். இதில் ஓனர், வொர்க்கர் என்ற பேதமெல்லாம் இல்லை.
தமிழக அரசு அல்லது ஜெயாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் கருணாநிதியின் சதியே காரணமென்று ஜெயாவே யோசித்திராத கோணத்திலெல்லாம் சிந்தித்து எழுதுகின்றன குமுதம் குழும பத்திரிகைகள்.
விசவரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி இவர்கள் தமிழக அரசை ஆதரிப்பதோடு கமலையும் ஆதரிக்கிறார்களாம். அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம்.
இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள்.

Ex தளபதியின் சகோதரர்களிடம் லஞ்சப்பணம் அளித்தேன்: இடைத்தரகர் ஒப்புதல் வாக்குமூலம்

புதுடில்லி: முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகியின் சகோதரர்களிடம் 1 லட்சம் யூரோ லஞ்சப்பணத்தை அளித்ததாக, இத்தாலியைச் சேர்ந்த இடைத்தரகர் ரால்ப் ஹஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்திய வி.வி.ஐ.பி.,க்களுக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தைப் பெற லஞ்சம் அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தலைவர் ஒர்சி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக, ரால்ப் ஹஸ்கி என்பவரிடம் இத்தாலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் 21-ம் நூற்றாண்டின் பெண், ஒரு போராளி… முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்

குஷ்பு தொடர்பாக ஊடகம் ஒன்று எழுதிய விவகாரத்தில், சமூக இணையதளங்களில் குஷ்புவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. குஷ்புவுக்கு ஆதரவாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குஷ்புவும் இதை சும்மா விடுவதாக இல்லை. இன்று காலையில் இருந்து ட்விட்டரின் கருத்து தெரிவித்து வருகிறார்.
“என்னை கீழே தள்ளி வீழ்த்த நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும், அதைவிட பலமாக எழுவேன்… என்னைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை, ‘சிலருக்கு’ சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையே நிருபிக்கிறது…. நான் 21-ம் நூற்றாண்டின் பெண், ஒரு போராளி… முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள் பார்க்கலாம்” என ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார்.
எனது வாழ்க்கையை நிர்ணயிப்பது மூன்று பேர்தான் என்று குறிப்பிட்டு, அடுத்த பக்கத்தில் உள்ள போட்டோவையும், தமது விரல்களால் என்னை ட்விஸ்ட் செய்யக்கூடிய மூன்று பெண்கள் என்று குறிப்பிட்டு, கீழேயுள்ள உள்ள போட்டோவையும், இணைத்துள்ளார்.
கீழேயுள்ளவை, குஷ்புவின் வார்த்தைகள்:
Life is beautiful..I m a very happy person..few stinks cannot take away my smile..ppl who know me,stand besides me..others can take a walk..
Being stressed isn’t me..only my kids can stress me out, not anybody else
My life lines..3 ppl who rule my life.. (அடுத்த பக்கத்தில் உள்ள போட்டோவை இணைத்துள்ளார்)
3 women who have me twisted in their little fingers..my mom n my babies (கீழேயுள்ள போட்டோவை இணைத்துள்ளார்)
reports defaming me is not less than any atrocities against women. such reports jus show how few men r in bad need of treatment.
they forget i m also a mother,wife n the lady of my home. pelt stones, write filth, defame, degrade..i m the woman of 21st century. i m a fighter.
few out there cannot deter me from my fight n struggle to create a better platform of dignity for women of my INDIA… stop me if u can!!
try as much as you can.. you will fail miserably… i live with respect n honesty.. those who write have no honor.. they hve proved time n again
I don’t even lose a wink over such sheeps
The more u try to push me down,the more stronger I will emerge..
I m me.. a woman of substance who doesn’t need a comeback.. coz I never left  Viruvirupu

குஷ்பு, “இவர்கள் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்’ பற்றி எழுதலாமே!”

viruvirupu  மிக மோசமான பிரச்னைகள் வந்தபோதும், தரக்குறைவாக ரியாக்ட் செய்யும் நபரல்ல குஷ்பு. அப்படியானவர், இன்று சற்று நேரத்துக்கு முன், ட்விட்டரில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார். “இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே, இவர்களின் வீட்டுப் பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்’ பற்றி எழுத வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?” என்று ஏதோ ஒரு மீடியாவை போட்டு தாக்கியிருக்கிறார்.
குஷ்புவின் பேட்டி சமீபத்தில் விகடனில் பிரசுரமானதும், அதன் தொடர்ச்சியாய் குஷ்புவின் மீது தி.மு.க.வின் நடத்திய தாக்குதலும் பரபரப்பு செய்தியாக இருந்தது. தி.மு.க. தலைமை ஒரு அறிக்கையை விட்டு அந்த விஷயத்தை அமைதிப்படுத்தியது. இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, குஷ்புவின் பக்கமே இருந்தார்.
ஆனாலும் குஷ்புவுக்கும் குறிப்பிட்ட சில மீடியாக்களுக்கும் இடையே புகைய தொடங்கிய பனிப்போர் முடியவில்லை. இன்று அது விஸ்வரூபம் எடுத்துள்ளது!
“அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்” என டிவிட்டரில் இன்று ஆரம்பித்தவர், அடுத்து காரசாரமான வார்த்தைகளில் குறிப்பிட்டவை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவை.
“இந்த கேவலமான ஆட்கள் விபச்சார புரோக்கர்களை போன்றவர்கள். இவர்களும் பெண்களின் பெயரையும் மரியாதையும் விற்றுத்தான் சம்பாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையே விற்கும் இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே இவர்களின் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்’ பற்றி எழுதவேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?” என்று விளாசியிருக்கிறார்.
இதோ, அவர் இன்று சற்று நேரத்துக்குமுன் எப்படி ரியாக்ட் செய்துள்ளார் என்று பாருங்கள்:
Tch tch tch..poor guy! I knw it hurts wen ur male ego is hit hard..shows in wat followed..u r the finest example of bng an educated idiot.
Being quite does not mean u r out n down.. it means the calm before the storm.. reporters who write stinking filth,be ready to face the music!
Wonder if these spineless men will ever have the balls to write about women of their family who literally do “business” n they r aware of it.
These ppl r nothing less than pimps who make money by selling a woman’s name n her dignity..but wen they can sell their women, this isn’t new…
எந்த மீடியாவை அல்லது நிருபரை குறிப்பிடுகிறார் என்பதை குஷ்புவும், சம்பந்தப்பட்டவர்களும் தான் சொல்ல வேண்டும். எங்களால் ஊகிக்க முடியும். ஆனால், இதற்கான பதில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வரும்போது, ஊருக்கே தெரியவரும்.

காதலர் தின கொண்டாட்டம் இளம் ஜோடிகள் குவிந்தனர்

சென்னை : காதலர் தினமான நேற்று சென்னை கடற்கரை, சுற்றுலா தலங்களில் இளம் ஜோடிகள் குவிந்தனர். சென்னையில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கியும், முத்த மழை பொழிந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலகம் முழுவதும் காதலர் தினம் (வேலன்டைன்ஸ் டே) நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சில அமைப்புகளின் எதிர்ப்புக்கு இடையே, வழக்கத்துக்கு மாறாக காதலர் தினம் இந்தாண்டு களை கட்டியது. கடற்கரை, சுற்றுலா தலங்களில் இளம் ஜோடிகள் பெருமளவில் குவிந்தனர்.தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டை, ரோஜா பூ, சாக்லெட், கீ செயின், தங்க மோதிரம், கை செயின் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். காதல் திருமணம் செய்த ஜோடிகள் தாங்கள் காதலிக் கும் போது சென்ற இடங்களுக்கு சென்று பழைய நினைவுகளை வெளிப்படுத்தினர். சில காதல் ஜோடிகள் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தனர். சில இடங்களில் காதல் ஜோடிகள் மோட்டார் பைக்கில் கட்டி அணைத்தபடி வலம் வந்தனர்.

மதத்தைத் தாண்டி சிந்திக்க முடியாத விஸ்வரூபம்

 charuonline.com/
;My name is Ravi Shankar and I have read few of your books including zero degree. I was deeply hurt by the comment you wrote against the movie Vishwaroobam. I have only one question for you. If the TamilNadu government appose the ‘Zero Degree’ book saying it has got sexual content and it cannot be sold to people with kids, would you still support the TN government? The point I’m making here is, I should have the freedom of speech and freedom of rights. I’m totally against censor board as well. I do not want 5 people decide what movie I can watch. Their job should only rate the movie like they do it in US. If Kamal makes a movie how RSS demolished Babri masjid and we should watch that as well.
Regards,
Ravi
டியர் ரவி,
நீங்கள் வருத்தம் அடைந்தது போல், காயப்பட்டது போல் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் விஸ்வரூபம் பார்த்துக் காயமடைந்து இருக்கிறார்கள்.  நான் ஒரு எழுத்தாளன் என்பதால் அந்தப் படத்தை ஒரு முஸ்லீமாகத்தான் பார்த்தேன்.  அந்தப் படத்தில் சென்ஸார் செய்வதற்கு எதுவும் இல்லை.  படம் முழுவதுமே இஸ்லாமிய விரோதப் பார்வைதான் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் எல்லா சிறுவர்களும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கா தானே?  அமெரிக்காக்காரன் தானே ரஷ்யாவை எதிர்ப்பதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டார்கள்?

படித்தவர் கள்கூட ஜாதியைப் பார்த்தே வாக்களிக் கின்றனர்

 இந் தியாவில் படித்தவர் கள்கூட ஜாதியைப் பார்த்தே வாக்களிக் கின்றனர் என்று பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தி யாவின் தலைவரும், உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
கட்ஜு உரை
டில்லியில் வோட் ஃபார் இந்தியா என்ற வாக்காளர் விழிப் புணர்வு அமைப்பின் சார்பில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது:
வாக்களிக்கச் செல் லும்போது, வேட்பா ளர்களின் தகுதியை ஆராயாமல் ஜாதி அடிப்படையிலேயே 90 சதவிகித வாக்கா ளர்கள் வாக்களிக்கின் றனர். படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்த வர்களும் இப்படித் தான் இருக்கின்றனர். பேராசிரியர்களும், வழக்குரைஞர்களும்கூட ஜாதி அடிப்படையில் தான் வாக்களிக்கிறார் கள். நாடு அந்த அள வுக்குப் பின்தங்கி உள்ளது.
மக்கள் தங்கள் ஜாதிக்காரர் என்று கருதி வாக்களித்ததா லேயே குற்றப் பின் னணி உள்ள பலரும் தேர்தலில் வென்றுள் ளனர்.

முத்துலட்சுமிக்கு ரூ 25 லட்சம் நஷ்டஈடு - வனயுத்தம்

டெல்லி: வனயுத்தம் படத்தில் வீரப்பன் கதையைப் பயன்படுத்தியது மற்றும் அதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை பாதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்ததற்காக ரூ 25 லட்சத்தை முத்துலட்சுமிக்கு நஷ்ட ஈடாக வழங்குமாறு இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்துள்ளார்
முத்துலட்சுமி.சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வனயுத்தம் என்ற பெயரில் தமிழிலும், அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்திலும் சினிமாவாக எடுத்துள்ளார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ்.ஆரம்பத்தில் இந்தக் கதையை ராம் கோபால் வர்மா மூலம் படமாக எடுப்பதாக முத்துலட்சுமி கூறியிருந்தார். ஆனால் அதற்குள் ஏஎம்ஆர் ரமேஷ் முந்திக் கொண்டு படத்தையும் அறிவித்துவிட்டார்.அப்போதிலிருந்தே இந்தப் படத்தை எதிர்த்து வருகிறார் முத்துலட்சுமி.இப்படத்தை எதிர்த்து முத்துலட்சுமி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இளையராஜா குடும்பத்தில் யுவன் ஷங்கா் ராஜாவின் திருமணமே எடுத்துக்காட்டு” -வாலி

Viruvirupu
காதலுக்கு ஆதரவா? பா.ம.க.வுக்கு எதிர்ப்பா?
காதலுக்கு ஆதரவா? பா.ம.க.வுக்கு எதிர்ப்பா?
“காதலுக்கு ஜாதி இல்லை என்பதற்கு, என் குடும்பத்திலும், இளையராஜா குடும்பத்திலும் நடந்த திருமணங்களே எடுத்துக்காட்டு” என்று பேசினார் சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி.
காதலர் தினத்தை முன்னிட்டு சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், ‘வன்மத்தில் கறைபடுமோ காதல்’’ என்ற தலைப்பில், திறந்தவெளி கவியரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. கவியரங்கத்திற்கு தலைமை வகித்து கவிஞர் வாலி பேசியபோதே அவ்வாறு குறிப்பிட்டார்.
கவிஞர் வாலி பேசியபோது, “காதல் திருமணத்தால் தான், ஜாதி ஒழிக்க முடியும். நானும் காதல் திருமணம் செய்தவன்தான். காதல் எதிர்ப்பு என்பது, அர்த்தமற்ற செயல். இஷ்டப்பட்டு கஷ்டப்படுவதுதான், காதல். உடல் கவர்ச்சியில் வருவது, காதல் அல்ல; ஆன்மாவை தொடுவது தான், காதல்.
என் அண்ணனின் மகள், ஒரு பையனை காதலித்தாள். அண்ணன் குடும்பத்தினர், காதலை எதிர்த்தனர். அந்த பையன் என்னிடம் வந்து, “நீங்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்’” என்றான்.
“அந்த பையன், நல்ல பையனாக இருக்கும்போது, ஏன் எதிர்க்க வேண்டும்?” என, அண்ணனிடம் கேட்டேன். ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து, அந்த திருமணத்தை, நான் தான் நடத்தி வைத்தேன்.
இன்னொரு திருமணத்தில், மணப்பெண், பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். மணமகன் யார் என்றால், இளையராஜா மகன் யுவன் சங்கர்ராஜா. இளையராஜா என்ன ஜாதி என, எல்லாருக்கும் தெரியும். காதலுக்கு ஜாதி இல்லை என்பதற்கு, என் குடும்பத்திலும், இளையராஜா குடும்பத்திலும் நடந்த திருமணங்களே எடுத்துக்காட்டு” என்றார்.
நம்ம டாக்டர் ஐயாவுக்கு பி.பி.யை ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதுபோல ஏங்க எல்லோரும் கருத்து சொல்றீங்க?

திருமணத்தையே கேலி செய்கின்றனர்: கனிமொழி வேதனை

சென்னை: ""காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம், திருமணத்தையே கேலி செய்கின்றனர்,'' என, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி பேசினார்.சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், "வன்மத்தில் கறைபடுமோ காதல்' என்ற தலைப்பில், திறந்தவெளி கவியரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.கவியரங்கத்திற்கு, கவிஞர் வாலி தலைமை வகித்து பேசியதாவது:காதல் திருமணத்தால் தான், ஜாதி ஒழிக்க முடியும். நானும் காதல் திருமணம் செய்தவன் தான். காதல் எதிர்ப்பு என்பது, அர்த்தமற்ற செயல். இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது தான், காதல். உடல் கவர்ச்சியில் வருவது, காதல் அல்ல; ஆன்மாவை தொடுவது தான், காதல். என் அண்ணனின் மகள், ஒரு பையனை காதலித்தாள். அண்ணன் குடும்பத்தினர், காதலை எதிர்த்தனர். அந்த பையன் என்னிடம் வந்து, "நீங்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' என்றான்.
"அந்த பையன், நல்ல பையனாக இருக்கும் போது, ஏன் எதிர்க்க வேண்டும்' என, அண்ணனிடம் கேட்டேன். ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து, அந்த திருமணத்தை, நான் தான் நடத்தி வைத்தேன்.இன்னொரு திருமணத்தில், மணப்பெண், பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். மணமகன் யார் என்றால், இளையராஜா மகன் யுவன் சங்கர்ராஜா. இளையராஜா என்ன ஜாதி என, எல்லாருக்கும் தெரியும். காதலுக்கு ஜாதி இல்லை என்பதை, என் குடும்பத்தில் நடந்த திருமணமே ஒரு எடுத்துக்காட்டு.இவ்வாறு வாலி ÷ பசினார்.
தி.மு.க., ராஜ்யசபா கனிமொழி பேசியதாவது:
காதலர் தினத்தை, போர்க்களமாக, அரசியல் கட்சிகள் மாற்றியுள்ளன. ஆனால், காதலர் தினத்தை, கவிஞர்கள் ஒன்று சேர்ந்து, சமூக நீதி களமாக மாற்றியுள்ளனர். ஜாதியை பார்க்காமல் வருவது தான், காதல். காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். மிருகங்கள் என்ன பாவம் செய்தன? காதலை கொச்சைப்படுத்துவதாக கூறி, திருமணத்தையே கேலி செய்கின்றனர்.எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்ற தெளிவு இல்லாமல், சில அரசியல் கட்சிகள், குழப்பத்தோடு போராட்டத்தை நடத்துகின்றன. அந்தக் கட்சிகளின் கொள்கைள் நீர்த்துப் போய்விட்டன. விலை போவதற்கு பையில் ஒன்றுமில்லை. அதனால் தான் இளைஞர்களுக்கு எதிராக காதல் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தை கூறு போட நினைக்கும் கட்சிகளை இந்த சிறுகுரல் பற்றி எரிந்து பொசுக்கும். ஜாதி வேண்டும் என, குறிப்பிட்ட பெரிய சக்திகள் தலை தூக்கியுள்ளது. அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். dinamalar,com
 கனிமொழி கருத்தில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை ...சரியான கருத்தை கூறியிருக்கிறார் ...கனிமொழி பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் செய்து ..அது சரிபடாமல் போனபின்பு ..தானே காதலித்து ..திரு அரவிந்தன் அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டு வெற்றிகரமாக வாழ்ந்துவருபவர் ...எனவே அவர் கூறும் கருத்தில் அனுபவம் இருப்பதால் அதில் தவறு இருப்பதாக கூற முடியாது ...காதல் திருமணத்தின் வழியாகத்தான் ஜாதியை ஒழிக்க முடியும் ..கனிமொழியின் தாயும் தந்தையுமே காதல் திருமணம் செய்தவர்கள் தான் ..

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்


அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விக்கிலீக்ஸ் தற்போது இந்தியாவிலிருந்து கொண்டு மக்களின் பணத்தை ஏப்பம் விட்டு சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கள்ளர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் 13 இந்தியர்களின் பெயர் விபரங்கள் உள்ளடங்குகின்றன. சுவிஸ் வங்கியிலே கரறுப்புப் பணமாக பல கோடி ரூபாக்களை வைத்திருந்துள்ளனர்

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி

அர்சத்மேதா.................1,35,800 கோடி

லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி

வியாழன், 14 பிப்ரவரி, 2013

Helicopter.. Software பிசினஸ் மூலம் இந்தியர்களுக்கு கைமாறிய லஞ்சம்

 புதுடெல்லி: சாப்ட்வேர் ஏற்றுமதி என்ற வகையில் கணக்கு காட்டப்பட்டு ஹெலிகாப்டர் லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு கைமாறியிருக்கிறது என்ற பரபரப்பு தகவல் அம்பலமாகியுள்ளது. இத்தாலியை சேர்ந்த ‘பின்மெக்கனிகா’ நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’. இந்நிறுவனம் ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விஐபிக்களுக்கு இந்நிறுவனத்திடம் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய ராணுவம் 2010ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது. இதுவரை 3 ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்யப்பட்டன. மீதி அடுத்த ஆண்டுக்குள் அனுப்பப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில், இந்திய ராணுவத்திடம் இந்த ஆர்டரை பெறுவதற்காக அகஸ்டா நிறுவனம் மோசடி வேலையில் இறங்கியதாகவும் இந்தியர்கள் சிலருக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாகவும் இத்தாலியில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஓராண்டாக விசாரணை நடந்து வந்த நிலையில், பின்மெக்கனிகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜியூசெப் ஆர்சி நேற்று முன்தினம் இத்தாலியில் கைது செய்யப்பட்டார். ஹெலிகாப்டர் வாங்கும் விவகாரத்தில் இந்தியர்கள் லஞ்சம் வாங்கிய விவகாரம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியின் உறவினர்கள் ஜுலி, டாக்சா, சந்தீப் தியாகி ஆகிய 3 பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இன்னொரு போபர்ஸ் ஊழல் என்று வர்ணித்திருக்கும் பா.ஜ. கட்சி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்னையை கிளப்பப்போவதாக கூறியிருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இத்தாலியில் நடந்த வழக்கு விசாரணை மற்றும் கோர்ட் ஆவணங்களில் இருந்து ஹெலிகாப்டர் ஊழல் பற்றி மேலும் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக சாப்ட்வேர் ஏற்றுமதி நடக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சாப்ட்வேர் ஏற்றுமதிக்கான செட்டில்மென்ட் என்ற பெயரில் இந்த லஞ்ச பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கின்றனர். 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இதற்கான கமிஷன் தொகைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சில அரசு அதிகாரிகளுக்கு ஐடிஎஸ் துனிசியா, ஐடிஎஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மூலமாக லஞ்ச பணம் கைமாறியிருக்கிறது. சராசரியாக மாதம்தோறும் ரூ.3.72 கோடி பணம் எந்த வரியும் செலுத்தப்படாமல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என இத்தாலி கோர்ட் ஆவணங்கள் மற்றும் வழக்கு விசாரணை மூலம் தெரியவருவதாக கூறப்படுகிறது.

டெல்லி போலீசார் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கவில்லை முதல்வர் ஷீலா தீட்சித்

புதுடெல்லி: டெல்லி போலீசார் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கவில்லை. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த நீங்கள் தலையிட வேண்டும் என பிரதமர் மன்மோ கன் சிங்குக்கு முதல்வர் ஷீலா தீட்சித் கடிதம் எழுதி உள்ளார். டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மாணவி 6 பேர் கும்ப லால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் அவர் இறந்தார். இதையடுத்து பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. இந்த சம்பவத்துக்கு  பிறகும் டெல்லி போலீசார் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லை என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் பலாத்கார சம்பவத்தால் பெரியளவில் போராட்டங்கள் நடந்தன.

பெண்கள் மீதான வன்முறை இந்தியாவில்தான் அதிகம்

 ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்
அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:  மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?
  • தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2011ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிராக 2,28,650 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் மட்டும் 24,260.
  • 1971-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2011 வரையிலான நாற்பதாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் 873 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதவீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.

காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !

வினவு
விநோதினிகொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது போட்டியாளரான சிம்புவோ தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர்.
    காதலர் தினத்திற்க்காக ரோஜாப்பூ முதல் பரிசுப் பொருள் அங்காடி வரை காதலை பரிமாறிக் கொள்வதற்காக எண்ணிறந்த பொருட்கள் கடைவீதியினை நிரப்பியிருக்கின்றன. ஒற்றைத் தண்டுடன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் வரும் பெங்களூர் ரோஜாதான் காதலர்களின் ஏகோபித்த வரவேற்பாம். அமில வீச்சால் கண்ணை இழந்த விநோதினியை பெண் என்பதற்காக ஒரு மலருடன் ஒப்பிட்டு கவிஞர்கள் யாரேனும் கவிதைகள் எழுதியிருப்பார்களா தெரியவில்லை! எனினும் அந்த மலர் நேற்றோடு கருகிப் போனது.
    அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ அடக்கியாள வேண்டியவள்தான் ஒரு பெண் என்பதை எண்ணிறந்த கதைகளின் மூலம் சொல்லிக் கொடுக்கும் திரைப்படங்கள் ஒருபுறம். அந்த திரைப்படங்களை வைத்தும், அந்தக் கதைகளின் மூலமாகவும் சமூகப் பிரச்சினைகளை செய்திகளாக்கித் தரும் பத்திரிகைள் அனைத்தும் ஒரே மாதிரியான சோகத்தில் விநோதினியின் மரணத்தை அறிவிக்கின்றன, கண்டிக்கவும் செய்கின்றன. சஹானா எனும் கேரளப் பெண்ணை ஊடகத் திமிரால் வன்புணர்ச்சி செய்த தினமலரும் கூட வெட்கமில்லாமல் விநோதினிக்காக வருந்துகிறது.

    ஹெலிகாப்டர் பேர ஊழல்: 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ

    viruvirupu.
    “ஹெலிகாப்டர் பேர ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” என்று கூறியுள்ள பா.ஜ.க., “இது இத்தாலி நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழல் என்பதால்தான் ஒரு ஆண்டு முழுவதும் மவுனம் சாதித்தீர்களா?” என்றும் சோனியா காந்திக்கு கிண்டல் அடித்துள்ளது.
    உயர்ந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இத்தாலி நாட்டை சேர்ந்த பின்மெக்கானிக்கா (Finmeccanica) நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் (Agusta Westland) நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3,546 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்து கொண்டது.
    இதில், 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்தது.

    Valentine's Day காதலர்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை ; போலீஸ் எச்சரிக்கை

    சென்னை: காதலர் தினத்தன்று காதலர்கள் மீது தாக்குதல் நடத்துவோர், பணம் பறிக்கும் கும்பல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் பூக்கள், பூச்செண்டுகள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். சில காதல் ஜோடிகள் கடற்கரை, சினிமா தியேட்டர், பூங்காக்கள், வணிக வளாகங்களில் திரள்வார்கள். இதனால், அங்கு கூட்டம் அலை மோதும். வெளிநாட்டு கலாசாரம் இந்தியாவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையிலும் அதன் தாக்கம் இருக்கிறது. எனவே, கலாசார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தின கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் காதலர் தினத்தில் ஒன்று சேர்ந்திருக்கும் ஜோடிகளை சிலர் அடித்து விரட்டுகின்றனர். அதுபோன்றதொரு சம்பவம் சென்னையில் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர். காதலர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தனியாக இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்போர் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது இடங்களில் அத்துமீறி நடக்கும் காதலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னையில் காதல் ஜோடிகள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

    vinavu.com  நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
    நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது.
    “குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான்.
    “ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது.
    எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள்.
    அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது.

    வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு

    சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் கூட்டாளிகள் ,  1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேட்டூர் அருகே பாலாற்றில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் கர்நாடக போலீசார் உள்பட 21 பேர் இறந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளை விசாரித்த மைசூர் தடா கோர்ட், மாதையன், பெலவேந்திரன், ஞானப்பிரகாசம் மற்றும் சைமன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, மாதையன், பெலவேந்திரன், ஞானப்பிரகாசம் மற்றும் சைமன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக உயர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தூக்குத்தண்டனை பெற்ற 4 பேரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அவர்கள் 4 பேரும் தங்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பியிருந்தனர் நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்து வந்த இந்த கருணை மனுக்கள் இப்போது ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. >இதனால் மாதையன், பெலவேந்திரன், ஞானப்பிரகாசம் மற்றும் சைமன் ஆகிய 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிகிறது.

    தமிழகம் வந்தது காவிரிநீர் : 5 நாட்கள் தாமதம் 1000 டி.எம்.சி.

    பெங்களூரு : சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக அரசு திறந்து விட்டுள்ள காவிரி நீர் இன்று காலை தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. சம்பா பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த 5 தினங்களுக்‌கு முன்னர் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 1000 க.அ.,தண்ணீர் ஐந்து நாட்களுக்கு பின்னர் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. பிலிகுண்டுலுவில் இருந்து 64 கி.மீ தொலைவில் உள்ள மேட்டூர் அணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படு்கிறது.

    புதன், 13 பிப்ரவரி, 2013

    திறந்து 5 நாள் ஆகியும் காவிரி நீர் தமிழகம் வரவில்லை : கர்நாடகா சதியா?


    tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
    ஒகேனக்கல்: கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள காவிரி நீர், 5 நாட்கள் ஆகியும் தமிழக எல்லையை வந்தடையவில்லை. கர்நாடகம் திட்டமிட்டு குறைவாக நீர் திறந்து விட்டுள்ளதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இதுதொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் டெல்டா பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதையடுத்து தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீரை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Ex President Nasheed இந்திய தூதரகத்தில் மாலத்தீவு மாஜி அதிபர் தஞ்சம்?

    மாலே: மாலத்தீவு கோர்ட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அந்நாட்டு முன்னாள் அதிபர் முகமது நஷீத், இந்திய தூதரகத்தில் தற்போது உள்ளார். அவர் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    மாலத்தீவு கிரிமினல் கோர்ட் தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை, சட்டவிரோதமாக பதவி நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தற்போது மாலத்தீவு கோர்ட் ஒன்றில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் முன்னாள் அதிபர் நஷீத் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி நடந்த விசாரணையில் நஷீத் ஆஜராக வில்லை. இதையடுத்து அவர் மீது இன்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட செய்தியை அறிந்த நஷீத், இந்திய தூதரகத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவர் இந்திய தூதர் முலேவை சந்தித்துப் பேசினார். எனினும் அவர் இந்திய அரசிடம் தஞ்சம் கோரவில்லை என கூறப்படுகிறது.

    All are Kin கமலின் ஹாலிவூட் ஆங்கில படம்: டைட்டில் ரெடி!


    Viruvirupu
    விஸ்வரூபம் பட ரிலீஸூக்கு 24 அமைப்புகளும், புரட்சித் தலைவியும் சிக்கல்கள் கொடுப்பதற்கு முன்னரே, கமலின் ஹாலிவூட் படம் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. விஸ்வரூபம் படத்தை பார்த்த ஹாலிவூட் தயாரிப்பாளர் பேரி எம் ஆஸ்போர்னுக்கு, விஸ்வரூபத்தில் கமல் என்ற நடிகரைவிட, கமல் என்ற இயக்குனரை அதிகம் பிடித்துப் போனதில், கமல் டைரக்ஷனில் ஆங்கிலப் படத்தை தயாரிக்க விரும்பி, பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
    பிரபலமான லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பட சீரீஸின் தயாரிப்பாளர் இவர்தான்.
    விஸ்வரூபம் பட பிரச்னைகள் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னரே, கமல் சொன்ன ஒன்லைன் ஓகேவாகி, படத்தின் காஸ்ட்டிங்கூட ஓரளவுக்கு முடிவாகி, சில ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு விட்டன.
    படத்துக்கான ஒர்க்கிங் டைட்டில் முடிவானது. ‘All are Kin’ என்பதுதான் டைட்டில். இந்த டைட்டில் கமலின் கைவண்ணம். ‘யாவரும் கேளிர்’ என்பதை ஆங்கிலப்படுத்தியதில் வந்ததே, ‘All are Kin’.
    இதை ஒர்க்கிங் டைட்டில் (working title) என்று சொல்வார்கள். அநேக ஆங்கிலப் படங்கள் எடுக்கப்படுவது இப்படித்தான். படம் ரிலீஸ் ஆகும்போது, இந்த ஒர்க்கிங் டைட்டிலே, நிஜ டைட்டில் ஆகும், அல்லது மாறும். உதாரணமாக சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பான்ட் படம் Skyfall தயாரிப்பது என்று முடிவானதும் வைக்கப்பட்ட ஒர்க்கிங் டைட்டில், ‘Bond 23’ என்பதுதான்.
    அந்தப் பெயரிலேயே 2010-ம் ஆண்டு படத்தின் ஆரம்ப வேலைகள் நடந்தன. ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. படம் தொடர்பான செய்திகளிலும், இந்த ‘Bond 23’ டைட்டிலே பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி வைக்கப்பட்ட பிரஸ் கான்பிரன்ஸிலேயே, Skyfall என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.
    அதுபோல, கமலின் ஆங்கிலப் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஒர்க்கிங் டைட்டில், ‘All are Kin’.
    விஸ்வரூபம் படத்தின் பிரச்னைகள் உச்சக்கட்டம் அடைந்தபோது கமல், தனது இல்லத்தில் வைத்த செய்தியாளர் சந்திப்பில், “நான் நாட்டை விட்டே போய்விடுவேன்” என்று சொன்னதன் பின்னணியில் இருந்தது இந்த பட விவகாரம்தான். இதன் டைரக்ஷனுக்காக கமல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
    கமலுக்கு, ஆங்கிலத்தில் படம் எடுப்பதிலும் சிக்கல் கிடையாது. அமெரிக்காவில் தங்கியிருப்பதிலும் சிக்கல் கிடையாது. அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது, “அடுத்த ஜனாதிபதியாக ஒரு ஸ்கர்ட் போட்ட பெண்மணி வரவேண்டும்” என்று சொன்னால்கூட படத்துக்கு சிக்கல் கிடையாது! அந்த நாட்டு அரசியல் அப்படி!!
    பாவம், புரட்சித் தலைவிதான், இங்கே கமலை மிஸ் பண்ணுவார்!

    வீரப்பன் கூட்டாளிகள் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்

    கடந்த 2003-ம் ஆண்டு பாலாறு காட்டில் வீரப்பன் மற்றும அவனது கூட்டாளிகள்  சேர்ந்து 21 போலீசாரை கொன்றனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் மீது உச்ச நீதி மன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதனையடுத்து இந்த நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தனர்.தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அந்த கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.எனவே இந்த நால்வரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிகிறது.  dinamani.com

    நீயா, நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள்

    சென்ற ஞாயிறு அன்று காட்டப்பட்ட நீயா, நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். பார்க்காதவர்கள் நேரம் செலவழித்துப் பார்த்துவிடுங்கள்.

    http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc&list=ELCGfx6tAff04&index=46

    கல்லூரிகளில் இளநிலை படிக்கும் மாணவர்கள் ஒருபக்கம். பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், அரசியல்வாதி(கள்) மறுபக்கம். இன்றைய மாணவர்கள் சமூக, அரசியல் நிகழ்வுகளை எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர், அவர்களுடைய அரசியல், சமூக நிலைப்பாடுகள் என்னென்ன என்பது தொடர்பான விவாதம்.

    இளைய மாணவர்கள் யாரும் ஆழமான புரிதலைக் காண்பிக்கவில்லை. இதில் வியப்பு ஏதும் இல்லை. மாணவர்களின் பேச்சிலிருந்து கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியவந்தன.
    1. அவர்கள் தமிழ் தினசரி, வார, மாத இதழ்களைப் படிப்பதில்லை.
    2. அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள் எவற்றையும் படிப்பதில்லை. தமிழ் எம்.ஏ படிக்கும் ஒரு மாணவர் மு.வரதராசனார் தாண்டி யாரையும் சொல்லவில்லை.

    மலையாள டி.வி. பெண் நிருபரிடம் ஆபாச கேள்வி கேட்ட மத்திய அமைச்சர் வயலார் ரவி!

    மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரிடம் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆபாசமாக பேசியது, கேரளாவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. “அமைச்சர் வயலார் ரவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்”  என கேரள பெண் பத்திரிகையாளர்கள், தீர்மானித்துள்ளனர்.
    சூரியநெல்லி சிறுமி பலாத்கார வழக்கு கேரளாவில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிராக, கேரளாவில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆலப்புழாவுக்கு வந்தார் மத்திய அமைச்சர் வயலார் ரவி. அவரிடம், குரியன் விவகாரம் குறித்து ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபர் கேள்வி கேட்டார்.
    முதலில் வயலார் ரவி, “இந்த விவகாரம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது” என்று மறுத்து விட்டார்.
    ஆனால், அந்த பெண் நிருபர் மீண்டும், மீண்டும் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த வயலார் ரவி, ‘‘உனக்கு குரியன் மீது ஏன் இவ்வளவு கோபம்? என்ன அக்கறை? அவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அவருடன் எதாவது முன் அனுபவம் உள்ளதா?’’ என கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
    வயலார் ரவியின் இந்த ஆபாச பேச்சால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    இதையடுத்து நேற்று எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் பெண் பத்திரிகையாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசிய வயலார் ரவியை வன்மையாக கண்டிப்பதுடன் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சந்தானம் மீது FIR கோரி பாக்யராஜ் வழக்கு

    நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி இயக்குனர் கே.பாக்யராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் பாக்யராஜ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: இன்று போய் நாளை வா படத்தின் கதை எனக்கு சொந்தமானதாகும். இந்தக் கதையின் உரிமை கேட்டு தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி முதலில் என்னை அணுகினார். நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்நிலையில் எனது கதையை மையமாக வைத்து நடிகர் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை உருவாக்கியுள்ளார். இதனால் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ராமநாராயணன் மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது  tamilmurasu.org

    35 கோடி வருமான வரி பாக்கி விவகாரம் : ராம்தேவ் வங்கி கணக்கு முடக்கம்

    யோகா குரு ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி யோகாபீத் அறக்கட்டளையின் 11 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த மாதம் முடக்கியது. இதனை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி யோகாபீத் அறக்கட்டளை பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் லேகியங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வர்த்தக நோக்கில் செயல்படும் அறக்கட்டளை வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அறக்கட்டளையின் 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுகளை மதிப்பீடு செய்து ரூ.35 கோடி அளவுக்கு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. முதல் தவணையாக ரூ.75 லட்சம் செலுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது இதை செலுத்த தவறிய காரணத்தால் ராம்தேவ் அறக்கட்டளைக்கு சொந்தமான 11 வங்கி கணக்குகளை கடந்த மாதம் 14ம் தேதி வருமானவரித்துறை முடக்கியது.

    செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

    ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரம்: சி.ஐ.பி. விசாரணைக்கு உத்தரவு

     The Italian attorney general's office began a probe last year into alleged unethical dealings by the company, which has now widened to include the Rs 3,546-crore contract with India, reports from Italy say. Finmeccanica subsidiary Augusta Westland signed the deal with the Indian Air Force in 2010.
    இத்தாலி பாதுகாப்பு நிறுவனமான பின்மெக்கானிக்காவிடமிருந்து 12 நவீன ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.4000 கோடிக்கு இந்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதில் 3 ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசின் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய இத்தாலிய போலீசார் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி கியுசெப்பு ஓர்சியை இன்று கைது செய்தனர். இதையடுத்து இந்த விவகாரம் இந்தியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியிருந்தன. இதையடுத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தியதில் எந்த நிதி முறைகேடும் நடக்கவில்லை என்றும், இத்தாலி நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டதால், ஒப்பந்தத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்

    Acid victim என்ஜீனியர் வினோதினி மரணம்


    என் மகள் பட்ட வேதனையை ஆசிட் வீசியவன் அனுபவிக்க வேண்டும்: வினோதினியின் தந்தை குமுறல்ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால் தனியார் மருத்துவமனையில் கதறி அழுதார். மகளின் இழப்பை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:- என் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே. அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். அவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள் பார்த்து கொண்டே இருந்திருப்போம். இப்படி எங்களை தனியாக விட்டு அவள் சென்று விட்டாளே... சிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா... என்று கூறினாள். அதுதான் இப்போது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. என் மகள் வாழ்க்கையை சிதைந்து சின்னபின்னமாக்கிய அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஒரு நொடியில் உயிரி போய்விடும். அது போதாது... என் மகளைபோல அவனும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.

    வாய்ப்புகள், மேலும் வாய்ப்புகள்

    women-entrepreneurs-branding-mistakes1
    ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 27
    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன் உதவிகள் குறித்து இனி பார்ப்போம். உணவு விடுதி, நடமாடும் உணவு விடுதி, சுழல் முறையில் செயல்படும் நூலகம், ஆகியவற்றைத் தொடங்கி நடத்த விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.
    மேலும், தொழிற்கல்வி சார்ந்த பணி, சுயதொழில் வகையில் தேர்ந்த நிபுணத்துவம் கொண்ட சிறந்த மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் கடன்  அளிக்கிறது. அதே போல், சில்லறை வணிகத்தில் ஈடுபடுவோருக்கும் உதவி கிடைக்கிறது.
    குறுந்தொழில் மற்றும் கிராம குடிசைத் தொழில், கைத்தறி ஆடை தயாரிப்பு நெசவுத் தொழில், உணவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

    2ஜி வழக்கில் திகைக்க வைக்கும் திருப்பம்! சி.பி.ஐ. வக்கீல் வசமாக சிக்கி கொண்டார்!

    viruviruppu.com நாட்டில் அரசியலையையே புரட்டிப் போட்ட 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிரடித் திருப்பம்! சி.பி.ஐ. வக்கீலே, குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் ரகசிய டீல் வைத்து, சிக்கிக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்துள்ளது சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டு கமிட்டி கூட்டத்தில் புயல் அடிக்கும் என ஊகிக்கப்படுகிறது. சி.பி.ஐ., கடும் கண்டனத்தை சந்திக்க நேரலாம். காரணம், இங்கு குற்றம் சாட்டப்பட்டவருடன் ரகசிய டீல் வைத்தவர், சி.பி.ஐ.-யால் நியமிக்கப்பட்ட வக்கீல்! ஏ.கே.சிங் என்ற இந்த சி.பி.ஐ. வக்கீல், குற்றம்சாட்டப்பட்ட யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவுடன் போனில் பேசிய உரையாடல்களின் ஒலிப்பதிவு ஒன்று சிக்கியுள்ளது. அதையடுத்தே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவு, 17 நிமிடங்கள் ஓடுகிறது. அதில், வழக்கு பற்றி பல்வேறு வியூகங்களை சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் கற்று கொடுத்துள்ளார். முக்கிய அரசுத்தரப்பு சாட்சி எப்படி சாட்சி அளிப்பார்? தனது தரப்பு வாதத்தை சஞ்சய் சந்திரா எப்படி நடத்த வேண்டும்? சி.பி.ஐ.யின் வியூகம் எப்படி இருக்கும்? எந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்? என்பவற்றையெல்லாம் விலாவாரியாக அவர் சொல்லி ஒலிப்பதிவில் உள்ளது. இந்த கேசட்டின் அடிப்படையில், ஏ.கே.சிங், சஞ்சய் சந்திரா ஆகியோர் மீது சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை பதிவு செய்துள்ளது. இருவரிடமும் நேற்று சி.பி.ஐ. தலைமையகத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் சி.பி.ஐ. வக்கீல் பொறுப்பில் இருந்து ஏ.கே.சிங் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு வக்கீல் நியமிக்கப்பட்டாடுள்ளார். 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா பயனடையும் வகையில் செயல்பட்டதாகத்தான் ஆ.ராசா மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது, சி.பி.ஐ. வக்கீலே இவருக்கு சாதகமாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. டைரக்டர் ரஞ்சித் சின்கா, “அந்த கேசட்டில் இருப்பது ஏ.கே.சிங்-சஞ்சய் சந்திரா ஆகியோரின் குரல் தானா என்று என்னால் உறுதியாக கூற முடியாது. அதுபற்றி தடயவியல் சோதனையில்தான் தெரியும்.

    திங்கள், 11 பிப்ரவரி, 2013

    ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

    நித்தியானந்தன் - ஜெயேந்திரன்வினவு இனி இந்து மத சாமியார்கள் எவரும் கொலையோ சல்லாபமோ செய்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதாக இந்த இரண்டு கேடிகளும் முன்னுதாரணமாகி விட்டனர். அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா நடந்து வருகிறது. பார்ப்பன இந்து மதத்தின் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஒன்று இந்த கும்பமேளா. தெற்கை விட வடக்கில் அதிகம் காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கையின் படி இலட்சக்கணக்கான மக்கள் ‘புனித’மும் சாக்கடையும் சங்கமிக்கும் கங்கையில் நீராடி வருகின்றனர். இதை ஒட்டி அலகாபாத் ரயில்நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். மதம் சார்ந்த கூடுதல்களில் இப்படி மக்கள் இறப்பது ஆண்டுதோறும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் மக்களை இப்படி நெரிசலில் சாகவிடும் உத்திர பிரேதேச அரசு சாமியார்களுக்கு மட்டும் சகல ஏற்பாடுகளையும் விஸ்தாரமாக ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில் மைனர் நித்தியானந்தாவும், கேடி ஜெயேந்திரனும் கங்கை கரையில் 10வது மற்றும் 12ஆவது செக்டர்களில் முகாம் அமைத்து கங்கை ஆற்றை அழுக்காக்கி வருகின்றனர். சாதாரண மக்கள் எல்லாம் கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்று நம்புகின்றனர். ஆனால் பாவத்தையே தொழிலாகக் கொண்ட நித்தியும், ஜெயேந்திரனும் அப்படி குளித்து ‘போகுமளவு’ பாவங்களை கொஞ்சமாக செய்தவர்கள் அல்ல. ஒருவேளை இவர்கள் குளித்ததால் கங்கையை நிரப்பும் பாவம் மற்ற அப்பாவிகளை தொற்றிக் கொள்வது உறுதி.

    பீகார் : பெண்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்தால் 10 ஆயிரம் அபராதம்

    பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மாஹனுபூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதற்கும், செல்போன் பயன்படுத்துவதற்கும் அக்கிராம தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.இதனை மீறி பெண்கள் இத்தகைய உடைகளை அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட் டுள்ளது. கடந்த வாரம் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் காணாமல் போனதை தொடர் ந்து கிராமத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் வீட்டிற்கு வெளியே டி - சர்ட், ஜீன்ஸ் அணிந்தாலும், செல்போன் பேசினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என்று கிராம தலைவர்கள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

    போப்பாண்டவர் பெனடிக்ட் திடீர் பதவி விலகல்! 600 ஆண்டுகளின் பின் முதல் தடவை!!

    Viruvirupu  புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வாடிகனில் இருந்து வெளியானபோது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 600 ஆண்டுகளாக எந்தவொரு போப்பாண்டவரும் தாமாக பதவி விலகியதில்லை. இதற்குமுன் தாமாக பதவி விலகியவர், போப்பாண்டவர் ஜார்ஜ் XII. அது, 1415-ம் ஆண்டு நடைபெற்றது.

    பாலாவின் பரதேசி - வடஇந்தியாவில் வெளியாகிறது!


    பாலாவின் 'பரதேசி' திரைப்படம் தமிழில் வெளியாவதோடு வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் பரதேசி படத்தை தனது நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார். பாலாவின் நான் கடவுள் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியவர் இயக்குனர் அனுராக். நாங்கள் வட இந்தியாவிலேயே வசித்தாலும், எங்களுக்கு தோன்றாத சிந்தனை பாலாவுக்கு தோன்றியிருக்கிறது. காசியில் எந்த இடத்தில் அவர் கேமராவை வைத்து இந்த காட்சிகளை எடுத்திருப்பார் என்று என்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை என்று பாலாவை பெருமைப் படுத்தி பேசியவர் இயக்குனர் அனுராக் அதே படத்தில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்று தேசத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் பாலா. சேது படத்தின் மூலம் அறிமுகமான பாலா நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன்  படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். புதுயுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில் அனைவராலும் பாராட்டப்படுபவர்.இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான பரதேசி தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா,தன்ஷிகா,வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிர‌காஷ் இசை அமைத்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை இதில் பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு பதிவு செய்திருக்கிறார்.விரைவில் இந்த படம் வெளியாகிறது.இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்த படத்தால் கவரப்பட்டு இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கில மற்றும் இந்தி மொழி சப் டைடில்களோடு 'பரதேசி' படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் மூலம் அவர் வெளியிடுகிறார்.<அனுராக் காஷ்யப் 'பிளேக் பிரைடே','தேவ் டி' உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். அவரது சமீபத்திய படமாக 'காங்ஸ் ஆப் வாஸ்யபர்' அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் 'பரதேசி' படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Exploitation சுமங்கலி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கொடுமை : மார்க்சிஸ்ட் எம்.பி. புகார்

    பஞ்சாலைகளில் டீன்ஏஜில் பெண்கள் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு திருமணம் நடைபெறும்போது, பஞ்சாலை நிர்வாகம் திருமண உதவி என்ற பெயரில் ஒரு தொகையை அளிக்கிறது. இது சுமங்கலி திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று கருத்தரங்கு நடந்தது. சமூக ஒருங்கிணைப்பு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த கருத்தரங்குக்கு சிஐடியு மாநில பொருளாளர் குமார் தலைமை தாங்கினார்.>இதில் கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன்(மார்க்சிஸ்ட்),  ‘’கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டத்தின்கீழ் பெண் தொழிலா ளர்கள் பணியமர்த்தப் பட்டு, கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்கப் படுவதில்லை. கொத்தடிமை போல் நடத்தப்படுகின்றனர். பஞ்சாலைகள் மட்டுமின்றி, ஜவுளிக்கடை, ஓட்டல், பெட் ரோல் பங்க் என எல்லா துறையிலும் பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கும் சம்பளம் உள்ளிட்ட சலுகை, உரிமை வழங்கப்படுவதில்லை. அத்துடன், பல இடங்களில் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். இதுபோன்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட் டம் நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்’’என்று பேசினார். nakkheeran.in

    Facebook மூலம் திருடனை அசத்திய மும்பை போலீசார்

    மும்பை: பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக, ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி (23). மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.

    புதுக்கோட்டையில் இளம் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை






     புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், இவரும் புதுக்கோட்டை கோர்ட்டில்  வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இவர் தஞ்சாவூர் சாலையிலிருந்து புதுக்கோட்டை வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வழிமறிந்து மச்சிவாடி என்ற இடத்தில் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.மேலும் சம்பவம் பற்றி அறிந்த வக்கீல்கள் ஏராளமானோர் கோர்ட்டை புறக்கணித்துவிட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.- இரா.பகத்சிங்  nakkheeran.in

    மராத்தா சாதி வெறியர்களால் 3 தலித் இளைஞர்கள் படுகொலை !

    கொல்லப்பட்ட தலித்துகள்ஒரு துப்புரவுப் பணியாளர் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை பொறுக்க முடியாமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.
      ந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி மகராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள திரிமூர்த்தி பவன் ப்ரதிஷ்தான் பள்ளி மற்றும் கல்லூரியில் வேலை செய்யும் மூன்று தலித் இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
      22 வயதான மேத்தார் (வால்மீகி) சாதியைச் சேர்ந்த சச்சின் காரு என்ற இளைஞர் ஆதிக்க சாதி விவசாயி ஒருவரின் மகளை காதலித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதி கும்பல் ஒன்று இந்த படுகொலையை செய்திருக்கிறது.
      அந்த பகுதிக்கு இரண்டு நாட்கள் சென்று விசாரித்த, மகாராஷ்டிராவின் மாநில தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி தூல் “ஒரு துப்புரவுப் பணியாளர் தங்களது மகளை காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாத ஆதிக்க சாதியினர் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்திருக்கின்றனர்” என்கிறார்.

      கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது! புஸ்வாணம் ஆகின அரசு நடவடிக்கைகள்!

      ;நூற்றுக்கணக்கான வழக்குகள், விதவிதமான தனிப்படைகள், கிரானைட் குவாரிகளில் ரெய்டு, சிறிய விமானம் மூலம் கற்களை அளவிடுதல், வங்கிக்கணக்குகள் முடக்கம், மக்களிடமிருந்து புகார் பெறும் முகாம்கள், கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வரின் அறிவிப்பு என ஊடகங்களில் விஸ்வரூபமாய பெரிதாக்கி காட்டப்பட்ட பல லட்சம் கோடி கிரானைட் மெகா ஊழல் ஜெயா அரசின் பேரத்திற்கான நாடகம்தான் என தற்போது ஊரறிய அம்பலமாகியுள்ளது. கிரானைட் முதலாளிகள்-அனைத்து ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் – அரசு உயர் அதிகாரிகள்-நீதிபதிகள் கொண்ட கொள்ளைக் கூட்டம்   சேர்ந்து நடத்திய கிரானைட் ஊழல் மீதான நடவடிக்கைகளை ஊத்தி மூடுவதற்கான வேலைகள் தேர்ந்த முறையில் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. கிரானைட் முதலாளிகளுக்கும் ஊழலில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கும் ஆதரவாக சட்டச் சிக்கல்கள் இன்றி எவ்வாறு முடிப்பது என்பதே தமிழக அரசின் முன் தற்போதுள்ள பிரச்சனை. இவ்வாறு முதலாளிகளுக்கும் அரசுக்கும் வழக்கை முடிக்கும் தேவை வரும் போதெல்லாம் அவர்கள் நம்பிக்கையோடு அணுகுவது நீதி மன்றங்களைத்தான். அந்த வகையில் கிரானைட் வழக்குகளுக்கு சமாதிகட்டும் திருப்பணியை மதுரை உயர்நீதிமன்றம் சட்டப்படி செவ்வனே செய்து முடித்து விட்டது.

      நீதிபதி கன்னத்தில் பெண்கள் அறைய வேண்டும்’- அச்சு ஆவேசம்

      கோழிக்கோடு : ""சூரியநெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கை மறு விசாரணை நடத்த உத்தரவிட்ட, சுப்ரீம் கோர்ட்டை நீதிபதி, பசந்த் அவமதித்து விட்டார். அவர் கன்னத்தில் பெண்கள் அறைய வேண்டும்,'' என, கேரள முன்னாள் முதல்வர், அச்சுதானந்தன் ஆவேசமாக தெரிவித்தார். கேரளா, இடுக்கி அருகே சூர்யநெல்லியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி, 1996ல் கடத்தப்பட்டு, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, கீழ்கோர்ட் தண்டனை அளித்த, 35 பேரை, 2005ல், கேரள ஐகோர்ட் விடுவித்தது. இவ்வழக்கை, மீண்டும் விசாரணை நடத்த, ஜனவரி, 31ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களை, 2005ல், விடுவித்த, "டிவிஷன் பெஞ்ச்' நீதிபதிகளில் ஒருவரான, ஆர்.பசந்த், நேற்று முன்தினம், தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அவரது பேச்சை, தனியார், "டிவி' நிருபர் குழு, ரகசியமாக படமெடுத்து ஒளிபரப்பியது. அதில், "சூரியநெல்லி மாணவி, பலாத்காரம் செய்யப்படவில்லை. அவள் சிறு வயதிலேயே விபச்சாரியாக இருந்தாள். அவளது விருப்பத்தின் பேரிலேயே, பலாத்காரம் நடந்தது. வழக்கில், 35 பேரை விடுவித்தது சரி தான். இதை, ஐகோர்ட் தீர்ப்பு முழுவதையும் படித்து பார்த்தாலே தெரியும்' என, பேசுவதாக காட்சி அமைந்திருந்தது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.  சில நீதிபதிகள் பணத்திற்கு விலை போகிறார்கள்... இன்னும் போய் கொண்டு தான் இருக்கிறார்கள்.

      2005 – 2006-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சி 57,457 கோடி கடன் இருந்தது

      அரசு நடத்துவது என்றால், கடன் வாங்கத்தான் வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதிதான் கடன் வாங்கியதாகவும், அவர் கடனே வாங்கவில்லை என்பதாகவும் சொல்கிறார்… அவர் எவ்வளவு கடனை வைத்துவிட்டு போனார் தெரியுமா” என கேட்டிருக்கிறார் கருணாநிதி.
      தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை, நான் வாங்கி வைத்து விட்டதைப் போல, முதல்வர் ஜெயலலிதா, திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.
      2006-ம் ஆண்டு மே மாதம்தான், தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பின், தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு, 57,457 கோடி ரூபாயாக இருந்தது.
      அதுபோலவே, மின் வாரியத்திலும், 2005 – 2006-ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் சுமையை வைத்து விட்டுத் தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இறங்கினார்.

      கும்ப மேளா முடிந்து திரும்பும்போது, ரயில் நிலைய நடைமேடை உடைந்து 20 பேர் பலி!

      அலகாபாத் ரயில் நிலையத்தில் கும்ப மேளா மௌனி அமாவாஸ்யை மகாஸ்நானம் முடிந்து இன்று ஊர் திரும்பியவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் நெரிசலாக கொண்டிருந்த போது, பாரம் தாங்காமல் அந்த நடைமேடை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
      உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்ப மேளாவில் இன்று கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியான அதிர்ச்சி நீங்கும் முன்னரே, அலகாபாத் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
      கும்பமேளா முடிந்து சொந்த ஊர் திரும்புவதற்காக ஏராளமானோர் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் சென்றதால் எடை தாங்காமல் பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

      குஷ்புவை பாதுகாக்கவே முடியலை, அப்புறம் மக்களை எப்படி?” கிண்டல்!

      கருணாநிதிக்கு குஷ்புவை பாதுகாக்கவே முடியலை… அப்புறம் தமிழக மக்களை பாதுகாக்க எப்படி நேரம் இருக்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம்.
      மஞ்சள் விற்பனை மையம் ஒன்றை தொடக்கி வைக்க வந்திருந்தபோதே, அமைச்சர் ராமலிங்கம், நிருபர்களிடம் குஷ்பு பற்றி கவலைப்பட்டார்.
      “மத்திய அரசு, வறட்சிக்காக எதையும் அறிவிக்கவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும், தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர, வலியுறுத்தவும் இல்லை. கருணாநிதிக்கு, குஷ்புவை காப்பாற்றவே நேரமில்லை. அதில், தமிழக மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும் அவருக்கு நேரம் எங்கே இருக்கிறது.

      மட்டக்களப்பு மாணவருக்கு புகைப்பட விருது

      உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக நடத்தப்பட்ட உலக புகைப்படப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவரொருவரும் வெற்றி பெற்றுள்ளார்.
      மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் இறுதியாண்டு கல்வி பயிலும் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவனால் அனுப்பி வைக்கப்பட்ட ”தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் சிறுவன்” ஒருவனை காண்பிக்கும் புகைப்படமே இந்தப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

      ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

      சிறுவனை திருட தூண்டிய போலீஸ்



      கைகழுவினார் மணிரத்னம்! “கடலா? எந்தக் கடல்?”



      ஆற்றில் இட்ட பொன்னை குளத்தில் எடுத்ததாக புராணக் கதை உண்டு. கடலில் இட்ட பணத்தை எங்கே எடுப்பது?

      ஆற்றில் இட்ட பொன்னை குளத்தில் எடுத்ததாக புராணக் கதை உண்டு. கடலில் இட்ட பணத்தை எங்கே எடுப்பது?
      மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ், கடல் படத்தின் வியாபாரத்துக்கும் தமக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்து விட்டது. இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
      ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கை:
      “Madras Talkies had sold their film ‘Kadal’ (both Tamil and dubbed Telugu version) to Gemini Industries and Imaging Ltd in March 2012 itself on MG (Minimum Guarantee) basis. Madras Talkies has had no other dealing with anyone else for the distribution of their film, nor has been party to any contracts Gemini might have entered into in this regard.”
      அதன்படி, “கடல் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012-ம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது. இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை” என்று கைகழுவி விட்டார் மணிரத்னம்.
      படுதோல்வி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், அடுத்து என்ன செய்வது என கூடிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

      இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலேயே செயல்படுகிறார்

      கமலின் பிற படங்களைவிட இந்தப் படம் சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இந்தப் படத்தின் அரசியல் கமலின் முந்தைய படங்களை மட்டுமல்ல… பிற தமிழ், இந்தியப் படங்களைவிடப் படு மோசமாக, அபாயகரமாக இருக்கிறது. ஒருவர் தன்னை எந்த அடையாளத்துடன் பிணைத்துக்கொள்கிறார் என்பதுதான் அவருடைய கருத்துகளையும் படைப்புகளையும் தீர்மானிக்கும்.
      இதன்படிப் பார்த்தால், கமல் தன்னை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகவும் அமெரிக்க நலன் விரும்பியாகவும் இருக்கும் இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவே தெரிகிறது. இப்படியான அரசியல் பார்வை ஒருவருக்கு இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பார்வையை வைத்துக்கொண்டு, தன்னைக் கலைஞன் என்றும் உலகளாவிய தீவிரவாதம் பற்றி மனிதாபிமான முறையில் பேசுபவன் என்றும் சொல்லிக்கொள்ளக்கூடாது. எலும்புத் துண்டு வீசபவன் காட்டுகிற திசையில்தான் எனக்கு குரைக்கத் தெரியும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு இதைச் செய்யலாம். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள். வேசைத்தனம் செய்துவிட்டு பத்தினி வேடம் போடக்கூடாது. tamilpaper.net

      5 வயது சிறுவனின் உடலில் 17 இடத்தில் சூடு வைத்ததாக டியூஷன் ஆசிரியை

      கான்பூர்: உ.பி.யில் டவுசரிலேயே சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனின் உடலில் 17 இடத்தில் சூடு வைத்ததாக டியூஷன் ஆசிரியையும், அவரது தாயும் கைது செய்யப்பட்டனர்.      உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அசோக் நகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் சிவா. அங்குள்ள நர்சரி பள்ளியில் படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தேவ் ஸ்மிதாவிடம் சிவாவும், அவனது அண்ணனும் டியூஷன் படித்தனர். நேற்று முன்தினம் மாலை டியூஷனில் சிவா, டவுசரிலேயே சிறுநீர் கழித்துவிட்டான். இதை பார்த்ததும் ஸ்மிதாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. சிவாவை சரமாரியாக அடித்தார். அங்கு வந்த ஸ்மிதாவின் அம்மா, ‘அவனுக்கு சூடு போடு.. அப்பதான் இனிமேல் இப்படி செய்ய மாட்டான்’ என்று கூறினார். இதையடுத்து கம்பியை சுட வைத்து சிறுவனின் கை, கால், முகத்தில் ஸ்மிதா சூடு போட்டதாக கூறப்படுகிறது. தம்பிக்கு சூடு போடுவதை பார்த்து அண்ணன் அழுதான். தடுக்க முயன்ற அவனையும் ஸ்மிதா அடித்துள்ளார்.வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் நடந்ததை கூறி இருவரும் அழுதுள்ளனர். இதுதொடபாக நாஜிராபாத் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதில் ‘எனது மகனின் உடலில் 17 இடங்களில் ஸ்மிதா சூடு வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஸ்மிதா மற்றும் அவரது அம்மாவை கைது செய்தனர்.
        woman teacher was arrested for burning a nursery student using hot tongs for wetting his trousers while he was taking tuition at her residence in Kanpur, police said on Saturday. The parents of the seven-year old boy reported the matter to Nazirabad Police station in Kanpur on Friday,