சனி, 2 செப்டம்பர், 2023

பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்.. சந்தானபாரதியின் சகோதரர்

 மாலை மலர் :  முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
இவர் பேசிய வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.
 80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்' திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்த படத்தில் இவர் பேசிய 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
ஆர்.எஸ்.சிவாஜி இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற (இலங்கை) தமிழர் - எப்படி சாதித்தார்? BBC Tamil

bbc.com  : தமிழ் (இலங்கை)  வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவாரியான வெற்றியை தர்மன் சண்முகரத்னம் பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காக் சோங் 15.7 சதவீத வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
ஒருவருக்கொருவர் மரியாதை என்பதைத் தனது கொள்கையாகவும் அன்னாச்சி பழத்தைத் தனது பிரசார சின்னமாகவும் கொண்டு தர்மன் இந்த தேர்தலை சந்தித்தார்.

அமைச்சர் பொன்முடி வழக்கு- மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்

மாலை மலர் : ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது. வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியை அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் கணவர்களைத் தேடி Fishing Fleets) கப்பல்களில் வந்த ஆங்கில பெண்கள்

May be an image of 4 people and text

Sundaram : “கணவர்களைத் தேடி..  கடற்பயணம்…
(Fishing Fleets)
விக்டோரியா காலத்து  பிரிட்டனில் வேலையில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு திரிந்த ஆயிரக்கணக்கான வெள்ளைக்கார இளைஞர்களுக்கு மிகப் பெரிய புதையலைத் திறந்து விட்டது கிழக்கிந்திய கம்பெனி..
கம்பெனியில் ஒரு கடைநிலை ஊழியராக சேர்ந்து இந்தியாவுக்கு வந்துவிட்டால் போதும்.
அடுத்த சில ஆண்டுகளுக்குள் பெரும் பொருள் ஈட்டிவிடலாம்;
இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று உல்லாசமாக வாழலாம் என்பதுதான் அன்றைய இளைஞர்களின் திட்டம்/கனவு.
ஆனால் ஆண்டுகளில் இந்தியாவில் ஈட்டிய பணம் பொருள் எல்லாம் இங்கிலாந்தில் சில மாதங்களில் கரைந்து போய் அவர்கள் மீண்டும் வேலை வேண்டி இந்தியாவுக்கே திரும்ப வேண்டிய பொருளாதார நிலைமைதான் அங்கே இருந்தது..  
எனவே பல இளைஞர்கள் இந்தியாவிலே நிரந்தரமாக தங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தனர். அப்படிப்பட்ட ஆண்கள் இந்திய பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

இலங்கை யாழ்ப்பாண பூர்வீக தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் அதிபரானார்!

 tamil.asianetnews.com  - Ansgar R  :   சிங்கப்பூர் அதிபராகிறார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்  தர்மன் சண்முகரத்னம் கனகரத்தினம்!
சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று செப்டம்பர் 1ம் தேதி துவங்கி நடந்து முடிந்தது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட திரு  தர்மன் சண்முகரத்தினம் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் தற்பொழுது அதிபராக பணி செய்து வரும் 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் கடந்த சில நாட்களாகவே முழு வீச்சில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

சீமானுக்கு போலீஸ் அழைப்பாணை

மின்னம்பலம் - Jegadeesh  : ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று (செப்டம்பர் 1) சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அக்ரஹாரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தின் போது அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக வருகிற 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக்கோரி சம்மனை திருப்பூரில் சீமானிடம் கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழங்கினர்.  சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்

I.N.D.I.A. கூட்டணி அறிவிப்பு! 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு!

மாலை மலர் :  இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடைபெற்றது.

Atezolizumab ஏழே நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணம்! பிரிட்டனில் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வரும் ஊசி!

tamil.asianetnews.com - SG Balan  : ஏழே நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணம்! பிரிட்டனில் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வரும் ஊசி!
புதிய மருந்து தோலுக்குக் கீழ் செலுத்தப்படுவதால் சுமார் 7 நிமிடங்களில் மருத்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும். பிரிட்டன் இந்த ஊசியை பயன்படுத்தும் முதல் நாடு ஆகும்.
First ever 7 minute cancer treatment jab to be rolled out in England sgb
உலகின் முதல் ஏழு நிமிட புற்றுநோய் சிகிச்சை ஊசியை இங்கிலாந்து அறிமுகப்படுத்த உள்ளது.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு இந்த ஊசியை பயன்படுத்தும் உலகின் முதல் சுகாதார அமைப்பு ஆகும்.
இந்த ஊசியின் மூலம் சிகிச்சைக்கான நேரத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: யாழ்ப்பாண பூர்வீக தர்மன் சண்முகரத்தினத்திற்கு அதிக வாய்ப்பு

 

இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட திரு கனகரத்தினம் சண்முகரத்தினம் தர்மன் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டி இடுகிறார் அநேகமாக அவர் வெற்றி பெறுவார் என்றுதான் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன
உடனே காத்திருந்தது போல ஆர் எஸ் எஸ் சங்கிகள் அவரை இந்தியர் என்று பிரசாரம் செய்வதில் அதீத முனைப்பு காட்டுகின்றனர்  
திரு தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றால் அதுவும் மோடியின் ஒரு வெற்றி அல்லது பாஜக சங்கிகளின் வெற்றி என்று பிரசாரம் செய்யவும் தவற மாட்டார்கள்  உலகம் முழுவதும் மோடியைதான் வழிபடுகிறார்கள்
இந்தியாவின் பெருமை மோடியால்தான் கொடிகட்டி பறக்கிறது என்று 2024 தேர்தலுக்கு இப்போதே பலூன் ஊத  தொடங்கி விட்டார்கள்!
எனவேதான் திரு தர்மன் சண்முக ரத்தினத்தின் பூர்வீகம் பற்றிய இந்த பதிவு 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
 யாழ்ப்பாணத்தை சேர்ந்த  (புற்று நோய் ஆய்வாளர்) திரு கனகரத்தினம்  சண்முகரத்தினத்தின் மகனான திரு  தர்மன் சண்முகரத்னம்

காலை உணவும் தினமலரின் கக்கூசும்! வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி: வன்மையாக கண்டிக்கிறோம் தினமலர் ஆசிரியர் ராமசுப்பு

 dinamalar.com: வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி: வன்மையாக கண்டிக்கிறோம்
அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள
முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து, ஈரோடு- சேலம் 'தினமலர்' பதிப்பில் இன்று (ஆக.,31) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க,
வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும், கி. ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை, மதுரை, கோவை, புதுவை,  நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

latest tamil news

ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது, திரு.சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த, 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது.பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு - சேலம் தினமலர் பதிப்பினையும், அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். வழக்கு நிலுவையில் இருப்பதால் தினமலர் நாளிதழ் பெயர் ஒன்றாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

மின்னம்பலம் - christopher : தொடர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வந்த நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
நெல்லை மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாமன்ற கூட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து “மதிப்பிற்குரிய உறுப்பினர்களே” என்று மேயர் சரவணன் பேச ஆரம்பித்த உடனே திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அவரது பேச்சை புறக்கணித்து வெளியேறினர்.

சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு-மருத்துவ மனையில் (விஜயலட்சுமி ஜுரம்) விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை!

tamil.oneindia.com  - Mathivanan Maran  : விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை! பல்லடத்தில் சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு- ஹாஸ்பிடலில் அனுமதி
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் உடநலக் குறைவால் பல்லடம் அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சீமான் மீதான புகார் குறித்து சென்னையில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார்.
அதில் 2008-ம் ஆண்டு சீமானுக்கும் தமக்கும் மதுரையில் திருமணம் நடந்த்து தொடங்கி சீமான் ஏமாற்றியது எப்படி என்பது வரை விரிவாக விவரித்திருந்தார் விஜயலட்சுமி.

திருச்சி, நெல்லை, சேலம் மெட்ரோ ரெயில் - தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கை

மாலை மலர்  : தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது.
சென்னை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில், திருநெல்வேலி, சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது.
இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்து இருக்கிறது.

பார்ப்பனீயம் : குழந்தைகள் உண்பதால் பள்ளிக்கூட கக்கூஸ் நிரம்பி வழிகிறது

May be an image of text

ராதா மனோகர் :  குழந்தைகள் உண்பதால் பள்ளிக்கூட  கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்று கவலைப்படும் மனிதர்கள் உலகிலேயே இவர்களாகதான் (பார்ப்பன ஊதுகுழல் தினமலர்) இருக்கும்
சாதாரண மனிதர்களின் வளர்ச்சி உயர்ச்சி எல்லாம் பார்பனீயத்துக்கு கவலை தரும் செய்திகளாக இருக்கிறது
இந்த கோணத்தில் இருந்துதான் பகவத் கீதையை படிக்க வேண்டும்
மனதின் அடியில் மூடி மறைத்த ஆரிய நோக்கங்கள்  இயலாமையின் எல்லையில் பட்டென வெடித்து கக்கி உள்ளது தினமலர்.
சிந்திக்கும் திறனுள்ள பார்ப்பனர்களே!
இதுதான் சரியான சமயம்
இனியாவது பார்ப்பன கோட்பாட்டில் இருந்து வெளியே வாருங்கள்
ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிசத்தின் கொடூரத்தை கண்டு தூய வெள்ளை நிற ஆரிய கோட்பாட்டில் இருந்து வெளியேறிய ஜெர்மானியர்கள்தான் ஜெர்மனியை மீண்டும் தூக்கி நிறுத்தினார்கள்!

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

tamil.asianetnews.com  -Velmurugan s  : திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தனது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதாக திமுக பெண் நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பவர் சந்திரன்.
இவர் மீது திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆசைக்கு இணங்க மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

மிக சக்திவாய்ந்த உளவுக் கருவிகளை வாங்கிய மோடி அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்

tamil.samayam.com -ஜே. ஜாக்சன் சிங்  : டெல்லி: மிக சக்திவாய்ந்த இஸ்ரேல் நாட்டின் ஸ்பை கருவிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேல் நாட்டிடம் இருந்த வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்' (Financial Express) நாளிதழில் இந்த ஷாக் செய்தி பிரசுரமாகியுள்ளது.
ஏற்கனவே மோடி அரசு பெகாசஸ் என்ற மென்பொருள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை உளவு பார்த்ததாக கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதன், 30 ஆகஸ்ட், 2023

மெஹந்தியில் QR Code.. டேக்கா கொடுக்கும் அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்.. ரக்ஷாபந்தன் சுவாரஸ்யம் !

Kalaignar Seithigal - KL Reshma : நாடு முழுவதும் இன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மெஹந்தியில் QR Code வரைந்து தங்கைகள் அண்ணன்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் தொடர்பான் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் இன்று சகோதர சகோதரிகள் தினமான ரக்‌ஷாபந்தன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சகோதரிகள், தங்கள் சகோதரிக்கு ராக்கி என்று சொல்லக்கூடிய கயிறு ஒன்றை கட்டி விடுவர். அவ்வாறு அவர்கள் கட்டினால் எந்த காலத்திலும் சகோதரிக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது.
மேலும் அவ்வாறு பூஜை செய்து, கயிறு கட்டி விடும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசு வழங்க வேண்டும். அதோடு அவர்கள் கேட்டதையும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் இந்த நாளுக்காக சகோதரிகள் காத்திருப்பர்.

இலங்கை தமிழர்களின் ஜாதிப்பெயர்களை ஒழித்த திராவிடம்!

ராதா மனோகர்  : இலங்கை தமிழர்களின் பெயர்களில் இருந்த  ஜாதி அடையாளங்கள் எப்படி நீங்கின?
இலங்கை தமிழர்களிடமும் பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜாதிபெயர்கள் கிடையாது
இலங்கை தமிழர்களின் பெயர்களில்  இருந்து அறவே ஒழிந்து விட்டது என்பது வியப்புக்கு உரிய  செய்தியாகும்!
இலங்கையில் இருந்த எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்று எந்த   காலத்திலும் பேசவில்லை.
அவர்கள் எல்லோருமே ஏறக்குறைய ஜாதி ஆதிக்க வாதிகளாகவே இருந்தனர்.
அல்லது போதிய புரிதலற்று இருந்தனர்.  .
எவரும் எந்தக்காலத்திலும் ஜாதி அடையாள பெயர்களை பற்றி பேசாமலேயே  அந்த மக்கள் தங்கள்  ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.   
தமிழக திரைப்படங்கள் பாடல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் மூலம் தமிழகத்தை பற்றிய அறிவு இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு இருந்திருக்கிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை தமிழர் பற்றி யுத்ததிற்கு முன்பு வரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

அமெரிக்காவில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா இந்துகள் கூட்டணி போர்க்கொடி

தேசம் நெட் -அருண்மொழி  :  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து.
சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ அழைப்பாணை

மாலை மலர் :   என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை வரலட்சுமி விளக்கம். கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
 இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
ஆனால், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

ஆசிரியர் கே வீரமணி : குலக்கல்வி.(விஸ்வகர்மா யோஜனா - ஜாதிக்கல்வி) ராஜாஜியை போல் மோடி அரசு ஆட்சியை இழக்கும்!

கலைஞர் செய்திகள் - Prem Kumar : ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, “விஸ்வகர்மா யோஜானா திட்டம் என்ற பெயரில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் கொள்கையாக இருக்ககூடிய வர்ணாசிரம தர்மத்தை நோக்கி அனைவரும் வர வேண்டும் என்ற நோக்கில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாகவும் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தை கைவிட வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்க அரசு ஒப்புதல்

மாலை மலர் : புதுடெல்லி மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 குறைக்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கப்படுகிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீண்டுள்ளது – ஐ.நா

ilakkiyainfo.com : அண்மைக் காலத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகள் இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கடந்த வருடத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பு நாடான இலங்கையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என ஐ.நா வதிவிட இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளரும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ ஆடையை அணியத் தடை – பிரான்சில் புதிய கட்டுப்பாடு !

Thesam  - அருண்மொழி :  பிரான்ஸ் பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும்.
அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமுலுக்குக் கொண்டுவரப்படும்” என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது.

இனவாதத்தை தூண்ட முயலும் தமிழ் அரசியல்வாதிகள் - அருண் சித்தார்த்

hirunews  : நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களது, தனிப்பட்ட அரசியல் இலாபத்துக்காக நாட்டினுள் இனவாதத்தை தூண்டுவதற்கு, முயலுவதாக யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
எமது ஹிரு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் 137 வருடங்களாக சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்ததாகவும், சாதிய அடிப்படையிலான இந்த ஒடுக்குமுறையே விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தம் தொடங்குவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்க அதிகாரிக்கு 5 கோடி லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது பாய்ந்த வழக்கு.. சிபிஐ விளக்கம்

 tamil.oneindia.com  - murugan P  :  டெல்லி: டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
அமந்தீப் சிங் தல் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி மற்றும் க்ளார்டிஜைஸ் ஹோட்டல் சிஇஒ விக்ரமாதித்தா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
CBI books ED Assistant Director in Rs 5 crore bribery for Delhi excise policy scam case
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விஸ்வருபம் எடுத்துள்ளது.
அங்கு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு! கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு..

 மாலை மலர் : பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும்,
பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

சிம்பாப்வேவின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் மங்கக்வா

thesamnet - அருண்மொழி  : ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

பெண்கள் ஊர் சுற்ற வேண்டிய அவசியமில்லை! தலிபான் போட்ட அதிரடி தடை.. இதுக்கு ஜெயிலிலேயே அடைச்சிடலாம்

tamil.samayam.com -  ஜே. ஜாக்சன் சிங் : 'பெண்கள் ஊர் சுற்ற வேண்டிய அவசியமில்லை'.. தலிபான் போட்ட அதிரடி தடை.. இதுக்கு ஜெயிலிலேயே அடைச்சிடலாம்
காபூல்: கல்வி, வேலைவாய்ப்பு என அடுத்தடுத்து பெண்களுக்கு பல்வேறு தடைகளை போட்டு வரும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள், தற்போது பெண்கள் தேசிய பூங்காவுக்கு செல்லவும் தடை விதித்திருக்கின்றனர்.
பெண்கள் அப்படி ஒன்றும் வெளி இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டில் பிற்போக்கு சித்தாந்தத்தை கொண்ட அரசு அமைந்தால் அங்கு என்ன விபரீதம் எல்லாம் நடக்கும் என்பதற்கு ஆப்கானிஸ்தானே சிறந்த உதாரணம்.

சீமானின் அரை நிர்வாண வீடியோ.. விஜயலட்சுமி பகீர் தகவல்! மீடியா முன் மொத்தமா போட்டு உடைச்சுட்டாங்க

tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த நடிகை விஜயலட்சுமி, சீமானின் அரை நிர்வாண வீடியோ பற்றி பகீர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நீதிமன்றம் சென்ற முடிக்கப்படவில்லை. அது இன்னும் இருக்கிறது. சீமான் என்னுடன் அரை நிர்வாணமாக இருந்த வீடியோக்களை காட்டி உள்ளேன். அதற்கு அவர் என்ன பதிலளிக்க உள்ளார். வீடியோ அவர் மனைவி என பேசியுள்ளார்.
I have Seeman Half nude video - Actress Vijayalakshmi blasts
சீமானை கைது செய்ய வைத்து காட்டுகிறோம். நானும் வீரலட்சுமியின் இந்த தமிழ் மண்ணின் பெண்கள். இது 2 மணி நேர படம் இல்லை. இதில் என்ன தவறு இருக்கும் என்று பார்க்க. இது வாழ்க்கை. இது இப்படித்தான் தப்பு தப்பாக இருக்கும்.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராகிறார் லைக்கா நிறுவன தயாரிப்பில்

 மாலை மலர் :  நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
அதாவது, சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ரெயில் தீ 2002. குஜராத். இந்துத்வ பூமி. ரெயில் தீ 2023. தமிழ் நாடு. பெரியார் பூமி.

 Arun Bala : உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு ரயில் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு மார்க்கங்களில் கிளம்பின. இரண்டிலும் இந்து பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள்.
இரண்டிலும், சுடச்சு டீ போட, சப்பாத்தி போட்டெடுக்க, ரயில்வே விதிகளை மீறி, ரகசியமாக மறைத்து எடுத்து வரப்பட்ட அடுப்புகள் இருந்தன.
ஒரு அதிகாலை வேளையில் பற்ற வைக்கப்படும்போது, இரண்டு அடுப்புகளும் திடீரென்று வெடிக்க, இரண்டு பெரும் தீவிபத்துகள் நடந்தன.
ஒரு விபத்தில், கிட்டத்தட்ட பெட்டியில் இருந்த 58 பேரும் இறந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் பிளாட்பாரத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்த இஸ்லாமிய சிறு வணிகர்கள் தான் ரயில் பெட்டிக்குத் தீ வைத்ததாக வதந்தீ மாநிலம் முழுக்கப் பரப்பப்பட்டது.
கடுமையான முகம், கூரான பார்வை, இறுக்கமான குரலுடன் உச்ச அதிகார மையம் டிவியில் தோன்றி "தீ வைத்தவர்களுக்குச்" சரியான பாடம் புகட்ட வேண்டும் என வன்மம் கொப்பளிக்கப் பேசியது.
அடுத்த மூன்று நாட்களுக்கு, காவல் துறை வேடிக்கை பார்க்க, இந்துத்வ அமைப்புகளின் முற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த தலைவர்கள் திட்டம் போட, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த காலாட்படை அடியாட்கள் வன்முறை வெறியாட்டம் போட்டார்கள்;

உ.பி.யில் முஸ்லிம் மாணவரை அடிக்குமாறு ஆசிரியை தூண்டியது ஏன்? அவரை காப்பாற்ற காவல்துறை முயற்சியா?

BBC News தமிழ் - , AMIT SAINI,  உத்தர பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் வகுப்பில் இருந்த ஒரு முஸ்லிம் மாணவரை மற்ற குழந்தைகளிடம் அடிக்குமாறு தூண்டிவிடுவதாக ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் காட்டப்படும் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது. அதுகுறித்து அந்தக் குழந்தையின் தாயிடம் பேசியபோது.
அப்போது அவர், “அந்த ஆசிரியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக இருப்பதைத்தான் இந்தச் செயல் காட்டுவதாக” கூறினார்.
ஆனால், இந்தச் சம்பவத்திற்கு மதச் சாயம் பூசப்படுவதாக வீடியோவில் காணப்படும் ஆசிரியை குற்றம் சாட்டுகிறார்.
முஸ்லிம் மாணவர் தாக்கப்படும் வீடியோவில் என்ன இருந்தது?
இந்தச் சம்பவம் முசாஃபர்நகரிலுள்ள கப்புபூர் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநரும் ஆசிரியையுமான திரிப்தா தியாகிதான் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர். அவர் தனது சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நடத்தி வருகிறார்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

துணை முதல்வராகும் உதயநிதி. திமுக இளைஞரணி மாநாடு முடிந்தது அறிவிப்பு?

மின்னம்பலம் Aara  : வைஃபை ஆன் செய்ததும் திமுக இளைஞரணி மாநாட்டு தேதி குறித்த திமுக தலைமையின் அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஆகஸ்டு 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூலை 28 ஆம் தேதி மின்னம்பலத்தில், ‘மாநாடு மாஸ் காட்டத் தயாராகும் உதயநிதி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்த நாள் ஜூலை 29 ஆம் தேதி அறிவாலயத்தில் புதிய இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, மாநாடு சேலத்தில் நடைபெறும் என்றும் டிசம்பம் மாதம் நடைபெற இருக்கிறது என்றும் அறிவித்தார்.

O பன்னீர்செல்வம் அம்மா திமுக என்ற புதுக்கட்சியை ஆரம்பிக்கிறார்?. பாஜக ஏமாற்றிவிட்டதாக தொண்டர்கள் கண்ணீர்

மாலைமலர் : சென்னை:  அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அங்கீகரித்திருந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.
இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முழுமையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்திருக்கிறது.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா l அதானி-அம்பானி மட்டும் சம்பாதித்தால் மக்களுக்கு என்ன பயன் ?

 கலைஞர் செய்திகள்  - Praveen : "அதானி-அம்பானி மட்டும் சம்பாதித்தால் மக்களுக்கு என்ன பயன் ?" காட்டமாக விமர்சித்த கர்நாடக முதல்வர் !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.