
தினமலர் :விழுப்புரத்தில் இன்று நடக்கவுள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில்,
ஸ்டாலி னும்; ஈரோட்டில் நடக்கஉள்ள மாநாட்டில், ம.தி.மு.க., பொதுச் செயலர்,
வைகோவும், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, முக்கிய அறிவிப்பை
வெளியிடுவர் என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சி வட்டாரங்களிலும் எழுந்துள்ளது.
ம.தி.மு.க.,
சார்பில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை பிறந்த நாள் விழா, ம.தி.மு.க., வெள்ளி
விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, முப்பெரும் விழா மாநாடு, இன்று
காலை, 9:00 மணிக்கு, ஈரோட்டில் துவங்குகிறது.
அழைப்பு
மதியம்,
12:00 மணிக்கு, மறைந்த கருணாநிதியின் படத்தை, தி.மு.க., பொருளாளர்,
துரைமுருகன் திறந்து வைத்து பேசுகிறார். பொது வாழ்வு பொன் விழா மலரை, தேசிய
மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா
வெளியிடுகிறார். மாலை, 5:00 மணிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர்,
சரத் பவார், முன்னாள் மத்திய அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர்
பேசுகின்றனர்.