சனி, 6 அக்டோபர், 2018

அமெரிக்கா மிரட்டலுக்கு பணிந்தது சவுதி அரேபியா .. ஐ லவ் ட்ரம்ப்!’

THE HINDU TAMIL : அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
மேலும், ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாக, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுத பாஜக முயற்சி..

அகழ்வாராய்ச்சி அறிக்கை - மாற்றி எழுத  முயற்சி!மின்னம்பலம் : கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுத பாஜக முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை 2014ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தியது. இரண்டு ஆண்டுக் கால ஆராய்ச்சியில் சுமார் 7,000 தொன்மையான பொருட்கள் கிடைத்திருக்கின்றன. கீழடி அகழ் வாராய்ச்சியில், ஆறு மீட்டர் தோண்டப்பட்ட தொல்லியல் குழிகளில் மூன்றாவது குழியில் எடுக்கப்பட்ட பொருட்களின் காலம் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் இரண்டை மட்டும் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்’ என்ற நிறுவனத்திற்குக் கரிம பகுப்பாய்வுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் அசாமுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

எவிடென்ஸ் கதிர் : ரூபாய். 2,17,29,388 / - இளவரசன் மரண விசாரணைக்கு செலவு செய்தது ... இளவரசனுக்கு நீதி?

இளவரசன்
எவிடன்ஸ் கதிர்
இளவரசன் மரணத்திற்கு வாய்க்கரிசி கூட கொடுக்காத அரசு, அவரது
மரணத்தை விசாரித்த விசாரணை கமிஷனுக்கு ரூபாய். 2,17,29,388 / - செலவு செய்து இருக்கிறது..
தர்மபுரியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன் கடந்த 2013ம் ஆண்டு மர்மமான முறையில் இரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தற்கொலை என்று ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் இது கொலை என்று கூறினார்கள். இவரது மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய சந்தேகத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி திரு.எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சரிடம் நீதிபதி சிங்கார வேலு சமர்ப்பித்தார்.
இந்த விசாரணை ஆணையத்தில் தலைவராக நீதிபதியும் அவருக்கு செயலரும், ஒரு பிரிவு அலுவலரும், ஒரு உதவியாளரும், இரண்டு ஓட்டுநர்களும், மூன்று அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதுவரை இந்த விசாரணை ஆணையம் செய்த செலவினை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு கேட்டுப் பெற்றது. இந்த விசாரணை ஆணையம் இதுவரை செலவு செய்த தொகை ரூ.2,17,29,388 (இரண்டு கோடியே பதினேழு லட்சத்தி இருபத்தி ஒன்பதாயிரத்தி முன்னூற்று எண்பத்தி எட்டு ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் சம்பளத்திற்கு என்று ரூ.1,98,23,817 செலவும், இதரச் செலவினங்களுக்கு ரூ.19,05,571 செலவிடப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் - மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பழங்காலத் தூண்கள்!

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பழங்காலத் தூண்கள்!மின்னம்பலம்: சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் வீட்டில், மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழங்காலத் தூண்களைக் கைப்பற்றியுள்ளனர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.
சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள பெண் தொழிலதிபர் வீட்டில் நேற்று (அக்டோபர் 5) சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சமீபத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் சென்னை வீடு, திருவையாறு அரண்மனை மற்றும் படப்பை, மேல்மருவத்தூரில் அவருக்குச் சொந்தமான பண்ணை வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அவரோடு இணைந்து கூட்டாகத் தொழில் புரிந்துவரும் கிரண் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் :துணை வேந்தர்கள்: கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்!

துணை வேந்தர்கள்: கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்!மின்னம்பலம் :துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியையும், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவையும் நியமித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவருக்கு சட்ட பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி கொடுப்பதா என்றும், துணை வேந்தர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த யாருக்குமே தகுதி இல்லையா என்றும் கேள்வி எழுப்பியிருந்தன. ( இம்புட்டு நாளும் எங்கே அய்யா இருந்தீர்கள்? கமிஷன் போதவில்லையா?) 

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு; வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ல் நடைபெறுகிறது:

சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள்: 
சத்தீஸ்கர்: முதல் கட்டத் தேர்தல் - நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு 2-ம் கட்டத் தேர்தல்- நவம்பர் 20-ம் தேதி
 மத்திய பிரதேசம்: நவம்பர் 28-ம் தேதி 
மிஸோரம்: நவம்பர் 28-ம் தேதி 
ராஜஸ்தான்: டிசம்பர் 7-ம் தேதி 
 தெலங்கானா: டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.
tamilthehindu: நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் அறிவித்தார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. எனவே அந்த மாநிலங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும். எனவே 4 மாநில தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை நீக்கம் - தமிழகத்தில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இல்லை

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் - தமிழகத்தில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இல்லைமாலைமலர் :காற்றழுத்த தாழ்வு பகுதியால் அதிதீவிர கனமழை பெய்யும் என வெளியிடப்பட்ட எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போதைய வானிலை  நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்கள் தற்போது கிடையாது .. தேர்தல் ஆணையம்

திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு இப்போது இடைத்தேர்தல் கிடையாது - தலைமை தேர்தல் ஆணையம்
மாலைமலர் :தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி இப்போது அறிவிக்க இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #ElectionCommission #OmPrakashRawat புதுடெல்லி: தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அரசும், திமுக, டிடிவி தினகரனின் அ.ம.மு.க மற்றும் மு.க. அழகிரி உள்ளிட்ட பலரும் தங்களது அரசியல் பலத்தை சோதிப்பதற்காக இந்த இடைத்தேர்தல்களை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராஜஸ்தான் உள்ளிட்ட5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.

பன்னீரின் தடுமாற்றம் ? வரிக்கு வரி அம்மா தாயே அம்மா .. ராப்பிச்சைகார்கள் தொல்லை .. :

வெப்துனியா ; கடந்த இரண்டு நாட்களாக தினகரன் மற்றும்
துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடப்பட்டதாகவும் பரபரப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபிஎஸ் கூறியதாவது: நேற்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் இருப்பதை அறிந்து தினகரன் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், அதன் வெளிப்பாடே என் மீது கூறப்படும் பொய்யான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்கள் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

ஜெயலலிதா - .அப்போலோ சி சி டி வி காமிராக்களை நிறுத்துமாறு உளவுத்துறை கேட்டு கொண்டதாம் .. நிர்வாகம் ...

உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதனால் அப்போலோ நிர்வாகம் நிறுத்தியதாக தெரிவிப்பு
வீடியோ பதிவுகள் tamil.oneindia.com - kalai-mathi.
ஜெயலலிதாவுக்கு என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்க சொன்னது யார்?.. பரபர தகவல்கள்!-வீடியோ
சென்னை: ஜெயலலிதாவை அனுமதித்த உடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாறும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தினத்தந்தி : தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாகவும், அடுத்த 3 நாட்களில் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சென்னை, தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாகவும், அடுத்த 3 நாட்களில் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
 தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று முன்தினம்) பரவலாக மழை பெய்து இருக்கிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வருகிற 8-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

திமுக- காங். கூட்டணியில் மார்க்சிஸ்ட் இருப்பதை பிரகாஷ் காரத் விரும்பவில்லையாம்.

மின்னம்பலம் :தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்
காங்கிரஸ் இருக்கும் பட்சத்தில் அதில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் காரத் மும்முரமாக முட்டுக்கட்டை போட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் அடங்கிய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அணியில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவதில் பெரும் விருப்பத்துடன் இருக்கின்றன.
தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் இடம்பெறுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறி வருகிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதில் தயக்கம் இல்லை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளிப்படுத்தி வருகிறது.

17 பெண்ணை காதலித்து விட்டு ஏமாற்றியவரை கடத்தி கொண்டு வந்து திருமணம்

வேலூர் : மாலைமலர் : காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17 வயது மைனர் பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். காதலிக்கும் பெண் குறைந்த சாதி என்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில வாரங்களாக சதீஷ் காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சுமதி சதீஷ் தன்னை ஏமாற்றியதாக பெற்றோரிடம் கூறி அழுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சதீஷை, நண்பர் ஒருவர் ஏமாற்றி அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு ! அமெரிக்காவின் தடைகளையும் மீறி ..

தினத்தந்தி : ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் உடனடியாக, ஈரானுடனான வர்த்தக உறவை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், அமெரிக்கா அறிவித்த விதித்த தடை இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்பட்டது. இந்த நிலையில், ஈரான் நாட்டிடம் அடுத்த மாதத்திலும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. யூரோவுக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதன் மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு  செய்திருப்பதாகத் தெரிகிறது

கலைஞர் வெறுப்பு பிரசாரத்தால் கொள்ளை லாபம் அடைந்தவர் பலர். அதனால் தொலைந்தது தமிழகம்!

Villavan Ramadoss :*"கலைஞர் கருணாநிதி வெறுப்பு" - என்பதை நாம் ஏன்
விவாதிக்க வேண்டும்?*
*கருணாநிதி ஒழிக! - சம்பவம் 1*
"இந்தியாவின் எதிரிநாடு எது?" - என்று கேளுங்கள்… எல்லோரும் பாகிஸ்தான் என்று சொல்வார்கள். அப்படி சொல்பவர்களில் 99 விழுக்காட்டினர் தன் வாழ்நாளில் ஒரு பாகிஸ்தானியரைக்கூட சந்தித்திராதவர்கள்.
"இந்தியாவை ஒழித்துக்கட்டும் நோக்கோடு அணி அணியாய் வருவதாக சொல்லப்படும் தீவிரவாதிகளை பாகிஸ்தான்தான் உற்பத்தி செய்கிறது" - என நாம் தீர்மானமாக நம்புகிறோம்.
அதற்கான ஆதாரங்களை நாம் எப்போதும் கோருவதில்லை, அந்த முடிவை எடுக்க நம்மை தூண்டுவது "செய்தியின் நம்பகத்தன்மையல்ல, பாகிஸ்தான் நம் எதிரி" - எனும் தீர்மானமான வெறுப்புணர்வு.
அது ஒன்றும் நம் பிறவியிலேயே உருவாகிவிடவில்லை, அவை நம் பொதுக்கருத்தின் விளைவாக உருவாகின்றது அந்த பொதுக்கருத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன.
*கருணாநிதி ஒழிக! - சம்பவம் 2*
நாம் காணும் பெரும்பான்மை விளம்பரங்கள் அதன் தரம் குறித்தோ விலை குறித்தோ பேசுவதில்லை. ஒரு பொருளை விற்க இவையிரண்டும்தான் தேவை.
ஆனால் விளம்பரங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வை உருவாக்குகின்றன (பற்கள் பாதுகாப்பாய் இருக்கும் என குளோசப் விளம்பரம் சொல்லி நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?). அந்த உணர்வு அப்பொருள் மீதான விருப்பத்தையும் அதன் வழியே அதற்கான தேவையையும் உங்களிடம் உருவாக்குகிறது.

திமுக தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்ந்த மாறன் பிரதர்ஸ்!

வாழ்த்துக்கள் துரோகிகளே! ஒரு ரூபாய்க்கு தினகரன் நாளிதழை ஆரம்பித்து
ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையினரையும் திமுகவிற்கு எதிராக திசை திருப்பி......
சினிமாத் தயாரிப்பில் இறங்கி அமோக வளர்ச்சி பெற்று சாதாரண தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி,
தலைவருடன் இணக்கமாக இருந்த
திரைத் துறையினரை திமுகவிற்கு எதிராக திசை திருப்பி........

கேபிள் உரிமையை கையில் எடுத்துக் கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் இலவச சினிமாப் படங்களை ஒளிபரப்பு செய்து,
ஒட்டு மொத்த ஊடகங்களையும் திமுகவிற்கு எதிராக திசை திருப்பி.......
குடும்ப அரசியல் என்ற பழிச்சொல்லுக்கு
தலைவரை ஆளாக்கி........
தலைவர் தடுத்தும் கேளாமல் சர்வே என்ற பெயரில் சாதுர்யமாக தங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டதனால்
தீ வைப்பு என்ற வரலாற்றுக் கறையை உருவாக்கி.........
2G அலைக்கற்றை வழக்கினை காழ்ப்புணர்ச்சியால் பிரபலப்படுத்தி.......
ஒட்டுமொத்தமாக கழக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த போதிலும்.......
உங்களை.....
எங்கள் தலைவர்
நெஞ்சில் சுமந்ததற்கு
முதுகில் குத்தும்
#மாறனின்_மகன்களே_வாழ்த்துக்கள்!

அருந்ததியர் பிணம் கொண்டு செல்ல எதிர்ப்பு .. தலித்துகள் மீது தலித்துகளே ஜாதி வெறி?

Kathiravan Mumbai : நாளிதழில் வெளியான இந்த செய்தியின் தலைப்பை பார்த்ததும்.. ஓ.. சூத்திர சாதிவெறி.. வன்னிய சாதிவெறி.. தேவர் சாதிவெறி.. நாயக்கர் சாதிவெறி.. கவுண்டர் சாதிவெறி.. என்றெல்லாம் டெம்ப்ளேட்டாக பொங்காமல் கொஞ்சம் பொறுமை காக்கவும்..
ஏனெனில் இந்த சாதிவெறிக்கு சொந்தக்காரர்கள் பறையர்கள்.. பாதிப்புக்குள்ளானவர்கள் அருந்ததியர்கள்.
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள தொழுவந்தாங்கால் கிராமத்தைச்சேர்ந்த அருந்ததியரான ஆரோக்கியச்சாமியின் இறந்த உடலை தங்கள் தெருவழியாக கொண்டு செல்லக்கூடாது என்று பறையர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
பதட்டம்.. பேச்சுவார்த்தை என்று ஒருவழியாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
பிற சாதியினரால் அருந்ததியினர் ஒடுக்கப்படுவது என்பது காலங்காலமாக இருக்கும் பஞ்சாயத்துதான்.. இவ்வளவு நாட்களாக அவர்களின் பிரச்சினையை பேச ஆட்கள் இல்லை என்பதால் வெளியே வரவில்லை.. இன்று அந்த சமூக இளைஞர்களும் படித்து மேலே வருகிறார்கள்.. தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியே சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகால கல்வி மற்றும் அரசுப்பணி பொருளாதார வளர்ச்சி காரணமாக பறையர்களும் தேவேந்திரர்களும் ஓரளவுக்கு மேல் நிலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிரபாகரனை முடிந்து விடுங்கள் என்று தமிழக அரசியல் தலைவர்கள் .. இலங்கை அமைச்சர் ..பாட்டாளி சம்பிக்க ரணவக்க ..

soodram - (Menaka Mookandi): “இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும்
பரிதாபமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
“அன்று, வடக்கிலிருந்த எந்த​வோர் அரசியல்வாதியோ அல்லது, தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ, எவருமே, பிரபாகரனைக் காப்பாற்ற நினைக்கவில்லை. அவர்கள் அனைவருமே, வெளிப்படையாக ஒரு கொள்கையையும் உள்ளுக்குள் வேறொரு கொள்கையையுமே கொண்டிருந்தனர். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது, சிங்கள சமூகத்தால், தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று நினைக்கவில்லை.
காரணம், தமிழ்ச் சமூகத்துடன் மிக நெருக்கமாகவே தான், சிங்களச் சமூகம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண உலகப்படவிழா .. demons in paradise படம் திரையிடப்படவில்லை ...சிலர் எதிர்ப்பு

demons2
thinakaran.lk : யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாக எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி தொடக்கம் 8ஆ ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும்.
இது Agenda 14 மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தப்படுகிறது. இவ்விழாவில் கல்வித்துறை இணைப்பாளராக யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை பங்களிக்கிறது.
சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதுடன், முப்பது வருட யுத்த இழப்புக ளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது முன்னெடுக்கப்படுகிறது.
இத்திரைப் பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 80 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் முழுநீள, விவரண, குறுந்திரைப்படங்கள் ஆகியன உள்ளடங்கும். விழாவில் - ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பூட்டான், பிரேசில், கனடா, குறோஷியா, கொலம்பியா, செக். குடியரசு, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், கர்க்கிஸ்தான், கஸக்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம், போலந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், சுலோவோக்கியா, இலங்கை, சுவிஸ்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

இளையராஜா நாட்டு புற கலைஞர்களை ஏன் புறக்கணிக்கிறார்?

Adv Manoj Liyonzon : எங்கும் புகழ் துவங்க…….
தமிழ் சினிமாவில் ஒருசில இசையமைப்பாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள், காரணம் சினிமா இசையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தபடியால்
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், அவர்கள் நாட்டுப்புற பாடகர் டிகேஎஸ் நடராஜன் அவர்களுக்கு வாய்ப்பளித்தார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அவர்கள் தேனி குஞ்சரம்மாள் அவர்களுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் சின்னப்பொண்ணு, பறவை முனியம்மா ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் வேல்முருகன், தஞ்சை செல்வி, ராஜா மற்றும் தாக்ஷாயனி ஆகியோருக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் இமான் அவர்கள் மகிழினி மணிமாறனுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா அவர்கள் கானா பாலா அவர்களுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் ஹேரிஸ் ஜெயராஜ் மரண கானா விஜி அவர்களுக்கு வாய்ப்பளித்தார்
இசையமைப்பாளர் தீனா அவர்கள் அந்தோனி தாசன் அவர்களுக்கு வாய்ப்பளித்தார்

ஸ்டாலின் :மழைவெள்ள முன்னேற்பாடுகளை திமுகவினர் மேற்கொள்ளவேண்டும் அதிமுக அரசை நம்பி பயனில்லை

தினகரன் : சென்னை; மழை வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில்
திமுகவினர் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தூங்கி வழியும் அரசை நம்ப வேண்டாம் என கூறியுள்ளர்,
கனமழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் திமுக-வினர் களமிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கோரியுள்ளார். வரும் 7-ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2015-ல் அதிமுக ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயலால் மக்கள் பெருவெள்ளத்தில் தத்தளித்ததை நினைவுகூர்ந்துள்ளார். மக்களின் நலன்கள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவலையில்லை. எனவே தான் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள போதும் தேர்தல் வேலைக்காக மதுரை சென்றார் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டு, கட்சி வேலையைப் பார்க்கப் போய் விட்டதை உணர்த்துகிறது.அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் சீர்கேட்டில் சிக்கி தவிப்பதாக சாடியுள்ளார்.

சபரிமலை .. பெண் காவலர்களை தாருங்கள் . தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு கேரளா அரசு வேண்டுகோள்

பெண் காவலர்களை அனுப்புங்கள்: கேரள அரசு கடிதம்!
மின்னம்பலம் :சபரிமலையில் பணியாற்றப் பெண் காவலர்களைக் கொடுத்து உதவுங்கள் என்று மற்ற மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது கேரள அரசு.
கடந்த 28ஆம் தேதியன்று, அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்குப் பரவலான ஆதரவு கிடைத்தாலும், சில பெண்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது தொடர்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று சபரிமலை தேவசம் போர்டு முதலில் தெரிவித்தது. முதல்வர் பினராயி விஜயன் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தையடுத்து, பெண்களைச் சபரிமலைக்கு வர அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

கீழடி ஆய்வு .. உண்மைகளை மறைக்கச் சதி,,, மிக பெரும் சக்திகள் பின்னணியில் ..

கீழடி: உண்மைகளை மறைக்கச் சதி?மின்னம்பலம்: கீழடியில் நடந்துவரும் அகழாய்வு குறித்த அறிக்கையை, அங்கு பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது தொல்லியல் துறை.
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், 2014ஆம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. பெங்களூரு தொல்லியல் துறைக் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணன் அதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு வரை, அவர் அங்கு பொறுப்பில் இருந்தார். அவர் பதவி வகித்த காலத்தில், 1,000க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது. இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று துல்லியமாக அறிய, அவை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சாட்சியை மிரட்டிய நித்தியானந்தா

சாட்சியை மிரட்டிய நித்தியானந்தா தரப்பு!
மின்னம்பலம்: நித்தியானந்தாவுக்கு எதிரான பாலியல் வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண்ணை நித்தியானந்தா தரப்பினர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர் தங்கியிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த அவரை, ஆன்மிகப் பேரின்பம் என்ற பெயரில் நித்தியானந்தா பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் விசாரணை பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் உள்ளதால் நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறக்கப்பட்டுள்ளது.

சோபியா கனடா சென்றார் .. மேற்படிப்பை தொடர .. தமிழிசைமீது சோபியாவின் தந்தை நீதிமன்றத்தில்

கனடா பறந்தார் சோபியா; கோர்ட்டுக்குப் போனார் தந்தை!மின்னம்பலம்: தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் விமானப் பயணத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா நேற்று முன் தினம் (அக்டோபர் 3) நள்ளிரவு 1.50 மணிக்கு கனடாவுக்குப் புறப்பட்டார்.
அவர் கனடா புறப்பட்டுச் சென்ற இரு நாட்களில் அதாவது இன்று (அக்டோபர் 5) தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சோபியாவின் தந்தை தூத்துக்குடி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 3 சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்தார். அவரது பின் இருக்கையில் அமர்ந்து சோபியா என்ற மாணவியும் பயணம் செய்தார். விமானத்திலேயே தமிழிசைக்கு அருகே சென்று, ‘பாசிச பாஜக அரசு ஒழிக’ என்று சோபியா முழக்கமிட, அதை எதிர்த்து தமிழிசை தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் அம்மாணவியிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் மாணவி சோபியா சிறையில் அடைக்கப்பட்டார். பின் மறுநாளே சோபியா நிபந்தனை இன்றி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

திருவாரூர் , திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் விரைவில் ? அரசியல் பரபரப்புக்கள் ..சென்னையில்

வெப்துனியா :தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்"
சென்னை. இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.அரசு தரப்பில்  இந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.இந்த சந்திப்பிற்கு பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் மாளிகையில் அவர், ஆளுநர், பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசித்தார்.
இந்த நிலையில் இந்த சந்திப்புகள்  முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், முதல்வர் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை ராஜ்பவனில் வைத்து சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரிவிக்கப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருடன் சந்தித்தது, பிறகு ஆளுநரை சந்தித்ததையடுத்து, முதல்வரும் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்பதுதான் அந்த தகவல். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பது தொடர்பாக மோடியிடம் எடப்பாடி பேசுவார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

கன்யாகுமரி ஆழ்கடலுக்கு சென்ற 1000 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை

கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லைதினத்தந்தி :கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. சென்னை : கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை மையத்தால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது

பன்னீர் தினகரனை சந்தித்தது உண்மைதான் ... தர்ம யுத்த காலத்திலாம் ..

தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்மாலைமலர் :ஓ.பன்னீர் செல்வம் தம்மை சந்தித்து பேசியதாக டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர்.
அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

கிரெடிட் கார்ட் மோசடி 5 இந்தியர்கள் இலங்கையில் கைது .. வக்கீல் உட்பட ..

அட்வகேட் கௌதமன்
Ajeevan Veer : போலி கிரடிட் காட்களை பாவித்து 37 கோடி ரூபாயை லவட்டிய 5 இந்திய நிபுணர்கள் கைது. கொழும்பு புறக்கோட்டையில் கோல்ட் சென்ரர் எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இலங்கை பணம் 37 கோடி பணத்தை போலி கிரடிட் காட் இயந்திரங்களூடாக களவாடிய 5 பேர் அக்டோபர். 3ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
 1. மொகமட் பாவா மொகமட் நவ்சாத் Passport No. R 130480
2. பாவா ராவுத்தர் மொகமட் ஹனீபா Passport No. P 8639959
3 . செல்லசாமி பாஸ்கரா சேதுபதி Passport No. N 6542765
4. மாரிமுத்து கௌத்தமன் Passport No. N 4068697
5. சுரேஸ் சுரேஸ் பாபு Passport No. N 2910334 அவர்களது

தமிழகத்தில் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்மாலைமலர் : வருகிற 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  புதுடெல்லி : தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இருபது ரூபா டாக்டர்’ ஜெகன்மோகன் காலமானார்! ,, கண்ணீரில் மிதந்தத மக்கள் கூட்டம்

``அவரு பணம் சம்பாதிக்கல... மனங்களைச் சம்பாதிச்சாரு!’’ - `20 ரூபாய்’ டாக்டர் மரணம்
சுவரொட்டிvikatan -இரா.செந்தில் குமார் : மருத்துவர் ஜெகன்மோகனுக்குச் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், தென்காசி. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த கையோடு, சென்னை, மந்தைவெளி, ஆர்.கே.மடம் சாலையில் சிறிய கிளினிக் ஒன்றைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். மின்கட்டண உயர்வு, பணியாளர்களுக்குச் சம்பளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைசியாக அவர் பெற்ற அதிகபட்ச கட்டணம் இருபது ரூபாய்.
டாக்டர் ஜெகன்மோகன்“’இருபது ரூபா டாக்டர்’ ஜெகன்மோகன் இறந்துபோனார்’’ – சென்னை முழுவதும் காட்டுத் தீயாகப் பரவிய செய்தி நம் காதுக்கும் வந்து சேர்ந்தது. அதோடு அவரிடம் பேட்டிக்காக  ஒருமுறை பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகளும் சேர்ந்தே விழுந்தன. ‘குறைவாகக் கட்டணம் பெற்று சிகிச்சை அளிக்கும்  மருத்துவர்களைப் பற்றி கட்டுரை எழுதுறோம் சார்… உங்ககிட்ட ஒரு பேட்டி எடுக்கணும் எப்ப சார் வரலாம்’ என்று கேட்ட மறுகணமே, “நான் பேட்டி கொடுக்குற அளவுக்கு எல்லாம் பெருசா எதுவும் செய்திடல தம்பி, யாருக்காவது ஏதாவது மருத்துவ உதவி வேணும்னா சொல்லுங்க பண்ணிடலாம்’’ என்றவாறே அழைப்பைத் துண்டித்தார்.

ஒரேயொரு முறை தொலைபேசியில் பேசிய நமக்கே அவரின் மீது ஒரு மரியாதை உணர்வு இருக்கும்போது, அவரிடம் சிகிச்சை பெற்ற மக்களின் மனவெழுச்சி இப்போது எப்படி இருக்கும்?

ஸ்டாலின் திருமுருகன் காந்தி சந்திப்பு .. என்ன பேசினார்கள்?

Bilal Aliyar : திருமுருகன் காந்தி அவர்களின் மீதான அனைத்து
வழக்குகளுக்கும் பிணை பெறுவதற்காகவும், UAPA வழக்கினை உடைப்பதற்காகவும் உறுதுணையாக இருந்த சீனியர் கவுன்சில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது//.
இந்த என். ஆர். இளங்கோவன் வேறு யாருமில்லை 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வழக்கறிஞர்.!! கடந்த வருடம் திருமுருகன் காந்தி கூண்டா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது பிணையில் எடுத்தவரும் இவரே.. தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்காக சட்டமன்ற தேர்தல் வழக்கில் வாதாடியவரும் இவரே தான்..
ஆக, திமுகவினர் மற்றும் திமுக அனுதாபிகள் கட்சியின் நிலைப்பாட்டையும், கள எதார்த்தையும் புரிந்துகொண்டு பாசிச பாஜகவையும் அடிமை அதிமுகவையும் மட்டுமே துவம்சம் செய்வது நமக்கு, நம்முடைய கழகத்திற்கு மற்றும், கழகத்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமை..
இன்று திமுக தலைவர் திருமுருகன் காந்தி அவர்களை சந்திக்கும்போது “உங்களோட அறிக்கையை படிச்சேண்ணே, நீங்க மட்டும் தான் சாஸ்த்ரா பல்கலைக்கழக நில அபகரிப்ப கண்டிச்சு அறிக்கை விட்டிருந்தீங்க..
இந்த ஆர்எஸ்எஸ் கும்பல் அவங்களுக்கு ரொம்ப சப்போர்ட் பன்றாங்க, யாரும் அத பத்தி பேசல, உங்களால தான் முடியும், நீங்க தான் நிலத்த மீட்க அழுத்தம் கொடுக்கனும்“னு திருமுருகன் காந்தி கேட்டிருக்கிறார்..

வியாழன், 4 அக்டோபர், 2018

பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !

வினவு :யமஹா தொழிலாளர்களின் போராட்டம் 14-வது நாளை எட்டியுள்ளது.  ஆனால் இன்னமும் ஆலை நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முனைப்பு காட்டவில்லை.
கடந்த 21.09.18 முதல் ஒரகடம் சிப்காட் வளாகத்தில் யமஹா ஆலையில் தொழிலாளர் போராட்டமானது நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கம் வைத்த காரணத்துக்காக தொழிலாளிகள் இருவர் நிரந்தர வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம் இந்த சட்டவிரோத வேலைநீக்கத்தைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்ட்த்தைத் தொடங்கினர். இவ்வாறு யமஹா ஆலையில் மட்டும் நடந்து கொண்டிருந்த போராட்டத்தை நீதிமன்றம் சென்று மொத்த சிப்காட்டில் பணியாற்றும் தொழிலாளிகளின் போராட்டமாக மாற்றியுள்ளது யமஹா நிர்வாகம். வினவு தளத்திலும் இப்போராட்டம் குறித்து ஒரு விரிவான பதிவும், மூன்று வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட தீர்ப்பு.. ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது...

www.savukkuonline.com: இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த மனு, இவர்கள் விடுதலை செய்யப்படக் கோரியதோடு, நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் இந்த வழக்கை ஒப்படைக்கப்படவும் கோரியது. ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சார்பில் கன்வில்கரால் எழுதப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால், செப்டம்பர் 27 மாலை வரை, இந்த வழக்கில் ஒரு தீர்ப்பு மட்டுமே இருக்கும் என உணர்த்தியது. அது மாற்றுத் தீர்ப்பை வழங்கிய சந்திரசூட்டின் தீர்ப்பு.

ஜெயலலிதா அரசு புதிய தலைமை செயலகத்தை மருத்துவ மனையாக்கி அராஜக வீண் விரயத்துக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

புதிய தலைமைச் செயலகம்: மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிய விசாரணை
www.bbc.com/tamil : புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையைாக மாற்றியதிலும் முறைகேடு இருப்பதாகக் கூறி விசாரணை நடத்தியதில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணாகியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக தி.மு.கவின் அப்போதைய தலைவர் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கிவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கு இதற்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தலைமை வழக்கறிஞர், புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம்

ரன்வீர் ஷா? பின்புலம் என்ன? யார் அவர்? குவியல் குவியலாகச் சிலைகள்…

ரன்வீர் ஷா வீடு
vikatan.com - சி.வெற்றிவேல் : சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் இந்தியா திரும்புவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது…
ரன்வீர் ஷாசென்னை சைதாப்பேட்டையில் வசிப்பவர் ரன்வீர் ஷா. நடிகரும், தொழிலதிபருமான இவரது பங்களா வீட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 16 பஞ்சலோகச் சிலைகள், 22 கல் தூண்கள், கற்சிலைகள் மற்றும் விஷ்ணுவின் சங்கு சக்கரம் உட்பட 91 பழைமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த மோகல்வாடி கிராமத்தில் அவருக்குச் சொந்தமான 75 ஏக்கர் விவசாயப் பண்ணை மற்றும் கூழங்கல் சேரியில் உள்ள 50 ஏக்கர் விவசாயப் பண்ணையில் நேற்று (2-ந்தேதி) சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீஸாரே அதிர்ச்சியாகும்படி 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், அழகிய கல் தூண்கள் மற்றும் கலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மாணிக்கவாசகர் புத்தகம் சைவ சித்தாந்த பேராசிரியரை எதிர்க்கும் இந்துத்துவ அமைப்புகள்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் -பிபிசி தமிழ்: மாணிக்கவாசகர் குறித்து
எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் சரவணன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன.
தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர் 'மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை சென்னையிலிருந்து செயல்படும் சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக நல்லூர் சா. சரவணன் என்பவர் செயல்பட்டுவருகிறார்.
சரவணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறையின் தலைவராகவும் இருந்துவருகிறார்.
கடந்த மே மாதம் 27ஆம் தேதியன்று இந்தப் புத்தகம் வெளியான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சிலர் இந்தப் புத்தகத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட ஆரம்பித்தனர்.

தேசம் காப்போம் மாநாட்டுக்கு ஸ்டாலினை அழைத்த திருமாவளவன்

தேசம் காப்போம்: ஸ்டாலினை அழைத்த திருமாவளவன்மின்னம்பலம்: திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று (அக்டோபர் 4) சந்தித்துப் பேசினார். அண்மையில் ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அவரை நலம் விசாரித்த திருமாவளவன், விசிக சார்பில் தேசம் காப்போம் என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டுமென அழைப்பும் விடுத்தார்.

சிறுமி பாலியல் கொலை மூவருக்கு தூக்கு!

சிறுமி பாலியல் வழக்கில் தூக்கு!மின்னம்பலம் :"சிறுமி பாலியல் வழக்கில் தூக்கு!"
தேனி மாவட்டத்தில் 10 வயதுச் சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (அக்டோபர் 4) தேனி மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர், அவரது உடல் அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலையானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், சந்தேகத்தின் பேரில் அந்த ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள் கைது: ஸ்டாலின் கண்டனம்!

தொழிலாளர்கள் கைது: ஸ்டாலின் கண்டனம்!மின்னம்பலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும்” என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் (தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அதற்கு முன்னோட்டமாக, இன்று (அக்டோபர் 4) ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் அதிரடியால் சபாநாயகர் தனபால் கடும் சிக்கலில் ...

சபாவுக்கு எதிராக கடிதம்: விதிகள் சொல்வதென்ன?
மின்னம்பலம்: தம்மை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்கக் கோரி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தும் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் பேசியதாலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கருணாஸ் மீது மேலும் பல வழக்குகள் பாயும் நிலைமை உள்ளது.
இந்த நிலையில் கருணாஸ் உட்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலடியாக சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி சட்டசபை செயலாளரிடம் கருணாஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தகுதி நீக்கம் செய்யக் கோரி ஒரு எம்.எல்.ஏ. மனு கொடுத்துவிட்ட நிலையில் அந்த நிமிடம் முதல் பதவியில் சபாநாயகர் நீடிக்க முடியாது என்பது சட்டசபை விதி.