சனி, 12 செப்டம்பர், 2020

சீமான் யார்? வந்தேறி, கற்பழிப்பேன், கொல்லுவேன், வடுக வந்தேறி, வேசி மகன்கள்

Thangaraj Gandhi : · சீமானின் பேச்சை நான் இரண்டு தளங்களில் முழுமையாக பார்த்திருக்கிறேன். .. அவரின் உடல் மொழி சிலவற்றை சொல்லும்.
மேடைப்பேச்சு. அது ஒரு அருவியாக ஓடும். ஒரு தன்னம்பிக்கை வார்த்தை சொல்லுவார்கள்,..... 1.உரையாடலுக்கான உரையை கேட்பவர் எல்லாம் அறிவாளிகள் என நினைத்து உருவாக்கு,

2..பேசும் போது முன்னால் இருப்பவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என நினைத்து பேசு என்பார்கள். ..

சீமான் முதல் விசயத்தை செய்கிறாரோ இல்லையே இரண்டாம் விசயத்தை நிச்சயம் செய்வார்.

பிரபாகரன் இடத்தில் மட்டும் சீமான் இருந்திருந்தால் என்றால் கைதட்டுவார்கள்.....நா அப்ப ஒல்லியா கருப்பா இருப்பேன். என்னைய பெரிய பயில்வான்கள் கூட மோதுவிடுவானுக என மான்கராத்தே கதையை ரீமேக் செய்து சொன்னாலும் கைதட்டுவார்கள்....சிவாஜியப்பா நடித்த முடித்ததும் இவர் முகம் பார்த்து ஒகே என்றவுடன் தான் அவருக்கு திருப்தி என்றாலும் கைதட்டுவார்கள்.....அது சரி... அண்ணனுக்கு ஏற்ற தம்பிகள்.

ஸ்டாலின் : மாணவர்களே.. தைரியமாக இருங்கள்.. திமுக ஆட்சியில் நீட்டை ரத்து செய்வோம்..

 tamil.oneindia.com- Shyamsundar சென்னை: மாணவர்களே, தைரியமாக இருங்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.. 8 மாதம் பொறுத்திருங்கள்.. திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். 

நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார்.உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் பதிவு செய்த ஆடியோவும் வெளியாகி உள்ளது. இவர் மரணம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் ஜோதி ஸ்ரீதுர்கா மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்து இருக்கிறார். 

நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை BBC

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, நீட் ஆதித்யாதேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு!

minnambalam : திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 89. 19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 12) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “ஜெகத்ரட்சகன் எம்பி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் 1999 பிரிவு 37 ஏ இன்-படி முடக்கி வைத்து அமலாக்கத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி ஜெகத்ரட்சகனும், அவரது மகன் சுந்தீப் ஆனந்தும் சிங்கப்பூரில் இருக்கும் சில்வர் பாக் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முறையே 70 லட்சம் பங்குகளையும், 20 லட்சம் பங்குகளையும் கையகப்படுத்தியுள்ளனர். ஒரு பங்கின் மதிப்பு ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரானது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் இந்தப் பங்குகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பங்குகள் அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் பிரிவு 4க்கு எதிராக ஜெகத்ரட்சகனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. .

NEET மத்திய அரசின் பிடிவாதம் , நீதிமன்றத்தின் மாணவர்கள் மீதான அக்கறையின்மை.. கொலை கருவி!

Kanimozhi MV : · முத்து முத்தா கையெழுத்து I am sorry , I am tired என்பதற்கு தான் இறுதியில் பயன்பட்டது என்றால் எதற்கு நமக்கு சமூக நீதி மண் என்ற அடையாளம் நம்மால் ஒன்றுமே செய்ய இயலவில்லை இப்படி வருடாவருடம் பிள்ளைக்கறியை புசிக்கும் பார்ப்பனியத்திற்கு நம்மால் சாவுமணி அடிக்க முடியவில்லை நமக்கான வாய்ப்பு வரும் ஆனால் அதற்குள் எத்தனை குழந்தைகள் இப்படி மாண்டுப்போவார்களோ? 

Karthikeyan Fastura : இப்போ தான் படித்தேன் மதுரை மாணவி தற்கொலை


செய்தியை. திக்கென்று இருந்தது. இன்னும் எத்தனை எத்தனை கொலைகளை இந்த நீட் தேர்வு செய்யும். இதற்கு முழு பொறுப்பு ஆளும் மத்திய அரசும் கையாலாகாத மாநில அரசும் தான் காரணம். கொலைகார அரசுகள். பள்ளிகளில் பெற்ற மதிப்பெண்கள் போதாதா ஏன் இரண்டாம் முறையாக இன்னொரு தேர்வு அதே பள்ளி பாடங்களுக்கு ? இது முட்டாள்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும், வன்முறையாகவும் தெரியவில்லையா உங்களுக்கு? மத்திய அரசின் பிடிவாதம் , நீதிமன்றத்தின் மாணவர்கள் மீதான அக்கறையின்மை எல்லாம் தான் கொலை கருவிகள் பிள்ளைகளை இந்த அரச வன்முறையில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், அதைவிட ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. தயார்படுத்துதல் வேறு தள்ளிவிடுதல் வேறு.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 60% இரண்டாம் முறையாக தேர்வெழுதியவர்கள். நீட் மட்டுமல்ல எந்த ஒரு அரசு தேர்வும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என்று தான் அனைத்து புள்ளிவிவரங்களும் கூறுகிறது. இது சொல்லும் செய்தி என்னவென்றால் இதன் கடினமான தன்மையை, அதற்கு தேவையான பயிற்சியை, திரும்பவும் எழுத வேண்டியிருக்கும் என்ற மனப் பக்குவத்தை உணர வேண்டும். பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

மதுரையில் நீட் தேர்வு மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை

thinathanthi :மதுரை, மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை(செப்.13) நீட் தேர்வு
நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கட்டிய கல்லணைகள் 42 ... இருபதாம் நூற்றாண்டின் கரிகாலன்

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்? முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி. ரொம்ப தப்புங்க நீங்க பேசியது? அதிமுக மேடைப் பேச்சாளர்களைப் போல, சமரசம், ஆவடி குமார், சத்யன் போன்ற அரைவேக்காடுகள் பேசினால் தவறில்லை. நாமும் 'போயா' என்று விட்டுவிடலாம். மாநில முதல்வர் இந்த செய்தியை பொதுவெளியில் கேட்பதற்கு மூன்பு உயர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கணும். அதை விடுத்து பொதுப் பணித்துறை அமைச்சராம் உங்களை போலவே எடுபுடி ஓபிஎஸ்ஸிடம் கேட்டால்? நீங்க மட்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் போய் அவரை விட்டுட்டு போனதால், அவரும் திமுக கட்டவே இல்லைனு சொன்னதை நீங்களும் நம்பி மோசம் போய்ட்டீங்களே? 1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.

1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை,

1.தும்பலஹள்ளி அணை,
2.சின்னாறு அணை,  

தங்கையிடம் பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது அக்கா .. ஆந்திர மாநிலம்

maalaimalar.com :விசாகபட்டினம்: .  ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு நிர்மலா (5 வயது) ஹேமஸ்ரீ (11 மாதக்குழந்தை) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2வது மகள் பிறந்தவுடன் அவர் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததை கண்ட நிர்மலா கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் தூங்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணாமல் போயுள்ளார். ஹேமஸ்ரீயை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த பெற்றோர், பின்னர் குழந்தை வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தனர். எனவே தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று நிர்மலா அப்பாவியாக கூறியுள்ளார். 
இதனையடுத்து சிறுமி நிர்மலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்

ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த விமான ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்த சர்வதேச கும்பல் –

BBC :  மலேசியாவை சேர்ந்த விமானிகளும், விமான பணியாளர்களும் ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தியதாகவும், இதற்காக கணிசமான தொகையை ‘சன்மானம்’ ஆக பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பிரிஸ்பேன் டைம்ஸ்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘மலேசியன் ஏர்லைன்ஸ்’ மற்றும் ‘மலிண்டோ ஏர்’ விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமான சிப்பந்திகளை ஆஸ்திரேலியாவில் இயங்கி வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் கும்பல் ஒரு பெண்ணின் தலைமையில் செயல்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் இருந்தபடி கடத்தல் வலைப்பின்னல் அமைத்துச் செயல்பட்ட அந்தப் பெண்மணியின் பெயர் மிஷெல் என்காக் டிரான்.

விமானிகளும் விமானப் பணியாளர்களும் கடத்தி வரும் ஒவ்வொரு கிலோ ஹெராயினுக்கு 1.55 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை விலையாகக் கொடுத்துள்ளார்.

மறுபக்கம் அதே ஹெராயினுக்குக் கூடுதலாக 40 ஆயிரம் ஆஸ்திரேலிய டாரலர்களைக் கட்டணமாக வைத்து உள்ளூர் சந்தையில் விற்றுள்ளார். இடைத்தரகர்கள் மற்றும் கூரியர் செலவுகளுக்கு இந்த லாபத்திலிருந்து பணம் கொடுத்துள்ளார்.

மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக.. வே. மதிமாறன்.

Mathimaran V Mathi
: மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக! ஒரு பேரியக்கத்தின்
அஸ்தமனம் எனக் கலைஞரை குறித்து மிகக் கேவலமான கட்டுரை வெளியிட்ட இந்துதான், அதுகுறித்த எந்த வருத்தமும் தெரிவிக்காமல், கூச்சமே இல்லாமல் தெற்கிலிருநது ஒரு சூரியன் என கலைஞரை வர்ணித்து புத்தகம் வெளியிட்டது. இந்துவிடம் குறைந்தபட்ச அறிவு நாணயம்கூடக் கிடையாது. அவர்கள் சங்கியாக இருக்கக்கூட லாயக்கற்றவர்கள். சங்கிகளிடம் கூட அவதூறில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இந்துவின் நோக்கம் வர்த்தகத்திற்குப் புகழ்ச்சியும். அரசியலுக்குக் காழ்ப்புணர்ச்சியும் என்கிற முறைதான் திமுக குறித்தும்.
ஆனால், அது தெரியாமல் அதை நெஞ்சோடு அணைத்து, சொந்த செலவில் இந்து விற்பனையாளராக ஊர் ஊராகக் கூவி விற்ற திமுககாரர்களும் திராவிட இயக்க அறிஞர்களும்தான் பாவம். அந்த முக்கியத்துவத்தை இவர்கள் முரசொலிக்கு தந்ததில்லை.

காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்... மூத்த தலைவர்கள் பதவி பறிப்பு, புதியவர்கள் நியமனம்

dailythanthi.com : புதுடெல்லி,கட்சியின் பொதுச்செயலாளர்களாக பதவி வகித்து வந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜூன கார்கே, லுய்ஜின்கோ பெலெய்ரோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மாநில பொறுப்பாளர்களாக செயல்பட்டு வந்த அனு ராக் நாராயண் சிங், ஆஷா குமாரி, கவ்ரவ் கோகாய், ராம் சந்திர குந்தியா ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.திய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களும் வருமாறு:

முகுல் வாஸ்னிக் (மத்தியபிரதேசம்), 

ஹரிஷ் ராவத் (பஞ்சாப்), 

உம்மன் சாண்டி (ஆந்திரா), 

சுவாமி அக்னிவேஷ் மறைவு... மனித உரிமைப் போராளி

 Asiriyar K Veeramani :
சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு இரங்கல்!மனித உரிமைப் போராளியாகப் பல போராட்டங்களில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ் அவர்கள், இன்று (11-9-2020) மாலை டெல்லி மருத்துவமனையில் உடல் நலம் குன்றியதால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருக்கு வயது 80. பழங்குடி மக்களின் நில உரிமைக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் அவர்கள், பா.ஜ.க. ஆதரவாளர்களால் பலமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அவரை உடல்நலம் குன்றச் செய்தது. அதன் பின்பும் ஒரு முறை இப்படிப்பட்ட அவலம்! அதையெல்லாம் எதிர்கொண்ட அவர், தனது லட்சியப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். மனித உரிமைப் போரை மேற்கொண்ட காவித் துறவி அவர்!   வடபுலத்தில் நாம் கலந்து கொண்ட சமூகநீதி மாநாடுகளில் கூட அவர் கலந்து கொண்டதுண்டு.   அவருக்கு நமது வீர வணக்கம்!  - கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்  .  

இந்திய – சீன மோதல் உண்மை நிலை என்ன? -சாவித்திரி கண்ணன்

 

aramonline.in : சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்!

ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அளவுக்கு சூழல் மோசமாகியுள்ளது. உண்மையில் இது மிகவும் கவலைக்குரியதாகும்!

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

தாடியும் தலப்பாகையும் மட்டுமல்ல இருவரின் அரசியல் சித்தாந்தங்களும் ஒன்றுதான்... பாரதியும் - மோடியும்

ஒரு கவிஞனாக அவரது எத்தனையோ முரண்களில் புதுமைப்பெண்ணும் ஒன்று.   . அவரது புதுமைப்பெண் ஒரு முரண்பட்ட குழப்பமான கற்பனை. நிஜத்திலோ அவரது அடிப்படை அரசியல் என்பது ஆர் எஸ் எஸ்சின் பாரதமாதா அரசியல். அமெரிக்கை நாராயணன் காங்கிரஸில் இருந்து கொண்டே எச் ராஜாவைவிட ஆண்டாளுக்காக ஆவேசமாக குரல்கொடுத்த கதை.  

LR Jagadheesan : · பொறுமையாக இறுதிவரை படிக்கவும் “ஹிந்துக்களை ஒன்றிணைப்பதே மற்ற எதனையும்விட மேலான காரியம்” ”இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.” ”எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” 

திமுக ஐ டி விங் உண்மையில் திமுகவுக்கு உதவியாக இருக்கிறதா?

திமுகவின் ஐ டி விங்...   திராவிட முன்னேற்ற கழகம் என்றால் என்ன அதன் கொள்கை என்ன அதன் வரலாறு என்ன என்பது பற்றியெல்லாம்   கொஞ்சம் கூட கவலைப்படாத ஒரு கூட்டம் திமுகவின் ஐ டி விங்கில் இருக்கிறதோ என்ற   ஐயம் எழுந்துள்ளது.

இன்று ஏறக்குறைய எல்லோர்  கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது.  கட்சிகளின் கொள்கையும் கட்சி பற்றிய செய்திகளும் பெரிதும் இதன்  வழியாகவே மக்களுக்கும் கழக உடன்பிறப்புக்களுக்கும் செல்கிறது.

எனவே இந்த ஐ டி விங்கின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . அதன் ஒவ்வொரு களப்பணியாளரும் மிகவும் கவனமாக செயல்படவேண்டியது அவசியம் .    ஆனால் இதுபற்றிய புரிதல் அற்ற சிலர் எப்படியோ ஐ டி விங்கில் களப்பணியாளர்களாகி உள்ளார்கள் போல் தெரிகிறது.

 ஒரு சாதாரண திமுக ஆதரவாளர் அப்படி இருந்தால் அதை  புறந்தள்ளி விடலாம்.. ஆனால் திமுகவின் ஐ டி விங்கில் இருப்பதாக கூறப்படுபவரின் கருத்தியல் ஆழம் பண்பு  நேர்மை போன்றவற்றை அப்படி புறந்தள்ளி விடமுடியாது ,.  கவனத்தில் கொள்ளப்பட  வேண்டியது அவசியமாகும்.  ஏனெனில் இவர்கள் திமுகவின் கோட்ப்பாடுகளை மக்களுக்கு வேகமாக எடுத்து செல்லும் அரிய பணியில் உள்ளவர்கள்.

இந்த பணியில் உள்ள சிலரின்  செயல்பாடுகள் காரணமாகவே திமுகவின் ஆதரவு தளம் சரிந்து போகும் ஆபத்தும் உள்ளது . 

குறிப்பாக ஒருவர்  திமுக ஐ டி விங்கை  சேர்ந்தவர் என்ற அடையாளத்தோடு வீசிய தரமற்ற பதிவுகள் காரணமாகவே இதை குறிப்பிடவேண்டி உள்ளது.

கிளிநொச்சியில் காதல் ஜோடி தற்கொலை . .. வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்

இவர்கள் இருவரும் இருவேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியிருக்கிறது . சில நாட்களுக்கு முன்பாக இருவரையும் காணவில்லை என்றுகாவல் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்று இவர்களின் உடல் கண்டெடுக்கபட்டுள்ளது

மரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் இரண்டாக பிரித்தனர்!

sudarseithy.com :  கிளிநொச்சியில் ஒன்றாக உயிரை மாய்த்த காதல் ஜோடியின் இறுதிச்சடங்குகள் இன்று தனித்தனியாக நடைபெற்றது. 

பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்- ஒன்றாக- காதல் ஜோடியொன்றின் சடலம் நேற்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.     கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த சுசிதரன் (28) (இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டவர்) மற்றும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த அண்மையில் பட்டதாரி நியமனத்தின்படி கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.   

கணக்குக் கேட்ட சீமான்- கல்யாண சுந்தரம் விலகல்?

 டிஜிட்டல் திண்ணை: கணக்குக் கேட்ட சீமான்- கல்யாண சுந்தரம் விலகல்?

minnampalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது."பொதுவாகவே ஒவ்வொரு கட்சிக்குள்ளும் எழக்கூடிய உட்கட்சி பிரச்சனைகள் நாம் தமிழர் கட்சிக்குள் இப்போது சற்று கூடுதலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக  இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர்.

கல்யாண சுந்தரமும் சீமானும் பொதுவெளியில் நடத்திவரும் கருத்துப் பரிமாற்றங்கள் அக்கட்சி பற்றிய ஊடகச் செய்திகளை அதிகமாக்கி வருகின்றன. தன்னோடு நீண்டகாலமாகவே சீமான் பேசுவதை நிறுத்தி விட்டார் என்றும் எதற்காகத் தன்னை சீமான் விலக்கி வைக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்றும் கல்யாணசுந்தரம் பேட்டியளித்திருந்தார்.இதற்கு பதில் தரும் விதமாக பேட்டி ஒன்றில் பேசிய சீமான், ‘ நாம் தமிழர் கட்சியில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து தனக்கு எதிராக கல்யாணசுந்தரம் அணிதிரட்டி வருவதாகவும் கட்சிக்கான வேலை பார்க்காமல் கட்சிக்குள் தனக்கென வேலை பார்த்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் .. வரி ஏய்ப்பு வழக்கு

 வரி ஏய்ப்பு வழக்கு : ஏ.ஆர்.ரகுமானுக்கு  நோட்டீஸ்!

minnampalam :வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2011-12 ஆம் ஆண்டில், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட லிப்ரா மொபைல்ஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பிரத்தியேக ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இதனைத் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாகச் செலுத்தும் படி ரகுமான் கூறியிருக்கிறார். அதாவது ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வரி செலுத்தவில்லை. அறக்கட்டளை மூலம் வருமானம் பெற்று வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது.

பென்னிக்ஸ் கடை வாசலில் கண்ணீர் விடும் நாய்... ஆறுவருட வளர்ப்பு பாசம்... காணொளி

nakkeeran :தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி, அவரைத் தேடி அவரின் கடைக்கு வந்து, கடை வாசலிலேயே காத்திருப்பது பார்க்கும் அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை நடத்தி வந்த மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று இரவு முழுக்க கடுமையாக தாக்கியதில் அடுத்தடுத்த நாட்களில் மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

நடிகர் அக்‌ஷய் குமார் : தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் - அதிர வைத்த...

 தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் - அதிர வைத்த அக்‌ஷய் குமார்

maalaimalar :
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கும் முன்னர்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

திருநங்கைகள் தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கிய ஹோட்டல்; பொதுமக்கள் வரவேற்பு

transgenders started hotel, transgenders hotel covai trans kitchen, தமிழகத்தில் திருநங்கைகள் தொடங்கிய உணவகம், திருநங்கைகள், கோவை, கோவை டிரான்ஸ் கிட்சன், கோவை, tamil nadu first transgender hotel, coimbatore rs puram, first transgender hotel, transgeders woos dinners biryani tamil.indianexpress.com :தமிழகத்தில் முதல் முறையாக முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும் ‘கோவை டிரான்ஸ் கிட்சன்’ என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை பொதுமக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் முதன்முறையாக கோவை, ஆர்.எஸ்.புரத்தில் திருநங்கைகள் ஒன்றிணந்து ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை தொடங்கியுள்ளனர். இது தமிழகத்தில் திருநங்கைகளால் தொடங்கப்பட்ட முதல் உணவகம் என்று கருதப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் பேசிய கோயம்புத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் சங்கீதா, கோவிட் -19 காரணமாக அவர்களது சமூக உறுப்பினர்கள் பலரும் வேலைகளை இழந்துவிட்டதாகவும், இது அவர்களுக்கு சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது என்று கூறினார்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு விரிக்கும் வஞ்சக வலை: ஜெ.ஜெயரஞ்சன்

ின்னம்பலம் : நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

இன்றைய வீடியோவில் பல்கலைக் கழகங்கள், தேர்வுகள் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு மற்றும் சர்ச்சைகள் குறித்து ஜெ.ஜெயரஞ்சன் விரிவாக பேசியுள்ளார்.

தேர்வுகள் மூலம் புதைந்து கிடக்கும் அரசியலால் மாணவர்கள் பழிகெடா ஆகிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், “இறுதி ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள், இவர்கள் தேர்ச்சி ஆகாதவர்கள் என முடிவெடுக்க வேண்டியது பல்கலைக் கழகங்கள் தான்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

 minnambalam :கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தி வைக்கப்படுவதாக பூனேவின் சீரம்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின்  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்  மற்றும்  ஆஸ்ட்ராசெனிகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்த  ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.  முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து வந்தது.   இதில் பரிசோதனைக்கு உட்படுத்திய தன்னார்வலர் ஒருவருக்கு, விவரிக்க முடியாத பாதிப்பு ஏற்பட்டதால் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனிகா மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.

China -India எல்லைப் பிரச்சினை தீர்வுக்கு 5 அம்ச திட்டம்: இந்தியா- சீனா ஒப்புதல்

dailythanthi.co இந்தியா- சீனா இடையே எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவும் நிலையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மாஸ்கோ,இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.      கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.         கடந்த 4-ந் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது, 

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்

டி.பி.எஸ்.ஜெயராஜ் : (This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020) அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989)

நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் தமிழ் ஐக்கிய விடுதலை கூட்டணியினதும் முக்கியமான தலைவர் அவர். 1956 – 1970வரை வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 – 1983 வரை காங்கேசன்துறை தொகுதியின் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தார். 1977 – 1983 வரை இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த அமிர்தலிங்கம் 1989 ஜுலை 13 விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டபோது அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

1800 ல் உருவான ஹிந்தியால், வடமாநிலத்தில் அழிந்து போன மொழிகள்!

 1800 ல் உருவான ஹிந்தியால், வடமாநிலத்தில் அழிந்து போன
மொழிகள் இவை...    போஜ்பூரி , மைதிலி
பிரஜ்பாஷா

புந்தேல்கண்டி
பிரதாப்கர்
அவதி
கன்னோஜி
கடுவாலி
குமோனி
ஹரியாணி
ராஜஸ்தானி
மார்வாரி
மேவாரி
மால்வி
நிமதி
பகேலி
டோக்ரி
பாடி
லடாக்கி
சட்டடீஸ்கரி
கோர்பா
ஜார்கன்ஷி .   சந்த்தலி 
...  இந்த வரிசையில் தமிழை வர விட மாட்டோம்.

 

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம்.. குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.

Behind woods சேனலுக்காக கோபிநாத் நேர்காணல் செய்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன்..அந்த ஆய்வாளர் மிகப்பெரிய தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம்..அவர் தமிழகத்தின் தனித்தன்மையை நான்கு பாயிண்டுகளில் ஆதாரங்களோடு விளக்கியிருந்தார்..

1. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன..அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் அதிகம்.).அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர்..மஹாராஷ்டிர மாநிலத்தில் 18 லட்சம் பேர்..ஒரு மாநிலத்தில் எட்டு விமான நிலையங்கள் இருப்பதும் இங்குதான்..

வியாழன், 10 செப்டம்பர், 2020

உலகம் சுற்றுவதை கண்டுபிடித்த அய்யன் திருவள்ளுவர் .. காப்பர்னிக்கஸ்சுக்கே முன்..

Nnicolaus Copernicus .Born: February 19, 1473, Torun, Poland Died: May 24, 1543, Frombork, Poland

Sundar P : தமிழ் அறிவோம் - 3 : உலகம் சுழல்கிறது என்று யாரோ
கண்டுபிடித்தார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவன் சொன்ன வாசகம் இது. “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை." - ( குறள் எண் : 1031 )

இந்த உலகம் தன்னைத் தானே சுற்றி சுழன்றுகொண்டிருந்தாலும், உழவுத் தொழிலான விவசாயத்தின் பின்னால் நடந்து வருகிறது. எனவே உயிர்காக்கும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழில்.  (உழந்து – உடல்; உயிருக்கு ஆதாரமான பொருள்)

உலகம் உருண்டை என்பது மட்டுமல்ல, அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதனை பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்கு இன்னொரு குறள் ஆதாரமாக விளங்குகிறது...

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து…” - ( குறள் எண் : 1032 )

இதன் பொருள்: உழவுத்தொழிலை செய்பவர்தான் உலகத்துக்கு அச்சாணியைப் போன்றவர்கள்.  ஏனென்றால், வேறு தொழிலகளைச் செய்துகொண்டிருக்கும் மக்களையும் இவர்களே தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். என்பதே.

இங்கே அச்சாணி என்னும் சொல்லை வள்ளுவர் ஆண்டிருக்கிறார் என்பதை உற்று நோக்குங்கள்.   உலகம் ஒரு அச்சாணியில் சுழல்கிறது. அந்த அச்சாணி வேறு எதுவும் இல்லை; உழவுத்தொழில் செய்யும் உழவர்களே அந்த அச்சாணியைப் போன்றவர் என்றல்லவா வள்ளுவர் உரைக்கிறார். 


இந்தி தெரியாது போடா’ வாசகத்துடன் டி-சர்ட்டுகள்: திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்

‘இந்தி தெரியாது போடா’ வாசகத்துடன் டி-சர்ட்டுகள்: திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்
இந்தி தெரியாது போடா வாசகத்துடன் கூடிய டி-சர்ட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.   திருப்பூர் :   
திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் விஷயங்கள் மற்றும் சம்பவங்கள், காட்சிகள் போன்றவற்றை இந்த இளம் வயதினர் எடுத்துரைக்கும் வகையில் டி-சர்ட்டுகளை தயார் செய்து வருகிறார்கள்.

நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 45. maalaimalar :நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   ொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதியில்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.   
45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: வழக்கை செப்-22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Kangana in social media 

  maalaimalar :நடிகை கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான
வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: வழக்கை செப்-22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு மும்பை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று நடிகை கங்கனா விமர்சித்ததால் ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். 

ஆனால் மும்பை உயர் நீதிமன்ற தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நரிக்குறவர் மொழியான வாக்ரிபோலியில் திருக்குறள்

 M
aha Laxmi
: நரிக்குறவர் மொழியான 'வாக்ரி'க்கு அகராதி உருவாக்கிய சீனுவாச வர்மா! நாடு முழுவதும் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கும் பல மொழிகள் நாளடைவில் மறைந்து போகும் நிலையில் உள்ளது. எழுத்துருக்கள் இல்லாமல் வெறும் வாய்மொழியாக மட்டுமே இருக்கும் அப்படிப்பட்ட பல மொழிகளில் நரிக்குறவர்களின் வாக்ரி மொழியும் ஒன்று. தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நரிக்குறவர்கள் நிலையான இருப்பிடமில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழும் இவர்கள் தமிழகச் கலாச்சார ஒடையினின்றும் ஒதுங்கியே வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கை, மொழி, சமயம் ஆகியவற்றை ஆராய்வது மிகவும் கடினமான முயற்சி.

சீனுவாச வர்மா மற்றும் ராஜகோபாலன், சிரோமணி முதலிய ஆய்வாளர்கள் முதலில் இம்முயற்சியில் ஈடுபட்டனர். கள ஆய்வுகள் மூலம் இதுவரை தெரியாத பல உண்மைகள் அதன் மூலம் தெரிய வந்தது. அவர்கள் பற்றிய கற்பனைக் கதைகளே, இதுவரை அவர்களது யதார்த்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றும்படி வெளியிடப்பட்டு வந்தன. நேரடி ஆய்வுகளை, மானிடவியல் அறிவினால் ஆராய்ந்து, நரிக்குறவர் வாழ்க்கையில் சில அம்சங்களின் உண்மையான செய்திகள் விஞ்ஞான முடிவுகளாக இவர்கள் கண்டு உணர்ந்து
கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி.. ..நடராசன் மூலமாக பயனடைந்து..

Kandasamy Mariyappan : நாம் தமிழர் கட்சி... இளைஞர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டி, வளர்க்கப்பட்ட நிறுவனம். இது மக்களுக்கான கட்சி அல்ல! பல நாடுகளில் கிளைகளை திறந்து, ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்த்து, பணம் பெருக்கும் நிறுவனமாக மட்டுமே இருந்துள்ளது நாம் தமிழர் கட்சி என்பதை, இரண்டு நிர்வாகிகள் மூலமாக நாம் உணர முடிகிறது! 

எங்களுக்கு பின்னே பல இளைஞர்கள் இருக்கின்றனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி, மா. நடராசன் மூலமாக பயனடைந்து திமுகவிற்கு எதிராக களமாடியது...
நாம் தமிழர் கட்சி!

பல இளைஞர்கள் அங்கே இருப்பதாக தவறாக புரிந்துகொண்ட RSS/BJP, அதன் பங்குக்கு அந்த நிறுவனத்தை தூண்டிவிட்டு திமுக/ அதிமுகவிற்கு எதிராக களமாட வைத்தது.
மற்ற மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாடு மட்டும் முன்னேறவில்லை என்று பல இளைஞர்களை நம்ப வைக்க, அந்த நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டது!

இலங்கையில் பசுவதை தடைச் சட்டம் - என்ன நடக்கிறது? BBC

இலங்கையில் சர்ச்சை தோற்றுவிக்கும் பசுவதைத் தடைச் சட்டம் இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும், இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் என்ற ரீதியிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

புதன், 9 செப்டம்பர், 2020

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி விலகல்

tamil.oneindia.com  - Mathivanan Maran சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றவர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தம்முடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தாம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். அதில், அது ஒரு பேரின்ப கனாக்காலம் ...!! அனைவருக்கும் நன்றிFolded hands நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்!! என தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி.


அரியலூர் மாணவன் தற்கொலை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? - மு.க.ஸ்டாலின்

dailythanthi.com : நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் மாணவன் தற்கொலை செய்துள்ளான். இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தேர்வு அச்சம்; அரியலூர் மாணவன் தற்கொலை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? - மு.க. ஸ்டாலின்

சென்னை,அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஞாயிறன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் விபரீத முடிவு எடுத்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

maalaimalar : மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை: தமிழகத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்
மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை- வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

minnambalam:ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. 

சென்னை: கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சரண்யா, விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடுவதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டன.     விதிகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரியர் பாஸ் விவகாரத்தில் தமிழக அரசு மீது ஸ்டாலின் கடும் தாக்கு .. அவசரம் - அரைவேக்காட்டுத்தனம்

Velmurugan P -tamil.oneindia.com : சென்னை: சுயவிளம்பர மோகத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்க வேண்டாம் என்று அரியர் பாஸ் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கண்டித்துள்ளார்.

 முக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிற இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, தன்னுடைய குழப்பமானதும் குளறுபடியானதுமான செயல்பாடுகளால், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.       மாணவர்களின் எதிர்காலக் கனவுகளிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'அரியர்ஸ்' தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததிலிருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்குப் பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதுகுறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை. அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க தயார்.. தமிழக அரசு அறிவிப்பு.. கலக்கத்தில் மாணவர்கள்! 

நாம் தமிழர் கட்சியின் பிளவு நாட்டுக்கே பேராபத்தானது .. சமூக வலையில் ஒரு ஆய்ஆய்வு

 Sivakumar Nagarajan : காலைலயே கண் கலங்க வைத்த பதிவு அண்ணன் கரிகாலன் கலைஞரிஸ்ட் அவர்கள் பதிவு 

நாம் தமிழர் கட்சியில்  நிகழ இருக்கும் பிளவு பேராபத்தானது...  பலர் இதை சாதாரணமாக எண்ணிக் கடக்கிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன். இது ஆசியப் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல...   சீனம் இந்தியா ருஷ்யா பலநாடுகள் வீழ்ச்சி அடையும்.      அவ்வளவு ஏன் இது மனித குலத்துக்கே பேரிடி.    மில்கிவே காலக்ஸி தடம் புரளும்.     யூஎஸ் யூஸ்லெஸ் ஆகிவிடும். இங்கிலாந்து சொங்கிலாந்தாகி விடும்.       புதன் முதல் புளூட்டோ வரை தரை மட்டமாகும். பூமியை சுற்றும் கோள்கள் (கோள்களின் மையம் பூமிதான் என்ற பாரிசலன் கூறறை நினைவு கூருங்கள்). புஸ்வானமாகும்...    யாராவது தடுத்து நிறுத்துங்கள்...

இந்திய பகுதியை நோக்கி முன்னேறும் சீன வீரர்கள்... ஈட்டிகளுடன் கிழக்கு லடாக்கில் அத்துமீறல்

.hindutamil.in/  :இந்தியா- சீனா கட்டுப்பாடு எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டது சீன ராணுவம்தான் என்று இந்திய ராணுவம் தெரிவித்து இருந்தநிலையில் சீன ராணுவ வீரர்கள் கைகளில் கம்புகளுடன் முன்னேறி வரும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.   கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்காக் ஏரிப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் கட்டுப்பாடு எல்லைக்கோட்டை மீறி அத்துமீறி நடந்து கொண்டு, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு சீன ராணுவமும் பதில் நடவடிக்கை எடுத்தது என்று நேற்று இரவு சீன ராணுவத்தின் மேற்குபடை கமாண்டர் ஹாங் சுலி குற்றம்சாட்டியிருந்தார்.சீன ராணுவத்தின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்து, அதற்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தனித்துவிடப்படுகிறதா அதிமுக?

 டிஜிட்டல் திண்ணை:  தனித்துவிடப்படுகிறதா அதிமுக?

minnambalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.  “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் இங்கே முக்கியமான முதன்மையான போட்டி நடைபெறும், மூன்றாவது அணி என்பதெல்லாம் அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்துமே தவிர தேர்தலுக்குப் பிறகான ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை.

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலை திமுக ஏற்கனவே அமைத்துள்ள கூட்டணியோடு சந்திக்கிறது என்பதே இப்போதைய நிலைமை. திமுக கூட்டணியில் பிரச்சினை என்று வருமானால் அது தொகுதிகள் ஒதுக்கீடு அடிப்படையில் காங்கிரஸோடு ஏற்படும் முரண்பாடாகத்தான் இருக்கும். காங்கிரஸைக் கழற்றிவிடுமாறு திமுகவுக்கு பாஜகவின் அழுத்தங்கள் அதிகமாக இருந்தபோதும்... திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இப்போதுவரையில் பிரச்சினை இல்லை. பிரச்சினை என்று வந்தால்கூட அடுத்து வரக் கூடிய தேர்தலில் தங்களது வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்ற வகையில் திமுகவும் சரி, அந்தக் கூட்டணிக் கட்சிகளும் சரி எச்சரிக்கையோடே காய் நகர்த்துகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா அறிவிப்பு BBC

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். "விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு" ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

திமுக-வில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?

மாலையாமலர்  : திமுக-வில் ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக-வில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி? பொன்முடி, ஆ. ராசா தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் என மூன்று பேர் துணை பொதுச்செயலாளராக உள்ளனர். திமுக கட்சி விதியின்படி 3 பேர்தான் துணைப் பொதுச்செயலாளராக இருக்க முடியும். தற்போது ஆ. ராசா, பொன்முடி ஆகியோருக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் மூன்று பேர் என்ற விதியை ஐந்து பேர் என மாற்றியமைக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமான் பேட்டி : கல்யாண சுந்தரமும் ராஜீவ்காந்தியும் நயவஞ்சகர்கள்,சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள்.

கல்யாண சுந்தரமும் ராஜீவ்காந்தியும் நயவஞ்சகர்கள்,சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள். இருவரும் என் தோளில் ஏறி என் வாயில் மூத்திரம் அடித்து விட்டார்கள் tamil.samayam.com  : நாம் தமிழர் கட்சிக்குள் நீடித்து வரும் குழப்பங்கள் குறித்து பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் உயிரிழந்தால்தான் கட்சியை உடைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் சீமான் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் அண்மை காலங்களாக அளித்து வரும் பேட்டிகள் பேசுபொருளாகி உள்ளது. குறிப்பாக அக்கட்சிக்குள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

 கல்யாண சுந்தரத்தை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.       ஆனால், இதுகுறித்து சமயம் தமிழுக்கு அளித்த நேர்காணலில் அந்த தகவல்களுக்கு கல்யாண சுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார்.      “கருத்து வேறுபாட்டால் இந்த கட்சியில் இருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். யார் சென்றாலும் கட்சி இருக்கும். தனி மனிதர்களால் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. 

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

விமானங்களில் வைரஸ் மற்றும் கிருமிகள் 99.97 சதவீதம் வரை கொல்லப்படுகிறது... ஹெச்.இ.பி.ஏ. பில்ட்டர் கொண்டு

maalaiamalar: விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை.

இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைக்கிறது. இவற்றில் வான்வழி செல்லும் விமான பயணம் மற்ற போக்குவரத்துகளை விட அபாயகரமானது என்ற எண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது.       பொதுவாக விமானங்களில் சிறு இடத்தினுள் பலர் மிக அருகில் அமர வைக்கப்படுவர். இத்துடன் விமானத்தினுள் காற்றோட்டத்திற்கான வசதி இருக்காது. இதனால் விமான பயணம் செய்யும் ஒருவருக்கு சளி, இருமல் போன்றவை இருந்தாலும், மிக எளிதில் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்த கூற்றில் துளியும் உண்மையில்லை என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.

இந்திய கடல் எல்லைக்குள் நகரத்தப்பட்டுள்ள நியூ டயமன் கப்பல் வெடிக்கும் ஆபாய கட்டத்தில் . இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

ilakkiya .net : இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் நகரத்தப்பட்டுள்ள நியூ டயமன் கப்பலில் மீண்டும் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் தீயினால் எந்த நேரத்திலும் கப்பல் வெடிக்க கூடிய அபாயம் உள்ளதாக, இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். 

 கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் பயணித்த குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் நேற்று மாலை இரண்டாவது முறை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த இந்திய, இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். கப்பல் வெடித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமிற்கும் அதிகமான திரவ வகை ஒன்றை விமான மூலம் வீசி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிநாட்டில் இருந்து ஆய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த கப்பலில் 27 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

`இந்தி தெரியாது’ டி-ஷர்ட் பின்னணி .. கனிமொழி டிசைன் செய்த டி ஷர்ட்கள்

வே.கிருஷ்ணவேணி- vikatan :
“யுவன் சார் போட்ட போட்டோ முதலில் வைரல் ஆனது. ஆனால், இந்திய அளவில் அது ட்ரெண்ட் ஆகும்னு கனிமொழி மேடமோ, நாங்களோ எதிர்பார்க்கலை.” இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, `மெட்ரோ’ பட நடிகர் சிரிஷ் இருவரும் `I am a தமிழ் பேசும் Indian’, `ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்திருந்த புகைப்படங்களை அண்மையில் அவர்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்தப் படங்கள் அடுத்த சில நிமிடங்களில் செம வைரல் ஆகவும், `ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. பலரும் தொடர்ந்து பதிவுகளை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிடவே, அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும், `ஹிந்தி தெரியாது போடா’ டி ஷர்ட்

அணிந்த படங்களைப் பகிர ஆரம்பித்தனர். நடிகர் சாந்தனு – கீர்த்தி தம்பதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களின் டி ஷர்ட் புகைப்படங்களைப் பகிர்ந்துவந்தனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.” என்று ஞாயிறு இரவு குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்படட ஆந்திரா பெண்கள் .. கண்விழித்து பார்த்தபோது அனைவரும் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தார்கள் .

 பிபிசி   :நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" "நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை. ஆந்திர பிரதேச ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக, மும்பை, டெல்லி, புனே ஆகிய பெருநகரங்களுக்கு பல தசாப்தங்களாக விற்கப்பட்டு வரும் பெண்களின் கதை இது. செளதி அரபியாவுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவது குறித்து அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை உள்ளூர் காவல் துறை, தொடர்ந்து மறுத்து வருகிறது.

இப்படியான சூழலில் பிபிசி செய்தியாளர் ஹிருதயா விஹாரி அனந்தபூர் மாவட்டத்தில், பாலியல் தொழிலிருந்து மூன்று பெண்களை சந்தித்து உரையாடினார். இந்த பெண்கள் தாங்கள் எவ்வாறு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறத்தப்பட்டோம் என்று விஹாரியுடன் பகிரிந்து கொண்டார்கள்.

இனி அந்த பெண்களின் வார்த்தைகளில்:

அரியர் ரத்து வழக்கு: ஏஐசிடிஇ பதிலளிக்க உத்தரவு!

minnambalam.com :தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளித்த விவகாரத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ ) மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அரியர் மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவும், அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கூறி வருகின்றனர். இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் அரியர் ரத்து தொடர்பாக அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கலை மற்றும் அறிவியல், எம்.சி.ஏ, பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.    இதனால் கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகத்தின் மதிப்பு கெடும். அதோடு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது படித்து தேர்ச்சி அடைந்தவர்களைச் சோர்வடையச் செய்யும். 20 படங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்ச்சி அளிப்பதன் மூலம் கல்வியின் தரம் குறையும்.

கன்னட திரையுலக போதை மருந்து சர்ச்சை: நடிகை சஞ்ஜனா கல்ரானி கைது

.hindutamil.in :கன்னட திரையுலகில் போதை மருந்து பயன்பாடு குறித்து விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகை சஞ்ஜனா கல்ரானியை கைது செய்துள்ளனர். ஏற்கனவே, பெங்களூரு நகரத்தில் பார்ட்டிகளில் போதை மருந்து விநியோகம் செய்த குற்றத்துக்காக, நடிகை ராகினி த்விவேதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.         செவ்வாய்க்கிழமை காலை அன்று, சஞ்ஜனாவின் வீட்டில், உரிய அனுமதி பெற்ற பின் மத்தியக் குற்றப் பிரிவினர் சோதனை செய்தனர். தொடர்ந்து சஞ்ஜனா விசாரணைக்காக, குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகியிருக்கும் ராகுல் என்பவர் சஞ்ஜனாவின் நண்பர். ராகுலின் கைதிலிருந்தே சஞ்ஜனா கண்காணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கணா ரணவத், பாலிவுட்டில் போதை மருந்து கும்பலுக்கு, பெரிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

சீமான் கட்சியில் வெளிநாட்டு வசூல் தகராறு .. ஆளுக்கு ஆள் ... சீமானை மிஞ்சிய வசூல்வேட்டை

சீனி மாணிக்கம்  : வணக்கம் திரு.சீமான் அண்ணா அவர்களே... தமிழ்தேசியத்தின் முகமும் முகவரியுமாக அடையாளப்படுத்தப்படும் உங்களின் தம்பிகள், திரு.கல்யாண சுந்தரம் மீது திடீரென்று வீசுகின்ற விமர்சனக் கற்கள் உங்கள் கவனத்திற்கு வரமாலிருக்க வாய்ப்பில்லை... 

அந்த வகையில், கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக கல்யாண் மீது குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா??? கையாடல் செய்ததால் தான் 5 மாதமாக பேசாமல் அவரை (கல்யாண்) புறக்கணித்ததாக நாம் எடுத்துக்கொண்டால் கூட, கருமாயப்பட்டு வெளிநாட்டில் உழைத்து அனுப்பிய ஈழத்தமிழர்களின் 38 லட்சம் பணத்தை கையாடல் செய்ததற்கு தண்டனை வெறும் புறக்கணிப்பு மட்டும் தானா???

அது உங்களின் சொந்த பணமாக இருக்கும் பட்சத்தில் பெரிய மனதோடு மன்னிக்க உங்களுக்கு உரிமையிருக்கலாம், ஊராரின் பணத்தை ஒருவர் கையாடல் செய்ததற்கு புறக்கணித்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது?      கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?

கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா??

ஆசிரியரை கொலை செய்தவரை அடித்தே கொன்ற ஊர்ப்பொதுமக்கள்!

   webdunia : ஆசிரியரை சுட்டுக்கொலை செய்த கொலைகாரனை பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது          உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குஷிநகர் என்ற பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது வீட்டின் வெளியே நின்று இருந்தார். அப்போது அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் ஒன்றில் அவர் தனது நண்பரின் வருகைக்காக காத்திருந்த போது திடீரென அந்த டீக்கடையில் இருந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஆசிரியரை நோக்கி சுட்டுள்ளர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் துப்பாக்கியால் சுட்ட கொலைகாரனை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கொலைகாரன் துப்பாக்கியை காட்டி பொது மக்களை மிரட்டியதாக தெரிகிறது. இருப்பினும் பொதுமக்கள் அச்சப்படாமல் அந்த கொலைகாரனை பிடித்துள்ளதாக தெரிகிறது.

புலிகளால் எல்லாவற்றையும் இழந்தது தமிழக மக்களும் திமுகவும்தான்! இலாபம் அடைந்தது அதிமுகவும் பார்ப்பனர்களும்தான்!

Neelavannan :  1 . ஈழப்பிரச்சனை உருவான காலங்களில் கலைஞர்தான் முதல் முதலாக ஓங்கி குரல் கொடுத்து தமிழகத்தின் பட்டி தொட்டிக்கெல்லாம் அந்த செய்தியை எடுத்து சென்றார் . முழு இந்தியாவையும் உலுக்கும் வண்ணம் போராட்டங்களை முன்னெடுத்தது அதை இந்திய பிரச்சனையாக மாற்றினார்.
கடலில் தத்தளித்து ஓடிவந்த அத்தனை போராளி குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பினார் . அந்த அழைப்பை பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் புறக்கணித்தனர்.   
அதுவரை அமைதியாக இருந்த எம்ஜியார் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார் அவருக்கு பண உதவியும் செய்தார்.
2 . ஈழத்தில் இயக்கங்கள் அத்தனையும் போராடிக்கொண்டு இருந்தன.
இந்திய அரசை மட்டும் நம்பி இருக்காது அனைத்து இந்திய எதிர்க்கட்சிகளையும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான சக்தியாக திரட்டும் முயற்சியில் மதுரையில் டெசோ மாநாட்டை கூட்டினார்.
3. அந்த மாநாடு நடந்து கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் புலிகள் டெலோ மீதான கொலைவெறியை மேற்கொண்டு ஸ்ரீ சபாரத்தினத்தையும் கொன்றார்கள். டெசோ மாநாட்டுக்கு வந்த இந்திய தலைவர்களும் தமிழகமும் ஈழ போராட்டத்தின் மீது முதல் முதலாக நம்பிக்கை இழக்க தொடங்கியது .. ஈழத்தின் மீதே இந்திய மக்களுக்கு அவநம்பிக்கையம் வெறுப்பும் உண்டானது.
4 . டெலோவை அழித்த பின்பு இலங்கை ராணுவம் வேகமாக முன்னேறி புலிகளை அச்சுவேலி என்று சிறு நில பரப்பிற்குள் குறுக்கியது.

"அருணாசல பிரதேசத்தை இந்திய பகுதியாக சீனா அங்கீகரிக்கவில்லை" BBC

இந்திய ராணுவத்துக்காக சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பேர் அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன விவகாரத்தில் தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வருகின்றன. வாரஇறுதியில் காணாமல் போன அந்த ஐந்து பேரும் சீன ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று இந்திய ராணுவம் கேட்டிருந்தது. இந்த நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், "சீனாவின் கிழக்குப்பகுதி, இந்திய எல்லை, சீனாவின் தென்பகுதி திபெத் எவை என்பதில் தொடர்ச்சியாக சீனா தெளிவாகவே உள்ளது" என்றார். "தெற்கு திபெத்தின் அங்கமாக அருணாசல பிரதேசத்தை கருதும் சீனா, அது இந்தியாவின் பகுதி என்பதை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை" என்று ட்செள லிஜியான் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் நிதி மோசடி வழக்கில் கைது

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் நிதி மோசடி வழக்கில் கைது.dailythanthi.com ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

மும்பை, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.      இந்த முறைகேடு தொடர்பாக சந்தா மற்றும் அவரது கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சந்தா மற்றும் தீபக் வசம் உள்ள ரூ.78 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இந்த ஆண்டு தொடக்கத்தில் முடக்கியது.

பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த 28 இந்தியர்கள்! பெரும்பாலோர் குஜராத்திகள்!!!

Kandasamy Mariyappan : · கீழே உள்ள நபர்களை பார்க்கும்போது, எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது... இந்திய மக்கள் நேர்மையாக உழைத்து சம்பாதித்த ஏறத்தாழ 10 லட்சம் கோடி பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள்!!!!!???? 1) விஜய் மல்லையா
2) மெஹுல் சோக்ஷி

 3) நீரவ் மோடி
 4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா

8) ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்   

14) கமலேஷ் பாரீக்
15) நிலேஷ் பாரீக்
16) வினய் மிட்டல்
17) ஏகலைவா கர்ஹ்
18) சேட்டன் ஜெயந்திலால் 

19) நிதின் ஜெயந்திலால்
20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்
22) ராஜீவ் கோயல்   

 23) அல்கா கோயல்
24) லலித் மோடி
25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்
27) மயூரிபென் படேல்

திங்கள், 7 செப்டம்பர், 2020

ஹிந்தியை புறந்தள்ளியதால் தமிழர்களின் கல்வி உலகத்தரத்தில் உள்ளது

Narain Rajagopalan: ஹிந்தி படிக்காமல் போனதால் தமிழ்நாடு இழந்தது என்ன ?

1 ) ஹிந்திக்கு பதிலாக இங்கிலிஷ் கற்று கொண்டதால், தமிழர்கள் அமெரிக்கா
விற்கும், ஐரோப்பாவிற்கும் போனார்கள். ஹிந்தி மட்டுமே தெரிந்து இருந்த குஜரா த்திகளும், சிந்திகளும், மார்வாரிகளும் ஆப்ரிக்காவிற்கு போனார்கள்.

2 ) ஹிந்தி கற்காமல் ஒழுங்காய் அந்த நேரத்தில் அறிவியலும், கணிதமும் ஓர ளவுக்கு பயின்றதால் தான் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவ கல்லூரிகளும் தமிழ்நாட்டில் உருவாயின. ஹிந்தியை கற்று கொண்டு அறிவியலிலும், கணித த்திலும் பெயிலான காரணத்தினால் தான் பஜ்ரங் தள்ளும், அனுமன் சேனா வும் உருவாயின.

3 ) ஆங்கிலம் சரிவர படிக்காமல், வெறும னே தமிழ் படித்த தமிழர்கள் கூட இன்றை க்கு எந்த உணவகங்களிலும் எச்சில் தட்டு கழுவ தயாராக இல்லை. ஹிந்தி யை 12 வருடங்கள் படித்த, அல்லது கோட் அடித்த ஏராளமான வடக்கத்தியர்கள் தான் அந்த வேலைகளை செய்கிறார்க ள். ஹிந்தி படிக்காமல் போனதால் “சுய மரியாதை” வியாதி பீடித்த தமிழர்கள் இந்த மாதிரியான வேலைகளை செய்வ து இல்லை.

France "The voice kids" நிகழ்ச்சியில் கலக்கும் தமிழ் பாட்டு .. தூள் கிளப்பும் தமிழ் சிறுமி கனேஷா பாலாகுமாரன்”

இலக்கியா .நெட்:    பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செப்டம்பர் 5, 2020 சனிக்கிழமை “தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ்” இன் 7 வது சீசனில் சுவிட்சர்லாந்து சேர்ந்த. 12 வயதான கனேஷா பாலாகுமாரன், “சோப்பனசுந்தரி”. என்ற பாடலை பாடியுள்ளார். உலக நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதில் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் இமன் இசையமைத்த சொப்பன சுந்தரி என்ற பாடலை பாடியுள்ளார். நான்கு நடுவர்களைளைத் திருப்புவதற்கு முடிந்ததுள்ளது . எங்களைப் பணிய வைக்கும் ஒரு மந்திர தருணம். இந்த “நம்பமுடியாத” தருணத்தில் அவள் எங்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இந்தி தெரியாத தமிழக அதிகாரியை இந்திப்பிரிவில் திணித்த ஜி எஸ் டி அலுவலக அடாவடி.. உதவி ஆணையர் புகார்!

கலைமோகன் நக்கீரன் :  தமிழ் உணர்வைச் சிறுமைப்படுத்தும் நோக்குடன் இந்தி பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி அலுவகத்தின் உதவி ஆணையர் புகார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி அலுவலக இந்தி பிரிவில், இந்தி தெரியாத தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜி.எஸ்.டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் என்பவர் மத்திய அரசின் மறைமுக வரிகள் வாரியத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியைப் பரப்ப வேண்டும் என்று நினைப்பது கூட இந்தித் திணிப்புதான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியை தாய்மொழியாகக் கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் திட்டமிட்டு எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வைச் சிறுமைப்படுத்தும் நோக்குடன் இந்தி பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அலுவலக இந்தி பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தி தெரியாதவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.   ஏற்கனவே தமிழகத்தில் திரையுலகினர் டி-ஷர்ட் மூலமாக இந்தித் திணிப்பு தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஜி.எஸ்.டி ஆணையர் தற்பொழுது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் pregnancy போட்டோக்களை வெளியிட்ட மைனா கணவர்!


webdunia: மைனா நந்தினியின் pregnancy போட்டோஸ்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் ஆஸ்பத்திரி டாக்டர்... கர்நாடக மாநிலம்

maalaimalar.co : ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். ஆட்டோ டிரைவராக மாறிய டாக்டர் ரவிந்தீரநாத். பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதுபற்றி அறிந்த சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம் ஆகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை, ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார்"!

BBC : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட காணொளியில், "அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் 'கொரோனா நெகடிவ்' என வந்துள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா பாசிடிவா, நெகட்டிவா என்பதைவிட நுரையீரலின் தொற்று ஆறி, மேம்படுவதுதான் முக்கியம். நுரையீரல் மேம்பட்டும் வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய ஐ பேடில் நிறைய கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளைப் போன்றவற்றை பார்த்து வருவதாகவும் ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி என்றும் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார்.

இரு மொழிக் கொள்கையில் உறுதி: கே. பி.அன்பழகன்

 இரு மொழிக் கொள்கையில் உறுதி: கே. பி.அன்பழகன்

மின்னம்பலம் : தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் இன்று (செப்டம்பர் 7) கடிதம் எழுதியுள்ளார்.   பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அடுத்த கல்வி ஆண்டிலேயே புதிய கல்விக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.   ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாகத் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

சீனா ; போர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே ...

tamil.oneindia.com- Shyamsundar  : பெய்ஜிங்: சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வி அடையும், எல்லை பிரச்சனை போராக மாறினால் அதில் இந்திய வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. 

1960லிருந்து லடாக்கின் Green Line-ஐ பிடிக்க முயற்சிக்கும் சீனா 10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக் இந்தியா சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது. இவர்கள் சமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை மிகவும் காரசாரமாக அமைந்து இருந்தது. எல்லை பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா இதில் குற்றஞ்சாட்டியது. சீனா எல்லையில் தேவையில்லாமல் அத்துமீறுவதாக இந்தியா புகார் வைத்துள்ளது. இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. 

அடவி நயினார் கோவில் அணை...! தமிழகத்தின் 40 ஆண்டுகளை தொலைத்த பிரபாகரனுக்கும் அவரின் பெரியாரிஸ்டுகளுக்கும்..

கருப்பன் மகன்
: அகதிகளை உrருவாக்கிய பிரபாகரன் தம்பிகளுக்கும். தனி ஈழத்தை நட்டமா நட்டபோய் 40 ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றை ழித்தொழித்த பெரியாரிஸ்ட் களுக்கும் இந்த பதிவு... அன்பார்ந்த கலைஞர் எதிர்ப்பாளர்களே... கட்டாத பாலம், வெட்டாத குளம், போடாத ரோட்டுக்கெல்லாம் பில் போட்டு ஊழல் செய்யும் அரசுன்னு எம் ஜி ஆரின் அதிமுக ஆட்சியை தனது பாலைவன ரோஜாக்கள் படத்தில் போட்டுத் தாக்கியிருப்பார் கலைஞர்..!ஆனால், அதே கலைஞர் தனது ஆட்சியில், இல்லாத... அதாவது தமிழகத்திலேயே எங்கும் ஓடாத ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய அணை கட்டிய கதை தெரியுமா உங்களுக்கு..!

தமிழகத்தையும் கேரளத்தையும் கோடு போட்டு பிரிக்கும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி... பழைய திருநெல்வேலி ஜில்லா, இன்றைய தென்காசி மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும்...   தமிழக கேரள பார்டர் மலையில் அடிவாரத்தில் இருக்கும் ஒரு ஊர் தான் மேக்கரை. அந்த மேக்கரைக்கு இந்தப்பக்கம் வடகரை, கடையநல்லூர் போன்ற ஊர்களும், அந்தப்பக்கமாக அச்சன்புதூர், செங்கோட்டை, திருக்குற்றாலம் போன்ற ஊர்களும் உண்டு..!     மலையின் உச்சிக்கு போகும் வரை தமிழ்நாடு.... உச்சியிலிருந்து கீழே விழுந்தால் கேரளா. கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் வளம் கொழிக்க வைக்கும் தென்மேற்கு பருவமழை அந்த மலையிலும் தாராளமாக பொழியும்.

கலைஞர் முதலமைச்சராக இருக்கும் வரை ஜெயேந்திரருக்கு வாதாட கடவுளே வந்தாலும் .. ராம் ஜெத்மலானி

"இன்று வெளிவந்த கருணாநிதியின் அறிக்கையில் அனைத்து,_ #தகவல்களையும் கொட்டி விட்டார், இதற்கு மேல் மூடி மறைக்க எந்த பிரயோஜனமும் இல்லை எனவே அவரை உடனடியாக கைது செய்யுங்கள் என்று சற்று கோபமாக கூறுகிறார் ஜெயலலிதா! . 

Sivakumar Nagarajan : ·  ராம் ஜெத்மலானி.., சற்று பின்னோக்கி செல்லலாம் காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சங்கரராமன். 2004ம் ஆண்டு பட்டப்பகலில் கோவில் உள்ளேயே கூலிப்படை சிலரால் வெட்டி கொலை செய்யப்படுகிறார்.... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது... அத்தனை அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.... ஆட்சியில் இருந்த #ஜெயலலிதா ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கிறார்... அந்த ஒரு நபர் விசாரணை கமிஷன் தனது அறிக்கையை ஒரே வாரத்தில் தாக்கல் செய்தது அறிக்கையை படித்து பார்த்து ஜெயலலிதா அதிர்ச்சியாகிறார்... அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த முடிவுக்கும் வராமல் அமைதி காக்கிறார்.....ிஷயம் கலைஞருக்கு செல்கிறது தனக்கு தெரிந்த ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை நேரில் அழைக்கிறார்.... 

உடனடியாக காஞ்சிபுரம் சென்று யாருக்கும் தெரியாமல் இந்த கொலைக்கான பின்னணியில் முழு விவரங்களையும் எனக்குத் தாருங்கள் என்று ரகசியமாக சொல்லி அனுப்புகிறார்.  காஞ்சிபுரம் சென்ற அந்த அதிகாரி நான்கு நாட்கள் தங்கி இருந்து முழு விவரங்களையும் திரட்டிக்கொண்டு, ஒரு அறிக்கையாக கலைஞரிடம் தருகிறார் அந்த அறிக்கையை படித்து பார்த்த கலைஞருக்கு பேரதிர்ச்சி ..

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கருணாவை ஒதுக்க அல்ல ஓரங்கட்ட அல்ல ஒழிக்கவே நினைத்தார்கள்.

 Niro Jan : நானும் இப்போ 90 kids மாதிரி சும்மா விளையாட்டு பிள்ளையாகவே இருந்திருபேன் .என்னை கருணா அம்மானின் தீவிர ஆதரவாளனாக மாற்றிய பெருமை Australia, Sydney தமிழ் சங்க தலைவர்களே காரணம் .2012 படகு மூலம் Australia வந்த போது அவர்கள் கூறிய காரணம் 'மட்டக்களப்பு ஆக்கள் இங்க குழப்ப வாறார்கள்' நான் எந்த இடம் என்று அறியாமல் முகத்துக்கு நேரே கூறி விட்டார்கள். அதன் பிறகு தான் அம்மானின் விடையத்தை ஆழமாக ஆராய்ந்தேன் . அப்போது புரிந்தது அம்மான் பக்கம் நியாயமான காரணங்கள் இருக்கிறது என்று. எவர் என்ன கதைத்தாலும் நான் என்றும் அம்மான் பக்கமே.!

Reginold Rgi: கருணா அம்மான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் சொல்ல போனால் புலிகளின் இராணுவ தளபதி.. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை இராணுவ நடவடிக்கைகளும் கருணாவின் தலைமையில் நடைபெற்றது பாரதத்தில் சிறந்த வில்லாளன் கர்ணனுக்கு ஒப்பானவன் குறிதவறாமல் கொள்கையுடன் விடுதலைப்போராட்டத்தினைக் கொண்டு சென்றவன். அப்படியான ஒருவனுக்கு இரண்டாவது தலைமைத்துவம் கேட்பான் என்று பகல்கனவில் விழித்த புலிகளின் ஏனைய தளபதிகள் “கருணா கேட்க முன்னமே அவரை விடுதலைப் பொராட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை வகுத்தனர். அதில் 1. தமிழ்ச் செல்வன் மட்டக்களப்புக்கு வந்து கருணாவின் திட்டங்களை அறிந்து தலைவரிடம் தவறாக முன்வைத்தது

விரைவுப் பேருந்து: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்.. நாளை முதல்!

BUSCMBTdinamani.com :தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.       தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் சேவை இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 524 அரசு விரைவு போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

அரசு உத்தரவை அடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஸ்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

கூலித்தொழிலாளர்கள் தற்கொலை.. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.. பதறவைக்கும் டேட்டா

tamil.oneindia.com -Shyamsundar :    சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு அமைப்பு (NCRB) தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இடையே மக்கள் மிக மோசமான பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 
முக்கியமான தினசரி வருமானம் பெறும் கூலித்தொழிலாளர்கள் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பாதிப்பு இப்போது ஏற்படவில்லை. கொரோனாவிற்கு முன்பே இந்தியாவில் கூலித்தொழிலாளர்களின் பொருளாதாரநிலை மோசமாகவே இருந்துள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளர்கள் குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி விவரமே இதை உணர்த்துகிறது. 
இந்தியாவில் கடந்த 2019ம் வருடத்தில் மட்டும் 1,39,123 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். கூலித்தொழிலாளர்கள் என்றால் விவசாயிகள் அடங்காமல், தினசரி ஊதியத்திற்கு வேலை பார்க்கும் நபர்கள். கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிக கூலித்தொழிலாளர்கள் கடந்த வருடம் தற்கொலை செய்து உள்ளனர். 
கடந்த 6 வருடங்கள் முன் நிகழ்ந்த கூலித்தொழிலாளர்கள் தற்கொலையை விட கடந்த 2019ல் இரண்டு மடங்கு கூடுதலாக தற்கொலை நிகழ்ந்துள்ளது.

ராமேஸ்வரத்தில் ஊடுருவிய இலங்கை காவலர் - சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை

  BBC :இலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் தனுஷ்கோடி அருகே தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டார். 

இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெற்றதாக ராமேஸ்வரத்தில் உள்ள மாநில கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது தனுஷ்கோடி அருகே கம்பிபாடு என்ற இடத்தில் த னியாக நின்று கொண்டிருந்தவரிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் சிங்கள மொழியில் பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணை ஆம்புலன்ஸில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேரளா சாரதி கைது!

tamil.indianexpress.com : கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவரை ஆம்புலன்ஸ் சாரதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இரு பெண்களில் ஒருவர் உள்ளூர் கொரோனாவுக்கான விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மற்ற பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் வேறொரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஆம்புலன்ஸ் சாரதிக்கு அறிவுறுத்தியுள்ளனர். சாரதியுடன் தனிமையில் பயணித்த குறித்த 19 வயது பெண்ணை ஓட்டுநர்,  பாழடைந்த இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி, வாகனத்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமரர் குட்டிமணியின் மனைவி இராசாரூபராணி இலங்கையில் காலமானார்! ( பிரபாகரன் குட்டிமணியை காட்டிக்கொடுத்த...)

Kumar Sriskandakumar : மணற்காட்டில் எங்களை இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தது ‘தம்பி’( பிரபாகரன்)  என்று, குட்டிமணி பனாகொடை இராணுவ முகாம் எமது முதலாவது சந்திப்பில் என்னிடம் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது! 

Thambiah Pillai Sothilingam :   இவர்களை ஜெயம் என்பவரின் உதவியாலேயே பொலீஸ்க்கு அறிவிக்கபாபட்டது. அங்கே பொலீஸ் கைது செய்யும் போது பிரபாகரன் சிறீசபாவீட்டில் வந்து தாயிடமிருந்து சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டிலேயே நித்திரை கொண்டார். இந்த செய்தி வந்ததும் சிறீயண்ணா என்னடா செய்து போட்டு வந்து உங்க படுத்திருக்கிறாய் என்று சத்தம்போட பிரபாகரன் எழுந்து போய்விட்டார் அதன் பின்னர் பிரபாகரன் enlf கூட்டத்திலேயே பிரபாகரனை சந்திக்கிறார். சிறீசபா சத்தம்போட்டு அயலில் இருந்த சிறீசபா உறவுகள் ஓடிவந்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்தவர் கனடாவில் வாழ்கிறார்.

 Kula Dhayaa: சோதி, பிரபாகரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது எமது வீட்டில்! சிறீ அண்ணா இந்த விடயத்தை சொன்னவுடன், ஒரு நமட்டு சிரிப்புடன் பிரபாகரன் “ அவங்கள் யாருடன் விளையாடுகிறார்கள், என தெரியவில்லை” என்றார். சிறீ அண்ணா என்னை தனது வீட்டிற்கு சென்று அங்கு நின்ற மற்ற தோழர்களை உடனடியாக. வேறு இடங்களுக்க போகச் சொன்னார். பின்னர் சிறீ அண்ணா, தேவன் இந்தியா பயணித்தார்கள், பந்து அண்ணா, பிரபாகரன், குண்டப்பா, நான் பின்னர் சென்றோம். 1982 வரை பிரபாகரன் ரெலோவுடனேயே இருந்தார். நாகராஜாவை பிரபாகரன் கடத்தியது சம்பந்தமான விடயத்துடன் பிரிந்து சென்றார்.  

 Thambiah Pillai Sothilingam : · இவரை குட்டிமணி அம்மன் என்றே அழைப்பது வழக்கம். அம்மனின் ஆத்மா சாநாதியடைய பிரார்த்திக்கிறேன். தலைவர் சிறீசபாவை கொலைகார சுதன் ரமேஸ்டமிருந்து காப்பாற்றிய சத்தியம் இவர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தளபதி குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார்(05-09-2020). ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார். 
அவர்களின் பாரியார் இயற்கை எய்திவிட்டார் என்ற துயர செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம்.

ரெலோ இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் , மற்றும் மக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்,

குஜராத் வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்!..Court drops Modi’s name from Gujarat riot compensation suit

கலவரத்தில் பலியானவர்களின் உறவினர்களால் நகர்த்தப்பட்ட மூன்று சிவில் வழக்குகளில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை நீக்குமாறு குஜராத் மாநிலத்தில் தாலுகா நீதிமன்றம் செப்டம்பர் 5 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் பிரந்திஜ் தாலுகா நீதிமன்றத்தின் முதன்மை மூத்த சிவில் நீதிபதி எஸ்.கே.காத்வி மூன்று வழக்குகளில் மோடியை ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்பட்டதை ரத்து செய்திருக்கிறார். மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொதுவானவை மற்றும் தெளிவற்றவை, குற்றம் நடந்த இடத்தில் அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி இருந்தார் என்பதை நிறுவ எந்த தகவலும் கொண்டு வரப்படவில்லை என்று நீதிபதி காரணம் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 28, 2002 அன்று, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இம்ரான் தாவூத், (அப்போது 18 வயது) இங்கிலாந்தைச் சேர்ந்த தனது மாமாக்களான சயீத் தாவூத், ஷகீல் தாவூத் மற்றும் முகமது அஸ்வத் ஆகியோருடன் தனது முதல் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். இந்த நால்வரும் ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.  link timesofindia