சனி, 7 பிப்ரவரி, 2015

Delhi Exit Poll கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது? சமுக வலைதளங்களின் ஆதரவு?


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியே வெற்றிவாகை சூடும் என்று தேர்தலுக்குப் பின் வெளியாகியுள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே - சிசரோ நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை விட 11 இடங்கள் அதிகமாகும். பாஜக 26 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் சுயேச்சைகள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நியூஸ் நேசன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 39-43 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா விஜய்யுடன் நடிக்க மாட்டாரோ? இந்த நியுஸ் ரொம்ப முக்கியம் பாருங்க?

விஜய்யுடன் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. அதை ஏற்க மறுத்திருக்கிறார். ஏற்கனவே ‘ராஜா ராணி'  படத்தை இயக்கிய அட்லிதான் இப்படத்தின் இயக்குனர். ‘ராஜா ராணி' படப்பிடிப்பின்போது நயன்தாராவை சிஸ்டர் சிஸ்டர் என்று அழைத்து அவரிடம் ஒட்டிக்கொண்டார் இயக்குனர். ‘எனது அடுத்த படத்திலும் நீங்கள் நடிக்க வேண்டும்' என்று அப்போது கேட்டுக்கொண்டாராம். நயனும் ஓ.கே. சொல்லி இருந்தார். தற்போது விஜய் படத்தை இயக்க அட்லிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அட்லி கேட்டபோது, ‘பார்க்கலாம்' என்று கூறி நழுவிவிட்டாராம். ஏற்கனவே அடுத்த படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட நயன்தாரா இப்போது ஜகா வாங்குவது ஏன் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் இயக்குனர். - See more at: .tamilmurasu.org

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சென்று நாடு திரும்புபவர்களை என்ன செய்ய?

டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரும் இந்தியர்களை நாடு திரும்ப அனுமதிக்கலாமா? அவர்களுக்கு அறிவுரை வழங்குவதா அல்லது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததற்காக தண்டிப்பதா? ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த வாரம் கவுன்சிலிங்கிற்கு பிறகு 9 பேரை போலீசார் விடுவித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வெளிநாடு சென்ற அந்த 9 பேரும் துருக்கியில் இருந்து பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர ஆர்வம் காட்டிய ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கத்தாரில் இருந்து அழைத்து வரப்பட்டார். அவரும் கவுன்சிலிங்கிற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வெளிநாடு சென்று திரும்பியவர்களை அரசு எவ்வாறு கையாளுகிறது என்பது குறித்து ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சஹாய் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், கவுன்சிலிங் உதவுகிறதா? வேறு என்ன செய்ய முடியும்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

Enlightenment / Calamity : எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் அல்வாதான் அது?


ஆத்மானந்தம் ஆத்மானுபூதி  அல்லது  ஸ்திதப்ரக்ஞை என்றும் ஆங்கிலத்தில் self realization or Enlightenment என்றும் பொதுவாக குறிப்பிடப்படுவது  மனத்தின் இருப்பு  இல்லாத ஒரு நிலையில்  ஆத்ம அனுபவித்தில் லயித்திருக்கும்  நிலையாகும்.
இந்த உன்னத நிலையினை அடைவதற்காக பக்திமார்க்கம்  யோக மார்க்கம் ஞான மார்க்கம் தியான மார்க்கம் என்று பலவிதமான வார்த்தைகளில் குறிப்பிடப்படும்  வழிகளை சிரத்தையாக கடைப்பிடித்து மனித பிறவியின் உன்னத நிலையை அடையவேண்டும் என்றுதான் எல்லோரும் போதிக்கிறார்கள்.
இது  சுத்தமான வடிகட்டின  பித்தலாட்டமாகும்.
இந்த சமய குருமாரும் சாமிகளும்  ஆசாமிகளும் குறிப்பிடும் இந்த ஞானம் அல்லது வெங்காயம் எனப்படுவது அப்படி ஒன்றும் தேட கிடைக்காத பெரும் நிதியம் அல்ல.
எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான், நீங்கள் வேண்டாம் என்றாலும் அந்த காரட் உங்களுக்கு கிடைக்க போகிறது என்பதே உண்மை, இதை மிகவும் Authentic க்காகவே சொல்கிறேன் . நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் , எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபிய முன்னாள் மன்னர் குடும்பம் உடந்தை!

டெல்லி: நியூயார்க் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியா உதவி செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நண்பனாக அறியப்படும் சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னரின் குடும்பத்தினர் இந்த சதிக்கு உதவியாக தகவல் வெளியாகியுள்ளது. 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நடத்திய விசாரணை 800 அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 28 பக்கங்களில் சவுதி அரேபியாவின் தொடர்பு குறித்து விளக்கம் உள்ளது. தாக்குதலுக்கு உடந்தையாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ள தீவிரவாதி ஷகாரியாஸ் மொசாய், விசாரணையின்போது கூறிய தகவல்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இரு செனட் உறுப்பினர்களிடமிருந்து அறிக்கையிலுள்ள அம்சங்கள் தகவல் கசிந்துள்ளது. வால்டர் ஜோன்ஸ் மற்றும் ஸ்டீபன் லைன்ஸ் ஆகிய எம்.பிக்கள் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். அறிக்கையை ஜார்ஜ் புஷ் அரசு வெளியிடாமல் தடுத்து வைத்ததாகவும், இதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

யுத்தத்தை நோக்கி இந்தியா பாகிஸ்தான் நகர்கிறதா? அதிர்ச்சி தரும் தீவிரவாதமும் மோடியின் பதில் வாதமும்?

WASHINGTON: Prime Minister Narendra Modi is likely to use the military option if the next terrorist attack in India is traced back to Pakistan, a former top US diplomat has warned while hoping that the Pakistanis would understand that their past behaviour is unlikely to be tolerated now. வாஷிங்டன்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் ஏதேனும் நடத்தப்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்த ராபர்ட் பிளாக்வில் இதுகுறித்து கூறியதாவது: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. அதன்பிறகு எப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், பாகிஸ்தான் மீது ராணுவ பலத்தை பிரயோகிக்க இந்திய பிரதமர்கள் யோசித்தது உண்டு. ஆனால் செயல்படுத்தாமல் பின்வாங்கிவிடுவார்கள். இந்தியாவில் தீவிரவாதிகள் வாலாட்டினால் பாக். மீது தாக்குதல் நடத்த மோடி திட்டம்: அமெரிக்க அதிகாரி பரபர ஆனால், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வேகமாக மாறியுள்ளது. இப்போதைய பிரதமர் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பின்வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஏதாவது ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், நரேந்திரமோடி, தனது ராணுவத்தை பயன்டுத்தி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மோடியின் குணநலன் மற்றும் இந்தியாவின் மாறியுள்ள பார்வை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், முந்தைய பிரதமர்களைவிட இந்த விஷயத்தில் இவர் தீவிரமாக இருப்பார் என்றே தெரிகிறது. முந்தைய பிரதமர்களுக்கும், இப்படிப்பட்ட யோசனையை ராணுவ அதிகாரிகள் வழங்கினார்கள். ஆனால் அந்த பிரதமர்கள் ராணுவ அதிகாரிகள் கூறிய யோசனையை ஏற்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால், இரு நாடுகளும் மோதுவது ஆபத்தில் முடியும்.

5 காமகொடூரன்களை பிடிக்க உதவி செய்யுங்கள்! பெண்ணை சீரழித்து Whatsapp இலும் வெளியிட்ட.....

ஹைதராபாத்: பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட 5 வாலிபர்களை பிடிக்க உதவி செய்யுங்கள் என்று பெண்கள் உரிமை ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் என்.ஜி.ஓ. ஒன்றை நடத்தி வருபவர் பெண்கள் உரிமை ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். அவருக்கு 15 வயது இருக்கையில் அவரை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர் பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார். ஹைதராபாத்தில் வசிக்கும் அவரின் கணவர் ஒரு திரைப்பட இயக்குனர். அண்மையில் அவரது வாட்ஸ்ஆப்புக்கு 2 வீடியோக்கள் வந்துள்ளது. பெண்ணை சீரழித்து வீடியோவை வாட்ஸ்ஆப்பில் போட்ட இந்த பாவிகளை தெரியுமா? அந்த வீடியோக்களில் பெண் ஒருவரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கேமராவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.

நங்கையரே என்னை மன்னியுங்கள்! ‘என்னையும் ஒரு சகமனிதராக ஏற்றுக்கொள்வீர்களா?’

பள்ளிக் காலத்தில், அவர்களைக் கண்டாலே பயந்து ஓடி ஒளிந்துகொள்ளும்படியாகத்தான் என் உற்றமும் சுற்றமும் என்னை வளர்த்திருந்தது. திரைப்படங்களும் ஊடகங்களும் அவர்களை ஒரு கேலிப்பொருளாகவே சித்தரித்துவந்தன. அவர்களில் சிலர் பிச்சை எடுத்துப் பிழைப்பது அப்போது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது (அவர்களுக்கு வேறு தொழில் வாய்ப்பு கிடைக்காமல், பிச்சை எடுப்பதற்கு நானும் இந்தச் சமூகமும் காரணம் என்பதை நான் அப்போது உணரவில்லை).
வடஇந்தியாவில் ஒரு வங்கி மேலாளராகச் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்துவிட்டால் நூற்றுக் கணக்கான திருநங்கைகள் அந்த வீட்டின் வாசலில் கூடி நின்று கூத்தாடுவார்கள். அவர்கள் கையால் ஆசி பெற்றால் அந்த ஆசிக்குக் கடவுள் செவிசாய்ப்பார் என்பது அங்குள்ள சமூக நம்பிக்கை.

நடிகை ஷகிலா: திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் இல்லை

ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தகவலை ஷகிலா முற்றிலும் மறுத்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள ஷகிலா, “இதில் எந்த உண்மையும் இல்லை. என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. எனக்கும் நான் திருமணம் செய்துகொண்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. அந்த பையன் என் படத்தில் ஹீரோவாக நடிக்கிறான். அவனுக்கு 28 வயதாகிறது. எனக்கு 38 வயதாகிறது அவன் என் தம்பி மாதிரி. திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் எனக்கு இல்லை. சில தோழிகள் உனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் அதற்காகவாவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள். பூமிக்கு பாரமாக இன்னொரு உயிரை விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை. இதனால் அனாதை குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு திருப்திகரமாக உள்ளது” என்று கூறுயுள்ளார் ஷகிலா  tamil.webdunia.com/

இசை விமர்சனம் : நான் தூன்னு துப்பினாலும் இசைவரும்டா !

சரியாக 10 ஆண்டுகள் கழித்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ரிலீஸாகும் திரைப்படம், அவரே இசையமைத்து நடித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கிறது இசை. ”நான் ’த்தூ’ என துப்பினாலும் இசை வரும்” என்ற அளவிற்கு தலைக்கணம் பிடித்த இசையமைப்பாளர் சத்யராஜ் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையை கட்டி ஆண்டு வர, அவரிடம் அசிஸ்டண்டாக இருந்த எஸ்.ஜே.சூர்யா சிறந்த பாடல்களைக் கொடுத்து பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துவிடுகிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என பொறாமையில் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிடும் சத்யராஜ் எஸ்.ஜே.சூர்யாவை அழிக்க நினைக்கிறார். அதே சமயம் புதிய இசை ஆல்பத்திற்காக மலைப்பிரதேசத்திற்குச் செல்லும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு அங்கு சாவித்ரியின் அறிமுகம் கிடைக்கிறது.

அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி! இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்


சென்னை: சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கல்லூரியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் 2வது நாளாக நேற்று மாலை முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கல்லூரியை 7 நாட்கள் மூடுவதாக கல்லூரி இயக்குநர் அறிவித்துள்ளார். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.சென்னை உயர் நீதிமன்றம் அருகே 124 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்பேத்கர் சட்ட கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியிலிருந்து ஏராளமான சட்ட நிபுணர்களும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளும் உருவாகியுள்ளனர். தற்போது, இந்த கல்லூரிக்கு அருகே மெட்ரோ ரயில் திட்டம் நடந்து வருகிறது. சுரங்க ரயில் நிலையமும் கல்லூரி அருகே அமைக்கப்பட்டு வருகின்றன.

Spy camera வுடன் களம் இறங்கும் ஆம் ஆத்மி ! 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை ஆதரவாளர்களுக்கு .....


டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், மது பாட்டில்களை கொடுப்பதாக பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், இதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டும் வகையில் ஆம் ஆத்மி தனது ஆதரவாளர்களுக்கு 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை கொடுத்திருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் அசுதோஷ் தெரிவித்தார். ஆங்காங்கே, பா.ஜ.கவினர் யாராவது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயலில் ஈடுபட்டால் அதை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் ஸ்பை கேமிராவில் படம் பிடித்து உடனடியாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பை கேமிராவில் பதிவு செய்யப்படும் வீடியோ மற்றும் விசுவல் உடனடியாக பெற பிரத்யேகமாக மையங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாம்.dailythanthi.com

இந்தியாவில் வறுமை நிலையில் 30 கோடி பேர்: ஐ.நா., அறிக்கையில் தகவல்

அம்பானியும் அடானியும் பார்த்து எதாவது செய்தால் தான் உண்டு, நாட்டை மறைமுகமாக ஆள்பவர்கள் அவர்கள் தானே.. புதுடில்லி: 'இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.இந்தியாவின் மக்கள் தொகை, 125 கோடிக்கு மேல் உள்ளது. அதனால், வறுமை, பசி, எழுத்தறிவின்மை மற்றும் மோசமான சுகாதார சூழ்நிலை போன்ற பிரச்னைகளில் இருந்து, லட்சக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின், 'ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு' என்ற திட்டத்தை, 2000ம் ஆண்டில், இந்திய அரசு கடைபிடிக்கத் துவங்கியது. இந்தத் திட்டத்தின் கால அளவானது, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனாலும், 'இந்தியாவில், 30 கோடி பேர், இன்னும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர். கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
அந்த 30 கோடி பேருக்கும் ஜாவா, ஆரக்கல், சீ பிலஸ் அப்படீன்னு ஏதாவது சொல்லி கொடுத்து இருந்தா இந்நேரம் அவங்க அமெரிக்காவில் பீட்சா பர்கர் சாப்புட்டுக்கிட்டு ஜாலியா இருந்திருப்பாங்க????

வியாழன், 5 பிப்ரவரி, 2015

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ! தனது பெயரை உச்சரிக்க தானே பயப்படும் ஒரு அற்புத காரக்டர் பன்னீரு!


ப.திருமாவேலன்:  கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி, தனது இருக்கையில் அமர்கிறார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பைத் தள்ளுபடிசெய்கிறார். உடனடியாக ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவியில் இருந்துவிலகுகிறார். ஜெயலலிதா, மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். கதவு திறக்கப்படுகிறது... தமிழ்நாடே பூத்துக் குலுங்குகிறது!
இந்த ஒரு காட்சி மட்டுமே ஜெயலலிதாவின் மனக் கண்ணில், அ.தி.மு.க அமைச்சர்களின் கற்பனையில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை மார்ச் மாதத்தில் தீர்ப்பு வரவில்லை என்றால், அந்தக் கற்பனைக் காட்சி மீண்டும் மீண்டும் 'ரீவைண்ட்’ ஆகும்!
ஜெயலலிதாவுக்கு மட்டுமா நான்கு ஆண்டுகள் தண்டனை? அதில் இருந்து அவர் விடுபடும் வரை தமிழ்நாடு மக்களுக்கும் தண்டனைதானோ?  
ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் பினாமியாக அல்லது ஆளும் கட்சியின் நாமினியாக எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஆனால், அதே சட்டத்தின்படி அவர் செயல்படாமல் இருப்பதும் அல்லது அவரைச் செயல்படவிடாமல் தடுத்துவைத்திருப்பதும் ஜனநாயகக் கேலிக்கூத்து.

அன்பழகன் மனு தள்ளுபடி; சுப்பிரமணியன் சுவாமிக்கு சிறப்பு அனுமதி ! ஜெயலலிதா வழக்கில் 3-ம் தரப்பாக சேர்க்கக்.....

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தம்மை 3-ம் தரப்பாக‌ சேர்க்கக் கோரிய‌ திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அதேநேரத்தில், சுப்பிரமணியன் சுவாமியின் '3-வது தரப்பாக ஆஜராகி வாதாடும்' கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அரசு தரப்பு வழக்கறிஞருடன் இணைந்து நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக அறிக்கை அளிக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
< கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, இந்த இரு உத்தரவுகளையும் இன்று பிறப்பித்தார்.

அரவிந்தர் ஆசிரமம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புகிறது?


புதுவை அரவிந்தர் ஆசிரம விடுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத், சாந்தி தேவி தம்பதியரின் மகள்கள் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் வசித்து வந்தனர்.
ஆசிரம நிர்வாகத்தின் மீது சகோதரிகள் புகார் கூறுவதை தொடர்ந்து விடுதியை காலி செய்யுமாறு ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் சகோதரிகள் விடுதியை காலி செய்ய மறுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து ஐகோர்ட்டு ஆசிரமத்தை விட்டு சகோதரிகளை வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது.
காலக்கெடு முடிந்த பிறகும் சகோதரிகள் விடுதியை காலி செய்யாமல் விடுதியில் தங்கி இருந்தனர். இதனால் போலீசார் உதவியோடு 5 சகோதரிகளும் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் மனம் உடைந்த ஆசிரம சகோதரிகள் தங்களது பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சகோதரிகளின் தாயார் சாந்திதேவி மற்றும் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர்.

எலி ! வடிவேலு அறிவிப்பு புதிய படம் ! ஆஹா எலிக்கு அடுக்குமொழி ?

 ’எலி’ யாக வரும் வடிவேலு
சென்னை,பிப்.05 (டி.என்.எஸ்) தமிழ் சினிமாவில் காமெடி ராஜாவாக இருந்த வைகை புயல் வடிவேலு, அரசியல் ஆசை காரணமாக கடந்த இரண்டு வரடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்து கடந்த ஆண்டில் ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது காமெடி கலவரத்தை தமிழ் சினிமாவில் தொடங்கினார். இப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை போதிய அளவு பூர்த்தி செய்யவில்லை என்றாலும், இனி வடிவேலுவை டிவி-யின் மட்டும் இன்றி, வெளித்திரையிலும் பார்க்கலாம், என்பதே ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இதற்கிடையில், தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை இன்று வடிவேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்திலும் ஹீரோவாக களம் இறங்குகிறார்.

தி.முகவின் பழனிமாணிக்கம், ரகுபதி அ தி.மு.க.வுக்கு ? இந்த காலில் விழுவதை விட அந்த காலில் விழுந்தால்......

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் பழனிமாணிக்கம், புதுக்கோட்டை ரகுபதி ஆகியோர் தி.மு.க.வில்தான் தொடர்ந்து நீடிக்கப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பழனிமாணிக்கம், புதுக்கோட்டை ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை கருப்பசாமி பாண்டியன் மற்றும் முல்லைவேந்தன் ஆகியோர் அண்ணா தி.மு.க.வில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக பழனி மாணிக்கம் மற்றும் புதுக்கோட்டை ரகுபதி தரப்பில் நாம் விளக்கம் கேட்டோம். இதற்கு பதிலளித்துள்ள பழனிமாணிக்கம், தி.மு.க.வில் மரியாதை கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பது பிரச்சனையே இல்லை. தற்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பதவி கொடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் தி.மு.க.வில் நான் எப்படி நடத்தப்பட்டாலும் சாகும்வரை கட்சியில்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.ஸ்டாலின் தலைமையில் திமுக இருப்பதை பார்க்கையில் இன்னொரு அதிமுகவை போலவே இருக்கிறது . இரண்டுமே அடிமைகள் கூட்டத்தை வைத்து ஆட்டம் போடுகின்றன .இங்கே ஆடினால் என்ன அங்கே ஆடினால் என்ன ?

ரிலீசானது அஜித்தின் 'என்னை அறிந்தால்'! தெறி மாஸாமே ? நெசமாலுமா ? பில்டப் பீலாவா ?

ரிலீசானது அஜித்தின் 'என்னை அறிந்தால்'! தெறி மாஸ் என்கின்றனர் ரசிகர்கள் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் தெறி மாஸ் என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள்.
ஏ கிளாஸ் ஆடியன்ஸ்சை ஈர்க்கும், கவுதம் மேனனும், ஆல் கிளாசையும் அபேஸ் செய்யும் அஜித்தும் இணைந்து ஸ்வீட் காம்போவாக கொடுத்துள்ள படம்தான் என்னை அறிந்தால். கடந்த மாதம் ரிலீசாக வேண்டிய திரைப்படம், பட வேலைகள் பாக்கி காரணமாக தாமதமானது. ஆனால் புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதைப்போல உள்ளது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு.

கலைஞர் : விதியோ, சதியோ அல்ல; தன்னிச்சையாக தேடி கொண்டது

'அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை:
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், 'என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல் இது. சதியும், விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால், விளைந்திட்ட இடைத்தேர்தல்' என ஜெயலலிதா கூறியிருக்கிறார். நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை தான், ஜெயலலிதா, இவ்வாறு சதியென்று விமர்சித்திருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள் தான் கவனிக்க வேண்டும். அவருக்கு கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டதே தவிர வேறல்ல. என் உடல்நிலை காரணமாக, நான் நேரடியாக பிரசாரத்திற்கு வர வேண்டாம் என, அன்பழகனும், ஸ்டாலினும் வலியுறுத்தி, தடுத்து விட்டனர். அதனால், நான் ஸ்ரீரங்கம் வரவில்லை. என்றாலும், என் நினைவு முழுவதும் இந்த இடைத்தேர்தல் பற்றி தான் இருக்கும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.தினமலர்.com

பிஜேபி சுப்ரமணியன் யார்? ஊழல் ராணியின் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஊழல் சக்கரவர்த்தி!

ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்? பா.ஜ.க இடைத்தேர்தல்சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பாசிச ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்? மக்களை ஏமாற்றி நாமம் போட்டு அதே நாமத்தை இன்று அடையாளமாக்கி பாஜகவின் பல்லக்கில் பவனி வருகிறார் இவர். திருச்சி சென்று வினவு செய்தியாளர்கள் திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை. படியுங்கள். பாஜகவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துங்கள்!
- வினவு சுப்ரமணிய வைரஸ் நிகழ்த்திய முதல் தாக்குதல்!
தோழரே, சரியா சொல்லணுமுனா அது 1993-ம் வருசம். எங்க ஊரு திருச்சி துறையூருக்கு பக்கத்தில இருக்கும் கரட்டாம்பட்டி. ரொம்ப சின்ன கிராமம். மக்கள் யாருக்கும் பெரிசா படிப்பறிவு கிடையாது. ஊர்ல படிச்ச முதல் தலைமுறையே என்னோடது தான். நம்ப வினவு தம்பிங்க ரொம்ப விலாவாரியா ரிசேச் பண்ணி எழுதியிருக்காக எனக்கு எனக்கு தெரிஞ்சு  இது மாதிரி  ஜெனலிசம் தமிழ்ல ரொம்ப அரிது

நேரு, ராஜிவ், இந்திரா பெயரிலான திட்டங்கள் வல்லபாய் படேல், வாஜ்பாய் பெயர்களை சூட்ட முடிவு

ராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா
* ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரைமைப்பு திட்டம்
* ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டம்
*இந்திரா அவாஸ் யோஜனா
*இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்
*ராஜிவ் காந்தி குழந்தைகள் காப்பக திட்டம்
*ஜவஹர்லால் நேரு ரோஜ்கர் யோஜனா
*ராஜிவ் காந்தி ஷ்ராமிக் கல்யாண் யோஜனா
*இந்திரா விகாஸ் பத்திரம்
* இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம்
* ராஜிவ் ரத்னா அவாஸ் யோஜனா
புதுடில்லி: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை, பா.ஜ., தலைவர்களின் பெயர்களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தே.ஜ., கூட்டணி அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம், அடல் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் என்ற பெயரில் மாற்றப்படவுள்ளது.

ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் ராகுல் தலையிட்டதை ஒப்புக்கொண்டு விட்டார்: பா.ஜனதா

ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் தலையிட்டதாக ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டு விட்டார் என்று பா.ஜனதா கூறி உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜனதாதான், ஜெயந்தி நடராஜனை காங்கிரசுக்கு எதிராக பேச வைத்ததாக ராகுல் காந்தி கூறுவது தவறு. ஜெயந்தி நடராஜன், தடம் மாறாத காங்கிரஸ் தலைவர். டெல்லி சட்டசபை தேர்தலில், எதையாவது செய்து காலூன்ற வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி இப்படி பேசி உள்ளார். ஜெயந்தி நடராஜனின் அமைச்சக செயல்பாடுகளில் தலையிட்டதாக ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டுள்ளார். ஏழைகள் மற்றும் ஆதிவாசிகளின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுமாறு ஜெயந்தி நடராஜனிடம் அவர் கூறியிருந்தால், ஜெயந்தி நடராஜன், மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்று ‘பிக்கி’ (எப்.ஐ.சி.சி.ஐ.) கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘நாளை முதல் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உங்களுக்கு பிரச்சினை இருக்காது’ என்று கார்ப்பரேட் அதிபர்களிடம் ஏன் கூறினார்?

புதன், 4 பிப்ரவரி, 2015

கண்ணீர் விட்டு அழுது அழுது ஒட்டு கேட்ட கிரண் பேடி

டெல்லி: தேர்தல் பிரச்சாரம் என்றாலே ஒருவருக்கொருவர் வசை பாடுவதும், குற்றம்சாட்டுவதும் சூடுபறக்கும். ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் கொடுத்த ஆதரவைப் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தினார். டெல்லி சட்டசபைக்கு வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ளதால் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி கிருஷ்ணநகர் தொகுதியில் இன்று கிரண் பேடி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.

குரங்குக்கு சாராயம் கொடுத்தாக மேடையில் பேசி மாட்டிக்கிட்ட மயில் சாமி

ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரித்திருக்கும் படம் வஜ்ரம்.
 இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனிடையே வஜ்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா  பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் பேசிய மயில்சாமி, ‘வஜ்ரம் ‘படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது. மூணார் போனோம் அங்கே குரங்குகளே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. குற்றாலத்தில் குரங்குகள் தொல்லை. எதை எடுத்தாலும் தூக்கிச் சென்று சாப்பிட்டுவிடும். அவை எதை வேண்டுமானாலும் தூக்கும்.எதைக் கொடுத்தாலும் சாப்பிடும்  என்றார்கள். எதைக் கொடுத்தாலும் சாப்பிடுமா.. இப்போ பார்க்கலாம் என்று என் உதவியாளாரிடம் 2 முழு பாட்டில் சரக்கை வாங்கிவரச் சொன்னேன். அதை குரங்குகளுக்குக் கொடுத்தேன் .குடித்து விட்டு மயங்கின.உருண்டன.. புரண்டன. இப்படி அதுகளின் கொட்டம் அடங்கியது” என்று நகைச்சுவையுடன் கூறினார்.
மயில்சாமியின் இந்தப் பேச்சு மீடியாக்களில் குறிப்பாக இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் மயில்சாமியிடம் எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் தலைமையில் முதன்மை ஆய்வாளர் தவுலத்கான், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் மயில்சாமியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆம் ஆத்மியை மீது சேறு வாரி வீசும் மோடி! தோல்வி பயத்தில் புலம்பலோ புலம்பல்!

ஒவ்வொரு நாடாக சுற்றி கொண்டு இருந்த மோடியை தலைநகரை சுற்றி கொண்டிருக்க செய்த பெருமை கேஜ்ரிவாலையே சாரும்....அடுத்த வெளி நாடு பயணம். எப்போ..மோடி சார்? 
புதுடில்லி: டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, பிரதமர் மோடி, நேற்று பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கடுமையாக சாடினார்.15 ஆண்டுகளாக..பெயர் குறிப்பிடாமல், பிரதமர் மோடி பேசியதாவது:அந்த தாயும், மகனும் சொல்வதை யாரும் கேட்பதில்லை. (சோனியாவும், ராகுலும்) பெரிய, பழமையான காங்,, இந்த நகரத்தை, 15 ஆண்டுகளாக சீரழித்து விட்டது. தற்காலிக கட்சி (ஆம் ஆத்மி) புதிதாக இருக்கிறது; சிறிய கட்சியான அது, ஓராண்டில் டில்லியை கெடுத்து விட்டது. கறுப்புப் பணத்தை பற்றி பேசும் கட்சி ஒன்று (ஆம் ஆத்மி), நள்ளிரவில், நான்கு மோசடி நிறுவனங்களிடம் இருந்து, தலா, 50 லட்சம் வீதம், இரண்டுகோடியை திரட்டி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றப் பார்க்கிறது.சுவிஸ் வங்கிக் கணக்குகளைப் பற்றி, விலாவரியாக பேசும் அந்தக் கட்சி, தனக்கு நிதியளித்த நான்கு பேர் யார் என, தெரியாமல் இருக்கிறதாம். இத்தகைய நேர்மையற்றவர்களிடம், இந்த மாநிலத்தை ஒப்படைக்கலாமா... தற்காலிக கட்சி தலைவர், மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

மைக்கல் குன்ஹாவின் சதியால்தான் ஸ்ரீ ரங்கம் இடைதேர்தலா? ஜெயலலிதாவின் அறிக்கை சொல்கிறது?

சென்னை: சதியும், விதியும் நடத்திய சதிராட்டத்தால் நடக்கும் இடைத்தேர்தல் என ஸ்ரீரங்கம் வாக்காளருக்கு எழுதிய பிரசார கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க எனக்கு வாய்ப்பு நல்கினீர்கள். இதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் அனைத்துத்துறைகளும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுமட்டுமின்றி, நிலஅபகரிப்பு, கொலை, கொள்ளை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பதுடன் மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

இளையராஜாவையும் ரஹ்மானையும் துணிந்து தோலுரித்த இசை சூரியா!
இளமை துள்ளோ துள்ளுவென்று துள்ளுகிறது. கதாநாயகியின் தொப்புளை பியானோவாக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் இதயம் ஏகத்துக்கும் எகிறி குதிக்கிறது.

நாயகியின் பெயர் சாவித்ரியாம். இடுக்குப்பல். வட்டமான முகம். ரோஜா நிறம். கழுத்துவரை பக்கா ஃபேமிலி லுக். முகலாய இளவரசிகள் பயன்படுத்திய மஸ்லின் துணிதான் இடைவேளை வரை இவருக்கு தாவணி. டிரான்ஸ்பரண்டாக இரு கோடுகள் ஜெயராஜின் ஓவியம் போல அப்பட்டமாக கேமிராவில் பதிவாகிறது. இவரது இடுப்புக்கு ஸ்பெஷல் லைட்டிங் வைத்திருக்கிறார் கேமிராமேன். நடிப்புக்கு ஜோதிகாவையும், சிம்ரனையும் டிப்பி அடிக்கிறார். நிச்சயமாக எஸ் ஜே சூர்யா ஒரு பெரிய காரியத்தை தமிழ் சினிமாவுக்கு செய்துள்ளார் நன்றி

மோகன்லாலை வறுத்து எடுத்த சமுக வலைத்தளங்கள் ! வாங்கிய காசை திருப்பி தர மோகன்லால் சம்மதம்

திருவனந்தபுரம்,பிப்.03 (டி.என்.எஸ்) பிரபல மலையாள நடிகர் மோகன்லால், நடிப்பது மட்டும் இன்றி படம் தயாரிப்பது, படம் வெளியிடுவது என்று சினிமா சம்மந்தமான தொழில்கள் செய்வதோடு, இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.லலிசம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இந்த இசைக் குழு சார்பில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 35வது தேசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது. மோகன்லாலின் பிளாக்கிலும் சமூக வலைதள கணக்கிலும் பலர் தங்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். கேரள அரசிடமிருந்து நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.

ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என் மகளை தினம் தினம் பாலியல் சித்திரவதைகள்.......


இராக்குக்கு 5 முறை வந்துவிட்டேன் 2007-க்குப் பிறகு. இப்போது பார்த்ததைப் போன்ற துயரத்தை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. இராக், சிரியா நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள முகாம்கள், தற்காலிக வசிப்பிடங்கள் ஆகிய வற்றைப் பார்வையிட்டேன்.
கடந்த 4 ஆண்டுகளாக நடக்கும் சண்டையில் சிரியாவின் மொத்த மக்கள்தொகையான 2.3 கோடியில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தங்களுடைய வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டார்கள். இராக்கில் பயங்கரவாதிகளின் வன்செயல் களுக்கு அஞ்சி 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பிடங் களை விட்டு வெளியேறிவிட்டார்கள். உயிருக்கு அஞ்சி ஓடி வந்துள்ள இந்த அகதிகள், மிகவும் கொடூரமான பயங்கரங்களை நேரில் பார்த்தவர்கள். அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு அவ்வளவுதான். வாழ்வதற்கு வழி தெரியாமல் அனைவரும் திண்டாடுகிறார்கள். நாலா புறங்களிலும் பயங்கரவாதமெனும் கொடூரம்.

வேலூரில் வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக ....

 வேலூர் மாவட்டத்தில், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்கள் பலர், கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், கடந்த 31ம் தேதி அதிகாலை, தோல் கழிவுநீர் தொட்டி உடைந்ததில், 10 பேர் பரிதாபமாக இறந்தனர்; அவர்களில், ஒன்பது தொழிலாளர்கள், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  வடநாட்டு பணியாலருங்க இல்லையானால் நமக்கு இவ்வளவு அடுக்கு மாடி குடியிருப்பும் மேம்பாலங்களும் நான்கு வழி 6 வழி புற வழி சாலைகளும் யாரால் செய்திருக்க முடியும்? உணவை பார்த்தீங்கன்னா வெறும் கோதுமை மாவு மைதா மாவு தான் ரொட்டி தான் வெங்காயத்தையும் பச்சை மிளகாயினையும் கடிச்சிட்டு சாப்பிட்டு விட்டு அந்த ஸ்ப்பாட்டிலியே தூக்கம் இயந்திரம் போல வேலை செய்ய அவர்களால் தான் முடியுது வடநாட்டில் பிழைக்க போதிய வழியில்லாமல் தான் இங்கு வர்றாங்க அவங்களுக்கு நாம் பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டியது அவசியம்

சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு பாடசாலைக்கு சென்றவன் நான் - ஜனாதிபதி மைத்திரி

நாம் கொடுத்த வாக்குறுதிகளை மாற்றிக்கொள்ள மாட்டோம், உரிய காலத்தில் நிலை நாட்டுவோம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றியமைக்கப்படும், நான் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் மூன்று வேளையும் சோற்றை தவிர வேறு எதையும் உண்பது அரிது, நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு  பாடசாலைக்கு சென்றவன் என்ற வகையில் நாட்டு மக்களின் கஸ்டங்கள் தெரிந்தவன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக நேற்று அரச தொலைக்காட்சி சேவைக்கு அளித்த ஒன்றுக்கு நேரடி பேட்டியில் கூறினார்.நான் எனக்கு அளிக்கப்பட்ட அரச மாளிகையில் நான் குடியேறப்போவதில்லை, உலகத்தில் எந்தநாட்டிலும் இல்லாத அதிகாரம் இலங்கை அரச தலைவருக்கு உண்டு அதை அனைத்து தரப்பும் இணைந்து நாடாளுமன்றில் இந்த தனிமனித அதிகாரத்தை இல்லாதொழிக்க முன் வர வேண்டும் .அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் இங்கு கட்சிகள் என்ற சுயநலத்தை கைவிட்டு மக்களுக்கு என்று ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். thenee.com

வாஸ்து வியாதி பிடித்த சந்திரபாபு நாயுடுவும் சந்த்ரசேகர ராவும் மக்களின் பணத்தில் அடிக்கும் பெருங்கூத்து

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களின், 'வாஸ்து' மோகத்தால், கோடிக்கணக்கில், மக்களின் வரிப் பணம் பாழாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்த வகையில், 'ஆந்திரா தலைநகரை சிங்கப்பூர் போல் மாற்றுவேன்' என முழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், 'ஐதராபாத்தின் சுற்றுப் பகுதிகளை, தகவல் தொழில்நுட்ப முதலீடுகள் குவியும் கோட்டையாக ஆக்குவேன்' என சூளுரைத்த சந்திரசேகர ராவும், வாஸ்து வலையில் விழுந்து, போட்டி போட்டு, அரசு கஜானாவை காலி செய்து வருகின்றனர்.சந்திரசேகர ராவ், வெளிப்படையாகவே, 'தற்போதுள்ள தெலுங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து சரியில்லை' என்று கூறி, 150 கோடி ரூபாய் செலவில், எரகடாவில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் வாஸ்து என்ற பெயரில் சட்டசபை கட்டிடத்தையே மருத்துவமனையாக அறிவித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

திங்கள், 2 பிப்ரவரி, 2015

சம்பிக்க ரணவக்க: கோதபாய ராஜபக்ஷ தனது வியாபார நோக்கத்திற்காக தமிழ் மக்களின் காணிகளை

கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஷ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறி வடமாகாண தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய காணிகள் மீண்டும் அம் மக்களுக்கு கையளிக்கப்படுமென ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ராஜபக்ஷ என்ற புற்று நோயை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவை தொடர்ந்தும் அவ்வாறே கணிக்கப்படும் ஆனால் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளாக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஷ தன்னிச்சையாக தனது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ளார். காண்பது கனவா ?ஒன்னும்புரியல்லையே ? நேற்று வரை இந்த சம்பிக்க சிங்கள கடும் போக்காளர் என்று அறியப்பட்டவர் இப்ப இவரு ரொம்ப நல்லவர் மாதிரில்லா தெரியறார் .... என்னமோ ஜனங்களுக்கு அவிங்களோட வீடு கிடச்சா சரி ....

தனிக்கட்சி தொடங்க கார்த்தி சிதம்பரம் முடிவு ! சிங்கம்/சுவிங்கம் ஒன்று புறப்பட்டதே???????

 தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் இன்று காலை முதல் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக காங்கிரசில் முக்கிய தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஜி.கே.வாசன் கட்சியை விட்டு வெளியேறிய உடன் அதிரடியாக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கும், ப.சிதம்பரம் தரப்புக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் மேலிடத்தில் புகார் செய்து வருவதால் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் இப்பிரச்னையில் தலையிட உள்ளனர். மேலிட முக்கிய தலைவர்களுக்கும் தமிழக காங்கிரசின் கோஷ்டி பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தனிகட்சின்னு இருந்தாக்கா எந்த கட்சியுடனும் சேர்ந்து பதவி சுகம் அனுபவிக்கலாம் பாருங்க!

வரலட்சுமிக்கு தேசிய விருதை தாரை தப்பட்டை வாங்கி தருமாம் ~ பாலா அருள்வாக்கு

சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘பரதேசி’ போன்ற  படங்களை தந்த இயக்குனர் பாலா, தற்போது ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இது, இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படமாகும். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது வரலட்சுமியின் நடிப்பை பார்த்து இயக்குனர் பாலா, கண்ணீர் விட்டதாகவும், அவருக்கு விலையுயர்ந்த கை கடிகாரம் மற்றும் தங்க சங்கிலியை பரிசளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவை இரண்டும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் வரலட்சுமியை வில்லன்கள் சித்திரவதை செய்வது மாதிரியான ஒரு காட்சியை இயக்குனர் பாலா படமாக்கியுள்ளார். இந்த காட்சியில் நடிக்கும்போது வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு பிசகியது. இருந்தாலும், அந்த வலியை பொருட்படுத்தாமல் அந்த காட்சியில் நடித்து கொடுத்துள்ளார். மேலும், அடுத்த நாள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு, குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.

இலங்கை முன்னாள் அமைச்சர் திசா அத்தநாயகே கைது!

இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சி காலத்தில் போது   சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் திசா அத்தநாயகே. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர், அதிபர் தேர்தலுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார்.அதிபர் தேர்தல் சமயத்தில் இவர் பரபரப்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டார். 13-வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக சிறிசேனா வுக்கும், ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.இது தொடர்பான ஆவணத்தில் சிறிசேனா, ரனில் விக்கிரமசிங்கே இருவரும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த சிறிசேனாவும் ரனில் விக்கிரமசிங்கேவும் அந்த ஆவணத்தில் உள்ள கையெழுத்து தங்கள் கையெழுத்து அல்ல என்றும் போலியானது என்றும் கூறி புகார் செய்தனர்.

ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் ! 30 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் 500க்கும் மேற்பட்ட கார்கள்

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிராபிக் ராமசாமியுடன் அதிமுகவினர் சர்ச்சையில் ஈடுபட்டத்தைத் தொடர்ந்து பாஜகவினர் அவருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று பெருகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே வந்தார். அப்போது அவர் வந்த கார் காவல் நிலையம் அருகே பழுதாகி நின்று விட்டது. அப்போது அங்கு அதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்ய வந்ததையொட்டி, ஏராளமான கார்கள் வந்தன. டிராபிக் ராமசாமியின் கார் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அவரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹேமநாதன் உள்ளிட்டோர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக பேசினர்.

தருண் விஜய்! பிஜேபியை வளர்க்க மிஸ்ட் கால் போதும்...இதுக்கு இம்…புட்டு சீனு?”


ஸ்ரீ ரங்கத்தில் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறதா? அனுதாபம் மிஸ்ஸிங்?

ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க.விற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென தி.மு.க. தலைமை கேட்ட போது புதிய தமிழகம் தவிர மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வேட்பாளரை களம் இறக்கிய நிலையில் காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்து விட்டன.
2016 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் இடைத்தேர்தலில் தி.மு.க–அ.தி.மு.க– பா.ஜனதா போன்ற பெரிய கட்சிகள் பலம் எப்படி உள்ளது? மக்கள் சிந்தனை எப்படி உள்ளது? என்பதை பார்த்து சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது எந்த கூட்டணியில் சேருவது என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக இந்த கட்சிகள் இடைத்தேர்தலில் ஒதுங்கிக் கொண்டன.

மதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் கந்துவட்டி கூட்டணி ஆட்சி !

பேங்க் புத்தகத்தை அடமானம் வைத்து ரூ 4,000 கடன் வாங்கினேன். தின வட்டி 100-க்கு 10 ரூபாய். இது வரை ரூ 75,000 கட்டிவிட்டேன், இன்னமும் கடன் தீரவில்லை.மதுரை செல்லூர் பந்தல்குடியில்கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட கந்துவட்டி கும்பல் ஆஷா, மகா, செல்வம், சதீஷ், பூஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கவும், இந்த அராஜகத்திற்கு துணை நிற்கும் செல்லூர் எஸ்.ஐ. அன்பழகனை பணி நீக்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் பா நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்பந்தல்குடியில் பாதிக்கப்பட்ட மக்களும், வழக்குரைஞர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை போன்ற அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செல்லூர் – பந்தல்குடி – சுயராஜ்யபுரம் பகுதி பெரும்பான்மை தலித் மக்கள் குடியிருந்து வரும் பகுதியாகும். கூலிவேலை, சிறு வியாபாரம் செய்துவரும் ஏழை உழைக்கும் மக்களே அதிகம் உள்ளனர். விலைவாசி முதல், எல்லா செலவினங்களும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் வருவாய் பற்றாக்குறை காரணமாகவும் மருத்துவ சிகிச்சை, நல்லது கெட்டது போன்ற அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

பொறியியல் பட்டதாரிகளின் மறுபக்கம்! வேறு வேலை தேடி அலைகிறார்களா?

டி.என்.பி.எஸ்.சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்திய குரூப் இரண்டு மற்றும் வி.ஏ.ஒ தேர்வு முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. குரூப் இரண்டு நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் வென்றவர்களில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரிகள் என்பது பத்திரிகைகளில் காணக் கிடைத்த முக்கியச் செய்தி.
இது சாதாரண செய்தியாக கடந்து செல்லக்கூடியது அல்ல..டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றால் தேர்வான மொத்த பேரில் எத்தனை பேர் பொறியியல் முடித்தவர்கள் இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ள முடியும். இதற்கு என்ன காரணம்? எதனால் இந்த நிலை? பொறியியல் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா? அல்லது பொறியியல் துறையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாலா?

இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் என்ன கருதுகிறார்கள்? இதுபற்றி அறிய அவர்களைச் சந்தித்தோம்.

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை

புதுடில்லி:தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு பணமாகவோ, பொருட்களாகவோ லஞ்சம் கொடுத்தால், இரண்டாண்டு சிறை தண்டனை வழங்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது.இப்போதுள்ள சட்டங்களின் படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை தான் விதிக்கப்படுகிறது. அதுவும், நீதிமன்ற கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டால் தான், குற்றவாளி கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குப் பின், தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.'இவ்வாறு மென்மையான தண்டனை உள்ளதால் தான், தேர்தல்களில் பண பலம் அதிகரித்துள்ளது; லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என, சட்டம் கொண்டு வர வேண்டும்' என, 2012 முதல், தேர்தல் கமிஷன்,
மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்

புதுடில்லி: 'இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சலுகைகளை அனுபவிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்' என, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துாதரக அதிகாரி தேவ்யானி, அவர் வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு முறைகேடாக பாஸ்போர்ட் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தேவ்யானியை விசாரித்த அமெரிக்க போலீசார், அவரின் உடைகளை களைந்து சோதனை நடத்தியது, அப்போது, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க துாதரக அதிகாரிகள் அனுபவித்து வந்த சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. என்னதான் மோடி ஒபாமாவை கண்டு  சாயாவாலா பாணியில் டிப்ஸ்ஸுக்காக   வழிந்தாலும் அமெரிக்கர்கள் மற்றவர்களுக்கு எந்த சலுகையும் கொடுப்பதில்லை. அவர்களுக்கும் எந்த சலுகையும் கொடுக்க தேவை இல்லை.

Indian Films பெண்கள் ஆண்களுக்கு சுகம் தர ரெடியாக இருக்கவேண்டும்? லண்டன் பத்திரிக்கை விளாசல்!

இந்திய ஆண்கள் தங்களின் சந்தோசத்திற்கு பெண்கள் நிறைய தரவேண்டும் என  எதிர்பார்க்கிறார்கள்.
.It’s as if mainstream Bollywood is still having a hard time believing a normal, good girl can’t be spontaneous in bed, like a normal good girl. It’s a dangerous message to send out because it seems to suggest that when girls say no, they mean yes.”
இந்திய திரைப்படங்களால்,பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள்  சாதாரண விடயங்களாகப்படுகின்றனவா? 29.1.15ல் லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த நிர்பால் தலிவால் என்பவரின் கட்டுரையின் சாரம்:  அவுஸ்திரேலியாவில், அண்மையில் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து ஒரு இந்திய செக்கியுரிட்டி கார்ட், அவரது வழக்கறிஞர் முன்வைத்து வாதாடிய மேற்குறிப்பிட்ட கருத்துக்களால் சிறைக்குப் போவதிலிருந்து தப்பியிருக்கிறார். குற்றவாளியாகக் கருதப்பட்டவரின் நடவடிக்கைகளான, தனக்குப் பிடிக்காத பெண்ணைவிடாமற் பின் தொடர்நது திரிவது. தேவையற்ற மோபைல் குறிப்புகளை அனுப்புவது என்பவை இந்தியத் திரைப்படக் கதாநாயர்கள், தனக்குப்புடிக்காத ஒரு பெண்ணை எப்படித் தன் வழிக்குக்கொண்டுவருவது என்ற போர்முலாவுடன் இளைஞர்களின் 'மிகச் சதாரண' பழக்கவழக்கமாகக் காட்டப்படுகிறது

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

திமுக கொடி கரை வேட்டி அழகிரி Re Entry ? பிறந்தநாள் விழா அதிருதில்லை?

தொண்டர்கள் முன்னிலையில் திமுக கொடியை உற்சாகமாக அசைக்கும் மு.க. அழகிரி.| படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
தொண்டர்கள் முன்னிலையில் திமுக கொடியை உற்சாகமாக அசைக்கும் மு.க. அழகிரி.| படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
திமுகவில் மீண்டும் இணையப் போவதை மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா நேற்று மதுரையில் நடத்தப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 2001-ல் கட்சியில் இருந்து முதன் முதலில் தற்காலிகமாக நீக்கப்பட்டதிலிருந்தே மதுரையில் அவரது பிறந்தநாள் விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு ஓராண்டு நெருங்கும் நிலையில், மீண்டும் அதேபோன்ற சூழலில் அவரது 64-வது பிறந்த நாள் விழா மதுரையில் கொண் டாடப்பட்டது.

கணவன் கொலை மனைவி கற்பழிப்பு ! 41 ஆயிரம் ரூபா அபராதம்! பிகார் பஞ்சாயத்து தீர்ப்பு

Take Rs.41000, forget rape: Panchayat tells victim 41 ஆயிரத்தை வாங்கிவிட்டு, பாலியல் பலாத்காரத்தை மறந்துவிடு என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பீகார் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிகார் மாவட்டம் கோதா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரகாஷ் ரவிதாஸ் என்பவர், மகாதலித் சமூகத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி உதவிபெற ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். மகாதலித் சமூகத்தை சேர்ந்த அந்தப்பெண் அங்கு சென்றபோது, அவரை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் பிரகாஷ் மிரட்டியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊர் பஞ்சாயத்தாரிடம் கூறியுள்ளார்.

கஸ்தூரிரங்கன் கமிட்டி' விவகாரத்தில் ஜெயந்திக்கு வீரப்ப மொய்லி நிர்பந்தம் ! கேரளத் தமிழர் கூட்டமைப்பு ஜெயந்திக்கு ஆதரவு! 

கேரளத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகளை அமல்படுத்த பரிந்துரை செய்ததுதான் தனக்கு எதிரிகள் உருவாக காரணமாக அமைத்துவிட்டது எனக் கூறு கிறார் காங்கிரஸிலிருந்து விலகிய ஜெயந்தி நடராஜன்.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையின் பின்னணியில் ஜெயந்திக்கு எதிராக நடந்தவை குறித்து ‘தி இந்து’விடம் விரிவாகப் பேசினார் கேரள தமிழர் கூட்ட மைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப் பதற்காக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் 123 கிராமங்களில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை களை அமல்படுத்த முனைந்தது மத்திய அரசு. அந்த கிராமங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்ப தடை விதித்தும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மேலும் பல கட்டுப்பாடுகளையும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந் துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் கேரளத்தில் மட்டு மல்லாது தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அமலுக்கு வந்தது.
மற்ற மாநிலங்களில் இதற்கு எதிராக எந்தப் போராட்டமும் வெடிக்கவில்லை. கேரளத்தில் மட்டும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.

ஜெயந்தி Natarajan ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியுமா?

Kathir : ஜெயந்தி சொல்வதை நம்ப முடியாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது டைமிங். மத்திய புலனாய்வு கழகம் (சி.பி.ஐ) அவரை டெல்லிக்கு அழைத்து விசாரிக்க நாள் குறித்த உடனே அவரது கடிதம் பத்திரிகையில் லீக் ஆகிறது. சிபிஐ விசாரணை எதை பற்றி இருக்கும் என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஊழல்தான். ஜெயந்தி சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தபோது, பல முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் எல்லாம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவிட முடியாது. தகவல் சரிதானா, ஊழல் நடந்தது என்பதற்கு கொஞ்சமாவது அடையாளங்கள் இருக்கிறதா, போதுமான ஆதாரங்களை திரட்ட வழி உண்டா, வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் நிற்குமா என்பதையெல்லாம் ஆராய வேண்டும்.