செல்லபுரம் வள்ளியம்மை : ஒரிஜினல் பெங்காலி ஓம் ! டுப்ளிகேட் சம்ஸ்கிருத ஓம் !
கர்கா சாட்டர்ஜி: இடது புறம் பெங்காலி எழுத்தில் ஓம் எழுதப்பட்டுள்ளது -
இது பெங்காலிகளுக்கு உரியது சரியானது
பெங்காலியில் எழுதப்பட்ட ஓம் என்ற எழுத்தை இடது புறத்தில் சம்ஸ்கிருத ஓம் என்று திரித்து எழுதுகிறார்கள்
சமஸ்கிருதத்திற்கு சொந்தமாக எழுத்தே கிடையாது
சமஸ்கிருத மொழியானது வங்காள மண்ணில் வங்காள (பெங்காலி) எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, சமஸ்கிருதம் உத்தர பிரதேசத்தில்
நாகிரி என்ற பழங்குடி மக்களின் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இன்று இந்தியின் ஆதிக்கம் பெங்காலிகளின் இந்து மதத்தில் கூட காணப்படுகிறது.
இப்போதெல்லாம், சாலைகள், கோயில்கள், வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் ஓம் என்ற எழுத்து ஹிந்தி திரிபு எழுத்தில் எழுதப்படுகிறது.
இன்னும் சில இந்து வங்காளிகளின் வீட்டில் தவிர வங்காள மொழியில் எழுதப்பட்ட 'ஓம்' இன்று அழிந்துவிட்டது.
பல வங்காளிகளுக்கு இன்னும்கூட தங்கள் மொழி பற்றிய சுயநினைவு இல்லை,
தங்கள் சொந்த மாநில விடயங்களை விட்டுவிட்டு,
ஹிந்தி மொழியிடம் தங்கள் மதத்தை இழப்பது கூட இவர்களுக்கு தெரிவதில்லை