சனி, 14 நவம்பர், 2020

தீபாவளி... மகாவீரர் மறைந்த நாளே தீபங்களை அஞ்சலி செலுத்தி கொண்டாடும் நாள் தீபாவளி!

உலகின் அறிவொளி என்று கருதப்பட்ட மகாவீரர் மறைந்த நாளே தீபங்களை
மகாவீரர்

ஏற்றி அவருக்கு அஞ்சலி செலுத்தி கொண்டாடும் நாள்  தீபாவளி என்றானது 
சமணர்களின் 24 காவது தீர்த்தங்கரர் (இறைத்தூதர்) என்று சமணர்களால் நம்பப்படுகிறார் !
சமணர்களின் தீர்த்தங்கரர் வரிசை  பின்வருமாறு:
1. Rishabha 
2. Ajita 
3. Sambhava 
4. Abhinandana 
5. Sumati 
6. Padmaprabha-------The Jains believe that the Indus Valley 
7. Supaarshva------------Civilization flourished during the times 
8. Chandraprabha----------between the third and the ninth 
9. Pushpadanta------------------- Tirthankaras 
10. Shitalnatha--------- The Aryans arrived into India 
11. Shreyaamsha 
12. Vaasupujya 
13. Vimala 
14. Ananta 
15. Dharma 
16. Shanti 

எனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்கு தேவை என்பதற்காகவே கவுரவ பதவி: துணை வேந்தர் சூரப்பா பேட்டி

kriya-dictionary
எஸ்.ராமகிருஷ்ணன்

hindutamil.in :வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழுமையாகச் சென்றடையும் வகையிலான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு 1992-ல் வெளியானது. பின்னர் 16 ஆண்டுகள் கழித்து, இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கி மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2008-ல் வெளிவந்தது. அடுத்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கியதாக இப்போது மூன்றாவது பதிப்பு வெளியாகியிருக்கிறது.சிறப்பு என்ன?

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!!

madurai incident

nakkeeran: மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற போது உயிரிழந்த வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து இருவரின் உடல்களுக்கும்  தீயணைப்புத்துறை டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு இருவரது உடலும் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் அவரது குடும்ப வழக்கம் முறைப்படி இறுதி  இறுதிச்சடங்கு செய்யப்பட்டு இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. தீபாவளி நாளில் தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தீபாவளி: தயாராகும் அழகிரியின் தனிக்கட்சி ? இனியும் பொறுக்க முடியாதுனு....

தீபாவளி:   தயாராகும் அழகிரியின் தனிக்கட்சி வெடி!

 minnambalam : தீபாவளித் திருநாளை ஒட்டி இன்று (நவம்பர் 14) காலை திமுகவில் அழகிரி ஆதரவாளர்களாக இருந்து இப்போது சைலன்ட் மோடில் இருக்கும் பலருக்கும் அழகிரியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

ஒவ்வொருவரிடமும் ஐந்து நிமிடம், ஏழு நிமிடம், பத்து நிமிடம் என்று பொறுமையாக பேசி தீபாவளி வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார் அழகிரி. பிறகு அவரவர் பகுதியில் திமுக நிலைமை என்ன என்பதையும் விரிவாகவே விசாரித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடலின் போது அழகிரி கூறிய ஒற்றை விஷயம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.   தீவிர அழகிரி ஆதரவாளரும்திருச்சி மாவட்ட அழகிரி பேரவை நிர்வாகியிடம் இதுகுறித்துப் பேசினோம்.   “ஆமாம் சார். அழகிரி அண்ணன் பேசினார். தீபாவளி வாழ்த்து சொன்னாரு. அதைவிட ரொம்ப உற்சாகமா இனிமேதான் எங்களுக்கு தீபாவளி அப்படிங்குற மாதிரி ஒரு தகவலையும் சொன்னாரு.

எங்கள் மருந்து கொரோனா வைரசிற்கு முடிவுகட்டும்- மருந்தினை உருவாக்கிய Pfizer நிறுவனம்

thinakural : Pfizer பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டு வரும் என மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார். 

பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உகுன் சகின் இதனை தெரிவித்துள்ளார். பிபைஜர் பையோன்டக் டெக் நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கியுள்ள மருந்து மூன்றாம் கட்ட சோதனைகளின் போது எங்களின் எதிர்பார்ப்பையும் மீறி செயற்பட்டுள்ளது,கொரோனா வைரசினால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதில் அது 90வீதம் பலனளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளன. இதேவேளை தொடரும் சோதனைகள் குறித்த முழுமையான தரவுகள் வெளியாகாத நிலையில் இந்த மருந்து அறிகுறியற்ற நோயாளிகளை குணப்படுத்தும் திறன் உடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதேவேளை கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றினை இந்த மருந்துமூலம் தடுத்து நிறுத்தமுடியுமா என்றால் எனது பதில் ஆம் என்பதே என பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உகுன் சகின குறிப்பிட்டுள்ளார்.

வடஆப்பிரிக்க அகதிகளின் படகுகள் கடலில் விபத்து 94 பேர் கடலில் மூழ்கி பலி !

thesamnet.co.uk  :வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாம ஜெயிக்கலேன்னா வேற யார் ஜெயிப்பா..? இப்போ ஜெயிக்கலேன்னா வேற எப்போ ஜெயிப்போம்.?

Add caption
Karthikeyan Fastura : · நான் ஒருவேளை தொழில் முனைவோராக இல்லாமல் போயிருந்தால் எனக்கும் சூரரைப்போற்று படம் ரொம்பவும் நாடகத்தன்மை வாய்ந்த, செயற்கையான, அதீத ஒன்றாக தெரிந்திருக்கும். கிண்டல் கூட செய்திருப்பேன். நல்ல வேலையாக நான் அதுபோன்ற சராசரி வட்டத்துக்குள் சிக்காமல் போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் தொழில் முனைவோராக இருக்கிறேன். நான் அந்தப் படத்தின் கதைக்குள் செல்லவில்லை. என் கதையை பகிர்கிறேன்பிறந்தது மதுரை என்றாலும் எட்டாம் வகுப்பு வரை சிங்கம்புணரி என்ற சின்ன டவுனில் தான் பள்ளி வாழ்க்கை. என் தந்தையின் சேர்த்து என் தாத்தாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். என்னையும் சேர்த்து மொத்தம் 13 பேரன்கள், அஞ்சு பேத்திகள். அதில் கல்லூரியை தொட்டது நான் மட்டுமே. சொந்த பந்தங்களையும் சேர்த்தாள் முதன்முதலில் முதுகலை பட்டம் பெற்றவனும் நானே. என் மனைவி ரஞ்சியின் குடும்பத்திலும் அவள் சொந்த பந்தத்திலும் அவள்தான் முதல் தலைமுறை முதுகலை பட்டதாரி.

இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு... விவாகரத்து, மது அருந்துதல். கவுரவக் கொலைகள்..

ரோனக் கொடெசா பிபிசிக்காக, துபையிலிருந்து : ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 200 நாடுகளை சேர்ந்த சுமார் 8.44 மில்லியன் மக்கள் வாழும் ஐக்கிய அரபு அமீரகம், அந்நாட்டினரின் தினசரி வாழ்வை எளிதாக்கும் வகையில், ஒரு சில புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் தெற்காசியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தவர்கள். இதில் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தினர் அல்லாது மற்ற நாடுகளில் இருந்து வந்து அங்கு வாழ்பவர்கள், அவர்களது தனிப்பட்ட சொந்த விஷயங்களில், தங்கள் சொந்த நாட்டில் என்ன சட்டம் உள்ளதோ அதனை பின்பற்றிக் கொள்ளலாம்.

பெண்

உதாரணமாக விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  இஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜக்கிய அரபு அமீரகத்துடனான உறவை மேம்படுத்தியது இஸ்ரேல்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதனால் ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.

வெள்ளி, 13 நவம்பர், 2020

நகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!

Hyderabad Metro Rail to now have 'Ladies Special Coach' in each train | The  News Minute
madrasradicals.com : ஃபெமினா பத்திரிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பெண்களைப் பற்றி அனைத்தும்’(All About Women) என்கிற தலைப்பில் ஆராய்ச்சி தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் முதல் பதிப்பில் ஆயிரக்கணக்கான உழைக்கும் தாய்மார்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது இரண்டாவது பதிப்பு இந்திய நகர்ப்புற இல்லத்தரசிகளின் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம் தரும் விதமாக வெளிவதுள்ளது.
நகர்ப்புற இல்லத்தரசிகள்

மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, லக்னோ, பாட்னா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 8 பெருநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத சிறிய நகரங்களில் 1200-க்கும் மேற்பட்ட நகர்ப்புற இல்லத்தரசிகள் மற்றும் 250 கணவர்களிடம் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் முடிவாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.  ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் 22 முதல் 45 வயதுக்குட்பட்ட கூட்டு மற்றும் தனி குடித்தனமாக வாழ்பவர்கள் ஆவர். மேலும் 70% வீட்டு இல்லத்தரசிகள் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டபடிப்பை முடித்தவர்கள் ஆவர்.

சென்னை சௌகார்பேட்டையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகள் .. தலில் சந்த்.. புஷ்பா பாய்.. கணவர் ஷீத்தல் .. ரூ.5 கோடி + சொத்திலும் பங்குகேட்டு ராஜஸ்தான் ஜெயமாலா...

Hemavandhana  - /tamil.oneindia.com : சென்னை: "ஒரு நோயாளி புருஷனை ஏன் தலையில கட்டி வெச்சீங்க" என்று மாமனாரை கட்டிப்போட்டு விட்டு கேள்வி எழுப்பி உள்ளார் மருமகள் ஜெயமாலா.. 
அதற்குபிறகுதான் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டு தள்ளி உள்ளார்.. சென்னையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்த மருமகள் பற்றிதான் பல பகீர் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது. இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்

வாய்ஸ் இல்லாத நிதிஷுக்கு முதல்வர் பதவியை பாஜக தருவது ஏன்? மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்ட ...

Shyamsundar - tamil.oneindia.com :  டெல்லி: பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை என்றாலும் கூட நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவின் இந்த திட்டத்திற்கு பின் மேற்கு வங்க தேர்தலும் , 2024 லோக்சபா தேர்தலும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். 
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றிபெற்றுள்ளது. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அதிக வெற்றிபெற்று இருந்தாலும் கூட, நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பாஜக அறிவித்துள்ளது.

மோசம் பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களில்தான் வென்று உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும்தான் வென்று இருக்கிறது. 1995க்கு பின் நிதிஷ் குமாரின் கட்சி மிக மோசமாக ஒரு தேர்தலில் செயல்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் பிற ஓடிடி செயலிகள் இனி மத்திய அமைச்சகத்தின் கீழ்: விளைவுகள் என்ன?

தீப்தி பத்தினி, பிபிசி செய்தியாளர் : டிஜிட்டல் செய்தித் தளங்கள், ஆன்லைன் உள்ளடக்க தளங்கள் ஆகியவற்றை இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது. "இந்திய அரசு (பணி ஒதுக்கல்) விதிகள், 1961-ன் கீழ் இணைய தகவல் வழங்குநர்கள் மூலம் அளிக்கப்படும் திரைப்படங்கள், ஒளி, ஒலி நிகழ்ச்சிகள், ஆன்லைன் தளங்களில் வெளியிடப்படும் செய்திகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை கொண்டுவரும் வகையில், அந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை தெரிவிக்கிறது.  

ஆன்லைன் தளங்கள் - அமேசான் பிரைம்
Add caption

என்ன தாக்கம் ஏற்படும்?     ஓ.டி.டி. என்று அழைக்கப்படும் ஆன்லைன் காணொளித் தளங்கள், டிஜிட்டல் செய்தித் தளங்கள் ஆகியவற்றுக்கு இந்த அரசாணையால் எவ்விதமான தாக்கங்கள் ஏற்படும் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அரசின் இந்த முடிவை மேம்போக்காகப் புரிந்துகொள்ள முயன்றால், ஆன்லைன் காணொளித் தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ். பிளேயர், ஆஹா  போன்றவை மற்றும், டிஜிட்டல் செய்தித் தளங்கள் தொடர்பாக ஒரு கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு இது அதிகாரத்தை வழங்கும் என்று தெரிகிறது. 

பிகார் எதிரொலி:காங்கிரஸ் தொகுதிகள்- திமுக பதில்!

பிகார் எதிரொலி:காங்கிரஸ் தொகுதிகள்- திமுக பதில்!
 minnambalam.com : பிகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 க்கு 19 மதிப்பெண்களே பெற்றிருப்பதால், தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கேட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிகார் எதிரொலி: காங்கிரஸுக்கு கடிவாளம் போடும் திமுக என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் எழுதியிருந்தோம். அதில், ‘பிகார் பாடத்தை நாம் அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கற்றுக் கொள்ள வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுக்கக் கூடாது. பிகார் தேர்தலை காரணம் காட்டியே நாம் காங்கிரஸுக்கு 20 முதல் 30 தொகுதிகள் மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேஜஸ்வி யாதவ் மாதிரி நாமும் இலவு காத்த கிளியாக மாற வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ஸ்டாலினிடம் திமுக மாசெக்கள் எச்சரித்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.

சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது

சூரப்பா மீதான புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு

 maalaimalar :என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார். 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவன் இவன் அவள் இவள் வா போ எனக்.....! உடல் உழைப்பு தொழில் செய்தால் மரியாதை கொடுக்ககூடாது என சட்டம் ஏதும் உள்ளதா?

  Subashini Thf
Subashini Thf : இன்று தற்செயலாக ஒரு ஃபேஸ்புக் பதிவு வாசித்தேன். வீட்டில் வேலை செய்யும் பெண்மனியைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது போய் விட்டாள், போனாள், வந்தாள்.. என்ற அடிப்படையில் அந்தப் பதிவு இருந்தது.
எனது தமிழகத்துக்கான பயணங்களில் கூட பல இடங்களில் உடல் உழைப்புத் தொழிலாளர்களை எனது நண்பர்களே கூட அவன் இவன் எனச் சுட்டுவதையும் அவள் இவள் எனக்கூறுவதையும் வா போ எனக் கூறுவதையும் பார்த்திருக்கின்றேன்.
உடல் உழைப்பு தொழில் செய்தால் மரியாதை கொடுக்ககூடாது என ஏதும் சட்டம் உள்ளதா? அவர்கள் ஒரு தொழிலைச் செய்து அதற்கு சம்பளம் பெருகின்றனர் அவ்வளவு தானே? சில வேளைகளில் வீட்டில் வேலை செய்யும் அப்பெண்மணி வயதில் மூத்தவராக இருப்பார். அவரைக் கூட காசு கொடுக்கின்றோம் என்னும் ஒரு காரணத்திற்காக வா.. போ.. நீ.. எனப் பேசுவது எவ்வகையில் சரியாகும்?

புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது – பிரிட்டனிடம் இந்தியா கோரிக்கை

veerakesari :பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என்று இந்தியா பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2000 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்தது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்ற கோரப்பட்டது.     இந்த நிலையிலேயே புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கக்கூடாதென இந்தியா. பிரிட்டிஷ் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் ஜனாதிபதி ஆர் . பிரேமதாஸா ஆகியோரின் படுகொலைகளுக்க புலிகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த செலவு விமானப்பயணம் என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்று!

Poovannan Ganapathy : · அஞ்சு ரூபாய் டாக்டரும் நூறு ரூபாய் விமான பயணமும் சைவ உணவு நல்லது,  இந்துக்கள் பெருந்தன்மையானவர்கள் ,  நேரு நிறைய நல்லவர் ,அரசு படுகொலைகளுக்கு , பெரும்பான்மைவாதத்துக்கு எதிரானவர் என்று பொய்களை உண்மையாக பொதுப்புத்தியில் ஏற்றியது போல ஏற்றப்படும் ஒன்று அஞ்சு ரூபாய் டாக்டர், நூறு ரூபாய் விமானப்பயணம். 

எந்தவொரு சேவைக்கும் ,பொருளுக்கும் ஒரு அடிப்படை விலை உண்டு.அதனைக் குறைவாகக் கொடுத்தால் எங்கோ யாரிடமோ exploitation நடக்கிறது என்று பொருள்.விமான பயணமோ , அறுவை சிகிச்சையோ பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியவை.பல நூறு, ஆயிரம் ஊழியர்கள் தொடர்புடையவை. ஊழியர்களின் ஊதியத்தை வெகுவாக குறைத்து, உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தில் கால்வாசி கொடுத்து , பணி நிரந்தரம் செய்தால் தர வேண்டிய கூடுதல் ஊதியம் ஊதிய உயர்வு,மருத்துவம் , விடுமுறை சார்ந்த சலுகைகளைத் தவிர்க்க , எட்டு மணிநேரத்திற்கு ஊதியம் கொடுத்து விட்டு பதினாறு மணிநேரம் ஊதியம் வாங்க , தொழிற்சங்கம் அமைக்காமல் இருக்கத் தொகுப்பு ஊழியர்களாக வைத்திருந்தால்,பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகளை வெகுவாக குறைத்தால் தான் குறைந்த விலைக்கு அறுவை சிகிச்சையோ , விமான பயணமோ சாத்தியம்.

நிதிஷ் குமார் முதல்வர் பதவி கேட்கவில்லை திடீர் அறிவிப்பு

 dhinamalar :பாட்னா:''முதல்வர் பதவிக்கு, நான் உரிமை கோரவில்லை,'' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூறினார்.

பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், 125 தொகுதிகளில் வென்று, தே.ஜ., கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துள்ளது.இதையடுத்து, பீஹார் முதல்வராக, ஏழாவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நிதிஷ் குமார் கூறியதாவது:பஹார் தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு, மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.             இந்த கூட்டணியே, ஆட்சியமைக்கும். முதல்வர் பதவிக்கு, நான் உரிமை கோரவில்லை. தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தான், முதல்வர் தேர்வு செய்யப்படுவர். பதவியேற்பு விழா பற்றியும், அப்போதுதான் முடிவு செய்யப்படும். தே.ஜ., கூட்டணிக்கு விரோதமாக செயல்பட்ட, லோக் ஜனசக்தி கட்சியின் மீது, பா.ஜ., தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணியில் அந்த கட்சி தொடர்வது பற்றி, பா.ஜ., தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

உதயநிதி போட்டியிடும் தொகுதி... சேப்பாக்கம்?

minnampalam : சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தலுக்குப் பிறகு உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அவர் சென்னை மேயருக்குப் போட்டியிட வேண்டும் என்றெல்லாம் திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிடப் போகிறார் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதாக வந்த தகவல் காரணமாகத்தான் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவுக்குச் சென்றதாகவும் சொல்லப்பட்டது.

உதயநிதி போட்டி தொடர்பாக பிகே ஆலோசனை - ஓகே சொன்ன ஸ்டாலின் - எதிர்க்கும் உதயநிதி என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில், “தனது தாத்தா கலைஞர் போட்டியிட்டு வென்ற சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி நிற்பதற்கான பூர்வாங்க வேலைகளை அவரது தரப்பினர் தொடங்கிவிட்டனர்” என்று சொல்லியிருந்தோம்.

இந்தியாவில் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் தயார்!

minnambalam.com :ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தில் இதுவரை 4 கோடி டோஸ்களை தயாரித்து இருப்பதாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் 4 கோடி டோஸ் தயார்!

உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. அண்மையில், அமெரிக்கா பிஃப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மருந்து 90 சதவிகிதம் வெற்றியைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.   ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் V, 92% பாதுகாப்பு அளிக்கிறது என்று அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்பூட்னிக் V மருந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தால் சோதனை செய்யப்படுகிறது.

என்றுமே ரஜினி சூப்பர் ஸ்டார்தான்

   Savukku ·: அரசியலுக்கே வருவதில்லை என்று தீர்மானமாக அறிவித்து விட்டார் ரஜினி. இல்லை இல்லை, இன்னும் ரஜினி தீர்மானமாக எதுவும் சொல்லவில்லை.   ரசிகர்களின் கருத்தைத்தான் கேட்டிருக்கிறார் என்று சொல்லும் அயோக்கியர்கள், ரஜினியின் பெயரை பயன்படுத்தி சம்பாதிக்க நினைக்கும் கயவர்கள். எந்த உண்மையான ரசிகனும், உடல் நலிவுற்றிருக்கும் இந்த நிலையில் ரஜினி, உயிரை பணயம் வைத்து 2021ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும் என்று சொல்ல மாட்டான்.  சுயநலமிகள் மட்டுமே அப்படி சொல்வார்கள். ரஜினி ஒரு ப்ரைவட்டான நபர்.  திரையில் ஆடிப்பாடி நடிக்கிறாரே தவிர, அவர் தனிமையை விரும்புபவர்.   அப்படிப்பட்ட ரஜினி, தனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது என்பதை வெளியே சொல்ல நினைக்க மாட்டார்.  

பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள் .பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

Image may contain: one or more people and text
Add caption

  Silambu Rajendran - ஆறாம் அறிவு : · இந்த மதம் எங்கே போகிறது பகுதி - 5 

வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள். வழிபாடு என்றால்?  பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள் .பூணூல் வந்த கதை வேடிக்கையானது. புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம். இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது. பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது. (i) கல்லை வழிபடுதல்-Fetish worship(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல் -Idol worship நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன.

தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.

பிகார் போர்ஜரி தேர்தல் படிப்பினை .. திமுக கூட்டணி வாக்கு எண்ணும் மையங்களில் அதிரடிக்கு தயாராக வேண்டும்!

Sadhu Sadhath : · லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின்படி பீகார் மக்களையோ ஓவைசியையோ நாம குற்றமோ கேலி கிண்டலோ செய்ய வேண்டியதில்லை .. பீஜேபீயை வெல்லவே முடியாதா என அவ நம்பிக்கையும் கொள்ள வேண்டியது இல்லை ... முதலில் எண்ண வேண்டியது தபால் ஓட்டுகளை அதன் முடிவுகளை சொல்லிவிட்டுதான் அடுத்து ஓட்டிங் மிசின் ஓட்டுகளை எண்ண வேண்டும் ஆனால் சுமார் 30 தொகுதிகளில் ஈவிஎம் ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியாகதான் தபால் ஓட்டுகளை எண்ணியுள்ளனர்.. கடைசியாக எண்ணிய தபால் ஓட்டுகளிலும் ஒவ்வொரு தொகுதிகளிலும்100, 200, என ஆரம்பித்து 900 ஓட்டுகள் வரையும் செல்லாத ஓட்டு என அறிவித்துள்ளனர் அதனாலேயே சொற்ப்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் 20 சீட்டுகள் வரை தோற்றதாக அறிவித்துள்ளனர் அதிலும் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்க வேண்டிய தொகுதிகள் ...
ஆகவே பீகாரில் பீஜேபீ வென்றிருப்பது பக்கா ஃபோர்ஜரிதான் அதுவும் நூறு இருநூறு என சில்லரை ஓட்டுகளில் தான். தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு சென்ற தேர்தலில்ல எப்படி திமுக தோற்கடிக்கப்பட்டதோ அதே போல முடிவுகளை அறிவித்துவிட்டு நீ போய் கோர்ட்டில் பாத்துக்க என எகத்தாளமாக நடந்துகொண்டுள்ளனர் 
கோர்ட்டை பற்றிதான் நமக்கு தெரியுமே அதன் லட்சணம்தான் டிண்கு சிரிக்கும் அளவுக்கு இருக்கிறதே .. ஆகவே தேர்தல் பொறுப்பாளர்கள் .. பூத் ஏஜெண்ட்டுகள் கவுண்டிங் பூத் ஏஜெண்ட்டுகள் வாழ்வா சாவா என நடந்து கொண்டால் தாராளமாக சர்வ சாதாரணமாக நரேந்திராவை வீழ்த்தி மண்ணை கவ்வ வைக்க முடியும்..

வியாழன், 12 நவம்பர், 2020

மார்கெட்டிங் உளவியல் மாயவலை.. வெகுஜன மார்க்கெட்டிங் தான் இருப்பதிலேயே சிரமமான....

Image may contain: cloud, sky and outdoor

Karthikeyan Fastura : · இருப்பதிலேயே மிகவும் சிரமமான மார்க்கெட்டிங் என்பது மிகப் பெரும்பான்மையான மக்களை சென்று சேர வேண்டிய வெகுஜன மார்க்கெட்டிங் தான். இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அதற்கு மிகப்பெரிய அவசியம் இருந்ததில்லை, காரணம் உலகெங்கும் உள்ள நாடுகளில் பெரும்பான்மையானவை மன்னர் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அன்று பிரச்சாரத்தின் தேவை என்பது ஆட்சியாளர்களுக்கு கிடையாது. பெரும்பான்மையான ஆட்சியாளர்கள் மத நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டு இருந்ததால் மத போதகர்களுக்கும் உள்நாட்டில் பிரச்சாரத்தின் தேவை கிடையாது, ஏனென்றால் மதத்தை பரப்புவதற்கு மன்னரின் உத்தரவே போதுமானதாக இருந்தது .        மன்னர்களின் ஆட்சியில் இருந்து விடுபட விரும்பிய, மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்களுக்கு தான் மாஸ் மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. 

அதற்கு அன்றைய காலத்தில் இருந்த பழமையான உத்தி என்பது புத்தகங்கள் எழுதுவதும், அதை பதிப்பித்து அறிவுசார் கூட்டத்திடம் சென்று சேர்ப்பதுமே ஆகும். ஏனென்றால் அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு பலவாசல்களை திறந்துவிட்டது அறிவியலிலும், அரசியலிலும், மத பரப்புரையிலும். அதற்கு பெரும்பான்மையான தலைவர்கள் பல்கலைக் கழகங்களை பயன்படுத்தினார்கள். கம்யூனிச சித்தாந்தம் இப்படித்தான் பரவியது. 

அருந்ததி ராய் உண்மையில் யார்? ஒரு செலக்டிவ் புத்திஜீவி

அருந்ததி ராய் ஒரு செலக்டிவ் புத்தி ஜீவி  ஒரு செலக்டிவ் இடதுசாரி . மொத்தத்தில் ஒரு செலெக்டிவ் போராளி ..  சில்லறையை சிதறவிட முன்பு கொஞ்சம் ஹோம் வேர்க்  செய்து பாருங்கள் மக்காள் ..  நாட்டின் எந்த விவகாரமானாலும் திராவிட கோட்பாட்டை தாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால் .

இன்னும் சரியாக சொல்லப்போனால் திமுகவை தாக்குவதற்கு ஒரு  போலியான  வாய்ப்பு கிடைக்குமானால் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் பார்ப்பனீய அடிமை மனோபாவம் கொண்டவர்கள்தான் .    அருந்ததி ராய் போன்ற பார்ப்பன ஊடக வெளிச்சம் அளவுக்கு மீறி  உள்ளவர்கள் எல்லோரும் இந்த ரகம்தான் . மீண்டும் மீண்டும் இந்திய இடதுசாரிகளில் மேல்தட்டு இந்திய இடதுசாரி தலைவர்கள் ஊடக மேதாவிகள் இலக்கிய வாதாபிகள் எல்லோருமே பார்ப்பனீயம் இந்தியாவில் காக்கப்படவேண்டும் என்ற உள்ளுணர்வு கொண்டவர்கள்தான் என்பதற்கு அருந்ததி ராயும் ஒரு அக்மார்க் உதாரணம்தான் . 

புதுசேரியில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்" புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடி

Veerakumar  - tamil.oneindia.com : புதுச்சேரி: புதுச்சேரியில் கலைஞர் பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம், துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்" என்ற பெயரில் நவம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று (15-11-2020), காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா", புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் செயலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார். 

தேஜஸ்வி : வெற்றி திருடப்பட்டுள்ளது.. தபால் ஓட்டுகளை மட்டும் திரும்ப எண்ணுங்க.. நாங்க ஜெயிச்சிருவோம்-

Veerakumar  - tamil.oneindia.com :  பாட்னா: பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 
அங்கு வெற்றிக்கு 122 தொகுதிகள் தேவைப்பட்டது. ஆனால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது. அதில் பல தொகுதிகள் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வசம் சென்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 10ஆம் தேதி இரவே, முறைகேடு நடப்பதாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் குற்றம் சாட்டியிருந்தது. மிகக்குறைவாக வாக்கு எண்ணிக்கை உள்ள தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வந்த தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாகவும், முதல்வர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்கு நெருக்கடி சென்றதாகவும் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்திருந்தார்.

கணவன் கொலை - மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது |

minnambalam.com :சென்னை யானைகவுனி பகுதியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளே கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

யானைக்கவுனி பகுதியில் வசித்து வந்தவர் தலில் சந்த் (74). இவர் மனைவி புஷ்பா ராய் (70). இவர்களுக்கு ஷீத்தல் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர்.

தலில் சந்த்தின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் பிரோகி ஜவான் ஆகும். ஷீத்தலுக்கும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஜெயமாலா என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து ஜெயமாலா புனேவுக்கே சென்றுவிட்டார்.

துணை முதல்வர் தூண்டில்: தேஜஸ்வியின் ஆட்சி முயற்சி!

minnambalam :  பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைக் கடந்து 125 இடங்களைப் பெற்றுள்ளது.
துணை முதல்வர் தூண்டில்: தேஜஸ்வியின் ஆட்சி முயற்சி!

ஆனாலும் அந்தக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையே பெற்றிருக்க, பாஜகவோ 74 தொகுதிகளை ஜெயித்துள்ளது. இந்நிலையில் கூட்டணி அரசில் பழைய அணுகுமுறையை பாஜக பின்பற்றுமா என்பதில் சந்தேகப்பட்ட நிதிஷ்குமார், ‘முதல்வர் பதவியை ஏற்க விருப்பம் இல்லை’என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தின் முதல் வெளிப்படாக முன்னாள் பாஜக பொதுச் செயலாளரும், முன்னாள் பிகார் பொறுப்பாளருமான உமாபாரதி, “பிகார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு பாஜக இரண்டாம் இடத்தில் இருந்தது.இப்போது பாஜகதான் பிகாரின் பெரியண்ணன். அதற்காக ஏறி வந்த ஏணியான நிதிஷ்குமாரை நாங்கள் எட்டி உதைக்க மாட்டோம்”என்று

சூரரை போற்று... சினிமாத்தனங்களைத் தாண்டியும் மனதில் நிற்கிறது படம்.

M Gunasekaran : · ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்தும், கண்டும் கடந்தும்போன செய்தி, உணர்ச்சிபூர்வமாக கண்முன் விரிய காணும்போது பல தருணங்களில் சிலிர்த்துப்போனேன். ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், எதிர்கொண்ட சவால்களை கருவாகக் கொண்டு, இத்தனை நேர்த்தியாகவும் ஈர்க்கும்படியும் படமெடுக்க முடியுமா? விமான நிலையத்தையும் விமானங்களையும் ஏர் டெக்கான் கௌன்ர்களையும் ஏக்கத்தோடு பார்த்துப்போன என் இளம்வயது நினைவுகளை கிளறிவிட்டது தந்தை மரணப்படுக்கையில் கிடக்க, சூர்யா பரிதவிக்கும் காட்சிகளின்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சூர்யா மாறனாக வாழ்ந்திருந்திருக்கிறார் முதல் விமான பயணம் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு விமானப் பயணத்திலும் புதிதாக விமானம் ஏறும் பயணிகளை, முதிய தம்பதிகளை காணும்போதெல்லாம் என்னை அறியாமல் முகம் மலரும்.
You are a socialite. I am a socialist!
Democratisation of growth is the social goal of Dravidian movement.
சினிமாத்தனங்களைத் தாண்டியும் மனதில் நிற்கிறது படம்.
வானம் எல்லோருக்கும் வசப்படட்டும்!
சென்சார் இல்லாத ஓடிடியால் சில சில கருவாட்டுக் காட்சிகளும் கறாரான வசனங்களும் தப்பி இருக்கின்றன.Image may contain: 1 person, text

50 பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு.. தலையை துண்டித்து.. ஐ.எஸ் தீவிரவாதிகள்..

Hemavandhana-   tamil.oneindia.com : மாபுடோ, (ஆப்பிரிக்கா): கால்பந்து மைதானத்தில், 50-க்கும் மேற்பட்டோரை இழுத்துவந்து அவர்களின் தலையை அசால்ட்டாக துண்டித்து வீசி விட்டு போயுள்ளனர் ஐஎஸ் பயங்கரவாதிகள்.. 
இப்படி ஒரு வெறிச்செயல் ஆப்பிரிக்க நாட்டில் நடந்துள்ளது! 
தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக்... இந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கபோ டெல்போ மாகாணத்தில் கடந்த 2017-ல் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐஸ். பயங்கர அமைப்பு, அதன் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்போதிருந்தே இங்கு காலூன்ற பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். 
இவர்களுக்கு மத அடிப்படையிலான அரசை நிறுவ வேண்டும் என்பதுதான் நோக்கம்.. அதற்காக அங்குள்ள அரசு படைகளுடன் நேரடியாக சண்டையிட்டு வருகின்றனர்... இந்த சமயத்தில் அப்பாவி பொதுமக்கள் என்றெல்லாம் யாரையுமே பார்ப்பதில்லை. சரமாரியாக கொன்று குவித்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.. குறிப்பாக கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை குறிவைத்தே இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

பாஜகவின் இன்னோர் அணியா ஒவைஸி?

hindutamil.in/ :பிஹார் தேர்தல் முடிவுகளை ஒட்டி எழுந்திருக்கும் விவாதங்களில் கவனிக்கக் கூடிய ஒன்றாக இருப்பது, ‘பாஜகவை எதிர்கொள்ள முஸ்லிம்கள் ஓரணியில் திரள வேண்டாமா; முஸ்லிம் கட்சிகள் தனித்து நின்றால் பாஜகவுக்குத்தானே வசதி!’ 

பிஹாரில் ஒவைஸி தலைமையிலான ‘ஆல் இந்தியா மஜ்லிஸே இத்திகாதுல் முஸ்லிமீன்’ கட்சியும், எஸ்டிபிஐ கட்சியும் போட்டியிட்டதும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட ஓவைஸி கட்சி ஐந்து இடங்களை வென்றிருப்பதும், சில தொகுதிகளில் ராஜத, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளின் ‘மகா கூட்டணி’யின் தோல்விக்கு இது காரணமாக இருந்திருப்பதும் இந்த விவாதத்துக்குக் காரணம் ஆகியிருக்கிறது. 

ஒரு மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நாட்டில், அந்த மதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், நாட்டின் பிரதான கட்சியாகவும் பாஜக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, போட்டியின் ஒருபுறத்தில் பிரம்மாண்டமாக நிற்கும்போது, மறுபுறத்தில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கட்சியையும் ‘மகா கூட்டணி’ இணைத்துக்கொள்ளவில்லை என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டு கொலை.. சென்னை, சவுகார்பேட்டை,...

dinamalar :சென்னை : சென்னையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறு காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்..       சென்னை, சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலித்சந்த், 74. இவரது மனைவி புஷ்பா பாய், 70. இவர்களது மகன் ஷீத்தல், 40. இவர்கள் மூவரும், அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் வசித்தனர். தலித் சந்த்தின் மகள் பிங்கி, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், தினமும் தந்தையை பார்க்க, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு, தந்தைக்கு உணவு கொண்டு வந்தார். அப்போது, வீட்டின் வெளிதாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. தாழ் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, தந்தை, தாய், சகோதரர் ஆகிய மூவரும், ரத்த கரையுடன் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அவரது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்தனர். பின், யானைவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி தேஜஸ்வி முதல்வராக ஆதரவு தர வேண்டும்’’- திக் விஜய் சிங் திடீர் அழைப்பு

.hindutamil.in :  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி பிஹார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.   பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.

முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லை?

 முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லை?

minnampalam : பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய நிலையில் மீண்டும் முதல்வர் நாற்காலியில் நிதிஷ்குமார் அமருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று (நவம்பர் 11) டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த தேர்தல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி இது. புதிய முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்து பணியாற்றுவார்" என்று பேசினார்.   ஆனால், பிகார் அரசியல் வட்டாரங்களிலோ புதிய முதல்வராகப் பதவியேற்பதற்கு நிதிஷ்குமாருக்கு விருப்பமில்லை என்ற தகவல்கள் உலவி வருகின்றன.

“மைனஸ் 70 டிகிரி”யில் பேண வேண்டிய கொரோனா வைரஸ் தடுப்பூசி

thinakkural.lk - கார்த்திகேசு குமாரதாஸன் : அமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add caption
கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் நிகழ்ந்த பெரும் முன்னேற்றகரமான நிகழ்வாக இதனைக் கருத முடியும் என்று தடுப்பு மருந்தை தயாரித்த அமெரிக்காவின் Pfizer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மருத்துவர் அல்பேர்ட் பூர்லா (Albert Bourla) குறிப்பிட்டிருக்கிறார்.   பொதுவாகத் தடுப்பூசி மருந்துகள் சாதாரண குளிரூட்டிகளில் வைத்துப் பேணிப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால் Pfizer – BioNTech கூட்டு முயற்சியில் உருவாகி இருக்கும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறைந்தது மைனஸ் 70 டிகிரி உறை குளிரில் (-70 degrees) இருபத்துநான்கு மணிநேரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்று Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.

கபாலீசுவரர் ..பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை வாடகை, குத்தகையைக்கூடக் கொடுக்காமல் அய்யர்-அய்யங்கார்

Prakash Thangavel : மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர் - அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துகளைக் கொள்ளையிடும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரியது.
வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

துரோகத்திலேயே வளர்ந்த நிதிஷ் திரும்பவும் பாஜகவிற்கு டாட்டா காட்டலாம்?

Narain Rajagopalan : · சிராக் பாஸ்வானின் ஒரே நோக்கம் நிதிஷ் முதல்வராவதை தடுப்பது. ஆகவே எல்.ஜே.பியின் 1 சீட். ஒவாசி என்ன தான் பி டீமாக இருந்தாலும் நேரடியாக பாஜகவை ஆதரிக்க முடியாது. AIMIMன் 5 சீட். ஒரே ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. அவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு தான் தாவுவார்கள். அதனால் அது எந்த பக்கம் வேண்டுமென்றாலும் போகலாம். நீலசங்கி கோஷ்டியான பி.எஸ்.பிக்கும், காங்கிரசுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் அவர்களின் ஒரு சீட் வராது. இப்போது செய்ய வேண்டிய ஒரே வேலை லாலுவோ, சிராக் பாஸ்வானோ ஜித்தன் ராம் மஞ்சிக்கு ஒரு போன் அடிப்பது, பேசுவது. ஜித்தன் ராம் மஞ்சியின் கட்சியும் (4), விகாஷீல் இன்சான் கட்சியும் (4) தான் தே.ஜ.கூவினை 122-னினை தாண்ட வைத்திருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றினை உருவினால் கூட போதும். இதில் விகாஷீல் வராது, மோடி தொண்டரடிப் பொடி கும்பல்.
ஜித்தன் ராம் மஞ்சி இதற்கு முன்பு முதல்வராக இருந்தவர். துணை முதல்வரோ, அதற்கு இணையான பதவியோ தருகிறோம் என்றால் கூட்டணி மாற வாய்ப்பிருக்கிறது. நிதிஷின் கட்சியையே உடைக்கலாம். எல்லோரும் சோர்ந்து போய் தான் இருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் மகாராஷ்ட்ரா மாடல் உருவாகும் சாத்தியங்கள் தெரிகிறது.

ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை நூலில் உள்ள சில கேள்வி பதில்கள்...

Image may contain: text that says 'சிவாலயப் பணிகள் இன்னும் உள்ளனவா? "திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும், வாயிலே வெற்றிலை பாக்கு உடையவரும், சட்டையிட்டுக் கொண்டவரும், போர்த்துக் கொண்டவரும், தலையில் வேட்டி கட்டிக்கொண்டவரும் உட்புகா வண்ணந் தடுத்தல்" ஆறுமுகநாவலர் அவர்களின் சைவ வினா விடை புத்தகம் 2, 318'
 Dhinakaran Chelliah : இலங்கையில் ‘சமயப் பாடம்’ ஆரம்பப் பள்ளியில் இருந்து கட்டாயப் பாடமாக இப்போதும் உள்ளது.இந்து சமயத்திற்கென தனி அமைச்சகம் ‘இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்’ எனும் பெயரில் இயங்கி வருகிறது. இலங்கையில் ஹிந்து சமயத்தவர்கள் ஹிந்து சமயம் பாடத்தில் தேர்ச்சி பெறாமல் உயர் வகுப்புக்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல இயலாது.இது மற்ற சமயங்களுக்கும் பொருந்தும்.
ஹிந்து சமயம் பாட திட்டத்தில் முக்கிய வழிகாட்டி நூல்களாக கருதப்படும் நூல்களில் ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய சைவ வினாவிடை (புத்தகம் 1,2), பாலபாடம் (தொகுப்பு 1-4) போன்ற நூல்கள் முக்கியமானவை.
ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை (புத்தகம் 1 மற்றும் 2) நூலில் உள்ள ஒரு சில கேள்வி பதில்கள்;
சைவ வினா விடை புத்தகம் 1:
76.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
சைவ வினா விடை புத்தகம் 2:
86. வேதத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?
உபநயனம் பெற்றவராகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் முதன் மூன்று வருணத்தார்.

மாநில எல்லைகளை கடந்த மதவெறியும் ஜாதி வெறியும்

A S
ivakumar
: · ஹைதிராபாத் எம்பி ஆன ஓவைஸி எப்படி பீகாரின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து நிற்க முடிகிறது? நிற்பதோடு மட்டுமல்லாமல், எப்படி வெற்றி பெற முடிகிறது? மதம், ஹிந்தி/உருது மொழி, இந்த இரண்டும் தான் சொந்த மாநிலத்தவரை விட இவரை தூக்கிவைத்துக்கொள்ள பீகாரிகளை தூண்டுகிறது. அதே மதத்தின் அடிப்படையில் தான் இங்கே சிலரும் ஓவைஸிக்கு கொடி பிடிக்கின்றனர். அவர்கள் வாதத்தில் எப்படி மூடி மறைக்க நினைத்தாலும் உள்ளிருப்பது மதம் மட்டுமே! ஓவைஸி மட்டுமல்ல, மாயாவதியை எடுத்துக்கொள்ளுங்கள். சொந்த மாநிலத்தில் செல்வாக்கிழந்தாலும், தேர்தல் நடக்கும் எல்லாம் மாநிலங்களிலும் அவர் ஓடிப்போய் நிற்க அவர் சாதி மட்டும் தானா காரணம்?
ஓவைஸியும், மாயாவதியும் தங்களுக்கு சொந்தமில்லாத மாநிலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியும். இவர்களிருவருக்கும் இவர்களுடைய மதம், சாதி மட்டுமல்லாது ஹிந்தி மொழியும் ஒரு இணைப்பாக தொக்கி நிற்கிறது.
இங்கிருக்கும் தேவநாதன் யாதவோ, திருமாவளவனோ பீகாரில் போய் தேர்தலில் நிற்க முடியுமா? பிரச்சாரம் தான் செய்ய முடியுமா?
இங்கே தான் தமிழ்நாட்டின் அரணாக நம் தமிழ் மொழி விளங்குவதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

புதன், 11 நவம்பர், 2020

பீகார் தேர்தல் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது!

Ganesh Babu : · தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட நிதிஷ் குமார் கூட்டணி மிக எளிதாக வெல்லும் என்றுதான் சொல்லப்பட்டது. பிறகு எப்படி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியால் பணபலமும், அதிகார பலமும் மிக்க மோடியின் சங் பரிவாரத்தை தோல்வியின் விளிம்புக்கு கொண்டு போய் நிறுத்தமுடிந்தது? அதற்கு முழுமுதற்காரணம் தேஜஸ்வியின் பிரச்சாரம் என்றால் அது மிகையாகாது. அதில் அப்படி என்ன சிறப்பாக இருந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும். வேறொன்றுமில்லை வலிமையான உண்மைகளை மிக எளிமையாக முன்வைத்தார். அதாவது நாட்டின் பிரதமராக இருந்துக்கொண்டு அந்தப் பதவிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் மோடி திரும்ப திரும்ப காஷ்மீர், ராமர் கோயில் என்று மதவாதத்தை மையமாகக் கொண்டே பிரச்சாரம் செய்தார். ஒரு கொடுந்தொற்றுக்கிடையில் நடக்கும் தேர்தலில் "ஜெய் ஸ்ரீராம் சொல்லும் ராம பக்தர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை" என்று பேசினார். பிரதமரின் யோக்கியதையே இதுதான் என்றால் கீழ்மட்ட சங்கிகளைப் பற்றி கேட்கவே தேவையில்லை.
இப்படி பா.ஜ.கவும் சரி, நிதிஷ் குமாரின் ஜனதா தளமும் சரி ஒன்று வன்மத்தோடு மதவாதம் பேசினார்கள், அல்லது 15ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த லாலுவின் ஆட்சியைப் பற்றி வகைத்தொகையின்றி அவதூறு பேசினார்கள்.

1008 லிட்டர் பாலை வீணாக்கிய சங்கரமடம் (பாலாபிஷேகம்)! உணவை வீணடிப்போரை தண்டிக்க கடும் சட்டம் தேவை

Image may contain: 2 people, people standing, people walking and outdoor Sundar P : · காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் அவதார நட்சத்திரத்தை ஒட்டி நேற்று 1008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பங்கேற்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டார். 

ஐக்கிய நாட்டு சபையின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவில் 75.6% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.150 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், 41.6% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.75 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். இந்த லட்சணாத்தில் 1008 லிட்டர் பால் வீனடிக்கப்பட்டுள்ளது... உணவுப் பொருளை வீணாக்கும் ஆட்களை தண்டிக்க கடும் சட்டம் இயற்றபடவேண்டும்! 

பிகார் தேர்தல் முறைகேட்டு புகார்கள் அதிர்ச்சியளிக்கிறது: ஸ்டாலின்

   minnambalam:  ிகார் தேர்தல் முறைகேட்டு புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக இரு மடங்கு அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அதே சமயம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 76 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆர்ஜேடி வெற்றிபெற்ற பல இடங்களில் முதல்வர் தலையிட்டு ஆளுங்கட்சியினரை வெற்றிபெற வைத்ததாக ஆர்ஜேடி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் பிகார் தேர்தலில் வென்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பிகாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தனிப் பெரும் கட்சியாகப் பிகார் மாநிலத்தில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

அர்னாப் "கோஸ்வாமி" க்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதி மன்றம் மறுப்பு... |  Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews -  Tamilnadu, India & World - politics, cinema ...
tamil.indianexpress.com :  தற்கொலை செய்யத் தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் போக்கை கண்டித்த உச்ச நீதிமன்றம், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் விஷயங்களில் உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள்  போதுமானதாக இல்லை என்றும் கருத்து தெரிவித்தது.   “இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட உயர்நீதிமன்றங்கள், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் விஷயங்களில் போதுமான அளவு செயல்படவில்லை. இது, எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. …”என்று நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.

பிகார்: முதல்வர் நிதிஷ் - தனிப்பெரும் கட்சி ஆர்ஜேடி

பிகார்: முதல்வர் நிதிஷ் -  தனிப்பெரும் கட்சி  ஆர்ஜேடி
minnampalam : பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேநேரம் நிதிஷ்குமார் கட்சியை விட பாஜக சுமார் இரு மடங்கு அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிட்டதால், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூடுபிடித்துள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிட நேற்று (நவம்பர் 10) இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த வகையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மையான 125 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி 137 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி பல இடங்களில் நிதிஷ்குமார் கட்சியை தோல்வி அடையச் செய்தும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தான் வெற்றிபெற்றது.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் : ஆர்.ஜே.டி. - 75, பா.ஜ.க. -74, ஜே.டி.யு. -43, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் - 16, ஏ.ஐ.எம்.ஐ.எம் 5.

dailythanthi.com : பாட்னா ..243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 125 (பா.ஜ.க. -74, ஜே.டி.யு. -43, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 4)

மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 110 (ஆர்.ஜே.டி. - 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் - 16)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 5

லோக் ஜனசக்தி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை : 1

யூதர்களின் உள்ளம் கவர்ந்த கமலா ஹாரிஸ் .. உண்மையில் இவர் யார்? இவரின் கொள்கை என்ன?

இவர் ஒரு இந்திய தமிழ் பெண்ணாக ஒரு ஜமேக்கா கறுப்பு இன பெண்ணாக  ஒரு அமெரிக்க பெண்ணாக எல்லாம் கருதப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் .  

கமலாவை பற்றிய பிம்பம் ஊடங்களால் இப்படித்தான்  வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.    ஆனால் கமலாவை பற்றிய உண்மைகள் கொஞ்சம்  வித்தியாசமானவையாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு கமலா டக்ளஸ்    எக்கோம் என்பவரை (இரண்டாவது கணவர்)  வாழ்க்கை துணையாக்கி கொண்டார் . 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று செனட்டர் ஆனார் . இந்த 2020 ஆம்  ஆண்டு உதவி குடியரசு தலைவர் ஆகியுள்ளார்.

கமலாவின் கணவர் டக்ளஸ் எம்கோப்  ஒரு யூதர் . வழக்கறிஞர் .   அதுவும் சாதாரண வழக்கறிஞர் கிடையாது . பல மில்லியன் டாலர்கள்  சம்பாதிக்கும் சட்ட நிபுணர்..         அவரின் முதல் மனைவி (Kerstin Emhoff ) திரைப்பட ஊடக துறையில் பெரும் வெற்றி பெற்றவர். அவரின் திரைப்படங்களும் கிராமி ,. கேன் போன்ற பல படவிழாக்களில் பரிசு பெற்றவைதான்.  

மாட்ரிக்ஸ் மாயவலை ... இந்திய ஜனநாயகம் குறித்து அவநம்பிக்கை.. Karthikeyan Fastura

K
arthikeyan Fastura
: · பீகார் தேர்தல் முடிவுகளையும், தேர்தல் ஆணையத்தின் மலிவான செயல்பாடுகளும், மிகக்குறைந்த மார்ஜினில் பிஜேபி கூட்டணி வெல்வதை காண்கையில் இந்திய ஜனநாயகம் குறித்து அவநம்பிக்கை எழுவதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒரே அடியாக அப்படி அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்பதே என் கருத்து. மக்களை எப்படி பகடைகாய்களாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை வாக்களார்களாகிய நாம் புரிந்து கொள்வதும், வலதுசாரி அரசியலை தகர்க்க விரும்பும் லிபரல் அரசியல் தலைமைகள் பெருவாரியான மக்களின் மனப்போக்கை புரிந்துகொள்வதும் அவசியம் அது பற்றிய வெகுஜன உளவியல் மார்கெட்டிங் பற்றி ஒரு புத்தகம் எழுதியதை அறிவீர்கள். அதை கிண்டிலில் வெளியிடலாம் என்றிருந்தேன். அச்சு புத்தகமாக பதிப்பிக்கலாம் என்று முயற்சித்து காத்திருந்தேன். இன்று வந்த தேர்தல் முடிவு என் தாமதப்படுத்தலை உடைத்துவிட்டது.
ஆகவே இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒரொரு அத்தியாயமாக பதிவிடுகிறேன். இது தொழில்முனைவோர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், வல்லுனர்களுக்கும் கூட மிகவும் உதவும்.

செவ்வாய், 10 நவம்பர், 2020

பீகார் இன்னொரு ராதாபுரம் .. தேஜஸ்வி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை தோல்வி என்று அறிவிக்கும் தேர்தல் ஆணையம்

  JP Prakash :  · முடிவுகளை மாற்றம் செய்யும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள்.. 2016 தமிழ்நாடு  & 2017 குஜராத் தேர்தலில் பல தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தால் முடிவுகள் தாமதமாகக்கப்பட்டன... 

தேர்தல் நடத்தும் அதிகாரி சட்டப்படி செயல்படாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து அந்த தொகுதிகளில் முடிவுகளை மாற்றினார்கள்... உதாரணம் ராதாபுரம் அறந்தாங்கி பெரம்பூர்... ராதாபுரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக பல வழக்குகள் குஜராத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது... ஐகோர்ட் 2 பாஜக எம்எல்ஏக்களின் தேர்தலை வெற்றிடமாக அறிவித்தது... இப்போது பீகாரில் மீண்டும் இதே நடக்கிறது.. இது ஜனநாயக படுகொலை... பிஜேபி நடத்தும் மெகா மோசடி...   

CBI உரிமத்தை பஞ்சாப் ரத்து செய்தது! 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!

madrasradicals.com : பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது. சி.பி.ஐ அமைப்பினை ஒரு அரசியல் கருவியாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி, தொடர்ந்து பாஜக அல்லாத மாநில அரசுகள் சி.பி.ஐ-க்கான அனுமதியை ரத்து செய்து வருகின்றன. இந்த ரத்து நடவடிக்கைக்குப் பின் பஞ்சாப் மாநிலத்தின் சட்ட எல்லைகளுக்குள் சி.பி.ஐ ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் முதலில் அம்மாநில அரசிடம் உத்தரவு பெறுவது கட்டாயமாகிறது. இந்த நடவடிக்கையினால் சி.பி.ஐ பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே நடத்தி வரும் விசாரணைகள் மற்றும் அம்மாநில நீதிமன்றங்களால் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்குகள் குறித்தான விசாரணைகளுக்கு எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 முஸ்லிம் தொகுதிகளில்.. 14ல் உவைஸியும் 15ல் SDPI யும் தனித்தனியே போட்டியிட்டதால் பிஜேபி வெற்றி

 ஆலஞ்சியார்
: · பீகார்.. உவைசியும் SDPI ம் பாஜகவிற்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள் வாழ்த்துகள்.. 25 முஸ்லிம் தொகுதிகளில்.. 14ல் உவைஸியும் 15ல் SDPI யும் தனித்தனியே போட்டியிட்டதால் பிஜேபி அமோகவெற்றி அதுமட்டுமல்ல.. ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் மிகப்பெரிய வெற்றியை தடுத்துமிருக்கிறார் கோசி சிமாச்சல் பகுதியில் (முஸ்லிம் 45% விழுக்காடு) பாஜக வெற்றியை எளித்தாக்கிய பெருந்தகைகள் .. 200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள்.
500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள். 

1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49
தொகுதிகள். 


2000 வாக்குகள் வித்தியாசத்தில் 86 தொகுதிகள்.
இன்னும் முழு விபரம் கிடைக்கும் போது தெரியும் ..உ.பியை போல இங்கும் உவைசி கூட்டத்தார்  
பாஜகவிற்கு வழிவகுத்து தங்களுக்கு கொடுக்கபட்ட "கடமையை" முடித்திருக்கிறார்கள்..
என்ன செய்யவேண்டும் முஸ்லிம்கள் முதலில் உவைசி போன்றவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவேண்டும் .. வாக்கு பிரிந்தால் பகை வெல்லும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் உவைசி SDPI சேர்ந்தவர்கள் இல்லை எல்லாம் அறிவார்கள் ..அவர்களுக்கு சொகுசுவாழ்க்கை சுகபோகம் சமுதாய நலனெல்லாம் பிறகுதான் .. முதலில் முஸ்லிம் தங்களுக்கான தலைவரை கண்டெத்துங்கள் .. கழிசடைகள் சுயலாபத்திற்காக சொல்பேச்சு கேட்காமல் அரசியல் செய்பவர்கள் ..உண்மையில் இஸ்லாமிய சமுதாய கெட்டதற்கு அவர்களின் அரசியல் புரிதல் இல்லாததே காரணம் .. விடுதலை இந்தியாவில் பலம்பொருந்தியவர்களாக இருந்தவர்கள் இன்று இருக்குமிடம் தெரியாமல் கரைய தொடங்கிவிட்டார்கள் சரியான தலைவனில்லை தங்களின் அரசியல் எதுவென்ற புரிதல் இல்லை தங்களின் எதிரியை வீழ்த்தும் வியூகம் அறிந்திடவில்லை .. காங்கிரஸ் மீது ஏனிந்த கோபம் ..அதனால் தங்களை கருவறுக்க நினைப்போருக்கும் நிரந்தர பகைகொண்டு திரிவோருக்கு மறைமுகமாய் உதவுவது ஏன் ..  

பீகார் வாக்கு எண்ணிக்கை ... Bihar Election Result 2020 LIVE

 

 nakkeeran  :பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. 243 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு, 55 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது.

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை live

.dailythanthi.com: மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. போபால்,230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.  
இதனால்,  மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களைச் சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை live.. Bihar Election Result

tamil.news18.com : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மூன்று கட்டங்களாகளாக நடைபெற்று முடிந்தது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் கிழக்கு சாம்பரான், கயா, ஷிவான், பெகுசாரை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் தலா 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைநகர் பாட்னாவில் உள்ள 14 தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரே மையத்திலும், பிற மாவட்டங்களில் 57 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்காக தலா 2 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை, பீகார் காவல்துறை, வெளிமாவட்ட காவல்துறை ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள், 9 நவம்பர், 2020

செய்தியாளர் படுகொலை: பாதுகாப்பு சட்டம் இயற்ற ஆர்ப்பாட்டம்.. தமிழன் தொலைக்காட்சி ஞானராஜ் ஏசுதாஸ்..

minnambalam : காஞ்சிபுரம் அருகே தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் ஏசுதாஸ். இவரது மகன் மோசஸ். சில ஆண்டுகளாக தமிழன் தொலைக்காட்சியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு பழைய நல்லூர் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாகச் செய்தி சேகரித்துள்ளார். அதோடு அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் கஞ்சா வியாபாரத்தையும், சமூக அவலத்தையும் பற்றி செய்தி வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் அவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவரது தந்தை அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மோசஸ் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டாசு வெடிக்க மொத்தமாக தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!

tamil.samayam.com : நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவர். கொரோனா தொற்று, காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இதற்கிடையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பது பற்றி உரிய பதிலளிக்குமாறு 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது./

இந்நிலையில் டெல்லி மற்றும் இந்தியாவில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருக்கும் மாநிலங்கள் ஆகியவற்றில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது நடப்பு மாதத்தில் சராசரி அளவிற்கும் கீழே காற்றின் தரம் குறைந்த சிறு மற்றும் பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.

BBC: புதுச்சேரி: சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் வல்லுறவு - விரிவான தகவல்கள்

புதுச்சேரியில் கொத்தடிமைகளாக சிறுமிகளை வேலைக்கு வைத்து, அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இந்த 10 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த சில குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள ஒரு பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தொழிலாளர்களின் குழந்தைகளைத் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் வாத்து மேய்க்கும் வேலைக்குக் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தைகள் நலக் குழுமத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது அங்குச் சென்று ஆய்வு செய்ததில் கொத்தடிமைகளாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி ..Pfizer, BioNTech announce Covid-19 vaccine candidate is 90% effective

maalaimalar : அமெரிக்காவின் ஃபிப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி வைரஸ் பாதிப்பில் இருந்து 90 சதவீதம் பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. 
பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

எஸ்.பி.எஸ். தமிழ்: தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளினதும் கழுத்தை கத்தியால் வெட்டிக்கொன்றுவிட்டு தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்று உயிர்தப்பிய இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தர் கூறியுள்ளார். 

லண்டனின் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நடராஜா நித்தியகுமார், தனது நாலு வயது மற்றும் 19 மாதக் குழந்தைகளை கத்தியால் வெட்டி படுகொலை செய்தார். அப்போது குளியலறையிலிருந்த அவரது மனைவி வந்து பார்த்தபோது, பிள்ளைகளும் நித்தியகுமாரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டிருந்தனர். அவசர சிகிச்சைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமாருக்கு எதிராக தற்போது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!

செல்வமுருகன் மரணம்

madrasradicals.com : பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.

இந்த கொலை குறித்த அதிர்ச்சியான விவரங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 

சாலையோர உணவகம் தொடங்கிய விமானி.. மலேசியாவில் பணி இழப்பு

கேப்டன் அஸ்ரின்

 

 சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக : கேப்டன் அஸ்ரின் கொரோனா விவகாரத்தால் மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் வேலையிழப்பு காரணமாக சாலையோர உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார். இதையடுத்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதாக கூறும் அவருக்கு மலேசியர்கள் பலரும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அஸ்ரின். கொரோனா பாதிப்பால் கடும் இழப்பைச் சந்தித்த அந்நிறுவனம் அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக 2,200 ஊழியர்களைப் பணியிலிருந்து விலக்கியது. விமானிகள் முதல் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் வரை பலர் பணியிழந்தனர். அவர்களில் கேப்டன் அஸ்ரினும் ஒருவர். கடந்த சில மாதங்களில் நடந்தவற்றைப் பார்த்த பிறகு நானும் எனது குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்பதை நன்கு அறிந்திருந்தேன். குறிப்பாக பொருளாதார ரீதியில் பாதிப்பு இருக்கும் என்பது தெரிந்ததால் மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கினேன்.

அர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

Vishnupriya R - tamil.oneindia.com மும்பை: ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை தலோஜா சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர். 

கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட நிலையில் சிவசேனா ஆட்சியில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ்- கோஸ்வாமி மோதல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்குள் சென்று அவரை தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியதாகவே சொல்லப்படுகிறது. 

இதையடுத்து அவர் அலிபாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து நீதித் துறை தலைமை மாஜிஸ்திரேட் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

ஃபாஸ்டேக் கட்டாயம்! கார் வைத்திருக்கிறீர்களா?

கார் வைத்திருக்கிறீர்களா?  இனி ஃபாஸ்டேக் கட்டாயம்!

minnampalam :டோல்கேட்டுகளில் செல்லும்போது ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி கட்டணம் வாங்கும் முறையை மாற்றி, ஃபாஸ்டாக் முறை2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.   இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட நான்குசக்கர வாகனங்கள், எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு 2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்படுகிறது.   மத்திய மோட்டார் வாகன விதிகளில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் 2020 நவம்பர் 6-ம் தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 690 (இ) என்ற ஆணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 நவம்பர், 2020

பாகிஸ்தானில் கொண்டாட்டம் ! அமெரிக்க ஜோ பிடென் வெற்றியை பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக....

Velmurugan P - tamil.oneindia.com :வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் மற்றும்  ஹாரிஸ் வெற்றியால் பாகிஸ்தான் கை ஓங்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கடந்த காலத்தில் பிடனின் ஜனநாயக கட்சி பாகிஸ்தான் உடன் மிகவும் நெருக்கம் காட்டியது தான். இதை அமோதிக்கும் வகையில் அதிபர் தேர்தலில பிடனின் வெற்றியை பாகிஸ்தானில் கொண்டாடி மகிழ்கிறார்கள். அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த வரையில் இந்தியா, அமெரிக்கா உறவு பல மடங்கு பலமடைந்தது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா தான் என பலமுறை டிரம்ப் பாராட்டினார். இந்நிலையில் புதிய அதிபராகும் ஜோ பிடன், பதவிக்கு வந்த பின்னர் இந்தியா அமெரிக்கா உறவு எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

திருவிழா போல் மகிழ்ச்சி பாகிஸ்தானின் நெருங்கிய நண்பர் என்று ஜோ பிடனை அந்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆரம்பம் முதலே பாராட்டி வந்துள்ளனர். கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர் என்பதாகவே அவரது கடந்த கால செயல்பாடுகள் இருந்தன. எனவே இவர்கள் இருவரும் அமெரிக்காவின் அதிபர், துணை அதிபராக பதவியேற்றால், பாகிஸ்தானின் கை ஓங்கும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல் டிரம்ப் வெளியேற இருப்பதை, பாகிஸ்தான் அரசும், மக்களும் அங்கு திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிறார்கள்..   

கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு

madrasradicals.com : கேரளா மாநிலத்திற்குள் விசாரணைகள் நடத்துவதற்கு மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு(CBI) கொடுக்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்துள்ளது. இதற்குப் பின் மத்திய புலனாய்வுப் பிரிவு கேரளா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதியை பெறவேண்டியது கட்டாயமாகிறது. கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது. டெல்லி சிறப்பு காவல் சட்டம் என்ற சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வுப் பிரிவு(CBI) செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் காவல்துறை அதிகாரம் அந்தந்த மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் விசாரணை நடத்துவதற்கு அந்தந்த மாநிலங்களின் அனுமதி பெறுவதும், அந்த அனுமதியை தொடர்ச்சியாக புதுப்பிக்கும் நடைமுறையும் கட்டாயமாக உள்ளது.

கமலா ஹாரிஸ் குடும்பம்.. இந்து, யூத மத வழக்கம்: கமலா - டக்ளஸ் திருமணம்

Douglas Emhoff and Kamala Harris
   BBC :தமிழகத்தைத் தாய்வழிப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், தற்போது அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கிறார்.கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உள்கட்சிப் போட்டியில் களமிறங்கிய பிறகுதான், உலக அளவில் இவர் மீது அதிக ஊடக வெளிச்சம் பாயத் தொடங்கியது. அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும், இப்போது ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றி மூலம் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகிறார் கமலா. 

தான் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக்கப்படுவார் என்று பைடன் அறிவித்தபோது, கமலா மீது இவ்வளவு கவனம் விழக் காரணம் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை. அந்த வரலாற்றை மாற்றப் போகும் கமலா ஹாரிஸ் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பாப்போம்.

தமிழகத்திற்குப் பெருமை: கமலா ஹாரிஸுக்கு குவியும் வாழ்த்து!

தமிழகத்திற்குப் பெருமை: கமலா ஹாரிஸுக்கு குவியும் வாழ்த்து!
minnambalam :அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீஸுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக 284 எலக்டரல்களைப் பெற்ற ஜோ பிடென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிடென் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன், அமெரிக்க துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாக வரலாறு படைத்துள்ளார். குடிபெயர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக அமெரிக்க துணை அதிபரானதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என ஜோ பிடேன் தெரிவித்தார். வெற்றிதொடர்பாக பேசிய கமலா ஹாரிஸ், “கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம். அமெரிக்க துணை அதிபராகியுள்ள முதல் பெண் நானாக இருக்கலாம். ஆனால், கடைசி பெண் நான் இல்லை” என்று கூறினார் கமலா ஹாரீஸுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,“இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்திய-அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயம்” என பாராட்டியுள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம்?: ஸ்டாலின் சந்தேகம்!

 அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம்?: ஸ்டாலின் சந்தேகம்!

minnambalam.com :தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னையிலிருந்து பாபநாசம் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல், சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே 300 கோடி ரூபாய் அளவுக்கான பணம் துரைக்கண்ணு தரப்பிடம் இருந்ததாகவும், அதனை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் மரண அறிவிப்பை வெளியிடவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இலங்கையில் இருந்து படகில் வந்த குடும்பம் - கைது செய்து விடிய விடிய விசாரணை

thanthitv.com : இலங்கையில் இருந்து படகில் வந்திறங்கிய குடும்பத்தினரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். . இலங்கையில் இருந்து படகில் வந்திறங்கிய குடும்பத்தினரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில், இலங்கை திரிகோணமலையில் இருந்து முகமது அன்சாரி, சல்மா வேகம் மற்றும் இவர்களது பத்து வயது மகன் ஆகியோர் சவுக்கு ப்ளாட் கடற்கரை பகுதிக்கு படகில் வந்தனர். தகவலறிந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர், கியூ பிரான்ச் போலீசார் அவர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.