சனி, 10 ஏப்ரல், 2021

JEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்ஸ்டோன் கம்பனி 7300 கோடிக்கு விற்றுள்ளது! கொள்ளை அடிக்க கம்பனிகள் மற்றும் மத்திய மாநில அரசுகள்

May be an image of text
RS Prabu : கடந்த 2020 நவம்பரில் JEE, NEET தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆகாஷ் நிறுவனத்தை பிளாக்ஸ்டோன் என்கிற தனியார் முதலீட்டு நிறுவனம் சுமார் 3500 கோடிக்கு வாங்கியது.
இந்த மாதம் ஆகாஷ் டியூஷன் சென்டரை Byju's நிறுவனம் சுமார் 7300 கோடிக்கு வாங்கியிருக்கிறது.  கிட்டத்தட்ட 100% இலாபத்தை வெறும் ஒன்றரை வருடத்தில் பார்த்திருக்கிறது Blackstone.
கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட இந்தியாவில் கல்லூரிப்படிப்பு என்று யார் வந்தாலும் நீட் என்கிற கொடூர நுழைவுத்தேர்வு சிஸ்டத்துக்கு தட்சணை கொடுத்துவிட்டுத்தான் படிக்க வர வேண்டும் என்பதை ஒரு சிறிய கும்பல் தீர்மானிக்கிறது.
நாமக்கல்லில் ஒரு மாணாக்கருக்கு நீட் பயற்சி கட்டணம் சுமார் ஒரு இலட்ச ரூபாய் வாங்குகிறார்கள். பள்ளி, விடுதிக் கட்டணம் தனி. ஒரு பள்ளிக்கு 2000 மாணாக்கர்கள் +2 எழுதுகிறார்கள்.
அதில் 1500 பேர் தவணை முறையில் பணம் காட்டினாலும் ஒரு பள்ளிக்கு தோராயமாக 15 கோடி ரூபாய் நீட் டியூஷன் கட்டணம் வசூலாகிறது.
அங்குள்ள பதினைந்து பிரபலமான பள்ளிகளில் வசூலாகும் ஒரு வருட தொகை மட்டுமே சுமார் 150 கோடி ரூபாய்.
தமிழ்நாடு முழுவதும் எத்தனை பள்ளிகள்?எத்தனை ஆயிரம் கோடி நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் வசூலாகும்?
நீட் தேர்வு என்பது சமூக அநீதி

மே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமித் ஷாவை கட்டுப்படுத்துங்கள்

kalaingarseythikal : மேற்கு வங்கத்தில் 3 கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 4-வது கட்டமாக இன்று அம்மாநிலத்தின் 44 தொகுதிகளுக்குத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இன்று காலை வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வந்த நிலையில், கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென பா.ஜ.கவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது, போலிஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கிற்கு பணம் கொடுக்கவிலை! அதிசயம் ஆனால் உண்மை! வாழ்த்துக்கள்

சைதையில் நடந்த அதிசயம் என்ன?
minnambalam : நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் பல தொகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியும், எதிர்க்கட்சியான திமுக கூட்டணியும் வாக்காளர்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுத்திருக்கின்றன.

அதிமுக சார்பில் குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் ஓட்டுக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் என்று அமர்க்களப்பட்டிருக்கிறது. சற்றும் சளைக்காமல் திமுகவினர் 200 ரூபாயில் ஆரம்பித்து 700 ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று வாக்குக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஏப்ரல் 4,5 தேதிகளில் இந்த பணப் பட்டுவாடா சம்பவங்கள் தமிழகம் முழுக்க நடந்திருக்கின்றன.    குறிப்பாக மாநகரமான சென்னையிலும் பல தொகுதிகளில் பணப் பட்டுவாடா தடபுடலாகவே நடந்திருக்கிறது. சென்னையின் அடித்தட்டு மக்கள் வாழக் கூடிய பகுதிகளில் இந்த பண விநியோகம் அடர்த்தியாகவும் அதிகமாகவும் நடந்திருக்கிறது.

எங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்பூர் ராஜு!

'' Our alliance will win '' - Minister Kadampur Raju!
nakkeeran : தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியே வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளதாவது, ''அதிமுக 140 இடங்களில் வெற்றிபெறும், அதிமுக கூட்டணி மொத்தமாக எல்லாம் சேர்த்தால் 190 இடங்களில் வெற்றிபெறும். எங்களுக்கு இரட்டை தலைமை பழகிவிட்டது. இரட்டை தலைமை என்பது கூடுதல் பலம்தான்'' என்றார்.

ஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளதா?

 

Arun Siddharth : அறிவார்ந்த தளத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது ஈழத் தமிழர் சமூகம். நம் சிந்தனைகள் , மதிப்பீடுகள் , கருதுகோள்கள் 30 வருட காலமாகத் தேக்கமடைந்துள்ளன. வரலாற்றைப் பற்றிய தர்க்கபூர்வமான புரிதலோ, சமகால உலகச் சிந்தனைகள் பற்றிய அறிவோ இல்லாதவர்கள் நாம். இவற்றை நாம் வாழும் சுற்றுச் சூழலுடன் பொருத்திச் சிந்திக்கும் வழக்கமோ பழக்கமோ அற்றவர்கள் நாம். இந்தப் போதாமைகளை நிரப்பவே நாம் எப்போதும் கூச்சலிடுகின்றோம். கும்பலாகச் சேர்ந்து கொண்டு மிகை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றோம். எந்த ஒரு விடயத்தையும் உச்சகட்ட உணர்ச்சி நிலைகள் வழியாகவே அணுகுகின்றோம்.

இங்கு வாசிப்பு என்பது ஒரு அறிவுச் செயற்பாடு என்பதைப் பல்லாயிரத்தில் ஒரு ஈழத்தமிழர் தெரிந்திருந்தாலே அது ஆச்சர்யமானது. பெரும்பான்மையானவர்கள் புத்தக வாசிப்பால் என்ன பயன் என்றுதான் கேட்பார்கள். உலகியல் சார்ந்த பெளதீக வாழ்க்கையில் வாசிப்பால் கிடைக்கும் உடனடி லாபம் என்ன என்றுதான் கேட்பார்கள்.
வாசிப்பே இந்த லட்சணத்தில் இருக்கையில் நுண் வாசிப்போ நுண் அரசியல் பற்றியோ பேச வேண்டியதேயில்லை.

அரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

maalaimalar : சென்னை: அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கொலை சம்பவத்தை கண்டித்து கண்டன கோ‌ஷங்களை திருமாவளவன் எழுப்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூரில் தலித் வாலிபர்கள் அர்ஜூனன், சூர்யா ஆகியோர் அ.தி.மு.க., பா.ம.க. ஜாதி வெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை கலைஞர் காலத்தில் நடந்ததாக காட்டும் அயோக்கியத்தனம்

 கோ மகன்   :  அண்ணா ,கர்ணன் படம் எப்படி இருக்கு ..
தம்பி ., படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பார்க்கவைகின்றது எல்லாம் சரிதான் ஆனா கொடியன்குளம் கலவரம் நடந்தது 95 அதாவது ஜெயா பீரியட்.. ஆனா படத்தின் கதை ஆரம்பிப்பது97 அதாவது கலைஞர் பீரியட்..
இதையத்தான் சங்கர் தன் முதல்வன் படத்தில் பன்னினான்
1991 ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர் டிரைவர் இருவரும் அடிச்சான் அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது அப்போது அதிமுக ஆட்சி ஆனா சங்கி படம்எடுத்து சிம்பாலிக்கா கலைஞரை தாக்குனான்
92 ல் மே மாதம் ஜெவும் சசியும் ஜலகீரீடை பன்னினதில் 100 பேர் செத்துபோனான்
அதே 92ல் ஜூனில்  வாச்சாத்தி போலீஸ் ரேப்
அதே 92 நவம்பரில் வந்தவாசி கலவரத்தில் 30 பேத்துக்கு அரிவாள் வெட்டு..
93ல் செங்கல்பட்டில் போலீஸ் மீது துப்பாக்கி சூடு
94 ல் வீரப்பனை பிடிக்கபோன போலீஸ் இருளர்பெண்களை கர்பழித்த விவகாரம்
94 அக்டோபரில் கஞ்சிபுரத்தில் பஞ்சமிநில மீட்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு அதில் 6,7 பேர் இறந்தார்கள்
1995 ல் 5 மாசம் கொடியன்குளம்்கலவரம் நடந்துச்சு அந்தவருடமே பதட்டம்்நீடிச்சுது

அமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை

Indian techie, pregnant wife found dead in US, 4-year-old daughter seen  crying in balcony | India News – India TV
US Authorities Probing Death Of Indian Techie, Pregnant Wife In New Jersey
maalaimalar.com : வாஷிங்டன்: மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி. இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.

பூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அரசியலோ சாதிய மோதலோ காரணமில்லை’

பூவை ஜெகன்மூர்த்தி
கொலை செய்யப்பட்ட சூர்யா - அர்ஜுனன்
கொலை செய்யப்பட்ட சூர்யா - அர்ஜுனன்
vikatan.com - லோகேஸ்வரன்.கோ : பூவை ஜெகன்மூர்த்தி ‘‘அரக்கோணம் இரட்டை கொலைச் சம்பவத்தை அரசியலாக்குவதும், சாதி பிரச்னையாக்குவதும் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் என் கட்சியினர். அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களில்லை’’ என்கிறார் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி.அரக்கோணம் அருகேயுள்ள கௌதம நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அர்ஜுனன், சூர்யா என்ற 2 இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் தாலுகா போலீஸார், இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இருப்பிரிவினர் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ, ``தேர்தல் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கிறது. இதற்கு அ.தி.மு.க, பா.ம.க தான் காரணம்’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும், சாதிய வன்மத்தோடு படுகொலை நடந்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

vinavu.com : இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் இந்தியாவின் அனுமதியின்றி அமெரிக்க கடற்படை ஊடுறுவி ரோந்து மேற்கொண்டது இதனை அமெரிக்க கப்பற்படை தாமாகவே முன் வந்து வெளிப்படையாகத் தெரிவித்ததோடு இந்தியாவின் “கடற்படை தொடர்பான அதீதமான உரிமை பாராட்டுதலுக்கு” சவால் விடும் வகையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கக் கப்பற்படையின் 7-வது பிரிவின் கமாண்டர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “யூ.எஸ்.எஸ். ஜான் பால் ஜோன்ஸ் கப்பல், லட்சத்தீவுகளுக்கு மேற்கே இந்தியாவின் தனிச்சிறப்பான பொருளாதார மண்டலத்துக்குள் சுமார் 130 கடல் மைல்களுக்கு இந்தியாவிடம் முன் அனுமதி ஏதும் பெறாமல் சர்வதேச சட்டங்களுக்கு முரணின்றி தனது கடல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை செலுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளது.

10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை!

"ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற 10 ரூபாய் டாக்டர் மறைவு” - சோகத்தில் மூழ்கிய வடசென்னை!
kalaignarseithigal ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் கோபால். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெறும் பத்து ரூபாய்க்கு அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.   மருத்துவர் கோபால், சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை!

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை!

minnambalam.com: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்ற பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்தது மத்திய அரசு.  இவரது நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5 இன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய கூடியவருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும், அதில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறை சார்ந்த பணி அனுபவமும் இருக்க வேண்டும்.

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

வேளச்சேரியில்  மறுவாக்குப்பதிவு?

minnambalam.com: வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்திரா பள்ளி வாக்குச்சாவடி மையத்திலிருந்து விவிபாட் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உரியப் பாதுகாப்பின்றி, இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்வதைப் பார்த்த அவ்வழியாக வந்த தனியார் உணவு டெலிவரி  ஊழியர், அவர்களை வழிமறித்து விசாரித்துள்ளார். போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி எடுத்து செல்கிறீர்கள் என்று அந்த ஊழியர் கேட்கவே, அதற்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சரியாகப் பதில் சொல்லவில்லை. இதற்குள் அவ்விடத்தில் பொதுமக்கள் கூடினர்.

ப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்!

puthiyamugam.com : முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்களை சகட்டுமேனிக்கு, சில நேரங்களில் கொச்சையாகவும் பச்சையாகவும் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன் என்ற பார்ட்டி. இவரின் வாயை அடைப்பதற்காகவே லம்பாக ஒரு அமெளண்டை திணிக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. இதனாலேயே உண்டு, கொழுத்து வாழ்பவர் ப்ளூ சட்டை மாறன்.

அப்படிப்பட்ட அடாவடி விமர்சனப் பார்ட்டியான மாறன் கதை—திரைக்கதை எழுதி இசையும் அமைத்து (அடக் கொடுமையே இது வேறயா?) ‘ஆண்டி இந்தியன்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி முடித்து சென்சாருக்கும் அனுப்பினார். படத்தின் ஒன்றிரண்டு காட்சிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த படத்தையுமே தடைபண்ணிவிட்டது சென்சார் போர்டு.

இந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.

May be an image of 2 people

No photo description available.

Vehl Murali : இந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள். முகவுரை: மேடான் தமிழர்களை மையப்படுத்தியே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. 1. பல நூற்றாண்டு போராட்டங்களுக்குப் பின், 1833-இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அடிமைத்தனம் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. அடிமை முறைமை ஒழிந்த பிறகு வெள்ளையர்கள் மிகப் பெரிய தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்தனர். ஏனெனில் விடுதலையடைந்த முன்னாள் அடிமைகள் இவர்களிடம் வேலை செய்ய மறுத்தனர். பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த பின் இந்த போதாமையை களைய அவர்களுக்கு வாய்த்தவர்களே இந்தயர்கள்/தமிழர்கள்.
2. சட்டத்துக்குட்பட்ட அடிமை முறைதான் இந்த ஒப்பந்தக் கூலி முறை. ஒப்பந்த கூலி முறைமையில் கங்காணிகள் மேஸ்திரிகளின் ஆசை வார்த்தைகளால் சிக்கிவிட்டனர். அதன் வழியாக இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பிரிட்டிஷாரால் உலகம் முழுவதும் குடிபெயர்க்கப்பட்டனர்.

ஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடாவடி சாயிபாபா முஸ்லிமாம்

.vinavu.com : இந்துமத பக்தர்கள் அனைவரையும் அதிரச் செய்த ஒரு காணொலிக் காட்சி மார்ச் 28-ம் தேதி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்தக் காணொலியில், ஒரு கோவிலில் உள்ள ‘சீரடி’ சாய்பாபா சிலையை கடப்பாரையைக் கொண்டு ஒருவர் தகர்த்துக் கொண்டிருக்கிறார். உடன் நிற்கும் மற்றொரு நடுத்தர வயது நபரோ அந்த நடவடிக்கைக்கு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அருகில் உள்ள ‘பெரிய மனிதர்கள்’ பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வயது நபர் அந்தக் காணொலியில், “சாய்பாபா கடவுள் அல்ல. அவர் ஒரு முஸ்லீம். அவர் 1918-ல் இறந்துவிட்டார்” என்று கூறுகிறார்.

மற்றொரு காணொலியில் இதே நபர், காசியாபாத்தைச் சேர்ந்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற இந்து சாமியாருடன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சாமியார் அந்தக் காணொலியில் சாய்பாபாவின் சிலையை உடைத்து தூக்கியெறிந்ததற்காக அதே நடுத்தவயது நபரைப் பாராட்டுகிறார். சாய்பாபாவை “ஏமாற்றுக்கார சாய்” என்று அழைக்கும் இந்தச் சாமியார், “என் வழியில் விட்டிருந்தால் நான் சாய்பாபா போன்ற ஜிகாதிகளை கோவிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

நாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. உண்மை வரலாறு

Manoj Kumar : நேற்றைய வீடியோவில் சீமானின் எளிமையான வாழ்க்கையை பற்றி விளக்கியவர் பெயர் அருளினியன் !!
சேலம் மாவட்டச் செயலாளராக இருந்தவர்,,,தற்போது கட்சியில் இல்லை,,,
சரி அவர் சீமானுக்கு எதிராக திரும்பியதற்கு காரணம் என்ன எனத் தெரியாமல் இருந்தோம்,,,
அப்ப தான் இந்த செல்லாக்குட்டி வந்து நமக்கு இந்த தகவல் கொடுத்திருக்கு,,,
கட்சி கூட்டுத்தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததற்காக கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ரத்தம் உரிஞ்சி சீமான்,,,
கூட்டுத் தலைமை கேட்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா ??
இந்த கட்சி என்ன சீமானால் துவங்கப்பட்டதா ?? இல்லை சீமானுக்காக துவங்கப்பட்டதா ??
2009 ஈன அழிப்புக்கு பிறகு,வீறுகொண்டு எழுந்த இளைஞர் கூட்டத்தால் துவங்கப்பட்டது தான் நாம் தமிழர் கட்சி,,,
2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி கூட்டுத்தலைமை கொண்டு தான் துவங்கப்பட்டது,,,
கட்சியை துவங்கியவர்களில் முதன்மையானவர்கள் :
புதுக்கோட்டை முத்துக்குமார்

அரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூகத்தை சேர்ந்த இருவர் கொலை!

maalaimalar : அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை- பொதுமக்கள் மறியல் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி கவுதம நகர் பகுதியில் சோகனூரை சேர்ந்த அர்ஜுன் (20), சூர்யா (25) மற்றும் அவரது நண்பர்கள் நேற்றிரவு மது குடித்துக் கொண்டிருந்தன அப்போது பெருமாள் ராஜப்பேட்டையை சேர்ந்த நண்பர் ஒருவரை மது குடிக்க அழைத்தனர். அவரிடம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர்.

இதையடுத்து அவர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒருவன், பீர் பாட்டிலால் பெருமாள் ராஜப்பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார்.

இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்தார். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர்.

ஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்தர்களை மாற்றம் ! துரைமுருகன் எதிர்ப்பு!

ஆளுநருக்கு ஏனிந்த அவசரம்? துரைமுருகன் எதிர்ப்பு!

 minnambalam :தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.              தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான இந்த நாட்களில் இரு பல்கலைக் கழக துணைவேந்தர்கள் ஆளுநரால் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து இன்று (ஏப்ரல் 8) திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,    “ஆட்சி மாற்றத்துக்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கியிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது. தேர்தல் முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும்.

திராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்டுவிட்டது.

திராவிட அரசியல் வரலாறு பற்றிய அறிவு பட்டிதொட்டி எல்லாம் பரவவேண்டும் !

திராவிட அரசியல் சமூக நீதி சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களின் அன்றாட பேசுபொருளாக வேண்டும்
1967 இற்கு முன்பாக அப்படித்தான் இருந்தது . அதனால்தான் திராவிட இயக்கம் அரசியல் அரங்கில் அதிரடிகள் நிகழ்த்தியது
எம்ஜியாரின் அரசியல் ஆசைக்கு பின்பு அதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது
அதன் விளைவாகத்தான் இன்று பார்ப்பனீயம் பார்ப்பனர்கள் அல்லாத மக்களிடம் வேரூன்றி உள்ளது
சீமானும் அர்ஜுன் சம்பத்தும் இதர ஜாதி அரசியல்வாதிகளும் வெறும் நோயின் அறிகுறிகளே.
நோயின் ஊற்று மக்களின் அறியாமையே! திராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்டுவிட்டது.
வெற்றிடம் வெற்றிடம் என்று கூறுகிறார்களே உண்மையில் வெற்றிடம் மக்களின் அறிவியலில் இருக்கிறது.
படிப்பறிவு இல்லாத சீமான் கூட்டம் ஒருபுறம் என்றால்
அதற்கு சற்றும் குறையாத ஒரு மேல்தட்டு  ஐ டி எஞ்சினியர் டாக்டர்கள் பேராசிரியர்கள் போன்ற தொழில் தகுதியை மட்டுமே கொண்ட பெரிய முட்டாள் கூடடம் மறுபுறமுமாக வளர்ந்துள்ளது   
புலம் பெயர் நாடுகளில் நான் சந்திக்கும் என் ஆர் ஐக்கள் பெருவாரியானோர் வெறும் பூச்சிகளாக உள்ளார்கள் இவர்கள்தான் பாஜக மற்றும் தமிழ் தேசிய வியாதிகளின் ரசிகர்கள் .
இவர்களோடு இந்திய தமிழக அரசியல் பேசும்பொழுது உண்மையில் பயமாக இருக்கிறது

சென்னை அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது மத்திய அரசு


சென்னையில் இயங்கி வந்த அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை இன்று அவசரமாக மத்திய அரசு கலைத்தது!
திமுக கூட்டணியே நடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெறும் சூழ்நிலையில்  இந்த அவசர நடவடிக்கையை பார்க்கவேண்டி உள்ளது! 

அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வட இந்தியாவுக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது : வைகோ கண்டனம்

Feb. 4, 2020  - dinakaran.com :அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வட இந்தியாவுக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது : வைகோ கண்டனம் டெல்லி : அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையில் இருந்து  இடமாற்றம் செய்ய முயற்சிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு

maalaimalar :சென்னை: இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது.

 இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது.

முக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி? ஆசை காட்டிய பாஜக ?

வெற்றி

Hemavandhana  - /tamil.oneindia.com :  சென்னை: எத்தனையோ யூகங்கள், சந்தேகங்கள் வலம் வந்த நிலையில். சத்தமே இல்லாமல் வந்து, ஓட்டுப்போட்டு போயுள்ளார் முக அழகிரி..!
வடமாநிலங்களில் உழைப்பாலும், தந்திரத்தாலும், வியூகங்களாலும், வளைத்து போட்ட பாஜக, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் கால் வைக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.
கடந்த முறை எம்பி தேர்தலின்போதே அமித்ஷா சென்னை வந்தபோது, "என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும்" என்று சொல்லி விட்டு போனார்.. அதற்கு பிறகு எத்தனையோ எடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் ஒன்றுதான் முக அழகிரி
மென்மையும், அன்பான குணத்தையும் கொண்ட அழகிரி, எந்த அடிமட்ட தொண்டர்கள் என்றாலும் இறங்கி போய் பேசுபவர்..
உழைப்பவர்கள் மேலே வர வேண்டும் என்று மனசார விரும்புவர்...
அப்படி எத்தனையோ தொண்டர்களை மேலே கைதூக்கி விட்டவர்..
இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது பலரது அன்பை எளிதாக பெற்றார்.. அந்த வகையில், பாஜக தலைவர்களுக்கும் அழகிரியை எப்போதுமே ரொம்ப பிடிக்கும்.

அதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்கள் கசியத்துவங்கியுள்ளன.

பணம்... பங்கு... பசும்பொன்... பன்னீர்... பழனிசாமி... தேர்தலில் அமைதியாய் அரங்கேறிய உரசல்!

 minnambalam :அமைதியாக முடிந்து விட்டது தேர்தல்; ஆட்சியைத் தக்க வைப்போம் அல்லது அசுர பலமுள்ள எதிர்க்கட்சியாக திமுகவைத் திணறடிப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் தேர்தலுக்கு முன் நடந்த பல விஷயங்கள், தேர்தலுக்குப் பின் மெதுவாக வெளி வரத்துவங்கியிருப்பதில், இன்னும் சில நாட்களில் கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்கள் கசியத்துவங்கியுள்ளன. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, முதல்வர் வேட்பாளர் குறித்து விமர்சனங்கள் எழலாம் அல்லது மோதலாகவும் வெடிக்கலாம் என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் கட்சியின் மீது உண்மையான அக்கறையுள்ள மூத்த நிர்வாகிகள்.

மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி? ஜூனியர் விகடன் டீம்

மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?ஜூனியர் விகடன் டீம்HASSIFKHAN K P M கார்த்திகேயன் மேடி மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?

 சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படும் விதிகளின் அடிப்படையில் இந்தக் கருத்துக்கணிப்புக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கவனமாக வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தமிழகம் இப்படியொரு சட்டமன்றத் தேர்தலை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் இரண்டு கழகங்களும் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. புதிதாகக் களத்துக்கு வந்திருக்கும் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் தாக்கம் களத்தையே மாற்றியமைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்து பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள், 6.36 கோடி பேர். ஆண் வாக்காளர்கள் 3.08 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேரும் உள்ளனர். இவர்களில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் 8.97 லட்சம் இளைஞர்களும் அடக்கம்.

புதன், 7 ஏப்ரல், 2021

தமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் , அசாம் 82.28சதவீதம் , மேற்கு வங்கத்தில் 77.68 சதவீத ஓட்டுப் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
latest tamil news

dinamalar :கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 140 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், 73.58 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பகலில் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது. மதியத்துக்குப் பின், பரவலாக மழை பெய்ததால், ஓட்டுப் பதிவில் தொய்வு ஏற்பட்டது. இந்தத் தேர்தலில், மொத்தம், 957 பேர் போட்டியிடுகின்றனர்.

அசாம்:   முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள அசாமுக்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு, 12 மாவட்டங்களில் உள்ள, 40 தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டமாக, நேற்று தேர்தல் நடந்தது.ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர, மாநிலம் முழுதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்

maalaimalar : சென்னை: தி.மு.க. எம்.பி.யான கனிமொழி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரது உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதால் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆழ்வார்பேட்டை வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே, நேற்று மாலை முழு கவச உடையுடன் வந்து சட்டசபை தேர்தலில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்

இலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு

IBC tamil :ஐ.ஸ், அல் குவைதா உட்பட பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் இன்று அதிரடி தடை உத்தரவை அறிவித்துள்ளது.இவர்களில் 11 அமைப்புக்கள் இருப்பதோடு அதிக அமைப்புக்கள் இலங்கைக்குள் செயற்படுவதாக காணப்படுகின்றன.சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.இதன்படி தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களின் விபரங்கள்வருமாறு,ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ)

சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ)

ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM)

தாருல் அதர் @ ஜம் உல் அதர்

இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM)

மு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது” -

“அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது” - மு.க.ஸ்டாலின்

.kalaignarseithigal.com :  நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது!" எனக் குறிப்பிட்டு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் தன்மை உணர்ந்து மிகுந்த பொறுப்புடனும் - ஒருங்கிணைப்புடனும் அயராமல் களப்பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகளின் அதிகார துஷ்பிரயோகம் - அடக்குமுறை - ஒரு சில காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கை ஆகியவற்றைச் சமாளித்து - கொரோனா தொற்றுக்கிடையில் கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் ஆற்றிய பணிகள் பாராட்டுதலுக்குரியவை. 

நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை! சரத்குமார் மீதான தண்டனை நிறுத்திவைப்பு ! ராதிகாவுக்கு பிடி வாரண்ட்!

மின்னம்பலம் :செக் மோசடி வழக்கில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சரத்குமார் மீதான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, 'ரேடியன்ஸ் மீடியா' நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடியைக் காசோலை மூலமாகவும், ரூ.50 லட்சம் ரொக்கமாகவும் கடனாக பெறப்பட்டது.

‘இது என்ன மாயம்’ திரைப்படத்தைத் தயாரிப்பதற்காகப் பெறப்பட்ட பணத்தை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திரும்பக் கொடுத்த பிறகு, படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் சரத்குமார் தரப்பு கடனை திருப்பிக்கொடுக்காமல் ‘பாம்பு சட்டை’ படத்தைத் தயாரித்தது. இந்நிலையில் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் சரத்குமார் தரப்பு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு France’s anti-corruption agency

பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு காரணமின்றி ரூ.8.62 கோடி பணம் கைமாறியதை சுட்டிக் காட்டியிருக்கிறது. 

வினவு செய்திப் பிரிவு :    ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியதில், இடைத்தரகு நிறுவனம் ஒன்றிற்கு பல கோடி ரூபாய் பணம் வழங்கியதாக ரஃபேல் விமானத் தயாரிப்பு நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு முகமை.

கடந்த 2016-ம் ஆண்டு மோடி அரசால் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாண்டி போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தை ஒட்டி, இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு இழப்பு என்பதை பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் தொழில்நுட்ப விவரங்களில் இருந்தும் பலரும் அம்பலப்படுத்தினர்.

இனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழைக்கும்!

May be an image of 2 people

Kathir RS : எமர்ஜென்சியில் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்.. அத்தனை  தொண்டர்களும் தலைவர்களும் அடி பட்டு மிதி பட்ட போதும்...
1990ல் அநியாய குற்றச்சாட்டுகளால் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்..
திமுகவிற்கு  அனுதாப வாக்குகள் மருந்துக்குக் கூட கிடைக்கவில்லை.
அதே போல..1996-2001, 2006-2011 ல் நல்லாட்சி புரிந்த போதும் தமிழக மக்கள் திமுகவைப் பாராட்டி அடுத்தொரு வாய்ப்பை வழங்கவே இல்லை.
ஆனால்...
1980ல் ஆட்சிக் கலைப்பைச் சொல்லி அழுதும்..1984ல்  உடல் நலமில்லை என்று சொல்லியும் இந்திரா இறந்ததை வைத்து அழுது புலம்பியும்.. 1992 ராஜீவ் காந்தி இறந்தாரென்ற அனுதாப அலையிலும் அதிமுக வென்று கொண்டே இருந்தது.
ஒரு முறைகூட நல்லாட்சி என்ற பெயரை எடுக்காத அதிமுகவையே அதிகமான முறை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
அதிமுக உருவான பின்னர் நடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் வெறும் மூன்று முறைதான் திமுக வென்றிருக்கிறது.
அதிமுக உருவான பின்பான இந்த 44 ஆண்டுகளில் திமுக வெறும் 12 ஆண்டுகளே தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறது.

ஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இயந்திரங்களை இரவு பகல் பாராமல் கண்காணியுங்கள்

VVPAT இயந்திரத்தை எடுத்துச்செல்ல முயன்ற நபர்... சிறைபிடித்த பொதுமக்கள்... வேளச்சேரியில் பரபரப்பு! சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 tamil.oneindia.com - Jeyalakshmi :  சென்னை: வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் திமுக வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், தொண்டர்கள் கண்காணித்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளன.
அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் வேலை முடிந்து விட்டது என்று நினைக்காமல் இனிதான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் என்று வேட்பாளர்களையும், தொண்டர்களையும் கூட்டணி கட்சியினரையும் கேட்டுக்கொண்டுள்ளார் மு.க ஸ்டாலின்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

பினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன் முடித்துவைக்கப்படும்”

kalaignarseithigal.com : ேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிக்காக வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு துவங்கியதிலிருந்து கேரள அரசியல் கட்சித் தலைவர்களும், மக்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் 3.30 மணி நிலவரப்படி கேரளாவில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்நிலையில், தர்மடோம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணியின் வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.“பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன் முடித்துவைக்கப்படும்” - வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேச்சு!

கறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் ! கறுப்பு சிவப்பு சைக்கிள் விஜய்! திமுகவுக்கு சிக்னல் காட்டிய நட்சத்திரங்கள்

 Hemavandhana  - /tamil.oneindia.com/ சென்னை: ஒரே நாளில் ரஜினியையும், கமலையும் விஜய், அஜீத் இருவரும் ஓரங்கட்டி உள்ளனர்.. ஒரே நாளில் இவர்கள் 2 பேருமே ட்ரெண்டாகிவிட்டனர்.
ஒரு காலத்தில் தேர்தல் சமயத்தில் வாக்குப் பதிவு என்றாலே, ரஜினியையும், கமலையும்தான் சுற்றிதான் ரசிகர்களின் கவனம் செல்லும்..
இவர்கள் 2 பேரும்தான் 40 வருடம் திரையுலகை கட்டி ஆண்டு கொண்டிருந்தார்கள்.
எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்களைவிட, கமல் - ரஜினி ரசிகர்கள் வெளிப்படையாகவே மோதி கொள்வார்கள்.. வெளிப்படையாகவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்து ரோடில் மல்லுக்கட்டி கொள்வார்கள்..
இவர்கள் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், தமிழகமே அன்றைய தினம் திணறி போய்விடும். இவர்களை கட்டுப்படுத்துவது படாதபாடாக இருக்கும்..
போலீசுக்கும் கூடுதல் வேலையாகவும் இருக்கும். ரசிகர்கள்தான் இப்படி இருக்கிறார்களே தவிர, ரஜினியும் கமலும் என்னவோ அப்போதுமுதல் இப்போது வரை நெருக்கமாவே இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். >

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்!

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து  மறைந்தார்!

 மின்னம்பலம் :மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து முதுமை காரணமாக தனது 96 வயதில் இன்று (ஏப்ரல் 6) காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “ ‘என் வாழ்வை திசைமாற்றியவர் மறைந்தார்’  நான் பயணிக்க வேண்டிய திசை என்ன என்று புரியாமல் இருந்த 1992-ஆம் ஆண்டு நிறப்பிரிகை பத்திரிகை சார்ந்த நடவடிக்கைகளில் நண்பர்களாக ஆன கிராமியன், துப்பாக்கி தொழிற்சாலை அழகேசன் ஆகியோரை ஒரு நாள் மாலை திருச்சி கோட்டை ஸ்டேஷனில் சந்தித்தேன். ஏதெனும் ஒரு வாசிப்புக் குழு (reading group) உருவாக்க திட்டம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது
malaimalar : 234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், இரவு 7 மணிக்கு முடிவடைந்தது.
சீல் வைக்கப்படும் வாக்கு எந்திரம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலை 6 மணிக்கே வரிசையில் இன்று முதல் நபராக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற காத்திருந்தனர்.மதியம் வெயில் வாட்டி எடுப்பதால் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்ய முடிவு செய்தனர். இதனால் காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளாக அதிகரித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமாக இருந்தது. மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமாக உயர்ந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.காலையில் இருந்து பார்த்தால் மதியம் 3 மணியில் இருந்து 5 மணி வரை 10.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மற்ற நேரங்களில் சராசரியாக 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்குப்பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

55 மில்லியன் ஹிட்ஸ்! சினிமா பாடல்களை மறக்கடித்த ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு!

வி. சபேசன் : என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு பிறகு பலத்த வரவேற்பைப் பெற்ற பாடல் இது. யு டியூபில்   55 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அருடையான இசை, மனதுக்கு நெருக்கமான குரல், சிறப்பான படத்தொகுப்பு என்று அட்டகாசமாக இருக்கிறது. 'நரிங்க ஆளும் காட்டுக்குள்ள ஒரு சிங்கம் நடந்து வாறாரும்மா

.kalaignarseithigal.com ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’அது நிகழ்ச்சி அல்ல; நெகிழ்ச்சி! வஞ்சக வல்லூறுகளால் தாக்கப்படும் கோழிக் குஞ்சுகள் தாயிடம் அடைக்கலம் தேடி ஓடி வருவது போல, பூதாகாரப் பேரிருளில் சிக்கியவர்கள் எதிரே தென்படும் ஒளிக்கீற்றை நோக்கிப் பாய்ந்து வருவது போல, சுட்டெரிக்கும் வெயிலில் வாட்டப்பட்டவர்கள், நிழல் தரும் மரத்தைக் கண்டு மகிழ்ந்து அதனை நோக்கி விரைவது போல, அலை அலையாய் அணி வகுத்து ஆணும் பெண்ணுமாய், சிறார் முதல் முதியோர் வரை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மொய்த்திருக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக சட்ட மன்ற தேர்தல்.. மக்கள் ஆர்வம்

 Jeyalakshmi C - tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தற்போது ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3
,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால்,
தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்படும் அனுப்பி வைக்கப்பட்டன. வாகனங்கள் செல்ல முடியாத மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லப்பட்டன.

இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள் பாஜகவாக மாறிவிடும் ?

அரசியல்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்...
பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்.. கமல் மறுபடியும் சினிமாவில் நடிக்க போயிடுவார்..
தமிழக கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா?எனத் தெளிவாக அணிபிரியும்" என்று தேர்தலுக்கு பிறகு உள்ள அரசியல் சூழலை தன்னுடைய கணிப்பாக ரவிக்குமார் எம்பி வெளிப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நடக்கிறது..
5 பேர் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் வழக்கம்போல திமுக, அதிமுக இரு ஜாம்பவான்கள் இடையே கடும்போட்டி எழுந்துள்ளது..

திங்கள், 5 ஏப்ரல், 2021

இந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் ! ஐந்து பாரம்பரிய நாளிதழ்களின் தற்கொலை

இந்திய பத்திரிகை உலகத்திற்கு  ஒரு கரிநாள்
பணத்திற்காக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் வானொலிகள் நாணயத்தை  சமரசம் செய்துகொள்வது ஒன்றும் புதிதில்லை!
ஆனால் இந்த ஐந்து முக்கிய தமிழ் நாளிதழ்களின் முதல் முழுப்பக்க விளம்பரம் என்பது ஒரு சாதாரண சமரசம் அல்ல.
எல்லா ஊடக அறங்களையும் காலில் போட்டு மிதித்து விட்ட செயல் இது. .
ஒரு சாதாரண பத்திரிகைகள் இந்த கேவலமான செயலை செய்திருந்தால் அதை புரிந்து கொள்ள முடியும்.   கடந்து போகவும் முடியும்.
ஆனால் இங்கே நடந்திருப்பது,
நூற்றாண்டுகளை கடந்த ஊடக பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பெருமைப்படும் சிகரங்களின் தற்கொலை அல்லவா இவை?
இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து பத்திரிக்கை குழுமங்கள் சாதாரண காளான் பத்திரிகைகளா?
நூறாண்டுகளாக கட்டிக்காத்த நற்பெயரை இழக்கவும் இவர்கள் துணிந்து விட்டார்கள்.

இவர்கள் வெறும் விளம்பர பணத்திற்காக மட்டும் இந்த ஈன செயலில் இறங்கவில்லை என்பதை என்னால் துணிந்து கூற முடியும்.
இவர்கள் நன்றாக தெரிந்தே இவை வெறும் விளம்பரங்கள் என்ற அளவுக்கு காட்டி வேஷம் போடுகிறார்கள்!
இவர்கள் செய்வது பொய்ப்பிரச்சாரம்  இது வெறும் விளம்பரம் அல்ல.

இதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவில் முன்னிலை வகிக்கும் சென்னை, கோவை, சேலம்!

இதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவில் முன்னிலை வகிக்கும் சென்னை, கோவை, சேலம்!
kalaignarseithigal.com :அதிக பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்! .>சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, “நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், வாக்குச்சாவடி அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு என அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஓட்டுக்கு "ஒழுங்கா" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சாலை மறியல்! நடுங்கிப்போன நாமக்கல்

 Veerakumar - tamil.oneindia.com : தமிழக அரசியலில் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு சம்பவம்.
அதிமுக சரியாக ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சாலை மறியல் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளனர் பொதுமக்கள்.
தமிழகத்தில் இதுவரை 420 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து முறைகேடுகளை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஒருபக்கம் கூறிவரும் நிலையில்,
இங்கு பொதுமக்களே பணம் கேட்டு சாலை மறியல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் என்ற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

பட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்; தடுமாறிய திமுக!

minnambalm :முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிகிறது. இன்று எவ்வளவு செலவாகுமோ, சமூக ஊடகங்களில் இன்று நமக்கு எதிராக என்ன கிளப்பி விடப்போகிறார்களோ என்ற பதைபதைப்பிலேயே இருக்கிறார்கள் இவர்கள். கடைசியாய் கரன்சி வெள்ளம் கரை புரண்டு ஓடுவதில் கதி கலங்கித் தவிக்கிறார்கள் பலர்....

நாம் மின்னம்பலத்தில் ஏற்கெனவே எழுதியிருந்ததுபோல, திமுக வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு மூன்று கோடி மட்டும்தான் கட்சித் தலைமை கொடுத்திருக்கிறது. ஆனால் அதிமுக வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு 10 கோடி தலைமையே கொடுத்திருக்கிறது. அதற்கு மேல் சேர்த்துக் கொடுப்பது அவரவர் பொறுப்பு என்று கூறிவிட்டது. பத்தாண்டுகளாக ஆளும்கட்சியாக அதிமுக இருப்பதால், இப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றாகவே சம்பாதித்துள்ளனர். அதனால் எல்லோருமே தங்கள் பங்கிற்கும் கொஞ்சம் சேர்த்தே கொடுக்கின்றனர்..... 

தமிழகம் முழுவதும் நாம் விசாரித்த வகையில், பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் ஓட்டுக்கு 500 என்று விநியோகித்து விட்டனர். முதல்வர் பழனிசாமி நிற்கும் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் நிற்கும் போடி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, இரண்டு விஜயபாஸ்கர்கள், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் போன்றவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகபட்சமாக 4000 ஆயிரம் ரூபாய் வரை பணப்பட்டுவாடா நடந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. பிற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1000, அதிகபட்சமாக 2000 என்று பட்டுவாடா நடந்திருக்கிறது. ஒரு சில அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் மூக்குத்தி போன்றவையும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் கள நிலவரம் அறிந்த கட்சிக்காரர்கள்.

234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய பிரதா சாகு

234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய பிரதா சாகு
maalaimalar :சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது, தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது என்றார்.

அறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் தினத்தந்தி, தினமலர், தினமணி, தமிழ்இந்து The Hindu

இவர்களின் பாரம்பரியம் பொய்களை விற்பதுதான் .அன்றே சுட்டி காட்டி வழக்கு தொடுத்த பெரியார்

Karthikeyan Fastura
: கடந்த மூன்று தினங்களாக கடும் தலைவலி மற்றும் ஜலதோஷம் காரணமாக மாத்திரை சாப்பிட தூங்க என்று கழிந்தது . நடுநடுவே வேலைகள். இவற்றிற்கு மத்தியில் இணையத்தின் பக்கம் வராமல் இருந்தேன் . மதியம் தான் ஒரு நண்பர் பத்திரிக்கைகளில் வந்த முதல் பக்க
பெரியார்:தினமணி எக்ஸ்பிரஸ் இந்து 
 

அயோக்கியத்தனத்தை அனுப்பி வைத்ததை பார்த்தேன் . கோபம் எனக்கு அதிமுகவின் மீதல்ல . அறம் என்பது மயிரளவிற்கும் இல்லாத கூட்டம் அது . பத்திரிக்கைகள் மீது தான். தினத்தந்தி, தினமலர், தினமணி,தமிழ்இந்து , The Hindu என்று அனைத்து பத்திரிக்கைகளிலும் ஒரேநாளில் செய்தி போல வருவதன் மூலம் ஒரு பொய்யை எல்லாவகையிலும் உண்மைபோல காட்டுவது மிக மிக கண்டிக்கதக்க அயோக்கியத்தனம்.
பத்திரிக்கை தர்மத்தின் கடைசிபக்கத்தையும் காற்றில் பறக்கவிட்ட மொள்ளமாறித் தனம். இதில் THE HINDU மீது எனக்கிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது .
பணத்திற்காக மலத்தை தின்னச் சொன்னாலும் தின்று செறிப்பார்கள். இதை தேர்தல் தந்திரம் என்று கடந்து செல்ல முடியுமா..? நாளை பிரதமர் இறந்துவிட்டார் என்று ஒரு பொய்யை விளம்பரம் என்று காசு கொடுத்தால் கூட செய்வார்களா..?

சீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் அடியாள்

Abilash Chandran  : சீமான் எனும் தமிழ் சாவர்க்கர்
எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.
திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை.
திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை.
ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை.
அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பேசும் போது அவருடைய போதாமை, அவருக்குள் ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார அறியாமை வெளிப்படுகிறது என்பதே பிரச்சனை.
அதை விட ஆகப்பெரிய பிரச்சனை ஜனநாயக ஆட்சிமுறையில் அவருக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்பது.

சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 22 பேர் பலி

பிபிசி  :சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சனியன்று நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்,
ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அந்த மாநிலத்தின் காவல்துறை தெரிவிக்கிறது. குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ள பகுதிகளாகக் கருதப்படும் பிஜப்பூர் மற்றும் சுக்மா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் தெற்கு பஸ்தார் காட்டுப் பகுதியில், 2,000 பேருக்கும் அதிகமான படையினரைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் வெள்ளி இரவு மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
இந்திய ரிசர்வ் காவல் படையினர், ‘கோப்ரா’ படையினர், சத்தீஸ்கர் மாநில காவல் துறையின் சிறப்புப் படையினர் உள்ளிட்டோர் இவர்களில் அடக்கம்.
அப்போது பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில், சனிக்கிழமை மதியம் அவர்களைச் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

துணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல் புரளுது கோடி!

மின்னம்பலம் :அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.
ஆனால் முதல்வராக இருந்து துணை முதல்வராகப் பதவி இறக்கம் கண்டதிலிருந்து அரசியல், அதிகாரம், செல்வாக்கு எல்லாவற்றிலும் பன்னீர்செல்வத்துக்கு பல படிகள் சறுக்கல்தான்.
தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது கஷ்டம் என்பதில், அவருக்கு உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சியும் தெம்பும் இருக்கலாம்.
ஆனால் பழனிசாமியைப் பொறுத்தவரை, எந்தவொரு பிரச்சினையுமின்றி எம்.எல்.ஏ ஆகிவிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
என்ன காரணமென்றே தெரியாமல், முதல்வருக்கு எதிராக மிக மிகச் சாதாரண வேட்பாளரைத்தான் திமுக தலைமை நிறுத்தியிருக்கிறது.
அதற்கு அவர்கள் சில முன்னுதாரணங்களையும் சொல்லி, முதல்வர் பழனிசாமி ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லை என்கிறார்கள்  1996ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவைத் தோற்கடித்தவர், 

திமுகவின் பெரிய ஆளுமையோ, தலைவரோ இல்லை. தொகுதி மக்களுக்கே அப்போது பெரிதாக அறிமுகம் இல்லாத சுகவனம்தான். ஆனால் அவர் ஜெயலலிதாவை 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அகில இந்தியாவையும் அதிர வைத்தார். 

27 42 33 600 ரூபாய்! தினமணி தினமலர் இந்து தினத்தந்தி....ஒரு நாள் முழுப்பக்க அதிமுக பாஜக விளம்பரம்! மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் நாளிதழ்கள்


இன்று அத்தனை பத்திரிக்கைகளுமே… பத்தாண்டு பழைய செய்தியை முதல் பக்க செய்தியாக பதிவு செய்து வெளியிட்டிருந்தது.
அத்தனை வழக்கும் திமுக.வினர் நிரபராதி என்று தீர்ப்பு வந்த வதந்திகள்.
ஊடக அறம் சிதைந்து கிடக்கும் இந்த ஒரு அவலத்திற்காகவே நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம்
Sundaram Kannan  திராவிட ஆய்வு
13000 ஏக்கரா , அன்னைக்கு கலைஞர் நினைச்சு இருந்தா 30000 ஏக்கர் அந்த ஒரே ஆளுக்கு சொந்தம் ஆகி இருக்கும், ஆண்ட பரம்பரை வசனம் பேசுறவன் எல்லாம் நக்கிகிட்டு போய் இருப்பான் ...
அரங்கநாதய்யர் !
இராமநாதையர் !
அப்பாவிடம் ஒரு முறை " தமிழகம் முழுக்க விவசாய நில உடைமையாளர்கள் காங்கிரஸ் காட்சியையோ, அதிமுகவையோ ஆதரிக்கிறார்கள். ஆனால் ஏன் குளித்தலை நில உடைமையாளார்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் " என்றேன்.
அப்பா " ஆதரிக்காமல் ? கலைஞர் தாண்டா அங்கே குல தெய்வம், ரெண்டு பக்கமும் கானி நடுவுல பாயுற காவேரி. முப்போக விளைச்சல், வாழை, நெல்லுன்னு பொன்னு தர மண்ணு.

பொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…?

-சாவித்திரி கண்ணன் : பொதுத்துறை நிறுவனங்களை பொலிகடாவாக்கி வரும் மத்திய பாஜக அரசு, அவற்றுக்கு இறுதி கட்ட மரண அடி கொடுக்க, மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவன வாரியத் தலைவராக நியமித்துள்ளது! டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தின் மல்லிகா, இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் (TAFE) தலைவராக உள்ளார். மல்லிகாவை பொதுத் துறை வாரியங்களின் தலைவராக நியமித்ததன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள், 12.34 லட்சம் தொழிலாளர்கள் உள்ள கொண்ட – சேவையை லட்சியமாக – இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது பாஜக அரசு!

பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக இந்தியா மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது! நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சில கோடிப் பேருக்கு வேலை வாய்ப்புகள் தந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் சோசலிச பாதையில் இந்தியா உலகின் ஆகச் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. வெறும் ஐந்து நிறுவனங்களில் ஆரம்பித்து, 348 நிறுவனங்கள் என்ற விஸ்வரூப வளர்ச்சிக்கு வந்தது! ஆனால், 2014 ல் பாஜக அரசு பொறுப்புக்கு வந்தது முதல் பொதுத்துறை நிறுவனங்களை சிறுகச்,சிறுக அழிக்கும் முயற்சியை ஆரம்பித்தது! திட்ட கமிஷனையே கலைத்துவிட்டது. சிறப்பாக இயங்கி வந்த பொதுத் துறைகளை சீரழிக்கும் நோக்கத்துடன் அந்நிய மூலதனத்தை அதிகமாக அனுமதித்தது! கல்வித் துறையிலும் கூட வெளிநாட்டு பேராசைக்கார நிறுவனங்களை அனுமதித்து, கல்வியை கடைச் சரக்காக்கியது!

மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைபட்டது ஏன்?

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் (19 கிலோமீட்டர்) ஏன் நிறுத்தப்பட்டது!? சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு 1800 கோடி மதிப்பில் ஒரு பறக்கும் சாலையை அமைக்க திட்டம் வகுத்து 400 கோடி செலவு செய்து தூண்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆணவத்தால் நின்றுபோனது

 Kandasamy Mariyappan  : ஒரு சில சின்னச் சின்ன செய்திகளுக்கு பின்னால்

எவ்வளவு பெரிய முன்னேற்றத் தடைகள் இருக்கிறது? அறிந்து கொள்வோம்.
அத்திட்டம் வெற்றிகரமாக முடிந்திருந்தால், நிறைய பலன்களை தமிழகம் அனுபவித்து இருக்கும்.
ஆனால் அதை நிறைவேறாமல் விடுபட்டதன் பின்னணி யாது?
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை ஏன் நிறுத்தப்பட்டது!?
Billion $ Questions!
UPA 1 அரசில் அங்கம் வகித்த திமுக, சென்னை துறைமுக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், திருப்பெரும்புதூரில் ஒரு Dry Port அமைத்து, சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு 1800 கோடி மதிப்பில் ஒரு பறக்கும் சாலையை அமைக்க திட்டம் வகுத்து 400 கோடி செலவு செய்து தூண்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2009ல் இதன் பணிகள் துவங்கப்பெற்றது.

"சேலஞ்ச் ஓட்டு" "டெண்டர் ஓட்டு" வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால்? அல்லது உங்கள் வாக்கினை முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால்?

பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !
நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் ,
உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் "சேலஞ்ச் ஓட்டு" கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள்.  

 உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் ,
"டெண்டர் ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள்.
ஒரு வாக்குச் சாவடியில் 14% க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் , அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும்.            
வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி...   
 அறம்செய்   அறக்கட்டளை  மயிலாடுதுறை .
இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.   *நன்றி

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

பணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திமுகவுக்கு எதிரான முதல்பக்க வியாபாரம்

azhi senthil naathan
: இன்று காலையில் எல்லா நாளிதழ்களிலும் வந்த திமுக எதிர்ப்பு விளம்பரங்கள் படுதோல்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பாஜக-அதிமுக தரப்பின் பரிதாபகரமான இறுதி முயற்சிகள் என்பதைத் தவிர வேறில்லை.
நாளிதழ்களிடம் அறமில்லை என்றெல்லாம் சாபம் கொடுக்காதீர்கள். பாவம் அந்த கோடீஸ்வரர்கள்!
நாளிதழ்களும் பெரிய சேனல்களும் ஆளும் வர்க்கத்தின் கைப்பாவைகள் மட்டுமல்ல. ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும்கூட. அவர்களால் இத்தகைய விளம்பரங்களை வெளியிடமுடியாது என்று மறுக்கமுடியாது. ஒரு கவிஞன் சொல்லியிருந்தான்: தர்ம யுத்தம் என்று ஏதுமில்லை, யுத்த தர்மம்தான் இருக்கிறது என்று. அதைப் போலவே தர்ம வியாபாரம் அல்லது தர்ம பத்திரிகையியல் என்று ஏதுமில்லை. வியாபார தர்மம் அல்லது பத்திரிகை தர்மம்தான் உண்டு. பத்திரிகை தர்மம் என்பது இந்தியாவில் என்ன அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ரூ.10 கோடி ! அதில் 7 கோடியை மிரட்டி பறித்த ரவுடிகள்!

அமைச்சர் வீட்டிலிருந்து போனது ரூ.10 கோடி: 7 கோடியை மிரட்டி பறித்த ரவுடிகள்!
மின்னம்பலம் :திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் முசிறி எம்எல்ஏ மகன் காரில்  பணம்
பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்  திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த  மார்ச் 23ஆம் தேதி இரவு,  திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை
பகுதியில் 2 காரில் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக அவ்வழியே
சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும்
படையினரைப் பார்த்ததும், ஒரு காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்று
விட்டதாகவும், காரில் இருந்தவர்கள், ஒரு மூட்டையை வெளியே வீச முயன்றதாகவும்
 அதிகாரிகள் அதை சோதனையிட்டபோது அதில், 500 ரூபாய் கட்டுகளாக ஒரு கோடி  ரூபாய் இருந்ததாகவும்,  காரில் இருந்து 2 கோடி ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓய்ந்தது

முக ஸ்டாலின் பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓய்ந்தது
மாலைமலர் : :88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் செவ்வாய்க்கிழமை தங்களது வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்கள்.   தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று கட்சித் தலைவர்கள் அவர்அவர்களுடைய  சொந்த தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. முன்னதாக...தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன்  முடிவடைகிறது.  இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது.

இன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் பிரச்சாரம்!

May be an image of 1 person, standing and outdoors
Dr,அரியலூர் அனிதா

நக்கீரன் : தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்கும் நிலையில், இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
பிரச்சாரத்திற்காக வந்த வெளி மாவட்ட கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
சொந்த தொகுதிகளில் தலைவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம்!....
கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று (04/04/2021) தங்களது சொந்த சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலும்,  

அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலும்,
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும்,

”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட தமிழர்கள்!!

”ஜேர்மனி: விசா புதுப்பிப்பதற்கு என வெளிநாட்டோர் அலுவலகங்களுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட  100க்கு மேற்பட்ட தமிழர்கள்!!

/ilakkiyainfo.com : மார்ச் 30, செவ்வாயன்று, எண்ணிக்கை தெரிவிக்கப்படாத தமிழ் அகதிகள் கூட்டாக டுசுல்டோர்ஃப் (Düsseldorf) நகரிலிருந்து ஒரு விமானத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை குறித்து ஜேர்மன் ஊடகங்களில் எந்த செய்தியும் தெரிவிக்கப்படவில்லை. 100 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டதாக தமிழ் நடவடிக்கை குழுக்கள் அறிவிக்கின்றன. இது, தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஒரு தொடர் கூட்டு நாடுகடத்தலின் ஆரம்ப நடவடிக்கை மட்டுமே.

“Aktion Bleiberecht” (இருப்பதற்கான நடவடிக்கை) என்னும் அமைப்பு, ஏப்ரல் மாதத்தில் பின்வரும் நாடுகளுக்கு அகதிகளை கூட்டாக நாடு கடத்தப்படவுள்ளதாக தங்கள் இணைய தளத்தில் தெரிவிக்கின்றது.

ஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரசாரம்

chennaionline.com :நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 3-4-2021 இன்று மாலை 5.30 மணி சோழிங்கநல்லூர், 6 மணி வேளச்சேரி, இரவு 7 மணி மதுரவாயல், 7.30 மணி விருகம்பாக்கம், 8 மணி தியாகராயநகர், 8.30 மணி ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வேட்பாளர் ஜெரால்டு, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, ராதாபுரம் இன்பதுரை ஆகியோர்

May be an image of 1 person and text that says 'NEWS News18 தமிழ் 190k Followers பாலோ அமித் ஷா பொதுக்கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க வேட்பாளர்கள் நெல்லை களநிலவரம் அன்டன் මකරයை 3Apr21 Apr 3:59 PM'

பாலகணேசன் அருணாசலம்  : அமித்ஷா நடத்திய பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜெரால்டு, அம்பாசமுத்திரம் வேட்பாளர் இசக்கி சுப்பையா, ராதாபுரம் வேட்பாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது
கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
விழா மேடையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டது.
ஆனால் திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளரும் நாங்குநேரி தொகுதி வேட்பாளருமான கணேசராஜா ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்றனர்.

tamil.news18.com சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப கட்சியான தி.மு.க-வுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் ஆனால் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி தி.மு.க-வும், காங்கிரசும். மக்களுக்கான ஆட்சி வேண்டுமா குடும்ப கட்சி ஆட்சி வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும்  என நெல்லையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்

சென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென்னையின் பொற்காலம்- தாமரை வில்கின்சன்

திராவிடவாசிப்பு_மார்ச்_2021_Dravidavaasippu_Mar2021.pdf
Thamarai Selvi : மு.க. ஸ்டாலின் என்னும் நிர்வாகி! பதினான்கு வயதில் திமுகவிற்காகத் தேர்தல் பிரச்சாரம், கோபாலபுரம் இளைஞர் திமுக என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திமுக இளைஞரணி அமைப்பாளராகவும், செயலாளராகவும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும், செயல் தலைவராகவும், இன்று வெற்றிகரமான தலைவராகவும் உயர்ந்திருக்கிறார் திரு மு க ஸ்டாலின்! திமுக என்ற பேரியக்கத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்கத் தலைவராகத் திரு ஸ்டாலின் தமிழக அரசியல்களத்தில் சிறிதும் தொய்வில்லாமல் நடைபோடுகிறார். கூடிய விரைவில் தமிழக முதல்வராகப் பதவியேற்கப் போகிறவர் திரு ஸ்டாலின் அவர்களே என்று பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளும் , அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வெளிப்படுத்தும் அன்பும் நம்பிக்கையும் கட்டியம் கூறுகின்றன.
தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது நிர்வாகத்திறனை ஸ்டாலின் உரக்கவும், உறுதியாகவும் நிரூபித்து விட்டார். திரு மு க ஸ்டாலினின் நிர்வாகத்திறனைச் சற்று விரிவாகத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மேயர் ஸ்டாலின் (1996-2001)
சென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென்னையின் பொற்காலம் என்று கூறலாம்.

அ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளையர்கள்... ரூ. 1 கோடி பறிமுதல் வழக்கில் திடீர் திருப்பம்!

அ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளையர்கள்... ரூ. 1 கோடி பறிமுதல் வழக்கில் திடீர் திருப்பம்!
kalaignarseithigal : திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் கடந்த 23ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அ.தி.மு.க வேட்பாளர் செல்வராஜ மகன் ராமமூர்த்தியின் காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இது குறித்து காரில் இருந்த ரவிச்சந்திரன், சத்யராஜ், ஜெயசீலன், சிவகுமார் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, இந்த பணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டனர். பின்னர் இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, உரிமை கோராத பணம் தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணராத மக்கள் மீது கோபம் வருகிறது

May be an image of 1 person, beard and standing

ஜேம்ஸ் வசந்தன் : விடை கிடைக்காமல் என்னைத் திகைக்க வைக்கிற ஒரு சமீபத்திய சமூக-அரசியல் விஷயம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழ்மொழி கற்றவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு வேலை என்கிற இயல்பான,
காலங்காலமாய் தொடர்ந்து வந்த நம் உரிமையைம்
-கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல், மனசாட்சி இல்லாமல், நம் மண்ணின் மக்கள் என்கிற நேசம் கூட இல்லாமல்,
துரோகம் செய்கிறோமே, என் சுயநலத்துக்காக இந்த மாநிலத்தின் அடிப்படை நலனையே அழிக்கிறேனே, பல கோடி இளைஞர்களின் எதிர்காலத்தையே நாசமாக்குகிறேனே,
என்கிற குற்ற உணர்வு கூட இல்லாமல், அந்த சட்டத்தையே மாற்றி "தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை" என்று அரசாணை தயாரித்து அதில் கையெழுத்து இட்ட OPS மேல் வருகிற கோபத்தை விட -
தங்களைச் சுற்றிலும் இருக்கிற தமிழ் சொந்தங்களின் உரிமையை, வாழ்க்கை ஆதாரத்தை, வருமான உத்திரவாதத்தை அழித்த இவர்களுக்கு ஓட்டுபோடத் தயாராக இருக்கிற தமிழர்கள் மேல்தான் அதிக கோபம் வருகிறது!

சாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 200 வரை இடங்கள் கிடைக்கும்.

சாரு நிவேதிதா.... ஒரு மனநோயாளியா?
சாரு நிவேதிதா - charuonline.com : என் தேர்தல் கணிப்பு:
திமுக கூட்டணிக்கு க்கு 190 இலிருந்து 200 வரை இடங்கள் கிடைக்கும்.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காதிருந்தால் இன்னும் கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கலாம்.
ஸ்டாலினுக்குக் கூட்டல் கழித்தல் தெரியாது, 
யாகாவாரயினும் நா காக்க என்ற குறளையெல்லாம் நாப் பிறழாமல் சொல்ல வராது என்பதெல்லாம் முதல்வராக அமர்வதற்கான தகுதிக் குறைவு என்று நான் நினைக்கவில்லை. 
முதல்வர் பதவி என்பது கலெக்டர் வேலை அல்ல. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை விட திறமை வாய்ந்த முதல்வராக இருப்பார் என்பதில் எனக்கு ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
மற்றபடி கீழ்மட்ட திமுக தொண்டர்கள் வழக்கம் போலவே அநியாய ஆட்டம் போடுவார்கள் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். அப்படி ஆட்டம் போடாமல் இருந்தால் இன்னொரு ஐந்து ஆண்டுகள் கிடைக்கும். இல்லாவிட்டால் அதிமுக தான்.