சனி, 9 மே, 2020

அமித் ஷா : நான் பூரண உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் .... வதந்திக்கு முற்றுப்புள்ளி?

மாலைமலர் : உள்துறை மந்திரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என
சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் தான் நலமுடன் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்
புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில அரசுகளுடனும் காணொலி காட்சி மூலம் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது மேலும், அவர் உள்துறை அமைச்சக நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஈடுபடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அமித்ஷா ஊடகங்களின் கண்களில் பட்டு பல நாட்கள் ஆகி விட்டது. 

ஈழ விடுதலை சமாதிக்கும் முதல் கல் வைத்த எம்ஜியார்

வளன்பிச்சைவளன் : ஈழ விடுதலை நாயகன் கலைஞர் என வழலாறு சொல்லும் ஈழ
விடுதலைக்கு சமாதி கட்ட முதல் செங்கல் வைத்தது எம்ஜிஆர் என வரலாறு தூற்றும்
தமிழீழ விடுதலை வரலாற்றில் அறவழிப் போர் வரை மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் தனித்தனியே இயங்கி வர காலம் அவர்களை ஒன்றி ணைய வைத்தது. அவர் கள் இணைந்து ஈழத் தமிழர்கள் விடிய லுக்கு விடுதலையே ஒரே தீர்வு என முடி வெடுத்து அறவழி யில் ஜனநாயக ரீதியாக ஈழ தமிழ் மக்கள் உணர்வு களை உலகறியச் செய்ய தமிழீழ ஐய்க்கிய விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் விடுதலையே தீர்வு என்ற முழக்கம் வைத்து இதை ஆதரித்து மக்கள் வாக்க ளிக்க வேண்டுகோள் விடுத்த னர் மக்கள் இக் கோரிக்கையை ஏற்று வாக்களிக்க ஈழத் தமிழ் பகுதிகளில் வென்று ஈழத் தமிழ் மக்கள் விடுதலை தான் தீர்வு என்பதை உறுதி செய்தனர் அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவர் ஆனார்.
1983 ல் டெல்லியில் நடை பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள இலங்கை எதீர் கட்சி தலைவர், TULF ன் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது ஒர நாட்டின் அதிபருக்கு இணையான வரவேற்பு அளிக்கப் பட்டது.
யாசீர் அரபாத்தும் விடுதலை இயக்கம் நடத்தும் போதே பாலஸ்தீன நாடு அங்கீகரிக்கப் பட்டது
அறவழிப் போராளிகள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை உலகறியச் செய்த னர் அவர்களின் தலைவரான அமிர்தலிங்கம் டெல்லி வரவ ழைக்கப் பட்டு கௌரவப் படுத் தப் பட்டாலும் தமிழீழத்தை அங்கரிக்க வில்லை இந்தியா

மதுக்கடைகளை மூடும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு

government-appeals-to-supreme-court-against-chennai-high-court-order-to-close-liquor-shopshindutamil.i : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மூன்று நாட்கள் கடந்து மே 7-ம் தேதி அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சமூக விலகல் கேள்விக்குறியாகும், கரோனா தொற்று பரவும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சி.ரங்கராஜன் தலைமையில் குழு: எடப்பாடியின் பொருளாதார அரசியல்!

மின்னம்பலம் : சி.ரங்கராஜன் தலைமையில் குழு: எடப்பாடியின் பொருளாதார அரசியல்!கொரோனா ஊரடங்குக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்துவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், முன்னள் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. இந்த குழு நியமனம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் திறன் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுவும் இந்தியாவின் சிறுகுறு நடுத்தரத் தொழில்களில் கணிசமானவை தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் விவசாயம், தொழில், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தொழில் நிறுவனங்கள்: முழுவீச்சில் மின்சாரம் உற்பத்தி!

மீண்டும் தொழில் நிறுவனங்கள்: முழுவீச்சில் மின்சாரம் உற்பத்தி!மின்னம்பலம் :
ஊரடங்கு தளர்வு காரணமாக படிப்படியாக தொழிற்சாலைகள் இயங்க தொடங்குவதால் மின்சார தேவை அதிகரித்து வரும்நிலையில் அனல்மின் நிலையங்களில் முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டன. அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் மின்சார தேவை குறையத் தொடங்கியது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி எடுக்கும். இதனால் மின்சார தேவை அதிகரிக்கும்கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் தமிழகத்தின் மின்தேவை 16,151 மெகாவாட்டாக ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால் மின்சார தேவை குறைவாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தமிழகத்தில் மின்சார தேவை 9,761 மெகாவாட்டாக இருந்தது.

தாராவி . ஒரு சதுர கிலோமீட்டருக்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பேர்


Karl Max Ganapathy : மும்பை தாராவி பற்றி இன்றைய ஹிந்துவில் ஒரு விலாவாரியான கட்டுரை வந்திருக்கிறது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பேர் வாழ்கிற, உலகின் மிகப்பெரிய சேரி அது. மாநகரச் சேரிகள் என்றால் எல்லோராலும் கைவிடப்பட்ட மனிதர்கள் வாழும் பகுதி என்றே அதற்குப் பொருள். தாராவியும் இதற்கு சற்றும் குறைந்தது அல்ல. அங்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் அனைத்துமே மக்கள் திரளில் பத்து சதவிகிதம் பேருக்கு மட்டுமே கைகொள்ள முடிந்த வழிமுறைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீதி பேரால் அதை செய்ய முடியாது என்பதைத்தான் நாம் தினமும் பார்த்து வருகிறோம். இந்தப் பத்து சதவிகிதம் பேர் கூட முன் வரிசையில் நிற்பவர்கள் மட்டும். பெரும்பான்மை இந்தியா ஒன்று சேரியில் நிற்கிறது அல்லது சேரியை ஒட்டிய குடியிருப்புகளில் இருக்கிறது. கிராமங்கள் தனி.
தாராவியின் ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள ஆட்களில் பத்து சதவிகிதம் பேருக்கு தொற்று பரவினாலே அந்த எண்ணிக்கை மூன்றாயிரத்து அறுநூறு வருகிறது. இதை சற்றே கூட்டினால், ஒரு வாரத்துக்கு கணக்கு எடுத்தால், மொத்த தாராவியையும் கணக்கில் கொண்டு வந்தால் எவ்வளவு வரும்? தலை சுற்றுகிறது இல்லையா. உடனே வந்து, அப்படியானால் அவர்களை அப்படியே அலைய விட்டுவிடலாமா என்று கேட்பீர்கள். புறப்பார்வைக்கு இது பொறுப்பான கேள்வி என்று தோன்றும். யதார்த்தத்தில் இந்தக் கேள்வி குரூரமானது. இதன் குரூரத்தை யாரும் விளக்கிச் சொல்லமுடியாது. நீங்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.

வெளியில் இருப்பது ‘கிம்’ இல்லை- வடகொரிய அதிபர் டபிள் ஆக்டிங்?

splco.me/tam : வெளியில் இருப்பது ‘கிம்’ இல்லை- வடகொரிய அதிபரை துரத்தும் சர்ச்சை 21 நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உண்மையான கிம் தானா அல்லது உடல் இரட்டையரை வெளியே அனுப்பி இருக்கிறா என்ற புதிய சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 21 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்திருந்தார். அதனால் அவர் இறந்து விட்டதாகவும் கோமாவிற்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது. வடகொரியா ஊடகங்கள் இதை பற்றி செய்தி கூறவில்லை. அந்நாட்டு அரசும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் கிம் ஜாங் உன்.

திமுக சார்பில் கொரோனா நிவாரணம்

 தினகரன : காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கருப்படிதட்டடை, பருத்திகுளம் ஆகிய பகுதிகளில் சுமார் 1200 குடும்பங்களுக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பருத்திகுளம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் (எ) அன்பில் பொன்னா தலைமை தாங்கி ஏழை, எளியோருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கினார். பின்னர் பருத்திகுளம், கருப்படிதட்டிடை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முரளிதரன், கோபால், சேகர், மணி, பி.அறிவழகன், எஸ்.அறிவழகன், அனல் அரசு, சதீஷ்குமார், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிரா .அசந்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரெயில் .. நடந்தது என்ன..?


நக்கீரன் : தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாகச் சென்ற 16 புலம்பெயர் தொழிலாளர்கள் மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், உடல் அசதியால் தண்டவாளத்தில் அயர்ந்து தூங்கிய போது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதில் 16 பெரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.  ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப்பயணமாகவே பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரயில் இருப்புப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

18 வயது இளைஞரின் நிறுவனத்தில் இணைந்த ரத்தன் டாட்டா

18 வயது இளைஞரின் நிறுவனத்தில் இணைந்த  ரத்தன் டாட்டாமின்னம்பலம : 18 வயது இளைஞர் ஒருவர் ஆரம்பித்த பார்மா நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த அர்ஜுன் தேஷ்பாண்டே என்ற 18 வயது இளைஞர் பார்மா பிசினஸ் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இவர் தயாரிக்கும் ஜெனரிக் மருந்துகளை மொத்த விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்யாமல் நேரடியாக சில்லறை விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்தார்.

மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பில் -பிற்படுத்தப்பட்டோருக்குக் வெறும் 3.8 விழுக்காடே!

சாய் லட்சுமிகாந்த் : அதிர்ச்சியூட்டும் தகவல்!  மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பில் - அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடம் வெறும் 3.8 விழுக்காடே!
இந்த சமூக அநீதியை எதிர்த்து சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராடுவது அவசியமாகும ‘நீட்’ என்னும் பேரால் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கான வாய்ப்பை வழிபறிபோல் பறித்துக் கொண்டிருக்கும் கொள்ளை ஒருபுறம் இருக்க, மருத்துவக் கல்லூரி, பட்ட மேற்படிப்புக்குரிய இடங்கள் கண்ணுக்கெதிரே கொள்ளை போகும் கொடூரத்தை என்னவென்று சொல்லுவோம்!
திராவிட இயக்கத்தின் சாதனை!
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்னும் சாதனை தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. அரசு மருத்துவக் கல்லூரியின் எண்ணிக்கை 26.
இதனைத் திராவிட இயக்க ஆட்சியின் சாதனை என்று மார்தட்டியும் கூறலாம்!
ஆனால், இதுதான் ஆதிக்கக் கூட்டத்தின் கண்களைக் கருவேla முள்ளாகக் குத்துகிறது; நேரடியாக - சமூகநீதி தேவைப்படுகிற மக்களின் வாய்ப்பைப் பறிக்க முடியாத நிலையில், பல்வேறு கொல்லைப்புறங்களையும், சந்து பொந்துகளையும் உண்டாக்கி, நாம் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இடங்களைக் கபளீகரம் செய்யும் கொடுமை இதோ:
தமிழ்நாட்டில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 1758. இத்தனை இடங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன.இந்த இடங்களில் 50 விழுக்காடு மத்திய தொகுப்புக்குத் தாரை வார்க்க வேண்டும்.
அதாவது நம் வரிப் பணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொத்த இடங்களில் 879 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்குச் சென்றுவிடுகின்றன.

நேற்று மட்டும் குடியால் நிகழ்ந்த அவலங்கள் .. சீரழியும் தமிழகம்

Subashini Thf : சீரழிந்த சமூகம்
இன்று காலை News24 செய்தி
*நேற்று மட்டும் குடியால் நடந்த நிகழ்வு, தமிழகம் எங்கும்...*_
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் மது போதையில் 4 இளைஞர்கள் மோதல். ஒருவருக்கு கத்திக் குத்து.
மதுரை அழங்காநல்லூரில் கணவர் குடித்துவிட்டு அடித்ததாள் மனைவி மற்றும் மகள் தற்கொலை
திருச்சூழி அருகே மது போதையில் தங்கையை அண்ணனே கட்டையால் தாக்கி கொலை.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள் புரத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேரை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அய்யா கோவில் தெரு ராஜமணி என்பவருடைய மனைவி ஜெயமணி என்பவரை அவருடைய மகன் ராஜன் என்பவர் மது போதையில் வீட்டை தனக்கு எழுதித் தரவில்லை என்று தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
திருச்சி துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள பெரியார் நகரில் மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே மோதல். இருவரின் மண்டை உடைப்பு.
திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு! காவல்துறை விசாரணை
காரைக்குடியில் குடிபோதையில் தம்பியையும் தம்பி மனைவியையும் அருவாளால் வெட்டிய அண்ணன்!
குமரியில் இரு மதுபான கடைகளுக்கு தீ வைப்பு: பல லட்சம் மதுபாட்டில்கள் எரிந்து சேதம்
திறந்தால் அடித்து நொறுக்குவோம்...! ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூட வைத்த பெண்கள்

ஸ்ரீ சபாரத்தினம் கொலை .. பத்மநாபா கொலை ... புலிகளின் அடுத்த குறி .... கலைஞர் மீதா?

(தோற்றம் 28-08-1952  காணாமல் போன தேதி   06-05-1986.)
 கலாநிதி :  ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .
அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது.
ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.
அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள்.
பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப டக்ளஸ் தேவனாந்தா ஆகியோர் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினர்கள்.
கொள்கை அளவில் இந்த இயக்கங்கள் இடையே கொஞ்சம் தனித்துவமான வேறுபாடுகள்  இருந்தன.
அவற்றின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகளை கூறப்புகின் அதுவே ஒரு பெரிய நூல் ஆகிவிடும்.
டெலோ இந்திய நலனை சார்ந்துதான் ஈழம் அமைய முடியும் என்ற அடிப்படை கொள்கையை கொண்டிருந்தது..இந்தியாவை விரோதித்து கொண்டு ஈழத்தை அமைத்து விட முடியாது என்ற  கருத்தை  மிகத் தெளிவாக வெளிப்படையாக  அறிவித்த ஒரே விடுதிலை இயக்கம்  டெலோ மட்டும்தான்  
ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் டெலோவை போலவே  இந்திய நலனை மீறி போராட்டத்தை தொடர முடியாது என்ற கொள்கையை ஓரளவு கொண்டிருந்தது.
புளட் , புலி .. ஈரோஸ் போன்றவரை வெளிப்படையாகவே இந்தியாவை நம்ப முடியாது என்று போராட்டம் தொடங்க முன்பே தெரிவித்து  கொண்டவையாகும்.

வெள்ளி, 8 மே, 2020

பெண்கள் மாதவிடாய் ஶ்ரீமத் பாகவதம் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா ISKCON நிறுவனர்

Dhinakaran Chelliah : பெண்கள் மாதவிடாய் ஶ்ரீமத் பாகவதம் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா
ISKCON
இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு கோபம் வருவது நியாயமே, என்மீது கோபத்தை வெளிப்படுத்துவதை விட ஶ்ரீமத் பாகவதம் நூலை எழுதியவர் மீது வெளிப்படுத்துவதே சரி!
எதோ ஒரு சில கதைகளை தேடிக் கண்டுபிடித்து பதிவாக எழுதுகிறேன் என்றால் அது முற்றிலும் தவறானது, முழுக்க முழுக்க இது போன்ற மனிதமே இல்லாத ஆபாசமான கதைகளே புராணங்களில் உள்ளன.தயவு செய்து புராணங்களைப் படியுங்கள் உண்மையை உணர்வீர்கள்! இனி ஶ்ரீமத் பாகவதப் புராணக் கதைக்கு வருவோம்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல் விளக்கத்தினை ஶ்ரீமத் பாகவதம் தெரிவிக்கிறது.
śaśvat-kāma-vareṇāṁhas
turīyaṁ jagṛhuḥ striyaḥ
rajo-rūpeṇa tāsv aṁho
māsi māsi pradṛśyate (SB 6:9:9)
விஸ்வரூபா எனும் மூன்று தலையுடைய பிராமணன் ரகசியமாக அஸுர்ர்களுக்கு ஹவிர்பாகம் கொடுத்தது இந்திரனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா; சென்னையில் 399 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது

tamil-nadu-coronation-coroners-today-people-infected-in-chennai-the-casualty-figure.
hindutamil.in  : தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேல் அதாவது 399 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 2,644 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது என சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்மின்னம்பலம் : ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், டாஸ்மாக் திறக்கத் தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதிக்கப்பட்டது
இதனையடுத்து, சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 170 கோடி வரை மது விற்பனை மூலம் வருமானம் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கரோனா .. நோய் எதிர்ப்பு சக்தியால் நோயிலிருந்து அவர்களே குணம் ஆகிவிடுகிறார்கள்?

.nakkheeran.in - எஸ்.பி. சேகர் : தமிழக அளவில் கரோனா நோய் பாதிப்பினால் அதிக அளவில் மக்கள் இறக்கவில்லை. மேலும் நோய் தொற்று உள்ளவர்கள் அவர்கள் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி காரணமாக நோயிலிருந்து அவர்களே குணம் ஆகிவிடுகிறார்கள்.
இதை மருத்துவ குழு உறுதி செய்துள்ளதை அடுத்து வரும் 17ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் காலி செய்யப்படவுள்ளன.  புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே தங்க வைத்து அப்பகுதியிலுள்ள சுகாதாரத்துறையினர் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளனர். கிராமத்தில் அதிகளவு நோய் அறிகுறி உள்ளவர்கள் இருந்தால் அவர்களை அந்தந்த ஊரில் உள்ள சமுதாயக்கூடத்திலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டு 14 நாட்கள் மருந்து, உணவுகள் வழங்கப்பட உள்ளனர்.
இதை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்,  கிராம சுகாதார செவிலியர்கள்,  ஊராட்சி செயலாளர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணிப்பார்கள் நோய் தொற்று காரணமாக சளி, இருமல், மூச்சு இறைப்பு என நோயாளியின் தன்மை இருக்குமானால் அப்படிப்பட்டவர்களை மட்டும்அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படும் மற்றபடி நோய் தொற்று உள்ளவர்கள் வீடுகளிலும் அவரவர் ஊர்களிலேயே உள்ள முகாமில்  சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Mass Pshycology in Digital Marketingல் இணைய திமுகவினர்... Karthikeyan Fastura

Karthikeyan Fastura :   Mass Pshycology in Digital Marketingல் இணைய திமுகவினர் சிலர் சொதப்பி வருகின்றனர் என்று எழுதியிருந்தேன். எப்படி என்று கூறுங்கள் என்று சில நண்பர்கள் கேட்டு இருந்தார்கள். உங்களுக்கு என்ன தெரியும்
அதைப்பற்றி என்று சிலர் வினவி இருந்தார்கள்.
PWC-SDC என்ற பன்னாட்டு நிறுவனத்தில் நான் வேலை பார்த்த பிரிவு Digital Transfermation. அதில் என்னுடைய வேலை என்பது ஒரு ஐடியாவிற்கு உருவம் கொடுப்பது. அதன் பிறகு நான் சொந்தமாக ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பித்த பிறகு பெரிய கனவுகள் இருந்ததால் இதைப் பற்றி படிப்பது எனக்கு அவசியமாக இருந்தது. இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தத் துறையில் மிக ஆழமான தேடலை செய்ய வைத்தது. இந்த தேடல் என்னை எல்லாவற்றிலும் மார்க்கெட்டிங் இருப்பதை உணரவைத்தது. எங்கெல்லாம் அதில் குறைகள் இருந்ததோ எளிதாக எனக்கு புலப்பட வைத்தது. ஏழு வருடங்களுக்கு முன்பே முகநூலில் டேவிட் ஒகில்வி பற்றி எழுதியிருந்தேன். மார்க்கெட்டிங்கில் ஒவ்வொரு சொல்லும் மிக வலிமை வாய்ந்தது. அதில் ஒரு வரியை எழுதுவதற்கு ஒரு வாரம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு எழுத்தைக் கூட வீணாக பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிக் கொடுத்தவர் அவர்.

டாஸ்மாக் அரசின் ’கொள்கை முடிவல்ல..... இது ஒரு கொள்ளை முடிவு ’

சாவித்திரி கண்ணன் : ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இந்தியாவில்
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமே 298 தான்!
தமிழகத்தில் பத்துக்கும் குறைவானவர்கள்தான் பாதிப்புக்கு ஆளாகியிருந்தனர்.
அப்போது மதுக்கடைகள் அடைக்கப்படும் என்பதால் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளவேண்டும் என்று குடிமகன்கள் முண்டியடித்து வாங்கினார்கள்!
அதன் விளைவாக கடைசி இரண்டு நாள் டாஸ்மாக் விற்பனை மட்டுமே 410 கோடி ரூபாய்! (முதல் படம்- மார்ச் ஊரடங்கிற்கு முன்பு எடுக்கப்பட்டது)
ஆனால்,அப்படி முண்டியடித்து நெரிசலில் வாங்கியதும் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகமானதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்!
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 43 நாட்களில் கொரானா பாதிப்பு இந்தியாவில் 50,000 ,(தமிழக பாதிப்பு 5,000) என்பதாக அதிகரித்துள்ள நிலையில் அந்தந்த மாநில அரசுகள் டாஸ்மாக்கை திறக்க பச்சை கொடி காட்டியுள்ளது மத்திய அரசு!
298 க்கே அஞ்சியவர்கள் இன்று ஐம்பதாயிரமாக கொரனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மதுக் கடைகள் திறக்க அனுமதித்துள்ளார்கள் என்றால்…இந்த அரசுகளை எப்படி புரிந்து கொள்வது?

மும்பை . தண்டவாளத்தில் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் மீது ரயில் மோதி மரணம்

Arunkumar Veerappan : · மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதால் 17 பேர் உயிரிழப்பு- செய்தி. கண்டிப்பா அவங்க தூங்கிட்டு இருந்திருக்க மாட்டாங்க.
எங்கயும் போக வக்கில்லாம வழியில்லாம செத்து போயிடலாம்னு முடிவெடுத்து தான் படுத்துருப்பாங்க. பல மாநிலங்களில் பல இளைஞர்கள் தொழிலுக்காக சென்றவர்கள் மாட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வருவதற்கு வேறு எந்த வாய்ப்பையும் ஏற்படுத்தாமல் தொடர்ச்சியாக ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் இது போன்ற உயிரிழப்புகள் அதிகரிக்கும். தற்போது வேலையும் இன்றி கையில் காசும் இன்றி உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் தவித்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என கணக்கே சொல்லி விட முடியாத அளவிற்கு இருக்கிறது.
அவர்களுக்காக எதுவும் செய்வதே இல்லை. பார்ப்போம் இன்னும் இதுபோன்ற எவ்வளவு சம்பவங்களுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பார்கள் என பார்ப்போம்.

மும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
மும்பை: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவுரங்காபாத்-நாந்தேட் ரெயில் பாதையில ரெயில் தண்டவாளத்தில் படுத்து இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது காலியான சரக்கு ரெயில் மோதியது
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ரெயில் பாதையில் மத்திய பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரவில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.
அதிகாலை அந்த பாதையில் ஓடிய சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதி உள்ளது "அவுரங்காபாத்தின் கர்மத் அருகே ஒரு விபத்து நடந்தது. நிலைமையை உறுதிப்படுத்த ஆர்.பி.எஃப் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளன

பெரியாரிய அமைப்புக்கள் திமுகவுக்கு எதிர் திசையில் செல்கிறதா? முக நூல் விவாதங்கள்

வளன்பிச்சைவளன்  : பெரியார் ணர்வாளர்கள் கூட்டமைப்புஏன்?
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு  இது வாக்கு அரசியல் சாராதது என்கிற பெயரில் திமுக நீங்கலாக என்று தொடங்கியது.
தி.மு.க எதிர் நிலை என்பதை மிக மெல்லியதாக திமுக நீங்கலாக என்பதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு துவங்கியதா? இதற்கு வாக்கு அரசியலில் இல்லாதோர் அமைப்பு எனக் காரணம் சொல்லப் பட்டதும் இந்த அமைப்பை திமுக எதிர் நிலை வாக்காளர்களாக மாற்றும் பணியை நோக்கமாக கொண்டு துவங்கப் பட்டதா? என்ற ஐயம் அப்போதே பலருக்கும் எழுந்தது.
முதலில் இதில் தி க இல்லை பின்னர் பெரியார் அமைப்பில் தி க இல்லாமலா எனும் கேள்வியால் அவரை கூட்டமாக சென்று அழைத்தனர். இதில் சு ப வீ அவர்களையும் இணைக்காமல் இருந்தனர் அவர் திமுக ஆதரவாளர் என புறக்கணித்து இருந்தனர். இது குறித்தும் பரவலான விமர்சனம் எழவே இறுதியில் அவர் அழைக்கப் பட்டார். இவர்களது துவக்கமே திமுக எதிர்ப்பு என்பதும் அதை ஒருங்கிணை ப்பது என்பது தானோ என்ற ஐயம் வலுவடைந்தது சென்னையில் நடந்த திருவள்ளுவர் விழா குமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை சென்னையில் வள்ளுவர் கோட்டம், குரளோவியம் என வள்ளுவருக்கு புகழ் சேர்ந்த கலைஞர் படம் கூட இல்லாமல் வாக்கு அரசியல் சாராதவர்கள் என்ற போர்வையில் தந்திரமாக திமுக ஆதரவு நிலை பெரியாரிய உணர்வாளர் களிடம் வரக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனரா? என்ற ஐயம் வலுப்பெற்றது இது குறித்து தி.மு.க, வினர் ஆவேசமாக கேள்வி எழுப்ப அன்றே இப் பெரியாரிய உணர்வாளர்களில் சிலர் கலைஞர் புறக்கணிப்பை நியாயப்படுத்தும் வேலையை துவக்கி, திமுக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

அமெரிக்கா – கொரோனா.. 75 ஆயிரம் பேர் உயிரிழப்பு

மாலைமலர் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 212 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 38 லட்சத்து 70 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 76 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இதுவரை 13 லட்சத்து 26 ஆயிரத்து 693 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.

BBC : விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு .. ..

விஜய் கஜம் - பிபிசி தெலுங்குக்காக< ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை இயக்குநர், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, "இது ஒரு ரசாயன பேரழிவாகும். இதை எதிர்கொள்வதற்கு ரசாயனம், ரசாயன மேலாண்மை, மருத்துவம், மீட்புப்பணி உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடு குறித்து இன்று காலை டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டறிந்த பிரதமர், தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வாயுக் கசிவினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த அதிகாரிகள், இந்த சவாலான சூழ்நிலையில், விபத்து நடந்தேறிய பகுதியை சேர்ந்த மக்களும், மருத்துவ பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
"இதுபோன்ற வாயுக் கசிவை சந்தித்திராத மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. விபத்து நடந்தேறிய பகுதியில், சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள்

டாஸ்மாக் நிறுவனத்துக்கு சாராயம் வழங்குவோர் பட்டியல் .. .. விபரம்

Home
https://www.tasmac.co.in/index.php

Tamilnadu State Marketing Corporation Ltd. Suresh V O : டாஸ்மாக் நிறுவனத்துக்கு சரக்கு சப்ளை ஆவதே திமுகவினர் நடத்தும் ஆலைகளில் இருந்து தான். . .
காவிகளால் உருவாக்கப்பட்டு, நடுநிலைநக்கி & தமிழ்தேசியங்களால் பரப்பப்படும் எத்தனையோ WhatsApp குப்பைகளில் இதுவும் ஒன்று.
அப்படியா என்று தேடி பார்த்ததில் இன்று தெரிந்துக்கொண்டது இது.
Homeடாஸ்மாக் நிறுவனம் மொத்தம் 18 நிறுவனங்களிடம் இருந்து தனக்கு தேவையான சரக்கை வாங்குகிறது. விவரமான பட்டியலின் இணைப்பு மறுமொழியில் இருக்கிறது.
அவை எவை, அந்நிறுவனங்களுக்கு யார் உரிமையாளர் என்ற பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதில் Accord Breweries & Distilleries நிறுவனத்தின் உரிமையாளர் திரு.S.ஜெகத்ரட்சகன் மட்டுமே திமுகவை சேர்ந்தவர்.
டாஸ்மாக் கொள்முதல் செய்வதென்னவோ 18 நிறுவனங்களில் இருந்து, திமுகவை சேர்ந்தவர் என்னவோ அதில் ஒரே ஒரு நிறுவனத்துக்கு தான் உரிமையாளர்.

வியாழன், 7 மே, 2020

சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்ற 42 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் பலி

42 migrant workers died in road accidents when trying to return home during lockdown tamil.oneindia.com/:;இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 140 பேர் சாலை விபத்துக்களில் இறந்தனர். இந்த இறப்புகளில் 30% பேர் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். அல்லது பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஒளிந்துகொண்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயன்றவர்கள்.
லாக் டவுனின் இரண்டு கட்டங்களில் நாடு முழுவதும் 600 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. புலம்பெயர்ந்த 42 தொழிலாளர்கள் தவிர, 17 அத்தியாவசிய தொழிலாளர்களும் சாலை விபத்துக்களில் இறந்தனர்.
"பல மாநிலங்களிலிருந்து எங்களுக்கு இன்னும் உரிய பதில்கள் கிடைக்காததால் இந்த எண்களை குறைந்தபட்ச எண்களாகத்தான் கருத வேண்டும்" என்று சேவ் லைஃப் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் திவாரி கூறினா

வைரஸை கங்கை குணப்படுத்த வாய்ப்பு இல்லை


கொரோனாவைக் குணப்படுத்த கங்கை நீரா? மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு! மின்னம்பலம் : கங்கை நீருக்கு கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா என்று சோதிக்ககோரிய மத்திய அரசின் வேண்டுகோளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிராகரித்துள்ளது.
இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி இதுகுறித்து தி பிரிண்ட் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ஒரு உயிர்கொல்லி நோய் குறித்து சோதனை செய்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறி அந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளாஅதுல்யா கங்கா என்ற பெயர் கொண்ட அமைப்பு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று கங்கை நதியின் மருத்துவப் பண்புகளை ஆராயுமாறு ஜல்சக்தி அமைச்சகத்துக்கு ஏப்ரல் 3ஆம் தேதி கோரிக்கை அனுப்பியிருந்தது. பிரதமர் மோடியின் அலுவலகம் இரண்டுக்கும் இந்த கடிதத்தை தொண்டுநிறுவனம் அனுப்பியிருந்தது.இதை தொடர்ந்து ஜல்சக்தி அமைச்சகம் இந்திய மருத்துவ கழகத்துக்கு இந்த கோரிக்கையை அனுப்பியது.

சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஃபார்மா நிறுவனங்கள். .. ஒன்றரை மாதங்களில்

Raja Jemi : ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.
அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.
நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.
100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.
மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.
அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?
ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.
எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???
ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.
அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.
அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?

விசாகபட்டினம் கேஸ் லீக் ... ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு .. வீதிகளின் உடல்கள் 11 killed, 25 critical


l
 splco.me/ : Morning of horror struck in this port city in Andhra Pradesh, that made so far eleven  dead, over 5,000 fall sick after gas leak from LG Polymers chemical plant  
Reason attributed to deadly gas, thought to be styrene, escaped from two tanks at a chemical plant.A local police officer said, as reported by AFP, that the gas leak took place from two 5,000-tonne tanks that had been left unattended due to the coronavirus lockdown since late March

பாலிமார் செய்தியாளரின் காரில் மதுப்புட்டிகள் கடத்தல் .

பிடிபட்ட பாட்டில்கள
மதுகடத்தல் கார்
Shankar A : பாலிமர் டிவி ட்.ஆர்பியில் இன்றும் நம்பர் ஒன் என்பது உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.
பாலிமர் டிவியில் விவாதங்கள் கிடையாது. தனித்த பேட்டிகள் கிடையாது. ஆனால் தொடர்ச்சியாக நியூஸ் புல்லட்டின்கள் மட்டும் ஓடும்.
இதற்கு முக்கிய காரணம், தினத்தந்தியின் காட்சி வடிவை பாலிமர் கையில் எடுத்ததுதான். ஒரு கள்ளக்காதல் மேட்டரை, 3 நிமிடத்துக்கு விரிவாக க்ராபிக்ஸோடு போடுவார்கள். நம் பலரின் மனதில் இது போன்ற செய்திகளை கேட்க இருக்கும் அதீத ஆர்வத்தின் காரணமாக, நம்மை அறியாமல் இந்த செய்திகளை பார்ப்போம். இது போல, க்ரைம் செய்திகளை க்ராபிக்ஸோடு விரித்து விரித்து செய்தி போடுவதில் பாலிமருக்கு நிகரில்லை. இதன் காரணமாக இன்றும் அதுதான் நம்பர் ஒன்.
எப்போதுமே அரசுக்கு ஆதரவாகத்தான் பாலிமர் செயல்படும். ஓரிரு
ஆண்டுகளுக்கு முன்னால் மோடி சென்னை ராஜ்பவன் வந்து பத்திரிக்கை எடிட்டர்களை சந்திக்க இருந்தபோது, பாலிமர் நியூஸின் உரிமையாளர் கல்யாணசுந்தரம், தன் மனைவியோடு முதல் ஆளாக ராஜ்பவன் சென்றார்.

கொரோனா- கியூபா மருத்துவர்கள் 22 நாடுகளில் சேவையாற்றுகிறார்கள்


m.dailyhunt.in :; தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
கியூபா மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக அறியப்படுகிறது. ஆனால் மருத்துவ துறையில் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கியூபா நாட்டில் இருந்து உலகின் எந்த நாடுகளும் மருத்துவ உதவிகளை பெற வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார். கியூபாவின் மருத்துவ சிகிச்சை மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தி இருந்தார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கியூபா மறுத்து வருகிறது.
கியூபாவில் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1337 ஆக உள்ளது. இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் உலகிலேயே மக்கள்தொகைக்கு அதிக விகிதமுள்ள மருத்துவர்களை கொண்ட நாடாக கியூபா அறியப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசை எதிர்கொள்ளக் கியூபா தயாராகிவிட்டது.

சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா : ஆமாடா, உன்னைமட்டும்தான் புடிக்கும் . ஊரடங்கு நேர நினைவுகள்

vijay tv, saravanan meenakshi serial, mirchi senthil kumar shares video, mirchi senthil instagram, விஜய் டிவி, சரவணன் மீனாட்சி, மிர்சி செந்தில் குமார், மிர்சி செந்தில், ஸ்ரீஜா, சரவணன் மீனாட்சி சீரியல், sravanan meenakshi serial sreeja most favourite scene, vijay tv serial, mirchi senthil - sreeja, tamil tv serial news,lock downtamil.indianexpress.com : கொரோனா லாக்டவுன் காலத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயின் ஸ்ரீஜாவுக்கு...
கொரோனா லாக்டவுன் காலத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயின் ஸ்ரீஜாவுக்கு பிடித்த காட்சி எது என்று அவருடன் ஜோடியாக நடித்த மிர்சி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கி இருக்கும் சினிமா, டிவி நட்சத்திரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் ரசிகர்கள் உடனான தொடர்பை தொடர்ந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு : மெக்சிகோவில் குடும்ப வன்முறையில் 1,000 பெண்கள் படுகொலை


கொரோனா வைரஸ் ஊரடங்கு : மெக்சிகோவில் குடும்ப வன்முறையில் 1,000 பெண்கள் படுகொலைதினகரன் :மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவிய கடந்த 3 மாதங்களில் குடும்ப வன்முறையில் சுமார் 1,000 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்றங்கள் அதிகளவில் நடப்பதுண்டு. அங்கு குற்றச்செயல்கள் நடக்காத நாளே கிடையாது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத கடைசியில் கொரோனா வைரஸ் மெக்சிகோ நாட்டிற்குள் நுழைந்தது.
மார்ச் 2-வது வாரத்துக்கு பிறகு கொரோனா வீரியமாக தாக்கத் தொடங்கியது. இதனால் அந்நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடார் ஊரடங்கை அறிவித்தார்.
இதுவரை அங்கு கொரோனாவால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர்.
இதனால் தற்போது ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு: ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்கள் - 95% அதிகரிப்பு

மின்னம்பலம் :  கொரோனா ஊரடங்கில் வீட்டில் சும்மா இருப்பதால் ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 95 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும் குறையாததால் மூன்றாவது கட்டமாக வருகிற 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வேலோசிட்டி எம்.ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவன தகவலின்படி, ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 89 சதவிகித மக்கள் தங்கள் செல்போன்களில் ஆபாச வலைதளங்களைப் பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட 30 - 40 சதவிகிதத்தினர் பகலில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து இரவில் பார்க்கின்றனர்.

ஒரு திமுக காரரின் குமுறல்... இது தான் திமுக வின் ஆணிவேர்)

கிளாடிஸ் கிளாடிஸ்:  முந்தாநாள் வந்தார்கள் நேற்று பிரிந்தார்கள் இன்று இணைந்தார்கள்.
இவர்கள் திமுக எனும் இயக்கம் தோன்றியதிலிருந்து இன்றுவரை அதற்காகவே உழைத்த தொண்டர்களும்
அனைத்து தோல்விகளிலும் துவளாமல் கட்சி பக்கம் நின்ற தொண்டர்களும்
இயக்கத்துக்கு எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதை தங்கள் உழைப்பாலும் களச்செயல்பாடுகளாலும் ஒத்த ரூபாய் ஆதாயமின்றி உழைத்த உழைக்கின்ற தொண்டர்களும்
தான் சார்ந்த இயக்க ஆதரவை தன் தலைமுறைகளும் தொடர உழைத்த தொண்டர்களும்..
இயக்கத்தின் தோல்விகளுக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்ட புழுகுரைகளுக்கும் எதை வைத்து யாரை வைத்து கலைஞரின் புகழுக்கு களங்கம் விளைவித்தார்களோ அவர்களின் உண்மை முகத்தின் திரைகிழிக்கக்கூடாதென உத்தரவு போடுகிறார்கள்..
இந்த தொண்டர்களைவிடவா மேற்சொன்னவர்கள் உயர்வு??
இந்த தொண்டர்கள் எதை பேசவேண்டும் பேசக்கூடாது என்பதற்கா மேற்சொன்னவர்கள் கட்டளை பிறப்பிக்கிறார்கள்??
கட்சியில் உள்ள கூட்டணிக்கட்சி மற்றும் இயக்கங்கள் சொன்ன பல தகவல்கள்தான் விபுலிகள் பிரச்சினையில் திமுகவும் அதன் தலைமையும் குற்றமற்றவர்கள் என்பதை பெருமளவு நிரூபித்தன என்பது உண்மைதான்..ஆனா அத நீங்க எப்ப சொன்னீங்க தெரியுமா??
சங்கிகள் பொய்பரப்பும் போது சொல்லல
ஊடகங்கள் பொய் பரப்பும் போது சொல்லல
சீமான் என்கிற மகாபொய்யன் பொய்களாக மேடை தோறும் தூற்றிய போது சொல்லல
மே 17இயக்கம் கலைஞரின் உண்ணாவிரதத்தை கேலி பேசியபோது சொல்லல.

பெரியாரியர்களை அறிவுநாணயமற்றவர்கள் என்று சொல்லலாமா?

LR Jagadheesan : கேள்வி: ஆனப்பெரிய பெரியாரியர்களை அறிவுநாணயமற்றவர்கள் என்று சொல்லலாமா? அப்படி சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
பதில்: கலைஞரையும் பிரபாகரனையும் அவரவர் தவறுகள், பிழைகள், சறுக்கல்கள், சமரசங்களுக்காக விமர்சித்த பெரியாரியர்களின் அறிவுநாணயத்தை நான் என்றுமே மதிக்கிறேன். மாறாக கலைஞரின் ஒவ்வொரு தவறு, பிழை, சறுக்கல், சமரசங்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் இன்றுவரை தொடர்ந்து விமர்சித்து, அதை அடுத்த தலைமுறை தமிழ்நாட்டு பெரியாரிய இளம் தலைமுறைக்கும் கவனமாகவும் ஆவணப்பூர்வமாகவும் கடத்தத் தெரிந்த ஆனப்பெரிய பெரியாரியர்கள், பிரபாகரனின் பச்சைப்படுகொலைகள் குறித்தும் நம்பி அடைக்கலம் தந்த தமிழ்நாட்டை தங்களின் அனைத்துவிதமான சட்டவிரோத செயல்களுக்குமான காலனிய நாடாக பயன்படுத்திக்கொண்டதையும் அதனால் தமிழ்நாடும் அவர்களை நம்பி அவர்களுக்கு உதவியதால் வாழ்வைத்தொலைத்த நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள்/குடும்பங்களுக்கு (இவர்களில் 99% பேர் திமுக/திகவினர்) புலிகள் செய்த நம்பிக்கை துரோகத்தைப் பற்றியும் பொதுவெளியில் கூட வேண்டாம்

புதன், 6 மே, 2020

அண்ணா சம்மட்டியால் அடித்திருக்கிறார் ... திராவிட சித்தாந்த எதிர்ப்பாளர்களை .

சுமதி விஜயகுமார் : பெரியாருக்கும் கலைஞருக்கும் இடையில் இடைவெளி இருப்பது போலவே எனக்கு தோன்றும். ஒரு புத்தகத்தில் நிரப்பப்படாத
பக்கங்களை போல. அண்ணாவை படிக்கும் வரை. அம்மாவிற்கு எல்லா தலைவர்களை பற்றியும் ஒரு கருத்து இருக்கும். கலைஞரை பற்றி கேட்டதில்லை. ஏனென்றால் அவர் ஒரு ஊழல்வாதி என்று பரப்பப்பட்டிருந்தது. பெரியாரை பற்றி கேட்ட போது அவரை பற்றி பெரிதாக தெரியாது என்று சொன்னார். அண்ணாவை பற்றி கேட்டபோது அவரிடம் இருந்த ஒரே ஒரு குறையை மட்டும் சொன்னார். அவருடைய புரிதல் மட்டும் தான் அது என்றெல்லாம் ஒதுக்கி தள்ளி விட முடியாது. அம்மா பெரிய பெரிய அரசியல் புத்தகங்கள் எல்லாம் படித்ததில்லை என்றாலும் அரசியல் இதழ்களை தவறாமல் படிப்பார். அந்த இதழ்களில் பல வருடங்களாக என்ன சொல்லி வந்தார்களோ அதை தான் அம்மா என்னிடம் சொன்னார்.
மக்களுக்காக சுயநலம் பாராமல் உழைத்த எந்த ஒரு தலைவரையும் இன்னொரு தலைவருடன் ஒப்பிடுவது முறையன்று. அவர் சறுக்கிய அல்லது தவறாக கணித்த ஒரு விஷயத்தை இன்னொரு தலைவருடன் ஒப்பிட்டு தாழ்த்துவது என்பது பண்பு இல்லை. ஆனாலும் காங்கிரஸ்க்கு ஒரு காமராஜரையும் கக்கனையும் , கம்யூனிஸ்ட்க்கு ஒரு நல்லகண்ணுவையும் முன்னிறுத்தும் ஊடகங்கள் இன்னும் திராவிட கட்சிகளால் தான் நாடு பின் சென்று விட்டது என்று பரப்புரை செய்வது கடைந்தெடுத்த அயோக்யத்தனம் அல்லாமல் வேறில்லை. காமராஜரின் எளிமை நம் அனைவருக்கும் அத்துப்படி. ஆனால் பெரியார் அண்ணாவின் எளிமையை ஒரு போதும் நமக்கு சொல்வதில்லையே.

திராவிட அடையாளங்களை பாதுகாப்போம் .. மீட்டு எடுப்போம்

வரலாற்று அடையளங்களாக திகழும் நினைவு நாட்களில் பொதிந்திருக்கும்
வரலாறுகளை மறக்கடிக்கும் விதமாக அவற்றின் பெயர்களை மாற்றுவது . அந்த நாட்களிளில் வேறொரு விடயத்தை முன்னிறுத்துவது போன்ற இடைச்செருகல் முயற்சிகளை பார்ப்பனீயம்தான் காலம் காலமாக கையாண்டு வருகிறது.
அதே பார்ப்பனீ ய தந்திரத்தை அதன் நீட்சியான பாசிஸ்டுகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் போனால் போகட்டும் என்று விட்டுவிட கூடாது. இந்த முயற்சிகளின் பின்னால் ஆரிய பார்ப்பனீய சதி இருக்கிறது.
மண்ணின் மைந்தர்களே உங்களுக்கு என்று ஒரு வரலாறு கிடையாது.
நீங்கள் வெறும் பாமர பழங்குடிகள் மட்டுமே . எந்த கல்வி அறிவும் நாகரீக வளர்ச்சியும் அற்ற வெறும் மனித கூட்டமே என்று மெதுவாக இந்த மண்ணின்  மக்களையே நம்பவைக்கு முயற்சிதான் இது.
இதில் அவர்கள் பெரு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இல்லையெனில் திராவிடர்கள் வாழும் நாடுகள் தோறும் காஞ்சி சங்கரனின் சிஷ்யகோடிகள் எப்படி பறந்து பறந்து பணம் சேர்க்க முடியும்?
வெறும் பணந்தானே சேர்க்கிறான் போகட்டும் விட்டு விடுவோமே என்று வாளாதிருந்து விடுமானால் அவர்களின் பேராசை அத்துடன் நிற்காதே?
எவ்வளவு பெரிய சுதந்திர போரை முன்னெடுத்த இனம் இன்று எப்படி வீழுந்து போயிருக்கிறது?
ஒவ்வொரு சகோதர படுகொலைகளின் பின்னாலும் பார்ப்பனீய நச்சு விதை இருக்கிறது . இந்த உண்மையை ஏற்று கொள்ள நமக்கு தற்போது  கொஞ்சம் தயக்கம் இருக்க கூடும்.

தலித் எழில்மலை காலமானார்... முன்னாள் மத்திய அமைச்சர்


நக்கீரன் : முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (வயது 74) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
அமர தலித் எழில்மலைக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 1999- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர் தலித் எழில்மலை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தலித் எழில்மலை 2001- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

vikatan.com - பிரேம் குமார் எஸ்.கே.< முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த நிலையில், இன்று காலையில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான இரும்பேடு கிராமத்துக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது. அங்கு, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்படவுள்ளது.
யார் இந்த தலித் எழில்மலை?
சாதி ஒழிப்பு அரசியலில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்த தலித் எழில்மலை, 1945-ம் ஆண்டு, அப்போது இருந்த சென்னை மாகாணப் பகுதியான செங்கல்பட்டில் பிறந்தார். 1967 -ம் ஆண்டு, இந்திய தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த இரா.எழில்மலை, ‘தலித் மக்கள் முன்னணி’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.

தணிகாசலம் கைது - கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறியவர்


BBC : கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த க. தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார்.
இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு அரசில் உள்ள பலருக்கும் சவால் விடுத்தார் தணிகாசலம். இதையடுத்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்துவந்தது. இந்த நிலையில், புகார் தெரிவிக்கப்பட்ட அன்றே ஒரு வீடியோவை வெளியிட்ட தணிகாசலம் தான் மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னைக் கைதுசெய்வதென்றால் கைதுசெய்யட்டும் என்று கூறினார்.

ஆவேசத்தில் தனது ஆணுறுப்பை தானே வெட்டி சிவலிங்கத்துக்கு படைத்த கொடூர பக்தி

திடீரென எழுந்து.. கரகரவென கத்தியால் “அதை” அறுத்து.. “சிவனுக்கு படையல் வைக்க போறேன்” பதற வைத்த விஷ்ணு tamil.oneindia.com ›போபால்: விஷ்ணு சிங் என்ற கைதி, திடீரென தனது ஆணுறுப்பை “கட்” செய்து கொண்டு, அதை கொண்டு போய் சிவலிங்கத்திற்கு படையல் வைக்க முயன்றுள்ளார்..
ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு சிங்.. இவர் ஒரு கைதி.. குற்ற செயலுக்காக 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜெயிலில் உள்ளார்
இந்நிலையில், காலை 6.30 மணி இருக்கும்… அப்போது திடீரென தனது ஆணுறுப்பை அவரே அறுத்து கொண்டு, சிவலிங்கத்திற்கு படைத்து கும்பிட முயன்றார்.. ஆனால் சிறிது நேரத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.

டாஸ்மாக் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்!

டாஸ்மாக் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்!மின்னம்பலம் : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடையில்லை, சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்கியது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் குறைந்தது. இந்நிலையில், நாளை ( மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்று அறிவித்தது. டாஸ்மாக் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகளையும் இன்று வெளியிட்டது.

771 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்

அதிகபட்சமாக இன்று 771 பேருக்குப் பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்!மின்னம்பலம் :
தமிழகத்தில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு சந்தை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் சூழலில் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 100, 200, 500 என்ற வரிசையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிகபட்சமாக 771 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் 3,320 ஆண்கள், 1,507 பெண்கள்,2 திருநங்கைகள் அடங்குவர்.

ஷார்ஜாவில் 47 மாடி கட்டிடத்தில் தீவிபத்து . ..இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாடி .

Mathivanan Maran   - /tamil.oneindia.com/n  :  ஷார்ஜா: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 47 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அதில் குடியிருந்த 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன
 ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 47 மாடிகளைக் கொண்டது. தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த 47 மாடி கட்டிடம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
 இந்த 47 மாடி கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து மினா தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். மேலும் இந்த 47 மாடி கட்டிடத்தில் இருந்து 300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இதில் 9 பேருக்கு மட்டும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Boys Locker Room - சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன?


சுஷீலா சிங் - பிபிசி செய்தியாளர் : கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது
#BoysLockerRoom. புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குழுவை சில சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர், அதில் அவர்கள் சிறுமிகளின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்வதற்கான திட்டங்களைப் பற்றியும் இங்கு விவாதிக்கிறார்கள்.

தமிழகத்திலும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு- குவார்ட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்வு

தமிழகத்திலும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு- குவார்ட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்வு மாலைமலர் :  தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு- குவார்ட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்வு டாஸ்மாக் கடை சென்னை: ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கோரோனா பரவல் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரம் .. 94 வழக்குகள் பாய்கிறது

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாக 94 வழக்குகள்! -எழுத்துப்பூர்வமாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிதேஜா - நக்கீரன் : கரோனா பரவல் தொடர்பாகக் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர்முபாரக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில், கரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத் மாநாட்டைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த மாநாட்டிற்குப் பின்பும் பல கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த விவகாரம் ஒரு மதரீதியாக மாற்றப்பட்டு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செவ்வாய், 5 மே, 2020

போராளி இயக்கங்களில் ஆசிரியர் அடையாளங்காட்டியது . அப்படி என்றால் அது என்ன?

பாலாஜி பகுத்தறிவு  :  போராளி இயக்கங்களில் விடுதலைப்புலிகள் இயக்கம்தான் சரியான இயக்கம் என ஆசிரியர் அடையாளங்காட்டியது தவறா?
போராளி இயக்கங்களின் சரியான இயக்கம் பிழையான இயக்கம் என்பதை அந்த மக்கள் அல்லவா தீர்மானிக்கவேண்டும்?
அந்த மக்களுக்கும் கூட அதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை உரிமையை அந்த இயக்கங்கள் வழங்கி இருக்க வேண்டும் அல்லவா?
போராளிஇயக்கங்களின் சரியான இயக்கம் பிழையான இயக்கம் என்பதற்கு என்ன அளவீடு இருக்கிறது?
ஈழ விடுதலையை நோக்கி நகரும் எல்லா இயக்கங்களும் விடுதலை இயக்கங்கள்தானே?
ஒவ்வொரு இயக்கத்திற்கும் பலவித கருத்து  வேறு பாடுகள் இருப்பது சரிதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?
 விடுதளைக்காக போராடும் மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமையை மறுக்கும் இயக்கத்தை எப்படி  ஒரு விடுதலை இயக்கம் என்று கூற முடியும்?
போராடும் மக்களை மட்டுமல்லாமல் போராடும் சக இயக்கங்களையும்கூட போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்திய இயக்கத்தை எப்படி ஒரு விடுதலை இயக்கம் என்று கூற முடியும்?
போராடும் இயக்கங்களின் போராளிகளை  ஈவு இரக்கம் இன்றி கொன்றொழித்த இயக்கத்தை ஒரு மோசமான பாசிச இயக்கம் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?
ஒரு சமுகத்தில் கற்றோர் , கேள்வி கேட்போர் . எல்லாம் உயிரோடு இருக்க கூடாது என்ற திட்டத்தில் இயங்கிய ஒரு பாசிச வெறியர்களை இன்னும் ஒரு விடுதலை இயக்கம் என்று கூறுவது .. அதுவும் பெரியார் இயக்கங்களே கூறுவது கடைந்து எடுத்த அயோக்கியதனம் அல்லவா?

இயக்குனர் வெற்றிமாறனும் ..புகையும்


மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் எல்லோரும் குறிப்பிட்ட ஒரு பார்முலாவில் திரைக்கதை அமைப்பது வாடிக்கை. இயக்குநர் பாலு மகேந்திராவின் சீடரான இயக்குநர் வெற்றிமாறன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தனிப்பாதையில் படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.
இன்றுவரை அது அவருக்கு வணிக ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் வெற்றியைப் பெற்று தந்திருக்கிறது. கொரோனா வைரஸ் சம்பந்தமாக திரை துறையினர் விழிப்புணர்வு, தன்னம்பிக்கை சம்பந்தமாக பாடல்கள், கவிதைகள் என விதவிதமாக வீடியோ வெளியிட்டனர்.
இயக்குநர் வெற்றிமாறன் இவர்களிடமிருந்து வேறுபட்டு தனது சிந்தனையை பதிவு செய்திருக்கிறார். தேசிய ஊரடங்கு 40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கப்பட்டு வரும் நிலையில் மதுவும், புகையும் பயன்படுத்தி வந்த பெரும்பான்மையினருக்கு கிடைக்கவில்லை. அது இல்லாமலும் இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது தேசிய ஊரடங்கு. அதனை தொடர்ந்து கடைபிடித்து புகையைப் புறந்தள்ளி ஓரங்கட்டியதால் கிடைத்த பலன்களை அனுபவரீதியாக பொது தளத்தில் எந்த வித தயக்கமும் இன்றி வெற்றிமாறன் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளன: முதல்வர் அறிவிப்பு


மாலைமலர் : சென்னையில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளன. தினந்தோறும் 12 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எனத் முதல்வர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பொதுக்கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது. 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளது. மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதலை சிறப்பாக கையாள்வதில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் : பிராமணர் அல்லாதோருக்கு தானம் அளிப்போர் பத்து பிறவி ஊனமாய் பிறப்பர்

Dhinakaran Chelliah : பிராமணர் அல்லாதோருக்கு தானம் அளிப்போர் பத்து
பிறவி ஊனமாய் பிறப்பர் -ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பிராமணர்களுக்குத் தானமளிப்பவன் சொர்க்க லோகத்தை அடைவான் “அக்னியே! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானமளிக்காத எல்லாப் பகைவர்களையும் மண்பாண்டங்களைத் தடியால் அடிப்பது போல் நாசப்படுத்தவும்”(ரிக் வேதம், மண்டலம் 1 :36:16)
ரிக் வேதம் முதலாம் மண்டலத்தில் உள்ள இந்த மந்திரம்தான் “தானம்” என்பதின் மூலம்!
இந்த நூலின் மூலமாக “தானம்” வேதகாலத்திலிருந்து கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
சனாதன வேதியர்கள் ஸ்வர்ண தானம் (தங்கம்), ஷேத்திர தானம் (நிலம்),கோ தானம் (பசு), மகிஷா தானம் (எருமை), அஸ்வ தானம்(குதிரை), கஜ தானம் (யானை), பார்யா தானம் (மனைவி), கன்னியா தானம் (பெண்) எனும் தானங்களைப் பெற்று வந்ததை வேத, இதிகாச,புராண,சாஸ்திர,ஸ்ருதி, தர்ம, உபநிடதம் வேதாந்தம், ஆமகம் போன்ற பல நூல்களில் அறிய முடிகிறது.இவை தவிர ஆஜ்யதானம், உதகபாத்ர தானம்,தில தானம், தீப தானம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அதிமுக அமைச்சரின் கள்ளப்பணம் தமிழ் இந்தி சினிமா கம்பனிகளுக்கு கந்து வட்டிக்கு ..

dddநக்கீரன் : ரூ.1815 கோடி மதிப்புள்ள டான்பிநெட் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ’புகாரில் முகாந்திரம் இருப்பதாக மத்திய அரசே சொல்லிவிட்டது.  அந்த அமைச்சரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்..’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த டெண்டர் விவகாரத்தில் வில்லங்கமான தலையீடு இருந்ததென்றும், அதனாலேயே,  தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு  ‘புழுங்கித் தவித்தார்;
வி.ஆர்.எஸ். கேட்டார்; டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்’  என கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில், சி பிளாக்கில் உள்ள  அந்த அமைச்சரின் அறையிலும், அதனை ஒட்டியுள்ள அறைகளிலும் தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அதிரடி சோதனை நடத்தியபோதே, எவ்வளவு பணம் சிக்கியது? என்னென்ன பிடிபட்டது? என சர்ச்சை எழுந்தது.

துரைமுருகன் : நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் .. ஜெயகுமார் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? துரைமுருகன்மின்னம்பலம் : நெடுஞ்சாலை டெண்டர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என ஜெயக்குமாருக்கு, துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் துரை ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே ஏன், உலகமே கலங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1,165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் விமர்சித்திருந்தார்.

கொரோனா பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் உயிரிழப்பு


பாண்டியன் சுந்தரம் : கொரோனா தீநுண்கிருமி பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் மரணம்!
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த இரண்டு ரூபாய் டாக்டர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட 76 வயதான டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்.
டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். முதல் நாள் நள்ளிரவு வரை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு படுத்த இஸ்மாயில் அதிகாலையில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் இரு தினங்களிலேயே அவர் உயிரிழந்தார். அவர் மரணித்த பின்பே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியது. அதுவே அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது.கொரானா நோயாளிகள் யாருக்கும் அவர் வைத்தியம் பார்க்கவில்லை. ஆனால் சிவப்பு மண்டலம் உள்ள பகுதியில் அவர் வசித்து வந்தார். அவரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் யாருக்காவது தங்களுக்குத் தெரியாமலேயே கொரானா தொற்று இருந்திருக்க வாய்ப்புண்டு.

திங்கள், 4 மே, 2020

பெண்கள் குடிப்பதை பெரிது படுத்துவது சரியா?

Shalin Maria Lawrence "  : அமெரிக்க அரசில் பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன்.
அமெரிக்காவின் முதல் பெண்ணாக இருந்த மிஷல் ஒபாமா.
ஜெர்மனியின் அதிபர் எங்கெலா மெர்கெல்
நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
கிறிஸ்டின் லகார்டு ,உலக வங்கியின் தலைவர்
எலிசபெத் மகாராணி
இளவரசி டயானா
இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர்
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்
கல்பனா சாவ்லா
ஜாய்ஸ் மேயர்
தீபிகா படுகோனே
இவர்களுக்கு உள்ள ஒற்றுமை -இவர்கள் எல்லோருமே மது அருந்துவார்கள்.
நாம் பெருமையாக நினைக்கும் வரலாற்றில் நிலைத்த பெண்கள் ,உலக அளவில் இன்றைக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நாம் பார்க்கும் பெண்கள் பலருக்கும் மது பழக்கம் இருந்து,இருக்கிறது.
நோபல் பரிசு பெண்கள் ,சமூக அறிஞர்கள் ,நடிகைகள் ,உலக பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள்,விஞ்ஞானிகள் ,அரசியல் வாதிகள் ,அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ,சமூக போராளிகள் ,மேற்கத்திய பெண் பாஸ்டர்கள் குடிக்க செய்கிறார்கள்.

புலிகளின் தோல்வியை மறைக்க கலைஞர் தேவைப்படுகிறார்!

Kanimozhi MV : 11 வருடங்களுக்கு முன் அனைத்து திராவிடர் இயக்கங்களில்
உள்ளோரும் உணர்வு ரீதியாக புலிகளோடு இணைந்திருந்தவர்கள் தாம்
அதெப்படி இந்த 11 வருடத்திற்குள் என்னளவில் நான் அந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறினேன் என்பது எனக்கே வியப்பளிக்கும்
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வரும்போது நான் பெங்களூரில் வேலையில் இருந்தேன் ; கண்கள் கலங்கியது
பிரபாகரன் வந்துவிடுவார் எனப் பலர் என்னைப்போல நம்பிக்கொண்டிருந்தனர்
ஆனால் இப்போது யாராவது வந்து பிரபாகரன் வந்து விடுவார் என்றால்
“அவர்களை நக்கலாக பார்க்கும் பார்வை வாய்த்திருக்கிறது”
கலங்கிய கண்களிலிருந்து நக்கல் பார்வை எப்படி உருவானது ?
ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கலைஞர் எதிர்ப்பு எனக்கு அவர்களிடம் பிடிக்கவில்லை
கலைஞர் திமுக எதிர்ப்பில் தொடங்கியவர்கள் அங்கேயே நின்றருந்தால் கூட தலைகீழ் மாற்றம் என்னுள் ஏற்பட்டிருக்காது
அங்கிருந்து பெரியாரை நோக்கி புறப்பட்டார்கள்
அதில் இருந்து திராவிடர் இயக்கங்கள் நோக்கி வந்தது
அப்போது தான் ஒரு செய்தி மரமண்டையில் உரைத்தது
இவர்கள் கலைஞர் எதிர்ப்பை பேசுவதே அங்கிருந்து பயணித்து பெரியார் திராவிடம் என வரத்தான்

கொரொனா : விஞ்ஞானிகள் பரிந்துரையை உதாசீனப்படுத்திய மோடி அரசு

savukkuonline.com - சவுக்கு : மும்பை தாராவி - கொரொனாவை கையாளும் விவகாரத்தில் மத்திய அரசின் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே அரசு உதாசினப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
 கொரொனாவை கையாள அரசு நியமித்த கோவிட்19 குழுவினர், மார்ச் இறுதியில், அரசு போதுமான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.   ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை, கொரொனா சோதனை, கண்காணிப்பு ஆகியவற்றுக்கான எவ்வித தயாரிப்புகளும் செய்யப்படவில்லை.
 மத்திய அரசின் விஞ்ஞானிகள் கொரொனா நோய் பரவலை எதிர்கொள்ள அளித்த அறிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தாமல் அரசு தாமதப்படுத்தியது என்பது குறித்து இக்கட்டுரைத்தொடரின் முதல் பாகத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
 அகில இந்திய மருத்துவக் கழகத்தின் மருந்தியல் துறையின் தலைவர் நவீத் விக், “நடவடிக்கைகளை எடுத்தால் நாம் தப்பிக்க முடியும்” என்பதை, கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவிடம் 29 மார்ச் 2020 அன்று  வலியுறுத்தினார்.

கோயம்பேடு மார்கெட் நாளைமுதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.. கொரோனா ethiroli

 corona virus - koyambedu market lockdown
 நக்கீரன் :  இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும்கூட சமூக இடைவெளியின்றி கோயம்பேடு மார்கெட்டில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு தொடர்ந்து கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் தமிழகம்

ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் தமிழகம்மாலைமலர் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறதுஇதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 379 பேர் குணமடைந்திருந்தனர்.

கொளத்தூர் மணியும் சுபவீயும் விடுத்திருக்கும் அறிக்கைகள் ... அறிவு நாணயமின்மை?

LRJagadesan: : கொளத்தூர் மணியும் சுபவீயும்
இன்று விடுத்திருக்கும்
அறிக்கைகள் அவர்கள் இருவரின் அறிவுநாணயமின்மைக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக திராவிட சார்பு இளம் தலைமுறைகள் மத்தியில் பிரபாகரனின் புனித பிம்பத்தை திட்டமிட்டு கட்டமைத்ததில் இந்த இருவரின் பங்கு பெரும்பங்கு. தாங்கள் தம் வாழ்நாளை செலவழித்து உருவாக்கிய அந்த பொருந்தா பிம்பம் கெடாமலிருக்க இன்றும் கூட இந்த இருவரும் கலைஞரை காவுகொடுக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார்கள். 
இருவருமே தம் கடந்தகால வரலாற்றுப்பிழையை ஏற்று திருந்த இன்றும் தயாரில்லை. மாறாக அதை சப்பைக்கட்டுகள் மூலம் சரிக்கட்ட நிகழ்காலத்திலும் நிலைதடுமாறிக்கொண்டே இருக்கிறார்கள். 
இதில் அதிர்ச்சியோ ஆயாசமோ இல்லை. இது குறித்து விரித்து எழுத புதிதாய் ஒன்றுமில்லை. அது இப்போது தேவையும் இல்லை. 
பிரபாகரனை பெரியாரோடு சமப்படுத்திய இந்த இருவரின் அறிவுநாணயமின்மையின் அரசியல் வரலாற்றுப்பிழையின் நீட்சியே இன்றைய இரு அறிக்கைகளும். Nothing more. Nothing less. Enough of pretence. Its time to accept the bitter truth and move on.
பிகு: தெளிவாக திரும்பவும் சொல்கிறேன். பெரியாரை பிரபாகரனோடு சமப்படுத்துவது என்பது ஒன்று மிக மோசமான அரசியல் அறியாமை அல்லது உச்சபட்ச அறிவுநாணயமற்ற செயல். இவர்கள் இருவரும் அரசியல் அறியாமையால் இதை செய்கிறார்கள் என்று அவர்களின் மோசமான எதிரிகள் கூட சொல்லமாட்டார்கள்.

கோவையில் வட இந்திய ஆதிக்கம் ... இந்துத்வா அவர்களின் ஆயுதம் ?

Jayakumar : கோவையில் ஆதிக்கம் பெற்றுள்ள வட இந்தியர்கள் யாரென்றால் மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், சிந்தியர்கள் , சீக்கியர்கள். பெரும்பாலானோர் மூன்று தலைமுறைக்கு முன் இங்கே வந்தவர்கள். இதில் ஆராவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, ராட்கிளிப் எல்லைக்கு கிழக்கே உள்ள பிகானீர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் பகுதியில் இருந்து பிரிவினையின் போது வந்த மார்வாடிகளே அதிகம். புலம்பெயர்ந்த மார்வாடிகளில் 80% பேர் ஜெயின்கள். அதிலும் ஆதிக்கம் பெற்ற சாதியினர் பாப்னா,மேத்தா மற்றும் டிப்பிரிவால். இவர்கள் தொழில் செய்யவே விரும்பியவர்கள், பொறியியல் படிப்புகள் பிடிக்காது. கைவசம் ஒரு தொழில் வைத்துக்கொண்டே அங்கிருந்து தைரியமாக வந்தவர்கள். இவர்கள் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் 'ராஜஸ்தானி சங்' என்ற பெயரில் ஒரு சங்கத்தை 1972 ல் ஆரம்பிக்கபித்தனர்,
இவர்களுக்கும் குஜாராத்திகளுக்கும் அப்போது என்ன லடாயோ தெரியவில்லை, போட்டி போட்டு கெத்து காமிக்க ஆரம்பித்தனர். 1951ல் குஜராத்திகளால் புரூக் பாண்ட் ரோட் அருகில் ஆரம்பிக்கப்பட்ட கிக்கானி பள்ளி இவர்கள் கண்ணை உறுத்த உடனே கடுமையாக நிதி திரட்டி 1964ல் Coimbatore welfare association கட்டுப்பாட்டில் இயங்கும் Shri Nehru Vidyalaya பள்ளியை ஆரம்பித்தனர். பூமார்கெட் பகுதியில் இயங்கிய இப்பள்ளி 1973ல் ஆர்.எஸ்.புரத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது,
நான் LKG முதல் +2 வரை இங்கு தான் படித்தேன்.அந்தப்பள்ளி இயங்கும் விதம்லாம் ஒரு காமெடியான தனிக்கதை. நிர்வாகத்தில் இருந்த பார்ப்பன வில்லிக்கும் எனக்கும் சண்டை வந்ததில் கெமிஸ்டிரி லேப் துவம்சம் பண்ணி ஒரு மாதம் சஸ்பெண்டு ஆகி 5000 ரூபாய் பைன் கட்டியது தான் மிச்சம்,
கதைக்கு வருவோம்.. பின்னர் குஜராத்திகளே வாயடைத்து போகும் விதத்தில் 1989 Shri Nehru Maha Vidyalaya கலை அறிவியல் கல்லூரி மிகப்பிரம்மாண்டமாக பொள்ளாச்சி, கொச்சின் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் மலுமிச்சம்பட்டிக்கு அருகே ஆரம்பித்தனர். இவர்களுக்கு மதப்பிடிப்பு மிக மிக அதிகம்.எந்தளவிற்கு என்றால் தமிழக சங்கிகள் எல்லாம் சுண்டக்காய் தான் என்று நாமே ஏளனம் செய்யும் அளவு. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். ஜெயின் மதத்தில் பர்யூசன் பர்வ் என்ற 8 நாள் பண்டிகை உண்டு. அக்காலத்தில் அவர்கள் கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.பின் ஏழாம் நாளில் அனைத்து ஜெயின் கோயில்களில் ஒரு ஏலம் நடக்கும்.யார் ஏலம் எடுப்பார்களோ அவர்கள் வீட்டிற்கு சாமி சிலை கொண்டு வரப்பட்டு இரவு முழுவதும் பூஜை நடக்கும்,

வீதிக்கு வரும் குடும்பங்களும் வானத்தில் பூ தூவும் மத்திய் துக்ளக் அரசும்

சாவித்திரி கண்ணன் : இன்னும் என்னென்ன நடக்குமோ..?
வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் வீதிக்கு வரும் குடும்பங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன!பத்து  நாட்களுக்கு முன்பு ’எண்ணங்களின் சங்கமம்’ பிரபாகர் அவர்கள் இது போல வீதிக்கு வந்த ஒரு குடும்பத்தை மீண்டும் மறுவீட்டில் வீட்டில் குடியேற்றிய ஒரு சம்பவத்தை கவனப்படுத்தினார்!
தற்போது கரூரில்! இது போல வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பம் தெருவிற்கு வந்து தவித்து,அவமானப்பட்டு மீண்டும் காவலர்கள் தலையீட்டால் குடியேற்றப்பட்டுள்ளது குறித்த செய்தி நெஞ்சை பதறவைத்தது!
வறுமையால் வரும் அவமானங்கள் பலவற்றை வாழ்க்கை நெடுகிலும் பார்த்தவன் நான்….!
மனைவி,குழந்தைகளுடன் நடுரோட்டிற்கு மூட்டை,முடிச்சுகளுடன் வந்து செய்வதறியாது திகைக்கும் அவலம் கொடிதினும் கொடிது! இதை பார்க்க,பார்க்க கண்ணில் என்னையும் அறியாமல் நீர் ஆறாய் வடிகிறது.
வெளியுலகிற்கு தெரியாமல் வீட்டு உரிமையாளரின் சுடு சொற்களைத் தாங்கிக் கொண்டு, அடுத்த வேலை உணவிற்கு என்ன செய்வது?,
பசித் தீயை எப்படி அணைப்பது? குடும்பத்தின் மானத்தை எப்படிக் காப்பது?..என்ற நிலையில் லட்சோப லட்சம் குடும்பங்கள் இன்று தவித்துக் கொண்டுள்ளன!

ஞாயிறு, 3 மே, 2020

ஆரிய மாயையும் பாசிச மாயையும் !. பேராசிரியர் சுப . வீரபாண்டியன் : அம்புகள் குறி தவறக் கூடாது! -

பேராசிரியர் சுப வீரபாண்டியன்  அவர்கள் தற்போது பொது வெளியில் காரசாரமாக விவாதிக்கப்படும்  புலிகள்  பற்றிய தனது நிலயை முன்வைத்துள்ளார்.
அதில் பெரிய பிரபாகரனின் படத்தையும் பதிவிட்டு உள்ளார்.இது ஒரு வகை புனிதப்படுதுத்துதல் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
உ + ம்  :  இந்த பதிவில் பிரபாகரனின் படத்தை போடும் அவசியம் ஏன் என்பது எனக்கு புரியவில்லை. பிரபாகரனால் ஈழ போராட்டம் சிதைத்து சின்னாபின்னமாகியது என்பதை இனியும் ஏற்று கொள்ள மறுப்பது ஏன்? இப்போதுதாவது உண்மையை கூறலாம்தானே ? உண்மையை கூறுவோரை கொலை செய்வதையே ஒரு போராட்டமாக கொன்றவரின் வரலாற்றை புனிதப்படுத்தும் காரியம் பேராசிரியர் செய்யலாமா? தந்தை பெரியார் கற்று கொடுத்த திராவிட கருத்தியல் இதுவல்லவே? அண்ணா இடித்துரைத்த ஆரிய மாயையை விட மோசமானது அல்லவா இந்த பாசிச மாயை? போனது எல்லாம் போகட்டும் . அவை வரலாறுகள் .. அவற்றில் கூட்டலும் சேர்தலும் கழித்தலும் இன்றி நோக்குதல் மட்டுமே நல்ல கடமை. பிரபாகரனாலும் அவரது புலிகளாலும் எல்லையற்ற இழப்புக்களுக்கு ஆளான அனைத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் இனியும் கொடிய கொலைகாரனுக்கு புனித வெளிச்சம் பாய்ச்சுவது தவறு

Suba.Veerapandian : அம்புகள் குறி தவறக் கூடாது! -சுப. வீரபாண்டியன்
மிக விரிவாக எழுதப்பட வேண்டிய செய்திதான். எனினும் இயன்றவரையில், சுருக்கமாக எழுத முயற்சி செய்கிறேன்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வட கரோலினாவில் வாழும், நான் மதிக்கும் நண்பர் ஒருவர் எனக்குத் தொலைபேசினார். கரோனாவில் தொடங்கி, அந்த மலையாளப் படம் பற்றியதாகப் பேச்சு திரும்பியது. அதனைத் திமுக கண்டிக்க வேண்டும் என்பதாக அவர் கருத்து சொன்னார். அதில் உள்ள சில சிக்கல்கள் பற்றி நான் கூறிக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று அவர் கோபப்பட்டார். நீங்கள் நடுநிலையோடு பேசவில்லை. திமுகவின் ஏஜெண்டு போலப் பேசுகின்றீர்கள் என்றவர், அடுத்து உடனடியாக நீங்கள் ஒரு திமுக அடிவருடி என்றார்.
"உங்கள் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். எனவே சொற்கள் தவறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்" என்றேன். "எங்களுக்கு உங்கள் மீது இருந்த மரியாதை எல்லாம் போய்விட்டது" என்றார் அவர். அப்படியானால் என்னோடு ஏன் தொலைபேசுகின்றீர்கள் என்று கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டேன்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,263 ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் உயிரிழந்துள்ளனர்

தினமலர் : புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் இன்று(மே- 03) மாலை 06:30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் பலியாகி உள்ளனர். 28,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,887 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 12,296 - 521
குஜராத் - 5,055 - 262
டில்லி - 4,122 - 64
மத்திய பிரதேசம் - 2,846 - 151
ராஜஸ்தான் - 2,772 - 65
தமிழகம் - 2,757 - 29
உத்தர பிரதேசம் - 2,626 - 43
ஆந்திரா - 1,583 - 33
தெலுங்கானா - 1,063 - 28

ஊரடங்கிலும் ஊழல் பிஸியில் எடப்பாடி: ஸ்டாலின்

ஊரடங்கிலும் ஊழல் பிஸியில் எடப்பாடி: ஸ்டாலின்மின்னம்பலம் : நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
துரை ஜெயக்குமார் என்ற பதிவுபெற்ற முதல் நிலை ஒப்பந்தக்காரர் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினை பொதுநல வழக்காகத் தாக்கல் செய்துள்ளார். அதில் பாதிக்கப்பட்டவரே அவர் என்பதால், உயர்நீதிமன்றம் அந்த பொதுநல வழக்கை ரிட் மனுவாக தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது.
அதில், “தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் இர்பான் கான் தனித்துவமிக்க மனிதர் _ ஏஞ்சலினா ஜோலி புகழஞ்சலி

  வேப்துனியா :  சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது
மறைவுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள் ,உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி இர்பான் கானிற்கு புகழாரம் செலுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : நான் இர்பான் கானுடன் எ மைனாரிட்டி கான் என்ற படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது,நடிப்பில் அவர் தனித்த கலைஞனாக இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் அவரது புன்னகை வசீகரமானது என தெரிவித்துள்ளார். மேலும், அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை கூறிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.<