தினத்தந்தி :சென்னை : நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இருந்த போதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீரா மிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
சனி, 14 ஆகஸ்ட், 2021
நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது
பனை மரங்களை வெட்ட தடை.. ரேஷன் கடைகளில் வெல்லம் வினியோகம்.. பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசு
தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அப்போது வேளாண் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமானது பனை மரம் சார்ந்த அறிவிப்புகள், இதோ பட்ஜெட் உரையிலிருந்து:
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
பனைமரம் நமது மாநில மரம். பதநீரை காய்ச்சி இனிப்பான தின்பண்டம் தயாரிக்கும் குறிப்பு பழைய கால கல்வெட்டில் கூட இருக்கிறது. பனைமரம் தனது ஒவ்வொரு உடல் பாகத்தையும் மனிதகுலத்துக்கு வழங்கும் கற்பகத்தரு! பனை ஓலைகள், தோரணம் கட்ட, பெட்டி உள்ளிட்ட பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. பாய் தயார் செய்யலாம். பச்சை மட்டை வேலி அமைக்க பயன்படுத்தப்படுகிறது. நாரெடுத்து பிரஷ் செய்ய பயன்படுத்தப்படுகிறது அதன் மட்டை. பனங்காய் உண்பதற்கு இனிய பழம் தருகிறது. கீழே போடும் பனங்கொட்டை, கிழங்காக மாறி உணவுப் பொருளாக பயன்படுகிறது. பனை மரத்தின் பாளை, பதநீர் பெறுவதற்கு பயன்படுகிறது.
சிவசங்கர் பாபா: 300 பக்க குற்றப்பத்திரிக்கை!
மின்னம்பலம் : பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 16ஆம் தேதி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மேலும் 18 மாணவிகள் புகார் அளித்ததையடுத்து, அவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மூன்று வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் உள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,சாந்தலிங்க மருதாசல அடிகள்,குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாஜிகளின் தடைகளை உடைத்து நெருப்பாற்றை நீந்தி கடந்துவந்த பராசக்தி
Dhanasekar ManickaMurthy · நெருப்பாற்றை நீந்திக் கடந்த கலைஞரின் பராசக்தி!
கலைஞரின் பராசக்தி என்று குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம்,
அதன் மிகப்பெரிய வீச்சுக்கு அந்தத் திரைப்படம் முன் வைத்த கலைஞரின் அரசியலும் அன்றைக்கு திமுகவைச் சேர்ந்த சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த நடிப்பும்தான்.
பராசக்தி திரைப்படத்தில் திராவிட அரசியலையும் அதன் சிந்தாந்தத்தையும் தன்னுடைய ஆழமான அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களின் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தார் கலைஞர்.
கலைஞரின் மறைவுக்குப் பின்னர் பராசக்தியைக் குறி்ப்பிடாதவர் யாரும் இல்லை.
ஆனால், பராசக்தி வெளியிடப்படும்போது இருந்த சூழல், அந்தப் படத்திற்கு எதிரான உக்கிரமான எதிர்ப்பு, அது வெளியாவதற்கு எப்படி எல்லாம் போராட்டம் நடத்தப்பட்டது என்பது இன்றைய தலைமுறையினர் யாருக்கும் தெரியாது
பராசக்தியை வெளியிடக் கூடாது, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அன்றைய சென்னை அரசாங்க முதல்வர் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன. திரைப்படம் பார்ப்பனர்களுக்கு எதிரானது என்ற கருத்து பரவியதால் அவர்களின் கட்டுபாட்டிலிருந்த நாளிதழ்களில் படத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துகள் எழுதப்பட்டன.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்
தமிழ் இந்து : சென்னை தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும், அந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு குறித்த அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படும். இதில், அரசின் அனைத்து துறைகளின் வரவு- செலவு, புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வேளாண்மை துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
மகளுக்கு பாலியல் தொந்தரவு- போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது. திருச்சி மருத்துவர்...
நக்கீரன் - மகேஷ் : திருச்சி மாவட்டம், கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிப்புரிந்து வருகிறார்.
இவரது மனைவியும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ரமேஷின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னுடைய பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர் ரமேஷின் மனைவி, தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அங்கு சிறுமியிடம் விசாரித்த போது, இது குறித்த அவலத்தை அவர் தனது தாயிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய் இது குறித்து சைல்டு லைனை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி பாஸ் இல்லாமல் பிரயாணம் செய்ய முடியாது
BBC : இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு
இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்துவதற்கான சோதனைகள், பொது இடங்களில் நடத்தப்படும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் மூன்றாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு.. மீண்டும் தூசுதட்டப்படுகிறது . உதகை கோர்டில் போலீஸ் புது மனு
Velmurugan P - e Oneindia Tamil : ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில்,
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் அந்த வழக்கு தூசுதட்டப்படுகிறது ,
தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உதவை நீதிமன்றத்தில் காவல்துறை மனு அளித்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு மர்மங்கள் தொடர்பாக வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் விரைவில் வரும் என்று கூறி புயலைக் கிளப்பிஇருந்தார்.
இந்த சூழலில் தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்,
கூடுதல் விசாரணை கோரி உதகை நீதிமன்றத்தில் காவல்துறை புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சரும்அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவுக்கு நீலகிரி மலையில் கொடநாடு எஸ்டேட் சொந்தமாக இருந்தது.
அவர் உயிருடன் இருந்த வரை அங்கு தான் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார் .
பட்ஜெட்டில் 70% மேலாக கல்வித்துறைக்கு ஒதுக்கி இருப்பது மன நிறைவை தருகிறது.
சுமதி விஜயகுமார் : பசித்தவனுக்கு மீன்களை வழங்குவதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு.
அதை ஒவ்வொரு முறை இலவசங்கள் கொடுக்கும் பொழுதும் தவறாமல் சுட்டி காட்டி விடுவார்கள்.
அந்த பழமொழியே முதலில் சரியானதுதான என்று பார்க்க வேண்டும்.
பசித்தவன் மீன் பிடிக்க கற்றுக்கொள்ள முதலில் அவன் பசி போக வேண்டும்.
பின்னர் மீன் பிடிக்க கருவிகள் வேண்டும்.
பிடித்த மீனை சமைத்து உன்ன சமையல் வசதிகள்/பொருட்கள் வேண்டும்.
இதையெல்லாம் யாரு உங்கப்பானா கொடுப்பான் என்று அநாகரிகமாக கேட்க கூடாது என்பதால்,
இதை எல்லாம் பசித்தவனுக்கு கொடுப்பது ஒரு நல்ல அரசின் கடமை என்று சொல்லுவோம்.
பசி என்பது வயிற்றுடன் மட்டும் சம்மந்தபட்டது அல்ல. இன்னொரு முக்கியமான பசி ஒன்று உள்ளது.
வசிக்க வீடு கூட இல்லாத ஒரு ஏழை குழந்தைக்கு ஒரு தனி மனிதனால் உணவளிக்க முடியும்.
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி? திராவிடம் அறிந்து கொள்ளுங்கள்
Arul Selvam · குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....
அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்..
அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...
அரசு வேலைக்கு, TNPSC ரெக்ரூட்மன்ட் என
ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது...
ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,
அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்..டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன்
இப்படிப்போகும் லிஸ்ட்..
கடை நிலை ஊழியர் என்னும் பியூன் ஒரு தங்கராசாகவோ செல்வராசாகவோ இருப்பதுவே பெரிய விஷயம்..
பொ.ப.து விலேயே இந்த நிலை என்றால் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு, கல்வித்துறை வாகனப்போக்குவரத்து (RTO), வணிகவரித்துறை
இவைகளைப்பற்றி சொல்லத்தேவையில்லை...
பாரிஸில் தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை.. மேலதிக விபரங்கள்
Thambirajah Jeyabalan : பாரிஸில் யாழ் உரும்பராயை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை!
ஓகஸ்ட் 10 இல் பரிஸ் 95 பிரிவில் யாழ் உருப்பரையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இக்கொலை தொடர்பாக விசாரணைகளை பொத்துசான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவ தினம் அன்று காலை 10 மணிக்கு வேலையால் வந்த கணவர் தனது மனைவியையும் மகளையும் உயிரிழந்த நிலையில் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் அப்போலோ மருத்துவமனையில்....
Velmurugan P - Oneindia Tamil : மதுரை : மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்தது.
இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
மதுரை ஆதீனம் உடல்நலத்தில் முன்னேற்றம் பெற்று , விரைவில் பூரண குணமடைந்து மதுரை ஆதினத்திற்கு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர்,
எனினும் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் மதுரை ஆதீனம் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
ஆப்கானிஸ்தான் மேற்கு நாடுகளால் கைவிடப்படுகிறது! போர்க்களத்தில் இருந்து பெண் செய்தியாளரின் பார்வை
தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள்
ஒவ்வொரு முறையும் நான் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும்போதெல்லாம் என்னை அங்குள்ள மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தெரிந்தவுடன், தாங்கள் டெல்லிக்குச் சென்று வந்த நாள்களையும், அங்கிருந்ததை அவர்கள் எந்த அளவு விரும்பினார்கள் என்பதையும் பற்றி என்னுடன் பேசுகிறார்கள்.
டெல்லியின் சரோஜினிநகர் மற்றும் லஜ்பத் நகர் சந்தைகளில் வாங்கிய பொருள்களைப் பற்றி சிலாகிக்கிறார்கள். . பெரும்பாலும், அவர்கள் என்னிடம் இந்தி அல்லது உருது மொழியில் பேச முயற்சி செய்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் யார் என்று கூறுகிறார்கள்."இந்தியாதான் ஆப்கானிஸ்தானின் உண்மையான நண்பன்" என்று நான் அண்மையில் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தபோது ஒருவர் என்னிடம் கூறினார். ஆப்கானிஸ்தானைத் தவிர பிற நாடுகளுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் ஆடும்போது, ஆப்கானிஸ்தானில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை நான் கண்டிருக்கிறேன்.
தமிழ்நாடு மாடல்’ : அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள்.. தமிழக பட்ஜெட் முழு விவரம்!
தமிழ்நாடு அரசின் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை அடங்கிய முழு விவரம் இங்கே...
தமிழ்நாடு அரசின் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது. இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை அடங்கிய முழு விவரம் வருமாறு:1957 ஆம் ஆண்டிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் அலங்கரித்த இந்த அவையில், இங்கு வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞரின் திருவுருவப்படம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
100 நாள் வேலைத்திட்டம் - 150 நாட்களாக உயர்வு
மின்னம்பலம் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.
குறிப்பாகக் கிராமப்புற மக்களின் நீண்ட கால கோரிக்கையான 100நாள் வேலைத் திட்டத்தை 150நாளாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நாட்கள் 100 நாளிலிருந்து 150 நாளாக உயர்த்தவும்,
தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் உயர்த்தவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.
அதிமுகவைக் கழற்றிவிட்ட கூட்டணிக் கட்சிகள்!- வெளிநடப்பு விவகாரத்தின் உள் நடப்பு!
மின்னம்பலம் : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எடுக்கும் முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்காமல் கழற்றிவிட்டதாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களே இன்று சபையில் முணுமுணுத்திருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில், சட்டத்தின் பல்வேறு கூட்டத் தொடர்களின்போது திமுகவோடு அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் பலமுறை வெளிநடப்பு செய்திருக்கிறது.
ஆனால் இன்று (ஆகஸ்டு 13) திமுக அரசின் முதல் பட்ஜெட் உரையை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனபோதும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியினரான பாமக, பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யவில்லை.
இதைப் பற்றி அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேசினோம்.
இந்தியாதான் தங்களது ராணுவ கூட்டாளி என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டது - இம்ரான்கான்
தினத்தந்தி : இந்தியாதான் தங்களது ராணுவ கூட்டாளி என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
பாரிஸில் புலம்பெயர் தமிழர்களான தாயும், மகளும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!
பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் என இருவரது சடலங்கள், இன்று காலை காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் காவற்துறையினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.
புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன.
கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது.
வியாழன், 12 ஆகஸ்ட், 2021
வெளிநாடுகளுக்கு MBBS கனவோடு செல்லும் மாணவர்களின்மீதான அமைச்சரின் புரிதல் அதிர்ச்சி தருகிறது
Suren Chandran : இந்த நிகழ்வு நடந்து இரண்டு வாரங்கள் கடந்தாயிற்று ஆனால் அது என்மீது ஏற்படுத்திய மனரீதியான தாக்கம் இன்றளவும் குறைந்தபாடில்லை.
வெளிநாடுகளில் மருத்துவப்பட்டம் பெற்ற 80 மாணவர்களுக்கு மட்டும் Internship கட்டணம் 5.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைத்ததை அடுத்து,
அதை எல்லாருக்குமாக குறைக்கக்கோரி மீண்டும் மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கச் சென்றிருந்தோம்.
வெளிநாடுகளுக்கு MBBS கனவோடு செல்லும் மாணவர்களின்மீதான அவரது புரிதல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
*எல்லாருக்கும் எப்படி குறைக்க முடியும்? அப்பறம் எப்படி அரசாங்கம் நடத்தமுடியும்?
19 கோடி பில்லுக்கு 3.5 கோடி கமிஷன்: வேலுமணி மீது ஹோட்டல் அதிபர் புகார்! (வேளச்சேரி சங்கீதா ஹோட்டல் பங்குதாரர் முரளி)
மின்னம்பலம் :முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தன்னிடம் மூன்றரை கோடி ரூபாய் கமிஷனாக கேட்டதாக பிரபல ஹோட்டலின் பங்குதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து ஆகஸ்ட் 10ஆம் தேதி, காலை முதல் மாலை வரையில் ரெய்டு செய்தனர்.
இந்த ரெய்டுக்கு பின்னால் அமைச்சரின் டெண்டர் முறைகேடுகள்தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்...
ரெய்டுக்கு முன்பே ஹோட்டல் பங்குதாரரும் விஜிலென்ஸிடம் வேலுமணி மீது புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அவர் யார் என்று விசாரணையில் இறங்கினோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் நெருக்கமாக இருந்த சென்னை வேளச்சேரி சங்கீதா ஹோட்டல் பங்குதாரர் முரளிதான் அந்த ஹோட்டல் அதிபர் என்பதை அறிந்து முரளியிடமே இதுகுறித்துப் பேசினோம்.
ஆப்கானில் இந்திய ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றினர்
ஆப்கானிஸ்தானுக்கு 2019-ம் ஆண்டில் 4 எம்ஐ-35 ரக ஹெலிகாப்டர்களைப் பரிசாக இந்தியா வழங்கியது. இந்த 4 ஹெலிகளில் ஒன்றைத்தான் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
பெலாரஸ்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கி, அதற்கு நிதியுதவியையும் அளித்தது.
இந்த விமானங்களை இயக்க ஆப்கன் ராணுவத்தினருக்குப் பயிற்சியையும் இந்திய ராணுவம் சார்பில் அளிக்கப்பட்டது. ஆனால், பராமரிப்பு மட்டும் ஆப்கன் அரசின் வசம் இருந்தது.
இந்தியா வழங்கிய எம்ஐ-24வி ஹெல்காப்டர் முன் தலிபான்கள் நின்றிருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
மதுரை ஆதீனம் கவலைக்கிடம்- அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மாலைமலர் : உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
மீனாம்பாள் - யார் இவர்? ரங்கூனில் வசதியான குடும்பத்தில் பிறந்த தலித் பெண்!
பாலகணேசன் அருணாசலம் : மீனாம்பாள் - யார் இவர்?
ரங்கூனில் வசதியான குடும்பத்தில் பிறந்த தலித் பெண்!
பட்டியலின இன தலைவர் #சிவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டவர்..!
படுபுத்திசாலி பெண்.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் என பல மொழிகளை அறிந்தவர்.. பட்டம் பெற்றவர்..!
சென்னை பல்கலைக்கழக செனட்டின் முதல் தலித் பெண் உறுப்பினர்தான் மீனாம்பாள்..!
சென்னை கௌரவ மாகாணத்தின் 16 வருடங்கள் நீதிபதியாக பணியாற்றியவர்தான் மீனாம்பாள்..!
ஏஐஎஸ்சிஎஃப் எனப்படும் அகில இந்திய பட்டியல் சாதிகள் சம்மேளனத்தின் முதல் பெண் தலைவர்தான் மீனாம்பாள்..!
ஒரு தலித் பெண் அரசியலுக்குள் நுழைவதே கடினமான காலகட்டத்தில், இதுபோல இன்னும் பல பதவிகளை மீனாம்பாள் வகித்ததை, வெகு சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்துவிட முடியாது..!
அப்போதிருந்த சமூக சூழலுடன் இவற்றை பொருத்தி பார்த்தால்தான், மீனாம்பாள் மேற்கொண்ட முயற்சிகளின் வலிகளையும் உணர்வுள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும்..!
ஒன்றிய அரசின் ஒட்டச் சுரண்டலை அம்பலமாக்கிய வெள்ளை அறிக்கை...
கனகராஜ் சி பி எம் |
Kanagaraj Karuppaiah : ஒன்றிய அரசின் ஒட்டச் சுரண்டலை வெட்ட வெளிச்சமாக்கிய வெள்ளை அறிக்கை...
தமிழ்நாடு அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் 9.8.21 அன்று வெளியிட்டுள்ளார். அறிக்கையிலுள்ள விபரங்கள் எதுவும் புதியதல்ல. ஆனால், மொத்தமாக தொகுத்துப் பார்க்கும் போது தமிழக நிதிநிலையின் திசைவழியைப் புரிந்து கொள்ள முடிகிறது.
வெள்ளை அறிக்கை என்பது புதிதல்ல. பொதுவாக, நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக ஒன்றிய அரசாங்கம், பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவதைப் போன்றதுதான். மாநிலங்கள் வழக்கமாக இதைச் செய்வதில்லை. ஆனால், கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தமிழகம் உட்பட வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.
இந்த வெள்ளை அறிக்கையை முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ..ரிக்டர் அளவுகோலில் 7.1 Strong quake strikes Philippines, no tsunami threat
மாலைமலர் : பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மணிலா: பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரெய்டு தகவல் எஸ்.பி.வேலுமணிக்கு எப்படி கசிந்தது? டிஜிபி கந்தசாமியிடம் பட்டென கேட்ட முதல்வர் ஸ்டாலின்
Mathivanan Maran - Oneindia Tamil : சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிடப் போகிறார்கள் என்பது அவருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது?
எஸ்.பி.வேலுமணிக்கு தகவல் சொன்ன கறுப்பு ஆடு யார்? என்கிற விசாரணையில் இறங்கி உள்ளாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனேகமாக எஸ்.பி.வேலுமணிக்கு அடியாள் போல இன்னமும் வலம் வரும் அந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத்தான் இருக்கும் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவே இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. தமது பதவிக் காலத்தில் எப்படியெல்லாம் முறைகேடுகளை செய்ய முடியுமோ அத்தனையையும் அரங்கேற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு பணத்தை அபகரித்துக் கொண்டார் என்பதுதான் எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டு.
குறிப்பாக சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர்களில் மலைக்க வைக்கும் அளவுக்கு மெகா ஊழல் முறைகேடுகளை அரங்கேற்றினார் எஸ்.பி.வேலுமணி என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசனும் வழக்கு தொடர்ந்தனர்.
புதன், 11 ஆகஸ்ட், 2021
பார்ப்பன பெண்ணை திருமணம் செய்த ஆர் எஸ் எஸ் தலித் தொண்டர் கொலை .. உத்தர பிரதேசம்
Chinniah Kasi : RSS ஊழியர், யோகியின் அன்புக்கு பாத்திரமானவர், யோகியின் சொந்தத் தொகுதியைச் சார்ந்தவர் கொல்லப்பட்டார்.
இவரைக் கொன்றவர்கள் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அல்ல..
சங்கப் பரிவார சித்தாந்தவாதிகளே..
இவர் செய்த குற்றம், தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் பார்ப்பன பெண்ணைக் காதல் திருமணம் செய்தது தான்..
அனீஸ் கன்னோஜ்ஜியா என்ற தலித் இளைஞர், தீப்தி மிஸ்ரா என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
சங்கப் பரிவாரச் சித்தாந்தத்தை நம்பும் சகோதரர்களே சிந்தியுங்கள்..
இருவரும் ஹிந்துக்கள் தானே.
பின் என்ன பிரச்சினை..?
சங்கப் பரிவார சித்தாந்தம் என்பது அனைத்து ஹிந்துக்களுக்குமானது அல்ல..
ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கொல்லப் பட்ட பின்பும்... இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் ஆளும் சங்கப் பரிவார பா.ஜ.க யோகி அரசு இதுவரை கைது செய்யவில்லை.
ஓ.பி.சி. (27% ) இடஒதுக்கீடு மாநில அரசுகளுக்கே அதிகாரம் .. பாஜகவை பணியவைத்த மாநில அரசுகள்
நக்கீரன் செய்திப்பிரிவு : ஓ.பி.சி. பிரிவினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 671 சாதியினர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது. இது பற்றி விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2018- ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் 102- வது திருத்தத்தின் மூலம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரம் நீக்கப்பட்டது.
மத்திய அரசின் நடவடிக்கை மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் எனக்கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தை நீக்கியது.
இச்சூழலில் 27% இட ஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியலில் எந்தெந்த சாதியினரைச் சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கிட அரசியலமைப்பு 127 ஆவது சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (10/08/2021) கொண்டு வரப்பட்டது.
வேலுமணி வீடு முன்பு கூடிய அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள்: 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு
hindutamil.in : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு நேற்று கூடிய அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு, இடையர்பாளையத்தில் உள்ள அவரது சகோதரர் அன்பரசன் வீடு உள்ளிட்ட கோவையில் 42 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 60 இடங்களில் போலீஸார் நேற்று (ஆக.10) சோதனை நடத்தினர்.
சுகுணாபுரத்தில் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்தவுடன் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அடுத்தடுத்து அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் ஒரே மக்கள் கூட்டமாகக் காணப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டன.
வேலுமணி ரெய்டில் கைப்பற்றப்பட்டது என்ன? விஜிலென்ஸ் அறிவிப்பு!
மின்னம்பலம் : முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மையமாக வைத்து நேற்று (ஆகஸ்ட் 10) 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பான அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரபூர்வமாக நேற்று இரவு வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வந்த புகார்களின் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதன் விசாரணை அறிக்கை அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் அடியாழம் வரை சென்று விசாரிக்க வேண்டும் என்று மேலும் விசாரணை நடத்த வழிகாட்டியது.
அதனடிப்படையில் நடத்தப்பட்ட மேல் விசாரணைகளின் அடிப்படையில் வேலுமணி மீதும் 16 நபர்கள் நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வேளாண்மைக்கு முதன்முறையாக தனி பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தனி நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக தலைமையிலான அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி,முதல் முறையாக தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்
மாலைமலர் : அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ஆர்.வேல்ராஜ், துணைவேந்தராக 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021
தமிழ்நாட்டின் திமுகதான் ஈழத் தமிழருக்கு விடிவைத் தேடித் தரும்: கொழும்பு கலைஞர் நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம் அதிரடி
கலைஞர் நினைவாலயத்தின் ஏற்பாட்டில் 3-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமை வகித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் இந்து சமய விவகார ஆலோசகர் கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், மலையக மக்கள் முன்னணியின் துணைத் தலைவர் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் ஆகியோர் நினைவஞ்சலி உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம் பேசியதாவது: கலை, இலக்கியம், அரசியல் என்று மூன்று துறைகளிலும் அகலக் கால் பதித்து இன்று நாம் எல்லோரும் வியக்கின்றளவு பெரும் தடயத்தை விட்டுச் சென்றிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இந்த நினைவு வைபவத்தில் வெறுமனே அவரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது என்பது மாத்திரமல்ல, அவர் நிலைநாட்டி விட்டுச் சென்றிருக்கின்ற சாதனைகளையும் நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம்.
வீட்டில் டெண்டர் விட டிஸ்கஸ் நடத்திய SP வேலுமணி & கோ - FIRல் உள்ள முக்கிய தகவல்கள் இதோ!
கலைஞர் செய்திகள் : லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரின் சோதனை பிடியில் சிக்கியுள்ள எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்களின் முறைகேடுகள் குறித்து FIRல் குறிப்பிட்டுள்ளதன் விவரம்.
க்ரீன்வேஸ் சாலை வீட்டில் டெண்டர் விட டிஸ்கஸ் நடத்திய SP வேலுமணி & கோ - FIRல் உள்ள முக்கிய தகவல்கள் இதோ!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள சில முக்கியமான விஷயங்கள் குறித்த விவரம் பின்வருமாறு:-
2014 - 2018 முதல் தற்போது சோதனையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒரே இணையதள இணைப்பை பயன்படுத்தி ஒரு கம்ப்யூட்டர் மூலமாக டெண்டர்களை கோரி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2014 - 2017 முதல் கோவை மாநகராட்சி தொடர்பான 47 டெண்டர்களை எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் எடுத்தது தெரியவந்துள்ளது. இந்த டெண்டர்கள் அனைத்துமே ஒரே செல்போன் இணைப்பு மூலமாகவும் ஒரே இணையதள இணைப்பு மூலமாகவும் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“ரெய்டு நடக்கும்போதே விருந்து வைக்கும் ஒரே கோஷ்டி”: வேலுமணி வீட்டை பிக்னிக் ஸ்பாட்டாக மாற்றிய அதிமுகவினர்
வேலுமணியை விட்டுப் பிடித்த விஜிலென்ஸ்: வேட்டையின் முழு ஸ்கெட்ச்
மின்னம்பலம் :முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மையமாக வைத்து ஆகஸ்டு 10 ஆம் தேதி அதிகாலையில் இருந்தே கோவை, சென்னை உள்ளிட்ட 52 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள்.
கடந்த ஜூலை 24 ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான 26 இடங்களில் விஜிலென்ஸ் (லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்பு துறையை இனி இப்படியே அழைப்போம்) போலீஸார் ரெய்டு நடத்தினார்கள்.
அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இது அரசியல் ரீதியான தாக்குதல் என்றனர். ஆனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது விஜிலென்ஸ் சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவு செய்தது.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் மீதான ரெய்டுக்குப் பின்னர் ஜூலை 27 ஆம் தேதி சென்னை விஜிலென்ஸ் அலுவலகத்தில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஜிலென்ஸ் போலீஸாரின் சேலம், விழுப்புரம், கோயமுத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 யூனிட்டுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையிலான விஜிலென்ஸ் அலுவலகம் இருக்கிறது. அதை துறை ரீதியாக யூனிட் என்று சொல்வார்கள். அதாவது சேலம், விழுப்புரம், கோயமுத்தூர், புதுக்கோட்டை மாவட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளை அழைத்து அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
மாலைமலர் : சென்னை: பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரைக் காணலாம்.
இந்நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதௌ இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடிசை மாற்று வாரிய வீடுகள்... புதிய திட்டங்களைக் கையில் எடுக்கும் தி.மு.க. அரசு
கலைஞர் செய்திகள் : சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுதந்திரா நகர், கிரீம்ஸ் சாலை, நக்கீரர் நகர், எஸ்.புரம், எம்.கே. ராதா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்,"குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் முத்தமிழறிஞர் கலைஞரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டவை. நீண்டகால பயன்பாடு, தட்பவெப்ப நிலை மாறுபாடு ஆகியவற்றால் அவை சிதிலமடைந்துள்ளன.
அவற்றை இடித்துவிட்டு புதிதாகக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.
குடிசை மாற்று வாரிய வீடுகள்... புதிய திட்டங்களைக் கையில் எடுக்கும் தி.மு.க. அரசு : அது என்ன?
மீரா மிதுனை உடனே கைது செய்க" - பட்டியலினத்தை இழிவாக பேசியவர் .. வழக்கறிஞர்கள் போராட்டம்!
நக்கீரன் : பட்டியலின் சமூகத்தினரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று முன்தினம் (07/08/2021) புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், "நடிகை மீராமிதுன் ட்விட்டரில் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசி காணொளிப் பதிவைப் பதிவிட்டுள்ளார்" எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
37 அணைகள் புனரமைப்பு: ரூ.610 கோடியில் உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
மின்னம்பலம் : தமிழ்நாட்டில் 37 அணைகள் புனரமைப்பு பணிக்கு ரூ.610 கோடியில் உலக வங்கியுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் முதலில் ஐந்து அணைகளுக்கு விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் நீர்வளத் துறை உயரதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு ஏற்கெனவே ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின், இரண்டாவது கட்டமாக அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் 37 அணைகள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தூய்மை பணிகள் இரவிலேயே முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி
மின்னம்பலம் : பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதைத் தடுக்க சென்னையில் அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் 387 கி.மீ நீளமுள்ள 471 பஸ் சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.
திங்கள், 9 ஆகஸ்ட், 2021
தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!” – விளக்கும் வேளாண் அதிகாரி
“தென்னை மரம் செழித்து வளர்ந்து திரட்சியான காய்களைக் கொடுக்கவும், வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கவும், ஒளிச்சேர்க்கை நடைபெறவும் தேவையான பயிர் உணவை மண்ணில் இருந்து கிரகித்துக் கொள்ள நீர் அவசியம். தண்ணீர் குறைபாடு ஏற்பட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிப்புக்குள்ளாகும். தென்னை மரங்களை நடவு செய்த முதல் வருடம் ஒருநாள் விட்டு ஒருநாள் பத்து லிட்டர் தண்ணீர் விடவேண்டும். இரண்டு முதல் மூன்று வயது கன்றுகளுக்கு வாரம் இரண்டு முறை 40 லிட்டர் தண்ணீரும், அதன் பிறகு வாரம் 60 லிட்டர் தண்ணீரும் விட வேண்டும்.
வெள்ளை அறிக்கையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளும்!
மின்னம்பலம் : நிதி நெருக்கடி இருந்தாலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வெளியிட்ட நிதி நிலை வெள்ளை அறிக்கை பற்றி இன்று (ஆகஸ்டு 9) கருத்து வெளியிட்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி,
“கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி எப்படி நடந்தது ? எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தியது ? அரசின் வரவு-செலவு என்ன ? பற்றாக்குறை என்ன ? கடன் சுமை என்ன ? என்ற விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாக, சல்லடை போட்டு சலித்து அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சரை பாராட்டுகிறேன்.
எந்தவொரு ஆட்சியும் தொடங்கும் போது, கடந்த கால ஆட்சியினால் ஏற்பட்ட யதார்த்த நிலைமைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தமது பணிகளை தொடங்குவது சரியான அணுகுமுறையாகும்.
அந்த அணுகுமுறையின்படி வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை, தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சிமுறை, மக்கள் நலனில் அக்கறை இல்லாத சுயநலம் சார்ந்த செலவினங்கள், ஊதாரித்தனமான செலவுகள் ஆகியவற்றை செய்ததன் மூலமாக மக்கள் மீது வரலாறு காணாத கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
மாலைமலர் :பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு வரி வசூல் செய்தால் மட்டுமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை:
தமிழ்நாட்டின் அரசு நிதி நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகிற 13-ந்தேதி தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதற்கு முன்னதாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை, வரி வருவாய் வீழ்ச்சி குறித்த தகவல்களை உங்களிடம் தெரிவிக்க இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. முதல்- அமைச்சரின் வழிகாட்டுதல்படி 3 மாதங்களாக உழைத்து இந்த அறிக்கையை தயாரித்து உள்ளோம்.
பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது
Vishnupriya R - Oneindia Tamil : மதுரை: அவனியாபுரத்தில் திருமணமாகி மூன்றாவது நாளிலேயே கர்ப்பிணி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அவரது காதல் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சோழவந்தான் ராயபுரதைச் சேர்ந்த சகாயராஜ் - செல்வமேரி என்பவரின் மகள் கிளாடிஸ் ராணி வயது(21) இவர். அவனியாபுரம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கிளாடிஸ் ராணி 3 மாதம் கர்ப்பமானாள். இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே காரணமானவர் யார் என கேட்டுள்ளார்.
அப்போது கிளாடிஸ் ராணி பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவர் என கூறியதை அடுத்து பெற்றோர் அவரை அழைத்து பேசி உள்ளனர். அப்போது ஜோதிமணி கர்ப்பத்திற்கு காரணம் நான் இல்லை என கூறியதாக தெரிகிறது.
நான் மகிழ்ச்சியாக இல்லை: மாசெக்கள் கூட்டத்தில் மனம் திறந்த ஸ்டாலின்
மின்னம்பலம் : தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிப்பதற்காக ஆளுங்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்டு 8) நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் பற்றி விவாதித்து அதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்தார் முதல்வர். இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், மூத்த அமைச்சர்கள், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலை தவிர இன்னொரு டாப்பிக்கையும் இந்த கூட்டத்தில் தானாகவே முன் வந்து பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதைக் கேட்டு பல மாசெக்கள் உருக்கமாகிவிட்டார்கள்.
ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021
பெப்சி அமைப்புக்கு முடிவுகட்டிய தயாரிப்பாளர்கள் சங்கம்!
இவர் நாயகனாக நடித்து வெளியான திரைப்படங்களின் படப்பிடிப்பு, படம் வெளியீடு, சம்பள பஞ்சாயத்து என ஏதாவது ஒன்று இல்லாமல் இருந்தது இல்லை.
படப்பிடிப்புக்கு நேரம் தவறி வருவது அல்லது வராமல் இருந்து கொள்வது போன்ற காரணங்களால் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட பின்னரும் சிலம்பரசன் நடிக்கும் படங்களை தயாரிப்பது ஏன் என்கிற கேள்விகளை எழுப்புகிற போது, கதாநாயகன் பஞ்சம்தான் காரணம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில். இவரை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் இப்போது சினிமாவிலேயே இல்லை என்கின்றனர்.
நெடுந்தீவு மீனவர்களுக்கு இந்திய மீனவர்களால் இரண்டு கோடி ரூபாய் நஷ்டம்!
sooddram.com :இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக, தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நட்டத்தை இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும், கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில், இன்று (08) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோவை ஹோட்டலில் அழுகிய நிலையில் கேரளா பெண் சடலம்
Manikandaprabu S | Samayam Tamil : கோவை தனியார் ஹோட்டலில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கு ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் அறையை திறந்து பார்த்த போது, பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அதே அறையில் ஒருவர் பலத்த காயங்களோடு உயிருடன் இருந்துள்ளார்.
இது குறித்து, உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயங்களுடன் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என் அக்கா எங்கே...? விமான நிலையத்திலேயே கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமி!
நக்கீரன் - மகேஷ் : திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (22). சேகர் – உஷா தம்பதியரின் மகளான தனலட்சுமி சிறந்த தமிழக தடகள வீராங்கனை. இவர் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றிருக்கிறார்.
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு அவர் தேர்வாகி இருந்தார்.
இதில் பங்கேற்க அவர் டோக்கியோ சென்றிருந்தார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த 12. 7. 2021 தேதியன்று திடீரென உயிரிழந்துவிட்டார்.
இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவர் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என்று அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் யாரும் அவருக்கு தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.
இலங்கையில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது
வீரகேசரி :இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் நேற்று (06.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 12 ஆண்களும், 08 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 ஆண்களும். 43 பெண்களுமாக 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5017 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் இன்று (07.08.2021) மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாட்டை துரைமுருகன்: .இனிமே தான் தீவிரமாக இறங்க போகிறேன் -! இனியாவது அடக்கி வாசிப்பாரா?
Giridharan N | Samayam Tamil : அரசியல் கட்சித் தலைவர்களை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுிட்டுள்ளது.
சாட்டை துரைமுருகன் யூடியூபில் அரசியல் கட்சித் தலைவரை அவதூறா சித்தரிப்பு.
திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.
துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு.
திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன், ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நடிகர் வடிவேலு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வருகிறார் புதிய சேனலில் ஆட்டம் ஆரம்பம்
Mohana Priya S - /tamil.filmibeat.com : சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென அழுத்தமான இடத்தை பிடித்து வைத்துள்ளார் வைகைப்புயல் வடிவேலு. இவரது நகைச்சுவையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம். மீம்களில் கூட வடிவேலு மற்றும் அவரது வசனங்கள் இல்லாமல் வரும் மீம்கள் மிக மிகக் குறைவு தான்.
ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் சினிமா பயணத்தை துவக்கிய வடிவேலு, ஏராளமான படங்களில் தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சவை நடிகராக வளர்ந்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு சர்ச்சைகளால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த சினிமாவிலும் நடிக்காத நிலையில் உள்ளார் வடிவேலு.
இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் அடுத்த பாகமாக இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தை தயாரிக்க டைரக்டர் ஷங்கர் முடிவு செய்தார். இந்த படத்தின் போது ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலு, இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார். இதனால் வடிவேலுவிற்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு போனார் ஷங்கர்.