hindutamil.in -ஒய்.டேவிட் ராஜா : மதுரை: "சுந்தர்.சி 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால், அவருக்கு எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை” என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பேசியுள்ளார். மேலும், சுந்தர்.சி-யை ‘சினிமா சங்கி’ என்று அவர் குறிப்பிட்டார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிரம்மர்புரம், முரட்டன் பத்திரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சனி, 11 ஏப்ரல், 2026
“சுந்தர்.சி முதலில் சென்றது ஆர்எஸ்எஸ் அலுவலகம்தான்! அமைச்சர் பிடிஆர் விவரிப்பு
ஐசியுவில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்த வானதி சீனிவாசன் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று பிற்பலில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜனநாயகன் லீக்கானது எப்படி? நடிகர் விஜய்யின் கைங்கரியம்? காரணம் இருக்கிறது
Akilan Arul : ஜனநாயகன் leak யார் மூலம்?ன்னு கேட்குறதுக்கு முன்னாடி basic fact தெரிஞ்சிருக்கணும்...
இது சாதாரண piracy கிடையாது....Edit Reference Mark ஒட இந்த print வெளில வந்துருக்கு. இது direct Personal Copy..Theatreல எடுக்குற piracy printல இப்படிப்பட்ட mark இருக்காது...Cinema industry protocol படி இந்த மாதிரி personal copy தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் இந்த 4 பேர்கிட்ட மட்டும் தான் இருக்கும்...அப்படின்னா எப்படி leak ஆகி எங்கிருந்து வந்திருக்கும் புரிஞ்சிக்கனும்..
Edit reference water mark உள்ள திரைப்படத்தின் காட்சிகள் 4 பேரிடம் இருந்து மட்டுமே லீக் செய்ய வாய்ப்புள்ளது
1 - Producer - KVN Productions
2 - Hero - Actor Vijay
3 - Director - H.Vinoth
4 - Editor - Pradeep E Ragav
லீக் ஆனா நஷ்டப்படுற மொத ஆள் producer so அவரு பண்ணியிருக்க வாய்ப்பில்லை, டைரக்டர் ஆசை தன்னோட படைப்பை எல்லோரும் தியேட்டர்ல பாத்து ரசிக்கணும் நல்லா ஓடினா அடுத்த படவாய்ப்பு வரும், எடிட்டர் பண்ண அவசியம் இல்லை...
வெள்ளி, 10 ஏப்ரல், 2026
கேரளா மேற்கு வங்கம் புதுசேரி வாக்கு பதிவு நிறைவு - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஏன் வெளியாகவில்லை?
tamil.news18.com : புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் வாக்குப் பதிவு நிறைவடைந்தும் ஏன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவில்லை தெரியுமா?
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் நிலையில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் நிலையில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? 12 நாட்களே மிச்சம்!
![]() |
News4 Tamil Digital 12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா?
தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன..
குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள தேசியத் தலைவர்கள் தமிழகத்தையே சுற்றிச் சுழன்று வருகின்றனர்.
இந்தச் சூழலில் தான் திமுக கூட்டணியில் ஒரு புரியாத மௌனம் நிலவி வருகிறது.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஜாம்பவான்கள் வாரத்திற்கு ஒருமுறை தமிழகம் வந்து வாக்குச் சேகரிப்பதோடு, மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து ஆக்ரோஷமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: ஐகோர்ட் கிளை கண்டிப்பு; மனு தள்ளுபடி; ரூ.50,000 அபராதம் -
dinakaran.com - Karthik Yash : மதுரை: திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்னையே இல்லையா? இவ்விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என மனுதாரரை கண்டித்த ஐகோர்ட் கிளை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே சென்று வழிபட அனுமதி அளித்துள்ளனர். எனவே, கடமையை நிறைவேற்ற தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
வியாழன், 9 ஏப்ரல், 2026
புதுவை - ஸ்டாலினை சந்திக்க மறுத்த ராகுல்!
தினமலர் : புதுச்சேரியில் ஒரே நாளில் பிரசாரம் செய்தும் கூட்டணி தலைவர்களான ஸ்டாலினும் ராகுலும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நெல்லையில் நடிகர் விஜய்யின் பேச்சு, ஏற்கனவே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி உள்ளது.
ஏப்.6ம் தேதி புதுச்சேரியில் ஒரே நாளில் திமுக தலைவர் ஸ்டாலினும் காங்., தலைவர் ராகுலும் பிரசாரம் செய்தனர். கூட்டணி கட்சிகளாக இருந்தும், ஒரே யூனியன் பிரதேசத்தில் பிரசாரம் செய்த ஸ்டாலினும் ராகுலும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. ஸ்டாலினை சந்தியுங்கள் என்று ராகுலுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு ராகுல் மறுத்து விட்டதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.
சுருதி ஹாசன் : 5 பேருக்கு மனைவியாக வாழ்ந்து விட்டேன்! கல்யாணமா?
வெப்துணியா : 5 பேருக்கு மனைவியாக வாழ்ந்து விட்டேன்; கல்யாணமா?
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
ஹிட்' ஆனதா ரூ.8000 கூப்பன்? - சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
![]() |
இந்து தமிழ் திசை : வெற்றி கூட்டணி அமைத்த 5000 & 8000
'ஹிட்' ஆனதா ரூ.8000 கூப்பன்? - சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
தலைவர்களின் பிரச்சாரம், பதில் தாக்குதல்களால் தமிழக தேர்தல் களம் கனன்று கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டு காலத் திட்டங்களை மேடைக்கு மேடை பட்டியலிட்டபடி, மிகுந்த நம்பிக்கையுடன் இடைவிடாது பயணித்து வருகிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
முந்தைய தினம், திருமங்கலம், விருதுநகரில் தனது பிரச்சாரத்தை முடித்திருந்தார். சென்னையில் இருந்து நேற்று புதுச்சேரி பிரச்சாரத்துக்காக புறப்படும் முன்னர், நமக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார்.
காங்., வேட்பாளர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய மாட்டாரா சிதம்பரம்?
தினமலர் : கோவை: கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் சுற்றுப்பயண பட்டியலில், அந்தக் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் விடுபட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் காங்.கட்சிக்கு கோவையில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூர்யபிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. கட்சிக்கு உழைத்தவர்களை விடுத்து, புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் வழங்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொற்கொடியை வைத்து திருமா ஆடிய நாடகம் -விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி கேள்வி குறி
![]() |
Live Tamil News - : பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி
தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் அதன் முக்கிய கூட்டணி கட்சியான விசிகவிற்கும் இடையே புகைச்சல்கள் ஆரம்பமாகியுள்ளன.
மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்குத் தகவல்களைத் திரட்டுவது போல,
மாநில உளவுத்துறையும் கள நிலவரங்களை உடனுக்குடன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தாக்கல் செய்து வருகிறது.
புதன், 8 ஏப்ரல், 2026
பதுளை 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பௌசர் விபத்து: வாளி வாளியாக அள்ளிச் சென்ற மக்கள்
தமிழ் மிரர் : சுமார் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இச்சம்பவம் பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான பௌசரிலிருந்து பெருமளவில் எரிபொருள் வெளியேறிய நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் வாளி, கேன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எரிபொருளை அள்ளிச் சென்றுள்ளனர்.
20 மதவெறி இயக்கங்களை வளர்த்துவிட்ட ஈரான் எதிர்காலத்தில் இந்தியாவிலும் அதுபோன்ற இயக்கங்களை வளர்த்து விடும்?
![]() |
பிரம்ம ரிஷியார் : தன் ஒரு நாள் கெடு முடிவடைந்த நிலையில் மிக உக்கிரமான தாக்குதலை அமெரிக்கா தொடுத்ததை அடுத்து,
ஈரான் இப்போதைக்கு ஹோர்ம்ஸ் நீரிணையினை நிபந்தனையின்றி கப்பல் போக்குவரத்துக்கு திறப்பதாக அறிவித்துள்ளது ,
இதை அடுத்து 15 நாட்களுக்கு டிரம்பர் போரை நிறுத்தியுள்ளார்
இது ஈரானின் சரணாகதியினை காட்டுகின்றது, 1980 முதல் 1988 வரை இதே போன்றதொரு போரை அரபுலகம் சந்தித்தது அப்போது ஈராக்கில் சதாமும் ஈரானில் பெரிய கொமேனியும் இருந்தார்கள் சண்டை உள்நாட்டில் பெரிதாக இல்லை மாறாக ஈராக்கிய எண்ணெய் கப்பல்களை ஹோர்ம்ஸ் பக்கம் அனுமதிக்கமாட்டோம் என ஈரான் கிளம்ப ஈராக் அதை எதிர்த்து தாக்க இந்த நீரிணைக்கு எதிராக வந்த முதல் சண்டை அதுதான்
தமிழக அமைச்சர்கள் சொத்துக்கணக்கு பட்டியல்
தினமலர் : தமிழக அமைச்சர்களின் சொத்துக்கணக்கு விவரம், அவர்கள் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திர தகவல் அடிப்படையில் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 111 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அமைச்சர் காந்தி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் துரைமுருகன், மூன்றாமிடத்தில் டி.ஆர்.பி.ராஜா உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், வரும் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் சொத்து விவரங்கள், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர்களது சொத்து, சார்ந்தோர் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி கணக்கில் ரூ.111 கோடி
வேட்பு மனுவுடன் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ள சொத்துக்கணக்கு விவரம்
2026 சட்டசபை தேர்தல்.மொத்தமாக அள்ளும் திமுக- மின்னம்பலம் மீடியாவின் மெகா சர்வே ரிசல்ட்
minnambalam.com - Mathi : தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் எப்படி இருக்கும்? தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் நமது மின்னம்பலம் மீடியா நடத்திய மெகா சர்வே முடிவுகள் மின்னம்பலம் யூ டியூப் சேனலில் இன்று முதல் வெளியாக இருக்கிறது.
மார்ச் 20 முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் என
234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப
நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை நீங்கள் மின்னம்பலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
தென் சென்னை சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…
செவ்வாய், 7 ஏப்ரல், 2026
திமுகவுக்கு எதிராக ”திருமா” திருவிளையாடல்..திருவிக நகரில்! கூட்டணி’ சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, Kavi
minnambalam.com- Kavi : வைஃபை ஆன் செய்ததும், “எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இமயமலைக்கு போறீரா?
நாம எதுக்கு போகப் போறோம்.. எஃப்.எம். ல் பாட்டு கேட்க சுகமா இருந்துச்சு.. அதான் ஹம்மிங்.. நான் சொல்ல வந்த சங்கதியை முதல்ல சொல்லிடுறேன்..
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அதிமுக வேட்பாளரா நிற்கிறாங்க.. திமுக வேட்பாளரா கே.எஸ்.ரவிச்சந்திரன் நிற்கிறாரு..
திருவிக நகர் தொகுதியில திடீர்னு திமுக கூட்டணியில இருக்கிற விசிக நிர்வாகிகள், பொற்கொடிக்கு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க..
டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது.
KR Athiyaman : அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு பெரும் தவறுகளையும், மீறல்களையும், குற்றங்களையும் புரிந்தவர், புரிந்து வருபவர் தான். மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது.
வெனிசுலா அதிபர் மடேரோவை நள்ளிரவில் கடத்தி வந்து, அமெரிக்காவில் வீட்டுச் சிறையில் வைத்துள்ளார். இது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு முரணானது, அநீதியானது என்பதெல்லாம் உண்மை தான்.
சாத்தான் குளம் லாக்கப் கொலை- முழு விபரம்
![]() |
நிலவன் மாணிக்கம் : சாத்தான் குளம் லாக்கப் கொலை!
எடபாடுவின் பித்தலாட்டம் அம்பலம்!
சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண்! மனசாட்சியுள்ள ஒரு பெண்! அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு பெண் தலைமைக் காவலர் ரேவதி இந்த விவகாரம் வலுவாக வெளிவந்துள்ளது!.
இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்... "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்... நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்... என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார்...
TVK BJP திரிஷா அமித்ஷா டெல்லியில் பேச்சு வார்த்தை அம்பலமாகிய ரகசிய டீல்
நிலவன் மாணிக்கம் : TVKவின் முதல்வர் வேட்பாளர் திரிஷாவின் மும்பை டீல் வெட்ட வெளிச்சமானது..
விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!*
* மும்பையில் விஜய், த்ரிஷாவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதி செய்திருக்கிறார் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே.*
*▪️. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா. மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார். அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.*
காட்டுமன்னார்கோவில் ஜோதிமணி : நான் காங்கிரஸ்தான். விசிக வேட்பாளராக அறிவித்த திருமாவுக்கு நன்றி
minnambalam - Mathi : காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி, தாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; தமக்கு வாய்ப்பு கொடுத்த திருமாவளவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் தாமே வேட்பாளராக போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்களவை எம்.பி.யாக உள்ள திருமாவளவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி : என் பெயரில் 100 பேர் வந்தாலும் பரவாயில்லை
dinamalar.com : தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தான் எங்கள் இலக்கு. கோவைக்கு கடந்த 5 வருடங்களில் அரசு நிறைவேற்றிய திட்டங்களையும், செய்ய போகும் திட்டங்களையும் வாக்காளர்களிடம் சொல்லி வாக்கு கேட்போம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுகிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் அப்படி செய்திருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல சொல்லுங்கள்.
திங்கள், 6 ஏப்ரல், 2026
சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ் (தந்தை, மகன்) கொலை வழக்கு! 9 போலீசாருக்கும் மரண தண்டனை
தினமலர் :மதுரை: சாத்தான்குளத்தில் போலீஸ் ஸ்டேசனில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2026
கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் தில்லாலங்கடி
கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் எப்படி எப்படி எல்லாம் குளறுபடி செய்தார் என்பதை நடுநிலைமையோடு இவர் கூறுகிறார்
ஏற்கனவே உள்ள எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற உள்நோக்கத்தில் திமுக அந்த தொகுதியை தரவில்லை இந்த தொகுதியை தரவில்லை என்று செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்லை
மேலும் 28 தொகுதிகளை ஏற்கனவே பெற்றுவிட்ட காங்கிரசுகு மேலும் அடிஷனல் தொகுதியாக விசிகாவுக்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார் கோயில் தொகுதியை தன்னிச்சயாக தாரை வார்த்தார்
இவரது கட்சியில் இவர் நினைத்தபடி எல்லாம் நடக்க முடியும் என்றால் இவரது கட்சிக்கென்று ஜனநாயக அமைப்புக்கள் கிடையாதா?
கலைஞர் இறந்த அன்று நடந்தவைகள் - பத்திரிகையாளர் உமா மகேஸ்வரன் பார்வையில்
![]() |
Uma Pa Se : கலைஞர் இறந்த அன்று நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அன்று முழுவதும் கலைஞர் கலைஞர் கலைஞர்.
அங்கு மட்டுமல்ல எங்கெங்கும் கலைஞரே நிறைந்திருந்தார்.
ராஜாஜி ஹாலில் கலைஞருக்கு சட்டப்போராட்டம் வெற்றியடைந்த செய்தி வந்த நொடி அங்கிருந்தேன்.
அந்த தருணத்தை அனுபவித்தவனுக்கு தான் ஒரு மகத்தான தலைவனுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்தார்கள் என்று தெரியும்.
பொதுவாய் கலைஞரை adore செய்து காலம் முழுவதும் வளர்ந்ததால் எனக்கு ஸ்டாலின் அதுகாறும் அவ்வளவாய் பிடிக்காது. சொல்லப்போனால் கலைஞரின் பெருமையில் கால்வாசி இல்லை. இவரை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும் என்று ஒரு எரிச்சல். (அது பற்றி பின்னர் வேறு பதிவில் )
விளவங்கோட்டில் பச்சை துரோகம்! அன்றைய சமஸ்தான காங்கிரஸ்தான் இன்றைய கேரள காங்கிரஸ்
![]() |
குமரிக் கிழவனார் : காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் வரலாற்று பிழையை விளவங்கோட்டில் நிகழ்த்தியிருக்கிறது.......
வயனாட்டு மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் இஸ்லாமிய மதமேற்றவர்களுக்கும் சொந்தமான தொகுதியில் ராகுலை கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாமியர்களுக்கும் பூர்வகுடிகளுக்குமான பிரிதிநித்துவத்தை புடுங்கி பின்னர் அதில் பிரியங்காவை நிறுத்தி தொடர்ந்த இஸ்லாமியர் நீக்க அரசியலை செய்து கொண்டிருப்பது போல் இதோ தமிழ்நாட்டில் தமிழர் நீக்க அரசியலை செய்து கொண்டிருக்கிறது........
விளவங்கோட்டில் கை சின்னம் தொடர்ந்து வெற்றி பெற காரணம் தமிழர் மலையாள மொழி ஆதிக்கத்திர்க்கும் மலையாளிகளின் நில அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்து எழுந்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராட்ட களத்தை கண்டு அதை வென்றெடுத்ததுதான். குமரி தமிழர்கள் அன்று போராடியது திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் திருகொச்சி மாநில ஆரசுக்கு எதிராக என்றாலும் அன்று அவர்கள் களத்திவ் நேரடியாத எதிர்த்தது சம்ஸ்த்தான காங்கிரஸைதான்.
கேரள சட்டமன்ற தேர்தலில் "மும்முனைப்" போட்டி: வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ன?
bbc.com - சேவியர் செல்வக்குமார் : காலம் காலமாக இரு முனைப் போட்டியை மட்டுமே எதிர்கொண்டு வந்த கேரள மாநிலம், இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக வலுவான "மும்முனைப் போட்டியைச் சந்திக்கக் கூடும்" என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கேரளத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தத் தேர்தலில் தீவிரமாக களமாடி வருகிறது.






