சனி, 17 அக்டோபர், 2020

நீட் தகுதித் தேர்வில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் முதலிடம் சொன்னதும் - சொல்லாததும்..

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வில் ஒடிசாவை
சேர்ந்த சோயிப் ஆப்தா என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வை 13 லட்சத்து 66 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். 

 Prabaharan Alagarsamy : ·   01)#சொன்னது:இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஒடிஸாவைச் சேர்ந்த ஷோயிப்.

சொல்லாதது:
இந்த மாணவர் 12 ஆம் வகுப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு தாயுடன் சென்று அங்கேயே வீடெடுத்து தங்கி அங்குள்ள ஆலன் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று இந்த சிறப்பினை அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
02) சொன்னது:
தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தனியார் பள்ளியில் படித்த Srijan.
சொல்லாதது:
இந்த மாணவர் ஓராண்டுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

முத்தையா முரளிதரன் திரைப்படத்தை இலங்கை நடிகர்களை வைத்து இலங்கையில் தயாரிக்க ..

Janaki Karthigesan Balakrishnan : · நடப்பவை எல்லாம் நன்றாகவே நடக்கின்றன! முத்தையா முரளீதரன் ஒரு கண்டத்திலிருந்து தப்பினார் என்றே தான் கருதுகிறேன்.

Water என்றொரு controversial ஆங்கிலத் திரைப்படத்தை அதன் கனேடிய பெண் டைரக்டர், Deepa Mehta, இந்தியாவில் எடுக்க ஆரம்பித்து, வழமை போல் அதற்கான எதிர்ப்பைத் தவிர்த்து சிறீ லங்காவில் எடுத்து முடித்தார். மிக அருமையான படம். அதன் சுற்றுப்புறக் காட்சிகள் அழகோ, அழகு. அதிக நாட்கள் திரையில் ஓடியது. இப்போதும் இடைக்கிடை TV யில் வரும். அது போன்ற சந்தர்ப்பம் சிறீ லங்காவில் முரளீதரனுக்குப் பொருத்தமான அரசியல் சூழலில் வந்து தானாக கையில் வந்திருக்கிறது. முரளீதரனும் அவரது டைரக்டரும் செய்ய வேண்டியது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பாராது விஜய் சேதுபதியை விட இளமையான, இன்னும் முரளீதரன் இளமையில் இருந்த தோற்றத்திற்குப் பொருத்தமான இளைஞனைத் தேரந்தெடுத்து சிறீ லங்காவில், தமிழன் முரளீதரன் என்பதைவிட, சிறீ லங்கன் முரளீதரனாகப் படத்தை எடுக்க ஆரம்பிப்பதுவே சிறந்தது. சிறீ லங்காவில் இந்தியாவைவிட செலவு மிகக் குறைவாகவே இருக்கும். 

முரளீதரன் தான் கற்ற, பயிற்சி பெற்ற என்ற அனைத்தும் அதே இயற்கையான சூழலாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும். சிறீ லங்காவும், ராஜபக்ஸ அரசாங்கமும் அதை ஊக்குவிக்க முடியும். தாம் விட்ட தவறுகள் சில சுட்டிக்காட்டப்பட்டால், அதையும் ஏற்றுக் கடந்து போகமுடியும். படத்தை ஒரு மொழியில் எடுத்து ஏனைய இரண்டு மொழிகளில் டப் செய்து, தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் இடம்பெற பண்ண முடியும். 

வெகுஜன அரசியல் சிந்தனைசார்புகளில் ஒன்று பூமராங் விளைவு!

Karthikeyan Fastura : வெகுஜன மார்க்கெட்டிங் உளவியல் பற்றி ஒரு

குறும்புத்தகம் எழுதி வருகிறேன். அதில் மனதின் சிந்தனைசார்புகள் குறித்து இரண்டு அத்தியாயங்கள் எழுதியிருப்பேன். எண்ணிலடங்கா சிந்தனை சார்புகள் குறித்த உளவியல் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. 

அதில் வெகுஜன அரசியல் சிந்தனைசார்புகளில் ஒன்று பூமராங் விளைவு. எதிரிகளின் மீது வீசுவதாக எண்ணி கருத்தியல் தாக்குதலை வன்மமான மொழியாடலில் செய்யும்போது அது எதிரியை தாக்குவதற்கு பதில் தாக்குதல் தொடுத்த அணியினரை நோக்கி திரும்பி வந்து தாக்கும்.   இது எதிரி ஏற்படுத்தும் சேதாரத்தை விட மிக அதிகமாக இருக்கும்.     மக்களை எளிதாக மடைமாற்றும். இதை ஏற்படுத்த எதிரியின் கூடாரத்திற்கு சிலரை அனுப்பி அவர்கள் தரப்பில் இருந்து பேசுவது போல பேசி சாதாரண கருத்தாடலை அநாகரிகமான மொழிக்கு எடுத்துச்சென்று அல்லது கைவிட்ட பிரச்சனையை இழுத்து வைத்து பேசி பெருத்த சேதாரத்தை கொண்டுவருவார்கள். 

ATM பரிவர்த்தனையின் போது கள்ள நோட்டு? உடனடியாக திருப்பித் தர வேண்டும்... அறிந்து கொள்ளுங்கள்

zeenews.india.com- ZH Web (தமிழ்) : ஆர்பிஐ விதிகளின்படி, ஏடிஎம்மில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு, அதற்கான பணத்தைத் உடனடியாக திருப்பித் தர வேண்டும். ATM Transaction and Fake Note: ஏடிஎம் இயந்திரத்தில் (ATM Transaction) பரிவர்த்தனைகளின் போது சில நேரங்களில் போலி ரூபாய் நோட்டுகள் வெளிவருகிறது. ஒரு போலி ரூபாய் நோட்டு வந்ததும் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்று புரிவதில்லை. ஆனால் ஏடிஎம்களிடமிருந்து போலி நோட்டுகள் (Fake Notes) வந்தால் வாடிக்கையாளர்களுக்கு முழு பணத்தைத் திருப்பித் தர இந்திய ரிசர்வ் வங்கி விதிகளை வகுத்துள்ளது. இதுத்தொடர்பாக வங்கிகளுக்கு கடுமையான விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.
ATM பரிவர்த்தனையின் போது கள்ள நோட்டு வந்துவிட்டதா? என்ன செய்யவேண்டும்? அறிந்து கொள்ளுங்கள்

ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளின்படி, ஏடிஎம்மில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வெளிவந்த பிறகு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அப்படி செய்யப்படாத பட்சத்தில், வங்கிகள் அதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஏடிஎமிற்கும் (ATM Machine) அனுப்பப்படும் நோட்டுகளை சரிபார்த்து, கணினியில் போலி நோட்டுகளை சேர்ப்பதைத் தவிர்ப்பது போன்றவை வங்கியின் பொறுப்பாகும். ஏடிஎம்கள் மற்றும் கவுண்டர்களில் பணத்தை சரிபார்க்கப்படுவதற்கான காரணம் இதுதான்.

மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உயிரிழப்பு,! சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ...

திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உயிரிழப்பு
thinathanthi :சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியனின் இளைய மகன் அன்பழகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். சென்னை, திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரணியத்தின் இளைய மகன் அன்பழகன் (வயது 34) கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார். மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார். இவரது மறைவு திமுகவினற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுகுஷிமா அணு உலை விபத்து: கதிர்வீச்சு நீரை கடலில் விட முடிவு செய்துள்ள ஜப்பான் அரசு

ஃபுகுஷிமா
BBC :ஜப்பானின் சேதமடைந்த ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேற்றும் கதிர்வீச்சு நீரைக் கடலுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 2011ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்த அணு உலையைக் குளிரச்செய்யப் பயன்படுத்தப்பட்ட நீரை எப்படி அகற்றுவது என பல்வேறு விவாதங்கள் நிலவின. கடலுக்குள் கதிர்வீச்சு நீரை செலுத்துவதற்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஆனால் இவ்வாறாக வெளியிடுவதே ஆபத்தை குறைக்கும் வழி என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இதுகுறித்து அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கதிர்வீச்சை குறைக்கும் விதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பத்து லட்சம் டன்னுக்கும் அதிகமான நீரை 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடலுக்குள் செலுத்தவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சொத்து வரி: ரஜினிக்கு ஆதரவளிக்கும் ஸ்டாலின்

சொத்து வரி: ரஜினிக்கு ஆதரவளிக்கும் ஸ்டாலின்

 minnampalam  :ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை, அப்படிச் செலுத்தத் தவறினால் 16வது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரண்டாவது அரையாண்டு சொத்து வரியை கட்டாதவர்களுக்கு அபராதத்துடன் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் ரஜினிகாந்தும் அபராதத்துடன் சொத்து வரி செலுத்தினார். 

இந்த நிலையில் சொத்து வரி தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும், அதுமாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

அரசு வேடிக்கை பார்க்காது! துணைவேந்தருக்கு அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை!

minnambalam : விதிகளுக்கு உட்பட்டுதான் துணைவேந்தர் செயல்பட வேண்டுமென அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரசு வேடிக்கை பார்க்காது: துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை!
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை, டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.இதற்கு வரவேற்பு தெரிவித்த ஸ்டாலின், காலதாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் பரிந்துரைக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், துணை வேந்தர் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

கொரானாவே இல்லாதவர்கள் கூட அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்களிலும் மரணித்து போவதும் நடக்கிறது!சாவித்திரி கண்ணன்

சாவித்திரி கண்ணன் : · கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…! முதலில் நம்ப மறுத்தேன்! ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன! ஆள் தூக்கும் அரசியல் மாபாதகங்கள், சதிச் செயல்கள்…போன்றவற்றை பயங்கரவாத இயக்கங்கள் அல்லது பாசிஸ அரசுகள் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால்,ஜனநாயகத்திற்கு பேர் போன இந்தியா போன்ற அதுவும் அமைதி பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ் நாட்டிலா?
கொரோனாவைக் காரணம் காட்டி வீடுவீடாக வந்து அதட்டி,உருட்டி டெஸ்டுக்கு வா என்று நிர்பந்தித்து அழைத்துச் செல்லும் செய்திகளை முதலில் வடசென்னையில் பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் கூறினார்! இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இது போன்ற செய்திகள் கடந்த ஒரு மாதமாக வந்தவண்ணம் உள்ளன!
முதலில் தனியார் மருத்துவமனைகள் தான் டெஸ்ட்டுக்கு யாராவது வந்தாலே போதும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்று படுக்க வைத்து ’லம்ப்’பாக பணம் பார்த்தார்கள்! இதையடுத்து தான் அரசு மருத்துவமனைகளுக்காக ஆள்பிடிக்கும் அதிகேவலமான, அநீதியான அராஜகங்கள் நடந்து கொண்டுள்ளன!
கொரானாவே இல்லாதவர்கள் கூட இவர்கள் செய்யும் அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்களிலும் மரணித்து போவதும் நடக்கிறது! அப்படி மரணித்தவர்களை வீட்டார் பார்க்கவும் வழியின்றி புதைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை!

பாஜகவின் ‘பி டீம்’ பாஸ்வான் மகன்?

minnambalam : மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் அண்மையில் காலமான நிலையில்... பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் குழப்பம் ஏற்படுத்த முயல்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜகவின்  ‘பி டீம்’  பாஸ்வான் மகன்?

அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டமாக பிகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில்.. பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறார்.

இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி கட்சி சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மோடி ஆதரவு நிதிஷ்குமார் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தாங்கள் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும் ஆனால் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். .

இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில்..

Thambirajah Jeyabalan : · இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது. தமிழ் மாவட்டங்களில் தற்கொலை வீதம்:

வடமாகாணம்:
மாவட்டம் 1955 1972 1980 2011

யாழ்ப்பாணம் 13.1 32.9 27.4 24.5
கிளிநொச்சி 13.1 32.9 27.4 27.3
வவுனியா 17.9 63.9 84.1 15.7
முல்லைத்தீவு 17.9 63.9 89.3 28.2
மன்னார் 4.3 24.1 25.1 17.1
கிழக்கு மாகாணம்
மாவட்டம் 1955 1972 1980 2011
மட்டக்களப்பு 5.7 25.4 39.9 23.7
திருகோணமலை 8.7 18.3 21.6 16.3
அம்பாறை 5.7 12.0 26.5 15.4 
தற்கொலை உளவியல் : த ஜெயபாலன் : “தற்கொலை”: ஒரு பொதுச்சுகாதாரப் பிரச்சினை தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை. உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை. 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.

முதல் திருநம்பி விமானி, ஆயிஷா .. ஆதம் ஹாரி என்று மாற்றிக் கொண்டார்...

Ambethkar Thangaraj : · ஆயிஷா (எ) ஆதம் ஹாரி... கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்ஞலக்குடா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆயிஷா... 

தனது இளம் வயதிலேயே தனக்குள்ளே ஒரு ஆண் மகன் வளர்ந்து வருவதை உணர்ந்திருந்தார் ஆயிஷா.. ஆனாலும் அச்சம் காரணமாக வெளிப்படுத்தவில்லை... தொடர்ந்து படித்தார் ஆயிஷா...+2 படித்து தேறிய உடனே, தென் ஆப்பிரிக்க ஜோகன்னஸ்பர்க் Flying Clubல் சேர்ந்து படித்தார்... இந்த நிலையில் ஆயிஷாவின் குரல் ஆண் குரலாக மாறி, அரும்பு மீசையும் முளைக்க துவங்கியது.. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வந்ததோடு ஆயிஷாவின் வீட்டிற்கும் தகவல்கள் சென்று


சேர்த்தன.பயிற்சி முடிந்த ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஆயிஷா, தனது சொந்த வீட்டில் மிகக்கடுமையான சித்திரவதைகளை எதிர் கொள்ள நேர்ந்தது.. ஒரு வருடம் காலம் ஆயிஷா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.. உறவினர்களும் ஊர் காரர்களும் கூட சேர்ந்து அவரை தனிமைப்படுத்தினார்கள்.வேறு வழி இல்லாமல் ஆயிஷா வீட்டை விட்டு தப்பி ஓடி, ரெயில்வே ஸ்டேஷன்களிலும் கடைத் திண்ணைகளிலும் தூங்கி, கிடைத்த வேலைகளை செய்து, ஹார்மோன் சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

முருங்கையில் சாதிக்கும் மதுரை நிறுவனம்! 18 நாடுகளுக்கு 32 பொருள்கள் ஏற்றுமதி..!

vikatan - செ.சல்மான் பாரிஸ் - என்.ஜி.மணிகண்டன் : உணவுப்பொருள்களின் பேக்கிங் “உடலுக்கு நலம் தரும் முருங்கை ஆயில், சருமத்தைப் பாதுகாக்கும் பொருள்களும் தயாரிக்கிறோம்.” பிரீமியம் ஸ்டோரி முருங்கை மூலம் 32 வகையான உணவுப் பொருள்களை இயற்கையான முறையில் தயாரித்து உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது மதுரையிலிருந்து செயல்படும் ‘‘மிராகிள் ட்ரீ’ என்ற நிறுவனம். முருங்கைக் கீரை, முருங்கைக் காய், விதைகளை நேரடியாகச் சமையலில் சேர்த்துக்கொள்ளாதவர்கள், சாப்பிட மறுக்கும் குழந்தைகள் ஆகியோர் அதை வேறு வகையில் பயன்படுத்தும் வகையில் முருங்கையிலிருந்து 32 பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்திவரும் ‘மிராகிள் ட்ரீ’ சி.இ.ஓ சரவணக்குமரனுடன் பேசினோம். “1992-ல் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்துமுடித்தவுடன் சண்டிகாரிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் மதுரையை விட்டுக் கிளம்பினேன். அதன்பின் நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் பணியாற்றிவிட்டு, 2001-ல் மதுரை திரும்பினேன். வேலை செய்த இடங்களில் கிடைத்த அனுபவம் சொந்த ஊரில் சொந்தத் தொழில் செய்ய காரணமாக அமைந்தது. என்னதான் இன்ஜினீயரிங் படித்திருந்தாலும் காலம் காலமாக முன்னோர் செய்து வந்த விவசாயத்தை லாபகரமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. முதுகலை பட்டம் பெற்ற என் மனைவிக்கும் விவசாயத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. விவசாயத்தில் இறங்கலாம் என முடிவு செய்தபோது, மதுரை மாவட்டத்தில் விவசாயம் செய்து பெரிய லாபம் சம்பாதிக்க முடியாது என்று சிலர் சொன்னபோது கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் தொடர்பு ஏற்பட்டது.

கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா உள்பட அனைத்துநாடுகளையும் சீனா முந்தும்! அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்

maalaimalar :சர்வதேச அளவில் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகின்றது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை விட அதிகமான இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியின் (IMF) தரவுகளைப் பயன்படுத்தி ப்ளூம்பெர்க் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, சீனாவிலிருந்து வரும் உலகளாவிய வளர்ச்சியின் விகிதம் 2021 இல் 26.8 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 27.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் படி, இந்த ஆண்டு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக சுருங்கும் என கணித்துள்ளது. அடுத்த ஆண்டு, இது 5.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சீனா 8.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது. அமெரிக்கா 3.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியின் 11.6 சதவிகிதத்தை வாங்கும் திறன் சமத்துவ அடிப்படையில் கொண்டுள்ளது.

கவுதம் சிகாமணியின் ரூ8.60 கோடி சொத்துக்கள் முடக்கம்.. கள்ளக்குறிச்சி திமுக எம்.பி

tamil.oneindia.com : சென்னை: கள்ளக்குறிச்சி திமுக எம்.பி கவுதம் சிகாமணியின் ரூ8.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை: அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது, அமலாக்கத்துறை எம்பி கவுதம் சிகாமணி திமுகவின் மூத்த நிர்வாகியான பொன்முடியின் மகன் ஆவார். ரிசர்வ் விதிகளை மீறி முதலீடு செய்த புகாரில் கவுதம சிகாமணி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 2008ம் ஆண்டு, கவுதம் சிகாமணி, ரூ.41,57,225 மதிப்புள்ள முதலீடுகளை வெளிநாட்டில் மேற்கொண்டு 2,45,000 பங்குகளை, ஜகார்த்தாவின், பிடி எக்செல் மெகின்டோ நிறுவனத்திடம் வாங்கியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் யுனிவர்சல் பிசினஸ் வென்சர்ஸ் நிறுவனத்தில் ரூ.2286924 மதிப்புள்ள பங்குகளை பெற்றுள்ளார். இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெறவில்லை. இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5% உள் ஒதுக்கீடு: கிராமப்புற மாணவர்களை எண்ணி கண்கலங்கிய நீதிபதி!

7.5% உள் ஒதுக்கீடு: கிராமப்புற மாணவர்களை எண்ணி  கண்கலங்கிய நீதிபதி!
Add caption
  minnambalam : அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித  உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்  கிளை நீதிபதி  கிருபாகரன், கிராமப்புற மாணவர்களின் நிலையை எண்ணி கண் கலங்கியுள்ளார்.  நடப்பு கல்வியாண்டு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, செப்டம்பர் 13ஆம் தேதி  நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று (அக்டோபர் 16) மாலை வெளியாகவுள்ளது. இதனிடையே தமிழகச் சட்டமன்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அமலுக்கு வரும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வெற்றிவேல் படத் திறப்பு: விம்மியழுத தினகரன்

 வெற்றிவேல் படத் திறப்பு:  விம்மியழுத தினகரன்

minnambalam : அமமுக பொருளாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து நேற்று (அக்டோபர் 15) காலமானார்.    60 வயதான வெற்றிவேல் அமமுகவுக்காக துடிப்புடன் செயல்பட்டவர். தினகரனுக்கும் பல நிர்வாகிகளுக்கும் பாலமாக இருந்த வெற்றிவேலின் மரணச் செய்தி அக்டோபர் 15 ஆம் தேதி மாலை தினகரனுக்கு மருத்துவமனையில் இருந்து தெரியப்படுத்தப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார் தினகரன்.

நீட் தேர்வு முடிவு வெளியீடு: முடங்கிய இணையதளம்!

நீட் தேர்வு முடிவு வெளியீடு: முடங்கிய இணையதளம்!
Add caption
minnambalam : 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியது. அதனால் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய தேர்வு கொரோனா பாதிப்பு எதிரொலியாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு எழுதினர். நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தனது இணையதள பக்கம் மூலம் தெரிவித்திருந்தது.

ஈழத்தமிழருக்கும் நன்மை செய்யவில்லை. தமிழக அரசியலையும் சீரழித்துவிட்டது. 25 ஆண்டுகால நிதர்சனம்


  LR Jagadheesan
: மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,1991 முதல் 1996 வரையில் நீங்கள் சமூகநீதிகாத்த வீராங்கனை பட்டம் கொடுத்து
உச்சிமோந்து பாராட்டிய ஜெயலலிதா விடுதலைப்புலிகள் குறித்தும் பிரபாகரன் குறித்தும் ஈழபோராட்டம் குறித்தும் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் பேசியதைவிடவா முத்தையா முரளிதரன் ஈழபோராட்டம், விடுதலைப்புலிகள், பிரபாகரன் குறித்தெல்லாம் மோசமாகவும் கேவலமாகவும் பேசிவிட்டார்? ராஜீவ் கொலைவழக்கின் விசாரணை, அதில் கைதானவர்களை ஜெயலலிதா அரசு கையாண்டவிதம், ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசு கொடுத்திருந்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பறித்ததோடு அவர்களின் முகாம்களை திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றி சித்திரவதை செய்த கொடுங்கோலி ஜெயலலிதாவை நீங்கள் அந்த காலகட்டத்தில் ஆதரிக்கலாம் என்றால் மலையக இந்திய வம்சாவளித்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று இன்றுவரை வார்த்தைக்கு வார்த்தை வன்மம் கக்கி ஒதுக்கிவைத்து இழிவுசெய்த ஜாதிமேட்டிமைத்தனத்திமிர் மிக்க யாழ்மைய வெள்ளாள ஆயுதபோராட்டத்தை அதே மூர்க்கத்தோடு வெறுக்கும் முரளிதரனை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ உங்களுக்கு என்ன் தார்மீக உரிமை இருக்கிறது? திராவிடர் இயக்கம் பெரியாரியம் இரண்டின் அடிப்படையும் அறிவுநாணயம். ஈழத்தமிழர் விவகாரத்தில் திராவிடர் இயக்கமும் பெரியாரியர்களும் அதை தொடர்ந்து காவுகொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். தயவுசெய்து இனியும் இதை செய்யாதீர்கள்.

கிண்டில் திமுக, எழுத்தாளர் திமுக, Tvதிமுக, இண்டலெக்ட்சுவல் திமுக, இதழியல் திமுக, திமுக பதிவர் திமுக, பாலோயர் திமுக என பிரிந்து

திமுக என்பதே ஒரு குடும்பம், திமுக குடும்பக்கட்சி என்பதை மறந்துவிட்டு பயணிக்கின்றோமா? கிண்டில் திமுக, எழுத்தாளர் திமுக, Tvதிமுக, இண்டலெக்ட்சுவல் திமுக, இதழியல் திமுக, திமுக பதிவர் திமுக, பாலோயர் திமுக என பிரிந்து கிடப்பதை யாரும் மறுக்க முடியாது. சிலரை தன் டைம்லைனுக்கு வெளியே பார்க்கவே முடியல 

Narasimman Naresh ; · இப்படி இருந்த திமுக இணையம் எப்படி ஆகிவிட்டது? வருத்தத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு. சமூகநீதி சார்ந்த, மாநில சுயாட்சி சார்ந்த பொதுப்பிரச்சனைகள் பல இருக்கும் போது இதை எழுதனுமா என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. அப்பவே அவசரப்படாமல் கொஞ்சமா சிந்தனைக்கு உட்படுத்தி இன்றைக்கு பதிவு செய்றேன் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படம் சொல்லும் விசயம் என்னவெனில்

கோவையில் ஒரு உடன்பிறப்புக்கு பிரச்சனை என்றால் சென்னை அறிவாலயம் வரை அதை கொண்டு போய் சேர்த்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் இணைய உடன்பிறப்புகள். ஆம் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா உடல்நிலை குறித்து எழுதினால் அப்பகுதி அதிமுகவில் புகார் கொடுத்து திமுகவினரை கைது செய்த காரணமாயினர். அந்த நிலையில் ஒரு குழு அமைத்து தளபதி அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனையின் படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து, அப்படி கைது செய்யமாட்டோம் என்ற உத்திரவாதத்தை பெற்றோம்.

ரஜனி வெறும் 250 சதுர அடியில் இவ்வளவு பெரிய கட்டிடத்தை .. Rajni's 250 sq ft Ragavendra Hall

Rajni's 250 sq ft Ragavendra Hall
 Shahjahan R  : · சொத்துவரி மர்மங்கள் லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண

மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார். பொச்சில் எச்சில் துப்பி உதைத்து அனுப்பாத குறையாக, இத்தோட ஓடிப்போயிடு... இல்லேன்னா பைன் போட்டுடுவேன் என்று நீதிமன்றம் விரட்டி விட்டது. இது எல்லாருக்கும் தெரிந்த கதை. அவர் கேட்டதில் என்ன தவறு? ஆம்னி பஸ்காரர்களும்கூட வரி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? ரஜனிக்கு சொத்துவரி தள்ளுபடி அல்லது சலுகை கொடுத்தால், அது மற்ற எல்லாருக்கும்கூட தள்ளுபடி கிடைக்க பயன் தருமே? இப்படியெல்லாம் சில கேள்விகள்.
கேள்வி கேட்பவர்களில் பலர் அப்பாவிகள். சிலர் குழப்பவாதிகள்.
அது இருக்கட்டும்.
இந்த வாதம் ஏன் செல்லாது என்பதை எளிமையான மொழியில் பார்ப்போம்.
சொத்துவரி என்பது வேறு, வருமான வரி அல்லது சேவை வரி என்பது வேறு.

ஹாத்ரஸ் வழக்கு.. இந்திய காவல் துறையில் ஜாதீய பாகுபாடு உள்ளது .. தலித்துகள் காவல் துறையை அச்சத்துடனேயே

சர்வபிரியா சங்வான் பிபிசி செய்தியாளர் ; காவல்துறை அதிகாரி தனது ஜூனியரிடம், 'ஏன் இன்னும் எஃப்.ஐ.ஆர் எழுதவில்லை?'என்று கேட்கிறார். "சார், கேஸ் அவ்வளவு சீரியஸாகத் தெரியவில்லை" "எப்போது சீரியஸ் என்று நினைக்கிறீர்கள்?" "இந்த நபர்கள் பொய்யான வழக்குகளைப் எப்போதும் பதிவு செய்வார்கள். ஜனவரி மாதத்தில், அவர்களின் ஒரு சிறுவன் ஓடிவிட்டான். அவர்களின் வேண்டுகோளின் பேரில், கடத்தல் தொடர்பான எஃப்.ஐ.ஆர் எழுதப்பட்டது. 'இந்த மக்கள்' முழு மாதமும் ….." காவல்துறை அதிகாரி கோபமாக கேட்கிறார், "எந்த மக்கள்?" அதிகாரி திட்டுவதைக் கேட்டு, ஜூனியர் போலீஸ்காரர் உடன்படுகிறார். ஆனால், 'ஆர்டிகள் -15' படத்தின் இந்த காட்சி பலவீனமான பிரிவு மக்களிடம் காவல்துறையினர் நடந்துகொள்ளும் விதத்தைக் காட்டுகிறது. சமூகத்தில் சாதிவாதத்தின் உண்மை
ஹாத்ரஸ்

எந்தவொரு இன வன்முறையிலும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை போலீசார் பதிவுசெய்வதில்லை. விசாரணை சரியாக நடைபெறுவதில்லை, போதுமான ஆதாரங்களை சேகரிப்பதில்லை, இறுதியாக, முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். 

சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக சமூக வலை....

ilakkiyaa :நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் இவ்வாண்டு இறுதிக்குள் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

அந்தவகையில் சிம்பு திருமணம் செய்யவுள்ள மணமகள் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளிவரும் வேளையில் அதனை அவரது தந்தை டி ராஜேந்தர் மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை நேற்று டி ராஜேந்தர் சந்தித்தார். இதன் போது செய்தியாளர்கள் சிம்புவுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து வினவியபோது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டி ராஜேந்தர் தண்ணீரை பருகியபடி அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கிவிட்டார். சிம்புவின் திருமணம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே அவர் யாரை திருமணம் செய்கிறார் என்பது தெரிய வரும் என்பதும் அதுவரை வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்துமே வதந்திகளாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

எஸ்ஆர்எம், எம்ஜிஎம்: கூடுதல் கட்டணம் - கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து!

minnambalam :உலகமே கொரோனா வைரசிலிருந்து மீண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் வசூலிக்கப்படுவது கடந்த மே மாதத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. கொரோனா பெயரைச் சொல்லி, பிபிஇ கிட், ஐசியு வார்டு, அட்மிஷன், மருந்து செலவு என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக ஒரு சில தனியார் மருத்துவமனைகள் கொள்ளை கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. எனவே அதிகளவு கட்டணத்தை வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு, கொரோனா நோயாளிகளில் லேசான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7500 மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் இதனை மீறி அதிகளவு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலித்து வந்தன. இதுகுறித்து மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்குப் புகார்கள் சென்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை தரப்பில், நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து 27 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

தினத்தந்தி :புதுடெல்லி, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

வியாழன், 15 அக்டோபர், 2020

முரளி முற்றிலும் நம்பிக்கை இழந்து செய்வதறியாது அவமானப்பட்டு நின்றார். flashback

Don Ashok -Ashok.R : · ரோஹித் தாமோதரன் என்கிற சென்னையைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத கிரிக்கெட் பிளேயர் ஒருவர் 2015ல் இலங்கை கிரிக்கெட்

கிளப்களில் ஒன்றான கல்லி கிளப்பில் விளையாடப் போய்விட்டார். காரணம், நன்றாக விளையாடும் அவரை விட்டுவிட்டு பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஒரு பார்ப்பன பிளேயரை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தேர்வு செய்ததால். இப்படி எத்தனையோ ஆயிரம் வீரர்களின் கனவுகள் பூணூலின்மையால் தமிழ்நாட்டில் கலைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் ஜீவா எனும் படத்தில் கூட பார்த்தீர்கள். நிற்க. 1996 உலகக்கோப்பை பார்த்தவர்களுக்கு இலங்கை அணி கேப்டன் அர்ஜூனா ரணதுங்காவை நன்றாக நினைவிருக்கும்.
1999ல் ஆஸ்திரேலியாவில் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் மேட்சிலும் அவர்தான் கேப்டன். அதேநேரம், ஏற்கனவே தன்மேல் அம்பயர்கள் இருவரால் சுமத்தப்பட்ட "பந்தை எறிகிறார்" என்ற பழியில் இருந்து மீண்டு முத்தையா முரளீதரன் ஃபார்முக்கு வந்திருந்த காலம் அது. உடலெங்கும் பல கருவிகளை மாட்டி, அறிவியல் சோதனைகள் பலவற்றுக்கு தன்னை உட்படுத்தி, தன்னை நிரூபித்துவிட்டு மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார். அவ்வளவு அவமானங்களைத் தாண்டி அவர் மீண்டு வந்ததே பெரிய விஷயம். இந்த மேட்சிலும் மீண்டும் அதே அம்பயர்களால் அதே பிரச்சினை வெடித்தது. முரளிதரன் பந்துவீச, 'No Ball' என்றார்கள் அம்பயர்கள். முரளி முற்றிலும் நம்பிக்கை இழந்து செய்வதறியாது அவமானப்பட்டு நின்றார்.

கை பெருவிரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டால் எய்ட்ஸ் வராது? டான் அசோக்

டான் அசோக் : கேள்வி: ஹீலர் பாஸ்கர், செந்தமிழன் போன்றவர்கள் பேசுவதை ஒருநிமிடம் கூட கேட்கமுடியவில்லை. அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. இந்த அபத்தத்தை எப்படி மக்கள் நம்புகிறார்கள்?

பதில்: மக்களின் உளவியல் மிகவும் சாதாரணமானது. கை பெருவிரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டால் எய்ட்ஸ் வராது எனச் சொன்னால் நிறைய பேர் நம்பி அப்படியே செய்வார்கள். ஏனெனில் ஆணுறையை மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டுவதை விடவும் கட்டைவிரலில் மாட்டுவது எளிது.
மக்கள் பின்பற்றுவதற்கு கடினமான சரியான உண்மையைவிடவும், பின்பற்ற அதிக உழைப்பு தேவைப்படாத எளிமையான பொய்யை நம்பும் மனநிலை உடையவர்கள். ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக அதைவிட கடினமான விஷயங்களை முன்வைத்தால் ஒருபயல் பின்பற்ற மாட்டான். அதனால்தான் இந்த ஹீலர்கள் உயிர்வாங்கும் பெரிய நோய்களுக்கு கூட மிக மிக எளிமையான தீர்வுகளாக கொடுப்பார்கள். கேன்சர் என்றால் கூட காலேல ரெண்டு ஸ்பூன் பூண்டை மெனறு தின்னுங்கள் என்பார்கள்.

முத்தையா முரளிதரன் ஒரு எச்சிலா? கவிஞர் தாமரையின் வாக்கொழுப்பு ! பார்ப்பானுக்கு பாதசேவை.. சூத்திரனுக்கு சாபம் தமிழ்தேசீய தற்குறி அரசியல்!

Jagadeesan LR : எச்சிலாவது உணவு செறிக்க உதவும் என்பதை இந்த சாக்கடைக்கு யாராவது சொன்னால் தேவலாம். 

இந்திய இராணுவம் இலங்கை சென்று பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச்சொல்லி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம்போட்ட ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று வாய்கூசாமல் வாழ்த்துப்பா பாடிய வஞ்சகியெல்லாம் வாய்மை, அறம், முறம் குறித்து ஊருக்குப் பாடம் எடுக்கலாமா? 

பார்ப்பன ர்ப்பனத்திற்கு  பாதசேவை; சூத்திரனுக்கு சாபம். இதுதானே இதுகளின் தமிழ்தேசீய தற்குறி அரசியல்?         அடிப்படையில் ஆழ்மன ஜாதியத்திமிர்  தானே இப்படி அரசியலில் வாய்கொழுப்பாய் வடிகிறது? இதுகளின் இதயதெய்வம் படியளந்த பெருமாட்டியின் வாரிசுகளின் ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஆர் எஸ் எஸ் ஆக்ரமித்து அழித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக ஒரு வார்த்தை சொல்ல வக்கில்லை. 

திராவிடர் கழகத்தின் பாசிச மாயை! ஆசிரியர் வீரமணியின் (புலி மாயை) ஆரிய மாயை!


 Kalai Selvi
: · இதைவிட கேவலம் வேறெதுவும் இல்ல இன்னமும் எத்தனை
நாளைக்கு இப்படி ? மாந்தநேயர் மானுட போராளி தந்தை பெரியாரை தொலைத்து விட்டு இந்திய ராவிடம் தன்னை அடகு வைத்து விட்டு தமிழ்நாட்டிற்கு வந்த பாசிச பிரபாகரனுக்கு வேல பார்த்து தமிழ்நாட்டையும் 50 வருடம் பின்னுக்கு தள்ளியது போதாதா? திராவிடத்தை ஏற்காத புலம்பெயர் பிச்ச காசில், பிச்ச காசுக்காக கூவுகிற நாதாரி RSS ன் கருப்பு சங்கி மங்குனி 18க்கு பெரியார் விருது கொடுத்து பெரியாரை கேவலப்படுத்தியதும் போதாதா ? புலிவால் பிடிக்காமல் இந்தியா முழுமைக்கு பெரியாரை இந்திய மொழிகளில் கொண்டு சென்றிருந்தால் RSS இப்படி வளர்ந்திருக்க முடியுமா?

உலகிலேயே சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்த கரூர் மாணவர்கள் - 73 நாடுகளில் 25 ஆயிரம் மாணவர்கள்.. நாசா தேர்வு செய்தது

maalaimalar :உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். உலகிலேயே சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்து கரூர் மாணவர்கள் அசத்தல் - நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது
செயற்கைகோளை தயாரித்த கல்லூரி மாணவர்கள். மாணவர்கள் கண்டுபிடித்த சிறிய அளவிலான செயற்கை கோள். கரூர்: உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இந்த செயற்கைகோள், 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று தெரிகிறது. கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இடையே போட்டியை நடத்தி வருகிறது. இதில் தேர்வு பெறும் மாணவர்களின் செயற்கை கோளானது நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.  

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.. கொரோனா பாதிப்பு...

கொரோனா பாதிப்புக்கு உள்ளான அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்
Add caption
maalaimalar : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சென்னை: அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் செயல்பட்டு வந்தார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 6-ந்தேதி வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Mano Ganesan : முரளி எதிர்ப்பு பிரசாரத்தை இன்னமும் தூண்டி விட்டு, நான்தான் அதில் குளிர்காய வேண்டும்.

Mano Ganesan  :  கிரிகட்டர் முத்தையா முரளி..!  இந்த நொடியில் என்

மனதில்… (15/10/20) “கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார். முதலில், இப்பட திரைகதை, அரசியல் அல்ல என நான் அறிந்தேன். அதில் இலங்கை இனப்பிரச்சினை அரசியல் பேசி, கதையோட்டம் அமைய, ஒருபுறம் இந்திய அரசு சென்சாரும், மறுபுறம் தமிழக அரசியல் கட்சிகளும் விடாது. மேலும் அப்படி கதையமைத்து வம்பில் விழ தயாரிப்பாளர்களுக்கும் தேவை இராது. முரளியின் வீச்சுக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட, ஒருவித நிறவாதம் கலந்த எதிர்ப்பு, மற்றும் பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஆகியவை திரைகதையை சுவாரசியமாக்கும் என எண்ணுகிறேன்.

அதேவேளை முரளியின் தராதரத்துக்கு, அவர் எதோ ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் கப்டன் ஆகி இருக்க வேண்டும். ஆகவில்லை என்பதற்கு அவர் ஒரு தமிழர் என்பதுவே பிரதான காரணம் என நான் நினைக்கிறேன். இதுவும் திரைகதையில் இடம்பெற வேண்டும். சொல்வார்களா என தெரியவில்லை.
அதேவேளை முரளியின், ஆஸ்திரேலிய பந்து வீச்சு கஷ்ட காலத்தின் போது அவருக்கு முதல் துணையாக இருந்தவர், அன்றைய இலங்கை அணி கப்டன் அர்ஜுன ரணதுங்க.
என் நண்பரும், இன்றைய எதிரணி அரசியல்வாதியுமான அர்ஜுனா, ஒரு சிங்கள பெளத்தர். சிங்களவராக என்பதை விட, ஒரு இலங்கையராக, ஆஸ்திரேலியே மைதானத்திலேயே, அவர் முரளிக்கு பக்கத்துணையாக தன்னை முரட்டுத்தனமாக அடையாளப்படுத்தினார். இதுவும் திரைகதையில் இடம்பெற வேண்டும்.

கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் இரண்டாவது அலை - தடுமாறும் நாடுகள்

BBC : ,கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஸ்பெயினின் வடகிழக்கு பிராந்தியமான கேட்டலோனியாவில் வியாழக்கிழமை முதல் மதுபான விடுதிகள், உணவகங்கள் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூடும் பொது இடங்களில் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெயினில் புதன்கிழமை நிலவரப்படி 8 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டில் பள்ளிகள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் பொதுமக்கள் கூடும் உணவகங்கள், தேனீரகங்கள் மூடப்பட்டுள்ளன கொரோனாEPA

பபிரான்ஸ் அதிபர் அவசர ஆலோசனை:  ிரான்ஸில் புதிய கட்டுப்பாடு நடவடிக்கையை அறிவிப்பது குறித்து அதிபர் எமானுவேல் மக்ரோங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறையை அவர் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸில் புதன்கிழமை நிலவரப்படி 8 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

பாகிஸ்தான் ரூபாய் தாள்களை அளவுக்கு அதிகமாக - என்ன நடக்கிறது?

பாகிஸ்தான் நோட்டுகள்
BBC தன்வீர் மாலிக் - கராச்சியிலிருந்து : சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தானில் புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2020 ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாய் தாள்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஒரு நிதியாண்டில் ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 1.1 டிரில்லியன் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைக் கண்காணிப்பவர்களின் கூற்றுப்படி, இந்த வளர்ச்சி அசாதாரணமானது மற்றும் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. பணத் தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால், பழைய தாள்களை அரசாங்கம் புதிய தாள்களுடன் மாற்றியுள்ளது என்று அர்த்தம். மாற்றப்பட்டவை தவிரவும், ஏராளமான புதிய ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

ல்.கே.ஜி-யிலும் தலையிடும் மத்திய அரசு: உங்கள் குழந்தையின் கல்வி என்னாகும்?

 எல்.கே.ஜி-யிலும் தலையிடும் மத்திய அரசு:  உங்கள் குழந்தையின் கல்வி என்னாகும்?

minnambalam : புதிய கல்விக் கொள்கை பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் இன்னும் முடிவுறாத நிலையில், அதன் அடிப்படையில் மூன்று வயது முதல் எட்டு வயது வரையிலான மழலைக் கல்வி முறையிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை முடிவெடுத்து ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதைத் தெரிவித்துள்ளார். 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளிடையே அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக ஜவடேகர் கூறினார். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தனிஷ்க் நகை விளம்பரம் காவிக்கும்பலின் மிரட்டல்

Diwa : · இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தன்னுடைய தனிஷ்க் நகைக்கான விளம்பரத்தை காவிக்கும்பலின் மிரட்டலால் திரும்ப பெற உள்ளது.அப்படி என்ன தவறு அந்த விளம்பரத்தில்? இஸ்லாமிய வீட்டிற்கு மருமகளாக சென்ற பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சியை அந்த இரு குடும்பத்தினரும் சேர்ந்து நடத்துவதுதான் விளம்பரத்தின் கருப்பொருள். மதவெறி பிடித்த கும்பலுக்கு இது ஒன்று போதாதா? மக்கள் ஒற்றுமையாய் இருந்துவிட்டால் கலவர கும்பலின் பிழைப்பில் மண் விழுந்து விடாதா? இது லவ் ஜிஹாதை ஆதரிக்கிறது என்று கலவரம் செய்யும் முஸ்தீபுகளில் இறங்க ஆரம்பித்தது.
விபரீதத்தை உணர்ந்த டாடா குழுமம் விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.எவ்வளவு கேடு கெட்ட நிலைக்கு இந்தியாவை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.தொடர்ந்து பொய் பிரச்சாரங்களால் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து அதை அறுவடை செய்துதான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.

பாஜக மக்களுக்கு பதில் கூறவேண்டிய 14 கேள்விகள்!

Selvakumar Ratnasamy : · பாஜக மக்களுக்கு பதில் கூறவேண்டிய  14 கேள்விகள்.   1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

2. இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3. இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4. இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?
5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புதன், 14 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்! நீட்டுக்கும் அண்ணா பல்கலைக்கெல்லாம் பொங்காத .. 800 க்கு பொங்கி விஜய் சேதுபதியை ..

Kathir RS : · நீட் பிரச்சனைக்கு பொங்காத நாய்கள்.. சாத்தான் குளம் பிரச்சனைக்கு பொங்காத நாய்கள் சாதிய இழிவுகள் வன்புணர்வுகள் இவற்றுக்கு பொங்காத நாய்கள் அண்ணா பல்கலைக்கழகப் பிரச்சனைக்கு பொங்காத நாய்கள்.. 800 க்கு பொங்கி விஜய் சேதுபதியை மிரட்டுகின்றன..

Radha Manohar :முத்தையா முரளிதரன் மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒரு அடையாள சின்னம் அவர்.      முத்தையா முரளிதரன் புலிகளின் அத்தனை தில்லுமுல்லுகளையும் அறிந்திருந்தார் . அவர் மட்டுமல்ல வேறு எந்த மலையகத்தவர்களையும் கேட்டு பாருங்கள் கூறுவார்கள் கதை கதையாக .

மலையகம் என்றாலே தீண்டத்தகாதவர்கள் போல கருதும் வடக்கு மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இந்த முத்தையா முரளிதரன் எதிர்ப்பு என்பதை பார்க்கவேண்டி இருக்கிறது.       இதுவரை எவ்வளவு மலையக இளைஞர்கள் புலிகளால் கட்டாயமாக பிடித்துகொண்டுபோய் கொலைக்கு கொடுக்கப்பட்டவர்கள் என்ற கணக்கு உண்டா?           வடக்கு புலிகளால் மலையக அப்பாவி இளைஞர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டிருந்தும் இதுவரை இதைப்பற்றி புலி இயக்கமோ அதன் ஆதரவாளர்களோ மூச்சு விடுவதில்லை .     மலையகத்தவர்களும் மௌனமாகவே கண்ணீர் விட்டனர் . ஏனெனில் அவர்களின் உறவினர்கள் பலர் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வாழ்கின்றனர் . 

நீதிபதி எச்சரிக்கை- சொத்து வரி நோட்டீசுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி

.maalaimalar.comசென்னை: சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண
மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிடவேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது என அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டா

கன்னியாகுமரி தொகுதிக்கு தேர்தல் எப்போது?. பிப்ரவரி மாதத்திற்குள்..

minnambalm : கன்னியாகுமரி தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தொழிலதிபருமான ஹெச்.வசந்தகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், கன்னியாகுமரி இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 14) செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு, “விதிப்படி ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வி.வி.பேட் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

கொங்கு ஆய்வு: திமுகவில் மாற்றம் வருமா?

 கொங்கு  ஆய்வு: திமுகவில் மாற்றம் வருமா?

minnambalalam :கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற அக்டோபர் 21ஆம் தேதி அறிவாலயத்தில் கூட்டியிருக்கிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

இன்று (அக்டோபர் 14) திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்....   "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் தொடர்புடைய பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.`  இப்படி ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது என்பது பகுதி திமுக மாவட்ட செயலாளர்கள் யாருக்கும் அறிவிப்பு வரும் வரை தெரியவில்லை. அதனால், 21ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலாளர்கள் இப்போது அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.

சேலம் அண்ணணை ஐஸ் பெட்டியில் அடைத்து வைத்து உயிர் பிரிய காத்திருந்த தம்பி!!

veerakesari : சேலம் மாவட்டத்தில் தம்பி உயிருடன் இருந்த அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டியில் அண்ணன்,சற்று மனநிலை பாதித்த தம்பி தங்கை மகள்கள் ஆகிய நால்வரும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதையொட்டி அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள இறந்தவர்களை குளிர்பதன பெட்டியில் வைக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுத்து உறவினர் ஒருவர் இறந்து விட்டார் எனவே குளிர்பதன பெட்டி (பிரீசர் பொக்ஸ்) வேண்டுமென்று அவரது முகவரியை தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் தம்பி வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இறந்தவர்களின் உடலை வைக்கக்கூடிய ஒரு குளிர்பதன பெட்டியை கொண்டு வந்தனர். அப்போது அங்கு இறந்தவரின் உடல் இல்லாததை கண்டு அங்கிருந்த அவரிடம் கேட்டுள்ளனர்.

யானை மீது ஏறி யோகாசனம்….கீழே விழுந்த பாபா ராம்தேவ்… வீடியோ ...தோழர் யானைக்கு வாழ்த்துக்கள்

  வெப்துனியா": :சமீபத்தில் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து பதஞ்சலியி தயாராகியுள்ளதாகக் கூறி விளம்பரம் செய்த யோகாகுரு ராம் தேவ் நிறுவனத்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. இந்நிலையில் இன்று, உத்தரபிரதேசம் மதுராவில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி தனது சீடர்களுக்கு பிராணயாமம் செய்து கொண்டிருந்த யோகா குரு ராம் தேவ், யானை அசையும்போது, கீழே தவறி விழுந்தார். மேலும் சில நாட்களுக்கு முன் யோகா குரு ராம் தேவ் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, சாலையில் விழுந்தார். இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்.. கொரோனோ தொற்றால்..

வெற்றிவேல்
Manikandaprabu S | Samayam  : கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடமாக உள்ளார்கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனவைன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொரோனா முழுவதுமாக குறைந்து விட்டதாக மக்கள் எண்ணுவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு இரண்டு நாள் அவகாசம்!

 ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு இரண்டு நாள் அவகாசம்!

minnambalam :மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்க வேண்டிய 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக இட ஒதுக்கீட்டை வழங்க கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதை விசாரித்து ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.  கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இட ஒதுக்கீடு தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

மிஷன் ‘K’: K என்றால் KUSHBOO அல்ல ‘KOLLYWOOD’!

minnampalam : 2020ஆம் ஆண்டின் டிரெண்டிங்கில் கொரோனாவைத் தவிர்த்து எதை சேர்ப்பீர்கள் என்று கேட்டால், பாஜக கட்சியில் இணைந்த தமிழக பிரபலங்கள் என்பதைக் கண்டிப்பாகக் கூறலாம். அந்த அளவுக்கு பாஜகவில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதிலும், தமிழகத்தில் சீரியஸாக இந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் குஷ்பு இணைவதற்கு முன்னரே பரபரப்பைக் கிளப்பிய செய்தி ‘விஷால் பாஜகவில் இணைகிறார்’ என்பதுதான்.

மிஷன் ‘K’: K என்றால் KUSHBOO அல்ல ‘KOLLYWOOD’!பாஜகவின் தேசிய தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைய அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார் விஷால் என்ற செய்தியை, ‘நாங்கள் யாரிடமும் அப்பாயின்ட்மென்ட் கேட்கவில்லை’ என்று விஷால் தரப்பு மறுத்தது. விஷால் இணைப்புத் தகவலை வெளியிட்ட பலரும், ‘எங்கள் தகவல் உண்மையாகும் காலம் வரும் காத்திருந்து பாருங்கள்’ என்று அப்போது கூறினர். அதற்கான காலம் வந்துவிட்டதாக இப்போது கூறுகின்றனர். அது என்னவென்று விசாரித்தபோது... “தமிழக பாஜகவில் விஷால் சேர்வது கிட்டத்தட்ட முடிவான ஒன்று. பாஜகவின் தலைவர்களைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்கவில்லை என்று விஷால் தரப்பு சொன்னதே தவிர, பாஜகவில் சேரமாட்டார் விஷால் என்று கூறவில்லை. 

சீனா குற்றச்சாட்டு : லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது’ - இருதரப்பு பேச்சுவார்த்தை முடிந்த நிலையில்

thinathanthi : லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார். 

பீஜிங், இந்திய ராணுவத்துக்கும், சீன படைக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டுகோடு பகுதியில், இந்திய எல்லைக்குட்பட்ட சுசுல் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மதியம் இரு தரப்பு ராணுவத்துக்கு இடையேயான 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தை 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் பல்வேறு மோதல் பகுதிகளில் இருந்தும் இரு தரப்பு படைகளை விலக்கிக்கொள்வதற்கான வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நேரடி தபால்காரர் தேர்வில் தேர்வானவர்கள் அனைவரும் வட இந்தியர்கள்.

தினகரன் : தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் மறைமுகமாக வட இந்தியர்களை கொண்டுவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து வருகிறோம். 2016ம் ஆண்டு நேரடி தபால்காரர் நியமனம் நடந்தது. இதற்கான தேர்வில் தேர்வானவர்கள் அனைவரும் வட இந்தியர்கள். குறிப்பாக, அரியானா போன்ற மாநிலத்தில் இருப்பவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். தமிழ் படிக்க தெரியாதவர்கள் எப்படி தேர்வானார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. பெரும்பாலானோர் தமிழில் 25க்கு 23 மார்க் எடுத்திருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் இருப்பவர்கள் 19, 20 என மட்டுமே மார்க் எடுத்திருந்தார்கள். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களிடம் பேசினோம். அப்போது, அவர்களிடம் தமிழ் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என இந்தியில் பதில் அளித்தனர். பின்னர், எங்களின் சங்கம் கோவையில் உண்ணாவிரதம் இருந்தோம். அஞ்சல் துறை இதில் தலையிட வேண்டும் என்று கூறினோம்.
ஆனால், அஞ்சல் துறை இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. எங்களுக்கு வேறு வழி இல்லாமல் இயக்குனரகத்தில் புகார் அளித்தோம்.
அப்போது தான் இந்த தேர்வை கார்ப்பரேட் கம்பெனி ஒன்று நடத்தியது தெரியவந்தது.

தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் விழாவில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை

அறிஞர் அண்ணா :வீரத் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் - தமிழர் சமுதாயச் சீர்கேடு - (தமிழ்நாடு - பெயர் வைத்தல்). "தம்பி "நடு நிசி. தூக்கம் வரவில்லை, துக்கம் துளைக்கிறது ...பலகோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக் கூடியது அந்த வீரத் தியாக உள்ளம் என்று

தொடங்கி அண்ணா ஒரு இரங்கல் உரை எழுதுகிறார். யாருக்காக?? காங்கிரசு இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்குப் பெயர் சுட்ட வேண்டும் என்று கோரி உண்ணாதிருந்து உயிர்துறந்த சங்கரலிங்கனாரைப் பற்றித்தான் அண்ணா இப்படி எழுதினார். சங்கரலிங்கனாரின் போராட்டம் இறுதிக்கட்டத்தை அடையும் நிலையில் விருது நகரில் அவர் வசித்த ஓலைக்குடிசைக்குச் சென்று காங்கிரஸ் கொடி பறந்த அந்த குடிசையில் இரண்டு மாதங்களாக உணவு உட்கொள்ள மறுத்து உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நிலையில் அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை சந்தித்த காட்சி அவரை எப்படி அலைக்கழித்தது என்பதை படிப்பவர்களின் மனமே பதறும் படியாக அண்ணா பதிவு செய்கிறார்.“அந்த தியாகியை, விருதுநகர் மாரியம்மன் கோயில் திடலில் ஒரு சிறு ஓலை கொத்து குடில் அமைத்த ஒரு கயிற்று கட்டிலின் மீது அவர் படுத்துக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலின் மீது காங்கிரஸ் கொடி பறந்து கொண்டிருந்தது. ...நடு நிசி. அங்கு நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர். ...... கயிற்றுக்கட்டிலின் மீது சுருண்டு படுத்திருந்த உருவம் தெரிந்தது…

சந்திரிகா,ரணில், பிரபாகரன்-எதிராளியை குறைத்து மதிப்பிட்டு ஏமாந்தவர்கள்! எல்லோரையும் முட்டாளாக்கி வெற்றி பெற்றவர் மஹிந்த ராஜபக்சதான்! Flashback

Mano Ganesan - மனோ
: · ரணிலின் சமாதானமும், சந்திரிகாவின் சமாதானமும்> 2003 ஆண்டில் பிரதமர் ரணிலின், ஆட்சியை பலவீனப்படுத்த ஜனாதிபதி சந்திரிகா, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகள் சிலவற்றை பறித்து எடுத்தார். அப்போது பிரதமர் ரணில் அமெரிக்கா போயிருந்தார். அவ்வேளையில் கொழும்பு அரசியல் சூடாக இருந்தது. ரணில்  தலைமையிலான எமது அரசின் முக்கியமான அமைச்சுக்களை சந்திரிகா அடாத்தாக பறித்துக்கொண்டதனால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. விமல் வீரவன்ச தலைமையில் ஜேவீபி சமாதானத்திற்கு எதிரான கடும் யுத்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. சந்திரிகாவின் கட்சிக்குள்ளேயே இருந்த மஹிந்த ராஜபக்ச, சந்திரிகாவை வீழ்த்தி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று, இரகசியமாக ஜேவீபியுடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். இவர்களின் இந்த கயிற்றை சாப்பிட்டுதான் சந்திரிகா ரணில் ஆட்சியின் மூன்று முக்கிய அமைச்சுக்களை பிடுங்கினார். இதன் தொடர்ச்சியாக தான் இன்னும் சில மாதங்களுக்கு பிறகு தனது ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்தார்.
பின்நாட்களில் பலமுறை என்னை சந்தித்த பொழுது, கடைசியாக கடந்த வருடம் கூட, தான் அந்நேரத்திலே விமல் வீரவன்சவின் கயிற்றை சாப்பிட்டு முட்டாள்தனமாக ரணிலின் ஆட்சியை கவிழ்த்து தவறு செய்து விட்டதாக சந்திரிகா ஒப்புக்கொண்டார். இல்லாவிட்டால் அடுத்து வரும் தேர்தல்களில் மகிந்த ஆட்சிக்கு வரும் சூழல் நாட்டிலே உருவாகி இருக்காது என்றும் சொன்னார்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

150 முதல் 200 இடங்களை வைத்து கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு ... ?

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: ஆட்சியை பிடிப்பது, முதல்வர் ஆகியே தீருவது என்ற குறிக்கோளுடன் உள்ளது திமுக.. அந்த வகையில் இந்த முறை தேர்தலில் மிக நிதானமான முடிவுகளை எடுத்து வருகிறது... அந்த வகையில் கூட்டணிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்குவது என்ற பேச்சுக்களும் மும்முரமாக எழுந்து வருகிறது. இந்த முறை பாமகவை விட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்குள் இழுக்க முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.. எப்படியும் திமுகவால் தனித்து போட்டியிட முடியாது.. 

எனவே,150 முதல் 200 சீட் என பெரும்பாலான இடங்களை வைத்து கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு பிரித்து தரலாம் என்ற ஐடியாவில் உள்ளது விசிக, மதிமுக நிலைமை தெரியவில்லை. அவர்களுக்கு சின்னம் ஒரு பிரச்சனையாக உள்ளது.. ஒருவேளை இவர்களுக்கு கூடுதல் சீட் கிடைக்காவிட்டால், அல்லது உதயசூரியன் சின்னம் என்று மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டால், வெளியில் இருந்து ஆதரவு தரும் நடவடிக்கையில் இறங்குவார்களா என தெரியவில்லை.. ஏனென்றால், இப்போதைக்கு இவர்களின் எம்பிக்கள் திமுகவில்தான் உள்ளனர்..அதனால் வேறு கட்சிக்கும் போக முடியாத நிலை உள்ளது. 

பட்டியலின முதியவரை காலில் விழச் செய்த ஆதிக்க சாதியினர்... கயத்தாறில் கொடூரம்!

kalaignarseithigal : தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சார்ந்தவர் பால்ராஜ் (55). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் ஆடு பக்கத்தில் ஆடு வைத்திருக்கும் சிவசங்கு (60) என்பவரின் ஆட்டு பட்டிக்கு சென்றிருக்கிறது.

உடனே சிவசங்கு அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை காலில் விழுந்து கும்மிட செய்துள்ளார். மேலும் இதனை வீடியோ எடுத்து அவர்களின் உறவினர்களின் உதவியோடு சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் ஆடு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவரின் ஆட்டு பட்டிக்கு சென்றதால் உரிமையாளரை காலில் விழுந்து கும்பிட செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தைகள் வேண்டாம்: ஸ்டாலினை வற்புறுத்தும் இருவர்! -ஏன்? ... ( துரைமுருகன், எ.வ. வேலு )

minnambalam "திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சொல்லியிருந்தார். திமுகவின் பொதுச் செயலாளர் வாயில் இருந்தே இந்த வார்த்தைகள் வந்ததால், கூட்டணியில் இருந்து போகும் கட்சிகள் எவை, கூட்டணிக்கு புதிதாக வர வாய்ப்புள்ள கட்சிகள் எவை என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலை குறித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் என இரு கட்சி வட்டாரங்களிலும் சில விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கக் கூடாது என்று திமுகவின் இரு முக்கிய புள்ளிகள் விரும்புவதாக தகவல்கள் கிடைக்கின்றன. அந்த இருவரில் முதலாமவர் பொதுச் செயலாளர் துரைமுருகன்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர ரொம்பவும் பிரயத்தனப்பட்டார் துரைமுருகன். பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூட்டணியை விட்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்தேதான் இந்த முயற்சியை மேற்கொண்டார் துரைமுருகன். ஆனால் அது நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமடையாமல் போயிற்று. அப்போது பொருளாளராக இருந்த துரைமுருகன், இப்போது பொதுச் செயலாளர் என்னும் கட்சியின் மிக முக்கிய உயர் பதவியில் இருக்கிறார்.

தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க மத்திய அரசு சதி?

hindutamil.in : புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி கூற, இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவிக்க இப்பிராந்தியத்தில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 

பிரெஞ்சு-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 1954ல் புதுச்சேரி பகுதிகளான தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி,காரைக்கால், ஆந்திரத்தை யொட்டியுள்ள ஏனாம், கேரளத்தை யொட்டியுள்ள மாஹே இந்தியாவில் இணைந்தன. ‘4 பிராந்தியங்கள் அடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும்’ என்று அப்போதைய பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார். கடந்த 1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்க நடவடிக்கையை தொடங்கினார். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் ஆதரவு தெரிவித்தார். இதை எதிர்த்து புதுச்சேரியில் கடும் போராட்டம் ஏற்பட்டது. அரசு அலுவலகங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டு 10 நாட்கள் வரைபோராட்டம் நீண்டது. வன்முறையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இணைப்பு முடிவை மத்திய அரசு கைவிட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. 

நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை - நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்

maalaimalar : சியோல்: வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ராணுவ அணி வகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த ராணுவ அணி வகுப்பின்போது ஹவாசோங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா. இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், எங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அதை நான் திருப்திகரமாக செய்ய தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதற்காக மிகவும் வருந்துகிறேன். 

கே.வி.தங்கபாலு , பாலகிருஷ்ணன் உடல் நிலை பாதிப்பு விரைவில் நலம் பெற விழைகிறேன்- ஸ்டாலின்!

kathiravan - toptamilnews.com : தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்விருவரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ’காங்கிரஸ் மூத்த தலைவர் நண்பர் கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதையும் அறிந்தேன். இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.

பாஜகவில் சேர வேண்டும் என்று விடாப்பிடியாக விரும்பியது குஷ்புதான்.. ஆர்எஸ்எஸ் சம்மதிக்கவில்லை.

வேண்டா வெறுப்பு.. முதல் நாளே பாஜக கொடுத்த ஷாக்.. அழையா வீட்டுக்கு விருந்தாளியாக போன குஷ்பு?
Veerakumar  tamil.oneindia.com :  சென்னை: வேண்டா வெறுப்பாகத்தான், குஷ்பு பாஜகவில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்று பரபரப்பாக பேசுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில். முதலில் திமுகவில் இருந்து வெளியேறவும்.. இப்போது காங்கிரஸில், கோபித்துக் கொள்ளவும், குஷ்புவுக்கு கொள்கை சார்ந்த எந்த முரணும் கிடையாது. இரு கட்சிகளுமே அவரது கொள்கைகளுக்கு ரொம்பவே ஒத்துப் போகக்கூடிய கட்சிகள்தான். ஆனாலும் இரு கட்சிகளையும் அவர் பிரிந்து செல்ல காரணம், பதவி போன்ற விஷயங்களில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதுதானே தவிர, கொள்கையில், அக்கட்சிகள் சமரசம் செய்து கொண்டன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது கிடையாது. 
காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - 
காங்கிரசில் இருந்து விலகுவதற்கும் இதுதான் காரணம். தேசிய அளவில் பிரபலமாக அறியப்படும் குஷ்பு, மாநில கட்சிகளில் ஐக்கியமாவதை விரும்பவில்லை. 

குஷ்பு வைத்த டிமாண்ட்.. ... தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பதவி

தாமோதரன் பிரகாஷ் nakkeeran : குஷ்பு விலகல் தொடர்பாக பா.ஜ.க.வில் நடைபெற்ற பேரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத்தொடங்கியுள்ளன. கடந்த மாதம் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளை அறிவித்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா, ஏற்கனவே தமிழக பாஜகவிற்கான பொறுப்பு வகித்த முரளிதரராவ் போன்றோர் இடம்பெறவில்லை. அதற்கு காரணம், குஷ்பு பா.ஜ.க.விற்கு வரப்போகிறார் என்கிற செய்திதான். ஒரு மாதத்திற்கு முன்பே குஷ்புவின் கணவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகனின் ஏற்பாட்டில் ஜெ.பி.நட்டாவை சந்தித்தார். அந்த சந்திப்பில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளராக இயங்கும் பூபேந்திரயாதவ், கர்நாடகாவில் அமைச்சராக இருக்கும் ரவியும் இருந்தார்கள். அந்த சந்திப்பு முடிந்தவுடன் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருக்கிறது என குஷ்பு ட்வீட் செய்தார். அதனை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தார்கள். ">உடனே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் குஷ்புவிடம் பேசினார். காங்கிரஸில் நல்ல பொறுப்பு வாங்கித்தருவதாக உறுதி அளித்தார். குஷ்பு பாஜகவில் சேரப்போகிறார் என செய்திகள் சிறகடித்து பறந்தது. வேணுகோபாலுடன் பேச்சுவார்த்தையில் இருந்ததால் குஷ்பு பாஜகவில் சேரும் செய்திகளை வன்மையாக மறுத்தார்.

BBC : குஷ்புவின் வருகை பா.ஜ.கவுக்கு உதவுமா? ஆய்வாளர்களின் பார்வை என்ன?

முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் : 8 மணி நேரங்களுக்கு முன்னர் திரைப்பட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். குஷ்புவின் இந்த முடிவு அவருக்கோ பாரதிய ஜனதா கட்சிக்கோ பலன் அளிக்குமா? 2007வாக்கில் தமிழ் இதழ் ஒன்றில் குஷ்புவின் பேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டி தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் விளக்கமளித்த குஷ்பு, தான் பேட்டியளித்ததை மறுக்கவோ, பின்வாங்கவோ செய்யாமல் தான் சொன்னதைத் தெளிவாகப் புரியவைக்க முயன்றார். அவரது கருத்துகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை உறுதியாகச் சந்தித்தார். திரைக்கலைஞரான குஷ்பு குறித்த பிம்பத்தை அந்த நிகழ்வு வெகுவாக மாற்றியது. தெளிவு, துணிச்சல், அரசியல் பார்வை ஆகியவை கொண்டவராக உருவெடுத்திருந்த குஷ்பு, 2010வாக்கில் தி.மு.கவில் இணைந்தார். அதற்குப் பிறகு காங்கிரஸ், இப்போது பா.ஜ.க என பத்தாண்டுகளுக்குள் 3வது கட்சிக்குத் தாவியிருக்கிறார் அவர்.

அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசோடு இணைக்கும் உரிமையைத் துணைவேந்தர்க்கு அளித்தது யார்?

    

 Asiriyar K Veeramani : · மாநில அரசின்கீழ் செயல்படும் அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசோடு இணைக்கும் உரிமையைத் துணைவேந்தர்க்கு அளித்தது யார்? சமூகநீதியைச் சிதைக்கத் திட்டமா? தமிழ்நாடு அரசு துணைப் போகக் கூடாது! உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்து 2019 டிசம்பர் 19 ஆம் தேதியன்றே ‘விடுதலை'யில் அறிக்கை வாயிலாக எச்சரித்து இருந்தோம்.2019 டிசம்பரிலேயே எச்சரித்தோம்! இந்தப் பல்கலைக் கழகத்தில் படித்த பலரும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்பட உலகப் புகழ்பெற்றவர்களாக ஒளிவீசுகிறார்கள். இந்த நிலையில், அண்ணா பெயரில் ஒளிரும் பல்கலைக் கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் - உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும் என்றும், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் ஓராயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் கூறி, அண்ணா பல்கலைக் கழகத்தை - மத்திய அரசு விழுங்கும் பம்மாத்தில் மயங்கி, தமிழ்நாடு அரசு பலியாகவேண்டாம் என்று அந்த அறிக்கையில் எச்சரித்து இருந்தோம்.

மாநில அரசிடம் நிதியை அளிக்கட்டும்!

திங்கள், 12 அக்டோபர், 2020

இரண்டாம் குத்து - கலையும் ஆபாசமும் ~ சினிமா இருள் அவ்வப்போது நம் வாழ்வைக் கவ்வுகிறது.

Karikalan R : · இரண்டாம் குத்து - கலையும் ஆபாசமும் ~ இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் தன் அடுத்தக் குத்தை ஆரம்பித்துவிட்டார். படத் தலைப்பு இரண்டாம் குத்தாம். இன்று பாரதிராஜா புலம்புகிறார். அவரும் ராதாவை கோடிட்ட இடங்களில் மலர்களால் நிரப்பியவர்தான்! என்ன! அது கலைநயத்தோடு இருந்தது. இ.அ.மு. கு டைரக்டரின், ஹரஹர மகாதேவகி படத்தை கடந்த ஆண்டு பார்த்தேன். ஹார்மோன்களில் ஸ்கூட்டி ஓட்டி இளையோரை தடுமாற வைத்த படம் இடைவேளையில் ஒரு டீன் ஏஜ் பையன் அவன் நண்பனிடம் 'டேய் மச்சான் படம் செமடா! திரிஷா இல்லன்னா நயன்தாராவ விட இன்னும் மேலடா!
ஒரே டபுள் மீனிங்! விசிலு அள்ளுதுடா! ' அலையில் பொங்கிக் கொண்டிருந்தான்.
இத்தகையவர்களை மீண்டும்
குறி வைக்கிறது இரண்டாம் குத்து!
சிகரெட் பிடித்து சூயிங்கம் மென்று திரும்புகிற பிள்ளைகளை யாரும் வீட்டுக்குள் சேர்க்காமல் வீதியில் நிறுத்திவிடுவதில்லை.
இன்றைய வணிகம் சூழ்ந்த வாழ்வு, பிள்ளைகளைகளைத் தடுமாற வைக்க எத்தனையோ வசீகர வலைகளை அலைபேசி, கணினி, தொலைக்
காட்சி, சினிமா வழியாக வீசிக்கொண்டே இருக்கிறது.
இடைவெளியில் பார்த்த இளைஞன் போலவே அவனது பதின் பருவத்தில் க.காவும் இருந்தான். எதிர்பால் உடலின் ரகசியத்தை அறிய அவன் செக்ஸ் படங்கள் ஓடிய தியேட்டர்களில்  நுழைந்திருக்கிறான்.

புதிய நகைக்கு ஒருவிலை பழைய நகைக்கு ஒருவிலை அது ஏன்?

Subha Chandrasekar : மிகத் தவறான தகவல் என்பதை, ஒரு நகைக்கடைக்காரனாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.     61/2 + 11/2 கி = 8கி என்பது 8125% தங்கம் ஆகும். ஆனால், இவர் குறிப்பிட்டிருக்கும் விலை 916 % க்கு உரியதாகும். ( இந்தக் கணக்கே மிகப் பழைய விலையை அடிப்படையாகக் கொண்டது. )  தவிர, சேதாரம், கூலி பற்றிய தகவல்களும் தவறானவை. 

இப்பொழுது எங்கோ கிடைத்த forward msg ஐ, நுணிப்புல் மேய்ந்து, இங்கே பதிந்துள்ளார். பதிவதற்கு முன், அவருக்கு நம்பகமான நகை தொழில் முனைவோரிடம் விசாரித்தறிந்திருக்கலாம். Rajendra Babu சரி, நீங்கள் உங்கள் கணக்குப்படி 916 ஒரு பவுன் நகை தங்கத்தில் எவ்வளவு தங்கம், எவ்வளவு செம்பு என்று கூறுங்கள்?  

22 காரட் தங்கத்தின் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள் என்று கூறுங்கள்? சேதாரம் ஆகும் தங்கத்திற்கு உரிமையாளர் யார்? அதற்கு பணம் வசூலிக்கும் போது அந்த தங்கம் நகை வாங்குபவர்களுக்கு தானே சேரும். நீங்கள் தங்கம் ஏன் தருவதில்லை? எந்த அடிப்படையில் சேதாரம் கணக்கீடு செய்கிறீர்கள்.

குஷ்புவுக்கு மூளைச் சலவை; சுந்தர் சி-யின் நிர்ப்பந்தமே காரணம்: கே.எஸ்.அழகிரி அதிரடி

tamil.indianexpress.com : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பு, இன்று மதியம் பாஜக தேசிய பொதுச்செயலாளர் C.T.ரவி  மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் குஷ்பு. டெல்லியில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷ்புவுக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரொம்ப மகிழ்ச்சியுடன் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்துள்ளேன். 10 ஆண்டுகள் அரசியல் அனுபவத்திற்குப் பிறகு, எது நாட்டுக்கு நல்லது? எது மக்களுக்கு நல்லது?  என்பதை உணர்ந்து, இக்கட்சியில் இணைந்துள்ளேன். நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி போன்று ஒரு தலைவர் இருந்தால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும். அதை நான் தற்போது முழுதும் உணர்ந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.  பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக கூறிய குஷ்பு, “இது ஒரு நிலையான மாற்றம். மக்களின் தேவையை  நான் இப்போது புரிந்துகொள்கிறேன். எதிர்க்கட்சியில் இருந்த போது பாஜக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியிருந்தேன். அது எனது வேலை. இருப்பினும், பல சந்தர்பங்களில் பாஜகவை ஆதரிக்கவும் செய்தேன்”  என்று தெரிவித்தார்.

பாஜக எனக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றி சிந்திக்காமல், இக்கட்சி நாட்டு மக்களுக்கு என்ன  செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் என்னிடம் அதிகமாக உள்ளது. தேசத்தின் 128 கோடி மக்களும்  ஒரு தலைவனை நம்புகிறீர்கள். அவர்கள், சில விசயங்களை சரியான முறையில் செய்கின்றனர் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியம்' கல்வெட்டு மதுரையில் கண்டுபிடிப்பு! முதல் முதலாக அரிய வகை ..

பகத்சிங் - nakkeeran : மதுரை மாவட்டத்தில் முதன் முதலாக கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மதுரை விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கண்டுபிடித்துள்ளனர். கூடல் செங்குளத்தைச் சேர்ந்த முதுகலை வரலாற்று துறை மாணவர் ரஞ்சித் குமார் அவ்வூர் கண்மாயில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் முனைவர் து.முனீஸ்வரன், முனைவர் லட்சுமணமூர்த்தி ஆகியோர் அக்கல்வெட்டை படித்து ஆய்வு செய்தனர்.

 இதுகுறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, “மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவினர் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளில் படைகளை உருவாக்கி மக்களை பாதுகாத்து வந்துள்ளனர். மதுரையில் கி.பி.13-14-ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென பாடிகாவல் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. பாடிகாவல் செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோவில் நிர்வாகம், பொது நிகழ்வுகளை முன்னெடுத்தல் ஆகிய உரிமைகளையும் பெற்றிருந்தனர்

மைத்திரியிடம் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

athavannews.com/ :ுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு

மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை! ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) 2ஆவது நாளாகவும் அங்கு அவர் முன்னிலையாகியுள்ளார்

குஷ்பு கடந்த மார்ச் மாதமே காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்தார்.

minnambalam : கடந்த மார்ச் மாதமே காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாக இன்று (அக்டோபர் 12) பாஜகவில் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்தவருமான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை விலகிவிட்டு, மதியம் பாஜகவில் சேர்ந்துவிட்டார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி. ரவி,தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். பின் பாஜகவின் அகில இந்திய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பாஜகவில் சேர்ந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. "பாஜக எனக்கு வழங்கும் எந்தவொரு வேலையையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார் குஷ்பு."கட்சிக்குள்ளேயே உயர்ந்த மட்டத்தில் அமர்ந்திருக்கும் சிலர் யதார்த்தத்துடனோ அல்லது பொதுமக்களுடனோ எந்த தொடர்பும் இல்லாதவர்கள். அவர்களால்தான் கட்சிக்கு உண்மையாக பணியாற்ற விரும்பிய என்னைப் போன்றவர்கள் அடக்கப்படுகிறார்கள், வெளியேற்றப்படுகிறார்கள்” என்று சோனியாவுக்கு குஷ்பு கடிதம் எழுதினார்.

நாடு முன்னேற மோடி தேவை: பாஜகவில் இணைந்த குஷ்பு

 நாடு முன்னேற மோடி தேவை: பாஜகவில் இணைந்த குஷ்பு

minnambalam :காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, பாஜகவில் சேர நேற்று மாலை டெல்லி சென்றார். அடுத்த அதிரடியாக செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்ட குஷ்பு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.    இந்த நிலையில் டெல்லியிலுள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (அக்டோபர் 12) சென்ற குஷ்பு, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது, பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுபோலவே, ஊடகம் மற்றும் யூ டியூப் சேனல்களில் நேர்காணல்கள் செய்துவந்த மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் சேர்ந்தார்.

அப்போது பேசிய எல்.முருகன், “மகளிர், பட்டியலினத்தோர், தொழிலதிபர்கள் என அனைவரும் பாஜகவில் சேர்ந்துவருகிறார்கள். நேர்மையான அரசாங்கத்தை நடத்தும் நரேந்திர மோடியின் ஆட்சி தமிழகத்திலும் வர வேண்டும் என்று நினைப்பதுதான் அதற்கு காரணம். அந்த வகையில் குஷ்பு இணைந்துள்ளதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

பரூக் அப்துல்லா : சீனா ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவு அமலுக்கு வரும்...

Mathivanan Maran tamil.oneindia.com : ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சீனாவின் ஆதரவுடன் மீண்டும் அமலுக்கு வரும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. 

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மற்றும் அதனுடன் இணைந்த 35ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகளை வழங்கி வந்தன. இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தது முதல் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு அமலில் இருக்கிறது. பல்வேறு கட்டங்களில் இந்த அரசியல் சாசனப் பிரிவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி இப்பிரிவு முற்று முழுதாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலமே 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. மேலும் அம்மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.