மன்னாரு, ஒரு மலைக் கிராமம் சார்ந்த எளிமையான காதல் கதை. நல்ல
பாடல்கள், இனிமையான இசை, கண்களை நிறைக்கும் பசுமை சூழல் போன்றவை படத்தைப்
பார்க்க வைக்கின்றன. சின்னச் சின்ன குறைகளை மறக்கடிக்கின்றன.
அப்புக்குட்டிதான்
மன்னாரு. 'நாய் கூட மதிக்காத' அவருக்கும் முறைப்பெண் மல்லிகாவுக்கும்
அப்படி ஒரு காதல். இத்தனைக்கும் மன்னாரு படித்தது 3-ம் வகுப்பு. லாரிக்கு
மணல் நிரப்பும் வேலை. ஒரு நாள் ஷகிலா படம் பார்க்கப் போக, படம் முடிந்து
நண்பன் அறையில் தங்க நேர்கிறது. அந்த நண்பனின் காதல் திருமணத்துக்கு
சாட்சிக் கையெழுத்துப் போடுகிறான் மன்னாரு. அந்தக் கையெழுத்து அவன்
வாழ்க்கையில் பல தொல்லைகளை இழுத்துவிடுகிறது.
மும்பை: கிங்பிஷர் நிறுவனத்துக்கு
ரூ. 7,000 கோடி வரை கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் அதைத் திரும்ப
வசூலிப்பது குறித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் கிங்பிஷர் அதிபர் விஜய்
மல்லையாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.
அவருக்குக்
கடன் கொடுத்துள்ள பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இணைந்து ஒரு
கூட்டமைப்பு போல அமைத்து, கடனை திரும்ப வசூலிப்பது குறித்து பேச்சு நடத்தி
வருகின்றன. இதில் விஜய் மல்லையா அதிகமாக கலந்து கொள்வது இல்லை. அவரது
நிறுவன அதிகாரிகளும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுகளும் மட்டுமே கலந்து
கொள்கின்றனர்.இவர்களால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடிவதுமில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இதுவரை எந்த பலனும் வங்கிகளுக்கு இல்லை. நாட்கள் தான் கடந்து வருகின்றன. (இந் நிலையில் வங்கிகளின் இன்றைய கூட்டத்துக்கும் மல்லையா வரவில்லை. அவர் வெளிநாட்டில் பயணத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் இந்தக் கூட்டம் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்)
மல்லையாவின் இந்த ஐடியாவை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்டுவிட்ட வங்கிகள், இப்போது அவரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கூறியுள்ளன.