சனி, 13 ஜூன், 2020

தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972.. இலங்க- இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 2

ராசரத்தினம் -அமிர்தலிங்கம் - கலைஞர் - மங்கையர்கரசி அமிர்தலிங்கம்
அமரர் . அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்:
தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972.  தமிழ் மக்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குச் சிகரமாக ஒரு புதிய அரசியல் அமைப்பை யாத்து, முந்திய அரசியல் அமைப்பில் ஆங்கில ஆட்சி சிறுபான்மையோருக்கு வழங்கிய பாதுகாப்புக்களையும் பறிக்க இலங்கை அரசு முற்பட்டது. வங்க மக்களுக்குப் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி போரில் இறங்கி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் கொடுத்த சம்பவம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் புது நம்பிக்கையைக் கொடுத்தது.
கிழக்கு வங்காளத்திற்குச் சார்பாக இந்தியா செயல் படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. மேற்கு வங்கம் பொங்கி எழுந்து இந்தியா அரசுக்கு ஏற்படுத்திய நிர்பந்தமே. அதே போல் இலங்கைத் தமிழ் மக்களுக்காக இந்தியா குரல் கொடுக்கச் செய்வதற்குத் தமிழ் நாடு பொங்கி எழ வேண்டும் என்று கண்டோம்.
1972 பிப்ரவரியில் என்னையும் அழைத்துக் கொண்டு தமிழ் நாடு வந்தார்தந்தை செல்வநாயகம். டாக்டர் இரா. ஜனார்த்தனம், மறைந்த திரு ஆ. இராசரத்தினம், திரு மணவைதம்பி ஆகியோர் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் முதல் எல்லா அமைச்சர்களையும் தந்தைப் பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சிலம்புச் செல்வர் ம. பொ. சி, காயிதே மில்லத், அன்று தி.மு.க . பொருளாளராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முதலிய எல்லோரையும் பார்த்து இலங்கையில்தமிழ் மக்களின் வரலாறு, இன்று எழுந்துள்ள பிரச்சனைகள், அவை தீர எமது கோரிக்கைகள் ஆகியவற்றை விளக்கவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். "புதுடெல்லி செல்ல வேண்டும், பாரதப் பிரதமரைப் பார்த்து வங்க தேச மக்களின் உரிமைக்கு உதவியது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் உதவிடக் 'கோர வேண்டும்", என்று தந்தை செல்வா விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்போ, வசதியோ அவருக்கு ஏற்படவில்லை.

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?

writersamas.blogspot.com :இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.
தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விதந்தோதும் எந்தக் கூறுகளையும் கொண்டதல்ல அன்பழகனின் கதை என்பதே இங்கு விசேஷம் ஆகிறது. அன்பழகன் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல; பேச்சு – எழுத்து என்று கருத்துத் தளத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் அல்ல; மக்களுக்காகப் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர் அல்ல; அரசியலில் ஈடுபட்டதால் தன்னுடைய சொத்துகளை இழந்து வீதியில் தன் குடும்பத்தை நிறுத்திச் சென்றவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், மேலோட்ட வர்ணனைகள் மூலமாக ஒரு எதிர்மறைப் பிம்பத்தை அன்பழகன் மீது எளிதாகக் கட்டிவிடலாம். அரசியல் பின்னணியுள்ள ஒரு வசதியான குடும்பத்தின் வாரிசு, அரசியல் பலத்தைத் தன் செல்வத்தையும் கூட்டிக்கொள்ளப் பயன்படுத்தியவர், பிரச்சினை என்று வந்தால் முட்டி மோதிப் பார்க்க ஆட்கள் சகிதம் மல்லுக்கு நிற்பவர், பஞ்சாயத்துகளில் முன்னால் உட்காருபவர் என்றெல்லாம் சொல்லி அவர் வாழ்வைப் பலர் அர்த்தமற்றதாக ஆக்கிவிடலாம்.

ஆர் எஸ் எஸ் இன் ஐ ஏ எஸ் படை .. 600 (RSS) ஐ ஏ எஸ்களின் பயிற்சி முகாம்

Kalai Selvi : ஐஏஎஸ் . , தேர்வில் வெற்றி பெற்ற 600 பேர் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஜூலை 17 ல் டில்லியில் நடத்த முடிவு!
புதுடில்லி , ஜூன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற 600 பேர் கலந்து கொள்ளும் ஆர்.எஸ்எஸ் கூட்டம் வருகிற ஜூலை17 ம் தேதி டில்லியில் நடக்கிறது . ஆர்எஸ்.எஸ்-ன் துணை பொது செயலாளர் கிருஷ்ண கோபால் வருகிற ஜூலை 17 தேதி டில்லியில் கலாம் தேர்வில் பெற்ற 600க்கும் மேற்பட்டவர்களுடனான கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளார் .
இந்த கூட்டத்தில் மராஸ் தேர் விய முதய இடம் பிடித்த தினாதாய் , அதார் ஆமிர்காயரால் அதிகாரிகள் கலந்து கொள்கின்றார் . 
ஆர்.எஸ்.எஸ் சார்பில் எம்கல்ப் என்ற பயிற்சி மையம் டில்லி மற்றும் நாடு முழுவதும் உள்ள 14 இடங்களில் செயல்படுகிறது . கூட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கூறுகையில் , எங்களது மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் . டில்லியில் உள்ள தினாதாபி, அனந்ததாக்கைப் சேர்ந்த ஆமிர் ஆகியோர் எங்களது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர் , எழுத்து தேர்வை முடித்த பிறகு நேர் கானல் தேர்வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி பெற்றனர் என்றார்

மலையகத் தமிழர்களை பாதித்த 1948 ஆண்டு இந்திய பாக்கிஸ்தானியர் குடியுரிமை சட்டம்


1948 குடியுரிமை  சட்டத்தின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட 1949 இந்திய பாகிஸ்தானியர் வதிவிடச் சட்டம் 1949 தேர்தல்கள் திருத்தச் சட்டம் ஆகியன முழு மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருந்தன. பிரஜா உரிமைச் சட்டங்கள் சிங்களவர்கள்ää இலங்கைத் தமிழர்கள் இலங்கை முஸ்லிம்கள் ஆகியோருக்கு பரம்பரை அடிப்படையில் தாமாக குடியுரிமை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. எனினும் மலையக மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் பிறந்த ஒருவர் தான் இலங்கை பிரஜை என்ற தகுதியைப் பெறுவதற்கு தனது தந்தை அல்லது தந்தை வழிப் பாட்டன் இலங்கையில் பிறந்திருப்பதை நிரூபிக்க வேண்டும்.
eluthu.com : 1. மலையகத் தமிழர் ஓர் அறிமுகம்
கி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும்இ ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள். அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால்இ வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்இ கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்.. பீம்சிங்கின் மகன் .. பாரதிராஜாவின் காமிரா கண்கள்


‘பாரதிராஜாவின் கண்கள்’: மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!மின்னம்பலம் : பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று(ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 50 திரைப்படங்களுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கண்ணன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 40 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படம் தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரையான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கண்ணன் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.
கண்ணனை ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றே திரையுலகில் அழைத்து வந்தார்கள். பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனும், முன்னணி எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஜூன் 13) பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

எடப்பாடிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி வழக்கு!

எடப்பாடிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி வழக்கு!மின்னம்பலம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளிலும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. அதில் பெரும்பாலான நிறுவனங்கள் கலந்துகொண்ட போதிலும், இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகம் முழுவதும் 12, 524 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கும் டெண்டரை முதல்வர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரின் விருப்பப்படி அளிக்குமாறு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் சந்தோஷ் பாபு, டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ். சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் தரப்பட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா; 30 பேர் உயிரிழப்பு

தினமலர் :சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687 ஆகவும், பலி எண்ணிக்கை 397 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 42,687 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 17,911 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,91,817 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 25 பேரும், செங்கல்பட்டு, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 18 பேர் அரசு மருத்துவமனையிலும், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி மாலைமலர் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை: தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரேசிலில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா; பாதிப்பில் உலகின் இரண்டாவது நாடு

பிரேசிலில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா; பாதிப்பில் உலகின் இரண்டாவது நாடாக மாறியதுதினத்தந்தி : ஒரே நாளில் 25 ஆயிரம்பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது. பிரேசிலியா. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி உலகில் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறைந்தது 424,000 பேர் உயிரிழந்து உள்ளன
பிரேசிலின் கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று இங்கிலாந்தை முந்தியது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது.  சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகரத்தினம் நாயுடு ..விவசாயம் செய்தே கோடீஸ்வரர் ... அமெரிக்க ஜனாதிபதி வரை எட்டிய சாதனை


பாண்டியன் சுந்தரம் ; முதல் அமைச்சர், அமெரிக்க ஜனாதிபதி வீடு தேடி வந்தவர்..விவசாயம் செய்தே கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு!
இவரிடம் நேர்காணல் செய்த மதுரை எஸ்.பி. செந்தில் குமார் என்ற ஒரு நிருபரின் அனுபவம் இது....
ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்! ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருந்த போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை 9-ஆம் வகுப்புப் பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரைத் தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்?
நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் ரூபாய் பணமும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்சிக்காக அவர் அங்கு போயிருக்கிறார். திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இரண்டு நாட்களாக ஹைதரபாத்தைச் சுற்றித் திரிந்தேன். மூன்றாவது நாளில் அவர் வீட்டில் போய் நின்றேன். வசதியான வீடு!

இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 1 .. (செல்வா ஈட்டிய செல்வம்)

இலங்கை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  அமரர் திரு.  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் :
இலங்கை - இந்திய  ஒப்பந்தம் வந்த வரலாறு 1
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987 ஆக 29-ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவசரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்று இந்தியாவிலும், இலங்கையிலும் அரசாங்கங்கள் மீது குற்றங்காண விரும்பும் பலர் கூறுகின்றனர். இலங்கைத் தமிழ் மக்களைப் பாதிக்கும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுமுன் சம்பந்தப்பட்ட தமிழ் மக்கள் கலந்து
ஆலோசிக்கப்படவில்லை. என்று சிலர் குற்றஞ் சாட்டுகின்றனர். இவற்றில் உண்மையுண்டா என்று புரிந்து கொள்வதற்கு ஒப்பந்தம் வந்த வரலாற்றை அறிவது அவசியமாகும்.
இந்தியாவும், இலங்கையும் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின் இலங்கை அரசு தனது நாட்டுக் குடியுரிமையை வரையறுக்கும் சட்டங்களை ஆக்கமுற்பட்டது. 1948 ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டமே இரு நாடுகளுக்குமிடையில் பிணக்கை
ஏற்படுத்துவதாக அமைந்தது. அச்சட்டத்தினால் இந்திய வம்சாவழியினரான மலைநாட்டுத் தமிழ்த்தொழிலாளர் பத்து லட்சம் பேரும் நாடற்றவர் ஆக்கப்பட்டனர். இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் சந்தேகப் பிரஜைகளாக்கப்பட்டனர். குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளரின் நிலை பற்றி இரு நாட்டு அரசுகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி கண்டது. பாரதப்பிரதமர் பண்டித நேருவின் சம்மதத்தைப் பெறாமலே இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் 1948 டிசம்பரில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னையை விட்டு வெளியேறும் மக்கள் ! தடுத்து நிறுத்தும் போலீஸ்!!

RebelRavi : பதற்றத்தில் சென்னையைவிட்டு வெளியேறும் மக்கள் !
தடுத்து நிறுத்தும் போலீஸ்!!
சென்னை: சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்டுகிறது. முறையான அனுமதி சீட்டு உள்ள இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்டுகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனுர் சுங்கசாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த காரணத்தினால் சென்னையில் இருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் மக்கள் குடும்பத்துடன் தென்மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி சாலையில் அதிகமாக பயணிக்கின்றனர்.

வெள்ளி, 12 ஜூன், 2020

பார்ப்பான் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம்...

Dhinakaran Chelliah : ஜாதி-வர்ணம்-குலம் என்பது பிறப்பினால் இன்றுவரை தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டும், சுமத்தப்பட்டும்
வரப்படுவது.ஆனால்,வர்ணம் என்பது பிறப்பினால் அல்ல,அது அவர்களது செயல்களாலும் குணத்தாலும் பெறப்படுவது என இந்து வேத வைதீக வர்ணாஸ்ரம தர்மத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் கூறி வருகிறார்கள். இதை அவர்கள் நியாயப்படுத்த துணைக்கு அழைப்பது கீதையில் உள்ள ஒரு ஸ்லோகத்தை தான்.
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்
குண-கர்ம-விபாகஷ:
(பகவத் கீதை 4:13)
இத்தோடு நிறுத்தாமல், புராணங்களில் உள்ள ஒரு சில பாத்திரங்களின் பெயர்களைக் கூறி, இவர்கள் இந்தக் குலத்தில் பிறந்து செயல்களால் உயர் குலத்திற்கு மாறினர் என்பர். இது முற்றிலும்  பொய் என்பதை முந்தைய பதிவு ஒன்றில், ஶ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய ‘தர்ம விமர்சனம்’எனும் நூல் சொல்லும் விளக்கத்தை எழுதியிருந்தேன்.

ஜெ.அன்பழகன் .. அரிதாகிக் கொண்டிருக்கும் உட்கட்சி ஜனநாயகத்திற்கான பேரிழப்பாகவே..

சாவித்திரி கண்ணன் : எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காக நானும் எழுதுவதா?
அதிலும் முற்றிலும்,பேசியிராத,பழகாத ஒருவரை பற்றி ஏன் எழுத வேண்டும்?
என்ற கேள்விகளை எனக்குள் கேட்டுப் பார்த்துக் கொண்ட பிறகு தான் எழுத துணிந்தேன்.
தி.மு.கவில் அறிவுபூர்வமாகவும்,கொள்கை தளத்திலும் பேசக் கூடிய விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் எனக்கு பழக்கமில்லை.
சமீபத்தில் இறந்த அன்பழகனிடம் எனக்கு பழக்கமில்லை என்றாலும் அவர் நடவடிக்கைகள், பேச்சுகள்,செயல்பாடுகள் ஆகியவை குறித்த செய்திகள் அவ்வப்போது என் கவனத்தை ஈர்த்தன.
கட்சித் தலைமையை நிழல் போலத் தொடர்வது..,
தலைமைக்கு கூழைக் கும்பிடு போடுவது...,
மாற்றுக் கருத்தை மனதிற்குள் மறைத்து, தலைமைக்கு தலையாட்டுவது..
ஆகிய இழி குணங்களை அறவே தவிர்த்தவராக அவர் இருந்தார்.
இயல்பிலேயே அவரிடம் ஒரு அசாத்தியமான தன்நம்பிக்கையும்,துணிச்சலும் இருந்தன. அது கடினமான,சவாலான பணிகளை கையிலெடுத்து செய்யக் கூடிய களப் பணியாளரிடம் மட்டுமே காண முடிந்த அருங்குணங்களாகும்.

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல

இடஒதுக்கீடு, அடிப்படை உரிமையல்ல
தினமலர் : மருத்துவப் படிப்புகளில், தமிழகத்தில் உள்ள, 'சீட்'களில், 50 சதவீதத்தை, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யக் கோரும் வழக்கில், 'இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .
மருத்துவப் படிப்புகளுக்காக, 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை நடத்தாமல் இருப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள்,
பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வருகின்றன. இருப்பினும், 'நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, உச்ச நீதிமன்றம் உறுதிபட கூறியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கமலஹாசன் திமுகவிடம் 20 தொகுதிகள் கேட்டார் ?.. 2021 இல் கொங்கு பகுதியில் ..

வெப்துனியா :ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கனவில் கலந்த 2017 ஆம் ஆண்டு கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை
தொடங்கினார் ஆனால் அவரால் 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை என்பது மட்டுமன்றி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தார் .
இந்த நிலையில் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி கட்சியை வளர்க்கலாம் என்ற எண்ணமும் நிறைவேறாது போல் தெரிகிறது.
தனது தயாரிப்பில் நடிக்க கூட ரஜினி தயங்கி வருவதால் கட்சியுடன் எப்படி கூட்டணி சேருவார் என்று முடிவு செய்த கமல்ஹாசன் தற்போது திமுக பக்கம் சாய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 ;இதற்கு அச்சாரமாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் காலமான போது முக ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில் பேசிய கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக சில கருத்தை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா வைரஸ் .. சில இரத்த வைகைகள் மீது பாரபட்சம் காட்டுகிறது?

இந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரசால் ஆபத்து அதிகம்
 மாலைமலர் : வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் குறைவான அறிகுறி உள்ளது? சிலர் ஏன் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்? இதற்கு விடை அந்த நபரின் ரத்த வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு நபர் வைரசால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக் வகை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற உண்மையை சமீபத்திய ஆய்வுகள் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன. 23andMe என்ற மரபணு-சோதனை நிறுவனம் சமீபத்தில், கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட பின்னணி .. 236 கொரோனா இறப்புக்கள் மர்மம்

tamil.oneindia.com -veerakumaran : சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் வந்தார் ராதாகிருஷ்ணன்... Beela Rajesh திடீர் பணியிடமாற்றம் கொரோனா பரவல் மட்டுமின்றி, இந்தப் பணியிட மாற்றத்தின் பின்னணியில் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
கண்டிப்பாக, கொரோனா பரவல் என்பது ஒரு முக்கியமான காரணம்தான். ஏனெனில் இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டது. அதிலும் சுமார் 80 சதவீதம் அளவுக்கு தலைநகர் சென்னையில் பாதிப்பு நிலவி வருவது அரசுக்கு மிகப் பெரும் தர்மசங்கடமாக மாறியுள்ளது.

சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் .. மீண்டும் ஜே ராதாக்கிருஷ்ணன் நியமனம்

RADHAKRISHNANநக்கீரன் : தமிழகத்தில் நேற்றுவரை சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிகவரித் துறை செயலராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  அதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளராக  ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது, சென்னை தலைமை செயலகத்தில் ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே 2012 -2019 ம் ஆண்டுகளில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக டாக்டர் கண்டுபிடிப்பைப் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு ( கொரோனா மாத்திரை)

‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்...
மின்னம்பலம : கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் கண்டுபிடித்த இரண்டு ரூபாய்க்கான கொரோனா மருந்து குறித்து விரைவாகப் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால், அந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அமெரிக்க இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிபோனால் ... என்ன நடக்கும்?

கிளிமூக்கு அரக்கன் : அமெரிக்க வாழ் வைதீகர்களுக்கு வேலை போகிறதாமே நாம் மகிழ்ச்சியடையலாமா?
எவ்வளவுதான் அவர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக நம்மை சுரண்டியிருந்தாலும் அவர்களை அழித்துவிட்டு நாம் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. அடுத்து அவர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பினால் இங்கு தனியார் நிறுவனங்களில் வைஸ் பிரசிடன்ட், சீனீயர் வைஸ் பிரசிடெனட் என்று அவர்களுடயை அத்திம்பேர்கள் உடனே வேலை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள்.
உங்களது பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்று வேலையில் இருந்து தூக்கிவிட்டு அவர்களை அந்த இடத்தில் கொண்டுவருவார்கள். நன்றாக கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு போனவருடமே ரேட்டிங் குறைத்து போட்டிருப்பார்கள்.
ஒரு காலத்தில் பள்ளி தலைமையாசிரியர்களில் இருந்து மின்சார வாரிய பொறியாளர் வரை வைதீகர்கள் மட்டுமே பெரும்பாலும் இருந்தார்கள்.

சமுக நீதி காவலர் லாலு பிரசாத் யாதவ் 73 வது பிறந்த நாள் கொண்டாட்டம்


lalu prasad yadav 73 rd birthday celebrations without social distancingநக்கீரன் : பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் 73 ஆவது பிறந்த தினத்தை அவரது கட்சித் தொண்டர்கள் இன்று கொண்டாடிய நிலையில், இந்தக் கொண்டாட்டங்களில் பல இடங்களில் சமூக இடைவெளி நடைமுறைகள் பின் பற்றப்படவில்லை   என சர்ச்சை எழுந்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் 73 ஆவது பிறந்தநாளை அவரது கட்சித் தொண்டர்கள் இன்று விமரிசையாகக் கொண்டாடினர்.
அதேபோல தேஜ் பிரதாப் யாதவ் தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் பிறந்தநாளில் பாட்னாவில் உள்ள ஒரு கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டு சிறப்பு வழிபாடுகளைச் செய்தார். இந்த பூஜை நடைபெற்றபோது சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனச் சர்ச்சை எழுந்த நிலையில், இதேபோல மாநிலத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அன்னதான நிகழ்வுகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது தற்போது கடுமையான விமர்சனங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது

கலைஞர் செதுக்கிய நவீன தமிழ்நாடு .. ஒரே பார்வையில்

Rebel Ravi : கலைஞரை பேரழிவு சக்தியாக பொதுமக்களுக்கு காட்ட முயன்ற கூட்டம் இன்றும் ஓய்ந்தபாடில்லை. உண்மையில் அந்த கூட்டத்தின் ஓயாத இரைச்சல்தான் எங்களைப்போன்ற இளம்தலைமுறைக்கு கலைஞர் என்ன செய்தார் என அறிய வேண்டிய ஆர்வத்தை தூண்டியது.
கலைஞர் தன் இறுதி நாட்களை படுக்கையில் கழித்து கொண்டிருந்தபோது, பாசிசம் மிக வேகமாக பாய்ச்சப்பட்டு கொண்டிருந்த அந்த சமயம்தான் புதிதாக பெரும் இளைஞர் கூட்டத்துக்கு கலைஞரின் ஆளுமையை, அவசியத்தை, தேவையை உணர்த்தியது. அந்த உணர்த்துதல் எப்படி இருந்தது என்பதற்கு கலைஞர் மறைவின் போது மெரினாவில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களே சாட்சி.
சூத்திரன் படிக்கவே கூடாது, சூத்திரன் தெருவுக்குள் கூட பஞ்சமன் நுழைந்து விடக்கூடாது, பிராமணன் வீட்டு பெண்ணாக இருந்தாலும் அவள் இழி பிறவி என்ற மனுவின் கோட்பாடுகளின் அடிப்படையை 50 ஆண்டுகளில் சட்டப்பூர்வமாய் தகர்த்தவர் கலைஞர்.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் சயான், மனோஜ் ஜாமீன் மனு! -நீதிமன்றம் விதித்த உத்தரவு!


kodanadu case... highcourt
நக்கீரன் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ல் காவலாளியைக் கொலை செய்து கொள்ளையடித்ததாக சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பரிசோதனை செய்தால் 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி

பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சிதினத்தந்தி : பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்? என்பது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்து உள்ளார். சென்னை சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்பதற்கு  பயத்தை உண்டாக்கும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்,  இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டியில்.கூறி இருப்பதாவது:சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல.

அன்னை இந்திரா காந்தி, மாநிலங்களவையில் 16-08-1983-ல் ஈழ விவகாரம் பற்றி ஆற்றிய உரை

அன்னைஇந்திரா காந்தி   - அமரர் அ.அமிர்தலிங்கம்
அன்னை இந்திரா ஆற்றிய உரை துணை தலைவர் அவர்களே! நான்
பாராளுமன்றத்தில் இறுதியாகப் பேசிய பின், இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத தமிழ் மக்களின் பிரதான அரசியற் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன திரு. அ அமிர்தலிங்கம் யாழ்ப் பாணத்திலிருந்து டெல்லி வந்தார். அவர் என்னைச் சந்தித்தார். வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சருடனும், ஏனைய அமைச்சர்கள் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும் பேசினார்.
 இலங்கையில் சிறுபான்மைச் சமூகம் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டதைப் பற்றி நெஞ்சைத் தொடும் விவரங்களைத் தந்திருக்கிறார். இங்கு பேசிய உறுப்பினர்கள் போலவே நான் தனிப்பட்ட முறையிலும், எனது அரசாங்கமும் எனது கட்சியும் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற இனக்கொலை, துன்பம், அந்தி ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். ஆனால் எமது உணர்ச்சி எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அரசாங்கம் கூடிய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டி இருக்கின்றது. ஏனெனில் நாம் விருப்பமின்றியோ தயக்கமாகவோ, இருப்பதால் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் எமது சொற்கள், எமது செயல்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்குமா இன்றேல் தீமை பயக்குமா என்று யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

வியாழன், 11 ஜூன், 2020

பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர்?

Reginold Rgi : விடுதலைப் புலிகள் அமைப்பின் பல வரலாற்று
வீரச்சமர்களுக்கும் சரித்திர வெற்றிகளுக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது
வரலாற்றின் கதாநாயகர்கள் கிழக்குப் போராளகளே !
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் கிழக்குப் பொராளிகளே!
சரித்தர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை தேடிந்த பெருமை கிழக்குப் போராளிகளையே சேரும் !
புலிகள் அமைப்பு வலுவான ஒரு அமைப்பாக இருப்பதற்கு தூண்களாக
இருந்தவர்கள் கிழக்குப் போராளிகளே!
கிழக்குப் போராளிகள் வீர வரலாறு படைத்த சரித்திரங்களை
எழுதுவதென்றால் எழுதிக் கொண்டே போகலாம் வரலாற்று வெற்றிகளைப் படைத்த கிழக்கு மண் ஈன்றெடுத்த போராளிகளின் வரலாறுகள் சாதனைகள் மறைக்கப்படுவது ஒரு புறமிருக்க தமிழீழமே எமது மூச்சு என்று தமது சொந்தங்கள் பந்தங்கள் சொத்து சுகங்களை இழந்து போராடப் புறப்பட்ட கிழக்குப் பொராளிகளை வன்னிப் புலிகள் கொன்றொழித்த வரலாறுகளும் இருக்கின்றன. அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள்“அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.
1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

வெளியில் செல்வதை தவிருங்கள் .. தமிழர் மரபு அறக்கட்டளையின் முக்கிய ஆலோசனைகள்

Subashini Thf  : தமிழகத்தில் தற்சமயம் கொரோனா தொற்று என்பது மிகத்
தீவிரமாக பரவி வருவதாகவே செய்தி ஊடகங்கள் வழி அறிகிறேன்.
தமிழக மக்கள் ஒரு விஷயத்தை மிகக் கவனமாக மனதில் பதிய வைக்க வேண்டும். கட்டுக்கோப்புடன்  இக்காலகட்டத்தில் இயங்க வேண்டியது மிக மிக அவசியம். நமது உணவுப் பழக்கம் மிகச் சிறப்பானது என்று மனதில் நினைத்துக்கொண்டு பெருமை பேசிக்கொண்டு அடிப்படை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தாமல் ஏனோ தானோ என்று இருந்து விடும் பழக்கத்தை அடியோடு விட்டு விட வேண்டியது இக்காலகட்டத்தில் மிக மிக அவசியம்.
ஐரோப்பாவில் மார்ச் மாதத்தில் அரசு ஏற்படுத்திய அனைத்து கடுமையான செயல்பாடுகளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் மிகத் தீவிரமாகக் கடைபிடித்ததால் தான் இன்றைக்கு ஐரோப்பாவில் இறப்பு விகிதம் மிகக் குறைந்து வந்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் கூட வேலைக்குச் செல்வது தவிர்த்து வேறு எந்தவிதமான வெளிவிவகார விஷயங்களுக்கும் பொதுமக்கள் வெளியே செல்லாமல் இருப்பது மட்டுமே சிறப்பு.

திருவோடு மரம் - 2 . Calabash . இருமல் தொட்டு கான்சர் வரைக்கும் சர்வ ரோக நிவாரணியாக

Farm to Table -Rubasangary Veerasingam Gnanasangary :
திருவோடு மரம் - 2 Calabash Tree -  (சிங்களத்தில் Rum Gasa)
Calabash என்பது உண்மையில் சுரக்காய் ஆகும். Qar`ah yābisah (காய்ந்த காய்) என்னும் அரபு சொல்லில் இருந்தோ அல்லது karbuz (water melon - தர்பூசணி) என்னும் பாரசீக சொல்லில் இருந்தோ "Calabash" என்னும் சொல் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஸ்பானிய மொழியில் சுரக்காயை "calabaza de botella" என்றே அழைக்கப்படுகிறது. Botella என்பது போத்தல்தான். லத்தீன் சொல் ஒன்றில் இருந்து மருவி பிரெஞ்சுக்கு வந்து பின்னர் ஆங்கிலத்தில் Bottle ஆகி தமிழில் போத்தல் ஆகியது. அமெரிக்க கண்டங்களில் புதிதாக கண்ட பூசணிக்காயையும் இந்த திருவோடு மரத்தையும் அதே பெயர் கொண்டே அழைத்தனர். பூசணியை "Calabaza" என்றும் இந்த மரத்தை árbol de calabaza (மர பூசணி) என்றும் அழைத்தனர்.
(எது உண்மையான பூசணி என்பதில் தமிழிலும் குழப்பம் உண்டு, அதை வேறு ஒரு பதிவில் பார்க்களாம்)

ஊர்களின் பெயர்கள் மாற்றம் .. பல தவறுகள் .. வேலூர் இனி வீலூர் ?

தினகரன் :சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், தமிழ்
உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றியதில் தவறு இருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள், தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் அமைப்பதற்காக உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.  உதாரணமாக, அம்பட்டூர் என ஆங்கிலத்தில் இருப்பது அம்பத்தூர் என்றே இனி ஆங்கிலத்தில் எழுதுவது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஊர் பெயர்கள் குறித்த கலெக்டர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசனைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவிற்கிணங்க முதல் கட்டமாக தமிழ், ஆங்கில உச்சரிப்புகளில் முற்றிலுமாக வேறுபாடுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.

இந்திய மதசுதந்திரம் .அமெரிக்க கடும் விமர்சனம் ..அமெரிக்க உறுப்பினர்களுக்கு இந்திய விசா மறுப்பு

India denies visas to US panel on religious freedom.  aljazeera.com
 tamil.indianexpress.com :இந்தியாவின் மத சுதந்திரம் மீது விமர்சனம்; அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை குழுக்களுகு விசா மறுப்பு
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து கண்டனம் செய்த அமெரிக்க காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும் அரசு சாரா ஆலோசனைக் குழுக்களுக்கு மத்திய அரசு விசா மறுத்துள்ளது. க்...வெளிவிவகாரத்துறை...
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து கண்டனம் செய்த அமெரிக்க காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும் அரசு சாரா ஆலோசனைக் குழுக்களுக்கு மத்திய அரசு விசா மறுத்துள்ளது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 1ம் தேதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பை எழுப்பினார்.
ஏப்ரல் மாதத்தில், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அமெரிக்க நிர்வாகத்திற்கு இந்தியாவை “குறிப்பிட்ட கவலை உள்ள நாடு” என்று நியமிக்க பரிந்துரைத்தது. 2004ம் ஆண்டுக்குப் பிறகு இப்படி முதல் தடவையாக பரிந்துரை செய்தது. 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இதேபோல பரிந்துரை வந்தபோது யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் இதே கோரிக்கையை முன்வைத்தது. யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-இன் வருடாந்திர அறிக்கை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை 2 முறை குறிப்பிட்டுள்ளது. ஒருமுறை அவர் குடியேறியவர்களை ஒழிக்க “கரையான்கள்” என்று குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தது.

கொரோனா... சித்த மருத்துவத்தில் குணமாகிறது? புழல் சிறை கைதிகள் குணமானார்கள் ?

சித்தா சிகிச்சை,புழல் கைதிகள், மீண்டனர்தினமலர் : சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீதி அடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தனித்த சித்த மருத்துவthத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்னை புழல் சிறையில் 25 கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சித்தா சிகிச்சையில் ஒரு வாரத்தில் 23 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள இருவரும் தொற்றின் தன்மை குறைந்து குணமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சில மாவட்டங்களில் குறைந்தாலும் தலைநகரான சென்னை அதையொட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.மாநிலம் முழுவதும் இதுவரை 36 ஆயிரத்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking news மருத்துவ படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு -உயர்நீதிமன்றத்தில் திமுக..

கலைமோகன் - நக்கீரன் :முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் முறையிடக்கோரி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கக்கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது

இலங்கை தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி .. தேர்தல் ஆணைய குழு அறிவிப்பு

இலங்கை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது முறை தேதி அறிவிப்பு
BBC :   இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது.
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக ரத்ததான தேர்தல்
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது.
வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதம் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

சென்னையில் செவிலியர்கள் திடீர்ப் போராட்டம் .. பணிசுமை ஊதிய உயர்வு கோரிக்கை

கொரோனா: சென்னையில் செவிலியர்கள் திடீர்ப் போராட்டம்!மின்னம்பலம் : பணிச்சுமைக்கேற்ற ஊதியம் வழங்கக்கோரி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியர்கள் நேற்று (ஜூன் 10) திடீர்ப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,900 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் எனப் பலர் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால்
தங்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள், பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று திடீர்ப் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின்போது அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கோயில்களை திறக்குமாறு இந்து முன்னணி ஒற்றை காலில் போராட்டம்

ramanathapuram-hindu-munnani-protest-to-open-up-templeshindutamil.in/ :ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயம் முன்பு ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர். படம்: எல்.பாலச்சந்தர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் 14 இடங்களில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆலயங்களை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தோப்புக்கரண போராட்டங்களை நடத்தினர்.

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று: 23 பேர் உயிரிழப்பு - 1372 பேர் குணமாகினர்

 மாலைமலர் :தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 16,829 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இதுவரை 6,55,675 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
15,456 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மொத்தம் 6,25,312 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அன்பு கோச்சுக்கப் போறான். அவன் கூப்ட்டான்னா அவன் நிகழ்ச்சிக்கு முதல்ல போயிரு

டான் அசோக் :கலைஞர் பிறந்தநாளின்போது கனிமொழி எம்.பி ஒரு பதிவு எழுதியிருந்தார். ஊரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் நேராக கலைஞர் அறைக்கு வந்து, “என்ன கண்டுக்க மாட்டேங்குற...,” என்றாராம். சுற்றி நின்றவர்களுக்கெல்லாம் பதற்றம் தொற்றி இருக்கிறது. கலைஞர், “உங்க ஊர்ல கூட்டத்துக்கு வந்தேன். உன்ன தேடுனேன். காணோமே.. எங்க போயிருந்த,” என்றாராம். இவர், “ஒரு வேலையா வெளியூர் போயிட்டேன். அதான் உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன். நல்லாருக்கியா?” என சாதாரணமாக அந்த உரையாடல் தொடர்ந்திருக்கிறது. அந்தப் பெரியவர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞரைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண திமுக தொண்டராம்.
இன்று ஜெ.அன்பழகன் மறைவுக்கு உதயநிதி ஒரு அஞ்சலிக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தலைவர் ஸ்டாலினுக்கும் ஜெ.அன்பழகனுக்குமான உறவை, அதையொட்டிய சம்பவங்களை எழுதியிருக்கிறார். எது என்றாலும் பூசிமெழுகாமல் தலைவர் ஸ்டாலினிடம் நேருக்கு நேராக ஜெ.அன்பழகன் சொல்லிவிடுவாராம். கோபம் என்றாலும் எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்திவிடுவாராம். தலைவர் ஸ்டாலினும், “அன்பு கோச்சுக்கப் போறான். அவன் கூப்ட்டான்னா அவன் நிகழ்ச்சிக்கு முதல்ல போயிரு,” என உதயநிதியிடம் சொல்வாராம்.

ஜெ. அன்பழகனின் இறுதி பேட்டி..

Karthikeyan Fastura : கொரானா வைரஸ் உலகம் முழுக்கவே மக்களுக்காக நின்ற சமூகதலைவர்களை கலைஞர்களை எழுத்தாளர்களை, மருத்துவர்களை காவு வாங்குகிறது. நமக்கும் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தும் மக்களின் நலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அரசுஅதிகாரிகள் என்று போராடும் அனைவரும் பாதிக்கப்பட்டே வருகிறார்கள்.
மறைந்த பத்ருசயிக்
ஆனால் சாதி, மத, இனவெறி கொண்ட பாசிசவாதிகள், அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டுக்குள் அடைந்துகொண்டார்கள். மக்கள் ரோட்டில் பல ஆயிரம் கிமீ நடந்தாலும் கவலையில்லை, வேலையில்லாமல் பசியால் பட்டினியால் அவதிப்பட்டாலும் தானியகிடங்கில் கொட்டிக்கிடக்கும் தானியத்தை கொடுக்க வேண்டும் என்ற அறிவற்று அரசாங்கம் லாக்டவுன் அறிவித்து அடித்தட்டு மக்களை நிர்கதியாய் விட்டார்கள். 
; இந்தியாவில் எதிர்கட்சிகளே அதிகம் உழைத்தார்கள். மக்களுக்காக தெருவில் நின்றார்கள். உதவினார்கள். போராடினார்கள். குரல் எழுப்பினார்கள். அதன் எதிரொலியாக அவர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டார்கள். இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகளில் மட்டும் தான் கொரோனாவில் மக்களுக்காக நின்றதால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. அகமதாபாத் முனிசிபாலிட்டி எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசை சேர்ந்த பத்ருத்சயீக், தெற்கில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் .

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்தினத்தந்தி  :அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை மோசம் அடைந்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், இப்போது கொரோனா பரவலில் 75 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் 10 நாடுகளில் இருந்துதான் வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.
கடந்த 10 நாட்களில், 9 நாட்கள் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது; ஒரு நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

10 ஆயிரம் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ..திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தல்

india-wants-china-to-de-induct-its-10-000-troops-heavy-weapons-deployed-along-the-lac.hindutamil.in/n :எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சீன படை வீரர்கள் 10 ஆயிரம் பேரை திரும்ப பெற வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர் கள் அத்துமீறி நுழைந்தனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மே 9-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே காணொலி காட்சி மூலம் 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Racial profiling என்ற சொல்... 'இந்த ஜாதிக்காரர்கள் இப்படித்தான் .. இனவாத பொதுப்புத்தி

இனவாதம் நீதி சாதி BlackLivesMatter
Subashini Thf : Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில்
அதிகம் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் சூழலிம் கூட இந்த ்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கின்றார்கள்.
வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண
ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக
பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரனியை நிகழ்த்தினர்.

உத்தர பிரதேசம் . கொரோனா ஒழிவதற்கு மாணவியின் நாக்கை வெட்டி பலியிட்ட ...



Sridharrajagopal : உத்திரப்பிரதேச மாநிலம் பண்டல்கண்டில்
கொரோனாவிலிருந்து ஊரைக்காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம்..... யானைக்குப் பொங்கிய சங்கிகளெங்கே???
விராத்கோலி, மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் இதற்கு பொங்கமாட்டீர்களா???.
இது மட்டுமல்ல விவேக்சர்மா என்ற ஒரு பார்ப்பனா இளைஞரும் கொரோனா நாட்டில் ஒழியவேண்டும் என்று தனது நாக்கை தானே வெட்டி சிவனுக்கு படையல் வைத்து தற்போது மருத்துவ மனையில் உள்ளார் .. பாஜக நாட்டுக்கு தந்த சொத்து இந்த முட்டாள்தனம்தான் .. மக்களை பார்ப்பனீயத்துக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருப்பதற்கு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தியதன் விளைவுகள்தான் இவை
A 24-year-old stonecutter in India chopped off his tongue in an apparent attempt to appease a goddess and stop the spread of the coronavirus, according to reports.
Vivek Sharma, who worked with his brother Shivam and seven others at the Bhavani Mata temple in Suigam, became alarmed about the deadly disease, according to the Times of India.
His co-worker Brijesh Singh Saab Singh told authorities that Sharma, a devotee of Kali Mata, had kept chanting the deity’s name.

கண்ணீரோடு விடை தருகிறோம்! எஸ்.எஸ்.சிவசங்கர்.

சிவசங்கர் எஸ்எஸ் : எழுந்து நின்று இடுப்பு பெல்ட்டை சரி செய்கிறார் என்றால், அண்ணன் ஜெ.அன்பழகன் சண்டை செய்ய போகிறார், களத்தில் குதிக்கப் போகிறார், தன் பணியைத் துவக்கப் போகிறார் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பார்த்தால், உடல்நிலை பிரச்சினை உள்ளவர் போலவே தெரியாது. துள்ளி எழும் இளைஞனாக காட்சி அளிப்பார்.
எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும், தயக்கமே இருக்காது அவருக்கு, தன் கருத்தை எடுத்து வைக்க. அது ஆளும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகராக இருந்தாலும் சரி. விளைவுகள் குறித்தெல்லாம் கவலைகள் இருக்காது.
அவ்வளவு ஏன், தன் உள்ளம் எல்லாம் நிறைந்த கழகத் தலைவரிடமும் தன் கருத்தை சொல்லி விடுவார், அது எதிர்கருத்தாக இருந்தாலும். ஆனால் அது கழக வளர்ச்சிக்கான கருத்தாகத் தான் இருக்கும்.
சட்டமன்றத்தில், 2011 - 2016 காலகட்டத்தில் அவரோடு பணியாற்றுகின்ற இனிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது, அவரது அதிரடி நடவடிக்கைகளை காணுகின்ற வாய்ப்பு அமைந்தது. அழுந்த திருத்தமாக வாதங்களை வைப்பார். எத்தனை எதிர் குரல்கள் வந்தாலும் தயங்க மாட்டார்.
அப்போது ஜெயலலிதா முதலமைச்சர். இரும்பு பெண்மணியாக எண்ணி, அ.தி.மு.கவினர் அவரை கண்டு அஞ்சி நிற்கும் நேரத்தில், இயல்பாக அவரை எதிர் கொள்வார் அண்ணன் அன்பழகன்.

பணிய மொழி தமிழ் சொற்களஞ்சியம் தொகுப்பு.. வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம்

Murugesan Maruthachalam : பணிய மொழி தமிழ் சொற்களஞ்சியம் தொகுப்பு பணியர்:- இவர்கள் கறுத்த உருவமும் அகன்ற மூக்கும் சுருண்ட மயிரும் உள்ள சாதியார். இவர்கள் வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம் முதலிய காபித் தோட்டங்களில் வேலை செய்து அடிமைகளாக உள்ள சாதியார். இவர்கள் ஆப்பிக்காவிலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தவராகக் கூறப்படுகின்றனர். இவர்களின் பெண்களும் கிழங்கு முதலிய தோண்டித் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கையுள்ள வேலையாட்கள். (தர்ஸ்டன்)
- அபிதான சிந்தாமணி பதிவு பக்கம் 1235.< கத்துக்காரன் - தபால்காரர்,
பைசெபைங்குத்தாளு - நடத்துனர்,
படிபலிக்குஞ்ஞாளு - சுங்கச்சாவடி அதிகாரி,
பண்டி ஓட்டுத்தாளு - ஓட்டுனர்,
அடிச்சுபாராளி - தூய்மை பணியாள்,
ஆளு - ஜனம்,
ஏமக்காற - காமுகன், கமக்காரன் (ம).