சனி, 4 பிப்ரவரி, 2012

சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி சிபிஐ நீதிமன்றத்தில்


Subramanya Swamy
டெல்லி: சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறேன், என்று வழக்கு மேல் வழக்கு போட்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமி.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கப்பட்டபோது ஆ. ராசா செய்த தவறுகளை ப. சிதம்பரம் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அந்த கடமையில் தவறி விட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.

கலைஞர்: மதச்சார்பற்ற முற்போக்கு கட்சியோடுதான் கூட்டணி!

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வோம் என கருணாநிதி கூறினார்.
பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை எழுந்ததா? கலைஞர்

சீனாவின் silk route ஆராய்ச்சியும் இலங்கையும்




உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா.
பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியையும் அது கேட்டுள்ளது.

திமுக : யாரும் தோற்கடிக்கவில்லை நாமாக தோற்றோம்

சென்னை: திமுக பொதுக்குழு நேற்று சென்னையில் கூடியது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
திமுக ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்து, பெற்றிருந்த அரசை இழந்து விட்டு மேலும் நம்முடைய தமிழ் உணர்வையும், தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பண்பாட்டையும் இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தின்பாற்பட்டு இயங்குகின்ற இந்தக் கால கட்டத்திலும் இது பொதுக் குழு அல்ல, பொது மாநாடு என்று சொல்கின்ற அளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு  குழுமியிருக்கிறீர்கள்.
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக நீங்கள் காட்டுகின்ற ஆர்வமும், விறுவிறுப்பும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது சோர்வுற்ற நிலையில் சந்திக்காமல், அந்தச் சந்திப்பு அஞ்சாதே, அடுத்து நாம் தான் என்று சொல்கின்ற அளவிற்கு அமைந்திருப்பதை சென்னையில் மாத்திரமல்ல, நான் சென்று வருகின்ற சுற்றுப் பயணத்தில் கூட உணர்ந்திருக்கிறேன்.

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க தயாநிதியே காரணம்:BJP

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கு, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதியே மிக முக்கிய காரணம். இந்தியாவின் மிகப்பெரிய "2ஜி' ஊழலுக்கு காரணமான, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., அவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என, தெரியவில்லை என்று, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா: தமிழ்நாட்டில் படிக்கும் பிற மொழியினரும் தமிழ் கட்டாயம் படிக்கவேண்டும்

""தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்
கோபிநாத்-காங்கிரஸ்: ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டிய தமிழகப் பகுதிகளில், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருதை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக, சிறுபான்மை மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், படிக்க முடியாமல் திணறுகின்றனர்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நெருங்கி பழகிய தோழிகள் தற்கொலை சேலம்


சேலம் நகரில் உள்ள கருங்கல்பட்டி, கலைஞர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் பக்கத்தில் உள்ள ஒரு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது 33). இவர்களுக்கு சத்தியா (வயது 15) என்ற மகளும், சதீஸ் (வயது 13) நடேசன் (வயது 8) என்ற இரண்டு மகனும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஈஸ்வரி சேலம் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர்களின் ஒரே மகள் சிந்து (வயது 24) பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
பக்கத்து பக்கத்து வீடுகளில் உள்ள சுந்தரியும் சிந்துவும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். எதை வாங்கினாலும் இருவரும் ஒன்று போலவே வாங்குவார்கள்.

மடியில வச்சு லேப் டாப் உபயோகிக்கிறீங்களா?ஆண்களுக்கு பாதிப்பு

Laptop
லேப் டாப் களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
மடிக் கணினியால் பாதிப்பு

சிம்பு கிட்ட இருந்து மட்டும் விலகி இருங்கம்மா

தீக்‌ஷாவின் ஆதங்கத்தை உபயோகப்படுத்திய சிம்பு!

தமிழ் சினிமாவிற்கு ராஜபாட்டை படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தீக்‌ஷா செத். ராஜபாட்டை படம் சரியாக ஓடாததால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் கவனமாக இருந்த தீக்‌ஷா செத், அதற்க்கான கதைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் “யார் கூட வேணும்னாலும் நடிங்கம்மா, சிம்பு தம்பி கிட்ட இருந்து மட்டும் விலகி இருங்கம்மா” என்று கூறினாராம். 

ஹன்சிகா:பிரபுதேவாவையும் என்னையும் இணைத்து பேசாதீர்கள்

பிரபுதேவாவையும் என்னையும் இணைத்து பேசாதீர்கள். அவர் எனக்கு அண்ணன் போன்றவர்’ என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறினார்.
காதல் ஜோடியான பிரபுதேவா நயன்தாரா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான், நயன்தாரா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த பிரிவுக்கு காரணம் ஹன்சிகா மோத்வானியை பிரபுதேவா நேசிப்பதுதான் என்றும் வதந்தி பரவி உள்ளது. இதற்கு ஹன்சிகா மோத்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
‘பிரபுதேவாவுடன் என்னை இணைத்து இதுபோன்ற வதந்திகள் வருகின்றன.

இதற்கெல்லாம் பதில் சொல்வதைவிட, அமைதியாக இருப்பதுதான் கவுரவமான செயல் என்று கருதுகிறேன்.
இவை அடிப்படை, ஆதாரம் இல்லாத வதந்திகள். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். இத்துடன் வதந்தியை நிறுத்திக்கொள்ளுங்கள். அண்ணன் & தங்கையை இணைத்து பேசாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா உறவு சதிகள் ஆட்சியைப் பிடிக்க 600 கோடி பிளான்!

ப.திருமாவேலன்
தி.மு.க-காரர்கள் இப்போது ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்கள்.
''சசிகலா என்றாவது ஒருநாள் நிச்சயம் முதல்வர் ஆவார்!'' என்று ஒரு பத்திரிகை யில் வந்த செய்தியை ஜெயலலிதாவும் சசிகலாவுமே சேர்ந்து படித்தார்கள். சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். ''அதற்குப் பிறகு, என்னிடம் சிரித்துப் பேசுவதை அக்கா குறைத்துவிட்டார்'' என்பது இரண்டு மூன்று வாரங்கள் கழித்து சசிகலா ஒருவரிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார். திருச்சி மேற்குத் தொகுதியில் சசிகலா போட்டியிடப்போகிறார், சசிகலா தீவிர அரசியலில் குதிக்க இருக்கிறார், சசிகலா துணை முதல்வர் ஆகிறார், ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலாதான் கட்சிப் பொதுச் செயலாளர், முதல்வர்... என்று பத்திரிகைகள் ஆரூடங்கள் சொல்வது பல ஆண்டுகளாகத் தொடரும் விஷயம். இதுவரைக்கும் வந்த எந்தச் செய்தி யையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜெய லலிதா, இந்த முறை மட்டும் இறுக்கமானது செய்தியைப் பார்த்து அல்ல. அதற்குப் பின்னால் அவரது காதுக்கு வந்து சேர்ந்த செய்திகளை வைத்து என்பது அரசியல் மேல் மட்டங்களில் பழகக் கூடியவர்களுக்குத் தெரியும். 'கட்சியைவிட்டு நீக்கியாகிவிட்டது. இனி, அவர்களால் அதிகாரம் செய்யவும் முடியாது. வெளியில் தலை காட்டவும் முடியாது’ என்று அமைதியாக இல்லாமல்... திவாகரனைத் தேடுவது, ராவணனைக் கைது செய்வது என்பதில் ஜெயலலிதா தீவிரமாக இருக்கக் காரணம், அவர்கள் தனது பதவி நாற்காலியைக் குறிவைக்கும் சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் என்பது போலீஸ் வட்டாரம் சொல்லும் தகவல்!

வியாழன், 2 பிப்ரவரி, 2012

இளையராஜா!'என்ற தென்றல் வந்து தீண்டும்போது

நூறாவது நாள் திரைப்படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சில த்ரில்லர்களில் முக்கியமான திரைப்படம். அப்படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்த கதையை இயக்குனர் மணிவண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ''நூறுவாது நாள் படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்துமுடித்தாராம் இளையராஜா!'' அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகாரிடிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றாராம்! அந்தப்படத்தின் பாடல்களைவிட பிண்னனி இசைதான் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது.

Facebookகை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை!


Indian Army Personnel Prohibited Facebook
ராணுவ ரகசியங்கள் வெளியாவதை தடுக்கும் வகையில், ஃபேஸ்புக்கை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளது ஃபேஸ்புக். நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் ஃபேஸ்புக் பற்றிய பேச்சு தான் அதிகம் இடம் பெறுகிறது. இப்படி சிறியவர்கள் முதல் பெரிய வசதில் உள்ளவர்கள் வரை, மனதை ஆக்கிரமித்த பேஸ்புக்கிற்கு இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது.

திமுக கொ.ப.செ. கனிமொழி? துணைத் தலைவர் ஸ்டாலின்?


சென்னை: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் திமுகவின் பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது.

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெறும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பதைவிட திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் சுழன்றடித்து வரும் புயல்களுக்கு அணை போடும் நடவடிக்கைக்களே அதிகம் இருக்கும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

கொ.ப.செ. கனிமொழி?:

ராசா வழங்கிய எல்லா 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: 2ஜி வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த லைசென்ஸ்களை வழங்கியவர் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி குற்றம் சாட்டியிருந்தார்.

ZeeTV நிர்மலா பெரியசாமியின் சொல்வதெல்லாம் உண்மைக்கு தடை உச்ச நீதிமன்றம்


மதுரை: குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவது போல உள்ள டிவி நிகழ்ச்சிகளால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாக புகார் எழுவதால், இந்த நிகழ்ச்சிகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஜீ' டி.வி நடத்தும் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த நபர் குறித்த பகுதியை ஒளிபரப்ப உடனடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா பெரியசாமி நிகழ்ச்சி
'ஜீ' டி.வியில் தினமும் இரவு 9.30 மணிக்கு 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

புரட்சிக் கலைஞர் – புரட்சித் தலைவி: 2 புரட்சி ஒரு உறையில் தாங்குமா?

மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போலவும், மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் வெளியில் பேசுகிறார்கள் என்று தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் சந்திர குமார் நேற்று (1.2.2012) சட்டசபையில் பேசினார்.
கொஞ்சம் மேலோட்டமாக பாருங்கள், இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க நேரடியாக வைக்கவில்லை! வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்பதன் மூலம் இதை புரட்சித்தலைவியின் மனம் கோணாமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தே.மு.தி.கவின் உறுப்பினர்கள் அம்மா பயத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஏற்கனவே இவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை, புவியியலும் தெரியவில்லை என்று அம்மா ஏகப்பட்ட டோஸ் கொடுத்திருக்கிறார்.

அன்று மதிமுகவை எட்டி உதைத்த ஜெ. இன்று தேமுதிகவை எட்டி உதைத்து விட்டார்

Vaiko, Jayalalitha and Vijayakanth
சென்னை: அன்று தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க கடுமையாக முயன்று வந்ததால், தனக்கு உற்ற தோழனாக, பாசம் மிக்க உடன் பிறவா சகோதரனாக கூடவே இருந்து வந்த வைகோவை உதாசீனப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா, இன்றாவது வைகோவின் அருமையையும், மதிமுகவின் நாகரீகத்தையும் உணர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவிலிருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை ஆரம்பித்த பின்னர் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது

விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரமானது-ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்வாதிகரமானது என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் சட்டசபையிலிருந்து வெளிவந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகளுக்கு கருத்துக் கூற, பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது எதேச்சதிகார செயல். சர்வாதிகாரமானது.உரிமைக் குழுக் கூட்டத்தை அவசரம் அவசரமாக கூட்டி இந்த முடிவை எடுத்துள்ளனர். இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்துள்ளோம் என்றார்.

தே.மு.தி.க MLAக்கள் அ.தி.மு.க க்கு தாவும் வாய்ப்பு


தமிழக சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்,அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் புயலைஏற்படுத்தியுள்ளது."தே.மு.தி.க.,விற்கு வரவேண்டிய
ஏற்றம், வந்து முடிந்து விட்டது.இனிமேல், அவர்களுக்கு இறங்குமுகம்
தான்' என, சட்டசபையில் முதல்வர்அறிவித்து உள்ளதால்,
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வேண்டாம்என்ற அ.தி.மு.க.,வின் நிலை தெளிவாகி விட்டது. அதிர்ச்சி அடைந்துள்ள தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வட்டாரம், ஆளுங்கட்சி பக்கம் சாயலாமா என்று யோசித்து வருகிறது.

புதன், 1 பிப்ரவரி, 2012

மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில், நயன்தாரா அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிக்க மாட்டேன் என்று கூறிய நயன்தாரா மறுபடியும் நடிக்கிறாரா? என்று கேட்க வேண்டாம்.
 நீ தான் உலகம் என்று இருந்த இந்த ஜோடிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதன் காரணம் பிரபுதேவா அடிக்கடி தன் குழந்தைகளை பார்த்துவிட்டு வருவதுதானாம். இந்த செய்தியை அறிந்த நயன்தாரா ஓணம் பண்டிகையன்று பிரபுதேவாவை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து திருப்பியனுப்பியது பழைய கதை.
 இப்படிப்பட்ட சில காரணங்களினால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர் என்று பேசப்படுகிறது. நடிக்கலாம் என்று நினைத்தவுடன் நயன்தாராவுக்கு அடித்தது ஜாக்பாட் தான். நாகார்ஜுனா படத்தில் கிட்டத்தட்ட சீதை போன்ற தெய்வீக வேடத்தில் நடிக்க நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்.
 மற்ற நடிகைகள் எல்லாம் வயிறெரிந்த நேரத்தில் அடுத்த ஜாக்பாட், தமிழில் அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு.

சசிக்குமார் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்குகிறார் இயக்குனர் பாலுமகேந்திரா. கடைசியாக தனுஷ் நடிப்பில் “அது ஒரு கனாக்காலம்” என்ற படத்தை இயக்கினார். பாலுமகேந்திரா இயக்கவிருக்கும் பெயரிடப்படாத அந்த படம் சசிகுமார் தயாரிப்பில் உருவாகவிருக்கிறது.
ஒரு படம் எடுப்பதற்கே கோடிக் கணக்கில் செலவாகும் இந்த காலத்தில் பாலு மகேந்திரா படத்தின் பட்ஜட் 90 லட்ச ரூபாய். சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் கதை பெரும்பாலும் ஒரே ஒரு வீட்டினுள் தான் இருக்குமாம்.
 ”ஒரு படம் நன்றாக வருவதற்கு படத்தின் பட்ஜட் காரணம் அல்ல. படத்தின் கதையும்,கதாபாத்திரங்களும் தான் முக்கிய காரணம் என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். கோடிகள் வேண்டாம், லட்சங்கள் போதும் கண்ணால் பார்க்கக் கூடிய அளவிற்கு படம் எடுப்பதற்கு” என்று கூறியுள்ளார் பாலுமகேந்திரா

கவர்னர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்க, நான் சந்திக்கத் தயார்-விஜயகாந்த் பதில் சவால்

சங்கரன்கோவிலுக்கு கவர்னரின் ஆட்சியின் கீழ் இடைத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதில் சவால் விட்டுள்ளார்.
அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.மிக மிக குறுகிய காலத்திற்குள் உடைந்து சிதறிப் போயுள்ள இந்த வித்தியாச கூட்டணி இப்போது அரசியல் அரங்கில் புதிய நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது என்பதை இன்றைய அரசியல நிகழ்வுகள் காட்டுகின்றன.
சட்டசபையிலிருந்து இன்று விஜயகாந்த்தும், அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து வெளியே வந்த விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு உள்ளே நடந்தது குறித்துக் கேட்டனர்.

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது. இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும் இந்த மோதல் குறித்த விவரம்...

சரண்யா மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில்

நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.
நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.
காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார்.

தி.நகரில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை : சி.எம்.டி.ஏ., பதில்

சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில், தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை' என, ஐகோர்ட்டில் சி.எம்.டி.ஏ., பதிலளித்துள்ளது. அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி, தி.நகரில் கட்டடங்கள், வணிக வளாகங்கள், கடைகள் கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு, "சீல்' வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில், கட்டடம் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்கங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்கள் கடந்த வாரம், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன. அரசும், சி.எம்.டி.ஏ.,வும் பதிலளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, 7ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

2வதும் பெண்ணா? மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்


காபூல்: ஆப்கானிஸ்தானில் இரண்டாவதும் பெண்ணாய் பெற்றதற்காக மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் குன்துஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. அவரது மனைவி எஸ்டோரை(22). அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஷேர் முகமது பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

பல்டி அடிக்கும் உதயகுமார்!கூடங்குளம் அணு உலைக்கு

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, "ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை' என கூறிய உதயகுமார், கூடங்குளத்தில், "போலீசார் சிறப்பாக செயல்பட்டு, அணு உலை ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்' என பாராட்டியதால், பொதுமக்கள் குழம்பியுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான, உதயகுமாரின் சட்ட அனுமதியில்லாத போராட்டத்திற்கு, போலீசார் தேவையான பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
நேற்று, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்திற்கு, திடீரென ஆட்களை திரட்டி வந்த உதயகுமார், அங்கு மனு அளிக்க வந்த, அணு உலை ஆதரவாளர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். அங்கு பேட்டி அளித்த அவர், "இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை; மதவெறியர்கள் வெறிச்செயலில் ஈடுபடுகின்றனர்' என, ஆவேசமாக கூறினார். பின், கூடங்குளத்திற்கு சென்ற அவர், அணு மின் நிலையம் காமராஜர் சிலை அருகே பேசுகையில், "நாம் ஆத்திரமடையக் கூடாது; போலீசார் நமக்கு சிறந்த பாதுகாப்பு தந்தனர். அணு உலை ஆதரவாளர்கள் மீது, வழக்கு பதிந்து விட்டனர். போலீசாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்' என, மாற்றிப் பேசினார். திருநெல்வேலியில் பாதுகாப்பில்லை என, திட்டிப் பேசிய உதயகுமாரின் பேச்சைக் கேட்ட அவரது ஆதரவாளர்களே, கூடங்குளத்தில் அவரது பாராட்டு பேச்சைக் கேட்டு, குழம்பிப் போயினர்.

- நமது சிறப்பு நிருபர் -

ஜெயலலிதா,,,திமுக மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி

முதல்வர் ஜெயலலிதா அனுமதியோடு
திமுக மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி
தமிழகத்தை, மாற்றாந்தாய் மனப்போக்கில் மத்திய அரசு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ள, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, இதைக் கண்டிக்கும் வகையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தராமல், மாற்றாந்தாய் மன நிலையில் மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டிக்கத்தக்கது.

.50,000 கோடிக்கு 'டஸ்ஸால்ட் ரபேல்' போர் விமானங்களை வாங்கும் இந்தியா!


Dassault Rafale
டெல்லி: பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கோயில் சுரண்டல்களை நேரடியாகக் கண்டு நொந்து

‘‘பசுவிடம் இருந்து பால் கறந்துகொள்ளுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், பசுவின் மடியையே அறுக்கும் வேலையைச் செய்யாதீர்கள்...’’-
இப்படி ராமேஸ்வரம் கோயிலில் நிலவும் சுரண்டல்களை நேரடியாகக் கண்டு நொந்துபோய், கடந்தாண்டு தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார் மதுரை உயர் நீதிமன்ற நீதியரசர் சசிதரன்.
“உண்மைதான்...’’ என்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடக்கும் மோசடிகளை பட்டியலிட ஆரம்பித்தார்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஷாரூக்கான் விருந்தில் தோழியின் கணவரை புரட்டி எடுத்தார்



மும்பை: அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.
ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார்.

A.R.Rahman எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே?
-கே. அப்துல்காதர், திருச்சி.
சொல்லிட்டா போச்சி.
கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.
அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை  பாட வைத்தார்.

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை கிடையாது-விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்கை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் விரைந்து முடிக்குமாறும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு.

சாதி சடங்கு பொருத்தங்களுடன் சமூகத்தில் நடக்கும் திருமணம்

முன்னுரை:
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். இக்காலத்தில் எமது அமைப்புகள் தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தியது. பல்வேறு அளவுகளில், களங்களில் நடந்த இந்த இயக்கத்தின் போது நடந்த மணவிழாவின் பதிவுதான் இந்தக் கட்டுரை. சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப்  பாருங்கள்!

அரிவாளை கீழே போடுங்கய்யா...! - இளையராஜா

சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறுகையில், "செங்காத்து பூமியிலே வன்முறைக்கு எதிரான படம். இன்றைய காலகட்டத்தில் அப்படி வந்திருக்கும் ஒரே படம் என்று கூடச் சொல்லலாம்.

பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த IAS அதிகாரி மனைவி தலைமறைவு



பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் "மும்பை ஹீரோஸ்' "கர்நாடகா புல்டோசர்ஸ்' இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதைக் காண்பதற்காக தன் மகளுடன், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பங்கஜ்குமார் பாண்டேயின் மனைவி அம்புஜா பாண்டே ஸ்டேடியத்துக்கு வந்தார். கேட் எண் ஒன்றில், உள்ளே நுழைய முயன்ற அம்புஜாவை, கப்பன் பார்க் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக் தடுத்து, டிக்கெட் கேட்டார்.
அம்புஜா, தன்னிடம் இருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இரண்டு பேருக்கு ஒரு டிக்கெட் கொடுப்பது ஏன்? என்று அஞ்சுமாலா கேட்டு, யாருக்கோ போன் செய்தார். பின்னர், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார்.
தன்னை இவ்வளவு நேரம், கேட்டில் காக்க வைத்ததால், கோபமடைந்த அம்புஜா, இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார்.

நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி!



Jayalalitha and Panruti Ramachandran
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தானே புயல் நிவாரணிப் பணிகள் தொடர்பாக தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சரமாரியாக குற்றம் சாட்டிப் பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதிலடி கொடுத்து விளக்கம் அளித்தார்.
இது நாள் வரை அதிமுகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெருத்த லாபமடைந்த தேமுதிகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இந்த கூட்டணி டமாலாகி விட்டது.

நீரா ராடியா கனிமொழி டேப்புகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளன: மத்திய அரசு

டெல்லி: கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் கார்பரேட் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நீரா ராடியாவும் உதவியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து அவர் தொலைபேசியில் பேசிய டேப்புகள் ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடைஆமை வேகத்தில்

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்காமல் இருக்கும் வகையில், இன்ஜின் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் மூலம், 980 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் அனைத்தும் படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி

கலி.பூங்குன்றன்உடையும் இந்தியா ஆரிய திரா விடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.
அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.

பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு

இந்திய நீதிபதிகளின் மேலான பார்வைக்கு...!

கடவுள் வாழ்த்தை நிறுத்திய பெண்மணி! பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு

கிரேன்ஸ்டன் (அமெரிக்கா) ஜன. 30: தீயணைப்புப் படை வீரரின் மகளும், ஒரு செவிலியருமான ஜெஸ்ஸிகா அல்கு விஸ்ட் என்ற பெண் ரோமன் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழும் அமெரிக்க நாட் டின் கிரேன்ஸ்டனில் வழக்கு தொடுத்து, 49 ஆண்டு காலமாக பள்ளியில் இருந்து வந்த இறைவணக்கப் பாடல் ஒன்றை நீக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்பான தாகும்.

முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை ‘ஓவர்டேக்’ செய்த தபால் வாகனத்துக்கு அபராதம்

முதல்வரின் பாதுகாப்பு போலீஸ்காரர்கள் செல்லும் வாகனத்தை முந்திச்சென்ற தபால் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் இருந்து அஞ்சல் வேன் (டிஎன் 01; கே 3043) ஒன்று கடிதங்கள், பார்சல்களை சேகரித்து வர ஜன.28ம் தேதி மாலை 5. மணியளவில் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் விரைந்துக் கொண்டிருந்தது. அலுவலகங்கள் மூடும் நேரம் என்பதால், வாகனத்தின் டிரைவர் ஜெயராம் (41) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவசரமாக வண்டியை ஒட்டியிருக்கிறார்.

திங்கள், 30 ஜனவரி, 2012

கமல், அஜித் இணையும் படம்!

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்ததாக கமல் நடிக்கவிருக்கும் படம் “தலைவன் இருக்கிறான்”. தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இந்தியில் ”அமர் ஹேய்ன்” என இப்படத்திற்கு பெ
 படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிப்பதாக தெரிகிறது. கமலுடன் அஜித் இணையும் முதல் படம் இது. மற்ற முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
 படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு இந்தி நடிகை காத்ரீனா கைஃப்பிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.  

திரைப்பட இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்களின் ஊதிய உயர்வை

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குநர்களின் சம்பள உயர்வை நேற்று சங்கத்தின் செயலர் அமீர் அறிவித்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்குநர் அமீர் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசி புதிய ஊதியங்கள் மற்றும் பணிகளுக்கான வரைமுறைகள் குறித்து 10-04-2008 அன்று கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தம் 3 ஆண்டுகள் முடிந்து காலாவதியாகி விட்டது.

30 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதால் அதிமுக மா.செ.வை கொலை செய்தாரா ராவணன்?


கோவை: மாவட்டச் செயலாளர் பதவி தர எனது தந்தை ரூ. 30 லட்சம் பணத்தை ராவணனிடம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி மாவட்டச் செயலாளர் பதவியை ராவணன் வாங்கித் தரவில்லை. இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது உயிருடன் ஊர் திரும்ப மாட்டாய் என எனது தந்தையை எச்சரித்தார் ராவணன். இந்த நிலையில்தான் எனது தந்தை விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. ஆனால் ராவணன்தான் எனது தந்தையைக் கொலை செய்துள்ளார் என்று நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜின் மகன் சதீஷ் குமார் புகார் கூறியுள்ளார்.

அழகிரி:மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை



என் மகனுக்கு கட்சி பதவி கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த செய்தி பொய்யானது. அப்படி எந்த பதவியும் நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் அழகிரி.

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 61வது பிறந்த நாளை எளிமையான முறையில் மதுரையில் இன்று கொண்டாடினார்.
வழக்கமாக படு ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் கொண்டாடுவார்கள் அவரது அடிப்பொடிகள். ஆனால் இந்த முறை அந்த பிரமாண்டம் மட்டும் மிஸ்ஸிங்.

ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!

ஸ்ரீமுகம் பெறுதல்:
ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு.
வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.
என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.

அ.தி.மு.க. எம்.எல்ஏ.க்களையும் இழுத்து, தே.மு.தி.க.-வில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களையும் வெளியே

சூட்கேஸ் சகிதம் நடராஜன் அனுப்பிய இரண்டு பேர் வருகிறார்கள்!

Viruvirupu.com
சசிகலா சின்டிகேட் அ.தி.மு.க.-வுக்கு அரசியல் ரீதியாக சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்ற ஊகம் பரவலாக ஓடிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் விஜயகாந்தின் தே.மு.தி.க.-வுக்கு ஆப்பு வைக்கும் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. சசிகலா குரூப்பின் அரசியல் ஃபிலோசபர் நடராஜன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை கவர் பண்ணுவதற்கு தனது ஆட்கள் இருவரை சூட்கேஸ் சகிதம் இறக்கி விட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இது சில மாதங்களுக்கு முன், ‘வேறு விதமாக’ தொடங்கப்பட்ட ஆபரேஷன் என்கிறார்கள் விவகாரம் தெரிந்தவர்கள்.
சசிகலா குரூப் அ.தி.மு.க. பவர் சென்டராக இருந்த நாட்களில், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சிலர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்

ஆமதாபாத்: பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அவர் புறக்கணித்தது, அக்கட்சி வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியும், உத்தரகண்டில் பா.ஜ., ஆட்சியும் நடந்து வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பிரசாரம் செய்வார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் வேட்பாளர்: பா.ஜ., சார்பில் இந்த மாநிலங்களில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பட்டியல், தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்டபோது, அதில் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

சமச்சீர் கல்வினு சொன்னப்போ, இது ஏதோ புதுசா வருதேன்னு பயமா இருந்துச்சு

தேர்வு முறையை தித்திப்பாக்கிய சமச்சீர் கல்வி!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்

''டெலிபோன் மணியடிச்சா ரிங்கு
எங்க நட்பை பிரிக்க நினைச்சா சங்கு
நண்பா...
நாம் இருவரும் சேர்ந்து செய்த சேட்டை
நம் நட்புக்கு நாம் கட்டிய கோட்டை''

 இது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தமிழ் இரண்டாம் தாளில் எழுதிய புதுக்கவிதை! மாணவர்களின் படைப்பாற்றல் திறமைக்கு மேடை கொடுத்து இருக்கிறது சமச்சீர் கல்வி என்கிற சந்தோஷம் ஒருபுறம். ஆனால், கல்வியாண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழிந்த பிறகுதான் சமச்சீர் கல்வி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. புதிய கல்வித் திட்டம், மிக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட பாடங்கள் என்ற தடைகள் கடந்து... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் மாணவர்கள்..? சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்தோம். அவர்களின் சந்தோஷங்களும் சங்கடங்களும் இதோ....

முழுக்கு'ப் போட்ட நயனதாரா- பிரபுதேவாவின் கதி என்ன?!

எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா.
இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.
ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!

கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று உள்ளது.
  கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலம்

நடி‌கைகளின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படம் "ஒரு நடிகையின் வாக்குமூலம்". நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஹீரோயினாக களம் இறங்குகிறார் நடிகை சோனியா அகர்வால். படத்தில் நடிகையாகவே சோனியா நடிக்கிறார். நடிகையான பிறகு அவர் சந்திக்கும் கஷ்டங்கள் மற்றும் திருமண வாழ்க்கை, விவாகரத்து போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தை ராஜ்கிருஷ்ணா என்பவர் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஆசிரியையாக விரும்பிய பெண் பிச்சை எடுக்கும் அவலம்

ஆலப்புழா: எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில் 1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார். ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல், நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை.

சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்?


Viruvirupu.com முன்னாள் அமைச்சர் வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரது பதவி பறிபோனதுடன் சேர்த்து அமைச்சர் பதவி போயிருக்க வேண்டிய ஒருவர் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொண்டார் என்கிறார்கள் அ.தி.மு.க. உள் விவகாரங்கள் அறிந்தவர்கள். கவர்னர் மாளிகைக்கு அனுப்ப தயாரான லிஸ்டில் ஆரம்பத்தில் இருந்தவை 3 பெயர்கள் என்கிறார்கள் இவர்கள். ஒரு பெயர் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து தூக்கப்பட்டதாம். எமக்கு கிடைத்த தகவலின்படி, அந்தப் பெயர், டாக்டர் விஜய்.  சுகாதாரத்துறை அமைச்சர்!

BJP: அதிமுக அரசு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது


Ila Ganesan

மதுரை: மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தமிழக அரசு செயல்படவில்லை. மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக்  கொடுத்துள்ளது  அதிமுக அரசு என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவும், பாஜகவும் நெருங்கி வருவதாக சமீப காலமாகப் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இல.கணேசன் தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன் சம்பளம்! அதிரும் ஆந்திரா!ஒன்றரை கோடி

பலமாதங்களாகவே நயன்தாரா, பிரபுதேவா பற்றிய தகவல்கள் செய்திகளாகவும், வதந்திகளாகவும் உலா வ்ந்து கொண்டிருக்கின்றன. எதற்கும் வாய் திறக்காமல் இருக்கின்றனர் பிரபுதேவாவும், நயன்தாராவும்.
 “ஸ்ரீ ராம ராஜ்யம் தான் எனது கடைசி படம் என்று கண்ணீர் வடித்த நயன்தாரா, சிவபிரசாத் ரெட்டி தயாரிப்பில், தசரத் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். படத்தில் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் நயன்தாரா நடிக்க ஒத்துக் கொண்டார் என்கின்றனர் படக்குழுவினர்.
படத்தில் நடிக்க சம்பளம் ”ஒன்றரை கோடி”யாம்.

தமிழக அரசுக்குத்தான் அதிக நஷ்டம்.கூடங்குளம் இயங்காததால்

கூடங்குளம் இயங்காததால், மத்திய அரசுக்கோ, அணுசக்தி இயக்குனரகத்துக்கோ ஏற்படும் நஷ்டத்தை விட, மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டம் தான் அதிகம் என, இந்திய அணுசக்தி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி கூட்டமைப்பு சார்பில், கன்னியாகுமரியில் மாநாடு நடந்தது. இதில், இந்திய அணுசக்தி விழிப்புணர்வுத் துறை தலைவர் மற்றும் அணுசக்தி இயக்குனரக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், எஸ்.கே.மல்கோத்ராவுக்கு, அறிவியல் தொழில்நுட்ப சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

வட கொரியா.. தலைமறைவாக போனாரா? அவரது ‘தலையே’ போனதா? பகீர் பகீர்!

viruvirupu.com
வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங்-இல் மரணத்தின்பின், அவரது இளைய மகன் கிம் ஜொங்-உன் ஆட்சிக்கு வந்த பின்னணியில் மர்மம் இருப்பதாக தென் கொரிய மீடியா ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டிருந்தது. இப்போது அதிர வைக்கும் சந்தேகம் ஒன்று தென் கொரியாவில் இருந்து வெளியாகியுள்ளது.
மூத்த மகன் கிம் ஜொங்-நாம். இவர்தான் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்து டோக்கியோவில் அகப்பட்டவர்
“புதிய தலைவரின் இரு மூத்த ககோதரர்களும் இன்னமும் உயிருடன் உள்ளனரா? அல்லது, அவர்களுக்கு சமாதி கட்டிய பின்னர்தான் இவருக்கு தலைவர் பட்டம் கட்டினார்களா?” என்பதே இந்த சந்தேகம். இது இப்போது தென் கொரிய மீடியாவில் படு சூடாக ஓடிக்கொண்டு இருக்கிறது!
வடகொரியத் தலைவர் இறந்தபோது அவரது மரணம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது.

A.P.J.Abdul kalam :தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.


மும்மொழித் திட்ட அறிமுக நிகழ்ச்சியில், ஒரு சிங்கள மாணவி, அருமையான தமிழில் பேசினாள், ஒரு தமிழ் மாணவி நன்கு சிங்களத்தில் பேசினாள், ஒரு முஸ்லிம் மாணவி, அருமையான தமிழிலும், சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் பேசினாள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது
மொழி மதங்களை ஒன்றிணைக்கிறது
மொழி நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது

இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் கால சம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!

தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், முதல்வர் சக்தி, மக்கள் தொடர்பு அலுவலர் குஞ்சிதபாதம், துணை முதல்வர் தொல்காப்பியன் ஆகியோர் ஒரே குரலில், “நிர்வாகம் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் மாற்ற முடியாது, ஸ்மார்ட் கிளாஸ்க்கு  ரூ.10000 த்தில் பாதி கொடுத்தால் அரையாண்டு தேர்வு தாள் மதிப்பெண் பட்டியல் தருவோம், அரசு கட்டணம் செலுத்துவேன் என்பவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்” என ஜெயலலிதா சொந்தகாரர் போல் பேசினார்கள். பள்ளி தாளாளரின் உறவினர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

twitter டுவிட்டர்' தணிக்கை திட்டம்: புறக்கணிக்க மக்கள் முடிவு

நியூயார்க்: சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற, "டுவிட்டர்' நிறுவனம், நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக, மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி, கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து, கூகுள், யாகூ உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், "பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை, இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த முயற்சி, எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால் என, பலர் கொதித்தெழுந்தனர். இறுதியில், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், அத்தகைய தணிக்கைக்கு சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சிதம்பரம் செட்டியார் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக வாழ்ந்தவர்


Saturday, January 28, 2012



இந்திய பிஸினஸ் வரலாற்றில் நகரத்தார்கள் அடைந்த வளர்ச்சிக்கு அளவே இல்லை; அதேபோல அவர்கள் இழந்த சொத்துகளுக்கும் அளவில்லை. ராப்பகல் என்று பார்க்காமல், குடும்பத்தையும் குழந்தைக் குட்டிகளையும் பிரிந்து, ஒவ்வொரு காசாக தேடித் தேடி சேர்த்தவர்கள் கடைசியில் அதை அநியாயமாக இழந்தது கொடுமையிலும் கொடுமை.

பிரபுதேவாவுடன் காதல் முறிவு: புதிய தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தரும் நயன்!

சென்னை: கடந்த நான்காண்டுகளாக பேசப்பட்ட நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இருவருக்கும் திருமணம் நடக்காது என்றும், நிரந்தரமாகப் பிரிந்துவிட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருமணம் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்ட நிலையில், இப்போது புதிய படங்களுக்கு கால்ஷீட் தருவதில் தீவிரமாக உள்ளார் நயன்தாரா.
கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.
இந்தக் காதலுக்காக தனது மனைவியை விவாகரத்தும் செய்துவிட்டார் பிரபு தேவா. அவருக்கும் முன்னாள் மனைவி ரம்லத்துக்கும் பாகப்பிரிவினை கூட நடந்துவிட்டது.

தேடல் டிராமா போலீஸ் திவாகரனை தப்பவிட்டது

முதல்நாள் திவாகரனை கைது செய்யச் சென்ற போலீஸ், தேடல் டிராமா நடத்திவிட்டு அவரைத் தப்ப வைத்த விவகாரம் கார்டன் கவனத்துக்கு உடனடியாகப் போய்விட்டது

சசிகலா தம்பி திவாகரனைத் தேடி, காக்கிகள் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டத்தைப் பற்றி, கடந்த இதழ் நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரையே கொடுத்திருந்தோம்.
இதன்பின் திவாகரனைத் தேடி பல இடங்களிலும் வலை வீசிய போலீஸ், சென்னை தி.நகரில் தங்கியிருந்த ப்ரியா வீட்டையும் விட்டு வைக்காமல் தேடி அலசினர்.
தேடல் பற்றிய முழு விபரமறிந்த அந்த ஆளும்கட்சிப் பிரமுகரே விவ ரிக்கிறார்.‘""முதல்நாள் திவாகரனை கைது செய்யச் சென்ற போலீஸ், தேடல் டிராமா நடத்திவிட்டு அவரைத் தப்ப வைத்த விவகாரம் கார்டன் கவனத்துக்கு உடனடியாகப் போய்விட்டது. இதனால் கொதித்துப்போன கார்டன் தரப்பு, கோட்டை விட்ட போலீஸை வச்சே ஓடிப்போன திவாகரனைப் பிடிக்க ணும்ன்னு திருச்சி சரக ஐ.ஜி. அலெக் சாண்டர் மோகனுக்கு கடுமையான உத்தரவைப் போட்டது.

சென்னை, திருப்பூர், கோவையில் குவியும் புகார்கள் - குண்டர் சட்டத்தில் கைதாகிறார் ராவணன்!



Ravanan
சென்னை: சசிகலாவின் உறவினர் ராவணன் விரைவில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான்ட்ராக்டரை கடத்தி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா உறவினர் ராவணன் மீது கடத்தல், கொலை, நில அபகரிப்பு, தாக்குதல் உள்பட பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.
கடந்த மாதம் 19-ம் தேதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த 12 பேரில் ராவணனும் ஒருவர்.