Vettimayilnathan Subramaniyam : இலங்கைப்பணம்100 கோடி பெறுமதியான பசு-
பிரேசிலில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தப் பசு விலைக்குப் போனது.
இது இந்திய மதிப்பில் ரூ.40 கோடி ஆகும்.
இலங்கைப்பெறுமதியென்று பார்த்தால் 100 கோடியத் தாண்டுகிறது
ஏலத்தைப் பார்த்த ஏராளமான மக்களும் கால்நடை ஆர்வலர்களும் இந்தப் பசுவைப் பார்த்து வியந்தனர், இதன் வாயிலாகவே 40 கோடி ரூபாய்க்கு ,(இலங்கைப்பணம்100 கோடியத் தாண்டும்) ஏலம் போயுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விற்பனையானது.
கால்நடை ஏலத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் குறிப்பது மட்டுமல்லாமல்,
கால்நடைத் தொழிலில் உள்ள உயர்ந்த மரபியல் பண்புகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.
சனி, 30 மார்ச், 2024
பிரேசிலில் 40 கோடிக்கு விலை போன நெல்லூர் (ஓங்கோல்) பசு
CM அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்க ஜெர்மனி தொடர்ந்து ஐ.நா. கண்டனம்
மாலை மலர் : நியூயார்க் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் 3 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
அதுபோல் ஏற்கனவே ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
இருப்பினும், மீண்டும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஐ.நா.வும் இப்பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அன்றாட நிருபர்கள் சந்திப்பை நடத்தினார்.
பீகாரில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கிய RJD லாலு! Bihar Seat Sharing: RJD 26, Congress 9, Left 5
மின்னம்பலம் -indhu : பீகாரில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை, லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் இன்று (மார்ச் 29) ஒதுக்கியுள்ளது.
பீகாரில் மாநில அளவில் இந்தியா கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
பீகார் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
Lalu prasad yadav allocated 9 seats to Congress in Bihar!
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
கணேசமூர்த்தியின் கடைசி நாட்கள்... முதல்வருக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!
மின்னம்பலம் -Aara : ஈரோடு மக்களவை உறுப்பினரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கொங்கு மண்டலம் மட்டுமல்ல தமிழ்நாடு அரசியல் வட்டாரம் தாண்டி டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
கணேசமூர்த்தியின் சக எம்பிக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் அலைபேசி செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சில விஷ மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த கணேசமூர்த்தி, நான்கு நாள் மருத்துவ போராட்டத்துக்குப் பிறகு 28ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காலமாகிவிட்டார்.
வெள்ளி, 29 மார்ச், 2024
கடந்த 50 ஆண்டுகளில் திமுக சாதியை ஒழித்து விட்டதா ? பெரியார் சாதியை ஒழித்து விட்டாரா?
Kandasamy Mariyappan : தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் பாஜக WhatsApp University மாணவர்கள் நக்கலாக கேட்பது...
கடந்த 50 ஆண்டுகளில் திமுக சாதியை ஒழித்து விட்டதா, பெரியார் சாதியை ஒழித்து விட்டாரா.!
இதுநாள் வரையில் சமூக வலைதளங்களில் மட்டுமே பேசி வந்தவர்கள் இப்போது Mainstream Mediaவிலும் பேச ஆரம்பித்து விட்டனர்.!
நான் கிராமத்தில் பிறந்து 52 வயதை கடந்தவன்.!
கடந்த 52 ஆண்டுகளில் கிராமத்தில் சாதிய பார்வை எப்படி மாறியுள்ளது என்பதை தெளிவாக உணர்ந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.!
1970 வரையில்...
1. தலித் மக்கள் படிக்கவில்லை.!
2. 80 வயது வரையில் உள்ள தலித் மக்கள், 10 வயது முதல் உள்ள குடியானவர்களை அய்யா, சின்னய்யா, ஆண்டை, ஆஞ்சயி என்றே அழைப்பார்கள்.!
3. அதேவேளையில் 10 வயதுடைய குடியானவர்கள், 80 வயது தலித் ஆண், பெண்களை ஏ கருப்பா இங்க வாடா, ஏ கருப்பாயி இங்க வாடி என்றுதான் அழைப்பார்கள். அது தவறாக கருதப்படவில்லை.!
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை- இலங்கையில் சம்பவம்
hirunews.lk: கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!
முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
மதனின் சவுக்கு ஆபரேஷன் .. கூடவே மாட்டிக்கிட்ட சசிகாந்த் செந்தில் - திருநாவுக்கரசு ... sting operation by Madan ravichandran EP1
கோவையில் திமுகவிற்குத்தான் வெற்றி.. அண்ணாமலைக்கு 3வது இடம்.. அப்போ அதிமுக? வெளியான கருத்து கணிப்பு!
கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.
அதானி வெறும் பினாமிதான்..சொத்தெல்லாம் மோடியுடையது? இதை அம்பலமாக்கிய அர்விந்த் கெஜ்ரிவால் கைது ரகசியம்
அதிரி புதிரி : : அர்விந்த் கேஜ்ரிவால் மோடியை மிகப்பெரும் ஊழல்வாதி என ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி அதானி வெறும் பினாமிதான்..சொத்தெல்லாம் மோடியுடையது எனக்கூறியதால் கோபத்தில் அவரைக் கைது செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
யார் இந்த கணேசமூர்த்தி? தாய்மாமன் போட்ட விதை... வைகோ வளர்த்த விருட்சம்!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி… மார்ச் 24 ஆம் தேதி ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். முதலுதவிக்குப் பின் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணேசமூர்த்தி மார்ச் 28 ஆம் தேதி காலமாகிவிட்டார்.
ஈரோடு அருகில் உள்ள பூந்துறை தாலுகா, சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு கிராமத்தில் பிறந்தவர் கணேசமூர்த்தி. செல்வச் செழிப்பான விவசாய குடும்பத்தின் மகனாகப் பிறந்த கணேச மூர்த்தி தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சென்னிமலை அருகில் உள்ள தனது தாய்மாமன் ஊரான உலகபுரத்தில் பள்ளி படிப்பு படித்தவர்.
வியாழன், 28 மார்ச், 2024
சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?
இவர் கொழும்பில் வைத்து ஒரு ஆயுத குழுவால் (ஜேவிபி) சுட்டு கொல்லப்பட்டதாக அந்த காலக்கட்டங்களில் எல்லா ஊடகங்களும் கூறின!
கே குணரத்தினம் இலங்கை திரைப்பட உலகின் ஆதார தூணாக விளங்கியவர் . இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல.!
32 சிங்கள திரைப்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார்
அதில் 25 படங்கள் வெற்றி படங்கள், ( Box office hit) . இலங்கையில் வேறு எந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் இந்த சாதனைக்கு அருகில் கூட வரமுடியாது.
இலங்கை முழுவதும் பல திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார்.
இலங்கை திரைப்படங்களை வியாபார ரீதியில் வெற்றிகரமாக்க இவரது திரையரங்குகள் பெரும் வாய்ப்பாக அமைந்தது
அது மட்டுமல்லாமல் ஹெந்தல வத்தலையில் இவர் அமைத்த விஜயா ஸ்டியோ நவீன வசதிகளுடன் கூடியது. அங்கு ஹாலிவூட் படங்களின் படப்பிடிப்புகளும் நடந்தன.
கணேசமூர்த்தியின் இழப்பு பெரும் துயரம்: ஸ்டாலின் வேதனை! - வைகோ இரங்கல்!
மின்னம்பலம் - ஆரா : ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர்.
பின்னர், அண்ணன் வைகோவுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்!
ராதா மனோகர் அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்!
திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும்
இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால் அதில் எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும் இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் விவரம்!
Natarajan Kandasamy : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் விவரம் இது. அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
போயஸ் தோட்டம், சென்னை
கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
அண்ணா சாலை, சென்னை
602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
திரு ஏ.கணேசமூர்த்தி காலமானார் . ஈரோடு எம்பி - மதிமுகவின் முக்கிய தலைவர்
ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.
இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது.
இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ம.தி,மு.க, நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
பம்பரம் இல்லை... பானைக்கு சிக்கல்... ஆனால் தமாகாவுக்கு சைக்கிள் .தேர்தல் ஆணையத்தின் -----?
minnambalam.com - Aara : “திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம், அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்ட பானை சின்னத்தையும் வழங்க முடியாது என்று கை விரித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்ற திருமாவளவன் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
எனவே ஏற்கனவே நாங்கள் போட்டியிட்ட பானை சின்னத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ’கடந்த இரண்டு பொது தேர்தல்களில்
குறைந்தபட்சம் ஒரு சதவீதம் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்குகளை
பெறாததால் பொதுச் சின்னம் வழங்க சின்னங்கள் சட்டத்தில் இடமில்லை’ என்று
தெரிவித்தது.
புதன், 27 மார்ச், 2024
திருநாவுக்கரசருக்கு எடப்படியார் தூது விட்டார்? மீண்டும் முதலில் இருந்து? ........... நடக்காது என்பார் நடந்துவிடும்
tamil.oneindia.com - Shyamsundar : அடடா.. சைடு கேப்பில்.. பெரிய மீனையே தூக்க பார்த்துட்டாரே எடப்பாடி! திமுக கூட்டணிக்கு போன திக் மெசேஜ்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் ஒருவழியாக நேற்று இரவுதான் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர். திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற துரை வைகோ முயற்சி!
மாலை மலர் : திருச்சி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.
அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது.
ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தாலிபான் அறிவிப்பு : பெண்களை பொதுவெளியில் கற்களால் அடித்து கொல்வோம்!
மாலை மலர் : தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிராக போர் அறிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அந்நாட்டு தொலைகாட்சியில் ஆடியோ வெளியிட்ட தலிபான் தலைவர் மேற்கத்திய மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
"நாங்கள் அவர்களை கற்களால் அடித்து சாகடிப்பதை நீங்கள் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல் எனலாம். ஆனால், விரைவில் நாங்கள் விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக இதனை அமல்படுத்த இருக்கிறோம். நாங்கள் பெண்களை பொது வெளியில் அடிப்போம். இவை உங்களது ஜனநாயகத்திற்கு எதிரானவை, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்," என்று தெரிவித்தார்.
தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசு தொலைகாட்சியில் அடிக்கடி முகம் தெரியாதவரின் குரல் செய்திகளை ஒளிபரப்புகிறது. அந்த வகையில், வெளியான ஆடியோவில் தான் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர தண்டனை குறித்த அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.
மயிலாடுதுறை வேட்பாளர் மாநில மகிளா காங்கிரஸ் வழக்கறிஞர ஆர். சுதா!
மின்னம்பலம் -Kavi : மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று (மார்ச் 26) அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2024 மக்களவை தேர்தலுக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டது.
இந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று இரவு அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஆர். சுதாவை மயிலாடுதுறை வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி.
அமேரிக்க பாலம் உடைந்தது: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்
தினத்தந்தி: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. 2½ கி.மீ. தூரத்துக்கு 4 வழி பாதையாக அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட அந்த கப்பல் இலங்கை நோக்கிபயணித்ததாக தெரிகிறது. கப்பலில் 22 மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவருமே இந்தியர்கள் ஆவர்.
செவ்வாய், 26 மார்ச், 2024
கடனாளியிடம் வசூலித்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகளிடம் இழந்த நிதி நிறுவன ஊழியர்
மாலைமலர் : சாத்தூர் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தூர் அரசினர் தொழிழ் பயிற்சி மைய உதவி பயிற்சி அலுவலர் சஞ்சய்காந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி விளக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிச்சைமணி (வயது 25) என்பதும், இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் ஏஜெண்டாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மாலத்தீவு போல வங்கதேசத்திலும் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் -
bbc.com : மாலத்தீவைத் தொடர்ந்து வங்கதேசத்திலும் 'இந்தியா அவுட்' முழக்கம் - என்ன பிரச்னை?
மாலத்தீவைத் தொடர்ந்து, வங்கதேச அரசியலிலும் இந்தியா குறித்த விவாகரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆளும் அவாமி லீக் மற்றும் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையே அரசியல் ரீதியாக கடும் விவாதம் நடந்து வருகிறது.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிகோரி வழக்கு: நீதிபதி விலகல்!
மின்னம்பலம் - Selvam : இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி எக்கோ நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் இன்று (மார்ச் 25) விலகியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500-க்கும் அதிகமான பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்த காலம் முடிந்தபிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ மற்றும் அகி நிறுவங்களுக்கு எதிராக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தங்க தமிழ்செல்வன் ஜெயிக்கலனா ராஜினாமா” : அமைச்சர் மூர்த்தி பேச்சு!
மின்னம்பலம் - Kavi : தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெறாவிட்டால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி, திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர்.
இதில் தங்க தமிழ்செல்வன் அதிமுகவிலிருந்து டிடிவி தினகரனுடன் சென்று, அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர். தினகரனுக்கு நெருக்கமானவராகவும், அமமுக கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தவர் தங்க தமிழ்செல்வன்,
தற்போது டிடிவி தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் ஒரே தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் தென்மாவட்ட தொகுதிகளைப் பொறுத்தவரைத் தேனி தொகுதி முக்கியமான தொகுதியாகப் பார்க்கப்படுகிறது.
திங்கள், 25 மார்ச், 2024
திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை: துரை வைகோ
மின்னம்பலம் -indhu : தி முகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என மதிமுக வேட்பாளர் துரைவைகோ இன்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிட உள்ளார்.
நேற்று திருச்சி அறிவாலயத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், “செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டிடுவோம்” என்று கண்ணீருடனும் ஆவேசத்துடனும் துரை வைகோ பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுப்பிரமணியன் சுவாமி : மோடி ஜெயிக்கக்கூடாது; அவரை தோற்கடிக்க வேண்டும்!
தினமணி ; மதுரை: மோடி ஜெயிக்கக்கூடாது, அவரை தோற்கடிக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாஜக பிரமுகர் சசிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் நயினார் நகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவது குறித்தெல்லாம் நான் விசாரணை செய்யவில்லை.எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது.
தமிழர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று கயிறு திரித்த ருக்மணி அருண்டெல் கம்பனி!
George Arundale |
ருக்மணி அருண்டெல் |
ராதா மனோகர் : தமிழர்களின் பாரம்பரிய சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று திரித்த ருக்மணி அருண்டெல் கம்பனி!
Rukmani Neelakanta Sastri
29 February 1904
Died 24 February 1986 (aged 81)
George Arundale Born 1 December 1878
Surrey, England
Died 12 August 1945 (aged 66) அடையார் தமிழ்நாடு
சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று நம்மவர்களே நம்புவதை என்ன சொல்வது?
1935 (தைத்திங்கள் முதலாம் நாள் ) இல் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரின் தமிழ் பார்ப்பன மனைவியான ருக்குமணி என்பவர் இந்த சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார் -
எனது சின்னஞ்சிறு பராயத்தில் கோயில் திருவிழாக்களில் சதிர் கச்சேரி அல்லது சின்னமேளம் என்ற சொற்களை கேட்டிருக்கிறேன் ..
புத்தூர் செட் .. ஆவரங்கால் செட் . கைதடி செட் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள் .
வட மாகாணம் இலங்கையின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
tamilmirror.lk : காணி உரிமை வழங்கும் 'உறுமய தேசிய வேலைத்திட்டத்தை' ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் கூறினார்.
யாழ்ப்பாணம் - ஒட்டகப்புலம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற "உறுமய" காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!
இன்று (மார்ச் 24) காலை திருச்சி அறிவாலயத்தில் நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துரை வைகோ கண்ணீருடனும் ஆவேசத்துடனும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து சீட் கிடைக்காததால் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி கணேசமூர்த்தி கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
கணேசமூர்த்தி எம்.பி. உடல்நிலை குறித்து வைகோ விளக்கம்!
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார்.
இத்தகைய சூழலில் இன்று (24.03.2024) காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றார்.
ஞாயிறு, 24 மார்ச், 2024
ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி - தற்கொலை முயற்சி?
இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்நிலையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில்
கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!
nakkheeran.in : நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!
thesam .நெட் arulmolivarman : லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!!
வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது.
அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.