ராதா மனோகர் : தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
ஆற்றிய உரை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாகத்தான் எனக்கு தோன்றுகிறது!
வெறும் தேர்தல் அரசியலை தாண்டி உபகண்ட மாநிலங்களின் ஒட்டு மொத்த நலனையும் கருத்தில் கொண்டு அளந்து அளந்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் மிக பெறுமதி வாய்ந்தவை
எவராலும் இலகுவில் கடந்து போக முடியாத காத்திரம் நிரம்பிய மாநில சுயாட்சி களத்தை இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து விட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த உரையை இந்திய ஒன்றிய மக்கள் மட்டுமல்லாது
முழு உலகிலும் உள்ள பல ராஜதந்திர மட்டங்கள் கவனமாக செவி மடுத்திருக்கும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகம் கிடையாது!
செவ்வாய், 15 ஏப்ரல், 2025
மாநில சுயாட்சி களத்தை முதல்வர் ஸ்டாலின் கவனமாக அதேசமயம் மிக துணிவோடு திறந்து விட்டுள்ளார்!
12 ஆம் நூற்றாண்டு சிங்கள கற்பாறை! பௌத்தத்தை காப்பாற்றிய திராவிட மொழி என்ற பெருமை சிங்கள மொழிக்கு உண்டு
ராதா மனோகர் சிங்கள மொழியின் ஒரு ஆதார கல்வெட்டாக 12 ஆம் நூற்றாண்டு கற்பாறை!
இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில் நிசங்க மன்னரின் ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர் இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில் 3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக 7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
. இந்திய இலங்கை அரசமைப்பு சட்டங்கள்
![]() |
![]() |
Kulitalai Mano: அரசியலமைப்பு சாசன குழு என்பது 22குழுக்கள்
அதில் ஒன்றான வரைவுக் குழுவில்,
அல்லாடி கோபால்சாமி
மிட்டர் முன்ஷி ராவ்
பீமாராவ் அம்பேத்கார்
சதாயுல்லா கேதான்
என சடடம் தெரிந்த மேதைகள் பலர் இருந்தனர்.
ஆனாலும் இந்த மேதைகள் எழுதிய அரசியல் சட்டம் அல்ல இது!
1935ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆங்கிலேய அரசின் அரசியல் சாசனத்தை காப்பி அடித்தும்
உலக நாடுகள் பலவற்றின் சிறந்த சட்டங்களை சேர்த்தும்
இன்று இருக்கும் அரசியல் சட்டம் எழுதப்பட்டது
இந்த ஒட்டு போட்ட சட்டையை இத்தனை தையலர்கள் தைத்தும் கடைசியில் அணிந்த போதுதான் பாரதமாதாவிற்கு கோட் சூட் தைத்திருக்கிறார்கள் என்பதே தெரிந்தது
டாக்டர் பெஞ்சமின் ( மலையகம்) கந்தன் கருனையில் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் ....(13.04.1987
![]() |
மீராபாரதி வ.க.செ : டாக்டர் பெஞ்சமின் ( மலையகம்) அவர்கள் கந்தன் கருனையில் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் முடிந்து விட்டன....(13.04.1987) அதன் நினைவாக... தற்செயலாக திகதியைக் கண்டபோது....
இவர் அட்டன் ஹைலன்ஸ் கல்லுரியின் எனக்கு சிரேஸ்ட மாணவராக 80களில் கல்வி கற்றவர்.
பின் அப்பா ஈபிஆர்எல்எவ் உடன் வேலை செய்தபோது மீண்டும் அறிமுகமானார். ஆனால் விரைவில் அவரை இழந்தோம்.....
குறிப்புக்கு நன்றி இளங்கோ.
மீராபாரதி வ.க.செ : தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்...
http://tinyurl.com/aztn99p
"நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது.
மாநில சுயாட்சி என்பது மாநில நலன் மட்டுமல்ல. இந்திய நலனும் சார்ந்ததும் தான். Surya Xavier!
![]() |
Surya Xavier : *மாநில சுயாட்சி! -ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு!.
* இந்தியா என்பது தேசமல்ல. பல தேசங்களின் ஒன்றியம் தான்!.
* இந்தியா என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள்.
1947 ஆகஸ்ட்-15 இந்தியா விடுதலையடையும் போது காஷ்மீரும், கன்னியாகுமரியும் இந்தியாவோடு இல்லை என்பதே வரலாறு.
* கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும், காஷ்மீர் ஹரிசிங் மன்னனால் அங்குள்ள சமஸ்தானத்திலும் இருந்தது.
* வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இன்றைய நிலப்பரப்பு முழுமையும் எவராலும் ஆளப்படவில்லை.
* கி.மு.5- 6 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மகதப் பேரரசு தொடங்கி,
மௌரியப் பேரரசு
தமிழ்நாடு மாநில சுயாட்சி தீர்மானம் சட்டமன்றத்திற்கு இன்று வருகிறது
tamil.news18.com = l akshmanan G : 5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆங்கில பாடபுத்தகங்களுக்கு இந்தியில் பெயர்கள் - வடநாட்டு இந்தி வியாதி - NCERT naming English textbooks in Hindi
![]() |
மாலை மலர் : மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளில் ஹனிசக்கிள் மற்றும் ஹனி கோம்ப் என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை பூர்வி என்று பெயரிடப்பட்டுள்ளன. பூர்வி என்ற இந்தி வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.
திங்கள், 14 ஏப்ரல், 2025
ரூ.13,500 கோடி மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
BBC tamil : இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஞாயிறு, 13 ஏப்ரல், 2025
ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 மசோதாக்களும் சட்டமானதால் துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசின் வசமானது.