சனி, 11 ஜனவரி, 2020

கொல்கொத்தாவில் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு ... கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வீடியோ


மாலைமலர் : மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தா வந்துள்ள பிரதமர் மோடியை, அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மாலை சந்தித்துப் பேசினார். கொல்கத்தா: பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே, கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், ராஜ்பவனில் தங்கியுள்ள பிரதமர் மோடியை அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மாலை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே அவற்றை கட்டாயம் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தா

மறைமுக தேர்தல் வெற்றி நிலவர பட்டியல் - 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக

BBC : உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்” - இரான் ராணுவம் ஒப்புதல்

உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை AFP இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர். இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில்தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான் தற்போது முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது

ஈரான் தாக்குதலில் தப்பிய பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானம்

thanthitv.com : ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டுக் கொன்றதற்கு, அந்நாடு நடத்திய பதில் தாக்குதலில் உக்ரைன் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டுக் கொன்றதற்கு, அந்நாடு நடத்திய பதில் தாக்குதலில் உக்ரைன் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் மும்பையில் இருந்து 200 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானம், தனது பயணத்தை வழக்கமான பாதையில் இல்லாமல் மாற்றி பயணித்ததால் தாக்குதலில் தப்பியது தெரிய வந்துள்ளது. ஈரான் ஏவுகணையை ஏவிய நிலையில், ஈராக் வான்வெளியில் நுழைந்த அந்த விமானத்தின் விமானி சற்று பாதையை மாற்றி பயணித்ததால் 200 பேர் உயிர்தப்பிய அதிசயம் நடந்துள்ளது.

ஜேஎன்யு தாக்குதல் : 9 பேரை அடையாளம் கண்டது தில்லி காவல் துறை

delidinamani.com : புதுதில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய 9 பேரை தில்லி காவல் துறை அடையாளம் கண்டுள்ளது. இதில், இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த 7 மாணவா்கள், ஆா்எஸ்எஸ்ஸின் மாணவா் அமைப்பான அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சோ்ந்த இருவா் அடங்குவா். இவா்களில் ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் (ஜேஎன்யுஎஸ்யு) தலைவா் அய்ஷி கோஷூம் ஒருவா் என தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முகமூடி அணிந்த மா்ம நபா்கள் ஜேஎன்யு பல்கலைக்கழ வளாகத்துக்குள் புகுந்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்குதல் நடத்தினா்.

குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தது


zeenews : புது டெல்லி: பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் (Citizenship Amendment Act) நாட்டில் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது என்று அரசிதழ் அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் (Union Home Ministry) தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 (2019 இன் 47) இன் பிரிவு 1 இன் துணைப்பிரிவு (2) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், இதன் மூலம் 2020 ஜனவரி 10 ஆம் தேதியை மத்திய அரசு நியமிக்கிறது. அன்று முதல் அந்தச் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 11 அன்று குடியுரிமை திருத்தம் சட்டம் பாராளுமன்றத்தால் (Parliament) நிறைவேற்றப்பட்டது.

குஜராத்தில் தலித் சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் கொலை - 4 பேர் கும்பல் அட்டூழியம்


மாலைமலர் : அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 31-ந் தேதி மாயமானார்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். தங்களது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் எனக் கூறி இருந்தனர்.
ஆனால் அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறிய போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளம்பெண் அங்குள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறிய போலீசார் முறையாக விசாரிக்கவில்லை.
இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை கடத்தி கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என ஆவேசமாக கூறினர்.

பாஜகவை புரட்டி போடும் 14 கேள்விகள்.. ஜனநாயகம் காக்க பகிருங்கள் அன்பர்களே!

நக்கீரன் இதழ்* : 1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2. இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?
3. இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4. இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?
5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
8. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
9. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழக வெங்கட் மருத்துவ மனையில் ( சாராய உடையாரின் மகன்)

 ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கட்டுக்கு என்னாச்சு?மின்னம்பலம் : ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கட்டுக்கு என்னாச்சு?
சென்னை போரூரில் அமைந்திருக்கும் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழகம் உலகப் புகழ் வாய்ந்தது. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக போரூருக்கு வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவப் பல்கலையின் வேந்தரான வெங்கடாசலம் அரசியல், தொழில், அதிகார வட்டாரங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தனது நெருங்கிய வட்டாரத்தில் வெங்கட் என்று அழைக்கப்படுபவர். எம்.ஜி.ஆர். காலத்தில் இவரது தந்தையாரான, ‘உடையார்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ராமசாமி உடையார் பெரும் அரசியல் செல்வாக்கோடு இருந்தார். அதே செல்வாக்கோடு இப்போது வெங்கட் இருக்கும் நிலையில், திடீரென வெங்கட்டுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.
அவ்வப்போது தனது சொந்த ஊரான ராசிபுரத்துக்கு செல்வது வெங்கட்டின் வழக்கம். அந்த வட்டாரத்தில் இருக்கும் தனது குலதெய்வக் கோயிலுக்கு செல்வது, மில்லைப் பார்த்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வருவது வெங்கட்டுக்கு பிடித்தமான விஷயம். வெங்கட் ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர். பல திருக்கோயில்களின் திருப்பணிக்கு உதவுபவர். பிசியான அலுவல்களுக்கிடையே நிம்மதி தேடி தனது சொந்த மண்ணுக்கு அண்மையில் சென்றிருந்தார்.

வன்னியர் சங்க அறக்கட்டளை பெயர் மாறியது . இனி ராமதாஸ் அறக்கட்டளையாம்

பெயர்  மாறிய வன்னியர் சங்க அறக்கட்டளை!மின்னம்பலம் : பாமகவுக்கு அடித்தளமாக செயல்படும் வன்னியர் சங்கத்தின் இதயமாக இயங்கி வரும், வன்னியர் சங்க (கல்வி) அறக்கட்டளை, இப்போது டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் கோனேரிக்குப்பத்தில் இருந்து இன்று (ஜனவரி 10) நமக்குக் கிடைத்திருக்கிறது.
இதுபற்றி பாமகவின் உள் வட்டாரங்களில் விசாரித்தோம்.
“வன்னியர் சங்க அறக்கட்டளையை கலைஞர் முதல்வராக இருக்கும்போது துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. டாக்டர் ராமதாஸ் மனைவி பெயரில் சரஸ்வதி பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியும் இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமானதுதான்.

BBC : உக்ரைன் விமான விபத்து: ’விமானத்தை நாங்கள் சுடவில்லை’ - இரான்

புதன்கிழமையன்று விபத்துக்குள்ளான உக்ரைன் பயணிகள் விமானத்தை இரானின் ஏவுகணைகளில் ஒன்றுதான் தாக்கியது என்ற குற்றச்சாட்டை இரான் மறுத்துள்ளது. இரானின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைவர், நிச்சயமாக அந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தரையிலிருந்து விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவுகணை தவறுதலாக விமானத்தை தாக்கிய ஆதாரம் தங்களிடம் இருப்பதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கூறியதற்கு பதிலாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டெஹ்ரானில் விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்படுவது போன்ற புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் 176பயணிகளுடன் சென்ற உக்ரைனை சேர்ந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
அந்த விமான போர்விமானம் என்று தவறுதலாக கருதப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அந்த விமானத்தில் இரானை சேர்ந்த 82 பேர், கனடாவை சேர்ந்த 63 பேர், யுக்ரைனை சேர்ந்த 11 பேரும், ஸ்வீடன், பிரிட்டன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனியை சேர்ந்தவர்களும் பயணம் செய்தனர்.

சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!'- ஏவுகணை ....உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன?

`இரவு நேரத்தில் ஏவுகணை; சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!'- உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன?vikatan.com தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிப் புறப்பட்ட போயிங் 737-800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த பயணிகள் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. இந்த நிலையில், உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆதாரமாக சில குறிப்புகளையும் முன் வைக்கின்றனர். இரான் வான்வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை செலுத்தப்பட்ட ஒருசில நிமிடங்களில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது. அதேநேரம், விமானம் தீப்பிடித்த நிலையில் பறந்துகொண்டிருந்தது என்று கூறி, 'நியூயார்க் டைம்ஸ்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேபோல், குறிப்பிட்ட அதே நேரத்தில் ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்புக் கதிர் சிக்னலும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான சிக்னலும் அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்குக் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

பண்பாட்டின் பெயரால் மூடத்தனத்தைப் பரப்பும் அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினர்

washington tamil sangamkeetru.com : தமிழர் பாரம்பரியம் என்கிற போர்வையில் இளைய தலைமுறையிடம் சாதி என்னும் நஞ்சை விதைப்பதை நியூஜெர்சி, டல்லாஸ், வாஷிங்டன் தமிழ்ச் சங்கங்கள் வெட்கமில்லாமல் செய்வது மட்டுமில்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்ள வேறு செய்கிறார்கள்.
"வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்", "கோட்டு போட்டவன் அறிவா பேசுவான்" என்றெல்லாம் நாட்டில் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அறிவை 1960லேயே மூட்டை கட்டி பரண்மேல் போட்டுவிட்டு, அமெரிக்காவில் குடிகொண்டிருக்கும் பெருசுகள் அப்படித்தான் உலகம் நம்புகிறது என்று நினைத்துக் கொண்டு செய்யும் சேட்டைகளைக் கண்டால் - நாடு இப்போதிருக்கும் நிலையில் வாயிலே சிரிக்க முடியவில்லை. இதை அடுத்த தலைமுறைக்கு வேறே கடத்துகிறார்களாம். (2018 ஆம் ஆண்டு வாஷிங்டன் தமிழ்ச் சங்க அழைப்பிதழ்)
பண்ணையார் காலத்து விவசாய முறை இருந்தபோது விதை தானியங்களை முளைக்குமா முளைக்காதா என்று பரிசோதித்து அறியும் முறை என்று சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அப்போது மாரியம்மன் திருவிழாக் காலங்களில் இதை எடுத்துச் சென்று சடங்குகள் செய்தனர். அப்போது வேறெந்த முறையும் கிடையாது. அவர்களுக்கு தெரிந்த வழியில் வைத்திருக்கும் விதைகள் தரமானவையா என்று கண்டுபிடித்தார்கள் என்பதும் ஓரளவு ஏற்றுக் கொள்ளத் தக்கது. ஆனால் அதை யார் செய்தார்கள்? மூட்டை விதைநெல் வைத்திருந்த பண்ணையார்கள் செய்தனர். பண்ணைக் கூலிகள் யாரும் அதைச் செய்ய அனுமதிக்கப் பட்டதாய் தகவல் இல்லை. இது தமிழர் பாரம்பரியம் என்றால் நிலமற்ற விவசாயக் கூலிகள் தமிழர்கள் இல்லையா? அல்லது, தமிழர்கள் அனைவரும் பண்ணையார்களா?

நெல்லை பிணை வழங்கியது நீதிமன்றம்!

nellai kannan bail nellai court order பா. சந்தோஷ் - நக்கீரன் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நெல்லை கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் தரப்பு ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று (10.01.2020) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2 ஆம் வகுப்பு தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியை விஜயலக்ஸ்மிக்கு 5 ஆண்டுகள் சிறை!

 தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்குச் சிறை!மின்னம்பலம் : இரண்டாம் வகுப்பு தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள இராமாபுரம் புதூர் பகுதியில் பெரும்பான்மையாக கொங்கு வெள்ளாளர்களும், இஸ்லாமியர்களும், அதற்கும் குறைவாக ஆதிதிராவிடர்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2015ல் விஜயலட்சுமி என்ற ஆசிரியை இரண்டாம் வகுப்புக்குப் பாடம் எடுத்து வந்தார். ஒருநாள் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே வகுப்பறையில் விஜயலட்சுமி பாடம் எடுத்துள்ளார்.
அப்போது 3ஆம் வகுப்பு மாணவனான முகமது ஷெரிப் தன்னை அறியாமலேயே வகுப்பறையிலேயே மலம் கழித்துள்ளார். வகுப்பைக் கவனித்து வந்த ஆசிரியை விஜயலட்சுமி, இரண்டாம் வகுப்பு மாணவனான சசிதரனைக் கூப்பிட்டு, முகமது ஷெரிப் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்த மலத்தை அள்ளி வெளியே போடச் சொல்லியுள்ளார்.
விவரமறியாத சசிதரனும் ஒரு காகிதத்தில், மலத்தை எடுத்துப் போட்டுவிட்டு சுத்தம் செய்துள்ளார். பின்னர் பள்ளி முடிந்ததும் சசிதரனையும், அவரது அண்ணனான பரணிதரனையும் மலம் அள்ளியதைச் சுட்டிக்காட்டி சக மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். சசிதரனைத் தொடமாட்டோம் என்று கூறி ஒதுக்கியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைtamil.news18.com ; தமிழகத்திலிருந்து 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை செல்ல விரும்பிய 3000 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.
சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்ட நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்

திமுக செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது- தமிழக காங்கிரஸ் பரபரப்பு அறிக்கை

திமுகதிமுக செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது- தமிழக காங்கிரஸ் பரபரப்பு அறிக்கை    மாலைமலர் : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, சட்டமன்ற காங். தவைர் கேஆர். ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கூட்டணி வைத்த கட்சிகளுடன் திமுக களம் இறங்கியது. அதிமுகவை விட அதிக இடங்களை திமுக கைப்பற்றியது. நாளை ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.& இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் திமுகவுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது:-
27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவி கூட வழங்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்க வில்லை. 

ஜஸ்டின் ட்றுடோ பேட்டி வீடியோ : உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு


உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்புதினத்தந்தி:  விபத்துக்குள்ளானதாக கூறப்படும் உக்ரைன் விமானம் ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்பியுள்ளன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச்சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.

துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து: எஸ்.எஸ்.ஐ திட்டமிட்டு கொலையா?

துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து: எஸ்.எஸ்.ஐ திட்டமிட்டு கொலையா?மின்னம்பலம் : களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் பணியிலிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தமிழக காவல் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து டிஜிபி திரிபாதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதனிடையே வில்சனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு 21 குண்டுகள் முழங்க நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவில் அவர் கத்தியால் தாக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

சசிகலா மீண்டும் கைது? . சசிகலாவின் 15,000 கோடி ரூபாய் ஹாங்காங், தாய்லாந்து மற்றும் விமான நிறுவனங்களில் முதலீடு....


மின்னம்பலம் : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வந்தால் சிறையில் முழுதாக மூன்று ஆண்டுகள் முடிகின்றன. ஏற்கனவே இதே வழக்கில் ஜெயலலிதாவோடு சிறையில் இருந்த நாட்கள், சிறை விதிகளின்படியான சலுகைகள் என்று கணக்குப் போட்டால்கூட இந்த வருடத்தில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அமமுகவினரிடையே பலமாக நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் டிடிவி தினகரன் சமீபத்திய மாதங்களில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைக்காமல் அடக்கி வாசிக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேநேரம் சிறையில் சந்திக்க வருபவர்களிடம் தான் விடுதலையாகி வந்தாலும் தன்னை பாஜக நிம்மதியாக இருக்க விடுமா என்பது சந்தேகம்தான் என்று சொல்லி வருகிறார் சசிகலா. ஜனவரி 4ஆம் தேதி திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினரோடு சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள். திவாகரன் தனது மகன் ஜெய் ஆனந்துக்கும், தினகரனின் சகோதரன் பாஸ்கரன் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

வடிவேலுவால் 14 கோடி ரூபாய் நஷ்டம் – தயாரிப்பாளர் சதீஷ்குமார்

vadivelu-Producer Satish Kumar-issuenakkheeran.in - ;அண்ணல் : நகைச்சுவை நடிகர் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, எலி திரைப்படத்தில்  நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சனை ஆகி பாதியில் நிற்கிறது. என்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் சென்று தகராறு செய்துள்ளார். மொத்தம் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காவல் அதிகாரி வில்சன் கொலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை விசாரிக்க வேண்டும்!

Sathyam Satheesh : காவல் அதிகாரி வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது...குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
சில ஐயங்கள்...
இரண்டுபேர் ஓடுகிற சிசிடிவி காட்சிகளை காட்டி...இவர்கள் தான் குற்றவாளிகள்...தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு என ஊடகங்களும் காவல்துறையும் கண்டுபிடித்தது எப்படி?
நுங்கம்பாக்கம் சுவாதி கொலையில் இதை போல ஒருவர் வேகமாக நடக்கிற ஒரு சிசிடிவி காட்சியை மட்டும் காட்டிவிட்டு மீனாட்சி புரத்தில் ஆடுமேய்க்கிற ஒரு சிறுவனை காவல்துறை கழுத்தறுத்து கொன்றது நினைவுக்கு வருகிறது.
போலீசை கொன்றவர்கள் தீவிரவாதிகள் என்றால்..சாதி திருவிழா வுக்கு பாதுகாப்பு க்கு சென்ற எஸ்ஐ ஆல்பின் வெட்டி கொல்லப்பட்டபோது அவர்கள் தீவிரவாதிகள் என நீங்கள் சொல்லவே இல்லையே. .மாறாக மர்ம நபர்கள் என்றுதானே சொன்னீர்கள்.
முதலில் சுட்டுத்தள்ளவேண்டியது குற்றங்களுக்கு மத வன்ம அடையாளம் பூசி மகிழும் ஊடகங்களை தான்.
ஒரே ஒரு சிசிடிவி காட்சியை வைத்து தீர்ப்பு எழுதும் ஊடகங்கள் தான்...இந்த நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் ஆபத்தானவை.
நீங்களே தீர்ப்பெழுதி விட்டால் நீதிமன்றங்கள் என்ன மசிருக்கு?
இரண்டுபேரையும் தேடி பிடித்து சுட்டுக்கொல்வார்கள்..அவ்வளவு தான்...கடைசிவரை நடந்தது என்ன என யாருக்கும் தெரியாது..
உபியில் பாஜக நடத்திய போராட்டத்தில் காவலர் அடித்து கொல்லப்பட்டார்..அது விபத்து என நீதிமன்றமே வழக்கை ஊத்திமுடியது.
அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி மர்மமாக மரணமடைந்தார்...அது தற்கொலை என ஊத்திமூடப்பட்டது.

வியாழன், 9 ஜனவரி, 2020

ஸ்டாலின் , பன்னீருக்கு வழங்கப்பட்ட மத்திய சிறப்பு பாதுகாப்பு நீக்கம்

மாலைமலர் :சென்னை: தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு படை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.ஐ.யை சுட்டுக்கொன்றவர்கள்... கனியாகுமரியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு?

எஸ்.எஸ்.ஐ.யை சுட்டுக்கொன்றவர்கள்!  மின்னம்பலம் :  கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று இரவு பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஸ்கார்ப்பியோ காரில் இரவில் 9.40 மணியளவில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் . அங்கிருந்த சக காவலர்கள் வில்சனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள போலீசாரின் உதவியையும் தமிழக போலீசார் நாடியுள்ளனர். இரு மாநில போலீசாரும் தனித்தனியே விசாரித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கேரள போலீசார் வில்சன் கொலை தொடர்புடையதாக 2 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்.. அமெரிக்கா திடீர் அறிவிப்பு


Velmurugan P -tamil.oneindia.com: நியூயார்க்: ஈரானுடன் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ஐநாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை அமெரிக்க வான்வெளி தாக்குதல் மூலம் வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இந்த சம்பவத்தால் ஈரானில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. பழிக்கு பழிவாங்குவோம் என ஈரான் சபதம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள 5 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஈரான் வீசியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் கூறியது. ஆனால் அமெரிக்காவோ யாரும் சாகவில்லை. ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான். சிறிய சேதம் ஏற்பட்டது என்றது
இந்த சூழலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. எந்த நேரமும் இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் அபாயம் எழுந்தது. இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்கா, ஐநா சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. அமெரிக்கா தனது கடிதத்தில் தற்காப்புக்காகவே ஈரான் ராணுவ தளபதி காசெம் சுலைமானியை கொன்றதாக கூறியுள்ளது.

கன்னியாகுமரி: போலீஸைச் சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்!

மின்னம்பலம் : கன்னியாகுமரியில் சோதனைச் சாவடி அருகே பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. போலீஸார் ஒருவரைச் சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி: போலீஸைச் சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்!கன்னியாகுமரி கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சோதனைச் சாவடி உள்ளது. படந்தாலுமூடு என்ற பகுதியில் அமைந்துள்ள இந்தச் சோதனைச் சாவடியில் போலீஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சக போலீஸார் சோதனைச் சாவடியின் உள்ளே இருந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அங்கு வந்த வாகனங்களைச் சோதனை செய்துள்ளார்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த ஸ்கார்ப்பியோ காரையும் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளார். அதில் வந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மூன்று தடவை சுட்டதில் வில்சன் தலை, மார்பு, கால் பகுதியில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

கடவுள் அறிய... மொத்த திமுகவையே உசுப்பி விட்ட மஞ்சம்பட்டி பார்வதி.. வீடியோ


மின்னம்பலம் : வார்டு உறுப்பினராகப் பதவியேற்ற பெண் ஒருவர், கலைஞரின் பெயரில் உறுதிமொழி எடுத்தது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த 6ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி ஊராட்சி 6ஆவது வார்டு உறுப்பினராக பார்வதி லிங்கம் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உறுதிமொழி வாசகங்களைப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரி சொல்லச் சொல்ல, வார்டு உறுப்பினரான பார்வதியும் சொல்கிறார். இறுதியாக, ‘கடவுள் அறிய உளமார உறுதி கூறுகிறேன்’ என்று முடிக்க வேண்டிய இடத்தில், ‘கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பார்வதி தவறாகத்தான் கூறுகிறார் என்று நினைத்த அந்த அதிகாரி மறுபடியும் ‘கடவுள் அறிய’ என்று கூற, அது தவறு என்பதுபோல தலையாட்டிவிட்டு, ‘கலைஞர் அறிய’ என்றே பார்வதி பிரமாணம் எடுத்தார். இதனை அருகிலிருந்து திமுகவினர் கைதட்டி வரவேற்றனர்.

சுற்றுச்சூழல் ஒப்புதலி்ன்றி 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது!- நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு!

green roads chennai high court
nakkheeran.in - அதிதேஜா : சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராம நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தடை கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இந்தப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யாமல் புதிதாக இந்தத் திட்டம் கொண்டு வருவதால், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களைக் கொல்ல முடிவு ...அவுஸ்திரேலியா


தினகரன் : வறட்சி பாதித்திருக்கும் அவுஸ்திரேலியாவில், சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
 மக்களுக்குத் தேவைப்படும் தண்ணீரை விட மிக அதிக அளவில் இந்த ஒட்டகங்கள் தண்ணீரை அருந்துவதால், வேறு வழியின்றி, தண்ணீரை மிச்சம் பிடிக்க, சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 தெற்கு அவுஸ்திரேலியாவின் ஏபிஒய் ஊரக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்லும் திட்டம் இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிஒய் பகுதியில் இருக்கும் ஏராளமான ஒட்டகங்கள் மற்றும் இதர விலங்குகள், அதிகளவில் நீரைத் தேடிப் பருகுவதால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி மட்டுமல்லாமல், காட்டுத் தீயாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலியாவில், கடும் வெப்பம் காரணமாகவே, ஒட்டகங்கள் உட்பட ஏராளமான விலங்குகள் அதிகளவில் தண்ணீர் அருந்துவதாகவும் கூறப்படுகிறது.

ஒதுங்கிப் போகும் டிரம்ப்.. அமைதிக்கு அவசர அழைப்பு.. உரசிப் பார்க்கும் ஈரான்!


ஈரான் எப்படி சுலைமானி மரணம் tamil.oneindia.com - shyamsundar : டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அமைதிக்கு அழைப்பு விடுத்தும் இன்று ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை வலுத்துள்ளது. இந்த சண்டை கண்டிப்பாக மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.
>இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நேற்றைய பேட்டியில், போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. ;போர் சில விஷயங்களுக்கு தீர்வாக அமையாது. அதனால் அதை நாங்கள் விரும்பவில்ல. ஈரானை தனிமைப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்.

கமலஹாசனின் பார்ப்பனீய அரசியலும் ... தீபிகா படுகோனின் JNU ஆதரவும்

சாவித்திரி கண்ணன் : கவலைக்குரிய விஷயம் தான்! கமலஹாசன் மாறப் போவதில்லை!
’கமலஹாசன் அடிப்படையில் இந்துத்துவச் சிந்தனையை ஆழமாக உள்வாங்கியர்’ என்ற என் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்காதா...என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன்!
காஷ்மீரில் 370 விலக்கி கொள்ளப்பட்ட போது மட்டும் மவுனம் சாதித்தவர் அல்ல,அவர் தொடர்ந்து பல விஷயங்களில் அமைதி காட்டியவர் என்பதும் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.
ஒரு முறை தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில்,பர்மாபஜார், ’’முஸ்லீம்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் பணத்தை கொண்டு திருட்டு விசிடி வெளியிடுகிறார்கள்’’ என்று சொன்னார். உடனடியாக அப்போதே,தயாரிப்பாளர்கள் தரப்பில்,’’சார்,பிரச்சினையை வேறு கோணத்திற்கு திசை திருப்பாதீர்கள்..! பர்மா பஜாரில் திருட்டுவிசிடி என்பது உண்மை! அதற்கும்,பாகிஸ்தானுக்கும் எப்படி முடுச்சு போடுகிறீர்கள்..ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்...’’ என்றவுடன் அமைதியானார்.
சரி,இப்படி பல சம்பவங்கள் என் நினைவுக்கு வந்து நிற்கிறது என்றாலும் தற்போதைய விஷயத்திற்கு வருவோம்.

பெண்களை பதுமைகள் ஆக்கி ஆண்களே ஆட்சி செய்யும் பல ஊரக உள்ளாட்சி ஆண்கள் ...

சாவித்திரி கண்ணன் : அடப்பாவிகளா? உங்கள் ஆணாதிக்கத்திற்கு ஒரு எல்லையே இல்லையோ...!
தற்போது உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இப்படி சரிபாதி இடங்கள் பெண்களுக்கு தருவதற்கான நோக்கம் மக்களாட்சித் தத்துவத்தின்படி அதிகாரம்
ஆண்களிடம் மட்டுமே குவிந்துவிடாமல், பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்!
இதற்காகத் தான் என்னைப் போன்றவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக மாய்ந்து,மாய்ந்து எழுதிவருகிறோம்.
ஆனால்,பெண்களுக்கான அதிகாரத்தை அவர்கள் முழுமையாக கையில் எடுத்துச் செய்ய முடியாத வண்ணம், அவர்களின் கணவர்கள் செய்யும் அளப்பறைகள் தாங்க முடியாத ஜனநாயக அவலமாகவுள்ளது!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பெண்களில் நால்வருக்கு அவர்கள் கணவர் அல்லது உறவினரில் ஒரு ஆண் அப் பெண்களை பதவியேற்பு உறுதிமொழி ஏற்க அனுமதிக்காமல் ,பதவியேற்பு உறுதி மொழியை தாங்கள் ஏற்றுள்ளனர் என்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.
இந்த தவறை சுட்டிக் காட்டிய பத்திரிகையாளர்களிடம்,மாவட்ட முகமை திட்ட இயக்குனர் சி.பெரியசாமி,’’பெண்கள் அருகில் இருந்து என்ன உறுதிமொழி எடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு கையெழுத்திட்டால் போதுமானது.’’ என்று வியாக்கியானம் செய்துள்ளதோடு,இந்த அணுகுமுறையை ஊக்குவித்துள்ளார்!

ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியவர் உயிரிழப்பு .. கண்டு கொள்ளாத தமிழக அரசு


Vini Sharpana : < இந்த இளைஞரின் மரணம் இதயத்தை துளைத்துக்கொண்டே இருக்கிறது. ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்ட இளம்பெண்ணை காப்பாற்றச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர் யாகேஷ் மரணமடைந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது பெண்களுக்கும், யாகேஷின் குடும்பத்திற்கும் இழைக்கப்படும் அநீதி. யார் என்றே தெரியாத ஒரு பெண் ஆபத்தில் கூக்குரலிடும்போது தன் உயிரையே கொடுத்து மீட்டிருக்கிறார் ரியல் ஹீரோ யாகேஷ்.
ஆனால், இன்றுவரை அரசியல்வாதிகளோ மக்கள் பிரதிநிதிகளோ சந்தித்து அந்த ஏழைக்குடும்பத்திற்கு ஆறுதல்கூட சொல்லவில்லை.
ஆபத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற சென்று உயிர்விட்ட அந்த இளைஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ‘ஆறுதல் தொகை’ வழங்குவதோடு விருதும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும். அப்போதுதான், கொடூரன்களால் பெண்கள் ஆபத்தில் சிக்கும்போது இளைஞர்கள் ஓடிவந்து காப்பாற்ற இன்னும் இன்னும் முன்வருவார்கள். இப்படி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நமக்கு ஏன் வம்பு என்றுதான் இருந்துவிடுவார்கள்.
'தி’யாகேஷுக்கு வீரவணக்கம்!

தர்பார் ரிலீஸ்: தமிழ்ராக்கர்ஸும் களத்தில் ? Darbar Full Movie Download Threat From Tamilrockers

tamil.indianexpress.com :  அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். TamilRockers Threat To Darbar Movie And Challenge From Rajinikanth Fans:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ல் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பழைய வசூல் சாதனைகளை தர்பார் முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே வழக்கம்போல தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் மிரட்டல், தர்பார் படத்தையும் விட்டு வைக்கவில்லை.
ரஜினிகாந்தின் பேட்ட, கடந்த பொங்கலுக்கு வெளியாகி பட்டையைக் கிளப்பியது. இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லைக்கா தயாரிப்பில் தர்பார் படம் தயாராகியிருக்கிறது. இதில் நயன்தாரா நடித்திருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் படத்தை இயக்கியிருக்கிறார். பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 9-ம் தேதியே (வியாழக்கிழமை) தர்பார் ரிலீஸ் ஆகிறது.
ஒவ்வொரு புதுப்படத்தையும் ரிலீஸ் தினத்தன்றே திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தர்பார் படத்தையும் வெளியிடக்கூடும் என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

முத்தூட் நிறுவன அதிபர் ஜார்ஜ் உயிர் தப்பியது .. `தலையை நோக்கி பாய்ந்த 5 கிலோ எடை கொண்ட கல்!’


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தூட் அதிபர்
ஜார்ஜ் அலெக்ஸாண்டர் vikatan.com - எம்.குமரேசன் : முத்தூட் நிறுவனத் தலைவர் ஜார்ஜ் அலெக்ஸாண்டரை நோக்கி 5 கிலோ எடையுள்ள கல் வீசப்பட்டது. பிரபல முத்தூட் நிதி நிறுவனத்தில் பல ஆண்டுக்காலமாக ஊழியர்கள் பிரச்னை இருந்து வருகிறது. சமீபத்தில், முத்தூட் நிறுவனத்தின் 43 கிளைகளில் இருந்து 160 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வேலை நீக்கத்தை எதிர்த்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் போராடி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை கொச்சி ஐ.ஜி அலுவலகம் அருகே முத்தூட் நிறுவன அதிபர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பெரிய கல் ஒன்று அவர் தலையின் பின்பக்கத்தைத் தாக்கியது.
தலையில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஜார்ஜின் காரை பின்தொடர்ந்து, சென்று கல்லை வீசியதாகச் சொல்லப்படுகிறது. ஜார்ஜ் மீது வீசப்பட்ட கல் 5 கிலோ எடை கொண்டது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இருக்கை மீது சேர்ந்து கல் விழுந்ததால் ஜார்ஜ் உயிர் தப்பியதாகச் சொல்லப்படுகிறது

புதன், 8 ஜனவரி, 2020

பேச்சுவார்த்தைக்கு வந்த சுலைமானியை அமெரிக்க கொன்றுவிட்டது .. இராக் குற்றச்சாட்டு


Mahalaxmi : ஒரே நாளில் உச்சத்துக்கு சென்ற டிரம்ப், இப்பொழுது சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார், இனி அவருக்கு மாபெரும் சிக்கல் ஏற்படலாம் அவரின் அரசியல் வாழ்வே நொறுங்கிவிடலாம்
விஷயம் அவ்வளவு கடுமையானது
முதல் அடி கொடுத்திருப்பவர் ஈராக்கிய பிரதமர், அவர் "அமெரிக்கா எங்களிடம் சுலைமானியினை அழைத்து சமரசமாக பேசி பிரச்சினையினை தீருங்கள் என சொன்னார், நாங்களும் நம்பி வரசொன்னோம், சுலைமானி அப்படித்தான் வந்தார்
வந்தவரைத்தான் கொன்றுவிட்டார்கள், இந்த கொடும் வஞ்சகம் எங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, இனி அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் எக்காலமும் உறவு இல்லை, அமெரிக்கா ஈராக்கை விட்டு கிளம்பலாம்"
ஆம் இது சாதாரண விஷயம் அல்ல,
பொதுவாக உளவு அமைப்புகள் இப்படி தந்திரமாக செய்யும் அடிமட்ட ஆட்களை கைக்குள் போட்டு மேல் மட்டத்தை நெருங்கி எதிரியினை அழைக்க சொல்லி பலமுறை தப்பவிட்டு எதிர்பாரா நேரம் விபத்தாகவோ ஊசியிலோ உணவிலோ காற்றிலோ விஷம் கலந்தோ முடித்துவிடுவார்கள்

இந்துமகா சபை கோடம்பாக்கம் ஸ்ரீ கந்தன் பொதுசெயலாளர் மீது பாலியல் அத்து மீறல் .வழக்கு பதிவு

அமித் ஷாவோடு  கோடம்பாக்கம் ஶ்ரீகந்தன்
Shankar A : பாலியல் புகாரில் இந்து மகாசபை தலைவர் மீது வழக்கு.
அகில இந்திய இந்து மகாசபையின், அகில இந்திய தலைவரான (அவனே அப்படி சொல்லிக்குவான்) கோடம்பாக்கம் ஶ்ரீ எனப்படும், ஶ்ரீ கந்தன் மீது, கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு பதிவு.
புகார் கொடுத்த பெண், இந்து மகாசபையின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கந்தனுக்கு ஆங்கிலம் தெரியாததால், டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் கந்தன் அவரை அழைத்து செல்வார். அப்போதெல்லாம் அப்பெண்ணிடம் கந்தன் தவறாக நடக்க முயற்சி எடுத்துள்ளார். செப்டம்பர் 2019ல், அந்த பெண்ணை கட்டிப்பிடிக்க ஶ்ரீ கந்தன் முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண், தனது பொது செயலாளர் பதவியை (பெரிய கவர்னர் பதவி) ராஜினாமா செய்துள்ளார்.
அதன் பிறகும் கந்தன் விடாமல் அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண்ணின் அண்ணனையும் மிரட்டியுள்ளார். என் ஆசைக்கு இணங்காவிட்டால், உன் பெயரை ஊர் முழுக்க நாறடித்து விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார் கந்தன்.
கந்தனின் வேலையே, போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், தகராறில் இருக்கும் நிலங்களை அபகரிப்பதுமே என்று கூறுகிறார் அந்த பெண்.

ஈரான், ஈராக் மீது விமானங்கள் பறக்க தடை ..அமெரிக்கா - இந்தியா உட்பட பல நாடுகள் தடை அறிவிப்பு ..


உச்சகட்ட பதற்றம் : ஈரான், ஈராக் மீது விமானங்கள் பறக்க அமெரிக்கா - இந்தியா தடைதினத்தந்தி :புதுடெல்லி ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு அவசரகால தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்து உள்ளது. இந்நிலையில், சுலைமானி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ  தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
இதில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

தனியார் மயமாக்கப்படும் திருச்சி பெல்!

தனியார் மயமாக்கப்படும் திருச்சி பெல்!மின்னம்பலம்:  பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யார் போராடினால் நமக்கு என்ன என்ற வகையில் மத்திய அமைச்சரவை இன்று சில நிறுவனங்களைத் தனியார் மயமாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாஜக அரசு , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. சில எண்ணெய் நிறுவனங்கள் உட்பட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஈரான் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் 80 அமெரிக்கர்கள் உயிரிழப்பு? வீடியோ


தினமலர் : நியூயார்க் : ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் அவசர ஆலோசனை நடத்தின. டிரம்ப் '
கூல்' டுவீட் : ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆல் இஸ் வெல்.
2 அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. பரவாயில்லை. இது நல்லது தான். எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள், ராணுவம் உள்ளது. நாளை காலை இது பற்றி அறிக்கை அளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார். தற்காப்பிற்காகவே தாக்குதல் : ஐ.நா.,வின் சட்டவிதி 51 ன் படி, எங்கள் குடிமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் தற்காப்பிற்காகவே ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தினோம்.

"பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...

central government warns employees over bharat bandh nakkeeran : மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், நிலக்கரி துறையில் 100% நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர்கள் விதிமுறைப்படி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அதிகாரம் அளிக்கப்படவில்லை. சங்கம் அமைக்கும் உரிமை என்பது வேலைநிறுத்தமோ, போராட்டமோ நடத்துவதற்கான உரிமை அல்ல. எந்த சட்டப்பிரிவும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய அதிகாரம் அளிக்கவில்லை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் எந்த வகையான வேலைநிறு..  ஈடுபட்டாலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

180 பயணிகளோடு உக்ரேன் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது ... 180 பேரின் நிலை கேள்விக்குறி


tamil.oneindia.com  -  shyamsundar :  :  டெஹ்ரான்: ஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரின் நிலை கேள்விகுறி ஆகியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.
சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது. பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
> இதற்கு மத்தியில்தான் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள். விமானத்தில் பயணித்த 180 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை

தமிழகத்தில் 40 வீதமான வேலைவாய்ப்புக்கள் பிறமாநிலத்தவர்களுக்கே .... புதிய தொழிற்சாலைகளில் .. அமைச்சர் சம்பத் அறிவிப்பு

தினகரன் :தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் 40% வரை தமிழகத்தை சேராதவர்களுக்கு  வேலை வாய்ப்பு.
சென்னை: தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் மேலும் 60% வரை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த பதிலை வழங்கியுள்ளார்.&

வடிவேலுவை போலீஸ் தேடுகிறதா ?... எலி பட விவகாரம்.... . ..


நக்கீரன் : நடிகர் வடிவேலு, தம்பி மணிகண்டன் மற்றும் இரண்டு பேர் எலி படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் வடிவேலு. ஆனால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் அந்த படத்தை தாயாரித்த இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இப்படி பல்வேறு பிரச்சனைகளில் வடிவேலு இருந்து வருகிறார்.
வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலுவை தேடி வருவதாக கூறப்படுகிறது

BBC :அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல்


இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
''இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 7 ஜனவரி, 2020

நித்தியானந்தாவின் சிஷ்யை தத்துவ பிரியானந்தா உயிருக்கு ஆபத்து ... வைரல் வீடியோவில் ..

மாலைமலர் : தனது உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய வீடியோ என நித்யானந்தா பெண் சீடர் தத்துவப் பிரியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 3 மகள்கள், 1 மகனை பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்திருந்தார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளை நித்யானந்தா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி சென்று சிறை வைத்திருப்பதாக ஜனார்த்தன சர்மா போலீசில் புகார் அளித்தார். ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ஜனார்த்தன சர்மாவின் ஒரு மகள், மகனை மீட்டனர். மூத்த மகள் லோபமுத்ரா என்ற தத்துவப்பிரியானந்தா, மற்றொரு மகள் நந்திதா ஆகிய 2 பேரும் ஆசிரமத்தில் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜனார்த்தன சர்மா மகள்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

அதிமுகவில் இருந்து 2 இலட்சம் பேர் திமுகவில் இணைய முடிவு ... அதிர்ச்சியில் அதிமுக!

dmkநக்கீரன் : தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என  2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஜே.என்.யு.வை தாக்கினோம், இன்னும் தாக்குவோம்!- இந்து அமைப்பு வாக்குமூலம்!

ஜே.என்.யு.வை தாக்கினோம், இன்னும் தாக்குவோம்!- இந்து அமைப்பு வாக்குமூலம்!மின்னம்பலம் : நாட்டையே உலுக்கிய டெல்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தாக்குதலுக்கு, ‘ஹிந்து ரக்‌ஷா தள்’ என்ற வலது சாரி அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிறு மாலை ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து மாணவர்களை இரும்பு ராடுகள், கடுமையான தடிகளால் கடுமையாகத் தாக்கினார்கள்.
இந்த சம்பவத்துக்கு இடது சாரி மாணவர் அமைப்புகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டிய நிலையில், பல்கலைக் கழக மாணவர் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும், “பல்கலை நிர்வாகமும் மர்ம குண்டர்களும் சேர்ந்தே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்”என்று குற்றம் சாட்டினார்கள். அதிலும் ஒருபடி மேலேபோய், ‘இந்தத் தாக்குதல் துணைவேந்தருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. எனவே துணைவேந்தரை நீக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவருக்கே கடிதம் எழுதினார்கள்.

மலேசியாவில் தர்பார் பட ரிலீஸுக்குத் தடை!

தர்பார் பட ரிலீஸுக்குத் தடை!மின்னம்பலம் : ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தர்பார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மலேசிய நிறுவனம் ஒன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
டிஎம்ஒய் கிரியேஷன்ஸ் என்னும் மலேசிய நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “2.0 திரைப்படத்திற்காக லைகா நிறுவனம் எங்களிடம் இருந்து ஆண்டுக்கு 30 சதவீத வட்டியில் 12 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றது. அந்தத் தொகையின் வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்ச ரூபாயைத் எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டியுள்ளது. எனவே, கடன் தொகையைத் திருப்பி தரும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

10% இட ஒதுக்கீடு மாநில அரசே முடிவெடுக்கலாம்: மத்திய அரசு!

10% இட ஒதுக்கீடு மாநில அரசே முடிவெடுக்கலாம்: மத்திய அரசு!மின்னம்பலம : உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம், மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2019ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்குத் தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதுபோன்று தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
இதுபோன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் காங்கிரஸ் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநர் உரையை கிழித்தெறிந்த ஜே. அன்பழகன் ..ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரி... ஜெ. அன்பழகன் டி பேட்டி.. வீடியோ


nakkeeran :சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,
சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேசும்போது, நன்றாக நடந்தது என்று பேசினார். நான் அதற்கு பதில் அளித்து பேசுகிறபோது, முறைகேடுகளை பட்டியலிட்டு பேசினேன். உதாரணமாக மந்திரி, கலெக்டர் முன்பாக கந்தவர்கோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் எங்களுக்கு உதவி செய்யவில்லை, எதிர்க்கட்சிக்குத்தான் உதவி செய்தாய் என்று அரசு அதிகாரி அன்வர் அலியை ஒருமையில் திட்டியதை வாட்ஸ் அப் மூலமாக இந்த உலகமே பார்த்தது. இதனை சொன்னேன். இதனால் அவர்களுக்கு எரிச்சல், தாங்க முடியவில்லை.

BBC நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்


டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.
"எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கில் போடுவது மூலம் இந்த நாட்டில் உள்ள பெண்கள் வலிமை பெறுவார்கள். இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்." என நிர்பயாவின் தாயார் தெரிவித்தார்.
முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்காவது மற்றும் கடைசி மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ? ... Collective Consciousness ... become Collective Unconsciousness

Collective Consciousness ... become  Collective Unconsciousness.  Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது.  இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.
உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து  நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு  கிடையாது என்பதே உண்மை
ஈரான் இந்தோனேசியா இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இயற்கை அழிவுகளும் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட அரசியல் சமுக குழப்பங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை போல தெரிவது எல்லாம் வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
அவை நிச்சயமான தொடர்பு உடைய சம்பவங்கள்தான்.
மக்களின் கூட்டு மன நிலைதான் அவர்களது நாட்டையும் சமுகத்தையும் பாதிக்கிறது. மக்கள் மன நிலை மேம்பட்டால் அந்த நாடும் மேம்படும் .மக்கள் குழம்பினால் இயற்கையும் குழம்பும். இது மிக தெளிவான உண்மை.
இந்த உண்மைகளை இன்றைய விஞ்ஞானம் மறுக்கிறது என்பது கூட உண்மை இல்லை.  மறுப்பது போல நடிக்கிறது என்றுதான் கூறவேண்டும். காரணம் இருக்கிறது .

குஜராத் அரசு மருத்துவமனைகளில் 522 குழந்தைகள் உயிரிழப்பு.. – அதிர்ச்சி தகவல்..!

sathiyam.tv : ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்திலும் 2 அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 522 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது./>
ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, தொற்றுநோய் உள்ளிட்ட காரணங்களினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது, நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தற்போது, இதே மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள 2 அரசு மருத்துவனைகளிலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் றந்ததாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் 269 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தீனதயாள் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மனீஷ் மேதா கூறுகையில், “கடந்தாண்டு டிசம்பரில் 111, நவம்பரில் 71, அக்டோபரில் 87 என கடந்த 3 மாதங்களில் மொத்தம் 269 குழந்தைகள் பலியாகி உள்ளனர். எடை குறைவு, அதிகளவிலான தீவிர நோயாளிகள் பரிந்துரைக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களினால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

திங்கள், 6 ஜனவரி, 2020

தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு உணவு... கணவர் தீயில் கருகினார் ... இந்த கொடுமையை .. பாருங்கள் ...

நண்பர்களே..! வழக்கமான பதிவுதானோ என்றெண்ணி தயவு செய்து இந்த
பதிவை கடந்து போய்விடாதீர்கள்... எனக்காகவாவது முழுமையாக படியுங்கள். அதன்பின் கடந்து போக வேண்டுமா? அல்லது ஏதாவது செய்ய வேண்டுமா என்பது உங்கள் விருப்பம்.
ஒரு பெண், வறுமையின் காரணமாக தன் தலைமுடியை மொட்டை அடித்து அந்த முடியை எடைக்குப் போட்டு கிடைத்த சொற்ப பணத்தில் தன் குழந்தைகளுக்கு உணவளித்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
ஒரு பெண்ணையும் அவள் குழந்தைகளையும் சுற்றி ஒரு கூட்டமே நின்றுக்கொண்டு "செத்துப்போ... செத்துப்போ" என்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இப்படியான ஒரு சூழலை நம்மில் யாராவது கடந்து வந்திருக்கிறோமா ? நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் இப்படியான சூழலில் ஒரு பெண் வாழ்கிறார் மூன்று குழந்தைகளுடன்!
இனி அவர் கதை என்னவென்று பார்ப்போம்... மேல் கூறிய சூழலில் வாழும் பெண் பெயர் பிரேமா. வயது 31. ஏழு மாதங்களுக்கு முன்புதான் அவர் கணவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு இறந்து போனார் என்பது உப செய்தி.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நன்றாக வாழ்ந்த குடும்பம் தான். கணவன் மனைவி இருவருக்கும் செங்கல் சூளையில் வேலை. இருவருமே நல்ல உழைப்பாளிகள். குடும்பம் மூன்று பிள்ளைகள் என வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது.

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு உலக மாணவர்கள் ஆதரவு!

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு உலக மாணவர்கள் ஆதரவு!minnamblam : ஜேஎன்யுவில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஆக்ஸ்போர்ட், கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை முகமூடி அணிந்தபடி புகுந்த மர்ம நபர்கள் கண்ணில் கண்ட மாணவர்கள், பேராசிரியர்களை எல்லாம் கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில் பல்கலைக் கழக மாணவர் தலைவர் அயிஷ் கோஷ் உள்ளிட்ட 30 மாணவர்கள் காயமடைந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தத்து எடுக்கப்பட்ட பெற்றோரால் 1,100 குழந்தைகள் மீண்டும் காப்பகம் அனுப்பி வைப்பு

RTI https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/misery-of-orphans-over-1100-adopted-children-returned-to-child-care-institutions/returning-adopted-children/slideshow/73107411.cms
.dinakaran.com : புதுடெல்லி: சிறுவர் காப்பகங்களில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் தத்து எடுக்கப்பட்ட 1100 குழந்தைகள், வளர்ப்பு பெற்றோரால் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் வளர்ப்பு பெற்றோரால் திருப்பி அனுப்பப்பட்ட குழந்தைகள் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு மத்திய தத்தெடுப்பு ஆணையம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 1,100 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், வளர்ப்பு பெற்றோர் மூலமாக மீண்டும் காப்பகங்களில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 2014-2015ம் ஆண்டு தான் அதிக எண்ணிக்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் காப்பகங்களுக்கு திரும்பியுள்ளனர்.  2014-2015ம் ஆண்டில் 4362 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 387 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்ட பெற்றோரால் மீண்டும் காப்பகங்களில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர்.  இதேபோல், 2015-2016ம் ஆண்டு 3677 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்ட நிலையில், 236 பேர் மீண்டும் காப்பகங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Roja Attacked நடிகை ரோஜாவை சொந்த கட்சியினரே தாக்கினர் ..


Veerakumar -  tamil.oneindia.com :சித்தூர்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி தொகுதி, எம்.எல்.ஏ மற்றும் ஆந்திர பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு கழக (ஏபிஐஐசி) தலைவரான ரோஜாவின் கார், அவரது சொந்தக் கட்சியினராலேயே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நல்ல வேளையாக ரோஜா தப்பினார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரோஜா. தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவராக அவரை நியமித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இது அமைச்சருக்கு ஈடான பதவியாகும். இப்படி, கட்சியில் நல்ல செல்வாக்கோடு வலம் வரும் ரோஜா மீது சொந்த கட்சிக்குள்ளேயே சிலருக்கு பொறாமை எழுந்துள்ளது.
இப்படி, பொறாமையால் பொங்கிக்கொண்டு இருப்பவர்தான், ஒன்றிய குழு உறுப்பினர் அம்முலு. இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அவ்வப்போது ரோஜா மற்றும் அம்முலு ஆதரவாளர்கள் இடையே உரசல் நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான், சித்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ரோஜா இன்று சென்றார்.

தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க அழுத்தம் கொடுப்போம் - தமிழக ஆளுநர்

கறுப்பு உடையில் வந்த தமீம் அன்சாரி
 இரட்டை குடியுரிமை: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்!மின்னம்பலம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் சட்டமன்றம் இன்று கூடியது.
2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் இன்று (ஜனவரி 6) காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, நோ சிஏஏ, நோ என்ஆர்சி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்துவந்திருந்தார். ஆளுநர் தனது உரையைத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களும், டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோரும் ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.
உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடிந்து உள்ளது. தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8 ம் தேதி தேர்தல் - சுனில் அரோரா

மாலைமலர் : புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை செயலாளர், காவல்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும். தேர்தலுக்காக 13,750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

BBC ஜே.என்.யு. பல்கலை. தாக்குதல்: டெல்லி முதல் ஹைதராபாத் வரை நள்ளிரவில் நாடெங்கும் பரவிய போராட்டங்கள்


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இதனை கண்டித்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளது. நேற்று மாலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட தாக்குதல்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
>அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”

timestamil:  ஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார்.
கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள்?
பதில்: கௌகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, படித்தேன். முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், பின்பு இளைஞர் பெருமன்றத்தி்லும் பணியாற்றினேன். அப்போது இருந்த தலைவர்கள் என்னை தொழிற்சங்க அரங்கத்தில் பணியாற்றச் சொன்னார்கள். மறைந்த திபங்கர் தத்தா எனக்கு குரு. 1992 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் அரங்கத்திலும், பிறகு அமைப்புச் சாரா அரங்கத்திலும் பணியாற்றி னேன். இப்போது ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளராக இருக்கிறேன். 1994 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானேன். இப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன்.

அணு ஒப்பந்தங்களில் இருந்து ஈரான் விலகல்!

மின்னம்பலம் : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ஈரான்.
அணு ஒப்பந்தங்களில் இருந்து ஈரான் விலகல்!இதன் மூலம் யுரேனிய வளத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு இனி கட்டுப்பாடுகள் இருக்காது என்றும், ஆனாலும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரொஹானியின் இந்த முடிவு நேற்று (ஜனவரி 5) ஈரானின் அரசு தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
தனது நாட்டின் அணுசக்தி பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வரம்புகளையும் ஈரான் மதிக்காது. எந்தவொரு அணுசக்தி செறிவூட்டலையும் வரம்புகள் இன்றி அதன் தொழில்நுட்ப தேவைகளின் அடிப்படையில் ஈரான் தொடரும் என்று அரசு தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய வெப்சைட்டில் பா.ம.க பெயர் போச்சு,, பா.ம.க-வால்தான் அ.தி.மு.க ஆட்சி' அன்புமணி பேச்சு..

பா.ம.க பெயர் இல்லாத தேர்தல் ஆணைய இணையதளம்...ராமதாஸ், அன்புமணிvikatan.com  ;எஸ்.ஏ.எம். பரக்கத் அலி :
பெரிய கட்சி பா.ம.க என்கிறார் ராமதாஸ். ஆனால், மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பா.ம.க பெயரே இல்லை. அன்புமணி பேச்சுக்கு பழி வாங்குகிறதா அ.தி.மு.க? 'உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க-தான்' என அறிக்கை விட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ஆனால், பா.ம.க-வின் பெயர் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் இல்லை
பா.ம.க பெயர் இல்லாத தேர்தல் ஆணைய இணையதளம் - >விகடன்</ ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகின. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்காக டெம்ப்ளேட்டை அந்த இணையதளத்தில் உருவாக்கியிருந்தார்கள். அந்த டெம்ப்ளேட்டில் அ.தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பி.ஜே.பி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, தி.மு.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பா.ம.க பெயர் மட்டும் மிஸ்சிங்.