சனி, 2 பிப்ரவரி, 2019

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க என்ன தயக்கம்?

கருணாநிதி மறைவு பாஜகவில் இணைவாரா? tamil.oneindia.com -hemavandhana: அழகிரியை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா ஸ்டாலின்- வீடியோ சென்னை: கடைசி முயற்சியாக அழகிரியை ஒருமுறை கட்சியில் சேர்த்து கொள்வது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்கலாமே என்ற கருத்து அக்கட்சியினராலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலினை போலவே இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்தான் மு.க.அழகிரியும். தென்மாவட்டங்களில் திமுகவை வளர்த்தெடுக்க கருணாநிதியால் பணிக்கப்பட்டதுகூட அழகிரியின் மேல் இருந்த நம்பிக்கைதான் காரணம். அதன்படியே ஒவ்வொரு தேர்தலின்போதும் தென்மாவட்டங்களை பற்றியே எந்த கவலையும் இல்லாமல் அழகிரி இருக்கும் தைரியம், நம்பிக்கையில் இருந்தார் கருணாநிதி.
ஆனால் காலம் மாற மாற.. காட்சிகளும் மாற மாற.. ஸ்டாலின் மேல் நேர்மறை விமர்சனங்களும், அழகிரி மீது எதிர்மறை விமர்சனமும் விழ ஆரம்பித்தது. இந்த எண்ணம் கடைசி வரை நிலைத்தும் விட்டது. தானாக முன்வந்து கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளும்படி அழகிரி சொல்லியும் திமுக தலைமை பிடி கொடுக்கவே இல்லை.

எஸ்.ஐ கருப்பசாமியிடம் மனைவியை பறிகொடுத்த கணவன் .. 3 பெண் பிள்ளைகளுடன் தோழர் நல்லக்கண்ணுவிடம் கண்ணீர்!

ra/nakkheeran.in - nagendran" : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் கருப்பசாமி, முன்பு கடம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்தார் மும்மலைப்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி(37). அவரிடம் செல்போன் எண்ணை கேட்டு வாங்கிய  கருப்பசாமி, பேசியே மயக்கிவிட்டார்.
அந்த பெண்ணுக்கு இப்போது 21, 18 மற்றும் 16 வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்போது தொடர்ந்த கள்ளக் காதல் இப்போது வரை தொடர்கிறது. தனது மகள்களிடம் உதவி ஆய்வாளர் கருப்பசாமி உறவுக்காரர் என்றும், உங்களுக்கு பெரியப்பா முறை என்றும் அறிமுகம் செய்துள்ளார்.
அதை 3 பெண் குழந்தைகளும் நம்பி இருக்கின்றனர்.p;ராமலட்சுமியின் கணவர் பாலசுப்பிரமணியன் தினக்கூலிப் பணிக்கு கேரளாவுக்கு சென்றுவிடுவார் என்பதால், உதவி காவல் ஆய்வாளர் கருப்பசாமியுடன் ராமலட்சுமி ஊர் சுற்ற கிளம்பிவிடுவார். 3 பிள்ளைகளும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுவிடும் என்பதால், அவ்வப்போது வீட்டிற்கே கருப்பசாமி வந்து சென்றார்.

பிபிசி-யிடம் இந்தியாவை ஏற்கவில்லை கூறிய கருத்துக்காக கௌசல்யா பணியிடை நீக்கம்

BBC : ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை
கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில்,
"அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்," என்று கூறிய கௌசல்யா, மக்கள் இந்த திட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு இந்த திட்டங்களை கைவிடவில்லை என்றும், விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடியிருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்கவில்லை என்றும் கூறி அதனால், தாம் இந்தியாவை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் 600 இந்திய மாணவர்கள் கைது... .. போலி விசா


dhinamalar :வாஷிங்டன் : போலி விசா மூலம் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 600  பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலீசாரால் உருவாக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சேர 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அமெரிக்காவில் உள்ள ஏஜெண்டுகள் சிலர் அந்த பல்கலைக் கழகத்தில் சேர்ப்பதாக கூறி, மாணவர்களிடம் 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை கமிஷன் வாங்கிக் கொண்டு எப் 1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்தனர்.

தவறைக் கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு நன்றி தெரிவித்த ஆப்பிள்!

facetimeவிகடன் ம.காசி விஸ்வநாதன் : பிரபல நிறுவனமான ஆப்பிள், தங்களது சிறிய கோளாறுக்காக அனைத்து ஐபோன் மற்றும் ஐபாட் வாடிக்கையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது. சமீபத்தில், தங்களது ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோ காலிங் சேவையில், ஒருவருக்கு கால் செய்து, அவர் அட்டெண்டு செய்யாவிட்டாலும் அவரது மைக்கில் வரும் ஒலியைக் கேட்கவைக்கும் கோளாறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தப் பிரச்னை ஐஓஎஸ் 12.1 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களில் இருந்துள்ளது.
இந்த தவறை முதன் முதலாகக் கண்டுபிடித்தது தாம்சன் என்னும் 14 வயது சிறுவன். முதலில், ஆப்பிள் இதற்கு சைலன்ட்டாகத் தீர்வு கண்டுவிடலாம் என்று நினைத்திருந்தது. இப்போது, எதிர்பாராத விதமாக அனைவருக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்துள்ளதால், முதலில் இதைக் கண்டறிந்த அந்தச் சிறுவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தற்போது நன்றியைத் தெரிவித்துள்ளது ஆப்பிள்.

சென்னை பெண் விவிஐபி காரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்! - கொள்ளைபோன பின்னணி

கொள்ளை வழக்கை விசாரித்த கானத்தூர் போலீஸ் நிலையம்
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்
vikatan.com : எஸ்.மகேஷ்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விவிஐபி ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். அதில், மூன்று பேரை கூவத்தூரில் போலீஸார் கைது செய்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது கானத்தூர், நயினார்குப்பம். நீலாதிரை தெருவில் விவிஐபி ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன் தன்னுடைய சொகுசு காரை அந்தப் பகுதியில் உள்ள இன்னொரு பண்ணை வீட்டில் நிறுத்தியுள்ளார். நீண்ட நாள்களாக அந்த கார் பயன்படுத்தப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், கடந்த 27-ம் தேதி காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் கொள்ளைபோனது. 
இதுகுறித்து தகவலறிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண், காரை சோதனைசெய்தார். அப்போது ,அவர் வைத்திருந்த பணம் கொள்ளைப்போனது தெரியவந்தது. இதையடுத்து, கானத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர்.

அன்புமணிக்கோ திமுக கூட்டணி மீது காதல் .. அமித் ஷாவுக்கோ பாமக மீது காதல் .. எங்கே செல்லும் இது ?

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: பாமகவை நெருக்கும் பாஜக!“கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருக்கிறது பாமக. பாமகவின் ஒவ்வொரு மூவ்களையும் மின்னம்பலத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். லேட்டஸ்ட் மூவ்களைப் பற்றி சொல்கிறேன். அதிமுக கூட்டணியில் பாமகவும் இருக்க வேண்டும் என அதிமுக நினைக்கிறது. இது சம்பந்தமாக பேச தளவாய் சுந்தரமும், முதல்வர் எடப்பாடியின் ஆல் இன் ஆல் ஆக இருக்கும் சேலம் ஆத்தூர் இளங்கோவனும் தைலாபுரம் தோட்டத்துக்கே சென்று ராமதாஸை சந்தித்து வருகிறார்கள்.

பானுப்ரியா வழக்கில் பணிப்பெண்ணும் தாயும் கைது!

பானுப்ரியா வழக்கில் போலீஸ் அதிரடி!மின்னம்பலம் : நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமியும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுமிக்கு பானுப்ரியாவின் சகோதரர் பாலியல் தொல்லைகள் அளித்ததாக சிறுமியின் தாயார் காவல்துறையில் புகாரளித்திருந்தார். தனது மகளை தன்னுடன் அனுப்ப பானுப்ரியா மறுப்பதாகவும், மகளை மீட்டுத்தர வேண்டும் எனவும் சிறுமியின் தாயார் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த பானுப்ரியா, சிறுமியின் தாயார் பொய் சொல்வதாகவும், அச்சிறுமி தனது வீட்டில் சில பொருட்களை திருடிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பானுப்ரியா வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் கடந்த மாதமே காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று (பிப்ரவரி 1) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக நியமனம்

THE HINDU TAMIL : தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.
மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அம்பேத்கர் குடும்ப மருமகன் சமூக போராளி ஆன்ந்த் டெல்டும்டே கைது

splco.me/tam/blog : எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புனேயில் உள்ள ஷானிவார்வாடா பகுதியில் எல்கர் பரிசத் மாநாடு நடந்தது. மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்த அந்த மாநாட்டில் பங்கேற்ற ஏராளமான சமூகச் செயற்பாட்டாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துக்களால்தான் மறுநாள் பீமாகோரிகான் பகுதியில் கலவரம் நடந்தது என்று போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர், ஆனந்த் டெல்டும்டே மீது புனே போலீசார் சந்தேகித்தனர். இதன் அடிப்படையில், இன்று காலை அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். புனே நீதிமன்றத்தில் ஆனந்த் டெல்டும்டே ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். கோவாவில் உள்ள கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியராக ஆனந்த் டெல்டும்டே பணியாற்றி வருகிறார். இவர் அம்பேத்கர் குடும்ப மருமகன் முறையும் ஆவார். இவரின் கைதுக்கு சமூக வலைதளத்திலே பாஜக வுக்கு எதிராக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்&

டிவி விமர்சனங்களின் வீழ்ச்சியும் யூ டியூப்பின் எழுச்சியும்!

டிவி விமர்சனங்களின் வீழ்ச்சியும் யூ டியூப்பின் எழுச்சியும்!மின்னம்பலம் : தமிழ் சினிமா 365: பகுதி - 31 இராமானுஜம்
அறிவியல் மாற்றமும், வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் மனித வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றன. அறிவியலைப் பின்புலமாக கொண்டு இயங்கும் திரைப்பட துறை இதற்கு விதிவிலக்கு அல்லவே.
உலகமயமாக்கல் காரணமாக வெளிநாட்டுப் படங்கள் விரைவில் நம்மை வந்து அடைகின்றன. முன்பெல்லாம் DVD எங்கு கிடைக்கும் என தேடியலைந்தது நிகழ்ந்தது. ஆனால் இப்போதோ கோடம்பாக்கத்தில் இருந்த இடத்தில் இருந்தே வெளிநாட்டுப் படங்களை பார்த்ததையும், தேவைப்பட்டால் திருடுவதும் எளிதாக்கி உள்ளது அறிவியல் வளர்ச்சி.
அதே போன்றுதான் திரைப்படங்களுக்கான புரமோஷன், விமர்சனங்களின் வடிவம் மாறி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிலையங்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன் அரசு தொலைபேசியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

திமுகவில் இருந்து தினகரனை நோக்கித் திரும்புகிறதா மமக?

திமுகவில் இருந்து தினகரனை நோக்கித் திரும்புகிறதா மமக?மின்னம்பலம் : திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மமக வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறதா இல்லையா என்ற கேள்விக்குறி அக்கட்சிக்குள் இன்று விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கான முக்கியக் காரணம் மமக தனி சின்னத்தில் நிற்பது என்ற கொள்கையில் விடாப் பிடியாக நிற்பதுதான்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த மமக 2013 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் அதிமுக அணியில் இருந்து விலகியது. அதில் இருந்து 2014, 2016 தேர்தல்களில் திமுக அணியோடு இருந்து இன்றுவரை தொடர்கிறது. இந்நிலையில் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் மமகவுக்கு இடமுண்டா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் .. திரளும் எதிர்க்கட்சிகள்!

மீண்டும் வேண்டும் வாக்குச் சீட்டு: திரளும் எதிர்க்கட்சிகள்!மின்னம்பலம் : வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பிக்கையின்மை தொடர்பாக வரும் 4ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. வாக்குப் பதிவு எந்திரங்கள் வேண்டாம் என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளித்திருந்தன. ஆனால் அண்மையில் இதுதொடர்பாக பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை அமல்படுத்தப்படாது என்று தெரிவித்திருந்தார்.

ராமதாஸால் ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவிக்கிறோம்!’ - காடுவெட்டி குரு மகன் கண்ணீர்

எம்.திலீபன் விகடன் : ``பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அச்சுறுத்தல்களால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தோடு சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்’’ என்று காடுவெட்டி குருவின் மகன் மீண்டும் அதிர்ச்சியைத் தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த குரு, கடந்த மே மாதம் 25-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அனில் அம்பானி நிறுவனம் திவால் . .Rs 42,000 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாததால்..

கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானி நிறுவனம் திவால் ஆகிறது
NEW DELHI: Reliance Communications will shortly move the insolvency tribunal seeking bankruptcy protection as the Anil Ambani-owned company seeks to sell assets, repay lenders and pare its Rs 42,000-crore debt within 270 days, having been unable to do so in the past year and a half. economictimes.indiatimes.com/articleshow/
மாலைமலர் :அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இந்த நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுடெல்லி: அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இந்த நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி முடிவு செய்யப்பட்டது. 18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை.

150 கோடி முதலீட்டில் ஆந்திராவில் புதிய திருப்பதி கோயில் .. 25 ஏக்கரில் 5 நட்சத்திர வசதியோடு ?

பூமி பூஜைதிருப்பதி மாதிரிக் கோயில்எஸ்.கதிரேசன் - விகடன் : ஆந்திர மாநிலம் புதிய தலைநகரம் அமராவதியில் பெரும் பொருள்செலவில் உருவாகி வருகிறது திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களில் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திராவின் இந்தப் புதிய நகரில் புதிய கோயில் ஒன்றை மிகப்பிரமாண்டமாக  25 ஏக்கர் நிலப்பரப்பில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

இதற்கான பூமி பூஜை நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேங்கடேசப் பெருமாள் கோயில் பொதுமக்கள் பிரார்த்தனைக்குத் திறக்கப்படும்’’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ஒரு கார் ஓட்டுநரின் மனநிலையை சிதைத்து படுகொலை செய்திருக்கிறது போக்குவரத்து காவல்துறை!


தமிழ் மறவன் : கொலைகார போலீசு! ஒரு கார் ஓட்டுநரின் மனநிலையை சிதைத்து படுகொலை செய்திருக்கிறது போக்குவரத்து காவல்துறை!
இந்த தேசத்தில் தன்மானத்தோடு வாழவே முடியாதா?
தன் சொந்த தேசத்திலேயே தனித்து விடப்பட்டதாக உணரும் தருணம் எவ்வளவு கொடுமையானது.
நான்கு அல்லது ஐந்து மணிநேரங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் அதுவும் 250 அல்லது 300 ரூபாய் வாடகை வரும். உனவின்றி கிடைப்பதை உண்டு உறக்கம்மின்றி இப்படி 18 மணிநேரம் வரை அலைந்தால்தான் 1200லிருந்து 1500/- ரூ வரை வாடகை கிடைக்கும்.
இதில் ஓட்டுநரின் வருமானம் என்பது 350லிருந்து 400/- ரூ மட்டுமே கிடைக்கும் என்பதுதான் கொடுமை!
என்ன செய்ய?
முதலீடு போட்டு சிக்கிக் கொண்டோமே!
வேறு தொழில் தெரியாதே!
தங்களுக்கு கிடைக்கும் தினசரி சிறு வருமானத்தில்தான் அரசு இரட்டிப்பாக்கி கொள்ளையடிக்கும் Road tax, Insurance, FC, service, மேலும் உதிரிபாகங்கள் மாற்றுவது, பழுது பார்ப்பதற்கென செலவுகளை பார்க்க வேண்டும்.
மோடியின் உலகமகா சாதனையான எரிபொருள் விலையேற்றத்தையும் எதிர் கொள்ள வேண்டும்.

மன்மோகன் சிங் : தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.

இது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து tamil.goodreturns.in - Keerthi : டெல்லி:மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். மின்துறை அமைச்சரான பியூஷ் கோயல் நிதித்துறையினை கூடுதல் பொறுப்பாக ஏற்று, இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த பட்ஜெட் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், ஊரக மக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசிற்கு நடத்தப்பட்ட சோதனையாகவே பார்க்கப்பட்டது.

கன்யாகுமரி .. கும்பல் கொடூர தாக்குதல்... கணவன், மனைவி வெட்டிக்கொலை

தினகரன் : கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் நள்ளிரவில் வீடு புகுந்து அரிவாளால் மர்ம கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில், கணவன் மனைவி உயிரிழந்தனர். மேலும் மகள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் இவர் தோவாளையில் பூக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கல்யாணி,  ராமலெட்சுமி என்ற ஆர்த்தி என்ற மகளும் உள்ளார். நேற்றிரவு 10.30 மணி அளவில் இவரது வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தொழிலதிபர் சிவசங்கரன் சொத்துகள் முடக்கம்

snakkheeran.in- kathiravan : ஐடிபி வங்கியில் 470 கோடி கடன் பெற்று  அதனை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர், தொழிலதிபர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.    இதைத்தொடர்ந்து சிவசங்கரன் மீது அமலாக்க இயக்குநரகமும் வழக்கு பதிவு செய்தது.   சிவசங்கரன் நிறுவனங்கள் மேலும் 523 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகவும் சிபிஐயில் வழக்கு உள்ளது.

இந்நிலையில், பணமோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் 224.6 கோடி சொத்துக்களை  முடக்கியதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பட்ஜெட்: அதிமுக, பாமக வரவேற்பு!

பட்ஜெட்: அதிமுக, பாமக வரவேற்பு!மின்னம்பலம் : மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயில், தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பை ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பட்ஜெட்டை வரவேற்றுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இல்லை: தமிழக அரசு!

tamil.news18.co :கடந்த 29-ம் தேதி மாலையில் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், 30-ம் தேதி காலை வரை பணியில் சேரவில்லை.
ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று, கடந்த 30-ம் தேதி பணிக்கு வராத 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளின் பணிகள் ஸ்தம்பித்தன. ஜாக்டோ ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்!
இந்தநிலையில் கடந்த 29-ம் தேதி மாலையில் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், 30-ம் தேதி காலை வரை பணியில் சேரவில்லை. அவர்கள் மீது 17பி பிரிவின் கீழ் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுவந்தநிலையில், அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மதிமுக பேச்சாளர் தனமணி வெங்கட் கழகத்தில் இருந்து நீக்கம் ! வைகோ அதிரடி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை.
சாதி அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பேச்சாளர் தனமணி வெங்கட் தமிழ்நாட்டை நிர்மாணித்ததே தெலுங்கு மன்னர்கள்தான் என்றும் தமிழர்களுக்கு உதவ வந்த தெலுங்கு மக்கள் அழிக்கப்பட்டு, லெமூரியாவில் இருந்து வந்த தமிழர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசியல், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாவிட்டால் தெலுங்கு இனமே அழிந்துவிடும் என்பது உட்பட சாதியை முன்னிறுத்தி தமிழ்நாடு, தமிழர்கள் குறித்த தவறான பல கருத்துக்களோடு உரையாற்றியிருந்தார். இதுகுறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கேள்விகளும், கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இதுபற்றி தன் கவனத்துக்கு வந்ததும் விசாரித்த மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ, தனமணி வெங்கட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தனமணி உள்பட மூன்று பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை.
"ஒழுங்கு நடவடிக்கை
தலைமைக் கழக அறிவிப்பு

3 வயது சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி


tamilthehindu :அமெரிக்காவின் நார்த் கரோலினா மாநிலத்தில் வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
நார்த் கரோலினாவில் உள்ள கிராவன் கவுண்டியில் எர்னல் நகரைச் சேர்ந்த சிறுவன் கேஸே ஹதாவே (வயது 3). கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று தனது பாட்டி வீட்டில் மற்ற குழந்தைகளுடன் கேலே ஹதாவே விளையாடிக் கொண்டிருந்தான். விளையாடி முடித்துவிட்டு மற்ற குழந்தைகள் வீட்டுக்குச் சென்ற நிலையில் கேஹே ஹதாவே மட்டும் வூட்ஸ்காட்டுப் பகுதிக்குள் வழிதவறிச் சென்றுவிட்டான். இந்நிலையில், கேஸே ஹதாவே நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வராதது குறித்து அவரின் பெற்றோர் கவலையடைந்து தேடத் தொடங்கினர். மேலும், போலீஸார், தன்னார்வ அமைப்புகளுக்குத் தகவல் அளித்து கேஸே ஹதாவேவை தேடும் பணியைத் தீவிரப்படுத்தினார்கள்.

இடைத்தேர்தலில் வெற்றி : ராஜஸ்தானில் காங்கிரஸ் பலம் 100 ஆக உயர்வு

தினகரன் :ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ராம்கர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷபியா ஜூபேர் வெற்றி பெற்றதை அடுத்து சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 100 ஆக அதிகரித்துள்ளது.ராஜஸ்தானில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அப்போது ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட லட்சுமண் சிங், தேர்தலுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதிக்கு கடந்த 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், பாஜ, பகுஜன் சமாஜ் கட்சி உட்பட சுமார் 20 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஷபியா ஜூபேர் இதில் வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் சுக்வந்த் சிங்கை காட்டிலும் 12,251 வாக்குகள் அதிகம் பெற்று ஷபியா வெற்றி பெற்றுள்ளார். ஷபியா 83,304 வாக்குகளும், பாஜ வேட்பாளர் சுக்வந்த் 71,053 வாக்குகளும் பெற்றனர். பகுஜன்சமாஜ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நத்வார் சிங்கின் மகன் ஜகத் சிங் 24,856 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.

வேலைநிறுத்தம்.. 1,584 ஆசிரியர்கள் இதுவரை பணியிடை நீக்கம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1,584 ஆசிரியர்கள் இதுவரை பணியிடை நீக்கம் தினத்தந்தி :  ஜாக்டோ–ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சென்னை, ஜாக்டோ–ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்தவகையில் பள்ளிக்கல்வியில் 1,049 ஆசிரியர்களும், தொடக்கக்கல்வியில் 535 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 17 (ஆ) குற்ற குறிப்பாணை என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வரை பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு 17 (ஆ) குற்ற குறிப்பாணை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி, இன்று தொடக்கக்கல்வியில் பணிக்கு திரும்பாத 2,710 ஆசிரியர்களுக்கும் 17 (ஆ) குற்ற குறிப்பாணை அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல், பள்ளிக்கல்வியில் 500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கும் 17 (ஆ) குற்ற குறிப்பாணை அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது<

ஷாம்பூ, சாக்லேட்.பிஸ்கட், மசாலா பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கும் தடை? – தமிழக அரசு முடிவு

aanthaireporter.com:  பல்வேறு  வணிகர்கள், உணவு விடுதிகள், மக்கள் என சென்னையில் எந்த மூலையில் பார்த்தாலும் அனைத்து தரப்பினரும் படிப்படியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு மாறத் தொடங்கி விட்ட  நிலையில் பிஸ்கட், ஷாம்பூ, பானங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மரத்திலான சமையல் உபகரணங்கள், பேப்பர் மற்றும் துணியிலான பைகள், ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவை பிளாஸ்டிக்கு மாற்றாக வலம் வரத் தொடங்கிவிட்டன.
இதனிடையே ஓரிரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அக்கடிதத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரோஹன விஜே வீர.. “THE FROZEN FIRE வெறும் அரசியல் படம் அல்ல.... மக்களை நேசித்தவனின் கதை


S Pradeep Pradeep : 'ரோஹன விஜே வீர' என்ற பெயரைக் கேட்டதும் நமது கண்
முன்னே எப்படியான ஒரு விம்பம் படிகிறது? '
'ஆட்சியைப் பிடிக்க சாத்தியமில்லாத இரண்டு கிளர்ச்சிகளை நடத்தி உருப்படாமல் போன ஒரு மனிதர், தீவிரவாதி, சும்மா பொண்டாட்டி பிள்ளைகள் என்று சாதாரண சிரிபாலவினதோ அமரசேனவினதோ வாழ்க்கையை வாழாமல் தேவையில்லாத வேலை பார்த்தவர்' .இப்படித்தான் அநேகமானோரின் பதில்கள் இருக்கும்..ஊடகங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் இத்தகைய கற்பிதங்களைத் தாண்டி நாம் ரோஹன விஜேவீரவைப் புரிந்து கொள்வது எப்படி?..அதற்கான பதிலைச் சொல்கிறது அநுருத்த ஜயசிங்கவின் “THE FROZEN FIRE “எனப்படும் “கின்னென் உபன் சீதல” என்ற சிங்களத் திரைப்படம்....

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மறைவில் வைகோ.. கண்ணீர் விட்டார்...கல்லறை வரை உடன் சென்றார்!’

ஜார்ஜ் பெர்னாண்டஸ் இறுதிச் சடங்கில் வைகோஜார்ஜ் பெர்ணாண்டஸ்vikatan.com - x.selvakumar : உக்கிரமமாய் கோபப்படுவார்; உணர்ச்சிவசப்பட்டு அழவும் செய்வார். வைகோவைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்த சேதிதான் இது. அதிலும் தன் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் துவண்டு போய் விடுவார். துணிச்சலோடு போராடவும் செய்வார். நட்பைக் கொண்டாடும் வைகோவின் நட்பு வட்டமும் பெரியது. அதில், முக்கியப் புள்ளியாய் இருந்தவர், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
தமிழகத்தைத் தாண்டி, தமிழீழத்தையும், விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கும் தலைவர்கள் யாருமே இல்லை. ஆனால், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அதிதீவிரமான ஈழ ஆதரவாளராக மாறியதன் பின்னணியில் வைகோவுக்கும்,ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்சுக்குமான நட்புக்கும் முக்கியப் பங்குண்டு. இலங்கையிலிருந்து அமைதிப்படையைத் திரும்பப்பெற வலியுறுத்தி, மதுரையில் நடந்த மாநாடு, ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் பாதுகாப்பு மாநாடு அனைத்திலும் பங்கேற்றவர் ஜார்ஜ்.

வியாழன், 31 ஜனவரி, 2019

உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து


உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்துveerakesari :தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது. இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் புதர் ஒன்றில் நாய்களால் கடிக்கப்பட்டு வாத்து இறந்து கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மல்லார்ட் எனும் இன வாத்து முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் வேலையற்ற ஆண்களுக்கு ரூ.3000 .. பெண்களுக்கு ரூ.3500 சம்பளம் காங்கிரஸ் அரசு அறிவிப்பு

Rajasthan introduces Minimum Salary scheme after Rahuls bold announcement tamil.oneindia.com-shyamsundar: டெல்லி: அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதற்கட்டமாக அமலுக்கு வர இருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வேலை பார்க்காத மக்கள் அனைவருக்கும் வேறுபாடு இன்றி இந்த சம்பளம் அளிக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.
இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது ராஜஸ்தானில் அமலுக்கு வர இருக்கிறது. ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் அஷோக் கேக்லாட் ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் மோடி கூட்டணி :அதிமுகவுக்கு 20, - பாஜகவுக்கு10, - பாமகவுக்கு 5, -தேமுதிக 4, - புதிய தமிழகம் 1 ..

டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி:  மோடி மேடையில்  அறிவிப்பு?
மின்னம்பலம் : இது
அதிமுக கூட்டணி பற்றிய செய்திக்கான முன்னோட்டமாகத்தான் இருக்கும் என்று யூகித்து முடிப்பதற்குள், அதிமுக கூட்டணி பற்றிய செய்தியே வந்து விழுந்தது.
“அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி மாலை அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் தேர்தல் வியூகம் பற்றியும் அப்போதே ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றும்போது சொன்ன சில விஷயங்களை இப்போது நினைவுபடுத்துவது சரியாக இருக்கும்.
‘அம்மா இருந்த கட்சிக்கும் அம்மா இல்லாத கட்சிக்கும் வித்தியாசத்தை நாம உணர்ந்திருக்கோமான்னு தெரியல. அம்மா காலத்துல நாம பெரிய அளவுல தோத்திருக்கோம். ஆனா அதையும் தாண்டி பெரிய அளவுல அம்மாவே நமக்கு ஜெயிச்சுக் கொடுத்திருக்காங்க. அதுக்குக் காரணம் அம்மாவோட ஃபேஸ் வேல்யூ. ஆனா இப்ப நம்ம கட்சில யாருக்கும் அந்த ஃபேஸ் வேல்யூ இல்லைங்குறத நாம ஒத்துக்கணும். அம்மா இல்லாம நாம தேர்தலை சந்திக்கப் போறோம். அதுக்கு நாம என்ன பண்ணனும்னு யோசிக்கணும். நாம என்ன பண்ணியிருக்கோம்னு யோசிக்கணும்’ என்று அன்றே பேசினார் ஓ.பன்னீர் செல்வம்.

45 ஆண்டுகளில் வேலை இன்மை நாட்டின் பேரழிவு.. .. புள்ளி விபர அதிகாரிகள் பதவி விலகல்..

THE HINDU TAMIL : நாட்டில் வேலையின்மை குறித்து
ஊடகங்களில் வெளியான அறிக்கை குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, " வேலையின்மை குறித்த கசியவிடப்பட்ட ரிப்போர்ட் கார்டு நாட்டின் பேரழிவை உணர்த்துகிறது" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தேசிய சாம்பிள் சர்வே ஆபிஸ்(என்எஸ்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வேலையின்மை குறித்து செய்தி வெளியிட்ட பிஸ்னஸ் ஸ்டான்டர்டு நாளேட்டின் லிங்க் வெளியிட்டுப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது: பொன்னையன் பரபரப்பு பேட்டி

தினகரன் : சென்னை:
பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து வியூகம் வகுத்து வருகின்றன. கூட்டணி குறித்த அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்காமலும், மறுப்பு தெரிவிப்பிக்காமலும் இரு கட்சி தலைவர்களும் மழுப்பி வருகின்றனர்.

யானை .. வனத்துறையை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி ..


tamil.thehindu.com : டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது.
கோவை மாவட்டம் பெரிய தாடகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னதம்பி என்ற ஆண் யானை கடந்த சில மாதங்களாக  மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கடந்த 25-ம் தேதி அதிகாலை கோவை கோட்ட வனத்துறையினர் சின்னதம்பி யானையைப் பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். தடாகம் வனப்பகுதியில் 4 கும்கி யானைகள் துணையுடன் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை லாரி மூலம் உலாந்தி வனச் சரகத்தில் நள்ளிரவு 2 மணிக்கு விடப்பட்டது.

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்.. 2,92,56,960 கோடி ஆண் , 2,98,60,765 கோடி பெண் வாக்காளர்கள்

vikatan.com  - வருண்.நா  :  தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகத்திலிருந்து இந்தப் பட்டியலை வெளியிட்டார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியத் தேர்தல் கமிஷன், 1.1.2019 வரை 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ளும்படி  உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அந்தப் பட்டியலில் காணப்பட்ட இரட்டைப் பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2,92,56,960 கோடி ஆண் வாக்காளர்களும், 2,98,60,765 கோடி பெண் வாக்காளர்களும், 5,472 மூன்றாம் பாலின வாக்காளர்களும் தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில், மொத்தம் 5,91,23,197 வாக்காளர்கள் இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, 2016-ம் ஆண்டு தமிழகத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5.79 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை.. போலீசின் அராஜகம் பற்றி விடியோவில் பதிவு


மாலைமலர் :ராமாபுரத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #calltaxidriversuicide கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை -
சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு சென்னை: சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற கால் டாக்சி டிரைவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்னர், போலீசார் தன்னை அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதற்கிடையே, இந்த வீடியோ தொடர்பாகவும், அவதூறாக பேசிய நபர் குறித்தும் விசாரிக்க இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் ஓட்டுநர் ராஜேஷ் குற்றம் சாட்டிய போக்குவரத்து காவலர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

ஜனவரி 31, 1976 தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமான நாள்


Jerry Sundar  : ஜனவரி 31, 1976 : தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமான நாள் என கூறலாம்.
ஆம், இந்தியாவின் இருண்ட காலமான நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்ததாலோ, அல்லது மகோரா என்னும் சூழ்ச்சியின் உருவத்தின் செயலால் இந்திரா மேற்கொண்ட நடவடிக்கையோ, தலைவர் கலைஞரின் அரசு கலைக்கப்பட்டது.
திமுக.வில் இருந்து வெளியேறிய நாள் முதல் ஊழல் புகார் பட்டியலை ஆளுநர், பிரதமர், குடியரசு தலைவர் என்று எடுத்து சென்று அளித்தும் பயனில்லையே என்று விரக்தியில் இருந்தார் MGR.
1975ல் லோக் நாயகி ஜெயபிரகாஷ் நாராயணன் சென்னையில் கர்ஜிக்க இருப்பதை அறிந்த MGR ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்க அழைப்பு விடுத்து கடிதம் எழுத,
கூட்டத்தில் பேசிய ஜெயபிரகாஷ் நாராயணன்,
"ஊழல் குற்றச்சாட்டு சொல்வது எளிது, நிரூபிப்பது கடினம். குற்றச்சாட்டு சொல்வதால் மட்டுமே அவ்வரசு ஊழல் அரசாகி விடாது. கருணாநிதி சட்டமன்றத்தில் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறார். வேறு என்ன செய்ய வேண்டும" என்று கேட்க
விரக்தியின் உச்சத்திற்கே சென்றார் MGR.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு இரவோடு இரவாக நெருக்கடி நிலைக்கு வழிவகுக்க, செல்லும் இடமெல்லாம் அதை எதிர்த்து கடுமையாக விமர்சித்து கலைஞருக்கு இந்திரா தூது அனுப்புகிறார்.
ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருங்கள். ஓராண்டு ஆட்சியின் காலத்தை நீட்டிக்கிறேன் என்று.
கலைஞர் அதை மறுக்க, கோவை நகரில் லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையில் நெருக்கடிநிலை நிலை எதிர்த்து 1975 டிசம்பரில் திமுக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு(1972) MGR அளித்த அதே புகார் பட்டியலை திமுக மாநாடு முடிந்த அடுத்த தினமே, நாஞ்சில் மனோகரன் அனுப்புகிறார்.
1976ம் ஆண்டு ஜனவரி திங்கள் 31ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. இரவோடு இரவாக அனைத்து இரண்டாம் கட்ட தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.

கனடா தமிழ் பெண் டாக்டர் நோயாளியுடன் தகாத உறவு .. வைத்திய தகுதியை இழக்கிறார்

கனடா.தமிழ் : புற்றுநோயாளருடன் தகாத உறவு பதவியிழக்கிறார்  டாக்டர். தீபா சுந்தரலிங்கம் என்னும் ஈழதமிழ் பெண் டொரன்டோவில் புற்றுநோய்க்கு சிகிட்சைக்காக வந்த நோயாளியை பல நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக வைத்திய தொழிலில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என கனடிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 37 வயதான  ஈழ தமிழ் பின்னணியைக் கொண்ட டாக்டரே இவ்வாறு பதவயை இழந்தவர் ஆவார்.;
CTV :  lt; Toronto : doctor loses licence after she admits to sexual relationship with cancer patient
Theepa Sundaralingam, 37, also ordered to pay $16K for man's therapy
Sundaralingam, 37, a former oncologist at the Rouge Valley Health System, had her licence revoked on Wednesday by the College for Physicians and Surgeons of Ontario.

திமுக கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ஸ்டாலின் கொடுப்பது எத்தனை?

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை 1:  திமுக  கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ஸ்டாலின் கொடுப்பது எத்தனை?“அதிமுக, திமுக ஆகிய தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இதில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை குழுக்கள் இரு கட்சிகளாலும் அமைக்கப்பட்டு, அதிமுக கொஞ்சம் வேகமெடுத்து விருப்ப மனு பெறும் படத்தையும் தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டது. பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அதிமுகவில் விருப்ப மனுக்களைக் கொடுக்கலாம் என அறிவித்தாகிவிட்டது.
அதேநேரம் அதிமுகவில் கூட்டணிக் குழப்பம் தொடரும் நிலையில் திமுக அணியிலோ கூட்டணிக்குள் யாருக்கு எத்தனை சீட் என்ற கூட்டல் கழித்தல் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
திமுக அணியில் ஒவ்வொரு கட்சியும் கேட்பது எத்தனை சீட்டுகள், திமுக கொடுப்பது எத்தனை சீட்டுகள் என்பதுதான் இப்போது அங்கே டாப் லெவலில் விவாதமாக இருக்கிறது. இதுபற்றி திமுக அணிக்குள் துல்லியமாக விசாரித்தோம்.
திமுக 24 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிடவேண்டும் என்பதில் எள்ளளவும் சமரசம் இல்லாமல் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதனால் அணியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் மீதியிருக்கும் இடங்களில்தான் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. இப்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இதில் துரைமுருகன் சொன்னது போல கடைசி நேரத்தில் திடீரென சில கட்சி வரலாம், சில கட்சி போகலாம்.

அலையில் அடித்து வரப்பட்ட விசைப்படகால் பாம்பன் பாலத்துக்கு ஆபத்து


மாலைமலர்: பலத்த காற்றில் நங்கூரம் அறுந்ததால் அலையில் அடித்துவரப்பட்ட விசைப்படகினால் பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ராமேசுவரம்: ராமேசுவரம் பாம்பன் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அதன் வழியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ராமேசுவரத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பாம்பன் பாலம் வழியாக பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து வந்த ஒரு படகு பாலத்தை கடக்கும்போது, பாலத்தின் தூணில் லேசாக மோதியது. ஆனால் இதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

மகிந்த ராஜபக்சேவின் மகனுக்கு இந்து முறையிலும் திருமணம்


மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித்த ராஜபக்சவுக்கு அண்மையில்
திருமணம் நடைபெற்றது. சிங்கள முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இந்து முறைபடி நடைபெற்ற திருமண நிகழ்வில் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

வல்லாரை என்று விற்கப்படுவது dollarweed எனப்படும் அழிக்கப்படவேண்டிய தாவரம்?

Rubasangary Veerasingam Gnanasangary : வல்லாரையில் கலப்படம்.
வல்லாரையானது கரட் சீரகம், செலரி மற்றும் பார்ஸ்லி போன்றனவற்றின் தாவர குடும்பத்தை சேர்ந்ததாகும்.  Centella என்பது வல்லாரை இனங்களின் பொதுப்பெயர் ஆகும்.
Gotu Kola என்னும் சிங்கள பெயர் பொதுவாக பல மொழிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வல்லாரையின் பெயரில் போலி வல்லாரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இங்கு ஒரே படத்தில் ஐந்து வெவ்வேறு வகைகளான தாவரங்களின் படங்களை இணைத்துள்ளேன். 
அவற்றில் எதுவுமே வல்லாரைகளும் இல்லை வல்லாரைக்கு எந்த வகையிலும் உறவும் இல்லை. 
அவை Hydrocotyle எனப்படும் பிரபல்யமான நீர்த்தாவரங்கள் ஆகும். 
படத்தில் உள்ளது போன்ற Dollarweedஐ  யாழ்ப்பாணத்தில் பயிருடுகிறார்கள். அதை வல்லாரை என்றே விற்பனை செய்கிறார்கள்.
Dollarweed என்னும் தாவரத்தை தென்கிழக்கு ஆசியா எங்கும் காணமுடியும். இதை இருபது வருடங்களுக்கு முன்னர் Ground cover பயிராக (not cover crop) அறிமுகப் படுத்தினர். அலங்கார நீர்த்தாவர வர்த்தகத்தாலும் பரவியுள்ளது. ஆனால் அவை விரைவாக ஆக்கிரமித்து அழிக்க முடியாத பயிராக மாறிவிட்டன.  இவற்றை ஆடு மாடுகள் உண்பதால் ஈரல் பாதிக்கப் படுகிறது என்கின்ற அச்சத்தால் மக்களும் இதை உண்பதை தவிர்த்து வந்தனர். 

புதன், 30 ஜனவரி, 2019

பானுப்பிரியா கைதாவாரா? .. 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு

- Veteran south Indian actress Bhanupriya has been accused of harassing a teenage girl whom she allegedly hired as domestic help. A police complaint against the actress was filed in Andhra Pradesh on Thursday after allegations by the 14-year-old girl's mother.
வெப்துனியா :தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயினாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் தற்போது பிரபல டிவி சேனல்களில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.அண்மையில் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி அந்த சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: வீட்டில் குடும்ப சூழ்நிலையின் காரணாமாக எனது மகள் ( 14 ) சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியாவின் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பி வைத்தோம். மாதம் என் மகளூக்கு 10000 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியதால் நாங்கள் ஒப்புக்கொண்டு மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம். மாதாமாதம் 10,000ரூபார் சம்பளம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக மகளுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை.

ஜாக்டோ ஜியோ போராட்டம் திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!மின்னம்பலம் : இன்று மாலை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, கடந்த 9 நாட்களாக நடந்துவந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசின் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்பது உட்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது. இன்று (ஜனவரி 30) ஒன்பதாவது நாளாகப் போராட்டம் நடத்தப்பட்டது. ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக என்ஜிஒ சங்கம், கு.ப. சங்கம், நீதித் துறைப் பணியாளர் சங்கம், மருத்துவ ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் ஆகியன இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.