சனி, 17 ஜூலை, 2010

பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி மீது

நீதிபதியொருவர் கொழும்பிலுள்ள தனது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் திணைக்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இப்புகார் குறித்து விசாரணை செய்யப்படாத நிலையில் குறித்த வீட்டிலிருந்து அந்த யுவதி தப்பிச் சென்றுள்ளார்.

மேற்படி யுவதியை பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி, அந்த யுவதி உடல் மற்றும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இத்துஷ்பிரயோகம் குறித்து யுவதியின் சகோதரரினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்திலும் புகாரிடப்பட்டுள்ளது.


(-லங்காதீப இணையத்தளம்)

ராகுல், தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள்

தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நிலையில், தமிழகத்தின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள ராகுல், மாநிலத்தில் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்துள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், தி.மு.க., தலைமை நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. இருப்பினும், சோனியாவின் மகனும் அக்கட்சியின் எதிர்காலத் தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல், தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் தி.மு.க., தலைவரை சந்திக்காமல் சென்று விடுவது முக்கியமாக பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கே அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். நம்பர் 12, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த சந்திப்பு நடந்தது. ராகுலை சந்தித்தவர்களில் விடியல் சேகர், அருள் அன்பரசு, காயத்ரிதேவி, ராஜ்குமார், ராம்பிரபு, விஷ்ணுபிரசாத் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முக்கியமானவர்கள். இதுதவிர கார்த்தி சிதம்பரமும் சந்தித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காஞ்சிபுரம் புரு÷ஷாத்தமன், தூத்துக்குடி பெருமாள் உள்ளிட்ட மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராகுலை தனித்தனியே சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது.

ராகுலை சந்திப்பதற்கு முன்பாக ஒவ்வொருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட் டது. அந்த விண்ணப் பத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. "நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள், கட்சியில் உங்களது பணி எந்த அளவில் பேசப்படுகிறது, சமூகதளத்தில் உங்களது பங்களிப்பு என்ன, நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காணப்பட்ட நிறை குறைகள் என்ன, உங்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் தந்தால் ஜெயிப்பீர்களா, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள், உங்கள் தொகுதி எஸ்.பி., - கலெக்டர் ஆகியோர் பெயர் என்ன?' என்பன போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகே, ராகுலை சந்தித்துள்ளனர். ராகுலுடன் நடந்த சந்திப்பின்போது, ஜிதின் பிரசாதா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வேறு வேறுவிதமான விஷயங்களை ராகுல் பேசியதாக தெரிகிறது. ஒருசிலரிடம் தமிழக அரசியல் நிலவரமும், இன்னும் சிலரிடம் கட்சி நடவடிக்கைகள் குறித்தும், மேலும் சிலரிடம் கூட்டணி மற்றும் மக்களின் மனநிலை ஆகியவை குறித்த கருத்துக் களை ராகுல் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தவிர, மாநில காங்கிரஸ் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றியும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். மற்ற மாநிலங்கள் போல் அல்லாது தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்தாக வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைத்தால் தமிழகத்தில் அது எந்த அளவில் எடுபடும் என்றும் முக்கியமாக பேசப்பட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் வேளையான தற்போது, ராகுல் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
மதுரை முத்து - madurai,இந்தியா
2010-07-17 18:28:31 IST
தமிழ் நாட்டுக்கு என்று எந்த தொலைநோக்கும் இல்லாமல் 40 வருடத்தை தொலைத்து விட்டார்கள். தற்போதும் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை நிலை நிருதிக்கொள்ளவே போராடுகிறார்கள். கட்சி என்ற கூட்டு முயற்சி அங்கு இல்லை. அப்படியே இவர்கள் கூடி எதாவது சொன்னாலும் அதை தலைமை ஒன்றும் காதில் போட்டுக்கொள்வதில்லை. உண்மையிலேயே தமிழகம் இவர்களுக்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் இவர்கள் மத்தியில் இருந்து கொண்டு எத்தனை திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம்? ஆனால் காங்கிரஸ் எதயுமே செய்யவில்லை. மாறாக எதிரான போக்கிலேயே செயல்படுகிறார்கள். சேது சமுத்திரத்திட்டம் இவர்களாலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுமைக்குமான குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு அகன்ற இருவழித்தட ரயில் போக்குவரத்து என்பது எட்டாக்கனி அதற்க்கு இவர்களிடம் எந்தவிதமான முயற்சியும் இல்லை. நதிகள் இணைப்பு மூலம் நம்முடைய விவசாயிகளின் குறைகள் தீராவிட்டலும் பரவாயில்லை தேசத்தின் ஒற்றுமையாவது பராமரிக்கலாம். அதற்கும் கூட புல்லறிவு படைத்ததாகவே காங்கிரஸ் உள்ளது. அரைகுறை அறிவோடு ராகுல் எதோ சொல்கிறார். மூத்த தலைவர்கள் ஜால்ரா போடுகிறார்கள். மொத்தத்தில் காங்கிரஸ் ஒரு சாபக்கேடு....
raaki - Chennai,இந்தியா
2010-07-17 18:04:28 IST
அப்பனை போல பிள்ளை. அரகுறை. நிதானம் இல்லை, முப்பதெட்டு வயது ஆகியும் முதிச்சி வரவில்லை. தண்ணீருக்கு மக்கள் படும் கஷ்டம் புரியாமல் நதிகளை இணைப்பது தவறு என்று பெரிய விஞ்ஞானி போல் அளப்பறை. எடுப்பார் கைபிள்ளை. நம் தலை எழுத்து இன்னும் மாறவில்லை. வருங்கால பிரதமரே வருக, வந்து மன் மோகன் சிங்க் ஆட்சியில் கொஞ்சம் நல்லா போய்கிட்டு இருக்கும் நம் நாட்டை குதறி போடுங்க....
சரவணன் - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-17 18:04:16 IST
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் திமுகவை மிரட்டி அதிகசீட் வாங்கும் டெக்னிக் இது.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றாலோ, அல்ல து சமீபகாலமாக டெபாசிட் இழக்க ஆரம்பித்து இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ,பேரழிவு காங்கிரசுக்குத்தானேயொழிய திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. வுண்மை கருத்து...
vels - villupuram,இந்தியா
2010-07-17 17:51:03 IST
திமுக வோட கூட்டணி இருந்தா காங்கிரஸ் தேட வேண்டிய நிலைமை கண்டிப்பா வரும் ஒவ்வொரு தலைவரையும் விலை பேசி வாங்கிவிடுவார்கள் மதுரைக்கு அழகிரியும் மத்த இடங்களுக்கு ஸ்டாலினும் விலை வைத்து காங்கிரஸ் ய் சீக்கிரம் வேலை முடிப்பது நிச்சயம் ....
sundar - chennai,இந்தியா
2010-07-17 17:44:50 IST
இருக்கறதை விட்டு பரகரத்தை பிடிக்க ஆசை பட வேண்டாம் தூக்கு தூக்கியாக இருப்போம் ...
பாலா ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
2010-07-17 17:00:10 IST
யாரோட கூட்டணி வெச்சாலும் கணிசமான இடங்களை கேட்டு பெற்று ஆட்சியிலும் பங்கு கேட்க தவறிடாதீங்க, ராகுல்! இது ஒரு பொன்னான சந்தர்பம்; குட் லக்! ஆனால் அடுக்கு முன்னாடி நல்ல தலைவர் ஒருவரை உருவாக்குங்கள்....
மனித நேயன் - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-17 16:42:26 IST
ராகுல் இல்லை அவர் தாத்தா வந்தாலும் திராவிட கட்சிகளை விஞ்சி தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளரவே முடியாது....
ஷேயஹு - chennai,இந்தியா
2010-07-17 12:32:35 IST
ராகுல், தமிழ் நாட்டில் திமுக, அதிமுக இருக்கும் வரை உங்கள் பருப்பு வேகாது. உங்கள் அப்பா பறந்து பறந்து குட்டிக்கரணம் போட்டும் ஒன்றும் ஆகவில்லை. வெண்ணை திரளும் போது தாழியை உடைத்து விடாதீர்கள். இந்த தேர்தலை திமுக வோடு சந்தியுங்கள். அதிமுக இந்த தேர்தலோடு அழிந்து விடும். அத்தோடு திமுக தலைமையிலும் காலத்தின் கட்டாயத்தால் மாற்றம் வரும். அப்போது காங்கிரஸ் பிரதான கட்சியாகி விடும். மூச்சு திணறலில் இருக்கும் அதிமுகவுக்கு ஆக்சிஜன் கொடுத்து விடாதீர்கள்....
கே.கலைச்செல்வன் - udumalaipettai,இந்தியா
2010-07-17 12:32:11 IST
கருத்து தெரிவித்துள்ளவர்களில்,திரு அமானுல்லா,திரு மாதவன் இவர்களைத்தவிர மற்றவர்களெல்லாம் ஏதோ உள்நோக்கத்துடன் உண்மைக்கு மாறான விஷயங்களை தெரிவித்துள்ளனர்.1967 இல் தமிழகத்தில் மக்களால் தூக்கி எறியப் பட்ட காங்கிரஸ் அதோடு ஒழிந்து போனது.மக்களும் காங்கிரசை சுத்தமாக மறந்து விட்டனர்.காமராஜருக்குப் பிறகு மக்களுக்கு அறிமுகமான தலைவர்கள் யாரும் காங்கிரசில் உருவாகவே இல்லை. 1967 இல் தமிழகத்தில் மரணப் படுக்கையில் விழுந்த காங்கிரஸ் இதுவரை கூட்டணி பலத்தில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் செயல்பட்ட விதத்தால் சென்ற நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவிற்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அதனால்தான் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்க ளில் மட்டும் அதிகபட்சமாக அதிமுக கூட்டணி ஜெயித்தது.இளங்கோவன் போட்டியிட்டதால்தான் மதிமுக வேட்பாளர் கூடஅதிசயமாக ஜெயித்தார். திமுக,அதிமுகவைப்போல் கிளை அமைப்புகள் ஏதுமில்லாத காங்கிரசோடு கூட்டணி வைத்தால் தேர்தல் நேரத்தில் கழுத்தில் ஏறிய கிழவனை தூக்கி சுமந்த சிந்துபாத்தைப்போல் கூட்டணிக்கட்சிகள் பாடுபட்டே யாகவேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் திமுகவை மிரட்டி அதிகசீட் வாங்கும் டெக்னிக் இது.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றாலோ, அல்ல து சமீபகாலமாக டெபாசிட் இழக்க ஆரம்பித்து இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ,பேரழிவு காங்கிரசுக்குத்தானேயொழிய திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சின்னத்தம்பி ராகுல் காட்டும் அதீத கெட்டிக்காரத்தனத்தின் (TRYING TO ACTSMART) முடிவு அனேகமாக அழுத்தக்காரனுக்கு கிடைக்கும் புழுத்த கத்தரிக்காயாகக் கூட இருக்கலாம்!!!......
gknatarajan - chennai,இந்தியா
2010-07-17 12:31:36 IST
it is high time, congress make a start by asserting themselves in t.n., can take, vijayakanth in thier fold![even if the do not get majority, to prove they are a force and can slowly gain power in future! either MR P.C.,,,or MR VASAN can be projected as C.M.! natarajan...
ஆயிரத்தில் ஒன்னு - Vellore,இந்தியா
2010-07-17 12:31:28 IST
(2/2).. ஆனா அது தேர்தல் வரைக்கும் தான். அதுக்கப்புறம் எப்படீன்னு சொல்ல முடியாது. அது தேர்தல் முடிவை பொறுத்தது. ஏதாவது ஏடாகூடமா ஆச்சி.. கேப்பாங்க பாரு கேள்வி.. அப்படி கேப்பாங்க. அஆங்.. நீங்க பயப்படாதீங்க. இதுக்கெல்லாம் போயி பயந்தா எப்படி? இன்னும் எவ்ளோ இருக்குது. ஆங் அப்புறம் ஒரு ‍‍‍ஒரு personal advice இல்ல friendly opinion னு வச்சிக்குங்கோ.. தப்பி தவறி எங்க செல்வி. அம்மா கூட கூட்டணி வச்சிட்டீங்கன்னா, தயவு செய்து எந்த பொது கூட்டத்திலயும் அவுங்க இல்லாம தனியா மட்டும் கலந்துக்காதீங்க. ஆமா அப்புறம் ஏதாவது ஏடாகூடமா நடந்து போச்சின்னா நாங்க‌ பொறுப்பு கெடையாது. செல்வி. அம்மா வேற எதாவது அனுதாப அலை அடிக்காதான்னு காத்துக்கிட்டு இருக்குறாங்கோ.. உஷாரு!! கடைசியா.. மறுபடியும் ஒரு முறை உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்.. எங்க செல்வி. அம்மா கூட கூட்டணி வச்சுக்குங்க. please முழுசா இல்லன்னாலும் பரவாயில்லை.. வேணும்னா தமிழ் நாட்டில் உங்க கட்சியிலயிருந்து ரெண்டு கோஷ்டிங்களை மட்டுமாவது எங்களோட கூட்டணி வச்சுக்க அனுமதிக்கணும்னு செல்வி. அம்மா அவர்கள் சார்பா கேட்டு கொள்கிறேன். நன்றி!...
பாலகுமார். S - Thoothukudi,இந்தியா
2010-07-17 12:27:22 IST
இப்பொழுதே கட்சிக்குள் அடிதடி தொடங்கி இருக்கும். யார் காமராஜ் ஆட்சிக்கு தலைமை தாங்குவது என்று. முதலில் சரியான தொண்டர் படையை உருவாக்குங்கள். காங்கிரஸ் ஒன்றும் MNC இல்லை. நினைத்தால் ஆட்களை பணியில் அமர்த்த. கொஞ்சம் யோசிக்கவும் - எடுத்தேன் கவிழ்த்தேன் போன்ற முடிவுகளை எடுக்கும் முன்னர்....
ப சித்தார்த்தன் - Doha,ரீயூனியன்
2010-07-17 12:17:49 IST
திமுகா வின் சாதனைகள், கட்சியின் பலம், பணம் , எதிர்கட்சிகளின் விரக்தி , அதிமுக சோர்வு -தொண்டர்கள் வெளியேறியது போன்ற பலபல சாதகங்கள் திமுகவுக்கு உண்டு. மேலும் தமிழ் நாடு அளவில் பெரிய அளவில் ஊழல் இல்லை. கட்சிகாரர்கள் அதிகமாக சம்பதிதுவிட்டர்கள். செலவு செய்வார்கள். அரசு ஊழியர்கள் அனைவரும் திமுகவிற்கே ஒட்டு போடுவார்கள். எனவே திமுக அமோக வெற்றிபெரும்....
masilamani.r - coimbatore,இந்தியா
2010-07-17 11:37:13 IST
Expecting infight in THE FIRST FAMILY in the near future, It is hightime that Congress start thinking on riding independant horse ....
கான் - india,இந்தியா
2010-07-17 11:08:42 IST
அ.தி.மு.க-தி.மு.க தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் இணைத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. முதலில் உங்கள் கட்சியில் சார்பாக முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துங்கள்....
Sagar Anantham - Chennai,இந்தியா
2010-07-17 10:58:07 IST
இதில் என்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது. அவரவர் கட்சியை பலப்படுத்த அக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துவது பெரிய விஷயமில்லையே! இதற்கு ஏன் கண் காது வைத்து கூட்டணி முறிவு என்று எல்லாம் கற்பனை செய்து செய்திகளை உருவாக்குவது தவறு. வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டணிக்கா நாக்கை தொங்கப்போட்டுகிட்டு அலையும் பச்சையம்மாவின் அடிவருடிக்களுக்கு ஆனந்தத்தை வேண்டுமென்றால் அளிக்கும். அவர்கள் ஆனந்தக்கு அல்ப ஆயுசுதான். சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணியில் மிக உறுதியாக இருக்கிறார். பச்சையம்மா செய்த துரோகமும் அவமானமும் சோனியா அவர்கள் அவ்வளவு சுலபத்தில் மறக்க தயாராக இல்லை....
கண்ணதாசன் - chennai,இந்தியா
2010-07-17 10:32:44 IST
hai ragul sir please dis connet your connection in DMK and new connetting for ADMK next minister Amma one on only...
கார்தீசன் - jeddah,சவுதி அரேபியா
2010-07-17 10:28:48 IST
கருணாவின் சக்தி தெரியாமல் இந்த குழந்தை விளையாடுகிறது, இன்று வெளியாகி உள்ள ஸ்டாலினின் பேட்டியை படியுங்கள், அண்ணன் தம்பி போட்டி இந்த இடைதேர்தலில் இல்லை என்பது நிச்சயம், இந்த இடைதேர்தல் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவிற்கு எதிர்காலத்தின் கடைசி வாய்ப்பு. இரண்டுமே விழித்து கொண்டது. காலத்திலும் இறங்கி விட்டார்கள். காங்கிரஸ் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக பா.ம.கவையும், திருமாவையும் கடைசியில் கம்யூனிஸ்ட்களையும் வைத்துள்ளார், ராகுல் எடுக்கும் முடிவு தொங்கு சட்டசபை முறையை தமிழகத்துக்கு அறிமுகம் செய்யும் என்று தோன்றுகிறது....
M கணேஷ் பாண்டியன் - சென்னை,இந்தியா
2010-07-17 10:24:36 IST
காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் சரி ஆகாதவரை அவர்களால் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது. (அது சரியாகாதபடி நம் முதல்வர் பார்த்துக்கொள்வார் ?) அவர்கள் ஈழ தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை?...
ந.suresh - tirupur,இந்தியா
2010-07-17 10:02:48 IST
சந்தோஷ் மற்றும் அவரது அம்மா கூட்டணி பிச்சை கேட்கிறார்கள்.ராகுல் தயவு செய்து பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள்.பச்சை பாட்டி உங்களை தேவைக்கு பயன்படித்தி விட்டு அப்புறம் உங்களை குப்பற தள்ளி விட்டு விடும். ஆ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் இல்லை .ஆ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆசைபட்டால் ஆ.தி.மு.க.விற்கு 117 இடம் மட்டும் கொடுக்கவும்.இப்ப அல்லிராணி இருக்கும் சூழ்நிலையில் அதற்கே சம்மதிக்கும் .உங்கள் கட்சியும் தமிழ்நாட்டில் வளரும் .தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் இதே இடம் கேட்க வேண்டும் .இது தான் நல்ல நேரம் உங்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர....
singam - namakkal,இந்தியா
2010-07-17 09:56:37 IST
பிரயோஜனமில்லை .........தி மு க ,அ.தி மு க ..எல்லாம் குழிக்குள் போய்கொண்டு இருக்கிறது ....மற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சமாதி கட்டியாகி விட்டது ....காங்கிரெஸ் தனியாகவோ ...கூட்டணி யுடனோ நின்றால் ஊ ஊ ஊ ஊ ஊ....................
பாலா - coimbatore,இந்தியா
2010-07-17 09:49:34 IST
FIRST all the congress man implement gandhiji in dream which has been disolve the congress party...
Arjun - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-17 09:48:30 IST
ராகுல் நினைப்பதெல்லாம் சரிதான். ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு வராது என்பதே உண்மை. காங், தேமுதிக, கம்யூனிஸ்ட், பாமக இது ஒரு அணி, அதிமுக, மதிமுக இது ஒரு அணி, திமுக, பாஜக ஒரு அணி இப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும், காங் கூட்டணி இரண்டாம் இடத்திற்கு வரும், திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும். ஓட்டுகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்குத்தான் அதிக ஓட்டுகள் உள்ளன. பெரும்பாலும் கூட்டணியைப் பொறுத்த வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. நன்றி...
மணிகண்டன் - Tamilnadu,இந்தியா
2010-07-17 09:28:44 IST
தமிழ்நாட்டில் பூதக்கண்ணடி வைத்து தேடினாலும் காங். தொண்டர்களை காண முடியாது. மிகச்சிறந்த கூட்டணி கட்சி திமுகா தான், ஜெயலலிதா, சோனியாவை எப்படி எல்லாம் விமர்சித்தார், என்பது ராகுலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியாதா. மத்தியில், பிஜேபி, அரசுக்கு எப்படி எல்லாம் தொந்திரவு கொடுத்தார் என்பதை திரு. வாஜ்பாய் அவர்களை கேட்டால் சொல்லுவார். தேர்தல் வரை தான் அம்மா மரியாதை கொடுப்பார், தேர்தல் முடிந்தால் கேவலப்படுத்துவார், இது அரசியலில் உள்ள எல்லாருக்கும் தெரியும். அரசியல் ஒரு கார்பரேட் கம்பெனி அல்ல, என்பது ராகுலுக்கு தெரியாது போலும், அதிமுகாவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்....
வி.கணபதி - Dubai,இந்தியா
2010-07-17 09:24:11 IST
" கட்சி கூட்டணிய கூட்டி கட்சிய பத்தி மட்டும் பேசுங்க ...? வேற ஏதும் பேசாதிங்க. என்ன நாட்டுக்கு நல்லது நடந்துரும் பாரு. அதான்? நீங்க நல்லது பண்ணினா தானே ஜெயிக்கிரதுக்கு .,...? எதற்கு இந்த வெட்டி கூட்டம்.....நடப்பது தான் நடக்கும் ....
Ilango - Pondicherry,இந்தியா
2010-07-17 08:53:06 IST
Dear Rahul, The best formula would be... Have a deal with ADMK for 50%..50%. Let JJ be a CM and Jayanthi be a DCM. Ask ADMK to accomodate Vijayakanth and you can accomodate PMK. Let ADMK share 10% seats to Vijayakanth and Congress share 15% seats to DMK. This formula will work out....
தனா - chennai,இந்தியா
2010-07-17 08:51:25 IST
திரு ராகுல் அவர்களே, தி மு க வை விட்டு நீங்கள் வெளியே வந்தால் கண்டிப்பாக வருத்தபடுவீர்கள். தி மு க வை விட்டு பிரிந்தால் கண்டிப்பாக உங்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் பழைய நிலைமைக்கு போய்விடும் . ஒரு சிலர் பேச்சை கேட்டு வீணாக காங்கிரஸ் ஐ மண்ணை கவ்வ வைத்து விடாதீர்கள். over confidence வேண்டாம் ....
DESINGU M - DALMIAPURAM,இந்தியா
2010-07-17 08:49:28 IST
No party can come to power in Tamilnadu with Congress....
Balakumar - Thoothukudi,இந்தியா
2010-07-17 08:39:54 IST
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகி விடாமல் பார்த்துகொள்ளவும். ரெண்டு பேரும் கைவிட்டால் என்ன பண்ண உத்தேசம்?...
முந்திரிகொட்ட - ahmedabad,இந்தியா
2010-07-17 07:55:18 IST
டியர் ராகுல்ஜி தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனியாக அரசு அமைய ஆசைபட்டால் நிச்சயம் மக்கள் சந்தோஷபடுவார்கள். ஆனால் ஒரு தனி அதிகாரம் கொண்ட தலைவர் தேவை கோஷ்டிகளை ஒழித்து ஒரு தலைவர் முறை வேண்டும். அந்த நிலை வரும் வரை என் ஒட்டு காங்கிரஸ் திமுக அணிக்கே. ஜெயலலிதா ஆட்சியை பிடிக்கும் வரை தான் பணிந்து அடங்கி இருப்பார்கள். அதன் பிறகு ராகுல் அவர்களே போயஸ் கார்டனில் அம்மாவின் அழைப்புக்கு காத்திருக்கவேண்டும். இது நிஜம்...
CJKANNAN - sivagangai,இந்தியா
2010-07-17 07:50:11 IST
அதிமுக உடன் கூட்டணி அமைந்தால் தமிழக காங்கிரஸ் வளர வாய்ப்பு உள்ளது, இல்லையேல் தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மட்டும் "நன்கு' இருப்பர் (திமுக உடன்). கட்சியை வளர வைக்க அல்ல....
prakash - dubai,யூ.எஸ்.ஏ
2010-07-17 07:36:25 IST
ஆல் தி பெஸ்ட் ,...
ப. MADHAVAN - chennai,இந்தியா
2010-07-17 06:36:34 IST
எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் வருவது கஷ்டம்தான்....
kilavansethupathi - chennai,இந்தியா
2010-07-17 06:23:50 IST
ராகுல் காந்தி அவர்களே எங்கள் தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை காங்கிரஸ் உள்ளது மொத்தம் எத்தனை தலைவர்கள் உள்ளார்கள் . எத்தனை ஆதரவாளர்கள் .அதோடு எத்தனை கோஷ்டிகள் உள்ளன.அதற்க்கு யாரெல்லாம் தலைவர்கள் என்பதையும் கொஞ்சம் விசாரித்து வையுங்கள்.எனக்கு என்னமோ தொண்டர்களைக் காட்டிலும் தலைவர்கள் அதிகம் உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி என்று சொல்லலாம்.கட்டாயம் யாருடனாவது சேர்ந்தே தேர்தலை சந்திப்பது நல்லது.கொடிகட்ட போஸ்ட்டர் ஓட்ட நம்மிடம் தொண்டர்கள் குறைவு .எல்லாமே தலைவர்கள்தான் ஒரு விஷயத்தில் மட்டும் எல்லா கோஷ்டிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் .பாராட்டலாம் .அது வேறு ஒன்றும் இல்லை . பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்பதை மட்டும் தனியாக சொல்லாமல் எல்லா கோஷ்டியும் சேர்ந்தே சொல்கிறார்கள் .ஜெய் ஹிந்த் வந்தே மாதிரம். சேதுபதி....
2010-07-17 06:17:48 IST
வெளிப்படையாக பார்க்கும் போது திமுக மத்திய அரசுக்கு எந்த வித இடைஞ்சலும் சஞ்சலமும் இல்லாமல் ஆதரவு அளித்து வருவது போல தெரிந்தாலும், இவர்கள் மத்திய அரசை தங்களின் ஆதரவு மூலம் கடந்த பத்து வருடங்களாக எப்படில்லாம் சுரண்டுகிறார்கள் என்பது தெரிய வரும். இவர்கள் மத்திய அரசில் பங்கு பெற்றதின் மூலம் தமிழ் மக்களுக்கோ தமிழ் நாட்டுக்கோ எந்த வித பலனும் கிடையாது. எந்த வித பயமும் உள்மனமும் இல்லாமல் சுரண்டோ சுரண்டு என்று சுரண்டி தங்கள் சொத்தை கூட்டுகிறார்கள். இந்த காரணத்தால் தான் டி.ஆர். பாலு மந்திரி பதவியில் இருந்து கழட்டி விடப்பட்டார். ராசா வேறு சில காரணங்களால் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்தாலும் (this century 's mega fraud) ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதனால் ராகுல் உள்ளபடியே ஊழலை ஒழித்து அராஜகத்தை கட்டுப்படுத்த என்னுவாறே என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டும். சுயநலமே சரீரமாக கொண்ட பசி, வாசன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களுக்கு கோபாலபுரம் நல்ல தீனி போட்டு தங்கள் பக்கம் இழுத்து கொண்டு விட்டது. இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி என்றால் பழைய ஜனநாயக பேரவையையும் மூப்பனார் காங்கிரசையும் மறுபடியும் துவக்கி கோபாலபுரத்துக்கு கோடி தூக்குவார்கள். ஏன் என்றால் தோற்றவரை ஜெயிக்க வைத்தவர் முக; கப்பல் வழி துறையை கொடுத்து வாசனை வெயிட் போட வைத்தவர் இந்த மஞ்சள் துண்டு. ஒன்று மட்டும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்: இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடந்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டனர்....
jaykay - India,இந்தியா
2010-07-17 06:02:00 IST
ஹலோ ராகுல், தமிழகத்தில் காங்கிரஸ் தனியாகவோ, கூட்டணியாகவோ போட்டி இடுவதற்கு முன்னால், தமிழக மக்களுக்கு இலங்கை பிரச்சினையில் காங்கிரஸின் நிலைபாடு, அவர்களுடய வாள்வாதரதிர்க்கு என்ன செய்வது என்பதுகுறித்து விளக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் திமுகவை நம்புவது, தன் தலையில் மண்ணை வாரி போட்டுகொள்வதற்கு சமம். விலைவாசி உயர்வு, மின்சார தட்டுபாடு, நதிநீர் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். தமிழக மக்கள் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக நல்ல ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். தூற்றுகிரவர்களைபற்றி கவலைபடாமல் தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை, காமராஜர் ஆட்சியைபோல் திறமையான ஆட்சியை கொடுபதற்க்கு முயற்ச்சி செய்யவும். குறிப்பாக தற்போது உள்ள தலைவர்கள், சட்டமன்ற உறுபினர்களை தவிர்த்து, பொதுமக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கவும். உங்கள் முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்....
Narayanan - Chennai,இந்தியா
2010-07-17 05:22:35 IST
In my sincere opinion the Congress must contest independently . This party must prove/show their strength . Then only the other local parties know their fate. Therefore Congress must contest independently....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-17 04:27:48 IST
மஞ்சள் துண்டு கோமானுக்கு தூக்கம் கெட்டு போச்சு. இனிமேல் அவருக்கு தூக்கமே இல்லை. அய்யா ராகுல் காந்தி அவர்களே, ஒன்னு தனியாக மூன்றாம் அணி அமைத்து போட்டியிடுங்கள் இல்லை அதிமுகவுடன் கூட்டணி சேருங்கள், தயவு செய்து திமுகவுடனான கூட்டணியை முறித்துவிடுங்கள், இல்லை உங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிடுவார்கள். உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன்....
John - Roma,இந்தியா
2010-07-17 03:59:52 IST
வெரி குட் ராகுல்; முதலில் விஜயகாந்தை சந்திக்க ஏற்பாடு செயுங்கள். இரண்டு கம்யூனிஸ்டுகளும் வரும். ஒரு MP சீட் கொடுத்தால் PMK வரும்; வாசனை சரி கட்டி சிதம்பரத்தை CM என அடையாளம் காட்டுங்கள். தமிழ் நாட்டுக்கு மாற்றம் கட்டாயம் தேவை. விஜயகாந்த் உங்கள் நேரத்துக்காக பொறுத்திருங்கள். மகர் அவர்களே எத்தனை ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தார். மக்களே மற்றம் மட்டுமே மாறாதது. மாத்தி யோசி....
Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-07-17 02:46:20 IST
TN Congress should stand alone & they can form "Kamarajar Rule",in next TN assembly election....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-17 00:14:43 IST
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தோளில் சவாரி சென்று ஆக வேண்டும் என்பது தான் தலைவிதி. இது ராகுலுக்கும் நன்கு தெரியும்.அவருடைய இந்த ஸ்டண்டுகள் எல்லாம் பா.ம.க. பாணியில் திமுகவை மிரட்டி அதிக இடங்களை பெற வேண்டும் என்பதற்காக தான்....

சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேரில்

இலங்கை முதலீட்டு சபையும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வடபகுதியில் மேற்கொள்ளவிருக்கும் முதலீட்டு அபிவிருத்தியில் பங்கேற்பதற்கென சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியுமுள்ளனர்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள பிரான்டெக்ஸ் மாஸ் ஹோல்டிங், டிமெக்ஸ் கார்மன்ட்ஸ் ஒமேகா லைன் ஓரிக் அப்பிரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமுகமாக வருகை தந்தவர்களாவர். இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜெயம்பதி பண்டாரநாயக்கா தலைமையில் வருகை தந்த மேற்படி முதலீட்டாளர்கள் இன்று காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். முதலீடுகள் மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமாக அச்சுவேலி மேற்கு பிரதேசம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேரடியாகவே அங்கு சென்று அப்பிரதேசத்தைப் பார்வையிட்ட முதலீட்டாளர்கள் தமது தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமாக அடையாளம் கண்டனர்.

மேலும் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் மோகன்ராஸ் இலங்கை மின்சார சபை வடபிராந்திய அத்தியட்சகர் முத்துரட்ணானந்தசிவம் வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ். பிரதம பொறியியலாளர் சுதாகரன் வீதி அபிவிருத்தி திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாலகிருஷ்ணன் வலி.கிழக்கு காணி அதிகாரி என். நமசிவாயம் நீர் வழங்கல் அதிகார சபை மாவட்ட பொறியியலாளர் கே.செல்வகுமார் ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

மேற்படி அரச உயரதிகாரிகளினால் முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய நீர் வழங்கல் மின்சார விநியோகம் காணி வழங்கீடு உட்பட அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில் அது குறித்து தமது திருப்தியை வெளியிட்ட முதலீட்டாளர்கள் விரைவிலேயே தாம் முதலீடுகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரியப்படுத்தினார்கள். மேற்படி ஐந்து சர்வதேச நிறுவனங்களும் தமது முதலீட்டு நடவடிக்கைகளுக்கு அறுபத்துஐந்து ஏக்கர் நிலத்தினை கோரியுள்ள நிலையில் இன்றையதினம் முதற்கட்டமாக இருபத்து ஐந்து ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ். செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபையின் யாழ். கிளைக்காரியாலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை முதலீட்டுச் சபையினர்  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்குகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை ஆரம்பிக்க வருகை தந்துள்ள சர்வதேச முதலீட்டாளர்களை வரவேற்றதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்துதலில் வடபகுதியில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால யுத்தத்தினால் அழிந்து போயுள்ள வடபிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதில் சர்வதேச முதலீட்டாளர்கள் பிரதான பங்கை வகிக்கவுள்ளதாகத் தெரிவித்ததுடன் பெருமளவு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினையும் இம்முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்வின் இறுதியில் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜெயம்பதி பண்டாரநாயக்கா நன்றி தெரிவித்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

சென்னை: தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, இலங்கையில் உண்மை நிலையை அறிய சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக நேற்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த மாதத்தில் இலங்கை பிரதமர் வருகை தந்தபோது அவருடன் விவாதங்களோடு, அண்மையில் வருகைபுரிந்த இலங்கை நாடாளுமன்றத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினரின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளேன்.

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு உறுதியாக மேற்கொள்ளும்.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்வதன்மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பான வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதில் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த மறுவாழ்வுப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதும், மேலும் அங்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளில் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் தொடர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.

இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசியல் தீர்வு தொடர்பான முயற்சியில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான நடைமுறைகளில் தங்களுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இன்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் போர் முடிந்து முள் வேலி முகாம்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் பரிதவித்து வந்த போது தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு இலங்கை சென்று அங்குள்ள நிலையைக் கண்டு வந்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் ஒரு சிறப்புத் தூதரை அனுப்புமாறு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே மீண்டும் தமிழகத்திலிருந்து ஏதேனும் ஒரு குழு இலங்கை செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பதிவு செய்தவர்: அப்பாடா
பதிவு செய்தது: 17 Jul 2010 6:59 pm
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிட்டது.. கலைஞர் கருணாநிதி புகழ் வாழ்க. பிரபாகரனால் கூட கண்டு கொள்ள முடியாத பிரச்சினைக்கு தமிழ் நாட்டு தங்கத்தலைவன் தீர்வினை பெற்றுக்கொடுத்துவிட்டான். இனிமேல் ஈழத்தமிழர் இங்கு வந்து ஓலம் இடுவதை நிறுத்தலாம். இனி கலைஞ்சரை வசைபாடுவதை நிறுத்தி தமிழ் நாட்டு பிரச்சினையில் தமிழ் நாட்டு தலைவனை ஈடுபடத்தி தமிழ்நாட்டினை முன்னேற்றும் நடவடிக்கையினை கலைஞர் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

பதிவு செய்தவர்: நளவன் கிள்ளி
பதிவு செய்தது: 17 Jul 2010 6:51 pm
T R பாலு தலைமயிர், எருமாவளவன் எல்லாம் போயி நடக்காத விஷயம் ... சிறப்புத் தூதர் போனா நடந்திடுமா... அடடடா .. மறந்துட்டேன் ... இது காலத்தை கடத்தி , தமிழக தேர்தலில் ஜெயிக்கும் நகர்வு.. ஓகே... ஓகே...ஓகே...

1 கோடியில் நடந்த யாகத்தால் ரெட்டிகளுக்குப் பிரச்சினை தீர்ந்தது- புரோகிதர்

குற்றாலத்தில் நடந்த யாகத்தால்தான் ரெட்டி சகோதரர்களை நெருங்கிய பெரும் பிரச்சினை அகன்றது என்று கூறியுள்ளார் குற்றாலத்தில் நடந்த யாகத்திற்குத் தலைமை தாங்கிய பெல்லாரி புரோகிதர் வேதாந்தி பான்டே.

தங்களை சுற்றிச் சூழ்ந்துள்ள பெரும் பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்காக குற்றாலத்தில் உள்ள மெளன சாமி மடத்தில் கடந்த 10 நாட்களாக ரெட்டி சகோதரர்கள் சார்பில் சிறப்பு யாகம் நடந்து வந்தது.

இந்த யாகத்தின் இறுதிநாளின்போது அமைச்சர்களான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் குடும்பத்துடன் வருவார்கள் என கூறப்பட்டது. இன்று காலை அவர்கள் குற்றாலம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானதால் குற்றாலத்தில் பரபரப்பு நிலவியது.

யாகம் நடந்து வரும் பகுதியில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. போலீஸார் உள்பட பலரும் குவிந்துவிட்டனர். ஆனால் ரெட்டி சகோதரர்கள் யாரும் வரவில்லை.

சகோதரர்கள் கருணாக ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி இருவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஹெலிகாப்டர்களில் கிளம்பவிருந்தனர். தென்காசியில் உள்ள ஐசி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இறங்க முடிவு செய்திருந்தனர். முன் அனுமதி இல்லாமல் இவ்வாறு வரக் கூடாது, மீறி வந்தால் கைது செய்வோம் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தென்காசி வருவதை ரத்து செய்தனர் ரெட்டி சகோதரர்கள். இந்த நிலையில் ராஜாபாளையத்தைச் சேர்ந்த குவைத் ராஜா என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் ரெட்டி சகோதரர்களின் ஹெலிகாப்டர் இறங்கிக் கொள்ள அனுமதி வழங்கினார். இதையடுத்து அங்கு வந்திறங்கி கார் மூலம் குற்றாலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லட்சுமி அருணா ரெட்டி உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் மதுரைக்கு தங்களது சொந்த ஹெலிகாப்டரில் வந்தனர். ஆனால் அங்கிருந்து ராஜபாளையம் செல்வதற்கு வானிலை சரியில்லாத காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.

மேலும், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இன்றுமாலை குடும்ப விழா ஒன்றில் பங்கேற்க வேண்டியுள்ளதால் குற்றாலம் வந்து விட்டு திரும்பிச்செல்ல தாமதமாகி விடும் என்பதாலும் ரெட்டி சகோதரர்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களாகவே ரெட்டி சகோதரர்களுக்காக யாகம் நடத்தப்பட்டுவந்தது. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையும் மூன்று தடவை யாகம் நடைபெற்றது. இந்தப் பணியில் 40 புரோகிதர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று பிற்பகலுடன் யாகம் முடிவடைந்தது.

யாகத்திற்கு பெல்லாரியைச் சேர்ந்த புரோகிதர் வேதாந்தி பான்டே என்பவர் தலைமை தாங்கி நடத்தினார். யாகம் நடந்த இத்தனை நாட்களும் இவர் எதற்காக யாகம் நடக்கிறது என்பதை தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்தார். ரெட்டிகளுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறி வந்தார்.

ஆனால் இந்த யாகத்தால்தான் ரெட்டிகளை நெருங்கிய பிரச்சினை தீர்ந்தது என்று கூறியுள்ளார். யாகத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த யாகத்தின் பலனை ரெட்டி சகோதரர்கள் எட்டி விட்டனர். அவர்களை நெருங்கிய பிரச்சினை போய் விட்டது. இது யாகத்தின் பலனாகும் என்றார்.

ரூ. 1 கோடி செலவு

கடந்த 10 நாட்களாக நடந்து வந்த யாகத்திற்கு ரூ. 1 கோடி செலவாகியுள்ளதாம். தினசரி 50 பேருக்கு அன்னதானமும் செய்து வந்துள்ளனர்.
பதிவு செய்தவர்: ஓல்ட் மாங்க்
பதிவு செய்தது: 17 Jul 2010 5:44 pm
இந்தியாவோட கேடு கெட்ட நிலைமைக்கு உண்மையான காரணம் இந்த புரோகிதர்கள் தான். பொதுவாக பிராமணர்களை குற்றம் சாட்டுவதை விட, இந்த புரோகிதர்கள் தான் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். மன்னர்களுக்கும் புரோகிதர்களுக்கும் நடந்த 'பல' போட்டியில் இந்த புரோகிதர்கள் தான் பல சடங்குகளை சுயநல லாபத்திற்காக கட்டாயப் படுத்தி சமுதாயத்தில் தினித்தனர். தீண்டாமையை புகுத்தியவர்களும் இவர்களே. கீழ் ஜாதியினர் இவர்களோட சாப்பட்டு தட்டைப் பார்த்தாலே அதை இவர்கள் சாப்பிடமாட்டார்களாம் ஒரு காலத்தில்.

பதிவு செய்தவர்: வாஜ்பாய்
பதிவு செய்தது: 17 Jul 2010 1:57 pm
பிஜேபி மேல் உள்ள எனது மதிப்பு, இவர்களை போல் திருடர்களால் "ச்சை" என்று ஆகிவிட்டது.

கொழும்பில் வீட்டு பணிப்பெண் மர்ம மரணம்: பிரபா கணேசன் பா.உ

பதுளை மாவட்டம், நமுனுகலை தோட்டம், கீழ்பிரிவை சேர்ந்த வெள்ளைச்சாமி சீதாராணி என்ற 44 வயதுடைய பெண் கொழும்பு புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரியும் வேளையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரும், அவரது மாமியாரும் கைதுசெய்யப்பட்டு, புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கண்காணித்து வருகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீட்டில் கடந்த ஆறுமாத காலமாக இப்பெண் பணிபுரிந்த வேளையிலே இக்கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பிலே எஜமானர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இரத்த பெருக்கினால் மரணம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான ஷாகுல் ஹமீத் என்ற வீட்டு உரிமையாளரையும், அவரது மாமியாரான நோனா நஜீமா என்பவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேல் விசாரணைகள் தொடர்பிலே கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா ககேணசன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் ஆகியோர் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நேரடியாக கண்காணித்து வருகின்றார்கள்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்சமயம் கொழும்பு மயானச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் செக்ஸ் டார்ச்சர்: நடிகை திவ்யா வேதனை

குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம்  உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை திவ்யா.    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது காதல் டூ கல்யாணம் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு அடிக்கடி ஒரு மர்ம நபர் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.  நள்ளிரவில் செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாகவும் பேசியுள்ளார்.
இது குறித்து நடிகை திவ்யா அவரது டிவிட்டர் பிளாக்கில் வேதனையை தெரிவித்துள்ளார்.
‘’மர்ம நபர் ஒருவர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிலிருந்து கண்ட நேரத்தில் அடிக்கடி பேசி தொல்லை தருகிறார்.

நள்ளிரவு நேரங்களில் அழைத்து பேசுவதுடன்,  முட்டாள்தனமான ஆபாச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி தொந்தரவு செய்கிறார்.
அந்த நபரை தொடர்பு கொண்டு அவரது தொல்லையை தவிர்க்க வழி செய்ய வேண்டும்.  இது குறித்து போலீஸிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன்’’  என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே நடிகர்,நடிகைகள் தங்கள் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கும் நபர்களிடம் மட்டுமே பேசுவது வழக்கம்.  தெரியாத எண்கள் வரும் போது பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர்.

திவ்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே எல்லா அழைப்புகளுக்கும் பேசுவது உண்டு.   அதனால்தான் அவர் இப்படி ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 2 லட்சம்

போரில் இடம்பெயர்ந்த வடபகுதி மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒபந்தத்தை இந்திய அரசாங்கம் மஹாராஸ்டிரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச் சபையிடம் வழங்கியுள்ளது. அண்மையில் இந்த நிர்மாணப்பணியக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது உறுதியளிக்கப்பட்டபடி இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன. உத்தேச வீடமைப்புத் திட்டத்திற்கு அமைய ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு இந்தியா 2 லட்சம் ரூபாவை செலவிடவுள்ளது.
இதனடிப்படையில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க ஆயிரம் கோடி ரூபாவை இந்திய அரசாங்கம் செலவிடவுள்ளது. இந்த வீடமைப்பு நிர்மாணப்பணிகள் தொடர்பாக ஆராய மஹாராஸ்ரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச் சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்

ஐ.தே. கட்சிக்குள் தனித் தமிழ் பிரிவு!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனியான தமிழ் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் , முஸ்லிம் சிறுபான்மை மக்களின் நன்மைகளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தமிழ்ப் பிரதிநிதிகள் இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்திருந்தனர். கட்சியின் பொருளாளர் எம். சுவாமிநாதன் எம்பி இந்தப் பிரிவின் தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் தெரிய வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பிரிவு என்ற ஒன்றை உருவாக்கும் முனைப்புக்கள் வெற்றிகரமான நிலையில் உள்ளன என்று மேல் மாகாணசபையின் ஐ.தே.க உறுப்பினர் சீ.வை. ராம் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அலகு உருவாக்கப்பட்டுள்ளது என்றும்அவர் குறிப்பிட்டார்.

சீமான்,எனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும்

Latest update: 
இன்று காலை சென்னை சிட்டி போலீசார், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சீமானிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான ஆணையின் நகலையும் சீமானிடம் வழங்கினர்.
கடந்த வருடம் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

என்னை பாழடைந்த சிறையில் அடைத்துள்ளனர்: சீமான்
தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படையை கண்டித்து சீமான் பேசிய பேச்சு வன்முறையை தூண்டிவதாக உள்ளது என்று போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்
சீமான் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தார்.

இன்று மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார்.   
இந்நிலையில் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.  

அம்மனுவில்,   ‘’பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழ் அடைந்த தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர்.
இது சட்ட விரோதமான செயல்.  எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். 

மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்’’ என கூறியுள்ளார்.
நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகி,  சீமான் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை என்று கூறினார்.இதைக்கேட்ட நீதிபதிகள்,  அரசு இது குறித்த பதிலை வரும் செவ்வாய்க் கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடுகையில், ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசுகையில் இந்திய ராணுவம் இலங்கைக்கு அமைதிப் படையாக சென்று தமிழ் பெண்களை கொடுமை செய்தது என்றும், நடக்காத ஒன்றை நடந்ததாக சீமான் கூறியுள்ளார் என போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை சாக்காக வைத்து சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்றும், இதே நிலை நீடித்தால் இந்தியாவிற்கு படிக்க வரும் ஒரு சிங்கள மாணவன் கூட உயிரோடு நாடு திரும்ப மாட்டான் என்றும் சீமான் பேசியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு பேச்சின் மூலம் உடனடியாக வன்முறை தூண்டப்பட்டால் மட்டுமே அது வன்முறையை தூண்டிய பேச்சாக அமையும்.

ஆனால், சீமானின் ஆர்ப்பாட்டமும் அவரது பேச்சும் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. சீமானின் கட்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேருவதை தாங்கி கொள்ள முடியாமல் அரசியல்ரீதியாக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்றார்.

இதையடுத்து அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவில், சீமானின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி வாதாடுகையி்ல்,

சீமான் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்தபோது 19 நிபந்தனைகள் விதித்தனர். இந்த நிபந்தனைகளில் ஒன்றைக் கூட நாம் தமிழர் கட்சியினர் கடைபிடிக்கவில்லை. தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தையும், விடுதலைப் புலிகளின் கொடியையும் ஏந்தி வந்தனர்.

கொடுக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதலாக 4 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் இனி தமிழக ரத்த உறவுகளை சிங்களன் தொட்டால் சென்னையில் படிக்கும் சிங்கள மாணவன் எவனும் உயிரோடு திரும்பமாட்டான். சென்னையிலும், திருப்பூரிலும் எத்தனை சிங்களர்கள் உள்ளனர்? என்ற கணக்கு எங்களிடம் உள்ளது என்று சீமான் பேசியிருக்கிறார்.

எனவே ஏற்கனவே சிங்களர்களை தாக்கக் கூடிய பணியின் முதற்கட்டத்தை அவர் தொடங்கி இருப்பது தெரிய வந்தது.
எனவே சீமானுக்கு ஜாமீன் தரவே கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ்,
பேச்சுரிமைக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அனைத்து சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. ஆனாலும் சில கட்டுப்பாடுகளும் அதே சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன. சீமானின் பேச்சு 2 இடங்களில் பிறந்த சமூகத்தினரிடையே (சிங்களர்- தமிழர்) நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் வன்முறையை தூண்டுவதாகவும் உள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் சென்னையில் வெளிநாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கிப் படிக்கும் நிலையில், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அவரது பேச்சு உள்ளது. எனவே சீமானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

வல்லை நெசவுசாலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை!

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினூடாக மீண்டும் வல்லை நெசவுசாலை இயங்க வைக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது என முன்னாள் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தில்லை நடராஜா தெரிவித்துள்ளார்.

வல்லை நெசவுசாலை புனரமைப்பு பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த தொழிற்சாலைகளினூடாக பல நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றிருந்தனர். ஆனால் இன்று இந்த தொழிற்சாலை மிக நீண்ட காலமாக இயங்காத நிலையிலுள்ளமை மிகுந்த வேதனையளிக்கின்றது.

இந்த நிலையில் இந்த நெசவுசாலையை மீண்டும் இயங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஷீரடி சாய்பாபா கோயிலில் ஸ்டாலின் மனைவி: எளிமைக்கு பக்தர்கள் பாராட்டு

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற அவர் பாபாவின் அரிய அற்புத விஷயங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். 50 ஆண்டுகள் பழமையானது மயிலை ஷீரடி சாய்பாபா கோயில். பாபாவின் பக்தரான நரசிங்கசுவாமிகள் இந்த கோயிலை நிர்வகித்தார்.

நாடி வரும் பக்தர்கள் : இந்த கோயிலின் தனிச்சிறப்பு என்னவெனில் மற்ற கோயில்கள் போல் அல்லாமல் பாபாவின் அருகில் சென்று வழிபட முடியும். பளிங்கு சிலையாக உருவம் கொண்ட இந்த சுவாமிக்கு பட்டாடைகள் போர்த்தி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை பெரும் அளவில் இருக்கும். இங்கு கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணி நடந்தது. புதிய கோபுரம் கம்பீரமாக எழுப்பி கும்பாபிஷேகம் விழா 5 நாட்களாக கொண்டாடப்பட்டது. 5ம் நாளில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி யாகசாலை பூஜை, சிறப்பு பஜனை ஆகியன நடந்தன. மாலையில் ஷீரடி சாய்பாபாவின் வீதி உலா நடந்தது.

துணை முதல்வர் ஸ்டாலின் மனைவியின் எளிமை : இந்த இனிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். இவர் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை ஆவார். கும்பாபிஷேகம் முடிந்து சீரடி சாய்பாபாவுக்கு நடந்த அபிஷேகத்தை நேரில் நின்று பார்த்தார். ஒரு மணி நேரம் காத்திருந்து, பிரசாதங்களை பக்தர்களோடு , பக்தராக பெற்றுக்கொண்டார். துணை முதல்வர் மனைவி என்பதை காட்டிக்கொள்ளவில்லை.

பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லை. இதனால் ஏனைய பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். யாருக்கும் இடையூறும் இல்லாமல் பொறுமையாக பக்தர்களோடு நின்று வணங்கியதை அங்கு வந்திருந்த பக்தர்கள் கனிவுடன் பார்த்தனர். துணை முதல்வர் மனைவி துர்காவின் எளிமையை அங்கு இருந்த பக்தர்கள் வியந்து பாராட்டினர். சாய்பாபாவின் அற்புதங்களை பெண் ஒருவர் கூறுவதை, ஆர்வமுடன் கேட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

உரிய பலன் உண்டு : இந்த கோயிலை பொறுத்தவரை சாதி, மதம் பாராமல் எல்லா பிரமுகர்களும் இங்கு வந்து செல்வதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார். இங்கு நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு உரிய பலன் கிடைப்பதை தாம் கண்கூடாக பார்த்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரமேஷ் - chennai,இந்தியா
2010-07-16 20:34:53 IST
ஒரு துணை முதல்வரின் மனைவியின் எளிமையைப் பற்றி செய்தி வெளியிட்டு இருப்பதை பாராட்ட மனமில்லாதவர்கள் தினமலர் ஜால்ரா என்கிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வரின் உ.பி. சகோதரி பற்றிய தகவல்கள் தேனாக இனிக்கும். பகுத்தறிவு என்பது மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது, அது இங்கே வெளிப்பட்டிருக்கிறது. அரைகுறையாக விஷயங்களைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்த செய்தி வயிற்றெரிச்சலை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் என்ன?...
sundar - palay,இந்தியா
2010-07-16 20:32:56 IST
ஏன் ivvalavu முக்கியத்துவம்?... 
இளச்சவாயன் - gujarat,இந்தியா
2010-07-16 17:55:54 IST
அட போங்கைய, இவன்னுங்க திராவிட மக்கள் இழுன்னு சொல்லி கோயில் க்கு போவானுங்க. அப்போ நம்ள இங்கிலீஷ் ம்,ஹிந்தி யும் படிக்கச் உடல (கருணாநிதி,ராமதாஸ் இவங்க எல்லாம் நம்மள நல்லா முட்டாள் அக்குராங்க.)நாமலும் அறிவு இல்லாம அவனுக சொல்லுறத கேக்குறோம்.ஆனால் நான் ஒரு திராவிடன்.... 
K Raghu - Dehradun,இந்தியா
2010-07-16 17:00:31 IST
வீட்டுக்கு ஒன்று நாட்டுக்கு ஒன்று. பேரனின் கம்பெனியின் பெயர் ரெட் ஜயன்ட் (ஆங்கிலத்தில்). மருமகள் சாய்பாபா பக்தை. உபதேசிப்பதோ நாஸ்திகம், எங்கும் தமிழ் அண்ட் எதிலும் தமிழ். மக்களே விழித்தெழுங்கள். தட்டி கேளுங்கள்....
RAAJIV - chennai,இந்தியா
2010-07-16 16:54:31 IST
என்ன கொடும சார் ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் அவன் கடமையை கடமையே என்று செய்வான்...
ச.பூவராஹன் - Chennai,இந்தியா
2010-07-16 16:54:13 IST
அந்த குடும்பமே ஒரு கொள்ளைகார குடும்பம்! இதுல்ல அந்த அம்மாவுக்கு தனி பெட்டி செய்தி வேற! மதுரை குடும்பமும் தான் தீவிர பக்தர்கள் என்பது நாடறிந்த விஷயம்! ஸ்டாலினும்தான் எதோ மாதா சர்ச்சுக்கு போனாராம்! மொதல்ல திரு மு க வோட குடும்பம் அவரு பேச்சை கேக்கட்டம்! அப்புறம் நாம கேப்போம்! ஆனா திருமதி ஸ்டாலின் அவர்கள் மிகுந்த நல்லவர் என்பதும், அவரின் புண்ணியமே அவரின் குடும்பத்தை காக்கிறது என்பதும் நாம் அறிந்தததே! இதே ஸ்டாலின் ஸ்ரீரங்க கோபுரத்தை தகர்க்க வேண்டும் என்று முழங்கியதையும், அவரின் தற்போதய நிகழ்வையும் பார்க்கும் போது, ஓட்டிற்காக என்ன வேண்டுமானாலும் பேசும் அவர் தந்தையின் குணமே தெரிகிறது! அனால் அண்ணன் அஞ்சா நெஞ்சரின் அடாவடிக்கு முன்னால் தளபதி பாவம் தான்! மஞ்சத்துண்டு ஆசியாவின் 5 பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று என்பதும்! அந்த பணம் எல்லாம் நம்முடையது என்பதையும் நாம் மறக்க கூடாது! மறக்க முடியாது!... 
சிவா - Chennai,இந்தியா
2010-07-16 15:57:15 IST
எங்கபா போச்சு உங்க திராவிட கொள்கை? ஊருக்கு தன உபதேசமா? அது சரி, தினமலர் கொள்கை மாறிகிட்டே வர மாதிரி இருக்கே....
SOUNDAR - singapore,இந்தியா
2010-07-16 15:39:27 IST
தினமலர் இப்போ தி.மு.க. பேப்பர்...
ச.மணி - vallanadu,இந்தியா
2010-07-16 14:34:19 IST
இதுதான் உண்மை. மாமனாரின் கொள்கை மருமகளுக்கே பிடிக்கலை. மக்களுக்கு பிடிக்குமா என்ன. அதான் ஏற்கனவே முனா கனா செம்மொழி மாநாட்டில் சொல்லி விட்டாரே- தமிழை நான் ஆயுதமா எடுத்ததால் தான் எனக்கு வெற்றி கிடைச்சதுன்னு. அப்ப அவர் வெற்றிதான் அவருக்கு முக்கியம். மக்களோ, கொள்கையோ அல்ல. இதை ஸ்டாலின் நல்ல (உண்மையான தமிழ் பண்பாட்டை) புரிந்துகொண்டதால்தான் துர்காம்மா கோயில் வராங்க. திராவிடம் என்பது நாத்திகம் பேசுவது அல்ல....
வேலுமணி - coimbatore,இந்தியா
2010-07-16 14:29:52 IST
நானும் என் குடும்பத்தாரும் சாய் பாபா பக்தர்கள். எனவே, சாய் பாபாவோட ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும். என்றும் சாய்பாபா பக்தன் வேலுமணி, வேணி, வே.சாய் விக்னேஷ், வே.சத்யப்ரியதர்ஷினி....
பகுத்தறிவு பாசறை கருணாநிதி - GopalapuramCITColonyandotherplaces........,இந்தியா
2010-07-16 14:12:58 IST
என் உடன்பிறப்பே, நான் என்றும் பெரியாரின் கொள்கையில் அடி மாறாதவன் என்பதற்கு மற்றும் ஒரு சான்று இந்த செய்தி. என் இனமே, என் இதயமே நாம் எந்த வழியில் சென்றாலும் அதை நம் வீட்டு பெண்களின் மீது திணிக்கக்கூடாது என்ற சிந்தனையில் நான் மிகுந்த கவனத்துடன் இருப்பவன், அதே போல் தான் எனது தனயனும் இருக்கிறான். நாம் பகுத்தறிவு பாசறையாக இருந்தாலும் கடவுள் இல்லை என்றாலும், நம் அடுத்தவர்களது சுதந்திரத்தில் தலை இடுவது தவறு என்று பெரியாரும் அண்ணாவும் என்னிடம் சத்தியம் வாங்கிவுள்ளனர். ஆகையால் தான் நாங்கள் பெண்ணை அடிமையாக்காமல் அவர்களுக்கு இட ஒதுக்கீடும் சுதந்திரமும் சுயமாக எதையும் செய்யும் தைரியத்தையும் கொடுத்துள்ளோம். இதுக்கு மேல என்னை ஒன்றும் கேட்காதே உடன் பிறப்பே, நான் அழுதிருவேன்....
siva - Chennai,இந்தியா
2010-07-16 13:51:34 IST
தேவையற்ற ஜால்ரா நியூஸ்.....
மணி.வி - Chennai,இந்தியா
2010-07-16 13:51:03 IST
வீட்டுக்கே சாய் பாவை அழைத்து அருள் பெற்றவர்கள். ஏன் இன்று திருவாரூர் தேரோட்டமும் இந்த அம்மா முன்னிலையில்தான்!!திமுகவின் பகுத்தறிவு வேஷம் முடிந்து பக்தர் வேஷம் துவக்கம். நடு நடுவே (ஷீரடி போன்ற)மைனாரிட்டி வேஷம். ஆனால் வாய்மையில்லாமல் வெறும் வேஷம் போட்டவன் நன்கு வாழ்ந்ததாகச் சரித்திரம் உண்டா?... 
சாமி - covai,இந்தியா
2010-07-16 11:26:53 IST
திராவிட கொள்ளைகள் கொண்ட குடும்பம் என்று சொல்லிட்டு கோவில், குளம் என போய் சாமி கும்பிடறது கேவலமா தெரியலை. மக்களுக்கு முன் பேச்சு ரொம்ப பலம் தான். ஆனால் வீட்டுக்குள்ளே இருக்குறவங்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியலை. இவங்கெல்லாம் எங்கே போய் நாட்டை திருத்த போறாங்க. காலத்தின் கொடுமை. இவர்கள் வழி செல்லும் தொண்டர்கள் நிலை பெருங்கொடுமை. வாய்கிழிய பேசிட்டு வாசப்படியல நுழைஞ்ச உடனே பக்திபழமா மாறது எல்லாம் சகிக்க முடியாத ஒன்று. எதோ அரசியல் ஓடுது. ஏமாங்க அறியாமை மக்கள் இருக்கும் வரை ஒடுங்க. என்றும் தணியா இந்த நிலை. மனிதனின் அழிவில் மட்டுமே காட்டும் உண்மை நிலை....
anu - USA,இந்தியா
2010-07-16 11:22:40 IST
ஊருக்கு நாத்திக உபதேசம். வீட்டுக்கு என்னவோ

'டீலுக்கு' வருவாரா நயனதாரா?

சன் டிவியின் கேம் ஷோக்களிலேயே பிரமாண்டமானதாக பேசப்பட்ட டீலா நோ டீலா, டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டவில்லையாம். இதனால் அப்செட் ஆகியுள்ள தயாரிப்பாளர்கள் அதற்கு சினிமா நடிகைகள் மூலம் புது மெருகூட்ட களம் இறங்கியுள்ளனர்.

நடிகர் ரிஷி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் டீலா நோ டீலா. ரூ. 1 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான பணப் பெட்டிகள் போட்டியில் வைக்கப்படும். அதை தேர்வு செய்வது வெல்வது யார் என்பதுதான் போட்டி.

இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் அடடே சூப்பரப்பூ என்று ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்து வருகிறதாம். டிஆர்பி ரேட்டிங்தான் ஒரு டிவி நிகழ்ச்சியின் பிரபலத்தை நிர்ணயிப்பதாகும். அந்த அடிப்படையில் டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையாம்.

நமது நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா என்று கடுப்பாகிப் போன சேனல், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை அழைத்து எதையாவது செய்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டுமாறு கூறியுள்ளதாம்.இதையடுத்து தயாரிப்பாளரர்கள் பேசாமல் ஒரு நடிகையை வைத்து நிகழ்ச்சியை தேற்றினால் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக சில பிரபலமான நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்களை ஸாரி என்று கூறி விட்டனராம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் குழு, சேனல் கூப்பிட்டுமா வர மறுக்கிறீர்கள் என்று கோபத்தைக் காட்ட அந்த நடிகைகள் கண்டு கொள்ளவில்லையாம்.

இதையடுத்து மார்க்கெட் இழந்து டான்ஸ் ஆடிக் கொண்டுள்ள நயனதாராவை எப்படியாவது நிகழ்ச்சிக்கு இழுத்து வந்த விடும் நோக்கோடு அவரை அணுகவுள்ளனராம்.

சமீபத்தில்தான் தனது பிடிவாத பாலிசியை தளர்த்திக் கொண்டு விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார் நயனதாரா. எனவே இதை சாக்காக வைத்து அவரை டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு இழுக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.

டீலுக்கு ஒத்து வருவாரா நயனதாரா...?

குழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு 1 ஆண்டு ஜெயில்; புதிய சட்டம் வருகிறது

சிறுவர், சிறுமிகளில் பலர் பள்ளிகளில் மட்டுமின்றி வீடுகளிலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்துக்குள்ளாகிறார்கள். அப்படி பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகளை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் இயங்குகின்றன. தேசிய அளவில் ஹெல்ப் லைனும் உள்ளது. என்றாலும் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது நீடிக்கிறது.
 
சில இடங்களில் குழந்தைகளை பெற்றோர் மட்டுமின்றி மாற்றாந்தாய், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களும் அடித்து துன்புறுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள் சட்டம் 2009 என்ற பெயரில் அந்த சட்டத்துக்கான வரை முறைகள் உருவாக்கப்பட்டு விட்டன.
 
இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணதிரத் கூறுகையில், சிலர் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறி அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களை தண்டிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் பெறப்படும் என்றார்.
 
குழந்தைகளை துன்புறுத்து வதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
 
அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று வலுவான சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி தன்னை துன்புறுத்தும் பெற்றோருக்கு எதிராக, சிறுவர், சிறுமியர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்.
 
அதே பாணியில் இந்தியாவிலும் வர இருக்கும் சட்டத்தில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக அடிக்கும் பெற்றோர் மீது இந்திய குழந்தைகளும் வழக்குத் தொடர முடியும்.
 
பெற்றோர் மீது மட்டு மின்றி உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும் ஒரு குழந்தையால் வழக்குத் தொடர இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒடுக்க இந்த சட்டம் பயன் படுத்தப்படும்.
 
ராக்கிங் குற்ற நிகழ்வுகளுக்கு தண்டனை கொடுக்கும் அம்சமும் இந்த சட்டத்தில் வர உள்ளது.

வெள்ளி, 16 ஜூலை, 2010

24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு 1 கோடியே 58 லட்சம் பரிவுத்தொகை வழங்கினார் கலைஞர்

24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு 1 கோடியே 58 லட்சம் பரிவுத்தொகை வழங்கினார் கலைஞர்
24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு இன்று 1 கோடியே 58 லட்சம் பரிவுத்தொகை வழங்கினார் முதல்வர் கருணாநிதி.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

‘’தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச்சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட சான்றோர்களின் படைப்புகள் மக்கள்
அனைவரையும் சென்று அடைதல் வேண்டும் என்னும் சீரிய நோக்கத்துடன் சிறந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, 

அவர்கள் படைத்துள்ள நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின்
பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் மரபுரிமையர்க்குப் பரிவுத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சிறப்பாகவும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

இத்திட்டத்தின் படி 2006 ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் 87 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கி, 

அவர்களுடைய மரபுரிமையர்க்கு 5 கோடியே 70 லட்ச ரூபாயை பரிவுத்தொகையாக வழங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து 2010-2011 நிதிநிலை அறிக்கையில் மேலும் 22 தமிழ்ச்சான்றோர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என
அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ரசிகமணி, டி.கே.சிதம்பரநாத முதலியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என 23.6.2010 அன்று முதல்வர்
கருணாநிதி அறிவித்து ஆணையிட்டார்.

இவ்வாறு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தமிழறிஞர்களின் அருதனக்குட்டி அடிகளாரின் மரபுரிமையர் தவிர மற்ற 22
தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் அரசுக்கு உரிய சான்றாவணங்களை வழங்கியுள்ளனர்.

அவர்களுடன் 2009, 2010 ம்  ஆண்டில் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அப்பொழுது சான்றாவணம் 
அளிக்கப்படாமையால் பரிவுத்தொகை வழங்கப்படாமல் இருந்த  பேராசிரிய வையாபுரிப்பிள்ளை,  ஜே.ஆர்.ரங்கரஜு ஆகியோரின் மரபுரிமையர்களும் தற்போது சான்றாவணங்களை அளித்துள்ளனர்.

இந்த சான்றாவணங்களின் அடிப்படையில் படைப்புகள் நாடுடைமையாக்கப்பட்டுள்ள பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்,
பேராசிரிய அ.கிருஷ்ணமூர்த்தி, நெ.து.சுந்தரவடிவேலு, மயிலை சிவமுத்து,ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகிய 5 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்குத் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 50 லட்சம் ரூபாய்.

டாக்டர் எஸ்.எம்.கமால், பேராசிரியர் ர.சீனிவாசன், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், அ.திருமலை முத்துசாமி,  கவிஞர் தாராபாரதி,
சரோஜாராமமூர்த்தி  ஆகிய 6 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்குத்தலா 7லட்சம் வீதம் 42 லட்சம் ரூபாய்.

பா.ராமசாமி, காழி.சிவகண்ணுசாமி பிள்ளை ,  கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன், தஞ்சை ராமையாதாஸ்,அ.சீனிவாசன்
ஆகிய 5 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு தலா 6 லட்சம் ரூபாய் 30 லட்சம் ரூபாய்.

வெள்ளியங்காட்டான், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை ஆகிய 2 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்குத்தலா 3 லட்சம் ரூபாய் வீதம்
6 லட்சம்  ரூபாய் என 24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு இன்று மொத்தம் ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய்

பரிவுத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தார்.

தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதியை வாழ்த்தினர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.628 பேருக்கு ஆசிரியர் நியமனம் 554 பட்டதாரிகளை ஆங்கில

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்காக அடுத்த பாடசாலை தவணைக்கு முன்னர் 6.628 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.இதன்படி 554 பட்டதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நாளை மறுதினம் (18) நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக 8.200 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள 60 நிலையங்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும்.இதுதவிர 3.174 அழகியற் கலை ஆசிரியர்களை நியமிக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கேற்ப நியமிக்கப்படுவர்.
பட்டதாரிகளை அழகியற்கலை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் கோரப்படும். அது தொடர்பான விளம்பரங்கள் இன்றைய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 6க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.சகல கல்வியியல் கல்லூரிகளில் இருந்தும் வெளியான 2.900 ஆசிரியர்களுக்கும் அடுத்த தவணைக்கு முன்னர் நியமனம் வழங்க உள்ளோம். இந்த நியமனங்களின் மூலம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவு நீங்குமென கருதுகிறோம்.இதேவேளை ஆசிரியர்களின் இடமாற்றத்தையும் முறையாக மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

திருமாவளவன் தந்தை உடலுக்கு கலைஞர்அஞ்சலி

திருமாவளவன் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் விபரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தந்தை ச.ராமசாமி என்கிற தொல்காப்பியன்(76) நேற்று இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார் அவரது உடல் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக வேளச்சேரி தமிழநாடு வீட்டு வசதி வாரியக்குடியீருப்பு,இரண்டாம் சாலையில் உள்ள தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டது.

திருமாவளவனின் தந்தை மரணத்திற்கு முக்கியப்பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’தொல். திருமாவளவன் தந்தையார் ததொல்காப்பியன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நடுவண் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், கோ.க. வாசன், புதுவை நாராயணசாமி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு,

சென்னை மேயர் மா. சுப்பிரமணியன், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா,திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சார்பாக அவரது மகன் அன்புராஜ், பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், பா.ம.க. முன்னாள் நடுவண் அமைச்சர்கள் அன்புமணி, ஏ.கே. மூர்த்தி, இலங்கை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
திட்டக்குழுத் தலைவர் நாகநாதன், மருத்துவர் முகிலன், தமுமுக ஹைதர் அலி, பாக்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, மகேந்திரன், பா.ஜ.க. தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராசன், விவசாயŠதொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், தாவூத் மியான்கான், அகில இந்திய சமத்துவக் கட்சி என்.ஆர். தனபாலன், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்,

இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கோவைதம்பி, மூவேந்தர் முன்னணி பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, நாம் தமிழர் இயக்கம் பேராசிரியர் தீரன், பழ. நெடுமாறன் சார்பில் அவரது மகள் பூங்குழலி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ். அழகிரி, இராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சபா. இராஜேந்திரன், ஜெயக்குமார், நக்கீரன் கோபால்,கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அறிவுமதி,தணிகைச்செல்வன், மு.மேத்தா, கபிலன், காசிமுத்து மாணிக்கம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் காஜாமொய்தீன், கே.ராஜன், திரைப்பட இயக்குநர் புகழேந்தி, நடிகை குஷ்பு, சுந்தர் சி, கிறிஸ்துதாஸ் காந்தி, ஐ.ஏ.எஸ். முன்னாள் நடுவண் அமைச்சர் தலித் எழில்மலை, முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ், வீ.கே.டி. பாலன், வெள்ளையன் சார்பில் டைமண்ட் ராஜ், மோகன், கமலா திரையரங்க உரிமையாளர் வி.என். சிதம்பரம், தேனிசைச் செல்லப்பா உட்பட அரசியல், திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திரு. தொல்காப்பியன் அவர்களின் திருவுடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பொதுமக்களும், விடுதலைச் சிறுத்தைகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை (17Š07Š2010) காலை 11 மணியளவில் அங்கனூரில் தொல்காப்பியன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்பாவெல நால்வர் கொலை சந்தேகநபர் அடையாளம்..!

அனுராதபுரம் எப்பாவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டியும் கொத்தியும் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்களின் உறவினரான இவர் அதே ஊரைச் சேர்ந்தவர் எனவும் இவரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எப்பாவெல உதரெங்கம பகுதி வீடொன்றில் தாய், தந்தை மற்றும் அவர்களின் இரு பிள்ளைகள் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களின் சடலங்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டன. இவர்கள் நான்கு தினங்களுக்கு முன் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸில் முறையிட்டதையடுத்தே இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்களின் பிரேத பரிசோதனைகள் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றன. பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எச்.ஏ.தயாரத்ன (48) மாலினி ஜயசிங்க (42) அசினி உதேசிகா (17) கிரிசாந்த தில்ஹார (13) ஆகியோரே கொல்லப்பட்ட நால்வருமாவர். சந்தேகநபர் தலைமறைவாகியிருப்பதாகவும் விரைவில் கொலையாளியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த சிகிச்சையும் இலவசமm,்25 லட்சத்து 11 ஆயிரத்து 675 பேர்

சென்னை : தமிழக சத்ய சாய் நிறுவனம் சார்பில், சென்னை ராமச்சந்திரா பல்கலையில் நாளை, மருத்துவ சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கின்றனர்.

சத்ய சாய் நிறுவனம் சார்பில் புட்டபர்த்தியிலும், பெங்களூரு ஒய்ட்பீல்டிலும் பிரமாண்டமாக இரண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் நிறுவப்பட்டு, சேவையாற்றி வருகிறது. இங்கு முதலுதவி முதல், உயர்ரக அறுவை சிகிச்சை வரை அனைத்தும் இலவசம் தான். இம்மருத்துவமனைகள் மூலம், 25 லட்சத்து 11 ஆயிரத்து 675 பேர் பயன் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 509 பேருக்கு அறுவை சிகிச் சை செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சிகிச்சையும் இலவசம் என்பது எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பது குறித்தும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை உருவாக்கும் வகையிலும் தமிழக சத்ய சாய் நிறுவனம், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், டாக்டர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கை நாளை நடத்துகிறது.

இதுகுறித்து சத்ய சாய் நிறுவன மாநில தலைவர் ரமணி, கன்வீனர் டாக்டர் மோகன் கூறியதாவது: சத்ய சாய் நிறுவனம், உலகில் எல்லா நாடுகளிலும் உள்ளது. மனித சேவை தான் மகத்தான சேவை என்பதால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. சிகிச்சை, மருந்து என அனைத்தும் இலவசம். சத்ய சாய் அறக்கட்டளை நடத்தும் நான்கு பல்கலைக் கழகங்களிலும், எல்.கே.ஜி., முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இலவசம் தான். இரு மருத்துவமனைகள் தவிர, நாடு முழுவதும் 768 மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன; 527 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 109 கிராமங்கள் முற்றிலும் தத்தெடுக்கப்பட்டு, குடிநீர், சாலை, பள்ளிகள் என அனைத்து வசதிகளையும் சத்ய சாய் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் 90 மருத்துவமனைகளில், ஒன்று, இரண்டு இலவச பெட்களை ஒதுக்கித் தந்துள்ளனர். சில ஆண்டுகளில் ஆயிரம் இலவச பெட்கள் கிடைத்தால், இரண்டு, மூன்று மருத்துவமனைக்கு சமமாகும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. நவம்பர் 23ல் சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் வருகிறது. ஆண்டு முழுவதும் விழாவாக கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா ராமன் கூறியதாவது: சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிப்பது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை விளக்கவும், உதவும் மனப்பான்மையை உருவாக்கும் வகையிலும், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், நாளை சிறப்பு கருத்தரங்கை நடத்துகிறோம். இதை மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன் துவக்கி வைக்கிறார். சத்ய சாய் நிறுவன மருத்துவ இயக்குனர் சபையா, சத்ய சாய் நிறுவனத்தின் இந்திய தலைவர் சீனிவாசனும் விளக்கமளிக்கின்றனர். திருவேங்கடம், ரங்கபாஷ்யம், உஷா சீனிவாசன், குமாரி உள்ளிட்ட நிபுணர்களும் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை உருவாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு கிருஷ்ணா ராமன் கூறினார்.

faiz - colombo,இந்தியா
2010-07-16 10:27:41 IST
பிறருக்கு உதவிசெய்வதற்கு அதிகம் வாய்ப்பு பெற்றவர்கள் மருத்துவர்கள் .இறைவன் அவர்களுக்கு ஈறுலகிலும் அருள்புரியட்டும்....
சங்கர்.ப - தேனி,இந்தியா
2010-07-16 09:33:57 IST
இலவச மருத்துவம் பற்றிய விழுப்புணர்வு நிகழ்சிகளை மாவட்டம் தோறும் வழங்கினால் நன்றாக இருக்கும். ஒண்ணுமில்லாத அரசு காப்பிட்டுத் திட்டத்திற்கே விளம்பரங்களை வாரி இறைத்திருக்குறார்கள். இந்த மாதிரியான முற்றிலும் இலவச மருத்து வசதி பற்றி மேலோட்டமாக மக்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. சத்திய சாய் நிறுவன சேவைகள் வளர வாழ்த்துக்கள்...
நாகராஜன் - CHENNAI,இந்தியா
2010-07-16 08:19:00 IST
IT IS NICE...
சுந்தர் V A - Bangalore,இந்தியா
2010-07-16 01:27:07 IST

இலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் எச்சரிக்கையாக

இலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் எச்சரிக்கையாக வேண்டும் - பாக். பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகையான 'டோண்' தனது ஆசிரியர்  தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான, இலங்கையின் 'போர்க்குற்றங்கள்' எனும் தலைப்பில் வெளியான இத்தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு விசுவாசமான அமைச்சர் ஒருவர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த வருடம் முடிவுற்ற போரின்போது இலங்கை இராணுவத்தினரால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரினர்.
யுத்தம் முடிவுற்று, பொதுமக்களுக்கு எதிராக இராணுவத்தின் கொடுமைகள் குறித்த அறிக்கைகள் வெளியாகி ஒருவருடத்தின் பின்னரே ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் மூவர் கொண்ட குழுவொன்றை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த யுத்தம் இராணுவத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தமிழீழப் பிரச்சினையை அரசியல் ரீதியில்; மாத்திரம் தீர்க்க முடியாதென நம்பிய ஜனாதிபதியின் முழுமையான ஆதரவு அந்த யுத்தத்திற்கு இருந்தது.
அந்த யுத்தம் 27 வருடங்களாக நீடித்ததுடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி சில மாதங்களில் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போதான, சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான மீறல்கள் குறித்த பொறுப்புடைமை பொறிமுறை தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு மேற்படி குழு கோரப்பட்டுள்ளது.
ஆயுதப்போர்களின்  மாறிவரும் தன்மையானது  சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை வரையறுத்த ஜெனீவா ஒப்பந்தத்தின் விணைத்திறனை இல்லாமலாக்குவதாக உள்ளது. சீருடையிலுள்ள நபர்கள் இணக்கமில்லாதோருடனும் கிளர்ச்சியாளர்களுடனும் சண்டையிடும்போதுகூட இந்த ஒப்பந்தங்களின் கொள்கைகளை பின்பற்றவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
இலங்கை தொடர்பான தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும். பொதுமக்களிடமும் காயமடைந்த எதிரிச் சிப்பாய்கள் மீதும் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் எனும் கொள்கை புனிதமானதும் மதிக்கப்பட வேண்டியதுமாகும்."
www.tamil.daillymirror.lk

பாமக, மதிமுக அங்கீகாரம் ரத்தாகிறது-தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பாமக, மதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வருகிற 21ம் தேதிக்குள் இவர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைக்கு இவர்களின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

பாமக, மதிமுக தவிர ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அருணாச்சல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குத் தேவையான வாக்குகளை இவை பெறத் தவறியதால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதேபோல சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு ஏன் உங்களது கட்சிக்கான தேசியக் கட்சி அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்று கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.

தமிழக கட்சிகளைப் பொறுத்தமட்டில், புதுச்சேரியில் பாமகவுக்கு அங்கீகாரம் பறிபோகும் எனத் தெரிகிறது. அதேசமயம், தமிழகத்தில் அதன் அங்கீகாரம் தப்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மதிமுகவுக்கு முழுமையாக அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் ஓட்டு சதவீதம் தேர்தலுக்குத் தேர்தல் கரைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 16 Jul 2010 6:40 pm
தாழ்த்தபட்ட அன்புமணியின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும், தாழ்த்தபட்ட அன்புமணியின் முன்னேற்றத்திற்காக ஆறு மாதம் வேட்டியையும் மீத ஆறு மாதம் சேலையையும் துவைத்து பாடுபடும் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி ராமதாசு அய்யா அவர்கள் உள்ளவரை பாமகா வை யாராலும் அசைக்க இயலாது.


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 16 Jul 2010 6:22 pm
இந்த மரம் வெட்டி நாய்களை அன்றே ------- இருந்தால் தமிழ்நாடு உருபட்டிருக்கும்

மட்டக்களப்பு கைதிகளுக்கு நூலகமும்,தகவல் தொழில் நுட்ப பிரிவும் திறந்து வைக்கப்பட்டது!

முதன் முறையாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் தகவல் தொழில் நுட்ப அறிவையும், வாசிப்புத்திறனையும் அதிகரிக்க இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.வேல்ட் விசன் நிறுவனம் வழங்கிய கணணிகள், மற்றும் நூல்களைக் கொண்டு இந்நிலையம் திறக்கப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்தார்.

வேல்ட் விசன் நிறுவன மாவட்ட முகாமையாளர் எஸ்.பிரேமச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

தமிழகப் பெண்களிடம் பலாத்காரம்-2 மலையாளிகள் கைது

செங்கோட்டை அருகேயுள்ள கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சென்ற தமிழக சுற்றுலா பயணிகளை பலாத்காரம் செய்த 2 பேரை கேரள போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கோட்டை அருகேயுள்ள கேரள பகுதி அச்சன்கோவில். இங்குள்ள கும்பாவுருட்டி அருவி, மணலாறு அருவி, இந்த பகுதி சுற்றுலா தல பகுதியாகும். இப்பகுதி முழுக்க முழுக்க கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்தந்த பகுதிகளை சேர்ந்த 10 பேர் கொண்ட வனக்குழுவினர் இங்கு பணியாற்றுவர். இப்பகுதிக்கு சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அக்குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் இருவரின் ஆடையை அகற்றி நிர்வணமாக ஓட செய்து ரசித்தும், பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த காட்சி அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பிரபலமான இணைய தளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியானது. தமிழக சுற்றுலா பயணிகளுக்கு நடந்த இக்கொடூர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை உருவாக்கி கேரள சட்டமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு தனி்ப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து இரு நாட்களாக வனத்துறை, காவல் துறையினர் இணைந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் அச்சன்கோவில் கும்பாவுருட்டி, மற்றும் மணலாறு பகுதிகளில் வனக்குழுவில் பணியாற்றிய 2 நபர்களை குழத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில் சம்பவங்கள் நடந்தது உண்மை, 3 ஆண்கள் சேர்ந்து இந்த பெண்களை பலாத்காரம் செய்ததும், நிர்வணமாக ஓட வி்ட்டதையும் அந்த இருவரும் ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும் ஒரு நபரின் செல்போனில் படம் பிடித்ததும், பிடித்த பகுதி மணலாறு அருவி பகுதி என்றும் கூறியுள்ளனர்.

வீடியோ எடுத்த நபரின் கேமரா செல் தொலைந்து விட்டதாகவும் அதில் இருநதுதான் யாரோ இணைய தளத்தில் வீடியோ காட்சிகளை பரப்பி விட்டதையும் இதுபோல் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து அச்சன்கோவிலை சேர்ந்த அந்த இரு நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.