Arun Ambalavanar : சிவத்தாரும் சக்கரும் சீரழிந்த யாழ் சிவில்/சனநாயக
விழுமியங்கள் சம்பவம்01. 1986 ஏப்பிரலில் புலிகள் ரெலோ மீது தாக்குதல் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ரெலோ தமிழ் போராளிகளை சுட்டும் எரித்தும் கொன்றார்கள். அப்போது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அதிபராக இருந்தவர் சிவபாதசுந்தரம்( சிவத்தார்) என்ற பிரபல்யமான உயிரியல் ஆசிரியர்.
அவரது பாடசாலை ஆய்வுகூடத்தில் மனித எலும்புக்கூடு இல்லை. மாணவர்களுக்கு இலகுவாக Anatomy படிப்பிக்க சிவத்தார் ஒரு எலும்புக்கூடு எடுக்க அவாகொண்டு புலிகளிடம் தனக்கு ஒரு மனித எலும்புக்கூடு எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு மனிச சடலத்தை தாருங்கள். மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்" என்ற அவரது ஆய்க்கினையால் இறுதியில் புலிகள் அவரிடம் தங்களால் கொல்லப்பட்ட அதே கரவெட்டியைச்சேர்ந்த ரத்தி என்கிற(கோயிற்சந்தை/அரசடி/அந்திரான் பகுதிகள்) ரெலோ போராளியின் சடலத்தை கொணர்ந்து கொடுத்தார்கள்.
அசல் மனித எலும்புக்கூடுகளை மனித பிணத்திலிருந்து சரிக்கட்டுவது மிகச்சிரமமான காரியம். சட்ட மனிதாபிமான பிரச்சனைகளைக்கப்பால் அதுவொரு நாலு கட்ட நீண்ட பயங்கரமான மயான காண்டம். இதனால்தான் மேலைத்தேய நாடுகள் அப்போதே ஆய்வு கூடங்களில் செயற்கையான பிளாஸ்ரிக், மர எலும்புக்கூடுகளை பயன்படுத்த தொடங்கியிருந்தன. அவ்விரவு அதிபர் தன் பாடசாலையில் நிறை தண்ணியில் சில மாணவ உதவியாளர்களோடு ஒரு பெரிய கிடாரத்தில் ரத்தி என்கிற போராளியின் சுட்டுக்கொல்லப்பட்ட உடலை நிர்வாணமாக்கி போட்டு அவித்தார்.