மாலைமலர் :ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுத்து
இந்தியாவில் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் தாமிரத்தாது
பற்றி தெரிந்து கொள்வோமா?
போராட்டம்... போராட்டம்...
எதற்கெடுத்தாலும் போராட்டம்! இப்படியே போனால் நாட்டில் எந்த திட்டமும்
கொண்டுவர முடியாது.

இப்படி ஒவ்வொரு ஆலையாக மூடிக்கொண்டே வந்தால் வேலைக்கு எங்கே போவது?
வேலை கேட்டும் போராடுகிறோம். வேலை தரும் ஆலைகளும் வேண்டாம் என்கிறோம்.
இதற்கு என்னதான் தீர்வு? என்ற நியாயமான கேள்வி எல்லோரது மனதிலும்
இருக்கிறது.
இந்த கேள்வி யதார்த்தமானதுதான்.
ஸ்டெர்லைட் வேண்டும் என்று நினைப்பது போல் வேண்டாம் என்று சொல்வதிலும்
நியாயம் இருக்கிறது. அதில் புதைந்து கிடக்கும் ரகசியத்தை புரிந்து கொண்டால்
நிச்சயம் வேண்டாம் என்றுதான் சொல்ல தோன்றும்.
எல்லோரும் நினைப்பது போல, ஸ்டெர்லைட் என்பது தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலை
அல்ல.. அது தாமிர உருக்காலை.. உருக்காலை என்று சொல்வதைக் காட்டிலும்,
சுத்திகரிப்பு ஆலை என்றே சொல்வதுதான் சரியாக இருக்கும்.
அதாவது பூமியில் வெட்டியெடுக்கப்படும் தாமிரத் தாதுவிலிருந்து தாமிரத்தைத்
தனியேப் பிரித்தெடுப்பதுதான் ஸ்டெர்லைட்டின் வேலை. நல்லதுதானே. இதில்
நமக்கு என்ன நஷ்டம்? என்று தான் நினைக்க தோன்றும்.
ஏதோ ஒரு ஆலை. அதன் மூலம் மூவாயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கிறதே... இருந்துவிட்டுப் போகட்டுமே என்று தான் நினைப்போம்.