சனி, 27 பிப்ரவரி, 2016

கூனி குறுகி கும்பிடு போட்டால் குபேரன் ஆகலாம்...தியாக தீபங்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணில் பட்டு, 'சீட்' கிடைத்துவிடாதா என ஏங்கும், அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், அவர் செல்லும் வழிநெடுக காத்து கிடக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதா செல்லும் பாதையில் நின்று, அவரை கும்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது, பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும், ஜெயலலிதாவை கும்பிட, நாள் கணக்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.மேற்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், வாரத்தில், நான்கு நாட்கள் சென்னையில் தங்குகின்றனர். இவர்கள் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.  கூலிப்படை வைத்துதான் பணம் செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை, குனியும் படை என்று ஒன்றை திரட்டி வைத்து கூட பணம் சம்பாதிக்கலாம் போல இருக்கே..

இளங்கோவன் எச்சரிக்கை: விவசாயத்துக்கு வருமான வரி விதித்தால் பெரும் புரட்சி வெடிக்கும்

இந்தியாவிலுள்ள விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கிற வகையில் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்க முனையுமேயானால், அதை முறியடிக்கிற வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''நேற்று வெளியிடப்பட்ட பாஜகவின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பாஜக ஆட்சியில் பலமுனைகளில் பல்வேறுவிதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயத்திற்கு வருமான வரி என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும்.

சிறுமிகளுக்கு கதற கதற அதிமுக பச்சை....அமைச்சரே அரங்கேற்றிய கொடுமை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பால் குடம், யாகம், ரத்ததானம் செய்த ரத்தத்தின் ரத்தங்கள், சென்னை வேளச்சேரியில் சிறுமி ஒருவர் கதற கதற பச்சை குத்தியுள்ளனர். அமைச்சர் முன்னிலையில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஒருபக்கம் அன்னதானங்கள் நடந்து கொண்டிருக்க, கடந்த 23ம் தேதி வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விடியோவை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை அதனால் அதை பதிவேற்றம் செய்யவில்லை சிறுவர் பாதுகாப்பு சட்டம் என்ன செய்கிறது?

சத்தியபாமா MP கணவனை கொல்ல முயற்சி? அதிமுக பெண் எம்பிக்கு எதிராக கணவன் புகார்

திருப்பூர் அதிமுக பெண் எம்.பி. சத்தியபாமா.  இவரது கணவர் வாசு.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் வசிக்கும் சத்தியபாமா கடந்த எம்.பி. தேர்தலில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதுதான் கோபிசெட்டிபாளையைம் சட்டமன்ற தொகுதி.   சத்தியபாமாவுக்கும் அவரது வாசுவுக்கும் கடந்த 6,7 வாரங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்துள்ளது.  இதனால் கணவன் - மனைவி இருவரும் தனித்தனியாக வசிக்கிறார்கள்.எம்.பி. சத்தியபாமா தனது பொருளாதாரத்தை முழுவதும் சுரண்டிவிட்டதாகவும்,  தன்னால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, கட்சியின் மேலிடம் வரை செல்வாக்கை பெற்றுகொடுத்ததன் விளைவு, எம்.பியாகும் வரை வளரமுடிந்தது.

உபியில் சுப்பிரமணியசாமி கார் தாக்குதல்...முட்டை, தக்காளி வீச்சு ( வீடியோ )

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி சென்ற கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டை, தக்காளிகளை வீசினர். கான்பூரில் உள்ள விஎஸ்எஸ்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சுப்ரமணியன் சாமி நேற்று வெள்ளிக்கிழமை வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜேஎன்யு விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்தள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்த போது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய போராட்டக்கார்கள் கார் மீது முட்டை, தக்காளி மற்றும் மையை வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.nakkheeran.in

நேர்பட ....யார் பேசுவது ? சிம்ஸ் மருத்துவமனை புதிய தலைமுறை மற்றும் இந்திய ஜனநாயக கட்சி பச்சமூத்தூ ...

தாகம்'s photo.உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கிய நிலையில் எனது தாயாரை கடந்த 20 ஆம் தேதி சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தேன் . அவசர சிகிச்சை பிரிவில் பல மருத்துவர்கள் சோதித்தப் பிறகு , நரம்பியல் துறையை சார்ந்த உதவி மருத்துவர் பரிசோதனை செய்தார் !
" உங்க அம்மாவுக்கு பிரச்சனை ஏதுமில்லை . ரத்த ஓட்டம் குறைவாக உள்ளது . சரி செய்துவிடலாம் " என்றார் !
சில மணி நேரம் கழித்து அங்கு வந்த நரம்பியல் நிபுணர் ஸ்ரீதரன் ... " உங்க அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு " ப்ரெயின் எம்.ஆர்.ஐ எடுக்கச் சொல்லி இருக்கேன் " என்று குண்டைத் தூக்கிப் போட்டார் !
" உங்கம்மாவுக்கு ஒன்றுமில்லை " என்று சில மணிநேரம் முன்பு சொன்ன உதவி மருத்துவர் என்னைப் பார்த்து அசடு வழிந்தார் !!
இது நடந்தது மதியம் 2 மணிக்கு !

நடிகர் நடிகைகள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் மர்மம்.....கட்சிகளின் அன்பு பிடியில் இருந்து தப்பவே

தற்சமயம் கோலிவுட்டின் பெரிய தலைகள் பலரும் ஏதோ ஒரு ஃப்ளைட்டைப் பிடித்து  ஃபாரின் செல்கின்றனர். இடையில் ஊருக்குள் வந்த பன்ச் நடிகரும் கூட டப்பிங்கை முடித்துக்கொண்டு விடு ஜூட் என பறந்து விட்டார். என்ன காரணம் என்றால் எல்லாம் எலெக்‌ஷன் சீசன் தான் காரணம் என்கிறார்கள். அப்போ அரசியலுக்கு வரமாட்டீங்க!
ன்னப்பா இது படம் வந்து பல வாரம் ஆச்சு தயாரிப்பு நடிகரோட பட புரமோஷன் மட்டும் இன்னும் நிறுத்தின மாதிரி இல்லியே எனக் கேட்டால். காசா பணமா சும்மா விளம்பரம் தானே. அவங்க சேனல், அதில்  என்னவேணா பண்ணிக்குவாங்க. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் டிவியில் ஓட்டுவாங்க, ஆனால் தியேட்டரில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடக்குமா என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்போ அடுத்த படம் ரிலீஸ் வரைக்குமா ஜி!

விஜயகாந்த் கிங்கும் இல்லை... கிங்மேக்கரும் இல்லை. வாக்குவிகிதங்கள் கூறும் கணக்குகள் -காலிடப்பா....

2006 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8% வாக்குகள் பெற்றிருந்த தேமுதிக,2009 தேர்தலில் 10% வாக்குகளாக உயர்ந்தது. அதன் பின்னர் 2011 இல் அதிமுகவுடன் கூட்டு வைத்து 3% மாக குறைந்த ஓட்டு விகிதம் கடந்த மக்களவை தேர்தலில் 3.6 % மாக இருந்தது. - போலியாக ஒருவரை பார்த்து பயமுறுத்துவதற்கு தமிழில் ‘பூச்சாண்டி’ காட்டுகிறான் என்பர். ஒருவேளை, 2016 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் நடவடிக்கைகளும் அப்படி பொருள் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் மாநில கட்சியான தேமுதிகவின் தலைவர். வரும் தேர்தலுக்காக, கூட்டணி அமைக்கும் நாடகங்களில் திமுகவும், காங்கிரசும் தங்கள் கூட்டணியை அறிவித்து கொண்டுள்ளன. இப்போது மூன்று அணிகள் இத்தேர்தலில் போட்டிக்கு தயாராக உள்ளன. திமுகவும் காங்கிரசும் இணைந்த அணி, அதிமுக, அடுத்து மற்ற மாநில கட்சிகள் இணைந்த மூன்றாவது அணி.

தாய்லாந்தில் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அடைக்கலம்


Pakistani Christian Asylum Seekers in Bangkok Thailand. பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் அவலம் தாய்லாந்திலும் தொடர்கிறது. பாங்காக்குக்கு வந்திருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்கள் தொண்டு நிறுவனங்கள் தரும் உணவை நம்பியே வாழ்கிறார்கள்.
தஞ்சக்கோரிக்கையாரிக்கையாளர்களை கையாள்வதற்கான ஐநா சர்வதேச ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்திடவில்லை. எனவே முறையான விசா இல்லாத அனைவருமே கிரிமினல்கள் என்பது தாய்லாந்து அதிகாரிகளின் பார்வை.
ஆனாலும் இவர்களுக்கு உதவ ஐநாவின் அகதிகள் அமைப்புக்கு தாய்லாந்தில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

சீமான் பெரியாரை வந்தேறி என்றும், பார்ப்பனர்களை தமிழர்கள் என்றும் சொல்லும் பித்தலாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது ஆவேசம் கொண்டு எழுதியுள்ள பதிவு இது:;">நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் சீமான்னை மிகக் கடுமையாக விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். 'அட்டகத்தி சீமான்' என்றே என் கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளேன். பின்னர் தனிப்பட்ட சந்திப்புகளின் போது அவர் நட்பு நிமித்தமாக தன்னை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை விமர்சிப்பதை நிறுத்துக் கொண்டேன். அவ்வப்போது அவர் செய்து வந்த கோமாளித்தனங்களையும் பொருட்படுத்தாமல் கடந்து சென்றேன்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கவிதா புகார்..சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும்...


விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். கவிதா அளித்துள்ள மனு: கோவையில் எஸ்டிகேஎஸ் என்ற பள்ளி நடத்தினேன். ஜெம் ஜுவல் லரி விஜயகுமார், புல்லியன் ஜுவல் லரி சீனிவாசன் மற்றும் கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் என் சொத்து களை அபகரித்துவிட்டார்கள் ஏற் கெனவே இது பற்றி புகார் அளித் துள்ளேன்.

திருமாவளவன் :திமுக, அதிமுக கூட்டணிக்கும் போகமுடியும்.... ஆனா ம.ந. கூட்டணியில் நீடிப்போம்...

திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுடன் நல்லுறவு இருப்பதால் நாங்கள் நினைத்தால் அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கும் போக முடியும். ஆனாலும் மக்கள் நலக் கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற முழக்கத்தை முன்வைத்து இக்கூட்டணித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டுக்கு தொல். திருமாவளவன் அளித்துள்ள பேட்டி:

வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்...எஸ்.வி.எஸ். கல்லூரி

தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது எஸ்.வி.எஸ். கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனங்களால் படிப்பை இடைநிறுத்திய மாணவர் கண்ணதாசன் இந்தக் கல்லூரியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நகரமைப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்று, அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கல்லூரி குறித்து மைய, மாநில அரசுகளைச் சேர்ந்த 45 துறைகளுக்குப் புகார் மனு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரினார். மேலும், தன்னைப் போலவே பாதிக்கப்பட்டு படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை அமைப்பாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தமிழரசியின் தந்தை மணிவண்ணனும் பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி விழுப்புரம் போலீசு கண்காணிப்பாளர் முடிய பல துறைகளுக்கும் கல்லூரி குறித்து புகார் கொடுத்திருந்தார்.

பிரேமலதா தேமுதிக முதல்வர் வேட்பாளராகிறார்? தாய்குலத்தின் வாக்குகளை ஜெயாவிடம் இருந்து பிரிகவாம்...

தேமுதிக-வின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் பிரேமலதா அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.;தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக்கட்சிகளும் அதற்கான வேலையில் மும்முரமாக ஈட்டுபட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணி அமைப்பது மறுபக்கம் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆலோசிப்பது என அரசியல் கட்சிகள் களை கட்டியுள்ளன.அதிமுக சார்பில் ஏராளமானோர் ஏற்கனவே விருப்பனு மனுவை கொடுத்துவிட்டார்கள். தற்போது திமுக, காங்கிரஸ், >தேமுதிக
ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியில் வேட்பாளராக போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில், தேமுதிக சார்பில் விஜயகாந்திற்கு பதிலாக, அவரது மனைவி பிரேமலதாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்திக்கலாமா என்று ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்  யாரு கண்டா விஜயபிரபகரன்தான்  துணை முதல்வரோ?

ரோஹித் வேமுலாவின் தாய் :ஸ்மிருதி இராணி அப்பட்டமான பொய் சொல்கிறார்..இவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்


பாராளுமன்றத்தில் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியது அப்பட்டமான பொய் என, ரோகித் வெமுலாவின் தாயார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது மற்றொரு மகன் ராஜாவுடன் கலந்து கொண்ட ரோகித் வெமுலாவின் தயார் ராதிகா வெமுலா  கூறியதாவது: “எனது மகன் சாவு பற்றி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பாராளுமன்றத்தில் அபாண்டமாக பொய் சொல்கிறார். அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மந்திரிகளுக்கும், துணைவேந்தருக்கும், மற்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையைவிட அதிக தண்டனை வழங்கவேண்டும். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்கவேண்டும்“ என்று குறிப்பிட்டார். அவருடைய மகன் ராஜா, ‘சம்பவ இடத்துக்கு நாங்கள் சென்ற நேரத்தில் எனது சகோதரரின் உடல் அருகே போலீசாரும், டாக்டர்களும் இருந்தனர்‘ என்று குறிப்பிட்டார். dailythanthi.com

பெங்களூரு பேருந்துக்குள் பெண் 45 நிமிடங்கள் சிறை...கதறியபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூர் சமீப காலமாக கும்பல் கலாச்சாரம் மற்றும் சகிப்பின்மையின் புகலிடமாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கு சான்றாக அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையத்திற்கு எதிரிலேயே பேருந்துக்குள் வைத்து பூட்டியிருக்கிறார்கள். சுமார் 45 நிமிடங்கள் கதறியபோதும், யாரும் உதவி செய்யவில்லை என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த மாணவியின் பேஸ்புக் பதிவு வருமாறு: நான் கல்லூரியில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது, என் அருகில் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த என் நண்பர் நின்றதால் பேருந்து நடத்துனருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பின் இது கைகலப்பாக மாறியது. நடத்துனருடன் பொதுமக்களும் சேர்ந்துக்கொண்டதால் என் நண்பர் உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.

தமிழகத்தின் மிக மோசமான அரசியல் விபத்து...ஒரு முடா குடிகாரனும் அவனது மோசமான மனைவியும் தலைவர்கள்

சவுக்கு.com :விஜயகாந்த் மாநாட்டில் கொள்கை விளக்கம் : பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்​துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான். அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு… சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கற

கிராந்தி சைதன்யா....தமிழர்கள் விடுதலைக்கு இவர்தான் பாடுபட்டார்,,,கட்சிகள் அல்ல.

விகடன்.com கடந்த 2013- ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், சேஷாசல வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, வனத்துறை அதிகாரி ஸ்ரீதர்,  ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மாண்டூர் என்ற இடத்தில் 20 -க்கும் மேற்பட்டவர்கள் தலையில் செம்மரங்களை கொண்டு செல்வதை பார்த்த ஸ்ரீதர், அவர்களை பிடிக்க முயற்சித்தார். அதில் 2 பேர் மட்டுமே சிக்கினர். மற்றவர்கள் ஓடி விட்டனர். பிடிபட்ட இருவரை ஜீப்பில் ஏற்றி சென்ற போது, அதே பகுதியில் மற்றொரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்துவதை ஸ்ரீதர் பார்த்தார். தொடர்ந்து அவர்களையும் தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல், ஸ்ரீதர் மற்றும் வன ஊழியர்களை தாக்கியது. வனத்துறை வாகனங்களையும் அடித்து நொறுக்கியது.

88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு...ஆந்திர அரசு தகவல்

88 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து ஆந்திர அரசு மேல்முறையீடு செய்யும் என அம்மாநில வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.;திருப்பதியில் தோட்டகலைத் துறை கண்காட்சியை  ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:->ஆந்திர வன அதிகாரிகள் கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 88 பேர் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து, அரசு வழக்கறிஞருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றார் வெப்துனியா.com

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இந்திய நிறுவனங்கள் வெடிகுண்டு மூலப் பொருள் விற்பனை?

ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை 7 இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. அதில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை 20 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதிகபட்சமாக துருக்கியில் செயல்படும் 13 நிறுவனங்கள், தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களை விநியோகிப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி சேவை கட்டணம் இல்லை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அட்டை பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் சேவை மற்றும் உபரி கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. ரொக்க பரிவர்த்தனைகளை குறைத்து வங்கி அட்டைகளை பயன்படுத்தும் நடைமுறையை அதிகரிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மின்னனு முறையில் நடத்தப்படும் பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், வரி ஏய்ப்பை தவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் சகோதர்கள் வறுமையில் வாடுகிறார்கள்....இவருதான் நாட்டை காக்க போறாராம்.

  • பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
    பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
  • விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் தனது வீட்டில் மனைவி வெங்கடலெட்சுமியுடன்..
    விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் தனது வீட்டில் மனைவி வெங்கடலெட்சுமியுடன்..
விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல் என அதிமுவில் இணைந்த விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் (56) குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய காந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தார். அவரை சந்திப்பதற்காக மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெரு வில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். 4-க்கு 6 அடி உள்ள சமையலறை, கால்களை நீட்டி படுக்க முடியாத அளவுக்கு வெறும் 48 சதுர அடி மட்டுமே கொண்ட மற்றொரு அறை. இதுதான் விஜயகாந்தின் சகோதரர் வீடு என்பதைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது.

விஜயகாந்த் கோமாளி அல்ல...எல்லாரையும் கோமாளியாக்கி வசூல் வேட்டை...அசல் சதுரங்க வேட்டை கும்பல்

விஜயகாந்த் குடும்பத்தாரால் நடத்தப்படுகிற கட்சி.
mathimaran.wordpress.com: ‘வாரிசு அரசியல்’ நேரு குடும்பம் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்த ‘தியாக’ மெத்தட். அதையே தூக்கி சாப்பிட்டு விட்டார் விஜயகாந்த். அரசியலுக்கு வரும்போதே பொண்டாட்டி, மச்சினன், கொழுந்தியா, மாமியார், சகலபாடி என்ற புதுபாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் நாட்டின் கடந்த 50 ஆண்டுகால அரசியலின் அடிப்படை. 1. இடஒதுக்கீடு, சிறுபான்மை மக்களின் உரிமையை உள்ளடக்கிய சமூகநீதி அரசியல். 2. மொழி உணர்வு.
இந்த இரண்டு பற்றியும் எந்தக் கருத்தும், பெயரளவிலான புரிதலும் கூட அந்தக் கட்சிக்கு இல்லை.
1 மணி நேர வித்தியாசத்தில் கூட்டணி பற்றி எந்தக் கட்சியோடும் பேச்சு நடத்துகிறார்.
கூட்டணி வைப்பதற்கு அரசியல் ரீதியாகப் பொதுப் பிரச்சினையில் என்ன நிபந்தனை என்பதைப் பெயரளவில் கூட எப்போதும் அறிவிக்க மறுக்கிறார். மிக வெளிப்படையாகத் தனக்கான முக்கியத்துவம் மட்டுமே அவரிடம் இருக்கிறது.
இந்தத் தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி அதை முச்சந்தியில் நிறுத்துகிறார்.
ஆனால், கூச்சமே இல்லாமல், அவரிடம் தான் கூட்டணி வைப்பதற்குக் காத்துக்கிடக்கிறது சமூகநீதியும், மொழி உணர்வும் நிரம்பிய கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொள்கிற திமுக.
விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு ஜெயலலிதாவுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் கலைஞர்.

தேமுதிக விருப்புமனு கொடுப்பவர்களின் ஒட்டு மொத்த விருப்பமும் திமுக கூட்டணிதான்...அதிர்ச்சி?

தி.மு.க. நேர்காணலைத் தொடங்கிய அதே நாளில் விஜயகாந்த்தும் தனது கட்சியின் நேர் காணலை நடத்தினார். முதல்நாளில் கன்னியாகுமரி, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி என 4 மாவட்ட விருப்ப மனு விண்ணப்பதாரர்களை அழைத்துப் பேசினார் விஜயகாந்த். இந்த நேர்காணலில் சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரக்குமார் உள்ளிட்ட மாநில நிர் வாகிகள் விஜயகாந்த்திற்கு உதவினர். தே.மு.தி.க. நேர் காணல் குறித்து அதில் கலந்துகொண்டு திரும்பிய வர்களிடம் நாம் பேசியபோது, ""ஒவ்வொரு தொகு திக்கும் சராசரியாக 50-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்திருப்பதால் ஒட்டுமொத்தமாக உட்காரவைத்துத்தான் கேள்விகளை கேட்டார். என்னவொண்ணு, ஒவ்வொருத்தரா போய் அவருக்கு முன்னால போட்டிருக்கும் நாற்காலியில உட்கார்ந்து பதில் சொல்லணும்.   இது  ஒரு  கட்சி இதுக்கெல்லாம் வாக்கு வங்கி வேற...மெண்டல் மென்டாலிட்டி எல்லாம் அரசியல்....வெளங்குமா? .

தி.மு.கவில் சீட் கேட்டு 7 ஆயிரத்திற்கும் அதிக மானோர் விருப்பமனு

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் வேகம் காட்டத்துவங்கியிருக்கிறது
தி.மு.க.! இந்த முறை சீட் கேட்டு 7 ஆயிரத்திற்கும் அதிக மானோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களிலிருந்து வேட்பாளர்களை தேர்வு செய் வதற்காக அவர்களிடம் நேர்காணலை நடத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
காலை 6 மணியி லிருந்தே பரபரப்பாகி விடுகிறது அறிவாலயம். நேர்காணலின் முதல்நாள் (22-ந்தேதி) கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாத புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட தொகுதிகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அந்த மாவட்டங்களின் உடன் பிறப்புகளும் அவரது ஆதரவாளர்களும் அறிவா லயத்தில் குவிய, ஒழுங்குப்படுத்தும் பணி பூச்சிமுருகன், சதாசிவம், துறைமுகம் காஜா உள்ளிட்டவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதிமுக தேர்தல் வெற்றிக்கு 307 கட்சிகள்தான் காரணமா...? கிறு கிறுக்க வைக்கும் கடிதம்!

vikatan.com : தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. சில கட்சிகள் பிரச்சாரத்தையும், சில வேட்பாளர் நேர்காணலையும் துவங்கி விட்டன. இத்தகைய சூழலில்,  2011 அ.தி.மு.க தேர்தல் கூட்டணி குறித்த ஒரு ரகசிய கடிதம் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. தேமுதிக, ச.ம.க., புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தவைகளே... இன்றைய மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அதே கூட்டணியில் அங்கம் வகித்தவையே. 2016 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இல்லை,  இந்த நிமிடம் வரை ! (அரசியலில் மாற்றம் என்பது நம் கையில் இல்லையே !?) "அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த கட்சிகள் போக அதற்கு ஆதரவு தெரிவித்து  அதன் வெற்றிக்கு பாடுபட்ட 'லிஸ்ட்'டில்  நாங்கள் (307 கட்சிகள் , அமைப்புகள்) இருந்துள்ளோம். இந்த முறை நாங்கள் அதில் இல்லை... எங்களுக்கு எந்த அழைப்பும் இல்லை" என்று ஆரம்பித்து கலோக்கியலாக எட்டுவரி நோட்டுப் புத்தகம் நிரம்பும் அளவுக்கு நீ.........ண்டகடிதம் ஒன்று முக்கிய ஏரியாக்களில்  ரகசியமாக சுற்றுகிறது.
இதோ, அந்தக் கடிதமும், 307 பேரின் விபரமும் :
ஒரு கட்சி கிடையாதுங்க சாமீ... மொத்தம் பத்து கட்சிங்க சப்போர்ட் பண்ணுச்சு. 307 சிறு கட்சிங்களும், அமைப்புகளும் கூட நின்னுச்சு... எங்க உழைப்பாலதான் அந்தம்மா (ஜெயலலிதா) கோட்டைக்கு போனாங்க.

ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்!

edit feb 24
aanthaireporter.com : நீங்க வெஜிட்டேரியனா…? நான் வெஜிட்டேரியனா?…? எங்கு வேலை பார்க்கிறீர்கள்? சம்பளம் என்னிக்கு போடு வாஙக்? எத்தனை குழந்தைகள்? கூடவே பெரியவர்கள் உண்டா? ரெண்டு நேரம் குளிக்கக் கூடாது. முறை வாசல் தெளிக்கணும். 5-ந்தேதிக்குள் வாடகை தரணும். 10 மாத வாடகை அட்வான்ஸ். -இப்படி பல கேள்விகளுக்கு வீட்டு உரிமையாளர் அடுத்தடுத்து விடுக்கும் கேள்விகளுக்கு பதிலை சொன்னால்தான் சென்னை மட்டுமின்றி எல்லா இடங்களிலும் வீடு வாடகைக்கு கிடைக்கும். இதனால் குறிப்பாக சென்னைக்கு போனால் ஏதாவது வேலைபார்த்து பிழைத்து கொள்ளலாம் என்று வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீட்டு வாடகை கொடுத்தே விழி பிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கருப்பை கேன்சர்:பலியான பெண் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் ஃபைன்!


நம் நாட்டைப் பொறுத்த வரை இங்குள்ள மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் நோக்கில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப்படுவது சகஜமான விஷய மாகி விட்டது..அதிலும் ஜனங்களின் உயிரோடு விளையாடும் பல பொருட்களை இந்தியாவெங்கும் உள்ள கடை களில் தாராளமாகக் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்…
நிமுசுலிட் (Nimesulide) இந்த நிமுசுலிட் என்பது ஒரு வலிநிவாரணி மாத்திரை. இம்மாத்திரை அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தபடவே இல்லை. ஆனால் இந்தியாவில் இம் மாத்திரை அதிகம் கிடைக்கிறது. அந்நாடுகளின் மார்க்கெட்டுகளில் விற்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியுமோ? இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மேலும் காய்ச்சலுடன் உள்ள குழந்தைகளுக்கு இம்மாத்திரையைக் கொடுக்கவே கூடாது. ஆனால் இந்தியாவில் இம்மாத்திரையை பல டாக்டர்களே சிபாரிசு செய்வார்கள்.

மகாமகக் குளத்தில் மலக்கழிவு 28%; மூத்திரக்கழிவு40%! – அதிர வைக்கும் ஆய்(வு) ரிசல்ட்

maha feb 25
புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற நம்பிக்கையில் பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமா கியுள்ளது. அதாவது கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஸ்மிருதி ராணியின் அவதூறுகளை தோலுரிக்கிறார் அம்பேத்கர்...

smruthi rani cartoon vinavu
னித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, 24.02.2016 புதன் கிழமை அன்று பாராளுமன்றத்தில் பேசிய சொர்ணாக்கா டைப் உதாரை அரை டவுசர் அம்பிகள் உலக அதிசயமாக உருகி பருகி கழித்து வருகிறார்கள். பேசுவதில் ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்ற சாமர்த்தியம் இந்திய ஹிட்லர்களுக்கோ இல்லை ஹிட்லரிகளுக்கோ இருக்காதா என்ன?
சொர்ணாக்கா உரையில் நாடகம், அழுகை, ஆத்திரம், சத்தம், எல்லாம் இருந்ததாக மோடி ஜால்ரா ஊடகங்கள் தொகுத்திருக்கின்றன. ரோஹித் வெமுலா தற்கொலைக்கு அவரே காரணமென்றும், ஜே.என்.யூவில் தேச விரோதிகள் நிறைந்திருப்பதாகவும் பேசினார் ஹிட்லரி ஸ்மிருதி ராணி. அந்த தேச துரோகங்களில் முக்கியமானது என்ன? பல்கலை வளாகத்தில் மகிஷாசுரனை வணங்கியதோடு, துர்ஹாவை விபச்சாரி என்று திட்டினார்களாம் மாணவர்கள். இதையெல்லாம் கருத்துரிமை என்று அங்கீகரிக்க முடியுமா என சீறுகிறார் வடக்கத்தி சொர்ணாக்கா!

வியாழன், 25 பிப்ரவரி, 2016

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..சிவகாசி அருகே: பல அறைகள் தரைமட்டம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு வைத்திருந்த அறைகள் தரைமட்டமாகியிருப்பதால் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிவகாசி அருகே நாரணபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு பகுதியில் பட்டாசு திடீரென வெடித்துள்ளது. அதில் இருந்து வெளியான நெருப்பு பட்டு, அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. அக்கம் பக்கத்தில் உள்ள அறைகளுக்கும் நெருப்பு பரவியதால் பட்டாசுகள் வெடித்து சுவர்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இதனால், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  மாலைமலர்.com

திருச்சி சமூகநீதி மாநாடு..கலைஞர் ராகுல் மற்றும்....அடுத்த மாதம் 20–ந்தேதி...வீரமணி அறிவிப்பு

திருச்சியில் அடுத்த மாதம் (மார்ச்) 20–ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில் நடைபெறுவதால் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நிதீஷ்குமார், லல்லு ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் ராகுல் காந்தியையும் மாநாட்டில் பங்கேற்க செய்வதில் திராவிடர் கழகம் ஆர்வமாக உள்ளது.

திமுகவின் பிரச்சார உத்திகளை வகுக்கும் ‘ஜே வால்டர் தாம்சன்’ நிறுவனம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார பொறுப்பை உலகின் புகழ்பெற்ற ‘ஜே வால்டர் தாம் சன்’ விளம்பர நிறுவனத்திடம் திமுக ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் நடை பெறவுள்ளது. இதற்காக கடந்த ஓராண்டாகவே திமுக தயாராகி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி முதல் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்தார். வழக்க மான பிரச்சாரப் பயணம் போல அல்லாமல், கட்சிக்கு அப்பாற் பட்டு ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாக சந்தித்து இயல் பாக கலந்துரையாடினார் ஸ்டாலின். அதுபோல முகநூல், ட்விட்டர், வாட்ஸ்-அப், வைபர் போன்ற சமூக ஊடகங்களிலும் திமுகவுக்கான பிரச்சாரம் தீவிர மாக நடந்து வருகிறது.

Amnesty International : சகிப்பின்மை அதிகரிப்பை இந்தியா தடுக்கத் தவறிவிட்டது: அம்னெஸ்டி கண்டனம்

Amnesty International has accusing India of supporting a climate of intolerance by cracking down on dissent through arbitrary arrests, caste-based discrimination, extrajudicial killings and attacks on freedom of expression
சர்வதேச பொதுமன்னிப்பு சபை(அம்னெஸ்டி இண்டர்னெஷனல்) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டு (2015-16) அந்த சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்து கூறி இருப்பதாவது:- பல்வேறு துறை கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் தங்களுக்கு அளித்த தேசிய விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து இருக்கின்றனர். இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதை இதற்கு காரணமாக இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். சமூக தொண்டு நிறுவனங்கள் மீதான கொள்கைகளையும், வெளிநாடுகளில் இவற்றுக்கு கிடைத்து வந்த நிதியையும் இந்தியா கடுமையாக முடக்கி இருக்கிறது.

சுவரில் தலையை மோத வைத்து கைதி படுகொலை...மதுரை மத்திய சிறைக்குள் இருந்த கைதி வெறிச்செயல்

மதுரை மத்திய சிறைக்குள் நடந்த 2 கைதிகள் மோதலில் சுவரில் தலையை மோத வைத்து ஒரு கைதி படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கொலைக்கைதிகள் மதுரை கீரைத்துறை, வாழைத்தோப்பு, முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் செந்தில்(33). இவர் கடந்த ஆண்டு மே மாதம் அந்த பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளி நிறைகுளத்தான்(70) என்பவரை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்தார். இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி செந்திலை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் அடைக்கப்பட்டு இருந்த அறையில் செந்தில்குமார் என்பவரும் இருந்தார். இவர், தந்தையை கொலை செய்ததாக கள்ளிக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.நாட்டில் வன்முறை  தலைதூக்கி ஆடுவதற்கு  சாராயமா  சினிமாவா அதிக காரணம்? வறுமைக்கு சாராயமும் வன்முறைக்கு சினிமாவும்தான் காரணம்..  

ஹிஜாப் என்றொரு மாயை!

உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே பரவச் செய்கின்றனர்.< தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு பொய் காலவட்டத்தில் உண்மையாகி விடுவதால், இக்கருத்தை இப்போது ஒரு சில முஸ்லீம் அல்லாதவர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆதாரமாக, இஸ்லாமியமார்க்க ‘அறிஞர்கள்’, அமெரிக்காவில் நிகழும் பாலியல் வன்முறைகள் பற்றிய புள்ளி விவரங்களை முன்வைப்பதை எங்கும் காண முடிகிறது. அமெரிக்காவுடனோடு முஸ்லீம் நாடுகளில் நடக்கும் பாலியல் வன்நிகழ்வுகளைப் பற்றிய புள்ளி விபரங்களை ஒப்பிட்டு வன்முறைகுறைவாக இருப்பதாகவும், ஆதலால் பர்தாமுறை, உளவியல் பூர்வமாக சிறந்த வழக்கம் என்று வாதிடுகின்றனர்

ஒரு அம்மா அடிமையின் ஓபன் லெட்டர்....நீங்க நல்ல இருக்கணும்...

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்! மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்!
இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா. ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... உங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல் உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு அம்மாதான். முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் அம்மா...!!!

புதன், 24 பிப்ரவரி, 2016

ஆட்சியில் பங்கு தராத கழகங்கள்: பல முனைப் போட்டிக்கு தயாராகும் தமிழகம்

தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் கழகங்கள் ஆட்சியில் பங்கு தர மறுப்பதால்,  தமிழக அரசியல் வரலாற்றில் வரவிருக்கிற 15-வது சட்டப் பேரவைத் தேர்தல் பல முனைப் போட்டிக்கு தயாராகி வருகிறது.
சுதந்திரத்துக்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. 1967 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ், அதற்கு பின்னர் ஆட்சியை பிடிக்கவே இல்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிவுப்பட்டு தேர்தலை சந்தித்த போதும், காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

அதானி குழுமத்துக்காக சதீஸ்கார் பழங்குடிமக்களை வேட்டையாடும் மத்திய மாநில அரசுகள்

Soni-Sori-1காட்டு வேட்டை என்ற பெயரில்  இந்திய அரசு பழங்குடியினருக்கு எதிராக நடத்திவரும் போரை மேலும் மூர்க்கமாகியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு. மைய அரசும், மாநில அரசும் பா.ஜ.க-வின் கைகளில் இருப்பது ஒடுக்குமுறையில் கொடூர வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற போலீஸ் அடியாள் அமைப்பை ஆரம்பித்துள்ள அரசு அதைக்கொண்டு காட்டுவேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் ஜனநாயக சக்திகளையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் சோனி சோரி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் தாக்கப்பட்டுள்ளார்.

புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

arnab-umar-khalidநீ ஒரு தீவிரவாதி. அதை முதலில் ஒப்புக் கொள். உன்னிடமிருந்து விளக்கங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை. நீ ஒரு தீவிரவாதி. நீ ஒரு பயங்கவாதி. ஒப்புக் கொள்”
பிப்ரவரி 10ம் தேதி இரவு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் வெறிக்கூச்சல்களை எதிர் கொண்டு அதற்கு விளக்கங்கள் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் உமர் காலித். உமர் காலித் தில்லி ஜவகர்லால் பல்கழைக்கழக மாணவர். மேற்படி “விவாதம்” நடந்ததற்கு முந்தைய தினம் பல்கலைக்கழகத்தில் அவரும் அவரது நண்பர்களும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் “தேச விரோதிகளை” திட்டமிட்டு கலந்து கொள்ளச் செய்த காரணத்தால் அவர் ’பயங்கரவாதி’ என்பது அர்னாப் கோஸ்வாமியின் தீர்ப்பு. நீதிபதி அர்னாப் கோஸ்வாமியின் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாளில் இருந்து உமர் தலைமறைவாகிப் போனார்.

மோடி அரசின் கூலிப்படையா பத்திரிகையாளர்கள் ? விஷ்வா தீபக்

vishwa-deepakஜே.என்.யு மாணவர்கள் நடத்திய அப்சல்குரு நினைவு கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டதாக ஜீ டிவி வீடியோ வெளியிட்டு மாணவர்களை தேச துரோகிகளாக சித்தரித்து வருகிறது. கூடவே அருகிலேயே ராணுவ வீரர்களின் படங்களையும் வெளியிட்டு மாணவர்களுக்கு எதிராக தேசிய வெறியை பரப்பு வருகினறன. ஆனால் இந்த வீடியோக்கள் தங்களால் சோடிக்கப்பட்ட ஒன்று என்றும் அந்த குற்ற உணர்ச்சியின் உந்துதலில் தான் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்திருக்கிறார் ஜீ டிவி பத்திரிகையாளர் விஷ்வா தீபக்.
மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின் ஊடகங்களின் திரைமறைவில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் தமிழாக்கம் இது. மோடி அரசையும், ஜெயா அரசையும் நக்கிப் பிழைக்கும் நவநாகரீக நெறியாளர்கள், சானல்கள், தினசரிகள், நடுப்பக்க ஆசிரியர்களைக் கொண்ட தமிழ் கூறும் ஊடக தீயுலகில் இத்தகைய குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் அரிது என்பதாலும் தீபக்கின் இந்த கடிதம் முக்கியமானது.

அம்மா பிறந்த நாள் பட்டிமன்றம் : எது சிறந்தது ? ஸ்டிக்கர்களா சிறந்தது ? இல்லை 110 விதிகளா சிறந்தது?

அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...

.திருமாவளவன் :அதிமுக, மக்கள் நலக் கூட்டணி இடையே தான் போட்டி


வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, மக்கள் நலக் கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையாகுமாரை தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திர சிறைகளில் இருந்த 287 தமிழர்கள் விடுதலை ....2013 ஆம் வருடம் கைது செய்யப்பட்டு

287 தமிழர்களை மீட்க அயராமல் பாடுபட்டகழக வழக்கறிஞர் அணிக்கு பாராட்டுதலைத்தெரிவித்துக் கொள்கிறேன்: ஸ்டாலின்
தி.மு. கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் 289 பேர் ஆந்திர மாநில வனத்துறையால் 2013 ஆம் வருடம் கைது செய்யப்பட்டு ஜாமினில் கூட வெளிவர முடியாமல் அம்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தங்களின் சொந்தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதலமைச்சருக்கு 22.7.2015 அன்றே கடிதம் அனுப்பினார்கள். ஆனால் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறைகளில் வாடும் தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமின்றி, 27.7.2015 அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய பதில் கடிதத்தில், “நீங்கள் ஆந்திர மாநில இலவச சட்ட உதவி மையத்தை அணுகுங்கள்” என்று கூறி அதிமுக அரசு தன் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.

ராஜ்ய சபாவில் ரோஹித்தின் தற்கொலை விவாதம் வெடித்தது....மாயாவதி பஹுஜன் - ஸ்மிரிதி கூச்சல் குழப்பம்

டெல்லி: தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில், பாஜகவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்ததால் ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ராஜ்யசபாவில், ஹைதராபாத் பல்கலை.யில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்த விவகாரத்தை கிளப்பி பேசினார் மாயாவதி.  ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை நாடு முழுவதற்கும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டியபோது, பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, அவையை 10 நிமிடம் ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் அறிவித்தார். அவை மீண்டும் கூடியபோதும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பிணமாக மீட்பு.. அமெரிக்காவில் காணமல் போன ஐதராபாத் தந்தை பிரசாத் மொபார்த்தி

மாநிலம், ஐதராபாத் நகரை சேர்ந்தவர் பிரசாத் மோபார்தி(55). தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றார். கடந்த 13-ம் தேதி மகள் துர்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த பிரசாத் அன்று மாலை சுமார் 4 மணியளவில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். ஆனால், பின்னிரவுவரை அவர் வீடு திரும்பாததை அறிந்த மணமகள் துர்கா(28), இதுதொடர்பாக, போலீசில் புகார் அளித்தார். மோப்பநாய் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் போலீசார் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அருகாமையில் உள்ள நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அவரைப் பற்றிய தகவல்களை பரிமாறி, தேடி வந்தனர்.

JNU மாணவர்களை தாக்கிய வழக்கறிஞர்கள் நீதிமன்றில் ஆஜர்...

தேசத் துரோக வழக்கில் கைதாகியுள்ள டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கடந்த 17-ம் தேதி பாட்டியாலா கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தலைமையேற்று நடத்திய விக்ரம் சவுகான், யஷ்பால் சிங், ஓம் சர்மா ஆகிய வழக்கறிஞர்கள் மீது டெல்லி போலீஸ் எவ்வித நடவடிகையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று டெல்லி போலீஸ், வழக்கறிஞர் யஷ்பால் சிங்கை கைது செய்தது. மேலும் மீதமுள்ள இரண்டு வழக்கறிஞர்களுக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்தது. டெல்லி போலீஸ் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத வழக்கறிஞர் விக்ரம் சவுகான் இன்று போலீஸ் முன் ஆஜர் ஆனார். டெல்லியில் உள்ள திலக் மார்க் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார் அவர். மாலைமலர்.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா: மக்களுக்காவே தன்னை அர்பணித்து கொண்ட தலைமையை கொண்ட இயக்கம் அதிமுக..



குஷ்பூ: என்னை தேசவிரோதி என்பார்கள்..அதற்கும் நான் தயார்..JNU பழையமாணவர்கள் கூட்டத்தில் முழக்கம்...



தேமுதிக நேர்காணல் அறிவிப்பு....முதல்ல கிங்கா குயினா காலி டப்பாவன்னு கண்டுபிடியுங்க

வழக்கமாக எல்லோருக்கும் அல்வா கொடுக்கும் விஜயகாந்துக்கு இந்த முறை சு.சுவாமி அல்வா கொடுத்திட்டாருங்கோ ...இதான் சொந்த புத்தில சோசிக்கனுகிறது...இனி முதலுக்கு மோசமாகாம கப்பல் மிதக்குற  வழியை பாருங்க கப்டன் .....தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் நேர்காணல் குறித்து, தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  எனவே விருப்பமனு அளித்துள்ளவர்கள் நேரில் வருகைதந்து நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வரும்பொழுது, கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு தேவையான ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் (ORIGINAL) சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமியார் ராம்தேவுக்கு 600 ஏக்கர் நிலம் மராட்டிய மாநிலம் வழங்கியது.

 The Maharashtra state government has allotted more than 600 acres of land to the Patanajli Yogpeeth, run by yoga guru Baba Ramdev
நாக்பூர்:பாபா ராம்தேவின், பதஞ்சலி யோகா பீட நிறுவனம், ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பதற்காக, மஹாராஷ்டிர மாநில அரசு, குறைந்த விலையில், 600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு ராம்தேவுக்கு சொந்தமான, பதஞ்சலி நிறுவனத்திற்கு, நாக்பூர் அருகே, கதோல் பகுதியில், 200 ஏக்கர் நிலத்தையும், மிஹான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 450 ஏக்கர் நிலத்தையும் குறைந்த விலையில் ஒதுக்கியுள்ளது. இங்கு, ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கப் போவதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இதே போன்று நடிகை ஹேமமாலினிக்கும் மும்பையில் மிகவும் பெறுமதி வாய்ந்த இடத்தில  அடிமாட்டு விலைக்கு சிவசேனா பாஜக அரசு  வழங்கியது  ஆனால்  மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது 

ஜெ., படத்தை பச்சை குத்திய அ.தி.மு.க.,வினர் ! நரிகுறவர்களுக்கு வருமானம் அமைச்சர்களுக்கு திண்டாட்டம்...சிலர் மெதுவாக நழுவினார்கள்

தமிழக முதல்வரின், பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் தொண்டர்கள் என, 668 பேரின், வலது கையில் முதல்வரின் திருவுருவ படத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி, சென்னை, வேளச்சேரியில் நேற்று நடந்தது.வேளச்சேரி தொகுதி, எம்.எல்.ஏ., அசோக், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
தாமதமாக துவக்கம்காலை, 8:00 மணிக்கு, அமைச்சர்களான பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனிச்சாமி, வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர், நிகழ்ச்சியை துவக்கி வைப்பதாக இருந்தது.  ஸ்டிக்கர் அரசு இதை விட என்ன செய்ய முடியும். இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்.

நீதிபதி தத்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர்! ஜெயாவுக்கு சுட சுட ஜாமீன்...அதே அதே.. Dattu build Rs.500,000,000 house..


தினமணி.com  :தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை (65) நியமிக்கலாம் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. How did CJI H.L. Dattu build Rs.500,000,000 house, questions Markandey Katju
வினவு Flashback :தலைமை நீதிபதி தத்துவின் யோக்கியதையோ சந்தி சிரிக்கிறது. தீர்ப்பு வழங்குவதற்கு சில நாட்கள் முன்பு தலைமை நீதிபதி தத்து நேரடியாகவே பெங்களூரு வந்து, ஜெயலலிதாவை விடுவிப்பதாக தீர்ப்பு இருக்கவேண்டுமென்பதை உத்திரவாதம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதில் தொடங்கி, இடையிடையே வரும் சிக்கல்களைச் சமாளித்து, கடைசியில் வழக்கைச் சாதகமாக முடித்துக் கொடுப்பது வரை ஒரு பேக்கேஜ் ஆக பேசி முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இது என்று தெரிகிறது.
 தலைமை நீதிபதி தத்து, எதிர்த்தரப்பான கர்நாடக அரசுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்தது, நாரிமன் கேட்காமலேயே உயர்நீதி மன்ற அப்பீல் விசாரணைக்கு தானே முன்வந்து ஏற்பாடு செய்தது,

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மகனைக் கொஞ்சியதில்லை; முத்தமிட்டதில்லை: நடிகர் விவேக் உருக்கம்!

தினமணி.com : சில மாதங்களுக்கு முன்பு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் (14), காலமானார். இதனையடுத்து தன் மகனைப் பற்றி இணையத்தளத்தில் விவேக் எழுதியுள்ள கட்டுரை:
சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

JNU சங்பரிவார் தயாரித்த போலி விடியோ.. கண்ணையா குமாரின் ஒரிஜினல் விடியோ வெளியானது...பொய் சொல்லும் போலீஸ்


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமார் அரசியலமைப்பிற்கு விரோதமான கோஷங்கள் எழுப்பினார் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவித்து உள்ளது, அறிக்கையை இன்று ஐகோர்ட்டில் சமர்பிக்கிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந் தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
மிகவும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கன்னையா குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னையா குமாருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு...

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர்  கன்னையா குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கன்னையா குமார் ஜாமீன் மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷர் மேதா, நீதிபதி பிரதீபா ராணியிடம், நாங்கள் இந்த ஜாமீன் மனுவை எதிர்க்கிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட நிதிபதி, நீங்கள் விசாரணை  அறிக்கையை தாக்கல் செய்துவிட்டீர்களா? நீங்கள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவில்லையென்றால், விசாரணையை நடத்தப்போவது இல்லை. நாளைக்குள் விசாரணை அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.  இட்டுக்கட்டிய வழக்கல்லவா? காவியும் காக்கியும் குடுமியும் ஒண்ணாச்சு... வெளியே இருக்க வேண்டியவங்க உள்ளே இருக்காங்க ..உள்ளே இருக்கவேண்டியவங்க ஆட்சில இருக்காங்க...

உபியில் 15 வயது சிறுமி சுட்டு கொலை.. பெண்களை கேலி செய்வதை தட்டி கேட்டதால் தெருவில் பட்டபகலில் ...


சித்தாப்பூர், உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூர் என்ற இடத்தில் வீட்டு வேலை செய்யும் 15 வயது சிறுமி பிரிங்கி தனது சகோதரியுடன்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த  குல்தீப் மற்றும் அவரது நண்பர் பூஜாரி  அந்த பெண்களை கேலி செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்களில் ஒருவன் துப்பாக்கியால் அந்த பெண்களை நோக்கி சுட்டான். இதில் பிரிங்கி  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

வீரமணி; பாஜக ராஜாவின் வன்முறை பேச்சுக்கு மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தனது மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளது மிகவும் அறுவெறுப்பானது, ஆணவமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு அமைதி காப்பது ஏன் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் எப்போதும் நாத்துடுக்குடனும், ஆபாச அறுவெறுப்புகளையே தனது வாயிலிருந்து ஆணவத்தோடும் வெளியிடும் ஒரு நபர் - பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த எச். ராஜா. முன்பே பல முறை அவதூறு விளைவிக்கும் சட்ட விரோதப் பேச்சுகளை பகிரங்கமாகப் பேசியதைக் குறித்து, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற அமைப்புகள், காவல்துறையிடம் புகார் கொடுத்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஏனோ, தமிழ்நாடு காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது! 

டெல்லி ஆர்ப்பாட்டம் ராகுல் கெஜ்ரிவால் கூட்டாக பங்கேற்பு..மறைந்த மாணவன் வேமுலாவின்....

JNU row: Rahul Gandhi joins protests; Kejriwal says Centre at 'war' with students
டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கோரி தலைநகர் டெல்லியில் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடைபெற்ற பேரணியை ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் முன்னின்று தலைமை தாங்கினர். ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இளங்கோவன் : ஜெயலலிதா விதி 110-இல் அறிவித்த அனைத்திற்கும் 144 தடை விதிப்போம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,தமிழகத்தில் சமீபகாலமாக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மிகமிக குறைவாக கருத்துக் கணிப்பு வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தாமல், குறைத்து மதிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய செயல்களால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது.  ஆனா சேம்சைட் கோல் அடிப்பதற்கு நெறைய பேர் இருக்காங்களே

கலவரத்தில் முடிந்த ஜாட் சமூகத்தினர் போராட்டம்;ஹரியானாவில் பரபரப்பு


ஹரியானாவில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.
ஜாட் இன மக்கள் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீடு கேடு கடந்த சில நாட்களாக ஹரியானாவில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.;பிவானி, ரோக்டக் ஆகிய நகரங்களில் அவர்கள் சாலைகளையும், ரயில் பாதைகளையும் மறித்து அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரங்களில் ஈடுபடுவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நகரம் முழுவதும் பரபரப்பானது.அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியானார்கள். மேலும் கலவரத்தை கட்டுபடுத்த ஹரியானாவிற்கு ராணுவ வீரர்களும் விரைந்தனர்.

சினிமா : மொத்தமே 36 கதைகள்!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ - ‘ஜார்ஜ் போல்டி’
‘எங்க வீட்டுப் பிள்ளை’ - ‘ஜார்ஜ் போல்டி’
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜார்ஜ் போல்டி (Georges Polti) என்றொரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் வாழ்ந்தார். அவர் பிறந்தது 1867. பல காலங்களாக மேடையேற்றப்பட்ட நாடகங்கள், புனைவுகள், புத்தகங்கள் என்றால் போல்டிக்கு மிகவும் இஷ்டம். அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அப்படிக் கவனிக்கும்போது அந்த நாடகங்களுக்கு இடையே இருக்கும் பல ஒற்றுமைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தன. இவற்றையெல்லாம் குறித்துவைத்துக்கொண்ட அவர் 1895-ல் ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார்.
புத்தகத்தின் பெயர் Thirty Six Dramatic Situations.
அவதானிப்பின் கடவுள்!

மோகன்லால் வேதனை..தேசபக்தியாம்?.கள்வர்களின் கடைசி புகலிடம் தேசபக்தியாகிவிட்டது


இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்ந்துதான் என்ன பயன்? : நடிகர் மோகன்லால் வேதனை அடேங்கப்பா என்னா இவரது தேசபக்தி?
நடிகர் மோகன்லால் இந்திய ராணுத்தால் கவுரவ லெப்னிடன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டவர்.  அவர் “இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்ந்துதான் என்ன பயன்?” என்ற தலைப்பில் தனது வலைத்தளப் பதிவில்  வேதனையை வெளியிட்டுள்ளார்.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் தனக்கு கடும் வேதனையை அளிப்பதாக மலையாள நடிகர் மோகன்லால் தனது வலைத்தளப் பதிவில் கருத்தை வெளியிட்டுள்ளார். தனது பணத்தை எல்லாம் துபாயில் பதுக்கி விட்டு....பழம்பெரும் நடிகர் திலகனை உலகத்தை விட்டே விரட்டி விட்டு தனது இறால் பண்ணையில் பெண்களை.....சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களை கொச்சை படுத்தியே திரையில் வசனம் பேசும் இவர் விஸ்கி விளம்பர தூதருமாவார்... நிஜவாழ்விலும் மிகப்பெரிய நடிகன் 

லயோலா பிந்திய கருத்து கணிப்பு திமுக 43.7 வீதம் வாக்குகள்..அதிமுக 36.7 வாக்குகள்



திங்கள், 22 பிப்ரவரி, 2016

பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள் அதிக வெற்றி... 91 நாடுகளில் ஆய்வு


அடுக்களையில் ஆழ்ந்திருக்கும் தாய்க்குத் தன் கைக்குழந்தை படுக்கையறையில் லேசாகச் சிணுங்குகிற ஒலிகூடக் கேட்டுவிடும். கல்யாணக் கூட்டத்தில் குழந்தையின் சிரிப்பு அல்லது அழுகையின் ஒலி கேட்டால் அதன் தாய் அந்த ஒலியின் திசையறிந்து குழந்தையை நோக்கி விரைவாள். இது ஆண்களுக்கு இயலாது. ஏனெனில், உயிரினம் தொடங்கிய காலத்திலிருந்தே பசி அல்லது பயத்தால் வீறிடும் குட்டியின் குரலைக் கேட்டு அதன் உதவிக்கு விரையும் உள்ளுணர்வு எல்லாப் பாலூட்டி விலங்கினத் தாய்மார்களின் மரபணுக்களில் பதியப்பட்டுள்ளது.
“முதலைத் தாய்மார்கள்’கூட மண்ணில் புதைத்த தமது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்படும் நேரத்தில் குரல் கொடுப்பதைக் கேட்டு விரைந்தோடி வந்து மண்ணுக்குள்ளிருந்து அவற்றை விடுவிக்கின்றன.

இலங்கையில் உலகின் முதல் பலூன் இன்டர்நெட் அறிமுகம்


பலூன்கள் வழியாக இணையவசதி திட்டத்தை தொடங்கியுள்ள கூகுள்
நிறுவனம், தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் பலூன்கள் வழி இணையத்தை சோதனை அடிப்படையில் தொடங்கி யுள்ளது.இந்த திட்டத்தை இலங்கையில் செயல் படுத்த அனுமதி அளித்ததற்காக இத் திட்டத்தின் 25 சதவீத பங்குகளை அந்நாட்டு அரசுக்கு கூகுள் வழங்க உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன் மூலம் இணையம் என்ற புதிய திட்டத்தை தொடங்கியது.