சனி, 28 அக்டோபர், 2017

ரேஷன் மானியம் ரத்து! 49% மக்கள் வறுமையில் வாட - 110 கார்ப்பரேட் முதலாளிகள் வாழ மோடி - எடப்பாடி ஆட்சி!



தொல்.திருமாவளவன் : தமிழிசைக்கு என்மேல் ஏன் காழ்ப்புணர்ச்சி?


நக்கீரன் : தமிழிசைக்கு என்மீது தனிப்பட்ட முறையில் என்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியாக மெர்சல் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்தோம். நடிகர் விஜய்யை தங்களது கட்சிக்கு ஆதரவாக வளைத்து போட முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்தாகவும், அதற்கு தன் மீது தமிழிசை அபாண்டமான அவதூறு பரப்பினார் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழிசையின் அவதூறுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்தனர். காவல்துறை முன்னிலையிலே கரூரில் விடுதலை சிறுத்தைகள் மீது பா.ஜ.கவினர் தாக்குல் நடத்தினர். தமிழக காவல்துறை அதிமுக கட்டுப்பாட்டில் இருக்கின்றதா அல்லது பா.ஜ.க கட்டுப்பாட்டில் இருக்கின்றதா என தெரியவில்லை,

ஜெயலலிதா கைரேகை ? உயிரோடு இருப்பவரின் கைரேகையில் உயிரோட்டமிருக்கும் ஆனால் ஜெயலலிதா கைரேகை .... ?

AAlnci.Spm.:  நாட்டுக்களின் மீது அலாதி நம்பிக்கை/ பிரியம் எனக்குண்டு .. காரணம் படிப்பறிவில்லாவிட்டாலும் யாரையும் ஏமாற்ற தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.  மிகவும் நம்பிக்கையானவர்கள். .யாரையும் வஞ்சிக்கத் தெரியாத உயர்குணம் கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கைநாட்டு பெரும் சந்தேகத்தை தந்தது.. மேதாவித்தனம் என்ற இமேஜை சுக்குநூறாக்கிய சம்பவம் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்திருந்தால் கைநாட்டு வைத்திருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.. அவர் சுயநினைவோடில்லை என்ற நிலையை மறைத்து 90 சதவிகிதம் குணமடைந்து விட்டதாக சொன்ன சில மணி நேரத்திற்குள்ளாக அவரிடம் கைநாட்டு பெற பட்டதாக மற்றொரு செய்தி இட்லி சாப்பிடுகிறாரென்று சொன்னவர்களின் பொய் இப்போது அம்பலமாக தொடங்கியிருக்கிறது.. ஜெயலலிதாவை வைத்து இவர்கள் களித்த களி ..இப்போது உடைபடுகிறது.. திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் டாக்டர் பாலாஜியை நீதிமன்றத்தில் (ஆஜராக) நேர்நிற்க உத்தரவிட்டது.

யாரும் “premarital sex is essential” என்ற போது எதிர்த்து அலறவில்லை,,, உடலுறவில்...

Lulu Deva Jamla : உடலுறவில் தன் இணையை முழுவதுமாய் திருப்தி படுத்திக் கொண்டிருப்பவர்களோ, தன் பெஃபார்மென்ஸின் மீது தன்னம்பிக்கை உடையவர்களோ யாரும் “premarital sex is essential” என்ற போது எதிர்த்து அலறவில்லை என்கிறதை யாராச்சும் கவனிச்சீங்களா? 😂😂😂 மாறாய் ஆதரிக்கவே செய்திருக்கிறார்கள். அதில் ஒரு அழகான ஆதரவு பின்னூட்டம் இது 👇👇👇
ஒரு உண்மை கதை.
எங்கூர்ல ஒரு ஜோடி லவ் பண்ணினாங்க. லவ் பண்ணும்போது அந்தப் பையன் அந்த பொண்ண ஹக் கூட பண்ணதில்ல. அந்த பொண்ணே ஏண்டா பயப்படுறங்கிற போதெல்லாம் அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் அப்படிண்ணிருக்கான். பொண்ணும் நம்பிடுச்சு. கல்யாணம் நடந்து மொத ராத்திரி தம்பியோட தம்பி தூங்கிடுச்சு. குச்சியால அடிச்சு எழுப்பியும் எந்திரிக்கல. பொண்ணுக்கு அப்போதான் விஷயம் தெரிஞ்சது. அடுத்தநாள் களேபரம்.

ஜவாஹிருல்லா : கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்

மாலைமலர் : திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்: ஜவாஹிருல்லா ராமநாதபுரம்: மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹி ருல்லா ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. கந்து வட்டியை தடுக்க மத்திய,மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக வட்டியில்லா வங்கிக்கடன் திட்டம் கொண்டு வர வேண்டும்.

பழனிசாமி, பன்னீரின் காலடியில் எம்.ஜி.ஆர்!

 பழனிசாமி, பன்னீரின் காலடியில் எம்.ஜி.ஆர்!
மின்னம்பலம் : தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் உண்மையிலேயே எம்.ஜி.ஆர்.புகழ் பாடும் விழாக்கள் அல்ல, அவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீரின் புகழ் பாடும் விழாக்களாக மாறிவிட்ட அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்
உயிருடன் உள்ள தலைவர்களுக்கு பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சத்யநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, தமிழக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
‘‘தமிழகமெங்கும் கட்-அவுட், பதாகைகள் தான் நிறைந்துள்ளன. என் வீட்டு முன் அமைக்கப்பட்ட இரு பதாகைகள் இன்னும் அகற்றப்படவில்லை. ஒரு பதாகை அகற்றப்பட்டால் அடுத்த சிறிது நேரத்தில் இன்னொரு பதாகை வைக்கப்படுகிறது. இது தொடர்பாக 1000 வழக்குகள் உள்ளன. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகை அமைத்தோர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இந்த அரசு செயல்படாததால், மக்கள் குறைகளுடன் நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராமச்சந்திரா ? 

எழுத்தாளர் எஸ்.லட்சுமணன் மரணம்! மஞ்சரி இதழின் முன்னாள் ஆசிரியர் ,,,

எழுத்தாளர் எஸ்.லட்சுமணன் மரணம்!மின்னம்பலம் :  பிரபல 'மஞ்சரி' இதழின் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான எஸ்.லட்சுமணன் நேற்றிரவு (அக்டோபர் 27) மரணமடைந்தார்.
மஞ்சரி என்ற இதழ் 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் உரிமையாளர் என்.ராமரத்னம், தமிழ் வாசகர்களுக்கு உலக அனுபவமும் உலகச் செய்திகளையும் உலக இலக்கியங்களையும் தெரிந்துகொள்ள வைக்கும் வகையில் ஒரு இதழைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த இதழைத் தொடங்கினார். பல நாடுகளில் பல மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளிலிருந்து சிறந்த செய்திகள் கலை இலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சுவை குன்றாமல் சுருக்கித் தருதல். இந்தியாவின் கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், மருத்துவம், உளவியல், அறிவியல், பொருளாதாரம் போன்ற துறைகள் சார்ந்து பலதரப்பட்ட கட்டுரைகளை மஞ்சரி வெளியிட்டுவருகிறது.

திருமணத்திற்கு முன் ஆண் பெண் உடலுறவு கொள்வது அவசியம்?

Lulu Deva Jamla : சமீபத்தில் ஒரு சக பெண்ணியலாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அதில் நானும் அவரும் மிகப்பலமாய் ஆதரித்த ஒரு விடயம் ஒரு பெண் ஒரு ஆணுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன் இருமன உறவையும் உடலுறவையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து தான்.
இதை மொட்டையாய் படிக்கும்போது உங்களுக்கு அதிர்ச்சியாய் தான் இருக்கும். திருமணத்திற்கு முன் உடலுறவா? நம் பண்பாடு, கலாச்சாரம் என்னாவது? இதெல்லாம் பக்கா தேவடியாத்தனம் என்று எதிர்த்து கொடி பிடிக்கத்தோன்றும். ஆனால் இப்படி ஒரு பரீட்சார்த்த முறை இல்லாததால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் பெண்களின் கண்ணீர் கதைகளை கேட்டால் நிச்சயமாய் என் கருத்தை மறுக்க மாட்டீர்கள்.
இது ஒரு பெண்ணின் உண்மைக்கதை. என்னுடன் வீடியோ காலில் அவள் பகிர்ந்து கொண்ட அவளின் வாழ்க்கை கதை இது.
//என் பெயர் வெளியிட விருப்பமில்லை. எனக்கு இப்போது 25 வயது. ஒன்றரை வருடங்களுக்கு முன் எனக்கு திருமணம் நடந்தது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனது குடும்பமும் என் கணவரது குடும்பமும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். திருமணத்திற்கு முன் சில மருத்துவ Tests இருவருக்குமே எடுத்து பார்த்து தான் திருமணம் நடந்தது. Report ல் அவர் Physically fit என்றே வந்தது. ஆனால் திருமணம் ஆனதிலிருந்து அவர் என்னோடு உடலுறவில் ஈடுபடவே இல்லை. இப்படியாக One and half years கடந்தாயிற்று.

ஸ்டாலின் : சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நவ.6ல் ரேஷன் கடைகளின் முன்பு திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

நக்கீரன் :ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் -  சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து  ரேஷன் கடைகளின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று திமுக  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:   ‘’நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் சர்க்கரை கிலோ விலை தற்போது விற்கப்படும் 13 ரூபாய் 50 காசில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்படும் என்று குதிரை பேர அரசு அறிவித்திருப்பது ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

மகனுடன் தீக்குளிக்க முயன்ற விசைத்தறி அதிபர்... கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு

மாலைமலர் : கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 7 வயது மகனுடன் விசைத்தறி அதிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மகனுடன் தீக்குளிக்க முயன்ற விசைத்தறி அதிபர் கோவையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி அதிபர் குமார் கோவை: கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 44). விசைத்தறி அதிபர். இவரது மகன் ரித்தீஸ்குமார் (7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை குமார் தனது மகனுடன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வந்தார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து தன் மீதும் மகன் மீதும் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று குமாரின் கையில் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி எரிந்தனர்.

BBC : தமிழகத்தில் ரேஷன் சர்க்கரை விலையை உயர்வு, பல தரப்பிலும் எதிர்ப்பு

தமிழக நியாய விலைக் கடைகளில், இதுவரை ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50க்கு அளிக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் முதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைத் தவிர்த்து, பிறருக்கு ரூ.25 ஆக விலை உயர்த்தி விற்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ;அனைத்து குடும்ப அட்டைதாரகளுக்கும் அதிகபட்சமாக ஒரு கார்டுக்கு ஒரு மாதத்திற்கு ஐந்து கிலோ சர்க்கரை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தமாதம் முதல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்று உணவுத்துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடையில் சர்க்கரையின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வெளிச்சந்தையில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.45ஆக இருப்பதால்,ரேஷனில் ஒரு கிலோவிற்கு ரூ.20-ஐ அரசு ஏற்றுக்கொண்டு, மானியத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஒரு ஆண்டிற்கு ரூ.836.29கோடி ரூபாயை சர்க்கரைக்கான மானியமாக செலவிடவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் ....சமுக வலையில் Lulu Deva Jamla ...

நான் பெண்ணியல்வாதி என்று என்னை அடையாளப்படுத்தி கொள்வதில்லை,
நான் பெண்ணியவாதி அல்ல!
ஆனால், காதல்னு பாலிஷ் போடாம பச்சையா காமுறுதல்/காமம் பத்தி பேசுறது, பெண்களுக்கான பாலியல் சுதந்திரம், குடும்பத்தில் பெண்-ஆண் சமத்துவம், சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு முழுமையான கருத்துச்சுதந்திரத்துக்கான தேவை குறித்து எழுதுவது, சமமான சமூக நீதியை நிலை நிறுத்துவது, சாதி மதம் இவைகளை முற்றிலுமாய் மறுப்பது, பெண்ணுடல் பெண்ணுணர்வுகள் இழிவு படுத்தப்படும் போது ஒட்டுமொத்தமாய் எதிர்ப்பது, இதுவே எனக்கான தளம்.
இதில் மாற்றுக்கருத்துள்ளவர்கள் பலர் என் நட்புவட்டத்தில் உண்டு. அவர்கள் தங்கள் எதிர்கருத்துக்களை தெரிவிக்கும் போது நான் எதிர்வினையாற்றுவதில்லை. என் நண்பர்களை நான் மிகவும் மதிக்கிறேன் என்றாலும் பொதுவாக என் வார்த்தைகளில் போலியாய் மரியாதை எழுத்துக்களை (ங்க) சேர்ப்பதில்லை. ஆனால் அவர்கள் என்மீது கருத்து திணிப்பு செய்ய முயலும் போது என் எண்ணங்களிலும் உண்மையிலேயே மதிப்பிழந்து போகிறார்கள் என்பதே நிதர்சனம்.
என் கருத்துக்கள், எண்ணங்கள் மீது மரியாதையின்றி கேலி செய்பவர்களை நான் என் நண்பர்களாய் தொடரவிடுவதில்லை.
அன்பில் லுலு

தி.மு.க முன்னாள் எம்.பி செல்வகணபதியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

vikatan : மு.ஹரி காமராஜ் சேலம் மாவட்ட தி.மு.க-வில் வீரபாண்டி ராஜா மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய இரு கோஷ்டியின் பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக நேற்று இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதையொட்டி சேலத்தில் 27 வது வார்டு அரிசிப்பாளையத்தில் ராஜேந்திரன் தரப்பினர் தி.மு.க உறுப்பினர் படிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீரபாண்டி ராஜா ஆதரவாளரான செல்வகணபதி தரப்பினரும் உறுப்பினர் படிவம் சேர்த்துக்கொண்டிருக்கத் தொடங்கினர். இதனால் அங்கு மோதல் நிலை உருவானது. உச்சபட்சமாக இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். இதில் ராஜேந்திரன் தரப்பில் சுரேஷ், பிரகாஷ் என்பவர்களும் டி.எம்.செல்வகணபதி தரப்பில் வினோத்குமார், வரதன் ஆகியோருக்கும் கத்திக் குத்துப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எச்1-பி விசாவுக்குப் புதிய கட்டுப்பாடுகள்! H1B visa: Trump admin makes it more difficult for H-1B visa extension ...

minnambalam :அமெரிக்காவில் எச்1-பி விசா பெறுவதற்கான விதிமுறைகளைத் தொடர்ந்து அமெரிக்க அரசு கடுமையாக்கி வருகிறது. இதுபற்றி சர்ச்சைகள் சில காலமாக இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எச்1-பி விசா குறித்த சர்ச்சைகள் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே எச்1-பி விசா பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்கள், தங்களின் விசா காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கான விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. இதற்கு முன்பு, ஏற்கெனவே எச்1-பி விசா பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களின் விசாவைப் புதுப்பித்துக் கொள்வது மிக எளிமையாக இருந்தது. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, விசாவைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பும் ஊழியர்கள் முதற்கட்ட நிலையைப் போலவே ஒவ்வொரு முறையும் தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும்.

மதுரை ஆதீன மடதிற்குள் நுழைய நித்யானந்தா மனு!

ஆதீன மடம்: நித்யானந்தா மனு!
மின்னம்பலம : மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு விதித்த தடையை ரத்து செய்யக் கோரி நித்யானந்தா தரப்பிலிருந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்யானந்தா 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததை ரத்து செய்தார் மதுரை ஆதீனம். நித்யானந்தா மடத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த பிரச்னை தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆதீன மடத்துக்குள் சென்று பூஜை செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நித்யானந்தா வழக்கு தொடுத்திருந்தார்.

கமலஹாசன் எண்ணூரில் துறைமுக கழிவுகளை பார்வையிட்டார் (படங்கள் )

தினகரன் : சென்னை எண்ணூர் துறைமுக கழிவுகள் மற்றும் சாம்பல்குளம் கமல்ஹாசன் பார்வையிட்டு வருகிறார். சாம்பல் கழிவுகளை கொட்டப்படுவதாக கமல் டுவிட்டரில் புகார் தெரிவித்த நிலையில் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 5 மணிக்கு நேரில் பார்வையிட்டார். கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக கமல்ஹாசன் புகார் தெரிவித்திருந்தார்.

சசிகலா,சொத்துக்களை,பறிக்க மத்திய அரசு அதிரடி,உத்தரவு

தினமலர் : புதுடில்லி: முடக்கப்பட்ட,2.2 லட்சம் போலி நிறுவனங்களின், சொத்துக்களை அடையாளம் காண, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவற்றை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அளிக்கப்பட்ட, 50 நாள் அவகாசத்தின்போது, மூன்று லட்சத்துக்கும் அதிகமான போலி நிறுவனங்களின் கணக்குகளில், 1,321 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யபட்டுள்ளது தெரிந்தது. சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட நிறுவனங்கள் குறித்து, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. ; இதை தொடர்ந்து, 2.2 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை, மத்திய அரசு ரத்து செய்தது. இவற்றில் பெரும்பாலானவை, நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாதவை. இந்த போலி நிறுவனங்களில், இயக்குனர்களாக இருந்த, 1.06 லட்சம் பேரை, நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாகக் கூறி, தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவர்கள்,5 ஆண்டு களுக்கு, பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப் பட்டது. முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டஇயக்குனர்களின் பெயர்களை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டது.  இதை முதலில் குஜராத்தில் செய்யுங்க......எவ்வளவு போலி நிறுவனங்கள் இருக்கு என்று இந்தியாவிற்கு தெரியப்படுத்துங்க

தனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்


BBC :ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான
கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது. இதனிடையே கேட்டலோனியாவின் நேரடி ஆட்சியை அமல்படுத்த ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து 30-ந் தேதி முதல் நீதி விசாரணை

thinathanthi : சென்னை, தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலன் இன்றி அவர் உயிர் இழந்தார். ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது, அதில் ஒரு அணிக்கு தலைமை தாங்கிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்தார். பின்னர், அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோதும் ஓ.பன்னீர்செல்வம் அதே கோரிக்கையை மீண்டும் முன்வைத்து வலியுறுத்தி வந்தார். அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து செப்டம்பர் 25-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

சோதனையில் பெண் குழந்தை என்று தெரிந்ததால் கர்ப்பிணிப் பெண் கொலை!

Pregnant woman beaten to death in West Bengal நக்கீரன் :மருத்துவப் பரிசோதனையில் பெண் குழந்தை என்று காட்டியதால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவப்பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதில் அவரது வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது உறுதியானது. இதனால், கடந்த சில தினங்களாக அந்தப்பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் சகோதரியால் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை மீண்டும் தாக்கப்பட்டபோது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கர்ப்பகாலத்தில் என்ன குழந்தை வயிற்றில் இருக்கிறது என்பதை அறிய இந்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய நிறுவன வாரிய உறுப்பினர்களின் சாதி வாரி விபரம்! ... FC : 92,6 %.... SC/ ST 3.5 %...

Brinda Keats : இந்திய பெரு நிறுவன வாரிய உறுப்பினர்களின் சாதி வாரியான பிரிவு:
1) FC: 92.6%. இதில் பார்ப்பனர்கள் மட்டுமே 44.6%.
2) BC, SC சதவிகிதம் கிட்டத்தட்ட அதே (3.8%, 3.5%). எதிரி யாருனு கூட புரிஞ்சிக்காம இவங்க மாத்தி மாத்தி அடிச்சிகிறத என்னனு சொல்ல<

ரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக் சோப்ரா !

சமணம் . பௌத்தம், மற்றும் ஏராளமான் சிறிய பெரிய  வழக்கொழிந்து போய்விட்ட   சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது  இந்து சமயம் என்ற பெயரில்  இருக்கிறது.

நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள்  மீது ஒரு  அவநம்பிக்கை  இருக்கிறது.
நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது ,
ஆனால்  நடித்து கொண்டிருக்கிறார்கள்.
 அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு மிகபெரும் அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மறு புறம்  எல்லாவிதமான தத்துவங்களும் மீள் பரிசோதனைகளுக்கு உட்பட்டு கொண்டே இருக்கிறது.
மனிதர்கள் கொஞ்சம் சுயமாக சிந்திக்க தொடங்கி உள்ளார்கள்.
மேலை நாடுகளில் மனிதரின் பிறப்பு. இறப்பு மட்டும் அல்லாது , இந்த பிரபஞ்சம் இயங்கும் விதிகளை ஆராய்ந்து  பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
Darwin , Fredric Neitche, Sigmande Freud போன்றவர்கள் தத்துவார்த்த ரீதியிலான புரட்சியை சமகாலத்தில் தொடக்கி வைத்தார்கள் என்றே கூறலாம்.
இவற்றின் வழி பல புதியவர்கள் பல நூல்களை எழுதினார்கள் .
அவற்றில் மிக ஆழமான புரட்சிகரமான பிரபஞ்சவியல் ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில்  எதை குறிப்பிடுவது எதை விடுவது என்ற குழப்பம் எனக்கு உள்ளது.
ஏனெனில் மிக நீண்ட பட்டியலை குறிப்பிடுவது வாசர்கர்களின் பொறுமையை சோதித்து விடுமோ என எண்ணுகிறேன்.
 Jane Roberts என்பவர் எனக்கு  முக்கியமானவர் . இவர் ஏராளாமான நூல்களை அளித்துள்ளார் .

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பயிரை நாசம் செய்து விட்டு 4000 ரூபாய் வீசிய பிஜேபி அமைச்சர் : விவசாயி கண்ணீர்

Special Correspondent FB Wing :  உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மை நாட்களாக அங்கு ஆக்சிஜன் இல்லாமல் மேற்பட்ட குழைந்தைகள் இறந்த நிலையில் தாஜ்மஹால் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஆக்ரா அருகே ஜலாவுன் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் அண்மையில் வயலை உழுது பயிர் செய்வதற்காக விதைகளை தூவியிருந்தார்.

பொம்பளதானே?‘ Lipstick Under My Burkha',, பார்த்து முடித்த பிறகுதான் என்னவோ செய்கிறது.

nisaptham.com : என்ன இருந்தாலும் பொம்பளதானே? நான்கு பேர்கள் விதவிதமான பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டுக் கடைசியில் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் என்பது திரைக்கதை ஃபார்முலாக்களில் ஒன்று. சமீபத்தில் வந்த ‘மாநகரம்’ திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். சென்னை நகரில் ஒரேயிரவில் சிலருக்கு நடக்கும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. ஒவ்வொருவரையும் இன்னொருவருடன் சம்பவத்தின் வழியாகப் பிணைத்திருப்பார்கள். சம்பவங்களால்தான் இணைக்க வேண்டும் என்பதில்லை. உணர்வுப்பூர்வமாகவும் இணைக்க முடியும் என்பதற்கு ‘Lipstick Under My Burkha'வைச் சுட்டிக் காட்டலாம். 

தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு ! தமிழின் தொன்மையைக் ... சமஸ்கிருதத்தினின்று தமிழ் வந்ததென்று சொல்ல மாட்டார்.

abrahamin pandithar 350/keetru.com  மு.ஆபிரகாம் பண்டிதர் எழுதிய "கருணாமிர்த சாகரம்" நூல் வெளியாகி நூறாண்டுகள் நிறைவேறியதையட்டி அந்நூற் தொகுப்பின் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் ஒரு பகுதி இங்கே வெளியிடப்படுகிறது.
Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (4.)
“It is to be observed that though the long list of names mentioned in the Pooranas are all Sanskrit, these are only book names. The names of the country reported or ascertained by Aryan travellers and settlers wereinvariably translated into Sanskrit by the literary caste of the Aryans. It is a very common error to suppose that because none but Sanskrit names are found in the ancientliterature of the country, it was therfore a country occupied by an Aryan people, and that all the places mentioned were founded by the Aryans. But in fact as the Aryan visitors to India had the monopoly of literature, the indigenous names could only appear in a Sanskrit form; and no argument is to be thence deduced in one direction or another as to the extent of Aryan coloizations. In later times Aryan influence has undoubtedly given current names to geographical places even in Southern India. * * * It will be seen from the next note that Greek literature is analogous to Sanskrit in presenting indigenous Indian names in such a Greek dress that they are not easily recognisable; but the Greeks did not at all to the same extent actually translate Indian names.”
“புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிற நீண்ட அட்டவணைப் பெயர்களெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களாயிருந்தபோதிலும் அவைகளெல்லாம் புஸ்தகப் பெயர்களே யொழிய உண்மையான பெயர்களல்ல. ஆரியரான பிரயாணிகளும் புதுக்குடியேறு வோர்களும் தாங்கள் கண்டதாக அல்லது கேள்விப்பட்டதாகச் சொல்லும் தேசங் களின் பெயர்களெல்லாம் ஆரிய வித்வான் களால் தப்பாமல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. இந்து தேசத்தின் பழமை யான நூல்களிலெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களே காணப்படுவதால் அந்தத் தேசம் ஆரியரால் குடியேறப்பெற்ற தேசமென்றும் அதில் சொல்லியிருக்கும் இடங்களெல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட்டவையென்று நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பா யிருக்கிறது.

நடிகை கஸ்தூரி திமுகவின் ... ஒரு வதந்தி ...

வெப்துனியா :நடிகை கஸ்தூரி திமுகவில் இணைந்து அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. சமீப காலமாகவே அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என ரஜினி கூறியதை கிண்டலடித்து ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகினார்.

சு. சாமியின் மனு தள்ளுபடி .. சசிதரூர் மனைவி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் ...

தினமலர் :புதுடில்லி: காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த, பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.காங்., மூத்த தலைவர், சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், 52, டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், 2014 ஜன., 17ல், சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி, பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து, டில்லி உயர் நீதிமன்ற அமர்வு கூறியதாவது:
ஓர் அரசியல் தலைவர் மீது, மற்றொரு அரசியல் தலைவர், அரசியல் நோக்கத்துக்காக, பொதுநல வழக்கு என்ற பெயரில், வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. இதற்காக, அரசியல்வாதிகள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என, கூறவில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.

நான் ஹரிஹர ஷர்மாவின் மகன்தான் ஆனால் ஷர்மா இல்லை ! ஷர்மா என்றால் அவ்வளவு அவமானமா?


நக்கீரன் :பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது வாக்காளர் அட்டையை வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்து கூறப்பட்டதாக கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விஜயை ‘ஜோசப் விஜய்’ என ஹெச்.ராஜா மத ரீதியாக விமர்சித்தார். அதோடு, விஜயின் வாக்களர் அட்டையின் நகலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் ஜோசப் விஜய்தான் என விமர்சனம் செய்தார்.எனவே, கோபமடைந்த பலர், உங்களது பெயர் ராஜா ஹரிஹர சர்மாவாமே. முடிந்தால் உங்களது வாக்களர் அட்டையையும் வெளியிடுங்களேன் என டிவிட்டரில் கேள்வி எழுப்பினர்.

சிவசேனா : மோடி அலை ஓய்ந்துவிட்டது ! ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் உள்ளது!

மின்னம்பலம : மோடி அலை
ஓய்ந்துவிட்டதாகவும் ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் உள்ளதாகவும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனா கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் குஜராத் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம், டிசம்பரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் சவாலாக அமையும் என சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சஞ்சய் ராவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நரேந்திர மோடியின் அலை இருந்தது. ஆனால் இப்போது அது மங்கிவிட்டதாகத் தெரிகிறது என சொன்ன அவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வழிநடத்திச் செல்லும் தகுதி உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். ராகுல் காந்தியை பப்பு (குழந்தை) என பாஜகவினர் அழைப்பது தொடர்பாக ராவுத் பேசும்போது, “அவரை அவ்வாறு அழைப்பது தவறு. நாட்டின் மிகப் பெரிய அரசியல் சக்தி என்றால் அது மக்கள்தான். அவர்களால் யாரையும் பப்புவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.

தொடரும் பாஜக விடுதலை சிறுத்தைகள் மோதல் ... கரூர் - மயிலாடுதுறை ..

தொடரும் பாஜக-விசிக மோதல்!மின்னம்பலம் : கரூரைத் தொடர்ந்து
மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டியதால், பாஜக-விசிகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பேசினார்.
இதைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு எதிராக தமிழிசை, அவரை கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்று விமர்சித்தார். இதற்கு எதிர்வினையாற்றிய திருமாவளவன்,"நான் பாஜகவினை கொள்கை ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்தேன், ஆனால் அவர் தனிநபர் விமர்சனத்தை முன்வைப்பது எதனால் என்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கரூரில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக-விசிக இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.

வங்கிகள் முதியோர் உதவித் தொகையில் கொள்ளை ...குறைந்த பட்ச இருப்பு திருட்டு!

முதியோர் உதவித் தொகையில் பிடித்தம் கூடாது!மின்னம்பலம் : வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புக்காக முதியோர் உதவித் தொகையிலிருந்து பிடித்தம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு சார்பில் முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் எனப் பல்வேறு பிரிவினருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. வங்கிகளில் செலுத்தும் அந்தத் தொகையிலும் குறைந்தபட்ச இருப்பு எனக் கூறி வங்கிகள் பிடித்தம் செய்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பேனர்களில் புகைப்படம் வைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நக்கீரன் : பேனர்களில் புகைப்படம் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீத்மன்றம்  மறுப்பு! உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்தை பேனர்கள், கட்-அவுட்டுகளில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்களைப் பயன்படுத்த தனிநீதிபதி வைத்தியநாதன் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் தடைவிதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த முறையீட்டை அவசர வழக்காக ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

கட்டலோனியா சுதந்திர பிரகடனம்! அதன் பாராளுமன்றதில் அதிகார பூர்வ அறிவிப்பு ... சற்று முன்


மாலைமலர் : ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா பாராளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளது. பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா இன்று அதிகாரப்பூர்வமாக தனி நாடாகி விட்டதாக அறிவித்துள்ளது. ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா, தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கேட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கேட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய கார்லஸ் பூஜ்டியமோன்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க்கொள்வதாக அறிவித்தார்.

திருமதி. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

dinamani : காங்கிரஸ் தலைவர் சோனியா சமீப காலங்களாக உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். இதன்காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த அரசியல் விவகாரங்கள் தொடர்பான பொதுக்கூட்டங்கள், தற்போது நடைபெறவுள்ள குஜராத், ஹிமாச்சலப் பிரதேச தேர்தல்களின் பிரசாரங்களிலும் இதுவரை பங்கேற்கவில்லை. கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

கன்னட குருநான்செஸ்வர சாமியார் கன்னட நடிகையுடன் கட்டிலில் Nanjeshwar Swamiji Caughtl with Actress ...


webdunia : கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.; கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ சிவச்சார்யாவின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ இன்று வெளியானது.  மடத்தினுள்ளே உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.;இதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவாக உள்ள தயானந்தாவை வெளியே வருமான குரல் எழுப்பினர். ஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த நடிகை சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த >மடத்திற்கு சொந்தமான இடத்தை சில லட்சங்களுக்கு தயானந்தா விற்றுள்ளார் என்ற புகார் ஏற்கனவே அவர் மீது இருக்கிறது. இந்நிலையில், இந்த பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ளார். இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷ் லக்கானி சிக்குகிறார், ஜெயலலிதாவின் போலி கைரேகை ..

மினன்ம்பலம் :மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் நடந்த இடைத்தேர்தல், மறு தேர்தல்களுக்காக தன் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுவில் கைரேகை வைத்த விவகாரம் பல வகையிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவரது கைரேகை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற சர்ச்சையில் விளக்கம் அளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நேற்று (அக்டோபர் 26) உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு மறு தேர்தலும் வந்தது. அப்போது, அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான பி பார்ம் மனு ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மெர்சல் ! மைனாரிட்டி இழிவைவிட பெரும்பான்மை மதவாதம் ஆபத்தானது.. எவிடென்ஸ் கதிர்!


ஆரோக்கியராஜ் ...ஒரு கொடூரமான வில்லனுக்கு தமிழக மருத்துவ மாபியாவுக்கு கொஞ்சமும் பொருந்தாத கிறிஸ்துவ அடையாளமும் பெயரும் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? அம்பேத்கர் படத்தை காட்டுகிற அட்லி, உடனடியாக பதட்டமாக சுபாஸ் சந்திரபோஸ் படத்தையும் காட்டுகிறார். ஏன் இந்த காம்ப்ரமைஸ்? பாட்சாவில் வில்லனுக்கு பெயர் அந்தோணி. மும்பையில் கிறிஸ்துவர்களில் எத்தனை பேர் தாதாவாக இருந்தார்கள்?
ஊருக்கு இளிச்சவாயர்கள் என்றால் கிறிஸ்துவ பெயரை வைத்துக் கொள்ளலாம். அதற்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். இந்த படத்தில் இதுபோன்ற காம்ப்ரமைஸ் மூலம் இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்துகிற வேலையையும் அட்லி செய்திருக்கிறார். சமூக ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட கிறிஸ்துவர்கள் இந்த படத்தை எதிர்க்காமல் கருத்து சுதந்திரம் காக்கின்றனர். அரசியல் ரீதியாக பிஜேபியை எதிர்த்ததனால் பிஜேபிக்காரர்கள் இப்படத்தை எதிர்க்கின்றனர். உரிமையை வலுவாக பேசுங்கள், இன்னும் வலுவாக பேசுங்கள். ஒரு மைனாரிட்டி சமூகத்தை இழிவுபடுத்தியும் அநீதிக்கு எதிராக பேசுங்கள். ஏன் என்றால் மைனாரிட்டி இழிவைவிட பெரும்பான்மை மதவாதம் ஆபத்தானது. அதற்காகவாவது இன்னும் பேசுங்கள் அட்லி. பொறுத்துக் கொள்கிறோம்.

kathir.vincentraj : உயிரை இயற்கை படைக்கலாம். அந்த உயிர் பறிபோகிற நிலையிருந்தாலும் அல்லது அந்த உயிர் சிதைந்து போகிற நிலை இருந்தாலும் அவற்றை மீட்கிற ஆற்றல் மருத்துவத்திற்கு உண்டு. அதனால் தான் மருத்துவர்களை கடவுளை போன்றவர்கள் என்று வழிபடுகின்றனர்.

பஞ்சாப் தெருக்களில் ஹிந்தி பெயர்கள் தார்பூசப்படுகிறது ,, பெரியாரின் போர்குரல் பஞ்சாப் வரை ..

பஞ்சாபில்
இந்தி எதிர்ப்புப் போராட்டம்!
பலே... பலே... 60 ஆண்டுகளுக்குப் முன்னால் பெரியார் நடத்திய போராட்டம் - இப்போது பஞ்சாபில்!
இரயில் நிலையங்களில் முதலிடத்தில் இந்தியும், இரண்டாமிடத்தில் தமிழும், மூன்றாமிடத்தில் ஆங்கிலமும் இருந்த நிலை, பெரியாரின் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்திற்குப் (அப்போராட்டத்தை அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவும் பின்பற்றி நடத்தியது) பிறகு தான் மாறி, முதலிடத்தில் தமிழ் எழுதப்பட்டது. அத்தகைய ஒரு போராட்டம் பஞ்சாபில் இப்போது!
தார் கொண்டு பெரியார் இந்தியை அழித்தபோது, பின்னாடியே நான் மண்ணெண்ணெய் வாளியோடு வந்து இந்தியைக் காப்பேன்னு பேசின ம.பொ.சி மாதிரி, ஏதாவது மாபோசிங் அங்க வந்துடாம பார்த்துக்குங்க பஞ்சாப் சிங்கங்களே!