சனி, 13 நவம்பர், 2010

உத்தமபுத்திரன் - விமர்சனம்


          குடும்பத்தோட குதூகலமா படம் பார்க்கலாம். காதல், காமெடி, செண்டிமென்ட், சண்டை காட்சிகள் என எல்லா விஷயங்களும் நிறைந்து இருக்கும் மசாலா மூவி. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த 'ரெடி' படத்தின் ரீமேக் என்பதாலோ என்னவோ காட்சிக்கு காட்சி தெலுங்கு வாசம் வீசுகிறது. 



தெலுங்கில் நடித்த ஜெனிலியா இதிலும் வலம் வருகிறார். பாக்யராஜ், அம்பிகா, ரேகா, ஆசிஷ் வித்யார்த்தி என எல்லா கதா பாத்திரங்களையும் கச்சிதமாய் ரீப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஜவஹர். ஆனால் இதில் 'உத்தமபுத்திரன்' தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பு... 

மூன்று அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் பெரிய கூட்டுக் குடும்பம். இதல் ஒருவரின் மகன் சிவா (தனுஷ்). யாருக்காவது ஒரு பிரச்சனைன்னா போதும் உயிரைக் கொடுக்கக் கிளம்பிவிடுவார் சிவா. சிவாவின் நண்பனின் காதலில் பிரச்சனை. நண்பனின் காதலியை கடத்துவதற்கு பதிலா வேறொரு பெண்ணை கடத்திக் கொண்டுவந்து மொக்கை வாங்குகிறார் சிவா.

 

ஆனால் சிவாவின் அதிர்ஷ்டம் அது பூஜாவாக (ஜெனிலியா) இருக்க, அவர் மேல் சிவாவுக்கு காதல் வருகிறது. தன்னை கல்யாணம் செய்துகொள்ள பல சிக்கல்கள் இருப்பதாக பூஜா விளக்கம் தருகிறார். தன் காதலை சிவா எப்படி வெல்கிறார், அதற்கு சிவாவின் மாமா எமோஷனல் ஏகாம்பரம் (விவேக்) எப்படி உதவுகிறார் என்பதே சுபமான க்ளைமாக்ஸ். 

படத்தின் முதல் பாதி சீரியல் கணக்கா ஜவ்வு மாதிரி இழுத்திருப்பது ரொம்ப போர். முதல் பாதியில் காமெடிக்கு கருணாஸை நம்பியிருக்கிறார் இயக்குனர். கருணாஸும் முடிந்த அளவு முயற்சித்திருக்கிறார்... ஆனா சிரிப்புதான் வரலை! சமீபகாலமாக பேசிப் பேசி காதைப் புண்ணாக்குகிற விவேக் இதில் பேசாமல் நடித்து கைதட்டல் வாங்கி இருக்கிறார்.

  

சந்தோஷ் கான் கதாபாத்திரத்தில் மயில்சாமி சிரியோ சிரின்னு சிரிக்க வைக்கிறார். சின்ன முத்து கவுண்டர், பெரிய முத்து கவுண்டர் என அண்ணன் - தம்பிகள் ஆசிஷ் வித்யார்த்தி, ஜெயப்பிரகாஷ். கொடூரமான கொண்டை மண்டைகளோடு அறிமுகமாகி க்ளைமாக்ஸ் வசனங்களில் நெகிழ வைக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் கூட ரோஸ் பவுடர் லிப்ஸ்டிக் என மேக் அப்-போடு திரையில் திரிவது அபத்தம். ஒரே பிரேமில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பல கேரக்டர்களை சும்மா நிற்க வைத்திருப்பது நியாயமில்லை. 

சண்டைக் கட்சிகள் ஓவர் அலட்டல் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது ஆறுதல். இசை விஜய் ஆண்டனி, தான் பாடுவது வெளியே கேட்கிறதா இல்லையா என்ற வழக்கமான சந்தேகத்தில் தொண்டைக் கிழிய கத்தியிருக்கிறார். இருந்தாலும் மனசு முனுமுனுக்குற வார்த்தை உஸ்ஸமலாரிஸே... 

எது எப்படியோ இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் தனுஷ் - ஜெனிலியா ரொமான்ஸ் சும்மா நச்சுனு இருக்கு! சறுக்கி விழ இருந்த உத்தமபுத்திரனை கைக் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார் 'எமோஷனல் ஏகாம்பரம்' விவேக். 

உத்தமபுத்திரன் - காமெடி ஏகாம்பரம்

Bihar ஆடைகள் களையப்பட்டு கசையடி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

தன் இரண்டாவது கணவனை மறுமணம் செய்வதற்கு இளம்பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகள் களையப்பட்டு, கசையடி வழங்கப்பட்ட கொடுமையான சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இதுகுறித்து கத்திகார் பகுதி போலீசார் கூறியதாவது: பீகாரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் (35) ஒருவரது கணவர், திருமணமாகி நான்காண்டுகள் கழிந்த நிலையில் இறந்து போனார். பின், முகமது இஸ்லாம் என்பவரை அப்பெண் மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

ஆனால் இந்தத் திருமணமும் நிலைக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர். சில நாட்களில் சிறுவனது உடல்நிலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. முகமது விவாகரத்தான மனைவியை அழைத்து வந்து மகனை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். சிறுவன் தேறிய பின், இருவரையும் விட்டு விட்டுப் போய்விட்டார். இந்நிலையில், முகமதுவும், அவரது சகோதரர் சம்சுதீனும் சேர்ந்து ஒரு பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு வரும்படி, இளம்பெண்ணுக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டது.

இம்மாதம் 8ம் தேதி, க்வால்டோலி-கல்யாண் நகர் கிராமத்தில் நடந்த அந்த பஞ்சாயத்தில், இளம்பெண்ணிடம் மறுமணம் செய்யவும் வீடு கட்ட பணம் கேட்டுள்ளனர். அதோடு பஞ்சாயத்துத் தலைவருக்கு கோதுமை மற்றும் அரிசியும் கொடுக்கும்படி நிர்பந்தித்தனர்.

இதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண்ணை, பஞ்சாயத்தார் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து, கசையடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண், இம்மாதம் 11ம் தேதி போலீசில் புகார் அளித்தார். எப்.ஐ.ஆர்.,பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்துத் தலைவரையும், சம்சுதீனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: திருமாவளவன்


தீவிர மது விலக்கை கொண்டு வரவேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்போடு உள்ளது. குடிசை பகுதிகளில் மதுக்கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. எனவே குடிசைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என, திருமாவளவன் கூறியுள்ளார்.

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், தீபாவளி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தலித் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆனந்தூர் அய்யனார் என்ற வாலிபர் ஜாதி வெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பிரணபுரியில் சொல்வழகன் கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 26 இடங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களிலும் அப்பாவி தலித்துகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பண்ருட்டி அருகே காட்டுபுலியூரில் கடந்த 6 மாதமாக தொடர் தாக்குதலுக்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

குடிசைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தீபாவளி பண்டிகை தினத்தில் மதுரை அருகே 50 குடிசைகள் சூறையாடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலித் மக்கள் மீது ஜாதி வெறி கும்பல்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

பெண்ணுக்கு மின்சார ஷாக் கொடுத்து போலீஸ் நிலையத்தில் சித்ரவதை

தங்க செயின் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற பெண்ணுக்கு, கோத்தனூர் போலீஸ் நிலையத்தில் மின்சார ஷாக் கொடுத்து, மனநிலை பாதிப்பை உண்டாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் வசிப்பவர் கஸ்தூரி (35). இவர், டேனரி ரோட்டிலுள்ள மாநகராட்சி பூங்காவில் பராமரிப்பு பணி செய்து வருகிறார். உடல்நலம் சரியில்லாத கணவர் மற்றும் தன் இரண்டு மகன்களுடன், அருகிலுள்ள ஷெட் ஒன்றில் வசித்து வருகிறார்.கடந்த திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில், அங்கு வந்த நான்கு போலீஸ்காரர்கள், கஸ்தூரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தனர். தன் தாயாரை போலீசார் அழைப்பதை பார்த்து, மிரண்டு போன அவரது மகன் அஜித் (13), தானும் உடன் வருவதாக கூறினான். அவர்கள் இருவரும் ஆம்னி கார் ஒன்றின் மூலம் கோத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு, முதல் மாடியிலுள்ள அறைக்கு கஸ்தூரி அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே இருந்த வீரா என்பவன், கஸ்தூரியை காண்பித்து, இவரிடம் தான் தங்க செயின் இருப்பதாக கூறியவுடன், பெண் போலீஸ் ஒருவர்,  கஸ்தூரியை லத்தியால் தாறுமாறாக அடிக்க துவங்கினார். தங்க செயினை எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு விடாமல் அடிக்கவே, வலி பொறுக்க முடியாத கஸ்தூரி, தனக்கு ஏதும் தெரியாது என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் அஜித் மாடிக்கு  ஓடினான். தன் தாயாரை போலீசார் அடிப்பதை பார்த்து, பயந்து போய், "என் அம்மாவுக்கு எதுவும் தெரியாது. அவரை அடிக்காதீர்கள். விட்டு விடுங்கள்' என்று கெஞ்சினான். மதியம் ஆரம்பித்த அடியுடன் கூடிய விசாரணை இரவு 9 மணி வரை தொடர்ந்தது.பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல், பெண் கைதிகளை போலீஸ் ஸ்டேஷனில்  வைத்திருக்க கூடாது என்பது விதிமுறை. குழந்தைகளையும், உடன் வைத்திருக்க கூடாது. 13 வயதான அஜித்தையும், உடன் வைத்து கொண்டு நடந்த இந்த விசாரணையில், கஸ்தூரிக்கு மின்சார ஷாக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கஸ்தூரி குற்றமற்றவர் என்பதை உணர்ந்த போலீசார், அவர்களை மீண்டும் வேனில் ஏற்றி பிரேசர் டவுனில் ஓட்டல் ஒன்றின் அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.போலீசாரின் கொடூர தாக்குதல்களாலும், மின்சார ஷாக்கினாலும் பாதிக்கப்பட்ட கஸ்தூரி, தற்போது, அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். "என்னை அடிக்காதீர்கள், எனக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லி மிரண்டு போய் காணப்படுகிறார். இதை பார்த்த அவரது உறவினர்கள், மாநில மனித உரிமை கமிஷனின் பிரகாஷ் கரியப்பாவிடம் விஷயத்தை கொண்டு சென்றனர். இவர்களை கொண்டு வந்து விடும் போது, இந்த விசாரணை பற்றியோ, எங்களை பற்றியோ வெளியில் ஏதாவது சொன்னால், உன்னையும், உன் தந்தையையும் கொன்று விடுவோம் என்று சொல்லி போலீசார் மிரட்டியுள்ளனர், என்ற தகவலும் கிடைத்துள்ளது.கஸ்தூரிக்கு மின்சார ஷாக் கொடுத்தது குறித்து சிகிச்சை அளித்த விக்டோரியா மருத்துவமனை மூத்த டாக்டர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பின்னர், இந்த புகாரை மாநில மனித உரிமை கமிஷன் மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம் என்று பிரகாஷ் கரியப்பா கூறினார்.

கோத்தனூர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, விசாரணைக்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தது உண்மை. ஆனால், மின்சார ஷாக் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று மறுத்தனர்.
kk - ksa,இந்தியா
2010-11-13 10:47:16 IST
ஒபாமா இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்று கூறினாரே அது இதுதானோ. இதுபோல் கொடுமைகள் எல்லாம் வரியவருக்கு நடக்கும்போது எப்படி இந்தியா வளர்ந்த நாடு என்று கூறினார் என்பது புரியவில்லை....
Mr Jai - Canada,கனடா
2010-11-13 10:40:34 IST
What karnataka police has done is inhumane, but the guilty should be punished. At the same time lets not undermine the indian democracy. Mr. Saran, Dubai, UAE, please think how far freedom in middle eastern countries are better than India. In Dubai can you ever think of raising your voice against the governerment rule like hiking fees in govt departments, or sudden toll in maktoom bridge in the heart of the city, rental hikes, a kind of property taxes in DEWA bills, protest for unpaid salaries, protest against 6 month or 1 year no entry ban. Do you whole heartedly think a labourar living in sonapur is having a better living standards than a labourer living in india. At least in india, people even if they dont have means for the next course, have freedom. Mr. Sadak, China, have you ever thought of Tianman square, brutal crushing /killing of students pro democracy movement. Where is freedom or living without fear. Indian democracy and freedom is far above comparison. The problem is power and authority at the wrong hands....
சில்லுவண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-13 10:05:20 IST
ஏழைகளுக்கு நம்ம நாட்டில் சுதந்திரம் இல்லை;;;நம்ம நாட்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள்;;நம்ம அரசியல் ரவுடி கும்பலுக்கு சல்லுட் அடிக்கிறானுக;;;;ஆனால் பாருங்க ஒரு ஏழை பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலிஸ் ஸ்டேஷன் கொண்டு போய் வெதுப்புராணுக;;;எப்படி கொடுமை நடக்குது பாருங்கோ நம்ம இந்திய சுதந்திர நாட்டில்;;;...
bhagyraj - coimbatore,இந்தியா
2010-11-13 09:54:06 IST
ஒரு சில போலீஸ்க்கு இருகிற தெனாவெட்டு யாருக்கும் இருக்காது... இது இந்த இந்தியாவில் மட்டும்தான். அவங்களுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு... அவங்க மனிதர்களா இல்ல அரக்கர்கள... பெண்ணை அடிக்க... லூசுங்க...
khuthbudin - chennai,இந்தியா
2010-11-13 09:50:04 IST
இவ்வாறு காவல்துறை நடந்து கொள்வது மிகவும் வருத்தமாக வுள்ளது ....
ரியாஸ் - uaedubai,இந்தியா
2010-11-13 09:49:14 IST
மக்களை காப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்படும் போலீஸ் காவல்காரர்கள் ஒரு மனித நேயம் அற்றவர்களாக இருக்கும்போது, அவர்களை அவர்களின் இடத்திற்கு போய் செருப்பால் அடித்து இழுத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புக்கு முழு நிவாரணம் அளித்து அவர்களின் அவர்களை வேலையில் இருந்து உடனடியாக துரத்தி கடுமையான ஜெயில் தண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும் பின்பு வெளியில் வந்தாலும் யாரும் இப்படிப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது ....
gopinath - chennnai,இந்தியா
2010-11-13 09:42:10 IST
Keedu keta antha athigarigalai velail erunthu neeki naadukatatha vendum...
ராமகிருஷ்ணன் - Singapore,இந்தியா
2010-11-13 08:34:56 IST
The police officers all should be punished severely. They always torture poor, helpless and weak people....
sadak - Guangzhou,சீனா
2010-11-13 07:46:30 IST
சரண் சொல்லுவது முற்றிலும் சரி. இங்கு சீனா வந்து பார்க்கட்டும்.முழு சுதந்திரம் கிடையாது . ஆனால் பாதுகாப்பாக வாழமுடியும்.இந்திரா காந்தி யின் மிசா போன்று கட்டுபாடான ஜனநாயகம் தேவை நம் நாட்டிற்கு....
சாய் - தமிழ்நாடு,இந்தியா
2010-11-13 07:39:47 IST
this are only for poor people.i strongly agree with Mr.prakash.s words. there is no human rights for poor people. jai hind...
ப பாஸ்கர் - திண்டுக்கல்,இந்தியா
2010-11-13 07:34:57 IST
அங்க ஒருத்தன் கோடி கோடியா திருடி இருக்கான். அவனுக்கு சல்யுட் அடிங்க. ஒன்னும் அறியாத பாமர மக்களுக்கு ஷாக் வையுங்கள். என்ன ஜென்மங்கள் நீங்கள் எல்லாம்?... நன்றி, பிரகாஷ். ச....
சென் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-11-13 06:25:38 IST
இது எல்லாம் ஒரு நாடு. மக்களே வேறு நாட்டுக்கு ஓடி விடுங்கள்....
பிரபாகர் - சென்னை,இந்தியா
2010-11-13 06:25:02 IST
Those police guys must be punished, must be fired from their job...
ச.rameshkumar - singapore,சிங்கப்பூர்
2010-11-13 05:52:38 IST
அர்ரக்கர்கள்...
Mohan - madurai,இந்தியா
2010-11-13 05:05:30 IST
They all must be punished....
பிரகாஷ் ச - Seattle,யூ.எஸ்.ஏ
2010-11-13 03:02:37 IST
அங்க ஒருத்தன் கோடி கோடியா திருடி இருக்கான். அவனுக்கு சல்யுட் அடிங்க. ஒன்னும் அறியாத பாமர மக்களுக்கு ஷாக் வையுங்கள். என்ன ஜென்மங்கள் நீங்கள் எல்லாம்?...
திருநாவுக்கரசு - சென்னை,இந்தியா
2010-11-13 01:29:45 IST
கடவுளே, என்ன கொடிமையடா இது? மக்களை காப்பாற்ற அரசாங்கம் இல்லையா? அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்க்குதானா? இந்த தாயாரின் நிலை வேறு எவருக்கும் நேரக்கூடாது. நேற்று ஒரு முதல்வர் பாண்டிபஜாரில் கூட்டத்தை பார் மக்கள் பண்டிகை கொண்டாடுகிறார்களா இல்லையா என்று தெரியும் என மார் தட்டினார், இன்று அண்டை மாநிலத்தில் ஒரு பாவப்பட்ட வசதி இல்லாத ஒரு தாய் போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்படுகிறார், நானும் அந்த பையனைப்போல இருந்த நாள் என் கண்களில் தெரிகிறது....
சரண் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-13 01:05:14 IST
சுதந்தரம் தேவை. ஆனல் அளவுக்கு மீறிய சுதந்தரம் ஆபத்து (நாட்டுக்கு ) ஏழை மக்கள் அனைவரும் நாட்டை காலி செய்வது அவர்களுக்கு பாதுகாப்பு (அரபு நாட்டுக்கு வரவும்.இங்கு காந்தியின் கனவு நினைவாகும்.முழு சுதந்தரத்தை அனுபவிக்கலாம் ....
citizan - dubai,இந்தியா
2010-11-13 00:53:44 IST
இது சுதந்தர இந்திய .வாழ்க ஜனநாயகம் வாழ்க இந்திய ,(தயவு செய்து 2௦ ஆண்டுகள் காத்து இருக்கவும் )...

யாழ். பல்கலை.வவுனியா வளாகத்தில் ஏராளம் முறைகேடுகள்: அனைத்து பல்கலை.மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரை மண்டபம் மற்றும் ஏனைய வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றம் சாட்டுகின்றது. அதன் காரணமாக போதுமான வசதிகள் இன்மையைக் காரணம் காட்டி, அண்மையில் அவ்வளாகத்துக்கு தெரிவான 150 மாணவர்களின் பதிவை மேற்கொள்வது கூட நிர்வாகத்தினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் மாணவர் அமைப்பு தலையிட்டதன் காரணமாக குறித்த மாணவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே வளாகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தங்கு விடுதியானது ஐந்து கிலோ மீற்றருக்கும் அப்பால் அமைந்துள்ள ஒரு சாதாரண வீடு என்று சுட்டிக் காட்டும் மாணவர் அமைப்பானது, அங்கு உணவு மற்றும் குடி நீர் பற்றாக்குறை தீவிரமாக நிலவுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றது.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தென்னிலங்கை பல்கலைக்கழக வளாகங்களின் வசதிகளைப் போன்று வவுனியா வளாகத்தின் வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தெற்காசியாவில் அதிகளவு நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை

தெற்காசியாவில் அதிகளவு நிரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கைத் திகழ்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் இலங்கையில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
20 -79 வயதுப் பிரிவினை உடையவர்களிடையே அதிகளவான மக்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நாடுகளை விடவும் அதிகளவான நோயாளிகள் இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புகைப்பிடித்தல், மன உலைச்சல், பிழையான உணவுப் பழக்க வழக்கம், மதுபானம் அருந்துதல் ஆகியவற்றினால் அதிகளவு நிரிழிவு நோயாளர்கள் உருவாவவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட மருத்துவர் டொக்டர் பிரசாத் படுலந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நபர் ஒருவர் பத்து கிராம் உப்பையும், 60 கிராம் சீனியையும், 15 – 20 வீதமான கொழுப்பு அடங்கிய உணவுகளையும் சராசரியாக உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Manipur Sharmila 10 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருக்கும் பெண்


மணிப்பூர் மாநிலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஐரோம் ஷர்மிளா என்ற பெண் கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின் தனிமாநிலமானது கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980 ஆம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் ஒடுக்குவதற்காக இராணுவத்திற்குஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்வழங்கப்பட்டது.
இந்த சிறப்புச் சட்டத்தின்படி பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். இராணுவம் மற்றும் துணை இராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட தங்கள் மேதலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. நீதிமன் றத்தின் அனுமதியின்றி எங்கு எப் போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த சட்டம் அங்கு அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து அங்கு மினத உரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இராணுவத்தினரால் அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள், அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் இராணுவத்தினரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் திகதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை இராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சமூக ஆர்வலரான ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண், மணிப்பூர் மாநிலத்தில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் அவரை பொலிஸார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைந்தனர். ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தபடியே ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால் அவருக்கு பொலிஸார் கட்டாயப்படுத்தி திரவ உணவுகளை செலுத்தினர். ஒரு ஆண்டிற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால் மறநாளே அவர் கைது செய்யப்பட்டார்.

TNA .நாவற்குழு சம்பவம் ரி:.ன் ஏக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ்

வரப்போகின்ற வடமாகாண சபைத்தேர்தலில் அரசாங்கத்துடன் கூட்டுசேருகின்ற கட்சிகள் அனைத்தும் தோல்விகாணப்போவது நிச்சயம். நாவற்குழியில் சிங்கள மக்கள் பலவந்தமாக குடியேறிய சம்பவம் வடக்கு மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையின்மையை தோற்றுவித்துள்ளது. இதனால்தான் என்னவே டக்ளஸ் விழுந்தடித்துக்கொண்டு ஜனாதிபதியிடம் போய் முறையிட்டிருக்கிறார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு உயிர்கொடுப்பதில் அரசாங்கம் தீவிரமாகவே செயற்பட்டு வருகிறது. நாவற்குழி சம்பவங்கள் போன்று ஏடாகூடமாக எதையாவது செய்துவிட்டு தமிழ்க்கூட்டமைப்பிற்கு குளுக்கொஸ் ஏத்தி விடுகிறது.  டக்ளஸ் போன்றவர்கள்தான் பாவம். மக்கள் ஆதரவைக் கவருவதற்காக சிறு சிறு திட்டங்களைச் செய்து சப்போட் எடுக்க நினைக்கும்போதெல்லாம் நாவற்குழி சம்பவம் மாதிரி ஏதாவது வந்து எல்லாத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறது.
60ஆண்டு காலமாக தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசு தொடர்பாகவும் சிங்கள மக்கள் பற்றியும் தமிழர்களிடையே வளர்த்துவிட்ட  எதிர்ப்பு அரசியலை இலகுவில் மாற்ற முடியாது.  அப்படியே தமிழ்மக்களிடையே சிறிது மனமாற்றங்கள் ஏற்பட்டாலும் நாவற்குழி போன்ற நடவடிக்கைகள் இந்த மனமாற்றங்களை இல்லாமல் செய்து விடுகின்றன. தமிழ் அரசியல் வாதிகளுக்கு இவை வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.
வடக்கின் வசந்தத்தை ஏற்படுத்த அரசு முயற்சி செய்யும் போது இந்தமாதிரியான செயற்பாடுகள் குறித்து கவனம் வேண்டும். இலங்கையில் பிறந்த எந்தவொரு பிரஜையும் எங்கு வாழ உரிமையுண்டு. ஆனால் அதற்கான ஒழுங்கு பேணப்பட வேண்டும். யுத்தத்தால் சீரிழிந்து அல்லல்படும் தமிழ்மக்களே இன்னும் ஒழுங்காக குடியமரவில்லை. அதற்கிடையில் சிங்கள மக்கள் வந்து திடீர்படீர் என வந்து நின்றால் தமிழ்மக்களிடையே சந்தேகம் தோன்றாமல் விடுமா?. 83க்கு முன்னர் சிங்கள மக்கள் தமிழ்மக்களுடன் வடக்கில் ஐக்கியமாக வாழ்ந்தார்கள். அப்போது அவர் தீடிரென்று வந்து குடியேறவில்லை. அப்படித்தான் இனி வரும்காலங்களில் சிங்க மக்கள் தமிழ்மக்களுடன் வந்து படிப்படியாக சேர்ந்து வாழ வேண்டும்.
அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் கோடி கோடியாக செலவழித்து வடக்கின் வசந்தத்தை நிறைவேற்ற முற்பட்டாலும் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல முடியாது.

ஆயிரக்கணக்கான புதிய குடியிருப்புகள் நாட்டுடைமை: வெனிசுலாவில் ஊழல்வாதிகளுக்கு பலத்த அடி


பெரும் மோசடிகளை செய்து வந்த தனியார் ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான குடியி ருப்புகளைப் பறித்து அவற்றை தேசிய மயமாக்கி யதோடு, அவற்றை மக்க ளுக்கு விநியோகிக்க மூன்று கட்டத் திட்டத்தையும் வெனி சுலா அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டத்தை வெளியிட்டு செய்தியாளர் களிடம் துணை ஜனாதிபதி பேசினார். அப்போது அவர், இந்தக் குடியிருப்பு களைக் கட்டி வரும் தனி யார் நிறுவனங்கள் பெரும் மோசடியைச் செய்துள் ளன. மீண்டும் ஒருமுறை அவர்கள் ஏமாந்துவிடாத வாறு பார்த்துக் கொள் ளவே நாட்டுடைமையாக் கியுள்ளோம் என்றார்.

முதல் கட்டமாக, ஏற் கெனவே குடியேறியவர் களுக்கு அந்தந்த வீடுகளை சட்டபூர்வமாகத் தருவது, அதற்கான பத்திரங்களைப் பதிவு செய்து அவர்களிடம் வழங்குவது என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. கட் டப்பட்டு யாரும் குடியே றாத நிலையில் சுமார் 460 வீடுகள் உள்ளன. அந்த வீடு களையும் வீடில்லாதவர் களுக்கு வழங்கப்போகிறார் கள்.

இரண்டாவது கட்ட மாக, பாதி முடிந்த நிலை யில் தனியார் நிறுவனங் களால் விடப்பட்டிருக்கும் வீடுகளை அரசின் சிறப்பு நிதியின் மூலம் கட்டி முடிக் கப் போகிறார்கள். மூன்றா வது கட்டமாக, தனியார் நிறுவனங்களின் வசம் வீடு களை கட்டுவதற்காக இருந்த நிலங்களில் புதிய வீடுகளைக் கட்டி வீடில் லாதவர்களுக்கு வழங்குவது என்று வெனிசுலா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளுக்காக சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான அனுமதியை ஜனாதிபதி சாவேஸ் வழங் கியுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் கட் டப்படும் குடியிருப்பு களுக்கு பொதுத்துறை வங் கியான பேங்க் ஆப் வெனி சுலா கடன் வழங்கப் போகி றது. இந்தப் பணிகள் ஒருபுற மிருக்க, மோசடி செய்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது. கொள் ளைக்காரர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள் என்று வீடுகளில் குடியேறியவர் கள் அரசிடம் புகார் தந்தி ருந்தனர்.

சட்டவிரோதமான கட் டணம், விலைகளில் ஊக வணிகம், வீடுகளை ஒப்ப டைப்பதில் தாமதம், பணத்தை வாங்கிக்கொண்டு வீடுகளையே கட்டாமல் இருப்பது என்று பல தில்லு முல்லுகளை இந்த தனியார் நிறுவனங்கள் செய்து வந் தன. இவற்றிற்கு
அரசின் நட வடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்று வீடுகளில் குடியேறியிருப்பவர்களும், வீடுகளுக்காகக் காத்திருப் பவர்களும் தெரிவித்துள் ளனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை நடந்த இடத்தில் விசாரணை : வழக்கில் திடீர் திருப்பம்!


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றம் படுகொலை இடம்பெற்ற இடத்தில் இவ்வழக்கை விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவரது கொழும்பு-07 இல்லத்தில் வைத்து ஸ்னைப்பர் துப்பாக்கியால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில்முத்தையா சகாதேவன், இஸினோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இப்படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியமை, உதவி, ஒத்தாசை செய்தமை, மரணத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது இரு எதிரிகளையும் ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வாதாடினார். அவர் கொலை நடந்த இடத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று மன்றில் ஏற்கனவே கோரி இருந்தார்.
வழக்காளியான சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டத்தரணி சி.குலரட்ண ஆஜரானார். அவர் படுகொலை இடம்பெற்ற இடத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகின்றமையில் எவ்வித ஆட்சேபனையும் சட்டமா அதிபருக்கு கிடையாது என்றார்.இதையடுத்து படுகொலை இடம்பெற்ற இடத்தில் அடுத்த மாதம் முதலாந் திகதி மதியம் 2.00 மணிக்கு வழக்கு விசாரணை இடம்பெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

Myanmar(Burma)15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் தேசிய ஜனநாயக லீக் தலைவி ஆங்சான் சூகி இன்று விடுதலை!


15 ஆண்டு காலம் வீட்டுக் காவலில் இருந்துள்ள ஆங்சான் சூகியின் விடுதலை உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் கையெழுத்திட்டனர். இதையடுத்து, அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மியான்மர் நாட்டில் கடந்த 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது.

ஆனால், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், தேசிய ஜனநாயக லீக் தலைவி ஆங்சான் சூகியை வீட்டுக் காவலில் வைத்தது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருதடவை வீட்டுக் காவலை நீட்டித்து வந்த போதும் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அவரது வீட்டுக் காவல், கடந்த ஆண்டு முடிவடைந்தது. ஆனால், சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் ஒருவரை, தனது வீட்டுக்குள் அனுமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆங்சான் சூகிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த காவல், இன்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், ஆங்சான் சூகியை விடுதலை செய்வதற்கான உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் நேற்று கையெழுத்திட்டனர். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஆங்சான் சூகியின் வீட்டுக்கு வெளியே பொலிசாரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர் இன்று விடுதலை செய்யப்பட்டது உறுதியானது.
ஆங்சான் சூகி விடுதலை செய்தியால், அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். யங்கூனில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டால், அந்த விடுதலையை ஆங்சான் சூகி ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
65 வயதான ஆங்சான் சூகி, கடந்த 21 ஆண்டுகளில், 15 ஆண்டுகளை வீட்டுக் காவல் தண்டனையிலேயே கழித்துள்ளார். அவரை விடுவிக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தியும், ராணுவ அரசு இதுவரை செவிசாய்க்காமலே இருந்து வந்தது. ஆங்சான் சூகி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஆங்சான் சூகியின் கட்சி பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில், ராணுவ ஆதரவு கட்சி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், ஆங்சான் சூகி இன்று விடுதலை பெற்றார்.

சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நிராகரித்தமையானது புலிகள். தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பாரிய காட்டிக்கொடுப்பாகும்


- கலாநிதி. ரட்ணஜீவன்  ஹூல்
 ratnajeevankooleநாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு, மத்தியில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறவேண்டும். அத்துடன் தமிழ்மொழி அமுலாக்கம் உரியமுறையில் இடம்பெறவேண்டும். இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று யாழ். மாவட்ட புத்திஜீவிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் நேற்று மாலை சாட்சியமளிக்கையிலேயே யாழ். மாவட்ட புத்திஜீவிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அமர்வில் முதலில் சாட்சியமளித்த கலாநிதி. ரட்ணஜீவன்  ஹூல் கூறியதாவது:– 2006ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டேன். எனினும் புலிகள் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தமையினால் நான் நாட்டைவிட்டு வெளியேறினேயே. ஆனால் இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள் தேசிய நல்லிணக்கத்தை முன்னிட்டு மீண்டும் இலங்கை திரும்பவேண்டுமென ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கேற்ப நான் மீண்டும் இலங்கை வந்தேன். நாட்டிலிருந்து வெளியேறிய ஏனைய மக்களில் அதிகமானோரும் இங்கு வந்து சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
நாங்கள் ஒரு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன் எமது கடந்தகால தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நிராகரித்தமையானது புலிகள். தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பாரிய காட்டிக்கொடுப்பாகும்.
எனவே தற்போதைய நிலைமையில் நாட்டில் அதிகாரப்பரவலாக்கம் இடம்பெறவேண்டும். அதாவது உள்ளக ரீதியில் அதிகாரப்பரவலாக்கம் வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும். ஆனால் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் விடயமானது அரசாங்க மட்டத்தில் தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் உணருகின்றோம். அது அப்படி நடக்கக் கூடாது. விரைவில் அதிகாரப் பரவலாக்கம் முன்வைக்கப்பட வேண்டும்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். இது மிகவும் தேவையானது. சரத்பொன்சோகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியுமானால் ஏன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாது?
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அரசாங்கம் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். அவர் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். மக்களின் ஆதரவு அதிகமாகவே அவருக்கு இருக்கின்றது. அதாவது ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன்.
யுத்தத்தின்போது அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே இவை தொடர்பிலான நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா நியமித்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.
13 ஆவது திருத்தம்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக மாகாணசபை முறைமை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் தீர்வொன்றிற்கு செல்வதற்கு முன்னர் சட்டத்தில் இருக்கின்ற அம்சத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். முக்கியமாக நாம் அனைவரும் பொதுவான இலங்கையர் என்ற அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.இதேவேளை தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்கள் தமது விடயங்களை தமது மொழியிலேயே கையாளுவதற்கும் அரசாங்கத்துடன் தமிழ் மொழியிலேயே செயற்படுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவது கட்டாயமாகும். அரச நிர்வாகத்தில் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் வளங்கப்பட வேண்டும் என்றார்.
தோல்விகண்ட உடன்படிக்கைகள்
தமிழ் அரசியல் தலைவர்கள் அனைத்து சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் பேசி நியாயமான தீர்வுக்கு வர முற்பட்டுள்ளனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஆகிய உடன்படிக்கைகளை குறிப்பிடலாம். –அதேபோல் போர் நிறுத்த உடன்படிக்கையும் தோல்வியடைந்தது. இரண்டு தரப்பினரும் சந்தேகத்துடனேயே இருந்தனர் விளைவாக, மனித உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்தன. சுற்றாடலும் பாதிக்கப்பட்டது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கூட வெளிவரவில்லை. 30 வருடகால யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் அபிலால்ஷகள் பூர்த்தியடையவில்லை. உண்மையான சமாதானமும் அமைதியும் நாட்டில் ஏற்பட வேண்டுமானால் நியாயமான தீர்வு முன்வைக்கப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது விடயங்களை கையாளும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் இந்தத் தீர்வு இருக்கவேண்டும். இது இடம்பெறாதவல்ர அமைதி, சமாதானம் என்பவற்றை எதிர்பார்ப்பது கடினம். அத்துடன் அதிகாரப் பரவலாக்கலும் மிகவும் முக்கியமானது. காலதாமதமின்றி அது அமுல்படுத்தப்படவேண்டும் என்றார்.

ஜேர்மன் முதியவர் மொறட்டுவையில் கொலை

 மொறட்டுவையில் 90 வயதான ஜேர்மன் நாட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சிங்கள மனைவிக்குப் பிறந்த மகன் ஒருவரே இவரைக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் ஸ்ரப்பிள் எனும் ஜேர்மனியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் இலங்கைக்கு வந்து சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இவரது மனைவி அண்மையில் மரணமடைந்தார். இதனையடுத்து ஜேர்மனியர் வேறொரு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சிங்கள மனைவிக்குப் பிறந்த மகனுக்கும் இவருக்கும் இடையில் சொத்து குறித்துத் தகராறு எழுந்தது. ஆத்திரமடைந்த மகன், பொறட்டுவை இல்லத்தில் வைத்துத் தந்தையை பொல் ஒன்றால் அடித்துக் கொன்றுவிட்டு, கண்டியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். பின்னர் திரும்பிவந்து, மொறட்டுவைப் பொலிஸில் சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அல் ஜசீரா ஊடகவியலாளர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான காரணங்களும் குறிப்பிடாது அல் ஜசீரா செய்தி ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான வீசா முதலில் மறுக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதியின் தலையீட்டினால் குறித்த ஊடகவியலாளர்களுக்கு இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வீசா வழங்கியுள்ளது.

சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியமர்த்த முடியுமானால் வலிகாமம் வடக்கு மக்களை ஏன் இதுவரை குடியேற்றவில்லை? '

 யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார். எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்ப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியேற்றுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இமெல்டா சுகுமார்: நாவற்குழியில் மக்களின் மீள்குடியேற்றம்


நாவற்குழி அரச காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 1980 மற்றும் 83களில் வியாபார நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்தள்ளனர். அதன் பின்னர் யாழில் காணப்பட்ட குழப்பகரமான சூழ்நிலையால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் இவர்களை இராணுவத்தினர் அநுராதபுரத்தில் குடியேறியுள்ளனர். இங்கிருந்தும் பொருளாதார சூழ்நிலைகளினால் மேற்படி மக்கள் மிஹிந்தளை, தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் இடம்பெயர்ந்து சென்றதாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.
பிறப்புச் சான்றிதழ்களையும் தபால் அடையாள அட்டைகளையும் ஆதாரமாக அவர்கள் காட்டினார்கள். ஒரு பெரியவர் தான் யாழ். பிராமணர் இனத்து பெண்ணையே மணந்துள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகையில் திடீரென யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் அனைவரும் நாவற்குழியில் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் குடியேறிவிட்டனர்.
இது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் அல்ல மேற்படி குடியேற்றம் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், மீள்குடியேற்ற அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

பாங்காங்கில் விளையாடும் மங்காத்தா



    'ங்காத்தா' படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா விளையாடு மங்காத்தா என்ற அஜீத்தின் அறிமுகப் பாடலை செம லோக்கலாக கொடுத்துள்ளார். இந்தப் பாடலின் படப்பிடிபிற்காக பாங்காங் பறந்துள்ளது படக்குழு. இந்த பாடலுக்கு கல்யான் நடனம் அமைக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடன இயக்குனர். 

அஜீத்துடன் ஜி, கிரீடம் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார் திரிஷா. அதுமட்டும் இல்லாது லக்ஷ்மி ராய்க்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் இருக்கிறதாம். சில படங்களில் தாராளம் காட்டியும் லக்ஷ்மி ராய்க்கு சினிமாவில் தனக்கென ஒரு இடம் இல்லாதது ரொம்பவும் வருத்தம். அஜித்துடன் சேர்ந்து நடிப்பதில் லக்ஷ்மி ராய்க்கு மிகவும் பெருமையாம்.

 

இதிலும் வழக்கம் போலவே லக்ஷ்மி ராயின் கிளாமர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் படக்குழு பேசிக்கொள்கிறது. முதல் பாடலைக் கேட்டதும் அசந்துபோய் உள்ளார் அஜீத். ஏற்கெனவே யுவன் ஷங்கர் ராஜா இசையில் அஜீத்துக்கு நிறைய ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் இசையாலும் மங்காத்தா விளையாட இருக்கிறார் யுவன். எந்த சினிமா விதிகளும் இல்லாமல் தல ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் படம் என்று வெங்கட் பிரபு சொல்லிவருகிறார்.
 
அதுமட்டும் இல்லாது படம் படு லோக்கலா இருக்கும் என்று அவர் சொல்கிறார். நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று புரிகிறது. லோக்கல் படத்துக்கு பாங்காங்கில் ஷூட்டிங்கா? அதுதான் எல்லாருக்கும் குழப்பம்! இதுபற்றி இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் என்ன விளையாடுறீங்க! என்று  கேட்டால்... அதற்கு அவர் 'மங்காத்தா' என்று பஞ்ச் வைக்கிறார்.

ஒபாமா தந்த லாலிபாப்.மறந்து சிரிக்கும் அப்பாவிகளல்லவா நாம்!

பொதுவாகவே அமெரிக்க ஜனாதிபதிகள் மிகவும் சாதுர்யமானவர்கள், திறமையான அரசியல்வாதிகள், வல்லாளகண்டர்கள் என்பது தெரிந்ததே. கென்னடி, ரீகன், கிளிண்டன்- எல்லோருமே தேன் குழையப் பேசுவதில் வல்லவர்கள். அருமையான சந்தர்ப்பவாதிகள். அதிலும் இந்த பராக் ஒபாமா இருக்கிறாரே அவர் இந்த பேச்சுக்கலையில் வில்லாதிவில்லர். பேச்சுத்திறமை மட்டுமில்லாமல் மேற்சொன்ன எல்லோரையும் விட நிஜமாகவே கொஞ்சம் நல்லவரும் கூட என்பது அவருக்கு பயங்கர ப்ளஸ் பாயிண்ட்..
சமீபத்திய அமெரிக்க இடைத்தேர்தல்களில் சாத்து சாத்தென்று போட்டு சாத்தப்பட்டாலும், நிலை குலையாமல், கம்பீரம் குறையாமல், “புதிய நடைமுறை உண்மைகளுக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக் கொண்டுதானாக வேண்டும். மாற்றம் ஒன்றுதானே நிலையானது?!” என்று தத்துவார்த்தமாகவும் தக்க சமயத்திலும் சொல்லத் தெரிந்த சமர்த்தர் ஒபாமா.
குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியுமான இரண்டு பெரிய அமெரிக்க அரசியல் கட்சிகளுமே இந்தியாவை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ளாமல், அதே சமயம் இந்தியாவுக்காக எதையுமே வெளிப்படையாக விட்டுக்கொடுத்தும் விடாமல் பேலன்ஸ் செய்து சர்க்கஸ் காட்டுவதில் ராட்சஸர்கள். பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ராணுவத் தளவாடங்களை வாரிக்கொடுத்த அடுத்த மாதமே இந்தியாவுக்கும் வந்து “இந்தாருங்கள் நீங்கள் அன்றே கேட்ட ந்யூக்ளியர் ரியாக்டர்கள், இந்தாருங்கள் நீங்கள் இன்னமும் கேட்காத புது ஜெட் விமானங்கள், எதிர்காலத்தில் நீங்கள் கேட்கப்போகும் டெக்னாலஜிக்கள். ஸேல்ஸ் ஆர்டர்கள், நம் கூட்டு வியாபாரம் பெருகட்டுமே …ஜெய்ஹிந்த்!”
“நீங்கள் இனிமேலும் தூங்கி வழியும் இடிச்சபுளிகளல்ல, வீறு கொண்டெழுந்துவிட்ட சிங்கங்கள்” என்று யாராவது நம்மை உசுப்பிவிட்டால் உடனே நாம் புளகாங்கிதப்பட்டு சமிபத்திய மல்டி பில்லியன் டாலர் ஸ்கேண்டல்களை எல்லாம் உடனே மறந்து சிரிக்கும் அப்பாவிகளல்லவா நாம்!
வள்ளல் ஒபாமா வாரி வாரி வழங்குகின்ற வாக்குறுதிகளையும், வானளாவப் பாராட்டிய நம் பாரம்பரிய நிதர்சனங்களையும் கேட்டுக்கேட்டு, காது குளிர்ந்து, கண்ணில் நீர்மல்க, வாய் குளற, நாம் உணர்ச்சிக் குவியலாகி நிற்கிறோம்.
“பார்லிமெண்ட் பேச்சில் பாகிஸ்தானை ஒரு விரட்டு விரட்டி விட்டாரா, பலே! பயங்கரவாதத்திற்கு எதிராக அதே தாஜ் ஹோட்டலிலேயே தங்கினாரா, அதற்கும் ஒரு பலே!  நம் பிரதமரைப் பாராட்டி, நம் பாரம்பரிய கலாசாரத்தைப் புகழ்ந்து, நம்ம ஊர் சுக்கா ரொட்டி, மட்டன் கபாப், மாம்பழ லஸ்ஸி என்று ஒரு கட்டு கட்டிவிட்டாரா ஒபாமா? ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ், பலே பலே!
பரஸ்பர ஒப்பந்தங்கள், வர்த்தக விளம்பரங்கள், கைகுலுக்கல்கள், கட்டிப்பிடி வைத்தியங்களின் பின்னர், இந்தப் பாராட்டுமழையின் உச்சகட்டமாக,  ஒபாமா இன்னொன்றும் சொன்னார்:
“ வருங்காலத்திலாவது ஐ. நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவும் ஆனால் அதை அமெரிக்கா மிகவும் விரும்பும், ஆதரிக்கும்”
இதைக்கேட்ட சவுத் ப்ளாக் சஃபாரி சூட் கும்பலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அமெரிக்க ஆக்ஸெண்ட் புரிந்தாலும் புரியாவிட்டாலும் அத்தனை எம். பிக்களும் எகிறிக் குதித்துக் கை தட்டினார்கள். சேனல் சேனலாக இதைக்காட்டி ரேட்டிங்சை எகிறச் செய்யவல்ல டீவி சேனல்கள் மகிழ்கின்றன.
ஆனால், இதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா? நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா?
இரண்டாவது உலகப்போருக்குப் பின்னால், நம் தாத்தா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஐ. நா. செக்யூரிட்டி கௌன்சில் ஒரு கட்டப் பஞ்சாயத்து கோஷ்டியே. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ் என்று ஐந்தே ஐந்து நிரந்தர உறுப்பினர்கள். அவர்களுக்கே மட்டுமே எங்கேயும், எப்போதும், சந்தோஷம், சங்கீதமாகிய வெல்லவல்ல ‘வீட்டோ’ அதிகாரம். மற்றைய நூற்றுச்சொச்ச மெம்பர்களும் வெறும் மெம்பர்களே.
“என்னய்யா பெரிய வெங்காய ஐ. நா செக்யூரிட்டி கௌன்சில்? அதெல்லாம் செத்த பாம்பு. அதுல நாம பெர்மனெண்ட் மெம்பரா ஆனா என்ன, இல்லாட்டிதான் என்ன?” என்று கேட்போருக்கு ஒரு உண்மையைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.
இந்த வீட்டோ அதிகாரம் உண்மையிலேயே மிகப்பெரிய துருப்புச்சீட்டு. நிஜமாகவே இது கிடைத்தால் நாம் பாகிஸ்தானிய தந்திரங்களை, எல்லை மீறிய சீறல்களைத் தவிடுபொடி ஆக்கிவிட முடியும். ஏன், விடாக்கண்டன் கொடாக்கண்டனாய் இழுத்தடிக்கும் காஷ்மீர் விவகாரத்துக்கே கூட ஒரு சுப முற்றும் போட்டுவிட முடியும். Backdoor diplomacy க்கு இது மிகவும் உதவும்.
முதலில் நடக்கவேண்டுமென்றால், ஐ. நா. அசெம்பிளியில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி சப்போர்ட் நமக்கு வேண்டும். அப்புறம் யாரும் வீட்டோ செய்து நம்மை விரட்டி அடிக்காமல் இருக்கவேண்டும். இன்னும் சிலபல ’டும் டும்’களும் இருக்கின்றன. நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா?
ஜெர்மனிக்குக்கூட ஒரு காலகட்டத்தில் கிளிண்டன் கொடுத்த அல்வாதான் இது. ஹிட்லரின் அசகாய சூரத்தன அழிவாட்டங்கள் இன்னமும் முழுதாக நினைவிலிருந்து மறையாத காரணத்தால், புத்திசாலி யூத ஊடகங்கள் விடாமல் அதையெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்கிக்கொண்டே இருப்பதால், ஜெர்மனி ப்ரபோசல் ஜில்லிட்டு ஃப்ரிஜ்ஜுக்குள் போனது.
முன்னாள் ஐ. நா. செக்ரட்டரி ஜெனரல்  கோஃபி அன்னனை நினைவிருக்கிறதல்லவா? 2005-ல் அவர் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி, ஆறு புதிய ‘பர்மனெண்ட்’ மெம்பர்களை உடனே நியமிப்பது அல்லது சில ‘செமி-பர்மனெண்ட்’ மெம்பர்களையாவது உடனே நியமித்து, ஒரு குறிப்பிட்ட காலம் சென்ற பிறகு, அந்த செனா பானா கும்பல் ஒரு தேர்தலில் நின்று கெலிப்பது. இதெல்லாம் எதுவுமே செல்லுபடியாகாமலும், ஈராக், ஆஃகானிஸ்தான் என்று அமெரிக்கா கபளீகரப் படலம் ஆரம்பித்ததையெல்லாம் அசடு வழிந்துகொண்டு அபத்தமாய்ப் பேசிக்கொண்டு லட்சக்கணக்கில் வெட்டிச் சம்பளம் வாங்கிக்கொண்டே பார்த்துக்கொண்டும் தன் கடமையை வெற்றிகரமாக ஆற்றி முடித்தார் அண்ணன் அன்னன்.
என்னதான் ஐ. நா. பல நேரங்களில் வெத்தாக, கையைப் பிசைந்துகொண்டு வெட்டியாக நின்றாலும், இன்றளவும் அதைவிடப் பெரிய உலகளாவிய ஒரு நிறுவனம் கிடையாது. ஆரம்பித்த காலத்திலிருந்தே ”நாங்க அஞ்சு பேரு சொல்றதுதான்யா சட்டம்” என்று அழிச்சாட்டியமாக ஆடப்படும் ஆட்டம்தான் இது. அதிலும் இந்த அமெரிக்க சட்டாம்பிள்ளை அழித்து அழித்து ஆடுகிற அழுகுணி ஆட்டத்தில் எக்ஸ்பர்ட்! ஐ. நாவுக்கு ஒழுங்காக மெம்பர்ஷிப் பணத்தையே செலுத்தாமல் வருஷக்கணக்காக மில்லியன்கள் கணக்கில் கடன் வைத்து அதிபர் புஷ் பண்ணிய அட்டூழியங்கள் அதற்குள் மறந்துவிடுமா என்ன? (”ஐ. நா இருப்பதே நியூயார்க் நகரில்தான் என்பதை மறந்துவிட வேண்டாம், ஜாக்கிரதை!”) ஈராக் தாக்குதலுக்கு உடனடி ஒப்புதல் தெரிவிக்கக்கோரி ஐ. நாவை அமெரிக்கா மிரட்டியதெல்லாம் சமீபத்திய நிகழ்வுகள்தானே!
இந்த ஐ.நா. செக்யூரிட்டி கௌன்சில் சீட் அல்வா ஏற்கனவே ஜப்பானுக்கு ஊட்டப்பட்ட ‘இனிப்பு’ என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவை விட ஜப்பானுடனான அமெரிக்க வர்த்தக உறவு, தொழில்நுட்ப பரிவர்த்தனைகள் ஏராளம், ஏராளம். அமெரிக்கர்கள் காதில் மாட்டியிருக்கும் ஸ்டீரியோவிலிருந்து, கணநேரமும் வாசம் செய்யும் கார்களிலிருந்து, கணினிகள், எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள், சாப்பிடுகிற ஸ்பெஷாலிட்டி கோபி பீஃப், சர்வம் சப்பைமூக்கு மயம்.
ஜப்பானுக்கு அதீத போஷாக்கு கொடுத்து ஊட்டி வளர்த்தால் சைனா வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்கும்? இருக்கவே இருக்கிறது, வீட்டோ வெடி, கொளுத்து அதை, அடி ஜப்பானை!
அதிபர் ஒபாமா சொன்னது மிகச் சாதுர்யமான வார்த்தைக் குவியல். “in the years ahead, I look forward to a reformed U.N. Security Council that includes India as a permanent member.”
அதாவது, ’பின்னொரு காலத்தில் அத்தைக்கு மீசை முளைத்து அவள் சித்தப்பன் ஆனபிறகு, அந்த சித்தப்பன்னுக்குப் பிறக்கப்போகும் பேரக் குழந்தைக்கு இப்படியும் ஒரு பெயர் வைத்தாலென்ன?’ என்கிற மாதிரியான டுபாக்கூர் ஐடியா.
இதை நம்பி நம் ஊடகங்கள் குதித்துக் குட்டிக்கரணம் போடத் தேவையில்லை.
தௌசண்ட்வாலாவைக் கொளுத்தி நாம் கொண்டாடிக் கும்மாளம் போடுவதற்கு முன், நம் உள்துறை மந்திரி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சில விஷயங்களிலாவது அமெரிக்காவை நிர்ப்பந்திக்கலாம்.
1. ஹெட்லி மேட்டரில் மாதக் கணக்கில் சொதப்பிக் கொண்டே இருக்காமல் உருப்படியாக, நிஜமாகவே உதவுவது.
2. மும்பை தாக்குதல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தர பாகிஸ்தானை நிர்ப்பந்திப்பது
2. வெறும் ஜெட் விமானங்களை நம் தலையில் கட்டாமல் இந்தியாவிலேயே அவற்றைத் தயாரிக்க கனரக தொழில் நுட்பம், மற்றும் கூட்டுறவு முறையில் தொழிற்சாலைகள் கட்டுதல்
3. ஒரு பக்கம் அமெரிக்க விசா கோட்டாவை அதிகரித்து விட்டு, மறுபக்கம் ரேட்டை அநியாயமாக உயர்த்துவது போன்ற டகால்டி வேலைகளை நிறுத்துவது.
4. அமெரிக்க அவுட்சோர்சிங்கினால் அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றனவே தவிரக் குறைவதில்லை என்று இந்தியா நிஜமாகவே நம்புவதால், அவுட்சோர்சிங் வேலைகளை இன்னமும் அதிகரிக்கச் செய்வது
5. சூப்பர் கம்ப்யூட்டர் துறைகளில் இன்னமும் இருக்கும் தடைகளை நீக்குவது
இப்படி இன்னமும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படியெல்லாம் ஆக்கபூர்வமாக ”எதுவுமே வேண்டாம். தேவரீர் திருப்பாதம் எங்கள் கட்டாந்தரையில் பட்டதே போதும்” என்று வெற்று ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தால், ஒபாமா மாமா கொடுத்த லாலிபாப் இன்னும் பல வருஷங்களுக்கு நமக்கு இனித்துக்கொண்டேதான் இருக்கும்!
Tamil Flim Va Quater Cuttingதயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வெளியிட்டிருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். அவரது தயாரிப்பில் இதே பட ஹீரோ நடித்து சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட தமிழ்ப்படம் மாதிரி தரமான படமாக இருக்கும் என்று நம்பி தியேட்டருக்குப் போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. படத்தின் டைட்டிலில் கடைசி நேரத்தில் ஒட்டிக் கொண்ட `வ` மாதிரியே படமும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்பது கொடுமை.  மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் கதை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவதுதான் வ படத்தின் ஒரே ஹைலைட்.

கதைப்படி ஹீரோ சிவா ஊரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார், துபாய்க்கு விமானம் ஏறுவதற்காக... வந்த இடத்தில் தன் அக்காள் கணவர் எஸ்.பி.பி.சரணுடன் வண்டியில் கிளம்பி ஒரு குவாட்டருக்கும், கட்டிங்கிற்காகவும் அலைவதுதான் வ படத்தின் மொத்த கதையும்! இதை சுவாரஸ்யமாக சொல்கிறேன்பேர்வழி என சொதப்பி எடுத்திருக்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி இருவரும். இவர்களது முதல் படமான ஆட்டோ எனும் ஓரம்போ படத்திலாவது ஸ்கிரீன்ப்ளே சுமார் என்றாலும் ‌டேக்கிங்ஸ் பிரமாதமாக இருந்தது. இதில் ஸ்டோரி, ஸ்கிரீன்ப்ளே, டேக்கிங்ஸ் எல்லாமே வீக்! டயலாக் மட்டுமே சில இடங்களில் ஆறுதல்.

துபாய்க்கு ப்ளைட் ஏற வந்த ஹீரோ குறைந்தபட்சம் குவாட்டர் - கட்டிங் இல்லாமல் அந்த இரவை கழிக்க முடியாது எனும் நிலையில் காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி போன்ற மதுவிடுதிகளுக்கு விடுமுறையான ஒரு நாளில் தன் அக்காள் புருஷனையும் கூட்டிக் கொண்டு அலைவது காமெடிக்கு வேண்டுமானால் ஓ.கே. ஆனால் அதையே ஒரு முழு படக் கதையாக நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றாலும் அதுதான் வ படத்தின் மொத்தக் கதையும் என்பது வேதனை!

ஆனாலும் அரசியல் பொதுக்கூட்டத்தில் குவாட்டரும், பிரியாணி பொட்டலமும் தருகிறார்கள் என ஹீரோ சிவா ஓடுவதும், அங்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போலீசுக்கு ‌பயந்து ஓடுவதும், ஸ்டார் ஓட்டலில் எப்படியும் கட்டிங்காவது கிடைக்கும் என பேரருக்கு பணம் கொடுத்து பிரச்னையில் சிக்கி, பின் விரட்டியடிக்கப்படுவதும், அப்படியும் அடங்காமல் ஹீரோவே பேரர் வேஷத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து சரக்கு தேடிப்பார்த்து கிடைக்காமல் ஏமாறுவதும், இறுதியாய் சூதாட்ட கிளப்பில் கிடைக்குமென சீட்டாடப் போய் வசமாய் சிக்குவதும், பின் மாமன் சரண் புண்ணியத்தில் ஹீரோ தப்புவதும் சுவாரஸ்யமான திருப்பங்கள். ஆனாலும் இதெல்லாம் ஒரு படத்தில் வடடிவேலுவோ, வையாபுரியோ நடிக்க ‌வேண்டிய காமெடி காட்சிகள் என்ற அளவில் ரசிக்க வேண்டியவை என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆனால் இதையே முழுப்படத்திற்கும் கதையாக்கி, காட்சிகளாக்கி இருக்கும் இயக்குனர்களின் துணிச்சல், ரசிகர்களுக்கு இருக்குமா? என்பது கேள்விக்குறியே!

சிவா, எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட நான்கைந்து கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த நட்சத்திரங்கள் என்பது ஒரு விதத்தில் பலமாக தெரிந்தாலும், ஒரு விதத்தில் பலவீனமாகவும் தெரிகிறது. சிவா, சரண் இருவது நல்ல நடிப்பும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ஆண்டனியின் படத்தொகுப்பும் வ படத்திற்கு பெரிய பலம்!

புஷ்கர் - காயத்ரி தம்பதியரின் எழுத்தும், இயக்கமும் வ படத்தை பார்த்து வாவ் என்று வாய்பிளக்கவும் விடவில்லை! உவ்வே என்று வாய்திறக்கவும் விடவில்லை!

லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு

லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று, கொடுமை தாங்காமல் திரும்பி வந்த தமிழகத்தை சேர்ந்த 22 பேர், "வாழ வழியில்லாத நிலையில் உள்ள தங்களது குடும்பத்தை காக்க, ஏஜன்ட்களிடம் கொடுத்த பணத்தை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறினர்.
மதுரை மேலூர், கீழையூரில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் சக்திவேல். இவர், ராமநாதபுரம் மாவட்டம் மட்டியனேந்தலில் சப் ஏஜன்டாக செயல்படும் மலைராஜ், சொக்கலிங்கம் மூலம் இளைஞர்கள் பலரை, வேலைக்காக லிபியா நாட்டிற்கு அனுப்பினார். இவர்களில் ராமநாதபுரம் பிரபு (கொடிக்குளம்), சத்தியமூர்த்தி (உத்தரகோசமங்கை), முனியசாமி(காவல்கொட்டகம்), முருகன் (தோளூர் தெற்குப்பட்டி), தர்மலிங்கம்(பெருமாள்கோவில்), சந்திரசேகர் (நெடுங்குளம்), ராஜகருங்கு(மல்லல்), இளங்கோ (அரசநகரி), கோபிகண்ணன் (ஆழிமதுரை) அடங்குவர். இவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 22பேர், கடந்த 2009 டிச., 18 ல், ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கட்டி, கார்பெண்டர், கொத்தனார், கம்பி கட்டும் பணிக்காக 20ஆயிரம் மாத சம்பளம், ஓவர்டைம் ஊதியம் 25 ஆயிரம், தங்குமிடம், சாப்பாடு இலவசம் எனக் கூறி, அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கோ, எல்ராடு கம்பெனியில் மண் சுமக்கும் பணி உள்ளிட்ட கடினமான வேலை கொடுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: தினமும் உணவாக காலை ஒரு பன், மதியம் பச்சரிசி சாதம் ஒரு கரண்டி, இரவு ஒரு பன் கொடுத்து, ஒரு நாளில் 12மணி நேரம் பணி செய்ய வைத்தனர். வேலை நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறைக்கு சென்றால் , ஐந்து நாட்கள் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்தனர்.சாப்பாடு, சம்பளம் பற்றி கேட்டால், காற்று புகாத கன்டெய்னரில் அரை மணி நேரத்திற்கும் மேல் அடைத்து வைத்து கம்பியால் அடித்தனர். வேலை பார்க்கும்போது காயம் பட்டது எனக் கூறினால், அந்த இடத்திலேயே சிகரெட் சூடு வைத்தனர். அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டுமால் 1000 கி.மீ., பாலைவனத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கொடுமை தாங்காமல், தமிழ்நாட்டை சேர்ந்த 22 பேர், மற்ற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டோம்.

 இதை தொடர்ந்து அனைவரும் அவரவர் நாட்டு தூதரகத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்திய தூதரக தலைமை அலுவலர் மணிமேகலை, இந்தியர்களை அங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வைத்து, காயங்களை குணப்படுத்தி, கம்பெனியில் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை பெற்று, இந்தியா அனுப்ப உதவினார். "வாழ வழியற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பத்தை காக்க, ஏஜன்ட்களிடம் கொடுத்த பணத்தை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
சுரேஷ் - SINGAPORE,இந்தியா
2010-11-13 08:13:17 IST
ஏஜன்ட்கள் மனிதாபிமானத்துடன் வாங்கி ய பணத்தை உண்மையான செலவு போக மீதியை உரியவர்களுக்கு திருப்பிகொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது ஏமாற்றி சம்பாதித்ததுக்கு சமம். மற்றவரை ஏமாற்றியா செயல் குடும்பத்தை பாதிக்கும். நான் நிறைய ஏஜ ண்டுகள் இதுபோன்று கஷ்டபடுவதை பார்த்திருக்கிறேன் உணருங்கள் நன்றி....
திருச்சிக்காரன் - திருச்சி,இந்தியா
2010-11-13 07:59:22 IST
அரசாங்கம் தான் இலவசமாக வீடு தருகிறது, அதற்கு இலவச மின்சாரமும் தருகிறது. இலவச டிவி தருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்று 30 கிலோ அரிசி மாதா மாதம் தருகிறது. வருடத்திற்கு 100 நாள் வேலை என்று தினக்கூலியாக 100 ரூபாய் வீதம் தருகிறது. அது போக பொங்கலன்று பொங்கல் பை தருகிறது. யப்பா, இது பூலோக சொர்க்கமடா... எல்லாமே இங்கு உழைக்காமல் இலவசமாக கிடைக்கும்போது, உங்களை யாருப்பா லிபியாவில பொய் கஷ்டப்படச் சொன்னது?...
கோ. முருகன் - சிதம்பரம்,இந்தியா
2010-11-13 06:09:51 IST
அடிமை வேலை செய்வதை பெருமையாக நினைக்கும் நபர்கள் இருக்கும் வரை இது நடக்கும். 100 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் ஆட்கள் தட்டுப்பாடு. இங்கு வேலை செய்ய ஆட்கள் இல்லை. இங்கு இருக்கும் வேலையை பார்த்தாலே நன்றாக இருக்கலாம். வெளிநாட்டில் 12 மணி நேரம் வேலை செய்ய தயாராக இருக்கும் நமது ஆட்கள், உள்ளுரில் 8 மணிநேரம் வேலை செய்ய மறுகிறர்கள். அரசு வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கவேண்டும். திரு ராஜராஜன் கூறியது போல் லிபியாவில் நல்ல சூழ்நிலை இருபதாக நிறைய பேர் கூறுகின்றனர்...
நாதன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-13 06:07:41 IST
சட்டங்கள் கடுமையாக்கப்படும் வரை இதுபோன்ற குற்றங்கள் நடைபெறத்தான் செய்யும். சரியான அரசு ஒழுங்குமுறைகளால் மட்டுமே இதை சரிசெய்யலாம். அன்பரசே! நானும் இதைபோன்ற நயவஞ்சக நரிகளுக்கு ஒருகாலத்தில் இறையாக்கப்பட்டவன். வேலையில்லா கொடுமையால்தான் வெளிநாடு செல்கிறோம் அன்பு மனைவியை பிரிந்து, குழந்தை, தாய்-தந்தையை பிரிந்து. மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படால் என்னதான் செய்வது ?...
WATSON - sharjah,இந்தியா
2010-11-13 02:26:42 IST
paramakudi friends please do not go to abroad with knowing anything about the foriegn country's problem .Is there any safety for your life by god grace you all came by our indian embassy help otherwise if you could die there itself do not do the same mistke again please do good job in india in our india there are lot of facilities and opertunity ok....
ராஜு .சிங்கப்பூர் - சிங்கப்பூர்,இந்தியா
2010-11-13 01:55:51 IST
அரசாங்கம் இந்த ஏழைகளுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

சென்னை அருகே 960 வீடுகளுடன் டாடா குடியிருப்பு

டாடா ஹவுசிங் நிறுவனம் சென்னை அருகே 960 வீடுகளுடன் புதிய குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

படப்பை அருகே கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய குடியிருப்பில் மொத்தம் 960 வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

இது குறித்து டாடா ஹவுசிங் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளதாவது:

கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் திட்டம் தாம்பரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், படப்பை நகரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், ஓரகடம் ஜங்ஷனில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்துக்கு வந்து செல்ல நெடுஞ்சாலை உள்ளது. முனிசிபாலிட்டிக்கு சொந்தமான ஏரி இந்த திட்டத்தின் லேண்ட்மார்க்காக உள்ளது. வீடுகள் ஒவ்வொன்றும் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் ஏரி பார்வையுடன் அமைந்துள்ளன.

6 ரெசிடென்சியல் அடுக்குமாடி கட்டடங்களாக அமையும் இந்த திட்டத்தில் மொத்தம் 960 வீடுகள் உள்ளன. ஒரு படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறை கொண்ட 570 சதுர அடியில் 504 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 984/1139 சதுர அடியில் 304 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 1,406 சதுர அடியில் 152 வீடுகளும் உள்ளன.

பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் இந்த குடியிருப்புடன் சேர்த்து அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வசதியுடன் இந்த வீடுகள் அமைந்துள்ளன.

இவ்வாறு டாடா ஹவுசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Srilanka. காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக் கில் பதிவேற்றம் செய்த காதலனுக்கு சிறைத் தண்டனை!


தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபருக்கு குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயர் தரத்தில் கல்வி கற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்ற விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸாரும், கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சூதாட்டத்துக்கு சட்ட அங்கீகாரம்:சட்டத்தை மீறினால் 5 வருடச் சிறை ரூபா 50 இலட்சம் அபராதம்!

சட்ட நியதிகளுக்கு முரணாக சூதாட்டத் தொழிலை மேற்கொள்பவருக்கு 5 வருட சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்படும். சிலவேளைகளில் இரு தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டிவருமென சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது2012 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்தும் அதன் பின்னரும் அமைச்சரால் அதன் பொருட்டு வழங்கப்படும் செல்லுபடியான உரிமமொன்றின் அதிகாரத்தின் கீழின்றியும் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளையினால் குறித்தொதுக்கப்பட்ட ஓர் இடப்பரப்புக் குள்ளின்றியும் சூதாட்டத் தொழிலில் ஈடுபட முடியாது.
எந்த அமைச்சருக்கு சூதாட்டம் என்னும் விடயம் குறித்தொதுக்கப்பட்டுள்ளதோ அந்த அமைச்சரின் அமைச்சு செயலாளர்,சூதாட்டத் தொழிலை கொண்டு நடத்துவதற்கான உரிமங்களைப் பெறுவதற்கான தெளிவுப்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவித்தல்களை வழங்குவதற்காக சிங்கள,தமிழ்,ஆங்கில மொழி தினசரிகளில் அறிவித்தல் வெளியிடவேண்டும்.சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக சூதாட்டத்தொழிலை கொண்டு நடத்தும் ஆளெவரும் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் பேரில் 5 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதொரு காலப் பகுதிக்குள் இரு வகையிலொருவகை மறியல் தண்டனைக்கு அல்லது 5 மில்லியன் ரூபா குற்றப் பணமென்றுக்கு அல்லது அத்தகைய மறியல் தண்டனை,குற்றப்பணம் ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும்.
நியதிகளின் படி வழங்கப்பட்ட உரிமம் அதன்படி குறித்துரைக்கப்பட வேண்டிய அத்தகைய நியதி நிபந்தனைகளுக்கு அமைந்தாதல் வேண்டும். அமைச்சர் இச் சட்டத்தின் கோட்பாடுகளையும், ஏற்பாடுகளையும் நிறைவேற்றும் அல்லது அவற்றிற்கு பயனளிக்கும் நோக்கத்திற்கு ஒழுங்கு விதிகளை ஆக்கலாம்.எந்த விடயம் தொடர்பில் ஒழுங்கு விதிகள் ஆக்கப்பட வேண்டுமென இச் சட்டத்தால் அதிகாரமளிக்கப்படுகின்றதோ அல்லது தேவைப்படுத்தப்படுகின்றதோ அந்த ஏதேனும் விடயம்,உரிமம் ஒன்றிற்கான விண்ணப்பப்படிவமும் அதற்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களும்,அத்துடன் அவ்வாறு வழங்கப்பட்ட உரிமமொன்று சூதாட்ட விடுதிகளால் கொண்டு நடத்தப்படும் வெவ்வேறு செயற்பாடுகள் தொடர்பில் எந்தக் காலப்பகுதிக்கும் செல்லுபடியாகுமோ அந்தக் காலப்பகுதி அத்துடன் எவையேனும் தோதான வழிமுறைகள், உரிமங்கள் வழங்குவதில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கை முறைகள்,உரிமங்களை இல்லாதொளிப்பதற்கான நடவடிக்கை முறை போன்றவற்றில் அமைச்சர் ஒழுங்கு விதிகளை கொண்டுவர முடியும்.அமைச்சரால் கொண்டுவரப்படும் ஒழுங்கு விதிகள் ஒவ்வொன்றும் வர்த்தமானியில் வெளியிடப்படவேண்டும். அமைச்சரால் கொண்டுவரப்பட்ட பின்னர் விரைவாக அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும்.
கசினோ நகரமாக கொழும்பு மாறும்; ஐ.தே.க. எச்சரிக்கை
அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகற்றி கொழும்பை கசினோ நகரமாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யான ஜோசப் மைக்கல் பெரேரா குற்றஞ்சாட்டினார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சூதாட்டம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஜோசப் மைக்கல் பெரேரா இந்தக் கருத்தை வெளியிட்டார்.அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகற்றி கொழும்பை கசினோ நகரமாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யான ஜோசப் மைக்கல் பெரேரா குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சூதாட்டம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஜோசப் மைக்கல் பெரேரா இந்தக் கருத்தை வெளியிட்டார்.அவர் இங்கு மேலும் பேசுகையில் இதன் மூலம் கசினோவும் சூதாட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்திற்குத் தேவையானவர்களுக்கு கசினோ நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என மூடிமறைத்து பேசுகிறார்கள்.இங்கு சட்டவிரோதமானது சட்ட நீதியாக்கப்படுகிறது. இதுவே செய்யப்படுகிறது. பொருளாதார அபிவிருத்திக்கென சுற்றுலாத்துறையில் பணம் சம்பாதிக்க அரசு செயற்படுகிறது. சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்து குப்பைகளையும் நாட்டிற்குள் கொண்டுவரக்கூடாது.
சட்டவிரோதமானவையாக இருப்பவற்றை ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரவே அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு சென்றால் விபசாரத்தையும் அந்த ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருவீர்கள். விபசாரத்தில் ஈடுபட்டமைக்காக வெளிநாட்டுப் பெண்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்த அரசு தயாராகவிருக்கிறது.இந்த வழியில் கொழும்பு ஹோட்டல்களிலுள்ள விபசாரகூடங்களையும் அரசாங்கம் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரக்கூடும்.அப்படியென்றால் கிராமப்புறங்களில் சீட்டாட்டம் ஆடுபவர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆகவே, இந்தச் சீட்டாட்டத்தையும் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவர முடியுமே.
கசினோ மட்டுமல்ல, பல விடயங்களும் இதன் கீழ் இருக்கின்றன. சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கும் இந்தச் சட்டமூலத்துக்கு கர்தினாலாக நியமனம் பெற்றுள்ள கொழும்பு பேராயர் அதி வண மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கவலையை வெளியிட்டு எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார். கற்றறிந்த பாடங்கள்,நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இதைத் தெரிவித்திருந்தார்.அத்துடன், பௌத்த மதத் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.சட்டவிரோத நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் கொடுப்பதையே இங்கு செய்கிறீர்கள். இதற்காகவே இந்தச் சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டு வந்துள்ளீர்கள். முழு உலகிலுமுள்ள மோசடிகளை ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரவே அரசாங்கம் செயற்படுகிறது.
கொழும்பிலுள்ள அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களில் இருந்து அகற்றி புதிய நகரமொன்றை உருவாக்குவதாக கொழும்பை கசினோ நகரமாக்கும் மறைமுகமான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.அவர் இங்கு மேலும் பேசுகையில்இதன் மூலம் கசினோவும் சூதாட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்திற்குத் தேவையானவர்களுக்கு கசினோ நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என மூடிமறைத்து பேசுகிறார்கள்.
இங்கு சட்டவிரோதமானது சட்ட நீதியாக்கப்படுகிறது. இதுவே செய்யப்படுகிறது. பொருளாதார அபிவிருத்திக்கென சுற்றுலாத்துறையில் பணம் சம்பாதிக்க அரசு செயற்படுகிறது. சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்து குப்பைகளையும் நாட்டிற்குள் கொண்டுவரக்கூடாது.சட்டவிரோதமானவையாக இருப்பவற்றை ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரவே அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு சென்றால் விபசாரத்தையும் அந்த ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருவீர்கள். விபசாரத்தில் ஈடுபட்டமைக்காக வெளிநாட்டுப் பெண்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்த அரசு தயாராகவிருக்கிறது.
இந்த வழியில் கொழும்பு ஹோட்டல்களிலுள்ள விபசாரகூடங்களையும் அரசாங்கம் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரக்கூடும்.அப்படியென்றால் கிராமப்புறங்களில் சீட்டாட்டம் ஆடுபவர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆகவே, இந்தச் சீட்டாட்டத்தையும் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவர முடியுமே.கசினோ மட்டுமல்ல, பல விடயங்களும் இதன் கீழ் இருக்கின்றன. சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கும் இந்தச் சட்டமூலத்துக்கு கர்தினாலாக நியமனம் பெற்றுள்ள கொழும்பு பேராயர் அதி வண மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கவலையை வெளியிட்டு எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார். கற்றறிந்த பாடங்கள்,நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இதைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், பௌத்த மதத் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் கொடுப்பதையே இங்கு செய்கிறீர்கள். இதற்காகவே இந்தச் சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டு வந்துள்ளீர்கள். முழு உலகிலுமுள்ள மோசடிகளை ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரவே அரசாங்கம் செயற்படுகிறது.கொழும்பிலுள்ள அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களில் இருந்து அகற்றி புதிய நகரமொன்றை உருவாக்குவதாக கொழும்பை கசினோ நகரமாக்கும் மறைமுகமான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

நாவற்குழியில் குடியேறச் சென்ற தமிழ் மக்கள் திருப்பப்பட்டனர்!

நாவற்குழிப்பகுதியில் குடியேறச் சென்ற தமிழ்க்குடும்பங்கள் நேற்று பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் தெரிவித்தார். 1995 வரையான காலப்பகுதியில் இங்கு குடியிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் அருகில் இருந்த உறவினர்களின் வீடுகளிலேயே வாழ்ந்துவந்தனர். குறித்த அரச காணி ஏற்கனவே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இப்குதியில் ஏற்கனவே அவர்கள் குடியமர முற்பட்ட போதும் அப்பகுதிக் கிராம அலுவலர் அதற்கான அனுமதியை மறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பில் அச்சம் கொண்டிருந்த அவர்கள் தமது காணிகள் பறிபோவ தாக எண்ணி நேற்றுக்காலை அங்கு குடியேறுவதற்கு தயாரான நிலையில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பொருட்டு அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் அவர்களை விரட்டியுள்ளனர். அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அப்பகுதியிலுள்ள படை முகாமின் முன்னால் குவிந்து நின்றனர். படையினர் உரிய நடவடிக்கை எடுப் பதாக வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து அவர்கள் ஏற்கனவே அடைக்கலம் புகுந்திருந்த உறவினர் வீடுகளுக்குத் திரும்பினர்

தமிழ்மக்கள் மத்தியில் இருந்து கலைக்கப்படவேண்டிய இயக்கங்களில்

by Teavadai
வன்னி மக்களிடம் அடிவாங்கிய ஸ்ரீடெலோவின் வெளிநாட்டுப்பிரதிநிதி
தமிழ்மக்கள் மத்தியில் இருந்து கலைக்கப்படவேண்டிய இயக்கங்களில் ஸ்ரீடெலோவும் ஒன்று. சும்மா கிடந்த இயக்கத்திற்கு உயிர் கொடுத்ததில் டக்ளசுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. இருக்கிற இயக்கத் தலைவலிகள் காணாது என்று இதுவும் தமிழ்மக்களுக்கு துன்பம் தருவகே இயங்கியது. கொள்கை கோலம் கோத்திரம் என்று எந்த மண்ணாங்கட்டியும் டெலோ ஸ்ரீடெலோ விற்கு கிடையாது. டெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டபோது அனுதாபம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் செல்வம் அடைக்கலநாதன் டெலோவிற்கு தலைவராக வந்ததோடு அந்த அனுதாபமும் காத்தோடு பறந்து போய்விட்டது.  இயக்கம் வளந்திச்சோ இல்லையோ செல்வம் அடைக்கலநாதன் வண்டியும் தொந்தியுமாக வளர்ந்ததுதான் மிச்சம்.
இந்த லட்சணத்தில் ஸ்ரீடெலோ என இன்னொண்டு புறப்பட்டு வந்தது. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா என தமிழ்மக்கள் வடிவேலு பாணியில் சலிச்சுக் கொள்ள நடந்த தேர்தல்களில் ஸ்ரீடெலோவை தமிழ்மக்கள் ஏனென்றும் எட்டியும் பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இருந்த பழைய டெலோகாரர் ஸ்ரீடெலோவிற்கு இருந்த அரசு ஆதரவு காரணமாக வன்னியில் போய் தமது சுத்துமாத்து நடவடிக்கைகளில் இறங்கியதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதில் ஜெர்மனியில் இருந்து போன நிமோ என்பவர் அதிகமாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்
இவர் வன்னியில் கக்குசு கட்டித்தருவதாக காசு வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் காணிகளில் மோசடி செய்ததாகவும் இறுதியில் அங்குள்ள மக்களால் அடிவாங்கி திரும்பவும் ஜெர்மனிக்கு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இவருடன் இன்னொருவரும் அடிவாங்கி வந்துள்ளார். இவர் இஞ்சினியர் என்று சுத்துமாத்து செய்ததாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடப்பாவிங்களா மரமேறி விழுந்தவன் மேல் மாடேறின மாதிரி ஏற்கனவே துன்பப்பட்டு நொந்துபோய் உள்ள வன்னி மக்கள் மீதா உங்களது சுத்துமாத்துக்களை காட்டவேண்டும். பாவப்பட்ட ஜன்மங்கள.;; புலிகள் அந்தமக்களை  முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய் செய்த கொடுமைகள் காணாது எண்டால் நீங்களுமா……
திருந்தவே மாட்டீங்களா………..

புலிகள் தடைசெய்யப்படவேண்டும் என்பதற்கான தமிழ்மக்களின் 20 கட்டளைகள்

teavadai:
1. மிருகத்தின் பெயரில் ஒரு அமைப்பு இருப்பதை தமிழ்மக்கள் விரும்பவில்லை.
2. 35000ற்கு அதிகமான தமிழ்மக்களை புலிகள் இயக்கமே கொன்றிருக்கிறது
3. ராஜீவ்காந்தியை கொன்று இந்தியமக்களிடையே கெட்டபெயர் வாங்கியது
4. பயங்கரவாத நடவடிக்கைகளினால் சர்வதேச அளவில் பலிகளின் பெயர் நாறிப்போனமை
5. புலிகளின் தலைவராக இருந்தவர் பாசிஸ்டுகளின் வரிசையில் சேர்க்கப்பட்டதால்
6. தமிழ்மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி பரதேசிகளாக்கியமை
7. சர்வதேச அளிவில் புலிகளின் பெயரால் குட்டி மாபியாக்களை உருவாக்கியமை
8. கொல்வதைத்தவிர வேறு எந்த உருப்படியான கொள்கைகளை அது வைத்திருக்காததால்
9. தமிழ்மக்களுக்கு என இருந்த பெருமைகளை அழித்து சின்னாபின்னமாக்கியமை
10. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் பரோட்டா போடுவதை தவிர வேறு எந்த வழியிலும் வளர்த்தெடுக்காமை
11. புலிகளின் ஆதரவாளர்கள் பலரை கடனாளக்கியமை. (சுவிஸ் நாட்டில் இது அதிகம்)
12. வானொலிகளிலும் தொலைக்காட்சியிலும் துஷசண வீரர்களை நேயர்களாக உருவாக்கியமை
13. போராட்டம் என்கிற பெயரில் ஐரோப்பிய நாட்டு தெருக்களை நாறடித்தமை.
14. ரி.என் ஏ என்கிற முதுகெலும்பற்ற ஒரு கட்சியை தமிழ்மக்களிடையே உருவாக்கியமை
15. சரத்பொன்சேகாவிற்கு தற்கொலைக்குண்டனுப்பிவிட்டு பின்னாடி அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தமை.
16. பிரபாகரன் இறந்தபின் தமிழீழத்தை நாடுகடத்தியமை
17. கள்ளமட்டை மோசடிகளில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தமிழர்களின் மானத்தை கப்பலேற்றியமை
18. தமிழ்மக்களின் பணத்தையும் சொத்துக்களையும் அபகரித்து இறுதியில் இலங்கை அரசுக்கு தாரைவார்த்தது. (முள்ளிவாய்க்காலுக்குப்பின் இராணுவம் கைப்பற்றியவை)
19. மூன்று தலைமுறை இளம் சமூதாயத்தை ;ஆயுதப்போராட்டத்தில் சீரழித்தமை
20. பிச்சை வேணாம் நாயைப்பிடி என்கிற பரிதாப நிலைக்கு தமிழ்மக்களை கொண்டு வந்து சேர்த்தமை
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இவை மிக முக்கியமானதென்பதால் குறிப்பிட்டிருக்கிறோம்

கிழக்கு பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று உண்மை

by Teavadai
யாழ்ப்பாணத்தானுக்கு மற்ற ஊர்க்காரனை இளப்பமாகக் கதைப்பதில் தனிக்குஷி. வன்னியான் மட்டக்களப்பான் மன்னாரான் வடக்கத்தையான் இப்படி மற்ற ஊர்க்காரர்களை பட்டப்பெயர் கொண்டு அழைத்து தன்னை ஒரு மேன்மையானவனாகக் காட்டிக்கொள்வதில் அவனுக்கு நிகர் இல்லைதான். ஆனால் ஆயுதப்போராட்டம் தொடங்கியபோது யாழ்ப்பாணத்தான் செய்த வேலை ஐரோப்பா நாட்டிற்கு பறந்துபோனதுதான் அதன் பின் போராட்டத்தை நடாத்தியவர்கள் வன்னி இளைஞர்களும் கிழக்கு மாகாண இளைஞர்களும்தான்.  யாழ்ப்பாணத்தான் ஐரோப்பிய நாட்டில் கக்கூசு முதற்கொண்டு அனைத்தையும் கழுவிக்கொண்டு காசு சம்பாதிப்பதில் கவனமாக இருந்தான். அரைவேற்காடு பிரபாகரனை உசுப்பேத்தி புலிஇயக்கத்தை வீங்கச்செய்து பெருமை கொண்டாடிய யாழ்ப்பாணத்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் வீர வசனம் பேசிக்கொண்டிருந்தான்.
2004ல் கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து விலகியபோது புலிகளுக்கு வீழ்ச்சியும் அழிவும் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வீரவசனம் பேசிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தான் களத்திற்குப்போய் சண்டைபோடத்தயாரில்லை. வன்னி இளைஞர்கள் அநியாயமாக யுத்தத்தில் அழிந்துபோக புலம்பெயர்நாடுகளில் காசு சேர்ப்பதில் யாழ்ப்பாணத்தான் குறியாக இருந்ததான். புலிகளுக்கு  எதிராக இந்தியா இலங்கை பாகிஸ்தான் சீனா என கூட்டு சேர்ந்து அடியைப்போட ஐரோப்பிய கனடா அவுஸ்திரேலிய  தெருக்களில் விழுந்து புரண்ட யாழ்ப்பாணத்தானால் பிரபாகரனைக் காப்பாற்ற முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் கோவணத்தோடு பிரபாகரன் கிடந்தபோது சேர்ட்டும் ரவுசரும் போட்டு போய் பார்த்த கிழக்கான் கருணா கண்கலங்கியதும் பத்திரிகைகளில் வந்த செய்திகள்.
அப்போதும் யாழ்ப்பாண்த்தானுக்கு தெரிந்திருக்கவேண்டும். எல்லொரையும் அணைத்துப்போகின்ற அரசியல் இல்லாட்:டி என்ன நடக்குமென்று.  கிழக்கு பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று உண்மை அது.
இதில் பிரதேசவாதம் இல்லை. ஆனால் யதார்த்த உண்மை இருக்கிறது. வீரவசனம் பேசுவது மட்டும் விவேகமில்லை. யாழ்ப்பாணத்தான் அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறான். புலிகள் கடைசிக்காலத்தில் வன்னி மக்களை துன்புறுத்தியிருக்காவிட்டால் அந்த மக்கள் புலிகளுக்கு நல்லதொரு அரணாக இருந்திருப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தான் மாவிலாறில் கைவைத்து மடுமாதாவை தூக்கிக்கொண்டு ஓடி சிறுவர் சிறுமிகளை பலாத்காரமாக இயக்கத்திற்கு கடத்தி மக்களை ஆயுதமுனையில் முள்ளிவாய்க்கால் வரை கடத்தி கடைசியில் யாருமே காப்பாற்ற முடியாதவாறு அழிந்துபோனார்கள்.
சிந்திப்பதில்லை. மற்றவர்களின் கருத்துக்களை ஏற்பதில்லை. முற்று முழுக்கு சுயநலப்புத்தி கடைசியில் சர்வதேசமும் கைவிட்ட நிலையில் உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை விரட்டிய வீரர்கள் உலகின் சிறிய ராணுவத்திடம் தோற்றுப்போனார்கள்.
துலைஞ்சுபோயம் புத்தி வரவில்லைப்பாருங்கள். இன்னும் வீரவசனத்திற்கு குறைவில்லை. 12000 பேரோடு தலைவர் வரப்போகிறாராம். உருப்படுமா இந்தக்கூட்டம். உலகத்தில் எந்தவொரு விடுதலைப்போராட்ட தலைவரும் பிரபாகரனைப்போல் கோவணத்தோடு போய்ச்சேர்ந்த வரலாறு இல்லை. வீரமரணம் எய்தாமல் சரணடைந்த பிரபாகரன் மக்களுக்காக தன் உயிரை தானே மாய்க்கத்தயராரக இருக்கவில்லை. அதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ்ச்சமூகமே தயராக இருக்கவில்லை.  பிரபாகரன் தமிழ்மக்களுக்காக விட்டுச்சென்றது சீரழிந்த ஒரு வரலாற்றைத்தான். இந்த உண்மை இருக்க இன்னும் அரைகுறை யாழ்ப்பாணத்தான் வரலாற்றுவீரன் தேசியத்தலைவன் என இன்டநெட்டுக்களில் வசனம் பேசிக் கொண்டு இருக்கிறான்.
கருணா பிள்ளையான் அரசியல்களில் முரண்பாடுகள் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அன்று எடுத்த முடிவால் பல ஆயிரம் கிழக்கு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கிழக்கு மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 95ல் புலிகளால் வன்னிக்கு யாழ்ப்பாணத்தான் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டாலும் கொஞ்ச நாட்களில் திரும்ப இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டிற்கு அவன் ஒடி வந்துவிட்டான். ஆனால் புலிகளிடம் மாட்டுப்பட்ட வன்னி மக்களுக்கு இறுதியில் கிடைத்தது துன்பமும் துயரமும்தான்.
வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தானுக்கு சொல்கிற புத்திமதி இதுதான். அரவணைத்துச்செல்கின்ற அரசியலுக்கு போகாமல் இருந்தால் இன்னமும் தலைவர் வருவார் புடுங்குவார் என்று ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்காமல் கால மாற்றத்திற்கேற்ப சிந்தனைகளை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் மாறாத வரட்டுச்சிந்தனைகளுக்கள் நீயும் துலைஞ்சு சமூகத்தையும் துலைச்சுப்போட்டு நிற்பதை தவிர வேறு வழியில்லை