அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு 70 சதவிகித வெற்றி வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தன.
ஆனால், இன்று காலை முதல் வெளியான முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் முறியடித்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
- விஸ்கோன்சின் மாகாணத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்.
சற்று முன்னர் வெளியான தகவலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 276 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47.2 சதவிகித வாக்குகள் பெற்று 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக