மின்னம்பலம் - மோனிஷா :ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் மாநாடு நடைபெறுகிறது.
ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.
சனி, 9 செப்டம்பர், 2023
ஜி20 மாநாடு விருந்து: டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
மொராக்கோ நிலநடுக்கம்: 600-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு – நள்ளிரவில் நடந்தது என்ன?
BBC : வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 632 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக 296 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சந்திரபாபு நாயுடு கைது .. ஆந்திரா முன்னாள் முதல்வர்!
மாலை மலர் : தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என முன்னதாக தெரிவித்திருந்தார்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிஐடி அதிகாரிகள் கைது வாரண்டுக்கான உத்தரவை அவரிடம் வழங்கினர்.
முன்னதாக, நான் தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா பண்டாரநாயக்க : அதிபர் ரணில் விக்கிரமசிங்கா நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார் ஆனால் ஊழல்வாதிகளை தண்டிக்க முடியாமல் இருக்கிறீர்
இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.
நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்கிரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி? 1972-ம் வருடம்.- அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி
Arul Selvam : குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....
அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்..
அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...
அரசு வேலைக்கு,
TNPSC ரெக்ரூட்மன்ட் என
ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது...
ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,
அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்..டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன்
இப்படிப்போகும் லிஸ்ட்..
கடை நிலை ஊழியர் என்னும் பியூன் ஒரு தங்கராசாகவோ செல்வராசாகவோ இருப்பதுவே பெரிய விஷயம்..
வெள்ளி, 8 செப்டம்பர், 2023
பெண்களை பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன? அதிர்ச்சி அடையாதீர்கள்!.
Jeyarani Mayilvahanan : பெண்களை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? . இது
சாம்பிள் மட்டுமே...இதை விட மோசமான, ஆபாசமான சரக்கு் இந்து மதம் முழுக்கக் கொட்டிக் கிடக்கிறது. என்னுடைய கண்ணியம் கருதி சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்.
1. மனுஸ்மிருதி
மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25
மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25
மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25
மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,
மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"
பிரிட்டிஷார் Vs பிராமணர்கள் .. ஒரு பிராமணன், காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்!
தினமணி* *கட்டுரை -2007:: பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்
*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*
*சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*
*வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
*சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
* *பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,**
* பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*
*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*
*1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*
*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*
*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*
*வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.*
*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*
* வெள்ளையரால் வெளியிடப்பட்டது.*
இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு!
மாலைமலர் : 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு- அதிக வெற்றிகளை குவித்த "இந்தியா" கூட்டணி
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஏழு தொகுதிகளில் "இந்தியா கூட்டணி" பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை குவித்துள்ளது.
நடிகர் மாரிமுத்து காலமானார்! மாரிமுத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது, படபடப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தவருக்கு போகும் வழியிலேயே நெஞ்சுவலி அதிகமாகி உள்ளது.
இந்நிலையில் ஒரு வழியாக மருத்துவமனை சென்றவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இன்று காலை 8.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Tamil Nadu CM MK Stalin has condoled demise of director and actor Marimuthu
G 20 மாநாட்டுக்காக டெல்லி குடிசைகளை புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் அதிகாரிகள்
G 20 மாநாட்டுக்காக டெல்லி குடிசைகளை புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் அதிகாரிகள்;அழும் பெண்மணி-காண்போரை கண்கலங்க வைக்கும் காட்சி
நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் Libra ரவீந்திரன் அதிரடி கைது! 16 கோடி மோசடி செய்தது நிரூபணம்!
tamil.asianetnews.com - manimegalai a : பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் ராவீந்திரன் திடக்கழிவுகளை, ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு, மோசடி செய்து ஏமாற்றிய தொடரப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் (மாதவா மீடியா பிரைவேட் லிமிடெட்) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், கடந்த 2020 ஆம் ஆண்டு 'லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் சந்திரசேகர் என்பவர், தனக்கு அறிமுகமாகி, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும்,
தயாநிதி மாறன் வாரிசுகள்.. கரண், திவ்யா துவங்கிய புதிய நிறுவனம்.. sneaker customization platform K-KIX
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதல் தீவிர அரசியலில் இருக்கும் காரணத்தால் அவருடைய மூத்த சகோதரர் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் போல் வர்த்தக துறையில் இல்லை. ஆனால் தயாநிதி மாறனின் வாரிசுகள் இளம் வயதிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் தயாநிதி மாறன் வாரிசுகள் கரண், திவ்யா வர்த்தக துறைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளனர். இவர்கள் துவங்கிய வர்த்தகம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு டிரெண்டியான வர்த்தகமாகும்.
நிவேதிதா அரவிந்த் (25 வயது), திவ்யா தயாநிதி மாறன் (22 வயது) மற்றும் கரண் தயாநிதி மாறன் (19 வயது) ஆகியோர் இணைந்து உருவாக்கிய பிராண்ட் தான் Kkix. இந்த நிறுவனம் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், Kkix ஒரு ஸ்னீக்கர் ஷூ கஸ்டமைஸ் சேவையை வழங்குகிறது.
வியாழன், 7 செப்டம்பர், 2023
தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள்- இராசராச சோழன் காலத்தில்.. ஏனைய கோயில்களில் எத்தனையோ?
Chinniah Kasi தேவதாசி ! 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும்.
45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர்.
ராஜகோபாலச்சாரி ஏன் ஜி ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை புறந்தள்ளினார்?
மலையக வாக்குகளின் பலத்தை வைத்து பிரிட்டன் இந்தியா அமெரிக்காவுக்கு சவால் விட்ட இடதுசாரிகளின் வரலாறு ஏன் இதுவரை மறைக்கப்படுகிறது?
இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்,
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் சுதந்திர இயக்கம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது
இந்த சுதந்திர உணர்வானது 1888 இல் முதல் சுதந்திரத்திற்கான இயக்கமாக இலங்கை தேசிய சங்கம் உருவானது
இதை தொடர்ந்து 1917 இல் சிலோன் சீர்திருத்த கழகம் உருவானது
மேற்கண்ட அமைப்புக்களின் பின்னால் 1919 டிசம்பர் 11 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் Ceylon National Congress ஒரு அரசியல் கட்சியாக உருவானது
இதுதான் இலங்கையில் உருவான முதல் அரசியல் கட்சியாகும்.
இதன் நிறுவன தலைவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் பணியாற்றினார்
அக்டோபர் 1920 இல் நடந்த முதலாவது கூட்டத்தில் சர் ஜேம்ஸ் பீரிஸ் இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்,
இவருக்கு பின்பு தொடர்ந்து எப்.ஆர். சேனநாயக்க,
டி.எஸ் சேனநாயக்க, டி.பி.ஜயதிலக, ஈ.டபிள்யூ பெரேரா, சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர, பட்ரிக்
டி சில்வா குலரத்ன, எச்.டபிள்யூ.அமரசூரிய, டபிள்யூ.ஏ.டி.சில்வா, ஜோர்ஜ் ஈ.டி.சில்வா மற்றும் எட்வின் விஜேயரத்ன ஆகியோர் தொடர்ந்து தலைவர்களாக பணியாற்றினார்கள்..
1943 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் மெதுவான போக்கை விமர்சித்து பூரண சுதந்திரத்திற்கான தேவை இருப்பதாக திரு டி எஸ் சேனநாயக்க கருதி இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்த ஏனைய பல தலைவர்களோடு டி எஸ்
சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள்.
ரூ.7.50 லட்சம் கோடி ஊழலை திசை திருப்ப காற்றில் சனாதன கம்பு சுற்றும் பாஜக" : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Kalaignar Seithigal - Lenin : தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.
தைவான் அதிபர் தேர்தலில் போட்டி போடும் தொழிலதிபர்.. இந்தியாவிலும் ஒரு தொழிலதிபர் பிரதமராக முடியுமா.?
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : சீனா உடனான பிரச்சனைக்கு மத்தியில் தைவான் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தச் சேர்தல் பல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாகவும் அமையலாம், அல்லது சீனா - தைவான் மத்தியிலான பிரச்சனையை மேலும் விரிவாக்க கூடும், காரணம் தைவான் நாட்டின் அரசியல் களம் அப்படிப்பட்டது.
தைவான் நாட்டில் 2 பிரதான அரசியல் கட்சிகள் உள்ளது. கோமின்டாங் (Kuomintang), சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை, அதேபோல் சினாவின் கொள்கைகளுக்கு அப்படியே ஒப்புக்கொள்ளும் கட்சி. இந்தக் கட்சிக்கு Nationalist Party of China (NPC) or Chinese Nationalist Party (CNP) என்ற பெயர்களும் உள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டி போடும் தொழிலதிபர்.. இன்று தைவான் நாளை இந்தியாவா..?
அடுத்த கட்சி தைவான் நாட்டின் தேசியவாதம் மற்றும் சுதந்திரத்தைப் பரவலாக ஆதரிக்கும் ஜனநாயக முற்போக்குக் கட்சி அதாவது Democratic Progressive Party (DPP). தற்போது Tsai Ing-wen தலைமையிலான ஆட்சி ஜனநாயக முற்போக்குக் கட்சி உடையது.
விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக வாக்குமூலம்! மருத்துவ பரிசோதனை
மாலைமலர் : சென்னை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் மேற்பார்வையில் விஜயலட்சுமி அளித்துள்ள புகார் மீது அடுத்தடுத்து போலீசார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக போலீஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் நடந்தது என்ன? என்பது பற்றி விஜயலட்சுமி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
சனாதன தர்மம் எல்லா மக்களுக்கும் உரியது அல்ல.. அதில் பெண்களுக்கு உரிமை ஏதும் இல்லை, சூத்திரர்கள் அடிமைகள்,,,,
Dhinakaran Chelliah : சனாதன தர்மம் என்பது பொதுவானதல்ல,
அது எல்லா மக்களுக்கும் உரியது அல்ல.
அது குறிப்பாக ஆரிய வேத வைதீகர்களுக்கான தர்மம் அல்லது வாழ்க்கை முறை.
இதைத் தவறாக மற்றவர்களும் (சூத்திர பஞ்சம சண்டாளர்கள்) தமக்கானதாக கருதும் போதுதான் பிரச்சனை எழுகிறது.
சனாதனம் என்பது இரு பிறப்பாளர்களான வைதீகர்களுக்கு மட்டுமே உரியது.
அதில் இருபிறப்பாளர்களான பிராம்மண,க்ஷத்திரிய,வைசியர்களின் நலன்களுக்கு மட்டுமே இடமுண்டு,
மற்றவர்களுக்கு துளியும் அதில் இடமில்லை.
சனாதன நூல்கள் அனைத்தும் சூத்திரர்கள்,சண்டாளர்கள்,
பஞ்சமர்களை, புலையர்களை,அவர்ணர்களை இழிவாகவும் எதிரிகளாகவுமே கருதுகின்றன.
உச்சகட்ட கோபத்தில் உதயநிதி... மாற்றப்படும் மாவட்டங்கள்?
மின்னம்பலம் - Aara :டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட கோபத்தில் உதயநிதி… மாற்றப்படும் மாவட்டங்கள்?
வைஃபை ஆன் செய்ததும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு பிரத்யேக வீடியோ வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 4, 5 தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அரசு ஆய்வுக் கூட்டங்கள், இளைஞரணி மாநாட்டுக்கு ஆயத்தப்படுத்தும் செயல்வீரர்கள் கூட்டங்கள் என அரசு, அரசியல் பயணமாகவே இதை அமைத்துக் கொண்டார் உதயநிதி.
தூத்துக்குடியில் தெற்கு, வடக்கு என இரு மாவட்டக் கழகங்களும் அதாவது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் என இருவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி வரும்போது வழக்கமாக இருக்கும் பெருங்கூட்டம் இல்லை.
அதனால் அப்செட் ஆனவர் தான் மட்டுமே பேசி விரைவாக நிகழ்ச்சியை முடிக்கத் திட்டமிட்டார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. ‘
பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் உயிர் தியாகம் Man dies rescuing two children at waterfall
jaffnamuslim.com : பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது, நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வேல்ஸில் அமைந்துள்ள பிரேகான் பீக்கன்ஸ் அருவியில் நடந்துள்ளது.
மேலும் குறித்த சமபவத்தில் விமானியான 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரெ இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், குறித்த அருவியில் இரண்டு குழந்தைகளை உயிருக்கு போராடுவதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
பின்னர் குழந்தைகள் தண்ணீரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட போதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார், ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
புதன், 6 செப்டம்பர், 2023
உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு
nakkheeran.in :தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான்.
இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார்.
பிரகாஷ் ராஜ் : பாரத் - யார் அந்த கோமாளி?
இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
உதயநிதியின் சனாதன டெங்கு விவகாரம் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் மோடி ஆலோசனை
தினமணி : புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு இரு சொற்களில் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் கூட்டத்தில், "வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பில் உள்ள உண்மை தகவலை பேசுங்கள். சனாதன சர்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள்” என்று அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் இந்திய பொருட்களின் புகழ் பெற்ற அடையாளம் Brand Name இந்தியா என்பதுதான்
ராதா மனோகர் : வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன
நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
சிலோன் டீ என்பது உலக புகழ் பெற்ற பிராண்ட் அடையாளம் Brand Name!
இன்றுவரை சிலோன் டீ என்றுதான் விளம்பர படுத்த வேண்டியுள்ளது
இல்லை இல்லை இது ஸ்ரீ லங்கா டீ என்று கூறிப்பாருங்கள் அது ஏதோவொரு கண்டத்தில் இருக்கும் அட்ரஸ் இல்லாத நாடு என்று வாடிக்கையாளர்கள் கடந்து போய்விடுவார்கள்
இலங்கையின் உலகப்புகழ் பெற்ற ஒரே ஒரு பொருள் தேயிலைதான்
இந்தியா அப்படி இல்லையே?
எத்தனை பொருட்கள் உலக சந்தையில் இந்தியா என்ற அடையாளத்தோடு விற்கப்படுகிறது?
மிக பெறுமதி வாய்ந்த இந்தியா என்ற பிராண்ட் அடையாளத்தை பாரத் என்று மாற்றினால்,
இந்த பாரத்தை உலக சந்தையில் கொண்டு போய் சேர்க்க இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையோ தெரியாது.
சனாதனம்... கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?
மின்னம்பலம் - Aara : திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து, ’இந்துக்களுக்கு எதிரானது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி’ என்று வட மாநிலங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து,
காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மதமும் சமம் தான். அனைவரது நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்று விளக்கம் கொடுத்தார்.
ராகுல் காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பா புறப்பட்டார்
மாலை மலர் : புதுடெல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு நாளை (7-ம் தேதி) ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
மறுநாள் (8-ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் அவர், அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். 9-ம் தேதி பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்கக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன்பின், நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு 10-ம் தேதி இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்திய வம்சாவளி பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
செவ்வாய், 5 செப்டம்பர், 2023
திமுக ஐ டி விங் .. கலைஞர் வசைபாடியவர்களுக்கே முதலிடம்.. எந்த தகுதியும் அற்ற ஒரு கூட்டத்தின் ஆட்டம்
ஆனந்த்குமார் சித்தன் : மீண்டும் ஐடி விங்குக்கே வரேன்..
மற்ற எல்லா கட்சியும் ஐடி விங்குக்கு எப்படி ஆள் செட் பண்றாங்க ?
சோசியல் மீடியாவில் யார் யார் நிறைய ரீச் இருக்கு..
யாருக்கு கண்டெண்ட் எடுக்க தெரியுது.. ஆர்கனைஸ் பண்ண வருது..
யாருக்கு ரைட்டிங் நல்லா வருது..
யாருக்கு கட்சி , கொள்கை எல்லாம் தெரியுது..
யாருக்கு அடிப்படை அரசியல் வரலாறு தெரியும்..
யாரால் ஒரு ஸ்ட்ராட்டஜி செட் பண்ண முடியும்..
யாரால் இது அத்தனையும் சேர்த்து ஆட்களை கம்யூனிகேட் பண்ண முடியும்..
இப்படி நிறைய பாயிண்ட் வைச்சு ஆள் எடுத்து வேலை செய்யுறாங்க.
இதனால் தான் மற்ற எல்லா ஐடி விங்க் வேலையும் பளிச்சென்று தெரியுது.
ஆனா திமுகல மட்டும்தான்.. மாவட்டம் சொன்னார்..ஒன்றியம் சொன்னார்.. வட்டம் சொன்னார்..உருண்டை சொன்னார்னு ரெக்கமன்டேசன்ல பதவி போடுறது.
அது போக யார் யார் அப்ளை பண்ராங்களோ அவங்களை சேர்த்துட்டு.
அவங்ககிட்டயும் இன்னிக்கு மாவட்டம் அங்கே போறார்.. போஸ்ட் ரெடி பண்ணிக்கோ.
எம் எல் ஏ இங்க வரார்.. ரைட்டப் ரெடி பண்ணிக்கோ..
பாமாலை பாடு
பூமாலை போடு.
அண்ணனை பத்தி ஹெவியா பில்டப் பண்ணுன்னு சொல்லி ஆர்டர் போடுறது..
உதயநிதி ஸ்டாலின் : தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன்
மாலை மலர் :தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது கூறியதாவது:-
நான் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன்.
அது ஒருநாள் செய்தியாக போயிருக்கும்.
ஆனால், அந்த செய்தியை எடுத்து பொய் செய்தியாக பரப்பி, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது.
சனாதனம் என்றால் என்ன?. எதுவுமே நிலையானது. எதுவுமே மாற்றக் கூடாது. எதையும் கேள்வி கேட்டக் கூடாது என்பதுதான் சனாதனம்.
இதை நான் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது. எல்லாவற்றையும் மாற்றிக் காண்பிப்போம், எல்லாவற்றையும் கேள்வி கேட்போம் என ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.
அம்பேத்கர் சொன்னதைத்தான் நான் சொன்னேன். தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன். தி.மு.க. எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்காகத்தான் நான் குரல் கொடுத்தேன்.
உதயநிதி மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!
மின்னம்பலம் - Selvam : செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, “டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். எதிர்க்க கூடாது” என்று தெரிவித்திருந்தார். அவரது பேச்சு தேசிய அளவில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக்கோரி 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்பட 260 முக்கிய பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நடிகை ரோஹினிக்கும் இடைவிடாத மிரட்டல்கள்! சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய 'தமுஎச' துணைத் தலைவர்
tamil.oneindia.com - Mathivanan Maran : சனாதன ஒழிப்பு மாநாட்டை சென்னையில் நடத்தியதால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (தமுஎச) துணைத் தலைவரும் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவருமான நடிகை ரோஹினிக்கும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும்
இதற்கு அஞ்சப் போவதில்லை என நடிகை ரோஹினி தெரிவித்துள்ளார் எனவும் தமுஎச தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக வேண்டும்: துரைமுருகன்
minnambalam.com - Kavi : நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலுக்கும் சேர்ந்தே தயாராக வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 4) காட்பாடியில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “திமுக ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது. இதில் 4ஆவது பொதுச் செயலாளராக இருக்கிறேன்.
அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியோருக்கு அடுத்து, உங்கள் ஆதரவால் நான் பொதுச்செயலாளராக இருக்கிறேன்.
திமுக வரலாற்றை எழுதுகிறபோது, நான்காவது பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். எனக்கும், என் பரம்பரைக்கும் இது ஒன்றே போதும்” என்றார்.
காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது .. சங்கரமடத்தின் உண்மை வரலாறு!
காஞ்சி சந்திரசேகரேந்திரர் |
ராதா மனோகர் : காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!.
காஞ்சி மகா பெரியவாள் என்று அழைக்கப்பட்ட காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்
இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994)
இதுதான் காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு !.
சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ( சுவாமிநாதன் சர்மா) காலத்தில்தான் உருவானது
கும்பகோணத்தில் இருந்த மடம் கிபி 1839 இல் தான் காஞ்சிபுரத்திற்கு மாறியது..
( sadananda@anvil.nrl.navy.mil (கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில் , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்) ;
காஞ்சிபுரம், ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!
மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.
ஐயா, எல்லா மடங்களின் கணக்குகளின்படியும் ஆதி சங்கரர் காலம் கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரைதான் என்பது எல்லோரும் அறிந்ததே! .
மேலும் அவர் நிறுவிய நான்கு மடங்களில் காஞ்சி மடம் இடம் பெறவில்லை .
காஞ்சி மடம் 1100 ஆண்டுகளுக்கும் உட்பட்ட காலத்திலேயே உருவாகி இருக்கவேண்டும் . அப்படி அல்லாது அது கி.மு 482 என்று கூறினால் அது நிச்சயம் இம்மடம் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்டிருக்க முடியாது.
காஞ்சி மடத்தின் தேதிகளையும் உண்மையான வரலாற்றையும் சரிபார்க்கவும். காஞ்சி பீடத்தைப் பற்றிய உண்மையான செய்திகள் பற்றிய சதானந்தாவும் வரலாற்று ஆசிரியர் திரு போன் ஜியோவானியும் ஆதி சங்கராச்சாரியாரின் வரலாறு மற்றும் காஞ்சி மடம் பற்றிய காலம் பற்றிய கேள்விகளை முன்பே எழுப்பியுள்ளன.
உதயநிதியை ஒரு திராவிட தலைவராக முழு இந்தியாவுக்கு அறிமுகம் செய்ய ..
ராதா மனோகர் : டைம்ஸ் நவ் . இந்தியா டுடே . ரிப்ளிக் டிவி .என் டி டி வி போன்ற வடஇந்திய தொலைக்காட்சிகள் திரு உதயநிதியை ஒரு திராவிட தலைவராக முழு இந்தியாவுக்கு அறிமுகம் செய்யும் வேலையை முழு மூச்சாக செய்கின்றன.
இது ஒரு புறம் இருக்க,
மறுபுறம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சனாதனம் என்பதை கேள்விக்கு உரியதாக்கி அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன.
வெறும் பாஜகவின் தேர்தல் அரசியலுக்காக,
சனாதன தர்மம் என்பதை ஏன் ஒரு விவாத பொருளாக்க வேண்டும்?
இந்த விடயத்தை கிளறாமல் இருந்திருக்கலாமே என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்
பாஜகவினரோ உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சே வரும் தேர்தலில் தங்களுக்கு வாக்குகளை மீண்டும் அள்ளித்தரும் என்று நம்புகிறார்கள்.
அந்த அளவு உக்கிரமாக அமில வார்த்தைகளை வீசுகிறார்கள்..
பிறவி சனாதனவாதிகளோ உண்மையில் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று தோன்றுகிறது
திங்கள், 4 செப்டம்பர், 2023
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி! அயோத்தி துறவி சர்ச்சை அறிவிப்பு
வழக்குகளை சந்திக்க தயார்
தமிழக அமைச்சர் உதயநிதி,"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.
அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன.
ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி
பார்வதியின் மாத விலக்கு . யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.
pathivuthokupukal.blogspot.com : பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா.
அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு முறை மாதவிலக்கு. கேரளாவில் பார்வதிக்கு மாதாமாதம் மாத விலக்கு.
இது ஓரு யோனி பூஜை.
பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம். இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே?
பெண் குறி வழி பாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.
இதற்கு சொல்லப்படும் கதை.
கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறார். அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவில்.
ஆசிரியர் கே வீரமணி : உதயநிதி சனாதன ஒழிப்பு என்பதை இனக்கொலை என்று திரிக்கும் பாஜக .. பொய் பிரசாரம் அவர்களின் கைவந்த கலை
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் என பொய் பிரசாரம் செய்யும் பாஜகவினருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.விரமணி வெளியிட்ட அறிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏதோ இனப்படுகொலை (Genocide) செய்யச் சொன்னதுபோல,
பல சமூக ஊடகங்களாலும், நாட்டின் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களாலும் திட்டமிட்டு திரித்துப் பரப்பப்பட்டு வருவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது;
அப்பட்டமான 'ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப் பொய் மூட்டை' ஆகும்!
செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
minnambalam.com - christopher : செந்தில் பாலாஜி ஜாமின் மனு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கோரி, கடந்த மாதம் 28ஆம் தேதி எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உதயநிதிக்கு எதிராக டெல்லி தமிழக அரசு இல்ல ஆணையரிடம் பா.ஜ.க. குழு கடிதம்
maalaimalar : சென்னை :சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும் என்று கூறி இருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், தமிழக முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஆர்.எஸ்.சிவாஜி : எனது உயிரை காப்பாற்றியதே கமல்தான்!
tamil.filmibeat.com - Karunanithi Vikrama : –சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) தனது உயிரை காப்பாற்றியதே கமல் ஹாசன் என ஆர்.எஸ்.சிவாஜி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பாசமலர் உள்ளிட்ட படங்களை தயாரித்த எம்.ஆர்.சந்தானத்திற்கு பிறந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. இவரது மூத்த சகோதரர்தான் இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி. சந்தான பாரதியும், வாசுவும் இணைந்து பாரதி - வாசு என்ற பெயரில் படங்கள் இயக்கிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். இவருக்கு பி.வாசு பள்ளிக்கூட சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Karnataka முஸ்லீம் மாணவியை பாகிஸ்தானுக்கு போகுமாறு கூறிய ஆசிரியர்
மாலை மலர் : கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை கூறி மாணவிகளை பாகிஸ்தானுக்கு போகுமாறு அந்த ஆசிரியர் கூறி இருக்கிறார்.
உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் பேசியதாக கூறப்படுகிறது.
மாணவிகள் பேசியதால் கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று கூறப்படுகிறது.
கன்னடா மொழிப்பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர், மாணவிகளிடம், "பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். இந்த நாடு இந்துக்களுக்கானது," என்று கூறியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை.. திருப்பூர் அருகே கொடூரம்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவர்களது குடும்பத்தினர், மர்மமான முறையில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
4 members of the same family were hacked to death near Palladam Tirupur
ஞாயிறு, 3 செப்டம்பர், 2023
சனாதனம் - உதயநிதி பேச்சு: கொந்தளித்த அமித் ஷா - இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுத்தாரா? BBC
bbc.com : முருகேஷ் மாடக்கண்ணு : சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
அதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி தொல். திருமாவளவன் உட்பட பலர் கொண்டனர்.
மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி போலிஸில் புகார் அளித்துள்ளார்.
மனித குலத்திற்கு எதிரானது சனாதனம்.. காந்தியை சுட்டு கொன்றது இந்துத்வா” : திருமாவளவன் MP ஆவேச பேச்சு !
Kalaignar Seithigal - Prem Kumar : நாம் அனைவரும் மனித குலத்திற்கு எதிரான சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டும். சனாதனத்திற்கு எதிரான கோட்பாடே கம்யூனிசம். கம்யூனிசத்திற்கு எது எதிரானதோ அதுவே சனாதனம் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சனாதன ஒழிப்பில் ஒத்த கருத்துகளையுடைய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்
விஜயலட்சுமி புகார் எதிரொலி- திமுக காலில் விழும் சீமான்!
மாலை மலர் :நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி இவ்வாறு செய்தால், நிச்சயமாக நான் தி.மு.க.வுக்குத் தான் ஆதரவு கொடுப்பேன் என்று தெரவித்து இருக்கிறார்.
"2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுப்படுகிறது.
ஒருவேளை ராமேஸ்வரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.
பிரதமர் மோடியை எதிர்த்து, தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தினால், இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது."
திமுக மா சே நந்தகுமார் எம்.எல்.ஏ. உல்லாச கப்பலில் இலங்கைக்கு சுற்றுலா
minnambalam.com - Aara : ஒவ்வொரு வருடமும் திமுக தலைமைக் கழகம் நடத்தும் முப்பெரும் விழா பற்றிய அறிவிப்பு இன்று (செப்டம்பர் 2) அறிவாலயத்தில் இருந்து வெளியாகியிருக்கிறது.
அதன்படி இந்த முறை வேலூரில் செப்டம்பர் 17 ஆம் தேதி முப்பெரும் விழா நடக்க இருக்கிறது. திமுகவில் தலைமைக் கழகம் நடத்தும் ஒரே விழாவான முப்பெரும் விழாவுக்காக வேலூர் திமுக எவ்வாறு தயாராகிறது என்பதற்காக வேலூர் திமுக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டோம்.
சிலரது எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன. சிலரிடம் பேசியபோது,
“வேலூர் மாவட்டச் செயலாளரான நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகளை சொகுசுக் கப்பலில் இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அவர் வந்தபிறகுதான் முப்பெரும் விழா ஏற்பாடுகள் சூடுபிடிக்கும்” என்றனர்.
ராகுல் காந்தி : இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் கோடிக்கணக்கான பணம் யாருடையது?
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை பா.ஜ.க. உடைத்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தங்களது பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு நடைபெற்ற ஒரு பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாடினார். அப்போது ஒன்றிய பா.ஜ.க அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சீமானை கைது செய்ய ஊட்டிக்கு சென்ற போலீஸ் ..சீமான் கோவைக்கு எஸ்கேப்?
tamil.oneindia.com - Vignesh Selvaraj : ஊட்டிக்கு தனிப்படை விரைந்த நிலையில் கோவை சென்ற சிமான்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரிக்க ஊட்டி விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார். 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தம்மிடம் இருந்து நகைகளையும், பல லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னை கைவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி நீண்டகால குற்றம்சாட்டி வருகிறார். 2011ஆம் ஆண்டில் போலீசிலும் புகார் அளித்தார்.