புதன், 26 மார்ச், 2025

சட்டத்தரணி கௌசல்யாவுக்கு என்ன நடந்தது? what happened to koushalya naren

May be an image of 1 person and smiling
Kousalya Naren attorney at law

Shobitha Rajasooriar :  ஆட்கொணர்வு மனு.
இந்தப் பதிவில் உள்ள பெண் கடந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை குழு ஒன்றின் சார்பில் பங்குபற்றினார்.
கணிசமான வாக்குகளையும் அக்குழுவிற்கு பெற்றுக் கொடுத்தார்.
அவர் ஒரு சட்டத்தரணியும் கூட.
அவரது அரசியல் பிரவேசம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்று கொண்டிருந்த வேளையிலே,
 சடுதியாக அவரது சுயேட்சை குழு தலைவரின் அறிக்கையின் படி அவர் அரசியலில் இருந்து விலகி விட்டார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து சில சலசலப்புகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. அதாவது குறிக்கப்பட்ட பெண் ஒரு சட்டவாளர்,
மற்றும் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற படியால் மக்களுக்கு தெரிந்த ஒரு நபர்.

வடநாட்டு கொள்ளையர்களுக்கு உள்ளூர் சங்கிகள் ஆதரவா? ஆபத்து அருகில் ?

 Raja Rajendran Tamilnadu :   ஓர் அதிகாலையில் அடுத்தடுத்து எட்டு தங்கச் சங்கிலி அறுப்புகள் நடைபெறும், அதுவும் அது முதிய பெண்களிடம் நடக்கும் என்பது எவ்வளவு பேரவலம் ?
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை எந்த வழியிலேனும் எவனை வைத்தேனும் கெடுத்துவிட வேண்டும்,
தினமொரு சேதி பொதுமக்களிடையே இதுபோல் பரவி, திமுக ஆட்சி மீது ஓர் அச்சவுணர்வை நிரந்தரமாகத் தோன்றச் செய்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் சதி புரிந்தாலொழிய இது சாத்தியமாகாது !
நேற்று காலையில் நடந்த இந்தச் சம்பவங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததற்கு கயவர்கள் உடனடியாக பிடிபட்டதுதான் காரணம்.
விமானங்கள் கிளம்பும் முன் ட்ரேஸ் பண்ணியதால் பிடிபட்டனர், இல்லாவிடில் ?

பாகிஸ்தானில் பெண் ஆணவக்கொலை - தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை |

 தினத்தந்தி : பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபி. கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து மரியாவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆனால் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே மரியா பீபியை குடும்பத்தினர் சேர்ந்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பாஜக - அதிமுக கூட்டணி - பல ரகசியத்தை போட்டுடைத்த ஷ்யாம்

அதிமுக பாஜக கூட்டணி? - எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் அமித் ஷா சந்திப்பு!

 tamil.oneindia.com : சென்னை: "அதிமுகவை பொறுத்தவரை திமுக தான் எங்களுக்கு எதிரி, திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “பாஜகவுடன் கூட்டணியா?” என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்து உள்ளார்.

வேல்முருகன் உருக்கம் - மனவேதனைக்கு மருந்திட்ட முதல்வர் ஸ்டாலின்

 மின்னம்பலம் - Kavi :  முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து பேசியது, மனவேதனைக்கு மருந்திட்டது போல் இருந்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்  சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே சென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் முழக்கம் எழுப்பியதும், அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் சொன்னதும், முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து வேல்முருகன் வரம்பு மீறுவதாக கூறியதும்  திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார்

 BBC tamil :  இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48.
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.
சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

செவ்வாய், 25 மார்ச், 2025

அதானி நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்வதா; இலங்கை அதிபருக்கு ரனில் கண்டனம்

 தினமலர் : கொழும்பு : அதானி நிறுவனத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், இந்தியா உடனான இலங்கையின் வர்த்தக உறவு பாதிக்கப்படும் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியபோது, அதிபராக இருந்தவர் ரனில் விக்ரமசிங்கே. அவரது ஆட்சியின்போது, இந்தியாவுடன் எரிசக்தி, வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டு பொருளாதார நிலையை சீரமைத்தார்.

திங்கள், 24 மார்ச், 2025

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

May be an image of 2 people and text that says 'BREAKING NEWS புதிய தலைமுறை WDS19:38:82 CSM யூடியூப்ர் சவுக்கு சங்கரின் வீடு சூறை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர் 24|03|2025 24|0312025-02:00M 02:00 P www.puthiyathalaimurai.c com'

Hindu Tamil :  : “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (மார்ச் 24) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது.

ஞாயிறு, 23 மார்ச், 2025

நீயா நானா .. தடை செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நடந்தது என்ன? கலந்து கொண்டவரின் அனுபவம்

May be an image of slow loris and text that says 'விஜய் vijaytelevision Follow … மும்மொழிக் கொள்கை! ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் கலந்துகொள்ளும்.. நீபா நானா? நீோாசகானா? SP 西主D即調明理 FREEDON ta DETr FIE 6F 35 市戸球王格'

Ravishankar Ayyakkannu :  நீயா நானாவில் கலந்து கொள்ளப் போகிறேன் என்று சொன்ன போதே "நமக்கு எதுக்குப்பா இந்த அரசியல் வம்பு எல்லாம்?
இது தேவையா? பார்த்துப் பேசுப்பா" என்று தான் வீட்டில் சொன்னார்கள்.
"இது பதிவு செய்து edit பண்ணி ஒளிபரப்புகிற நிகழ்ச்சி. நாம வில்லங்கமா பேசினாலும் அவங்க அதையெல்லாம் நீக்கிட்டுத் தான் ஒளிபரப்புவாங்க.
நம்மைவிட TVக்குத் தான் இதில் risk அதிகம்"னு சொல்லித் தான் அவங்களைச் சமாதானப்படுத்தினேன். ஆனால், முழு நிகழ்ச்சியே ஒளிபரப்பப்படாமல் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால், அப்படித் தடை செய்யப்படுகிற அளவுக்கு அங்கு எதுவும் பேசப்படவில்லை. எல்லாமே ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகங்களிலும் எல்லோரும் அடித்துத் துவைத்துக் காயப் போட்ட அதே வாதங்கள்தாம்.