![]() |
நக்கீரன் : தூத்துக்குடியில் நிகழ்ந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட துணை நடிகர் ஒருவர் அதன் மூலம் திரைப்படம் ஒன்றை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்பவர் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சடாரென அவரது கழுத்தில் இருந்த 12 பவுன் தங்கச்சங்கலியைப் பறித்துச் சென்றனர்.
இதேபோல் அதே கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்தாய் என்பவர் ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 6 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இப்படி தொடர்ச்சியாக கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் துவக்கினர்.