சனி, 3 அக்டோபர், 2020

ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்... சி.பி.ஐ.க்கு ஹத்ராஸ் வழக்கு மாற்றம்!


 nakkheerannewseditor">நக்கீரன் செய்திப்பிரிவு ;அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி தலைமையில்,
எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவினர் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸுக்கு புறப்பட்டனர். ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு சென்றது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி காரிலும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் சென்ற நிலையில் 5 பேர் மட்டுமே ஹத்ராஸுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என உத்தரபிரதேச போலீசார் அவரிடம் தெரிவித்தனர்.

மணாலியில் இருந்து லே நகருக்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். 2010ஆம் ஆண்டு


Tp Jayaraman : இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல் லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 8.8கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட் டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும். 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்க பாதை 2010ஆவது ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது யு.பி. ஏ அரசின் ( தலைவராக- CHAIR PERSON) இருந்த சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். அப்போது ஏ.கே ஆண்டோனி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.இமாச்சல பிரதேச முதலமைச்சர் பிரேம்குமார் துமால், எதிர்க்கட்சி தலைவர் திருமதி வித்யா ஸ்டோக்ஸ் மற்றும் சில உயர் ராணுவ அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 

ராஜகண்ணப்பன், எ.வ.வேலு மகனுக்கு திமுகவில் புதிய பதவி!

 minnambalam : திமுக தலைமைக் கழக பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் கடுமையாக உழையுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.

தற்போது திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதுபோலவே புதிய கொள்கை பரப்புச் செயலாளர்களாக லியோனி, சபாபதி மோகன் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 3) வெளியிட்ட அறிக்கையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன்.

ஹத்ராஸ் செல்ல ராகுல் உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி- உ.பி. எல்லையில் காங்கிரசார் தடுத்து நிறுத்தம்

maalaimalaar : ஹத்ராஸ்:உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களின் கிராமத்தை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீசார் திருப்பி அனுப்பினர். ராகுல் காந்தி,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளினர். காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

கொரோனா நாசி ஸ்வாப் சோதனையில் பெண்ணின் மூளையை துளைத்தது, மூக்கிலிருந்து மூளை திரவம் கசிந்தது

.dailythanthi.com :;  இந்த நிலையில்,அமெரிக்காவை சேர்ந்த  40 வயதான பெண் ஒருவருக்கு மூக்கு வழியாக மாதிரி எடுக்கும் போது, பரிசோதனை செய்தவரின் கவனக்குறைவால், அந்த குச்சியானது மிக வேகமாக மூளையின் சுற்றுப்புற அமைப்பை உடைத்துள்ளது.இந்த பாதிப்பு காரணமாக மூளையை சுற்றியுள்ள திரவமானது மூக்கு வழியாக அந்த பெண்ணுக்கு ஒழுகத்தொடங்கியதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆராய்ச்சி இதழில் விரிவாக எழுதியுள்ளார்.இந்த விபத்தானது கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமான அமைந்துள்ளதாகவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாஷிங்டன் உலகம் முழுவதும் கோரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இன்னமும் ஓய்ந்த பாதிப்பு இல்லை. கொரோனாவை கண்டறிய ஆர்டி பிசிஆர் எனும் பரிசோதனை முறை தற்போது கையாளப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

Caste .Crime . Cremation சோள காட்டுக்குள் எங்கள் பிள்ளைகள் இழுத்து செல்லப்படுவார்கள்

Balamurugan S : · "வால்மிகீ சமூகத்தை சேர்ந்த எங்கள் பெண் பிள்ளைகள் ஆரம்ப கல்விக்கு மேல் படிக்க முடியாது...." "இந்த சோள காட்டுக்குள் எங்கள் பிள்ளைகள் இழுத்து செல்லப்படுவார்கள் என்ற அச்சம் எங்களுக்கு எப்போதும் இருக்கும்...." "நாங்கள் கொடுக்கும் காசை தண்ணீர் தெளித்த பின்பே கடைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள்..." "எங்க எம்எல்ஏ #RajivDiler வால்மிகீ சமூகம் தான்...ஆனால் அவர் எங்கள் சமூகத்தில் ஏற்பட்ட கறை... கல்யாண் சிங் (முன்னாள் முதல்வர்...பாஜக) காலத்திலிருந்தே இவன் தந்தை தொடங்கி மேல் சாதிக்காகவே (பார்ப்பனர், தாக்கூர்) வேலை செய்பவர்கள் பொதுவாக இந்த எம்எல்ஏ உட்கார தாக்கூர் சமூகத்தினர் நாற்காலி கொடுத்தாலும் அங்கே இந்த ஆள் தரையில் தான் உட்காருவான்... இன்றைக்கு எங்கள் வால்மீகி சமூக வீட்டில் இவனை தரையில் உட்கார வைத்துள்ளோம்..."
"இந்த எம்எல்ஏ உயர்சாதியினர் வீட்டுக்கு போகும் போது அவர்கள் கொடுப்பதை குடிக்க கையிலே கிளாஸ் கொண்டு செல்வான்.."
உத்தர பிரதேசம் எல்லாம் இன்னும் நூறாண்டுகள் பின் தங்கியே இருக்கிறது... TheHindu வில் பத்திரிக்கையாளர் Anujkumar Hathras ல் இளம்பெண் ரேப் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட பின்னணியில்...

காந்தி! .. உண்ணாவிரதத்தை கொடிய ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்று கண்டுகொண்ட தந்திரவாதி .

Stop hindi imposition .. Gandhi's birthday is just ganthi's birthday . not jayanthi..
காந்தி ஒரு புத்திசாலி .. இன்னும் சொல்லப்போனால் மிகப்பெரும் தந்திரவாதி . பலசமயங்களில் அவர் ஒரு நரித்தந்திரவாதி .
அவருக்கு இந்தியாவை ஆங்கிலேயர்கள் நிரந்தரமாக வைத்திருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாக தெரிந்திருக்கிறது . அதற்கு காரணம் அவர் இங்கிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் இருந்து பெற்ற அனுபவங்கள்தான் .
இங்கிலாந்து ஆட்சியாளர்களின் உள்மன ஓட்டத்தை அவர் புரிந்தே வைத்திருந்தார் .
ஜேர்மனி ஜப்பான் ரஷியா ஆகிய நாடுகளின் பலமும் அவற்றினால் இங்கிலாந்து மெல்ல மெல்ல ஆட்டம் கண்டு கொண்டதை காந்தி மிக எளிதாகவே அறிந்திருந்தார் . காந்திக்கு இந்திய சுதந்திரம் பற்றி சந்தேகமே கிடையாது .
காந்தியை மிகவும் துன்புறுத்திய விடயம் ஜாதிதான் .
சுதந்திர இந்தியாவில் காந்தி நம்பும் பகவத் கீதையின் ஜாதீய சனாதனம் அழிந்து போய்விடுமே என்று உண்மையாகவே கவலைப்பட்டார் .
ஒரு அசல் ஜாதிய பயங்கரவாதி எப்படி சிந்திப்பாரோ அப்படியே காந்தியும் சிந்தித்தார் . அவருக்கு ஜாதி கட்டமைப்பை பாதுகாத்து வருங்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதியான நோக்கம் இருந்தது .
அதற்காக எதுவும் செய்ய தயாராக இருந்தார். இந்த அதி தீவிரவாதத்தை தியாகம் என்று கருதி எல்லோரும் ஏமாந்து விட்டார்கள். இப்போதும் ஏமாறுகிறார்கள்.

மக்களின் அவலங்களை போக்க SC, ST பிரதிநிதிகளின் பங்களிப்பு என்ன? ஒதுக்கீடு இனியும் வழங்க வேண்டுமா?

Kandasamy Mariyappan
: · Please correct me if I am wrong. எனது பதிவு தவறென்றால் எடுத்து கூறுங்கள்! இந்திய ஒன்றியத்தில், 543 மக்களவைத் தொகுதிகளில் 84 SC, 47 ST தொகுதிகள்! அதேபோன்று 4123 பேரவைத் தொகுதிகளில் ஏறத்தாழ 865 தொகுதிகள் SC/STக்கு ஒதுக்கப்பட்டுள்ளது! உத்தரபிரதேசத்தில்
80 மக்களவைத் தொகுதிகளில் 18 SC தொகுதிகள்,
403 பேரவைத் தொகுதிகளில் 85 SC தொகுதிகள்!
தமிழ்நாட்டில்,
39 மக்களவைத் தொகுதிகளில் 7 SC தொகுதிகள்,
234 பேரவைத் தொகுதிகளில் 44 SC, 2 ST தொகுதிகள்!
கடந்த பல வருடங்களாக தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிராக பல அவலங்கள் மற்றும் அநீதிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன!
அந்த மக்களின் அவலங்களை போக்க, இந்த பிரதிநிதிகளின் பங்களிப்பு என்ன! இவர்களுக்கு இந்த ஒதுக்கீடு, இனியும் வழங்க வேண்டுமா!!!???
அதேபோன்று, அரசு பணிகளிலும் 19 - 22.5% SC/ST மக்கள் பணிபுரிகின்றனர்.
அந்த சமூகத்திற்காக இவர்களின் பங்களிப்பு என்ன!!!???

வெள்ளி, 2 அக்டோபர், 2020

தாய்மொழிக்கு பதில் இந்தி! பள்ளியில் மும்மொழியும் கிடையாது... புதிர் போட்டியில் இந்தி!

Hindi is the answer to the mother tongue in the puzzle competitionnakkheeran.in - ராஜ்ப்ரியன் : தமிழக பள்ளி கல்வித்துறையில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் சென்றுள்ள சுற்றறிக்கை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ஆன்லைன் மூலமாக புதிர் போட்டி நடைபெறுகிறது. இந்த புதிர் போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு குழு, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாவது குழு, ஒன்பதாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மூன்றாவது குழு.
இந்த போட்டியில் கலந்துக்கொள்ளுபவர்களுக்கு 3 தலைப்புகளில் புதிர் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தலைப்பு 1. காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, 2. காந்தியடிகள் மக்கள் பணிகள், 3. வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகள் கருத்துக்கள் என்கிற தலைப்பில் கேட்கப்படுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 2ந்தேதி முதல் நவம்பர் 1ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

ஹத்ராஸ்: திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளிய போலீஸ்!

minnambalam :ஹத்ராஸ் பெண் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உபியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க  எதிர்க்கட்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  ஹத்ராஸ் பெண் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற போது, போலீசார் தன்னை கீழே தள்ளி லத்தி ஜார்ஜ் செய்ததாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் பகுதியில்  மீடியாக்கள், வெளியாட்கள் யாரும்  செல்ல முடியாத வகையில்  போலீசார் சீல் வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு ஹத்ராஸில் 144 தடை இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் வயல்வெளிகளில் யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து பேட்டி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 200 போலீசார் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

டொனால்டு டிரம்பு மற்றும் மனைவி மெலனிக்கு கொரோனா பாதிப்பு.. அமெரிக்க பங்கு சந்தைகள் கடும் சரிவு..

Pugazharasi S - tamil.goodreturns.in : அமெரிக்க பங்கு சந்தை குறியீடுகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக கடும் சரிவினைக் கண்டுள்ளன. உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், அதன் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகம். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். அதோடு உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார் 

பங்கு சந்தையில் சறுக்கல் முன்னதாக டிரம்பின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், டிரம்புக்கும் அவரது மனைவிக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், இது சந்தையில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.

புதிய போயிங் 777 விமானம் -குடியரசு தலைவர் கோவிந்துக்கும் மோடிக்குமாக அமெரிக்காவிடம் இருந்து இரண்டு போயிங் !

ஏர் இந்தியா ஒன்: இந்திய பிரதமர், குடியரசு தலைவருக்காக வாங்கிய விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?   BBC : இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு போயிங் ரக விமானங்களில் ஒன்று வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தது. அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர், துணை அதிபரின் வான் வழி பயணங்களுக்காக பிரத்யேக வசதிகளுடன் ஏவுகணை துளைக்காத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஏர் ஃபோர்ஸ் ஒன்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் வான் வழி பயணங்களுக்காக தற்போது பயன்பாட்டில் உள்ள போயிங் 747 ரக விமானம், ஏர் இந்தியா 001 அல்லது ஏர் இந்தியா ஒன் என அழைக்கப்படுகிறது.

மிக முக்கிய பிரமுகர்களின் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள போயிங் நிறுவனத்துடன் இரண்டு சிறப்பு விமானங்களை வாங்க இந்தியா 2006ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்திருந்தது.

சட்டமன்ற தேர்தலில் திமுக செலவுக்கு பணம் கொடுக்காது... . வேட்பாளர்களே சமாளித்து கொள்ளவேண்டும் .. முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி..

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லனில் வந்தது ”கடந்த சில வாரங்களாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள தீவிர மோதல்களை உற்று கவனித்து வருகிறது எதிர்க்கட்சியான திமுக. 8ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்புகள், 18ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே மூண்ட நேரடி மோதல், அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மூன்று நாட்களாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாத நிலைமை இதையெல்லாம் திமுக தலைமை ஆர்வத்தோடும் அதேநேரம் எச்சரிக்கை உணர்வுடன் பார்க்கிறது. தலைமைச் செயலகத்தில் நடந்த கலெக்டர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டம் ஆகியவற்றை 29ஆம் தேதி புறக்கணித்தார் பன்னீர்செல்வம். அதன்பின் 30ஆம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியிலும் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. நேற்று அக்டோபர் 1ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது தலைமைச் செயலகத்திலேயே தனது அறையில் இருந்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் நடத்திய நிகழ்ச்சியை எட்டிப்பார்க்கவில்லை. ஒரு மணி நேரம் தலைமைச் செயலகத்தில் இருந்து விட்டுப் புறப்பட்டு விட்டார்.

ஹாத்ரஸ் பாலியல் சம்பவம்: தாமாக முன்வந்து விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம் - காவல்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்

BBC : உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட 19 வயது பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள கிளை, தாமாக முன்வந்து வியாக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அந்த பெண்ணின் உயிரிழப்பு விவகாரத்திலும் விசாரணை நடவடிக்கையிலும் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில உள்துறை செயலாளர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.>முன்னதாக, ஹாத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல்வெட்ட தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் சென்ற பெண், நான்கு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண் அலிகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது நிலைமை மோசமடைந்து விட்டதாகக் கூறி டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 28ஆம் தேதி அவர் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது. இரு வார போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்த அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைந்தும், நாக்கு அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

வியாழன், 1 அக்டோபர், 2020

ராம கோபாலன் ஒரு வாய்ப்பு கிடைக்காத யோகி ஆதித்தனாத் .... அவ்வளவே!

Shalin Maria Lawrence : 1992 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் அம்மாவின் தங்கைக்கு இரட்டை குழந்தைகள் piranthana .திருவல்லிகேணியிலுள்ள கோஷா ஆஸ்பத்திரி என்றழைக்கப்பட்ட கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அவர் பிரசவத்திற்காக .எங்களின் அம்மாச்சி ஊரில் இல்லாதா காரணத்தால் என் அம்மாவே சித்தியை உடனிருந்து பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .தினமும் காலையில் பத்து மணி அளவில் வீட்டிலிருந்து அம்மா கிளம்பி ஆஸ்பத்திரி சென்று விடுவார் ,மாலை ஐந்து மணிக்கு சரியாக விடு திரும்புவார் .நடுவில் ஒரு வெள்ளிக்கிழமை குழந்தைகளை காண என்னையும் அழைத்து சென்றார்.
சித்தியையும் குழந்தைகளையும் பார்த்து பேசிக்கொண்டு அங்கேயே விளையாடி கொண்டிருக்கும்போது மாலை வேலையில் திடிரென்று வெளியில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டது .உள்ளே இருக்கும் யாருக்கும் வெளியே ரோட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை .சிறுது நேரத்தில் உள்ளே சாறை சாரையாக மக்கள் உடலில் அடி,ரத்த காயங்களோடு ஆஸ்பத்திரியின் உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தனர் .அதில் இளைஞர்களும் ,வெள்ளையுடை ,தொப்பி அணிந்த சிறுவர்களும் அதிகம் இருந்தனர் .அவர்கள் அதே சாலையிலிருந்த பெரிய மசூதிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக வந்தவர்கள் என்பது ஒன்பது வயது சிறுமியான எனக்கு அப்பொழுது தெரியவில்லை .வெள்ளை உடைகள் எங்கும் ரத்த கறையால் நனைந்திருந்தன .சில குழந்தைகளும் இருந்தன.ஆஸ்பத்திரியின் உள்ளே மக்கள் ஓலமிட்டு கொண்டே ஓடி வந்தனர்.வெளியே சத்தம் இன்னும் அதிகமாகியது .உள்ளே இருக்கும் பெண்களும் பயத்தில் அழ ஆரம்பித்தனர் .

தனித்தமிழ்நாடு பிறப்பது மோடி கையில் தான் உள்ளது

உத்தர பிரேதசத்தில் எரியும் மனிஷா வாழ்மீகியின்  உடல்
Ravishankar Ayyakkannu : நிறைய பேர் தனித்தமிழ்நாடு பிறக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஒரு தனி நாடு எப்படி எல்லாம் பிறக்க வாய்ப்பு உண்டு?
1. நிருவாகச் சீர் கேட்டால், சோவியத் ஒன்றியம் சிதறி பல நாடுகள் உருவானது போல்...
2. போராடும் மக்கள் இன்னொரு வல்லரசு நாட்டுடன் இணைந்து போர் தொடுக்கும் போது. அதாவது, பாக்கிஸ்தானிடம் இருந்து இந்தியா உதவியுடன் வங்காள தேசம் பிரிந்தது போல்.
3. இரண்டாம் உலகப் போர் போன்ற அசாதாரணமான சூழல்களில்..
4. முதிர்ச்சியான நாடு ஒன்று பொது வாக்கெடுப்பின் மூலம் சுதந்திரம் அளிக்க முன்வரும் போது. ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கு ஐக்கிய இராச்சியம் வாக்கெடுப்பு நடத்தியது போல்..
இது எதுவுமே சாத்தியம் இல்லாத நிலையில் போராட்டத்தை முன்னெடுப்பது,
தோல்வியில் முடிவதோடு மட்டுமின்றி, பெருழ் இழப்புகளையும் தரும்.
இதை எல்லாம் எண்ணிப் பார்த்து கூட,
அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் விட்டிருக்கலாம்.
ஆக, இன்றைய நிலவரப்படி,
தனித்தமிழ்நாடு பிறப்பது மோடி கையில் தான் உள்ளது.
Option 1.

மதுரை மீனாட்சி? "திரு ஆலவாய் உடைய நாயனார்' ! 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்'. கல்வெட்டுகள் தரும் புதிய செய்திகள்

முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் : மீனாட்சி என்ற பெயர் எப்போது சூட்டப்பட்டது? தற்போது கோயிலின் பிரதான தெய்வங்கள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகினர். ஆனால், கோயிலில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றின்படி, ஆரம்ப காலத்தில் இந்தக் கோயிலில் உறையும் தெய்வத்தின் பெயர் 'திரு ஆலவாய் உடைய நாயனார்' என்பதுதான். அம்மனின் பெயர் 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்'. தேவாரத்தில் இந்தக் கோயிலில் உள்ள கடவுளின் பெயர் 'அங்கயற்கண்ணி உடனுறையும் ஆலவாய் அண்ணல்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் பொதுவாக எல்லா பெண் தெய்வக் கோயில்களுக்கு காமக்கோட்டமுடைய நாச்சியார் என்பதுதான் பெயர். அந்தப் பெயரே இங்கேயும் வழங்கப்பட்டிருக்கிறது" . 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்துள்ளனர். இந்தக் கல்வெட்டுகள் கோயில் குறித்த பல அரிய தகவல்களைத் தருவதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அம்மனின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்றே வழங்கப்பட்டது என்றும் அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.

திருப்பூரில் வடமாநிலப் பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள்... BBC

BBC : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் தருமாறு இவர் கேட்டுள்ளார். திங்கட்கிழமை அன்று அப்பெண்ணை பல்லடத்திற்கு வரவழைத்த ராஜேஷ், சில நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று வேலைக்காக சிபாரிசு செய்துள்ளார். இருந்தும், வேலை கிடைக்காததால் இருவரும் ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இயல்பாக பழகியுள்ளனர்.

திண்டுக்கல் லியோனியும் சபாபதி மோகனும் திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக நியமனம்.

மின்னம்பலம் : திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா, ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் செயல்பட்டு வந்தனர். ஆ.ராசா சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுவில் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு அமமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவர் இன்று தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.சில ஆண்டுகளாக ஒருவருக்கு ஒரே பதவி என்ற முறை திமுகவில் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இருவரும் வகித்து வந்த கொள்கை பரப்புச் செயலாளர்கள் பதவிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 1) வெளியிட்ட அறிவிப்பில், “திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா எம்.பி துணைப் பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியை தாக்கி தள்ளி தரையில் வீழ்த்தி கைது செய்த போலீஸ்

“19 வயதான சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்முறை நடத்திய நான்கு விஷ வித்துக்கள், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தும், முதுகெலும்பை உடைத்தும் நடத்திய வன்முறையைக் கேள்விப்படும் போதே சகிக்க முடியாததாக அமைந்துள்ளது. அப்பெண்ணின் கழுத்தை நெறிக்கும் போது அவரது நாக்கு துண்டாகி உள்ளது. உடலுறுப்புகள் செயல் இழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவிவிட்டார். தன்னை இக்கதிக்கு ஆளாக்கிய கயவர்கள் யார் என்பதை அவர் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டார். 

minnambalam :பாலியல் வன்கொடுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் தாக்கப்பட்டு நெட்டித் தள்ளப்பட்டு கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் செப்டம்பர் 14,ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மீட்கப்பட்டார். கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.   இந்தப் பெண்ணின் மரணம் உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வுகளை கிளப்பியது. கொல்லப்பட்ட பெண்ணின் உடலைக் கூட உறவினர்களிடம் கொடுக்காமல் போலீசாரே அவசர அவசரமாக தகனம் செய்ததை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். அதிகமானதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அக்டோபர் 1ஆம் தேதி அப்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ஹத்ராஸ் பகுதிக்கு விரைந்தனர்.

உத்தரபிரதேசத்தில் மற்றொரு பெண கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிரிழப்பு . தொடரும் கொடுமை: ஹத்ரஸ் பாலியல் சம்பவத்தை அடுத்து

தினத்தந்தி   : உத்தரப்பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 22 வயது தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு

உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். பால்ராம்பூர் சம்பவத்தில், லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் இறந்தார். வேலைக்கு சென்ற பெண் உடலைல் காயங்களுடன் திரும்பி உள்ளார். 

 அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூர் சம்பவத்தை மூடிமறைத்ததாக மாநில அரசை கண்டித்து உள்ளார். "ஹத்ரஸுக்குப் பிறகு, இப்போது பால்ராம்பூரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் காயங்களால் இறந்துள்ளார்" என்று அவர் டுவீட் செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடுமை: 

காவிரியில் தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதிகள் . மீட்கப்பட்டனர்

Dparthiban ; · வயதான தம்பதியினர் படித்துறையில் நின்றவாறு காவிரித்தாயை இருவரும் வணங்கினர். பின்னர், மூதாட்டி தான் அணிந்திருந்த தாலிச்சங்கிலி மற்றும் தங்க கம்மல், வளையல்கள் உள்ளிட்ட நகைகளை கழற்றி அங்கிருந்த உண்டியலில் போட்டார். 

அதைப்பார்த்த சிலர், அவர்களின் வேண்டுதலாக இருக்கும் என்று எண்ணினர். பின்னர் இருவரும், அம்மாமண்டபம் படித்துறையில் இறங்கி கைகோர்த்தவாறு காவிரி ஆற்றில் இறங்கினர். அப்போதும், இருவரும் காவிரியில் குளிக்க செல்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியாமல் இருவரும் நீரில் மூழ்குவதும், எழுவதுமாக இருந்தனர். நீண்ட நேரமாகியும் இதே நிலை நீடித்ததால், இருவரும் தற்கொலை எண்ணத்துடன்தான் காவிரியில் குளிக்க சென்றது தெரிந்தது. 

பெண்களுக்கு பேராபத்து மிக்க இந்தியா.. Esther Nathaniel. மலையகம் இலங்கை

Esther Nathaniel
: · பெண்களுக்கு பேராபத்து மிக்க இந்தியா இந்தியா பெண்களுக்கு  பாதுகாப்பில்லை என்ற சர்வதேசத்தின் பார்வை முற்றிலும் உண்மைதான்.அதை இந்தியாவே உறுதிப்படுத்துகிறது. சாதியும் தீண்டாமையும் மதமும் என்று ஒழிந்து அழிந்து நாசமாக போகும் நாளில்தான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனலாம். நான் ஒரு இந்திய வம்சாவழி என்ற வரலாற்றில் என்னைச் சேர்ப்பதையும் வெட்கமாக நினைக்கிறேன்
பெண்ணைத் தொடுபவனை பாகுபலியில் கொலை செய்யும் காட்சி வரும் இது உங்கள் சினிமாவில் மட்டும் முடியும்.

நேற்று உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணொருவர் (சிறுமி )கூட்டுப்பாலியல் வன் கொடூரத்துக்கு ஆளாகி வெட்டிக்கொன்றுள்ளார்கள்கள் மேலும் இந்திய இளைஞர்களின் மனநிலை மிகவும் மோசமாகவும் சாதிய வாதங்களால் கறல் பிடித்து போகும்போது பயமின்றி மிகத்துணிச்சலுடன் இப்படியான செயல்களில் இறங்குகிறார்கள்.
எத்தனைத் துயர் இந்த இளம் பெடியன்களின் வாழ்வியல் சூழல் வளர்ப்பு பிற மக்கள் மீதான வெறுப்பு இப்படி துணிந்து கொலைளை செய்யுமளவு வக்கிரமான வாழ்வியல் வளர்ப்பு நிலைகளை மிக அவதானமாக சிந்திக்கத்தூண்டூகிறது.  பெண்களை வன்கொடூரத்துக்கு ஆளாக்கி கொன்று எரித்து வெட்டும் மனநிலையை பாரத மாதாவின் குழந்தைகளுக்கு பாரதமாதாவா சொல்லிக்கொடுக்கீறார் இல்லை பிசாசுகளுடன் பிறந்து வாழ்கிறார்களா???

2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிப்பதற்கு தடை வாங்கவேண்டும் .


 இன்றைய தீர்ப்பும் பாடமும் ! ஒரு எச்சை 2ஜி வழக்கில் 70 நாளில் தீர்ப்பு வரும் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான்
அடுத்த ஓரிரு நாளில் சிபிஐ தினந்தோறும் விசாரித்து அதுவும் நவம்பர் மாதம் ரிட்டையர்ட் ஆகும் நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்க அதை ஏற்று நீதிமன்றம் நாள்தோறும் விசாரித்து தீர்ப்புவழங்க உத்தரவிடுகிறது.
தனது கடைசிகாலத்தில் போலிஎன்கவுன்டர் வழக்கில்விடுத்த நீதிபதி ஓய்வுக்குபின் ஆளுனராக நியமிக்கபடுகிறார். சாதகமாக தீர்ப்பு
வழங்கிய நீதிபதி ஓய்வுக்குபின் நியமன எம்பியாக தேர்ந்தெடுககப்பட்டார் .
குமாரசாமி கணக்கை தவறாக காட்டி விடுதலைசெய்தார் ஆனால் இன்றோ குற்றம்சுமத்தப்பட்டவர்களுக்கான ஆதாராம் இல்லையினுகூட விடுவித்திருக்கலாம் அதைவிட அவர்களை இடிப்பதை தடுக்கப்போன காவலர்களாக சித்தரிக்கின்றார் .

காதுகளை பாதுகாப்போம் ... காதுகள் கேட்பதற்காக மட்டுல்ல நேராக நிற்கவும், தடுமாற்றம் இல்லாமல் நடந்து செல்லவும் ..

Maha Laxmi : · காதுகள் ஒரு மனிதனுக்கு சரியாக கேட்க வேண்டும் என்றால் காதுகளின் உள்ளே இருக்கும் செவிப்பறை ( Ear drum) சுத்தமாகவும் சேதமடையாமலும் இருக்க வேண்டும். இதற்கு இயற்கை மனிதனுக்கு தந்துள்ள பாதுகாப்பான ஒரு அம்சம்தான் காதுக்குரும்பி. இது ஆங்கிலத்தில் இயர் வேக்ஸ் (Ear wax) என்றும் மருத்துவ பெயரில் 'செருமென்' ( Cerumen) என்றும் அழைக்கப்படுகிறது.
நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.
காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து செவிப்பறையை பதம் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே
இந்த செருமென் குரும்பி ஒரு காவல் வீரனைப் போன்ற பணியை 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கிறது.எந்த பூச்சி உள்ளே போனாலும் அதற்கு ஆயுள் சில விநாடிகள்தான்.  எனவே.....
இந்த குரும்பியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. புது குரும்பி உருவாகும் போது பழைய குரும்பி தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியே வந்துவிடும்.இதற்கு 'ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்'

Sperm Test விந்தணுக்களின் ஆரோக்கியத்தை வீட்டிலேயே தெரிஞ்சுக்கலாம்... Check Sperm Count At Home

Maha Lakshmi S - /tamil.boldsky.com  :  ஆண்களுள் சிலர் நிச்சயம் தங்களின் விந்தணுக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். அதில் விந்தணுக்கள் எவ்வாறு நகர்கின்றன, எவ்வளவு விந்தணுக்கள் உள்ளன என்பன குறிப்பிடத்தக்கவை. உங்களுக்கு அத்தகைய அனுபவம் இல்லையென்றால், வீட்டிலேயே எளிமையாக ஒரு டம்ளர் நீரின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான விந்து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும். தற்போது ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் மருத்துவரை சந்தித்து கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பெண்கள் மட்டும் காரணமாக இருக்கமாட்டார்கள், ஆண்களும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஒரு ஆணின் விந்தணுக்களின் நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவை மிகவும் முக்கியமானவை.* பொதுவாக விந்தணு சோதனையை மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பாலியல் செயல்பாடுகளான உடலுறவு அல்லது சுயஇன்பம் காண்பதைத் தவிர்க்க வேண்டும். 

புதன், 30 செப்டம்பர், 2020

ஹத்ராஸ் .. கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

Surya_Xavier : உத்திரப் பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.
கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள்.
உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.
தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்,
யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்,
தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்,
முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.
முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள்.
எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு. முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.

சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல்... முழுக்க முழுக்க ஹிந்தி பார்ப்பன பள்ளிகளாக... .எச்சரிக்கை!

சவுகார்பேட்டைகள் - எச்சரிக்கை!
கவிஞர் கலி. பூங்குன்றன் திராவிடர்கழகத் துணைத்தலைவர் அவர்களின் அறிக்கை.
சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.
1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னை சவுகார்பேட்டையில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பது இல்லை. தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. 

மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை.. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,!

tamilmirror.lk : அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார்.

“13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அவ்வாறே வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகளும் தெரிவிக்கின்றன. இதில் எவை உண்மையென எழுப்பிய கேள்விக்கு, “மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை” என, பிரதமர் பதிலளித்தார்.

சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு.5,900கோடி .....

By Prakash S - tamil.gizbot.com : கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள்

 ுறிப்பாக உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஹூரன் ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அதாவது கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2004-ஆகம் ஆண்டு சேர்ந்தார், பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக உள்ளார். மேலும் கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு 79சதவீதம் உயர்ந்து 5,900கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

ஹத்ராஸ் பெண்ணின் உடலை இரவோடு இரவாகத் தகனம் செய்த போலீசார்

minnambalam : உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு


ஆளாக்கப்பட்ட பட்டியலின பெண்ணின் ஹத்ராஸ் பெண்ணின் உடலை இரவோடு இரவாகத் தகனம் செய்த போலீசார்!உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் போலீசாரே  நள்ளிரவில் அவசர அவசரமாகத் தகனம் செய்துள்ளனர்.   உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண்ணை கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கி வன்கொடுமை செய்துள்ளது. அந்த பெண்ணின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெறித்ததில் கழுத்து எலும்பு,  முதுகெலும்பு ஆகியவற்றில் கடுமையான முறிவு ஏற்பட்டது.    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ரவி, ராமு, சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.  கைது மற்றும் வழக்குப்பதிவு நடவடிக்கைகளிலும் போலீசார் அலட்சியம் காட்டியதாகப்  பாதிக்கப்பட்ட பெண்ணின்  குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சூழலில் இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த ஹத்ராஸ் பெண், டெல்லி சஃப்தர்சங் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று மாலை உறவினர்களின் அனுமதியோ கையெழுத்தோ இல்லாமல் மருத்துவமனையை விட்டு உடலை வெளியே எடுத்து வந்ததற்காக சஃப்தர்சங்  மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்

maalaimalar : உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்
சென்னை:இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதற்கிடையே, மூச்சுத்திணறல் காரணமாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் (94), சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை- சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

maalaiamalar :பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை- சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
அத்வானி-முரளி மனோகர் ஜோஷி  லக்னோ: 
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.     17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

இந்தியாவில் இருந்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியேறுகிறது

Vivekanadan T : இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: ---சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி அறிவிப்பு 
ஏற்று கொள்ளமுடியாது வேதனையான செய்தி இது....சர்வதேச மனித உரிமை அமைப்பை வெளியேற்ற செய்வது மோசமான நிலைமையில் சர்வாதிகாரத்தின் கோரா பிடியில் இந்த தேசம் மாட்டி இருக்கி

றது என்று பொருள் ....
பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மை சமூகத்தவரின் மீதான, ஒடுக்கப்பட்டவர்களின் மீதான கொடூர தாக்குதலை இந்த அமைப்பு கண்டித்து அறிக்கை விட்டு இருந்தது....அதை விட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருந்த மனித உரிமை மீறல்கள், இந்த ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தில் வெளிப்படையாக பிஜேபி மற்றும் டெல்லி காவல் துறையை வன்மையாக கண்டித்து இருந்த நிலையில், அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது...

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

Arsath Kan  - tamil.oneindia.com  :   குவைத்: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. வாழ்நாள் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு இயங்கிய அவர் மீது அரபுலகின் அனைத்து மன்னர்களும் போற்றத்தக்க வகையில் மரியாதை கொண்டுள்ளனர். 
இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழர்கள் மற்றும் மலையாளிகள் குவைத்தில் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. 
குவைத் மன்னராக கடந்த 2006-ம் ஆண்டு பொறுப்பேற்ற ஷேக் சபா அல் அஹ்மத் அந்நாட்டின் நவீன சிற்பி என்று அழைக்கப்படுகிறார். 
குவைத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகளை முன்னெடுத்தவர் இவர், 1963 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் சுமார் 40 ஆண்டுகாலம் குவைத் வெளியுறவுத்துறைத் துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். 
மிகச்சிறந்த ராஜ தந்திரியான இவர் உலக நாடுகளுடன் இணைந்து குவைத்தை வளர்த்தெடுத்தார். இந்நிலையில் ஷேக் சபா அல் அஹ்மத்தின் மரணத்தால் குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம் - என்ன நடந்தது?

BBC : உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர்

கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார். டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். என்ன-நடந்தது?

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஆர் எஸ் எஸ் யின் சதிவேலை... ஆதிக்க தலித் ஜாதிவெறியின் உச்சம்

K
athiravan Mayavan
: வன்னியரசும் அருந்ததியர் இட ஒதுக்கீடும்.. திரு.அ.மார்க்ஸ் என்னும்
அறிவாளி தான்.பட்டியல் வெளியேற்றம் குறித்து மருத்துவர் கிருஷ்ணசாமி பேசிய போது தலித் ஒற்றுமைக்கு எதிரானது என்று திரு.மார்க்ஸ் பேசவில்லை. அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்த போது தலித் ஒற்றுமை பாதிக்கும் அதுவெல்லாம் ஆர்எஸ்எஸ் சதி என்று பேசவில்லை.#
ம் ..
ஆக சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள விளிம்பு நிலை மக்களான அருந்ததியர் மக்கள் சமூகத்திலும் அரசியலிலும் குறைந்தது தங்களை கீழ் ஜாதியாவும் தீண்டாமைக்கு உட்படுத்தும் "பறையர்" மக்களுக்கு சமமாவது கல்வி ,பொருளாதாரம், அரசியல் என சமூகத்தில் உயர கருதுகிற மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் சம பங்கிட்டு கிடைக்க வேண்டும் என அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கியதை எவ்வளவு வன்மத்தோடு அதுவும் ஆதிக்க தலித் ஜாதிவெறியோடு எதிர்க்கிறது விசிக என்பதற்கு வன்னியரசு வின் முகநூல் பதிவே சாட்சி..
"அதுவும் அருந்ததியர் மக்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு என்பதே ஆர் எஸ் எஸ் யின் சதிவேலை தான் என்று சொல்வது ஆதிக்க தலித் ஜாதிவெறியின் உச்சம் என சொல்லலாம்.."

பெரியார் திடலில் பெரியார் இல்லை ! இது தெரியாமல் நீங்கள் அங்கே போய் தேடலாமா?

மி
னரல் மித்ரன்
: பெரியாரியலை தன்னுடைய வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு தனக்குகிடைத்த நேரங்களில் எல்லாம் பெரியாரியலைப் பரப்புவதை தன் கடமையாக கருதி முகநூல், வலைக்காட்சி உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இயன்ற வரை கருத்தியல் பிரச்சாரம் செய்து வருபவர் பணி சூழல் காரணமாக எந்த இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள இயலாத தோழர் ரீகன்.
பெரியாரிய கொள்கைத் தோழர்களுக்கு இவரைத் தெரியாதவர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். இவர் வாழ்வில் செய்த மாபெரும் தவறு தனக்குப் பிறந்த 40 நாளே வயது கொண்ட பிஞ்சுக் குழந்தையை தூக்கிக் கொண்டு தமது பெரும் பாட்டன் பெரியாரைக்காட்ட வேப்பேரியில் எண் 50, ஈவெகி சம்பத் சாலையில் உள்ள பெரியார் திடலுக்குள் நுழைந்ததுதான்.
காலை மணி 10:30 இருக்கும் அந்த பிஞ்சை தூக்கிக் கொண்டு இணையர்கள் உள்ளே சென்று பெரியார் சமாதி மேல் குழந்தையை கிடத்திவிட்டு நிழற்படம் எடுக்க தயாரானார்கள். 
குழந்தை அழுததால் தோழர் திண்டின் மீது அமர்ந்து பால் கொடுத்துக் கொண்டிருந்தார் சற்றுநேரத்தில் செக்யூரிட்டி வந்து மேலே உட்காரக் கூடாது என்று சத்தம் போட்டுவிட்டு சென்று விட்டார். கொஞ்ச நேரத்தில் சீத்தாராமன் என்ற நபர் (திடல் மேலாளர்) வந்து யார் பா நீங்க என்று தொடங்கி ஒரு மாதிரியான மொழி நடையில் கத்த ஆரம்பித்தார். உடன் வந்திருந்த தோழர் கமலாதேவி ஏன் கத்துறிங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க நாங்களும் அடிக்கடி திடலுக்கு வந்து போற பெரியாரிஸ்ட்டுகதான் என்று கூற .தோழர் ரீகன் " ஏங்க இவ்ளோ கத்துறீங்களே... காலைல ஏழு மணிக்கெல்லாம் அந்த சமாதிய சுத்தம் பண்ணி வைக்க மாட்டீங்களா?" என கேட்டார்  

தட்டார்மடம்: கொல்லப்பட்ட இளைஞரின் தாயும் மரணம்.. அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல்

தட்டார்மடம்: கொல்லப்பட்ட இளைஞரின் தாயும் மரணம்!

minnamblam :தட்டார்மடம் அருகே காரில் கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர், சொத்து தகராறில் செப்டம்பர் 17ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த, அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல் உட்படச் சிலர் மீது செல்வனின் தாயார் எலிசபெத் புகார் தெரிவித்திருந்தார். இவர்களுக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

செல்வன் கொலைக்கு நீதி கேட்டு, அவரது குடும்பத்தினர், திமுக, நாம் தமிழர் கட்சியினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வன் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

2ஜி வழக்கு அப்பீல்: தினமும் விசாரணை!

minnambalam:; 2ஜி விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 5 ஆம் தேதி முத
ல் தினமும் நடத்த வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசா மீது 2 ஜி அலைவ
ரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததும் பதவியை ராஜினாமா செய்தார். பின் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆ.ராசாவை தவிர இந்த வழக்கு விவகாரத்தில் கனிமொழி, கலைஞர் டிவியின் அப்போதைய தலைவர் சரத்குமார். தொழிலதிபர் ஷாகித் பால்வா உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21, 2017 அன்று விடுதலை செய்தது.   இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்த இரு விசாரணை அமைப்புகளும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன.

தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம்! பள்ளி, புறநகர் ரெயில், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடல்

 malaiamalar : தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: பள்ளி, புறநகர் ரெயில், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடல்
புறநகர் ரெயில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.

Flashback பன்னீர்செல்வத்தின் .. சேகர் ரெட்டி வீட்டில் 100 கிலோ தங்கம் ,70 கோடி புதிய நோட்டுக்கள் பிடிபட்டது 8 டிசம்பர், 2016 Flashback


ராஜா. nakkheeran. : வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய சேகர் ரெட்டி விடுவிப்பு!! ரூ.24 கோடி ....


tamil.oneindia.com  L சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சேகா் ரெட்டி தொடர்பான வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016ல் பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. இந்த நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.

போராடும் பன்னீர்: பொதுக்குழுவுக்குத் தயாராகும் எடப்பாடி

  போராடும் பன்னீர்: பொதுக்குழுவுக்குத் தயாராகும் எடப்பாடி

minnambalam :அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று ( செப்டம்பர் 28) அக்கட்சியின் தலைமை நிலையத்தில் சமூக இடைவெளியின்படி நடந்தது. உணவு இடைவெளி கூட இல்லாமல் 5 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

செயற் குழு கூட்டத்துக்காக தலைமைக் கழகத்துக்கு வரும் முன்பு ஒபிஎஸ் ஆதரவாளர்கள், அவரது வீட்டுக்கு வெளியில் மக்களை நிற்கவைத்து வரவேற்றார்கள், கட்சி அலுவலகம் முன்பும் ஒபிஎஸ் படத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள்.    அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி நகர் சத்யா தலைமையில் மக்களைக் கூட்டி வரவேற்பு கொடுத்து நிரந்தர முதல்வரே என்று கோஷத்துடன் அலுவலகம் உள்ளே அழைத்துபோனார்கள்.

செயற் குழு கூடும் முன்பே வெளியில் இப்படி இரு பிரிவாக இருக்கிறதே உள்ளே எப்படியிருக்கும் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தது போலவே செயற்குழுவில் அரங்கேறியுள்ளது.

ேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்

thanathanthi :கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விடுதி ஒன்றில் வசிக்கும் விஜய் பி நாயர் என்பவர், வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூ ட்யூப்சேனல் நடத்தி வருகிறார். இந்த யூட்யூப் சேனலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில், திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள், மகளிர் அமைப்பினர் குறித்தும் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பின்னணி குரல் கலைஞரான பாக்கியலட்சுமி, மகளிர் அமைப்பை சேர்ந்த தியா சனா மற்றும் சிலர், கடந்த சனிக்கிழமை விஜய் பி.நாயர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர் மீது கருப்பு மை ஊற்றியதோடு அடித்து உதைத்தனர். அவர் கைகளாலேயே அவர் பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வைத்ததோடு, மன்னிப்பு கேட்க வைத்து அதனை யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். 

திங்கள், 28 செப்டம்பர், 2020

தலைவர் சோனியா அதிரடி ! மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும்!

Veerakumar - tamil.oneindia.com :  டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, ஆகிய விவசாயம் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.>இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் காரணமாக விவசாயிகள் கொத்தடிமைகளாக மாற்றப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடு முழுக்க விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண சாசனம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம் செய்திருந்தார். அதேநேரம் இந்த சட்டங்களுக்கு மாற்றாக தீர்வு அளிக்கும் வகையில் சோனியாகாந்தி ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்  

ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது... நடிகர் சத்யராஜ் மகள் திட்டவட்டம்.

Arsath Kan  - tamil.oneindia.com : சென்னை: ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் செப்டம்பர் 17-ம் தேதி பாஜக ரதயாத்திரை தொடங்கவிருப்பதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகிய நிலையில் அந்த ரத யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என குரல் கொடுத்தார் திவ்யா சத்யராஜ். இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்  அவர். 
அதில், மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உடல்நலம் மீதும் உயிரின் மீதும் இல்லாததது தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். 

டிரம்ப் வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா? ரூ. 55 ஆயிரம் மட்டுமே ( 250 Dollars) செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ்

டொனால்டு டிரம்ப்BBC : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் 750 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ஆண்டொன்றுக்கு வெறும் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானவரி செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், இருபது ஆண்டுகளுக்கும் மேலான வருமானவரி ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறும் அந்த செய்தித்தாள், கடந்த 15 ஆண்டுகாலத்தில் 10 ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இவற்றை "போலிச் செய்தி" என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய டிரம்ப், "நான் உண்மையில் வரி செலுத்தினேன். நீண்ட காலமாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வரும் எனது வருமானவரி விவரம் வெளியாகும்போது உங்களுக்கு அது குறித்து தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.

கீழடி: 80 செ.மீ விட்டம், 380 செ.மீ உயரம்… 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு!!

vikatan :“மேலும் சில மாதங்கள் கீழடி யில் அகழாய்வு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். மழைக்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கலாம்” என்றனர். ‘கீழடி’ என்ற சொல் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமைகொள்ள வைத்த அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. நான்கு, ஐந்து, 6-ம் கட்டம் என தமிழக தொல்லியல்துறை கீழடியின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து விரிவான அகழாய்வு செய்து வருகின்றது. கீழடி அகரம் – உறைகிணறுகடந்த பிப்ரவரி 19-ம் தேதி கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.

எப்போதும் இல்லாத அளவில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என்று நான்கு இடங்களில் அகழாய்வு செய்யப்படுகிறது.  இதில் ஒவ்வொரு இடங்களிலும் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த மாத கடைசியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது.  இதனால் இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆவணப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

முதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்.. 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்

 maalaimalar : அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர் செல்வம் இடையே முதல்வர் பதவி குறித்து வாக்குவாதம் நடந்துள்ளது.  அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல் போதைப்பொருள் வழக்கு... தீபிகா படுகோனே, சாரா அலிகான்,ஷ்ரத்தா கபூர் ...

C
hinniah Kasi :
· போதைப்பொருள் வழக்கு... நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல் மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகில் போதைப்பொருள் விவகாரம்விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொரு ளை பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கைதுசெய்யப் பட்டார் இந்த வழக்கில் திரையுலகை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான்,ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணைக்குப் பிறகு தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா மற்றும்சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளனர். அதில் உள்ள வாட்ஸ் அப்உரையாடல்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உடுமலை நாராயண கவி நினைவு நாள் (செப்டம்பர் 25, 1899 - மே 23, 1981) பகுத்தறிவு கவிராயர்

dinamani : உடுமலைப் பேட்டை, பூளவாடியில் பிறந்த நாராயணசாமி பின்னாட்களில் தமிழ்த்திரையுலகின் ‘கவிராயர் நாராயணகவி’ யாக எண்ணற்ற பாடல்களை எழுதிக் குவித்தார். இளமையில் வறுமையில் உழன்று ஒவ்வொரு வாழ்வில் அடுத்து எடுத்து வைக்கவிருக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் சகோதரரை நம்பி வாழ்ந்த ஒரு இளைஞர் ஆரம்பத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக செய்தது தீப்பெட்டி வியாபாரம். அதில் அவருக்குக் கிடைத்தது நாளொன்றுக்கு 25 பைசா வருமானம். வீட்டில் வசதியற்ற காரணத்தால் நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பிற்கு முழுக்குப் போட்ட நாராயண கவி எழுதிக் குவித்தார் 650 க்கும் மேற்பட்ட கருத்துச் செறிவு மிகுந்த பாடல்களை.

நாராயணசாமியால் பள்ளிப் படிப்பைத் தான் தொடர முடியாமல் போனதே தவிர கிராமியக் கலைகளில் அவருக்கு ஆர்வம் அதிகம். கொங்கு மண்ணின் பாரம்பர்யக் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு ஊரில் நடக்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவின் ராமாயண நாடகத்தில் லக்குவன் வேடம் தரித்து நடிப்பார். அப்படியோர் சமயத்தில் தான் மதுரை சங்கர தாஸ் சுவாமிகளின் ஆப்த நண்பராக இருந்த சரபம் முத்துச்சாமிக் கவிராயரின் பார்வையில் நாராயணசாமி விழுந்தார். அன்று நாராயணசாமிக்கு வயது 12. அன்று முதல் முத்துச்சாமிக் கவிராயருடன் தொடங்கிய நாராயணசாமியின் கலைப்பயணம் அவரது 25 ஆம் வயது வரை நீடித்தது. முத்துச்சாமி கவிராயர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் இணைந்து சென்று நாடகம் நடிப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என நாடகத் தொழிலின் அத்தனை நுட்பங்களையும் கற்றார்.

இலங்கை 21 கன்டெய்னர்களை பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பியது! மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் ....

BBC : பிரிட்டனில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் எனும் பெயரில் வந்த நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அடங்கிய 21 கன்டெய்னர்களை திருப்பி அனுப்பி இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 

 2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றால் பிரிட்டனில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 263 கன்டெய்னர்களில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே அந்த கன்டெய்னர்களில் இருந்திருக்க வேண்டும். அவற்றில் சிறிய அளவு மட்டுமே பிரிட்டனுக்கும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. பெரும்பாலான கன்டெய்னர்கள் இலங்கையிலுள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.   

அதிமுக செயற்குழு: எடப்பாடி-பன்னீர் இடையே என்ன நடக்கிறது?

 செயற்குழு: எடப்பாடி-பன்னீர் இடையே  என்ன நடக்கிறது?

minnambalam : அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 28) ஆம் தேதி நடக்கும் நிலையில் அதிமுகவில் என்ன நடக்கும் என்று அக்கட்சிக்குள்ளும், அக்கட்சிக்கு வெளியேயும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.   கடந்த 18 ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த விவாதங்களை அடிப்படையாக வைத்து செயற்குழு புயற்குழுவாகும் என்றும் அப்படி எல்லாம் நடக்காது என்று சிலரும் அதிமுகவுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இரு தரப்பிலும் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை செய்தோம்.    வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தானே வர வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார். எடப்பாடிக்காக அமைச்சர்கள் சிலர் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் எடப்பாடி ஆதரவு நிலையில் இருக்க பழைய மாசெக்களை எடப்பாடி தரப்பினர் தொடர்புகொண்டு வருகிறார்கள். சில நிர்வாகிகள் தன் மேல் அதிருப்தியில் உள்ளதாக அறிந்த எடப்பாடி, அவர்களின் பட்டியலை வாங்கி வைத்து தானே அவர்களுக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்.

பெண்கள் குறித்து மனுதர்ம கருத்துக்களில் சில : சுதந்திரமாக பெண் எதையும் செய்ய அனுமதிக்கக் கூடாது...

Dhinakaran Chelliah : · !!பெண்களை வணங்கும் இந்து மதம்!! இந்துமதத்தில் பெண்களைத் தெய்வமாக வழிபடுகிறார்கள், அவர்களுக்கு உயரிய அந்தஸ்து இந்து மதத்தில் உண்டு என நண்பர் ஒருவர் whatsApp குழுவில் எழுதியிருந்தார். அவருக்கு அளித்த பதில் இதுதான்: இன்று பெருந் தெய்வ வழிபாடு கொண்ட இந்து மதம் என்று நம்பப் படுவது வைதீக மதமே! இதற்கு பிராமணீய மதம், வேத மதம், சனாதன தர்மம் எனப் பல பெயர்கள் உண்டு. தவிர பலப்பல சமயங்களின் தொகுப்பே இன்று வழங்கிவரும் இந்துமதம் என்பது. இந்த அடிப்படைப் புரிதலில் நமது விளக்கத்தைத் தொடர்வோம்!
கணவன் இறந்ததும் தாலி அறுப்பு,மொட்டை அடித்தல், அலங்காரங்களை அகற்றுவது, பொட்டு முதல் நல்ல உடைகளை மற்றும் அணிகலன்களை அணிந்துகொள்வதை மறுப்பது அனைத்தும் இந்து மதத்தில் மட்டுமே உண்டு.
சிறு வயது பெண்களை பொட்டுக்கட்டி கோயிலுக்கு நேர்ந்துவிடும் கொடிய வழக்கம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு.இது இன்றும் சில கிராமங்களில் தொடர்கிறது.

ஒரு கூட்டு அவியல் மொழியே சமற்கிருதம் !

Kalidasan Swaminathan : சமற்கிருதமும், இந்தியும் என்ன மொழி ? ஆரிய
இனக்குழுவின் ஆதிமொழி சாந்தசி, பௌத்தர்களின் பாலி, சமணர்களின் மகதி, இவற்றை எல்லாம் தமிழில் பேச்சு வழக்கில் இருந்த பெரும்பான்மை ( கொச்சை ) சொற்களுடன் கலந்து திரித்து உருவாக்கப் பட்ட/சமைக்கப்பட்ட ஒரு கூட்டு அவியல் மொழியே சமற்கிருதம் ! இந்த சமற்கிருதம் இயல்பாய், எளிதாய் அதை உருவாக்கிய கூட்டத்தாராலேயே பேச வராத நிலையில், அது பேச்சு வழக்கில் பரவ இயலாது செத்து ஒழிந்தது !! இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே ( ஆர்.எஸ்.எஸ். ) கூட்டம் திட்டமிட்டு அதே செத்துப் போன சமற்கிருதத் தின் மிச்சம் மீதியைக் கொண்டு, வடக்கில் பல பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்ட பல மொழிகளிலும் காணப்படும் பொதுவான சொற்களை எல்லாம் கலந்து உருவாக்கி வளர்த்த மொழியே இந்தி எனும் மந்தி மொழி !!
அந்த சமற்கிருதம், இந்த இந்தி இரண்டுக்குமே எழுத்து வடிவம் என்பதே இல்லாத நிலையில் இவற்றை எழுத தேவநாகரி எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த முடிவு செய்து,
அப்போதைய ஆட்சியாளர்களின் துணையோடு திணிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதே தற்போதுள்ள இந்த தேவநகரி எழுத்து முறை;
இதனால், வடக்கில் புழக்கத்தில் இருந்த பல நூறு மொழிகளும், அவற்றின் எழுத்து முறைகளும் அழித்து ஒழிக்கப் பட்டன.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

இசையமைப்பாளர் வேதா .. ஓராயிரம் பார்வையிலே , கண்ணாலே நான் கண்ட கணமே, , பழகும் தமிழே பார்த்திபன் மகனே , இதயவானின் உதய நிலவே

திரு வாமனன் :; எஸ்.எஸ்.வேதா இசையமைப்பாளர் முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள்.

இந்தியாவிலேயே தன மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அந்நாளில் வெங்கடாசலம் என்பவரதுவீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.

இன்டர்‌லாக் சிஸ்டத்தில் அம்மி கல்லையும் குழவி கல்லையும் அடுக்கி வைத்துள்ள அழகு..

திராவிட தமிழன் பூபதி - ChockalingamSelva : நண்பர்களே...!இன்று வேலூர் 

சத்துவாச்சாரியில் கோர்ட் தாண்டி செல்லும்போது என் கண்ணில் பட்ட காட்சியை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.ரோட்டு ஓரத்தில் அம்மிக் கல் விற்கிற ஒரு ஏழை தொழிலாளி, மலையில் இருந்து தான் வெட்டி எடுத்து வந்த பாறாங்கல்லில் இருந்து அம்மி கல்லையும் குழவி கல்லையும் (அரைவை செய்கிற கல்) கொத்தி தயார் செய்து அடுக்கி வைத்துள்ள அழகு என்னை பிறம்மிக்க வைத்தது.
சாதாரண கண்ணோடு பார்த்தால் வியாபாரம் செய்கிறான் என்று சொல்லிவிடுவோம். ஆராய்ச்சி கண்ணோடு கலை கண்ணோடு பார்த்தால் ஒரு ஏழையிடம் இப்படி ஒரு திறமையா என வியக்க வைத்தது. 2 பிரிவாக அம்மி கற்களை அடுக்கி வைத்துள்ளார்.
ஒன்றில், தரையொடு ஒரு செவ்வக வடிவில் அம்மிகல், அதன் மீது உருளை வடிவில் குழவிகல், அதன் மீது மறுபடியும் ஒரு செவ்வக வடிவில் அம்மி கல் ... அது லேசாக கூட ஆடாமல் அசையாமல் நிற்க... அதின் மேலே மீண்டும் ஒரு குழவி கல்... மீண்டும் அதின் மீது சிறிதாக ஒரு மிளகு சீரகம் இடிக்கிற உரல், அதின் மீது ஒரு இடிக்கிற சிறிய கல், இப்படி எல்லாமே மேஜிக் போல் ஆடாது அசையாது நிற்பது ஆச்சர்யம்..அதிசயம்...

பெரியாரை அவமதிப்பது ஆர் எஸ் எஸ் அக்ரஹாரங்கள் மட்டுமல்ல... தலித் சுய ஜாதி ஊடக போராளிசும்தான்!

LR Jagadheesan : பெரியாரை ஆர் எஸ் எஸ் மட்டும் அவமதிக்கவில்லை;

அவருக்கு எதிராக அக்ரஹாரம் மட்டும் அவதூறு பரப்பவில்லை. அவர்களைவிட அதிகமான அவமதிப்பை; அவதூறை அடுத்த தலைமுறை அம்பேட்காரியர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். சர்வதேச பேராசியப்பெருந்தகைகள் முதல் சாமானிய சமூக ஊடக தலித் போராளி வரை.
அப்படி பெரியாரை திட்டமிட்டு தொடர்ந்து அவதூறு செய்யும் அம்பேட்காரியர்களுக்கு அக்ரஹாரத்தின் சடகோபுர ஆசிகளும் ஆதரவும் (பொருளாதார ரீதியாகவும் தொழில் கூட்டணியாகவும்) அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பெரியார் மீதான அக்ரஹாரத்தின் வெறுப்புக்கு நியாயம் உண்டு. தம் ஏகபோகத்தை பெருமளவு குறைத்த ஒரு சித்தாந்தியை அவர்கள் வெறுப்பது இயல்பு. அது நியாயமில்லாவிட்டாலும். ஆனால் தமிழ்நாட்டின் நவீன அம்பேட்காரியர்களின் பெரியார் வெறுப்புக்குப்பின்னிருப்பது — அப்பட்டமான சுயஜாதிப்பாசம்; கடைந்தெடுத்த சுயநலம் (அவரவர் வாழ்வின் வர்த்தக/தொழில்முறை தேவை).
மேலும் ஆர் எஸ் எஸ்சும் அம்பேட்காரியமும் இந்திய அரசியலில் ஒன்றுபடும் புள்ளிகள் மூன்று.