Siva Ilango : "கீழடிக்குச் சவுக்கடி"
கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவிடும் கீழடியின் தொல்லியல் ஆய்வறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.
அவ்வறிக்கை "முழுமையற்றது" என்று தொல்லியல் துறையின் 'மதிப்பீட்டுக் குழு' கருத்துக் கூறியதை அடுத்து,
அதில் திருத்தம் செய்யுமாறு, கீழடி, தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றியத் தொல்லியல் துறை வற்புறுத்தி வந்தது.
அதற்குப் பதிலளித்த திரு அமர்நாத், "மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில், ஏற்புடைய காரணங்களும் இல்லை; தகுந்த நியாயமும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து இந்தியத் தொல்லியல் துறையின் ஐவர் கொண்ட உள்நிலைக் குழு, கீழடிக் களத்திற்கே சென்று மறு ஆய்வு செய்யும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர், ஒன்றிய அரசின் கருத்துப் படி, அறிவித்துள்ளார்.
ஞாயிறு, 5 ஜூலை, 2026
: "கீழடிக்குச் சவுக்கடி"கீழடி நாகரீக காலம் 2000 க்குக் கீழே இறக்கப்படும். தமிழ் மொழி, தமிழ் எழுத்துருவின் (தமிழி) காலமும் 2600 லிருந்து குறைக்கப்பட்டு விடும்.
கொக்கி குமார் ஆட்சியை பிடித்த கதை
கொக்கி குமார் + திரிஷா அணில்களின் கவனத்திற்கு !
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் கொக்கி குமார் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
அடுத்தாக கொக்கி குமாரின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
கொக்கி குமார் - அமித்ஷா சந்திப்பு.*
கொக்கி குமாரின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின் 'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் கொக்கி குமார் கட்சியில் சேர்ந்தார்.
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
கொக்கி குமார் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம் இருந்து.
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
"ராஜினாமா செய்ய வைப்போம்னு மிரட்டுறாங்க” : தவெக மீது திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
minnambalam.com - Kavi : அனிதா ராதாகிருஷ்ணனை போலவே எனக்கும் மிரட்டல் விடுக்கின்றனர் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது திமுக எம்எல்ஏ கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ”எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்கள். கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி 30 கோடி ரூபாய் செலவு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.