சனி, 19 செப்டம்பர், 2015

குஜராத்தில் இட ஒதுக்கீடு போராட்ட தலைவர் கைது ...மொபைல் இண்டர்நெட் சேவை தடை..

படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு தடையை மீறி சூரத்தில் யாத்திரை செல்ல முயற்சித்ததாக ஹர்திக் படேலை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அங்கு வன்முறை நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணிநேரத்துக்கு மொபைல் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.ஜி.பி. பி.சி.தாகூர் கூறுகையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மொபைல் இண்டர்நெட் சேவையை காலவரையறையின்றி துண்டித்துள்ளதாக தெரிவித்தார். ஹர்திக் படேலின் கைதுக்கு பிறகு சூரத் மாவட்ட கலெக்டர் இதற்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.

வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது?

nisaptham.com: அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி’ என்று ஊர் முழுக்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து வை.கோபால்சாமி என்ற பெயர் அறிமுகமானது. அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து நிறையப் பேர் மதிமுகவை ஆதரித்துப் பேசினார்கள். செந்தாமரை அச்சகத்தில் செய்தித்தாள் படிக்கப் போகும் போதெல்லாம் வைகோ பற்றியும் மதிமுக பற்றியும்தான் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பிறகு பதின்மூன்றாண்டு வனவாசம்...இனி உனக்கு ஆயுள் முழுக்க வனவாசம்’ என்று திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதிக்கு எதிராக அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவு கடுமையாக அமுலாக்கப்பட்ட அந்தச் சமயத்தில் மனதளவில் புலிகளின் ஆதரவாளராக இருந்தவர்கள் வைகோவின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். திமுக-அதிமுகவுக்கான மாற்று இனி மதிமுகதான் என்றார்கள். அவர்களது கணிப்பும் தவறாகவில்லை. one man ஷோ எல்லாம் எம்ஜியார் ஜெயலலிதா  போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அவர்களுக்கு ரசிகர்கூட்டம் இருக்கிறது,அவர்களுக்கு போதியளவு லட்டுக்களும் கிடைத்தது, .இவருக்கும் ரசிகர் கூட்டம் இருந்தது ஆனால் லட்டு கிடைக்கவில்லையே? எல்லா ரசிகனுக்கும் லட்டு தின்னத்தான் ஆசை, லட்டு இல்லாமல் இதே ஆட்டத்தை வைகோ போடுவது அவரது பேராசையை காட்டுகிறது,

திருக்குறளை எந்த தமிழ் அரசனும் ஆதரிக்கவே இல்லை.ஏன்? அத்தனை அரசர்களும் பார்ப்பன அடிவருடிகள்?


பெரியார் பிறந்த நாள் அன்று, பெரியார் திடலில் பேசிய தமிழறிஞர் அவ்வை நடராசன், ‘திருக்குறளை ஆதரித்து மாநாடு நடத்திய ஒரே தலைவர் பெரியார் ஒருவர் தான்’ என்றார். மகிழ்ச்சி.
போற இடமெல்லாம் இததானே திரும்ப, திரும்பச் சொல்லிகிட்டு இருக்கேன்.
இவர் போன்ற தமிழிறிஞர்கள், இதை 30 வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா.. சில மூதேவிகள் பெரியாரை தமிழ் விரோதி என்று சொல்வதை அப்பவே தகர்த்திருக்கலாம்.
என்னைப் போன்றவர்களுக்கும் இந்த இம்சைகளுக்குப் பதில் சொல்ற வேலை மிச்சமாயிருக்கும். (வீடியோவிலிருக்கிறது என்னுடைய சவால்) மதிமாறன்.wordpress.com

விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம்! தற்கொலை செய்யுமளவு விஷ்ணுபிரியா கோழை அல்ல..கோகுல்ராஜ்ஜின் தாய் ....

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கடைசியாக எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டது. பெற்றோருக்கு எழுதிய 9 பக்க கடிதத்தை சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக ஜூன் மாதம் 26ல் கிடந்தார். தற்கொலை எனக்கூறி போலீசார் விசாரித்து வந்த நிலையில், காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கொலை வழக்காக பதிவு செய்து திருசெங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அ.தி.மு.க.வுக்கு மேல்–சபை எம்.பி. பதவி வழங்கி பிராயச்சித்தம் தேடிய ரங்கசாமி

புதுவை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் அளவுக்கு ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தது. ஆனால், அந்த கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால் தேர்தலில் வெற்றி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.
எதிர் தரப்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி களம் இறங்கினார். அவருக்கு சில கட்சிகளும் சாதகமாக செயல்பட்டது. அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கும், இதனால் பொது வேட்பாளர் எளிதாக வெற்றி பெறலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்நேரத்தில் பொது வேட்பாளருக்கு எதிர்ப்பாக இருந்த கட்சி அதிமுகதான். அதிமுகவுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு தராததால் அ.தி.மு.க.வுக்கும், என்.ஆர். காங்கிரசுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு தேர்தலோடு பிரிந்துவிட்டது.

விஷ்ணுபிரியா டிஸ்பி தற்கொலைக்கு அதிகாரியே காரணம்! தோழி மகேஸ்வரி டிஎஸ்பி கண்ணீர்...

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி.விஷ்ணு  பிரியாவின் தோழியான  மகேஸ்வரி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சப்-டிவிசனில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவர் தோழி இறந்த துக்கம் தாங்காமல் சேலம் வந்தார். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:- நானும், விஷ்ணு பிரியாவும் சிவகங்கையில் டி.எஸ்.பி.யாக பயிற்சி பெற்றபோது நாங்கள் இருவரும் தோழிகளாக இருந்து வந்தோம். நேற்று மதியம் 2.48 மணியளவில் எனக்கு விநாயர் சதுர்த்தி பணி என்று செல்போனில் விஷ்ணு பிரியா பேசினார். அப்போது விநாயகர் சிலை பாதுகாப்புக்கு சென்று விட்டு இப்பதான் வந்தேன் என்று கூறி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு லைனில் வருவதாக கூறி, அப்புறம் என்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

கேரள எஸ்டேட்டுகளில் கொத்தடிமை தமிழர்கள் மாதம் ரூ.232 தான் சம்பளம்.

செங்கோட்டை : கேரள எல்லையில் உள்ள எஸ்டேட்களில் கொத்தடிகைளாக வேலை பார்க்கும் தமிழர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிலாளர் அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன. kerala estate protest தமிழக கேரளா எல்லை பகுதியான தென்மலை அருகிலுள்ளது கலுதுருட்டி அம்பநாடு. இங்கு சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது திருவாங்கூர் டி&ரப்பர் எஸ்டேட். இங்கு 3 பிரிவுகளாக தேயிலை, ரப்பர் மற்றும் ஏலக்காய், கிராம்பு, மிளகு எஸ்டேட் உள்ளது. தமிழகத்தை சார்ந்த சுமார் 1500 குடும்பத்தினர் அம்பநாடு, அரண்டல், மெத்தாப்பு, ஆணைச்சாடி, கீழ அம்பநாடு, உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் எஸ்டேட் குடியிருப்புக்களில் தங்கி இங்கு பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வைகோவின் கூட்டணி ஆலோசனையால் மிரண்டு போன மதிமுக நிர்வாகிகள் ஓட்டம்....

சிறிய கட்சிகளுடன் இணைந்து, வைகோ அமைக்கும் கூட்டணி முயற்சியால், ம.தி.மு.க.,வில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. வைகோ முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.காஞ்சிபுரம், சேலம் போன்ற முக்கிய மாவட்ட செயலர்கள், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அவர்களுடன், ம.தி.மு.க.,வின் மகளிர் அணி செயலரும் கட்சி மாறி விட்டார். பல முக்கிய நிர்வாகிகள், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேற தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.  சமீபத்தில், தி.மு.க., வுடன் நெருங்க விரும்பியதுடன், அதற்கான நடவடிக்கைகளையும், ம.தி.மு.க., எடுத்தது. 2016 சட்டசபைத் தேர்தலை, தி.மு.க.,வுடன் இணைந்து சந்திக்கவும் விரும்பியது. ஆனால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆர்வம் காட்டாததால், அதிருப்தியில் இருந்த, ம.தி.மு.க., மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. மதிமுக இல் உட்கட்சி சனநாயகம் இல்லை. இரண்டாம் கட்ட தலைவர்களின் யோசனை கேட்கப்படுவதில்லை. வைகோ எதைப் பேசினாலும் அதுவே கட்சியின் கொள்கை கோட்பாடு ஆகப் போய்விடுகிறது. அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக வந்தபோது அதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வைகோ அந்தப் பதவி ஒரு பொம்மை என்று வருணித்தார். இப்படியான பேச்சு தேவையற்றது. அதுமட்டுமல்ல அர்த்தமற்றது. சரி, பிழை பார்க்காமல் மனதில் பட்டதை காட்டமாகச் சொல்லிவிடுகிறார்

பாக். விமானப்படை தளம் மீது தலிபான் அதிரடித் தாக்குதல்...42 பேர் பலி !

பெஷாவர் : பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் படாபர் விமானப்படை தளம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் பாதைகளில் இன்று வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ உடை அணிந்து வந்த 13 தீவிரவாதிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இரண்டு பாதைகள் வழியாக நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.  கையெறி குண்டுகள், மோர்ட்டர் ரக குண்டுகள் மற்றும் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளால் பாதுகாப்பு படை வீரர்களை கண்மூடித்தனமாக தாக்கிய தீவிரவாதிகள், விமானப்படை தள வளாகத்தில் உள்ள மசூதிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர்.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்! பழனிச்சாமியின் குவாரிகளில் நரபலி அரங்கேற்றம்(படங்கள்)

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சின்னமலம்பட்டியில் ஏற்கனவே தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தோண்டியபோது மேலும் இரண்டு பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குவாரிகளில் நரபலி கொடுத்து அவர்களின் உடல்களை சின்னமலம்பட்டியில் இருக்கின்ற மயானத்தில் புதைத்திருப்பதாக எழுந்த புகாரில் இரண்டாம் கட்டமாக தோண்டும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்திருக்கிறது. இரண்டாவது கட்டமாக தோண்டும் பணியில் இரண்டு எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாளையும் (சனிக்கிழமை) இதேபோன்று தோண்டும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமலம்பட்டியில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது 4 பேரின் எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன. அப்போது தோண்டுப்பட்ட ஆழம் 5 அடி மட்டுமே இருந்த காரணத்தினால், 10 அடிக்கு குறையாமல் தோண்ட வேண்டும் என்று சகாயம் குழு கேட்டுக்கொண்டது;அதன் அடிப்படையில் இன்று காலை தோண்டும் பணி தொடங்கியது. இதனை சகாயம் பார்வையிட்டார். மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்தப் பணியில் இரண்டு எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. சின்னமலம்பட்டியில் மொத்தம் 6 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அலுவலகத்துடன் இணைந்த தனது வீட்டில் விஷ்ணுப்பிரியா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். வீட்டில் சோதனையிட்டபோது விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதனை கைப்பற்றிய சேலம் டிஐஜி வித்யாகுல்கர்னி இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். 27 வயது ஆகும் விஷ்ணுப்பிரியா திருமணம் ஆகாதவர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எம்.ரவி ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாவம் இவருக்கு இவருக்கு எந்த போலிஸ் அதிகாரியால் எந்த டார்ச்சரோ???

பெரியார் தன்மீது கோபப்பட்டவர்களை இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் ,

பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!”
“நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?
வமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!
“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.
“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.
“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.
யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!

பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தீஸ்தா. மோடியின் சிம்ம சொப்பனம்!

தீஸ்தா சேதல்வாத்தேசத் துரோகி” என்று மோடி அரசால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட், அவரைக் கைது செய்து சிறையிடத் துடிக்கும் மோடி கும்பலின் சதிகளிலிருந்து தற்காலிமாக மீண்டுள்ளார். மோடி அரசால் ‘தேசத்துரோகி’ எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத் தீஸ்தாவினுடைய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஆகிய தன்னார்வ நிறுவனங்கள் 2004-லிருந்து 2006 வரையிலான காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் போர்டு பவுண்டேசனிடமிருந்து முறைகேடாக அந்நிய நிதியைப் பெற்றுள்ளதாகவும், அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்திற்கு (FCRA) எதிராகச் செயல்பட்டதாகவும், கிரிமினல் சதிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி கடந்த ஜூலை 8 அன்று மோடி அரசின் கூண்டுக்கிளியான மையப் புலனாவுத்துறை தீஸ்தா மீது வழக்கு தொடுத்தது.

தமிழக பாஜகவில் தமிழிசை சுந்தரராஜன் ஓரங்கட்டப்படுகிறாரா?

தமிழக பாஜக முக்கியத் தலைவர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை அதிகரித்து வருகிறது என்று சலசலக்கப்படும் செய்தியை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் கடந்த புதன்கிழமை ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுக்கத்தைச் சேர்ந்த பிரதிநிகள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் கடந்த புதன்கிழமை சந்தித்துள்ளனர். சர்ச்சை இதுவல்ல. இந்த சந்திப்பு நடைபெற்றது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மற்ற கட்சியினர் சொன்னபின்னரே தெரியவந்துள்ளது என்பதுதான் பிரச்சினை. சபாஷ் காங்கிரசுக்கு போட்டியாக கோஷ்டி கானம்! அந்த பார்ப்பன பேட்டை ரவுடி ராசா இருக்கும் வரை இது வேலைக்காவாது ...

10 ஆயிரம் பழைய பஸ்கள்! ஆயுட்காலம் முடிந்து ஓடும்...பாதுகாப்பு கேள்விக்குறி? பயணிகள் அச்சம்!

தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு பஸ்கள் ஆயுட்காலம் முடிந்து, ஓடுவதற்கு லாயக்கற்ற நிலை யிலும், தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இவற்றில், 4,000 பஸ்களின் நிலைமை படுமோசம்; இதன் காரணமாகவே, அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த, தமிழக அரசு பஸ், தென்காசியில் இருந்து கேரள மாநிலம், கொட்டாரக்கரைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றது. இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த, சுவாதி, 30, என்ற பெண் பயணம் செய்தார். புனலுார் என்ற இடம் வந்ததும், பஸ்சின் பின்புற படிக்கட்டு வழியாக இறங்க, இருக்கையில் இருந்து எழுந்து, ஒரு காலடி வைத்ததும், அடித்தளம் உடைந்து, 'பொத்'தென, சாலையின் நடுவே விழுந்து, படுகாயம் அடைந்தார். இச்சம்பவம், தமிழக அரசு போக்குவரத்துத் துறை நடத்தும் பஸ்களின் நிலையை வெட்டவெளிச்சமாக்கி விட்டது. அடித்தளம் அமைக்கப்படும் முறை:இரும்பு பைப் மீது, மரக்கட்டைகள் பதிக்கப்பட்டு, அதன் மீது அலுமினிய தகடு அடிக்கப்பட்டு, பஸ்சின் அடித்தளம் உருவாகிறது. 
இந்த லட்சணத்தில் பராமரித்தால் ஒரு நாள் ஓட்டுனரே ஓட்டை வழியாக விழுந்து விடுவார்

சுபாஷ் சந்திர போஸ் விமானவிபத்தில் இறக்கவில்லை 1964 வரை உயிருடன் இருந்தார் ! ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்

சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டிருக்கிறது.சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து இந்தியாவில் பல கதைகள் உலா வருகின்றன. இதுவரை கொல்கத்தா காவல்துறை வசமிருந்த இந்த ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இருந்தபோதும், அந்த ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை.
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி தனியாக ராணுவமொன்றை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸை நேச நாட்டுப் படைகள் தேடிவந்தன.
அவரது மரணம் குறித்து இந்தியாவில் பல்வேறு கதைகள் உலவிவருகின்றன வெளியிடப்பட்டிருக்கும் ரகசிய ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெரியவில்லை. இவைதவிர, சுபாஷ் சந்திர போஸ் குறித்து வேறு எத்தனை ரகசிய ஆவணங்கள் இந்திய அரசின் வசம் இருக்கின்றன என்பது தெரியவில்லை.

வியாழன், 17 செப்டம்பர், 2015

குஷ்பூ :பெண்கள் இன்று சுயமரியாதையோடு இருப்பதற்கு பெரியார்தான் காரணம்.

பெரியார் திடலில் நடந்த பெரியார் பிறந்தநாள் விழாவில் நடிகையும், தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளருமான குஷ்பூ சுந்தர் பேசியபோது, நான் மும்பையில் இருந்து இங்கு தமிழ்நாடு வந்ததில் இருந்து முதல் முறையாக மிக பெரியளவில் சந்தோசமா இருக்கேன்னா அது இங்கு பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்தநாளில் பேசும் இந்த நிகழ்சிக்காக தான். இதை பெரிய சாதனையாக பார்க்கிறேன். கடவுள் இருக்கிறாரா? தெரியாது. ஆனால் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட ஒருவரை கை எடுத்து கும்பிட முடியாது. நம்முடைய ஆறாவது அறிவு என்ன சொல்லுதோ அதை தான் செய்ய வேண்டும். மதம் மனிதனை மிருகமாக்கும் என்றார் பெரியார். சாதி ஒழிக்க வந்த புரட்சி விதை பெரியார். தாலி கட்டுவதும் கட்டாமல் விடுவதும் அவரவர் சுதந்திரம். இதை தான் செய்யனும், இதை தான் சிந்திக்கணும் என எதையும் திணிக்க கூடாது. இதெல்லாம் பெரியார் பற்றி படிக்கும்போது தான் அறிந்துகொண்டேன். ஆசிரியர் அய்யா (கி.வீரமணி) பேசும்போது ‘படிக்காதவர்களுக்கு தான் துணிச்சல் அதிகம்’ என்றார். நான் படிக்காதவள் தான். அதனால் தான் எனக்கு துணிச்சல் இருக்கு போல. கொஞ்சம் திமிரும், கொழுப்பும் இருக்கு.

ஜாதி இருக்கும் வரை ஜாதி இட ஒதுக்கீடும் இருக்கும்! வீரமணி.

135 அடி தந்தை பெரியார் சிலை அமைப்பதன் நோக்கம்!
திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்தில்/20தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலைக்கு ஒரு முன்னோட்டம்தான் சென்னை பெரியார் திடலில் திறக்கப்பட்டுள்ள 21 அடி உயர சிலை தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்கு விளக்கம் சென்னை, செப்.17-
திருச்சி சிறுகனூரில் அமைய விருக்கும் பெரியார் உலகத்தில், தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலைக்கு ஒரு முன்னோட்டம்தான் சென்னை பெரியார் திடலில் இன்று (17.9.2015) திறக்கப்பட்டுள்ள 21 அடி உயரமுள்ள தந்தை பெரியார் சிலை என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கோட்டயம் காண்வென்டில் கன்னியாஸ்திரி கொலை! சகோதரி அமலா தலையில் காயத்துடன்.....


கேரள மாநிலம் கோட்டயத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் மாவட்டம் பாலா நகரில் உள்ள லிசெக்ஸ் கார்மெலைட் என்ற கான்வென்ட் பள்ளியில் இன்று காலை சகோதரி அமலா(69) என்று அழைக்கப்படும் கன்னியாஸ்திரி தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எர்ணாகுளம் மாவட்டத்தின் ஐ.ஜி அஜித் குமார் விசாரணையை தொடங்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையின் படி, மர்மமாக இறந்து கிடந்த சகோதரி அமலா இன்று காலை நேர பிரார்த்தனையில் பங்கேற்கவில்லையென்றும், கடந்த 2 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது மாலைமலர்.com

சிலியில் நிலநடுக்கம் 8.3 ரிச்டர் ! சுனாமி 15 அடி உயரத்திற்கு பாய்கிறது!


சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டுக் கடற்கரையோரத்தின் பல பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. பூகம்பம் தாக்கியதையடுத்து பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, கரையோரம் வசித்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். பல இடங்களில் சுனாமி அலைகள் பதினைந்து அடி  உயரத்திற்கு எழுந்தனர். இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 8.3ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் சாண்டியாகோவுக்கு வடமேற்கில் 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிந்தைய பல அதிர்வுகள் அந்தப் பிராந்தியத்தை உலுக்கின. இவையும் ரிக்டர் அளவுகோலில் ஆறுக்கு மேல் பதிவாகின. கொகிம்போ, வால்பரைசோ போன்ற நகரங்களில் தண்ணீர் புகுந்திருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. வெளியேற்றப்பட்டவர்கள் உயரமான இடங்களிலேயே இருக்கும்படி அதிபர் மிச்செல் பஷெலெ வலியுறுத்தியுள்ளார்.bbctamil.com

விஜயகாந்த்: முதலீட்டாளர்களிடம் அதிமுக அமைச்சர்கள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்

மாநாட்டிற்கு வந்த முதலீட்டாளர்களிடம் அதிமுக அமைச்சர்கள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்: விஜயகாந்த்  திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், விஜயகாந்த் பேசியபோது, ’’அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. நகர் முழுவதும் ஜெயலலிதாவுக்கு கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 2016 தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவுக்கு கெட்-அவுட் சொல்வார்கள்.. தேர்தலில் யாரும் கூட்டணி சேரக்கூடாது என்பதில் சிலர் கவனமாக உள்ளனர். ஆனால் அது நடக்காது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்த முதலீட்டாளர்களிடம் அதிமுக அமைச்சர்கள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். சகாயம் ஆய்வுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க இந்த அரசு முன் நிற்கிறது. ஆனால், டாஸ்மாக் கடைக்கு மட்டும் இந்த அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது’’ என்று குற்றம்சாட்டினார். nakkheeran.in

ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத்! fatwa issued against A.R. Rahman


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது. முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார். இதற்கு ரகுமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து அளித்தார். இந்நிலையில், வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் ”ரஹ்மானுக்கு எதிரான பத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிவாங்கு தன்மையுடன் கூடிய மொழி. அவர் அந்தப் படத்துக்கு மத அடிப்படையில் இசை அமைக்கவில்லை. நான் ரஹ்மானிடம் கூறுவது, அவர் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். முதல்ல ரஹ்மான் தனது தந்தையின் பெயரையும் ( குலசேகர முதலியார்/ ஆர்.கே.சேகர் )அவர்தான் தனது இசை குரு என்பதையும் பகிரங்கமாக ஒத்துகொள்ளட்டும் மாலைமலர்.com

புதன், 16 செப்டம்பர், 2015

தமிழக அரசு பஸ்சுக்குள் இருக்கை உடைந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த பெண்

கேரள மாநிலம் புனலூர் காயம்குளம் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சாந்தி (வயது 30). சாந்தியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். சமீபத்தில் சாந்தி தனது கணவருடன்
ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அதன்பிறகு அவர் தனது கணவருடன் கேரளா புறப்பட்டார். இதற்காக தமிழக விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் நேற்று பகல் புனலூரில் உள்ள கேரள அரசு போக்குவரத்துக்கழக டெப்போ அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீர் என்று சாந்தியின் இருக்கையின் கீழ் பகுதி உடைந்தது. அதில் ஏற்பட்ட ஓட்டை வழியாக சாந்தி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அலறினார். இதனால் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். மேலும் சாந்தி பஸ்சின் ஓட்டை வழியாக சாலையில் தவறி விழுந்ததை பார்த்த அந்த பகுதி ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் அங்கு ஓடிசென்று அவரை காப்பாற்றினார்கள்.

குழந்தையின் அழுகுரலால் கோமாவில் இருந்து மீண்ட தாய்!


அமெரிக்காவில் பிரசவத்தின் போது கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இளம்தாய் தனது குழந்தையின் அழுகையால் சுயநினைவு பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் ஜெரோம். இவரது மனைவி ஷெல்லி கேவ்லே பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஷெல்லிக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை பிரசவ அறைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஷெல்லிக்கு திடீரென காலில் ரத்தம் உறைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.   கோமா நிலையிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கோமா நிலையில் இருந்த ஷெல்லி குழந்தையின் அழுகுரலால் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். உருக்கம் நிறைந்த இந்த வீடியோ தொகுப்பு அனைவராலும் அதிகமாக பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது.webdunia.com

514 போலி மாவோஸ்டுக்களை உருவாக்கி சரணடைய செய்து C.R.P.F பண வேட்டை......

514 hapless Jharkhand men, most of them poor tribals with no history of breaking the law, who begged, borrowed or pledged their family wealth to raise the money to pay an unscrupulous man who would arrange for them the job of a Central Reserve Police Force (CRPF) constable. The catch: They would claim to be Maoists, surrender to the CRPF with weapons supplied by the go-between, spend some months in jail and then get recruited into the central force as reformed extremists. Over a year after the scandal broke out, two known players chargesheeted and a CBI probe sought by then Jharkhand Chief Minister Hemant Soren, there has been no movement. Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3053036/The-bizarre-story-514-Jharkhand-men-scammed-surrendering-Maoists-promise-CRPF-jobs.html#ixzz3luHqXNZt Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
மேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள குண்ட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான பழங்குடியின இளைஞர். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள கீழ்சந்தை போலீசு நிலையத்தில், “தனக்கு மத்திய ரிசர்வ் போலீசு படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ரா ஆகிய இருவரும் தன்னிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக’’க் குற்றஞ்சுமத்தி புகார் ஒன்றை அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் தினேஷ் பிரஜாபதியும் ரவி போத்ராவும் கைது செய்யப்பட்டாலும், பமேஷ் பிரசாத்துக்கு வேலையும் கிடைக்கவில்லை, அவர் கையூட்டாக அளித்த பணமும் கிடைக்கவில்லை,

ஐ.நா: இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது. அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

2000 இந்திய VIP களுக்கு இனி அமெரிக்க விமான நிலைய சலுகைகள் வழங்கப்படும்

புதுடில்லி: நம் நாட்டின் வி.ஐ.பி.,க்கள், அமெரிக்க விமான நிலையங்களில், பாதுகாப்பு சோதனையில்லாமல் செல்வதற்காக, 2,000 வி.ஐ.பி.,கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இங்கிருந்து, அமெரிக்கா செல்லும் வி.ஐ.பி.,கள், அந்நாட்டு விமான நிலையங்களில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பாதுகாப்பு சோதனைகளை முடிக்க வேண்டி உள்ளது.
சிலரை, சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்துவதும், நாள் முழுக்க அவர்களை காத்திருக்க வைப்பதும் நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் நடிகர் ஷாரூக்கான் ஆகியோரிடம், அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணை பெரும் சர்ச்சைக்குள்ளானது.அதேபோல, நடிகர்கள் அமீர்கான், ஜான் ஆப்ரஹாம், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான பிரபுல் படேல் மற்றும் முன்னாள் துாதரக அதிகாரியானஹர்தீப் புரி ஆகியோர், விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டனர்.  சினிமா நடிகர்கள், அரசியல்வியாதிகள், மற்றும் இந்திய தொழில் அதிபர்கள்  எல்லாம் யோக்கியர்கள். ஆனால் வயிற்றுப்பிழைப்புக்காக குடும்ப மேம்பாட்டிற்காக கல்விக்காக வெளிநாடு செல்லும் மேற்சொள்ளப்பட்டிருக்கும் நபர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த சாதாரண இந்திய குடிமக்கள் பலமணி நேரம் நின்று தான் செல்ல வேண்டும்.  அம்பானி ,அதானி ,பிரதிபா பட்டீல் ஷாருக் அமிதாப்  எல்லாம் நாட்டுக்கு ரொம்ப சேவை செஞ்சவுங்க பாருங்க?  வாழ்க  கூத்தாடிகள், வளர்க பாஜகா அரசியல்வியாதிகள்,,

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கரை ஒதுங்கிய சிறுவன் ’அய்லன் குர்தி’க்கு அஞ்சலி

சத்யன் : 14 செப்டம்பர் 2015 சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். அப்போது, துருக்கியில் படகுகள் மூழ்கியதால் அயிலன் குர்தி உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவனது மரணம் குறித்த ஓர் அஞ்சலி..

அய்லன் இறந்துவிட்டான்..
அய்லன் இறந்துவிட்டான்...
எனது மகனே!
உன் சகோதரனை கொன்றுவிட்டார்கள்.

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

meghna - vinavu cartoonபுண்ணிய பாரத தேசத்தின் புதல்வர்களாம் ஹிந்துக்கள் முக்தியடைந்து வைகுந்தமோ கைலாயமோ செல்வதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாத சிந்தித்து வருபவர் மானனீய ஸ்ரீ வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்கள். அம்பாளுக்கு உகந்த ஹிந்துக்களின் புனித தினமாம் வெள்ளிக்கிழமை (11/09/2015) அன்று இன்னொரு (குட்டி) தேசபக்தர் திருவாளர் ரஜினி காந்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மானனீய வீரத்துறவிஜி.
”பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கவுள்ளதாகவும், அதில் நடிக்க ரஜினி காந்திடம் பேச்சு நடத்தப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன்; அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது” என்று மானனீய ஸ்ரீ வீரத்துறவி ராம கோபாலன் அறிவுறுத்தியுள்ளார்.

குவைத்தில் கொன்றுவிடுவார்கள்! எப்படியாவது காப்பாத்துங்க! குவைத்தில் தேனி வாலிபர் குமுறல்


தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (வயது 25). குவைத்தில் டிரைவர் வேலைக்கு கடந்த ஆகஸ்ட் – 2ந் தேதி சென்றார். இதற்காக கும்பகோணம் சோலைபுரத்தைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து வேலைக்கு சென்றார். டிரைவர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணியை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டார். அந்த வேலையை செய்ய மறுத்ததால் அவருக்கு 2 நாட்கள் உணவு மறுக்கப்பட்டது. தனது நிலை குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தார். அதில் எப்படியாவது தன்னை காப்பாற்றுங்கள், கொன்றுவிடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார். இந்த வாட்ஸ் அப் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான யாஸ்லின்பானு தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் தனது கணவரை காப்பாற்றி, அவர் திரும்பி வர உதவி செய்யுமாறு மனு அளித்துள்ளார். இதேபோல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேசிடமும் புகார் அளித்துள்ளார். அதில் குவைத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது nakkheeran.in

இந்திராணியை சிறையில் சந்தித்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள்!

சட்ட விரோதமாக இந்திரானியால் பிரிட்டிஷ் பிரஜா உரிமையும் வைத்துகொள்ள முடித்துள்ளது.இது பெரும் சந்தேகத்திற்கு இடமான விடயமாகும் . இவர் பிரித்தானிய உளவாளியாக இருக்க கூடிய சாத்தியம் உள்ளது, இவரால் எப்படி இந்திய அரசுக்கு தெரியாமல் இப்படி ஒரு மோசடி செய்ய முடிந்தது? இந்திய அரசு இன்னும் இரட்டை பிரஜா உரிமையை அங்கீரிக்க வில்லையே? இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? இந்த ரகசியம் கூட கொலைக்கு காரணமாக இருக்கலாம்?  சோனியா காந்திகூட இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்துவிட்டார்.  மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் சிறையில் சென்று சந்தித்துள்ளனர்.
நீதிமன்றக் காவலில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு உதவி ஏதேனும் தேவையா, சிறையில் வசதிகள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3 வாரங்களாக காவல்துறை காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்த மும்பை காவல்துறையினருக்கு,  இந்தியன் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள இந்திராணியிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட் இருப்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நேற்று சிறைக்கு வந்து தங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற இந்திராணியை சந்தித்து உதவி கோரிய போதுதான், மும்பை காவல்துறைக்கே இந்த தகவல் தெரிய வந்துள்ளது dinamani.com

தொடர்ந்து தமிழ்படங்களை வாங்கும் லைக்கா நிறுவனம்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வணீக ரீதியாகவும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ‘எந்திரன் 2’ படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது.

பாரிஸ் முஸ்லிம் மாநாட்டில் மேலாடையின்றி பெண்கள் போராட்டம்!


பாரீஸ் பிரான்சின் வட மேற்கு பாரிசில் முஸ்லீம்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் பல முஸ்லீம் அறிஞர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க ஆண்களுக்கு உரிமை உண்டா என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்தனர் அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தங்களது உடலில் தங்களது போராட்டத்துக்கான காரணத்தையும் அவர்கள் எழுதி வைத்திருந்தனர். அதன் அர்த்தம் யாரும் என்னை அடக்க முடியாது, அடிமைப்படுத்த முடியாது என்பதாகும். உடனடியாக விரைந்து வந்த பாதுகாவலர்கள் அப்பெண்களை அங்கருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.dailythanthi.com

விசாரணை! வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள "விசாரணை' திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது.
 வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
 இந்திய அளவிலும், தமிழக அளவிலும் திரைப்படங்கள் பல வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தப் படமும் விருது பெறவில்லை.
 தனுஷின் "வுண்டர்பார் ஃபிலிம்' நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் "கிராஸ் ரூட் ஃபிலிம்' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய "லாக் அப்' என்ற நாவலின் தழுவலாக உருவாகியுள்ளது.

பொய்யிலே வளர்ந்த ஜெயலலிதா நடத்திய கூத்துப் பட்டறைதான் இந்த மாநாடே தவிர

????????????????????????????????????மோடியை விட தமிழ்நாட்டு லேடிதான் சிறந்தவர் என்று நிரூபித்து விட்டார்.   உலகெங்கும் சுற்றி மோடி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்தார் என்றால் உள்ளுரில் இருந்து கொண்டே, ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளார் என்று மார்தட்டுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.   தமிழக்ததின் பிணிகள் அனைத்தையும், இந்த முதலீடுகள் தீர்த்து வைக்கும் என்று நம்பவைக்க முயற்சி செய்கிறார்கள் அதிமுக அடிமைகள்.
எதற்காக இந்த மாநாடு ?   இந்த மாநாட்டால் என்ன பயன் ?
????????????????????????????????????

உலகில் எங்குமே காணப்படாத வண்ணம், ஒரு வினோதமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.  முற்றிலும் செயலிழந்த ஒரு ஆட்சி.   தலைமைச் செயலகத்துக்கு வாரம் ஒரு முறை.  திடீர் திடீர் என்று அமைச்சரவை மாற்றம். அதிகாரிகள் மாற்றம்,  தேங்கிக் கிடக்கும் கோப்புகள்.   முதலமைச்சரை எப்போது சந்திக்கலாம் என்பது அமைச்சர்களுக்கே தெரியாத ஒரு அவல நிலை.  

நரபலி கொடுத்த பழனிசாமி ! பிஆர்பி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேருக்கு போலீஸ்....

நரபலி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சகாயம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சகாயத்திடம் மனு அளித்தனர். அப்போது, பி.ஆர்.பி. நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர் அளித்த புகார் மனுவில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

சரத்குமார் Black Mail: நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம்.

சென்னை : உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம் என்றும், இன்னும் 15 நாட்களுக்குள் ரகசியத்தை வெளியிடப்போவதாகவும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது... விஷால் அணியினர் என் மீது தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொடர்ந்து தவறான பிரச்சாரங்களை செய்து வந்தால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். தொடர்ந்து இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டால், 15 நாட்களுக்குள் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன். நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம். வாழ்க்கை பூரா குப்பைகளை உற்பத்தி செய்த சரத்து தான்  வாங்கிய சூட்கேசுகளை பத்தியும் சொல்வாரா ?

தமிழ் திரைப்பட உலகின் முதல் புரட்சிக்காரர்

தமிழ் சினிமா முன்னோடிகள் - புரட்சி இயக்குனர் - கே.சுப்பிரமணியம்-தொடர் 9 இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம் தமிழ் திரைப்பட உலகின் முதல் புரட்சிக்காரர் மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவரை நாடக மேடையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். புரட்சி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் முதல் படம் ''பவளக்கொடி" அந்நாளில் புகழ்பெற்றிருந்தது, காரைக்குடி ஏ.நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் படத்தயாரிப்பு நிறுவனம். பம்பாய் ஹோக் ஹாப்பூர் நகரங்களில் தயாரிக்கப்பட்டு, சென்னை விநியோகத்திற்கு அனுப்பப்பட்ட படத்தயாரிப்புகளோடு ஒருகட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை.

பா.ஜ.க – ரன்வீர் சேனா கொலைகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் !

Murli-Manohar-Joshi_1நான் அவர்கள் மேல் ஆத்திரமாக இருந்தேன். எதற்காக நூறு ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கித் தோட்டாக்களை இவர்கள் மேல் நான் வீணாக்க வேண்டும்? என்னிடமிருந்த அரிவாளைப் பயன்படுத்துவதே மேல். அந்த ஐந்து பேரின் தலைகளை அரிவாளால் சீவியெறிந்தேன்” – சந்தகேஷ்வர் சிங்.
”அட.. நீங்க பழுத்த மாம்பழங்களை அடிக்க மா மரத்தின் மேல் கம்பை வீசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பழங்களும் விழும், சில காய்களும் கூட விழலாம். பழத்தை விட்டு காயை விழ வைத்ததற்காக உங்களை தண்டிக்கவா முடியும்? அதே மாதிரி தான்.. எங்க ஆளுங்களை இளைஞர்களைக் கொல்லத் தான் அனுப்பினோம்… அவங்க அந்த வேலையைப் பார்க்கும் போது சில குழந்தைகளும் கூட செத்திருக்கலாம். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்? அப்படியே தண்டிக்கனும் என்றாலும், அதுக்காக சம்பளத்தையா பிடித்தம் செய்ய முடியும்?” – ரவீந்திர சவுத்ரி
”எங்க ஆளுங்களை அனுப்பும் போது 36 இன்ஞ்ச் வயிறு இருந்தா போட்டுத் தள்ளுங்கன்னு சொல்லி தான் அனுப்பினோம். அது ஆணோ பெண்ணோ… ஒரு வேளை பெண்ணா இருந்தா அவ வயித்திலேர்ந்து எதிர்காலத்தில பிள்ள பூச்சி எதாவது பிறந்து நக்சலைட்டா ஆயிடுமில்லே?” –சைலேந்திர வாத்சாயன்.

நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல்....

hrpc40x30_oster_10-9-2015jpg_Page1நீதிபதிகள் நாடாளும் மன்னனும் அல்ல!
வழக்கறிஞர் அடங்கிப் போகும் அடிமைகளும் அல்ல! கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள்ன்பார்ந்த வழக்கறிஞர்களே! பொதுமக்களே! வணக்கம்.
காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்-குற்றவியல் சட்ட திருத்தங்கள், காவல் துறை அராஜகங்கள் என மக்களை பாதிக்கக் கூடிய அனைப்பு பிரச்சனைகளுக்கும் வழக்கறிஞர்கள் களம் இறங்கிப் போராடியுள்ளோம். போராட்டங்கள் அனைத்தும் பல மாதங்கள் வருமானங்களை இழந்து, இளம் வழக்கறிஞர்கள் பட்டினி கிடந்து நடத்தப்பட்டவை. இப்போராட்டப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் சாதாரண மக்களை மிகவும் கடுமையாக பாதித்த ஹெல்மெட் பிரச்சனைக்கும் மதுரை வழக்கறிஞர் சங்கம் 40 நாட்கள் தொடர்ந்து போராடியது.

கூட்டுறவு ஊழியர்கள் 5 பேர் பட்டினியால் பலி

தேனி: கூட்டுறவு ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால், ஐந்து பேர் பட்டினியால் இறந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், வட்டார கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதில், செயலர் உட்பட, 3,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும்; இதை, புதிதாக வீடு கட்டுவோருக்கு, 14 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. வட்டியை வசூலித்து, 3 சதவீதத்தை நிர்வாக செலவு செய்து கொள்ள அனுமதி உள்ளது. இப்பணத்தில் அலுவலக வாடகை, ஊழியர்கள் சம்பளம் வழங்கப்பட்டது. "கூட்டுயர்வே நாட்யர்வு" நல்ல காமெடி.