சனி, 11 பிப்ரவரி, 2012

நல்ல கதையை எங்கிருந்து.......என்ன? பிரகாஷ் ராஜ்??????

நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கி வெளிவந்திருக்கும் படம் தோனி. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பிரபல தொலுங்கு இயக்குனர் பூரி ஜகநாத்தின் மகன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.  
இதில் மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால், அவன் முட்டாள் இல்லை. அவனுக்குள் இருக்கும் வேற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். படிச்சு மார்க் வாங்குவது மட்டும் தான் கல்வி என்பதை மாற்றி நம் கல்வி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கருத்து. 

Ex DMKஅமைச்சர் மிக்ஸி, கிரைண்டர் வாங்கியது எப்படி: லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை

திமுக உறுப்பினர்கள் டூத் பிரஷ் வாங்க காசு எப்படி கிடைத்தது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி. அதிமுக அரசின் அதிரடி சோதனை மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமானத்திற்கு அதிகமாக  பல் பொடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
ஊமச்சிக்குளம்: மதுரையில், தி.மு.க., மாஜி அமைச்சர் தமிழரசி வீட்டில், நேற்று சோதனை நடத்திய லஞ்சஒழிப்பு போலீசார், "மிக்ஸி, கிரைண்டர் வாங்க பணம் எப்படி வந்தது?' என விசாரித்தனர்.
கடந்தாட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழரசி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை 6.40 மணிக்கு, மதுரை அய்யர்பங்களா - மூன்றுமாவடி ரோட்டில் உள்ள தமிழரசி வீட்டிற்கு, நெல்லை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., தங்கச்சாமி தலைமையில் 7 பேர் சோதனையிட வந்தனர். அப்போது தமிழரசியும், கணவர் ரவிக்குமாரும் இருந்தனர். சமையலறை உட்பட அனைத்து அறைகளையும் போலீசார் சோதனையிட்டனர். கம்ப்யூட்டரில் பதிவான விபரங்களை ஆய்வு செய்தனர். வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர் குறித்து கேள்வி எழுப்பிய டி.எஸ்.பி., தங்கச்சாமி, "இப்பொருட்களை எல்லாம் வாங்க பணம் எப்படி வந்தது?' எனக்கேட்டார். காலை 10.15 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த தங்கச்சாமி கூறுகையில், ""வங்கி கணக்குகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம்,'' என்றார்

சோலார் மோட்டார் பைக் "ரெடி': பெட்ரோல்,

மதுரை மாணவர்கள், மின்சக்தியால் இயங்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கே.எல்.என்.பொறியியல் கல்லூரி எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திக் ,23, சாக்ஸ் பொறியியல் கல்லூரி மெக்கானிக் இன்ஜி., மாணவர் ஹரி இணைந்து இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியை "சோலார் பேனல்' மூலம் சேகரித்து, மின் சக்தியாக மாற்றி பேட்டரியில் சேகரிக்கப்பட்டு, இந்த பைக் இயக்கப்படுகிறது. இதற்காக தனி சோலார் பேனல், எலக்ட்ரிக் ட்ரைவ் வீலர், மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை சூரிய ஒளியில் "சார்ஜ்' செய்யப்பட்டால் 30 முதல் 35 கிலோ மீட்டர் வரை இந்த பைக்கை ஓட்டலாம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமலும், விலையேறி வரும் பெட்ரோல், பற்றாக்குறை உள்ள மின்சாரம் இவற்றுக்கு மாற்றாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

Mumbai குண்டுவெடிப்பு 52 பேர் பலியான வழக்கு : கணவன்-மனைவிக்கு தூக்கு

மும்பையில் 2003-ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹனீப் சையத் (46), இவருடைய மனைவி பெமீதா சையத் (42), இவர்களுடைய 16 வயது மகள் மற்றும் ஹனீப்பின் உதவியாளர் அஷ்ரத் அன்சாரி (32), லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி லட்டுவாலா மற்றும் முகமது ஹசன் பேட்டரிவாலா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பு மீதான வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் மற்றும் பி.டி.கோடே ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு விவாதங்களின் அடிப்படையில் சதி திட்டம், தீவிரவாத செயல் செய்தல் மற்றும் கொலை ஆகிய மூன்று அடிப்படை காரணங்களையும் காட்டி அஷ்ரத் அன்சாரி, ஹனீப் சேக் மற்றும் பெமிதா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.

பிரபு தேவா நயன்தாரா சுந்தரம் தாரா ஏமாற்றியவர்களும் ஏமாந்தவர்களும்


பிரபுதேவாவின் குடும்பத்துக்கு இது போதாத காலம் போலிருக்கிறது...
முதல் மனைவி ரமலத்துடன் விவாகரத்து, நயன்தாராவுடன் திருமணப் பேச்சு, அதைத் தொடர்ந்து காதல் முறிவு... இப்படி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குள் அந்த நடனப் புயல் சிக்கித் தவிக்க, இப்போது அவரின் அப்பா சுந்தரம் மாஸ்டர் மீதும் ஒரு காதல் புகார் அணுகுண்டு!
சுந்தரம் மாஸ்டர் எவ்வளவு ஃபேமஸோ, அவ்வளவுக்கு பிரபலமானவர் நடன இயக்குநர் தாரா. 20 ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் படு பிஸியாக இருந்தவர். சுமார் 2,000 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றியவர். அமிதாப் தொடங்கி அனில் கபூர், ரித்திக் ரோஷன் என அனைத்து பிரபலங்களையும் ஆட வைத்தவர். அதேபோல், சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என பலருக்கும் நடன இயக்குநராக இருந்தவர். இவர்தான் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத் தின் மீது ‘தன்னைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக’ புகார் கொடுத்துள்ளார். ‘தனது பெரிய மகன் முன்னாவுக்கு சுந்தரம் மாஸ்டர்தான் தந்தை’ என்று கூறும் தாரா, அதற்கான ஆதாரங்களையும் நம்மிடம் காட்டினார். அவரிடம் பேசினோம்.
சுந்தரம் மாஸ்டருக்கு ஏற்கெனவே குடும்பம், மகன்கள் இருக்கின்றனர். இப்போது திடீரென புகார் சொல்கிறீர்களே?

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஜெயாவால் கைவிடப்பட்ட அபலை சசிகலா பெங்களூரு கோட்டில் ஆஜார்

சசிகலா தனது சொந்த பந்தங்கள் சகிதம் தமிழக அதிகார மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபின், அவரை அநேகர் நேரில் கண்டதில்லை. சுமார் ஒன்றரை மாதங்கள் வெளியே தலை காட்டாமல் இருந்த சசிகலா, நேற்று சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக, பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு நேரில் வந்திருந்தார்.
நேற்றைய வாய்தாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வரப்போவதில்லை என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஜெயலலிதா சார்பில் அவரது வக்கீல் கந்தசாமி ஆஜராகியிருந்தார். மாநிலத்தில் முதல்வர் பணிகளை கவனிக்க வேண்டியிருந்த காரணத்தால் ஜெயலலிதாவால் வரமுடியவில்லை என்று வக்கீல் கந்தசாமி மனு தாக்கல் செய்தார்.

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

தமிழ் நாடு சும்மா அதிருதில்ல? ஒரு பக்கம் ஆசிரியை கொலை,,,இன்னொரு பக்கம் "உயிர் தோழி" ...........ஹ ஹ ஹ ஹா ஹ்ஹ்ஹா,,.ரொம்ப நல்ல இருக்கு. பெற்றோர்களே,,என்னும் உங்க பிள்ளைகளை சினிமா நடிகர் விஜய் போல பைட் பண்ணவும்,,,பிரபு தேவா போல ஆடவும்,,,, ஊக்குவியுங்கள். கண்டித்து வளர்காதேயுங்கள்...நாசமாக போகட்டும் நம் சந்ததி. என்னும் அதிக செல்லம் கொடுங்கள்,,,கடன் பட்டு மோட்டார் பைக் வாங்கி கொடுங்கள். ஆனால் நல்ல புத்திமதி மட்டும் சொல்லிதராதீர்கள். தமிழ் நாடு ஜொலிக்கிறது,,,ஹ ஹ ஹா,,ஹா,,தலை நிமிர்ந்து நிற்கிறது தமிழ் நாடு. வாழ்க தமிழ்,,,வாழ்க தமிழ் பெற்றோர்கள்.அனகாபுத்தூர்:குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்க நிலையில் பெண்ணை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா; விதவை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞரை அகற்ற தீவிரமாக முயன்ற பாஜக

சென்னை: சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் கட்சிப் பேச்சாளரைப் போன்று மறுப்பு தெரிவிப்பது சரியா என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் திடீரென பதவி விலகியதாக தகவல் வந்திருக்கிறதே?
பதில்: ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருபவர் தான் 78 வயதான பி.வி.ஆச்சார்யா. அவர் தான் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசினால் அட்வகேட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று; அட்வகேட் ஜெனரல் பதவியையும், அதே நேரத்தில் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். அவர் திடீரென்று அட்வகேட் ஜெனரல் பதவியையே ராஜினாமா செய்ததாக செய்தி வந்துள்ளது.

எல்லை மீறி போன மாணவர்களின் வன்முறை வெறியாட்டம்


சென்னையில் பஸ் தினம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பஸ்களை பிடித்துச் சென்று ஆட்டம் போடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி மாணவர்கள் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.இதனால் பஸ்தினம் கொண்டாட போலீசார் தடைவிதித்துள்ளனர். அதையும் மீறி சில கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடி வருகிறார்கள். நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். பஸ் தினம் கொண்டாட போலீசார் அனுமதி மறுத்ததால் கல்லூரி வரை ஊர்வலமாக ஆடிப்பாடியபடி கொண்டாட்டம் நடத்தினார்கள்.

15 ஆயிரம் ரூபாய்க்கு தன்னை விற்ற தந்தையை குத்திக் கொன்ற மகன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் ராமன் (38). இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு பாண்டி (16), பால்பாண்டி (9) என்ற இரண்டு மகன்களும், பார்வதி (13) என்ற ஒரு மகளும் உள்ளனர். கிராமத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே இவர்கள் படித்தனர். குழந்தைகள் யாரையும் மேற்கொண்டு படிக்க வைக்க ராமன் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக சிறிய வயதிலேயே குழந்தைகளை வேலைக்கு செல்லும்படி அனுப்பி, அவர்களை சித்ரவதை செய்து வந்தார். அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் மது குடித்து விட்டு உல்லாசமாக ஊரை சுற்றி வந்தார். அதே போல் மனைவியையும் அடித்து சித்ரவதை செய்து வேலைக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மூத்த மகனான பாண்டியை சிறிய வயதில் இருந்த போது, ஆந்திராவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார்.

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி

மிஸ்டு கால் மூலம் பார்க்காமலேயே காதலித்த பெண்ணை நேரில் சந்திந்தபோது, அழகாக இல்லை என்பதால் அவருடன் பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம் செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மீனவேலியை அடுத்த வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. கொத்தனார். இவரது மகள் அன்புமொழி(28). சீத்தப்பட்டியை சேர்ந்த மளிகை வியாபாரி கன்னியப்பா.

இவர் அன்புமொழியை கடந்த வருடம் 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அன்புமொழி தாய்வீட்டுக்கே வந்துவிட்டார்.

தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.3 லட்சமாக உயர்கிறது?

தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது ரூ 1.8 லட்சமாக உள்ள இந்த உச்சவரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, இதனை ரூ 3 லட்சமாக உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

தொண்டர்களிடம் ஜெ. கேட்கும் பிறந்த நாள் பரிசு.. 40க்கு 40!

தனது பிறந்தநாளின்போது ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும், பிறந்தநாளையொட்டி தன்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி ஒன்றுதான் தொண்டர்கள் எனக்கு அளிக்கும் இணையில்லா பரிசாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில் தான் இருக்கிறது என்பதில் பூரண நம்பிக்கை கொண்டே எனது பொதுவாழ்வை மேற்கொண்டு வருகிறேன் என்பதை தமிழக மக்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் தொண்டர்களும் நன்கு அறிவீர்கள்.ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்

முத்தக்காட்சி! 14 வெட்டு!இயக்குனர் கவலையில்

பாலிவுட் பட உலகின் பிபல சண்டை இயக்குனர் டினு வர்மா இயக்கும் முதல் படம் காட்டுப்புலி. இந்த படத்தில் அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக ப்ரியங்கா தேசாய் நடிக்கிறார். படத்தில் அர்ஜூன் ஒரு டாக்டர் ரோலில் நடிக்கிறார். 
அர்ஜூன் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒரு காட்டில் சிக்கிக்கொள்கின்றனர். அதன் பின்பு அங்கிருக்கும் நரமாமிசம் உண்ணும் மனிதர்களுடன் கதை நகர்கிறது. ஆக்‌ஷன் ஹீரோவை வைத்து படம் எடுக்கும் ஸ்டண்ட் இயக்குனர் நிறைய சண்டை காட்சிகளை வைத்தது போல் நிறைய முத்தக்காட்சிகளையும் வைத்துவிட்டார். 

Why this மாணவன் கொலவெறி

கொலைவெறி போல் உள்ள பாடல்களால் வந்த வினை.
ஒன்பதாம் வகுப்பு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். முதலில், கழுத்து பகுதியில் வெட்டியதும், ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில், ஆசிரியையின் கழுத்து நரம்புகள் வெட்டுப்பட்டன. அடுத்து, முகம், வயிறு மற்றும் இடுப்பு என, மொத்தம் ஏழு இடங்களில் குத்தினான்.  ஆசிரியை உமாமகேஸ்வரி இறந்தார். (இனியும் சினிமா பாடல்கள் இது போல் இல்லாமல் கட்டுப்பாடு விதிப்பது நலம்.)

BJPசெல்ஃபோனில் ஆபாசப் படம்

பாஜகவினர், தம்மை இந்து மதத்தைக் காக்க வந்த சக்தியாகச் சொல்லிக்கொண்டு அலைபவர்கள். இந்துப் பாரம்பரியம், இந்து தர்மம், யார் எப்படி உடை உடுத்தலாம், நம் சம்ஸ்க்ருதி என்ன என்றெல்லாம் லெக்ச்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்

ஆபாசம் என்றால் சமஸ்கிருதத்தில் ‘அதைப் போன்ற’, ‘பிம்பம்’, ‘பொய்யான’, ‘தவறான’, ‘கற்பனையான’ … போன்ற பல பொருள்கள் உள்ளன. சிற்பம் என்பதற்கும் ஓவியம் என்பதற்கும் சமஸ்கிருதத்தில் சித்ர என்ற ஒரே வார்த்தைதான் பயன்படுகிறது. சித்ர = முழுவதுமான முப்பரிமாணச் சிற்பம். சித்ரார்த = புடைப்புச் சிற்பம் – அதாவது ஒரு பாதிதான் இருக்கும்; மீதிப் பாதி கல்லோடு உள்ளே போயிருக்கும். சித்ராபாச = ஓவியம். அதாவது சிற்பம் போன்றது, ஆனால் சிற்பம் அல்ல, அதன் பிம்பம் மட்டுமே. இங்கே ஆபாச என்றால் சிற்பத்தின் இரு பரிமாண பிம்பம் என்ற பொருள்பட வந்திருப்பதைக் காணலாம்.
தமிழில் ஆபாசம் என்றால் பாலியல் மேட்டர், அஜால் குஜால் விஷயம் என்று எந்த நூற்றாண்டில் ஆனதோ, அறியேன்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பொதுசின்னம், பொதுவேட்பாளர் என்ற திட்டம்

சட்டசபையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஏப்ரல் மாதம் 21-ம் தேதிக்குள் சங்கரன்கோவில் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் சங்கரன்கோவில் ஒன்றிய சேர்மன் முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்து தேர்தல் களத்தில் முந்திச் செல்கிறது, அ.தி.மு.க.
  உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது ம.தி.மு.க. பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத ம.தி.மு.க. இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்துக் காட்ட விரும்புகிறது.

குமுதம் Gang பத்திரிகைக்குள் குத்து வெட்டு

குமுதம் கம்பெனி குறித்த நடவடிக்கைகளில், இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்ட திருமதி. கோதை, மற்றும் திரு. ஜவஹர் பழனியப்பன் ஆகியோரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும் பொய்யான வதந்திகளை நம்ப ???? வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் பாசமுள்ள அன்பு உள்ளங்களுக்கு ,

குமுதம்,
எஸ்.ஏ.பி., மற்றும் பி.வி.பி. ஆகியோரின் தன்னலமற்ற(???) உழைப்பில் விளைந்த  மலர்.குமுதம் ஊழியர்களின் அயராத உழைப்பும் ஆயிரக் கணக்கான விற்பனையாளர்களின் ஒத்துழைப்பும், விளம்பரதாரர்களின் ஆதரவும், வாசகர்களின்(பாமரத்தனம்) ஊக்குவிப்பும்தான் குமுதம் அன்றும் இன்றும் என்றும்நிலைத்து நிற்கக் காரணம்.
திரு. ஜவஹர் பழனியப்பன் இந்தியக் குடியுரிமையை ஒதுக்கிவிட்டு, அமெரிக்க பிரஜையான விபரத்தை மறைத்து குமுதத்தின் பங்குகளை தன் தாயார் திருமதி. கோதை அவர்களுடன் கூட்டு சேர்ந்து சட்டத்துக்குபுறம்பாக வாங்கியிருந்தார்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ரஜினிகாந்தும் கண்ணதாசனும். இலக்கிய கூமுட்டைகளும்


கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார்.
பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!
என்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் பேசியிருக்கிறார்.
இப்படி பேசிய ரஜினிகாந்த் மேல் எனக்கு கோபம் இல்லை.
ரஜினியிடம் எதையாவது வித்தியாசமாக பேசி, அவர் கவனத்தை கவர்ந்து தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எவனோ ரஜினியிடம் பொய் சொல்லியிருக்கிறான்.
பெரியார் இயக்கத்தை பற்றி தவறாகவும், கண்ணதாசனை பெரிய இலக்கிய ரசிகனாகவும் பெருமைப் படுத்தி பொய் தகவலை ரஜினியிடம் தந்த, அந்த எழுத்தாள கூமுட்டை எவன்னு தெரியல. அவன் மேலதான் கோபம்.

ஜெயலலிதா வழக்கு: ஆச்சார்யா ராஜினாமா பின்னணி!

 ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை அவர் ‘ஒரு கை’ பார்க்காமல் விடுவதாக இல்லை.www.Viruvirupu.com
கர்நாடகா அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் ஒன்றைச் செய்திருக்கிறார் மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவரது இந்தச் செய்கை அவர்களுடைய லோக்கல் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது தமிழகத்துக்கு முக்கிய செய்தியல்ல. ஆனால், தமிழகத்தின் முக்கிய வழக்கு ஒன்றுக்கு முக்கிய செய்தி.
ஆச்சர்யா
அந்த வழக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் உடன்பிறவா சகோதரி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு (பேசாமல் இவருக்கும் ஒரு டைட்டில் கொடுத்திருக்கலாம்) எதிராக பெங்களூவில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு!
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் வழக்கு விஷயத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் இந்த ஆச்சார்யாதான். முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக கோர்ட்டுக்கு வந்தேயாக வேண்டும் என்று பிடிவாதமாக நின்று, அவரை கோர்ட் படியேற வைத்தவரும் இதே ஆச்சார்யாதான்!

இஸ்லாமியர் 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் பழனி முருகன் கோவிலுக்கு


தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவார்கள். பலர் கால் நடையாகவே பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பார்கள். பழனிக்கு செல்லமுடியாத சிலர் ஆங்காங்கே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வார்கள்.
இப்படி, பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கும், பகலில் சற்று ஓய்வெடுப்பதர்க்கும் வசதியாக வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முருக பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.
பழனிக்கு அருகில், திண்டுக்கல் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது புது ஆயக்குடி என்ற கிராமம். ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த கிராமத்தில் இருக்கும் பஜுல் ஹக் என்ற இஸ்லாமியர் கடந்த 15 வருடங்களாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் கொடுப்பதுடன் பகல் முழுவதும் தண்ணீர் பந்தலும் நடத்தி வருகிறார்.

சென்னையில் பள்ளி ஆசிரியரை கொலை செய்த மாணவர்

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை பள்ளி அறையிலேயே மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி டீச்சராக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. இவர் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த வகுப்பில் இருந்த முகமது இர்மான் என்ற மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை சராமாரியாக குத்தினான். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் மரணமடைந்தார்.
மாணவரைப்பற்றி அவரது பெற்றோரிடம் புகார் கூறியதாலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரியையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவர்களும், சக ஆசிரியைகளும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
In a bizarre incident, a school teacher was murdered by her student at a private school in the city, today.

சீரடி சாய்பாபா கோவில் வருமானம்: ரூ.401 கோடி ரொக்கம்

ஷீரடி:  கடந்த ஆண்டில் மட்டும் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு காணிக்கையாக ரூ.401 கோடி ரொக்கம், 36 கிலோ தங்கம் மற்றும் 440 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது 2010ம் ஆண்டு கிடைத்த காணிக்கையை விட 20 சதவீதம் அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ஷீரடியில் உள்ளது பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில். இங்கு இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரி்ததுக் கொண்டு போகிறது. அதே போன்று கோவில் வருமானமும் அதிகரித்து வருகிறது.இது குறித்து ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அதிகாரி கிஷோர் மோர் கூறியதாவது,

2011ம் ஆண்டு அறக்கட்டளைக்கு 36 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 31கிலோ தங்கம் கிடைத்தது. 2010ல் 320 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. அதை விட அதிகமாக 2011ம் ஆண்டில் 440 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.

தமன்னா மீது தயாரிப்பாளர்கள் புகார்


தமிழில் நடிகர் சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தனுசுடன் வேங்கை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். தற்போது தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அங்கு ஷீட்டிங் தேதிகளில் சரியாக வராமல் குளறுபடி செய்வதாக தமன்னா மீது தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, தமன்னா ராச்சா, எந்துகற்தே, பிரேமந்தா ரீபெல் ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.இப்படங்களில் நடித்து விட்டுத்தான் வேறு படங்களில் நடிப்பேன் என்று உறுதிமொழி அளித்து இருந்தார். ஆனால் இவற்றை முடிப்பதற்கு முன்பே மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இந்த குளறுபடியால் ராச்சா படம் முடியாமல் ஒரு மாதத்துக்கு மேல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை முடிக்கும் படி வற்புறுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் ரூ.500 கோடியில் 50 சிறுநீரக மருத்துவமனைகள்

 இந்தியா முழுவதும் ரூ.500 கோடி முதலீட்டில் 50 சிறுநீரக மற்றும் லாப் ராஸ்கோப்பி மருத்துவ மனைகள் திறக்கப்பட வுள்ளன என்று ஆர்.ஜி. ஸ்டோன் சிறுநீரக மற் றும் லாப்ராஸ்கோப்பி மருத்துவமனைகளின் தலைவர் பல்தேவ் ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிப்ரவரி மாதத்தை புற்றுநோய் மாதமாக கருதி சென்னையில் பல் வேறு இடங்களில் சிறு நீரகப் புற்றுநோய் விழிப் புணர்வு முகாம்கள், இல வச ஆலோசனை முகாம் கள் ஆகியவை பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடத் தப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 2 ஆண்டுகளில் ரூ.500 கோடி முதலீட்டில் 50 மருத்துவமனைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 2 அல்லது 3 மருத் துவமனைகள் சென்னை யில் அமைக்கப்படும்.

ஆட்டுக் கல், அம்மிக் கல்லுக்கு வந்தது மவுசு பயந்தது நடந்தே விட்டது

இல்லத்தரசிகள் பயந்து கொண்டே இருந்தது நடந்தே விட்டது. இனிமேல், 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பால், மிக்சி, கிரைண்டர்கள் ஓடாமல், சமையல் பணி பாதிக்கும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிமேல், ஆட்டுரல், அம்மிக்கல் ஆகியவற்றின் துணையை நாட தயாராகி விட்டனர்.

விஞ்ஞான வளர்ச்சியால், நவீன இயந்திரங்கள் அதிகரித்து, மனிதனின் பணிகளை குறைத்து விட்டது. அதே சமயம், இயந்திர உற்பத்தி அதிகரிப்பால், மனிதனை சோம்பேறி ஆக்கி விட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.

வீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர்.

உரசல்... 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி

அடுத்த தலைவர் யார்?

துவரைக்கும் 'ஸ்டாலினா? அழகிரியா?' என்றே இருந்தஉரசல்... இப்போது 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்!
புதிய உறுப்பினர் சேர்ப்பு, தி.மு.க.வின் சட்ட திட்டங்களில் மாற்றம், நாடாளுமன்றத் தேர்தல்... இப்படி விவாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து, பொதுக்குழுவுக்கு அனைவரையும் அழைத்தார். ஆனால் 'தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?' என்பதற்கான விவாத களமாகவே இந்தப் பொதுக்குழு அமைந்துவிட்டது. 'இனி இந்தப் பிரச்னையை கருணாநிதி அதிக தூரத்துக்குத் தள்ளிப் போட முடியாது’ என்பதையும் பொதுக்​குழு நடப்பு​கள் உணர்த்தி​ விட்டன.
'ஸ்டாலினே அடுத்த தலைவர்’ என்று அவரது ஆதர​வாளர்கள் முழங்கி வருகிறார்கள். 'அழகிரிக்கே அந்தப் பதவி’ என்று தென் மாவட்டங்களில் இருந்து கூவிக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சாநெஞ்ச அடிப்பொடிகள்! கூடவே, 'கலைஞர் இருக்கும்வரை, அவர்தான் தலைவர்’ என்றும் ஒரு உஷார் 'பொடி'யை இவர்​கள் தூவுகிறார்கள்.
'ஸ்டாலின் பெயரை கலைஞரே முன்மொழிந்து, அவரை கட்சியின் அரியா சனத்தில் உட்கார வைக்க வேண்டும்’ என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆசை! கனிமொழி தரப்புக்கோ இந்த பரமபத விளையாட்டில் முக்கிய கட்சிப் பதவியில் எதையாவது பெற்றே தீரவேண்டும் என்ற பரபரப்பு!
ஸ்டாலின், அழகிரி... இருவரில் யாரை இப்போதைக்கு உயர்த்திப் பிடித்தாலும் கட்சி ஆட்டம் காணும் என்பதால் கருணாநிதி மொத்தமாகவே மௌனம் காக்கிறார். அவரது மௌனத்தை இனியும் தொடர அனுமதிக்க முடியாது என்று ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையே பொதுக்குழு காட்டியது.

புதன், 8 பிப்ரவரி, 2012

உதயநிதி, சினேகா, ஆர்யா, ஆன்ட்ரியா!ஒரு கல் ஒரு கண்ணாடி


உதயநிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
படத்தின் ஹீரோ உதயநிதி என்றாலும், சந்தானத்துக்குதான் பெரிய வாய்ப்பு.
இயக்குநர் ராஜேஷின் சென்டிமெண்ட்டுக்காக இந்தப் படத்தில் எக்கச்சக்க நட்சத்திரங்கள். சினேகா, ஆர்யா, ஆன்ட்ரியா ஆகியோர் கெஸ்ட் ரோலில் வருகிறார்களாம் படத்தில். ஹன்ஸிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

சிம்புவும் பிரபுதேவாவும் நயன்தாராவின் பணத்தை பிடுங்கி விட்டார்கள்


Nayantara and Prabu Deva
நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு, இப்படி அம்போன்னு ஏமாத்திட்டாரே, என பிரபு தேவாவுக்கு நயன்தாராவின் குடும்பத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா - பிரபு தேவா காதல் அத்தியாயம் முடிந்து, இப்போது துரோகத்தைப் பட்டியலிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது.
தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறுகிறது.

மாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு


Dayanidhi Maran and Kalanithi Maran
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தம் மூலம் இவர்கள் முறைகேடாக ரூ.550 கோடி அளவிற்கு பணம் ஈட்டியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று அமலாக்கப் பிரிவினர் இந்த வழக்கை பதிவு செய்து எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act-PMLA), அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act-FEMA) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அஜீத் - நயன் - ஆர்யா!ஏ எம் ரத்னம் தயாரிப்பில்

சொன்ன தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், அடுத்து அஜீத்தின் படத்தை இயக்குகிறார். பில்லா 2-க்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் இது.
இசை: யுவன் சங்கர் ராஜா. விஷ்ணுவர்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தாண்டவம் படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யலாம்.
இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தனது அடுத்த சுற்றைத் தொடங்குகிறார். தமிழில் கலைப்புலி தாணுவுக்கு அடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் ரத்னத்துக்கு உண்டு. ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் ரத்னம்.

பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன?

கேள்வி - பதில் : பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன ?
சமீக காலமாக கேரளாவைச் சார்ந்த நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கிளைகளை அதிகமாக திறந்து வருகின்றனவே இதன் உண்மையான பின்னணி குறித்து விரிவாக விளக்க முடியுமா?
- லிவிங்ஸ்டன்
__________________________________
அன்புள்ள லிவிங்ஸ்டன்,
தமிழகத்தில் கேரள நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதன் பின்னணி குறித்து பார்க்கும் முன், இதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம். குறிப்பாக நமக்கெல்லாம் அதிகம் அறிமுகமாகாத கேரள மக்களின் ‘மஞ்சள் பித்து’ குறித்து புரிந்து கொள்வது அவசியம்.
இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு அளவான சுமார் 800 டன் தங்கத்தில் (2010ம் ஆண்டுக் கணக்கு) ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு அளவு கேரளாவில் மட்டும் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய சந்து பொந்துகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

BJP முறைகேடாக ஒதுக்கிய 2ஜி லைசென்ஸ்கள்-எப்ஐஆர் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு


Pramod Mahajan
டெல்லி: பாஜக ஆட்சியில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக ஒதுக்கப்பட்ட 2ஜி லைசென்ஸ்கள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந் நிலையில், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடுகள் குறித்த விசாரணையையும் அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.

Custodyயில் மயங்கிய ராவணன்...மருத்துவமனையில் அனுமதி!

போலீஸ் காவலில் உள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் நேற்றிரவு சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மணல் குவாரி லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்துவிட்டதாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ராவணனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
விசாரணையின்போது தனக்கு திடீரென்று மயக்கம் வருவதாக ராவணன் கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பி.பி. அதிகரித்ததால் மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது

வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!

சென்னை: தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.
கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.
ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.

8 மணி நேர மின்வெட்டை கண்டித்து மறியல்

Late news:தமிழகம் முழுவதும் எட்டு மணி நேரம் மின்வெட்டு இன்று முதல் அமுல் மின்சார வாரியம் அறிவிப்பு . திமுகவின் முன்று மணி நேர மின்வேட்டுக்கே குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டவர்கள் எங்கே ஒழிந்தார்கள்?  

கோவையில் கடந்த சில நாட்களாக 8 மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்களில் 50 சதவீத உற்பத்தி குறைந்துவிட்டது. அறிவிக்கப்படாத மின் வெட்டால் குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

BABEL ஆழமான மனித உணர்வுகளையும், உறவுகளின்


ஹாலிவுட்டே உயர்ந்த சினிமா, ஆங்கிலப் படங்களே உலகத் தரம் என்கிற பிம்பம் பெரும்பாலானோரைப் பற்றிக்கொண்ட நிலை தான் இன்னுமே நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவு, சுமாரான படங்களுக்கு தகுதிக்கு மீறிய வரவேற்புகள் கிடைப்பது மட்டுமல்ல, பல உயர்ந்த படைப்புகளின் அடையாளம் காணாமல் போவது. அடிப்படையில் பபேல் ஒரு ஆங்கிலப்படம் இல்லை என்றாலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டு ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அங்கேயும் ஆங்கிலப் படத்திற்கே வெற்றி கிட்டியது. பபேல் பெரிதும் கண்டுகொள்ளப் படாமலேயே போனது. சொல்லப்போனால் ‘பபேல்’ என்கிற வார்த்தையின் பிறப்பிடமான ஹீப்ரு மொழியில் அதன் உச்சரிப்பு ‘பபேல்’ தான். இதையும் ஆங்கிலேயர்கள் ‘பேபல்’ என்று மாற்றி இப்பொழுது இதுவே அங்கீகரிக்கப்பட்ட உச்சரிப்பு ஆகிவிட்டது. நாம் உண்மையான ‘பபேல்’ என்பதையே பின்பற்றுவோம்.

பத்மபூஷன் எப்படி கிடைத்தது?

குடியரசு தினத்திற்கு முன் தினம் பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். சமீப காலமாக, இந்த விருதுகள் வழங்குவதிலும், அரசியல் மற்றும் சிபாரிசுகள் நுழைந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டிற்கு சேவை செய்தவர்களுக்கு, இந்த விருதுகள் கிடைத்தாலும் சிலர் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்தாண்டு, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரபல இந்தி நடிகரும், ஹேமாமாலினியின் கணவருமான தர்மேந்திராவிற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தர்மேந்திரா, பா.ஜ.,வில் பஞ்சாபிலிருந்து எம்.பி.,யாக இருந்தவர். அவரது மனைவி ஹேமாமாலினியும், தற்போது பா.ஜ.,வில் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். எப்படி தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது? ஹேமாமாலினியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள். பிரதமரைச் சந்தித்தார்

மூன்று பெண்களை மணந்த கணவன் மீது நான்காவது பெண் புகார்: "புதிராகிறது' விவகாரம்

சென்னை : பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டதுடன், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த, " திருமண மன்னன்' மீது முதல் மனைவி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமுதா, 37. இவரது கணவர் முருகன்,42. இவர்கள் இருவருக்கும், ராஜா என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர். நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அமுதா, தன் கணவர் மீது, புகார் மனு ஒன்றை அளித்தார். அப்புகாரில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், தொழில் செய்வதற்காக சென்னை வந்த கணவர், இரண்டு முறை ஊருக்கு வந்தார். அதன் பின், நான்கு மாதங்களாக ஊருக்கு வரவில்லை. வராதது குறித்து, உறவினர்கள் மூலம் விசாரித்தபோது, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டதாகவும், இது குறித்து, பெண் எஸ்.ஐ.,யிடம் கேட்டபோது, அவர் கணவரை அனுப்பாததுடன் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் ஸ்ரீதேவி வசிப்பதால், ராயபுரம் போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.
என் எதிரிலேயே இரண்டாவது மனைவி

மூடநம்பிக்கை தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு


தர்மபுரி, பிப். 7-கோவில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் எருக்கம்மாள், சக்கரம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை குடமுழுக்கு நடந்தது.
இதை தொடர்ந்து குரு பூஜை மற்றும் கங்கா பூஜைகள் நடந்தன. இதில் லளிகம், நார்த்தம்பட்டி, அப்பனஅள்ளிகோம்பை, சிக்கம்பட்டி, ஆட்டுத் காரம்பட்டி, பெல்ரம்பட்டி, பெலமாரஅள்ளி, சொரக்கப்பட்டி, முதலப்பட்டி, கரகூர், பாகல் பட்டி, தின்னப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்கள் கலந்து கொண் டனர். இந்த விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது விரதமிருந்த பக்தர்கள், மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். சாமியாடியபடி வந்த பூசாரி, பக்தர்களின் தலையில் ஆவேசத்துடன் தேங்காயை உடைத்தாராம். முட்டாள்தனத்திற்கும், மூடநம்பிக் கைக்கும் அளவில்லாமல் போய்விட்டது

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

அரசியலில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம்- நடிகர் வடிவேலு

சென்னை, பிப்.7-  என்னுடைய முக்கியத்துவம் எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் நடிகர் வடிவேலு.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- எனது தாயை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். அவர் உடல்நலம் குன்றி இருக்கிறார்.
விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன்.
இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகள் மூலம் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

காஞ்சி சங்கராச்சாரி மீதான கொலை வழக்கை விசாரித்த நீதிபதி 'டிரான்ஸ்பர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், அப்பு, சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயேந்திரரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து புதுச்சேரி செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றபட்டது. வழக்கின் சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசுவது போன்ற தொலைபேசி உரையாடல் கொண்ட சிடி வெளியானது.
அதில் நீதிபதிக்கு ஜெயேந்திரர் பணம் கொடுப்பது குறித்து பேசுவதாக தகவல் இருந்தது.

TATA:2 ஜி லைசென்ஸ் ரத்து: நாங்களும் கோர்ட்டுக்கு போறோம்!


2 ஜி லைசென்ஸ் ரத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவால் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ரத்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்களுள் டாடா டெலிசர்வீஸசும் அடங்கும்.
இதைத் தொடர்ந்து தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி, கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதமே விண்ணப்பித்தது.
அது 18 மாதங்களாக நிலுவையில் இருந்த பிறகு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் தேடுவோம். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளோம்.

இப்ராகிம் ராவுத்தர் உட்பட தேமுதிக முக்கிய நிர்வாகிகள்அதிமுகவில் இணைந்தனர்


தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
அ.தி.மு.க- தே.மு.தி.க கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளது,  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக  தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  விஜயகாந்த் நண்பரும் அதிமுகவில் இணைந்தார்.

மாலத்தீவில் போராட்டம்-அதிபர் நஷீத் விலகினார்-புதிய அதிபரானார் வகீத்



Maldives President Mohamed Nasheed
மாலே: மாலத்தீவு நாட்டில் தொடர்ச்சியான போராட்டங்களையடுத்து அதிபர் முகமது நசீத் பதவி விலகியுள்ளார். அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை உள்ளூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதகாக தகவல்கள் வந்த நிலையில் புதிய அதிபராக தற்போது துணை அதிபராக இருந்த வகீத் ஹாசன் பொறுப்பேற்றுள்ளார்.
நீதிபதி அப்துல்லா முகமதுவை மாலத்தீவு ராணுவம் அண்மையில் கைது செய்தது. இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்று முன்னாள் அதிபர் கயூமின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர்.

கதை தான் முக்கியம்! ஹீரோவின் வயது அல்ல! த்ரிஷா

வயதான ஹீரோக்களுடன் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என த்ரிஷா கூறியுள்ளார். நடிகைகள் மார்க்கெட் ஏறும் வரை தான் வயதான ஹீரோக்காளுடன் நடிப்பார்கள் அதன் பிறகு இளம் ஹீரோக்களுடன் தான் நடிப்பார்கள் என்ற பேச்சு சினிமா துறையில் உலா வந்து கொண்டிருப்பதை பற்றி கேட்கும் போது த்ரிஷா
 “வயதான கதாநாயகர்களுடன் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஹீரோவின் வயது முக்கியம் அல்ல. கதை தான் முக்கியம். கதையை பொறுத்து தான் படம் ஓடுவதும் ஓடாததும். ஹீரோவின் வயது அதிகமாக இருக்கிறது என்பதற்காக படம் ஓடாமல் இருப்பதில்லை. 

பார்த்தீபன் காட்டம்! என் நிலைமை மாறிவிட்டது!

நடிகர் பார்த்தீபனின் வித்தகம் படம் வெளியாகி நன்றாக ஓடியது. அடுத்ததாக பார்த்தீபன் நடிக்கும் படம் பற்றி கேட்ட போது ” என் கிட்டயா கேக்குறீங்க! ”ஆப்பு” தான். அடுத்ததாக நான் நடிக்கும் படத்தின் பெயர் ஆப்பு(அவுட்சோர்ஸிங்). இந்த படத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் தவறுகளையும், தீய சக்திகளை பற்றியும் ரசிகர்களுக்கு தோலுரித்துக் காட்டப் போகிறேன்.
 இந்த படத்தில் நடிக்க ப்ரியாமணியையும், ப்ருத்விராஜையும் நடிக்க வைக்கத் திட்டமிட்டேன். ஆனால் கால்ஷீட் இல்லையாம். எனவே வேறு நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நடராசனது வியூகம்:ஜெயா சசி கும்பல் முழு தமிழ்நாட்டையும் மொட்டையடிக்கும்

ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வேறு.
80களில் வீடியோக்கடை நடத்தி பிழைத்து வந்த சசிகலா பின்னர் நடராஜனின் வியூகத்தால் ஜெயாவின் அந்தப்புரத்தில் நுழைந்து உடன்பிறவா சகோதரி என்று ஜெ உருகுமளவு தலையெடுத்தார். அடுப்பங்கரை மங்கையாக இருந்தவர் கிச்சன் கேபினட்டின் குயின் மேக்கராக அவதரித்தார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் அரசு அதிகாரியாக இருந்த நடராசனது பங்கை பலரும் அறிந்திருக்கவில்லை. பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் அடித்தளமுள்ள மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை கட்டி மேய்த்ததோடு, கொள்ளையடித்து தரகு முதலாளியானதும் வரலாறு.

Ilayaraja விடம் பாடுவதில் சுதந்திரம் கிடைக்காது

தோனி – நாட் அவுட்


வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி ரசித்த சில கணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக. முதலிலேயே சொல்லிவிடுகிறேன், நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” இசையையோ எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன். கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.
மொத்தமே நான்கு பாடல்கள். அனைத்தும் ஒவ்வொரு ரகம். ஒன்றோடொன்று கலக்காத Different Genre. ராகதேவனுக்கு படைப்பதில் உள்ள ஆனந்தம் வேறேதிலுமில்லை. எனினும் பாடல்களைக்கேட்டு வாங்குபவருக்கே அதிஉன்னத பாடல்கள் கிடைத்திருக்கின்றன என்பது அவரின் எண்பதுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. உதாரணத்துக்கு ஸ்ரீதர் படங்களுக்கு ராஜா சார் இசைத்தது, பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்றோரின் படங்களில், “சபரி” தேர்ந்தெடுத்த நெல்லிக்கனி போல அவர்கள் ராஜாவிடமிருந்து வாங்கிய இசை என்றென்றும் ராகதேவன் மற்றும் அந்த இயக்குனர்களின் பெருமையைப் பேசிக்கொண்டுதானிருக்கிறது.

அடுத்த தலைமை யார்? திமுகவில் வைகோவுக்கு இன்னும் சப்போட் பேஸ் உண்டு


Stalin, Azhagiri and Vaiko
சென்னை: கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது.
காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி!
கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கருத்து கூறியுள்ளார்களாம்!
இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி!
தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனிமொழிக்க 3 சதவீத ஆதரவும் உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனிமொழியின் 'திகார் தியாகத்துக்கு' கட்சியில் பெரிய பதவியை பரிசாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறிவந்தார். கருணாநிதியும் அதுகுறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிறது என இந்த சர்வே முடிவு கூறுகிறது.
2007ல் இதே கேள்வியை வைத்து தினகரன் நடத்திய சர்வே மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நினைவிருக்கலாம்!

2G வெளிநாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் தூதரக ரீதியிலான


புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் உத்தரவால் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பாதுகாப்பதற்காக, தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இதில், யுனிநார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 22 உரிமங்களும் அடக்கம். யுனிநார் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துடன் இணைந்தது. தற்போது உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், நார்வேயில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன்



Velmurugan
சேத்தியாதோப்பு: உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் அவருக்கு சுடுகிறது என்று கூறியுள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!


ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர்.