சனி, 22 பிப்ரவரி, 2025

கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவைகள் நிறுத்தம்! .. பேருந்து தாக்கப்பட்டதால் பதற்றம்

 tamil.oneindia.com  - Velmurugan P : பெங்களூர்: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையேயான பேருந்து சேவைகள் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகாவின் பெலகாவி அருகே ஒரு மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து சேவைகள் இரு மாநிலங்களுக்கு இடையே தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையோரத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டம் கர்நாடகாவுக்கு சொந்தமானது ஆகும். இங்கு மராத்தி பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.அதேபோல் கன்னடம் பேசும் மக்களும் உள்ளனர். மராத்தி பேசும் மக்கள். பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு அங்கு வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் தடை நீடிப்பு! இலங்கை அரசு முக்கிய அறிவிப்பு

 வீரகேசரி :  புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் தடையை நீடித்து விசேட அரசு  அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த அரசு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்புகளின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பெயர் பட்டியலையும் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்

தினமணி : இயக்குனர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்
‘எந்திரன்’ திரைப்படம் கதை திருட்டு புகார் விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளவில் திரையிடப்பட்டு ரூ. 290 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது.
எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

அல்பிரட் துரையப்பாவை புலிகள் கொலை செய்தது யோகேஸ்வரனை எம்பியாக்கவே!

May be an image of 3 people and text that says 'PRABHA'S DICTATORSHIP 13 July 1989 TULF leader Hon. A. Amirthalingam arranged a meeting between the Tamil Tigers and the TULF leaders at their residence. On the evening of the day three men arrived at the residence. The meeting seemed to be going well when suddenly one man pulled out a and shot Hon. A. Amirthalingam in the head and chest. Hon. V. Yogeswaran stood up but was shot. The assailants shot Hon. M. Sivasithamparam in the shoulder. Amirthalingam and Yogeswaran were killed but Sivasithamparam survived. (from left: A.Amirthalingam, Yogeswaran, M.Sivasithamparam) ත්‍රස්තවාදය පිටු දකිමු பயங்கரவாதத்திலிருந்து விடுபடுவோம் SAY NO TO TERRORISM'
அல்பிரட் துரையப்பாவை புலிகள் கொலை செய்தது யோகேஸ்வரனை எம்பியாக்கவே!
தன்னை எம்பியாக்கிய புலிகளுக்காக வாழ்நாள் முழுவதும் அவர்களின் ஏவல் பேயாக எப்படி எப்படி எல்லாம் திரு யோகேஸ்வரன் செயல்பட்டிருக்கிறார். அமிர்தலிங்கம் கொலைக்கு எவ்வளவு வசதி செய்து கொடுத்திருக்கிறார் திரு யோகேஸ்வரன் எம்பி?
சென்னை பத்திரிகையாளர் திரு கோபாலனின் இந்த பதிவு பல இருட்டு பக்கங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது
gopalan chennai : அமிர்தலிங்கம் இலங்கை திரும்பியதுமே அவர் விடுதலைப் புலிகளின் முதல் குறியானார். அவரை நெருங்க யோகேஸ்வரனைப் பயன்படுத்திக்கொண்டனர். யோகேஸ்வரன் எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவார். விடுதலைப்புலிகளால் அவரும் சிறைப் படுத்தப்பட்டிருந்தாலும் அவருக்கு அவர்கள் மீது அனுதாபம், அன்பு உண்டு. தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியவர் அவர்.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

பெரியாரும் ஏமாற்றும் தமிழக தேர்தல் வியூக வகுப்பாளர்களும்! | 4-ம் வகுப்பு படித்தவரை வைத்து தேர்தல்

இலங்கை நீதிமன்ற கொலையில் தேடப்பட்டு வரும் பெண்

May be an image of 3 people and text that says 'κ MADAWAL NEWS இந்தக் கொலையை செய்ய எனக்கு valane ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத் தொகையாக தறுவதாக வாக்குறுதி அளிக்கப்படிருந்தாலும் இரண்டு alaney இலட்சம் ரூபாவை மட்டுமே அட்வான்சாக தந்தனர் சந்தேகநப்ர் வாக்குமூலம் 20-02-2025 Madawala News f 9478 965 +94789652989 2989'
May be an image of 2 people and text that says 'Capital NEWS EV ናቱ கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர் www.capitalnews.lk'

hirunews.lk : கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் காவல்துறை!
துபாயில் உள்ள கெஹெல்பத்தர பத்மே என தெரிவிக்கப்படும் நபர் ஒருவரே கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபருக்கு உதவியாக செயற்பட்ட பெண்ணே குற்றச் செயலை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வந்தி வீரசிங்க எனப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

மகா கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் 'வீடியோக்கள்' விற்பனைக்கு.. வெளியான அதிர்ச்சி

Maha Kumbh Mela: Women bathing videos for sale online! Archives - Gem  Television
மாலை மலர் :  உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த விழா முடிவுக்கு வரும். உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து பயணிகள் சுட்டுக்கொலை

 வீரகேசரி : பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாநிலத்தில் இனம்தெரியாத நபர்கள் பேருந்து பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்
லாகூருரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தினை இடைமறித்த ஆயுததாரிகள் அதிலிருந்தவர்களை இறங்கச்செய்து படுகொலை செய்துள்ளனர்.
பலோச்சிஸ்தானின் பார்க்கான் என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லைகளிற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் அதிகளவு சுயாட்சியை கோரி ஆயுதப்போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதன், 19 பிப்ரவரி, 2025

இலங்கை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவ பலி! -

Ceylonmirror.net :ஜேegan : கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை , துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி! நீதிமன்றம் அதிரடி

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

“இந்தியை திணித்தால் இன்னொரு மொழிப் போர்...” - சென்னை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு

 Hindu Tamil  : சென்னை: “இந்தியைத் திணித்தால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும்,
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இண்டியா கூட்டணி சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக அணி இன்று ஆா்ப்பாட்டம்

 தினமணி ; சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அணியிலுள்ள கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது குறித்து அந்தக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை மாநில கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மிரட்டுகிறாா். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிப்புக்கான முன்னெடுப்பு போன்ற செயல்பாடுகளால் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

கனடாவில் ஓடுபாதையில் கவிழ்ந்த விமானம்: 19 பேர் காயம் delta airlines

 dinamalar.com : டொரன்டோ: அமெரிக்காவில் இருந்து வந்த பயணிகள் விமானம், ஓடுபாதையில் இறங்கும்போது விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 19 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு 76 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்தது. டொரன்டோ நகரில் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்தது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறியடித்துக் கொண்டு, உள்ளே இருந்து குதித்து வெளியேறினர். விபத்திற்கான காரணம் தெரியவில்லை. உடனடியாக போலீசார், மீட்புப் பணியில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

திங்கள், 17 பிப்ரவரி, 2025

வரும் தலைமுறைகளின் கல்வியை சிதைக்க முழு மூச்சாக வேலை செய்யும் முட்டாள்கள்.

 Vasu Sumathi  : மஹாகும்ப மேளாவில் சரியான ஏற்பாடுகள் செயப்படவில்லை என்று பாஜக அரசை மக்கள் கேவலமாக பேசுகிறார்கள்.... சரி! அடுத்த தேர்தலில் அங்கு பாஜக என்னவாகும்? 🤔
லக்கிம்பூரில் போராடும் விவசாயிகள் மீது பாஜக மத்திய அமைச்சரின் மகன் தன் ஜீப்பை ஓட்டி பல பேரை கொன்றான்.
😔 அடுத்த தேர்தலில் லக்கிம்பூரில் பாஜக மாபெரும் வெற்றி
ஹத்ராஸில் ஒரு மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து போனாள். நாடே கொந்தளித்தது
😔அடுத்த தேர்தலில் ஹத்ராஸில் பாஜக மகத்தான வெற்றி
மபி மாநிலம் மண்ட்சவுரில் ஊர்வலம் சென்ற விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்றனர்.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த முறைப்பாட்டை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

 மாலை மலர் ;  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எங்கே உங்கள் கதாசிரியர்கள் - வசனகர்தாக்கள் - எழுத்தாளர்கள் -பாடகர்கள் - இசையமைப்பாளர்கள்?

 ராதா மனோகர் : ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமுல்படுத்த துடிக்கிறது!
தமிழ்நாட்டின் திரைப்படங்கள்  திரைப்பாடல்கள் . தமிழ் நூல் பதிப்பகங்கள் போன்ற மொழி வழி தொழில்கள் மொழிவழி கலாச்சார விழுமியங்கள் எல்லாம்  ஆதிக்க வாதிகளின் தூக்கத்தை தொலைகிறது போலும்
மும்மொழியை அமுல்படுத்திய அத்தனை வட நாட்டு மாநிலங்களும் தங்கள் மொழியை இழந்து விட்டன.
அவர்களின் மொழிவழி தோழிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு இது.
இந்தி திணிப்புவாதிகள் வெறும் மாநில மொழிகளை மட்டும் அழிக்கவில்லை
அந்த மாநிலங்களின் மொழி சார்ந்த வரலாற்று அடையாளங்களை அழித்து தொலைத்து விட்டார்கள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

விமானங்களில் மோதும் பறவைகள்; சர்வதேச அமைப்பு அதிர்ச்சி தகவல்!

 dinamalar.com :  நமது நிருபர் :  சிங்கப்பூர்: விமானங்கள் மீது பறவைகள் மோதுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 2016 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் முறை, விமானங்கள் மீது பறவைகள் மோதியுள்ளதாக, சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானங்கள் மீது பறவைகள் மோதுவதால் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது, விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் தென் கொரியாவில் நடந்த இத்தகைய சம்பவத்தில், பயணிகள் உட்பட 179 பேர் பலியாகினர்.

மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்! பாசிச அணுகுமுறை... இரு சம்பவங்களை சுட்டிக்காட்டி .

 minnambalam.com -  christopher :  மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான கண்டனத்திற்கு உரிய பாசிச அணுகுமுறை என விஜய் (பிப்ரவரி 16) கண்டனம் தெரிவித்துள்ளார். vijay condemns union govt on fascism
மும்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பேசினார்.
அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் கிடையாது- எடப்பாடி பழனிசாமி

 மாலை மலர் :  வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக வாகைசூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் கிடையாது.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என் சாக்கு போக்கு சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.

யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை நிறுவப்படும்.- அருண் சித்தார்த் அறிவிப்பு

May be an image of 2 people, dais and text that says 'EgALE λлa 'தலித் மக்களுக்கான திலித் துலீத் மக்களாகிய் மிச் ஜயஸீர அாக வாக சதரி்க் சதுருக்க சேணர்கம் aTό வேறுயாட்டின் SPY எல்விசரிவம்.ரியாதைுரம் சல்வி அறிவும். சயமரியாதையும் பகுத்றறிவுமே தாழ்த்து நிடக்கும் மக்களை உயர்த்தும். Education, Self Respect, And Rational Qualities Will Uplift The Downtrodden. ngdabka ee Hbl PUMAY நான் சொல்வதை மறுப்பதற்கு உனக்கு உரிமையுண்டு ஆனால் என்னைப் பேசாதே என்ர் கணலுவதற்கு உனக்கு உரிமையில்லை. தந்தை 6ါ பியார்- riyar. E. V.Ramaso'
அருண் சித்தார்த்  -  இயக்குனர் ராஜ்குமார்

Arulanandam Arun :  ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் ஈழத்தில் பெரியார் சிலை நிறுவப்படும்.- அருண் சித்தார்த் அறிவிப்பு
பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
இலங்கையில் சாதி வெறியின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை ஒன்றல்ல பல நூறு நிறுவப்படும் .
இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை வந்திருந்த வெங்காயம்,பயாஸ்கோப் போன்ற படங்களின் இயக்குநரும் பெரியாரிஸ்ட்டுமான ராஜ்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்/ பெரியார் படிப்பு வட்டம் மற்றும் அம்பேத்கர் இயக்கம் ஆகியவற்றின் எமது அலுவலகத்தில் எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

 hindutamil.in  :  சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, விதிகளின்படி தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடந்த உடன்கட்டை! நடுங்க வைக்கும் கொடூரம்

May be an image of text
May be an image of map and text

Dhinakaran Chelliah ;  உடன்கட்டை   - சதி-     1820 - ம் வருஷம் பத்திரிக்கையில் வந்த ‘உடன்கட்டை ஏறுதல்’செய்தியை ஆநந்தகுண போதினி -1927 மார்ச் மாத இதழ் வெளியிட்டுள்ளது. வேளாளப் பெண் ஒருத்தி உடன்கட்டை ஏறுவதை ஒருவர் நேரில் பார்த்த அனுபவம்தான் 1820 ல் பத்திரிக்கையில் வந்த செய்தி.
இத்தனைக்கும் அவள் ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண் என கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
சனாதனத்தின் பெண் அடிமைத்தனம் எல்லா சாதி மற்றும் வர்க்கங்களுக்கிடையில் பரவியிருந்ததை செய்தித் தாளில் வந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.

தி.மு.க. கூட்டணியின் வாக்கு 5 விழுக்காடு அதிகரித்துள்ளது! இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பு

May be an image of text that says 'சனிக்கிழமை 15-02-2025 தி.மு.க.வின் வின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது முர முரசெ சொலி'

நிலவினியன் மாணிக்கம் ; இன்­றைய செய்தி நாளைய வர­லாறு
திமுகவின் வெற்றி தீர்மானிககப்பட்டதா? ஓர் அலசல்..
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியின் வாக்கு 5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் இந்தியா கூட்டணியானது தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறி இருக்கிறது.

புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

 bbc.com   : இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
புது டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ரிது சக்சேனா, பிபிசி ஹிந்தியிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.
சனிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து, இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் என்றும், 10 பேர் பெண்கள் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

 vikatan.com - மு.பூபாலன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் கண்ணியமின்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல் முதல் கட்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் சான்றுகளை காஞ்சி சங்கரரிடம் அனுமதி கேட்டே அறிவிப்பார் திரு.நாகசாமி

 ராதா மனோகர் :  தொல்லியல் துறையில் எந்த சான்று கண்டு பிடிக்கப்பட்டாலும் முதலில் காஞ்சி சங்கர ஆச்சாரியிடம் அனுமதி கேட்டே அறிவிப்பார் திரு.நாகசாமி
திருக்குறளில் வேதங்களின் கருத்துக்கள்தான் இருக்கிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்டவர் மறைந்த தொல்லியல் துறை இயக்குனர்  திரு நாகசாமி!
தொல்லியல் துறையில் எந்த ஒரு வரலாற்று சான்று பொருள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அதை முதலில் காஞ்சி சங்கர ஆச்சாரியிடம் கொண்டுபோய் காட்டிவிடுவார் இந்த நாகசாமி என்று கூறப்படுவதுண்டு .
அவர் அது சமஸ்கிருதத்திற்கு பின்பு வந்ததாக இருந்தால் அது உலகுக்கு அறிவிக்கப்படும் ..
ஆனால் அதுவே சமஸ்கிருதத்திற்கு முந்தைய தமிழ் அகாழாய்வு பொருளாக இருந்தால் அது மறைக்கப்பட்டுவிடும். யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்லியல் துறை இப்படி நடந்து கொண்டிருக்கிறது.