சனி, 7 ஜனவரி, 2023

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்கு.. இன்று வெளியாகிறது தீர்ப்பு?

tamil.asianetnews.com  -  vinoth kumar  :  கடந்த 2006 -11ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2006 -11ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

17 வயதில் துவங்கிய அரசியல் வாழ்க்கை.. டி.ஆர்.பாலு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

 Kalaignar Seithigal  - Lenin  :   கொள்கைப் பிடிப்பிற்கு எடுத்துக்காட்டு டி.ஆர்.பாலு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய 'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் டி.ஆர்.பாலு எழுதிய 'பாதை மாறா பயணம்' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பாகத்தை தி.க தலைவர் கி.வீரமணியும், இரண்டாவது பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுப வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " திராவிட இயக்கத்தினரின் வாழ்க்கை வரலாறு முழுவதும் கிடைத்திருந்தால் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். அனைவரும் கழகத்தின் அனுபவங்களை நூல்களாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கிறேன்.

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது

 மாலைமலர் : சம்பவம் நடந்த பிறகு சங்கர் மிஸ்ரா அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார். சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு (டி.ஜி.சி.ஏ.) ஏர்-இந்தியா தெரிவிக்கவில்லை.
நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி ஏர்- இந்தியா விமானம் வந்தது.இந்த விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (26) என்பவர் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார்.
இதில் அந்தபெண் பயணியின் ஆடை மற்றும் கைப்பை நனைந்தது. இந்த சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த பிறகு சங்கர் மிஸ்ரா அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார். என் மீது புகார் கொடுக்க வேண்டாம்.

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 மாலை மலர் ; சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அன்றைய அரசினால் ஏப்ரல் 28ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டு 2300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

46-வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்... சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்

Kalaignar Seithigal - Lenin  : தமிழ்நாடு வீட்டிற்கு ஒரு நூலகம்.. அண்ணாவின் கனவை நிறைவேற்றும் அரசு: பெருமிதத்துடன் சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து எழுத்தாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதை வழங்கினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," காலையில் இலக்கிய திருவிழா, மாலையில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் தமிழாட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை இரண்டும் சாட்சியாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடந்தது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு  அரசு ஆணையிட்டு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

தெய்வ பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

மாலை மலர் :  சென்னை - கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்டவர்,
அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

வேதாரண்யத்தில் யாழ்ப்பாண வீதி! வேதாரண்யம்- ஆய்வுகளின் படி யாழ்ப்பாணம் தரை வழிப்பயணம் சாத்தியமாகும்?

Surya Xavier :  இராமர் பாலம்- நிலவியல் ஆய்வுகளும், பாஜகவின் கார்ப்ரேட் அரசியலும் என்ற தலைப்பில் ஜனவரி மாத உயிர்மை இதழில் கட்டுரை எழுதியுள்ளேன். அட்டைப்படத் தலைப்புக் கட்டுரை அதுதான் என்றார் உயிர்மை ஆசிரியர் கவிஞர்.மனுஸ்யபுத்ரன்.
காவிரி நீரோவியம் புத்தகத்தின் 73 வது அத்தியாயம் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம்- கோடியக்கரை நிலவியல் ஆய்வுகள் என்பது தான்.
இந்திய நிலப்பகுதியோடு இணைந்து இலங்கை நிலப்பகுதி இருந்தது. கி.மு.3 ல் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தான் இருபகுதியானது. எனவே தான் இந்திய வரைபடத்தைக் காட்டும் போது இலங்கையையும் இணைத்துக் காட்டுவார்கள்.
தற்போதைய செயற்கை கோள் ஆய்வுகளின்படி வேதாரண்யம்- யாழ்ப்பாணம் நிலப்பகுதி தரை வழிப்பயணத்திற்கு ஏற்றவாறு கடலிலிருந்து விரைவில் மேலெழும்.
ஒன்றாக இருந்த நிலப்பகுதியை நினைவு படுத்தும் விதமாக வேதாரண்யத்தில் பல தெருக்களுக்கு யாழ்ப்பாண வீதி என்றே பெயர்.
படத்தில் உள்ளது யாழ்ப்பாண வீதி தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாண வீதியை "புதுத்தெரு" என்று மாற்றியுள்ளார்கள்.
பண்டைய சேரியான பாண்டிச்சேரியின் வரலாற்றை அழித்து புதுச்சேரி என்றதைப் போல.

மதமாற்றமும் குடும்ப சிதைவும் .. மத மாற்றம் என்பது ஒரு மலிவான அதேவேளை சூழ்ச்சியான அரசியல் 

 Saadiq Samad Saadiq Samad :  மதமாற்றமும் குடும்ப சிதைவும் .
ஒரு ராமசாமியோ. . ஒரு வீரபாண்டியனோ .. ஒரு கஸ்பரோ ..எதோ ஒரு சூழலில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டால்  அவன் சூழல்  அரபு நாட்டு வேலை வாய்ப்பாக இருக்கட்டும்,
அல்லது  இங்கே பகுத்தறிவு போர்வையில் உலவும் மத ஏஜண்டுகளின் வார்த்தை ஜாலத்தால் ஏற்ப்பட்ட மாற்றமாக இருக்கட்டும்,
 அல்லது  இஸ்லாமிய நண்பர்கள் ,முதலாளிகள் & மௌலவிகளின் வசீகர பேச்சாற்றல்கள் அவர்களின் புத்தகங்கள் மூலம்  கவிழ்ந்ததாக இருக்கட்டும்,
 எதோ ஒரு சூழல் 30,40 வயதான மனைவி குழந்தைகளுடன் அன்புடன் வாழ்ந்து வந்தவனை,
 அல்லாஹ்வின் ஹிதாயத்து மூலம் ஆம்  அப்படித்தான் தக்கியா செய்வார்கள்   
இஸ்லாத்திற்கு மாறி விட்டால்  இங்கே அல்லாஹ்வின் ஹிதாயத் ஒருவனுக்கு கிடைத்து விட்டது
அங்கே ஒரு மனைவி இரு குழந்தைகள் வாழ்வு  கேள்விக்குறியாகி இருக்கிறது  

சி. வை .தாமோதரம் பிள்ளை! உ.வே.சாமிநாத அய்யரக்கு வழிகாட்டிய மாமனிதர். தொல்காப்பியம் கண்டு பிடித்தவர்! நினைவு நாள் 01-01-1901.

British Ceylon High Resolution Stock Photography and Images - Alamy

Indran Rajendran  :    தொல்காப்பியம் தேடி கண்டு பிடித்து அளித்த  சி. வை .தாமோதரன் அவர்களுடைய நினைவு நாள் 01-01-1901.
பிறப்பு 12-09-1832. இலங்கை வாழ் தமிழர் Charles Winslow Kingsbury இவரது இயற்பெயர். இந்துவாக மீண்டும் மதம்  மாறி; சைவமாக இருந்து சென்னையிலும், புதுக்கோட்டையிலும் வாழ்ந்து தமிழ் பணி ஆற்றியவர்.
பண்டைய சங்கத் தமிழ்_நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்தவர்.
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.
இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர் 1852 இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார்.
இவரது புதல்வர் அழகசுந்தரம் தமிழாய்வாளராவார்.

வெள்ளி, 6 ஜனவரி, 2023

Who Killed Malcolm X சீரிஸ் நெட்பிலிக்ஸில்... Abdur ரின் வரலாறும் இதில் இருக்கிறது

 சுமதி விஜயகுமார்  :   Malcolm X இறக்கும் பொழுது Abdur Rahman Muhammed வயது 3. Malcolmன்வரலாறு வேறு யாருக்கும் அதிகப்படியாக தெரிந்திருக்குமேயானால் அது Abdurக்கு தான் தெரியும். தன் 24 வயதில் Malcolmன் போதனையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். சிறிய வயதில் இருந்து Malcolm போதனைகளை மட்டுமல்ல , அவரது வாழ்க்கையையும் தொடர்ந்து வந்த Abdurருக்கு ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. '400 பேர் கூடிய கூட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட Malcolm க்கு உண்மையிலேயே நீதி கிடைத்ததா?' எத்தனை முறை அதை பற்றி சிந்தித்தாலும் அவருக்கு கிடைத்த ஒரே பதில் 'இல்லை'.
1965ல் படுகொலை செய்யப்பட்ட Malcolm கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்ட நபர்கள் 3 பேர். ஆனால் Abdur ரின் ஆராய்ச்சி படி அந்த கொலையில் ஈடு பட்டவர்கள் 5 பேர். malcolm சுட்டு வீழ்ந்தவுடன் , அவரின் மெய்காவலர் , தப்பி ஓடிய ஐவரில் ஒருவர் மேல் சேரை தூக்கி எரிய, அவன் தடுமாறி விழ மக்கள் அவனை அங்கேயே கொலை செய்ய எத்தனிக்க, அவனை காப்பாற்றி சிறைக்கு அனுப்பியது போலீஸ். Hayer எனும் அவனுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். Butler , Johnson. கைதான சமயத்தில் இருந்து இறுதி வரைக்கும் 'நான் இதை செய்யவில்லை' என்று அவர்கள் இருவர் மட்டுமில்லை, Hayer ரும் அவர்களுக்கு இதில் பங்கில்லை என்று சேர்ந்தே சொன்னான். யாரும் செவி சாய்க்கவில்லை. Johnson 10 ஆண்டுகளிலேயே இறக்க, Butler தன் குடும்பத்தை இழந்து தனி மரமாய் இருக்கிறார்.

கே கே எஸ் எஸ் ஆர் : ராட்சசியை ( ஜெயலலிதா)தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு

ஜெயலலிதாவை அறிமுகம் செய்தீர்களா? அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்!
மின்னம்பலம் - monisha  :  திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகப் பேசியதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் பணியாற்றியுள்ளேன். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள் உண்டு. இவர்கள் மத்தியில் ராட்சசியை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டுக்காலம் அனுபவித்தோம்” என்று கூறினார்.

கோவையில் பள்ளியில் சானிடைசரை குடித்த மாணவிகள‘... வீட்ல திட்டுவாங்க’

 நக்கீரன் :கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிகள் இருவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில், நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டது.
இரு மாணவிகளும் சில பாடங்களில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் எனப் பயந்துள்ளனர். இதனால் இரு மாணவிகளும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இரு மாணவிகளும் தங்கள் வீடுகளில் இருந்த சானிடைசரை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். பள்ளியில் சானிடைசரை குடிநீரில் கலந்து குடித்துள்ளனர். இதனால் சிறிது நேரத்திற்குள் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரையும் கண்ட ஆசிரியர்கள் மாணவிகளிடம் என்ன என்று கேட்டதற்கு தாங்கள் செய்ததைக் கூறியுள்ளார்கள்.

தமிழ்நாடு - நீட் தேர்வு விலக்கு- மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை!

 மாலை மலர்  :  தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரச்செய்வது என்கிற வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
நீட் விலக்குக்கான அந்த கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்து. அப்போது குடியரசு தலைவர் மூலம், அவரது அலுவலகத்தின்மூலம், உள்துறை அமைச்சகம், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு விளக்கங்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். அது சம்பந்தமாக தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் விளக்கங்கள் அனுப்பப்பட்டது என்ற விவரங்களை தெரிவித்தோம்.

11 நாட்கள் இடைவிடாது பறந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பறவை

veerakesari : அலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று பயணத்தை தொடங்கிய இந்த பறவை சுமார் பதினொரு நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்றது 5ஜி செயற்கைக்கோள் மின்பட்டை (5G satellite tag) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.
அலாஸ்காவில் இருந்து பறக்கத் ஆரம்பித்த இந்த பறவை அவுஸ்திரேலியாவின் கிழக்கு தாஸ்மேனியாவில் உள்ள Ansons விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது.

சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

"சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Kalaignar Seithigal  -  Lenin :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05.01.2023) இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் 2500 திருக்கோயில்களுக்கு ரூ. 50 கோடி நிதி வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-
2022-ஆம் ஆண்டு மட்டும் அதாவது கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 640-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்திருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன், கடந்த ஆண்டு மட்டும் நான் 640-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இந்த 640-ல் 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். 95-க்கும் மேற்பட்டவை கழக நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 550 கிலோ மீட்டருக்கு மேல் நான் சுற்றி வந்திருக்கிறேன்.   மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருக்கக்கூடிய உதவிகள் மூலம் ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாகப் பயனடைந்தவர்கள் இவர்கள்.

உக்கிரேன் ரஷியா போர் முடிவுக்கு வருகிறது? இறங்கி வரும் ரஷ்ய அதிபர் புடின்

 tamil.samayam.com :   முடியும் ரஷ்யா-உக்ரைன் போர்; இறங்கிய புதின்..
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் 10 மாதங்களாக தொடர்ந்தபடி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரினால் இதுவரை 2 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்து உள்ளது.
இருந்தபோதிலும் ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் வீரர்கள் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து உள்ளன.
இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த முக்கியமான உள் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே தான் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மாலைமலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவானது.
நிலநடுக்கம் 173 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.
இதன் தாக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

வியாழன், 5 ஜனவரி, 2023

இன்று கனிமொழி MP பிறந்த நாள் விழா! தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்

 tutyonline.net : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.,யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம், மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் சேர்வைகாரன்மடம் ஊராட்சி தங்கம்மாள்புரம் சமுதாயக் கூடத்தில் கனிமொழி எம்பியின் பிறந்த நாள் விழா, ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், சலவை இயந்திரம், சேலை வழங்கப்பட்டது. பின்னர் மத்திய ஒன்றிய கழகம் தூத்துக்குடி அற்புதம் மருத்துவனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

“தமிழ்‘நாடு’ அல்ல; தமிழகம்தான்” - ஆளுநர் ரவியின் அடாவடி பேச்சு

நக்கீரன் : தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.

சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்து கியூ ஆர் கோடு மூலம் புகார் செய்யும் வசதி- பொதுமக்கள் வரவேற்பு

 மாலைமலர் : தேனி  நகராட்சி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறைகளில் தூய்மை, பராமரிப்பு மற்றும் குறைகள் குறித்து கருத்து தெரிவிக்க கியூ ஆர் கோடு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுகழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்களை சில ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சீரமைத்து சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி நகராட்சியில் உள்ள பொதுகழிப்பிடங்கள், சமூக சுகாதார வளாகங்கள் ஆகியவற்றின் நுழைவுவாயிலில், கியூஆர் கோடு கொண்ட போர்டு பொருத்துகின்றனர். கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் செல்போன் மூலம் கியூஆர்கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக இணையதளத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது.
அதில் கழிப்பறை சுத்தமாக உள்ளதா, போதுமான தண்ணீர், காற்றோட்டம், வெளிச்சம், கதவுகளின் தாழ்பாள் உள்ளதா, துர்நாற்றம் வீசுகிறதா உள்ளிட்ட 7 கேள்விகள் உள்ளன. அந்த கழிப்பறைக்கு ரேட்டிங் வழங்க 5 ஸ்டார் மதிப்பீடு வரை வசதி செய்துள்ளனர். பேரூராட்சி சுகாதார வளாகங்களிலும் இந்த வசதி செய்யப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தை விட டெல்லியில் கடுங்குளிர் - மக்கள் கடும் அவதி

 தினத்தந்தி : இமாச்சல பிரதேசத்தை விட டெல்லியில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் இன்றைய காலை பொழுது கடுமையான குளிரில் விடிந்தது. நேற்று முன்தினம் 8 டிகிரியாக இருந்த வெப்பநிலை நேற்று அதிகாலை 4.4 டிகிரியாக சரிந்தது. சில இடங்களில் 4 டிகிரிக்கும் கீழே இருந்தது. ஒரே நாளில் இப்படி தாறுமாறாக குறைந்த வெப்பநிலை, மக்களை பாடாய்படுத்தி விட்டது.
நள்ளிரவு முதல் விடிய விடிய இடைவிடாத பனிப்பொழிவு மற்றும் காற்றின் காரணமாக குளிர் அதிகரித்துள்ளது. டெல்லியின் இந்த வெப்பநிலை இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கூட இல்லை. அதைப்போல இமயமலையின் அடிவாரமான உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மற்றும் நைனிடாலிலும் இல்லை. தர்மசாலாவில் 5.2 டிகிரியும், நைனிடாலில் 6 டிகிரியும், டேராடூனில் 4.5 டிகிரியும் பதிவாகின.

பிடிஆரை சுற்றி என்ன நடக்கிறது?

 மின்னம்பலம் : Kavi : வைஃபை ஆன் செய்ததும் ட்விட்டர் இன்பாக்ஸில் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. பிடிஆர் ஜனவரி 2 ஆம் தேதி போட்ட ட்விட்டும் அதுபற்றிய எதிர்வினைகளும் அதில் இருந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“நிதியமைச்சர் பிடிஆர் வெளிப்படையான நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் உடையவர். சற்று கடினமான நிர்வாகமாக இருந்தாலும் தளர்வில்லாத நிர்வாகமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புள்ளவர்.
இப்படிப்பட்டவர் அவ்வப்போது தனது வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதுண்டு.
இப்படித்தான் ஜனவரி 2 ஆம் தேதி தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை அமைச்சராக இருந்து வெளியிட முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு வாய் விட்டு சிரிக்கும் ஓர் எமோஜியையும் இணைத்திருந்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்- திருப்பூர் மாவட்டம் உள்ள பனைப்பாளையம்

 மாலை மலர்  :  திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 19) என்பதும், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அந்தப் பெண் லோகேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்தபோது காதலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புதன், 4 ஜனவரி, 2023

'மக்கள் ஐ.டி.' தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் ...

மாலை மலர்  : சென்னை  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கியில் கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்களை பெற ஆதார் எண் அவசியமாக இருக்கிறது.
ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட 'மக்கள் ஐ.டி.' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் அடையான எண் ஒதுக்கி அரசே பராமரிக்கும்.
இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஆந்திரா பிரிவினைக்கு காரணமாக இருந்த சந்திரசேகர ராவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்- அமைச்சர் ரோஜா

மாலைமலர் : திருப்பதி: திருப்பதியில் அமைச்சர் ரோஜா வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் 150 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அவரது கட்சியை ஆந்திராவிற்குள் அனுமதிக்க கூடாது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.

காங்கிரஸ் எம் எல் ஏ திருமகன் ஈ வெ ரா மாரடைப்பால் உயிரிழப்பு! ஈரோடு கிழக்கு ஈ வி கே சம்பத்தின் மகன்

வெப்துனியா :காங்கிரஸ் எம் எல் ஏ திருமகன் ஈ வெ ரா மாரடைப்பால் உயிரிழப்பு!  ஈரோடு கிழக்கு  ஈ வி கே சம்பத்தின் மகன்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ வெ ரா சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரின் திடீர் மறைவு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசி பெட்டிக்குள் 60 லட்சம், 200 ஏக்கர்: மாஜி அமைச்சர் சம்பத் தலைமறைவு?

மின்னம்பலம் - Aara : அதிமுக முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத்திடம் கடந்த ஆட்சியில் உதவியாளராக இருந்து வந்த குமார் குடும்பத்தினருக்கும், அமைச்சர் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை நேற்று  (ஜனவரி 2) மோதலாக மாறியது.
பிரச்சினை பண்ருட்டி காவல் துறைக்கு போனதால், அமைச்சர் எம்.சி. சம்பத்தின்  அண்ணன் தங்கமணி மற்றும் உறவினர் பால்காரர் பழனி, கள்ளிப்பட்டு ராஜேந்திரன் மற்றும் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராஜேந்திரன் மற்றும் ராதா இருவரை நேற்று இரவு கைது செய்த பண்ருட்டி போலீஸார்  மற்றவர்களையும் தனி டீம் போட்டுத் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் 10 பேர் என்ற அடிப்படையில் 2 ஆவதாக முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். ஏ2வாக சம்பத் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

உங்களை உள்ளே விட்டால் ஊரே நாசமாயிடும்' : பா.ஜ.க-வை அடித்து விரட்டிய கிராமம்: கோவையில் நடந்தது என்ன?

Kalaignar Seithigal  : Lenin  : கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சியில் கொடி கம்பம் வைத்த பா.ஜ.க நிர்வாகிகளைப் பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி காலனி பகுதி. இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த சிலர் பா.ஜ.க கட்சியில் அண்மையில் இணைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் பகுதியில் பா.ஜ.க கட்சியின் கொடிக் கம்பத்தை வைக்க முயன்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொடிக் கம்பம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் இரவு நேரத்தில் கொடிக் கம்பத்தை வைத்துள்ளனர்.

செவ்வாய், 3 ஜனவரி, 2023

ரகுநாதன்( பாண்டே) காலமானார்! (பிகார் ரங்கராஜன் தந்தை) கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பாஜகவிற்கு பரிணாம வளர்ச்சி

May be an image of 1 person and street
Rangaraj Pandey father Ramsinghasan Pandey passed away

Surya Xavier :  திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் இந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த வீடே ரகுநாதன் வீடு.
இதன் அருகில் உள்ள வீட்டுக்காரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் கே.கே.பெருமாள் ராஜா.அந்த வீட்டின் மேலே அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட அடையாளம் உள்ளது.
ரகுநாதனின் மகன் ரங்கராஜ். இளைஞராக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
அவர் திருவில்லிப்புத்தூர் நகராட்சியின் வார்டு உறுப்பினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்.
அது சரி யார் அந்த ரங்கராஜ் என்பது தானே உங்கள் கேள்வி?
திருவில்லிப்புத்தூரில் ரங்கராஜ் என்று இருந்து
இன்று யூடியூப்பராக இருக்கும்  ரங்கராஜ் பாண்டே தான்.

தொங்கிய உறுப்புகள்.. காரில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்! தெரிந்தே செய்த கயவர்கள்! ஷாக் பின்னணி

tamil.oneindia.com  -  Shyamsundar :  டெல்லி: டெல்லியில் கார் ஏற்றி தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவரை கார் ஒன்று 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தர தரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு அன்று அதிகாலை வேலை முடித்துவிட்டு 2 மணிக்கு திரும்பிய அஞ்சலி என்ற பெண்தான் டெல்லியில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. கஞ்சவாலா என்ற சாலையில் கடை வைத்து இருக்கும் தீபக் டாஹியா என்ற நபர்தான் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து இருக்கிறார். புத்தாண்டு தினத்தின் அதிகாலை என்பதை அவர் கடையில்தான் தூங்கி இருக்கிறார்.

காயத்ரி ரகுராம் : படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலமான விஷயம்" - அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் - கலை : வீடியோ, ஆடியோ இருப்பதாக அண்ணாமலை மிரட்டுகிறார், ஒருவரின் படுக்கை அறையில் கேமராவை வைப்பது எவ்வளவு கேவலமான ஒரு விஷயம் என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் காட்டமாக பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம்22ம் தேதி பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதம் அவர் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று(ஜனவரி 3) காலை காயத்ரி ரகுராம், பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன் என்று அறிவித்தார்.

உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

தினமலர் : கீவ் : உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றுடன் 313-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

கஞ்சிபாணி இம்ரான் & கூட்டாளிகளை உடனே கைது செய்து நாடு கடத்துங்கள்.. முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கஞ்சிபாணி இம்ரான்
சட்ட விரோதிகளின் ஆட்சி

tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :  சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, சட்ட விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும், தீவிரவாதிகளும் முடிவெடுத்து விட்டார்களோ என்ற ஐயம் மக்களிடையே நிலவுகிறது எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார் ஓபிஎஸ்.

டெல்லியில் காரில் இளம்பெண்ணை நிர்வாண நிலையில் 13 கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம்

தினத்தந்தி  :  டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை நிர்வாண நிலையில் காரில் 13 கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம் நடந்து உள்ளது. குடி போதையில் கார் ஓடியதாக 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது.
அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் விபத்து நடந்துள்ளது.
ஐந்து பேர் காரை நிறுத்துவதற்குப் பதிலாக, உடலை 13 கிமீ வரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது

பிரிட்டிஷ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் என்னென்ன? - பட்டியலிட்டு மோடிக்கு முரசொலி பதிலடி !

பிரிட்டிஷ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் என்னென்ன? - பட்டியலிட்டு மோடிக்கு முரசொலி பதிலடி !
கலைஞர் - ரேஷிமா : முரசொலி தலையங்கம்   பிரிட்டிஷ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் என்னென்ன? - பட்டியலிட்டு மோடிக்கு முரசொலி பதிலடி !
பாரம்பர்யம் என்ற பெயரால் பெண்களும், ஏழைகளும், எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட கிடந்தார்கள், அதில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியில் சட்டபூர்வமான விடுதலைக்கு வழி அமைக்கப்பட்டது என்பதை அறியலாம்.
'குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது' என்று சொல்லி இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அதே குறுகிய கண்ணோட்டத்தையே தனது உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சீக்கிய குருவான குருகோவிந்த சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், பேசிய பிரதமர் அவர்களது உரையில், அவர் எதைச் சொல்ல முன்வந்தாரோ, அதனையே அவர் எதிரொலித்தும் இருக்கிறார்.

திங்கள், 2 ஜனவரி, 2023

பணமதிப்பழிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழு விபரம்!

Justice Nagarathna

 minnambalam.com  -  christopher  :  பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை இன்று (ஜனவரி 2) தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த இந்த நடவடிக்கை செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்ற மோடி 2016ம் ஆண்டு பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ஒரே இரவில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது.
கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நடவடிக்கையால் சுமார் 85 சதவிகித நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாதவையாகின. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரே இரவில் ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை தடை செய்த மத்திய அரசின் முடிவால், புழக்கத்தில் இருந்த ரூ.10 லட்சம் கோடி அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தியா- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடக்கம்- ரூட் எது என்பதில் விவாதம்!

 tamil.oneindia.com  -  Mathivanan Maran  ; யாழ்ப்பாணம்: இந்தியா- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கை இடையே ரயில், கப்பல் மற்றும் விமான சேவை நீண்டகாலமாக இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் சேவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. விமான சேவையும் கொழும்பு வழியாகத்தான் இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட மாகாணத்துக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கோவை ஜக்கி வாசுதேவ் இன் ஈஷா யோகாஈஷாவில் இது முதல் முறையல்ல” - இளம்பெண் மரணம் குறித்து ஜோதிமணி எம்.பி

 நக்கீரன் : கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீயைக் காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ, கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க 300 சாலைகளில் போக்குவரத்தை லைவாக கண்காணிக்கும் கருவி

 மாலைமலர் : சென்னை: சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன.
இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள்.
இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும்.
ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்.. தமிழ்நாடு காவல்துறை

 கலைஞர் செய்திகள்  - KL Reshm  : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக காவல்துறையினர் 932 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக தமிழ்நாடு அரசு சில விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது,
ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டக்கூடாது என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
 மேலும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. பைக் ரேஸைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

சந்திரபாபு நாயுடு கூட்ட நெரிசலில் மீண்டும் உயிரிழப்பு .. ஆந்திரா

 நக்கீரன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற விழாவில் மீண்டும் நேர்ந்த துயரம்
அண்மையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று கந்துகுருவில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்.
இந்நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்திருந்தனர்.

காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு- 10 பேர் பலி

 maalaimalar : காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே தக்கார் மாகாண தலைநகர் தலுக்கான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இலங்கை நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?

மின்னம்பலம் - செல்வம் :   இலங்கை நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?
பிரபல நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகமது நஜிம் முகமது இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் கடந்த வாரம் இலங்கை நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் ராமேஸ்வரத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறை வட்டாரங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி ராமநாதபுரம் கடற்கரையில் இறங்கிய கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடுமாறு தமிழக உளவுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈஷா யோகா மையத்திலிருந்து தப்பி ஓடிய சுபஸ்ரீ சடலமாக மீட்பு.. ஜாக்கியின் தொடர் கொலைகள்..

 நக்கீரன் :  ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீ(34) காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார்(40) போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை 6 மணிக்கு எனது மனைவி ஒரு வார யோகா பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டுச் சென்றேன்.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சம்பவத்தன்று (18.12.2022) எனது மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக சென்றபோது, பயிற்சி முடிந்து அனைவரும் காலையிலேயே சென்றுவிட்டனர் என்று ஈஷா யோகா மையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது.

தமிழகம் இலங்கைக்கு வழங்கிய அரிசியில் (1272 கிலோ) பதுக்கிய மூட்டை பழுதாகியது ..வவுனியாவில் விசாரணை ஆரம்பம்

எழுகதிர் : தமிழக அரசினால் இலங்கைக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டு பழுதாகி போனது .வவுனியாவில் விசாரணை ஆரம்பம்
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவின் மதுராநகர் பகுதியில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1272 கிலோ நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அரசு ஊழியர்கள் அப்செட்..!

 tamil.samayam.com  :  சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., அவர்களுக்கு ஆதரவு அளித்தது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதை நம்பிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் நடைபெறவில்லை.

முதியவர்கள் ஓய்வூதியத்தை நிறுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்... சீமான் வலியுறுத்தல்!!

tamil.asianetnews.com  - Narendran S :  முதியவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தரப்படுத்துதல் என்ற பெயரில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தை முற்றாக சீர்குலைக்க முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
சமூக நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறுத்தும் முயற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கையே வெளிக்காட்டுகிறது.

நாமக்கல் பட்டாசு விபத்து: புத்தாண்டு விற்பனைக்கு வீட்டில் வைத்த பட்டாசு குடும்பத்தை பலி கொண்ட சோகம்

 bbc.com :  நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் இருப்பு வைத்த பட்டாசுகள் சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் பட்டாசு வியாபாரி, அவரது மனைவி, அவரது தாய் மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில்  இருந்த வீடுகளும் சேதமடைந்தன.
மோகனூர்  மேட்டுத் தெருவில் குடியிருக்கும் தில்லைகுமார் (35) பட்டாசு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். அவருக்கு அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் பட்டாசுக் கிடங்கு உள்ளது.
ஆனால், புத்தாண்டு விற்பனைக்காக வீட்டிலேயே அனுமதியின்றி பட்டாசுகளை அவர் இருப்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் சனிக்கிழமை அதிகாலை பட்டாசுகள் தீப்பற்றி வெடித்துச் சிதறத் தொடங்கின என்று போலீசார் கூறுகின்றனர்.